Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-28


இரவு 8 மணி:

பொள்ளாச்சி வீடு:

அனைவரும் இரவு உணவை உண்டு விட்டு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

சித்தி வனஜா வனிதாவின் திருமணப் பேச்சை எடுத்துவிட்டால் கோபாலிடம்,

“அண்ணே வனிதாவுக்கு படிப்பு முடிஞ்சு உடனே நம் சொந்தத்தில் பார்த்து ஒரு பையன கட்டி வைத்து விடுவோம் என்று கூறினாள்.”

சரி மா! இருந்தாலும் அவ கல்யாண விஷயத்துல அவளோட விருப்பம் என்னமோ அதையே செய்வோமா!

அப்பா படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் எல்லாம் வேண்டாம்! கொஞ்ச நாளைக்கு நான் நம்ம கம்பெனில ஒர்க் பண்றேன் அப்பா!

வேண்டா! இந்த வாலு வினிதாவுக்கு வேண்டா கல்யாணம் பண்ணி வச்சிடுங்க அப்பா?

வனிதாவின் டயலாக்கை கேட்டு அனைவரும் சிரித்து விட்டார்கள்!

விடுவாளா நம்ம குட்டி பிசாசு!

அப்பா அதுக்கெல்லாம் உங்களுக்கு சிரமம் வைக்கமாட்டான் அப்பா!

எனக்கு எவனையாவது புடிச்ச! படிப்பை தூக்கிப்போட்டு கல்யாணம் தான் பண்ணுவேன்.

” பாத்தியா இந்த வயசுல இந்த குட்டி என்ன பேச்சு பேசுற? உனக்கு வரப் போறவன் நல்ல கஷ்டப்படுவான்” என்று அருள் சித்தப்பா கூறினார்.

இப்படியே ஒருவர் மாறி ஒருவர் பேசிக்கொண்டே இருந்தார்கள். நேரமும் 9-தை தொட்டதால் அனைவரும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றார்கள்.

ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்:

இங்கு ரவியும் அருணும் மீதமிருந்த பீர் பாட்டிலில் நின்று கொண்டிருந்தார்கள்.

கார்த்திக் தொடர்ந்து மெசேஜ்க்கு பதில் கொடுத்தவாறு உரையாடலில் நீண்டு கிடந்தான்.

இச்செயல் ரவிக்கும் அருணுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

ரவி: கார்த்தி நீ வர வர சரி இல்ல டா?

அருண்: முன்னாடிலாம் லீவுக்கு இங்க வந்தா எவ்வளவு ஜாலியா இருப்போம். ஆனால் இப்பலாம் நீ இந்த போன் கூட தான் ஜாலியா இருக்க.

கார்த்தி: சாரி டா மச்சி! லைப் அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கும். அது மாதிரிதான் இதுவும்.

ரவி: என்னமோ பண்ணித் தொலை! சரி சரக்கு காலிய போச்சு! அப்புறம் சாப்பாடு!

அண்ணன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்டா!

கார்த்தி: ரகு அண்ணே!

ரகு: சொல்லுங்க தம்பி!

கார்த்தி: நேத்து மாதிரி நமக்கு சாப்பாடும்! எனக்கு ஒரு பாக்கெட் கிங்ஸ் வாங்கிக்கோங்க!

டேய் ரவி என்ன சரக்கு என்று அவரிடம் நீயே சொல்லு.

ரவி: அண்ணே காஸ்ட்லி சரக்கா வாங்குங்கள். சோடா மற்றும் சைடிஸ் மறந்துடாதீங்க.

ரகு: சரி தம்பி வாங்கிட்டு வரேன்!

கார்த்தி: அண்ணே போனை கையில் எடுத்துக்கிட்டு போங்க.

ரகு: சரி தம்பி.

ரகு அங்கிருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சாப்பாடு வாங்க சென்றான்.

ரவியும் அருணும் வனிதா, வினிதா உடைய விஷயத்தை கார்த்திக்கிடம் கிளறி விட்டார்கள்.

ரவி: டேய் கார்த்தி! உண்மைய சொல்லு. யாருக்கு பிட்டு போடுறா?

