அத்தியாயம் - 2
"அனுபவிக்கும் வரை இனிக்கும்
சின்னச்சின்ன ஆசைகள் - துறக்க
நினைத்தால் பெரும் துன்பங்களாக
மாறிவிடும் விந்தை ஏனோ...!"
எதுவுமே தலை போகிற காரியமல்ல... எல்லாமே சின்னச் சின்ன விஷயங்கள் தான். ஆனால் அந்தச் சின்ன விஷயங்களுக்குப் பழகிவிட்ட ஒருவருக்கு அந்தப் பழக்கத்தை...
அத்தியாயம் -1
"காடு பற்றி எரியும் போதும்
வேட்டையாடச் செல்லும் வீரன் - அவள்
கண்ணீர் நெஞ்சை நனைத்த வேளை
தணலில் விழுந்த புழுவைப் போல - மனம்
வெந்து தணிந்து சாம்பலானான்"
“நம்பிக்கையென்னும் உயிரைத் தொலைத்துவிட்ட நடைபிணம் தான் நான்...” என்று சொல்லிவிட்டுத் தரையில் சரிந்தமர்ந்து, முகத்தைக்...
அத்தியாயம் - 49
கார்முகிலன் மதுமதி தம்பதியுடைய குழந்தையின் பெயர் சூட்டு விழா லக்ஷ்மிபுரத்தில் வெகு விமர்சையாக நடந்தேறியது. குழந்தைக்கு ‘யாழினி’ என்று பெயரிட்டார்கள். சொந்தபந்தங்கள் ஒன்று கூடி, குழந்தையையும் தம்பதியையும் வாழ்த்தினார்கள். மதுமதி கார்முகிலனிடமிருந்து அனாவசியமாக விலகவும்...
அத்தியாயம் - 48
கார்முகிலன் தினமும் வீரராகவன் வீட்டிற்கு வந்து போனான். அவனுக்கு யாரும் தடை போடவில்லை. மதுமதி உட்பட... குழந்தைக்குக் கிடைக்கும் தந்தையின் அன்பிற்குத் தான் தடையா இருக்கக்கூடாது என்று நினைத்து விட்டாளோ என்னவோ...! முதல்நாள் தயக்கத்துடன் வந்தவன், அடுத்தடுத்த நாட்களில்...
அத்தியாயம் - 47
ஹாலின் வலது பக்கம் இரண்டாவது அறையினுள் நுழைந்த கார்முகிலன், கட்டிலில் ஓர் உருவம் படுத்திருப்பதைக் கண்டு அருகில் சென்றான். அவனுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்து மீண்டும் அந்த உருவத்தை ஆழ்ந்து நோக்கின...
'மதியா...! என் மதியா இது...!' அவனால் நம்பவே முடியவில்லை.
மனக்கவலை...
அத்தியாயம் - 46
மதுமதியின் டைரி சொன்ன விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதை அவன் மனம் ஒத்துக்கொண்டது. நீலவேணி தங்கி இருந்த அறையில் சென்று சோதனை போட்டான்... தடையங்கள் சிக்கியது. கார்முகிலனின் சட்டை ஒன்று அவள் துணிகளுக்கிடையில் இருந்து கிடைத்தது. மதுமதியும் கார்முகிலனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட...
அத்தியாயம் - 45
மதுமதிக்குக் குழந்தை பிறந்து ஒருவாரம் முடிந்துவிட்டதால் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். உடல்நிலை ஓரளவு தேறிவிட்டாலும் மனம் அமைதியடையவில்லை அவளுக்கு. குழந்தையின் பால்முகம் அவளுடைய மனக்காயத்தை இதமாக வருடுவதால், இரவும் பகலும் கண்விழித்து அதை மட்டுமே பார்த்துக்...
அத்தியாயம் - 43
தந்தையுடன் மணிக்கணக்கில் பேசும் மதுமதி, இப்போது கேட்கப்படும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிரிப்பு என்கிற வார்த்தையைக் கூட மறந்துவிட்டவளாக மாறி பெற்றோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தாள். பசி தூக்கத்தை மறந்துவிட்டாள்... குளிக்க, தலை வார, சாப்பிட...
அத்தியாயம் - 42
கார்முகிலனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். அவனுக்கு இருப்பது ஒரே மனம் தான்... அந்த மனம் தான், தன் தோழியைக் கொன்ற அரக்கியை மன்னித்துவிடாதே என்று அழுத்தமாக அறிவுறுத்துகிறது. மீண்டும் அதே மனம், விஷ ஜந்துவாக மாறி தன் தோழியின் உயிரைக் குடித்த ராட்சசிக்கு ஒரு துன்பம் என்றதும்...
