Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 11
பிரணவ்வின் தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் விழி விரித்து நின்றாள் சிதாரா.


பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க,


அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,


தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,


அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.


பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.


அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,


"பாய் தாரா... அப்புறம் கால் பண்றேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.


அவனின் தீண்டல் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஒருபக்கம் இருக்க அவனின் செயலில் சிதாரா இன்னும் அதிர்ச்சியில் இருக்க,


அங்கிருந்து வேகமாக செல்லும் பிரணவ்வைப் பார்த்தவாறே அவளிடம் நெருங்கிய தோழிகள் அவளை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.


லாவண்யா, "என்னாச்சி சித்து... ஏன் நீ இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிறாய்... அது அபி அண்ணா கூட சென்னைல இருந்து வந்த அவர் ஃப்ரென்ட் தானே... அவர் உன் கிட்ட தனியா என்ன பேசிட்டு போறாரு..." என்க சிதாராவோ திருதிருவென முழித்தாள்.


"வனி உன் கிட்ட தான் சித்து கேட்டுட்டு இருக்கா... பதில் சொல்லு..." என அக்ஷரா கூற,


சிதாரா, "அவருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போறாருடி..." என்கவும் அதிர்ந்த இருவரும் ஒரே சமயத்தில், "என்ன..." என்றனர்.


பின் அக்ஷரா, "ஹேய்...... ஜாலி... நம்ம சித்துவ ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு.... சீக்கிரமா ட்ரீட் குடு சித்து..." என கத்த லாவண்யாவும் அதற்கு ஒத்து ஊதினாள்.


அவசரமாக இருவரின் வாயையும் அடைத்த சிதாரா, "கத்தாதுங்கடி லூசுங்களா... நாம ஒன்னும் சிட்டில இல்ல இருக்கோம்.. கிராமத்துல... பெரிசுங்க காதுல விழுந்துச்சி.. அவ்வளவு தான்..." என்கவும் இருவரும் அமைதியாகினர்.


பின், "அவர் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னார்.. நான் சொல்லல.. அப்போ நான் எதுக்கு ட்ரீட் தரணும்.." என்க,


லாவண்யா, "ஓஹோ.... சமாளிக்கிறீங்களா மேடம்... அப்போ இந்த வெட்கத்துக்கு அர்த்தம் என்னம்மா..." என்க,


வெட்கப்பட்ட சிதாரா, "போடி..." என்று விட்டு அங்கிருந்து ஓடவும்,


"ஹேய்... நில்லுடி..." என கத்திக் கொண்டு அவளை துரத்தினர் அக்ஷரா மற்றும் லாவண்யா.


வீட்டுக்கு வந்த சிதாரா அடிக்கடி மொபைலையே பார்த்த வண்ணம் இருக்க அவள் எதிரப்பார்த்த அழைப்பு தான் வரவில்லை.


மறுநாள் காலை சிதாராவின் மொபைல் ஒலிக்க அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரணவ், "தாரா..." என்றான்.


சிதாரா அவசரமாக, "ஏன்ங்க நைட்டு கால் பண்ணல..." என்க பிரணவ்விற்கோ ஏதோ சாதித்த உணர்வு.


பிரணவ், "என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா..." என்க,


"ஹ்ம்ம்.." என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.


மனதிற்குள் சிரித்த பிரணவ், "உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா... இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்... அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு..." என்றான்.


சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.


அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.


திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.


லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.


அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.


ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, "அவ என் தங்கச்சிடா... அவளுக்கு குழந்தை மனசு... எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே.." என்பான்.


பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.


பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.


சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.


ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.


திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.


ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.


நாட்கள் வேகமாகக் கடக்க அக்ஷரா, சிதாரா, லாவண்யா மூவரினதும் இறுதிப் பரீட்சைகளும் முடிந்தன.


பலர் இன்னுமே பெண்களின் படிப்புக்கு வரையறை வைத்து அதன் பின் அவர்களை திருமணம் எனும் பெயரில் வீட்டிலே அடைப்பர்.


அது போலவே சிதாராவின் தந்தையின் சகோதரி ஒருவர் அவளின் பரீட்சை முடிவடைந்ததை அறிந்து குடும்பத்துடன் தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தனர்.


நல்ல நேரம் சிதாராவின் தாய்க்கு சகோதரர்கள் இருக்கவில்லை.


இல்லையேல் அவர்களும் தட்டைத் தூக்கிக்கொண்டு வந்திருப்பர்.


சிதாராவின் தந்தை சங்கர், தாய் தேவி இருவருமே செய்வதறியாது முழித்தனர்.


பெண் தர முடியாது என்று கூறினாலும் குடும்பத்தில் சச்சரவு ஏற்படும் என இருவரும் சிதாராவிடம் கேட்க,


சிதாராவுக்கோ மேற்படிப்பை முடிக்க ஆசை ஒரு பக்கம் இருக்க பிரணவ்வுடனான காதல் அவளை சம்மதிக்க வைக்கவில்லை.


பெற்றோரிடமும் மேற்படிப்பை முடிக்கும் தன் ஆசையைக் கூற சங்கரும் தன் தமக்கையிடம் சிதாராவின் படிப்பைக் காரணம் காட்டி மறுக்க,


அவரோ நிச்சயத்தை மட்டுமாவது வைத்துக் கொள்ளலாம் என ஒரே பிடியில் நின்றார்.


சிதாராவுக்கோ தன் அத்தையைப் பற்றி நன்றாகவே தெரியும்.


தான் விரும்புவதை எப்பாடுபட்டாவது சாதித்துக் கொள்வார்.


அவர் ஏதாவது செய்து பெற்றோரை சம்மதிக்க வைத்து விடுவார் எனப் பயந்தவள் உடனே பிரணவ்வுக்கு அழைத்து காரணத்தைக் கூறாது மறுநாளே அவளை சந்திக்க வருமாறு கூறினாள்.


மறுநாள் பிரணவ்வும் அபினவ்விடம் கூட கூறாது பூஞ்சோலை கிராமம் வர அவனை சந்திக்க கோவிலுக்குச் சென்றாள் சிதாரா.


பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, "எப்படி இருக்காய் தாரா... ஐ மிஸ்ட் யூ சோ மச்.." எனக் கூறி அவளை அணைக்க வர அவனைத் தடுத்த சிதாரா,


"பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க..." என்க,


அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ்,


"என்னாச்சு தாரா... உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்..." என்றான்.


சிதாரா, "எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்... எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க.." என்க,


பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, "இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..." என்க சிதாரா அதிர்ந்தாள்.


பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா,


"என்ன விளையாடுரீங்களா பிரணவ்... நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..." என்கவும்,


"நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா..." என்றான்.


"என்ன பிரணவ் சொல்றீங்க... உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்... நீங்களும் என்ன காதலிக்கிறீங்கல்ல... அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க.." என அழுதபடி சிதாரா கேட்க,


அவள் கரத்தை விட்ட பிரணவ்,


"நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்..." என்றான்.


பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.


சிதாரா, "திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க... அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க..." என்க,


சத்தமாக சிரித்த பிரணவ்,


"நீ என்ன லூசா தாரா... பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா... இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்... அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல... பார்க்க ஏதோ அழகா இருந்தாய்... பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... அவ்வளவு தான்..." என்றான்.


சிதாரா, "இல்ல... எனக்கு தெரியும்... நீங்க பொய் சொல்லுறீங்க... வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்..." என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,


அவள் கையை உதறியவன், "ஏய்... ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு... அறிவில்லயா... அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு... நீ ரொம்ப அழகா இருந்தாய்... உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி... அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்... முடியல... அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா...


அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே... இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா... நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்... உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது...


சாதாரண கிராமத்துக்காரி நீ... உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ... உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்... கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது... உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு... அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசப்படாதே..." என்றான்.


பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.


பின், "வரட்டா பேபி..." என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,


"தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க... என்னால நீங்க இல்லாம வாழ முடியாது... உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... ப்ளீஸ்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்ன நான் மாத்திக்குறேன்... என்ன விட்டு மட்டும் போக வேணாம்..." என அழுது கெஞ்ச,


"ச்சீ... போடி அந்தப்பக்கம்.." என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.


அவன் சென்ற பின்னும் அவன் கூறிய வார்த்தைகளையே நினைத்து அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.


சிதாராவைத் தேடி லாவண்யாவும் அக்ஷராவும் அவள் வீட்டிற்குச் செல்ல அவள் கோவிலுக்கு சென்றுள்ளதாக தேவி கூற இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.


கோவில் குளத்தின் அருகில் சிதாரா விழுந்து கிடப்பதைக் கண்டவர்கள் அவசரமாக அவளிடம் ஓட அவளோ சுயநினைவின்றிக் கிடந்தாள்.


லாவண்யா அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்த சிதாரா,


மீண்டும் பிரணவ்வின் வார்த்தைகள் நினைவு வர இருவரையும் கட்டிப்பிடித்து கதறினாள்.


தோழிகள் இருவருமே சிதாராவின் அழுகைக்கு காரணம் புரியாது அவளிடமே கேட்க சிதாராவிடமிருந்து அழுகை மட்டுமே வெளி வந்தது.


அக்ஷரா, "என்னாச்சு சித்து... ஏன் இப்படி அழுதுட்டு இருக்காய்..." என்க,


"எல்லாமே முடிஞ்சி போச்சு அச்சு... எல்லாமே முடிஞ்சி போச்சு..." எனக் கூறி அழுதாள் சிதாரா.


லாவண்யா புரியாமல், "என்ன முடிஞ்சி போச்சுடி... தெளிவா சொல்லேன்.." என அதட்ட,


சிதாரா, "போய்ட்டான்... மொத்தமா என்ன விட்டு போய்ட்டான்..." என்க இருவரும் அதிர்ந்தனர்.


அக்ஷரா, "பிரணவ் அண்ணன பத்தியா சொல்றாய்... என்னாச்சுடி..." என்க ஆம் என தலையசைத்த சிதாரா வேறு எதுவும் கூறாது அழுதாள்.


லாவண்யா அக்ஷராவிடம், "இப்படி கேட்டா இவ எதுவும் சொல்ல மாட்டாள்.. அழுதுட்டே தான் இருப்பா... நான் ஆதுவ வர சொல்றேன்..." என்றவள் உடனே ஆதர்ஷுக்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.


சற்று நேரத்தில் ஆதர்ஷ் வரவும் அவன் கண்டது அழுது கொண்டிருந்த சிதாராவைத் தான்.


ஆதர்ஷ், "என்னாச்சு நியா.. ஏன் சித்து அழுதுட்டு இருக்கா.." என்க,


லாவண்யா அவனிடம் விஷயத்தை கூறியவள், "வேற என்ன கேட்டாலும் சொல்லாம அழுதுட்டே இருக்கா ஆது... அதான் உன்ன கூப்பிட்டோம்.." என்றாள்.


ஆதர்ஷ், "சித்தும்மா.. என்னாச்சிடா... அண்ணன் கிட்ட சொல்லு... பிரணவ் உன்ன ஏதாவது சொன்னானா.." என்றான்.


தன்னைப் போல் தான் ஆதர்ஷும் பிரணவ் பிடித்திருப்பதாக கூறியதை காதலிப்பதாக எண்ணிக்கொண்டு சம்மதம் கொடுத்துள்ளான் எனப் புரிந்து கொண்ட சிதாரா,


தற்போது அவள் உண்மையைக் கூறினால் நிச்சயம் ஆதர்ஷுக்கு குற்றவுணர்வாக இருக்கும் என,


"பிரணவ் மேல எந்தத் தப்பும் இல்லண்ணா... நான் தான் அவன சரியா புரிஞ்சிக்கல..." என பாதி உண்மை பாதி பொய்யாக கூறினாள்.


"நான் வேணா பிரணவ் கிட்ட பேசி பார்க்கவா சித்தும்மா.." என ஆதர்ஷ் கேட்க அவனை அவசரமாகத் தடுத்த சிதாரா,


"இல்ல வேணாம் அண்ணா.. அவர எதுவும் கேக்காதீங்க... எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போய்டுச்சு அண்ணா... நான் தான் அவர புரிஞ்சிக்கல... என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.. ப்ளீஸ் அண்ணா.. என்னால ஃப்ரெண்ட்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் இடைலயும் எந்த பிரச்சினையும் வர வேணாம் அண்ணா... கொஞ்ச நாள் போனா நானே சரி ஆகிடுவேன்..." என்றாள்.


அதன் பின் அவர்களும் அவளை எதுவும் கேட்கவில்லை.


பிரணவ் பேசிய எதையுமே சிதாரா யாரிடமும் கூறவில்லை.


இருவருக்குள்ளும் ஏதோ சிறிய கருத்து வேறுபாடு என நினைத்து அவர்களும் விட்டனர்.


அடுத்து வந்த நாட்களில் சிதாராவிடம் இருந்த பழைய உற்சாகம் முழுவதும் குறைந்திருந்தது.


ஆதர்ஷ் அபினவ்விடம் கூற அபினவ் பிரணவ்விடம் கேட்டதற்கு அவன்,


"ரெண்டு பேருக்கும் செட் ஆகல.." என்று மட்டும் கூறினான்.


ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருக்க மூவரின் பரீட்சை முடிவுகளும் வந்திருந்தன.


மூவருமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர்.


ஒரு வாரம் கழித்து திடீரென பெற்றோரிடம் வந்து நின்ற சிதாரா மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கூறினாள்.


பெற்றோர், தோழிகள் என அனைவரும் அதிர்ந்து ஏன் எனக் கேட்டதற்கு,


"சின்ன வயசுல இருந்தே அப்ரோட்ல ஹயர் ஸ்டடீஸ் முடிக்கனும்னு ஆசை... அதான்.." என்றாள்.


அதன் பின் நியுயார்க் ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் சங்கர் சிதாராவுக்கு அட்மிஷன் வாங்க,


பெற்றோர், தோழிகள் என அனைவரிடமும் விடை பெற்று தன் எதிர்காலத்துக்காக வேண்டி விமானத்தில் நியுயார்க் பறந்தாள் சிதாரா.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 12

தன் கை மீதிருந்த சிதாராவின் கையின் அழுத்தத்திலே அவள் எவ்வளவு உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கிறாள் என ஆர்யானுக்குப் புரிந்தது.


அவள் கரத்தை மறு கையால் அழுத்தியவன்,


"கூல் மினி... கூல்... இப்போ நான் உன் பக்கத்துல இருக்கேனே... சோ நீ எதை பத்தியும் திங்க் பண்ணாதே... இப்போ உன் மனசுல எதுவும் இல்ல... எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்னு நினை... புரியுதா..." என ஆர்யான் கூற சரி என்பதாய் தலையசைத்தாள் சிதாரா.


ஆர்யான், "நீ ரெஸ்ட் எடுத்துக்கோ மினி... லஞ்ச் முடிச்சிட்டு நான் உன்ன வீட்டுல ட்ராப் பண்றேன்..." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.


பகல் உணவை முடித்துக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.


சிதாரா கிளம்பும் முன் ஆர்யானின் தாய் அகிலா அவள் கையில் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய பட்டு சேலை ஒன்றை வழங்க சிதாரா புரியாமல் முழித்தாள்.


சிதாரா, "எதுக்கு அத்த இந்த சாரி... " என்க,


"முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்காய்... உன்ன வெறும் கையோட அனுப்ப முடியுமா... அதான் இந்த அத்தயோட ஒரு சின்ன பரிசு..." என அகிலா கூற,


அதனை நன்றி கூறி புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.


அதன் பின் இருவருமே கிளம்பினர்.


சிதாராவின் வீட்டை அடையும் வரையுமே அப் பயணம் அமைதியாகக் கழிந்தது.


இருவரும் தத்தம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தனர்.


சிதாராவின் வீட்டில் ஆர்யான் காரை நிறுத்தியது கூட அறியாமல் சிதாரா சிந்தனை வசப்பட்டிருக்க,


ஆர்யான் அவள் தோள் தொட்டு உலுக்கவும் தூக்கத்திலிருந்து விழித்தது போல், "ஆஹ்... " என சிதாரா விளிக்க,


"வீடு வந்திருச்சி மினி..." என்றான் ஆர்யான்.


அப்போது தான் சுற்றும் பார்த்தவள் எதுவும் கூறாது காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.


ஆர்யான் காரில் அமர்ந்து கொண்டு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க சிதாராவின் நடை தடைப்பட்டது.


மீண்டும் திரும்பி வந்தவள் ஆர்யானிடம்,


"சாரி ஜிராஃபி... ஏதோ யோசனைல இருந்தேன்.. வீட்டுக்கு வந்துட்டு போ... அம்மா கிட்ட நீ வரதா சொல்லி இருந்தேன்..." என்க,


ஆர்யான், "இல்ல மினி... நீ போ... ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு... நீ வேற டயர்டா இருப்பாய்... போய் தூங்கு... நான் இங்க ஃப்ரென்ட் ஒருத்தன மீட் பண்ண வேண்டி இருக்கு... ஆன்ட்டி கிட்ட சொல்லு வேற ஒரு நாள் கண்டிப்பா வரேன்னு.." என்க சரி எனத் தலையசைத்தாள்.


சிதாரா செல்ல, "மினி..." என ஆர்யான் அழைக்கவும் அவள் திரும்பிப் பார்க்க,


"நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே... " என ஆர்யான் கேட்க,


அவனைப் பார்த்து புன்னகைத்த சிதாரா ஆம் எனத் தலையாட்டினாள்.


ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகையுடன், "ஓக்கே.. டேக் கேர்... பாய் மினி..." என்றவன் கிளம்பினான்.


ஆர்யானின் கார் மறையும் வரை அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.


வெய்யோனின் வருகையால் தண்மதி அவள் மேகக் கூட்டங்களிடையே ஒளிந்து கொள்ள,


வெய்யோன் தன் ஒளிக்கதிர்களால் பூமித்தாயை அணைத்துக் கொள்ள அந் நாள் அழகாய் விடிந்தது.


மணி காலை எட்டைக் கடந்திருந்தது.


காலை சமையலை முடித்தவர் வேகமாக மாடி ஏறிச் சென்று இரவு சாத்தியது போலவே இன்னும் சாத்திக் கிடந்த கதவைத் திறந்தவர்,


"மணி எட்டாகிடுச்சி.... ஆனா இவ இன்னும் எந்திரிக்கல... இன்னொரு வீட்டுல வாழப் போற பொண்ணு இப்படியா விடிய விடிய இழுத்துப் போத்திட்டு தூங்குறது... பாக்குறவங்க என்ன தான் கதை சொல்லுவாங்க... எவ்வளவு நேரமா நானும் கத்திட்டு இருக்கேன்... கண்ண தொறக்குறாளா பாரு.... எல்லாம் இவங்க அப்பாவ சொல்லனும்... ரொம்ப தான் இடம் கொடுக்குறாரு..." என காலையிலேயே மகளுடன் சேர்த்து கணவனையும் அர்ச்சித்தவர் சாக்ஷாத் சிதாராவின் தாய் தேவி தான்.


வீட்டினுள் நுழைந்ததிலிருந்து பெற்றோரின் பாச மழையை அனுபவித்தவள் ஏதோ மனதிலுள்ள பெரிய பாரம் இறங்கியது போல் பல நாட்கள் கழித்து நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.


எவ்வளவு வசதியான சொகுசான இடத்தில் உறங்கினாலும் தன் வீட்டில் உறங்குவது போல வருமா...


தேவியின் அர்ச்சனைகளை ஏதோ இசை கேட்பது போல் கேட்டுக் கொண்டு தன் பாட்டிற்கு தூங்கினாள் சிதாரா.


எட்டு முப்பது போல் எழுந்து கீழே வர அவள் தந்தை சங்கர் வேலைக்கு செல்ல தயாராகி இருந்தார்.


"மா... காஃபி..." எனக் கத்திக் கொண்டு வந்தவள் தந்தையைக் கண்டு,


"குட் மார்னிங்பா...." என்று அவரை அனைத்துக் கொண்டாள்.


"குட் மார்னிங் சித்துமா... நைட் நல்லா தூங்கினியாடா..." என சங்கர் கேட்கவும் அவரை விட்டு விலகியவள்,


"எங்க நல்லா தூங்க... அதான் உங்க தர்ம பத்தினி காலையிலேயே ஒடஞ்சி போன ரேடியோவ ஆன் பண்ணிட்டாங்களே..." என பொய்யாக அலுத்துக் கொண்டாள் சிதாரா.


கையில் தோசைக் கரண்டியைத் தூக்கிக் கொண்டு தேவி கோவமாக வர அவசரமாக தந்தையின் பின்னால் மறைந்து கொண்டாள் சிதாரா.


"ஆமா... விடிய விடிய தூங்கிட்டு பேச்ச பாரு... மத்த பொண்ணுங்கள பாரு... காலையிலையே நேர காலத்தோட எழுந்து தலைக்கு குளிச்சி வாசல் தெளிச்சி கோலம் போட்டுட்டு வீட்டு வேலைல எல்லாம் அவங்க அம்மாக்கு ஒத்தாசையா இருப்பாங்க... நீயும் இருக்காய் பாரு... பசங்க கூட இந்த நேரத்துக்கு எந்திரிச்சி இருப்பாங்க.... படிக்க போறேன்னு சொல்லிட்டு படிச்சிட்டு வந்தியோ இல்ல நல்லா தூங்க கத்துக்கிட்டு வந்தியோ தெரியல..." என சிதாராவைக் கடிந்தார் தேவி.


சிதாரா, "அப்பா.... பாருங்கப்பா அம்மாவ... சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க... " என சிணுங்கவும் தேவி மீண்டும் ஏதோ கூற வர அதற்குள் அவரைத் தடுத்த சங்கர்,


"என்ன தேவிமா நீ.... பொண்ணு எவ்வளவு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கா... அவளுக்கு பிடிச்சதா பாத்து சமச்சி போடாம அவள திட்டிட்டு இருக்காய்... என் பொண்ணு ஒன்னும் அவ்வளவு சோம்பேரி எல்லாம் இல்ல... நியுயார்க்ல இருக்கும் போது எப்பவும் நேரத்தோட எந்திரிச்சி படிப்பாள்... ஏதோ வீட்டுக்கு வந்திருக்குற சந்தோஷத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டா... அதுக்கு எதுக்கு மத்த பொண்ணுங்க கூட ஒப்பிட்டு இவ்வளவு திட்டுற... என் சித்துக்குட்டி எப்போதுமே ஸ்பெஷல் தான்... யாரப் போலவும் இல்ல... " என சிதாராவுக்கு ஆதரவாக சங்கர் பேச,


அவர் பின் நின்றிருந்த சிதாரா தேவியைப் பார்த்து பழிப்புக் காட்டினாள்.


தேவி சிதாராவை முறைத்து விட்டு,


"நீங்க இருக்கும் வர இவள திருத்த முடியாது... அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து ஏதோ பண்ணுங்க... நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வீட்டுல இவ மாமியார் நல்லா வேலை வாங்குவாங்கல்ல... அப்போ இந்த அம்மாவோட அருமை புரியும்..." என்று விட்டு சென்றார்.


தேவி சென்றதும் சிதாரா உதட்டை சுழிக்க,


சங்கர், "அவ கெடக்குறா... நீ கண்டுக்காதே சித்தும்மா... என் பொண்ணுக்கு அவள தங்கத்தட்டுல வெச்சி தாங்குறது போல ஒரு சம்பந்தம் தான் நான் தேடி கொண்டு வருவேன்... அங்க அவ ராணி மாதிரி வாழ்வா..." என்று அவள் தலையை வருடினார்.


பின், "சரி சித்து... நான் வேலைக்கு கிளம்புறேன்... இன்னெக்கி சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துருவேன்... என் பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பண்ணனுமே..." என்றவர் தேவி, சிதாரா இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.


சங்கர் சென்றதும் குளித்து தயாராகியவள் முதல் வேலையாக ஆர்யானுக்கு அழைத்தாள்.


பல தடவை முயற்சி செய்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.


சிதாரா, "என்னாச்சி இந்த ஜிராஃபிக்கு... கால் பண்ணா எப்போதும் ஃபர்ஸ்ட் ரிங்லயே எடுத்துருவானே... ஆஹ்... ஒரு வேலை மயூ கிட்ட பேசிட்டு இருக்கானோ தெரியல... அன்னக்கி இருந்த டென்ஷன்ல மயூ என்ன சொன்னாள்னும் கேக்க முடியல..." என்றாள்.


பின் லாவண்யா, அக்ஷரா இருவருடனும் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள்.


சொன்னது போலவே அன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தார் சங்கர்.


நீண்ட நாட்களின் பின் சிதாரா வீட்டுக்கு வந்துள்ளதால் சங்கர் மனைவி, மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு இரவுணவுக்காக அருகிலுள்ள ரெஸ்டூரன்ட் சென்றார்.


