Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 21
ஆர்யானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என ரூஃப் கார்டனை முன் பதிவு செய்தவள் ஆர்யானுக்கு ரூஃப் கார்டனுக்கு வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து என்றும் போல யாரோ தன்னை பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

ஏதோ தன் பிரம்மை என அதனைப் புறக்கணித்து விட்டு டாக்சி பிடிக்கப் பார்க்க,

அதற்குள் அவளுக்கு அருகில் வந்து நின்ற வேனிலிருந்து இறங்கிய சிலர் மயக்க மருந்து அடித்து கர்சீப் மூலம் சிதாராவை மயக்கமடையச் செய்து வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர்.

மருந்தின் வீரியத்தால் சிதாரா உடனடியாக மயக்கமடையவும் அவர்களுக்கு அவளை கடத்த இலகுவானது.

ஆனால் சிதாராவை உள்ளே தூக்கிப் போடும் போது வேன் கதவைத் திறந்தவனின் கையிலிருந்து விழுந்த பிரேஸ்லட்டை யாரும் கவனிக்கவில்லை.

_______________________________________________

சிதாராவின் நிலையை அறிந்த ஆர்யான் மடிந்து அமர்ந்திட அவனுக்கு என்ன செய்ய என்றே விளங்கவில்லை.

"மினி... ஏன்டி சொல்லாம போன..." என தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் சில நொடிகளில் தன்னை சமன் செய்து கொண்டு மொபைலில் யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆர்யான், "டே... டேய்... அவங்க மினிய கடத்திட்டாங்கடா... " என நடந்ததைக் கூற,

மறுபக்கம், "என்னடா சொல்ற... சரி சரி.. தங்கச்சோட மொபைல்ல தானே அவன் பேசினதா சொன்னான்... நான் அந்த லொக்கேஷன ட்ரேஸ் பண்ண ட்ரை பண்றேன்... நீ ஒரு வேலை பண்ணு... அன்னைக்கு ஒரு நம்பரால உனக்கு கால் வந்திச்சுல்ல... அதுக்கப்புறம் நாம ட்ரை பண்ணப்போ அந்த நம்பர் ஸ்விச் ஆஃப் பண்ணி இருந்ததே.. நீ திரும்ப அந்த நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இரு.. நான் உன்ன கூப்பிட்றேன்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் உடனே அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு செல்லவில்லை.

பலமுறை முயன்று விட்டு சிதாராவைக் கடத்தியவர்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா எனப் பார்க்க வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டை சற்று நெருங்குகையிலே அவன் கண்ணில் பட்டது கீழே விழுந்து கிடந்த ஒரு ப்ரேஸ்லட்.

அதை கையில் எடுத்துப் பார்த்த ஆர்யான் அதிலிருந்த D என்ற ஆங்கில எழுத்தைக் கண்டு யோசனை வயப்பட்டான்.

_______________________________________________

மயக்கத்திலிருந்த சிதாரா மெது மெதுவாகக் கண் விழிக்க அவள் நாசியை அடைந்த சிகரெட் புகையில் மூக்கை கையால் மூடிக் கொண்டு இருமினாள்.

"எழுந்துட்டியா பேபி... நீ மயக்கம் தெளியும் வரை தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..." என்ற குரலில் பதறி மறுபக்கம் திரும்பிப் பார்க்க அப்போது தான் அவளுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி பார்வையாலே சிதாராவைத் துகிலுரிந்து கொண்டிருந்தவனைக் கண்டாள்.

அவனைக் கண்டு பயந்தவள் கட்டிலின் பின்னே சாய்ந்து, "நீ... நீ... எதுக்கு என்ன கடத்தியிருக்க..." என நடுங்கியபடி கேட்க,

சிதாராவைப் பார்த்து சிரித்தவன் அவளை இன்னும் நெருங்கி,

"என்ன பேபி இப்படி கேட்டுட்ட... உனக்கு வேணா என்னை தெரியாம இருக்கலாம்... ஆனா உன் புருஷன் இருக்கானே... தி க்ரேட் ஆர்யான்... அவனுக்கு என்னை ரொம்ப நல்லாவே தெரியும்... சரி அதெல்லாம் விடு பேபி... " என்றவன் தன் விரல் கொண்டு சிதாராவின் கன்னத்தை வருட அவளுக்கு உடல் கூசிப் போனது.

பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவள் கண்கள் கலங்கி விட மனமோ, "ரயன்...‌ ரயன்... " என ஆர்யானின் பெயரையே உச்சரித்தது.

சிதாரா கையைத் தட்டி விட்டதும் ஆத்திரம் கொண்டவன் அவள் தாடையை இறுக்கப் பற்ற சிதாரா அவனின் கையை விலக்கப் போராடினாள்.

சிதாராவின் முயற்சியைப் பார்த்தவன், "இன்னைக்கு நீ என்ன பண்ணாலும் உன்னால இங்க இருந்து போக முடியாது பேபி... அன்னைக்கு மாதிரி அந்த ஆர்யானால கூட உன்ன காப்பாத்த வர முடியாது... இன்னைக்கு உன்ன நான் முழுசா அனுபவிக்க போறேன்..." என்றான் வக்கிரப் புன்னகையுடன்.

எவ்வளவு முயன்றும் அவன் கையை விலக்காததாலும் அவனின் பேச்சு தந்த பயத்தினாலும் தன்னைக் காத்துக் கொள்ள அவன் கன்னத்தில் அறைந்தாள் சிதாரா.

அவனைத் தள்ளி விட்டு அவசரமாக கட்டிலை விட்டு இறங்கியவள் ஓடிச் சென்று கதவைத் திறக்கப் பார்க்க அது திறந்து கொள்ளவில்லை.

சிதாராவின் செயலில் பலமாகச் சிரித்தவன், "நான் டோர ஓப்பன் பண்ணாம உன்னால வெளிய போக முடியாது பேபி..." என்றவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தான்.

சிதாரா அவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல், "ஹெல்ப்.... ஹெல்ப்..." எனக் கத்திக் கொண்டே கதவைத் திறக்க முயற்சி செய்ய,

சிதாராவை நெருங்கியவன் பின்னாலிருந்து அவளை அணைக்க முயன்றான்.

அவனைத் தள்ளி விட்டு ஓடியவள் மேசையில் அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை கையில் எடுத்து,

"கிட்ட வராதே... அடிச்சிடுவேன்..." என்க,

ஏதோ நகைச்சுவை கூறியது போல் சிரித்தவன் அவளை மேலும் நெருங்கினான்.

சிதாரா பயத்தில் பூச்சாடியை அவனை நோக்கி வீச அதிலிருந்து லாவகமாக தப்பியவன், "நீ இப்படி பண்ண பண்ண எனக்கு உன்னை அடையனும்னு வெறி ஏறிட்டே போகுது பேபி..." என்றவன் வலுக்கட்டாயமாக அவளை அணைத்தான்.

அவன் சிதாராவின் கழுத்தில் முகம் புதைக்க,

"ப்ளீஸ்... என்னை எதுவும் பண்ணாதே விட்டுரு..." என அவனிடமிருந்து விடுபடப் போராடியவாறு கெஞ்சினாள் சிதாரா.

ஆனால் போதையின் உச்சத்தில் இருந்த காமுகனின் செவிகளை சிதாராவின் கதறல்கள் எதுவும் எட்டவில்லை.