அத்தியாயம் - 41
மதுமதியின் உணர்ச்சியற்ற முகத்தின் உள் விவகாரத்தை, தர்மராஜ்ஜால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் அவளுடைய காலை உணவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு சில ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வழக்கறிஞருடன் காவல்நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.
"ஜாமீன் கிடைத்துவிடுமா சார்...?"...
அத்தியாயம் - 40
மதுமதியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதும் தர்மராஜ் லக்ஷ்மிபுரத்திற்கு விரைந்தார். காலைநேரம் என்பதால் கார்முகிலன் வீட்டில்தான் இருப்பான் என்கிற அவருடைய கணக்குத் தப்பாகவில்லை. சோபாவில் சாய்வாக அமர்ந்து, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை தர்மராஜ்ஜின் குரல்...
அத்தியாயம் - 39
கார்முகிலன், நீலவேணி மனமுடைந்து பேசியதில் பதட்டமாகி அவளைத் தேடி வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்க... அவளோ சுயநினைவை இழந்து படுக்கையறையில் தரையில் கிடந்தாள்.
"நீலா..." என்று சத்தமிட்டுக் கொண்டே பாய்ந்து சென்று அவளை ஆராய்ந்தான். கடைவாயில் நுரைத் தள்ளியிருந்தது. அனிச்சையாக...
அத்தியாயம் - 38
இரவு பத்தரை மணி... தேனி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த மதுமதி சாலையைக் கவனித்தாள். சாலையோர மின்விளக்கின் உபயமாக வெளிச்சம் பரவியிருந்தது. ஜன நடமாட்டம் அதிகமில்லை. சாலையின் எதிர்பக்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் தங்கள் வாகனங்களுடன் வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக்...
அத்தியாயம் - 36
வியாழக்கிழமை காலை பதினொரு மணி... கார்முகிலன் கல்லூரிக்கும், மதுமதி கோவிலுக்கும், வேலைக்கார அம்மா கடைக்கும் சென்றுவிட்டார்கள். வீட்டில் நீலவேணி மட்டும் தனியாக இருந்தாள். அவளுடைய எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தன.
கார்முகிலன் மதுமதியோடு மனவருத்தத்தில் இருப்பது அவளுக்குக்...
அத்தியாயம் - 35
இரவு சரியான உறக்கம் இல்லாததால் விடிந்து வெகுநேரம் கழித்து எழுந்த கார்முகிலன், மதுமதியிடம் முகம் கொடுத்துப் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். முகத்தில் நேற்றிருந்த கடுமை இல்லை, அந்தத் தைரியத்தில் அவனிடம் காஃபியை நீட்டியபடிக் கேட்டாள்...
"என் ஆச்சு மாமா... நேற்று...
அத்தியாயம் - 34
மன உறுதியை வரவழைத்துக் கொண்டதாலோ... அல்லது கருவுற்று மூன்று மாதங்கள் முடிந்து நான்காவது மாதம் தொடங்கிவிட்டதாலோ... மதுமதிக்கு முன்பிருந்த உடல் உபாதைகள் இல்லை. வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாவிட்டாலும், நீலவேணியை எல்லா இடங்களிலும் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது...
அத்தியாயம் - 33
அன்று கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்த கார்முகிலன் எப்பொழுதும் போல் அவனுடைய வண்டியில் வராமல், பளபளக்கும் புத்தம் புது காரில் வந்தது வீட்டிலிருந்த இரு பெண்களையும் விழிவிரிக்க வைத்தது.
'என்ன மாமா புது கார்...! உங்க வண்டி எங்க...?' என்று மதுமதி கேட்பதற்குள்... அவளை...
அத்தியாயம் - 32
கார்முகிலனின் உந்துதலால் எழுந்த மதுமதி பல் தேய்ப்பதற்குள் இரண்டுமுறை வாந்தி செய்துவிட்டாள். மிகுந்த சிரமத்துடன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவளைத் தோள் சாய்த்து, தலை கோதி... ஆதரவுடன் அணைத்தபடி ஹாலுக்கு அழைத்து வந்து சோபாவில் அமரவைத்து, நீலவேணி தயாரித்துக் கொடுத்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.