அத்தியாயம் - 41
கார்முகிலனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், கல்லூரி வளாகத்திலேயே கைக்கலப்பில் ஈடுபட்டதாலும் கல்லூரி நிர்வாகம் அவனைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்தது. அதற்காக அவன் துளியும் வருந்தவில்லையோ அல்லது தன் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லையோ... வீட்டில்...
அத்தியாயம் - 40
காடு மேடெல்லாம் சுற்றி... கல்லும் முள்ளும் நிறைந்த கடுமையான பாதையில் நடந்து... அலுத்துக் களைத்து வீடு வந்து சேர்ந்துவிட்ட நிம்மதியை ஆசுவாசமாக அனுபவித்தபடி மொட்டைமாடியின் பக்கவாட்டுச் சுவற்றில் சாய்ந்தமர்ந்திருந்த கார்முகிலன் தன்மீது கொடி போல் படர்ந்திருந்த மதுமதியை இருகரம்...
அத்தியாயம் - 39
மதியம் மூன்று மணி இருக்கும்... மதுமதியின் மனம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. 'இந்நேரம் மாமாவை கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருப்பாங்க... விசாரணை கூட முடிஞ்சிருக்கும். பெயில் கிடைச்சிருக்குமா... இல்ல ஏதாவது... கடவுளே...! இந்த தர்மா தாத்தா வேற நம்மள கூட்டிட்டே போமாட்டேன்னு...
அத்தியாயம் - 38
கார் வீட்டு போர்டிகோவில் வந்து நின்ற பிறகும் மதுமதி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். முகிலன் அவள்மீது கொண்டுள்ள அன்பை விளக்கி சொன்ன பிறகு அவள் நெகிழ்ந்து போவாள்... மகிழ்ச்சியில் பூரித்துப் போவாள் என்று எண்ணியிருந்த தர்மராஜ் ஏமாற்றமடைந்தார். உயிருள்ள மனுஷியா அல்லது...
அத்தியாயம் - 37
தர்மராஜ் மதுமதி ஏறி அமர்வதற்காக காரின் கதவைத் திறந்துவிட்டார். ஆவியைப் பிரிந்த வெறும் உடல் கூடு மட்டும் உள்ளே ஏறி அமர்ந்தது. அவர் மறுபக்கம் சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினார். காவல்நிலைய வளாகத்திலிருந்து வெளியே வந்து சாலையில் ஏறி போக்குவரத்தில்...
அத்தியாயம் - 34
மாலை ஐந்து மணியிருக்கும்... கடலைமாவுடன் தேவையான பொருட்கள் சேர்த்துக் கரைத்த பஜ்ஜி மாவுக்கரைசலில், மெலிதாகச் சீவிய வாழைக்காயை நனைத்து, சூடான எண்ணையில் போட்டு பொறித்து வேறு பாத்திரத்தில் வாரி வைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி. அவளுடைய கை தானாக வேலை செய்து கொண்டிருந்தாலும் கவனம்...
அத்தியாயம் - 33
மனைவியின் சேலையை நெஞ்சிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்த கார்முகிலன், குளிரை உணர்ந்து கண்விழித்தான். இரவு உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே வெறும் தரையில் படுத்து நீண்ட நேரம் சிந்தனைகளுடன் போராடிக் கொண்டிருந்தவன், எப்போது உறங்கினான் என்பதே...
அத்தியாயம் - 32
பொழுது சாயும் வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்த கார்முகிலன் மீண்டும் வீட்டிற்கு வரும்பொழுது, கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து தரையில் விளையாடிக் கொண்டிருந்த மகளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமதி. புருவ மத்தியில் வைத்திருந்த சிறு அரக்கு நிற பொட்டும், லேசாக மையிட்ட...
அத்தியாயம் - 31
"கதையடிச்சு முடிச்சாச்சா?" - கலைவாணியையும் கதிரவனையும் அனுப்பி வைத்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுக்கையறைக்குள் நுழைந்த கார்முகிலனைச் சீற்றத்துடன் வரவேற்றாள் மதுமதி.
"கதையடிச்சேனா...! "
"உடம்பு எவ்வளவு டயர்டா இருக்குன்னு கண்ணுலேயே தெரியுது...
அத்தியாயம் - 30
முகத்தில் அடிவாங்கியது போல் சட்டென்று கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்த கலைவாணி அதை வெறித்துப் பார்த்தாள். கோபத்தில் அவள் நாசி விடைத்துக் கண்கள் கலங்கின.
"கலை... என்ன வெளியவே நிக்கிற? உள்ள வா.." - மதிய உணவை முடித்துவிட்டு டிவி திரையில் ஆழ்ந்திருந்த கணவனிடம் தண்ணீர்...
அத்தியாயம் - 29
வீரராகவனை அறுவை சிகிச்சை முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து, இன்று தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். கணவனை அழைத்துக் கொண்டு காம்காப்பட்டியிலிருக்கும் தங்களுடைய வீட்டிற்குச் செல்வதாகக் கூறினாள் கௌசல்யா. வீரராகவனும் மனைவி சொல்வது தான் சரியென்றார்...
அத்தியாயம் - 28
தேனியில் உள்ள தன்னுடைய சொந்த மருத்துவமனையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, மதுரை கேகே நகரில் உள்ள ஓர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வீரராகவனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தது...
அத்தியாயம் - 27
மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிய நொடி அனைவருடைய பார்வையும் 'என்ன சொல்லப் போகிறாரோ...' என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்புடன் அவர் மீது படிந்தது. பதட்டத்துடன் எழுந்து நின்ற அக்காவின் முகத்தை, நிமிர்ந்து பார்க்கும் துணிவின்றி வேகமாக மருத்துவரிடம் நெருங்கினான்...
அத்தியாயம் - 26
வீரராகவன் படுக்கவைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரெட்சரை வெள்ளை சீருடை அணிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவசரசிகிச்சைப் பிரிவிற்கு உள்ளே பரபரப்புடன் தள்ளிக் கொண்டு செல்ல, ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியப் பெண்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றார்கள்.
தன் ஜீவனே பிரிந்து தூரமாக எங்கோ செல்வது...
அத்தியாயம் - 25
மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்த மதுமதிக்குப் பொழுது போகவில்லை. டிவி பார்க்கலாம் என்றால் சத்தத்தில் குழந்தை விழித்துவிடக் கூடும். டீப்பாயில் கிடந்த பழைய வார இதழை எடுத்துப் புரட்டினாள். அதிலும் மனம் லயிக்காததால்...
அத்தியாயம் - 24
அழும் குழந்தையைச் சமாதானம் செய்தபடியே படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கார்முகிலன். கோபத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்த மதுமதி கணவன் உள்ளே நுழைவதைக் கண்டு சிலிர்த்தெழுந்தாள்.
"என்ன நெனச்சிட்டுருக்கீங்க உங்க மனசுல? எதுக்கு என்ன ரூம்ல தள்ளி கதவைச்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.