காத்திருந்து கிடைத்த இரையாக சிதாராவை எண்ணினான் அவன்.

சிதாராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு வாங்க ஆரம்பிக்க அவளின் பிடி இளகியது.

அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் சிதாராவைக் கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்தான்.

அவன் சிதாராவின் தோளில் கை வைத்து அவளின் ஆடையைக் களைய ஆரம்பிக்க,

அவனைத் தடுக்கக் கூட திராணியற்று சிதாரா, "ரயன்.... ரயன்...." என விடாது அரற்றினாள்.

அவள் கன்னத்தில் அறைந்தவன், "ஏய் வாய மூடு... எப்பப்பாரு அவன் பேரையே சொல்லிக்கிட்டு... அப்படி என்ன அந்த ஆர்யான் கிட்ட கண்டுட்ட... சந்தோஷம்னா என்னன்னு நான் காட்டுறேன்..." என்றவன் சிதாராவை முத்தமிட நெருங்க அதற்குள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

"ஷிட்..." என்று மெத்தையில் அடித்தவன் சிதாராவை விட்டு எழுந்து போதை மயக்கத்தில் யோசிக்காது கதவைத் திறந்தான்.

உடனே அவனைத் தள்ளிக் கொண்டு அந் நாட்டு போலீஸ் உள்ளே வர அவர்களின் பின்னே வேகமாக உள் நுழைந்தான் ஆர்யான்.

ஆர்யானின் பார்வை முதலில் சென்றது சிதாராவிடம் தான்.

தன்னவள் கட்டில் நடுவில் வாடிய கொடியாய் படுத்திருக்க,

"மினி..." என அவளிடம் ஓடியவன் அவசரமாக போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தினான்.

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளால் ஆர்யானைக் கூட அடையாளம் காண முடியாமல்,

"என்ன... விட்... டுரு..‌ ப்ளீஸ்... தொடாதே.." எனக் கெஞ்சியவளின் கை, கால், தலை என ஒரு பக்கம் வேகமாக வெட்ட வாயில் நுரை‌ தள்ளியது.

சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்த ஆர்யான் அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியேற கதவின் அருகில் செல்ல,

போலீஸ் துப்பாக்கியுடன் சுற்றி வளைக்க நடுவில் என்ன நடந்தது எனப் புரியாமல் போதையில் விளித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு ஆர்யான் அதிர்ந்தான்.

அவன் உதடுகள் தானாக, "தயா..." என அசைந்தது.

சிதாராவின் நிலை மோசமாக போலீஸின் காவலில் அவனை விட்டு விட்டு ஹாஸ்பிடல் விரைந்தான் ஆர்யான்.

_______________________________________________

கைகளில் தலையைத் தாங்கியபடி ஐ.சி.யு வாசலில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்தான் ஆர்யான்.

அவனின் கண்களிலிருந்து விடாது கண்ணீர் வடிந்தன.

சிதாராவை மருத்துவமனையில் சேர்த்தவன் அவள் இருந்த நிலையை எண்ணியே கலங்கினான்.

அவ்வளவு பாதுகாப்புடன் இருந்தும் தன்னவளுக்கு இந் நிலைமை வராது காக்க முடியவில்லையே என ஆர்யான் வேதனைப்பட்டான்.

சற்று நேரத்தில் டாக்டர் வர ஆர்யான், "டாக்டர்...‌ என் மினி எப்படி இருக்கா... அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லல்ல... அ...‌ அவன்... என்.. என் மினிய எதுவும் பண்ணி இல்ல தானே..." என பதட்டமாக கேட்டான்.

ஆர்யானுக்கு அப்படி கேட்கும் போதே குரல் நடுங்கியது.

"காம் டவுன் மிஸ்டர்... உங்க மனைவிக்கு அங்க எதுவும் நடந்து இல்ல... அவங்கள பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு... முதல்ல அவங்களுக்கு கான்ஷியஸ் வரனும்... அப்போ தான் என்னால எது வேணாலும் சொல்ல முடியும்... நீங்க போய் உங்க மனைவிய பார்க்கலாம்... பட் டிஸ்டர்ப் பண்ண வேணாம்..." என்று விட்டு சென்றார்.

அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தவன் சிதாராவின் அருகில் அமர்ந்தான்.

அப்போது அவள் அணிந்திருந்த உடையை அவதானித்தான்.

கண் கலங்கிய ஆர்யான் அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டான்.

"ஏன் மினி என் கிட்ட சொல்லாம போன... ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல... அதுவும்... இந்த ட்ரஸ்..... எதுவுமே புரியல மினி... ப்ளீஸ்... என் கிட்ட வந்துடு... உன் ஜிராஃபிக்காக..." என அழுதான் ஆர்யான்.

திடீரென சிதாராவின் மூடிய இமைக்குள் கருமணிகள் அங்குமிங்கும் அசைய,

"வேணாம்... வேணாம்... என்னை எதுவும் பண்ணாதே... விட்டுரு... நான் போகனும்... ரயன்... ரயன்... என்ன இவன் கிட்ட இருந்து காப்பாத்து ரயன்... தொடாதே என்ன..." எனக் கத்தினாள்.

சிதாராவின் கத்தலில் ஆர்யான், "மினி...‌மினி... கண்ண திற மினி... என்னை பாரு.." எனக் கன்னத்தில் தட்டியபடி பேச,

சிதாராவோ அவனிடமிருந்து தன் கையை வேகமாக இழுத்தவள்,

"தொடாதே... வேணாம்... விட்டுரு..." என அரற்றியவளுக்கு மீண்டும் வலிப்பு வந்தது.

சிதாராவின் நிலையைக் கண்டு பதறிய ஆர்யான், "டாக்டர்... டாக்டர்..." எனக் கத்திக் கொண்டு வெளியே ஓடினான்.

மருத்துவர் வரவும் ஆர்யான் அவரிடம் சிதாராவின் நிலையைக் கூற அவர் அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தார்.

ஆர்யானும் அவரைத் தொடர்ந்து செல்லப் பார்க்க அவனைத் தடுத்து அங்கேயே இருக்கக் கூறினார் நர்ஸ்.

மருத்துவர் சிதாராவைப் பரிசோதிக்க,

ஐ.சி.யு கதவிலிருந்த சிறிய வட்ட இடத்தினால் சிதாராவைப் பார்த்தான் ஆர்யான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாவது தெரிய மருத்துவர் வெளியே வரும் வரை பொறுமையின்றித் தவித்தான் ஆர்யான்.

சில மணி நேரத்தில் மருத்துவர் வர ஆர்யான் அவரிடம் சென்று சிதாராவைப் பற்றிக் கேட்டான்.

மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே!!! இன்னைக்கு கொஞ்சம் சின்ன யூடி தான்... அடுத்த யூடிய பெரிசா தரேன்... நன்றி...

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 22
மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.

ஆர்யான், "எ... என்... என்ன சொல்... றீங்க... டாக்டர்..." என பயத்துடன் வினவ,

"அவங்க கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க..." என ஆர்யானின் தலையில் இடியை இறக்கி வைத்தார் டாக்டர்.