அருண்: ஆமா டா மச்சான்! எனக்கென்னமோ போன்ல பேசுறது அக்காவிடமும், மெசேஜில் பேசுவது தங்கச்சி விடுமோ என்று தோணுது டா!

கார்த்தி: சும்மா சரக்கு போட்டுட்டு உளறாதீர்கள் டா! நான் வனிதாவை தான் லவ் பண்றேன். வினிதா நல்ல பிரண்ட்! அவ்வளவுதான்.

நீங்களா எதுவும் கற்பனை செய்யாதீர்கள்.

இப்படிப் பேசிக் கொண்டே இருந்தார்கள். நேரம் தான் ஓடியது.

வெளியே சென்ற ரகு வெகு நேரமாக வரவில்லை.

கார்த்தி தனது போனை எடுத்து ரகுவை அழைத்தான்.

கார்த்தி: அண்ணா என்னாச்சு?

ரகு: இதோ வந்துகிட்டு இருக்கேன் தம்பி! சாப்பாடு கடையில் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு.

கார்த்திக் உடன் பேசிக்கொண்டே வந்த ரகுவை ஒரு கருப்பு நிற வாகனம் வேகமாக தட்டி தூக்கி எறிந்தது.

பெருத்த ஓசையுடன் ரகு தூக்கி எறியப்பட்டான்.

அந்த சத்தத்தைக் கேட்ட கார்த்தி என்னாச்சு அண்ணே என்று அலறினான்.

அரை போதையில் இருந்த நண்பர்களிடம் அண்ணனுக்கு ஏதோ ஆகிவிட்டது போல? வாங்க போய் பார்க்கலாம் என்று வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்.

விபத்து நடந்த இடத்தில் யாருமில்லாத பகுதியாக காட்சியளித்தது. தூக்கி எறியப்பட்டதால் ரகுவின் பின் மண்டையில் பலத்த அடி ஏற்பட்டு குருதி வெளியேறிக்கொண்டிருந்தது.

உதவிக்கு யாரும் இல்லாமல் ரகு தவித்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக்கின் வாகனம் விரைந்து கொண்டு இருந்தது. போகும் வழியில் ரகுவை தேடினார்கள்.

அந்த வழியில் எங்கும் ரகு இல்லை என்பதால் அவர்களுக்கு எப்போதும் உணவு வாங்கும் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

அங்கு போய் கடை உரிமையாளரிடம் ரகுவை பற்றி விசாரித்தார்கள்.

கடை உரிமையாளர் இப்போதுதான் சாப்பாடு வாங்கிக் கொண்டு கிளம்பினான். நீங்க வேண்டுமானால் இந்த வழியாக சென்று பாருங்கள் என்று ஒரு குறுக்கு வழியை காட்டினார்.

மெயின் ரோட்டில் இருந்து பிரிந்த அந்த குறுக்கு வழி கார்த்திக்கும் வீட்டுக்கு எளிதாக செல்வதற்கான ஒரு பாதையாக இருந்தது.

அந்த வழியைப் பார்த்து கார் விரைந்து சென்றது.

சிறிது தூரம் இடைவேளைக்குப் பிறகு ரகு ரத்தவெள்ளத்தில் தென்பட்டான்.

😢
😢
😢
😢

காரை நிறுத்திவிட்டு ஓடிய மூவரும் ரகுவை கண்டு அலறினார்கள். அண்ணே என்ன ஆச்சு உங்களுக்கு! 

உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த ரகுவை தங்கள் வாகனத்தில் ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஆனால் ரகுவின் உயிர் மருத்துவமனை அடைவதற்கு முன்பே ரவியின் மடியிலே பிரிந்தது. அதை ரவியும் உணரவில்லை.

கார் மருத்துவமனையை அடைந்தது.

அருண் ஓடிச்சென்று ஸ்ட்ரக்சரை எடுத்து வந்தான். மூவரும் சேர்ந்து ரவியின் உடலை ஸ்ட்ரக்சரில் ஏத்தி தீவிர மருத்துவ சிகிச்சைக்கு அறைக்கு அனுப்பினார்கள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் தனக்கு உரிய உரித்தான வார்த்தைகளில் அவர் இறந்து விட்டார் என்று கூறினார்.

மூவரும் செய்வதறியாமல் தவித்தார்கள்!

தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page