Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு-51

அத்தியாயம் – 51

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாய்ந்த அவன் கார் மெக்கானிக் ஷெட்டை கடந்ததும் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டது. கல்லில் செய்த சிலை போல் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சாலையை வெறித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் வெளியேற்றிய மூச்சுக்காற்றின் வெப்பம் கார் ஏசியின் குளிர்நிலையோடு போர் புரிந்தது.

சில நொடிகள் அப்படி அசையாமல் அமர்ந்திருந்தவன் பிறகு மெல்ல அவள் பக்கம் திரும்பினான். கைக்குட்டையை சுருட்டி நெற்றியில் அழுத்தியபடி சீட்டில் கண்மூடி தளர்ந்துக் கிடந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின. எதுவும் பேசாமல் டேஷ்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்து, இயந்திர மனிதன் போல் எந்த உணர்வுகளும் அற்றவனாக அவள் விளக்கி காயத்தை ஆராய்ந்து சுத்தம் செய்தான்.

வெட்டி வீசப்பட்ட கொடி போல் நினைவற்று கிடந்தவள் மெல்ல இமை பிரித்தாள். உயிரற்ற விழிகளால் அவனை ஏறிட்டாள். அவனுடைய பற்றற்ற தோற்றம் அவள் நெஞ்சை அறுத்தது. உடலில்பட்ட காயம் வலிக்கவில்லை. ஆனால் அவன் காட்டிய அந்நியத்தனம் அவளை கொன்றது. அவன் கையை விலக்கிவிட்டு நேராக எழுந்து அமர்ந்தாள்.

ஒரு நொடி அவளை வெறித்துப் பார்த்த அர்ஜுன் மீண்டும் தன் வேலையை தொடர முயன்றான். ஆனால் அவள் ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள். விட்டுவிடக் கூடியவனா அவன்? வலுக்கட்டாயமாக அவள் முகத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பினான்.

“அசையாத” – அடிகுரலில் ஆணையிட்டான்.

அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. உடலில் எஞ்சியிருந்த மொத்த சக்தியையும் திரட்டி திமிறினாள். அவன் பிடியில் அழுத்தம் கூடியது. பற்கள் நறநறக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. அவன் முரட்டுத்தனத்தில் தாடையெலும்பு உடைந்துவிடும் போல் தோன்ற போராடும் திராணியற்று அடங்கிப்போனாள் அந்த பாவை. தோல்வியின் துயரம் கண்களில் கண்ணீராய் பெருகியது.

அவளுடைய காயமோ கண்ணீரோ அவனை எந்தவிதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. கடிவாளம் கட்டிய குதிரை போல் கர்மமே கண்ணாக அவள் நெற்றிக்காயத்துக்கு கட்டுப் போட்டு முடித்துவிட்டு காரை கிளப்பினான். வீடு வந்து சேரும் வரை இருவருக்கும் இடையில் இருப்புத் திரையாக விரிந்திருந்தது மௌனம்.

அர்ஜுனின் கார் கராஜிற்குள் நுழையும் போது அங்கே இன்னொரு கார் நின்றுக் கொண்டிருந்தது. வந்திருப்பது யார் என்று அவனுக்குத் தெரியும். இன்ஜினை அணைத்துவிட்டு அசையாமல் அமர்ந்திருந்தான். அவனை பொருட்படுத்தாமல் தன் பக்க கதவை திறந்து கொண்டு கீழே அடியெடுத்து வைத்த மிருதுளாவின் கால்கள் வலுவிழந்து தடுமாறின. கார் கதவை பற்றாக பிடித்து தடுமாற்றத்தை சமாளித்தாள்.

அர்ஜுனின் கண்கள் நேர் நோக்கி இருந்தாலும் பார்வை வட்டம் விரிந்தே இருந்தது. அவளுடைய துன்பம் அவன் கவனத்தில் பதியாமல் இல்லை. ஆனாலும் தாங்கிப்பிடிக்க அவன் விழையவில்லை. அவளுக்கு வலித்தது. கூர்முனை கொண்ட ஏதோ ஒன்று உள்ளே பாய்வது போல் இருந்தது. விரிந்துக்கிடக்கும் பாலை மணல் போல் துக்கம் நெஞ்சம் முழுக்க பரவியிருந்தது. அவன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கப் பிடிக்காதவளாக, நிதானமாக அடியெடுத்துவைத்து உள்ளே சென்றாள்.