டாக்டர், "அவங்க ரிப்போர்ட்ஸ் பார்த்தேன் நான்... ஆல்ரெடி மூணு தடவ அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு... அவங்களுக்கு ட்ரீட்மன்ட் பார்த்த டாக்டர் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... இப்படி தொடர்ந்து ஃபிட்ஸ் வரது ஒருத்தங்களோட ப்ரைன டேமேஜ் பண்ணும்...‌ இதனால உயிர் போற நிலமை கூட ஏற்பட வாய்ப்பு இருக்கு... பட் சிதாரா கோமா ஸ்டேஜுக்கு தான் போய் இருக்காங்க... ஆல்ரெடி மென்டலி டிஸ்டர்ப்டா இருந்தவங்கள அங்க நடந்த விஷயம் இன்னும் பாதிச்சிருக்கு... அதனால தான் சிதாரா கோமாக்கு போய் இருக்காங்க... " என்க,

தன்னை சமன் செய்து கொண்ட ஆர்யான், "பட் அவ சரி ஆகிடுவா தானே..." என பரிதவிப்புடன் கேட்டான்.

"கோமாக்கு போய் உடனே சுயநினைவை அடஞ்சவங்களும் இருக்காங்க..‌ சிதாரா கூட இப்பவே கூட ரிக்கவர் ஆகலாம்... ஒரு நாள் போகலாம்... ஒரு மாசம் போகலாம்.. ஒரு வருஷம் இல்ல பல வருஷம் போகலாம்... ஏன் சுயநினைவு வராம கூட போகலாம்... அவங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் கேட்கும்... பட் அவங்களால ரியாக்ட் பண்ண முடியாது... நீங்க போய் அவங்க கூட பேசுங்க... உங்க அருகாமைய அவங்களுக்கு உணர்த்துங்க... ஏன்னா அவங்க உங்க பேர தான் சொல்லிக்கிட்டே இருந்தாங்க... அவங்க ரொம்ப ஆசைப்படுற இல்ல எதிர்ப்பார்க்குற விஷயத்த அவங்க கிட்ட சொல்லுங்க... சீக்கிரம் குணமாகிடுவாங்க... முயற்சி பண்ணுங்க... கடவுள் உங்களுக்கு துணை இருப்பாரு... ஆல் தி பெஸ்ட்.. " என்று விட்டு சென்றார் டாக்டர்.

விடாது வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான் ஒவ்வொரு எட்டுகளாக வைத்து ஐ.சியுவை நெருங்கினான்.

ஆர்யானால் ஜடம் போல் படுத்துக் கிடக்கும் சிதாராவைப் பார்க்க முடியவில்லை.

உள்ளே செல்லாமல் ஐ‌.சி.யு கதவின் துவாரம் வழியாக சிதாராவைப் பார்த்தவன் தன் உள்ளங்கையை இறுக்கி மூடி தன்னைக் கட்டுப்படுத்தியவன்,

"இல்ல மினி... உன்ன இந்த நிலமைக்கு ஆளாக்கினவனுக்கு ஒரு முடிவு கட்டாம நான் உன் கிட்ட வர மாட்டேன்... " என்றவன் யாருக்கோ அழைத்து பேசி விட்டு ஹாஸ்பிடலில் இருந்து வெளியேறினான்.

_______________________________________________

நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனில் தயாவைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தான் ரவி.

ஆனால் தயாவோ ரவி அடிப்பதைக் கூட பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திலே ஆர்யானும் அங்கு வர அவனைக் கண்டு இகழ்ச்சியாகப் புன்னகைத்த தயா,

"நைஸ் டு மீட் யூ அகைன் ஆர்யான்..." என்றான்.

ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவனை அறைந்தான் ஆர்யான்.

ஆர்யான், "ஏன்டா இப்படி பண்ண... உன்ன நான் நல்ல ஃப்ரெண்டா தானே பார்த்தேன்... எதுக்குடா என் மினிக்கு இப்படி பண்ண... சொல்லுடா..." என தயாவை மாற்றி மாற்றி அறைய கத்தி சிரித்தான் தயா.

ஆர்யானைத் தடுத்த ரவி, "என்ன சொல்ற ஆரு... உனக்கு இவன முன்னாடியே தெரியுமா..." என்க,

தனக்கும் தயாவுக்குமான தொடர்பைக் கூறத் தொடங்கினான் ஆர்யான்.

நான்கு வருடங்களுக்கு முன்

ஆர்யான் அப்போது ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யாவும் அங்கே தான் படித்தான்.

ஆர்யான் எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்துக் கொண்டிருப்பதால் அனைவருக்கும் அவனைப் பிடிக்கும்.

தொழில் ஆரம்பித்து சில நாட்களிலே தன் கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார் ரஞ்சித்.

அதனால் வசதி வாய்ப்பிலும் ஆர்யானுக்கு குறைவில்லை.

அவனின் தந்தை தான் அவனுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.

தந்தையைப் போலவே தானும் சொந்தக் காலில் நின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ரஞ்சித்துடன் சண்டை பிடித்து மேற்படிப்புக்காக நியுயார்க் கிளம்பினான்.

AR GROUPS OF COMPANIES இற்கு அடுத்த இடத்தில் இருப்பது SM GROUPS OF COMPANIES.

அதன் உரிமையாளர் ராஜசேகருக்கு எப்படியாவது தனது நிறுவனத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசை.

பலவாறு முயன்றும் இரண்டாம் இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.

ராஜசேகரின் ஒரே மகன் தான் ஆதித்யா.

நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தையை ரஞ்சித் பிஸினஸில் தோற்கடிப்பதாக தன் மனதில் பதிய வைத்துக் கொண்டவன் ரஞ்சித்தை தன் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்தான்.

ஆதித்யா, ஆர்யான் இருவருமே ஒரே வயதினர்.

யுனிவர்சிட்டியில் கூட அனைவரும் எப்போதும் ஆர்யானை சுற்றியே இருக்க ஆர்யான் மீது பொறாமை ஏற்பட்டது.

எப்படியாவது அனைவர் முன்னும் ஆர்யானை மட்டம் தட்டி விட்டு தான் முன் நிற்க வேண்டும் என நினைத்தவன் நண்பன் என்ற முகமூடியை மாட்டி ஆர்யானுடன் நட்புக் கரம் கோர்த்தான்.

அவனின் நோக்கமே ஆர்யானை வைத்து ரஞ்சித்தை தலை குணியச் செய்வது தான்.

அனைவருடனும் நட்பாக பழகும் ஆர்யான் ஆதித்யாவின் மனதில் இருக்கும் பொறாமையை அறியவில்லை.

சில நாட்களிலே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

ஆதித்யாவை தயா என்றே அழைப்பான் ஆர்யான்.

நாட்கள் செல்ல ஆர்யானுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் அவனைப் பற்றி தவறான எண்ணம் பதிய வைத்தான்.

யாரையும் ஆர்யானிடம் நெருங்க விடவில்லை.

ஆர்யானும் படிப்பில் கவனம் இருந்ததால் ஆதித்யாவின் செயலை அறியவில்லை.

ஆதித்யாவின் பிறந்த நாளுக்கு ஆர்யான் D என்ற எழுத்திட்ட ப்ரேஸ்லட் ஒன்றை அவனுக்கு பரிசளித்தான்.

ஆதித்யாவுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் என எல்லா தீய பழக்கமும் உண்டு.

