Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-31(இறுதிப்பகுதி)

வீடியோவை பார்த்து வனிதா அதிர்ந்து போனாள்.

அவளின் யோசனை கார்த்திக்குக்கு சென்றது.

அடியே! வினிதா கார்த்திக்கு என்ன ஆச்சுடி?

அவன் இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறான்.

வினிதா தன் சகோதரியை உறங்க கட்டளையிட்டாள். அவளும் வினிதாவை ஆரத்தழுவி முத்தங்கள் இட்டு “எனது வாழ்க்கை மட்டுமல்ல பல பெண்களின் வாழ்க்கையை நீ காப்பாற்றியிருக்கிற” உன்னை எனது சகோதரியாக பெற்றதில் பெருமை கொள்கிறேன். இனி அவன் என் காதலன் அல்ல. அவன் ஒரு கயவன் என்று அவனைப் திட்டிவிட்டு உறங்கினாள்.

ஊட்டி மருத்துவமனை:

ஊட்டியின் மருத்துவமனையை சுற்றி போலீஸ் வளையம் அமைத்து கார்த்திகை தேடினார்கள். அவனின் வாகனத்தை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் மூலம் மேலதிகாரிகளுக்கு எல்லாம் தகவல் கொடுக்கப்பட்டது. கார்த்திக்கை ஊட்டியை விட்டு வெளியேறாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் வீட்டிற்கும், கார்த்திக்கின் வீட்டுக்கும் தகவல் பறந்தது. இரவு முழுவதும் கண்விழித்து கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு காவலர்கள் கார்த்திக்கை தேடினார்கள்.

தொட்டபெட்டாவின் காட்டுப் பகுதி:

தொட்டபெட்டாவின் காட்டுப் பகுதியில் ஒரு பெரிய மரத்தில் கார்த்திக் முழு நிர்வாணமாக கட்டி வைக்கப்பட்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் ஸ்கை வீடியோவில் வினிதா காட்சி அளித்தாள்.

அதை சுனிதாவும் அவளின் நண்பர்களும் கார்த்திக் பார்க்கும்படி நேராக கொண்டு காட்டினார்கள்.

அதைக் கண்டு கார்த்திக் அதிர்ச்சி அடைந்தான். இதையெல்லாம் செய்வது நீ தானா? உன்னை என்ன செய்கிறேன் பார் டி?

என்று தனது ஆண்மை கோவத்தை வெளிப்படுத்தினான்.

ஏண்டா கார்த்தி இந்த நிலைமையில் கூட எப்படிப் பேசுற பார்?

இனி நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் தான் அனைத்தையும் செய்யப்போகிறோம் என்று கூறிய வினிதாவின் வார்த்தைகள் கார்த்திக்கை சிறிது அச்சப்பட வைத்தது.

“என்னை விட்டுடுங்க? நான் எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் தரேன்?” என்று தனது பணக்காரத் தனத்தை காட்டினான்.

பாருடா! இப்போ கூட உன் நிலைக்கு மன்னிப்பு கேட்கனும் தோணலை பாத்தியா?

வினிதா சுனிதாவிடம் அவனுக்கு நாலு செம்பில் காட்டு என்று உத்தரவிட்டாள்.

சுனிதா அவளின் உத்தரவுக்கு இணங்க சிறிய கத்தியைக் கொண்டு கார்த்திக்கின் நெஞ்சில் நாலு கீறல்களை பதித்தாள்.

வலியால் துடித்து கத்தினான். மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.

வினிதா “இப்ப பயம் வருதா? உனக்கு பயம் வருகிறதா” என்று சீண்டினாள்.

உனக்கு பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..?

ஒரு பெண்ணை, மனதில் அழுக்குடன் பார்க்கும் உனது பார்வை ஆண்மை. அவளைத் தொட்டால் அது பேராண்மை. அதை பெருமையாக நண்பர்களிடமும் சொல்லுகிறாய். பெண்ணை பொய்யாக மயக்குகிறாய். அன்பு என்று சொல்லி அவளை மனம் மாற்றுகிறாய். பிறகு அவளை சிதைக்கிறாய். அவள் பயத்தை கொண்டு அவளை அடிமை ஆக்குகிறாய். ஒரு பெண்ணை, ‘நீ வேண்டாம் போ’ என்றுவிட்டு. இன்னொரு பெண் தேடுகிறாய். உனக்கு எதுவுமே தவறில்லை.’

உனது பணத்தை வைத்து நீதியின் கண்ணை மறைக்கிறாய். ஆனால் இது எங்கள் நீதி மன்றம். நாங்களே உனது நீதிபதி. எங்களது சட்டத்தை உனது பணத்தால் அல்லது அதிகாரத்தால் வாங்கவே முடியாது. நீ சாவதற்கு முன் எதற்காக சாவுகிறாய் என்பதை உனக்கு தெரியப்படுத்தவே அனைத்து ஏற்பாடுகளும்.

உன்னுடன் தீமைக்கு துணை போன மூவரும் இன்று உலகில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் உனது உயிரும் அவர்களுடன் சேர்ந்துவிடும்.

ஒரு சமூகம் பெண் மீது கொண்டுள்ள பார்வையை வைத்தே, அச்சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடைபோட இயலும். பெண்ணின் உடல் சார்ந்த அரசியல் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அளவில் கூடுதலோ, குறைவோ… அந்த அரசியலில் இருந்து எந்தப் பெண்ணும் தப்புவதில்லை.