ஹாலில் அமர்ந்திருந்த டேவிட் அவள் வரவை உணர்ந்து மகிழ்ச்சியாக எழுந்தவன், அவளைப் பார்த்ததும் சட்டென்று நின்றான்.

அவளுடைய சோர்ந்த நடையும் நெற்றிக்கட்டை மீறி வெளியே கசிந்திருக்கும் ரத்தமும் அவனை பதட்டமடையச் செய்தது.

“மிருதூ!!! என்ன ஆச்சு? அர்ஜுன் எங்க???” – இரண்டே எட்டில் அவளை நெருங்கி தோளோடு அணைத்துப் பிடித்தான்.

வறண்ட பாலைவனத்தில் ஓர் ஈச்சமரத்தை கண்டது போல் அவன் நிழலில் சற்று ஆசுவாசமடைந்த மிருதுளா தன்னியறியாமல் அவன் தோளில் தலை சாய்த்து கண்மூடினாள்.

“முக்கியமான அசைன்மென்ட்டை கவனிக்கிறதுக்காக உன்ன வர சொன்னேன். நாட் ஃபார் திஸ் புல்ஷிட்” – கணீரென்று ஒலித்த பெருங்குரலில் உடல் தூக்கிப்போட மெல்ல விலகினாள் மிருதுளா. டேவிட்டிடம் கூட எதுவும் சொல்ல தோன்றாதவளாக படுக்கையறையை நோக்கி நடந்தவள், வாயிலில் நின்று திரும்பிப் பார்த்தாள்

“சாரி டேவிட், லாஸ்ட் டைம் உன்கிட்ட சொல்லாமலே கிளம்பர சூழ்நிலை. திரும்ப உன்ன பார்த்ததுல சந்தோஷம்” – முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற டேவிட், அவள் உள்ளே சென்று மறைந்ததும் அர்ஜுனிடம் திரும்பி, “வாட்ஸ் திஸ் மேன்?” என்றான் அதிருப்தியுடன்.

“அதைப் பற்றி விசாரிக்க நீ இங்க வரல. வந்த வேலையை மட்டும் பாரு” என்று வெடுவெடுத்துவிட்டு முகம் கொடுக்காமல் சமையலரைப் பக்கம் சென்று பாத்திரங்களை உருட்டினான்.

அவன் பின்னாலேயே சென்ற டேவிட், “ஐ நோ… நீதான் என்னவோ பண்ணியிருக்க” என்றான் கோபத்துடன்.

கையிலிருந்த பார்த்திரத்தை பொட்டென்று கீழே போட்டுவிட்டு, “அதுக்கு? என்ன பண்ண போற? வான ஃபைட்? கம்… பார்த்துடலாம் வா… ” – கண்கள் சிவக்க அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான் அர்ஜுன்.

நண்பனின் விளிம்புநிலை மனநிலையை புரிந்துக் கொண்ட டேவிட், “ரிலாக்ஸ் அர்ஜுன். நீதானே என்னை கூப்பிட்ட? என்ன ஆச்சு உனக்கு?” என்று தன்மையாக பேசினான்.

வேக மூச்சுகளை வெளியேற்றி கண்களை மூடி தளர்ந்து போய் டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தான் அர்ஜுன். அவனுக்குள் ஏதேதோ சிந்தனைகள்… கோபம்… ஆத்திரம்… வெறுப்பு… என்று எல்லாம் சேர்ந்து அவனை மேலே மேலே அழுத்த எண்ணம் குலைந்து போனவனாக திடீரென்று ஆவேசத்துடன் எழுந்து மேஜையிலிருந்த பொருட்களையெல்லாம் விசிறியடித்தான். ஆக்ரோஷம் அகோரமாய் ஆட்கொண்டிருந்தது அவனை.

இப்போது மட்டும் எதிரியென்று யாரேனும் அவன் கையில் சிக்கினால் வெற்று விரல்களாலேயே அவன் நெஞ்சை பிளந்துவிடுவான்.

டேவிட் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். இந்த அளவுக்கு நிதானமிழந்த அர்ஜுனை அவன் பார்த்ததே இல்லை.

“அர்ஜுன்…” – தயக்கத்துடன் அழைத்தான்.

அவன் பதில் சொல்லவில்லை. “கம்… லெட்ஸ் ஹேவ் எ ட்ரிங்” – நண்பனின் மனநிலையை மடைமாற்ற முயன்றான்.

“வாட்???” – புரியாதவன் போல் புருவம் சுருக்கினான் அர்ஜுன். அப்போதுதான் டேவிட்டின் மூளைக்கு உரைத்தது. அர்ஜுன் மது அருந்த மாட்டான்.