இவை எதையுமே ஆர்யானுக்கு தெரியாமல் மறைத்தான்.

ஆர்யான் யுனிவர்சிட்டி நண்பர்களைப் பற்றி பெரிதாக வீட்டில் பேசாததால் ஆதித்யா ராஜசேகரின் மகன் என்பதையும் அறியாமல் போனான்.

அன்று ஒரு நாள் ஆதித்யா ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் இருப்பதாகக் கூறி வகுப்புக்கு வரவில்லை.

வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆர்யானின் பார்வையில் பட்டது ஆதித்யா ஒரு பெண் அழ அழ அவளிடம் ஏதோ கோவமாக பேசிக் கொண்டு இருந்ததை.

அங்கு சென்ற ஆர்யான், "என்னாச்சு தயா... ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு இருக்கா.." என்க,

ஆர்யானை அங்கு எதிர்ப்பார்க்காத ஆதித்யா, "அ.. அது.. ஒன்னுமில்ல ஆரு.... இது எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.. சின்ன பிரச்சினை ஒன்னு.. நான் பாத்துக்குறேன்..." என்றான் சமாளிப்பாக.

அவனை நம்பாத பார்வை பார்த்த ஆர்யான் அப் பெண்ணின் முகம் நோக்க,

அவளோ இன்னும் அழுதபடி தான் இருந்தாள்.

அந்தப் பெண், "இல்ல அண்ணா.. இவர் பொய் சொல்றாரு... " என்க,

ஆதித்யா அவசரமாக, "இவ சும்மா ஏதோ ஒலருரா... நீ போ ஆரு.." என்றான்.

அவன் சட்டையைப் பிடித்த அந்தப் பெண், "நான் பொய் சொல்றேனா... பொய் சொல்றேனா... ஒரு வருஷமா லவ் பண்ணுறதா என்னை ஏமாத்தி என்னை கர்ப்பமாக்கிட்டு இப்போ இந்த குழந்தைக்கு நான் அப்பனே இல்லன்னு சொல்ற... நீ தான்டா பொய் சொல்ற..." என அழவும் அதிர்ந்தான் ஆர்யான்.

"இந்தப் பொண்ணு என்ன சொல்றா தயா... ஒழுங்கா உண்மைய சொல்லு..." என ஆர்யான் கோவமாகக் கேட்க,

ஆதித்யா, "அதெல்லாம் பொய்டா... உனக்கு தெரியாதா என்ன பத்தி..." என்க,

அந்தப் பெண், "இவன நம்ப வேணாம் அண்ணா... இவன் அப்பா பெரிய பிஸினஸ்மேன்... அதனால எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க... இதே நமக்கு குழந்தை பிறந்தா எப்படியும் கல்யாணம் பண்ணி வைப்பாரு அது இதுன்னு சொல்லி என்னை இப்போ இந்த நிலமைல நிற்க வெச்சிட்டான் பாவி..." என்க,

ஆர்யான் அந்தப் பெண்ணிடம், "பெரிய பிஸினஸ்மேனா.. யாரம்மா சொல்ற.." எனக் கேட்க,

"எஸ்.எம் கம்பனி ஓனர் ராஜசேகர்..." என்கவும் மேலும் அதிர்ந்தான் ஆர்யான்.

ஆர்யான், "ஏன் தயா என் கிட்ட இதெல்லாம் மறைச்ச.." என அழுத்தமாகக் கேட்க,

"அது... இல்லடா... நான்.." என ஆதித்யா ஏதோ கூற வரவும் அவனின் கன்னத்தில் அறைந்தான் ஆர்யான்.

"ஏய்....." என ஆத்திரமாக ஆர்யானின் காலரைப் பற்றிய ஆதித்யா,

"ஆமாடா... பொய் தான் சொன்னேன்... உன்ன ஏமாத்த தான் உன் கூட ஃப்ரெண்டா பழகினேன்... உன்னையும் உன் அப்பனையும் எல்லாரு முன்னாடியும் தலை குனிய வைக்கனும்.. அதுக்காகத் தான் இதெல்லாம் பண்ணேன்.." என தான் இது வரை செய்த அனைத்தையும் கூற,

கோவத்தில் அவனைப் போட்டு ஆர்யான் அடிக்க இருவருக்கும் கை கலப்பானது.

ஆதித்யா செய்தவை பற்றி யுனிவர்சிட்டி முழுவதும் பரவ அவனை யுனிவர்சிட்டி விட்டே அனுப்பினார்கள்.

ஆர்யான் ரவியிடம் தனக்குத் தெரிந்த வரையில் அனைத்தையும் கூற சத்தமாக சிரித்த ஆதித்யா,

"நீ வேணா அதுக்கப்புறம் என்ன மறந்து இருக்கலாம் ஆர்யான்... பட் நான் மறக்கல... உன்னால நான் பட்ட அவமானத்தையும் மறக்கல... ஒவ்வொரு செக்கனும் உன்ன நான் கண் காணிச்சிக்கிட்டு தான் இருந்தேன்..." என்றவன் அதன் பின் நடந்தவற்றைக் கூறத் தொடங்கினான்.

ஆர்யானைப் பழி வாங்க வேண்டும் என வன்மத்தை வளர்த்துக் கொண்ட ஆதித்யா ராஜசேகரின் செல்வாக்கால் தனக்கென அடியாட்கள் வைத்து ஆர்யானைக் கண்காணித்தான்.

ரஞ்சித்தின் கம்பனியில் நடப்பவற்றை ஜீவா மூலம் அறிந்து ரஞ்சித்துக்கு கிடைக்க இருக்கும் டென்டர்களைக் கைப்பற்றினான்.

ராஜசேகரும் இதற்கு ஆதித்யாவுக்கு உடந்தையாக இருந்தார்.

ஆனால் அவர் பெயர் வெளி வர விரும்பாததால் தான் ஆர்யான் ஜீவாவிடம் கூட தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறிருக்க தன் அடியாட்கள் மூலம் சிதாராவின் புகைப்படம் அவனுக்கு கிடைத்தது.

பார்த்ததுமே அவள் அழகில் மயங்கியவனின் மனம் அவளை அடையத் துடித்தது.

அப்போது தான் ஆர்யானுடன் மட்டும் தான் சிதாரா நெருக்கமாக இருப்பதை அறிந்தவன்,

"இது வரைக்கும் எல்லாத்துலயும் நீ முன்னாடி இருந்து இருக்கலாம் ஆர்யான்... ஆனா இந்த தடவ நான் தான்... ஐம் கமிங் ஃபோர் யூ பேபி..." என சிதாராவின் புகைப்படத்துடன் பேசினான்.

அதன் பின் சிதாராவும் ஆர்யானும் இந்தியா சென்றிருப்பதை அறிந்தவனுக்கு திடீரென இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து சிதாராவைக் கடத்த முயன்றான்.

ஆனால் ஆர்யான் வந்து தடுத்ததால் அம் முயற்சி தோல்வியடைந்தது.

நாட்கள் செல்ல ஆதித்யாவுக்கு ஆர்யான் மீதிருந்த வெறுப்பும் பொறாமையையும் விட சிதாராவை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி மேலோங்கியது.

வாய்ப்புக் கிடைக்கும் வரை காத்திருந்தவனுக்கு சிதாரா பல நாள் கழித்து தனியே கிடைத்ததும் அவளைக் கடத்தினான்.

