Share Us On
[Sassy_Social_Share]ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-30
718
0
நடந்த விபத்தை கண்டு கார்த்திக் செய்வதறியாமல் உறைந்து போனான்.
முதலில் ரவியை போய் தூக்கி பார்த்தான். ரத்தவெள்ளத்தில் கிடந்த ரவி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தான்.
அவனை தூக்கி காரில் வைத்துவிட்டு, அருணை நோக்கி ஓடினான். அவனையும் அள்ளிக் போட்டுக்கொண்டு காரை மருத்துவமனைக்கு செலுத்தினான்.
மருத்துவமனை:
கான்ஸ்டபிள் ஆறுமுகம்: சிஸ்டர் நான் போய் ஒரு டீ குடிச்சிட்டு வந்து விடுறேன். நீங்க அந்தப் பசங்க வந்த இங்கேயே இருக்க சொல்லுங்க!
நர்ஸ்: சரி சார்.
ஆறுமுகம் அங்கிருந்து கிளம்பி டீக்கடையை நோக்கி சென்றார்.
கார்த்திக்கின் வாகனமும் மருத்துவமனை உள்ளே நுழைந்தது.
கார்த்திக் அலறிக்கொண்டு மருத்துவமனை ஊழியர்களை கூப்பிட்டான்.
அவர்களும் ஓடி வந்து ரவியும், அருணையும் தீவிர அறுவை சிகிச்சைக்கு கொண்டு சென்றார்கள்.
நர்ஸ் கார்த்திக்கிடம் “நீங்கள் எங்கும் போகாமல் இங்கேயே இருங்கள் போலீஸ் வந்திருக்காங்க அவங்ககிட்ட நடந்த விஷயத்தை சொல்லுங்க” என்று முறையிட்டாள்.
கார்த்திக்கும் அங்கு இருந்த நாற்காலியில் மலைத்துப் போய் அமர்ந்தான்.
தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையை அறியமுடியாமல் பயத்தில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
இதன் பிறகும் தாமதிக்காமல் நடந்த விஷயத்தை தந்தையிடம் கூறி விடலாம் என்று போனை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்.
தொடர்ந்து ஒலித்த ரிங் அவரால் எடுக்கப்படவில்லை.
வனிதாவிடம் சொல்லலாம் என்று அவளுக்கு முயற்சி செய்தான். இரண்டாவது அழைப்பில் அவளும் போனை எடுக்க நடந்த விஷயத்தை அழுதுகொண்டே கூறி முடித்தான்.
தூக்கத்தில் விழித்து கார்த்திக் சொன்ன செய்தியைக் கேட்டு அவள் அதிர்ந்து போனாள்.
சிறிது நேரம் கார்த்திக்குக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி விட்டு, நாளை உன்னை தந்தையுடன் வந்து சந்திப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
பதறிக்கொண்டு வினிதாவின் அறையை தட்டினாள்.
அவளும் வந்து கதவைத் திறந்தாள்.
கார்த்திக் சொன்ன விஷயத்தை வினிதாவிடம் கூறினாள்.
வினிதாவும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வனிதாவை தன்னுடன் படுத்துக் கொள்ள வேண்டினாள்.
ஊட்டி மருத்துவமனை:
வனிதாவின் அழைப்பை துண்டித்த பிறகு கார்த்திக்-க்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
எதிர்முனையில் ஒரு பெண் பேசத் தொடங்கினாள்.
கார்த்திக்கும் அவளிடம் நீங்கள் யார் என்று வினவியதற்கு.
நான்தான் அந்த unknown நம்பர் என்று கூறினாள்.
என்னை பார்க்க வேண்டுமானால் மருத்துவமனைக்கு வெளியே வா என்று அந்தப் பெண் குரல் கேட்டது.
அவளின் கோரிக்கையை ஏற்று கார்த்திக் மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
சிறிது தூரத்தில் இருந்து வந்த கருப்பு வாகனம் கார்த்திகை வாகனத்துக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு வேகமாக விரைந்தது.
