Share Us On
[Sassy_Social_Share]ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க – 24
815
0
கார்த்திக் வனிதாவின் அழைப்பை ஏற்று அவளுடன் உரையாட தொடங்கினான்.
வனிதாவும் கார்த்திக்கும் ஒரு மணி நேரத்துக்கு மேல் காதல் சொட்ட சொட்ட பேசிக்கொண்டே இருந்தார்கள்.
கதவைத் தட்டிய வனஜா. வனிதாவை சாப்பிட அழைத்தாள். அவளும் விஷயத்தை கார்த்திக்கிடம் கூறிவிட்டு மதிய உணவு சாப்பிட கிளம்பினாள்.
கார்த்திக்கின் வாகனமும் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் ஒதுங்கியது.
நேரம் 1 மணி
வினிதாவின் காரும் வேகத்தைக் குறைத்து ஊட்டி மலையில் வளைவுகளை கடந்து கொண்டிருந்தது.
அனிதா: இன்னும் எவ்வளவு நேரம் டி இருக்கு?
வினிதா: குன்னூர் வந்துட்டோம். இன்னும் ஒரு 40 நிமிஷத்துல போயிடலாம்.
அனிதா: சரிடி. நம்ம வேண்டுமானால் லிண்டா நம்பருக்கு கால் பண்ணி பேசலாமா?
வினிதா: வேண்டாம்டி. அங்க சிச்சுவேஷன் எப்படி இருக்குன்னு தெரியல! நம்ம அவளையும் நம்ப முடியாது! நேர்ல போய் பார்க்கலாம்.
ஜென்னி: ஆமாடி வினிதா சொல்றது தான் கரெக்ட். ஏண்டா அவளப் பத்தி நமக்கு தெரியாது இல்ல.
வினிதா: ஃபேஸ்புக் செக் பண்ணிய இதுவும் டீடைல்ஸ் கிடைச்சா?
அனிதா: ஒன்னும் கிடைக்கல டி. ஆனா அவங்க ரெண்டு பேரும் FB-ல பிரண்ட்சா தான் இருக்காங்க. லிண்டா இந்தியாவுக்கு வந்து மூணு மாசம் ஆகுதடி!
பல விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தார்கள். காரும் ஊட்டியை நெருங்கியது.
வினிதா: அந்த போன் நம்பர் காட்டுற லொகேஷனை சொல்லு?
அனிதா: ஹேவ்லாக் ரோடு (Havelock Rd) என்று காட்டுகிறது.
வினிதா: சரிடி! கார்ல இருக்கிற ஜிபிஎஸ்-ல லொகேஷன் ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஒரு வீட்டை காட்டியது. வினிதா காரை விரைந்து திசை காட்டும் பகுதியை நோக்கி விரைந்தாள்.
கார்த்திக்கின் கார்:
மதிய உணவை முடித்துவிட்டு கார் வீட்டை நோக்கிப் புறப்பட்டது. டி வின்டன் ரோட்டை நோக்கி கார் விரைந்தது.
இரண்டு கார்களும் ஒரே ரோட்டில் முன்னே பின்னே சென்று கொண்டிருக்கிறது. இரு கார்களுக்கும் 500 மீட்டர் இடைவெளி இருக்கும்.
வினிதாவின் கார் சற்று வேகத்தை அதிகரித்து திவ்யா பகுதியை விரைந்தது.
டி வின்டன் ரோடின் கார்த்திக்கின் கார் இடது பக்கம் திரும்ப, வினிதாவின் கார் வலது பக்கம் திரும்பி ஹேவ்லாக் ரோட்டை பிடித்தது.
இரு காரும் வளைவை ஒரே நேரத்தில் வளையும்போது வினிதா கார்த்திக் முன் சீட்டில் அமர்ந்து இருப்பதை கண்டுவிட்டாள்.
தனது தலையை உள்ளிழுத்துக் கொண்டு மறைத்தபடி காரின் வேகத்தை கூட்டி விட்டாள்.
திவ்யா இருக்கும் பகுதியை அடைய ஜிபிஎஸ் கருவி இன்னும் ஐந்து நிமிடங்களை காட்டியது.
திவ்யாவை சந்திப்பார்களா?
தொடரும்.
Comments are closed here.