ஆதித்யா, "நீ இன்னும் கொஞ்சம் லேட் ஆகி வந்திருந்தாலும் என் பேபிய முழுசா எனக்கு சொந்தமாக்கி இருப்பேன்... ஆனா இந்தத் தடவையும் நீ என்ன தோற்கடிச்சிட்ட...." என்றவன்,

"ஆனாலும் பேபியோட பக்கத்துல இருந்தாவே தன்னால போதை ஏறும் மச்சான்... அதே அவள...." என்று இழுத்து நிறுத்தியவன் நக்கல் புன்னகையுடன் ஆர்யானைப் பார்த்து,

"பேசாம ரெண்டு பேரும் பேபிய ஷேர் பண்ணிக்கலாமாடா... என்ன இருந்தாலும் நான் உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இல்லையா..." என்க,

"என்ன தைரியம் இருந்தா என் கிட்டே என் மினிய பத்தி தப்பா பேசுவ...உன்ன கொல்லாம விட மாட்டேன்டா..." என்றவன் ஆதித்யாவைக் கீழே தள்ளி அடித்தான்.

ரவி ஆர்யானைத் தடுக்க அதற்குள் அங்கு வந்த போலீஸ் ஆதித்யாவைப் பிடித்து சென்றனர்.

ரவி, "இனிமே நான் இவன பாத்துக்கிறேன் ஆரு... இந்தியா போல இல்ல.. இங்க ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அதனால இவனுக்கு நான் தண்டனை வாங்கி குடுக்குறேன்... இவன் அப்பனால கூட இனிமே இவன காப்பாத்த முடியாது... ஆதாரமெல்லாம் பக்காவா இருக்கு..." என்க,

அவனுக்கு சரி என தலையைசைத்த ஆர்யான் வெளியே வந்தான்.

அங்கிருந்து சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு,

"ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு..." என்க,

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்... தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்.." என்றான் பிரணவ்.

_______________________________________________

நிச்சயம் அன்று சிதாராவை யாரோகடத்த முயன்றதும் ஏற்கனவே பிரணவ் தன்னிடம் சவால் விட்டதால் அவனாக இருக்கும் என்று எண்ணினான் ஆர்யான்.

அபினவ்வும் நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன் பிரணவ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறவும் அவனின் சந்தேகம் வலுவானது.

அதனால் போலீஸாக இருக்கும் தன் நண்பன் ரவியிடம் உதவி கோரினான்.

ரவியும் ஆர்யான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரணவ்வைக் கண்காணித்தான்.

சரியாக ஆர்யான், சிதாரா இருவரின் திருமணத்தன்று மீண்டும் பிரணவ் சென்னைக்கு வர ரவி அவனைப் பின் தொடர்ந்தான்.

ஒருநாள் ரவி ஸ்டேஷனில் இருக்கும் போது அவனை சந்திக்க பிரணவ் வரவும் அதிர்ந்தான்.

பிரணவ், "வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்... பட் நீங்க கொஞ்ச நாளா என்ன ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்... எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா.." என்க,

முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,

"ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்... போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ..." என்றான் கோவமாக.

பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், "எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண..." என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

பிரணவ், "என்ன சொல்றீங்க சார்... நான் எதுக்கு தாராவ கடத்தனும்... " என்க,

ரவி, "சும்மா நடிக்காதேடா... நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர‌ வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க..." என்க,

"நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்... அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்... தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா... ஆர்யானுக்கு என்னை பிடிக்கல... அதனால தான் நான் அப்படி சொன்னேன்... ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்.." என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.

சற்று அமைதி காத்த பிரணவ் பின், "தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்...‌ ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்... போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்... அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்... அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கனும்னு... நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்... அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல..." என்க,

"நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்... ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்... பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல..." என்றான் ரவி.

பிரணவ், "உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..." என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.

"காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்... அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்... தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க... அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்..." என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.

பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.

ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.

ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.

அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்‌.

ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.

ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.

என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.

ஆர்யான் ரவியிடம், "டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு... பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க... நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்..." என்க,

பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.

ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.

_______________________________________________


பிரணவ், "சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்... நான் இதை உங்க கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல... தாராவ நல்லா பார்த்துக்கோங்க... ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க... " என்க,

ஆர்யான், "மினிய பார்த்துட்டு போகலையா.." எனக் கேட்டான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இல்ல ஆர்யான்... அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா... தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்... அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன செப்டர்... அது அப்படியே இருக்கட்டும்... எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்... முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... நான் போறேன்..." என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே... நைட் பிக் போஸ் பாக்க போய் யூடி எழுத கிடைக்கல.. அதான் லேட் ஆகிடுச்சு... அநியாயத்துக்கு டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... சீக்கிரம் அடுத்த யூடியோட வரேன்... நன்றி..

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 23
மக்களே... கதைக்கு போறத்துக்கு முன்னாடி முந்தைய யூடிக்கு ஒரு சின்ன விளக்கம்.

நிறைய பேர் கேட்டு இருந்தீங்க... சாதாரணமா ஃபிட்ஸ் வரது கோமாக்கு கொண்டு போகுமான்னு... அதுக்கு தான் விளக்கம் தரலாம்னு இருக்கேன்...

ஒருத்தர் கோமாவுக்கு போறதுக்கு பல காரணங்கள் இருக்கு...

ப்ரைன்ல ஏற்படுற பாதிப்பால தான் கோமா ஏற்படும்.

ப்ரைன்ல பிரஷர் அதிகரிப்பு, ப்ளீடிங், ஆக்ஸிஜன் இழப்பு... இப்படி பல காரணங்களால ப்ரைன் பாதிக்கப்பட்டு கோமாவ ஏற்படுத்தும்...

ப்ரைன்ல ஏற்படுற இந்த பாதிப்பு தற்காலிகமாகவோ, திரும்ப வரக் கூடியதாகவோ, இல்ல நிரந்தரமா கூட இருக்கலாம்...

ஒரு தடவை ஃபிட்ஸ் வரதால கோமா ஏற்படாது...

ஆனா தொடர்ந்து வரது... அப்படின்னா ஒரு தடவ ஃபிட்ஸ் வந்துட்டு சின்ன கெப்ல திரும்ப ஃபிட்ஸ் வரும் போது அந்த தாக்கத்துல இருந்து ப்ரைன் மீட்கப்படுவதை அது குறைக்கும்...

இதனால கோமா ஏற்படும்.

இதுல கூட சிதாராவுக்கு ஃபிட்ஸ் வந்துட்டு அவ அதுல இருந்து வெளி வர முன்னாடியே திரும்ப ஃபிட்ஸ் வருது... அதனால அவ கோமா ஸ்டேஜுக்கு போறதா தான் சொல்லி இருக்கேன்...

உங்க எல்லோருடையும் கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சுன்னு நினைக்குறேன்... இன்னும் ஏதாவது க்ளியர் இல்லன்னா கேளுங்க... நான் கண்டிப்பா விளக்கம் கொடுக்குறேன்... ☺️ நன்றி....

❤️❤️❤️❤️❤️

பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.

