அற்புதம் -27
அதை தமிழ் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, அவ்வேளையில் தீபனின் அணைப்பிலிருந்த அன்பு மயங்கி கீழே சரிந்தாள். அடுத்த கணம் பதற்றத்தோடு அவளை கரங்களில் ஏந்தியவன்,
“என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?” என்ற கேள்வியை தமிழிடம் எழுப்பியவன் வேக வேகமாக அவளைத் தூக்கிச்சென்று சோபாவில் படுக்க...
அற்புதம் -26
தந்தையின் உயிர் தன் கண் முன்னே பிரிந்தது போல் தாயின் உயிரும் பிரிந்ததை யாழினியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து உருண்டு திரண்டு கன்னத்தில் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் நிற்காமல் கழுத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. அவளை அணைத்திருந்த சொர்ணலதா, “அழாதம்மா..” என்று...
உறவின் தேடல் -03
விஷ்வாவோ தன் அறையின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு அலுவலகத்தில் இருந்து சோகமாகச் செல்லும் தேவேஷ்வரையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவேஷ்வரின் ஏக்க பார்வையும், பல குழப்பங்களைத் தத்தெடுத்த முகமும் அவனுக்கு ஏதோ ஒன்றை புரிய வைக்க முயல்வது போல் இருந்தது. ஆனால் அதைப் புரிந்து...
உறவின் தேடல் -02
தனது அலுவலகம் இருக்கும் சாலையில் காரைத் திருப்பினான் தேவேஷ்வர். மனம் ஏனோ தந்தை மற்றும் தாய் சொன்ன நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த ஊருக்கு செல்வது? என்ற நினைவு ஒரு புறம் தாக்கினாலும், மறுபுறம் தேவையற்ற நினைவுகளும் வந்தன. அவை அவனை அலைகடல் போல்...
அற்புதம் -25.2
முதலில் இதமாக ஆரம்பித்து, முடிவில் சற்று வன்மையாக முடித்தவன், தன் செயலில் சிலையென அதிர்ந்து நின்றவளை ரசனையாகப் பார்த்தான். பின்பு அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு, “இதுக்கு மேல எவனா இருந்தாலும் என்னை மீறிதான் உன்னை நெருங்க முடியும். நம்ம பேமிலியை இந்த நிலைமைக்குக் கொண்டு...
அற்புதம் -25.1
உதய்யோ அருளரசிக்குப் பின்னால் நின்ற தன் தந்தையைக் கண்டு அதிர்ந்தான் என்றால், அருளரசியோ உதய்யைக் கண்டு மயக்கம் போட்டு விழாத குறையாக நின்றிருந்தார். தட்டுத்தடுமாறி “தம்பி நீங்க எங்க இங்க?” என்று கேட்டார் அருளரசி.
“அதை நான் கேக்கலாம்னு நெனச்சேன்ம்மா இப்ப உங்களுக்கு உடம்பு...
உயிரான உறவைத் தேடி..!
உறவின் தேடல் -01
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும்...
அற்புதம் -24.1
தன் விழிகள் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் உச்சகட்ட அதிர்வில் அதிர்ந்து நின்றிருந்த உதய் அடுத்த நிமிடம் தன் உடமைகளைச் சரி பார்த்து விட்டு அந்தத் திசையில் ஓட ஆரம்பித்தான். அவனது விழிகள் கண்ட காட்சியில் தென்பட்ட வாகனம் அவனுக்குச் சற்று அதிர்வைத் தான் கொடுத்திருந்தது. ஆடம்பரமான...
அற்புதம் -23
அவனது செயல் புரிந்தவர்களாய் மற்றவர்களும் அவனைப் பின்பற்றி ஓட விமான நிலையமே ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகி பின்பு தன்னியல்பு பெற்றது.
உதய் காருக்குள் ஏறி அமர்ந்து காரை இயக்குவதற்கு முன்பாகவே அந்தப் பத்து பேரோடு நிகிலும் சேர்ந்து உள்ளே ஏறிக் கொண்டான்.. அனைவரும் தங்களது உடமைகளோடு...