“ஓ சாரி… ஓகே வா… ஏதாவது விளையாடலாம். மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். கார்ட்ஸ் ஓகேவா?”

சில நொடிகள் மெளனமாக நின்ற அர்ஜுன், “இல்ல…” என்று தலையை குறுக்காக அசைத்துவிட்டு மீண்டும் சமையலறையில் பாத்திரங்களை உருட்ட துவங்கினான்.

“எனக்கு வேலை இருக்கு” – பிரிட்ஜை திறந்து காய்கறிகளை அள்ளிப்போட்டு கழுவி கரடுமுரடாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்தான்.

டேவிட் அவனை புதிராகப் பார்த்தான். அங்கு இன்னொருவன் நிற்கிறான் என்கிற நினைவே இல்லாதவன் போல் சூப்பை தயார் செய்து ரொட்டியை வாட்டி எடுத்து வெண்ணையை தடவி தட்டில் அடுக்கி எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். அவன் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.

******************
“மிருதுளா, கெட் அப்” – உரத்த குரலில் அவள் உறக்கத்தை களைத்தான்.

மிருதுளா கண்விழித்தாள். ஆனால் தலை பாரம் நிமிர முடியவில்லை. மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். கையிலிருந்த ட்ரேயை டீப்பாயில் வைத்துவிட்டு அவளை தூக்கி அமரவைக்க முயன்றான் அர்ஜுன். அவன் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்றவளின் வாயிலிருந்து, “விடு…” என்கிற ஒற்றை வார்த்தை மட்டும் வெறுப்புடன் வெளிப்பட்டது.

முள் தைத்தது போல் ஒரு கணம் அவன் பிடி தளர்ந்தது. தளரமட்டும்தான் செய்தது. மொத்தமாக மொத்தமாய் விட்டுவிடவில்லை. மறுகணமே சுதாரித்துக் கொண்டு பிடியில் அழுத்தத்தைக் கூட்டி அவளை பிடிவாதமாக தூக்கி நிமிர்த்தி அமரவைத்து அவள் கையில் சூப்பை திணித்தாள்.

உடனே ஆவேசத்துடன் அதை தூக்கியெறிந்தாள் மிருதுளா. அவன் முகம் கறுத்தது. தாடை இறுக அவளை வெறித்துப் பார்த்தபடி ஓரிரு நொடிகள் நின்றவன், “திஸ் இஸ் த லாஸ்ட் டைம். இன்னொரு தடவ இதை ரிப்பீட் பண்ணின…” என்று கர்ஜனையாய் துவங்கியவன் வாக்கியத்தை முடிக்காமல் மீண்டும் சமையலறைக்கு போய் இன்னொரு கப்பில் சூப்பை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

அவள் மறுக்கத்தான் செய்தாள். ஆனால் அவனுடைய முரட்டுப்பிடிவாதம் அவளை வலுவிழக்கச் செய்தது. உணவும் மருந்தும் எடுத்துக் கொண்ட பிறகு மிருதுளா உறங்கிவிட்டாள். மணிக்கணக்காக தனிமையில் மௌனமாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

அன்று இரவு அர்ஜுன் டேவிட்டோடு பேசினான். உல்ஃப் எங்கு இருக்காலாம்? அடுத்து யாரை குறிவைத்திருக்கலாம்? அதை தாங்கள் எப்படி முறியடிக்கலாம் என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளையும் செய்திகளையும் தொகுத்து விவாதித்து ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து அடுத்த அசைன்மென்ட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள். நள்ளிரவு வரை நீடித்த அந்த மீட்டிங்கை முடித்துக் கொண்டு டேவிட்டை ஹாலில் படுக்க சொல்லிவிட்டு, படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டான் அர்ஜுன் ஹோத்ரா.




12 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shithir says:

    Nxt ud eppo


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha says:

    Mam nxt ud plse


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gomthi Gomathi says:

    Please next ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gomathy B says:

    Please update next episode


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha says:

    Mam plse nxt ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Saranya Venkatesh says:

    Sister eppo 61 update poduvinga we are eagerly waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Merlin Mary says:

    Nithi mam please update episode 60


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Priyanga Ramesh says:

      60 eppayoo update pannitaka Athe link la ye irrukkum poi paruka


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        A Daniel says:

        Sorry illayae?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Raji J says:

    Next epi yepo poduvinga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gomathy N says:

    I am waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gomathy N says:

    Nithi mam please update episode 60

You cannot copy content of this page