எப்போதும் தான் ஏதாவது சொன்னால் தன்னுடன் ஒன்றுக்கொன்று பேசி சீண்டிக் கொண்டிருப்பவள் இன்றோ தன்னைக் கூட உணராது அமைதியாக படுத்து இருக்கிறாள்.

சிதாராவை இந் நிலையில் கண்ட ஆர்யானின் மனம் கனத்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவள் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட ஆர்யான் இத்தனை நாளும் தன் மனதில் பூட்டி வைத்திருந்தை எல்லாம் சிதாராவிடம் கொட்ட ஆரம்பித்தான்.

"மினி... நான் இது வரைக்கும் உன் கிட்ட இதெல்லாம் சொல்லி இல்ல... ஆனா இப்போ தோணுது முன்னாடியே உன் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கலாமோன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா மினி... உன்ன முதன் முதலா பாத்த அந்த நிமிஷம் என் மனசுக்குள்ள இனம் புரியாத உணர்வு... அதுக்கு என்ன பேர்னு எல்லாம் அப்போ தெரியல... ஆனா எனக்கு அந்த ஃபீல் பிடிச்சிருந்தது... உன்ன பார்க்கும் போது நீ ரொம்ப ரிசர்வ்ட் டைப்னு நெனச்சேன்.. அதான் உன்ன கிண்டல் பண்ணி பேச வைக்க பாத்தேன்... பட் என்னால நீ ஃபிட்ஸ் வந்து கீழ விழுந்ததும் ரொம்ப கஷ்டமா இருந்தது மினி..." என்ற ஆர்யான் சிதாராவின் கரத்தில் முத்தமிட்டான்.

ஆர்யான், "நீ கண்ண தெறந்து என்னைப் பார்க்கும் வரை நான் நானாவே இல்ல மினி... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சுன்னு குற்றவுணர்வா இருந்தது... உன் கூட ஃப்ரென்ட் ஆக காரணமே எனக்கு உன் கூடவே இருக்கனும் தோணினது தான் மினி... அன்னைல இருந்து உன் கூட ஸ்பென்ட் பண்ண ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமா சேமிச்சு வெச்சேன்... நீ என் லைஃப்ல கிடைச்ச வரம் மினி... உன் கிட்ட என்ன அட்ரேக்ட் பண்ணின முதல் விஷயம் என்ன தெரியுமா... உன்னோட நெத்தில இருந்த அந்த குட்டி பொட்டு... டர்டிஷனல் ட்ரஸ்ல தேவதை போல இருந்தாய்... இதுக்கெல்லாம் மேல ஸ்பேக்ஸயும் தாண்டி உன் கண்ணுல தெரிஞ்ச பதட்டம்... உன் முகத்துல இருந்த அப்பாவித்தனம்... விட்டா சொல்லிக்கிட்டே போவேன் நான்..." என்று விட்டு புன்னகைத்தான்.

ஆனால் அவனின் கண்களோ கலங்கி இருந்தன.

"அன்னைக்கு நீ உன் பாஸ்ட் பத்தி சொல்லும் போது எனக்கு பிரணவ் மேல அப்படி ஒரு வெறி... அப்போவே முடிவு பண்ணேன் என் லைஃப்ல என்ன சிச்சுவேஷனா இருந்தாலும் உன்ன மட்டும் மிஸ் பண்ணிற கூடாதுன்னு... பிரணவ் பண்ணினது ரொம்ப தப்பு தான் மினி... ஆனா அவன் அப்படி பண்ணலன்னா நீ எனக்கு கெடச்சி இருக்க மாட்ட... நீ ட்ரடிஷனலா ட்ரஸ் பண்றது தான் எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்... ஆனா ஏதோ காரணம் சொல்லி நீ அதையும் சேன்ஜ் பண்ணிட்ட... எனக்கு உன்ன பழைய மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருந்தது... அதனால தான் இந்த சேரிய கிஃப்ட் பண்ணேன்... ஒன்னு தெரியுமா மினி... நீ சாப்பிட்டு தூக்கி போடுற சாக்லேட் கவர்ஸ கூட உனக்கே தெரியாம நான் எடுத்து பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்... சின்ன புள்ள தனமா இருக்குல்ல... நீ ஒரு தடவ ஷாப்பிங் போய்ட்டு வரப்போ உன்னோட ஜிமிக்கி காணாம போனதா சொன்னியே... வர வழில அது விழுந்திடுச்சு.. நீ கவனிக்கல... ரொம்ப நாளா அந்த ஜிமிக்கி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது... அதை கூட நான் தான் எடுத்து வெச்சிருக்கேன்... நீ பேசும் போது கூடவே பேசும் உன்னோட கண்கள்... கைய ஆட்டிக்கிட்டே பேசுறது... என்ன அடிக்கடி முறைக்கிற இந்த கண்ணு... தப்பு பண்ணிட்டு அப்பாவியா முகத்த வெச்சிக்கிறது... இப்படி உன் பக்கத்துல இருந்து உனக்கே தெரியாம ஒவ்வொன்னா சைட் அடிச்சி இருக்கேன்..." எனக் கூறிப் புன்னகைத்தான் ஆர்யான்.

ஆர்யான் அவ்வாறு கூறும் போதே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தான்.

அவன் சிதாராவின் கரத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததால் ஆர்யான் பேசப் பேச மூடியிருந்த சிதாராவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைக் கவனிக்கவில்லை.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான், "மினி... ஆரம்பத்துல எனக்கு உன் பக்கத்துலயே இருக்கனும்... உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்... உனக்கு எந்த கவலையும் வராம பாத்துக்கனும் இப்படி தான் நெனப்பேன்... ஆனா இது ஏன் எதுக்குன்னு எல்லாம் தெரியாது... ஆனா உனக்கு ஞாபகம் இருக்கா.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஒரு நாள் கோவத்துல என் கூட பேசாம இருந்தாய் தானே..." என்றவன் அன்று நடந்தைக் கூறினான்.

_______________________________________________

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிதாரா, ஆர்யான் இருவருக்குமே விடுமுறை.

பல நாட்களாக சிதாரா ஆர்யானிடம் நியுயார்க்கில் மிகவும் பிரசித்தி பெற்ற Metropolitan Museum இற்கு அழைத்துச் செல்லக் கேட்டு இருந்தாள்.

ஆனால் ஆர்யான் வேலையில் பிஸியாக இருந்ததால் அவனால் சிதாராவை அழைத்துச் செல்ல முடியவில்லை.

அன்று இருவருக்கும் விடுமுறை என்பதால் முன் தினமே சிதாராவை அங்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுத்து இருந்தான்.

காலையிலேயே சிதாரா ஆவலுடன் தயாராகி ஆர்யானுக்காக காத்திருந்தான்.

ஆனால் நேரம் சென்றதே தவிர ஆர்யான் வரவில்லை.

பொறுத்துப் பொறுத்து பார்த்திருந்தவள் ஆர்யானுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய சற்று நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் கடுப்பாகி விட்டாள்.

ஆர்யானுக்கு திடீரென ஆஃபீஸிலிருந்து மீட்டிங் என்று அழைப்பு வரவும் கிளம்பி விட்டான்.

இருந்த அவசரத்தில் சிதாராவிடம் கூட சொல்லவில்லை.

சரியாக அவன் மொபைலும் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகி விட சிதாராவிடம் வாக்குக் கொடுத்ததையே மறந்து விட்டான்.

