Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-26

நேரம் 2 மணி

கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸ்:

ரவி: மச்சான் கார்த்தி நம்ம ஏரியாக்கு ஆப்போசைட்ல ஹேவ்லாக் ரோட்டில் ஒரு பேய் பங்களா இருக்குடா! அங்கதான் நிறைய படத்துக்கு சூட்டிங் எல்லாம் எடுத்து இருக்காங்க. நம்ம இந்த இடத்தை போய் பாக்கலாமா?

அருண்: என்னடா மச்சான் சொல்ற? நான் ரெடி வா போகலாம்?

கார்த்திக்: வெயிட் பண்ணுடா. கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்.

பேய் பங்களா:

லிண்டா தன் நாட்டுக்குரிய கெட்ட வார்த்தைகளை கூறிக்கொண்ட வீட்டினுள்ளே நுழைந்தாள்.

வினிதா கதவுக்கு பின்புறத்திலிருந்து உள்ளே வந்தவளை கையில் வைத்திருந்த பூந்தொட்டியால் அவள் தலையின் பின்புறத்தில் தாக்கினாள்.

நிலைத்தடுமாறி லிண்டா கீழே விழுந்தாள்.

வினிதா: அனிதா, ஜென்னி திவ்யாவை கூட்டிகிட்டு சீக்கிரம் காருக்கு ஓடுங்கடி!

மீண்டும் எழுந்து வந்த லிண்டாவை வினிதா அவள் வயிற்றில் எறி ஒரு உதைய கொடுத்தாள்.

லிண்டா தனது இரு கைகளையும் வலி தாங்காமல் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு கீழே விழுந்தாள்.

உதையைக் கொடுத்து விட்டு வினிதா காரை நோக்கி ஓடினாள்.

லிண்டா வலியில் துடித்துக் கொண்டே திவ்யாவை விடுங்கள் என்று கத்தினாள்.

“லீவ் ஹேர்! லீவ் ஹேர்! Otherwise ஐ வில் கில் யூ!”

லிண்டா வீட்டுக்கு வருவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு:

வினிதா: ஜென்னி, அனிதா நீங்க ரெண்டு பேரும் திவ்யாவை தாங்கல பிடித்துக் கொள்ளுங்கள்.

நான் அவளை சமாளித்துக் கொள்கிறேன்.

அவ எப்படியும் ரெண்டு நிமிடத்தில் வீட்டிற்குள்ளே வரப்போகிறாள்.

அதனால் கதவுக்கு இடதுபுறம் நீங்களும், வலதுபுறம் நானும் மறைந்து கொள்கிறேன்.

அவள் உள்ளே வந்தவுடன் நான் அவளை தவிக்கிறேன்.

அந்த நேரத்தில் நீங்கள் இருவரும் திவ்யாவை அழைத்துக்கொண்டு காருக்கு சென்றுவிடுங்கள்.

ஜென்னி இந்த கார் சாவி. நீ காருக்குள்ளே போன பிறகு இன்ஜினை ஒன் செய்துவிட்டு முன் சீட்டில் உட்கார்ந்து கொள்.

அனிதா நீ திவ்யாவோட பின் சீட்டில் அமர்ந்து கொள்.

இதுவே லிண்டாயை தக்க வினிதா போட்ட பிளான்.

கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸ்:

மூவரும் காரை எடுத்துக்கொண்டு பேய் பங்களாவை நோக்கி விரைந்தனர்.

ரவி காரில் வேகமாக பாட்டை ஒலிக்க செய்தான்.

கார்த்திக் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு போனை நோண்டிக்கொண்டே வந்தான்.

வினிதாவின் கார்:

காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் வினிதாவிற்கு எதையோ விட்டு செல்வது போன்று தோன்றியது.

அனிதா: திவ்யாவோட காலேஜ் பேக் எங்கே என்று அவளிடம் கேள்?

திவ்யா: நான் காலேஜ் பேக் எல்லாம் எடுத்துட்டு வரல.

வினிதா: சரி ஓகே டி நல்லது. ஜென்னி நான் சொல்ற நம்பர் டிராக் பண்ணு?

ஜென்னி: ஏண்டி அதான் எல்லா பிரச்சினையும் முடிந்ததே? அப்புறம் எதற்கடி?

வினிதா: இன்னும் முடியல டி. இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கு.

அனைவருக்கும் வினிதாவின் வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தியது.

அனிதா: என்னடி மறுபடியும் குண்டு தூக்கி போட்டாற?

வினிதா: ஆமாடி. நம்ம காலேஜ் பசங்க மூணு பேரு இப்ப ஊட்டில இருக்காங்க?

அவங்க கண்ணுல படாம நம்ம ஊருக்கு போகும். இல்லடா நம்ம இதுவரை பண்ணதெல்லாம் வேஸ்ட்டா போயிடும்.

ஜென்னி: சரிடி நம்பரை சொல்லு?

வினிதா கார்த்தியின் நம்பரை track செய்தாள்.

அவனின் கார் எதிர்திசையில் வருவதாக ஜென்னி கூறினாள்.

வினிதா: ஜென்னி லேப்டாப்பை என் பக்கம் காட்டு.

அதில் வரும் மேப் லொகேஷன் கண்டவுடன் வினிதாவிற்கு ஒரு யோசனை தோன்றியது.

நாம் செல்லும் பாதை மிகவும் குறுகிய வழியாக இருப்பதால் எதிர் திசையில் வரும் கார்த்திக் நம்மை எப்படி அடையாளம் தெரிந்துகொள்ள கொள்வான்.

கார்த்திக்கின் காரின் வருகைக்காக காத்திருந்தாள்.

சரியாக இரு காரும் நேர் எதிர் திசை நோக்கி வந்தது.

வினிதா காரின் வெளி விளக்குகளை டிம் பிரிட் செய்துகொண்டே இருந்தாள்.

இதனால் எதிர்திசையில் வந்த ரவிக்கு காரை ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் சிறிது தடுமாறினான்.

சற்று வேகத்தை கூட்டிய வினிதா தொடர்ந்து டிம் பிரிட் செய்துகொண்டே கார்த்திக்யின் வாகனத்தை கடந்தாள்.

வாகனத்தை ஓட்ட தடுமாறிய ரவி ரோட்டின் ஓரமாக இருந்த சிறிய பள்ளத்தில் காரை இறக்கி விட்டான்.

கண் இமைக்கும் நேரத்தில் வளைவில் வினிதாவின் கார் வளைந்தது.

லிண்டாவை பற்றியும், கார்த்திக்கின் சகாக்கள் அந்தப் பேய் பங்களாவை அடைவார்களா என்று நாளை பார்க்கலாம்.

தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page