Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெற்றியடி நான் உனக்கு !!!

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
வெற்றியடி நான் உனக்கு!!!

அத்தியாயம் - 1

அது ஒரு திருமண மண்டபம், மிகவும் பிரமாண்டம் இல்லை என்றாலும் சற்று விசாலமாகவும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருந்தது. வாழை மரங்களாலும், பூக்களினால் செய்யப்பட்ட தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதில் அலட்டலில்லா அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருக்க "அர்ஜுன் வெட்ஸ் ஸ்ருதி" என்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகை, அந்த இளங்காலையின் சூரிய கதிர்கள் பட்டு மேலும் மின்னிக் கொண்டிருக்க, அதனை கண்டவளின் கண்களில் இன்னதென பிரித்தரியமுடியா உணர்வு, இதழில் மட்டும் புன்னகை !!!

கண்கள் வருடியதை கைகள் கொண்டு வருட ஆவலெழ, அதற்கு தடா போட்டது அவளது அன்னையின் குரல்.

"ஏன் டி இந்த மேக்கப் இங்க பண்ணினா ஆகாதா, அந்த பார்லர்க்கு தான் போகணுமா? எல்லாம் உன் இஷ்ட்டம் தான்" என அடைமழையாய் வெளுத்து வாங்கியவரின் கண்களோ மகளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது.

அடைமழை நொடியில் பனித்தூறலாய் மாற மகளின் முகம் வழித்து திருஷ்டி எடுத்து "என் பொண்ணு எவ்ளோ அழகாயிருக்கா பாரு, என் கண்ணே பட்டுடும் போல" என்றவர் மீண்டும் அடைமழையாக மாறி "சரி சரி சீக்கிரம் வா, அப்பா வேற மாப்பிளையே மனையில உக்காந்தாச்சு, இன்னுமா உன் பொண்ணு மேக்கப் முடிஞ்சி வரலனு கேட்டுட்டுஇருந்தாரு" என அவர் முன் செல்ல, தன் சொந்தங்களின் புடைசூழ அவள் வந்துக்கொண்டிருக்க "நல்ல நேரம் போய்ட்டு இருக்கு, பொண்ண அழைச்சுட்டு வாங்கோ" என்று ஐயர் குரல் கொடுக்கவும் சரியாக இருந்து.

அதுவரை மேடையில் நிலைத்திருந்த அனைவரின் பார்வையும், இவள் வந்துக் கொண்டிருந்த திசை நோக்கித்திரும்ப, நாணம் பூசிக் கொண்டது இவளின் முகம் !

மென் சிரிப்புடன் அனைவரது பார்வையும் எதிர் கொண்டவளது பார்வை, மேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை கர்ம காரியமாக சொல்லிக் கொண்டிருந்தவனிடம் படிய, இதழ்கள் மேலும் விரிந்தது.

தன் அருகில் ஒலித்த வளையல் சத்தத்தில் பார்வையை திருப்பியவளின் கண்கள் கண்டது, மணமகள் அலங்காரத்தில் தன்னை கடந்து செல்லும் பெண்ணை !

தூக்கத்தில் வந்த இனிய கனவுக் கலைந்து எழுந்தது போன்ற நிலை அவளது.

கண்களை சூழலவிட்டவளது பார்வையில், சற்று முன் கண்ட அவளின் சொந்தங்கள் இல்லை! மேடையில் மணமகன் அமர்ந்து மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தான், ஆனால் அது அவன் இல்லை! கண்கள் தன்னிச்சையாக அந்த பெயர் பலகையைப் பார்க்க அதில் மின்னியது "ரமேஷ் வெட்ஸ் கவிதா".

நொடியில் அவளது மடமை விளங்கிவிட, அதன் வெளிப்பாடாய் வந்தது நிறைவேறாத ஆசையின் வலி மற்றும் அடுத்தவர்க்குச் சொந்தமான பொருளை தன் மனம் இன்னுமா மறக்கவில்லை என்ற கோபம் மட்டுமே.

இரண்டு வருடத்திற்கு முன்புவரை தேனாய் இனித்த இதுபோன்ற கற்பனையான நினைப்பு, இன்று தனலாய் தகித்தது அவளுள்.

ஏனோ, கால்கள் தளர்வதை போல் உணர்ந்தவள் அருகிலிருந்த இருக்கையைப்பற்றி அமர்ந்த நேரம், அனைவரும் எழுந்து மணமக்களுக்கு அர்ச்சதைத் தூவி ஆசிவழங்கினார்.

அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை, இரவு இமைமூடும் முன்னும், காலை இமைத்திறந்த பின்னும் தன் பிம்பத்தையே அவளது கண்களில் நிறப்புபவள், தன்னை கைகளில் தாங்கும் தலைவியவள்! அந்த தலைவியின் தவிப்பை போக்க எண்ணியதோ என்னவோ? அவளுக்கு பிடித்த பாடலைக் கொண்டு ஒலிக்க தொடங்கியது அவளின் செல்போன் !!!

"யூ ஆர் மை பம்கின், பம்கின்….
ஹலோ அனி பனி….
ஐ அம் யூ ஆர் டம்ப்ளிங் டம்ப்ளிங்….
ஹலோ அனி பனி….
பீலிங் சம்திங் சம்திங்….
ஹலோ அனி பனி….
அனி பனி… டோகோ…டோகோ…"

இருக்கையில் அமர்ந்து தன்னை சமன்படுத்த, கண் மூடி ஆழ மூச்சுகளை எடுத்துக்கொண்டிருந்தவளின் செவியையடைந்தது அந்த பாடல். இமைத்திறந்தவள், பதறிய மனதை திசைத்திருப்பும் பற்றுக்கோளாய் அந்த பாடல் வரிகளை மாற்றியவள், மெல்ல அதனை முணுமுணுத்தாள்.

சில விஷயஙகள், மனதுக்கு பிடிக்க காரணங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை. அத்தகைய காரணமில்லா பிடித்தமே இந்த பாடல் அவளுக்கு. மனம் துள்ளிடும் இந்த பாடலை கேட்கையில் அவளுள். ஒருவேளை மனதின் துள்ளல் தான் பிடித்ததிற்கு காரணமோ? அதை அவளே அறிவாள் !!!

மனதை சமன்படுத்துவதில் வெற்றி கண்டவள், மெல்ல எழுந்து தான் இங்கு வந்ததற்கான வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

*********

பிரபல மருத்துவமனை வளாகம், மகளிர் சிறப்பு மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு.

காலை எட்டுமணிக்கே அங்கு கூட்டம் நிரம்பி வழியக்காரணம், அன்று ஸ்கேன் நாள்.

கருவுற்றிந்த பெண்கள், தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அறிய ஆவலுடன் அமர்ந்திருந்தனர். அனைவரது முகங்களிலும் தாய்மை தந்த மலர்ச்சியும், பூரிப்புடனும் இருக்க, அங்கிருந்த இரண்டாம் வரிசையின், நான்காம் இருக்கையில் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் முகத்தில் மட்டும் படபடப்பு, அதனுடனே காதில் போன் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

எதிர்முனையில் அழைப்பு எடுக்கவில்லை போலும், மீண்டும் முயற்சித்தாள் அதே நிலை. மறுமுறை முயற்சிக்கையில், மிஸ்சஸ். ப்ரீத்தி சித்தார்த் என்ற செவிலியரின் அழைப்பில் இருக்கையிலிருந்து எழுந்தவள், முறைப்புடனே தனது உடமைகளை அருகிலிருந்த கணவனிடம்
கொடுத்தவள், தனது எழுமாத பிள்ளையை சுமந்துகொண்டு மென் நடையிட்டு ஸ்கேன் அறை நோக்கி சென்று மறைந்தாள்.

சிறிது நேரம் கடந்திருந்த நிலையில், ப்ரீத்தியின் போன் அலற அழைப்பை ஏற்ற அவளது கணவன் சித்தார்த் ஹலோ என்பதற்குள், "என்ன அண்ணியாரே ஸ்கேன் போட்டாச்சா?" என மறுமுனையில் வந்த கேள்வியால் இதழ்கள் மெல்லிதாக விரிந்தது அவனுக்கு.

"ஸ்ருதி நான் அண்ணன் பேசுறான் டா, அவ ஸ்கேன் ரூம் போயிருக்கா, நீ ஸ்சேபா மண்டபம் ரீச் ஆகிட்டிய?"

"ம்ம் அண்ணா, ஸ்சேபா போய்ட்டேன்"

"ஏற்கனவே உன்ன அவ்ளோ லாங் அனுப்பவேணாம், நான் மட்டும் போய் ஸ்கேன் போட்டு வந்துடுறேன் நீங்க மண்டபதுக்குபோங்க அப்படினு சொல்லிட்டுயிருந்தா, அவ பேச்சை மீறி உன்ன அனுப்பினேன் அதுக்கு கோபம், உனக்கு கால் பண்ணி போகவேணாம்னு சொல்ல ட்ரை பண்ணினா நீயும் போன் எடுக்காததால இன்னும் கோபம், மொறைச்சிட்டே போயிருக்கா ஸ்கேன் போட, சரி நீ போன வேலை முடிஞ்சிதா மா?"

"முடிஞ்சிது அண்ணா, பொண்ணு வீட்லயிருந்து பேலன்ஸ் அமௌன்ட் வாங்கி மண்டபத்துக்கு செட்டில்மென்ட் பண்ணியாச்சு இன்னும் அந்த கேட்டரிங் காண்ட்ராக்டர் மட்டும் வரல அவர் வந்தா அவருக்கும் செட்டில்மென்ட் பண்ணிட்டு கிளம்பவேண்டியதுதான்"

"சரி ஸ்ருதி, ரொம்ப நேரம் வெயிட் பண்ணாத பத்து நிமிஷம் வரைக்கும் பாரு ,அதுக்குள்ள அவர் வரலைனா நீ கிளம்பிடு மா, நான் அவர நம்ம ஆபீஸ்க்கு வரச்சொல்லி செட்டில் பண்ணிடுறேன்"

மிஸ்டர்.சித்தார்த் உங்கள டாக்டர் உள்ள வரச்சொல்றாங்க என்ற செவிலியரின் அழைப்பில் "நீ பாத்து வீட்டுக்கு போய்ட்டு ஸ்ருதி" என அழைப்பை துண்டித்த சித்தார்த் டாக்டரை காண சென்றான்.​
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்- 2
மண்டபத்திலிருந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு தன் வீட்டை நோக்கி பயணித்தாள் ஸ்ருதி.
வயது-24, உயரத்திற்கேற்ற எடை, அடர்த்தியான கேசம், அதனை கேட்ச் கிளிப்பின் உதவி கொண்டு அடக்கியி ருந்தாள். காதுகளில் அளவான தங்க வளையங்கள், அதனை தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு பொருந்தியி ருந்தது மேலும் ஒரு சிறு வளையம், திருத்தப்பட்ட புருவங்களின் மத்தியில் சிறிய கருப்பு நிற ஐடெக்ஸ் பொட்டு. கழுத்தில் டாலருடன் கூடிய ஒரு மெல்லிய ஷார்ட் செயின். வெளியே செல்வதற்கேன அணியும் காட்டன் சுடிதார், அதன் ஷால் இடது தோள் பக்கம் மடித்தும், வலது தோள் பக்கம் விரித்தும் பின் செய்யப்பட்டிருக்கும். இதுவே ஸ்ருதி !
அப்பா சோமசுந்தரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை பூர்விகமாகவும், சமையலை தொழிலாகவும் கொண்டவர். அம்மா தனலட்சுமி, 32 வருடங்களாக சோமசுந்தரத்தின் இல்லத்தை கட்டியாளும் அரசி. இரண்டு அண்ணன்களுக்கு அடுத்து பிறந்த கடைக்குட்டி ஸ்ருதி. பெரியவன் கௌதமை விட ஏழு வயதும், சின்னவன் சித்தார்த்தை விட நான்கு வயதும் இளையவள்.
மிடில் கிளாஸ் வர்கத்தை சேர்ந்த இவர்களது வாழ்வு, அப்பர் மிடில் கிளாஸ்ஸாக தரமுயர்ந்தது சோமசுந்தரத்தின் இருமகன்களது தலையெடுப்பில்.
மூத்தவன் கெளதம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடையாமல் போகவே, தந்தைக்கு துணையாக சமையல் வேலையில் இறங்கியவன், பின் அதையே தான் தொழிலாகவும் மாற்றினான். தனது 20 வயதில் சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தவனது தொழில் முதலில் சற்று மந்தமாக போக, கெளதம் அறிமுகப்படுத்திய புதுவகை பதார்த்தங்களால் அவனது தொழில் ஒரே வருடத்தில் மக்களிடையே சற்று பிரபலமாக தொடங்கியது. பின் அதுவே தொடர, அவர்களின் வியாபாரம் பெருகி ஹோட்டலின் பெயர் சுற்றுவட்டாரம் முழுக்க பிரபலமாக, அவர்களுக்கு லாபம் குவிந்தது. அப்போது சித்தார்த் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அங்குள்ள அரசுக்கல்லூரியிலே தன் படிப்பை தொடர்ந்தான்.
நான்கு வருடத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டவன், அந்த பணத்தில் வீட்டை புதுப்பிக்க எண்ணினான். சோமசுந்தரத்தின் தந்தை அந்த காலத்திலேயே வீட்டை சற்று பெரியாதவும், நேர்த்தியாகவும் கட்டியிருந்ததால், அதில் இரண்டு அறைகள் மட்டுமே கூடுதலாக இணைக்க, அதுவே போதுமானதாக இருந்தது. எஞ்சிய பணத்தில் கௌதமின் ஆலோசனைப்படி, அவர்கள் ஹோட்டலின் பின்பகுதியிலிருந்த நிலத்தை வாங்கி அதில் மத்திய அளவிலான திருமணமண்டபத்தை கட்டத்தொடங்கினர். கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த், தன் அண்ணனின் ஹோட்டல் நிர்வாகத்திலும், மண்டபம் கட்டுமானத்திலும் அவனுக்கு துணையாகினான். ஸ்ருதி அப்போது ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாள்.
முழுதாக இரண்டு வருடஙகளுக்கு பிறகே, அந்த மண்டபம் அவர்களால் கட்டிமுடிக்கப்பட, அதில் முதலாக நடைபெயற்றது கெளதம்-சாருலதா திருமணம். சித்தார்த் ஹோட்டல் மற்றும் மண்டபம் நிர்வாகத்தில் கௌதமிற்கு உதவியாக இருந்தாலும் தனக்கென ஒரு தொழிலை தொடங்க நினைத்தவன், தன் அண்ணன் தொழிலுக்கு அவன் துணையாகயிருப்பது பாதிக்காத வகையில் ஹோட்டல் மற்றும் மண்டபதுக்கு பொதுவான ஈவென்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் சுப நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு செய்யும் தொழிலை தன் தங்கையின் பெயரில் ஆரம்பிக்க, அடுத்த இரண்டுவருடத்தில் சித்தார்த்-ப்ரீத்தி திருமணம் நடைபெற்றது.
கூடுதல் தகவலாக !!! சோமசுந்தரத்தின் தந்தையான மருதாச்சலமூர்த்தி தன் மாமன் மகளான அகிலாண்டத்தை திருமணம் செய்தவர். சோமசுந்தரமும் தன் மாமன் மகளான தனலட்சுமியை தான் திருமணம் செய்துள்ளார். தனது அத்தை மகளான சாருவை கௌதமும், மாமன் மகளான ப்ரீத்தியை சித்தார்த்தும் மணந்துள்ளார்.
ஆம்! இவர்களின் குடும்பம் சொந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டது.