ஆர்யானின் வேலை முடியவே இரவானது.

அதன் பின் மொபைலை எடுத்துப் பார்க்க ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதைக் கண்டதும் தான் சிதாரா பற்றிய நினைவே வந்தது.

ஆர்யான், "ஷிட்.... இதை எப்படி மறந்தேன் நான்..." எனத் தலையில் கை வைத்தவன் அவசரமாக சிதாரா தங்கியிருந்த ஃப்ளாட்டிற்கு சென்றான்.

நெடு நேரம் அழைப்பு மணியை அழுத்த உள்ளிருந்த எந்தப் பதிலும் வரவில்லை.

மீண்டும் அழைப்பு மணியை அழுத்தக் கையை நீட்ட சரியாக கதவு திறக்கப்பட்டது.

சிதாரா கதவைத் திறக்கவும் ஆர்யான் அவளைப் பார்த்து இளித்து வைக்க அவனை முறைத்த சிதாரா வேகமாக கதவை அடைத்து பூட்டினாள்.

ஆர்யான் மினி மினி என அழைத்து கதவை தட்டித் தட்டி ஓய்ந்து போனவன் இதற்கு மேல் இரவு நேரத்தில் தான் இங்கு வெளியே நின்றால் சிதாராவுக்குத் தான் பிரச்சினை ஆகும் என சோகமாக வீட்டுக்கு கிளம்பினாள்.

வீட்டுக்குச் சென்றதும் முதலில் மொபைலை சார்ஜில் போட்ட ஆர்யான் சிதாராவுக்கு அழைத்தான்.

சிதாராவோ அவனின் அழைப்பைக் கண்டதும் துண்டித்து விட்டாள்.

மீண்டும் மீண்டும் அழைக்க கோவத்தில் மொபைலை ஸ்விச் ஆஃப் செய்து விட்டாள்.

ஆர்யான், "ஹ்ம்ம்... உனக்கு தேவை தான்டா இது... கொஞ்சம் கூட அறிவு இல்ல.. மினிக்கு கொடுத்த வாக்கை மறந்துட்டியே..." எனத் தன்னையே கடிந்து கொண்டவன் இரவு உணவைக் கூட உட்கொள்ளாது உறங்கினான்.

இங்கு சிதாராவோ, "என்னமோ பெரிய இவன் மாதிரி உன்ன அங்க கூட்டிட்டு போறேன் மினி... இங்க கூட்டிட்டு போறேன் மினின்னு கதை விட்டான்... ஒழுங்கா சொன்ன இடத்துக்கே கூட்டிட்டு போகல... அதை கூட மறந்துட்டான்... உன்ன இந்த விஷயத்துல மன்னிக்கவே மாட்டேன் ஜிராஃபி.." என ஆர்யானை வசை பாடியபடி இரவைக் கழித்தாள்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவைக் காணச் செல்ல அவளோ ஏற்கனவே யுனிவர்சிட்டி கிளம்பி இருந்தாள்.

அவளது அறை மூடி இருக்கவும், "என்ன இவ சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டா... எப்போவும் நான் தானே அவள பிக்கப் பண்ணுவேன்.... ஓஹ்... மேடம் கோவமா இருக்கீங்களா... " என நினைத்து சிரித்தவன் சிதாராவைப் பார்க்க யுனிவர்சிட்டிக்கே சென்றான்.

ஆர்யான் யுனிவர்சிட்டிக்கு வெளியே நின்று சிதாராவுக்கு அழைக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை.

பின் கேட் கீப்பரிடம் கூறி அவளை வெளியே வரக் கூற சிதாரா மறுத்து விட்டாள்.

அன்று முழுவதுமே ஆர்யானின் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் சிதாரா.

அன்று முழுவதும் சிதாராவுடன் பேசாது அவளைப் பார்க்காது இருந்தது ஆர்யானிற்கு ஏதோ இழந்தது போல இருந்தது.

தன் வீட்டில் கவலையாக இருந்த ஆர்யான், "மினிய பார்க்காம அவ கூட பேசாம இருந்தது ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு... அப்படியே என் ஹார்ட்ல இருந்து ஒரு பார்ட்ட பிய்ச்சி போட்டது போல இருக்கே... எனக்கு என்ன ஆகிடுச்சு.." என தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள,

"ஏன்னா நீ அவளை காதலிக்கிறடா லூசுப் பையா..." என அவனின் மனசாட்சி பதில் அளிக்கவும் அதிர்ந்தான் ஆர்யான்.

"நா... நான்... மினிய காதலிக்கிறேனா... ஆமா... அவள முதல் தடவ பார்த்ததுமே அவள் என் மனசுக்குள்ள வந்துட்டா... நான் தான் இவ்வளவு நாள் இந்த ஃபீலிங்க்கு என்ன பேருன்னே யோசிக்காம இருந்தேன்.... மினி..." எனப் புன்னகைத்தவன் கண்களை மூடிக் கொண்டு சிதாராவுடன் கழித்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தான்.

பல நாள் கழித்து டயரியைக் கையில் எடுத்தவன் தான் சிதாராவைக் காதலிப்பதை அதனுடன் பகிரப் பார்த்தவன் நினைவு வந்தவனாக,

"இல்ல... இதை நான் முதல்ல மினி கிட்ட தான் சொல்லனும்... அவளோட கண்ண பார்த்து சொல்லனும்... அதுக்கு அவளோட ரியாக்ஷன ரசிக்கனும்..." என நினைத்தவன் டயரியை மூடி வைத்தான்.

ஆர்யான், "என்ன பண்ணி அவள சமாதானப்படுத்தலாம்..." என வெகுநேரம் யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அடுத்த நாள் காலை யுனிவர்சிட்டி கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த சிதாரா, "லூசு ஜிராஃபி... ஃப்ரெண்ட் கோவமா இருக்காளே அவள சமாதானம் பண்ணனும்னு அறிவிருக்கா... கொஞ்சம் நேரம் ட்ரை பண்ணிட்டு போய்ட்டான்... திரும்ப வருவான் தானே... அவனுக்கு இருக்கு.." என்றவள் வெளியேற கதவைத் திறக்க வாசலில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தாள்.

ஆர்யான் அவள் முன் கை ஆட்டவும் தன்னிலை அடைந்த சிதாரா அவனை முறைக்க,

ஆர்யானோ பட்டென நெடுஞ்சாண் கிடையாக அவள் காலில் விழுந்து விட்டான்.

"டேய்... வளர்ந்து கெட்டவனே... என்னடா பண்ற... முதல்ல எழுந்திரிடா.. யாராவது பார்த்துட போறாங்கடா.." என சிதாரா பதறியபடி கூற,

"சாரி மினி... நேத்து சடன்னா ஆஃபீஸ்ல இருந்து கால்.‌.. அர்ஜன்ட் மீட்டிங்னு சொல்லி... அதான் இருந்த டென்ஷன்ல உன்ன மியூசியம் கூட்டிட்டு போறேன்னு சொன்னதையே மறந்துட்டேன்..." என்றான் ஆர்யான்.

சிதாரா, "நீ இப்போ எழுந்திரிக்கலன்னு வை... என்னைக்குமே உன்ன மன்னிக்க மாட்டேன் ஜிராஃபி..." என மிரட்டவும் அவசரமாக எழுந்து கொண்டான்‌.

