உதயச்சந்திரனின் விருப்பப்படி சங்கரப்பாண்டியனின் விசுவாசிகள் முத்துப்பாண்டியனை ஒரேடியாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். அதன்படி மறுநாள் அவன் செல்லும் காரை, லாரி வைத்து தூக்கவும் ஏற்பாடு செய்தனர்.
மறுநாள் காலையில் தங்கள் திருமணநாள் என்பதால் வீட்டிலுள்ள அனைவரிடமும் வாழ்த்துப் பெற்று, தங்கள்...
உதயச்சந்திரன் "அப்பா" என்று அவரின் கை தொடவும் நினைவுக்கு வந்தவர்,
"அவனை ஏதாவது செய்யணும்டா. அப்போ தான் என் மனசு ஆறும். அவ்வளவு பேர் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்திட்டான்டா. அவனை ஏதாவது செய்யணும். பிரபு, உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளு தர்றேன். ஆனா, இந்தத் தேர்தல்ல நான் தான் ஜெயிக்கணும்...
தன்னை அனல் மேல் நிற்க வைத்தது போல் துடிதுடித்துப் போனார் நாச்சியம்மை.
அந்நேரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரவுவை 'பளார்' என காது ஜவ்வு கிழிய அறைந்திருந்தான் முத்துப்பாண்டியன்.
உடன் பிரவுவின் கைகளை பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டு "அறைங்க அண்ணி" என்றும் ஊக்கினான்.
நாச்சியம்மை...
அத்தியாயம் 19
ஏற்கனவே கட்சியில் உள்ள பெரிய தலைகள் எல்லாம், இந்தத் தேர்தலில் சங்கரப்பாண்டியன் தோற்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை எனவும், அதிலும் ஒரு பெண்ணிடம் தோற்றால் ஆணென்ற அடையாளத்திற்குரிய மீசையையே எடுத்துவிட வேண்டியது தான் எனவும் ஏற்றி விட்டிருந்ததால், தன் முன் நின்ற நாச்சியம்மையையும்...
பின், அதனுள் இருந்த ஆராய்ச்சிக் குறிப்பை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்ட நேரம், கட்டிலின் அடியிலிருந்து வெளிப்பட்டாள் அலமேலு.
அவ்வுருவம் அவளைக் கண்டு அரண்டு பின்வாங்க, அதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அலமேலு.
பின், தன்னால் இயன்ற அளவு பல புத்திமதிகளை சொல்லி அவ்வுருவத்தை அனுப்பி...
தோற்றும் தங்கள் முயற்சியிலிருந்து பின் வாங்காத சில சமூகவிரோதிகள், முத்துப்பாண்டியனிடமுள்ள குறிப்பைக் கைப்பற்ற, அவனை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
எங்கள் வேலையை நீ எந்த சிரமமுமின்றி முடித்துக் கொடுத்தால் பல கோடிகளை உன் வங்கிக்கணக்கில் ஊதியமாகப் பெறலாம் என ஒருவனுக்கு ஆசையும் காட்டினர்...
அவளை உரசிக்கொண்டு அருகில் அமர்ந்தவன் தொலைவில் விளையாடும் தன் மகன் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, "அம்முலு யூ ஆர் மை லைஃப். ஐ காண்ட் இமாஜின் மை லைஃப் வித்தவுட் யூ" என சொல்ல திருதிருத்தாள் அலமேலு.
கூடவே, "என்ன வேணும் மாமா?" என்ற கேள்வியுடனே எழுந்து நின்றாள்.
அவளின் கையைப் பிடித்திழுத்து...
அத்தியாயம் 18
ஊர் மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தான் செய்யும் சமூக சேவையை பெரிய பதவியிலிருந்தால் இன்னும் சிறப்புற செய்யலாம் என நினைத்து, சங்கரப்பாண்டியனை எதிர்த்து பண்ணைபுரத்துத் தொகுதியில் போட்டியிட தயாரானார் நாச்சியம்மை.
ஆனால், தான் எடுத்த அம்முடிவினால் தன் தங்கையையும்...
"நாச்சூம்மா அம்முலு இன்னைக்கு எனக்குத் தராம சிக்கன் சாப்ட்டுட்டாங்க." என்று போட்டுக் கொடுத்தான்.
'பயபுள்ள என்னை எப்படி போட்டுக் கொடுக்கிறான் பாரு?' என தனக்குள்ளேயே புலம்பிய அலமேலு வெளியே தைரியமாக,
"ஐயோ! நாச்சூக்கா இன்னைக்கு சனிக்கிழமை. பெருமாளுக்கு விரதம். நான் எதுவுமே சாப்பிடல. இவன் பொய்...
"அதான் இங்க வந்தா விளைநிலத்தோட நம்ம பருவத்தையும் பயிர் செய்யலாம்னு உன்னை என்னோட கூட்டிட்டு வந்துட்டேன்" எனத் தான் எப்போதும் இயற்கைக்கு நண்பன் என்பதை நிரூபித்தான்.
அவர்களின் மனப்பூர்வமான தாம்பத்யத்தில் திருமணம் முடிந்த மூன்றாம் மாதம் அலமேலுமங்கை கர்ப்பமாக அவளை நடக்க சம்மதிக்கவில்லை நாச்சியம்மை...
கூத்தும் கொண்டாட்டமுமாய் ஒரு வாரம் கழிந்த நிலையில் காஷ்மீர் புறப்பட்டான் வீரப்பாண்டியன்.
அப்போது திடீரென அவனுக்கு தலை சுற்றுவது போலிருக்க அதனை சாதாரண தலைவலியென நினைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான். தான் அப்போதே மருத்துவமனை சென்றிருந்தால் தன் இறப்பை அவன் தடுத்திருக்கலாமோ என்னவோ...
"இங்கப் பாருங்க மாமா, இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லைனு எனக்குத் தெரியும். மாமாவும் அக்காவும் உங்களை வற்புறுத்தி தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் எனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல தான். அக்காவால தான் சம்மதிச்சேன்...
ஏற்கனவே தான் வேட்டையாடிய பொருள் பறிபோன கோபத்திலிருந்த அம்முலு இப்போது தன் அன்னை திட்டுவதையும் கண்டு பொறுக்க முடியாமல் வெறிகொண்டு அவள் தலைமுடியை பிய்த்தெறிந்தாள். வலியில் ஆவென அலறினாள் அதிதி.
அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியம்மைக்கு அதிதி தன் மகளிடம் படும் பாட்டைப் பார்த்து...
சிறைக்கு தன் மகனை காணச்சென்ற சங்கரப்பாண்டியன் வியப்புடன் அக்கேள்வியை கேட்டார்.
"என்ன சந்திரா சொல்ற? அந்த ஜெயிலர் கந்தன் உண்மையாவே உன் ப்ரெண்டா?" என்றார்.
"ஆமாப்பா, அவன் என் காலேஜ் ப்ரெண்ட். அவன் இங்க வந்த மறுநாளே என்னை கொலை செய்யச் சொல்லி அவனை நாச்சியம்மை அனுப்பினதா சொல்லி, பத்திரமா...
அவளின் நச்சரிப்புத் தாங்காமல் அவளுடன் நாச்சியம்மையின் அறைக்குச் சென்றான் விக்ரமன்.
தன்னறையில் வட்டி கணக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் அதிதியின் உடையைக் கண்டு முகம் சுழித்தார். பின், அவள் இடுப்பிலிருந்த தன் அலமுவை கண்ணெடுக்காமல் பார்த்தார்.
அவரின் விழிப்போகும் திசையை அறிந்த அதிதி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.