Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 65
313
0
அத்தியாயம் – 65
அர்ஜுன், காலை உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பிரத்யேக அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சனி லால். அதோடு அன்று மாலை ஹோட்டல் புஃகாரியில் ராகேஷ் சுக்லா அவனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
அவரிடம், ‘ஐ’ல் டேக் கேர்’ என்று கூறிவிட்டு திரும்பிய போதுதான் வெளிறிய முகத்தோடு மிருதுளா அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்.
என்ன என்று கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சமாளித்தாள். அவள் மனதில் அவளுடைய பெற்றோரை பற்றிய சிந்தனை தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது அவனுக்கு அப்போதே புரிந்துவிட்டது. விலகியிருக்கத்தான் எண்ணினான். ஆனால் முடியவில்லை. வலிய சென்று பேசி வார்த்தையை வளர்த்து அவளையும் காயப்படுத்தி தன்னையும் காயப்படுத்திக் கொண்டு வந்துவிட்டான்.
இப்போது ஹோட்டல் புகாரிக்கு புறப்பட வேண்டும். அது அனந்த்பூரில் இல்லை. சில மணிநேர பயணத்திற்கு அப்பால் ஒரு முக்கிய நகரில் அமைந்திருக்கிறது. காரின் கண்டிஷன் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை பரிசோதிக்க கராஜிற்கு வந்தவனுக்கு வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. அவளுடைய அதிர்ந்த முகமும் கண்ணீர் வடிந்த கண்களும் அவன் நினைவிலிருந்து அகல மறுத்தன. பிடிவாதமாக மனதை நிலைப்படுத்தி வேலையில் கவனத்தை குவித்தான். இந்த உணர்வு போராட்டங்கள் அவன் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.
அர்ஜுன் கராஜிலிருந்து வந்த போது மிருதுளா அறையில் சுருண்டு படுத்திருந்தாள்.
“மிருதுளா, கெட் அப்… வி ஆர் கோயிங் அவுட்” – அதட்டலாக அழைத்தான்.
எரிமலை போல் குமுறும் கோபத்தை உள்ளுக்குள் அடக்கியபடி, “எனக்கு ட்ரைவ் போற மூட் இல்ல. லீவ் மீ அலோன்” என்றாள் மிருதுளா.
“உன்ன ஊர் சுத்த கூப்பிடல. வேலை இருக்கு. ம்ம்ம்… கெட் ரெடி… சீக்கிரம்” – அவசரப்படுத்தி அவளை புறப்பட வைத்தான். இருவரும் ஹோட்டல் புகாரிக்கு சென்று சேர்ந்தார்கள்.
அர்ஜுனுக்காக அங்கே ஒரு சூட் புக் செய்யப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும், ஜன்னல் ஓரமாக சென்று ஒரு சேரில் அமர்ந்துவிட்டாள் மிருதுளா. பயணம் முழுவதும் நீடித்த அவளுடைய மௌனம் இப்போதும் தொடர்ந்தது. அலுப்புடன் டிவியை உயிர்ப்பித்து ஏதோ பாடலை ஓடவிட்டான் அர்ஜுன். அவள் கவனம் பிறழவில்லை. பெருமூச்சுடன் அறைக்கதவை பூட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான். குளித்துவிட்டு வந்து ரூம் சர்வீஸை அழைத்து உணவை ஆர்டர் செய்தான்.
அவன் உடைமாற்றி மீட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. யார் என்று கேட்டுவிட்டு கதவை திறந்தான். ரூம் பாய் உணவு ட்ரேயோடு நின்றுக் கொண்டிருந்தான்.
“உள்ள கொண்டு வந்து வை… அங்க” – மிருதுளாவின் பக்கம் கைகாட்டினான். அவள் அமர்ந்திருக்கும் சேருக்கு எதிரில் கிடந்த டீப்பாயில் ட்ரேயை வைத்துவிட்டு சென்றான் அவன். மிருதுளா அதை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவளை ஓரக்கண்ணால் கவனித்தபடியே தயாராகிக் கொண்டிருந்த அர்ஜுன், அவள் அசைவதாக இல்லை என்பதை உணர்ந்து பற்களை நறநறத்தான். பிறகு தானே முன்வந்து தட்டில் உணவை பரிமாறி அவளிடம் நீட்டினான்.