நீ செய்த தவறுக்கு பின் மிகப்பெரிய உலக அரசியல் காரணமாக இருக்கிறது. பெண்களை வெறும் ஆபாசமாக பயன்படுத்தும் இந்த நவீன உலகம் உனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.

அன்று ஆபாசம் என்றால் கண்ணை மூடிய நாம் இன்று கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு உன்னிப்பாக கவனிக்க தொடங்குகிறோம். இதுவே மனிதனின் இச்சையை ஏற்படுத்தவும் காமத்தை உசுப்பேத்தி விடவும் காரணமாக இருக்கிறது.

பெண்கள் அடுப்படியில் இருந்த காலத்தில் கூட உலகின் ஏதோ சில மூளையில் சில கயவர்களால் பாதிக்கப்பட்டாள்.

ஆனால் இன்று பெண் சுதந்திரம், பெண்ணுரிமை போலி கோஷங்களுக்கு இரையாகி எங்களின் மானத்தையும், எங்களின் உடலை நிர்வாணமாக பார்த்து ரசிக்கவும், எங்களின் கருப்பையும் இழப்பது தான் மிஞ்சுகிறது.

உங்களை கடுமையான சட்டங்கள் கொண்டு தண்டிக்க யாருக்கும் துணிவும் இல்லை. நீதியின் முன் பண காகிதங்களையும், அதிகார வர்க்கத்தையும் கொண்டு தப்பித்துவிடுகிறார்கள்.

சிறு குழந்தை தொடங்கி, மூதாட்டிகள் வரை உங்கள் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது.

நாட்டின் கண்கள் பெண்கள் என்பதெல்லாம் வெற்றுக் கோஷங்கள். எங்களை சீண்டிய உனக்கு நாங்களே தண்டனையும் தருகிறோம்! பெற்றுக் கொள்!

பெண்கள் தனது காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள்! ஏமாற்றியவனை கொலை செய்யவும் துணிவார்கள்!

வினிதாவின் உரையாடல் முடிந்த பிறகு உனது கடைசி வார்த்தை என்னவென்று கார்த்திக்கிடம் வினவினாள்.

கார்த்திக்கின் கடைசி வார்த்தை “ஏய் வினிதா! நீ ரொம்ப அழகா இருக்கே!”

வினிதா சுனிதாவிடம் அவன் கதையை முடித்துவிடும் படி உத்தரவிட்டாள்.

கார்த்திக்கின் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டான்.

அவனின் உடலை அந்த கருப்பு வாகனத்தில் வைத்து தொட்டபெட்டாவில் உள்ள சிகரத்திலிருந்து பள்ளத்தாக்கில் காரை இறக்கிவிட்டு சுமிதாவின் குழு அங்கிருந்து ஊட்டியை விட்டு நகர்ந்தது.

மறுநாள் காலை:

வினிதா தனது இணைய அறிவை வைத்து கார்த்திக் கொல்லப்பட்டு கிடைக்கும் இடத்தையும், ஏன் கொல்லப்பட்டான் என்ற செய்தியும், தன் கார்த்திக்கிடம் பேசிய கடைசி உரையாடலை எழுத்து மூலமாக எழுதி தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிக்கும், அதிகார வட்டத்திற்குள் அனுப்பினாள்.

இந்த செய்தி தமிழகம் முழுவதும் பரவத்தொடங்கியது. அனைத்து தொலைக்காட்சிகளும், செய்தி நிறுவனங்களும் கார்த்திக்கின் பிரேதம் இதற்கும் இடத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

தீயணைப்பு துறை ஊழியர்களின் உதவியுடன் கார்த்திக்கின் பிரேதம் வெளியே கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மீடியாக்களும் அதை காட்சிப்படுத்தி நேரலையில் ஒளிபரப்பு செய்தது.

இறந்தவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற கயவர்களை பெற்றதற்கு வெட்கி தலை குனிகிறோம் என்று தங்களது சோகத்திலும் சமுதாய உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

சமூக வலைத்தளங்களில் கார்த்திக்கை கொன்றவர்களை பாராட்டி சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரல் ஆகியது.

அரசிற்கு அவர்களை தண்டிக்கக் கூடாது என்று அனைத்து மக்களும் முறையிட்டார்கள்.

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு எதிர்வினை உண்டு.

இதுவே இந்தக் கயவர்களுக்கு சரியான பரிசு! என்று பொதுமக்கள் போற்றித் தள்ளினார்கள்.

இந்த செய்தியை கண்ட காம பிசாசுகள் தங்களின் இச்சைகளை பயத்தில் அடக்கி கொண்டார்கள்.

இவர்களின் வேட்டை தொடரும்!

இவர்கள் மானத்தை இழந்தால்
மூளையில் முடங்கிக் கொள்ளாதவர்கள்…!!

இவர்கள் பயத்தில் தன்னுயிரை
மாய்த்துக் கொள்ளாதவர்கள்…!!

இவர்கள் தன் இழந்தற்கு பழி தீர்த்துக் கொள்ளும் குணம் கொண்ட பெண் சிங்கங்கள்…!!

புதிய விதி செய்வோம்…!

முற்றும் ..!!!

(இந்தக் கதை பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் மூளை முடுக்குகளிலெல்லாம் ஆண்மையின் வக்கிரத்தால் உள்ளாக்கப்படும் பெண்களுக்கு சமர்ப்பணம்)

கண்ணீருடன் விடைபெறுகிறேன்.

இப்படிக்கு

சமுதாய உணர்வுள்ள
புதியவன்




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Karthigai says:

    28 and 29 part of this “hei nee romba azaga iruka” is missing.could u publish it.

You cannot copy content of this page