அடுத்து வந்த நாட்களில் விடாமுயற்சியோடு வேலைகளை தொடர்ந்தாள் தேன்மொழி. ஓரளவு நன்றாகவே எல்லாம் நடைபெற்றது. ஆனால் வேறு விதங்களில் பிரச்சினைகள் தலைதூக்கின.
வெளியில் யாராவது இவளிடம் வலிய வந்து பேசுகையில் செய்வதறியாது தவிப்பாள். சந்தோஷிற்கு பழக்கமானவர்களை இவளுக்கு எப்படி தெரியும்? அவர்கள் கேட்பதற்கு...
சிறு வயதிலிருந்தே மனம் விட்டு பேச யாருமில்லாமல் தவித்தவள் தன் கவலை, சந்தோஷம், ஏக்கம் என எல்லாவற்றையும் கவிதைகளால் செதுக்கி வைத்திருந்தாள் தேன்மொழி. நாட்குறிப்பின் பக்கங்களில் ஆங்காங்கே சிதறிவிட்டிருந்த விழிநீர் தடங்களும் இல்லாமலில்லை.
படித்து முடிந்து நிமிர்ந்த சந்தோஷின் மனதிலும் பல எண்ணங்கள்...
தேன்மொழியின் அறையில் அலாரம் அலற அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் தேன்மொழி. தான் இன்னும் அதே நிலைமையிலேயே இருப்பதை கண்டவள் 'என்னடா இந்த கனவு இவ்வளவு நீளமா இருக்கு' என தலையை சொறிந்து கொண்டே கண் முன் இருக்கும் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவசரமாக வந்த இயற்கை உபாதையை அடக்க முடியாமல்...
இனிய மாலை வணக்கம் நண்பர்களே...
நான் விடிவெள்ளி
சகாப்தம் குழுமத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.
நீயென நானும் நானென நீயும் தொடர்கதையின் முதலாம் பாகத்தை வெளியிட்டிருக்கிறேன்.
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
நள்ளிரவு நேரத்தில் சாளரத்தின் அருகே கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஒருத்தி.
சில்லென்ற குளிர்காற்று, இரவிற்கே உரித்தான ஆழ்ந்த அமைதி, மேகங்களுக்குள் மறைந்தும் வெளிவந்தும் நீந்தி விளையாடும் வட்ட நிலா- இவை எதையும் இரசிக்கும் மனநிலை அவளுக்கு இல்லை போலும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.