*********
தனது ஸ்கூட்டியை வீட்டின்முன் நிறுத்திய ஸ்ருதி, செருப்பை கழட்டி ரேக்கின் மேல் வைத்தபோது அவள் கையிலிருந்த வண்டிச்சாவி தவறி கீழே விழ, அதனை எடுக்க குனிந்தவளின் கண்கள் ரேக்கின் கீழ்தட்டிலிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவின் மீது நிலைத்து நின்றது.
சாவியை எடுத்தவள், அந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, வீட்டின் வலதுபக்கத்தில் மண்டிக்கிடந்த புதரில், தங்களது காம்பவுன்டில் நின்றவாறே தூக்கியேறிந்தாள். காலையில், அவனது நினைவில் கலங்கி, குழம்பிய மனதிற்கு இந்தச்செயலால் எதிலிருந்தோ மீண்ட ஒரு உணர்வு.
ஸ்ருதி மெல்ல வீட்டினில் நுழைய, அங்கே அவளின் பெரிய அண்ணி சாரு தன் மூன்று வயது மகன் பிரணவ்க்கு உடை மாற்றிக்கொண்டும், தாய் தனலட்சுமி முருங்கைக்கீரையை சுத்தம்செய்து கொண்டுமிருந்தனர்.
அண்ணன் மகனை செல்லம் கொஞ்சியவள், மதியம் சமயலுக்காக தாய்க்கு சில உதவிகளை செய்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள். சமூக வலயத்தளத்தில் மூழ்கியவள், சிறிதுநேரத்தில் அது போரடிக்கவே போனில் ஹெட் செட்டை பொறுத்தி அதில் இளையராஜாவின் பாடல்களை ஒலிக்கவிட்டு, மெத்தையில் தளர்வாக சாய்ந்துக்கொண்டு கண்ணமூடி கேட்டுக்கொண்டிருக்க, சீராக ஒலித்த பாடல் சிறிதுநேரத்தில் விட்டு விட்டு கேட்டு, சில வினாடிகளிலேயே செவியை அடையாமல் நின்றுபோக கண்திறந்தாள் ஸ்ருதி.
கெஞ்சியும், கொஞ்சியும் ப்ரீத்தியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான் சித்தார்த்.
பாடல் நின்று போக இமைத்திறந்தவளுக்கு, சித்தார்த்தின் குரலகேட்கவே, எழுந்து வெளியே வந்தாள் ஸ்ருதி.
"அண்ணா, எப்போ வந்த? ஸ்கேன் போட்டாச்சா?"
"
ம்ம், இப்போ தான் வந்தோம் மா, ஸ்கேன் போட்டாச்சு ஸ்ருதி, சாரி மா ரொம்ப லாங் அலைய வச்சிட்டேனா? ".
"இல்லைல்ல அண்ணா அலைச்சலெல்லாம் ஒன்னும் இல்லை இதோ இருக்கு ரெட்ஹில்ஸ் அங்க தான போய்ட்டு வந்தேன், நீ சொன்னமாதிரி வெயிட் பண்ணிப்பாத்தேன் அந்த கேட்டரிங் காண்ட்ராக்டர் மட்டும் வரலை அதுனால நான் கிளம்பிட்டேன்".
"சரி மா, அவரை நம்ப ஆபீஸ்க்கு வரச்சொல்லி நான் செட்டில் பண்ணிக்குறேன், நீ இன்னைக்கு ஆபீஸ் வரவேணாம், வீட்லயே ரெஸ்ட் எடு மா".
"நானும் அதைதான் சொல்ல நெனச்சேன், இன்னைக்கு ஆபீஸ்க்கு வர மூடே இல்ல லீவு எடுத்துட்டு நாளைக்கு வரேன் அண்ணா, மண்டபத்துலருந்து பொண்ணுவீடு நமக்கு செட்டில் பண்ணின காச ரூம்ல வச்சிருக்கேன் எடுத்துட்டு வரேன்ணா" என்று சொல்லி ஸ்ருதி தன்னறைக்கு செல்ல.
பேட்டரி குறைவாகயிருந்த போன்-னை சார்ஜரில் பொருத்திவிட்டு, அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த சித்தார்திடம் பண்ணதை கொடுத்தாள் ஸ்ருதி.
"ம்ம் அப்போ நான் கிளம்புறேன் ஸ்ருதி, ப்ரீத்தி கால்பண்ணப்போ நீ போன் எடுக்கலைனு கோபமா இருக்கா போய் பாரு மா "
"சரி அண்ணா, அப்புறம் இந்த போன்ல சவுண்ட் கேக்கல, கால் பேசும்போதும் வாய்ஸ் சரியா விழல, இதை கொஞ்சம் என்னனு கடைல குடுத்து பாத்து சரி பண்ணிட்டு வா அண்ணா "
"ஏன் ஸ்ருதி, நல்லாதானே இருந்துச்சி உன் போன் இப்போ என்னாச்சு"
"நேத்து பிரணவ் விளையாடும் போது தெரியாம போன் மேல தண்ணி கொட்டிட்டான் அண்ணா, அதுனால இப்படி ஆகியிருக்கும் போல "
"சரி குடு, மதியம் லன்சுக்கு வரப்போ சரிபண்ணி கொண்டுவரேன்".
"அம்மா நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்" என்று தாயிடம் விடைபெற்று சென்றவன், சார்ஜில் போடப்பட்டிருந்த போன்னை மறந்து சென்றான்.
********
பதினைந்து நிமிடங்களில் சரி செய்யக்கூடிய ப்ராப்லம் தான் என போன் சர்வீஸ் செய்பவன் கூறதால், கடைக்கு வெளியே நிறுத்திய தனது பைக்கில் சென்டர் ஸ்டாண்ட் போட்டு ஏறியமர்ந்தவனின் பக்கவாட்டில் வந்துநின்ற கருப்பு நிற பல்சரிலிருந்து இறங்கினான் விஜய்.
"என்ன டா,உன் தங்கச்சி வெள்ளிமலரோட மாமியார் வீட்டு சைடுல ஏதோ ஒரு முக்கியமான கல்யாணம், அதுக்குப்போக லீவு எடுத்திருக்கேன்னு சொல்லிட்டு, இப்போ இங்க வந்து நிக்கிற" என்ற சித்தார்த்தின் குரலில் வியப்பு!
"போய்ட்டு முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்டா" என்ற விஜயின் குரலின் சலிப்பு!
"அம்மாவும், வெள்ளிமலரும் எப்படி உன்ன கிளம்பவிட்டாங்க? "
"அவங்களுக்கு நான் கிளம்பினது தெரிஞ்சா தானே, அத விடு நீ ஏன் இங்கயிருக்க ஆபீஸ் ஓபன் பன்னாலயா? "
அதற்கு சித்தார்த் பதிலளிக்கும் முன்பே
"ரத்தத்தின் ரத்தமே....
என் இனிய உடன்பிறப்பே... சொந்தத்தின் சொந்தமே...
நான் இயங்கும் உயிர் துடிப்பே..."
என விஜயின் போன் அலற, அதில் வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவனின் காதில் ஒலித்தது இல்லை இல்லை கிழித்தது வெள்ளிமலரின் குரல்!
"ஏ அண்ணா சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டியா? என் அத்தை சொன்ன பொண்ணு உனக்கு பிடிக்கலைன்னா அதை என்கிட்டே சொல்லவேண்டியதான, அதுக்கு போய் இப்படியா சொல்லாம கிளம்புவ, நானும் அம்மாவும் உன்ன கோவில் முழுக்க தேடினும் தெரியுமா உனக்கு"
"சரி விடு மலரு, எனக்கு அங்க போரா இருந்துச்சி கிளம்பிட்டேன், நீயும் அம்மாவும் கல்யாண சடங்குல பிஸியா இருந்திங்க அதான் சொல்லிட்டு வரமுடியால. சரி நீ அம்மாவை ஒரு மூணு மணிபோல பஸ் ஏதிவிட்டிரு, நான் திரும்ப அங்க வந்து அம்மாவை கூட்டிட்டு வரமுடியாது அலைச்சலா இருக்கும்"
"பஸ்சும் ஏத்தமாட்டேன் ஒன்னும் ஏத்தமாட்டேன், விட்டுட்டு போக தெரிஞ்சிதுல, அப்போ நீயே வந்து கூட்டிட்டு போ. இன்னும் ரெண்டு நாள்ல சண்டே வந்துரும் அப்போ உனக்கு லீவு தானே அன்னைக்கு வந்து கூட்டிட்டு போ, நீ வராம நான் அம்மாவ அனுப்பமாட்டேன் அங்க" என கூறி பட்டென போனை வைத்தாள் வெள்ளிமலர்.
"இவளுக்கு எதுக்கு போன் வேஸ்ட்டா, நான் நிக்கிற திசை பக்கம் பாத்து இவ பேசினாலே போதும் எனக்கு நல்ல கேக்கும். பாஆஆஆ என்ன கத்து கத்துறா " என முணுமுணுத்த விஜயின் போன் மீண்டும் அலற அதில் ஒலித்தது
"அந்த வானத்த போல....
மனம் படைச்ச மன்னவனே.....
பணிதூளியை போல.....
குணம் படைச்ச தென்னவனே...."
"யாரு டா வினோத்தா " என்ற சித்தார்த்தின் கேள்விக்கு, ஆமாம் என தலையசைத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான் விஜய்.
"சொல்லு வினோத்து" என்றவனிடம் எதிர்முனை என்ன கேட்டதோ, அதற்கு பதிலளித்தான் விஜய்
"இன்னும் வீட்டுக்கு போகல டா, வரவழியில சித்தார்த்த பாத்தேன் அவன்கூட தான் பேசிட்டு இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன், நீ உன் போன் புல் சார்ஜ்ல வை வந்துடுறேன்" என்றவனிடம், சித்தார்த் "என்ன டா சொல்றான் வினோத்" என கேட்க
"பப்ஜி மேட்ச் போடலாமான்னு கேட்டான் டா, வீட்டுக்கு போய்ட்டு போடலாம்னு சொன்னேன் "
"ஹ்ம் சரி டா, விஜய் எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட் டா "
"என்ன டா கேளு"
"அது எப்படி டா வேலை மெனக்கெட்டு இப்படி ரிங்க்டோன் செட் பண்ற, எல்லாரும் பேமிலி ஆளுங்களுக்கு ரிங்க்டோன் வைப்பாங்க அது பாத்துருக்கேன். ஆனா எனக்கு தெரிஞ்சி நீ ஒருத்தன் தான் டா போன்ல உள்ள எல்லா நம்பர்க்கும் தனித்தனியா ரிங்க்டோன் வெச்சி, அத நியாபகம் வேற வெச்சிருக்க, அது எதுக்கு டா? "
"அதுவா டா, இப்படி வா சொல்றேன்" என கூறி பைக்கின் மேல் அமர்ந்திருந்த சித்தார்த்தை கீழிறக்கி, அதன் மீதேறி அமர்ந்தவன், சித்தார்த்தின் முறைப்பையும் பொருட்படுத்தாமல், அவன் கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தான்.
"இப்போ நம்ம முக்கியமான ஒரு வேலைல இருக்கோம்னு வை, அப்போ தான் சொல்லிவச்சா மாதிரி போன் அடிச்சி நம்மல கொல்லுவானுங்க, அந்த டைம்ல நாம யாரோ எவரோனு பதறி போனெடுத்து டிஸ்பிலேல நம்பர் பாத்தா அட சே இவனா அப்படினு தோணும், இப்போ ரிங்க்டோன் செட் பண்ணிட்டோம்னுவை எவன் போன் வந்தாலும், அட இவன் தானேனு நாம பதறாம சிதறாம நம்ப வேலைய பாக்கலாம்ல அதுக்குதான் " என ஏற்றமிறக்கத்தோடு சொல்லிமுடித்த விஜய்யை, சித்தார்த் கேவலமான பார்வை பார்த்து வைக்க "சரி சரி லுக் விட்டது போதும், ஆபீஸ் ஓபன் இங்க ஏன் நின்னுட்டுருக்கனு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே "
"ஹ்ம்ம் சர்வீஸ் சென்டர்க்கு என்ன சாமி கும்பிடவா வருவாங்க, போன் சர்வீஸ் பண்ணத்தான் வந்தேன் " என்றவன் முழுவிபரம் கூறும் முன்னே "அண்ணா போன் ரெடி பண்ணியாச்சு" என்ற கடைக்காரனின் குரலில் அங்கிருந்து நகர்ந்து கடைக்குள் சென்றான் சித்தார்த்.
"இந்தாங்க அண்ணா உங்க போன், நம்பர் சொல்லுங்க கால் பண்றேன் வாய்ஸ் கிலீயரா கேக்குதான்னு செக் பண்ணிக்கோங்க"
"இல்ல பா என்கிட்ட வேற போன் இருக்கு நான் அதுலேயிருந்து கால் பண்ணி செக் பண்ணிட்டு வரேன் " என்று கடைக்காரனிடம் கூறிவிட்டு நகர்ந்து வரும்போது தான் சித்தார்த் கவனித்தான் தன்னுடைய போன் சார்ஜ் போட்டபடி வீட்டிலே மறந்து வைத்ததை.
"விஜய், நான் உன் நம்பர்க்கு கால் பண்றேன் அட்டென்ட் பண்ணி என் வாய்ஸ் உனக்கு கிலீயரா கேக்குதான்னு சொல்லு" என சித்தார்த் கூறியதற்கு, பைக்கின் மேல் அமர்ந்து, தலையை கவிழ்த்துக்கொண்டு தன் போனை நோண்டிக்கொண்டிருந்த விஜய் சம்மதமாக தலையசைக்க. மூளையில் பதிவு செய்திருந்த விஜயின் போன் நம்பரை சித்தார்த்தின் கைகள் அழுத்த,
"பாரதிக்கு கண்ணம்மா....
நீ எனக்கு உயிரம்மா......
பாரதிக்கு கண்ணம்மா....
நீ எனக்கு உயிரம்மா....
நேற்றைக்கு நீ தந்த
பார்வைக்கு பக்தன் இங்கே....." என்ற ரிங்க்டோன் கொண்டு ஒலித்தது விஜயின் போன்!!!
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்- 3

ரிங்க்டோனில் வந்த பாடல் கேட்டு இருவருக்கும் வெவ்வேறு விதத்தில் அதிர்ச்சி.

"இவன் ஸ்ருதி போன்க்கு தான் சர்வீஸ் பண்ண வந்தனா? அது தெரியாம கால் பண்ண சொல்லிட்டேனே, ச்ச.... அவன் போன்ன எடுத்துட்டு வந்து பக்கத்துல நின்னப்போவாது நிமிந்து பாத்துருக்கலாம் " என்று புலம்பிய மனதை புறந்தள்ளியவன், சித்தார்த்திடம் பேச முயன்ற சமயம், தனது கையை உயர்த்தி அவன் முயற்சிக்கு தடையிட்டான் சித்தார்த்.

நொடியும் தாமதிக்காமல் கடைக்கு சென்று பணத்தை செலுத்திய சித்தார்த், தனது பைக்ல் ஏறி பறந்து செல்ல, இது எதையும் தடுக்கும் வழியின்றி நின்றிருந்தான் விஜய்.

நிமிடங்கள் கரைய நின்றிருந்தவன், பின் ஒரு முடிவெடுத்தவனாய் தன் பைக்கில் அமர்ந்து "ஸ்ருதி ஈவென்ட் மேனேஜ்மென்ட்" நோக்கி பயணத்தை தொடங்கினான்.

விஜய், வயது-28, சராசரியை விட சற்று கூடுதலான உயரம், திருத்தப்பட்ட அடர்த்தியான கேசம், பியர்ட் கல்ச்சரை விரும்புபவன், எனவே கிளீன் ஷேவை கண்டதில்லை இவனின் கண்ணங்கள். வலது கையில் தடிமனான ஒரு வெள்ளி பிரேஸ்லெட், பைக் பயணத்தின் போது கட்டாயமாக கண்களில் குடிகொண்டிருக்கும் கருப்பு நிற கூலர். மனநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அணியும் பார்மல்ஸ் அல்லது கேஷ்வல்ஸ். இதுவே விஜய் !

தந்தை வேதாச்சலம் இறந்த பிறகு, தாய் கஸ்தூரி மற்றும் தங்கை வெள்ளிமலருடன், தங்களுக்கென இருந்த ஒரே சொந்தமாகிய ராமமூர்த்தி மாமாவின் ஊரான பொன்னேரிக்கு வந்து சேர்ந்தான் வெற்றிவிஜயன் என்கிற விஜய் !

நெருங்கிய உறவு இல்லை என்றாலும், ஆதரவின்றி நின்றவர்களை அரவணைத்து, அவர்களை தங்களுடனே அழைத்து வந்தனர் ராமமூர்த்தி-பார்வதி தம்பதியர். எவ்வளவு கேட்டும் தங்களுடன் தங்கமறுத்த கஸ்தூரியை, வாடகை வீடு ஒன்றில் குடிவைத்து, வாரம் ஒருமுறை தங்களது இரண்டு வயது மகள் பவித்ராவுடன் சென்று அங்கு தங்கி வந்தனர்.

தன் கணவன், ஊரில் தங்களுக்கென சேர்த்து வைத்திருந்த வீட்டையும் சிறிது நிலத்தையும் விற்றுவிட்டு, இங்கு வந்து சேர்ந்த போதே அந்த பணத்தை, ராமமூர்த்தி அண்ணனின் யோசனைப்படி இரண்டு பாகங்களாக பிரித்து விஜயின் பேரிலும், வெள்ளிமலரின் பேரிலும் சமமாக பேங்க்கில் டெபாசிட் செய்துவைத்தார் கஸ்தூரி. ஒரு தனியார் பள்ளியில் விஜய் ஆறாம் வகுப்பிலும், வெள்ளிமலர் இரண்டாம் வகுப்பிலும் தங்களின் படிப்பை தொடர, அருகிலிருந்த எஸ்ப்போர்ட் கம்பெனியில் வேலைக்கு செல்ல துவங்கினர் கஸ்தூரி.

காலம் தன் சக்கரங்களை கொண்டு வேகமாக உருண்டோட, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற விஜய் தன் தாயின் சுமையை குறைக்க எண்ணி, தனது மேல்நிலை படிப்பை அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடர, அங்கு ஏற்பட்டது தான் சித்தார்த் மற்றும் வினோத்துடனான நட்பு.

பன்னிரெண்டாம் வகுப்பிலும் அவன் நல்ல மதிப்பெண் பெறவே, ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்து, அங்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க துவங்கினான் விஜய். சித்தார்த் மற்றும் வினோத் அங்கிருந்த அரசு கல்லூரியிலே தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

படிப்பை முடித்த விஜய், கேம்பஸ்சில் செலக்ட் ஆகி ஒரு பிரபல நான்குசக்கர வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் நிரந்தர வேலையில் பணியமர, சித்தார்த் அவனது அண்ணன் தொழிலுக்கு துணையாகவும், வினோத் வி.ஐ.பி ஆகவும் இருந்தனர்.

பள்ளிப்படிப்பு முடிந்து வெவ்வேறு பாதைகளின் பயணித்த இவர்களின் வாழ்வை இணைத்தது, வார இறுதிநாளாகிய ஞாயிறு. அன்று ஒரு நாள் மட்டுமே விஜய், சித்தார்த், வினோத் மற்றும் மேலும் சில நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஒரு வருடம் முன்பு வரை இவ்வழக்கத்தை கடைபிடித்து வந்த குழுவின் அங்கத்தினர்க்கு, ஒருவர்க்கு பின் ஒருவர் என அடுத்தடுத்து திருமணம் நடக்க, அவர்களின் வருகை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போக குழுவில் எஞ்சியது விஜய், சித்தார்த் மற்றும் வினோத் மட்டுமே.

இதற்கிடையில் சித்தார்த் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆரம்பிக்க, வினோத் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். விஜயின் தங்கை வெள்ளிமலர்-யுகேந்திரன் திருமண நிகழ்வை சிறப்பாக ஏற்று நடத்தியதால், ஆரம்பித்து சில காலமே ஆகியிருந்த அவனது ஈவென்ட் மேனேஜ்மென்ட் சற்று பிரபலமடைய துவங்கியது.

மகளின் பெயரில் பேங்க்கில் டெபாசிட் செய்த பணம், தனது சேமிப்பு மற்றும் மகனது வருமான சேமிப்பை கொண்டு அதிக கடனில்லாமல் பெரிய அளவில் பிரமாண்டமாக வெள்ளிமலரின் திருணத்தை நடத்தினார் கஸ்தூரி. விஜய் எவ்வளவு கேட்டும் தங்கையின் திருமணத்திற்காக அவன் பங்கு பணத்தை செலவு செய்ய கஸ்தூரி மறுத்துவிட, அந்த பணத்தில் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டை கட்டினான் விஜய்.

வாரம் ஒரு முறை பகல், இரவு என மாறி வரும் வேலை ஷிபிட், வீடு, அம்மா, தங்கை, சித்தார்த் மற்றும் வினோத் என்ற விஜயின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் வேலை விஷயமாக ரயிலில், சென்னை வரை சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தவன் முன் வந்தமர்ந்து அந்த நான்கு பேர் கொண்ட பதின் வயது குழு. அதில் ஒருவன் அழுது சிவந்த விழிகளுடன் காணப்பட மற்ற மூவரும் அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க, அதனை கவனிக்க தொடங்கினான் விஜய்.

அதில் ஒருவன் "டேய் இப்போ எதுக்கு அழுது கண்ணீர் வடிச்சிட்டு இருக்க? நீ வேணா பாரு இன்னைக்கு இப்படி அழுற நீ, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சி இதே விஷயத்தை நினைச்சி பாக்குற அப்போ உனக்கே சிரிப்பா வரும்" என கூறியது விஜயின் மனதில் பதிந்து, அவனை ஆழ்ந்த சிந்தனையில் தள்ளியது.

சிந்தனையின் முடிவில் அவனுக்கு விளங்கியது, இப்படி எந்த ஒரு நினைத்தாலே இனிக்கும் நினைவுகளுக்கு அவன் மனதில் இல்லை என்பதே!

பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பில் அதிக கவனம் செலுத்தியவனை, ஒரு எல்லைக்கு மேல் யாரும் நெருங்கியதில்லை. அந்த எல்லைகளை கடந்தது சித்தார்த் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே. எனவே அவனுக்கு நட்பு வட்டாரமும் குறைவு. படிப்பு, அது முடிந்ததும் வேலை என இயந்திரகதியவே செல்ல, வாழ்வில் கால்வாசியை கடக்கும் சமயத்தில் தான் இனிமையான நினைவுகளுக்கான தேடலில் இறங்கினான் விஜய்.

நிதர்சனத்தில் அந்த தேடலும் அவனுக்கு எளிதாகயிருக்கவில்லை அவனின் மாற்றங்களை, தன்னை பற்றி முன்பே அறிந்த மனிதர்களினால் ஏற்க கால அவகாசம் தேவைப்பட, அத்தகைய கால அவகாசம் ஏதும் தேவையானதாக இருக்கவில்லை தன்னை அறியாத மக்களிடத்தில் அவனுக்கு.

உலகில் உள்ள அனைவரையும் ஒரே செயலியில் இணைக்கும் முகநூலில் எம்.சி எனப்படும் மீம் கிரீயேடர் ஆனான் விஜய். தன் மீம்களுக்கு கிடைக்கும் லைக், கமெண்ட், ஷேரினால் அவனின் இனிமையான நினைவுகள் நிரப்பும் ஜாடி நிரம்பி வழிய, கூடவே அவனின் பேச்சில் நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல் மற்றும் சினிமா டைலாக்குகளும் நிரம்பி வழிந்தது.

***********

அண்ணியாரே, என அழைத்தவாறு ப்ரீத்தியின் அறைக்கு நுழைந்தாள் ஸ்ருதி.

"வா மா நாத்தனாரே" என ஸ்ருதியை வரவேற்றாள் ப்ரீத்தி

"ஸ்கேன் போட போயிருந்திங்களே, எப்படி இருக்கான் என் மருமகன்"

"அவனுக்கு என்ன நல்ல ஜம்முனு இருக்கானாம், அவன் அம்மா தான் வீக்கா இருக்கலாம்"

"ஹ்ம்ம் ஒழுங்கா சாப்பிடுங்க அண்ணியாரே"

"அதெல்லாம் நான் கரெக்ட்டா தான் சாப்பிடுறேன். அத விடு, காலைல உனக்கு நான் போன் பண்ணினா, என் கால்ல அட்டென்ட் பண்ண கூட முடியாதா உன்னால?"

"ஐயோ, தெரிஞ்சே எடுக்காம இருந்திருப்பேனா அண்ணியாரே, நீங்க கால் பண்ணப்போ நான் மண்டபத்துல இருந்தேன், அங்க மேளம், நாதஸ்வரம் சவுண்ட் போதாம மைக் செட் வேற, நான் அட்டென்ட் பண்ணி பேசினாலும் உங்க வாய்ஸ் எனக்கு கேக்காது அதான் உங்க கால் வந்தப்போ எடுக்க முடியல, ஆனா நான் கொஞ்ச நேரம் கழிச்சி உங்களுக்கு கால் பண்ணினேன் அப்போ அண்ணா தான் நீங்க ஸ்கேன் போட போயிருக்கர்தா சொன்னாரு "

"சும்மா சாக்கு சொல்லாத போ டி"

"அதான் பத்திரமா போய்ட்டு வந்துட்டேன்ல விடு ப்ரீத்தி" என கூறி் நுனி நாக்கை கடித்தவள் "சாரி அண்ணியாரே ஒரு புளோல வந்துருச்சி"

"நடிக்காத டி நாத்தனாரே, வேணும்னே சொல்லிட்டு இப்போ புளோல வந்துருச்சாமே"

"போ ப்ரீத்தி உன்ன அண்ணியார்னு சொல்றத விட ப்ரீத்தினு கூப்பிடுறது தான் எனக்கும் பிடிக்கும், ஆனா இந்த அம்மா தான் வெளில இருந்து பாக்குறவங்களுக்கு அது மரியாதையா இருக்காது அப்படி இப்படினு சொல்றாங்க" என்றாள் ஸ்ருதி சோகமான முகத்துடன்.

"சரி சரி உடனே சோக கீதம் வாசிக்காத, ஆமா இன்னைக்கு நீ ஆபீஸ் போகலையா" என்றவளுக்கு இல்லை என்பதாய் தலையசைத்தாள் ஸ்ருதி.

"ஏன்?" என்ற ப்ரீத்தியின் ஊடுருவும் பார்வையை எதிர்கொண்டவள், "சும்மா தான் அண்ணியாரே, டையர்டா இருந்துச்சு அதான்" என்றவள்

தொடர்ந்து இங்கேயே நின்றால், கேள்விகளை கேட்டே, காலை மண்டபத்தில் அர்ஜுனின் நினைவு வந்து கலங்கி நின்றதை தன் வாயாலே அவளிடம் சொல்லவைத்து விடுவாளோ என்றெண்ணி அவளிடம் விடைபெற்று அறையிலிருந்து வெளியேற, சிறுது நேரம் கழித்து ப்ரீத்தியின் அறைக்கு வந்து நின்றாள் சாரு.

"வாங்க கா"

"ப்ரீத்தி, உன் கிட்ட ஒரு ஸ்ருதி ஏதாச்சும் சொன்னாலா"

"இல்லையே கா, ஏதும் சொல்லல, ஏன் என்னாச்சு கா"

"காலைல இருந்தே ஒரு மாதிரியா இருக்கா ப்ரீத்தி அவ, ஆபீஸ்யும் போகல. அதான் உன்கிட்ட ஏதாவது சொல்லிருப்பானு பாத்தேன் "

"நானும் தான் கவனிச்சேன் கா, அவ முகமே சரியில்ல, ஏன் ஆபீஸ் போகலானு கேட்டா, டயர்டா இருந்துச்சு அதான் போகலனு சொல்லிட்டா "

"ரெண்டு வருஷம் ஓடிப்போச்சி, இன்னும் அவ எதையும் மறக்கலயா ப்ரீத்தி? "

"அதெல்லாம் அவ மறந்துட்டா கா, இன்னைக்கு பணம் வாங்க மண்டபம் போனால, அந்த கல்யாணத்துல ஏதாவது பாத்து அவ அப்செட் ஆகி இருப்பானு நினைக்குறேன். " என ப்ரீத்தி தன் அன்பு அத்தை மகளின் மனக்கவலை எதனால் ஏற்பட்டிருக்கும் என்பதை சரியாக யூகித்தாள்.

"என்னவோ ப்ரீத்தி, எல்லாத்தையும் மறந்து, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சா போதும், சரி நீ ஸ்கேன் எடுக்க போனியே என்ன சொன்னாங்க டாக்டர்?

"அப்பாடா, இப்பயாச்சும் நாத்தனார் மறந்து ஓரவத்திய பத்தி கேக்கணும்னு தோணுச்சே"

"ஹேய்..." என ப்ரீத்திக்கு செல்லமாக இரண்டு அடிகளை போட்டவள், அவளது உடல் நிலையை பற்றி தெரிந்து கொண்ட பின் தன் அறைக்கு சென்றாள் சாரு.

படுக்கையில் உறங்கும் தன் மகன் பிரணவின் அருகில் அமர்ந்து மெல்ல தலையை வருடியவளின் கண்கள், அவனது வலது புருவத்தின் மேல் இருந்த மச்சத்தில் நிலைத்து நிற்க, அவளின் மனதில் இதே போல் மச்சம் உள்ளவளின் நினைவு, அவளது அனுமதி இன்றி வந்து நின்றது.

