முதல் அத்தியாயம் போட்டுடன் friends எப்டி இருக்குனு படிச்சி பாத்து சொல்லுங்க ஏன்னா இது என்னோட முதல் முயற்சி ஏதாவது தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்..
காதலன் கை சேரடி கண்மணி
அத்தியாயம்-1
சூரியன் தன் பொற்கரங்களால் பூமிதாயை முத்தமிட்டு கொண்டிருந்த நேரம் அது, பச்சை பட்டை விரித்தார் போன்று பச்சை பசெலென்ற கதிரகள் ஒருபுறம் வளர்ந்திருக்க,தங்க நிறம் கொண்டு அறுவடைக்கு தயாராகும் நெற்கதிர்கள் மற்றொரு புறம் என அழகாக காட்ச்சியளித்தது அந்த வளத்தூர் கிராம்.
அந்த அதிகாலை வேலையில் தனது ராயல் புல்லட்டில் தன் தோப்பை நோக்கி சென்று கொண்டிருந்தான் அதிரதன்விஸ்வஜித்,ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான தேகத்தோடு,தனது அலை அலையான கேசம் காற்றில் அலைபாய காற்றை கிழித்துகொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த ராயல் புல்லட்.
வளத்தூர் கிராமத்தின் புகழ் பெற்ற விஸ்வஜித் வம்சத்தில் பிறந்த ஒற்றை ஆண் வாரிசு அவன்.தனது படிப்பை முடித்துவிட்டு தன் குடும்பம் காலகாலமாக செய்து வரும் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டான்,விவசாயம் மட்டுமில்லாது ரைஸ் மில்,கரும்பு ஆலை,போன்றவற்றை அமைத்து அதை திறம்படவும் நடத்திவருகிறான்.
தோப்பின் முகப்பில் தனது வண்டியை நிறுத்தி விட்டு,தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தென்னை மரம்,மாமரம்,கொய்யா,வாழை போன்ற மரங்கள் சூழ்ந்து அழகாக வீற்றிருந்தது அந்த தோப்பு வீடு.
விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், இயந்திரங்கள் போன்றவற்றை உபயோகபடுத்த வசதியான முறையிலும், அவ்வபோது வந்து தங்கி கொள்ளவும், அந்ததோப்பு வீட்டை உருவாக்கினான் அதிரதன்.
தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த சுப்பையன் தனது சின்ன முதலாளி வருவதை கண்டு தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு பணிவுடன் அவன் முன் சென்று நின்றான்,
என்னையா காலையிலேயே வந்துருக்கியே ஏதாவது வேலையா..
ஆமா சுப்பையா இன்னைக்கு தெக்கால இருக்குற கதிரெல்லா அறுவட பன்னனும்,நீ அதுக்கான வேலைய பாரு…
தன் ஆசான் இட்ட கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு அதற்கான வேலை ஈடுபட்டான் சுப்பையன்,
அறுவடை முடித்து நெல்லை எல்லாம் ரைஸ் மில்லுக்கு கொண்டு சேர்த்து கணக்கு வழக்கு முடித்து வீட்டுக்கு வர இரவாகியிருந்து,
இரவிலும் கம்பீரமாக வீற்றிருந்த தன் அரண்மனை போன்ற வீட்டிற்குள் சென்றான் அதிரதன்.
அவனுக்காக அவனது அன்னை மைவிழிமங்கை கூடத்தில் காத்திருந்தார்,சோர்விலும் கம்பீரமாக வரும் தன் மகனை நினைத்து பெருமிதம் கொண்டது அந்த தாயுள்ளம்.
அதி கண்ணா வேல இன்னைக்கு ரொம்ப அதிகமா..
அதெல்லா ஒன்னுமில்லமா கணக்கு முடிக்க கொஞ்சம் டைம் ஆச்சி,நா குளிச்சிட்டு வர்ர நீங்க சாப்பாடு எடுத்து வைங்க, என கூறிவிட்டு மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்று குளித்து விட்டு கீழே வருகையில் அவன் தந்தை ஆதிகேசவன் விஸ்வஜித் அவனுக்காக காத்திருந்தார்,
அதிபா அறுவட வேலை எல்லா முடிஞ்சிதா..
