Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed இரண்டாவது பொய்

Hrishikesh

New member
Messages
8
Reaction score
2
Points
3
ஐம்பத்தைந்து கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தினாலும், எனது கவனமும் மனமும் டாக்டர் ரேகா கூறிய வார்த்தைகளிலேயே நின்றன.

“ஐ’யம் சாரி மிஸ்டர் விக்ரம். உங்க மனைவி மேனகாவிற்கு அம்மாவாகும் பாக்கியம் இல்லை”

இதைக் கேட்டதிலிருந்து வாழ்வில் பெரிதாக எதையோ ஒன்றை இழந்தது போலவே உணர்கிறேன். ஒருவேளை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தது தான் இந்த மன உளைச்சலுக்கு காரணமோ? குழந்தைகள் என்றாலே உயிர் எனக்கு. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தையில்லாத காரணத்தால் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றோம். மேனகாவிடம் முதல் முறையாகப் பொய்க் காரணத்தைக் கூறி அழைத்து செல்ல வேண்டியதாயிருந்தது.

“இப்ப நமக்கு எதுக்குங்க மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணனும்? அதெல்லாம் நாப்பது வயசுக்காரங்களுக்கு பண்றதாச்சே...” என வினாத் தொடுத்தாள் மேனகா.

“இப்பல்லாம் இருபத்தைந்து டூ முப்பது வயசுக்காரங்களுக்குத் தான் ஏகப்பட்ட நோய் வருதாம். எதுக்கும் நாம செக் பண்ணி பாத்துக்கறது நல்லது” என்று சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன். டாக்டர் ரேகாவும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் மிகவும் வசதியாகப் போயிற்று.

என் யோசனை எல்லாம், ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’. ‘என் நிலைமையில் வேறொரு ஆண் இருந்தால் நிச்சயமாக விவாகரத்து பற்றி யோசித்திருப்பானோ..? நானும் அதையே தான் செய்யப் போகிறேனா?’

விவாகரத்து என்றதும் என் அம்மா நிர்மலா தான் ஞாபகத்திற்கு வந்தார். கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தையில்லாததால் என் தந்தை விவாகரத்து கொடுத்து விட்டார். ஆனால் அப்போது அவருக்கும் என் அம்மாவுக்கும் தெரியாது, அம்மா முப்பது நாள் கர்ப்பிணி என்று. மூன்று வருடங்கள் காத்திருந்த மனிதர் இன்னும் சற்று நாட்கள் காத்திருந்தால், அம்மா என்னை வளர்க்கச் சிரமப்பட்டு இருக்க மாட்டாள். அவளது எம்.எஸ்.சி பிசிக்ஸ் பட்டம் தான் எங்களுக்கு அப்போது கை கொடுத்தது.

என் அம்மா கணவனின்றி மன தைரியத்துடன் என்னை வளர்த்தாலும் நான் கடைசிவரை தந்தை இல்லாமலேயே வளர்ந்து விட்டேன் என்னும் கசப்பான உண்மை அடிக்கடி வந்து என்னை வாட்டுகிறது.

மனைவியாகவும், தாயாகவும், பேராசிரியராகவும் தனது கடமைகளை செவ்வனே செய்த அம்மாவிற்கு விதியும் இந்த சமுதாயமும் கொடுத்த பரிசு – ஐம்பது வயதில் மரணம்தான். அப்பா மட்டும் அப்போது சற்று அம்மாவுக்கு உறுதுணையாக நின்றிருந்தால், இன்று அம்மா என்னுடன் இருந்திருப்பார்.

‘அப்பா அம்மாவைத் தள்ளிய நிலையில் நானும் என் மேனகாவைத் தனியாகத் தவிக்க விடப் போகிறேனா?’

இந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில் ஒருமுறை கூட மேனகா என்னிடம், முகம் சுளித்துப் பேசியதோ, நொந்து கொண்டதோ இல்லை. அன்பான அக்கறையான மனைவியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறாள். இந்த சமுதாயத்தில் உள்ள குழந்தைகளைத் தனது ஆசிரியர் தொழிலால் நல்வழியில் உயர்த்திக் கொண்டு வருகிறாள். பதிலுக்குச் சமுதாயம் அவளுக்குக் கொடுப்பது வெறும் ‘கணவனால் கைவிடப்பட்டவள்’ என்ற பட்டத்தைத் தானா?

இதுபோன்று எத்தனையோ யோசனைகளுக்கிடையே வீட்டை அடைந்தேன். கார் நிறுத்தும் சத்தம் கேட்டதும் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து வருகிறாள் மேனகா. மருத்துவரின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பாள் என்பதில் சந்தேகமேதுமில்லை. அந்த பதிலை மேனகா எவ்வாறு ஏற்றுக் கொள்வாள் என்று தெரியவில்லை.

ஹாலை அடைந்ததும் அவளது கண்கள் என்னிடம் பதிலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

“டாக்டர் என்ன சொன்னாங்க?” கேட்டே விட்டாள்.

“நம்ம ரெண்டு பேரும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கமாம். உடம்புல எந்த பிரச்சனையும் இல்லையாம்” என்றேன்.

“நான் தான் அப்பவே சொன்னேனே.... நமக்கெல்லாம் ஒண்னும் இருக்காதுன்னு...” என்று கூறி சிரித்தவளின் கண்களைப் பார்த்தேன். அவை உண்மையான ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

திடீரென்று, அவளது பூமுகம் வாட்டத்துடன், “ஆனா நமக்கு இன்னும் குழந்தையே இல்லையே! அதுதான் ஒரு பெரிய குறையா இருக்குது” என்றாள்.

நான் சற்று நிதானத்துடன், “அதனாலென்ன... எது எது எப்ப நடக்கணும்ன்னு இருக்குதோ, சரியான நேரத்தில அது நடந்தே தீரும். கவலைப் படாத மேனகா!” என்றேன் புன்முறுவலுடன்.

ஒருவரைப் பற்றிய உண்மையை மறைத்துப் பொய் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதே நபரை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வைக்க நன்றாகவே தெரியும்.

புது வரவுக்காக ஏங்கி பழைய உன்னதமான உறவை இழப்பதும், விட்டுச் செல்வதும் மடமையாகும்.

என் அம்மா எனக்குக் கடைசியாகக் கொடுத்த பரிசு மேனகா தான். அவளைக் கைவிடுதல் என்பது அம்மாவை உதாசீனம் செய்வது போல தோன்றியது. ஹாலில் புகைப்படத்திலிருக்கும் அம்மா என் கருத்தை ஆமோதித்து போல புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.
 
Viji Ravi

New member
Messages
2
Reaction score
0
Points
1

மனதை நெகிழ வைத்த கதை
 
Top Bottom