Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-27

ரவி வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி எதிரே சென்ற வாகனத்தை பார்க்க முற்பட்டான். ஆனால் வாகனம் வளைவில் சென்றதால் அவனால் அந்த வாகனத்தை பார்க்க முடியவில்லை.

ரவி: டேய் கார்த்தி போனை கீழே வெச்சுட்டு, ரெண்டு பேரும் வந்து வண்டியை தள்ளுங்கடா!

கார்த்தியும், அருணும் கீழே இறங்கி காரை பள்ளத்திலிருந்து தள்ளி வெளியே எடுத்தார்கள்.

பிறகு காரை எடுத்துக்கொண்டு பேய் பங்களாவை நோக்கி விரைந்தார்கள்.

காரை நிறுத்திவிட்டு பங்களாவின் உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்துக்கொண்டிருந்தது.

லிண்டா வினிதாவிடம் வாங்கிய அடியில் மயங்கி கிடந்தாள்.

ரவி: என்னடா மச்சான் பேய் பங்களா என்று பார்த்தா? இங்கே ஆளுலாம் தங்கி இருக்கும்.

கார்த்தி: ஆமாடா! இவ யாருன்னு தெரியலே? என்னடா செய்யலாம்?

அருண்: சரிடா. பார்க்க பாவமா இருக்கு. இவல ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணுவோம் டா.

அவளை தங்கள் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்விழித்த லிண்டா. மூவருக்கும் தனது நன்றியைக் கூறினாள்.

தவறிக் கீழே விழுந்து விட்டதாகவும், தலை பூந்தொட்டியில் அடித்ததால் மயங்கி விட்டேன் என்று கூறினாள்.

அவளுடன் உரையாடிவிட்டு மூவரும் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினர்கள்.

வினிதாவின் கார்:

வினிதாவின் கார் சீறிப் பாய்ந்து கொண்டு மலையின் வளைவுகளை வேகமாக கடந்து மேட்டுப்பாளையத்தை தொட்டது. அதுவரை நன்றாக உறங்கிய திவ்யா. தனக்கு பசிக்குது என்று தோழிகளிடம் முறையிட்டாள்.

வினிதா: கொஞ்சம் வெயிட் பண்ணு டி! ஹை வே உள்ள ஹோட்டலில் நிப்பாட்டுறேன்.

கார் ஹை வே நோக்கி விரைந்தது. பிறகு ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தினாள்.

அனைவரும் இறங்கி சாப்பிட்டுட்டு மீண்டும் வாகனத்தில் வந்து ஏறினார்கள்.

நேரம் மாலை 4 மணி:

அனிதா: ஏய்! திவ்யா யாரடி அவ? உனக்கு எப்படி பழக்கம்.

திவ்யா: அவள் பெயர் லிண்டா மார்ட்டின். எனக்கு பேஸ்புக் மூலமாக பழக்கம் டி!

வினிதா: நீ எப்படி ஊட்டி வந்தா? அவளுக்கு உன் டீடைல்ஸ் எல்லாம் தெரியுமா?

திவ்யா: இல்லடி தெரியாது. நான் கோவை காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் தான் தெரியும். வேறு எந்த டீடைல்ஸ் அவங்க கிட்ட நான் சொல்லல!

ஜென்னி: வெரி குட்

அனிதா: நீ ஏண்டி அவ பெட்ரூம்ல அப்படி கிடந்தா?

திவ்யா: எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க டி. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் டி. நானும் அவளும் ரெண்டு மாசமா FB-ல சாட் பண்ணிட்டு இருந்தோம். அவ பேச்சில் மயங்கி, என்ன அறியாமலேயே அவள பார்க்க போயிட்டேன் டி. போன பிறகு தான் தெரியுது. அவ எப்படிப்பட்டவள்.

அனிதா: என்னடி சொல்ற? உன்ன என்னடி பண்ணுவ அவ?

😂

வினிதா:  எனக்கென்னமோ நான் நினைச்சது தான் நடந்து இருக்கும் நினைக்கிறேன்?

😇

அனிதா, ஜென்னி:  நீ என்னடி நினைச்ச?

திவ்யா: சரி நானே சொல்றேன். நடந்த எல்லா விஷயத்தையும்.

லிண்டா என்ன லவ் பண்றேன்னு சொன்னா டி.

😂
😂
😃
😄

வினிதா, அனிதா, ஜென்னி: 

திவ்யா: அடியே! சிரிக்காதீங்க டி!

என்ன அவள் நாட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆசைவார்த்தை காட்டினாள். இந்த நாட்டில் நம்ம மேரேஜ் பண்ண முடியாது. அதனால நீ எங்க நாட்டுக்கு வந்துடு. அங்க போய் மேரேஜ் பண்ணிக்கலாம் என்று கூப்பிட்டாள்.

அப்புறம் அவ என்ன அது பண்ண முயற்சி பண்ணா டி. பேசிக்கொண்டே இருக்கும்போது சடனா கிஸ் அடித்து விட்டாள். நான் எதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால எனக்கு ட்ரிங்க்ஸ்ல சரக்கு கலந்து கொடுத்துடா டி. என் போனை வாங்கி சுவிட்ச் ஆப் பண்ணிட்ட!

ஆமாடி என் மொபைல் எங்கடி? யாராவது எடுத்தீங்களா? இல்ல அங்கேயே விட்டு வந்துட்டீங்களா?

வினிதா: எனக்கு தெரியும்டி. இப்படி ஏதாவது சொதப்பிவிங்கடு. அதனால் தான் அவள் போன முன்னாடியே எடுத்து வைத்துக் கொண்டேன்.

அனிதா: சூப்பர் டி! சரிடி திவ்யா உங்கள் காதல் கதையை முடிக்க இல்லையே?

திவ்யா: அனிதா நீ அடி வாங்க போற! அவ ஒரு அமைப்பில் இருக்காடி. அந்த அமைப்பு உடைய பேரு கூட சொன்னா டி.

அனிதா: என்னடி புதுசு புதுசா சொல்லி பயம் காட்டுற?

வினிதா: இது பத்தி எனக்கு தெரியும்டி. நான் இன்டர்நெட்டில் படிச்சிருக்கேன் டி.

இந்த அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்க முயற்சி பண்ணுங்கல பீட்டா அந்த அமைப்பை விட இவங்க கொடுமையானவாங்க டி. இந்த அமைப்பெல்லாம் நமது கலாச்சாரத்துக்கு எதிரானது. இவங்களையெல்லாம் வெளியே நடமாடவே விடக்கூடாது. அவங்க நாட்டுல ஓப்பனா இருக்கு. ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இந்தக் கலாச்சாரத்தை பரப்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுல நிறைய பேர் எல்லாம் விழுந்து இருக்காங்க.

சரிடி நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனிமேல் அவ உன்னைத்தேடி வராமல் இருக்க வழி செய்ய வேண்டும்.

ஒருவழியாக கார் பொள்ளாச்சியை அடைந்தது.
வினிதா அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு தனது வீட்டுக்கு சென்றாள்.

தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page