#ஜோதிரிவ்யூ
அன்பே அன்பே கொல்லாதே
இனிதா மோகன் குமார்
சகாப்தம் தள போட்டிக்கதையான "அன்பே அன்பே கொல்லாதே" க்கான விமர்சனம்
இது ஆன்டி ஹீரோ கதையா என்று சந்தேகமாக போய் விட்டது.
அத்தனை தூரம் நாயகனின் குணம் நம்மை கவர்கிறது.
ஆண்களுக்கு அழகே அவர்களது கம்பீரம், கோபம், எந்நிலையிலும் தன்னிலை இறங்காத குணம், திமிர் தான். ஆனால் அப்படிப் பட்டவனையும் ஆட்டிப் படைப்பது அவனது துணையன்றி வேறு யாராக இருக்க கூடும்.
நாயகன் மீது மோதி விட்டு மன்னிப்பு கேட்காமல், அவனிடமே எதிர்த்து பேசும் நாயகி. அவள் மீது கொண்ட கோபத்தில் குரல் வளையை இருக்கும் நாயகன் என்று அவர்களது முதல் சந்திப்பு நிகழ்கிறது.
அப்பா மீதான பாசம், குடும்பத்தினரின் மீதான அக்கறை, அன்பைக் கண்டு கோபம், பொறாமை கொள்ளும் நாயகன். அவளது அப்பா மீதான கோபத்தில் பழி வாங்க துடிப்பதும், அவள் தோழியிடம் அவனைப் பற்றி தவறாக பேசுவதை கேட்டுவிட்டு பதிலடி கொடுக்க நினைப்பதும் வாசிக்க அருமையாக இருந்தன.
விபத்தில் விழுந்தவளை தூக்கி கொண்டு போகும் போதும், அவளை வீட்டுக்கு பார்க்கப் போகிற போதும் நாயகனின் மிடுக்கும், வசன உச்சரிப்பும் அருமை.
நாயகியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் நாயகன், அதற்கான முயற்சிகளில் இறங்க, அவரோ மறுத்து வேறு மாப்பிள்ளை பார்த்து மண மேடை வரைக்கும் சென்று விடுகிறது. அவளது கழுத்தில் தாலி கட்டுவது யார்? நாயகியின் அப்பாவிற்கும் அவனுக்கும் என்ன முன் விரோதம் ? எதற்கந்த கோபம்? தந்தையின் பேச்சைக் கேட்டு நடக்கும் மகள் நாயகனை மணம் புரிகிறாளா? அவனை ஏற்றுக் கொள்கிறாளா? அவனது தாயாரின் மீது அவனுக்கு என்ன வெறுப்பு ? எதற்கந்த சீற்றமான வார்த்தைகள் உச்சரிப்பு… என்று தெரிந்து கொள்ள, அத்தியாயங்களை வாசியுங்கள்.
நாயகியின் தம்பி பாசம் அருமை. அக்காவிடம் பேசுவதும் அவனிடம் பேசாமல் விலகுவதும் அழகு. அதிலும் மாப்பிள்ளை செல்வ சீரனைக் கண்டு, நாயகன் கோபப்படும் இடங்கள் எல்லாமே ரசனை.
கடைசி அத்தியாயம் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அத்தனை வேகம். இன்னும் கொடுத்திருந்தாலும் வாசிக்க தூண்டிய கதையோட்டம். அருமையான நகர்வுகள்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்
தொடர்கதைக்கான லிங்
வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐. போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு...
www.sahaptham.com