டீயை குடித்துவிட்டு மருத்துவமனைக்கு திரும்பிய ஆறுமுகத்திடம் நர்ஸ் அந்தப் பையன் கார்த்திக் இப்பத்தான் வந்தான் சார்.
ஆனால் தன்னுடன் இருந்த இரண்டு நண்பர்களையும் மீண்டும் அடிகாயங்களுடன் மருத்துவமனையில் வந்து சேர்த்தான்.
இவ்வளவு நேரம் இங்குதான் அமர்ந்திருந்தான்.
ஏதோ ஒரு போன் வந்த பிறகு போனை பேசிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினான்” என்று அனைத்தையும் கூறி முடித்தாள்.
அதைக்கேட்டு அதிர்ந்த கான்ஸ்டபிள் ஆறுமுகம் டாக்டரை பார்க்க ஓடினார்.
டாக்டர் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறினார்.
அதைக் கேட்டு பதறிய ஆறுமுகம் மீண்டும் இன்ஸ்பெக்டர் பாண்டியனை அழைத்தார்.
அவரும் விஷயத்தைக் கேட்டு விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு வருவதாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
ஆக்சிடெண்ட் கேஸ் சூறாவளியானது.
பொள்ளாச்சி வீடு:
தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த வனிதாவை வினிதா சமாதானப்படுத்தினாள்.
நடந்தது எல்லாம் நன்மைகே என்று எடுத்துக்கொள். அதுதான் கார்த்திக்குக்கு இன்னும் ஒன்றும் ஆகவில்லையே!
நான் வேண்டுமானால் உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன்..! கவனமாக கேட்டுக் கொள்..!
இதை யாரிடமும் பகிர வேண்டாம்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. இதுவே இறைவனின் நியதி.
அவரவர்கள் கணக்கிற்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும்.
என்ன? நான் சொல்வது எதுவும் உனக்குப் புரியவில்லையா?
ஆமாடி? கொஞ்சம் தெளிவா சொல்லு வினிதா.
முதலில் என்னை மன்னித்துக்கொள்!
எதுக்குடி? நீ என்ன செஞ்ச நான் உன்னை மன்னிக்க.
ஆமாக்கா நான் சில தப்புகள் செய்துவிட்டேன்.
அவளின் அக்கா என்ற வார்த்தை வனிதாவை மிகவும் சந்தோஷப்படுத்தியது.
சரிடி! என்ன விஷயம்னு ஒழுங்கா சொல்லுடி?
நாம் முதல் முறை கார்த்திகை சந்தித்தோம்லே! அன்று அவனின் அழகு என்னை சலனப் படவைத்தது. அதனால் எனது மனதுக்குள் கார்த்திகை நேசிக்க தொடங்கினேன். உன்னிடமிருந்து கூட கார்த்திகை என் மனம் பிரிக்கத் நினைத்தது.
இதனால் கார்த்திகை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகளில் முற்பட்டேன்.
கார்த்திக்கின் மொபைலையும், அவனது லேப்டாப்பையும் ஹேக் செய்தேன்.
அப்போதுதான் அவனின் சுயரூபம் எனக்கு தெரிந்தது. அன்று முடிவு செய்தேன்.
அவன் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் பொருத்தமானவன் அல்ல என்று.
அவன் மொபைலிலும், லேப்டாபிலும் இருந்த வீடியோக்கள் அவனின் சுயரூபத்தை எனக்கு காட்டித் தந்தது.
இதனால் அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நாம் அப்பாவிற்கு கிப்ட் வாங்க சென்ற தினத்தன்று கார்த்திக் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உன்னை நோக்கி ஒரு பெண் வந்தாள். ஆனால் கார்த்திக் வருவதைக் கண்டு மறைந்து விட்டாள்.
அவளை நீ பார்க்கவில்லை. ஆனால் அவளை நான் பார்த்தேன். அவளை அடையாளம் கண்டு கொண்டேன்.
அடுத்த தினம் அவளை நேரில் சந்தித்து உரையாடினேன்.