அற்புதம் -22.2
அப்போது சரியாகத் தமிழின் அன்னை அவளை அழைத்திருந்ததால் சட்டென்று அவர் புறம் அவள் திரும்பியிருக்க, அவளது பின் பகுதி மட்டுமே தீபனுக்குத் தெரிந்தது.
அவளைப் பார்த்த தீபனுக்கு
நேத்து பார்த்த பெண்ணின் உருவம் போலவே இருக்க அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். அதேநேரம் அவனைத் தன்னை நோக்கி...
அற்புதம் -22.1
இலண்டன்..
ஏனோ சிறிது நேரம் கூட
ஓய்வெடுக்க முடியாமல் அந்தச் சிறு பெண்ணின் காயங்களும், அப்பெண்ணைத் துன்புறுத்திய பெண்மணியையும் பற்றியே யோசித்தவாறு படுக்கையில் படுத்திருந்தான் தீபன். நேரம் கடந்து இருந்ததை அவன் உணரவில்லை. ஆனால் அதை உணர்ந்திருந்த விமல் 4.30 மணியைப் போல்...
அற்புதம் - 21.2
தன் தந்தையைக் கண்டதும் முகப் பாவனைகளை மாற்றிக் கொண்ட அகவழகி சட்டென்று தன் இடைக்கச்சையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தாள். பின்னர் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, “தங்களைச் சந்திக்க வேண்டுமென்று நான் தான் இவரிடம் கூறியிருந்தேன் தந்தையே! அதனால் தான் என்னை அழைத்து வந்தார்...
அற்புதம் -21.1
இப்படியெல்லாம் ஏதேதோ செய்தால் புதிய நுழைவாயில் ஒன்று உருவாகும், அதற்குள் இப்படி செல்ல முடியும் என்பதை எல்லாம் கனவில் கூட அகவழகி நினைத்துப் பார்த்தது கிடையாது. அப்படி இருக்கையில் தன் கண்முன்னே நிகழும் நிகழ்வுகள் உண்மையா? அல்லது தான் தான் ஏதேனும் கனவு காண்கிறோமா? என்று பிரித்தறிய...
அற்புதம் -20
இங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறிய யாழினி யாரும் தன்னைக் கண்டு விட்டு கேள்வி கேட்கக் கூடாது என்பதால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தாங்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு வந்தாள். அங்கு யாரும் இல்லை என்றதும் வேகமாகக் கழிவறைக்குள் நுழைந்தவள் முகத்தைத் தண்ணீர் விட்டு கழுவினாள். அதிலும் உதய்...
அற்புதம் -19
அருகிலிருந்த வாட்டுக்குள் நுழைந்த யாழினியும் அங்கிருந்த நோயாளிகளைப் பரிசோதித்து சாட் ஷீட்டில் அவர்களது உடல்நிலைக் குறித்த தகவல்கள் அனைத்தையும் எழுதி முடித்தவள், அடுத்து நேராக சென்றது உதயின் அறையை நோக்கித் தான். அதிலும் செல்லும் போது தன்னிடம் பேச வந்த சௌமியை முறைத்துக் கொண்டே...
அற்புதம் -18.2
“விடயம் என்னன்னு முதல்ல சொல்லுடி அதுக்கப்புறம் இந்தப் பில்டப்பெல்லாம் கொடுப்ப” என்று கடுகடுவென்று சொன்னாள் யாழினி.
“யாரோ ஒருத்தரைப் பத்தி ரெண்டு மூனு நர்ஸ் கிட்ட உதய் டாக்டர் கேட்டாராம் தெரியுமா?”
“யாருடி உதய் டாக்டர்? இந்த ஒன் வீக்ல ஏதாவது புது டாக்டர் இங்க வந்து ஜாயின்...
அற்புதம் -18.1
அவர்களது போட்டி துவங்கிய இடத்தில் நின்று அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த துங்கீசனோ அகவழகி இருக்கும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன் அதிர்ந்தான். அதற்கு மேலும் அங்கேயே நின்று நடப்பவற்றைக் காண்பதற்கு அவனது உள்ளத்திற்குத் தெம்பில்லை போல, அடுத்த நிமிடம் நீரில் பாய்ந்து நீந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.