அன்று முழுவதுமே சிதாரா மகிழ்ச்சியாக இருந்தாள்.


தங்களது மகள் பழையபடி கிடைத்ததில் சங்கர், தேவிக்குமே அளவில்லா சந்தோஷம்.


மறுநாள் சிதாரா தோள் பையையும் மாட்டிக் கொண்டு எங்கோ வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.


அங்கு வந்த தேவி, "எங்க கிளம்பிட்ட சித்து..." என்க,


"வெளிய சின்ன வேலையொன்னு இருக்குமா... சீக்கிரம் முடிச்சிட்டு வரேன்..." என்றாள் சிதாரா.


தேவி, "கண்டிப்பா போய் தான் ஆகனுமா சித்து... இன்னெக்கி ஈவ்னிங் உன்ன பொண்ணு பாக்க வராங்க..." என்கவும் அதிர்ந்த சிதாரா,


"மா.... என்ன சொல்றீங்க... யாரக் கேட்டு இப்போ பொண்ணு பாக்க வர சொன்னீங்க... என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல.." என கோவமாகக் கேட்டாள்.


"பெத்தவங்களுக்கு தெரியாதா தன் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு... அதுவுமில்லாம இது நல்ல சம்பந்தம் ஒன்னு..." என்றார் தேவி.


சிதாரா, "ஐயோ ஏன்மா புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க... எனக்கு இப்போதே கல்யாணம் வேணாம்... நான் இன்னும் படிக்கனும்..." என்க,


தேவி, "யாரு இப்போ உனக்கு படிக்க வேணாம்னு சொன்னது... ஜஸ்ட் இப்போ பொண்ணு பார்க்க தானே வராங்க... நீ வந்து சும்மா நின்னா போதும்..." என்றார்.


"என்னால அப்படி யாரு முன்னாடியும் போய் பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க முடியாது.." என சிதாராவும் பதிலுக்கு பேச,


அம்மா, மகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த சங்கர்,


"தேவி... நீ போ... நான் சித்து கிட்ட பேசுறேன்..." என்கவும் அங்கிருந்து அகன்றார் தேவி.


சிதாரா, "ஏன்பா இப்போ பொண்ணு பாக்க வர சொல்லி இருக்கீங்க... நான் உங்களுக்கு அவ்வளவு பாரமா இருக்கேனா..." என்கவும்,


"என்ன சித்துமா இப்படி எல்லாம் பேசுறாய்... நீ எங்களுக்கு எப்படிமா பாரமா இருப்பாய்... உனக்கு விருப்பம் இல்லன்னா வர வேணாம்னு சொல்றேன்... ஆனா தங்கமான பையன்மா.. குடும்பமும் ரொம்ப நல்ல மரியாதையான குடும்பம்... விசாரிச்சி பார்த்தப்போ எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க... எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்கு... நீயும் பையன் கூட பேசி பாரு... பிடிச்சிருந்தா பேசி முடிக்கலாம்... இப்பவே கல்யாணம் பண்ணனும்னு இல்ல... உனக்கு சம்மதம்னா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவோம்... இதுக்கு மேலயும் உனக்கு இஷ்டமில்லன்னா பரவாயில்லமா... எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்..." என்றார் சங்கர்‌.


தனது பெற்றோர் தன்னிடம் இவ்வளவு கெஞ்சுவது பிடிக்காமல் விருப்பமே இல்லாமல் சம்மதித்தாள் சிதாரா.


சங்கர் சென்றதும் கோவமாக தோள்ப் பையை கழற்றி கட்டிலில் வீசியவள் இது பற்றி ஆர்யானுக்கு தெரிவிக்க அழைக்க இப்போதும் பிஸி என்றே காட்டியது.


கடுப்பாகிய சிதாரா, "உனக்கு காதல் வந்தா ஃப்ரென்ட கூட மறந்து போயிடுமே ஜிராஃபி... மினி மினினு வருவாய்ல... மவனே அப்போ இருக்கு உனக்கு...." என ஆர்யானைத் திட்டினாள்.


மாலை நேரத்தை நெருங்க சிதாராவின் வீட்டில் பெரிய கலவரமே நடந்தது.


வேறென்னவாக இருக்கும்... பெண் பார்க்கும் படலத்திற்காக சிதாரா என்ன அணிய வேண்டும் என்று தான் தாய் மகள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.


தேவி ஒன்றைக் காட்டினால் சிதாரா அதற்கு ஏதாவது குறை கூறுவாள்.


சிதாரா ஒன்றைக் காட்டினால் தேவி அதை மறுப்பார்.


இப்படியே ஒவ்வொன்றாக மறுத்துக் கொண்டிருக்க தேவியின் கண்களில் பட்டது ஆர்யானின் தாய் அகிலா கொடுத்த சேலை.


தேவி, "இதென்ன புதுசா இருக்கு சித்து... இது ரொம்ப அழகா இருக்கு... நீ வேண்ணா இதையே போட்டுக்கோ.." என்க,


அவர் காட்டிய சேலையைக் கண்ட சிதாராவின் கண்கள் மலர்ந்தன.


"வாவ்மா... இது நல்லா இருக்கு... இது என் ஃப்ரென்டோட அம்மா எனக்கு கிப்ட் பண்ண சேரி... நான் இதையே போட்டுக்குறேன்..." என்ற சிதாரா அதை உடுத்தி சாதாரண ஒப்பனையுடன் எளிய ஆபரணங்கள் அணிந்து தயாராகினாள்.


அவள் தயாராகி முடிய சரியாக அங்கு வந்த தேவி,


"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க சித்து... நீ ரெடி ஆகிட்டேல்ல..." என்றவர் சிதாராவைக் கண்டதும் தன்னையறியாமல் அவர் கண்கள் கலங்கின.


சிதாராவை நெருங்கியவர் அவள் நெற்றி வழித்து முத்தமிட்டு,


"ரொம்ப அழகா இருக்காய் சித்து... என் கண்ணே பட்டுடும்... என் பொண்ணுக்கும் இப்போ கல்யாண வயசாகிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல..." என்றார்.


தாயின் வார்த்தையில் மகிழ்ந்த சிதாரா பின் அவரை சீண்டும் விதமாக,


"எனக்கொன்னும் இன்னும் கல்யாண வயசு ஆகல... இது ஜஸ்ட் உங்க ரெண்டு பேருக்காகவும் வந்து நிக்க போறேன்... எப்படியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பிடிக்கலன்னு தானே சொல்ல போறேன்..." எனத் துடுக்காக பேச,


அவள் தலையில் தட்டிய தேவி,


"இப்பவாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்குரியா பாரு... வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிஞ்சி நடக்குறது போல நடிக்கவாவது செய்..." என்றவர் அவளை கீழே அழைத்துக் கொண்டு சென்றார்.


சிதாராவின் கையில் காஃபி ட்ரேயை ஒப்படைக்க,


அவள் தேவி சொன்னது போல் தலை குனிந்த படி ஒவ்வொருவருக்கும் கொடுக்க,


இறுதியில் மாப்பிள்ளையாக வந்திருந்தவனுக்கு காஃபியை நீட்டும் போது அவன் முகம் பார்த்தவள் அதிர்ந்தாள்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 13

தன் முன்னே இருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிதாரா.


"என்ன கண்ணு இப்படி பாக்குற... மாப்பிள்ளைய அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன..." என சிதாராவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டது சாக்ஷாத் ஆர்யான் தான்.


ஆர்யான் தான் தன் பெற்றோருடன் சிதாராவைப் பெண் கேட்டு வந்திருந்தான்.


ஆர்யானின் கேள்வியில் தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த சிதாரா,


காஃபியை அவனிடம் கொடுக்காமல், "மா... இவருக்கு எதுவும் வேணாமாம் மா... வயிரு சரி இல்லயாம்..." என்று விட்டு ட்ரேயுடன் எடுத்து சென்றாள்.


ஆர்யானோ கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போனதே என வருத்தப்பட்டான்.


அன்று சிதாராவை அவள் வீட்டில் விட்டவன் சொன்னபடியே தன் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றான்.


அன்று இரவு நண்பனின் வீட்டில் தங்கியவன் ரஞ்சித்துக்கு கால் செய்து விடிந்தவுடன் அகிலாவையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் வரக் கூறினான்.


மறுநாள் காலை சங்கர் வேலை செய்யும் பேங்கிற்கு சென்று அவரை சந்தித்தான்.


சங்கர், "யாருப்பா நீ... ஏதாவது லோன் விஷயமா வந்திருக்கியா..." என்க,


"இல்ல அங்கிள்... பர்சனல் விஷயமா தான் உங்கள பார்க்க வந்திருக்கேன்..." என ஆர்யான் கூறவும் புருவ முடிச்சுடன் அவனை ஏறிட்டான் சங்கர்.


ஆர்யான், "அங்கிள் என் பேரு ஆர்யான்... நானும் ஃபோர்தம் யுனிவர்சிட்டில தான் படிச்சேன்... உங்க பொண்ணு சிதாராவோட சீனியர்... இப்போ அங்கயே ஒரு கம்பனில வர்க் பண்ணுறேன். எங்க அப்பா ரஞ்சித். AR GROUPS OF COMPANIES எம்.டி." என்று நிறுத்த,


சங்கர், "இதெல்லாம் எதுக்குப்பா என் கிட்ட சொல்லிட்டு இருக்க.." என்றார்.


"அங்கிள் நான் இப்போ சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்.. ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க..." என்ற ஆர்யான் சிதாரா பிரணவ்வைக் காதலித்தது முதல் தற்போது அவளின் உடல்நிலை வரை கூற சங்கர் அதிர்ந்தார்.


சங்கர், "என்ன தம்பி சொல்றீங்க... என் பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கா... அவ எங்க கிட்ட கூட இதை பத்தி சொல்லல... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... யாராவது பெரிய டாக்டர் கிட்ட காட்டி எப்படியாவது என் பொண்ண நான் குணப்படுத்துவேன்..." என பதட்டத்துடன் கூற,


"அங்கிள் டென்ஷனாக வேணாம்... முதல்ல இந்த தண்ணிய குடிங்க..." என்ற ஆர்யான்,


"இங்க செலவ பத்தி பிரச்சினை இல்ல அங்கிள்.... பட் இது உங்க பொண்ணோட மனசு சம்பந்தப்பட்டது... எந்த ட்ரீட்மெண்ட் பண்ணினாலும் பர்மனன்ட்டா அதை கியுர் பண்ண முடியாது..." என்றான்.


சங்கர், "அப்போ இதுக்கு வேற என்னப்பா வழி.." எனக் கேட்க சற்று அமைதி காத்த ஆர்யான்,


"எனக்கு மினிய கல்யாணம் பண்ணி கொடுங்க அங்கிள்... எப்படியும் அவ யாரையாவது கல்யாணம் பண்ணி தான் ஆகனும்... பட் அவ இருக்குற நிலமைல யாராலையும் அவள ஸ்மூத்தா ஹேன்டில் பண்ண முடியாது... அது மினிய தான் பாதிக்கும்... அவள் என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்... எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்... நிச்சயமா அவ மனசுல இருக்குற எல்லா பிரச்சினையையும் நான் சரி பண்ணுவேன்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அங்கிள்... ஆனா இதை பண்ண நான் அவ கூட இருக்கனும்... திரும்ப அந்த பிரணவ்வால மினிக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது... என்ன நம்புங்க அங்கிள்..." என்றான்.


ஆர்யான் கூறியதைக் கேட்டு யோசித்த சங்கர்,


"ஆனா தம்பி... உங்க பேரன்ட்ஸ் இதுக்கு ஒத்துக்குவாங்களா... சித்துக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சா அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா..." என்க,


"அதப் பத்தி நீங்க கவல பட வேணாம் அங்கிள்... அப்பா அம்மாக்கு ஆல்ரெடி மினிய தெரியும்... அவங்களுக்கும் இந்த சம்பந்தத்துல இஷ்டம்... அவங்க இன்னைக்கே இங்க வருவாங்க... நான் நாளைக்கு அவங்கள கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன் அங்கிள்..." என ஆர்யான் கூறவும் சங்கர் சம்மதித்தார்.


அதன் பின் அகிலா ரஞ்சித் இருவரும் கோயம்புத்தூர் வர அவர்களிடம் விஷயத்தைக் கூறி மறுநாளே சிதாராவின் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.


சிதாரா கையிலிருந்த ட்ரேயை சமையலறை மேடையில் வைத்தவள் கோவமாக அங்கிருந்து மாடிக்கு சென்றாள்.


சங்கர், தேவி இருவரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு ஆர்யானும் அவளைப் பின் தொடர்ந்தான்.


மாடிக்குச் சென்ற சிதாரா கோவமாக அங்குமிங்கும் நடந்தவள் ஆர்யான் வரவும்,


"என்ன எனக்கு வாழ்க்கை பிச்ச போடுறியா..." எனக் கோவமாகக் கேட்க,


"ச்சீச்சீ... எனக்கென்ன லூசா..." என ஆர்யான் கலாய்க்க,


அவனை முறைத்த சிதாரா, "ஏன் ஜிராஃபி இப்படி பண்ணுற.... என் ஒருத்தியால வீணா எதுக்கு உன் வாழ்க்கையையும் பாழாக்குற..." என வேதனையுடன் கேட்டாள்.


அவள் அருகில் வந்த ஆர்யான் அவள் இரு தோளையும் பற்றி,


"என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல மினி... நான் எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான்னு நம்புறல்ல... நிச்சயம் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த பிரணவ்வால ஏதாவது பிரச்சினை வரும்... என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த பிரச்சினையும் இல்லல்ல.." என்க,


சிதாரா, "அதெல்லாம் சரிடா... பட் அதுக்கும் உன்ன கல்யாணம் பண்ணுறதுக்கும் என்ன சம்பந்தம்.." எனக் கேட்டாள்.


ஆர்யான், "சம்பந்தம் இருக்கு மினி... அந்த பிரணவ்வால இதுக்கு மேலயும் உனக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது... அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்..." என ஏதோ மனதில் வைத்துக் கொண்டு தீவிரமாகக் கூற அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.


சிதாரா, "அவனால எனக்கு என்ன பிரச்சினை வர போகுது... அதான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேனே..." என்க,


"ஏதோ ஒன்னு... ஏன் இவ்வளவு கேள்வி கேக்குற... நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு நினைக்குறியா... இல்லாட்டி என்ன உனக்கு பிடிக்கலயா..." என ஆர்யான் கோவமாகக் கேட்டான்.


"போடா கிறுக்கா... சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு.... கல்யாணம் பண்ணியும் வாழ்க்கை பூரா பிரமச்சாரியாவே இருக்கனும்னு முடிவு பண்ணிட்ட... இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்... உன் இஷ்டம்..." எனக் கூறிய சிதாரா கீழே சென்றாள்.


அவள் பின்னே பார்த்தவாறு, "அதையும் பார்க்கலாம் மிசிஸ்.ஆர்யான்..." எனக் கத்தியவன் புன்னகைத்துக் கொண்டே கீழே சென்றான்.


இருவரும் புன்னகையுடன் கீழே வர இருவரின் பெற்றோருக்கும் அதைக் காண திருப்தியாக இருந்தது.


சிதாரா கீழே வரவும் அவளை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட அகிலா,


"சித்தும்மா... இந்த சேரில நீ ரொம்ப அழகா இருக்க... உனக்குன்னே சொல்லி நெய்ஞ்சது போல இருக்கு... நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க ரொம்ப குடுத்து வெச்சி இருக்கனும்..." என்கவும்,


ரஞ்சித், "அகி... பாவம் என் மருமக... ஒரேயடியா இவ்வளவு ஐஸ் வைக்காதே..." என அவரைக் கேலி செய்யவும் ரஞ்சித்தை முறைத்தார் அகிலா.


பின் அகிலா சிதாராவிடம் திரும்பியவர், "அவர் கெடக்குறார்... என் மருமகளுக்கு தெரியும் என்னை பத்தி..." எனக் கூறியவர் சிதாராவின் தலையை வருடினார்.


சங்கர், தேவி இருவருக்குமே ஆர்யானின் பெற்றோர் சிதாரா மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து சந்தோஷத்தில் கண்கள் கலங்கின.


அகிலா, ரஞ்சித் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.


அவளுக்கு அந்த சூழ்நிலை மிகவும் சங்கடமாக இருந்தது.


பெற்றோரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும் ஆர்யான் கூறிய காரணமும் அவளை திருமணத்தை மறுக்க முடியாமல் செய்தது.


ரஞ்சித், "அப்புறம் சம்பந்தி... எல்லாருக்கும் ஓக்கேன்னா மிச்ச விஷயத்த பத்தி பேசலாமே..." என்க சரி என சம்மதித்தார் சங்கர்.


ரஞ்சித் அவ்வாறு கூறியதும் சிதாராவின் முகம் வாடியது.


அவளுக்கு இதனை ஏற்றுக் கொள்ள இன்னும் நேரம் தேவைப்பட்டது.


சிதாராவின் முக மாற்றத்தை ஆர்யானும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தான்.


ரஞ்சித் ஏதோ கூற வரவும் ஆர்யான் அவசரமாக,


"டேட் ஒரு நிமிஷம்.." என்க அனைவரும் அவன் முகம் நோக்கினர்.


ஆர்யான், "அங்கிள்... அப்பா... நிச்சயத்த மட்டும் சீக்கிரம் வெச்சிக்கலாம்... கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்... மினிக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல..." என்க அவனை நன்றிப் பார்வை பார்த்தாள் சிதாரா.


ஆர்யான் கூறுவது அனைவருக்கும் சரி எனப்பட இரு வாரத்தில் நிச்சயத்தை நடத்த முடிவு செய்தனர்.


அனைவரும் கிளம்ப ஆர்யானிடம் வந்த சிதாரா,


"தேங்க்ஸ் ஜிராஃபி... அப்பா அம்மாக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவைபட்டுச்சி... நான் சொல்லாமலே நீ அத புரிஞ்சிக்கிட்ட..." என்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,


"என்ன மினி நீ... புருஷன் கிட்ட தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு... பொண்டாட்டிக்காக இதை கூட பண்ணலனா எப்படி..." எனக் கூறி கண்ணடித்தான்.


ஆர்யானை முறைத்த சிதாரா,


"மவனே இந்த புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு வந்தா சாவடிப்பேன்... தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்... ஆனாலும் நீ ஏதோ என் கிட்ட பெரிசா மறைக்குறன்னு மட்டும் தெளிவா புரியிது... மாட்டுவேல்ல ஒருநாள்... அப்போ பாத்துக்குறேன் ஜிராஃபி உன்ன..." என்க,


அவளைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்தான் ஆர்யான்.


அவர்கள் சென்றதும் தன் அறைக்கு வந்த சிதாரா அன்று திடீர் திடீரென நடந்த அதிர்ச்சிகளை நினைத்து பெருமூச்சு விட்டாள்.


லாவண்யாவுக்கு அழைத்தவள் அவள் அழைப்பை ஏற்றதும், "வனி..." என்று விட்டு அமைதி ஆகினாள்.


லாவண்யா, "என்னாச்சு சித்து... ஏதாவது ப்ராப்ளமா..‌" என்க,


"நான் ரொம்ப குழப்பமா இருக்கேன் வனி... என்ன பண்ணனும்னு கூட புரிய மாட்டேங்குது..‌. நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு தெரியல..." என்றாள் சிதாரா.


சிதாராவின் குரலில் இழையோடிய அமைதியிலே அவள் வேதனையில் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டாள் லாவண்யா.


"எதனால இப்படி திங்க் பண்ற சித்து... பிரணவ் அண்ணா திரும்ப ஏதாவது பிரச்சினை பண்ணிட்டாரா... எதப்பத்தி முடிவெடுத்து இருக்குற நீ.." என லாவண்யா கேட்க,


பெருமூச்சு விட்ட சிதாரா, "ப்ச்ச்... இந்த தடவ அவன் ஏதும் பண்ணல... " என்க,


"அப்போ என்ன தான்டி நடந்துச்சி... தெளிவா சொல்லேன்..." என லாவண்யா கேட்டாள்.


"என்ன இன்னெக்கி பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க... ரெண்டு வாரத்துல நிச்சயம்..." என சிதாரா கூறவும் அதிர்ந்த லாவண்யா,


"என்ன சொல்ற சித்து... நைட் பேசினப்போ கூட பொண்ணு பாக்க வரதா நீ எங்க கிட்ட சொல்லவே இல்லயே... எது எப்படியோ சந்தோஷமான விஷயம் தான் சொல்லிருக்க... மாப்பிள்ளை யாரு... என்ன பண்றாரு..." எனக் கேள்விக்கு மேல் கேள்வி தொடுக்கவும்,


சிதாரா, "ஆர்யான் தான் மாப்பிள்ளை..." என்றதும் அமைதியாகினாள் லாவண்யா.


"எனக்கே இன்னெக்கி காலைல தான் தெரியும்... அதுவும் மாப்பிள்ளை யார்னு கூட சொல்லல..." என்ற சிதாரா காலை முதல் நடந்தவற்றை கூறினாள்.


பின், "அவன கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல... நிச்சயமா யாரோ தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற நிலமைல நான் இல்ல... அதனால ஆர்யான கல்யாணம் பண்ணுறது பிரச்சினை இல்ல... பட் என்னால அவன் லைஃப் ஸ்பாய்ல் ஆகிடுமோன்னு பயமா இருக்கு வனி... அவன் என்னன்னா ரொம்ப ஜாலியா பேசிட்டு போறான்... அவன் ஏதோ என் கிட்ட மறைக்கிறான்னு தோணுது வனி..." என தன் மனதிலுள்ள குழப்பங்களை லாவண்யாவிடம் தெரிவித்தாள் சிதாரா.


லாவண்யா, "நீ இதுல ஃபீல் பண்ண எதுவுமே இல்ல சித்து... உண்மைய சொன்னா ஆர்யான் அண்ணன கல்யாணம் பண்ணிக்க நீ ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்... ஜஸ்ட் ஃப்ரென்டா இருக்கும் போதே உன்ன அவ்வளவு கேரிங்கா பார்த்துக்கிட்டாரு... இதே அவர் உன் வாழ்க்கைத் துணையா வந்தாருன்னா கடைசி வர உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பாரு..." என்றவள்,


"அதனால.... இப்போ எங்க கல்யாணப் பொண்ணு எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இரு... அச்சு கிட்டயும் நான் சொல்றேன்... இந்த வாரமே நானும் அச்சுயும் கிளம்பி அங்க வரோம்... என்ஜாய் பண்றோம்...." என மகிழ்ச்சியாக கூறினாள்.


சிதாரா, "உன் கூட பேசினதுக்கு அப்புறம் தான் மனசுக்கு ரிலேக்ஸா இருக்கு வனி... அபி அண்ணாக்கும் ஆதர்ஷ் அண்ணாக்கும் சொல்லிடு.... கட்டாயம் இந்த வாரமே ரெண்டு பேரும் வந்துடுங்க..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


லாவண்யா அழைப்பைத் துண்டித்ததுமே சிதாராவின் மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வந்தது.


ஆர்யான், "குட் நைட் மிசிஸ்.ஆர்யான்😜" என அனுப்பி இருந்தான்.


அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சிதாரா,


"இவன் ஒருத்தன்... லூசு மாதிரி பண்ணிக்கிட்டு..." என அவனைத் திட்டினாலும் அவள் முகத்தில் புன்னகையொன்று வந்து மறைந்தது.


இங்கு லாவண்யா மொபைலை வைத்தவள்,


"ஆர்யான் அண்ணன் என்ன காரணத்தால உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னார்னு தெரியல சித்து... ஆனா நீ ஹாஸ்பிடல்ல சுய நினைவில்லாம கிடந்தப்போ அவர் உனக்காக துடிச்சத கண்கூடா பார்த்தேன்... நிச்சயம் அவர் உன்ன நல்லா பார்த்துப்பாரு.." எனத் தனக்கே சொல்லிக் கொண்டவள் அக்ஷராவிற்கும் ஆதர்ஷுக்கும் அழைத்து தகவல் கூறினாள்.


லாவண்யா கூறிய செய்தியில் மகிழ்ந்த ஆதர்ஷ் உடனே ஆர்யானுக்கும் சிதாராவுக்கும் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினான்.


ஆதர்ஷ் அபினவ்விற்கு அழைத்துக் கூற,


அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் கேட்டுக் கொண்டிருந்தான்.


பிரணவ் மனதில், "உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்... குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்..." என நினைத்துக் கொண்டான்.


இவர்களில் யார் நினைப்பது நடக்கும்????


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 14
ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் லாவண்யா, அக்ஷரா இருவருவருமே கோயம்புத்தூர் வந்தடைந்தனர்.


நிச்சயத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஆர்யான் மற்றும் சிதாராவின் குடும்பம் இணைந்து நிச்சயத்துக்கு அனைவருக்கும் உடைகள், ஆபரணங்கள் வாங்கச் சென்றனர்.