எல்லா முடிஞ்சிதுபா நாளைக்கு ரைஸ் மில்லுல கொஞ்சம் வேல இருக்கு…
சரி கண்ணா வந்து சாப்புடு
சாப்புடும் பொழுது அன்னையும்,தந்தையும் கண்ணால் ஜடை செய்வதை கண்ட அதிரதன் இருவரும் தன்னிடம் எதையோ சொல்ல தயங்குவது புரிந்தது
என்னம்மா என்ன விசியம் ஏதோ சொல்ல தயங்குரிங்க
அது ஒன்னும் இல்லப்பா நம்ம ஜனனி படிப்ப முடிச்சிட்டா உன்னோட அத்தையும் எப்ப கல்யாணத்த வைச்சிக்கலாம்னு கேட்டுட்டே இருக்கா ..
உனக்கும் அவளுக்கும் சின்ன வயசிலேயே பேசி வைச்சதுதான உன்னோட கல்யாணத்த பாக்க எங்களுக்கும் ஆசையா இருக்காதா ..
நீ சரினு சொன்னா நம்ம போய் சம்மந்த பேசலாம் எனசொல்லி கொண்டே சென்றவர் மகன் பார்த்த பார்வையில் தனது பேச்சை முடித்து கொண்டார்…
அம்மா நானா உங்கள சின்ன வயசிலேயே பேசிவைக்க சொன்ன என அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்
அதிபா ஏன் இப்ப கோபபட்ற கொஞ்சம் பொறுமையா இருப்பா..
பின்ன எத்தன தடவதான் சொல்றது எனக்கு ஜனனி மேல அந்தமாறி எண்ணம் இல்லனு எனக்கு இப்ப கல்யாணம் பன்றதுல விருப்பம் இல்ல என அத்தோடு தனது பேச்சை முடித்து கொண்டு தனது அறைக்கு சென்று விட்டான்..
என்னங்க இவன் இப்டி சொல்லிட்டு போரான் இப்ப நான் அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்ன பதில் சொல்றது.
நீ ஒன்னும் கவல படாத மங்கை நா தங்கசிட்ட பேசி பாக்குற,விருப்பம் இல்ல ஒரு விசியத்துல நாம அவன தினிக்ககூடாது.என கூறிவிட்டு அவரும் தனது அறைக்கு சென்று விட்டார்.
ஆதிகேசவன் மைவிழி மங்கையை காதலித்து திருமணம் முடித்தவர்,மைவிழியின் குடும்பமும் நல்ல பேர் பெற்ற வசதியான குடும்பமாக இருக்க அவர்களின் குடும்பத்தில் எந்த ஒரு எதிர்பும் இல்லாமல் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டனர்,
சிறிது காலங்களுக்கு பிறகு ஆதிகேசவன் தனது தங்கை சீதாலெட்சுமிக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க,
அவர் எல்லா வரங்களையும் தட்டி கழித்து கொண்டே வந்தார் இதனால் சந்தேகம் கொண்ட ஆதிகேசவன் அவர் தங்கையிடம் என்ன காரணம் என தீர விசாரிக்க அவர் மைவிழியின் அண்ணன் ஆவுடையப்பனை விரும்புவதாக ஒத்தகொண்டார்,
தங்கையின் காதலை எதிர்க்க விரும்பாமல் ஆவுடையப்பனுக்கே தனது தங்கையை மணம் முடித்து வைத்தார்,
ஆதி மற்றும் மங்கைக்கு அதிரதன் பிறந்து ஆறு வருடம் கலித்தே சீதா,ஆவுடைய்பன் தம்பதியருக்கு ஜனனி பிறந்தாள்,
அந்த சின்ன மொட்டை பூக்குவியலாய் தன் கையில் ஏந்திய போதே முடிவு செய்துவிட்டார், மங்கை ,இவள்தான் தன் மருமகள் என்று, அதற்குதான் தற்போது தன் சீம புத்திரனிடம் போராடிகொண்டிருக்கிறார்.அவன் மனதை எப்டியாவது மாற்றிவிடும் நோக்கில் மங்கை இருக்க,
அதற்க்கு நேர்மாறாய் விதி தன் ஆட்டத்தை துடங்கியது…
காதலனின் கை சேருவாளா கண்மனி….