அவனை நிமிர்ந்து பார்த்து “வாட்?” என்றாள் மிருதுளா.
“சாப்பிடு”
“எனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், தேவைப்பட்டாலும் தேவைப்படலைன்னாலும், நா இப்போ சாப்பிட்டாகணும் இல்ல? கொடுங்க… சாப்பிடுறேன்” – மிளகு வெடிப்பது போல் படபடவென்று வெடித்துவிட்டு அவன் கையிலிருந்து தட்டை பிடுங்கி, உணவை அள்ளி விழி பிதுங்க வாயில் திணித்துக் கொண்டாள்.
“ஏய்! என்ன செய்ற?” – அவளிடமிருந்து தட்டை பிடுங்கி ஓரமாக வைத்தான்.
“நீங்க சொன்னதைத்தான் செய்றேன். அதை மட்டும் தானே நான் செய்யணும்?”
“ஏன் இப்படி பிஹேவ் பண்ற?”
“வேற எப்படி பிஹேவ் பண்ணனும்? ஓ! உங்களுக்கு நான் அமைதியா இருக்கணும்ல? ஓகே… அப்படியே இருக்கேன்”
“பைத்தியமாயிட்ட நீ”
“நோ… நீங்க சொன்னதை செய்றேன். ஐம் எ மெஷின்” – உதடு துடிக்க ஆத்திரத்துடன் பேசினாள்.
“ஓ ரியலி! அப்போ ஒன்னு செய். நா திரும்பி வர்ற வரைக்கும் இங்கேயே, இப்படியே அசையாம உட்கார்ந்திரு” – எரிச்சலுடன் கூறிவிட்டு அவளை உள்ளே வைத்து அறை கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
**********
கோர்த்தாவின் வணிகப் பிரிவு தலைவர் மிகவும் திறமையானவர். வெட்டியெடுக்கும் கனிமங்களை காசாக்குவதில் கில்லாடி. பம்பரமாக சுழன்று பணத்தை குவித்துக் கொண்டிருந்தவரை, வயது ஓய்வெடுக்க வற்புறுத்தியது. எனவே சில மாதங்களுக்கு முன் புதிய தலைவர் ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாடிக்கையாளர்களிடம், அவருடைய அணுகுமுறையும் தொழில் சாமர்த்தியமும் தலைமைக்கு திருப்தியளித்ததால், அவருடைய பதவியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்பிற்கு கோர்த்தாவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அழைக்கப்பட்டார்கள். அர்ஜுனும் அழைக்கப்பட்டான்.
புதிய தலைவர் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் அர்ஜுனுக்கு தெரிந்தவர்தான். பழக்கமானவரும் கூட. ஆனால் அவர் வணிகப்பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று அவன் கூட எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியோடு அவருக்கு வாழ்த்து கூறினான். மற்றவர்களும் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்தார்கள். வாழ்த்துக்களும் உபச்சாரங்களும் ஓய்ந்த போது இன்னொரு முக்கிய செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்பினார் சுக்லா.
ஜெனார்த் நாயக்கின் மரண செய்தி காற்றைவிட வேகமாக கோர்த்தாவின் முக்கியப்புள்ளிகளை வந்தடைந்துவிட்டது. ஆனால் அவன் கதையை யார் முடிந்தது என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. அதைத்தான் இப்போது சுக்லா உறுதிப்படுத்தினார்.
“அர்ஜுன் ஹோத்ரா…” – கர்வமாக அவர் ஓங்கி உரைத்த போது கூடியிருந்தவர்கள் அனைவரும் அவனை பெருமையோடு நிமிர்ந்து பார்த்தார்கள். ஜெனார்தின் மரணத்தை கொண்டாடினார்கள். கொண்டாட்டம் முடிந்து அனைவரும் புறப்பட்ட பிறகு சுக்லா அர்ஜுனை தனியாக அழைத்துப் பேசினார்.
