அத்தியாயம் - 22
திருமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்து குழந்தையோடு காரில் ஏறிய மதுமதியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வண்டியைக் கிளப்பிய கார்முகிலனின் முகம் பாறை போல் இறுகியிருந்தது. மதுமதியும் கோபமாகத்தான் இருந்தாள். 'திருமணம் முடிந்ததும் முடியாததுமாக இப்படி இழுத்துக்கொண்டு...
அத்தியாயம் - 20
கலைவாணியிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்து மேஜைமீது தூக்கியெறிந்த கார்முகிலனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. இதுவரை காட்டாற்று வெள்ளம் போல் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று மனைவியின் வீண் பிடிவாதத்திற்குக் கட்டுப்பட்டுவிட்டான். அதை நினைக்கையில் அவனுக்கே...
அத்தியாயம் - 19
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான ஜவுளி மாளிகையின் பில்லிங் செக்ஷன்...
"ஐயாயிரத்து எழுனூற்றி ஐம்பது ரூபாய்... கார்ட்டா... கேஷா சார்?" - கணினியைத் தட்டிக் கொண்டிருந்த இளைஞன் கேட்டான்.
"கார்ட்..." என்றபடி பர்சைத் திறந்து டெபிட் அட்டையை எடுத்து நீட்டினான்...
அத்தியாயம் - 18
கார்முகிலனும் மதுமதியும் கேரளாவிலிருந்து திரும்பி வந்து ஐந்து நாட்கள் முடிந்துவிட்டன. அன்று ஞாயிற்றுக்கிழமை... மாலை மூன்று மணியிருக்கும். முகிலன் ஹால் சோபாவில் அமர்ந்து நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்.
"இந்தாங்க..." - மதுமதி ஒரு கப்பை அவனிடம் நீட்டினாள்.
"என்ன...
அத்தியாயம் - 17
காலை சூரியன் மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்க... கார்முகிலனின் கார் சீரான வேகத்தில் கொச்சியிலிருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. நான்கு நாள் பயணமாக மூணாறு வந்தவர்கள், முதல் நாள் நடந்த சம்பவத்தால் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்குப்...
அத்தியாயம் - 16
தனிமையில் அழுதழுது மதுமதிக்குக் கண்ணீர் வற்றிவிட்டது. 'என்ன காரியம் செய்துவிட்டான்...! எவ்வளவு இரத்தம்...! ச்ச... அப்படி என்ன கோபம்...! ஹாஸ்பிட்டலுக்குப் போனவங்களை வேற இன்னும் காணோமே...! ஏதாவது சீரியஸா ஆயிடுச்சோ...! கடவுளே...!' - மனம் புலம்பித் தவித்தது.
அவர்கள்...
அத்தியாயம் - 14
மகளைக் கையில் சுமந்து கொண்டு, தேயிலை தோட்டங்களுக்கும் காட்டு மரங்களுக்கும் இடையில் போடப்பட்டிருந்த சாலையில் இறங்கி நடந்தான் கார்முகிலன். வண்ணப் பூக்கள்... குட்டி அருவிகள் என்று மகளுக்கு வேடிக்கைக் காட்டியபடி மெல்ல நடந்து செல்வது மனதிற்கு இதமாக இருந்ததால் நேரம் தெரியாமல்...
அத்தியாயம் - 13
இரவு வெகுநேரம் உறங்காமல் போராடிக் கொண்டிருந்த கணவன் மனைவி இருவரும்... விடியலில் கண்ணயர்ந்து விடிந்த பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்கள்.
"ம்ம்மா... ம்ம்மா..." குழந்தைத் தாயை உலுக்கியது. மகள் குரல் கேட்டு மனைவிக்கு முன் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்த கார்முகிலன் "பொம்மு...
அத்தியாயம் - 12
காரில் கனத்த மௌனம் கவிழ்ந்திருந்தது. மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையைக் கோதியபடி சாலையில் பார்வையைப் பதித்திருந்த மதுமதியின் முகம் உணர்ச்சிகளற்று இருந்தாலும், உள்ளே மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை அவள் துளியும் வெளியே காட்டவில்லை.
யாரிடம்...