ஆடைத் தேர்வை பிள்ளைகள் வசமே பெரியவர்கள் ஒப்படைத்து விட்டனர்.


கீழ் தளத்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் தேர்வு செய்து கொண்டிருக்க,


மேல் தளத்தில் ஆர்யான் ஆண்கள் பிரிவிலும் தோழிகள் மூவரும் பெண்கள் பிரிவிலும் தமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.


பெண்கள் அவசரமாக உடை தேர்வு செய்தால் அதிசயம் தானே.


இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.


ஆர்யான் தனக்கு பொருத்தமான வேஷ்டி சட்டை எடுத்துக் கொண்டு தோழிகள் இருந்த பக்கம் வந்தான்.


அவர்களோ அங்கிருந்த பணியாளரை வைத்து செய்து கொண்டிருந்தனர்.


அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து உடைகளும் தோழிகள் முன் கடை பரப்பப்பட்டிருக்க இன்னுமே தேர்வு செய்தபாடில்லை.


அதைக் கண்ட ஆர்யான்,


"இதுங்கள திருத்தவே முடியாது... எவ்வளவு நேரம் தான் செலக்ட் பண்ணுவீங்க... இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல... தள்ளுங்க நானே பாக்குறேன்..." என மூவரிடமும் கூற,


தோழிகள் மூவரும் அவனுக்கு வழி விட்டு நின்றனர்.


சிதாரா மெதுவாக அக்ஷராவின் காதில்,


"என்னவோ பெரிய ஹீரோ போல வந்து சீன் போடுறான் பாரு... பொண்ணுங்களோட ட்ரஸ் செலக்ட் பண்ணுறது அவ்வளவு ஈசியா என்ன... எப்படி முழிக்க போறான் பாரு..." என்க அக்ஷரா வாய் மூடி சிரித்தாள்.


ஆர்யானோ ஐந்து நிமிடத்திலே அவர்கள் பக்கம் திரும்ப,


சிதாரா, "என்ன ஜிராஃபி... ஏதாவது ஹெல்ப் வேணுமா..." என அவனைக் கேலி செய்ய,


ஆர்யான் மூவரின் கையிலும் அழகான வேலைப்பாடுடைய லெஹேங்காவை வைக்கவும் மூவருமே அதனை விழி விரித்து நோக்கினர்.


லாவண்யா, "அண்ணா.... சும்மா சொல்லக் கூடாது... அவ்வளவு அழகா இருக்கு இந்த ட்ரஸ்... நாம பல மணிநேரம் உக்காந்து தேடினாலும் இவவ்ளவு நல்லதா செலெக்ட் பண்ண மாட்டோம்..." என்க,


அக்ஷராவும் அதனை ஆமோதித்தாள்.


சிதாரா இன்னும் அமைதியாக இருக்க,


அவளை குறும்படன் நோக்கிய ஆர்யான்,


"ஏதாவது சொல்லனுமா மினி... பரவாயில்ல தேங்க்ஸ் எல்லாம் சொல்ல அவசியமில்ல... நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்..." எனக் கூறி கண்ணடித்தான்.


சிதாரா சமாளிப்பாக, "ஹ்ம்ம்... ஏதோ பரவாயில்லை... நல்லா தான் செலெக்ட் பண்ணி இருக்க... " எனக் கூறியவள் ஆர்யான் மீண்டும் ஏதாவது கூறும் முன் தோழிகளை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.


அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ஆர்யானும் கீழே சென்றான்.


நகைக்கடைக்கு சென்று விட்டு ஒரு ஹாட்டலில் இரவுணவை முடித்தனர்.


சங்கர் இரவு அங்கேயே ஆர்யானின் குடும்பத்தைத் தங்கி விட்டு செல்லக் கூற,


ரஞ்சித், "இல்ல சம்மந்தி... கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க அப்படி தங்கினா அவ்வளவு நல்லா இருக்காது... பக்கத்துல ஏதாவது ஹாட்டல்ல தங்கிட்டு காலைல கிளம்புறோம்... அப்போ வரோம் சம்மந்தி..." என்று விட்டு அவர்கள் விடை பெற்றனர்.


செல்லும் முன் சிதாராவிடம் வந்த ஆர்யான் அவள் கையில் ஒரு பொலித்தீன் பையைக் கொடுக்க சிதாராவோ அவனை கேள்வியாய் ஏறிட்டான்.


"மினி இதுல ஒரு சேரி இருக்கு... உனக்குன்னு சொல்லி நானே ரெடி பண்ணது... உனக்கு மனசுக்கு ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ணுற ஏதாவது ஒரு நாளைக்கு தான் நீ இத கட்டனும் மினி..." என ஆர்யான் கூற,


அவனுக்கு நன்றி கூறி பெற்றுக் கொண்ட சிதாரா,


"இந்த கொஞ்ச நாளா நீ ரொம்ப டிஃபரன்ட்டா பிஹேவ் பண்ணுற ஜிராஃபி... எனக்கு இன்னுமே உன் மேல டவுட்டா இருக்கு..." என்க,


அவளுக்கு பதிலேதும் கூறாது புன்னகைத்து விட்டு கிளம்பினான் ஆர்யான்.


நாட்கள் வேகமாகக் கடந்து நிச்சய தினத்தை அடைந்தது.


சாதாரணமாக நிச்சயத்தை நடத்தலாம் என ஆர்யானும் சிதாராவும் எவ்வளவு கூறியும் கேட்காது ரஞ்சித், சங்கர் இருவருமே பெரிய மண்டபமாகப் பார்த்து அனைவரையும் அழைத்து விமர்சையாக நிச்சயத்தை ஏற்பாடு செய்தனர்.


ஆதர்ஷ், அபினவ், அவர்களின் குடும்பத்தினர், லாவண்யா மற்றும் அக்ஷராவின் குடும்பத்தினர் என அனைவரும் நிச்சயத்துக்கு வந்திருந்தனர்.


ஆர்யான் அன்று தோழிகள் மூவருக்கும் தேர்ந்தெடுத்த லெஹேங்காவையே மூவரும் அணிந்திருந்தனர்.


நல்ல நேரம் பார்த்து நிச்சயப் பத்திரிகை வாசிக்கவென தேவி லாவண்யாவிடம் சிதாராவை அழைத்து வரக் கூற,


சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்த லாவண்யா அவளை அங்கு காணாமல் குழம்பினாள்‌.


பாத்ரூமிலும் பார்க்க அங்கும் இல்லை.


பதட்டமாக சங்கர், ரஞ்சித், அகிலா, தேவி நால்வரும் இருந்த இடத்திற்கு வந்தவள் சிதாரா அறையில் இல்லாத விஷயத்தைக் கூற,


சரியாக அபினவ்வும் வந்து ஆர்யானையும் காணவில்லை எனக் கூறினான்.


அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.


இருவருக்கும் அழைத்துப் பார்க்க இருவருக்குமே முழு ரிங் சென்று கட் ஆகியது.


ஆதர்ஷும் அபினவ்வும் அவர்களைத் தேடி விட்டு வருவதாக செல்லப் பார்க்க மண்டப வாயிலில் ஆர்யான் சிதாராவின் கைப் பிடித்து அழைத்து வருவதைக் கண்டதும் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.


ரஞ்சித், "எங்கடா போனீங்க... ரெண்டு பேரையும் காணோம்னு சொன்னதும் எங்க எல்லாருக்கும் எவ்வளவு டென்ஷனா இருந்தது தெரியுமா..‌. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருக்குற விருந்தாளிங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்..." என ஆர்யானைக் கடிந்து கொள்ள,


"சாரிப்பா... மினிக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குறதா சொன்னா.. அதான் ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய நின்னு காத்து வாங்கிட்டு இருந்தோம்..." என ஆர்யான் கூற,


ரஞ்சித் மீண்டும் அவனைத் திட்ட வாயெடுக்க அவரைத் தடுத்த சங்கர்,


"அப்புறம் இத பத்தி பேசிக்கலாம் சம்மந்தி... நல்ல நேரம் முடியிறதுக்கு முன்னாடி பத்திரிகைய வாசிச்சு நிச்சயத்த முடிக்கலாம்..." என்கவும் ரஞ்சித் அமைதியாகினார்.


ஆனால் ஆர்யானின் முகம் ஒரு வித இறுக்கத்துடனும் சிதாராவின் முகம் பயத்துடனும் இருப்பதை ஆதர்ஷ் அவதானித்து விட்டான்.


பின் பத்திரிகை வாசித்து முடித்ததும் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ளக் கூறினர்.


ஆதர்ஷ் கையை நீட்ட சிதாரா கைகள் நடுங்க தயக்கத்துடன் அவன் கைப் பிடித்து மோதிரத்தை அணிவித்தாள்.


பின் சிதாரா கையை நீட்ட அவள் கரம் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆர்யான்,


அவள் கரத்தை எடுத்து சற்று அழுத்தியவன் அவள் கண்களைப் பார்க்க,


சிதாராவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆர்யான் சிதாராவின் கைப் பற்றி அழுத்தவும் சிதாராவின் கை நடுக்கம் குறைந்து அவளும் அமைதியாகினாள்.


ஆர்யான் சிதாராவைப் பார்த்து தன் கண்களை மூடித் திறக்கவும் சிதாரா கண்கள் லேசாகக் கலங்க ஆர்யானைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


பதிலாக சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.


வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் விருந்து உண்டு விட்டு வாழ்த்துக் கூறி விடை பெற்றனர்.


பின் அனைவரும் மண்டபத்திலிருந்து கிளம்பி சிதாராவின் வீட்டுக்குச் சென்றனர்.


லாவண்யா, அக்ஷராவிடம் ஆர்யான்,


"மினி ரொம்ப டையர்டா இருப்பா... நீங்க ரெண்டு பேரும் அவள ரூமுக்கு கூட்டிட்டு போங்க..." என்க அவர்களும் சிதாராவை அழைத்துக் கொண்டு சென்றனர்.


மற்ற அனைவரும் ஹாலில் இருக்க, "உங்க எல்லோரு கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லனும்..." என ஆர்யான் பீடிகையுடன் ஆரம்பிக்கவும் அனைவரும் அவனைக் குழப்பமாய் நோக்கினர்.


ஆர்யான், "அங்கிள்... அப்பா... எனக்கும் மினிக்கும் நாளைக்கே கல்யாணம் நடக்கனும்..." என்க அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.


அறைக்குச் சென்றதுமே மனதில் இருந்த பாரத்தை மறக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ தெரியாது, சிதாரா உடையைக் கூட மாற்றாது தூங்க,


அவளை அறையில் விட்டு வெளியே வந்த அக்ஷரா, லாவண்யாவுமே ஆர்யான் கூறியதைக் கேட்டு கிளம்பினர்.


ஆதர்ஷ் ஏற்கனவே மண்டபத்திலிருந்தே இருவரையும் அவதானித்துக் கொண்டிருந்ததால் ஆர்யான் என்ன சொல்ல வருகிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.


சங்கர், "என்ன மாப்பிள்ளை சொல்றீங்க... திடீர்னு இப்படி சொன்னா என்ன பண்ண முடியும்... அதுவுமில்லாம நீங்க தானே சொன்னீங்க ரெண்டு பேரும் வன் வெகேஷன்ல தான் வந்திருக்கீங்க... அதனால திரும்ப நியுயார்க் போய்ட்டு சித்துவோட ஸ்டடீஸ முடிச்சிட்டு வந்து அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்குறேன்னு... நீங்களும் அது வரை அங்கயே பண்ணுறேன்னீங்க... நீங்க சொன்னதுனால தானே கல்யாணத்த தள்ளி போட்டுட்டு நிச்சயத்த மட்டும் ஏற்பாடு பண்ணிணோம்..." என்றார்.


ரஞ்சித்தோ கோவமாக, "வர வர நீ உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்குற ஆரு... நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னா எப்படி... உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா... அப்படி உடனடியா கல்யாணத்த நடத்தனும்னு ஏன் திடீர்னு முடிவெடுத்திருக்க... என்ன நடந்தது..." எனக் கேட்டார்.


தாய்மார் இருவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் முழிக்க ஏனையோர் பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்தனர்.


"ஆமா நான் தான் கல்யாணத்த லேட் ஆகி வெச்சிக்கலாம்னு சொன்னேன்... ஆனா இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்... என்ன ஏதுன்னு எல்லாம் கேக்காதீங்க... எப்பவா இருந்தாலும் நானும் மினியும் தானே மேரேஜ் பண்ணிக்க போறோம்... அதை கொஞ்சம் அவசரமா நாளைக்கே வைங்கன்னு நான் சொல்றேன்... அதான் இப்போ இங்க எல்லாரும் இருக்காங்க தானே... ஏதாவது கோயில்ல சிம்பிளா மேரேஜ வெச்சிக்கலாம்..." என ஆர்யானும் பதிலுக்குப் பேச,


ரஞ்சித்துக்கு ஆர்யானின் நடவடிக்கையில் ஆத்திரம் வந்தது.


அகிலா தான் அவரை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்க வைத்தார்.


சங்கர், "ஆனா மாப்பிள்ளை..." என ஏதோ கூற வர,


ஆர்யான், "அங்கிள் ப்ளீஸ்... அப்பா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாரு... நீங்களாவது நான் சொல்றத கேளுங்க... இந்த கல்யாணம் கண்டிப்பா நாளைக்கே நடந்தாகனும்..." எனக் கெஞ்சினான்.


ஆர்யான் கூறியதைக் கேட்டு சங்கர் யோசிக்க,


அவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த லாவண்யாவின் தந்தை ராஜேந்திரன்,


"சங்கர்... அதான் மாப்பிள்ளை தம்பி அவ்வளவு சொல்றாரே... ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்... நம்ம குடும்பத்துல முக்கியமானவங்க எல்லாருமே இங்க இருக்காங்க... நம்ம பொண்ணுக்கு நம்ம ஆசிர்வாதம் போதாதா.. எங்க எல்லாரையும் விட மூணாவது மனுஷங்களா இவங்க நல்லா இருக்கனும்னு ஆசை பட போறாங்க... நீ சரின்னு சொல்லு... சம்மந்தி நீங்களும் தான்... நாளைக்கே ஏதாவது நல்ல கோயில்ல நான் கல்யாணத்த ஏற்பாடு பண்ணுறேன்... அதுவுமில்லாம ரெண்டு பேரும் எப்படியும் இன்னும் கொஞ்சம் நாள்ள வெளிநாட்டுக்கு போக போறாங்க... அது புருஷன் பொஞ்சாதியா போனா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும் தானே..." என சங்கரிடமும் ரஞ்சித்திடமும் கூறினார்.


அனைவருக்கும் அவரது சொல் சரி எனப்பட சங்கர், ரஞ்சித் இருவருமே சம்மதித்தனர்.


அவர்கள் சம்மதித்ததும் தான் ஆர்யான் நிம்மதியாக உணர்ந்தான்.


ஆர்யான் வெளியே செல்ல அபினவ், ஆதர்ஷ் இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.


ஆதர்ஷ், "ஏதாவது ப்ராப்ளமா ஆர்யான்..." எனக் கேட்க,


இருவரையும் கண்டு நொடியில் முக பாவனையை மாற்றிக் கொண்ட ஆர்யான்,


"ச்சீச்சீ... அப்படி எதுவும் இல்லையே..." என சிரித்து சமாளிக்க,


அபினவ், "அப்போ எதுக்கு சடன்னா மேரேஜ‌ நடத்தனும்னு சொல்ற..." என்றான்.


ஆதர்ஷும் ஆர்யானைத் தான் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆர்யான், "அது வேற ஒன்னுமில்ல... நிச்சயம் தான் முடிஞ்சதிடுச்சில்ல..‌. மேரேஜையும் அப்படியே முடிச்சிட்டா சந்தோஷம் தானே... எனக்கும் மினி கூடவே இருந்தது போல இருக்கும்... வன் மினிட்... எனக்கு இம்போர்டன்டான கால் ஒன்னு... நாம அப்புறம் பேசலாம்..." என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.


செல்லும் அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.


பின் அபினவ்விடம், "சித்துக்கு இன்னைக்கு என்கேஜ்மன்ட்னு பிரணவ்வுக்கு தெரியுமா..." என்க,


"ஆமாடா... பட் டூ டேய்ஸ் முன்னாடி ஏதோ பிசினஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனான்... எங்க போறேன்னு சொல்லல... டேய்.. அவன் இப்ப முன்ன மாதிரி இல்லடா... சித்துவ நெனச்சி உண்மையாவே திருந்திட்டான்... நீ அவன் கூட முன்ன மாதிரி பேசுடா... ரொம்ப ஃபீல் பண்ணுறான்..." என அபினவ் கூறவும் வெறும் தலையசைப்பை மட்டும் பதிலாக அளித்தான் ஆதர்ஷ்.


மறுநாள் காலை கோயிலில் குடும்பத்தினர் மத்தியில் அனைவரின் ஆசியுடனும் ஆர்யான் மற்றும் சிதாரா திருமணம் எளிமையாக நடந்தது.


சிதாராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான் ஆர்யான்.


ஆர்யான் சிதாராவின் கழுத்தில் தாலி கட்டியதும் அவளையும் அறியாமல் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.


அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட ஆர்யான்,


"நான் உன் பக்கத்துல இருக்கும் போது எதுக்காகவும் நீ அழக் கூடாது மினி..." என்கவும் சரி எனத் தலையாட்டினாள்.


பின் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.


திருமணத்தை ஆர்யான் உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியதில் மாத்திரமே ரஞ்சித்துக்கு கோவம் இருந்தது.


மற்றபடி சிதாரா தன் வீட்டு மருமகளானது அவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.


சிதாராவை அணைத்துக் கொண்ட அகிலா,


"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சித்துமா... எது எப்படியோ நீ எங்க வீட்டு மருமகள் ஆகிட்ட... நீ எங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு இல்லங்குற குறையை தீர்க்க வந்தவ... எங்க வீட்டுல உன்ன ராணி மாதிரி பார்த்துப்போம்... உனக்கு என்ன வேணும்னாலும் இந்த அத்த கிட்ட தயங்காம கேளு..." எனக் கூறவும் சிதாரா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.


சங்கர், தேவி இருவருக்கும் சிதாராவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததில் மகிழ்ச்சி.


தேவி சிதாராவிடம், "இனி அவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு அப்பா அம்மா... அந்த குடும்பத்தோட மருமகளா அவங்க மரியாதைய காப்பாத்துற கடமை உனக்கும் இருக்கு சித்து... மாப்பிள்ளை பேச்சை கேட்டு நட... அவர் எது பண்ணாலும் நிச்சயம் அது உன் நல்லதுக்காகத் தான் இருக்கும்..." என்று விட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.


சங்கரும் சிதாராவை உச்சி முகர்ந்து, "சந்தோஷமா இருமா... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் மாப்பிள்ளை பாத்துப்பாரு..." என்க அவரை அணைத்து கண்ணீர் விட்டாள்.


சற்று நேரத்திலே நண்பர்கள் அனைவரும் சிதாராவை கேலி கிண்டல் செய்து சிரிக்க வைத்தனர்.


கோயிலுக்கு வந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ராஜேந்திரன்.


அனைவரும் விருந்து பரிமாறுவதில் கவனமாக இருக்க,


சிதாராவை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாய் வந்தான் ஆர்யான்.


அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட சிதாரா,


"எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரயன்... அவன் திரும்ப ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது... ப்ளீஸ்... என்ன விட்டு எங்கையும் போயிடாதே..." என அழுதாள்.


ஆர்யான், "மினி... இனிமே நீ எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்ல... நான் தான் உன் கூட இருக்கேன்ல... என்ன பிரச்சினையா இருந்தாலும் என்ன தாண்டி தான் உன்ன நெருங்கனும்..." என்றான்.


நண்பர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் வருவதைக் கண்டதும் ஆர்யானை விட்டு விலகிய சிதாரா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.


அக்ஷரா, "என்ன ஆர்யான் அண்ணா... இப்போ தானே கல்யாணம் முடிஞ்சது... அவ்வளவு பொறுமை இல்லயா உங்களுக்கு... அதுக்குள்ள பொண்டாட்டிய தனியா கூட்டிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணுறீங்க..." எனக் கேலி செய்ய அனைவரும் நகைத்தனர்.


ஆர்யான் அவர்களைப் பார்த்து இளித்து வைக்க,


சிதாராவோ சங்கடமாக புன்னகைத்தாள்.


லட்சமி பாட்டி நண்பர்கள் இருந்த இடம் வந்தவர்,


"என்னைய டார்லிங் டார்லிங் சொல்லி கொஞ்சிட்டு மெதுவா என் பேத்திக்கு ரூட்டு விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல படுவா..." என ஆர்யானிடம் கூற,


"டார்லிங்... ரொம்ப பொறாமைப்படுற போல தெரியிது... நீ மட்டும் சரின்னு சொல்லு... இதே மேடைல உன்ன ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன்..." என ஆர்யான் கூறவும் அனைவரும் சிரித்தனர்.


லட்சுமி பாட்டி, "பாத்தியா சீதா கண்ணு... எப்படி பேசுறான்னு... இப்போ தான் கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ரெண்டாம் தாரம் கேக்குதாம்..." என சிதாராவிடம் ஆர்யானை மாட்டி விட,


சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக முறைத்தாள்.


ஆர்யான் உடனே முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ளவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.


லட்சுமி பாட்டி, "இவன இப்போ இருந்தே உன் முந்தானைல முடிச்சு வெச்சிக்கோ சீதா... உன்ன விட்டு வேற எவளையாச்சும் பார்த்தா என் கிட்ட சொல்லு... இவன் கண்ண புடுங்கி காக்காக்கு போடுறேன்..." என்கவும்,


"டார்லிங்.... வை திஸ் கொலவெரி.." என ஆர்யான் சோகமாகக் கேட்கவும் அனைவருக்கும் அவனைப் பார்த்து சிரிப்பு வந்தது.


இவர்கள் இங்கு சந்தோஷமாக இருக்க,


"ஓஹ்ஹ்ஹ்... என் கிட்ட இருந்து அவள காப்பாத்த உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா... விட மாட்டேன்டா... அவள உன் கிட்ட இருந்து பிரிச்சு உன்ன பலி வாங்காம விட மாட்டேன்டா... உன்ன கதற வைக்கிறேன் பாரு...." எனக் கூறி பயங்கரமாக சிரித்தான் அவன்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 15
திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சிதாராவின் வீட்டுக்கு கிளம்பினர்.

காலையிலிருந்தே திருமணத்திற்காக தயாரானதில் சிதாராவுக்கு சோர்வாக இருக்கவும் தேவியிடம்,

"மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... நான் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்..." என்க,

தேவி அவசரமாக, "இல்ல சித்து... இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பி ஆகனும்... உன்ன அங்க கொண்டு போய் விடனுமே..." என்க சிதாராவின் முகம் வாடியது.

யாருக்கு தான் பிறந்த வீட்டைப் பிரியும் சோகம் இல்லாமல் இருக்கும்.

அதுவும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் சொந்த வீட்டுக்கே விருந்தாளியாகி விடுவாள்.

சரியாக சங்கரும் ஆர்யானுடன் அவ்விடம் வர,

"என்னாச்சு தேவி... ஏன் சித்து ஃபேஸ் டல்லா இருக்கு..." என சங்கர் கேட்டார்.

தேவி, "ஒன்னுமில்லங்க... டயர்டா இருக்கு தூங்குறேன்னு சொன்னா... நான் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு வேண்டாம்னு சொன்னேன்..." என்க,

ஆர்யான், "அதொன்னும் பிரச்சினை இல்ல அத்த... மினி நீ போய் ரெஸ்ட் எடு..." எனக் கூறினான்.

சங்கர், "இல்ல மாப்பிள்ளை... இப்போவே உங்க வீட்டுக்கு கிளம்பினா தான் நேரமா போய் சேர முடியும்... கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போறது தான் முறையும் கூட..." என்கவும் ஆர்யான் ரஞ்சித்தை அழைத்தான்‌.

ரஞ்சித் வர அவரிடம், "டாட்... நான் சொன்ன விஷயம் என்னாச்சு... எல்லாம் ஓக்கேயா..." என ஆர்யான் கேட்க,

"ஆமா ஆரு.. எல்லாம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.. நாம கிளம்பினா சரி.." என்றார் ரஞ்சித்.

தந்தை மற்றும் மகனின் உரையாடலில் சங்கர், தேவி, சிதாரா மூவரும் புரியாமல் குழம்ப,

ஆர்யான் சங்கரிடம், "மாமா... இப்ப என்ன... உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு தானே யோசிக்கிறீங்க... தாராளமா போலாம்... இங்க கோயம்புத்தூர்லே அப்பா ஒரு வீடு வாங்கி இருக்காரு... அங்க போய் எல்லாம் செய்யலாம்..." என்றான்.