அவள் பெயர் சுனிதா. கார்த்திக்கின் வகுப்புத் தோழி மட்டுமல்ல முன்னாள் காதலியும் கூட.
கார்த்திக் கல்லூரியில் நல்லவனை போன்று வேஷம் விடுபவன். பெண்களிடம் அதிகம் பேசாதவனை போன்றும், பெண்களிடம் பழகாதவனை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தான்.
சுனிதாவிடம் விசாரித்தபோது அவள் தனக்கு நடந்த அக்கிரமங்களை கூறி அழுதாள்.
கார்த்திக் சுனிதாவை காதல் வார்த்தை பேசி தன் மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும் சுனிதாவின் கருப்பை இரை ஆக்கியவன்.
அதனை வீடியோவாக படம் பிடித்து வைத்திருந்தான். தேவையான நேரங்களுக்கு சுனிதாவை அவர்கள் படுக்கையாகி வைத்திருந்தார்கள்.
இது மட்டுமல்லாமல் அதுபோன்ற வீடியோக்களில் வேறு சில பெண்களும் இதற்கு முன்பு பஸ்பமாகி இருந்தது எனக்கு தெரியவந்தது.
அவர்கள் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் இதில் சில பேர் கார்த்திக்கிடம் இருக்கும் பணத்திற்காக விலை போனவர்கள். அவர்களின் பண ஆசைக்கு கிடைத்த பதில் தனது கருப்பை விற்று பொழைத்து கொண்டார்கள்.
நாங்கள் அவர்களை கருத்தில் கொள்ளவில்லை. அநியாயமாக பட்டவர்களுக்காக தான் எங்களின் நீதி தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தோம்.
பணம் இருந்தால் பார்ப்பவர்களையெல்லாம் படுக்கையாக்கி கொள்ளலாம் என்ற அவர்களின் அதிகாரப் போக்கு அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதனால் பாதிக்கப்பட்டவர்களை சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவை உருவாக்கினேன்.
சேட்லைட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கார்த்திக்கிற்கு ஒரு unknows நம்பரிலிருந்து சுனிதாவை மெசேஜ் செய்ய வைத்தேன்.
அவளிடம் மெசேஜ்யில் திளைத்தான். அவனிடமிருந்தே தகவல்களைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்கும் திட்டத்தை தீட்டி வைத்தோம்.
ஒரு முறை கீர்த்தி என்ற பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும்போது அவள் ஒத்துழைப்பு கொடுக்காமல் மிகவும் அடம்பிடித்ததால் அவள் வாயில் மதுவை ஊற்றி மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.
மூவரும் ஃபுல் போதையில் இருந்ததால் அவளை சீண்டிவிட்டு நகர்ந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி வாட்ச்மேன் ரகு அவளை பந்தாடி இருக்கிறான்.
இவர்களின் செயலுக்கு உடந்தை மட்டுமல்லாமல் அவனும் கொடிய மிருகங்களுடன் மிருகங்களாக இருந்திருக்கிறான்.
அதனால் எங்களது முதல் டார்கெட் ரகுவாக இருந்தது.
தீய செயல்களை செய்பவர்களை விட அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் முதலில் அழிய வேண்டும்.
அவனைப் போட்டுத்தள்ள சரியான நேரம் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தோம்.
கார்த்திக்கின் மெசேஜ் மூலம் அவன் வெளியே வருவதை தெரிந்துகொண்டு சரியான இடத்தில் அவனை அழித்தோம்.
ஆனால் எங்களது இரண்டாவது டார்கெட் மூன்றாவது டார்கெட் ஒரே நேரத்தில் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. விதியை எங்கள் பக்கம் இருந்தது போன்று இருந்தது.
அவர்களை எப்படி அழித்தோம் என்று உனக்கு பார்க்க வேண்டுமா? என்று தனது மொபைலில் இருந்து ஆக்சிடெண்ட் செய்த வீடியோவை வனிதாவிடம் காட்டினாள்.
தொடரும்
Comments are closed here.