அத்தியாயம் - 11
மூணாறிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சாலையிலிருந்து சற்று சரிவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ள 'ப்ராக்னெல் ஃபாரஸ்ட்' எனும் நட்சத்திர ஹோட்டலுக்கு முன் சென்று நின்ற காரிலிருந்து கார்முகிலனின் குடும்பம் இறங்கியது.
சாலையிலிருந்து...
அத்தியாயம் - 10
இறைவனின் சொந்த ஊர்... இயற்கையரசியின் வாசஸ்தலம்... கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து அறநூறு மீட்டர் உயரத்தில் எழில் வாய்ந்த அழகிய மலை பூமி... முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூணாறு எனும் பசுமை நகரத்தை நோக்கி... வளைந்து நெளிந்து ஓடும் மலைப்பாதையில்...
அத்தியாயம் - 9
அடிக்கிற காற்றில்... மழைச்சாரல் கோவில் முன் மண்டபத்தைப் பாதிவரை நனைத்துவிட்டது. மீதியிருந்த இடத்தைப் பிச்சைக்காரர்கள் ஒருபக்கம் ஆக்கிரமித்திருக்க, மறுபக்கத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே ஒரு மூலையில், ஊதக்காற்று குழந்தையைப் பாதித்துவிடக்...
அத்தியாயம் - 8
அன்று நவம்பர் பத்து... கார்முகிலன் மதுமதி தம்பதியரின் திருமணநாள். முதல் திருமண நாளன்று நீலவேணி எனும் சூறாவளிக் காற்றால் இருவரும் இருவேறு திசைகளில் சிதறடிக்கப் பட்டிருந்தார்கள். பிரிவு தந்த துயரில் மூழ்கியிருந்தவர்கள், தாங்கள் இணைந்த நாளை நினைக்கக் கூட மறந்துவிட்டார்கள். இது...
அத்தியாயம் - 7
தன்னுடைய உரிமைகள் எதையும் தடை சொல்லாமல் அழகாகக் குடும்பம் நடத்தும் மனைவி, தன்னிடம் எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ளாமல் விட்டேற்றியாக வாழ்வது கார்முகிலனுக்கு வெறுப்பாக இருந்தது. அவளை மாற்றவும் முடியாமல், அவளைப் போல் விட்டேற்றியாக வாழவும் முடியாமல் நட்டாற்றில் தத்தளித்தான்...
அத்தியாயம் - 6
"ஆறடி உயரம் வளர்ந்த ஆண்மகன்
உள்ளம் ஊமையாய் அழுகுதடி - கண்ணே...!
உன் விலகல் தாங்காமல் - மனம்
தவியாய்த் தவிக்குதடி! "
அன்று ஞாயிற்றுக்கிழமை... காலை பதினொரு மணி... மதுமதி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ பாடலை முணுமுணுத்தபடி புடவையின் மடிப்பை சரி செய்துவிட்டு, ஆளுயரக்...
அத்தியாயம் - 5
"பாராமுகம் காட்டும் உன்
நிலாமுகம் பார்க்க முடியாமல்...
தனிமையை நான் தழுவுகிறேன்
தினம் தினம்...!"
பெங்களூர் கோரமங்களா ஆறாவது பிளாக்கில் அமைந்துள்ள 'ஆதவ்' அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில்... மூன்றாவது வீட்டில் தொலைபேசி அலறியது. சோபாவில் கால்களை நீட்டி...
அத்தியாயம் - 4
"தினம் ருசித்த நின்காதல் கிட்டாமல்
மனம் பசித்து வாடும் வேளை...
தன் வசமிழக்கும் மிருகமாய்
நான் மாறிப் போகிறேன்...!"
"எக்ஸ்கியூஸ் அஸ் சார்..." - இனிமையான குரலில், ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடக்குறிப்புகளைத் தயார் செய்து கொண்டிருந்த விரிவுரையாளர்...
அத்தியாயம் - 3
"உரிமையோடு எனை வெறுத்தால் கூட
சுகமாகப் பொறுத்துக் கொள்வேன் - ஆனால்
சிரித்துக் கொண்டே நீ காட்டும் விலகல்...
கண்ணே! என்னைக் கொல்லாமல் கொல்லுதடி...!"
மதுமதி கணவனைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அவனுக்கு எந்த நேரத்தில் என்னென்ன தேவை என்பதைப் பார்த்துப்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.