“நாயக்கை முடிச்ச உன்னால ஏன் பகவானை முடிக்க முடியல? ஏன் ஷோபா இன்னும் உயிரோட இருக்கா?” – குரலை உயர்த்தாமல் அழுத்தமாகக் கேட்டார். சட்டென்று அவன் உடல் இறுகியது. ஒருகணம் பதில் சொல்ல தயங்கியவன் உடனே சுதாரித்துக் கொண்டு, “சந்தர்ப்பம் அமையல” என்றான்.
“அன்னைக்கு அந்த வீட்டுக்குள்ள பகவான் இருந்தான்னு எனக்கு தெரியும்” – ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து தன் கோபத்தை வெளிக்காட்டினார். அர்ஜுன் அவரை இமைக்காமல் பார்த்தான். அவர் தன்னை வெகு நெருக்கமாக கண்காணிக்கிறார் என்று எண்ணினான். உடனே அவன் முகம் கடுகடுவென்று மாறியது.
“இல்ல… நான் உள்ள நுழையும் போது அங்க இருந்த ஒரே ஆண் ஜெனார்த் மட்டும்தான்”
“எனக்கு இன்பர்மேஷன் வந்தது”
“தப்பான இன்பர்மேஷன். ஜெனார்த் உள்ள வந்ததும் பகவான் வெளியே போயிருக்கணும். வேற ஏதோ நடக்கப் போகுது… பெருசா… தே ஆர் பிளானிங் ஸம்திங். ஐம் ஸ்மெலிங் இட்” – சுக்லா வியப்புடன் அவனைப் பார்த்தார்.
அவன் சொல்வது உண்மை என்றுதான் அவருக்கும் தோன்றியது. ஏனெனில் அந்த வீட்டிற்குள் பகவானும் ஷோபாவும் பதுங்கியிருப்பதாகத்தான் அவருக்கு செய்தி வந்தது. கூடவே ஒரு இளம் பெண்ணும். அந்த பெண் யார் என்ன என்று அவர் தெரிந்து கொண்டு ஆட்களை அனுப்புவதற்குள் அர்ஜுன் உள்ளே நுழைவதாக அடுத்த செய்தி வந்தது. அர்ஜுன் ஏதோ திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறான். விடிந்ததும் நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த செய்தி வரவில்லை என்றாலும் வந்தது நல்ல செய்திதான். ஆனால் ஒன்று மட்டும்தான் அவருக்கு குழப்பமாக இருந்தது.
‘ஜெனார்த் எப்போது அந்த வீட்டிற்குள் நுழைந்தான்!’ – இந்த கேள்வி அவர்களுக்குள் ஒரு விவாதமாகவே நடந்தது. பதில் ஊகங்கள் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டது. இப்போது அர்ஜுன் சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது அவருக்கு வந்த செய்தி முழுமையானது இல்லை என்பது புரிந்தது. அவன் சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். காரணத்தை கண்டுபிடித்து அதை எப்படி சரிசெய்வது என்பது ஒருபக்கம் இருக்க இன்னொறு விஷயமும் உதைத்தது. உள்ளுக்குள் தோன்றிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்தார்.
“ஷோபா உள்ளத்தானே இருந்தா? அப்புறம் ஏன் அவ இன்னும் உயிரோட இருக்கா?”
“ஷி இஸ் மை ட்ரம்ப் கார்ட்”
“அப்போ அந்த பொண்ணு? அவதான்… பகவானோட மகள்?”
“மிருதுளா என்கிட்ட இருக்கா. பகவான் அவளை தேடி வர்ற வரைக்கும் வெயிட் பண்ண சொல்றிங்களா? ஷோபாவை டிராக் பண்ணி பகவானை பிடிக்கணும். ரொம்ப சீக்கிரம்” – தன் நிழலைக்கூட நம்பாதவர் அர்ஜுன் கூறியதை தொண்ணூறு விழுக்காடு நம்பினார். அவன் விரைவில் பகவான் குடும்பத்தை வேரோடு அழிப்பான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
Comments are closed here.