"எப்போ மாப்பிள்ளை வீடெல்லாம் வாங்குனீங்க... அதுவும் இங்க எதுக்காக வாங்கி இருக்கீங்க.." என சங்கர் கேட்டார்.

"இல்ல மாமா... எப்படியும் கல்யாணம் முடிஞ்சா மறுவீடு அது இதுன்னு நிறைய சம்பிரதாயம் இருக்கும்... எனக்கும் மினிக்கும் இப்போதைக்கு அத பத்தி பிரச்சினை இல்லன்னாலும் இருக்குற சின்ன சின்ன சடங்கயாவது செஞ்சா பெரியவங்க உங்களுக்கு திருப்தியா இருக்கும்... என்ன இருந்தாலும் எங்க கல்யாணம் அவசரத்துல நடந்தது உங்க மனசுல ஒரு பெரிய குறையா இருக்கும்... அதான்... சென்னை கோயம்புத்தூர் மாறி மாறி போய்ட்டு இருந்தாலும் கஷ்டமா இருக்கும்... கொஞ்ச நாளுக்கு தானே நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்க போறோம்... அது வர அந்த வீட்டுலயே தங்கிக்கலாம்னு இருக்கோம்... அம்மாவும் அப்பாவும் எங்க கூடவே இருக்கேன்னு சொன்னாங்க... மினிக்கும் இங்க இருந்தா உங்கள அடிக்கடி பாக்கலாம்..." என்றான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு சிதாராவுக்கு சந்தோஷமாக இருந்தது.

அதை அவளது முகமே காட்டிக் கொடுத்தது.

அதன் பின் அனைவரும் ஆர்யான் வாங்கிய வீட்டுக்கு கிளம்பினர்.

சென்னையிலிருக்கும் வீடு போல் இல்லாவிட்டாலும் ஓரளவு பெரிய வீடாகவே வாங்கி இருந்தார்கள்.

சங்கர், தேவி இருவருக்குமே தம் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு உள்ளதில் மகிழ்ச்சி.

அகிலா இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர், "வலது கால எடுத்து வெச்சி உள்ள வாம்மா..." என்க சிதாராவும் அதன் படி செய்தாள்.

பின் சிதாராவை விளக்கேற்றக் கூற அதையும் செய்தாள்.

அவளுக்கு எப்போதுடா இந்த சடங்குகள் முடியும் என்றிருந்தது.

சிறிய சிறிய சடங்குகள் எல்லாம் முடிய சிதாரா இன்னும் களைத்துப் போய் இருந்தாள்.

சிதாராவிடம் வந்த அவளது தோழிகள் இருவரும் சிதாரா ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு அவள் காதில் பே.... எனக் கத்தினர்.

பதறிய படி தன்னிலைக்கு வந்தவள் இருவரையும் முறைக்க,

அக்ஷரா, "என்னாச்சு சித்து... நானும் நேத்துல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்.. ஒன்னு ஏதோ பெரிய யோசனைல இருக்க... இல்லன்னா முகத்த சோகமா வெச்சிட்டு இருக்க... ஒருவேளை உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா..." என்க லாவண்யாவும் அதை ஆமோதித்தாள்.

"ச்சீச்சீ... அப்படில்லாம் எதுவுமில்ல... ஐம் ஓக்கே..." என சிதாரா அவசரமாகக் கூற,

அவளை சந்தேகமாக பார்த்த லாவண்யா,

"இல்ல... கன்ஃபோர்ம் நீ எதையோ எங்க கிட்ட மறைக்குற... சொல்லு சித்து..." என்க சிதாராவின் முகம் பதட்டமடைந்தது.

சிதாரா பதட்டமாக இருப்பதை தூரத்திலிருந்து அவதானித்த ஆர்யான் அவசரமாக அவ்விடம் வந்து அக்ஷரா மற்றும் லாவண்யாவிடம்,

"என்ன சிஸ்டர்ஸ்... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் பொண்டாட்டிய டிஸ்டர்ப் பண்ணுறது போல தெரியுது... புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு பிரைவசி குடுத்துட்டு போங்க அந்த பக்கம்...." எனப் பொய்யாக முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கூறினான்.

அவனைப் பார்த்து சிரித்த அக்ஷரா, "சாரி ப்ரதர்... உங்க பொண்டாட்டிய நாங்க ஒன்னும் கொத்திட்டு போய்ட மாட்டோம்... பரவாயில்ல... ஏதோ நீங்க சொல்றதுக்காக நாங்க போறாம்..." என ஆர்யானிடம் கூறியவள்,

சிதாராவைப் பார்த்து, "நீங்க நடத்துங்க மேடம்... " எனக் கூறி கண்ணடித்து விட்டு லாவண்யாவுடன் அங்கிருந்து சென்றாள்.

சிதாரா இன்னும் பதட்டமாக இருக்க,

"மினி... நீயே இப்போ எல்லாரு கிட்டயும் நடந்தத சொல்லிடுவ போல... டென்ஷன் ஆகாம இரு முதல்ல... நான் தான் சொல்றேன்ல... நான் எல்லாம் பாத்துக்குறேன்..." என ஆர்யான் கூற சிதாரா அவனிடம் சரி என தலையாட்டினாள்.

பின் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப சிதாராவிடம் வந்த அகிலா,

"நீ மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுமா... நான் ஆருவ அனுப்பி வைக்கிறேன்..." என்க,

"சரி அத்த..." என்று விட்டு மேலே இருந்த அறைக்குச் சென்றாள்.

அறையைக் கண்டதும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.

அகிலா சடங்கு என்று ஏதாவது ஏற்பாடு செய்திருந்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் அறை எந்த அலங்காரமுமின்றி சாதாரணமாக இருக்கவும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் ஆர்யான் தான் இப்போதைக்கு எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தாயைத் தடுத்திருந்தான்.

வீட்டு முற்றத்தில் கையில் இருந்த மொபைலை வெறித்த வண்ணம் இருந்த ஆர்யானுக்கு முந்தைய நாள் இரவு நடந்தவைகள் நினைவு வந்து அவன் உடல் இறுகியது.

முந்தைய நாள் இரவு

லாவண்யா, அக்ஷரா இருவரும் சிதாராவை நிச்சயத்துக்கு தயார்ப்படுத்தி விட்டு வெளியேற,

அறைக்குள்ளே அடைந்து கிடக்கப் பிடிக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டு பின் வாயில் வழியாக மண்டபத்திற்கு வெளியே‌ வந்தாள் சிதாரா.

அவளின் கெட்ட நேரம் அனைவரும் நிச்சய வேலைகளில் மூழ்கி இருந்ததால் யாரும் அவள் வெளியே சென்றதைக் கவனிக்கவில்லை.

சிதாரா மண்டபத்துக்கு வெளியே சற்று மறைவான இடத்தில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருக்க,

திடீரென பின்னாலிருந்து ஒரு கை வந்து முரட்டுத்தனமாக அவள் வாயை அடைத்தது.

அதிர்ந்தவள் கத்தவும் முடியாமல் தன் வாயை மூடியிருந்தவனின் கையை ஒரு கையால் எடுக்கப் பார்க்க,

சிதாராவின் வாயை மூடி இருந்தவனோ இன்னும் அழுத்தமாக அவள் வாயை அடைத்துப் பிடித்து,

"ஒழுங்கு மரியாதையா கத்தி கூச்சல் போடாம என் கூட வந்துடு... இல்லன்னா சங்க அறுத்துறுவேன்..." என மிரட்டினான்.

அவன் யாரென சிதாராவுக்கு அடையாளம் தெரியவில்லை.

முகத்தை மறைத்திருக்க இதற்கு முன் கேட்டிராத குரலாக வேறு இருந்தது.

அவனின் முரட்டுப் பிடி போலவே அவன் குரலும் பயங்கரமாக இருந்தது.

தலையை அங்குமிங்கும் ஆட்டி அவனிடமிருந்து விடுபடப் போராடியவள் கையிலிருந்த மொபைல் ஞாபகம் வரவும் அவனுக்கு தெரியாதவாறு கடைசியாக அழைத்து இருந்த எண்ணுக்கு அழைத்தாள்.

மண்டபத்தினுள் ரஞ்சித்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யான் திடீரென சிதாராவிடமிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.

மொபைல் வைப்ரேட் ஆகியதும் அழைப்பு ஏற்கப்பட்டது எனப் புரிந்தவள் அவசரமாக மொபைலைக் கீழே போட்டு விட்டு இரு கையாலும் அந்த முரடனின் கையை விலக்கப் போராடினாள்.

"ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என சிதாரா சத்தமெழுப்ப,

அந்த முரடன், "ஹேய்... சத்தம் போட்டா கொன்னுருவேன்...‌ இப்போ ஒழுங்கா என் கூட வரலன்னா உன் கூட சுத்துறானே... அவனையும் சேர்த்து போட்டு தள்ளிருவேன்..." என்க சிதாரா அதிர்ந்தாள்.

அவளுக்கு அழுகையாக வந்தது.

எதுவும் செய்ய முடியவில்லை.

அந்த முரடன் பேசியதைக் கேட்ட ஆர்யான் சிதாராவுக்கு ஏதோ ஆபத்து என விளங்கி மொபைலைக் காதில் வைத்தவாறே வெளியே ஓடி வந்தான்.

மண்டபத்துக்கு வெளியே‌ சுற்றி முற்றிப் பார்க்க எதுவுமே தெரியவில்லை.

அந்த முரடனின்‌ கையை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிய சிதாரா,

"விடுடா... யாருடா நீ.. பின் வாசல் வழியா வந்து என்ன எங்க கூட்டிட்டு போகப் போற..." என அழைப்பில் இருந்தவருக்கு தான் எங்கிருக்கிறோம் என விளங்கிக் கொள்ளக் கூறினாள்.

சிதாரா தன் கையை விலக்கி விட்டு கத்தத் தொடங்கவும் அவசரமாக தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த மயக்க மருந்தடித்த கைக்குட்டையை எடுத்து அவள் மூக்கைப் பொத்தினாள்.

அந்த மயக்க மருந்தின் தாக்கத்தில் சிதாரா மயக்கமடைய,

அவளை எடுத்துச் செல்ல சிதாராவின் வாயையும் கையையும் கட்டிக் கொண்டிருக்கும் போது அவனின் பின் பக்கத்திலிருந்து முதுகில் பட்ட உதையில் சிதாராவை விட்டு தள்ளிச் சென்று விழுந்தான் அந்த முரடன்.

சிதாரா கூறியது விளங்கி ஆர்யான் தான் அங்கு வந்திருந்தான்.

ஆர்யான் அங்கு வரவும் பயந்த முரடன் அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆர்யான் அவனைத் துரத்திச் சென்றான்.

பாதி தூரம் செல்லும் போதே எப்படியோ அந்த முரடன் தப்பித்து விட,

சிதாராவிடம் மீண்டும் ஓடி வந்தான் ஆர்யான்.

அவள் இன்னும் மயக்கத்திலிருக்க,

"மினி... மினி.." என அவள் கன்னம் தட்டியவன் அருகிலிருந்த டெப்பிலிருந்து தண்ணீர் எடுத்து சிதாராவின் முகத்தில் தெளித்தான்.

சிதாரா கண் முழித்தவள் ஆர்யானைக் கண்டு, "ரயன்...." என அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

பயத்தில் அழுது அவளுக்கு மூச்சு வாங்க மீண்டும் வலிப்பு வந்திடுமோ எனப் பயந்த ஆர்யான்,

"எதுவும் ஆகல மினி... அழாதே... அழாதே.. கூல்... கூல்... நான் தான் உன் கூட இருக்கேனே... உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்... காம் டவுன்..." என அவளை சமாதானம் செய்ய சற்று ஆசுவாசமடைந்தாள் சிதாரா.

சிதாரா, "யாரு ரயன் அது... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. எதுக்காக என்ன கடத்த முயற்சி பண்ணான்.." என பயந்து நடுங்கியவாறு கேட்க,

"அதான் நான் வந்துட்டேனே மினி... நீ பயப்படாதே... முதல்ல கண்ண தொடச்சிக்கோ... யாராவது பாத்துட போறாங்க... வா நாம உள்ள போலாம்... யாரு கிட்டயும் இத பத்தி சொல்லாதே... பயந்துடுவாங்க... உனக்கு எதுவுமில்ல... அமைதியா இரு..." என பல சமாதானம் கூறி சிதாராவை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆர்யான் கூறியதால் சிதாரா இது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவள் மனதில் பயமும் குழப்பமும் இருந்து கொண்டே இருந்தது.

அது பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஆர்யான் டூர் சென்று வந்த அன்று இரவு பூஞ்சோலைக் கிராமத்தில் வைத்து பிரணவ் தன்னிடம் கூறியதை எண்ணிப் பார்த்தான்.

இரவு டூர் சென்று வந்த களைப்பில் அனைவரும் தூங்கி இருக்க அகிலாவுடன் பேசுவதற்காக தோட்டத்தில் இருந்தான் ஆர்யான்.

தாயுடன் பேசி விட்டு வீட்டினுள் செல்லத் திரும்ப அங்கு பிரணவ் நின்று கொண்டிருந்தான்.

ஆர்யான் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"உனக்கும் தாராவுக்கும் இடைல என்ன இருக்கு..." எனத் திடீரென பிரணவ் கேட்டான்.

அவனைப் பார்த்து சிரித்த ஆர்யான்,

"எங்க ரெண்டு பேருக்கும் இடைல என்ன இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாதது..." என்றான்.

பிரணவ், "தேவை இருக்கு... நான் தாராவ காதலிக்கிறேன்... அவளும் என்ன தான் காதலிக்கிறா..." என்க சத்தமாக சிரித்தான் ஆர்யான்.

"யாரு நீ அவள லவ் பண்ற... போடா... ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்... " என ஆர்யான் கூறவும் பிரணவ்விற்கு கோவம் வந்தது.

பிரணவ், "இங்க பாரு... எனக்கும் தாராவுக்கும் நடந்த சின்ன பிரச்சினைல நாங்க பிரிஞ்சிருக்கோம்.. அவ்ளோ தான்... ஆனா அவ மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்... வீணா எங்க ரெண்டு பேருக்கும் இடைல வர ட்ரை பண்ணாதே..." என்க,

பிரணவ்வின் சட்டையைப் பிடித்த ஆர்யான், "ச்சீ... திரும்ப திரும்ப உன் வாயால நீ பண்ணின அந்த கருமத்த காதல்னு சொல்லாதே... அது காதலுக்கே அசிங்கம்... உன்னால ஆல்ரெடி மினி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா... இதுக்கு மேல ஏதாவது பண்ணி அவள நெருங்க ட்ரை பண்ண... என்னோட இன்னொரு முகத்த பார்க்க வேண்டி வரும்..." என மிரட்டினான்.

தன் சட்டையிலிருந்து ஆர்யானின் கையை எடுத்து விட்ட பிரணவ் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு,

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ... சும்மா மினி மணின்னு அவ பின்னாடி சுத்திட்டு இருக்காம வேற வேலை இருந்தா பாரு... நீ என்ன பண்ணாலும் சரி... தாரா எனக்கு தான்... நான் அவளை அடஞ்சே தீருவேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

பிரணவ்வால் மீண்டும் சிதாராவுக்கு ஏதாவது பிரச்சினை வரும் என்று தான் சங்கரிடம் கூறி திருமண ஏற்பாட்டை செய்தான்.

அன்று தன்னிடம் சவால் விட்டுச் சென்ற பின் பிரணவ்விடமிருந்து எந்த ஒரு பிரச்சினையும் வராததால் தான் திருமணத்தைத் தள்ளிப் போட்டு விட்டு நிச்சயத்தை மட்டும் முடிக்கலாம் எனக் கூறினான்‌.

ஆனால் நேற்று ஒருவன் சிதாராவைக் கடத்த முயன்றதும் அவளுக்கு ஏதாவது ஆபத்து வரும் எனப் பயந்து இன்றே திருமணத்தை நடத்த வைத்தான்.

நிச்சயம் பிரணவ் தான் இந்த காரியத்தை செய்தான் என்றே ஆர்யான் நினைத்தான்.

ஆனால் இது பற்றி சிதாராவிடம் கூறினால் எங்கே அவள் மீண்டும் பயப்படுவாள் என்று தான் அவளிடம் மறைத்தான்‌.

ஆனால் வந்தவன் இதற்கு முன் பரிச்சயம் இல்லாத ஒருவனாக இருப்பது தான் ஆர்யானுக்கு சற்று குழப்பத்தைத் தந்தது.

கூடிய சீக்கிரம் வந்தவன் யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் வீட்டினுள் சென்றான்.

நேராக சிதாரா இருந்த அறைக்குள் நுழைய,

அவளோ கட்டிலில் கால்களை மடித்து அமர்ந்து அதனுள் முகம் புதைத்து படுத்திருந்தாள்.

அவள் அருகில் சென்ற ஆர்யான் அவள் தோள் தொட,

சிதாரா பதறி எழுந்தாள்.

"ஹேய்.. ரிலாக்ஸ் மினி... நான் தான்..." என ஆர்யான் கூறவும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.

சிதாரா, "நைட் வந்தது யாருன்னு கண்டு பிடிச்சியா ஜிராஃபி... எனக்கு பயமா இருக்கு... அவன் திரும்பவும் வந்தா என்ன பண்றது..." எனக் கேட்க,

"இன்னும் இல்ல மினி... கூடிய சீக்கிரம் அவன் யாருன்னு நான் கண்டு பிடிச்சிடுவேன்... அதான் நான் கூட இருக்கேன்ல... உனக்கு எதுவும் ஆகாது... நீ டயர்டா இருப்ப... தூங்கு..." என்றான் ஆர்யான்.

"நீ தூங்கலயா ஜிராஃபி..." என சிதாரா கேட்க,

ஆர்யான், "நீ இந்த ரூம்ல தூங்கு மினி... நான் அடுத்த ரூம்ல தூங்குறேன்... உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்ன கூப்பிடு..." என்க,

சிதாரா சரி என அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 16
At the same time

அந்த இருட்டறையில் சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் அவன்.

பின் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த அலைபேசியை எடுத்து சில எண்களைத் தட்டியவன் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் டீபாய் மீதிருந்த ஏஷ்ட்ரேயில் சிகரெட்டின் புகையை அணைத்தான்.

அவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க,

மறுபக்கம் அழைப்பை ஏற்றவருக்கு இவனின் கோவம் புரிந்தோ என்னவோ,

"சாரி பாஸ்... பக்காவா ப்ளேன் போட்டு தான் பண்ணினோம்... பட் கடைசி நேரத்துல அந்த பொண்ண கட்டிக்க போறவன் குறுக்கால வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்..." என்க,

"குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்க துப்பில்ல... இப்போ வந்து காரணம் சொல்றியா... டாமிட்...." எனக் குரலில் கடுமையை தேக்கி வைத்து கேட்டான்.

மறுபக்கம், "அடுத்த தடவ ஒழுங்கா முடிச்சிடுவோம் பாஸ்..." என்க,

"வேணாம்... இப்போ நிச்சயம் அந்த ஆர்யான் ஃபுல்லா செக்கியுரிட்டி டைட் பண்ணி இருப்பான்... கொஞ்சம் நாள் போகட்டும்... இனிமே நானே இத பாத்துக்குறேன்... உனக்கு பேசின பணம் உன் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் எழுந்தவன் அறையின் விளக்கை ஒளிர விட,

அவனைச் சுற்றியிருந்த சுவர் முழுவதும் சிதாராவின் புகைப்படங்கள் நிறைந்து இருந்தன.

அவனுக்கு நேரெதிரே இருந்த சிதாராவின் ஆளுயர புகைப்படத்தை நெருங்கியவன்,

அதனை வருடி விட்டபடி, "பேப்....." என்றான் கிறக்கமாக.

_______________________________________________

மறுநாள் காலை அழகாக விடிய கண்களை மூடியபடியே எழுந்து சோம்பல் முறித்து விட்டு மெதுவாகக் கண் திறந்த சிதாரா,

"ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்....." என்று கத்தினாள்.

அவள் கண் விழிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யானும் சிதாரா கத்தவும்,

"ஆஹ்ஹ்ஹ்.... அம்மா பேய்....." என்று கத்தினான்.

இருவரின் கத்தல் சத்தம் கேட்டு ஓடி வந்த அகிலா,

"என்னாச்சு ஆரு... என்னாச்சு சித்துமா... ஏன் கத்தினீங்க ரெண்டு பேரும்...." என பதறிக் கேட்க அப்போது தான் அமைதியாகினர் இருவரும்.

சிதாரா அவசரமாய், "ஒன்னுமில்ல அத்த... ஏதோ கெட்ட கனவு... கனவுல கொரில்லாக் குரங்கு ஒன்னு வந்துச்சி... அதான்.." என ஆர்யானை முறைத்த வண்ணம் கூற,

அகிலாவின் பார்வை ஆர்யானின் பக்கம் திரும்பியது.

ஆர்யானும், "ஆமா மாம்...‌ எனக்கும் கெட்ட கனவு தான்... கனவுல மோகினி பிசாசொன்னு வந்து கத்துச்சி..." என்றான் சிதாராவை முறைத்துக் கொண்டு.

அகிலாவோ இருவரின் பதிலில் தலையிலடித்துக் கொண்டவர்,

"என்னப் பசங்களோ... கல்யாணமே ஆகிடுச்சி... இன்னும் சின்ன குழந்தைங்கன்னு நெனப்பு போல..." என்று விட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஆர்யானின் மீது தலையணையை எறிந்தவள்,

"ஏன்டா தடி மாடே... இப்படி தான் உன்னோட மூஞ்ச காட்டி பச்ச புள்ளய காலைலயே பயப்புடுத்துறியா...." என்றாள்.

ஆர்யானும் பதிலுக்கு அவளை நோக்கி தலையைணையை வீசியவன்,

"யாரு... நீயா பச்ச புள்ள... முடிய வேற விரிச்சி போட்டுட்டு பேய் மாதிரி கத்தினா மனுஷன் பயப்படாம இருப்பானா.." எனக் கோவமாகக் கேட்டான்.

கட்டிலிலிருந்து வேகமாக இறங்கிய சிதாரா ஆர்யானின் தலை முடியை இழுத்து,

"என்ன பாத்தா உனக்கு மோகினி பிசாசு மாதிரி இருக்கா ஜிராஃபி..." என அவனை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

அவள் கையிலிருந்த தன் தலை முடியை விடுவித்தவன்,

"அப்போ உனக்கு மட்டும் என்ன பாத்தா கொரில்லா மாதிரி இருக்கா..." என்றான் பதிலுக்கு.

ஆர்யானைப் பார்த்து உதட்டை ஒருபக்கம் வளைத்துக் காட்டிய சிதாரா குளியலறைக்கு செல்லும் போது கட்டிலில் கால் தடுக்கி கீழே விழப் பார்க்க அவளை அவசரமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஆர்யான்.

சிதாரா அவன் கண்களைப் பார்க்க,

ஆர்யான், "தம் தன நம் தன தம் தன நம் தன னன னான னனா..." என ராகம் பாடினான்.

அவன் காலில் ஓங்கி ஒன்று மிதித்த சிதாரா குளியலறைலக்குள் புகுந்து கொண்டாள்.

ஆர்யான் வலியில் காலைப் பிடித்துக் கொண்டு, "அம்மா......" எனக் கத்தினான்.

ஆர்யானின் சத்தத்தில் அகிலா கீழே இருந்து,

"இப்போ என்னடா...." எனக் கோவமாகக் கேட்க,

வலியில், "புல்டோசர் ஒன்னு கால்ல ஏறிடுச்சுமா...." என்றான்.

ஆர்யானின் பேச்சில் கோவமடைந்த அகிலா,

"திரும்ப கத்திட்டு இப்படி ஏதாவது ஒலரிட்டு இருந்தன்னா வந்து துடப்பக்கட்டையாலே அடிப்பேன்..." என்க,

அவசரமாக வாயை மூடிக் கொண்டான் ஆர்யான்.

சற்று நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு கீழே வர,

ரஞ்சித், "சாப்பிட வாங்க ரெண்டு பேரும்..." என்றவர் ஆர்யானைப் பார்த்து,

"ஆரு... இன்னைக்கு மறுவீட்டுக்கு போகனும்... இன்னும் கொஞ்ச நேரத்துல சம்பந்தி வருவாரு உங்கள கூட்டிட்டு போக... சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க..." என்க சிதாராவின் முகம் மலர்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும் சங்கர் வர அவருடன் சிதாராவின் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.

லாவண்யா, அக்ஷரா, ஆதர்ஷ், அபினவ் மாத்திரமே இருந்தனர்.

மற்ற அனைவரும் அன்று காலையிலேயே ஊருக்கு சென்றிருந்தனர்.

நண்பர்கள் சிதாராவையும் ஆர்யானையும் கிண்டல் செய்து கொண்டிருக்க அபினவ்விற்கு அழைப்பொன்று வந்தது.