நினைவு வந்ததும் அவனின் முகம் பார்க்கும் ஆவலெழ, தனது மொபைலில் உள்ள அவன் படத்தை பார்க்க தொடங்கினாள். அதில் முத்துப்பற்கள் தெரிய, தன் அருகில் அமர்ந்திருந்த ஸ்வாதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுக்கொண்டிருந்தான் அர்ஜுன் !
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-4
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது, சித்தார்த்தின் வேலைக்கு துணையாக அவனின் ஆபீஸ்சுக்கு செல்லும் ஸ்ருதி, மாலை ஐந்து மணிக்கு அண்ணனிடம் விடைபெற்று தனது ஸ்கூட்டியில் வீடு திரும்புவது வழக்கம். அன்றும் வழமை போல் வீட்டை நோக்கி பயணித்தவளின் பார்வையில், பைக்கை தள்ளிக்கொண்டு செல்லும் விஜய் விழுந்தான்.
அவனுடன் அதிகம் பேசியதில்லை, எனினும் அண்ணனின் மிக நெருங்கிய நண்பன் இவன் என அறிந்தும் அப்படியே விட்டுவிட்டு, தெரியாதவர் போல் செல்ல மனம் வரவில்லை அவளுக்கு. எனவே ஸ்கூட்டியை ஸ்லோ செய்தவள், தயக்கத்துடனே அவன் அருகில் சென்று நிறுத்தி "என்னாச்சு, ஏன் வண்டிய தள்ளிட்டு போறீங்க? " என ஒரு வழியாக தயக்கத்தை மீறி கேட்டுவிட்டாள்.
குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவன், ஸ்ருதியிடம் ஒரு சினேக புன்னகையை உதிர்த்துவிட்டு பதில் சொல்ல தொடங்கினான் விஜய்.
"நீங்களா ஸ்ருதி, நான் யாரோனு நெனைச்சு திரும்பி பாத்தேன். பைக் பிரன்ட் வீல் பஞ்சர் அதான் தள்ளிலிட்டு போய்ட்ருக்கேன்"
"ஓ... எவ்ளோ லாங் இப்டியே போவீங்க இந்த பக்கம் வேற மெக்கானிக் ஷெட் ஏதும் இல்லையே"
"வேற என்ன பண்றது ஸ்ருதி, இப்போ தான் வேலை முடிஞ்சி வரேன் டயர்ட்டா வேற இருக்கு. தெரிஞ்சவங்க யாராச்சும் வந்தா பைக்க இப்டியே விட்டுட்டு அவங்ககூட வீட்டுக்கு போய் சேரலாம்னு பாக்குறேன் இந்த நேரம் பாத்து யாரும் வரமாற்றங்க"
அவனின் களைத்த முகமும் சோர்ந்த நடையும் கண்டவளது மனம் அவனுக்கு உதவ சொல்ல "சரி வாங்க நானே ட்ராப் பண்றேன், பாக்கவே டயர்ட்டா தான் தெரியிறீங்க" என்று அவள் கூறியது தான் தாமதம், "இத தானே எதிர்பாத்தேன்" என்ற ரீதியில் விரைவாக தன் பைக்கை பக்கத்தில் இருந்த கடையில் நிறுத்திவிட்டு அவளின் ஸ்கூட்டியில் ஏறியமரந்தான் விஜய்.
அவனது விரைவான செயலில் "பாவம் ரொம்ப டயர்ட் போல அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க இவ்ளோ ஆர்வமா இருக்காங்க" என்று நினைத்துக்கொண்டவள், அவன் ஏறியதும் ஸ்கூட்டியை கிளம்பினாள்.
அவனுக்கல்லவா தெரியும் அவனின் இந்த ஆர்வம் எதனால் என்பது !!!
அவனுடைய வீடு எங்கே என்பது தெரியாததால், அவன் வழி சொல்ல அதன்படி வண்டியை செலுத்தியவளுக்கு ஆச்சர்யம்! காரணம், அவள் வீட்டை கடந்து பத்து நிமிட பயணத்தில் அவன் வீடு இருக்க, இந்த வழியில் ஒரு முறை கூட அவன் பயணித்ததை கண்டதில்லை அவள். தனது சந்தேகத்தை மறைக்காமல் அவனிடேமே ஸ்ருதி கேட்க,
"இது என் வீட்டுக்கு வர இன்னொரு வழி ஸ்ருதி, இது கொஞ்சம் சுத்து அதான் இந்த பக்கம் வரமாட்டேன். இன்னைக்கு என்ன ட்ராப் பண்ணிட்டு நீங்க உங்க வீட்டுக்கு போகும் போது உங்களுக்கு கஷ்டம் வேண்டாமேன்னு இப்படி வர சொன்னேன் "
அவனது விளக்கத்தை கேட்டவள் பின் அங்கிருந்து கிளம்ப நினைத்து "சரிங்க நான் கிளம்புறேன் " என அவனிடமிருந்து விடைபெற நினைக்க.
"கரெக்ட் டைம்ல ஹெல்ப் பண்ணிருக்கிங்க, தேங்க்ஸ் ஸ்ருதி. வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டு போகலாம் வாங்க "
"இல்லங்க, பரவாயில்ல லேட் ஆகுது நான் கிளம்புறேன், வீட்ல தேடுவாங்க"
"ஹ்ம்ம்.. சரி. இந்த வாங்க போங்க எல்லாம் வேணாம் பார்மல்லா இருக்கு, விஜய்னே கூப்பிடுங்க ஸ்ருதி "
"இல்லங்க, எனக்கு இதே கம்பர்டபுலா இருக்கு நான் வரேன் " என்று அவனிடம் விடை பெற்று செல்பவளை, அவன் பார்வையிலிருந்து மறையும் வரை விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தான் விஜய்.
அந்த வானத்த போல....
மனம் படைச்ச மன்னவனே....
பனி துளியை போல....
குணம் படைச்ச தென்னவனே....
என்ற போன் ஒலியால் சுற்றுபுறம் உணர்ந்தவன், அந்த அழைப்பை ஏற்று பேச தொடங்கினான்.
"சொல்லு டா, ஹ்ம்ம் ஆமா அந்த கடைக்கு பக்கத்துல தான் டா பைக்க நிறுத்திருக்கேன், நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீ பைக்க எங்க வீட்ல எடுத்துட்டு வந்து விட்ரு" என பேசிக்கொண்டே திரும்பிய விஜய்யின் முன் வந்து நின்றுகொண்டிருந்தார் அவனின் அன்னை கஸ்தூரி.
"யாரு டா விஜயா அந்த பொண்ணு? உன் பைக் எங்க விட்டு வந்துருக்க? இப்போ யார எடுத்துட்டு வர சொல்லி போன் பேசிட்டு இருக்க? என கேள்விகளை அடுக்கியவரிடம், போன் அழைப்பை துண்டித்துவிட்டு பதில் கூற ஆரம்பித்தான் விஜய்.
"நம்ப சித்தார்த்தோட தங்கச்சி ஸ்ருதி மா, மலர் கல்யாணத்துல கூட பாத்தியே மறந்துட்டியா? "
"அந்த பொண்ணா டா இவ, பாத்து ரெண்டு வருஷம் ஆச்சில அதான் அடையாளமே தெரியல"
"சரி வா மா உள்ள போலாம்" என்று உள்ளே சென்றவனை பின்தொடர்ந்து அவன் அன்னை கஸ்தூரியின் குரல் "உன் பைக் எங்க டா? என்னாச்சு விஜயா ? "
"பைக் பிரன்ட் வீல் பஞ்சர் மா, அப்போ தான் ஸ்ருதி அந்த வழியா வந்தாங்க, அவங்க கிட்ட லிப்ட் கேட்டு வந்தேன், பஞ்சர் பாத்துட்டு நம்ப வினோத் பைக்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்து விடுரதா சொல்லிருக்கான்" என ஒருவாரு எல்லா பதில்களையும் சொல்லிவிட்டு அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன் பின் ஹாலுக்கு வந்து அமர்ந்து அன்னை தந்த காபியை குடித்து கொண்டிருந்தான்.
கஸ்தூரி ஏதோ தன்னிடம் சொல்ல முயல்வதும் பின் அந்த முயற்சியை கைவிடுவதுமாக இருக்க அதனை கண்டுகொண்டவன் "என்ன மா ஏதாவது சொல்லனுமா என்கிட்ட" என்றான் விஜய்.
"ம்ம், ஆமாபா . அந்த பொண்ணு அதான் மலரோட அத்தை அன்னைக்கு கோவில்ல காட்டினாங்களே, அவங்க வீட்ல இருந்து பொண்ணை பிடிச்சிருக்கா? மேற்கொண்டு கல்யாணத்த பத்தி பேசலாமானு கேக்குறாங்க" என்றவர் எங்கே மகன் மறுப்பாக ஏதேனும் சொல்லிவிடுவானோ என நினைத்தவர் உடனே "பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு மேல பேசலாம்னு சொல்லிறட்டுமா" என அவரே அதற்கு பதிலையும் கூறி மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்தார்.
"பொண்ணு பாக்க நல்லா அழகா தான் இருந்தாங்க" என்றதும் "விஜயா உனக்கு அப்போ அந்த பொண்ணை பிடிச்சிருக்கா டா" என உற்சாகத்தில் துள்ளியறவர் அடுத்து அவன் சொன்னதில் "வடைபோச்சே" என்ற ரீதியில் நின்றார் கஸ்தூரி.
"பொண்ணு நல்லா தான் இருக்காங்க மா ஆனா அவங்க எனக்கு வேணாம்" என்ற விஜயின் பதிலில் அவனை முறைத்தவர் "சரி டா அந்த பொண்ணு வேணாம்னா வேற எந்த பொண்ணு வேணும்னு சொல்லு" என்று நக்கல் குரலில் கேட்டார் கஸ்தூரி.
"என்ன மா உன் குரல் ஒரு டைப்பா இருக்கு "
"பின்ன என்ன டா, பொண்ணு நல்லாருக்கு ஆனா எனக்கு வேணாம் சொன்னா, என்ன தான் டா உனக்கு பிரச்சனை ஏதாவது பொண்ணை லவ்வு கிவ்வு பன்றியா அம்மாகிட்ட சொல்லுடா நான் போய் அவங்க வீட்ல பேசுறேன்"
"மா, நீ வேற அதெல்லாம் ஒன்னும் இல்ல"
"சரி தான் போ டா, இனி நீயா "அம்மா எனக்கு பொண்ணு பாருனு" சொல்ற வரைக்கு நான் உனக்கு பொண்ணு பாக்கமாட்டேன் டா "
"இதை தானே மா நீ போன மாசமும் சொன்ன, ஆனா இந்த மாசம் நீ மலரு மாமியார் கிட்ட சொல்லி பொண்ணை பாக்கல" என்றான் விஜய்.
"சரி டா இது தான் கடைசி இனிமே நீ சொல்ற வரை நான் உனக்கு பொண்ணு பாக்கல போதுமா? ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரியணும். உனக்கு என்ன தான் பிரச்சனை எதுக்கு நீ கல்யாணம் வேணாம் சொல்ற அதுக்கு உண்மையான காரணம் சொல்லு, எனக்கு இருக்குறதே கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே பையன் உனக்கு கல்யாணம் பண்ணி பாக்க எனக்கு ஆசை இருக்காதா?" என்றவரிடம் விஜய் ஏதோ கேட்க வர
"நிறுத்து, நீ என்ன கேட்க வரனு எனக்கு தெரியும், கருவேப்பிலை கொத்து எதுக்கு சொல்றாங்க அப்படினு கேட்டு பேச்சை மாத்த போற அதானே. எனக்கு தெரியாது ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கவங்க எல்லாரும் அப்படி தான் சொல்லுவாங்க அதுனால நானும் சொன்னேன். நீ பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எதுக்கு கல்யாணம் வேணாம்ங்குற" என்றார் கஸ்தூரி விடாபிடியாக.
சூட்சமத்தை கண்டு பிடிச்சிட்டாங்களே டா என் நினைத்து கண்களை மூடி சிறிது நேரம் அமைதி காத்தவன், "நீ இவ்ளோ கேக்குறதால நான் உண்மைய சொல்றேன் மா..." என்ற விஜய், ஆழ மூச்செடுத்து பின் இமைகளை மூடியவாறே தனது காதல் கதையை சொல்ல தொடங்கியவன், அனைத்தையும் அன்னையிடம் சொல்லிய பின்னே இமை பிரித்தான்.
கஸ்துரிக்கு மகனின் காதல் கைகூடாமல் போனதில் அவரின் மனம் அவ்வளவு கனத்தது, அதிலே மூழ்கியவர் விஜய் தன்னிடம் வெளியே செல்வதாக விடை பெற்றதைக் கூட உணரும் நிலையில் இல்லை.
கவலையில் மூழ்கியவரின் நினைவை வெள்ளிமலரின் போன் அழைப்பு நடப்புக்கு கொண்டுவர, அழைப்பை ஏற்று காதில் வைத்தார் கஸ்தூரி.
" மா... காலைல நீ போன் பண்ணப்போ கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் எடுக்க முடியல மா" என வெள்ளிமலரின் குரல் எப்போதும் போல் உயர்ந்த ஒலிக்க.
"ம்ம்ம் சரி மலரு" என்ற கஸ்தூரியின் குரலில் சுரத்தே இல்லை
"என்ன மா குரலே ஒரு மாதிரி இருக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா?"
"அதெல்லாம் இல்ல டி, உன் அண்ணன் இப்போ தான் அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல அப்டிங்குற காரணத்தை சொல்லிட்டு போனான் அத நினைச்சிட்டு இருக்கேன்"
"என்ன மா சொல்லுச்சு அண்ணன்?"
"மலரு அவன் யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானாம் டி, உனக்கு ஏதாவது தெரியுமா? "
"என்ன மா சொல்ற லவ் பண்ணானாமா! என்கிட்டயும் எதுமே சொன்னதில்லயே மா அவன். சரி பொண்ணு யாருனு விசாரி நம்ப போய் அவங்க வீட்ல பேசுவோம்"
"அந்த பொண்ணு இப்போ இந்த ஊர்லயே இல்லயாம் டி, இவஙக காதல் விவகாரம் தெரிஞ்சி அவங்க அப்பா அந்த பொண்ணை எங்கயோ அனுப்பி வெச்சிட்டாராம்" என்றவர் மலரிடம், விஜய் சொன்ன அனைத்தையும் சொல்லி முடிக்க.
"அப்போ அந்த பொண்ணை மனசுல வெச்சிட்டு தான் அண்ணா கல்யாணம் வேணாம்னு சொல்றானா" என அடுத்து சில பல உரையாடல்களுக்கு பின் போன்னை வைத்த வெள்ளிமலர், யோசனையுடன் அறையில் அமர்திருக்க.
"ஏய்.. மலரு புள்ளைய கவனிக்காம உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க? பாரு அவன் எப்படி மண்ல உருண்டு பிரண்டு வந்துருக்கான்னு" என்றவாறே அவர்களது இரண்டு வயது மகன் யுகேஷை தூக்கியபடி அறைக்கு வந்து நின்றான் அவளின் கணவன் யுகேந்திரன்.
"நீங்க இதையும் சொல்லுவிங்க இதுக்கு மேலயும் சொல்லுவிங்க, உங்களையும் உங்க பையனையும் கவனிச்சதால தான், நான் எங்க அண்ணனை கவனிக்காம விட்டுட்டேன்"
"என்ன மலரு என்னாச்சி மச்சானுக்கு" என்றவனிடமிருந்து குழந்தையை வாங்கி அவனை சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி வெளியே விளையாடுமாறு அனுப்பி வைத்தவள் கணவனின் முன் வந்து அவனுக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.
"எங்க அண்ணன் ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானாம்ங்க, அத நெனைச்சி தான் கல்யாணம் வேணாம் சொல்றான். அந்த பொண்ணு இப்போ எங்க இருக்கானு தெரியலயாம் எப்படியாவது அவனுக்கு அந்த பொண்ணை கண்டுபிடிச்சி கட்டிவெச்சிரணும்ங்க"
"இப்படி தலையும் இல்லாம வாலும் இல்லாம சொன்னா எப்படி மலரு முழு விவரம் சொல்லு" என்றவனுக்கு தன் அன்னை சொன்னதை சொல்ல தொடங்கினாள் வெள்ளிமலர்.
"அண்ணன் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணினானாம். ரொம்ப சின்சியரான லவ்வாம். அப்போ அந்த பொண்ணு அவன் கிட்டவந்து எங்க வீட்ல நம்ப லவ்வை ஏத்துக்க மாட்டாங்க நம்ப ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க, இவனும் எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணிட்டு, ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு அந்த பொண்ணு இவன் பிரண்ட்ஸ் எல்லாம் போயிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சி பொண்ணுக்கு அப்பா அங்க வந்து பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாராம். அப்போவே அந்த பொண்ணை எங்கயோ ஊருக்கு அனுப்பி வெச்சிட்டாராம்ங்க" என முடித்தாள் வெள்ளிமலர்.
மனைவி சொல்வதை முதலில் சீரியஸ்சாக கேட்டு கொண்டிருந்தவன், பின் எதுவோ புரிய அவள் முடித்ததும் "அந்த பொண்ணு பேரு ஐஸ்வர்யாவா மலரு? " என கேட்க, மலருக்கோ ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.
"ஆமாங்க உங்களுக்கு அந்த பொண்ணை தெரியுமா? அப்போ யாருனு சொல்லுங்க நாமா அவங்க வீட்ல பேசுவோம்" என்றவளை முறைதான் யுகேந்திரன்.
"அடியே.... உங்க அண்ணன் சில்லுனு ஒரு காதல் படத்துல வர கதையை அவன் காதல் கதை மாதிரி சொல்லிட்டு போயிருக்கான். இது தெரியாம நீயும் உங்க அம்மாவும் அந்த பொண்ணை தேடி கண்டுபிடிச்சி கட்டி வைக்குற அளவுக்கு பிளான் போட்டுட்டு இருக்கிங்க. உங்க அம்மா ஆச்சும் அந்த காலத்து ஆளு அவங்களுக்கு தெரியல நீ அந்த படத்தை எத்தனை தடவை பாத்துருக்க உன்னாலயுமா கண்டு பிடிக்கமுடியல?" என்ற கணவனின் அர்ச்சனையில் நனைந்து கொண்டிருந்தவளுக்கு, அவளது அண்ணன் விஜயை நினைத்து கொலைவெறியே வர அதே வேகத்துடன் அவனுக்கு போன்னில் அழைக்க அவன் எடுத்ததும் கோவத்தில் பல்லை கடித்தவாறு "டேய் அண்ணா.... உன் ஐஸ்வர்யாவை கண்டுபிடிச்சாச்சு, நாளைக்கே நான் வந்து கல்யாணம் பண்ணிவைக்குறேன் உனக்கு" என்றாள் வெள்ளிமலர்.
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-5
"என்னோட ஐஸ்வர்யாவை கண்டுபிடிச்சிட்டியா மலரு, ஆனா உனக்கு அவ்ளோ மூளை இல்லையே மா அப்பறம் எப்படி..........." என வார்த்தையை இழுத்தான் விஜய் சிரிப்புடன்.
"வேணாம் டா அண்ணா ஏதாச்சும் சொல்லிறப்போறேன், சில்லுனு ஒரு காதல் படத்துல வர கதையை சுட்டு அம்மா கிட்ட உன்காதல் கதை மாதிரி சொல்லிட்டு போயிருக்க அது தெரியாம நான் என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி பல்பு வாங்கினது தான் மிச்சம்" என்றாள் வெள்ளிமலர் எரிச்சலுடன்.
"நீ ஏன் டி அவர்கிட்ட சொன்ன?"
"ஹம்ம்ம்ம்ம் உன் லவ் ஸ்டோரி கேட்டு அந்த பொண்ணை தேடி உனக்கே கட்டிவைக்கணும்னு நினைச்சி அவர்கிட்ட சொன்னேன். எனக்கு என்ன தெரியும் நீ இப்படி பட ரீல் ஓட்டிட்டு போயிருப்பனு"
"ஏன் டி அம்மா சொன்னப்பவே உன்னால கண்டுபிடிக்க முடியலையா அது படத்துல வந்த கதைனு"
"உன் வாழ்க்கைனு வரும் போது நான் எப்படி அது படமா இல்ல நாடகமானு யோசிக்க முடியும். எனக்கு அது உன் வாழ்க்கையா மட்டும் தான் தெரிஞ்சிது அண்ணா" என்றாள் வெள்ளிமலர் உணர்ச்சியோடு.
"ஹேய் மலரு.... டைலாக் நல்லா இருக்கே இது என்ன படம்?"
"உனக்கு எல்லாமே விளையாட்டு தானா அண்ணா? ஒரு காலத்துல நீ இப்படி சிரிச்சி ஜாலியா இருக்கமாட்டியானு இருக்கும், ஆனா இப்போ நீ பண்ற அலம்பல்கு அப்படியே இருந்துருக்கலாம் போல" என்றாள் கடுப்புடன்.
"சரி விடு மலரு ஒய் டென்ஷன்? நீ என்ன கேக்கணும் கேளு நான் விளையாடாம பதில் சொல்றேன்"
"நான் என்ன புதுசா கேக்க போறேன். நீ எதுனால கல்யாணம் பண்ணிக்க மாற்ற அந்த காரணத்தை சொல்லு"
"அம்மாக்கும் பொண்ணுக்கும் இதை விட்டா வேற கேள்வியே தெரியாதா" என்றவனின் குரலில் ஏகத்திற்கு சலிப்பு.
"எங்களுக்கு உன்கிட்ட இருந்து என்ன வேணுமோ அத தானே கேட்கமுடியும்? நீ இன்னைக்கு சொல்லிட்டு வந்த கதையை அம்மா நம்பி எவ்ளோ கஷ்டபட்டாங்க தெரியுமா? எனக்காவது புருஷன் குழந்தைனு மாத்தி மாத்தி கவனிக்குறதால உன் கல்யாணம் நியாபகம் எப்போயாச்சும் தான் வருது அதுவே எனக்கு கஷ்டமா இருக்கு. ஆனா அம்மாவை நினைச்சி பாத்தியா அவங்களுக்கு காலைல எழுந்து நைட் படுக்குற வர உன் நினைப்பு தான். நீ சின்னவயசுல இருந்து அம்மாக்கு கஷ்டம் குடுக்கக்கூடாதுனு இருந்து, இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சி மொத்தமா அவங்கள கஷ்டப்படுத்துற" என்றாள் வேதனையோடு.
அவள் சொல்வதும் உண்மை தானே, தன்னால் இல்லை இல்லை தன்னுடைய திருமண விஷயத்தால் அன்னை அடையும் வேதனை அவன் அறியாததா. இருந்தும் தங்கையின் பேச்சில் இருந்த உண்மை அவனுக்கு சுட சிறிது நேரம் மௌனம் காத்தவன் பின் "இந்த வருஷத்துல என் கல்யாணம் முடியும் மலரு நீ கவலை படாத" என்ற விஜயின் குரலில் அவ்வளவு உறுதியை கண்டவளுக்கு அதுவே போதுமானதாக இருக்க, சில போது உரையாடல்களுக்கு பின் அழைப்பை துண்டித்தாள் வெள்ளிமலர்.
வீடு வந்த விஜய்க்கு, அன்னையின் முறைப்பிலேயே விளங்கிவிட்டது, அவருக்கு வெள்ளிமலர் அனைத்தையும் விளக்கிவிட்டாள் என்பது. பேச்சுகள் இன்றி இரவு உணவை கஸ்தூரி பரிமாற மௌனமாய் அதை உண்டவன், அன்னை சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தான்.
கஸ்தூரி சாப்பிட்டு பாத்திரங்களை அடுக்கி விட்டு, தன் அறைக்கு செல்ல ஆயத்தமாக "அம்மா கொஞ்சம் பேசணும்" என்ற விஜயின் குரலில், அவன் எதிரில் வந்து அமர்ந்தார்.
"என்ன மா கோவமா இருக்கியா? "
"நான் ஏன் கோவமா இருக்கேன்"
"ஏன் மா ஒரு மாதிரி பேசுற"
"நான் ஏன் ஒரு மாதிரியா பேசினேன்"
"என்ன மா கைய புடிச்சி இழுத்தியா"
"நான் ஏன் கைய புடிச்சி இழுத்தேன்" ஒரு புளோவில் கஸ்தூரி சொல்லிவிட, விஜய் பெருங்குரலோடு சிரிக்க, அவனை முறைத்து கொண்டே தன் அறை நோக்கி செல்ல துடங்கினார் கஸ்தூரி.
"ம்மா...ம்மா... ம்மா..." என்ன அழைத்தவாறே அவர் பின்னால் சென்றான் விஜய்.
"எதுக்கு டா இப்போ அம்மாவை ஏலம் விட்டுட்டு இருக்க"
"நீ தான் என் மேல கோவமா இருக்கியே உன்ன சமாதானம் பண்ணத்தான்"
"இப்போ மட்டும் என்ன அக்கறை, பொய்யா ஒரு கதை சொல்லிட்டு போறப்போ தெரியலையா நான் அம்மானு"
"ம்மா... நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் மா"
"எது டா உனக்கு விளையாட்டு? உனக்கு என்ன நீ சொல்லிட்டு போயிட்ட, நான் எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா உன்ன நினைச்சி? என் புள்ள ஆசைப்பட்டது அவன் கைவரைக்கும் எட்டியும் அது அவனுக்கு நிலைகளையேனு, அவன் அந்த நேரத்துல தனியா எப்படிலாம் துடிச்சானோ, அத கூட நான் கவனிக்காம போய்ட்டேன்னேனு எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு? மலரு கல்யாணதுல கூட நான் உன் அப்பா இல்லையேனு நினைச்சி கவலைப்படல அவர் இல்லாத குறையே தெரியாம நீ அவரோட இடத்தை நிரப்பிட்ட ஆனா, இன்னைக்கு முதல் முறையா உன் அப்பா இருந்திருந்தா உன் நிலைமைய அவர் முன்னமே கண்டுபிடிச்சி உனக்கு ஆறுதலா இருந்துருப்பாரோனு நினைக்க வச்சிட்ட டா " என்றவரின் குரல் தழுதழுக்க, விஜய்க்கோ விளையாட்டாய் செய்தது வினையானதில் குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான்.
"ம்மா... சாரி மா. இனிமே இப்படி பண்ணமாட்டேன்"
"எனக்கு உன் சாரி எல்லாம் ஒன்னும் வேணாம். நீ என்ன சொன்னா நான் சமாதானம் ஆவேன்னு உனக்கு தெரியும்ல அதை சொல்லு" என்றவருக்கு விஜயிடமிருந்து பதிலே இல்லை.
"என்ன டா அமைதியா இருக்க? உனக்கு வரபோறரவ எப்படி இருப்பாளோ? என்ன இந்த வீட்ல இருக்க சொல்லுவாளோ இல்ல வெளிய துரத்துவாளோ நானே அந்த கவலையில்லாம உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஆர்வமா இருக்கேன் உனக்கு என்ன டா பிரச்சனை?" என்ற கஸ்தூரி இப்போது சகஜ நிலைமைக்கு வந்திருந்தார்.
"ம்மா.. அப்படி எல்லாம் சொல்லாத அவளும் அண்ணன் அண்ணி்னு குடும்பமா இருக்கவ, அவ எப்படி உன்ன இந்த வீட்ல இருந்து துரத்த நினைப்பா?" ஒரு வேகத்தில் விஜய் பேசிவிட, அப்போது தான் உணர்ந்தான் அவன் உளறியதை!
"என்ன டா சொல்ற அப்போ இந்த வீட்டுக்கு யாரு வரபோறானு நீ முடிவு பண்ணி வச்சிருக்கியா" என்று கஸ்தூரி கரெக்ட்டாக பாயிண்ட்டுக்கு வர, கூடவே அச்செய்தி அவருக்கு ஆச்சர்யத்தையும் தர, மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்.
முதலில் தான் பேசியதை மழுப்பி சமாளிக்க நினைத்தவன, பின் இந்த முறையும் அன்னையை ஏமாற்ற வேண்டாம் என்ற எண்ணம் மற்றும் இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவிலேயே இந்த விஷயம் பற்றி அன்னையிடம் கூற நேரிடும் என் நினைத்தவன், ஆமாம் என்பதாய் தலையசைத்தான் விஜய்.
மகனின் யோசனையான முகம் அவருக்கு சந்தேகத்தை தர, இருந்தும் தான் இவ்வளவு வருந்தியதை பார்த்த பின்னும் மகன் மறுபடியும் பொய் உரைக்கமாட்டான் என எண்ணம் தோன்ற முழுதாக இல்லையென்றாலும் கஸ்தூரி விஜயை நம்பினார்.
கஸ்தூரி விபரம் கேட்கும் முன்னே"அந்த பொண்ணு யார்னு இப்போ என்னால சொல்ல முடியாது மா. ஆனா நமக்கு பழக்கப்பட்டவங்க தான். நான் அது யாருனு சொல்லிட்டா உன்னாலயும் சும்மா இருக்க முடியாது. நீ போய் பொண்ணு கேட்டாலும் அவங்க மறுக்க மாட்டாங்கனு நம்புறேன். இதெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல எனக்கு வேண்டியது அந்த பொண்ணோட சம்மதம் அதுவும் அவளோட முழு மனசா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லணும், அம்மா அப்பா அண்ணா அண்ணி இப்படி யாருக்காகவும் இல்லாம எனக்காக, எனக்காக மட்டுமே அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனும். அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும், அது வரைக்கும் என்னால அந்த பொண்ணு யார்னு சொல்லமுடியாது மா" என்ற விஜயின் குரலில் அவ்வளவு உறுதி. மகனின் மனதில் ஒரு பெண், அதுவும் அவனது பேச்சின் உறுதியில் நிச்சயம் அவன் சொல்லியதை செய்து காட்டுவான் என்ற நினைப்பு இதுவே அந்த தாய்க்கு போதுமானதாக இருக்க, அவன் இஷ்டப்படியே நடக்கட்டும் என்றவாறு உறங்க சென்றார் கஸ்தூரி.
***********
இரண்டு நாட்கள் வேகமாக சென்றிருக்க, அன்றும் மாலை ஆனதும் ஆபீஸ்லிருந்து வீட்டை நோக்கி பயணித்த ஸ்ருதியின் ஸ்கூட்டி, தனது வேகத்தை குறைக்க காரணம் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த விஜய்யை, அவள் கண்கள் கண்டதால்.
பேச்சுவார்த்தை இல்லாத போதே அவனுக்கு உதவ சொல்லிய மனம், இரண்டு நாட்களுக்கு முன், அவனுடன் சினேகமாக உரையாடிய பின் இன்று மட்டும் அப்படியே விட்டு போக சொல்லுமா என்ன? அவனை பின்னிருக்கையில் ஏற்றிய பின்னே பறந்தது அந்த ஸ்கூட்டி.
"ஏன் நடந்து போய்ட்டு இருந்திங்க?, வண்டி இன்னும் சரியாகலயா?"
"அதெல்லாம் சரி பண்ணியாச்சு ஸ்ருதி, பிரண்ட் வீட்ல ஏதோ எமெர்ஜென்சியாம் என் வண்டிய வாங்கிட்டு போயிருக்கான் அதான் நட்ராஜா சர்வீஸ்ல வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன், இப்போ உங்க புண்ணியத்தால லிப்ட் கிடைச்சி வீட்டுக்கு ஸ்கூட்டில போய்ட்டு இருக்கேன்" என்றவனின் பதிலில் ஸ்ருதியின் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே. அதற்கு பின் எந்த ஒரு உரையாடலும் இன்றி அவனை அவன் வீட்டின் முன் இறக்கிவிட்டவள், அன்று போல் அவன் வீட்டுக்கு அழைக்கவும் அதை நாகரிகமாக மறுத்து அவனிடமிருந்து விடைபெற்று சென்றாள்.
வீட்டுக்கு வந்தவள் தன் அறைக்கு சென்று உடை மாற்றி ஹாலுக்கு வர, அங்கே அவளது அன்னை தயாரித்து வைத்திருந்த காபி அவளுக்காக காத்துக்கொண்டிருந்தது. மெல்ல அதை சுவைத்து முதித்தவள், "ஸ்ருதி என் ரூம்க்கு கொஞ்சம் வாயேன்" என்ற சாருவின் அழைப்பு காதில் விழ, எழுந்து அங்கே சென்றாள்.
"வா ஸ்ருதி"
"பிரணவ் தூங்குறானா அண்ணி"
"ஆமா, இப்படி வந்து உக்காரு"
"ம்ம்ம்... சொல்லுங்க அண்ணி"
"நான் ஒன்னு கேட்ட தப்பா எடுத்துக்க மாட்டியே?"
"என்ன அண்ணி கேளுங்க, நான் ஏன் தப்பா எடுத்துக்க போறேன்"
"இல்ல ஸ்ருதி, கொஞ்சம் முன்னாடி உன்ன நான் பாத்தேன், நீ ஒருத்தர பைக்ல ஏத்திக்கிட்டு போய்ட்டுயிருந்த அதான் அது யாரு?"
"அவரு நம்ப சித்தார்த் அண்ணா பிரண்ட் விஜய் தான் அண்ணி, பைக் இல்லாம நடந்து போய்ட்டுயிருந்தாரு அதான் லிப்ட் குடுத்தேன்"
"ஓ.... அந்த தம்பியா. நான் பாக்கும் போது அவர் முகம் சரியா தெரியல அதான் கண்டுபிடிக்க முடியல" என்ற சாரு சிறு அமைதிக்கு பின் "நீ எங்க வீட்டு பொண்ணு ஸ்ருதி உன்ன பத்தி எனக்கு தெரியும், ஆனா பாக்குறவங்களுக்கு அப்படி தெரியாதுல மா... நீயும் இன்னும் கலயாணம் ஆகாத பொண்ணு நாளைக்கு யாராச்சும் உன்ன பத்தி ஒரு வார்த்தை சொல்லிட்டா அது கஷ்டம் தானே அதுக்கு ஏன் நாம இடம் தரணும். நீ புத்திசாலி பொண்ணு உனக்கு நான் சொல்லவேண்டியது இல்ல மா" என்று சாரு முடிக்க, ஸ்ருதிக்கு அப்போது தான் விளங்கியது அவள் செய்தது. தெரிந்தவர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமே அவளின் செயல் இருக்க, ஆனால் இந்த உலகம் அந்த செயலுக்கு கண் காது மூக்கு வைத்து பேச கூடும் என்பதை சாருவின் பேச்சுக்கு பின்னே அவள் உணர்ந்தாள்.
"என்ன ஸ்ருதி அண்ணி ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?"
"ஐயோ அப்படி எல்லாம் இல்ல அண்ணி, நீங்க என் நல்லதுக்கு தானே சொன்னிங்க. நான் தெரிஞ்சவருக்கு ஹெல்ப் பண்ணனும் நெனச்சேனே தவிர இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு யோசிக்கல அண்ணி, நீங்க சொல்றதும் கரெக்ட் தான்" என்ற ஸ்ருதி, அவளது அன்னையின் குரல் அழைப்பில் சாருவின் அறையில்லிருந்து வெளியேற, செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சாருவுக்கு சிறிது நேரதிற்கு முன் கௌதமின் போன் உரையாடல் நினைவுக்கு வந்தது.
"சொல்லு மாமா, என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?"
"ஸ்ருதி வீட்டுக்கு வந்துட்டாளா டி"
"இன்னும் இல்லையே, ஆனா வர டைம் தான். ஏன் என்னாச்சு"
"நானும் என் பிரண்ட்டும் ஒரு லேண்ட்டை பாக்க நம்ப வீட்டு பக்கமா இப்போ வந்துருக்கோம். ஸ்ருதி யாரோ ஒரு பையனை ஏத்திட்டு நம்ப வீட்ட தாண்டி போய்ட்டுயிருக்கா. நானே முதல்ல அவளை பாக்கல என் பிரண்ட் தான் பாத்துட்டு அது ஸ்ருதி தானே பின்னால உக்காந்து போறது யாருனு கேட்டான். நான் பாக்குறப்போ அந்த பையன் முதுகு தான் தெரிஞ்சிது டி, எனக்கு அவன் கிட்ட என்ன சொல்றது தெரியாம எங்க சொந்தகார பையன் தான் அப்படினு சொல்லி சமாளிச்சிட்டு வந்தேன். அவ வந்தா நீ கொஞ்சம் அது என்ன யாருனு கேளு. அவ மேல நம்பிக்கை இல்லாம கேக்க சொல்லல அது புரிஞ்சி, அவ மனசு கஷ்டப்படாத மாதிரி கேளு"
"ம்ம். சரி மாமா புரியுது ஸ்ருதி வந்ததும் நான் கேக்குறேன்"
"அப்போ நான் போன் வைக்குறேன்"என்று அழைப்பை துண்டித்தான் கெளதம்.
இவ்வாறு ஒரு வாரம் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் நகர, லிப்ட் என தனது வலது கை கட்டை விரலை உயர்த்தியபடி, ஸ்ருதியின் ஸ்கூட்டி வரும் பாதையில் ப்ளூ ஜீன்ஸ் பிளாக் ஷர்ட் சகிதம் கண்ணில் அந்த கருப்பு நிற கூலர் என நின்றுக்கொண்டிருந்தான் வெற்றிவிஜயன் !
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-6

ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த ஸ்ருதி, சிறிது தொலைவிலேயே சாலை ஓரத்தில் நிற்கும் விஜய்யை கண்டுவிட "ஆத்தி... இன்னைக்கு அந்த பைக்கு என்ன பிரச்னையோ தெரியலயே, எதுவா இருந்தா நமக்கு என்ன, நாம அப்படியே கவனிக்காத மாதிரி போய்டலாம்" என நினைத்தவாறு சாலையில் பார்வை பாதிக்க, அவள் எதிர்பாராதவாறு அவளது வண்டி வரும் திசை முன் லிப்ட் என்றபடி தன் வலது கை கட்டை விரல் உயர்த்தி நின்றிருந்தான் விஜய்.

இதற்கு முன் இரண்டு முறையும் அவளாக சென்று அவனுக்கு உதவியிருக்க இன்று, அவனாகவே வந்து அவளிடம் உதவி கேட்டு நிற்பான் என சிறிதும் எண்ணவில்லை ஸ்ருதி. யோசனை முடியும் முன்னரே அவனை, அவளது ஸ்கூட்டி நெருங்கி இருக்க, இன்று அவனுக்கு லிப்ட் குடுக்கமால் தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்து வண்டியை நிறுத்தினாள்.

"நீங்களா.....நான் உங்கள கவனிக்கல. எங்க இங்க நின்னுட்டு இருக்கிங்க?" என்றாள் அவனை அப்போது தான் பார்த்ததை போல !

அடியே.. நானே பல வேஷம் போடுறவன், என்கிட்டயே நீ பகல் வேஷம் போடுறியா? பத்தடி தூரத்துலயே என்ன பாத்துட்டு, நைஸ்சா பாக்காத மாதிரி நீ போறத கவனிச்சிட்டு தான் நானே லிப்ட் கேட்டு உன் வண்டி முன்னால வந்து நின்னேன் என அவன் மைன்ட் வாய்ஸ் கொடுக்க, வெளியே சிரித்த முகத்துடன் "ஹ்ம்ம்.. பரவாயில்ல ஸ்ருதி, பைக்ல பெட்ரோல் காலி அதான் நின்னுட்டு இருக்கேன். கொஞ்சம் லிப்ட் தரீங்களா?"

"அது... என்னோட பிரண்ட் என் வீட்டுக்கு வந்து எனக்காக வெயிட் பண்றா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும், அதுனால என்னால இன்னைக்கு உங்களுக்கு லிப்ட் தர முடியாதே" என்று இன்ஸ்டன்ட்டாக ஒரு பொய்யை உரைத்தாள் ஸ்ருதி.

"ஓ... பரவாயில்லை ஸ்ருதி. நீங்க உங்க வீட்டு கிட்டயே என்னை இறக்கி விடுங்க நான் அங்கிருந்து நடந்து போயிடுறேன்" என்று அவன் கூற, இதற்கு மேலும் அவளால் மறுக்க முடியவில்லை.

இருவரும் மெளனமாக பயணத்தை தொடர "இங்க எவ்ளோ நேரமா நின்னுட்டு இருக்கிங்க?" என்று மௌனைத்தை கலைத்து ஸ்ருதி விஜயிடம் வினவினாள்.

இப்போ எதுக்கு இந்த கேள்வி என்ற யோசனையுடனே "ஒரு கால் மணி நேரமா நின்னுருப்பேன் ஸ்ருதி" என பதிலளித்தான் விஜய்.

"அவ்ளோ நேரமாவா! அது வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் கூடவா வரலை? இத்தனை நேரம் நின்னதுக்கு கொஞ்சம் தூரம் நடந்துருந்தா பஸ் ஸ்டாப் வந்துருக்கும் நீங்க பிஸ்லயே போயிருக்கலாமே" என்று அவள் சந்தேகத்தை கேட்க

நல்லவேலை அவன் என்ன பதில் சொல்லலாம் என யோசித்தவாறு முழித்ததை, அவள் கண்களுக்கு தெரியாமல் காத்தது அந்த கருப்பு நிற கூலர்.

அவனின் பதிலுக்காக அவள் சைடு மிர்ரரில் அவனது முகம் பார்த்தவாறு காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளின் முதல் கேள்வியை ஒதுக்கிவிட்டு அடுத்ததுக்கு மட்டும் பதில் உரைத்தான் "நீங்க கேக்குறதும் சரி தான் ஸ்ருதி, உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு கைல காசு இல்ல, கிளம்புற அவசரத்துல பர்ஸ்சை வீட்லயே மறந்து வெச்சிட்டேன் அதான் பஸ்ல போகல" என பதில் உரைத்தவன், அடுத்து அவள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போக அதில் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

ஸ்ருதியின் வீடு இருக்கும் தெருவில் அவர்கள் நுழைய "இங்கயே நிறுத்துங்க ஸ்ருதி நான் இறங்கிடுறேன்" என்ற அவனது குரலில் வண்டியை நிறுத்தி அவனை இறக்கிவிட்டவள், அவனிடம் விடைபெற்று வீடு சென்றாள்.

வீடு வந்தவள் அசதியில் அப்படியே ஹாலில் இருந்த இருக்கையில் அமர, அவளின் அன்னை தனலட்சுமி கிச்சனில் நின்றவாறே, ஹாலில் பிரணவுடன் அமர்ந்திருக்கும் சாருவை கண்களால் ஸ்ருதிக்கு சைகை காட்ட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் அதன் அர்த்தம் விளங்கிட எழுந்து அன்னையிடம் சென்றாள் "மா... மறந்துட்டேன் மா" என்றாள் வருத்தத்துடன்.

"மறந்துட்டியா? என்ன டி, அண்ணா அண்ணி கல்யாண நாளுக்கு சர்ப்ரைஸ்சா கேக் வெட்டலாம் நான் ஆர்டர் குடுத்து சாயங்காலம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்போ மறந்துட்டேன் சொல்ற"

"ஆர்டர் எல்லாம் காலைலயே கொடுத்தாச்சு ம்மா... அதை வாங்கிட்டு வர தான் மறந்துட்டேன், இப்போ என்ன அடுத்த தெருல இருக்க கடைல தான் ஆர்டர் பண்ணிருக்கேன், ரெண்டே நிமிஷம் தான் போய் வாங்கிட்டு வரேன்" என்றவாறு வீட்டிலிருந்து கிளம்பினாள் ஸ்ருதி.

"அண்ணா சீக்கிரம் சில்லறைய தாங்க ண்ணா..." என்று அந்த கடைக்காரரிடம் கேட்டு கொண்டிருந்தான் விஜய்.

"அட இரு தம்பி ரெண்டு முட்டை பப்ஸ் வாங்கிட்டு இருநூறு ரூபா குடுத்தா நானும் சில்லறைக்கு எங்க போவேன்" என்றார் கடைக்காரன் கடுப்புடன்.

"என்ன ண்ணா... இந்த ஏரியாலயே உங்க கடை தான் பெரியகடை, அதுவும் இல்லாம உங்க கடைக்கு தான் கஸ்டமர் ஜாஸ்தியா வருவாங்க, உங்க கிட்டயே சில்லறை இல்லனு சொன்னா எப்படி ண்ணா..." என்று சில பல ஐஸ்சுகளை வைத்து சில்லறை வாங்கியவன், அதனை சரிபார்த்தவாறு திரும்ப அவன் முன்னால் நின்றிருந்தாள் ஸ்ருதி.

"டேய் விஜய்...பைக் எடுத்துட்டு வந்துட்டேன் வா டா போலாம்..." விஜய்,ஸ்ருதி இருவரும் குரல் வந்த திசை நோக்க அங்கே வினோத், விஜயின் பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.

"வினோத்து... பைக் பெட்ரோல் போட்டு எடுத்துட்டு வந்துட்டியா டா"

"நீ எப்போ டா பெர்டோல் போட சொன்ன? பைக் அங்க நிறுத்தி இருக்கேன் அதை எடுத்துட்டு வானு மட்டும் தானே சொன்ன" என்று பைக்ல் அமர்ந்தவாறே வினோத் கத்த, அது தெளிவாக ஸ்ருதியின் செவியை சென்றடைந்தது.

சுத்தம், இப்போ இந்த விளக்கம் ரொம்ப அவசியம். போ டா இப்போ போய் நிம்மதியா தூங்கு என வினோத்துக்கு மனதில் அர்ச்சனை செய்தவன் "ஸ்ருதி அது... அவன்..." என பேச வந்தவனை கடந்து விறுவிறுவென சென்றவள், தான் ஆர்டர் செய்த கேக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள் ஸ்ருதி.

வீடு வந்தவளுக்கு விஜயின் செயல்களில் ஏதோ சரி இல்லை என்பது விளங்க, இனிமே அவன்கிட்ட ஒதுங்கியே இருக்கனும் என முடிவெடுத்தவாறு தான் அண்ணன் அண்ணியின் திருமணநாள் கொண்டாதத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.

மறுநாள் சித்தார்த்தின் அலுவலகத்தில் அமர்ந்து, நேற்றைய தினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிகளின் ஆர்டர் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தவள், உள்ளே யாரோ வரும் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்க்க, அவளது எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் விஜய்.

நேற்று அவன் தன்னிடம் பொய் சொல்லி நாடகமாடிவிட்டு இன்று ஏதும் நடவாதது போல், எந்த ஒரு சலனமும் இன்றி தன்முன் அமர்ந்திருந்தவனை காண்கையில் அப்படி ஒரு கோபம் ஸ்ருதிக்கு.

"சித்தார்த் இல்லையா ஸ்ருதி?"

"இல்ல வெளிய போயிருக்காங்க, நீங்க போய்ட்டு அண்ணா வந்த அப்பறம் வாங்க" என்றாள் பட்டென.

"பரவாயில்ல நான் அவன் வர வரைக்கு வெயிட் பண்றேன்"

"உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? அதான் அண்ணா இல்ல சொல்றேன்ல கிளம்புங்க" என்று ஸ்ருதி குரல் உயர்த்திவிட்டு, மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தியவளின் காதுககுளுக்கு இருக்கையை நகர்த்தும் சத்தம் கேட்டதில், அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதை உணர்ந்தாள் ஸ்ருதி.

மெஸேஜ் டோன் கேட்க, மேசையில் இருக்கும் போன்னை எடுப்பதிற்காக தலை உயர்த்தியவளுக்கு, இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தபடி அவளையே பார்த்துகொண்டிதுந்த விஜய் காட்சியளித்தான் "சீட்ல இருந்து எழுந்த சவுண்ட் கேட்டுச்சே, அப்போ அவன் எழுந்து போகாம நல்லா வசதியா சாஞ்சிக்க தான் சீட்டை நகரத்தினான?" என்றெண்ணியவள், தான் பார்த்துவிட்ட பிறகும் பார்வைமாற்றாமல் அவன் தன்னையே பார்த்து கொண்டிருக்க அதில் அவளின் கோபம் எல்லை கடந்தது.

"ஏய்.... நீ முதல்ல எந்திரி, நேத்து என்ன டா னா காசு இல்லனு பொய் சொல்லி என்கிட்ட லிப்ட் கேக்குற, இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து இப்படி என்னயே வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, என் அண்ணன் பிரண்ட்னு உன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசினா நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குற. என்ன என்னை மடக்க ட்ரை பன்றியா நீ" என மரியாதை காற்றில் பறக்க விஜய்யை வார்த்தைகளால் விளாசிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.

"என்ன ஸ்ருதி என்னென்னமோ பேசுற, நான் எப்போ உன்ன மடக்க ட்ரை பண்ணேன் நீ சொல்றது எதும் புரியலையே" என்றான் விஜய் அநியாயத்திற்கு அப்பாவியாய்.

"ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காத, சரி நான் டைரக்டாவே கேக்குறேன் நீ என்ன லவ் பன்றியா?" என அவள் வார்த்தையை முடிக்கவில்லை "அய்யயோ, என்ன ஸ்ருதி சொல்றிங்க நானா... உங்களையா..." கிட்டத்தட்ட அலறியவன் "என் பிரண்ட் சித்தார்த் தங்கச்சி தானேனு நேத்து ஏதோ விளையாட்டா பண்ணினேன், இப்போ நீங்க என்ன திட்டினதும் நான் வீட்டுக்கு போறதா சித்தார்த்க்கு மெசேஜ் பண்ணேன் அவன் தான் நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன் நீ அங்கேயே இருனு சொன்னான் அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன், போன் பாத்து போர் அடிக்குதுனு உங்க பின்னால இருக்க ஜன்னல் வழியா வெளிய பாத்துட்டு இருந்தேன் அதை நீங்க உங்கள பாக்குறதா நினைச்சி இப்படி எல்லாம் பேசிட்டிங்களே ஸ்ருதி, எவ்ளோ வருஷமா என்ன உங்களுக்கு தெரியும் என்னை போய் நீங்க இந்தளவுக்கு நினைப்பிங்கனு நான் எதிர்பாக்கல" என்றவன் விரைவாக அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும் அவனை பற்றியே சிந்தனை ஸ்ருதிக்கு. இத்தனை வருடத்தில் விஜய் அவளிடம் நேரில் பேசியது கூட இல்லை. அன்று அவளாக சென்று பேசிய பிறகே அவனும் பேச ஆரம்பித்தான். இதற்கு முன் சித்தார்த் போன்னை வீட்டில் விட்டு வெளியே சென்ற சமயங்களில் விஜய் அழைக்க, "அண்ணா வெளிய போயிருக்காங்க" எனும் ஸ்ருதி அவனிடமிருந்து "ம்ம்ம்.. சரிங்க" என்று மட்டுமே பதிலாய் வரும். சித்தார்த் அலுவலகத்தில் இருக்கும் போதும் அவன் அல்லாமல் ஸ்ருதி தனியே இருக்கும் சமயங்களில் வரும்போதும் கூட விஜய் அவளிடம் பேச முயற்சித்ததில்லை.

விஜயின் இரண்டு மூன்று விளையாட்டான செயல்களை சித்தார்த் வாயிலாக கேள்விப்பட்டது ஸ்ருதியின் நினைவில் வர, குழம்பியவள், பின் நாம் தான் அவனை தவறாக நினைத்துவிட்டோம் என்ன வருந்தியவள் அவனிடம் மன்னிப்பும் கேட்ட முடிவெடுத்தாள்.

முடிவெடுத்ததும் போன்னில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு விடுவோமா என எண்ணினாள், அவனின் போன் நம்பர் அவளிடம் உள்ளதுதான். தங்களின் ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் ஒப்புக்கொள்ளப்படும் திருமண நிகழ்வுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே தேதியில் நடைபெறும் வேளையில் சித்தார்த்துக்கு உதவியாக வருவான் விஜய். அவன் கவனிக்கும் கணக்கு வழக்கின் விபரங்களை ஸ்ருதிக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் வாயிலாக அனுப்பி விடுவான். அப்படி ஒரு தருணத்தில் தான் அவனின் நம்பர் அவளது போன் காண்டாக்டில் சேமிக்கப்பட்டது. முதலில் போன் அழைப்பில் மன்னிப்பு வேண்ட நினைத்தவள், பின் தான் பேசிய அதிகப்படியான பேச்சிக்கு நேரில் தான் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நினைத்து அவனை நேரில் காணும் தருணத்திற்காக காத்திருந்தாள்.

அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல், அடுத்த நாளே ஸ்ருதியின் முன் வந்து நின்றான் விஜய். சித்தார்த்தை காண வந்திருப்பான் போலும், ஸ்ருதி மன்னிப்பு கேட்க முடிவெடுத்துவிட்டாள் தான், ஆனால் நேற்றைய பேச்சுக்கள் அவளில் நினைவில் எழ, அதில் திணறியவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் "சாரி" என்றாள் வருந்தும் குரலில்.

"எதுக்கு ஸ்ருதி சாரி? ஓ... நேத்து நடந்த விஷயத்துக்கா... அதுக்கு நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும், உன்மனசுல அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி நான் தான் நடந்துக்கிட்டேன்" என்றவன் மேலும் தொடர்ந்தான், "நான் உன்ன சித்தார்த் தங்கச்சியா தான் பாத்தேன், அதனால தான் உன்கிட்ட அப்படி விளையாடினேன், ஆனா என்ன பத்தி உன் மனசுல அப்படி ஒரு ஆசை வரும்னு நான் எதிர்பாக்கல" என்றவனின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.

"இல்ல இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க" என்றாள் அவனுக்கு விளக்கிவிடும் வேகத்தில்.

"ஆமா ஸ்ருதி நான் உன்ன புரிஞ்சிக்கல தான், இல்லனா நீ உன்மனசுல உள்ள ஆசைய என்கிட்ட மறைமுகமா நேத்து சொன்னப்போ நான் கோவப்பட்டு போயிருப்பேனா" என்றவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்தவள், பின் அவன் தன்னிடம் முன்பு சொன்னது போல் ஏதேனும் விளையாடுகிறானா என சந்தேகம் எழ அதை அவனிடமே கேக்டவும் செய்தாள்.

"நீங்க என்கிட்ட அன்னைக்கு போல விளையாடுறிங்க தானே?" என்றவளை புன்சிரிப்புடன் ஏறிட்டவன், இல்லை என்பதை போல் தலையசைத்தான்.

"நான் ஏன் ஸ்ருதி விளையாடப்போறேன், இன்பேக்ட் நீ என்ன லவ் பன்றியா அப்படினு என்கிட்ட கேக்குறவரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை" என ஒரு அண்டப் புளுகை புளுகியவன், பைனல் டச்சாக
"உனக்கும் என்மேல ஒரு அது இருக்கு
எனக்கும் உன்மேல ஒரு இது இருக்கு அப்போ அது லவ் தானே ஸ்ருதி !!!" என வி.டி.வி சிம்புவை போல் டைலாக் பேசியவனை கண்ட அவளது விழிகள் வட்டமாய் விரிந்தன.
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-7

விஜய் கூறிய வி.டி.வி பட டைலாக்கில், கண்கள் விரிய அவனை பார்த்தாள் ஸ்ருதி. பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் அவனை முறைத்தவாறு பேச தொடங்கினாள் "என்னவெச்சி இப்போ காமெடி பண்ணிட்டு இருக்கிங்களா? என்ன நினைச்சிட்டு இருக்கிங்க நீங்க உங்க மனசுல?"

"ஆமா ஸ்ருதி நான் உன்ன தான் நினைச்சிட்டு இருக்கேன் என்மனசுல அதை தெரிஞ்சே கேக்குறியா" என்றான் விஜய் உதட்டில் விரிந்த சிரிப்புடன்.

ஸ்ருதிக்கு ஐயோ வென்றிருந்தது, அவள் எதார்த்தமாக கேட்டும் கேளிவியை வைத்தே அவன், அவளின் வாய் அடைக்கும் பதிலை கூறினால் அவளும் என்ன தான் செய்வதாம். அவனுக்கு தான் கூறிய என்ன என்ற வார்த்தை கேள்வி வாக்கியமே தவிர அவளை குறிக்கும் வார்த்தை இல்லை என்பதின் அர்த்தத்தை அவனுக்கு விளக்கும் பொருட்டு "நான் என்னனு சொன்னதுக்கு அர்த்தம் என்னை இல்ல" என்றாள்.

விஜய்கோ அந்த சமயத்திலும் வடுவேலுவின் "என்ன வேணும், எண்னெய் தான் வேணும்" காமெடி நியாபகம் வர, முயன்று தன் சிரிப்பை அடக்கியவன், அவளிடம் பேச தொடங்கினான்"அது எப்படி ஸ்ருதி அந்த அர்த்தம் இல்லாம போகும். சரி அதை எல்லாம் விடுங்க நான் உங்க கிட்ட ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க. ஒருத்தவங்க உங்க கிட்ட சாப்டியானு கேக்குறாங்கல, எதுக்காக? எந்த பதிலை எதிர்பாத்து அப்படி வந்து கேக்குறாங்க" என்பதற்கு ஸ்ருதி "இப்போ எதுக்கு இந்த கேள்வி" என்று மனதில் தோன்ற அவனை விசித்திரமாக பார்த்தாள்.

"பதில் சொல்லாமஇருந்தா எப்படி ஸ்ருதி, சரி நான் சொல்லட்டுமா நீங்க கரெக்ட்டானு மட்டும் பாருங்க" என்றவன் தொடர்ந்தான்"நம்மள பாத்து ஒருத்தவங்க சாப்டியானு கேட்டா, நம்ப சாப்பிட்டோமா இல்லையானு அவங்களுக்கு பதில் தெரியணும், சாப்பிடாம இருந்தா ஏன் இன்னும் சாப்பிடாமா இருக்கோங்குற காரணத்தை தெரிஞ்சிக்கனும் அப்படியும் இல்லையா, நானும் வரேன் ஒன்னா போய் சாப்பிடலாம் இல்ல பரிமாறலாம் இப்படி அவங்க விருப்பத்தை செய்ய தான் கேப்பாங்க. இதை எதுக்கு சொல்றேன்னா நீ என்கிட்ட அன்னைக்கு என்னை நீ லவ் பன்றியானு கேட்டதுக்கு, ஒன்னு நான் உன்ன லவ் பண்றேனா இல்லையானு நீ தெரிஞ்சிக்க கேட்ருக்கானும், அப்படி லவ் பண்ணலனா இனிமே பண்ணு அப்படினு எனக்கு ஹின்ட் குடுக்க கேட்ருக்கானும், அதுவும் இல்லயா நீ லவ் பண்றத மறைமுகமா எனக்கு உணர்த்த முயற்சிப்பண்ண கேட்ருக்கானும்....." என அவன் வார்த்தையை இழுதான் விஜய்.

ஸ்ருதிக்கோ சும்மா இருந்தவனை அன்னைக்கு அப்படி கேட்டு நாம் தான் சொறிஞ்சி விட்டுட்டோமோ என்ற எண்ணத்தில் நின்றிருக்க, அவள் அறியாவண்ணம் பெருமூச்சு விட்டவன் "ஒரு வழியா இவளை டைவர்ட் பண்ணியாச்சு, இங்கிருந்து ஓடிடு டா வெற்றிவிஜயா" என அவளின் சிந்தனை கலையாதவாறு மெதுவாக அங்கிருந்து அகன்றான்.

சித்தனை கலைந்து அவள் பார்க்கையில் அவன் அங்கு இல்லை. "அது எப்படி சாப்டியா கேக்குறதும் லவ் பன்றியான்னு கேக்குறதும் ஒன்னாகும்?" என்று மண்டை காய யோசித்தவளின் செவியை அடைந்தது சித்தார்த்தின் குரல் "என்னாச்சி மா ஸ்ருதி ஒரு மாதிரியா இருக்க"

"ஒன்னும் இல்ல ண்ணா... தலை வலிக்குறமாதிரி இருக்கு நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா?"

"என்ன மா திடிர்னு ஏன் தலை வலிக்குது, ஹாஸ்பிடல் போலாமா ஸ்ருதி?"

"இல்ல ண்ணா... வேணாம் லைட்டா தான் வலி இருக்கு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்"

"ம்ம்ம்.. நீ கிளம்பு மா போய் ரெஸ்ட் எடு" என சித்தார்த் சொன்னதும். விஜயின் வருகைக்கு முன் தான் பார்த்துக்கொண்டிருந்த கணக்கு புத்தகத்தை மூடி கபோட்டில் வைக்க போனவளிடம் அவளின் அண்ணன் "ஏன் ஸ்ருதி இந்த சாப்டியானு கேக்குறதும் லவ் பன்றியான்னு கேக்குறதும் ஒன்னா மா?"

"என்ன...என்ன...ண்ணா கேட்ட" என்று ஸ்ருதி அதிர்ச்சியாக கூற. "இந்த விஜய் பண்ண வேலை மா, சும்மா இருந்தவனுக்கு போன் பண்ணி காதுல ரத்தம் வர வச்சிட்டான்" என்ற சித்தார்த் சற்று முன் விஜய் கூறிய விளக்கத்தை கூற, அதுதான் அவளுக்கு முன்பே தெரிந்த விளக்கம் ஆயிற்றே அந்த வெறுப்பில் "எங்கிருந்து ண்ணா புடிச்ச அதை" என்று அவளையும் மீறி கூறிவிட்டாள்.

"எதை மா..." சித்தார்த்துக்கு புரியாமல் கேட்க, "அது.....அது..... "என்று அவன் அருகில் மேசை மேல் இருக்கும் தண்ணீர் பாட்டிலை சுட்டி காட்டி "அந்த தண்ணிய சொன்னேன்னா, அது குடிக்க நல்லா இல்ல அதன் எங்க புடிச்சன்னு கேட்டேன்" என்று சமாளித்தாள் ஸ்ருதி.

"இது கேன் வாட்டர் தானே ஏன் நல்லா இல்ல" என்ற சித்தார்த் அதன் அருகில் சென்று பார்வையிட்டவாறு கேன் வாட்டர் ஆராய்ச்சியில் இறங்க, அவனிடமிருந்து விடைபெற்று வீடு சென்றவள் தான், நான்கு நாட்கள் ஆகியும் அந்த ஆபீஸ் பக்கம் தலை வைத்து பார்க்கவில்லை அவள்.

********

"இப்படி என் மூஞ்சிய பாக்க தான் என்னை போன் பண்ணி வரச்சொன்னியா டா" என்றான் இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த விஜய்.

"நீ ஸ்ருதி கிட்ட ஏதாவது பேசுனியா டா?" என்றான் சித்தார்த்.

"ஏன் டா என்னாச்சு எதுக்கு இப்படி கேக்குற"

"நாலு நாளா அவ முகமே சரியில்ல, ஆபீஸ்கும் வராம வீட்ல இருக்கா. வீட்ல உள்ளவங்க யாரும் அவளை ஒன்னும் சொல்லிருக்கமாட்டாங்க அதான் நீ ஏதும் அவகிட்ட பேசினியானு கேட்டேன்"

"ஆமா டா பேசினேன், ஏன் உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?"

"இல்ல டா எதுவும் சொல்லல, நானா தான் கேக்குறேன். "

"ஓ... அநியாயத்துக்கு அண்ணனா இருக்கியே டா, தங்கச்சி மேல ஓவர் பாசம் தான். அவங்க முகம் சரியில்லயாம் உடனே விசாரணை கமிஷன் ஆரம்பிச்சி இவரு என்கிட்ட விசாரிக்க வந்துட்டாரு"

"டேய்... நான் உன்ன சந்தேகம் பட்டு எல்லாம் கேக்கல டா உன்ன பத்தி எனக்கு தெரியாதா. அவ கஷ்டம் பட்றமாதிரி நீ பேசிருக்கமாட்ட தான் ஆனா அவ மூஞ்சிய அப்படி வெச்சிட்டு சுத்துறாளே, அதான் பாக்க என்னமோ போல இருக்கு. நான் உன்கிட்ட சொன்னமாதிரியே கொஞ்சம் நாள் போகட்டும் டா விஜய், எங்க வீட்ல பேசி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க்குறேன்"

"சித்தார்த்து நீ சொல்றது எல்லாம் சரி தான், நீ உங்க வீட்ல மட்டும் தான் சம்மதம் வாங்கமுடியும் ஆனா உன்னால ஸ்ருதியை முழு மனசா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியுமா?" என்பதற்கு சித்தார்த் மறுப்பாய் தலையசைக்க, "அதுக்கு தான் நான் ஸ்ருதி கிட்ட பேசுறேன். நீ உங்க வீட்டை கவனி, ஸ்ருதிய சம்மதிக்க வைக்குற வேலைய நான் பாத்துக்குறேன்."

"ம்ம்ம்... ஆனா அவ மனசு கஷ்டப்படாத மாதிரி பேசி அவளோட சம்மதத்தை வாங்கு டா, அவ ஏற்கனவே ஒரு கல்யாண ஏற்பட்டுல ரொம்பவே பட்டுட்டா விஜய்" என்றான் சித்தார்த் அவளின் அண்ணனாய் அக்கறையாய்.

"டேய் சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதிங்க டா. அவ தான் ஒன்னும் இல்லாத அந்த ஓட்டை பிளாஷ் பாக்கையே நினைச்சிட்டுயிருக்கானா நீங்களும் அதையே நெனைச்சி அவளை கஷ்டப்படுத்தாதனு சொல்லிட்டு இருக்கிங்க, முதல்ல எல்லாரும் அவளை நார்மல்லா பாருங்க, இந்த பாவம் போல லுக் விட்டு விட்டே தான் இன்னும் அவளுக்கு பழசை நியாபகம் படுத்துறிங்க"

"நாங்க ஏன் டா அவளுக்கு பழசை நியாபகம் படுத்தபோறோம், நாங்க எல்லாரும் அவ கிட்ட எவ்ளோ அன்பா இருக்கோம் தெரியுமா, வார்த்தைல கூட அவளை கஷ்டப்படுத்த கூடாதுனு பாத்து பாத்து பேசுறோம்"

"அது தான் டா ஏன்? எதுக்கு அப்படி பாத்து பாத்து பேசனும்? நீங்க அவளை எந்த விஷயத்துல திட்டுணுமோ அந்த விஷயத்துக்கு திட்டுங்க எதுக்கு கொஞ்சனுமோ அதுக்கு மட்டும் கொஞ்சுங்க. அர்ஜுன் கூட கல்யாண ஏற்பாடு நடக்குற வரைக்கும் இது தானே பண்ணிங்க ஆனா அதுக்கு அப்பறம் அவ என்ன செஞ்சாலும் ஏன்னு கேக்கமற்றிங்க? அப்படி நீங்க கேக்காம விட்டபோலாம் அவளுக்கு என்ன தோணும்னு யோசிச்சு பாத்திங்களா? இந்த கரிசனத்துக்கு எது காரணம் அர்ஜுன் கூட ஏற்பாடு ஆனா கலயாணம் நின்னது தானே. அப்பறம் எப்படி அவ அதை மறப்பா?" என்ற விஜயின் கேள்வியில் இருக்கும் நியாயம் புரிய சித்தார்த் அமைதியாக அமர்ந்திருந்தான். நண்பனை சகஜமாக்கும் பொருட்டு விஜய்யே பேச்சை தொடர்ந்தான்.

