அதிகாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த வண்டி தஞ்சாவூரின் புறநகர் பகுதியின் அந்த தெருவுக்குள் நுழைந்தது. வண்டி அந்த வீட்டின் முன் நின்றது, அதிலிருந்து சுந்தரம் முதலில் இறங்கி, “இந்த வீடுதான்” என்றார். அதைக் கேட்டு இறங்கிய அவர் மனைவி, சுற்றும் முற்றும் பார்த்தார். தெரு நன்றாகத்தான் இருக்கிறது...