பேசி விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றான் அபினவ்.

பிரணவ் தான் அழைத்திருந்தான்.

பிரணவ், "என்னடா பண்ற இன்னும்... என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன... இன்னுமே திரும்ப வரல..." என்க,

"நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல... என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்... பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை... அதான் வர முடியல.." என்றான் அபினவ்.

"ஓஹ்...." என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ்,

"சரி மச்சான்... சின்ன வேலை ஒன்னு... நான் அப்புறம் பேசுறேன்..." என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்விடம் பேசி விட்டு திரும்ப ஆர்யான் நின்றிருந்தான்.

அபினவ் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"ஜூஸ்..." என்று கையிலிருந்த பழச்சாற்றை நீட்டினான் ஆர்யான்.

அபினவ் நன்றி கூறி பெற்றுக் கொள்ள,

"ஆமா யாரு ஃபோன்ல... பிரணவ்வா..." எனக் கேட்டான் ஆர்யான்.

அபினவ், "ஆமா ப்ரோ... உங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஏதோ வேலை விஷயமா வெளியூர் போனான்... அதுக்கப்புறம் கால் பண்ணேன்.. எடுக்கவும் இல்ல... இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கான் போல... அதான் நான் ஏன் இன்னும் வரலன்னு கேட்டான்..." என்றான்.

ஆர்யான், "ஆஹ்... ஓக்கே.. ஆமா கேக்கனும்னே இருந்தேன் ப்ரோ... நீங்க எப்போ அக்ஷரா கிட்ட உங்க லவ்வ சொல்லி கல்யாணம் பண்ணிக்க போறீங்க..." என்க,

வெட்கப்பட்ட அபினவ், "சீக்கிரமா சொல்லனும் ப்ரோ... இப்போ தான் உங்க கல்யாணம் முடிஞ்சிருக்கு.. அடுத்து ஆதர்ஷ், லாவண்யா கல்யாணம் முடியட்டும்... அப்புறம் டேரக்ட்டா எங்களோடது தான்..." என்றான்.

அபினவ்வின் பதிலில் புன்னகைத்த ஆர்யான்,

"சரி நீங்க உள்ள போங்க ப்ரோ... நான் முக்கியமான கால் ஒன்னு பேசிட்டு வரேன்...." என்க சரி எனத் தலையசைத்து விட்டு சென்றான் அபினவ்.

ஆர்யான் யாருக்கோ அழைப்பு விடுத்து,

"என்ன ஆச்சுடா... ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடச்சுதா..." எனக் கேட்டான்.

மறுபக்கம், "தேடிட்டு தான் மச்சான் இருக்கோம்... ஆனா அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன் அதுக்கப்புறம் எங்கயோ தலை மறைவாகிட்டான்... சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டு சொல்றேன்டா..." என்க,

"சரி... எதுக்கும் பிரணவ் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு... எனக்கு என்னவோ அவன் மேல தான் டவுட்டா இருக்கு..." என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

_______________________________________________

"சார்... ஒரு முக்கியமான விஷயம்...." என்க,

அமர்ந்து இருந்த சுழல் நாற்காலியை சுற்றி அவன் பக்கம் திரும்பியவன் கேள்வியாய் அவனை நோக்க,

"அந்த ஆர்யான் நம்ம ஏற்பாடு பண்ணி இருந்த ஆள பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கான்... அவன் அவங்க கைல மாட்டிட்டான்னா உங்கள பத்தி வெளிய சொல்லிருவான் சார்.." என்றான்.

மர்மச் சிரிப்பொன்றை அவனை நோக்கி உதிர்த்தவன்,

"ஆர்யானால நிச்சயம் அவனயோ, அவன் மூலமோ என்னையோ கண்டுபிடிக்க முடியாது... நான் குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்காதவன் இந்த உலகத்துல இருக்குறதுலே அர்த்தம் இல்ல..." என்றவன் தன் முன்னாலிருந்தவன் கையில் மதுக் கோப்பையொன்றைத் திணித்து விட்டு, "சியர்ஸ்..." என்றான்.

தன் எஜமானின் பேச்சுக்கு மறு பேச்சின்றி அவனும், "சியர்ஸ் சார்..." என்றான்.

_______________________________________________

இங்கு சமையலறையில் சிதாரா தன் தாய் தேவிக்கு உதவியாக இருக்க,

தேவி, "என்ன சித்து... உனக்கு எல்லாம் சொல்லி தந்துட்டு இருக்கனுமா... நேத்து தான் கல்யாணம் ஆச்சு... அழகா சேலை கட்டிக்கலாம்ல... சுடிதார் போட்டுட்டு இருக்க.." என்க,

"என்னம்மா நீ...‌ இன்னும் அந்தக் காலத்துலயே இருக்க... அதுவும் நான் இன்னைக்கு சேலை தான் கட்டினேன்... அத்த தான் உனக்கு கம்ஃபர்டபிளா இருக்குறத போட்டுக்க சொன்னாங்க..." என்ற சிதாரா சற்று நிறுத்தி விட்டு,

"அதுவும் என்னோட அத்த ஒன்னும் உங்கள மாதிரி இல்ல.... ரொம்ப ஸ்வீட்... எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க சொன்னாங்க... நீ தான் எப்ப பாரு என்னை ஏதாவது குறை சொல்லிட்டே இருப்ப..." என தேவியைக் கேலி செய்ய,

"என்னடி சொன்ன.." எனப் பொய்யாக முறைத்த வண்ணம் அவளை அடிக்கத் திரும்ப அதற்குள் அங்கிருந்து ஓடி விட்டாள் சிதாரா.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட தேவி,

"கடவுளே என் பொண்ணு இப்படியே எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்..." என வேண்டிக் கொண்டார்.

ஆனால் அவரது வேண்டுதலை கடவுள் செவி சாய்த்தாரா இல்லையா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதன் பின் வந்த நாட்களில் சிதாரா, ஆர்யான் இருவரின் வாழ்வும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி சென்றது.

ஏதாவது ஒரு காரணம் கொண்டு இருவரும் பொய்யாக சண்டை பிடித்துக் கொண்டு திரிய,

அகிலாவுக்கும் ரஞ்சித்துக்கும் இவர்களை என்ன பண்ணினால் தகும் என்ற யோசனை தான்.
_______________________________________________

அன்று இரவு ஆர்யானின் வீட்டில் அனைவரும் உறங்கியிருந்த சமயம் ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.

தூக்கக் கலக்கத்துலே கொட்டாவி விட்டபடி, "இந்த நேரத்துல யாரா இருக்கும்.." என ஆர்யான் மொபைலை எடுத்துப் பார்க்க,

திரையில் காட்டிய எண்ணைக் கண்டதும் அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

ஆர்யான், "என்னடா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..." என்க,

மறுபக்கம், "நம்ம தேடிட்டு இருக்குறவன் செத்துட்டான்.." என்க,

முழுத் தூக்கமும் ஆர்யானை விட்டு ஓடியது.

"என்னடா சொல்ற... எப்படி.." என ஆர்யான் கேட்கவும்,

மறுபக்கம் அழைப்பில் இருந்தவன்,

"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பீச் பக்கத்துல ஏதோ டெட் பாடி இருக்குறதா கால் வந்தது... போய் பார்த்தப்போ யாரோ அவன ரொம்ப கொடூரமா கொன்னு போட்டுட்டு போய் இருக்காங்க... பாடி பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணினப்போ தான் அவன் தான் அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன்னு தெரிய வந்தது..." என்றான்.

தன் நெற்றியை நீவி விட்ட ஆர்யான்,

"இப்போ எப்படிடா அவன அனுப்பினது யார்னு கண்டுபிடிக்கிறது..." எனக் கவலையாகக் கேட்க,

"இவன கொன்னது யாருன்னு முதல்ல கண்டுபிடிச்சா தான் அத பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. போஸ்ட் மார்டம் பண்ண குடுத்திருக்கோம்... அதோட ரிப்போர்ட் வந்ததும் தான் மத்த விஷயங்கள பத்தி பார்க்க முடியும்... நீ கவலைப்படாதே.. ஏதாவது வழி கிடைக்கும்...‌எதுக்கும் தங்கச்ச பத்திரமா பார்த்துக்கோ..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் கேட்ட செய்தியில் அன்று இரவு முழுவதுமே தூங்காமல் முழித்திருந்தான்.

_______________________________________________

நாட்கள் வாரங்களாகக் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க் செல்லும் நாளும் வந்தது.

ஆர்யானின் வீட்டில் சிதாராவின் பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை வழி அனுப்ப கூடி இருந்தனர்.

அகிலா, "சித்துமா... ஆரு... உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல தேவையில்ல.. ஆனா இதுக்கு முன்னாடி நீங்க ஃப்ரன்ட்ஸா இருந்தீங்க... இப்போ அப்படி இல்ல... புருஷன் பொண்டாட்டி ஆகிட்டீங்க... இங்க இருக்கும் வர சும்மா மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருந்தீங்க... அங்க நாங்க இல்ல.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்க போறீங்க... அதனால ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருங்க..." என்க,

ரஞ்சித், "இதெல்லாம் நீ அவங்களுக்கு சொல்லனுமா அகி... நம்ம முன்னாடி ரெண்டு பேரும் சும்மா ஜாலியா சண்டை போட்டுட்டு இருந்தாங்க... நம்ம புள்ள ரொம்ப பொறுப்பானவன்.. அதெல்லாம் ஒழுங்கா தான் இருப்பான்..." என்றவர் ஆர்யானைப் பார்த்து கண்களை அசைத்தார்.

ஆர்யானும் அதனைப் புரிந்து கொண்டது போல் தலையாட்டினான்.

ஆர்யான், "மாம்.. நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம்... ஜஸ்ட் வன் இயர் தானே... மினியோட ஸ்டடீஸ் முடிஞ்சதும் இங்கயே வந்துட போறோம்..." என்றான்.

பின் இரவு நேர விமானம் என்பதால் நண்பர்கள் மாத்திரம் அவர்களுடன் கோயம்புத்தூர் விமான நிலையம் கிளம்பினர்.

ஃப்ளைட் கிளம்பியதும் ஆதர்ஷ் லாவண்யாவுடன் பேசியபடி முன்னே செல்ல,

அவர்கள் பின் செல்ல இருந்த அக்ஷராவின் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அக்ஷரா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"மேடம் ரொம்பத் தான் பிஸி போல... எங்க கூட எல்லாம் பேச டைம் இருக்காதா என்ன..." என்றான் அபினவ்.

அவனைக் குறும்பாகப் பார்த்த அக்ஷரா,

"அது ஒன்னுமில்ல சீனியர்... என்னோட க்ரஷ்ஷோட ஞாபகமாவே இருக்கு... அதான் வேற யாரு கூடவும் பேச டைம் இல்ல..." என்றாள்.

அக்ஷரா க்ரஷ் பற்றி கூறவும் கடுப்பான அபினவ் பட்டென அவள் கையை உதறி விட்டு முன்னே செல்லப் பார்க்க,

அவன் கரத்தைப் பற்றிய அக்ஷரா, "என்னோட க்ரஷ்ஷ பத்தி கேக்காமலே போறீங்களே சீனியர்..." என புன்னகைத்தவாறு கேட்டாள்.

அபினவ் அவள் பக்கம் திரும்பாமலே,

"எனக்கு யார பத்தியும் தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்ல... நீ உன் க்ரஷ் பத்தி யோசிச்சிட்டே இரு..." என்க,

அவன் கையை விட்ட அக்ஷரா பெருமூச்சு விட்டபடி,

"ஹ்ம்ம்.. ஓக்கே... உங்களுக்கு தான் அப்போ நஷ்டம் சீனியர்..." என்றாள்.

அபினவ் ஏதும் பேசாமல் இருக்கவும்,

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா சீனியர்... எனக்கு அந்த நேரம் அவர் மேல க்ரஷ் மட்டும் தான் இருந்தது... ஆனா அவருக்கு அந்த நேரமே என் மேல டீப் லவ்... நான் எங்க போனாலும் அவர் இருப்பாரு... எனக்கொன்னுன்னா என்ன வேணாலும் பண்ணுவாரு... ஒரு தடவ நான் மார்னிங் சாப்டாம மயக்கம் போட்டு விழுந்தப்போ அவர் தான் முதல்ல வந்து என்ன கேர் பாத்துக்கிட்டாரு.. ரொம்ப பதறிட்டாரு... என்ன ரேக்கிங் பண்ண பசங்கள கூட அவரு விட்டு வெச்சதில்ல... அதனால எனக்கும் இப்போ அவர் மேல லவ் வந்திடுச்சு..." என்ற அக்ஷரா,

"ஹேய் வனி... எங்க போற என்ன விட்டு... இரு நானும் வரேன்..." எனக் கத்தியவள் லாவண்யாவிடம் ஓடினாள்.

அக்ஷரா கூறியதைக் கேட்டு கடுப்பாக இருந்த அபினவ் அவள் கூறிய சம்பவங்களைக் கேட்டு முகம் மலர்ந்தவன்,

"அப்போ நான் தான் உன் க்ரஷ்ஷா..." என நினைத்தவன் சந்தோஷமாக அக்ஷராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே அங்கிருந்து சென்றிருந்தாள்.

"ஹுஹூ....... என் சாரா என்ன லவ் பண்ணுறா..." என நின்ற இடத்திலே துள்ளிக் குதித்து கத்திய அபினவ் சுற்றி இருந்தவர்கள் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

அன்று போல இன்றும் அதே அறையில் இருட்டில் அமர்ந்திருந்தான் அவன்.

"ஹஹஹஹா..." எனப் பேய் சிரிப்பு சிரித்தவன் வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை வெளியிட்டு விட்டு,

"ஆர்யான்..... ஆர்யான்.... பெரிய தப்பு பண்ணிட்ட.... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட... என்னோட பேபிய பாதுகாக்குறேன்ற பேர்ல அவள நான் இருக்குற இடத்துக்கே கூட்டிட்டு வராய்.... இனிமே என்ன யாராலையும் தடுக்க முடியாது..... ஹஹஹா... ஹஹஹஹஹஹா...." எனக் கூறிச் சிரித்தான்.

அவன் இருந்த அறைக்கு வெளியே இருந்த இருவரும்,

"இவருக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..." என்ற ரீதியில் பார்த்துக் கொண்டனர்.

_______________________________________________

முழுதாக ஒரு நாள் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க்கை அடைந்தனர்.

நியுயார்க்கில் அப்போது பகல் நேரம்.

முதலில் சிதாரா தங்கியிருந்த அறைக்குச் சென்றவர்கள் அதனை வெகேட் செய்து விட்டு அங்கிருந்த அவளது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆர்யான் தங்கியிருந்த வீட்டை அடைந்தனர்.

ஆர்யான் மட்டும் தான் தங்கி இருப்பதால் ஓரளவு சிறிய வீடே எடுத்திருந்தான்.

ஆர்யான், "மார்னிங் வேலைக்கு போனா அப்புறம் நைட் தூங்க மட்டும் தான் இங்க வரதால சின்ன வீடொன்னு தான் வாங்கி இருந்தேன் மினி... இன்னும் வன் வீக்ல போல ரெண்டு பேருக்கும் கம்ஃபர்டபிலான நல்ல வீடொன்னா பாத்து ஷிஃப்ட் ஆகலாம்... " என்க,

"இல்ல ஜிராஃபி... இந்த வீடே ஓக்கே... எனக்கு இப்படி சின்னதா அழகா இருக்குற வீடு தான் பிடிக்கும்... வேற வீடு ஷிஃப்ட் பண்ணவெல்லாம் அவசியமில்ல..." என வீட்டை ரசித்தபடி கூறினாள் சிதாரா.

"பட் மினி... இந்த வீட்டுல ஒரு பெட் ரூம் தான் இருக்கு...." என ஆர்யான் இழுக்க,

அமைதியானவள் சற்று நேரத்தில், "அதுக்கென்ன ஜிராஃபி... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதுவுமில்லாம எனக்காக நீ தரைல படுக்க மாட்டியா ஜிராஃபி..." என பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

ஆர்யான், "அடிங்கு.... நீ வேணா தரைல படுத்துக்கோ... என்னால எல்லாம் முடியாது... நான் வெளிய போய் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்... நல்ல பொண்டாட்டி போல புருஷன் வர முன்னாடி வீட்ட க்ளீன் பண்ணி வை..." என்றவன் அவசரமாக வெளியே ஓடினான்.

இல்லாவிட்டால் பொண்டாட்டி எனக் கூறியதற்கு யார் சிதாராவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது.

"பொண்டாட்டின்னு சொன்ன வாய்க்கு சாப்பாடு கிடையாதுடா..." எனக் கத்திய சிதாரா ஆர்யான் கண்ணை விட்டு மறைந்ததும் சிரித்துக் கொண்டு வீட்டை க்ளீன் செய்ய ஆரம்பித்தாள்.

ஆர்யான் வரும் போது சிதாரா வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு சமைத்தும் முடித்திருந்தாள்‌.

"என்ன மினி... நீயே சமைச்சி முடிச்சிட்ட போல... சமைக்க தேவையான ஐடம்ஸ் எடுக்க தான் நான் போய் இருந்தேன்... அப்படியே வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சமும் வாங்கிட்டு வந்தேன்... அதான் லேட் ஆகிடுச்சு..." என வீட்டினுள் நுழைந்தபடி ஆர்யான் கூற,

"பெரிசா எதுவுமில்ல ஜிராஃபி.. கிச்சன்ல மேகி பேக்கட் இருந்துச்சு.. அதை தான் குக் பண்ணேன்..." என்றவள் சமைத்த நூடுல்ஸை இருவருக்கும் தட்டில் போட்டு எடுத்து வந்தாள்.

கை கழுவி விட்டு வந்த ஆர்யான் அதனை சாப்பிட்டுக் கொண்டு,

"உனக்கு எப்போ மினி யுனிவர்சிட்டி அகைன் ஸ்டார்ட் ஆகும்.." என்க,

அவன் தலையில் குட்டிய சிதாரா,

"எத்தன தடவ சொல்றது சாப்பிட்டுக்கிட்டு பேசாதேன்னு..." என்றாள்.

ஆர்யான் தலையில் கை வைத்து சிதாராவைப் பாவமாகப் பார்க்க,

"என்ன லுக்கு... சாப்டு... டே ஆஃப்டர் டுமோரோ தான் ஸ்டார்ட்... நாளைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்.. ஃபுல் டே ட்ராவல் பண்ணது செம்ம டயர்டா இருக்குப்பா..." என்றாள் சிதாரா.

"எல்லாரும் சொல்றது சரி தான்... கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பசங்களுக்கும் இந்த பொண்டாட்டி கொடுமை இருக்கு போல..." என முணுமுணுத்தான் ஆர்யான்.

சிதாரா, "ஏதாவது சொன்னியா ஜிராஃபி..." என ஆர்யானைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,

"இ.. இல்ல மினி.. நான் சாப்டு முடிச்சிட்டேன்னு சொன்னேன்..." என்றவன் தட்டை எடுத்துக் கொண்டு அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தான்.

சிதாராவுக்கு ஆர்யானைப் பார்த்து சிரிப்பாக வந்தது.

ஆனாலும் அவனை அடிக்கடி சீண்டிக் கொண்டிருப்பதும் அவளுக்கு பிடித்திருந்தது.

இரவானதும் இருவரும் உறங்கத் தயாராக,

ஆர்யான், "நீ பெட்ல படுத்துக்கோ மினி... நான் ஹால்ல படுத்துக்குறேன்..." என்க,

"ச்சேச்சே.. அதெல்லாம் வேணா ஜிராஃபி... இவ்வளவு பெரிய பெட் இருக்கு தானே... நீயும் ஒரு ஓரமா தூங்கு... நான் ஒன்னும் அவ்வளவு கொடுமைக்காரி எல்லாம் இல்ல..." என்றாள் சிதாரா.

ஆர்யான் அவளை சந்தேகமாகப் பார்க்க,

சிதாரா, "என்னடா பாக்குற... ஏன் உனக்கு தூங்கக் கிட்ட உருண்டு போற இல்லன்னா கை கால தூக்கி போடுற பழக்கம் இருக்கா என்ன.." என்க,

அவளைப் பார்த்து முறைத்த ஆர்யான்,

"நான் எல்லாம் நைட்டு தூங்கினா மார்னிங் வரையும் அசையாம அப்படியே படுத்திருப்போம்... கேக்குறா பாரு கேள்வி...லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்கு.. டயர்டா இருக்கு.." என்று விட்டு சென்று கட்டிலில் ஒரு பக்கம் படுத்துக் கொண்டான்.

ஆர்யான் கண்களை மூடவும் சிதாரா அவசரமாக தனது லக்கேஜ் அனைத்தையும் இழுத்து ஏதோ தேட,

ஆனால் அவள் தேடியது தான் கிடைக்கவில்லை.

சிதாரா மனதில், "ஹையோ... என் ஹக்கி பிலோவ காணமே... ஒரு வேளை வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேனா... அது இல்லாம எனக்கு தூக்கம் போகாதே... " என்றவள் ஆர்யானைப் பார்க்க அவனோ ஏற்கனவே நல்ல உறக்கத்தில் இருந்தான்.

தயங்கித் தயங்கி கட்டிலின் அருகே சென்றவள் ஒரு ஓரமாக படுத்துக் கண்ணை மூடினாள்.

சிதாரா கட்டிலில் வந்து படுத்துக் கொள்ள அவ்வளவு நேரம் தூங்கி விட்டது போல் நடித்த ஆர்யான் அவள் பக்கம் திரும்பி மெதுவாக ஒற்றைக் கண் திறந்து பார்க்க,

சிதாரா முடிந்த வரை கட்டிலின் ஓரமாக சென்று படுத்திருப்பதைக் கண்டு புன்னகைத்தான்.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 
Last edited:

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 17
மறுநாள் அழகாய் விடிய முதலில் ஆர்யான் தான் கண் முழித்தான்.

குனிந்து பார்க்க சிதாரா அவன் நெஞ்சில் தலை வைத்து ஒரு கையால் அவனை அணைத்தபடி காலையும் அவன் மீது தூக்கிப் போட்டு படுத்திருந்தாள்.

ஆர்யானுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது.

இரவு அவள் தனக்கு போட்ட சட்டம் என்ன.. இப்போது அவளே அதனை உடைத்து விட்டு தன்னை அப்பியபடி படுத்துக் கொண்டிருப்பதென்ன...

ஆர்யான் அவள்‌ முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

சிதாராவின் கருமணிகள் அசைவது தெரிந்ததும் அவசரமாக கண்ணை மூடிக் கொண்டான்.

கண் விழித்த சிதாரா முதலில் கண்டது தன் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த ஆர்யானின் முகத்தைத் தான்.

பதறியபடி எழுந்து அமர்ந்தவள் தலையில் அடித்தபடி,

"என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க சித்து.... நைட் பெரிய இவ மாதிரி ஜிராஃபி கிட்ட பேசிட்டு இப்போ அவன கட்டிப் பிடிச்சுக்கிட்டே தூங்கி இருக்கேன்... ஐயோ.... இவனுக்கு தெரிஞ்சா நம்மள ரொம்ப கலாய்ப்பானே..." என தனக்கே சொல்லிக் கொண்டவள் மெதுவாக ஆர்யானைப் பார்க்க அவன் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இல்லை இல்லை உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் கண் விழிப்பது போல ஆர்யான் சோம்பல் முறித்தபடி எழுந்து கொள்ள,

சிதாரா எழுந்தமர்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,

"குட் மார்னிங் மினி..." என்றான் புன்னகையுடன்.

ஆர்யானுக்கு தான் அவனை அணைத்தபடி உறங்கியது தெரிந்திருக்குமோ என பதட்டமாக இருந்தவள் அவனுக்கு, "கு... குட் மார்னிங் ஜிராஃபி.." என்றாள் பதிலுக்கு.

சிதாராவின் பதட்டமான முகத்தைக் கண்டு ஆர்யானுக்கு சிரிப்பு வர அதனைக் கட்டுப்படுத்தியவன் முகத்தை சுருக்கியவாறு தன் கை கால் என தேய்க்கவும்,

"என்... என்னாச்சு ஜிராஃபி..." என அவசரமாக கேள்வி வந்தது சிதாராவிடமிருந்து.

ஆர்யான், "தெரியல மினி... அன்னைக்கு விளையாட்டுக்கு சொன்னது இன்னைக்கு நிஜமாகிடுச்சு போல... உண்மையாவே மோகினி பிசாசொன்னு என் மேல ஏறி அடிச்சு போட்டது போல இருக்கு... தூங்கும் போது கூட நெஞ்சில ஏதோ வெய்ட்டா இருந்தது போல தோணுச்சு... ரொம்ப டயர்ட்னால கண்ண தெறந்து பார்க்க முடியல..." என்கவும் சிதாரா அதிர்ந்தாள்.

சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக சிரித்துக் கொண்டு, "ஏதாவது கனவா இருக்கும் ஜிராஃபி... அப்படில்லாம் ஏதும் இருக்காது... சரி நான் குளிச்சிட்டு வரேன்..." என்றவள் அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட ஆர்யான் எழுந்து கட்டிலின் கீழே மறைத்து வைத்திருந்த சிதாராவின் ஹக்கி பிலோவை எடுத்தவன் அதனைப் பார்த்து,

"சாரி மை டியர்... இனிமே உனக்கு இங்க வேலை இல்ல..." என்றவன் அதனைத் தூக்கி கப்போர்டுக்கு மேலே வெளியே தெரியாதவாறு மறைத்து வைத்தான்.

சிதாரா குளித்து முடித்து வெளியே வர ஆர்யான் அறையில் இருக்கவில்லை.

பின் இருவருக்கும் காலை உணவை தயாரித்து விட்டு அதனை எடுத்து டைனிங் டேபிளில் வைக்க குளித்து முடித்து ஆர்யான் வெளியே வந்தான்.

ஆர்யான், "மினி... எனக்கு ஆஃபிஸ்ல இருந்து கால் வந்திடுச்சு.. வன் மந்த் மேல லீவ் எடுத்துட்டேன்ல... கண்டிப்பா போயாகனும்.. சாரி மினி... " என்க,

"இதுக்கு எதுக்கு ஜிராஃபி சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு... ஏதோ சிச்சுவேஷன் நம்ம கல்யாணம் நடக்க வேண்டிய கட்டாயம்... அதுக்காக நீ உன்னோட ரெகியுலர் ரௌட்டின சேன்ஜ் பண்ணனும்னு ஒன்னும் அவசியமில்ல... எப்பவும் போல இரு..." என சிதாரா கூற,

"ஓஹ்..... ஆமால..." என்று மட்டும் கூறி விட்டு அமைதியாகி விட்டான்.

சிதாரா அவனை யோசனையுடன் பார்த்தவள்,

"ஆமா கேக்கனும்னே இருந்தேன்... உன் அப்பா தான் அவ்வளவு பெரிய கம்பனி வெச்சி நடத்துறார்ல... அப்படி இருக்கும் போது நீ எதுக்கு இங்க வந்து யாரோ ஒருத்தர் கீழ வேலை பாத்து கஷ்டப்படுற..." என்க,

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,

"எனக்கு க்ரேட் பிஸினஸ்மேன் ரஞ்சித்தோட பையனா இந்த உலகத்துக்கு தெரியிரத விட என் சொந்த முயற்சியால ஜெயித்து ஆர்யானா இந்த உலகத்துக்கு என்ன அறிமுகப்படுத்தனும்னு தான் ஆசை... அதுவுமில்லாம டாடோட கம்பனில வர்க் பண்றது எனக்கு பிரச்சினை இல்ல... பட் சாதாரண எம்ப்ளாயியா இருந்து அதுக்கப்புறம் முன்னேறி வரனும்னு நினைக்கிறேன்... பட் நான் அங்க சாதாரண எம்ப்ளாயியா வர்க் பண்றது டாடுக்கு பிடிக்கல... அவருக்கடுத்து நான் அந்த கம்பனிய எடுத்து நடத்தனும்னு விரும்புறாரு... அதான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு டாட் கூட சண்டை போட்டு அவர சம்மதிக்க வெச்சி இங்க வர்க் பண்றேன்... அதுக்கப்புறம் சொந்தமா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண ஐடியா..." என்றான்.

தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆர்யானின் உறுதி
சிதாராவுக்கு பெருமையாக இருந்தது.

ஆர்யான் ஆஃபீஸ் செல்ல அவசரமாக சாப்பிட்டு முடித்தவன்,

"சரி மினி... நான் கிளம்புறேன்... நீ இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னேல்ல... டார் லாக் பண்ணிக்கோ... ஏதாவதுன்னா எனக்கு உடனே கால் பண்ணு... பாய்.." என்று விட்டு சென்றான்.

ஆர்யான் சென்றதும் கதவை அடைத்து உள்ளே வந்தவள் பெருமூச்சு விட்டபடி,

"செம்ம போரா இருக்கே... இப்பதே தூங்கவும் என்னவோ போல இருக்கு... பேசாம வீட்ட கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணலாம்.. ஜிராஃபிக்கும் சர்ப்ரைசா இருக்கும்..." என்றவள் வீட்டை சற்று மாற்றி அமைக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில், "முதல்ல போய் வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சம் வாங்கிட்டு வரலாம்... இந்த ஜிராஃபி எதுவுமே வாங்கியில்ல... பேசிக் ஐட்டம்ஸ மட்டும் வாங்கி வெச்சி இருக்கான்... கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவன்... " என்றவள் தான் வெளியே சென்று விட்டு வருவதாக ஆர்யானிடம் கூற அழைக்க,

அவனோ ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டதால் தலைக்கு மேல் வேலை இருக்க சிதாராவின் அழைப்பைக் கவனிக்கவில்லை.

பல முறை முயன்றும் ஆர்யான் அழைப்பை ஏற்காததால் வந்து சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து வீட்டை மூடிக் கொண்டு வெளியேறினாள் சிதாரா.

வீட்டிற்கு மிக அருகில் இருந்த கடையொன்றுக்குத்தான் வந்திருந்தாள்.

தனக்கு மற்றும் வீட்டிற்கு என தேவையானவற்றை வாங்கியவள் அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

யாரின் பார்வையோ தன் முதுகைத் துளைப்பது போல் ஒரு எண்ணம்.

வீட்டை நோக்கி நடந்தவள் மனதில்,

"ஏன் எனக்கு யாரோ என்ன ஃபாலோ பண்ற மாதிரியே ஃபீல் ஆகுது... ச்சீச்சீ... இருக்காது... நான் தான் சும்மா கண்டதையும் நெனச்சிட்டு இருக்கேன்... இத பத்தி ஜிராஃபி கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்..." என நினைத்தபடி வந்தவள் வீட்டை அடைந்ததும் அவசரமாக உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள்.

மனதை சமாதானப்படுத்திக் கொண்டாளும் உள்ளுணர்வு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.

ஆனால் அது என்ன என்று தான் சிதாராவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன்னால் முடிந்தளவு வீட்டை ஒழுங்குபடுத்தியவள் அதனை ரசித்தபடி,

"பரவால்ல சித்து... அழகா தான் இருக்கு... ஜிராஃபி வந்தா சர்ப்ரைசா இருக்கும்..." என்றவள்,

"ஓக்கே நம்ம ரூமயும் கொஞ்சம் ரீஅரேன்ஜ் பண்ணலாம்..." என்று அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.

கட்டிலின் அருகே சிறிய டிராயர் ஒன்றிருப்பதை அப்போது தான் கவனித்தவள் அதனை என்னவெனத் திறந்து பார்க்க இரண்டு டயரிகள் இருந்தன.

சிதாரா, "நம்ம ஜிராஃபிக்கு டயரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கா என்ன... இது வரைக்கும் நம்ம கிட்ட சொல்லியே இல்ல... அதுவும் நான் இங்க வந்த இயர்ல இருந்து தான் இருக்கு... பாக்கலாம் என்னன்னு.. நம்ம பையன் தானே..." என புன்னகையுடன் கூறிக் கொண்டவள் முதல் டயரியை எடுத்து வாசிக்க அமர சரியாக காலிங்பெல் சத்தம் கேட்டது.

அதனை இருந்த இடத்திலே வைத்தவள் யாரெனப் பார்க்க ஆர்யான் தான் வந்திருந்தான்.

அவன் முகத்தைப் பார்க்கும் போதே மிகுந்த களைப்பாக இருக்கிறான் என சிதாராவுக்கு விளங்கியது.

உள்ளே வரும் போதே பேக்கைத் தூக்கி சோஃபாவில் போட்ட ஆர்யான்,

"செம்ம டயர்டா இருக்கு மினி... ரொம்ப வர்க்... முடியல தலைவலி வேற படுத்துது... ப்ளீஸ் மினி.. நல்ல சூடா ஒரு கப் காஃபி கிடைக்குமா..." என்க,

சிதாரா அவசரமாக அவனுக்கு காஃபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

ஆர்யான் அதனைக் குடித்து முடிக்க தைலம் எடுத்து வந்தவள், "பின்னாடி சாஞ்சிக்கோ ஜிராஃபி.. நான் தைலம் தேச்சி விடுறேன்... " என சிதாரா கூற,

ஆர்யான், "வேணாம் மினி... நீ போய் உன் வேலைய பாரு... உனக்கு நாளைக்கு யுனி போக இருக்குல்ல... நான் பாத்துக்குறேன்.." என்றான்.

சிதாரா இடுப்பில் கையூன்றி அவனை முறைக்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் எதுவும் கூறாமல் பின்னால் சாய்ந்து கொண்டான்.

ஆர்யான் பின்னால் சாய்ந்து கண்ணை மூட சிதாரா தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் தடவி விட்டாள்.

ஆர்யானின் மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடின.

_______________________________________________

ஆர்யான் ஆஃபீஸ் சென்றதும் ஒரு மாதத்திற்கான வேலைகளும் மீதமிருக்க அதனுள் மூழ்கினான்.

சில மணி நேரத்திலே அவனின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதனை ஏற்று காதில் வைக்க மறுபக்கம் யாரோ சத்தமாக சிரிக்கும் சத்தம்.

"இருக்குற வேலை பத்தாதுன்னு எவன்டா இது கால் பண்ணி பேய் மாதிரி சிரிச்சிட்டு இருக்கான் லூசுப் பையன்.." என நினைத்த ஆர்யான்,

"யோவ்... யாருயா நீ... கால் பண்ணினா பேசணும்... அதை விட்டுட்டு பைத்தியம் மாதிரி சிரிச்சிட்டு இருக்க... ஆல்ரெடி தலைக்கு மேல வேலை.. இதுல நீ வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு..." என ஏற்கனவே இருந்த களைப்பில் மறுபக்கம் இருந்தவனை வறுத்தெடுத்தான்.

மறுபக்கம், "என்ன மிஸ்டர்.ஆர்யான்... நாம தேடிட்டு இருந்தவன் செத்துட்டானே... இப்போ எப்படி வந்தது யாருன்னு கண்டுபிடிக்கிறதுன்னு டென்ஷனா இருக்குறியா என்ன..." என மீண்டும் அதே சிரிப்பு.

மறுபக்கம் இருந்தவனின் பேச்சில் அதிர்ந்த ஆர்யான்,

"ஏ...ஏய்... யாரு நீ... எதுக்காக மினிய கடத்த ட்ரை பண்ற... தைரியம் இருந்தா முன்னாடி வாடா... இப்படி கோழை மாதிரி ஒழிஞ்சி ஒழிஞ்சி சீன் காட்டுறியா... என்ன தாண்டி உன்னால மினிய ஒன்னும் பண்ண முடியாதுடா..‌" என ஆத்திரத்தில் கத்தினான்.

"ஹஹஹா... என்ன ஆர்யான் இது... நீ இப்படி பேசினா நான் உடனே முன்னாடி வருவேன்னு நினைச்சியா... நிச்சயம் உன் முன்னாடி வருவேன் ஆர்யான்... ஆனா உன்னால என்ன கண்டு பிடிக்க முடியாது... வந்து என் பேபிய தூக்குறேனா இல்லையான்னு வெய்ட் பண்ணி பாரு..." என மறுபக்கம் இருந்தவன் நக்கலாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இவ்வளவு நாளும் பிரணவ் தான் ஏதோ செய்கிறான் என ஆர்யான் நினைத்துக் கொண்டிருக்க திடீரென இப்போது யாரோ ஒருவன் அழைத்து இவ்வாறு கூறவும் அவனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

அவனுக்கு அழைப்பு வந்த எண்ணை அனுப்பி யாரெனக் கண்டு பிடிக்கக் கூறியவன் அதற்கு மேல் வேலையில் கவனம் செல்லாம் உடனே கிளம்பினான்.

_______________________________________________

அந்த அழைப்பு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனின் புருவம் சுருங்க சிதாரா அதனை நீவி விட்டாள்.

பட்டென ஆர்யான் தன்‌ நெற்றி மீதிருந்த சிதாராவின் கரத்தை பிடித்து அழுத்த,

சிதாரா, "என்னாச்சு ஜிராஃபி... ஏன் டல்லா இருக்க.. இன்னும் தலைவலி குறையலயா..." எனக் கேட்டாள் கவலையாக.

கண்களை இறுக்கி மூடி தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் கைகளை விடுவித்து விட்டு கண்களைத் திறந்து புன்னகையுடன்,

"எதுவும் ப்ராப்ளம் இல்ல மினி... ஹெவி வர்க்... அதான் கொஞ்சம் தலைவலி... உன்னோட காஃபிக்கும் தைலத்துக்கும் இப்போ பெட்டரா ஃபீல் பண்றேன்... ஆமா என்ன இது வீட்டுல எல்லாம் புதுசா இருக்கு... " என்க,

சிதாரா, "அழகா இருக்குல்ல ஜிராஃபி.. நான் தான் கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வந்து வீட்ட அரேன்ஜ் பண்ணேன்..." எனக் கண்கள் பளிச்சிடக் கூறினாள்.

ஆர்யான், "என்னது... நீ தனியா வெளிய போனியா... ஏன் என் கிட்ட சொல்லிட்டு போகல மினி... எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுன்னு சொல்லிட்டு தானே போனேன்..." என ஏற்கனவே தனக்கு வந்த அழைப்பில் பதட்டமாக இருந்தவன் கத்த சிதாராவின் முகம் வாடியது.

இதுவரை எதற்குமே தன் மீது கோவப்பட்டோ கத்தியோ இல்லாதவன் திடீரென இப்படிப் பேசவும் சிதாராவுக்கு வேதனையாக இருந்தது.

ஆனால் தான் அவனுக்கு அழைத்தும் ஆர்யான் தான் அழைப்பை ஏற்காமல் இருந்து விட்டு இப்போது தன்னைத் திட்டவும் சிதாரா,

"எதுக்கு இப்ப சும்மா கத்துற... நான் என்ன சின்ன குழந்தையா தனியா போக பயப்பட... இதுக்கு முன்னாடியும் இங்க இருக்கும் போது நான் தனியா வெளியே போவேன் தானே... நீ என்ன கல்யாணத்துக்கு அப்புறம் புதுசா சட்டம் எல்லாம் போடுற... அப்படி இருந்தும் உன் கிட்ட சொல்லிட்டு போக தான் நான் அத்தனை தடவ கால் பண்ணேன்... நீ தான் அட்டன்ட் பண்ணவே இல்ல..." என்றாள் கோவமாக.

ஆர்யான், "அப்போ இருந்த சிட்டுவேஷன் வேற மினி.. இப்ப உன்..." என பாதியில் நிறுத்த,

"எதுக்கு நிறுத்திட்ட... சொல்லு... என்ன மாறிடுச்சு இப்போ மட்டும்..." என சிதாரா அவனின் பதட்டமான முகத்தைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்க,

"இல்ல... மினிக்கு இது எதுவும் தெரிய வேணாம்.. அவள் வீணா டென்ஷன் ஆகிறுவா... அது அவளோட ஹெல்த்த தான் பாதிக்கும்..." என மனதில் நினைத்துக் கொண்ட ஆர்யான் சிதாராவிடம்,

"சாரி மினி... வர்க் டென்ஷன்... அதான் தேவையில்லாம உன்ன கத்திட்டேன்... விடு... நீ எவ்வளவு ஆசையா பண்ணி இருப்ப... நான் சும்மா கத்தி உன் மூடயும் கெடுத்து விட்டுட்டேன்... எனக்கு டின்னர் வேணாம்... டயர்டா இருக்கு நான் தூங்குறேன்... நீ நாளைக்கு யுனி போக தேவையானத எடுத்து வை..." என்றவன் சிதாராவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிதாராவிற்கு ஆர்யானின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.

ஆனால் அவனாக கூறாமல் தான்‌ என்ன செய்ய முடியும் என அமைதியாகி விட்டாள்.

பின் சிதாராவும் சாப்பிடாது எல்லாம் முடித்து விட்டு அறைக்கு வர ஆர்யான் கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி ஒரு கையால் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான்.

அவனைத் தொந்தரவு செய்யாமல் இரவு உடைக்கு மாறி வந்த சிதாரா ஆர்யான் இன்னும் அதே நிலையில் இருக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து,

"என்னாச்சு ஜிராஃபி... ஆஃபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமா... வந்ததுல இருந்து ஏதோ யோசிச்சிட்டே இருக்க..." என்க,

ஆர்யான், "சும்மா தான் மினி... எதுவும் பிராப்ளம்லாம் இல்ல...‌ நீ தூங்கு..." என்றான்.

சிதாரா அதன் பின் எதுவும் கேட்காமல் உறங்கிட சற்று நேரத்தில் கண்ணைத் திறந்து சிதாராவைப் பார்த்த ஆர்யான் அதிர்ந்தான்.

ஆர்யான் அவசரமாக அவளைத் தட்டி எழுப்பி, "மினி... இதென்ன புதுசா இருக்கு..." என்க,

அவனை முறைத்த சிதாரா, "இதை கேக்க தான் தூங்கிட்டு இருக்குற மனுஷிய கத்தி எழுப்பினியா... என்னோட ஹக்கி பிலோ.." என்றாள் கோவமாக.

அசடு வழிய சிரித்த ஆர்யான், "அதில்ல மினி... இது உன்னோட ஹக்கி பிலோ மாதிரி தெரியல... புதுசா இருக்கு... அதான் கேட்டேன்..." என்க,

"இன்னைக்கு வெளிய போனப்போ வாங்கிட்டு வந்தேன்... என்னோடத வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேன் போல... அது இல்லாம எனக்கு தூக்கம் போறதே இல்ல... மரியாதையா என்ன டிஸ்டர்ப் பண்ணாம தூங்கிடு ஜிராஃபி.. மார்னிங் நான் ஏர்லியா கிளம்பனும்..." என்றவள் தன் புதிய ஹக்கி பிலோவை அணைத்தபடி படுத்தாள்.

சில நொடி அந்த ஹக்கி பிலோவையே முறைத்த ஆர்யான், "கூடிய சீக்கிரம் உன்னயும் மேல அனுப்புறேன்..." என மனதில் சூளுரைத்துக் கொண்டு படுத்தான்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டவன் தன்னிடம் கூறாமல் எங்கேயும் செல்லக் கூடாது... வகுப்பு முடிந்ததும் தனக்கு அழைத்து கூறி விட்டுத் தான் வீடு செல்ல வேண்டும்.. என ஏகப்பட்ட அறிவுரைகள் கூற அனைத்தையும் கேட்டு ஒரு தலையசைப்பை மட்டும் வழங்கினாள் சிதாரா.

ஆனால் அவள் மனதிலும் ஆர்யான் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என பல கேள்விகள்.

அங்கிருந்து வீட்டுக்கு வந்த ஆர்யான் உடனடியாக தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும், "அந்த நம்பர் யாரோடதுன்னு தெரிஞ்சிதா..." என்க,

"இல்ல ஆர்யான்... அது ஒரு சேட்டலைட் மொபைல் நம்பர்... யாரோடதுன்னு கண்டுபிடிக்க முடியாது... ரொம்ப கவனமா அவன் யாருன்னு தெரிய கூடாதுன்னு இது மூலமா உன்ன கான்டேக்ட் பண்ணி இருக்கான்..." என மறுபக்கம் கூறப்பட்டதும்,

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன், "ஷிட்.... எல்லா பக்கத்தாலையும் நம்மள ப்ளாக் பண்ணி வெச்சிருக்கான்... ராஸ்கல்... எதுவுமே பண்ண முடியல..." என்றான்.

மறுபக்கம், "டோன்ட் வொரிடா... ஏதாவது வழில அவன் மாட்டிப்பான்... நீ பொறுமையா இரு.." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அவனைக் கண்டறியும் போது ஏற்கனவே அனைத்தும் கை மீறி இருக்கப் போவதை பாவம் அவர்கள் அறியவில்லை.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே.. நேத்து யூடி தர முடியல... அதுக்கு பதிலா சீக்கிரம் அடுத்த யூடியையும் தர ட்ரை பண்றேன்... மறக்காம உங்க ஆதரவ வழங்குங்க.. நன்றி... ☺️

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 18
சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டு வந்த ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பினான்.


யுனிவர்சிட்டிக்கு சென்ற சில மணி நேரத்தில் சிதாராவிடம் வந்த அவள் வகுப்புத் தோழி ஒருத்தி,


"சிதாரா... சம்வன் இஸ் வைட்டிங் ஃபார் யூ இன் அவுட்சைட்..." என்று விட்டு சென்றாள்.


சிதாரா, "என்ன யாரு பார்க்க வந்து இருப்பாங்க... ஒரு வேளை ஜிராஃபியா இருக்குமோ... பட் அவன் எதுக்கு இப்போ வரனும்... சரி போய் பார்க்கலாம்..." என நினைத்தவள் யாரெனப் பார்க்கச் செல்ல அங்கே யாருமே இருக்கவில்லை.


சுற்று முற்றும் நன்றாக பார்க்க யாருமே தெரியவில்லை.


சிதாரா, "ச்சே... யாராவது விளையாடுறாங்களா இருக்கும்..." என்றாள் கோவமாக.


பின் மீண்டும் வகுப்பிற்குச் சென்றவள் பாடங்களில் பிஸியாக அது பற்றி மறந்தே போனாள்.


மாலையானதும் வீட்டுக்குச் செல்ல வெளியே வர அவளுக்கு முன்னே அங்கு ஆர்யான் பைக்கில் வந்து காத்திருந்தான்.


அவனிடம் சென்ற சிதாரா, "என்ன ஜிராஃபி... நான் கால் பண்ண கூட இல்ல... நீயே வந்துட்ட..." என்க,


"இன்னைக்கு கொஞ்சம் வர்க் கம்மி மினி... அதான் உன்ன பிக்கப் பண்ண வந்தேன்..." என ஆர்யான் கூறினான்.


சிதாரா ஏறி அமர பைக் வீட்டை நோக்கி புறப்பட்டது.


சிதாராவை வீட்டில் இறக்கியவன், "மினி வெளிய சின்ன வேலை ஒன்னு இருக்கு... நீ டார் லாக் பண்ணிக்கோ... நான் சீக்கிரம் வரேன்.." என்று விட்டு சென்றான்.


சிதாராவும் களைப்பு தீர குளித்து விட்டு வந்தவள் ஆர்யானின் டயரி நினைவுக்கு வர அதனை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.


முதல் பக்கத்தைத் திறக்க,


"ஹாய் சேம்ப்... ஐம் ஆர்யான்... யூ நோ வன் திங்... எனக்கு இந்த டயரி எழுதுறதெல்லாம் பழக்கமே இல்ல... பட் இன்னைக்கு எழுதனும்னு தோணுது... என் மனசுல இருக்குறத யாரு கிட்டயாவது சொல்லனும்... ஃப்ரென்ட்ஸ்ட இப்பவே சொல்ல முடியாது... அதான் உன் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கேன்... "


என்று இருக்க சிதாராவுக்கு சிரிப்பு வந்தது.


அடுத்த பக்கத்தைப் பார்க்க,


"இன்னைக்கு ஒரு பொண்ண பாத்தேன் சேம்ப்.. இல்ல இல்ல... பொண்ணுன்னு எல்லாம் சாதாரணமா சொல்லக் கூடாது... தேவதை அவள்... அவள பாத்ததும் மனசுக்குள்ள ஒரு சொல்ல முடியாத ஃபீல்... ஷீ இஸ் அ ஸ்பார்க்ல்..."


என்றிருந்தது.


சிதாரா, "பார்ரா... இவன் இது வர என் கிட்ட கூட இதை பத்தி சொல்லி இல்ல... யாரா இருக்கும்..." என்றவள் மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்க்க அதற்குள் ஆர்யான் பேசும் சத்தம் கேட்டது.


பிறகு பார்க்கலாம் என டயரியை மூடி இருந்த இடத்திலே வைத்தவள் வெளியே செல்ல,


ஆர்யான், "மினி.. நீ நைட்டுக்கு டின்னர் சமைக்க வேணா... நான் வெளியவே வாங்கிட்டு வந்துட்டேன்..." என்றவன் சிதாராவுக்கு பரிமாறி விட்டு தனக்கும் போட்டு எடுத்துக் கொண்டான்.


இருவரும் அமைதியாக சாப்பிட திடீரென சிதாரா,


"ஜிராஃபி... ஊட்டி போய் வந்ததுமே கேக்கனும்னு இருந்தேன்... அதுக்கப்புறம் நடந்த ப்ராப்ளம்ஸ்ல மறந்துட்டேன்... ஆமா அன்னைக்கு மயூ என்ன சொன்னா உன் கிட்ட... நீ கூட வெக்கப்பட்டுட்டு இருந்ததெல்லாம் பார்த்தேன்..." என்க,


ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அன்று நடந்தவற்றை சிதாராவிடம் கூறினான்.


மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,


ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,


"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.


மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.


அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,


"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.



ஆர்யான் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சிதாரா,


"என்ன... உனக்கும் அவள பிடிச்சிருக்குன்னு சொன்னியா... என்ன சொல்ற ஜிராஃபி... பின்ன எதுக்கு லூஸு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட... மயூ பாவம்... எதுக்குடா அவள ஏமாத்தின..." என்றாள் கோவமாக.


ஆர்யான், "அட இருமா... இன்னும் முழுசா சொல்லி முடிக்கல... அதுக்குல்ல ஏமாத்திட்ட அது இதுன்னு சொல்ற..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.


பின் ஆர்யான், "பட் நீங்க சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நான் சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நெறய டிஃபரன்ட் இருக்கு.. ஒரு அழகான பொண்ணையோ பையனையோ பாத்தா நமக்கு அவங்கள ஸைட் அடிக்க தோணும்.. அப்படி தான் எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.. அதனால தான் சைட் அடிச்சேன்.. அதுக்காக நாம ஸைட் அடிக்கிற எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... இட்ஸ் ஜஸ்ட் அ நார்மல் ஃபீல்... பட் லவ்வுங்குறது ரொம்ப வித்தியாசமானது... அது யார் மேலயும் அவ்வளவு ஈஸியா வந்துறாது... ஒருத்தர் அழகா இருக்காங்கன்னு அவங்கள நாம லவ் பண்ண முடியாது... அப்படி லவ் பண்ணோம்னா அந்த அழகு போனதும் லவ்வும் முடிஞ்சிரும்... லவ்வுங்குறது மனச பாத்து வரனும்... முடியெல்லாம் நறச்சி போய் தோல் சுருங்கி கண்ணுல குழி விழுந்தத்துக்கு அப்புறமும் உனக்காக நான் எனக்காக நீ.. அப்படி இருக்குறது தான் லவ்.. உங்கள நான் தப்பு சொல்லல.. உங்க ஃபீலிங்ஸ நான் மதிக்கிறேன்... ஒரு பையன் கிட்ட வந்து நேரா எனக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லவும் ஒரு கட்ஸ் வேணும்.. அந்த வகைல நீங்க ரொம்ப தைரியசாலிங்க.. பட் இப்ப உங்களுக்கு என் மேல வந்திருக்குறது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்.. அதனால பார்க்க ஆர் ஸைட் அடிக்க தோணும்.. கொஞ்ச நாளெக்கி அப்புறம் அழகான வேறொருத்தர பார்க்க கிட்டயும் ஸைட் அடிக்க தோணும்.. பட் உங்களுக்கானவரு ஏதோ ஒரு மூலைல உங்களுக்காக காத்துட்டு இருப்பாரு.. அவர பாக்க கிட்ட உங்களுக்கு தோணும் இவன் தான் என் லைஃப்னு... அந்த நாள் கூடிய சீக்கிரம் உங்க வாழ்க்கைல வர நான் வேண்டிக்கிறேன்.. மோர் ஓவர் என் லைஃப்ல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கா.. சாரி மயூரி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல.." என்க,


மயூரி, "நோ நோ சாரி எல்லாம் கேக்காதீங்க ஆர்யான்.. என் மனசுல உள்ளத சொல்ல எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உங்க விருப்பத்த சொல்ல உங்களுக்கும் உரிமை இருக்கு.." என்க,


"தேங்க்ஸ் மயூரி என்றான் ஆர்யான்.


பின் மயூரி, "இதை கண்டிப்பா சொல்லனும் ஆர்யான்... நீங்க லவ் பண்ணுற பொண்ணு ரொம்ப லக்கி.." என்க,


"அவ கெடக்க நான் தான் லக்கி.." எனக் கூறி அழகாக வெட்கப்பட்டான் ஆர்யான்.



சிதாரா, "டேய்... அப்போ கூட உன் மனசுல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லி இருக்க.. யாருடா அது..." என்க,


அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,


"அது சும்மா... போற போக்குல அடிச்சு விட்டேன்... இவ்வளவு ஹேன்ட்சமான பையன் இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா எனக்கு தானே அசிங்கம்... அதான் அப்படி ஒரு பிட்டு..." என்றான்.


அவனைப் பார்த்து கள்ளப் புன்னகை ஒன்றை உதிர்த்த சிதாரா மனதில்,


"என் கிட்டயே மறைக்கிறியா ஜிராஃபி... நீ சொல்லலனா என்ன.. அதான் உன் டயரி இருக்கே... நானே தெரிஞ்சிக்குறேன்.." என நினைத்துக் கொண்டாள்.


அன்று இரவும் சிதாரா ஹக்கி பிலோவை அணைத்துக் கொண்டு உறங்கி விட,


ஆர்யான் அதனை நன்றாக மனதில் வறுத்தெடுத்தவன்,


"இன்னைக்கு மட்டும் தான் உனக்கு மினி கூட தூங்க கிடைக்கும் பாஸ்... நாளைக்கே உனக்கொரு முடிவு கட்டுறேன்..." என நினைத்தவாறு படுத்துக் கொண்டான்.


_______________________________________________


பிரணவ், "ஆமா... எனக்கு எல்லா டீட்டைல்ஸும் தெரியும்... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்... தாராவுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... நீங்க எனக்கு எதுவும் தன அவசியமில்ல... இது மூலமா எனக்கும் பெரிய லாபம் கிடைக்குது..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பிரணவ்வின் முகத்தில் மர்மப் புன்னகை ஒன்று உதித்தது.


பிரணவ்வைத் தேடி வந்த அபினவ், "இங்க தனியா என்னடா பண்ணிட்டு இருக்க... நானும் கொஞ்ச நாளா உன்ன நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்... ரொம்ப வித்தியாசமா பிஹேவ் பண்ற... அடிக்கடி தனியா போய் மொபைல்ல யாரு கூடவோ பேசிட்டிருக்க... என்னடா பிரச்சினை..." என்க,


அபினவ்வைப் பார்த்து சிரித்து சமாளித்த பிரணவ்,


"ச்சேச்சே.. அப்படி எல்லாம் இல்லடா... ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம்... அது பத்தி தான் அடிக்கடி கால் வருது..." என்றான்.


பிரணவ் கூறியதை நம்பிய அபினவ் பின் எதுவும் கூறாமல் சென்றான்.


அபினவ் சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ்,


"இவனுக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆதர்ஷ் கிட்டயும் சொல்லிடுவான்... அதுக்கப்புறம் பெரிய பிரச்சினை ஆகிடும்... சீக்கிரம் இந்த வேலைய முடிக்கனும்..." என நினைத்துக் கொண்டான்.


_______________________________________________


மறுநாளும் சிதாரா யுனிவர்சிட்டி முடிந்து வர ஆர்யான் அன்று அவளை தனியே வரக் கூறி இருந்தான்.


முதல் நாள் போலவே இன்றும் யாரோ தன்னைப் பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.


அதனால் டாக்ஸி பிடித்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தாள்.


சிதாரா வந்து சிறிது நேரத்திலே ஆர்யான் கையில் ஒரு நாய்க்குட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.


சிதாரா, "ஹேய் ஜிராஃபி... யாரோட பப்பி இது... ரொம்ப கியுட்டா இருக்கு... நாம வளர்க்க போறோமா என்ன..." என கண்கள் மின்னக் கேட்டாள்.


ஆர்யான், "இல்ல மினி... இது என் ஃப்ரெண்டோட பப்பி.. பேரு ஃபெபி... அவன் ஏதோ வேலையா போறானாம்... அதான் கொஞ்சம் நேரம் வெச்சிக்க சொன்னான்... நைட் வந்து எடுத்துட்டு போயிருவான்...." என்கவும்,


"ஓஹ்... அப்படியா... பட் ரொம்ப கியுட்டா இருக்கு..." என்ற சிதாரா அதை தன் கைகளில் வாங்கினாள்.


ஃபெபியும் நாக்கால் சிதாராவின் முகத்தை நக்கி அதன் பாசத்தை வெளிக் காட்டியது.


உண்மையில் ஆர்யான் தான் அவன் நண்பன் ஒருவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான்.


ஆர்யான், "சரி மினி.. ஃபெபிய என் கிட்ட குடு... நீ ஃபெபிக்கு சாப்பிட கிச்சன்ல இருக்குற பிஸ்கட்ட எடுத்துட்டு வா... நான் இதை நம்ம ரூமுக்கு எடுத்துட்டு போறேன்... ஆஹ் அப்படியே எனக்கும் ஒரு கப் காஃபி எடுத்துட்டு வா மினி.." என்றான்.


சிதாராவும் ஃபெபியை ஆர்யானிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்கு சென்று விட,


ஆர்யான், "வா ஃபெபி... உனக்கு பெரிய வேலையொன்னு இருக்கு..." என்றவன் ஃபெபியை அறைக்கு எடுத்துச் சென்றான்.


அறைக் கதவை மூடிக் கொண்டவன் ஃபெபியைக் கீழே விட்டான்.


பின் கட்டிலிலிருந்த சிதாராவின் புதிய ஹக்கி பிலோவை எடுத்து ஃபெபியைத் தாண்டி வீசியவன்,


"ஃபெபி கேட்ச்.." என்றான்.


அதுவும் அதனைப் பிடிக்க துள்ளிப் பாய ஆனால் பிடிக்க முடியாமல் போனது.


மீண்டும் மீண்டும் ஃபெபியினால் பிடிக்க முடியாதவாறே எறிந்தவன் இறுதியில் கள்ளப் புன்னகையுடன் ஃபெபியின் அருகில் போட்டான்.


இவ்வளவு நேரமும் தன் கையில் மாட்டாமல் இப்போது மாட்டிய கோபத்தில் ஃபெபியும் தன்னால் முடிந்த அளவு அதனை கடித்து இழுத்து என கொடுமை செய்தது.


அதைக் கண்டு ரசித்தவாறே ஆர்யான் உடை மாற்றி வர குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.


சற்று நேரத்தில் சிதாரா ட்ரேயில் தனக்கும் ஆர்யானுக்கும் காஃபியும் ஃபெபிக்கு பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய அவள் கண்டது என்னவோ ஃபெபியின் கையில் மாட்டி சின்னாபின்னமாகி உயிரை விட்டிருந்த அவளது ஹக்கி பிலோவைத் தான்.


ட்ரேயை அங்கிருந்த மேசை மீது வைத்தவள் அவசரமாக தன் ஹக்கி பிலோவைக் கையில் எடுத்து,


"என்னோட ஹக்கி பிலோ...." என்றாள் கவலையாக.


சரியாக ஆர்யானும் வெளியே வர ஆர்யானுக்கு சிதாராவின் கையிலிருந்த ஹக்கி பிலோவைக் காணக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.


ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன் எதுவும் தெரியாதது போல்,


"என்னாச்சு மினி... ஏன் சோகமா இருக்க..." என்றான்.


சிதாரா, "ஃபெபி என் ஹக்கி பிலோவ பிச்சி போட்டுடுச்சு..." என்றாள்.


ஆர்யான் தனக்கு வந்த சிரிப்பை மறைத்தபடி, "அதுக்கென்ன மினி.. விடு வேற வாங்கிக்கலாம்... பாவம் ஃபெபி... அதுக்கென்ன தெரியும்..." என்றான்.


சிதாரா பாவமாக முகத்தை வைத்தபடி, "இல்ல ஜிராஃபி... எனக்கு வேற வேணாம்... எவ்வளவு ஆசையா வாங்கினேன் தெரியுமா... இனி நான் சும்மாவே தூங்க பழகிக்கிறேன்...." என்றாள்.


ஆர்யானோ உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான்.


ஃபெபியைத் தூக்கிக் கொண்ட ஆர்யான் அதைக் கொஞ்சியவாறு சிதாரா கொண்டு வந்த பிஸ்கட்டை அதற்கு ஊட்டி விட்டான்.


இரவானதும் சிதாரா ஹக்கி பிலோ இல்லாததால் கட்டிலிலில் ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.


ஆனால் மறுநாள் காலை அன்று போல் ஆர்யானின் நெஞ்சில் தான் தலை வைத்து அவனை அணைத்தபடி படுத்திருந்தாள்.


அவளுக்கு முன் விழித்த ஆர்யான் சற்று நேரம் சிதாராவின் முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவளை இரவு படுத்தது போல் ஓரமாகப் படுக்க வைத்தான்.


சிதாரா எழுந்து பார்க்கும் போது இரவு உறங்கியது போலவே தான் படுத்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவள் ஹக்கி பிலோ இல்லாமலே அதன் பின் வந்த நாட்கள் தூங்கினாள்.


ஆனால் அவள் விழித்து விட முன் ஆர்யான் செய்வது எதையுமே சிதாரா அறியவில்லை.


அடுத்து வந்த நாட்கள் சிதாரா யுனிவர்சிட்டி செல்வதிலும் படிப்பதிலும் கவனம் செல்ல ஆர்யானின் டயரி பற்றி மறந்தே போனாள்.


ஆர்யானுக்கும் அந்த தெரியா இலக்கத்திலிருந்து அதன் பின் அழைப்பு வராததால் நிம்மதியாக இருந்தது.


ஆனால் சிதாராவைக் கடத்த முயன்றது யாரென்று தேடிக் கொண்டு தான் இருந்தான்‌.


இருவரின் நாட்களும் எப்போதும் போல ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு சந்தோஷமாகக் கழிந்தது.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 19
ஆர்யான், சிதாரா இருவரின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் யுனிவர்சிட்டி பஸ்ஸில் தான் சிதாரா வீடு திரும்புவாள்.

ஆர்யான் தான் அவளின் பாதுகாப்புக்கு அதனை ஏற்பாடு செய்திருந்தான்.

அன்று சிதாரா யுனிவர்சிட்டியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஆர்யானிடமிருந்து கால் வந்தது.

ஆர்யான், "மினி... இன்னைக்கு வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகிடும்... எனக்காக வைட் பண்ணிட்டு இருக்காதே... நீ சாப்டுட்டு டார் லாக் பண்ணிட்டு தூங்கு... என் கிட்ட இன்னொரு கீ இருக்கு... பாய் மினி..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சிதாரா குளித்து உடை மாற்றி வந்தவள் சமையலறை சென்று காஃபி கலந்து எடுத்து வந்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஆர்யானின் டயரியை இன்னும் படிக்காதது நினைவு வரவும் அதனை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

"சேம்ப்..... என்ன பொண்ணுடா அவ... நானும் இங்க படிக்க வந்ததுல இருந்து மாடர்ன் ட்ரஸ்ன பேருல கண்ட கருமத்தையும் போடுற பொண்ணுங்கள தான் பாத்திருக்கேன்... பட் இவ வேற சேம்ப்..."

என்றிருக்க சிதாரா, "பார்ரா.... சார் ரொம்ப பீஃல் பண்ணி எழுதி இருக்காரு... பாக்கலாம் யாருன்னு.." என்றவள் மறுபக்கத்தைப் படித்தாள்.

"ஃபர்ஸ்ட் யேர் ஸ்டுடன்ட்ஸ் ஜாய்னிங் டே... சுத்தி இருந்த அவ்வளவு பொண்ணுங்களுக்கு மத்தியில அவ மட்டும் என் கண்ணுக்கு தனியா தெரிஞ்சா... ஐ ஸ்டாப்ட் ப்ரீத்திங் ஃபார் அ செக்கன்..."

சிதாரா, "ஓஹ்... அவ்வளவு அழகா என்ன..." என நினைத்தவளுக்கு அவளையே அறியாது சற்று பொறாமையாகவும் இருந்தது.

"லாங் சுடிதார் போட்டு, ஷால அப்படியே முன்னால மறைச்ச மாதிரி விரிச்சி போட்டு, நெத்தில குட்டியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு... புக்ஸ நெஞ்சோட அணைச்சிக்கிட்டு மெதுவா நடந்து வந்தா... அவ போட்டிருந்த அந்த ஸ்பெக்ஸயும் தாண்டி அவ கண்ணுல ஒரு பதட்டம்..."

என்றிருக்க சிதாராவின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

அவசரமாக மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்த்தாள்.

"அவ நான் உக்காந்துட்டு இருந்த இடத்த நெருங்க நெருங்க என் ஹார்ட் பீட் அப்படியே எகிரிடுச்சு... "

என்று நிறுத்தி இருந்தான்.

"சிதாரா... அவ பேரு அது தான்... பேரைப் போலவே அவ ஒரு நட்சத்திரம்... ராத்திரி நேரத்துல கருமைல மூழ்கி போற வானத்துல எப்படி சின்ன தீப்பொறி போல எரியிர நட்சத்திரம் வெளிச்சத்த கொடுக்குமோ.. அது போல தான் என் சிதாரா... என் வாழ்க்கைல சின்ன வெளிச்சம்குற சின்ன சின்ன சந்தோஷங்கள கொண்டு வர வந்தவ... மை ஏஞ்சல்..."

என்றிருந்ததை வாசிக்கவும் சிதாராவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

"ஹ்ம்ம்ம்ம்..... சரியா நேரம் பார்த்து பாழாப் போன என் வாய் அதோட வேலைய காட்டிடுச்சு... வந்ததும் வராததுமா அவ கிட்ட போய் பேசினா எங்க அவ என்ன தப்பா நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு ரேக்கிங் பண்ணுறது போல அவள கலாய்ச்சேன்... அப்ப கூட பயந்துட்டு கீழ பாத்துட்டே இருந்தா... ஒரு வார்த்த கூட பேசல... எனக்கே பார்க்க பாவமா இருந்துச்சு... அப்போ திடீர்னு அவ வலிப்பு வந்து என் கால் கிட்டே விழவும் என் இதயமே நின்னு போச்சு சேம்ப்..."

என்றிருக்க சிதாராவின் கண்கள் கலங்கின.

"அதுக்கப்புறம் அவ கண்ணு முழிக்கிற வரைக்கும் நான் நானாவே இல்ல... அவ கண்ண தெறந்து என்ன பாத்ததும் தான் போன உசுரு திரும்ப என் கிட்ட வந்துச்சு..."

அதன் பின் இருவரும் நட்புக் கரம் நீட்டியது, மாறி மாறி பெயர் சூட்டிக் கொண்டதில் இருந்து அவளுடனான ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து எழுதி இருந்தான்.

"சடன்னா மினி அவளோட ட்ரஸிங் ஸ்டைல்ல இருந்து எல்லாம் மாத்திக்கிட்டதும் எனக்கு அப்படி ஒரு கோவம்... அப்போ தான் அவளோட பாஸ்ட் பத்தி என் கிட்ட சொன்னா.... அந்த பிரணவ்வ கொல்லனும் போல ஒரு வெறி.... அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னோட மினி கிட்ட அப்படி எல்லாம் சொல்லி இருப்பான்... அவன் மட்டும் என் முன்னாடி இருந்தான்னா அது தான் அவனோட கடைசி நிமிஷம்..."

சிதாராவின் முகத்தில் அவளையும் மீறி புன்னகை வெளிப்பட்டது.

"பட் சேம்ப்... அவன் அப்படி பேச போய் தானே மினி நியுயார்க் வந்தா... அதனால தானே எனக்கு அவள பார்க்க முடிஞ்சது... அதுக்காக அவன் பண்ணத நான் மன்னிக்க எல்லாம் இல்ல... திரும்பவும் என் மினிய அவன் கஷ்டப்படுத்த நெனச்சா அதுக்கப்புறம் அவன என்ன பண்ணுவேண்ணு எனக்கே தெரியாது..."

சிதாராவின் மனநிலை என்னவென்று அவளாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஆர்யானின் வார்த்தைகளால் மனதில் ஒரு இதம் பரவுவதையும் மறுக்க முடியவில்லை‌.

"சேம்ப்‌...... நான் இன்னைக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கேன்... ஏன் தெரியுமா... ஏன்னா..... நான்.... மினிய...... இல்ல... சொல்ல மாட்டேன்... என் மினியோட கண்ண பாத்து அவ கிட்ட தான் இதை முதல்ல சொல்லனும்... அதுக்கு அவளோட ரியாக்ஷன பார்க்கனும் நான்..."

என முடித்திருந்தான்.

சிதாரா அவசரமாக அடுத்த பக்கங்களைப் பிரட்டினாள்.

ஆனால் அதன் பின் அவன் எதுவுமே எழுதி இருக்கவில்லை.

டயரியை இருந்த இடத்திலேயே வைத்தவள்,

"அப்படின்னா ஜிராஃபி மனசுல இருக்குற அந்த பொண்ணு நானா..." என நினைக்கும் போதே சிதாராவின் முகத்தில் புன்னகை.

சிதாரா, "பட் ஏன் இன்னும் ஜிராஃபி என் கிட்ட இதை பத்தி சொல்லல... கல்யாணத்தப்போ கூட ஏதோ என் நல்லதுக்குன்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணான்.." என்றவளை,

"அவன் சொல்லி இருந்தா மட்டும் நீ உடனே எக்சப்ட் பண்ணி இருக்கவா போற... " என அவளின் மனசாட்சி திட்டியது.

"பாக்கலாம்.. சார் இதை என் கிட்ட எப்போ சொல்ல போறாருன்னு... போய் முதல்ல டின்னர் பண்ணி வைக்கலாம்.." என்றவள் சமைக்கச் சென்றாள்.

சமைக்க ஆரம்பிக்கும் போதே அவளுள் ஏதோ செய்ய ஆரம்பிக்க அதனைப் புறக்கணித்து விட்டு சமையலை முடித்தவள் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

அப்போது தான் சிதாராவின் கண்களில் நாட்காட்டி பட அன்றைய திகதியைப் பார்த்தவள்,

"ப்ச்... இதை எப்படி மறந்தேன்... " என வயிற்றைத் தடவியபடி அறைக்குள் நுழைந்து தன் சூட்கேசை இழுத்துத் தேடியவள் தலையில் அடித்தபடி, "நான் தான் இருந்த டென்ஷன்ல வாங்கி வைக்கவே இல்லையே..." என தன்னையே நொந்து கொண்டாள்.

கப்போர்ட்டை திறக்க சிதாராவின் கண்களில் மாட்டியது பேப்பரால் சுற்றி வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று.

அது என்ன என்று எடுத்துப் பார்க்கவும் அதனுள் அவளுக்குத் தேவையானது இருந்தது.

சிதாரா, "இது எப்படி இங்க வந்தது... நான் தான் வாங்கவேயில்லையே..." என நினைத்தவளின் கண் முன் ஆர்யானின் முகம் தோன்றியது.

புன்னகைத்தபடி, "சோ ஸ்வீட் ஜிராஃபி நீ... என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சி வெச்சி இருக்க.." என்றவள் அதனை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சற்று நேரத்தில் வெளி வந்தவள் முகம் வலியில் சுருங்கி இருந்தது.

வலி பொறுக்காது வயிற்றை இறுக்கிப் பிடித்தபடியே சென்று அறை விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

நன்றாக இருட்டிய பின் தான் ஆர்யான் வீட்டுக்கு வந்தான்.

தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்தவன் வீடு அமைதியாக இருக்கவும், "மினி தூங்கிட்டா போல.." என நினைத்தவன் டைனிங் டேபிள் அருகில் வர மேசையில் பாத்திரங்கள் அப்படியே இருந்தன.

திறந்து பார்த்தவன், "என்ன எல்லாம் அப்படியே இருக்கு... நான் தான் எனக்காக வைட் பண்ண வேணாம் சாப்டுன்னு சொன்னனே..." என்ற ஆர்யான் சிதாராவைத் தேடி அறைக்குள் நுழைந்தான்.

அறை இருட்டாக இருக்கவும் "மினி.." என அழைத்தபடி விளக்கைப் போட கட்டிலில் ஒரு ஓரமாக முனங்கியபடி ஒரு கையால் வயிற்றையும் மறு கையால் கால்களையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் சிதாரா.

பதறிய ஆர்யான், "என்னாச்சு மினி... ஏன் இப்படி படுத்திருக்க..." என சிதாராவை நெருங்கிக் கேட்க,

"ஒன்னுமில்ல ஜிராஃபி... ஜஸ்ட் மந்த்லி த்ரீ டேய்ஸ் எப்பவும் வரது தான்..." என வலியில் கூறி விட்டு கண் மூடவும் ஆர்யானுக்கு புரிந்து போனது.

அவசரமாக அறையிலிருந்து வெளியேறியவன் சில நொடிகளில் கையில் ஒரு க்ளாஸுடன் நுழைந்தான்.

ஆர்யான், "மினி எழுந்து இதை குடி முதல்ல..." என அவளைக் கைப் பிடித்து எழுப்பியவன் அவளை கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

சிதாரா அவன் தந்த க்ளாஸை கையில் வாங்கி, "என்ன ஜிராஃபி இது..." எனக் கேட்க,

"இஞ்சி டீ... இஞ்சிய தண்ணில கொதிக்க வெச்சி அதுல தேன் கலந்து குடிச்சா பெய்ன் குறையும்... அதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன்..." என்றான் ஆர்யான்.