"போதும் டா நீ பீல் பண்ணது, போய் முதல்ல மாசமா இருக்க என் தங்கச்சி ப்ரீத்தியை கவனி, அப்பறம் உன் தங்கச்சியை கவனிக்கலாம், ஊரான் தங்கச்சியை ஊட்டி வளத்தா உன் தங்கச்சி தானா வளருவாடா" என்றவனை இருகரம் கூப்பி வணங்கிய சித்தார்த் "டேய் யப்பா... நான் உன்ன இனி எதுமே கேட்கமாட்டேன் தயவு செஞ்சி இப்படி பேசி கொள்ளாத" என்றவனிடம் புன்முறுவலுடன் விடைபெற்று சென்றான் விஜய்.

சித்தார்த்துக்கு, விஜய் பேசியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவன் சொல்வது போல் தங்களால் தான் ஸ்ருதி தனது சுயத்தை இழந்து நிற்கிறாளோ என்றெண்ணம் வர அவனது நியாபக அலைகள் அவளுடனான கடந்தகாலத்திற்கு பயணப்பட ஆரம்பித்தது.

இரண்டு வருடத்திற்கு முன்புவரை சித்தார்த்திற்கு தனது தங்கை ஸ்ருதியை வெறுப்பேற்றுவதே அவனது தினசரி வேலைகளுள் முக்கியமான ஒன்று!

கெளதம், ஸ்ருதிக்கு அன்பான அண்ணன் என்றால் மாறாக சித்தார்த்தோ வம்பான அண்ணன் ஆக இருந்தான். இருவரும் வீட்டில் இருக்கும் சமயங்களில் இவர்களின் பஞ்சாயத்தை கேட்கவே அவர்களின் அன்னை தனலட்சுமிக்கு நேரம் போதாது.

ஸ்ருதி தனக்கு பிடித்த பாடலோ அல்லது தொலைக்காட்சி தொடரோ பார்த்துக் கொண்டிருந்தால், அங்கு செல்பவன் சேனலை மாற்றி, ரிமோடை தன் இருக்கையின் கீழ் வைத்துக்கொள்வதும், ஒன்றாக உணவு உண்ணும்போது அவளின் அருகில் அமர்ந்து, அசந்த நேரம் பார்த்து அவளது தட்டில் உள்ளதை அபேஸ் செய்வதும், பூஜை மற்றும் விசேஷ நாட்களில் அன்னையுடன் விரதம் இருப்பவளிடம் அவளுக்கு பிடித்த தின்பண்டம் வாங்கி வைத்துக்கொண்டு, அவள் பார்க்கும் போது அதனை ரசித்து ருசித்து கொறிப்பதும், அவளின் வகுப்பு தோழிகளை கலாய்ப்பதும் என சித்தார்த்தின் செயல்கள் நீண்டுகொண்டே போகும். இவனின் செயல்களின் வெளிப்பாடாய் அவனுக்கு ஸ்ருதியிடமிருந்து அடிகளும் "போ டா நாயே, எரும மாடு" என அவனின் முன்ஜென்ம பிறப்பின் பெயர்களும் அவனுக்கு பரிசாய் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த இரண்டு வருடத்தில் சுத்தமாய் மறந்தும் மறைந்தும் போனது.

தங்கையுடனான நினைவுகளில் மூழ்கியவனின் மனது, அதனை நினைவுபடுத்தியவனின் நினைவில் மூழ்க தொடங்கியது.

அன்று விஜயின் போனில் ஒலித்த ரிங்க்டோன் பாடலில், அவனுடன் எதுவும் பேசாமல் வேகமாக சர்வீஸ் சென்டரில் பணத்தை செலுத்துவிட்டு தனது வண்டியில் ஏறி பயணித்த சித்தார்த் எப்படி அவனின் ஆபீஸ் வந்துசேர்ந்தான் என்பதை அவனே அறியான்.

ஆபீஸை திறந்து, தனது இருக்கையில் அமர்ந்தவனுக்கு வேலையில் கவனம் என்பது சிறிதும் இல்லை. விஜய்க்கு தன் தங்கையின் மீது காதலா? எப்போது? எப்படி? என்ற கேள்விகளே மனதில் ஓட, தலையை கைகளில் தாங்கியபடி அமர்திருக்க, தன் முன் ஏதோ நிழலாடுவது அறிந்தும் தலை நிமிர்த்தாமல் அதே நிலையில் இருந்தான் சித்தார்த்.

எதிர்ப்பக்கம் நின்றிருந்த விஜய்க்கு நண்பனின் இந்த தோற்றம் மனதை பிசைய, மௌனமாய் நின்றான். சிறிது நேரம் அப்படியே நின்றவன் பின் அவனை நெருங்கி "டேய் சித்தார்த்" என்றவனுக்கு பதிலாய் கிடைத்தது சித்தார்த்தின் மௌனம்.

விஜய்கோ தன் மனதில் இருந்ததை நண்பனிடம் முன்னமே தெரிவித்து இருக்கவேண்டுமோ என்ற காலம் கடந்த ஞாணோதயம்.

"சித்தார்த், ப்ளீஸ் டா ஏதாச்சும் பேசு, திட்டு, என் மேல கோபப்படு, அடி இப்படி எதுவேனா செய் டா, பட் ப்ளீஸ்... பேசாம மட்டும் இருக்காதா டா" இதற்கும் சித்தார்த்திடம் மௌனம் மட்டுமே.

"உன்கிட்ட இதை மறைக்கணும் நினைக்கல டா, ஆனா ஸ்ருதிக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கும் போது, அம்மாகிட்ட சொல்லி உங்க வீட்ல பேசவச்சி அதுக்கு அப்பறம் முதல்ல உன்கிட்ட தான் டா சொல்லணும் நெனச்சேன். ஆனா அதுக்குள்ள இன்னைக்கு இப்படி ஒன்னு நடந்து நீயா தெரிஞ்சிப்பனு நான் எதிர்பாக்கல சித்தார்த்" என்ற விஜய், நண்பனின் முகம் நோக்க அது உணர்ச்சி துடைக்கபட்டு காணப்பட, நொந்தே போனான் விஜய்.

சித்தார்த் மௌனம் தொடர்ந்து நீடிக்கவே, அதில் விஜய்க்கு சிறு கோபம் துளிர்விட, கோபத்துடனே அனைத்தையும் சொல்லிவிடும் வேகத்தில் பேச்சை தொடர்ந்தான் "ஏன் டா இத்தன வருஷ பிரண்ட்ஷிப்ல உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா டா? நான் என்ன அவ்வளவு கெட்டவனா? உன் தங்கச்சியை கல்யாணம் பண்ற தகுதி எனக்கில்லையா டா? ஸ்ருதிய என்னை விட யாரும் நல்லா பாத்துக்க மாட்டாங்க, அந்தளவுக்கு நான் பாத்துப்பேன். இப்போ கூட ஸ்ருதி மேல எனக்கு விருப்பம் இருக்குறதை உன்கிட்ட சொல்லாதது மட்டும் தான் நான் பண்ணின தப்பு மத்தது எதுவும் நீ தப்புனு சொன்னா அதை நான் ஏத்துக்க மாட்டேன் டா. இதுவே நீ என்னோட பிரண்ட்டா மட்டும் இருந்தா நான் என்னோட லவ்வை உன்கிட்ட சொல்ல எந்த தயக்கமும் இருந்துருக்காது, ஆனா நீ நான் லவ் பண்ற பொண்ணோட அண்ணா டா நான் எப்படி அதை உன்கிட்ட சொல்லுவேன். ஸ்ருதி உன்னோட தங்கச்சியா தான் எனக்கு முதல்ல தெரியும், அவகிட்ட பேசினது இல்லனாலும் அவ மேல எனக்கு பாசம் இருந்துச்சு டா. ஆனா அதுக்கு அப்பறம் ஒரு கட்டத்துல அது காதலா மாறினப்போ எனக்கே அதிர்ச்சியா தான் இருந்துச்சு. எல்லாத்தையும் தாண்டி உன் பிரண்ட்ஷிப் தான் என் கண்ணுமுன்ன வந்துச்சு, உன் நம்பிக்கையை இழந்துருவேனோனு ஒரு பயம், அதனாலேயே யார்கிட்டயும் சொல்லாம மனசுலயே வச்சிட்டேன்" என்றவன் சிறு இடைவெளி விட்டு

ஒரு பக்கம் நீ, ஒரு பக்கம் என்னோட சொல்லாத காதல் இதோட போராடிட்டு இருந்தேன் டா. எனக்கு ஸ்ருதி மேல லவ் வந்ததுக்கு அப்புறம் என்னால பழைய படி உன்கூட பேச, ஏன் உன் முகம் பாக்க கூட என்னால முடியல டா. அப்போலாம் ரொம்ப ட்ரை பண்ணினேன் டா ஸ்ருதிய மறக்க, ஆனா என் மூளை சொல்ற பேச்சை மனசு கேக்கல... அப்படி தவிச்ச அப்போ தான் உங்க வீட்ல ஸ்ருதியோட கல்யாண பேச்சி ஆரம்பிச்சாங்க இதையே சாக்கா வச்சி மனசை மாத்திக்கணும்னு முடிவு பண்ணேன் ஆனா அப்போ தான் டா நான் நரக வேதனைபட்டேன் என்னால சுத்தமா முடியல அவளை மறக்க முடியல, என்கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லவும் முடியல. ஸ்ருதி கல்யாணம் முடியுற வரைக்கும் ஊருலயே இருக்க கூடாதுனு முடிவு பண்ணி கம்பெனியோட வேற பிரான்சுக்கு மூணு மாசம் அங்க வேலைக்கு போனேன். அந்த சமயத்துல தான் என்னென்னவோ நடந்து கல்யாணம் நின்னு போச்சி, உங்க எல்லார்க்கும் கஷ்டம் தந்த விஷயம் எனக்கு சந்தோசம் தந்துச்சி, அப்போவே புரிஞ்சிபோச்சி என்னால ஸ்ருதியை மறக்க முடியாது, அதுவும் இல்லாம இந்த கல்யாணம் நின்னது கூட எனக்காக தான் என்கூட ஸ்ருதிய சேர்க்க தான்னு நான் நம்புறேன். அப்போ முடிவு பண்ணினது தான் இனிமே ஸ்ருதிய எந்த காரணத்துக்காகவும் விட்டுட கூடாதுனு. எனக்கு என் பிரண்ட்டும் வேணும் என் லவ்வும் வேணும் இந்த விஷயத்துல நான் கொஞ்சம் சுயநலவாதி தான் சித்தார்த். நானும் என் லவ்வை உன்கிட்ட மறைக்கணும் நினைக்கல டா, அம்மா உங்க வீட்டுக்கு அனுப்பி பொண்ணு கேக்க வச்சிட்டு உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் என்னை நம்பு டா ப்ளீஸ்" என்று கோபமாய் ஆரம்பித்து கெஞ்சளில் முடித்தான் விஜய்.

அப்போதும் சித்தார்த் மௌனம் கலையாமல் இருக்கவே, விஜய் அங்கிருந்து வெளியேறினான்.

இரவு வீடு வந்த சித்தார்த் யாரிடமும் பேசாமல், முகம் யோசனையில் இருக்க, உணவு முடித்து அறைக்கு நுழைந்தவன் முன் வந்து நின்றாள் ப்ரீத்தி.

"ஏன் மாமா என்னாச்சு முகமே ஏதோ போல இருக்கு, யாரோடயும் பேசவும் இல்ல ஏதாச்சும் பிரச்சனையா"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ரீத்தி" என்றவனுக்குமே தன் மனதில் உள்ளதை இவளிடம் கொட்டிவிட எண்ணினாலும், அவளின் கோபம் கவலை போன்ற அனைத்தும் குழந்தையையும் பாதிக்கும் என்ற மருத்துவரின் அறிவுரை மனதில் எழ, தலையை தொங்க போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவன் அருகில் வந்து அமர்ந்தாள் ப்ரீத்தி.

"ஏதோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கிங்க போல மாமா, அது ஆபீஸ் சம்மந்தப்பட்டதுனா என்கிட்ட சொல்லவேணாம், ஆனா அதுவே நம்ப வீடு சம்மந்தப்பட்ட விஷயமா இருந்தா கண்டிப்பா எனக்கு தெரியணும் மாமா சொல்லுங்க" என்றவளின் குரலில் அவ்வளவு பிடிவாதம்.

அவனுக்குமே தன் மனதில் உள்ளதை அவளிடம் பகிரும் எண்ணம் ஒருபுறம், இவளிடம் கூறுவாதல் தன் மனத்திலும் ஒரு தெளிவு பிறக்கும் என்ற எண்ணம் மறுபுறம் என நினைத்தவன், காலையிலிருந்து நடந்த விஜயின் சந்திப்பு தொடங்கி அவனது கடைசி உரையாடல் வரை ஒரே மூச்சாக சொல்லி முடிக்க. சிறிது நேரம் அறையில் பெருத்த மௌனம் மட்டுமே நிலவியது.

"உங்களுக்கு விஜய் அண்ணா மேல கோபம் வந்துச்சா மாமா" என்று கேட்டு அந்த மௌனத்தை உடைத்தாள் ப்ரீத்தி, அதற்கு சித்தார்த்திடம் ஆமாமென்ற தலையசைப்பு பதிலாக கிடைக்க, மேலும் அவளே தொடரந்தாள் "ஏன் மாமா கோபம் வந்துச்சி" என்றவளை திகைப்புடன் நோக்கினான் சித்தார்த்.

"ஏன்னு கேட்டா என்ன அர்த்தம் ப்ரீத்தி? அவன் என் தங்கச்சிய லவ் பன்றான் அதை இவ்ளோ நாளா என்கிட்ட இருந்தே மறைச்சிருக்கான் அப்போ கோபம் வராதா"

"உங்க கிட்ட மறைச்சதுக்கு தான் கோபம், அப்போ ஸ்ருதிய அவர் எப்படி லவ் பண்ணலாம்னு உங்களுக்கு கோபம் வரல அப்படி தானே மாமா" என்றவளுக்கு பதிலளிக்க முடியவில்லை சித்தார்த்துக்கு, ஏனெனில் அவனுக்கு அப்படி ஒரு கேள்வி ப்ரீத்தி கேட்கும் வரையில் அவன் மனதில் எழவே இல்லையே!

"எனக்கு தெரிஞ்சி நம்ப ஸ்ருதிக்கு விஜய் அண்ணா தான் பர்பெக்ட் சாய்ஸ் மாமா, நீங்க அவரை இப்போ பிரண்ட்டா நினைக்காம, ஸ்ருதிக்கு அண்ணனா மட்டும் நினைச்சி பாருங்க விஜய் அண்ணாவை வேணாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ண உங்ககிட்ட ஏதும் ரீசன் இருக்கா?"

என்றவளின் கேள்வியில் சித்தார்த் வேகமாக இல்லையென தலையசைக்க, அவன் தலையசைந்த வேகத்தில் ப்ரீத்திக்கு சிரிப்பே வந்துவிட்டது "அப்பறம் என்ன மாமா இருக்கு யோசிக்க, விஜய் அண்ணா பத்தி நம்ப வீட்ல எடுத்து சொல்லி பொறுமையா பேசி சம்மதம் வாங்குங்க, இப்போ தூங்குங்க. அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்" என்று ப்ரீத்தி கூற, தீவிரமான முகத்துடன் சித்தார்த் அவளில் பேச்சை உன்னிப்பாக கவனிக்க, அவள் பேச தொடங்கினாள் "தயவு செஞ்சி இந்த மூஞ்சிய மட்டும் இப்படி சீரியஸ்சா வைக்காதிங்க பாக்க சகிக்கலை" என்று சொல்லி அவள் சிரிக்க, அவனது முறைப்பை பெற்று கொண்டு உறங்கிபோனாள் ப்ரீத்தி.

மறுநாள் வீட்டில் இருந்த விஜய்க்கு சித்தார்த்திடம் இருந்து "என் ஆபீஸ்சுக்கு கிளம்பி வா உன்கிட்ட பேசனும் " என்ற மெசேஜ் வர, சித்தார்த்தை காண தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான் நம் நாயகன் வெற்றிவிஜயன்.
 

Savitha Nagaraj

Saha Writer
Team
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம் 8

சித்தார்த்திடமிருந்து மெசேஜ் வரவே அவன் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றான் விஜய். அழைத்துவிட்டோம் எப்படி ஆரம்பிப்பது என சித்தார்த்தும், அழைத்தது அவன் தானே அவனே முதலில் பேசட்டும் என விஜயும் மௌனம் காக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு எதிரெதிர் இருக்கையில் அமர்திருக்கயில்,
"சங்கீத ஸ்வரங்கள்...
ஏழே கணக்கா...
இன்னும் இருக்கா...
என்னவோ மயக்கம்..."
அந்த மௌனத்தை கிழித்து கொண்டு ஒலித்தது விஜயின் போன் ரிங்க்டோனில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட, சிரிப்புடனே கால் அட்டென்ட் செய்தான் விஜய்.

"சொல்லு டா ரம்பம், இல்ல டா நான் இன்னைக்கு கம்பெனி வரல, ரவி அண்ணா ஒய்ப்புக்கு ஏதோ ஒடம்பு முடியாடாலயம் அதான் அவரோட நைட் ஷீட்டை என்ன பாக்க சொல்லிட்டு என்னோட டே ஷிப்ட் அவர் பாக்குறதா சொல்லிட்டாரு டா. நீ பாத்து போ நான் அப்பறமா பேசுறேன்" என போன் கட் செய்தவன், "கோபம் போய்டுச்சா டா சித்தார்த்?" என்று விஜய் கேட்டவுடன் சிரித்துக்கொண்டிருந்த சித்தார்த்தின் முகம் சட்டென கடுமை பூசிக்கொண்டது.

"இதுக்கு நான் ஸ்ருதியோட அண்ணனா உனக்கு பதில் சொல்லனுமா? இல்ல உனக்கு பிரண்ட்டா பதில் சொல்லனுமா? " என்ற சித்தார்த்தின் கேள்வியில் விஜயின் புன்னகை மறைந்தது.

தன் நண்பன் இல்லையில்லை, தான் காதலிக்கும் பெண்ணின் அண்ணனாய் அவன் நிலையில் இருந்து சித்தார்த் கேள்வி எழுப்பவே அப்போது தன் அவனுக்கு ஒன்று உரைத்தது. நேற்று வரையில் எனக்கு என் லவ்வும் வேணும் பிரண்ட்டும் வேணும் என்று வசனம் பேசியவன் மறந்திருந்தான், அவனும் ஒரு பெண்ணின் அண்ணன் என்பதை. அண்ணனாக சித்தார்த்தின் நிலையில் இருந்து பார்க்கையில், இந்த சூழலில் தான் இருந்திருந்தால், அவன் அளவுக்கு பொறுமை என்பது தனக்கு இருந்திருக்குமா? என்று விஜய் யோசிக்கையில் அவன் மனது அவனுக்கு இல்லை என்ற பதிலை அளிக்க, கண்களை மூடி திறந்தவன் பேச தொடங்கினான் "கண்டிப்பா, நீ ஸ்ருதிக்கு அண்ணனா தான் டா பதில் சொல்லணும். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கு ஆனா உன் நிலைமை எனக்கு வந்துருந்தா, என் பிரண்ட் ஒருத்தன் என்னோட தங்கச்சியை லவ் பன்றானு தெரிஞ்சா என்னால உன் அளவுக்கு பொறுமை இருந்துருக்க முடியாது சித்தார்த்" என்றவன் சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான் "உன் நிலைமை இப்போ எனக்கு புரியுது டா. ஒரு பிரண்ட்டா நான் உனக்கு பண்ணினது துரோகம் தான். அதுனால என்னைக்கும் நீ ஸ்ருதிக்கு அண்ணனா மட்டும் இருந்து உன் முடிவு சொல்லு. உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நான் அத எதிர்க்க மாட்டேன் சித்தார்த்" என்றான் விஜய்.

அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்த சித்தார்த், அவனை கூர்மையாக நோக்கி "எதிர்க்க மாட்டியா? எனக்கு புரியலையே நீ என்ன சொல்ல வர டைரக்ட்டா சொல்லு"

"நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அதுக்கு மறுப்பு சொல்லமாட்டேன் சித்தார்த். என்ன நீ, உன் தங்கச்சிக்கு வேணாம்னு முடிவெடுத்தாலும் நான் அதை மதிப்பேன், உன்ன எந்த ஒரு கட்டாயப்படுத்தியும் என் பக்கம் நிக்க சொல்லமாட்டேன் ஆனா நான் முன்னமே சொன்னது போல என் அம்மா வந்து உங்க வீட்ல ஸ்ருதியை பொண்ணு கேப்பாங்க. என்னை ஏத்துக்குலாமா வேணாமானு ஸ்ருதியே முடிவு பண்ணட்டும்"

"ஓ.... அப்போ என் தங்கச்சி முடிவு தான் நீ கன்சிடெர் பண்ணுவ, ஹ்ம்ம்... ஆனாலும் நீ இவ்ளோ பச்சப்புள்ளயா இருக்க கூடாது. நான் என் தங்கச்சி கிட்ட உன்ன கல்யாணம் பண்ண கூடாதுனு சொல்லிட்டா அவ அதை தான் கன்சிடெர் பண்ணுவா இதை மறந்துட்டியே" என்றான் சித்தார்த், விஜய் அறியாவண்ணம் வாய்க்குள் சிரித்தபடியே.

"நீ சொல்றதும் சரி தான் சித்தார்த். உன் தங்கச்சிக்கு நீ அட்வைஸ் பண்ணலாம் அதை கேட்டு அவளும் என்ன வேணாம்னு சொல்லலாம். ஆனா நான் விரும்பின பெண்ணு கிடைக்க இத்தனை நாள் எந்த ஒரு முயற்சியும் பண்ணல. இப்போ தான் அந்த முயற்சியை ஆரம்பிச்சிருக்கேன் அது வெற்றியாகுறதும் தோல்வியாகுறதும் அவ முடிவுல தான் இருக்கு. அவ வாழ்க்கையை தேர்ந்து எடுக்குறதுல அவளுக்கு இல்லாத உரிமையா? அதெல்லாம் யோசிச்சு நான் முயற்சியே பண்ணாம இருந்தா எப்படி, எனக்கு அவ என்வாழ்க்கைல வேணும்" என்றவனை மெச்சுதலாக பார்வை பார்த்தவன் "அப்போ என் முடிவையும் கேட்டுக்கோ, என் தங்கச்சி ஸ்ருதியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு முழு சம்மதம்" என்றான் சித்தார்த் உதட்டில் விரிந்த சிரிப்புடன்.

விஜய்க்கு சற்று நேரம் எதுவும் விளங்கவில்லை, அவன் ஒன்னு நினைத்துவைத்திருக்க ஆனால் அதை செயல் படுத்தும் முன்பே சித்தார்த்க்கு அணைத்தும் தெரிந்து அவனுக்கும் இதில் முழு சம்மதம் என்று அறிந்த பின் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.

"எனக்கு நீ இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லலைனு தான் கோபமே தவிர வேற எதுக்கும் கோபம் வரல டா விஜய். இதையே ப்ரீத்தி சொன்ன அப்பறம் தான் நானே புரிஞ்சிக்கிட்டேன் டா"

"என்ன டா சொல்ற? இது ப்ரீத்திக்கு தெரியுமா"

"ம்ம்ம்...தெரியும் டா நான் தான் சொன்னேன், அம்மணி தான் உனக்கு புள் சப்போர்ட், நீ தான் எங்க ஸ்ருதிக்கு பர்பெக்ட் பேர்-ஆம். அவ சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கே தோணுச்சு, உன்ன பத்தி நான் சொல்லி தான் அவ தெரிஞ்சிகிட்டா அவளுக்கு தோணினது ஏன் இத்தன நாள் எனக்கு தோணாம போச்சுன்னு நெனச்சேன் டா" என்றவனை எழுந்து அணைத்துக்கொண்டான் விஜய்.

"தேங்க்ஸ் டா மச்சான்" என்றவனை "நீ சொல்லலானாலும் இனிமே நான் உனக்கு மச்சான் தான் டா" என்ற சித்தார்த், விஜயிடம் இருந்துவிலகி "சமயம் பாத்து கௌதம் கிட்ட பேசிட்டு அதுக்கு அப்பறம் வீட்லயும் பேசுறேன் டா" என்றவரிடம் புன்னகையுடன் விடைபெற்று சென்றான் விஜய். நடந்து முடிந்த நினைவுகளில் இருந்தவனை ப்ரீத்தியின் போன் கால் நடப்புக்கு கொண்டு வந்தது.

"மாமா, எங்க இருக்கிங்க?"

"நம்ப ஆபீஸ்ல தான் ப்ரீத்தி"

"இன்னும் கிளம்பலையா மாமா? எப்போ தான் வீட்டுக்கு வருவிங்க சாப்பிட"

"கொஞ்சம் வேலை இருக்கு ப்ரீத்தி, இப்போ வீட்டுக்கு வர முடியாது நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு"

"காலைல கிளம்புற அப்போ கூட வேலை இருக்கு மதியம் வரமாட்டேன்னு எதுமே சொல்லலையே, இப்போ என்ன திடீர் வேலை? "

"வேலை என்ன டி ரெண்டு நாள் முன்னாடியே தந்தி அடிச்சிட்டா வரும்? காலைல இல்லை இப்போ இருக்கு அதுக்கு என்ன பண்ண முடியும் சும்மா நை..நைனு.. கேள்வி கேட்டுகிட்டு" என்று சித்தார்த் சற்று குரல் உயர்த்தவே, ப்ரீத்தியின் பக்கம் குரலே இல்லை, இந்த அமைதிக்கு பின் வரும் விளைவுகளை உணர்ந்த அந்த அக்மார்க் கணவன், உடனே சுதாரித்து குரலை சகஜமாக்கி பேச தொடங்கினான்.

"கொஞ்சம் வேலை மா, கேட்டரிங் ஆளுங்களை வர சொல்லிருக்கேன் . சடேன்னா ஈவினிங் ஒரு பங்ஷனுக்கு ஆர்டர் வந்துருச்சி. அதான் வீட்டுக்கு வர முடியாது நான் வெளிய சாப்பிடுறேன், நீ சாப்டாச்சா" என்றவனுக்கு ப்ரீத்தியின் பதில் "ம்ம்ம்ம்" மட்டுமே.

"அரேஞ்சுமென்ட் எல்லாத்தையும் முடிச்சிட்டு ஈவ்னிங் வீட்டுக்கு சீக்கிரமா வந்துறேன் நாம ரெண்டு பேரும் பக்கத்துல இருக்க பார்க்ல சின்னதா ஒரு வாக் போய்ட்டு வரலாம்" என்று ஐஸ் வைத்து அவளின் அமைதியை உடைக்க நினைத்தான் சித்தார்த்.

இதற்கும் ப்ரீத்தியின் பதில் "ம்ம்ம்"மட்டுமே.

"சாப்டதுக்கு அப்பறம் போடுற டேப்லெட் எல்லாம் போட்டுட்டியா ப்ரீத்தி" என்று அக்கறை என்னும் ஆயுதத்தை கொண்டு அவளை வீழ்த்த நினைத்தவனுக்கு, அவனின் மனையாள் மௌனம் எனும் கேடயம் கொண்டு அவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மீண்டும் அவனுக்கு ஓரு "ம்ம்ம்ம்" மட்டுமே.

அதில் கடுப்பானவன் "போ டி ம்ம்ம்-க்கு பொறந்தவளே" என்று போன்னை வைக்க, ப்ரீத்தியின் இதழிலோ புன்முறுவல்.

*************
ஸ்ருதி, மதிய உணவை முடித்துவிட்டு, தன் அறையில் படுத்து கொண்டிருந்தாள். எப்போதும் போல் இல்லாமல் இந்த சன்டே அவளுக்கு மிகவும் வெறுப்பை தந்தது, காரணம் வாரத்தில் ஆறு நாட்களும் அண்ணனுடைய ஆபீஸ் சென்று வருபவளுக்கு ஓய்வு என்பது சன்டே ஒருநாள் மட்டுமே, அன்று சாப்பிட்டு உறங்கி ஓய்வெடுப்பதிலே அந்தநாள் ஓடிவிடும், ஆனால் ஐந்து நாட்களாக வீட்டிலே இருப்பவளுக்கு இந்த சன்டேவை சமாளிக்க முடியாமல் போக, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள், "ச்சை...இன்னைக்கு என்ன ரொம்ப வெறுப்பா இருக்கு, நாளைல இருந்து ஆபீஸ்க்கு கிளம்பிரானும் என்று நினைத்தவள் மூளையில் விஜயின் பேச்சு மின்னல்வெட்டியது "ஐயோ...ஆமா ஆபீஸ் போனா அவன் வந்து நாம கேக்குற கேள்வி வெச்சி நம்மையே மடக்குவான்... சித்தார்த் அண்ணா கிட்ட சொல்லிடலாம்னு பாத்தா, நீ சொல்ற வரைக்கும் எனக்கு உன்ன லவ் பண்ற ஐடியா வரலனு சொல்லிட்டு சுத்துறான், இதையே அவன் அண்ணா கிட்டயும் சொன்னா என் இமேஜ் தான் டேமேஜ் ஆகும்... என்ன செய்யலாம் என்ன செய்யலாம் " என்று யோசித்தவள் "நாம கோபப்பட்டு அவசரத்துல பேசுறதால தானே அவன் அதை வச்சே பாயிண்ட் பிடிச்சி நம்மள ஆப் பண்றான், இனிமை நாம பொறுமையா தான் பேசனும், அவன்கிட்ட கோபப்பட்டு வார்த்தையை விட்டுடக்கூடாது, முடிஞ்சளவு அவன் கூடவே இனி பேசவும் கூடாது" என்று முடிவெடுத்த பின் மனது சற்று அமைதியடைய, எழுந்து வெளியே வர

"ஸ்ருதி எழுந்துட்டியா? நானே உன்ன எழுப்பனு நினைச்சேன்" என்றாள் சாரு

"என்ன விஷயம் அண்ணி சொல்லுங்க"

"கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வரியா, உங்க அண்ணா வந்து கூட்டிட்டு போறேன் சொன்னாரு, ஆனா இப்போ ஏதோ வேலை இருக்காம் வர நைட் ஆகிருமாம்"

ஸ்ருதிக்கு ஏற்கனவே வீட்டில் இருப்பது போர் அடிக்கவே, சாரு கேட்டதும் சம்மதித்தாள் "போய்ட்டு வரேன் அண்ணி, என்ன எங்கயாச்சும் வெளிய போறிங்களா?"

"நாளைக்கு என் பிரண்ட் மேரேஜ், நான் ஏற்கனவே போகணும் சொல்லிருந்தேன்ல அதுக்காக தான் ஸ்ருதி, வளையல் அப்பறம் இன்னும் கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்கணும், நானும் கூட வரலாம்னு பாத்தா ப்லவுஸ் ஆல்டர் பண்ற வேலை இருக்கு, பிரணவ் தூங்கிட்டு இருக்கான் இப்போ தான் அதை பண்ணமுடியும் அவன் எழுந்தா என்னை ஒன்னும் செய்ய விடமாட்டான், அதுனால நீயே போய் வாங்கிட்டு வந்துறேன்" என்று அதன் விபரங்களை சாரு சொல்ல, அதனை கேட்டுக்கொண்டு தன் அன்னையிடமும் விஷயத்தை சொல்லி அனுமதி பெற்று ஸ்கூட்டியில் சென்று கொண்டுருக்கும் ஸ்ருதி அறியவில்லை, சற்று முன் அவள் பொறுமையை காக்க வேண்டும் என்றெடுத்த முடிவை சோதிப்பதற்கென்றே விதி ஒருவனை வீதியில் விட்டிருக்கின்றது என்பதை.

அந்த பெரிய கடையின் முன் தன் ஸ்கூட்டி நிறுத்திய ஸ்ருதி, உள்ளே சென்று சாரு சொன்ன பொருள்களை வாங்குவதற்காக பார்வையிட்டு கொண்டிருக்க, ஏதோ உள்ளுணர்வு தோன்ற தன் பின்னால் திரும்பி பார்த்தாள். அங்கு வளையல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான் விஜய்.

அவனை பார்த்ததும் தன் பின்னால் பாலோ செய்து வந்துருப்பானோ என்று எண்ணம் வர, அவளுக்கு கோபம் துளிர்விட தொடங்கியது. இருப்பினும் சற்று முன் தனக்கு தானே வழங்கிய அறிவுரைகள் மனதில் எழ, ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்து வேறு பக்கம் சென்று பார்வையிட தொடங்கியவளின் கவனத்தை கலைத்தது "எக்ஸ்கியூஸ் மீ அந்த ரெட் நைல் போலிஷை கொஞ்சம் எடுத்து தரிங்களா?" என்ற அவளுக்கு பின்னாலிருந்து ஒலித்த விஜயின் குரல்.

திரும்பி அவனை முறைத்தவள், "ஏன் உங்களுக்கு கை இல்ல நீங்களே எடுத்துக்கோங்க" என்று அவனுக்கு சூடாக பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று, சாரு அவளிடம் வாங்கி வரசொன்ன அனைத்தையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்காக லைனில் நின்றவளுக்கு பின் வந்து நின்றான் விஜய்.

ஸ்ருதியின் பொறுமை அவளிடம் இருந்து அப்போவோ இப்போவோ என்று விடைபெற காத்துகொண்டு இருக்க, பொதுஇடம், மக்கள் கூட்டம் போன்றவையால் போக இருந்த பொறுமையை இழுத்து பிடித்து நிறுத்தியிருந்தாள், அதுவும் அவன் வண்டி நிறுத்தும் இடத்திலும் பின் தொடர்ந்து வரவே, அவளுக்கு டாடா காட்டி சென்றது அவளின் பொறுமை.

"எதுக்கு இப்படி என் பின்னாலேயே வர, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" என்று சீறினாள்.

"ஹலோ ஹலோ யார கேக்குறிங்க?"

"வேற யார உன்ன தான், நீ தானே என் பின்னால வர உன்னை தான் கேக்குறேன்"

"இங்க பாருங்க ஸ்ருதி, கூல்... ரோட்ல நின்னு எதுக்கு இப்படி கத்துறிங்க? "

"யாரு நான் கத்துறேனா, ரோட்னு தான் நானும் மெதுவா பேசிட்டு இருக்கேன்"

"எது..இது தான் மெதுவா பேசுறதா? நல்லது..."

"ம்ச்ச்...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, எதுக்கு என் பின்னால வந்துட்டுயிருக்க"

"ஏதே...நான் உன் பின்னால வரேனா? பார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன் நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போறிங்க"

"ரெண்டும் ஒன்னு தான்" என்றாள் பற்களை கடித்தவாறே

"சரி ரெண்டும் ஒன்னு தானே, அப்போ எனக்கு முன்னால எப்படி நீங்க போகலாம்னு நான் உங்ககிட்ட சண்டைக்கு வரலாமா" என்று அவன் மறுகேள்வி கேட்கையில் ஸ்ருதிக்கு, அவனை பற்றி அறிந்தும் அவனுடன் சண்டைக்கு சென்றது தவறோ என்று எண்ணம் எழ, எங்கேயும் சென்று முட்டிக்கொள்வோமா என தோன்றியது அவளுக்கு.

"பதில் சொல்லாம எதுக்கு இப்போ தலைல கை வைக்குறிங்க"

"ஐயா சாமி... நீங்க என் பின்னால வந்த மாதிரி தோணுச்சு அதுதான் கேட்டுட்டேன், இப்போ தான் நீங்க இல்லனு சொல்லிட்டீங்கல, பிரச்சனை மூடிஞ்சிது விடுங்க "

"அதெப்படி விட முடியும், சும்மா போறவனை என் பின்னாலயா வர...என் பின்னாலயா வரனு... கேட்டா எப்படி? நீங்க சொல்றத பாத்த வீட்டுக்கு போய்ட்டு இருந்த நான், உங்கள பாத்ததும் என் பைக் யூ-டர்ன் அடிச்சி உங்க பின்னாடியே பாலோ பண்ணி இந்த கடைக்கு வந்தா மாதிரி பேசுறிங்களே"என்று சற்று முன் நடந்ததை அப்படியே கூறி அதை அவள் உணரும் முன்னே அவன் மீண்டும் பேச்சை தொடர்ந்தான் "நல்லா தெரிஞ்சிக்கோங்க நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போனிங்க, நீங்க எனக்கு முன்னால போனா , உங்களுக்கு நான் பின்னால வர மாதிரி தான் தெரியும் அதுக்காக நான் உங்க பின்னால வருவதா அர்த்தம் இல்ல, நீங்க என் முன்னால போறதா தான் அர்த்தம்"

அவனின் விளக்கம் அவளுக்கு தலை சுற்றலை தர, சோர்ந்தவள் "அய்யோ...நான் தெரியாம கேட்டுட்டேன், இனிமே நான் உங்க முன்னால போகவே மாட்டேன் நீங்களே முன்னால போங்க நான் பின்னாலயே வரேன் " என்று ஸ்ருதி அவனுக்கு வழியை விட

"இப்போயாச்சும் நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போனிங்கனு உங்களுக்கு புரிஞ்சிதே அதுவே போதும் " என்று இரண்டடி நடந்து சென்றவன் அவள் பக்கம் திரும்ப, என்ன என்பதை போல் ஸ்ருதி புருவம் சுருக்க
"அப்போ நீ ஏன் என் பின்னால வரேன்னு என்னை கேட்டுட்டு
இப்போ நீயே என் பின்னால வரியே, அப்போ இது லவ் தானே ஸ்ருதி" என்ற விஜய், வழக்கம் போல் பயணத்தின் போது அணியும் அந்த கருப்பு கூலரை போட்டுகொண்டு, பைகில் ஏறி அங்கிருந்து செல்ல அவள் பார்வையில் இருந்து மறைந்தான்.
 
Top Bottom