Share Us On
[Sassy_Social_Share]ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-29
881
0
மூவரும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று முழித்தார்கள்.
மருத்துவமனையிலிருந்து ஊட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி விடப்பட்டது.
மூவரும் ரகு அவர்களை விட்டு பிரிந்த சோகத்தில் அழுது கொண்டே இருந்தார்கள்.
அவர்களுடன் ரகு பழகிய நாட்கள் அனைத்தும் கண் முன்னே காட்சிப்படுத்தியது.
இதனால் அவர்களின் சோகம் அதிகமாகிக் கொண்டே போனது.
ரவிக்கு திடீர் யோசனையில் ரகுவின் குடும்பத்திற்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று கார்த்திக்கிடம் வினவினான்.
அந்த நேரத்தில் கார்த்திக், தன்னிடத்தில் அவரின் குடும்ப தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று கூறினான்.
அருகிலிருந்த அருண் ரகு அண்ணன் விபத்துக்குள்ளான பகுதியிலே அவரது போனை நாம் விட்டு வந்து விட்டோம்.
போய் அந்த போனை எடுத்து அவரின் குடும்பத்திற்கு செய்தியை சொல்லிவிடலாம் என்று கூறி முடித்தான்.
கார்த்திக் அப்போது தனக்கு வந்த ஒரு மெசேஜ்க்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.
இதனைக் கண்ட ரவிக்கு கோபம் அதிகமானது. கொஞ்ச நேரம் அந்த போனை தூக்கி இல்லை வை டா.
நாம் அருண் சொன்னது போன்றே விபத்து ஏற்பட்ட பகுதிக்கு போய் பார்ப்போம்.
கார்த்திக் கடைசியாக அந்த மெசேஜ்க்கு பதிலளித்துவிட்டு, மூவரும் விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி விரைந்தனர்.
மருத்துவமனை:
ஊட்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு கான்ஸ்டபிள் வந்து நர்சிடம் நடந்த விஷயத்தை விசாரித்தார்.
நர்ஸ்: ஆக்சிடென்ட் நெனைக்கிறேன் சார்! ஆள கொண்டுவரும்போது இறந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
நீங்கள் டாக்டரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.
கான்ஸ்டபிள்: சரிமா! யார் வந்து அட்மிட் பண்ணினார்கள்?
நர்ஸ்: மூன்று காலேஜ் பசங்க சார்! ஒருவர் ஐடி கொடுத்திருக்காரு?
கான்ஸ்டபிள்: அந்த பையன் பேரு என்னமா?
நர்ஸ்: கார்த்திக்.
கான்ஸ்டபிள்: சரி அந்த மூணு பேரும் எங்கம்மா?
நர்ஸ்: இந்த வெளியே போயிட்டு வரேன்னு சொன்னாங்க சார்.
கான்ஸ்டபிள்: சரி அவங்க வந்த எங்கேயும் போகாமல் இங்கேயே இருக்க சொல்லுமா.
நான் போய் டாக்டரிடம் விசாரித்து வருகிறேன்.
சரி சார்!
ஹலோ டாக்டர்! குட் ஈவினிங்!
அடிபட்டவர் யாருன்னு தெரியுமா டாக்டர்?
அந்த மூணு பயலே கார்த்திக் என்பவன் தனது வீட்டில் வேலை செய்யும் ஆள் என்று கூறினான்.
பார்க்க பெரிய இடத்து பையனைப் போன்று இருந்துச்சு.
சரி டாக்டர்! நான் என்னன்னு விசாரித்துக் கொள்கிறேன்.
கான்ஸ்டபிள் ஆறுமுகம் தனக்கு கிடைத்த தகவல்களை இன்ஸ்பெக்டர் பாண்டியனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.
பாண்டியன்: ஆறுமுகம் நீங்க அங்கே இருந்து அந்த மூன்று பசங்களையும் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க.
ஆறுமுகம்: சரி ஓகே சார்!
விபத்து ஏற்பட்ட பகுதி:
நேரம் இரவு 12:
இருள் சூழ வானம் கறுத்து வளர்பிறையின் மெல்லிய வெளிச்சத்தில் காட்சியளித்த அந்த பகுதியை கார் அடைந்தது.
காரை கார்த்திக் சாலையோரமாக நிறுத்தினான்.
கார் நிறுத்தப்பட்டவுடன் ரவியும் அருணும் வேகமாக இறங்கி சாலையைக் கடக்க முயற்சி செய்தார்கள்.
அந்த நேரத்தில் அந்த இருளில் பளீரென்று வெளிச்சத்துடன் வந்த அந்த கருப்பு வாகனம் ரோட்டை கடக்க நின்றவர்களை மீண்டும் வந்து மோதியது.
கார் மோதியதில் இருவரும் இரு திசையில் தூக்கி எறியப்பட்டார்கள்.
வாகனத்திலிருந்து இறங்கிய கார்த்திக் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து அவர்களை மீட்க ஓடினான்.
கார் வந்த வேகத்தில் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது.
கார்த்திக் வாகனத்தின் நம்பரை பார்க்க முற்பட்டான்.
அதில் “இன்று இவர்கள் நாளை நீ” என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
தொடரும் மனித வேட்டைகள்…!!
Comments are closed here.