"ஈ... யக்... எனக்கு வேணா ஜிராஃபி..." என முகத்தை சுருக்கியபடி கூறிய சிதாரா மீண்டும் படுத்துக் கொள்ளப் பார்க்க,

"மினி... சொல்றேன்ல... சாப்பிட கூட இல்ல நீ... ப்ளீஸ் எனக்காக குடி.. பெய்ன் குறையும் உனக்கு.." என ஆர்யான் கூறவும் அவன் கெஞ்சுவதை விரும்பாத சிதாரா கண்ணை மூடிக் கொண்டு ஒரே மிடரில் குடித்தவள்,

"ரொம்ப படுத்துற நீ ஜிராஃபி..." என்றாள் ஆர்யானை முறைத்துக் கொண்டு.

சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவளிடமிருந்து க்ளாஸை வாங்கி வைத்தவன்,

"சரி கால் ரெண்டயும் நேரா நீட்டி வை மினி..." என்கவும்,

அவன் சொல்லியதை செய்தவள், "எதுக்கு.." எனக் கேட்டாள்.

ஆர்யான், "ஆய்ல் மசாஜ் பண்ணி விடத்தான் மினி... கால் வலிக்கு நல்லது..." என்றவன் சிதாராவின் கால்களில் எண்ணையைத் தடவ அமர,

பட்டென கால்களை இழுத்துக் கொண்டவள், "அ.. அதெல்லாம் ஒன்னும் வேணா... இது நார்மல் தானே‌‌... அதுவா சரி ஆகிடும்.." என்றாள் தடுமாறியபடி.

சிதாராவின் கண்களை அழுத்தமாகப் பார்த்த ஆர்யான், "ஏன் மினி.. நான் உன்னத் தொட்டா உனக்கு அருவருப்பா இருக்கா என்ன.." எனக் கேட்க,

அவசரமாக கால்களை நீட்டினாள் சிதாரா.

சிதாராவின் செயலில் புன்னகைத்த ஆர்யான் அவள் காலை எடுத்து தன் மடி மீது வைக்க சிதாராவுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது.

அவளுக்கு அது ஒரு புதுவித உணர்வாக இருந்தது.

என்ன என வரையறுக்க முடியவில்லை அவளால்.

சிதாராவின் நைட்டியை அவள் முழங்கால் வரை உயர்த்தி விட்ட ஆர்யான் அவள் கால்களில் எண்ணையைத் தடவி நன்றாக நீவி விட்டான்.

ஆர்யான் தன் காலைத் தொடவும் முதலில் சங்கடமாக உணர்ந்த சிதாரா அதன் பின் அவன் கண்களையே ஆராய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிதாராவின் கால்களை தன் மடி மீது வைத்து எண்ணையைத் தடவும் போது கொஞ்சம் கூட அவன் கண்களில் சஞ்சலமோ பார்வை மாறுபடவோ இல்லை.

அவளின் வலியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது.

"முடிஞ்சது..." என ஆர்யான் கூறவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

சிதாரா ஆர்யானின் மடியிலிருந்து கால்களை எடுத்துக் கொள்ளவும் எழுந்தவன்,

"நீ தூங்கு மினி... நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்.." என்று விட்டு சென்றான்.

ஆர்யான் குளித்து முடித்து உடை மாற்றி வரும் போது சிதாரா தூங்காமல் கண்களைத் திறந்தபடி கால்களை மடக்கிப் படுத்திருந்தாள்.

ஆர்யான் வந்து சிதாராவின் அருகில் அமர்ந்தவன், "இன்னும் பெய்ன் இருக்கா மினி..." எனக் கவலையாகக் கேட்க,

சிதாரா, "இப்போ கொஞ்சம் குறைஞ்சிடுச்சு..." என்க,

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டான்.

ஆர்யான் வந்து கட்டிலில் படுத்துக் கொள்ளவும்,

"தேங்க்ஸ் ரயன்..." என அவன் கண்களைப் பார்த்துக் கூறிய சிதாரா ஆர்யானின் நெஞ்சில் தலை வைத்து அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

வலி பொறுக்காமல் ஆறுதலுக்காகத் தான் சிதாரா தன்னை அணைத்துப் படுத்திருக்கிறாள் என எண்ணிய ஆர்யான் ஒரு கையால் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவின் மனதில் என்ன இருந்தது என அவளே அறிவாள்.

சிதாரா ஏதோ யோசனையில் இருக்கவும் ஆர்யான், "தூங்கு மினி.. மார்னிங் ஆகும் போது பெய்ன் குறைஞ்சிடும்.." என்று சிதாராவின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து விட்டு கண் மூடினான்.

ஆனால் அம் முத்தத்தில் கொஞ்சம் கூட காமம் இன்றி சிதாராவின் மீதிருந்த அன்பும் அக்கறையும் மட்டுமே இருந்ததை சிதாராவால் உணர முடிந்தது.

சிதாராவும் நிம்மதியாக கண் மூடி உறங்கினாள்.

_______________________________________________

"பாஸ்... ஏன் இன்னும் எதுவும் பண்ணாம அமைதியா இருக்கீங்க... " என்று அவனிடம் வினவ,

பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தவன், "எதுக்கு இந்த அவசரம்... இதனால தான் நான் உனக்கு பாஸா இருக்கேன்.. நீ எனக்கு கீழ வேலை பார்க்குற..." என்க,

மற்றவன் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான்.

சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தவன் அதை வாயில் வைத்து, "நான் கண்டதும் வேட்டையாடுற நரி இல்ல... பதுங்கி நின்னு வேட்டையாடுற புலி.. ஆர்யான் எதிர்ப்பார்க்காத நேரம் என் பேபிய தூக்குவேன் நான்..." என்று புகையை ஊதி விட்டான்.

_______________________________________________

அடுத்து வந்த இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்க ஆர்யான் சிதாராவை எந்த வேலையும் செய்ய விடவில்லை.

அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்ய சிதாராவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்யானின் பக்கம் சாயத் தொடங்கியது.

ஆர்யான் தனக்கு பணிவிடை செய்வதைப் பொறுக்காத சிதாரா,

"நான் என்ன சின்ன குழந்தையா ஜிராஃபி... இல்லன்னா நோயாளியா... இப்படி ட்ரீட் பண்ற... எனக்கு சும்மா இருக்க போர் அடிக்குது..." என சிரிப்புடன் கேட்க,

"நீ குழந்தையா இருந்தாலும் இல்ல உனக்கே ஒரு குழந்தை வந்தாலும் நான் உன்ன பாத்துக்குறது மாறாது.." என ஆர்யான் பட்டென்று சொல்லி விட,

"என்ன..." என அதிர்ந்தாள் சிதாரா.

அப்போது தான் ஆர்யானுக்கு அவன் கூறியது புத்தியில் உரைக்க சிதாராவிடம் என்ன சொல்லி சமாளிக்க என எண்ணியவன்,

"அ..அது... அது வந்து... மினி எனக்கு இம்பார்டன்னட் கால் ஒன்னு எடுக்கனும்... இதோ வரேன்..." என்று விட்டு ஓடினான்.

ஆர்யானின் தடுமாற்றத்தைப் பார்த்த சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

"நீ இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க போறேன்னு நானும் பாக்குறேன் ஜிராஃபி..." என நினைத்து சிரித்தாள்.

_______________________________________________

ரஞ்சித், "இது எப்படி நடந்தது... நம்ம டென்டர் அமவுன்ட் எப்படி அவங்களுக்கு தெரிய வந்தது.." எனக் கோவமாகக் கேட்க,

"தெரியல சார்... ஆனா நிச்சயம் நம்ம கூடவே இருந்து யாரோ அவங்களுக்கு இன்ஃபர்மேஷன் குடுத்து இருக்காங்க..." என அவரின் பி.ஏ. கூறினார்.

"சீக்கிரமா அது யாருன்னு கண்டு பிடிங்க.... அந்த எஸ்.எம் கம்பனியோட ஆளு மட்டும் யாருன்னு தெரியட்டும்... அவன சும்மா விடக் கூடாது... உடனே ரவிய கான்டக்ட் பண்ணி என்ன மீட் பண்ண வர சொல்லுங்க..." என ரஞ்சித் ஆணையிடவும் அவருக்கு சரி என தலையசைத்து விட்டு சென்றார் அவரின் பி.ஏ

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -


 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 20
ரஞ்சித் தன் கேபினில் இருக்க கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரவி,

"அங்கிள்... நீங்க வர சொன்னதா உங்க பி.ஏ. சொன்னாரு... ஏதாவது ப்ராப்ளமா அங்கிள்.." எனக் கேட்க,

ரஞ்சித், "உட்காருப்பா... கொஞ்சம் பெரிய ப்ராப்ளம் தான்.. ஆரு கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்.. அதான் உன் கிட்ட சொன்னா நீ சால்வ் பண்ணி வைப்பன்னு தான் உன்ன வர சொன்னேன்..." என்றவர் சற்று நிறுத்தி விட்டு,

"உனக்கு தெரியுமேப்பா தொடர்ந்து நம்ம கம்பனி தான் நம்பர் வன் இடத்துல இருக்குன்னு... அடுத்ததா எஸ்.எம். கம்பனி இருக்கு... எஸ்.எம். கம்பனி ஓனர் மிஸ்டர்.ராஜசேகர் அவங்க கம்பனிய நம்பர் வன் இடத்துக்கு கொண்டு வரனும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணிட்டு இருக்காரு... அது நல்ல விஷயம் தான்.. பட் அதுக்காக இப்போ அவர் தேர்ந்து எடுத்து இருக்குற வழி தான் தப்பா இருக்கு... தொடர்ந்து ரெண்டு தடவ நான் டென்டர்க்கு ஃபிக்ஸ் பண்ணி வெச்சி இருந்த அமவுன்ட்ட விட கரக்டா ஒரு ரூபா கம்மி பண்ணி அந்த டென்டர அவங்க எடுத்துக்குறாங்க.. முதல் தடவ நடக்கும் போது தற்செயலா நடக்குதுன்னு நினைச்சேன்... பட் திரும்ப இப்பவும் நடக்கும் போது தான் எனக்கு டவுட்டா இருக்கு... நம்ம கம்பனி டீட்டைல்ஸ் எல்லாம் ராஜசேகர் தெரிஞ்சி வெச்சி இருக்காரு... அவரோட ஆட்கள் தான் இந்த கம்பனில இருந்துக்கிட்டே அங்க டீட்டைல்ஸ் கொடுக்குறாங்க... நீ தான்பா அது யாருன்னு கண்டு பிடிக்கனும்... இதனால எங்களுக்கு கோடி கணக்கு லாஸ் வேற..." எனப் பிரச்சினையை விளக்கினார்.

ரஞ்சித் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரவி,

"அங்கிள் உங்க கம்பனி எம்பளாயிஸ் எல்லாரையும் ஒரே இடத்துக்கு கூப்பிட முடியுமா.." என்றான்.

சிறிது நேரத்திலே ரஞ்சித்தின் கட்டளைப்படி அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.

முதலில் அங்கு வேலை செய்யும் அனைவருமே வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தான்‌.

அனைவரும் சாதாரணமாக இருக்க அவர்களில் ஒருவனின் முகம் மட்டும் பதட்டமாக இருந்தது.

ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராயும் போது அந்த ஜீவா என்றவன் மாத்திரம் மற்றவர்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான்.

ரவி, "எல்லாரும் உங்க மொபைல எடுத்து டேபிள் மேல வைங்க.." என்கவும் ஒவ்வொருவராக வைக்க பின்னால் ஒளிந்து நின்றவன் தன் மொபைலை எடுத்து மேசையில் வைக்கும் போது கரம் நடுங்கியது.

அந்த மொபைலைக் கையில் எடுத்த ரவி அதனை அவனிடம் நீட்டி, "அன்லாக் இட்.." என்கவும் நடுங்கியபடியே அன்லாக் செய்தான்.

ரவி கால் ஹிஸ்ட்ரியில் இறுதியாக இருந்த எண்ணுக்கு அழைக்க மறுபக்கம் அழைப்பை ஏற்றவன்,

"நான் கால் பண்ணாம நீயே எனக்கு கால் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல... " எனக் கத்தியவன்,

"சரி சீக்கிரம் சொல்லு.. என்ன விஷயம்.. அந்த ரஞ்சித் திரும்ப ஏதாவது டென்டர் வாங்க போறானா..." எனக் கேட்கவும் அழைப்பைத் துண்டித்தான் ரவி.

ஜீவாவின் சட்டைக் காலரைப் பிடித்த ரவி அவனை ரஞ்சித்தின் கேபினுக்கு இழுத்துச் சென்று நன்றாக அடித்தான்.

ரவி, "சொல்லு... யாரு உன்ன இப்படி பண்ண சொன்னது... இப்போ பேசினது ராஜசேகர் தானே.." எனக் கேட்டு இன்னும் அடிக்க,

ஜீவா வலி பொறுக்க முடியாமல், "இல்ல..‌இல்ல.. சொல்றேன் சார்.... சொல்றேன்... யாருன்னு நான் பார்த்ததில்லை.... அவரு பேரு கூட தெரியாது... ஆனா எஸ்.எம் கம்பனிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னும் ராஜசேகருக்கு இதை பத்தி தெரியக் கூடாதுன்னும் சொன்னாரு... பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் சார்...‌ ப்ளீஸ்..‌ புள்ள குட்டிக்காரன் சார்.. விட்டுருங்க சார்.." எனக் கெஞ்ச ரவி போட்டு இன்னும் அடித்தான்.

ரஞ்சித், "போதும்பா ரவி.. அவன விட்டுரு... உனக்கு இந்த கம்பனில வேலை இல்ல இனி... கிளம்பு..." என ஜீவாவை விரட்டியவர்,

"என்னப்பா பண்ண போற... ராஜசேகரும் இல்ல... ஆனா யாரோ அவருக்கு ஹெல்ப் பண்றாரு..." என்க,

ரவி, "நீங்க கவலைப் பட வேணாம் அங்கிள்... அந்த ஆளோட நம்பர் என் கிட்ட இருக்கு... மத்தத நான் பாத்துக்குறேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

நாட்கள் வேகமாகக் கடக்க சிதாரா, ஆர்யான் திருமணம் முடிந்து நியுயார்க் வந்து ஆறு மாதங்களைக் கடந்திருந்தது.

ஆர்யானின் ஒவ்வொரு செயலிலும் சிதாராவின் மனம் அவன்பால் கவரப்பட்டது.

அன்று யுனிவர்சிட்டியில் ஃப்ரீ பீரியட்டில் சிதாரா வகுப்பில் தனியே அமர்ந்தவாறு ஆர்யான் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கையோ மேசை மீதிருந்த கொப்பியில் தன்னாலே ஏதோ கிறுக்கியது.

முதல் முறை தனக்கு வலிப்பு வந்த போது அவன் பதறியது, தனக்காக பிரணவ்விடம் கெஞ்சியது என அவனின் ஒவ்வொரு செயலையும் நினைத்து சிரித்தாள்.

அன்று ஆர்யானின் டயரியைப் படித்த பின் அவளாகவே அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

அடுத்து வந்த நாட்களும் அவ்வாறே படுக்க முதலில் வலியில் என்று நினைத்திருந்த ஆர்யான் தொடர்ந்தும் சிதாரா அவ்வாறு நடக்கவும்,

"என்ன மினி.. கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்ற... தனியா சிரிக்கிற... புதுசா என்ன ஹக் பண்ணிக்க வேற செய்ற..என்னாச்சு.." என சந்தேகமாகக் கேட்க,

திடீரென ஆர்யான் அவ்வாறு கேட்கவும் சமாளிப்பதற்காக சிதாரா,

"எனக்கென்ன... நான் நல்லா தான் இருக்கேன்... ஹக்கி பிலோ இல்லாம எனக்கு தூக்கம் போகாதுன்னு உனக்கு தெரியும் தானே ஜிராஃபி.. அதான் ஆறடிக்கு மேல நீ தண்டமா வளர்ந்து இருக்காய்... அதான் உன்னயே ஹக்கி பிலோவா யூஸ் பண்ணிக்குறேன்... உனக்கு பிடிக்கலன்னா சொல்லு.. நான் நாளைக்கே வேற ஹக்கி பிலோ வாங்கிக்குறேன்.." என்க,

அவசரமாக மறுத்த ஆர்யான், "ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி... நீ தாராளமா என்னைய ஹக் பண்ணிட்டு தூங்கு... எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல.. எந்த மடையன் காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியே தன்ன நெருங்கி வரும் போது வேணான்னு சொல்லுவான்.." என இறுதி வாக்கியத்தை மட்டும் தனக்குள் முனங்கினான்.

ஆனால் ஆர்யான் கூறியது சிதாராவுக்கு தெளிவாக விளங்கி விட ஆர்யான் அறியாதவாறு வாயை மூடி சிரித்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் ஆர்யான் தலையில் ஓடிய பிரச்சினைகளில் சிதாரா ஆர்யானையே எப்போதும் ரசிப்பதையும் அவளின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றத்தையும் கவனிக்கத் தவறினான்.

ஆர்யான் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் ஏதோ சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்து தன் கொப்பியைப் பார்க்க அந்தப் பக்கம் முழுவதும் ஹார்ட் போட்டு ஆர்யானின் பெயருடன் அவளின் பெயரை எழுதி வைத்திருந்தாள்.

அதனைக் கண்டு புன்னகைத்தவள், "அப்போ நான் ஜிராஃபிய லவ் பண்றேனா..." என தன்னையே கேட்டுக் கொள்ள அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

சிதாரா, "யப்... ஐ லவ் ஜிராஃபி... பட் அவன் தான் இன்னும் என் கிட்ட லவ் பண்றதா சொல்லவே இல்லையே... ஹ்ம்ம்ம்.. பரவாயில்ல... நாம ஃபர்ஸ்ட் சொன்னா அவனுக்கு ஷாக்கிங்ஙா இருக்கும்... எப்படி ரியாக்ட் மண்ணுவான்.." என பல விதத்தில் சிந்தித்தவளின் மனசாட்சி,

"முதல்ல அவன் கிட்ட போய் உன் லவ்வ சொல்லு... கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது... இப்ப தான் மேடம் லவ் பண்ணவே போறாங்களாம்..." எனக் கேலி செய்தது.

"அதுக்கென்ன... கல்யாணத்துக்கு அப்புறம் வர லவ் தான் பெஸ்ட்... இன்னைக்கு இத சொல்லி ஜிராஃபிய சர்ப்ரைஸ் பண்ணலாம்.." என்ற சிதாரா உடனே சுகயீனம் எனக் காரணம் சொல்லி விட்டு இடையிலேயே யுனிவர்சிட்டியிலிருந்து கிளம்பினாள்.

ஆர்யானுக்கு கூட தகவல் கூறவில்லை.

வீட்டை அடைந்தவள் ஏதோ நெட்டில் சேர்ச் செய்து விட்டு யாருக்கோ அழைத்து பேசி விட்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் கப்போர்ட்டைத் திறந்து ஆர்யான் முதல் முதலில் அவளுக்கு பரிசளித்த சேரியை எடுத்தாள்.

இளஞ்சிவப்பு நிறத்தில் அழகான கல் வேலைப்பாட்டுடன் கூடிய சில்க் சேரி.

"இது நானே சொல்லி உனக்காக ரெடி பண்ண சேரி மினி... உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான உன் மனசுக்கு நெருக்கமா ஃபீல் பண்ற மொமன்ட்ல தான் நீ இதை வியர் பண்ணனும்..." என அதை அவளிடம் தந்த போது ஆர்யான் கூறியது ஞாபகம் வந்தது.

சிதாரா, "இந்த சேரிய போட இதை விட ஸ்பெஷலான மொமன்ட் என்ன இருக்க முடியும் ஜிராஃபி.." என்று புன்னகைத்தாள்.

அந்த சேரியை அணிந்து அளவான ஒப்பனையுடன் தயாரானவள் ஆர்யானுக்கு ஏதோ குறுஞ்செய்தியொன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

_______________________________________________

பிரணவ், "இப்ப தான் ரீச் ஆனேன்... வேலை விஷயமா வெளியூர் போறதா அபினவ் கிட்ட சொல்லி இருக்கேன்... அதனால அவனுக்கு சந்தேகம் வராது... இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்.." என அலைபேசியில் யாரிடமோ கூற,

மறுபக்கத்தில் இருந்தவன் ஏதோ கேட்கவும், "அதுக்கு தான் சான்ஸ் கிடைக்கும் வர வெய்ட் பண்றேன்... அவன் சின்னதா ஒரு தப்பு பண்ணினா போதும்... ஆள தூக்கிடலாம்..." என பிரணவ் பதிலளித்தான்.

இன்னும் ஏதோ பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரணவ்.

_______________________________________________

அன்று ஆர்யானுக்கு ஆஃபீஸில் வேலை அதிகமாக இருந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் மொபைலை எடுத்துப் பார்க்க சிதாராவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக் காட்டியது.

அதைத் ஓப்பன் செய்து பார்க்க, "எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு இப்பவே கிளம்பி ரூஃப் கார்டன் வா ஜிராஃபி.." என்றிருக்க,

ஆர்யான், "மினி இந்த நேரம் யுனிவர்சிட்டில தானே இருக்கனும்.. எதுக்கு என்னை ரூஃப் கார்டன் வர சொல்லி இருக்கா.." என யோசித்தான்.

சிதாரா எப்போது குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறாள் எனப் பார்த்தவன் அதிர்ந்தான்.

"என்ன... ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியா... அப்போ மினி அங்க தனியா இருக்காளா... ஷிட்.. அதுக்கப்புறம் எந்த மெசேஜும் இல்ல.." எனப் பதறியவன் அவசரமாக ரூஃப் கார்டன் கிளம்பினான்.

ஆர்யான் அங்கு சென்று பார்க்க அவ்விடம் முழுவதும் பலூன்களாலும் ரோஜாக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆர்யானுக்கு எதுவுமே புரியவில்லை.

அவனைத் தவிர யாருமே அங்கு இருக்கவில்லை.

சிதாராவும் கண்ணுக்குத் தெரிய இருக்கவில்லை.

"மினி... மினி.. " எனக் கத்திப் பார்த்தவன் பதில் வராமல் போக பயந்து சிதாராவுக்கு கால் செய்தான்.

ஒவ்வொரு ரிங்கிற்கும் அவனின் இதயம் வேகமாகத் துடித்தது.

இரண்டு முறை அழைத்தும் முழுவதுமாக ரிங் சென்று கட் ஆனது.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்க இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது.

மறுபக்கம் எந்த சத்தமும் வராமல் போக நடுங்கும் குரலில், "மினி..." என்றான் ஆர்யான்.

மறுபக்கம்‌ யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கவும், "ஏ... ஏய்... யாரு நீ.. மினியோட மொபைல் உன் கிட்ட எப்படி வந்தது... மினி எங்க..." என கோவமாக ஆர்யான் கேட்க,

"என்ன ஆர்யான் நீ... இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வெச்சிக்கிட்டு எதுவுமே செய்யாம இருந்திருக்க... ஆளு இன்னும் ஃப்ரஷ்ஷா இருக்கா..." என மறுபக்கத்தில் இருந்து பதில் வர ஆர்யான் அதிர்ந்தான்.

அதே குரல்... ஆறு மாதத்திற்கு முன் ஆர்யானுக்கு அழைத்து மிரட்டிய அதே குரல்...

மறுபக்கம், "எல்லாரும் உன்ன மாதிரி முட்டாளா இருப்பானா என்ன... பரவாயில்ல ஆர்யான்... மேரேஜ் வேணா உன் கூட நடந்திருக்கலாம்... பட் ஃபர்ஸ்ட் நைட் இப்போ என் கூட நடக்க போகுது... என் பேபி கிட்ட இருந்து வர வாசனை அப்படியே என்னை வா வான்னு அவ பக்கம் இழுக்குது... ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... வாட் அ ஸ்ட்ரக்சர்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவனின் பேச்சில் கோவத்தில் பல்லைக் கடித்த ஆர்யான் மீண்டும் சிதாராவின் எண்ணுக்கு முயற்சிக்க ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும், "மினி......." எனக் கத்தியவன் அப்படியே மடங்கி கீழே அமர்ந்தான்.

_______________________________________________

ஹோட்டலின் வீ.ஐ.பி. சூட்டில் இருந்த பஞ்சு மெத்தையில் சிதாரா மயங்கிக் கிடக்க அவளின்‌ முகத்தின் அருகில் நெருங்கியவன், "பேப்......" என்றான் கிறக்கமாக.

❤️❤️❤️❤️❤️

மீ எஸ்கேப்....🙈🙈🙈🙈

- Nuha Maryam -

 
Top Bottom