சிதாரா ஆர்யானை முறைத்து விட்டு உள்ளே செல்ல அவளைப் பின் தொடர்ந்த ஆர்யான்,

"பேசு மினி... அதான் சாரி சொல்றேன்ல... பேசுடி..." எனக் கெஞ்ச சிதாராவோ உதட்டை சுழித்தாள்.

ஆர்யான், "வேணும்னா நான் தோப்புக்கரணம் போடவா.." என்றவன் இரு காதையும் மாற்றி பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட,

ஆர்யானின் செய்கையில் வந்த சிரிப்பை அவன் காணாதவாறு அடக்கினாள் சிதாரா.

சற்று நேரம் கழித்து ஆர்யான், "முடியல மினி... சாரி.. மன்னிச்சிட்டேன் சொல்லு... எங்க அம்மா கூட என்ன இப்படி பண்ண வெச்சி இல்லடி... " என சோகமாகக் கூறவும் அவனைப் பார்த்து சிரித்த சிதாரா,

"சரி சரி போதும் எழுந்திரு.. மன்னிச்சிட்டேன்... ரொம்பத் தான் சீன் போடுற.." என்றாள்.

தோப்புக்கரணம் போடுவதை நிறுத்திய ஆர்யான் அவளை நெருங்கி, "நிஜமா மன்னிச்சிட்டியா மினி... என் மேல இருந்த கோவம் போயிடுச்சா..." என கண்கள் மின்னக் கேட்கவும்,

எக்கி அவனின் தலை முடியைக் கலைத்து விட்ட சிதாரா,

"உன் கிட்ட எப்படி ஜிராஃபி நான் கோவமா இருக்க முடியும்... நீ தான் ஏதாவது கோமாளித்தனம் பண்ணி என்னை சிரிக்க வெச்சிடுவியே... நீ அன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராம இருந்தியே.. அதான் உன்ன கொஞ்சம் சுத்தல்ல விட்டேன்..." என்றாள்.

ஆர்யான், "தேங்க் யூ மை டாலி..." என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் டாலி என்ற அழைப்பில் புருவம் சுருக்கிய சிதாரா, "என்னடா புதுசா டாலின்னு எல்லாம் சொல்ற... என்னாச்சு.." என்க,

அவளை விடுவித்தவன், "டேய் ஆரு... உணர்ச்சி வசப்பட்டுட்டியே... சீக்கிரம் ஏதாவது சொல்லி மினிய சமாளிடா.." என நினைத்தன் அவளைப் பார்த்து சிரித்தான்.

பின், "அது ஒன்னுமில்ல மினி.. சும்மா தான்... ஆமா நீ எங்க கிளம்பிட்ட.." எனப் பேச்சை மாற்ற,

"உன் கூட பேசிட்டு இருந்ததுல அதை கூட மறந்துட்டேன் பாரு... யுனிக்கு தான் கிளம்பினேன்..‌டைம் ஆச்சு... என்ன ட்ராப் பண்ணி விடு.." என்றாள் சிதாரா.

ஆர்யான், "இன்னைக்கு யுனி கட் பண்ணிடு மினி.. நானும் லீவ் போட்டுட்டேன்..." என்க,

அவனைப் புரியாமல் பார்த்த சிதாரா, "எதுக்கு ஜிராஃபி லீவ் போடனும்.." என்றாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "Metropolitan Museum போலாம்..." என்க சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் சிதாரா.

அன்றைய நாள் முழுவதும் சிதாராவுடனே கழித்த ஆர்யான் சிதாரா அறியாமல் அவளை ரசித்தான்.

_______________________________________________

அன்றைய தினத்தைப் பற்றி சிதாராவிடம் கூறிய ஆர்யான், "அதுக்கப்புறம் பிரணவ்வால உனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க மாமா கிட்ட பேசினேன்... இந்த கொஞ்சம் நாளா நீ காட்டின நெருக்கத்துல ரொம்பத் தவிச்சிட்டேன்... காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டும் அதை உன் கிட்ட சொலல் முடியாம இருந்தேன்.. யாராலையும் உனக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நெனச்சேன்... ஆனா கடைசியில என்னாலையே நீ இன்னெக்கி இந்த நிலமைல இருக்க..." என்று அழுதவன்,

"மினி... நான் உன்ன காதலிக்கிறேன்... உன் மேல பைத்தியமா இருக்கேன்... ஐ லவ் யூ மினி... யூ ஆர் மை பேபி டால்... நீ தான் எனக்கு எல்லாமே மினி... உனக்கு ஒன்னுன்னா நிச்சயம் என்னால தாங்க முடியாது மினி.. ப்ளீஸ் என் கிட்ட திரும்ப வந்துடுடி... நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாது... எனக்கு நீ வேணும் மினி... லைஃப் லாங் வேணும்... என் ஃப்ரென்டா... என் லைஃப் பார்ட்னரா.. என் சண்டக்காரியா... எனக்கு அம்மாவா எல்லாமுமா நீ வேணும்டி... எழுந்திரு மினி... எழுந்து என் கூட சண்டை போடு... பேசு மினி..." என்று கண்ணீர் வடித்தவன் சிதாராவின் வயிற்றில் தலை வைத்து ஒரு கரத்தில் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டவன் மறு கரத்தால் சிதாராவைச் சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் சூடான கண்ணீர்த்துளிகள் சிதாராவின் வயிற்றை நனைக்க அவள் விரல்கள் மெதுவாக அசைந்தன.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே... யூடி லேட் ஆகிடுச்சு... ஃபைனல் எக்சேம் நெருங்கிடுச்சு... ஸ்டடீஸ்ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்... அதான் யூடி டைப் பண்ண டைம் கிடைக்கல...

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 24
ஆர்யான் சிதாராவின் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, தன்னவனின் விழி நீர் தந்த வெம்மையில் சிதாராவின் விரல்கள் மெதுவாக அசைந்தன.

ஆர்யான் மினி... மினி... என குரலில் மொத்த காதலையும் தேக்கி வைத்து அவள் பெயரை விடாது உச்சரித்தவன் சில நொடிகளில் அப்படியே உறங்கி விட்டான்.

நன்றாக இரவாகி விட சிதாராவின் வயிற்றில் தலை வைத்து அவளை லேசாக அணைத்தபடி படுத்திருந்த ஆர்யானின் தலையில் மெதுவாக ஒரு கரம் பதிந்தது.

அதில் விழிப்புத் தட்டிய ஆர்யான் அவசரமாக தலையை உயர்த்திப் பார்க்க சிதாரா தான் கண் விழித்து ஆர்யானின் தலையில் கை வைத்திருந்தாள்.

கண்கள் கலங்க, "மினி...." என மகிழ்ச்சியின் உச்சத்தில் கத்திய ஆர்யான், "மி...மினி... நீ கண்ணு முழிச்சிட்டியா... தேங்க் காட்... நீ நல்லா இருக்கேல்ல...." என்றான் பதட்டமாக.

சிதாரா கஷ்டப்பட்டு ஏதோ கூற முனைவதைக் கண்டு அவள் முகத்தினருகே சென்று,

"என்ன மினி... ஏதாவது சொல்லனுமா..." எனக் கேட்டான்.

சிதாரா தலையை மேலும் கீழும் அசைத்து ஆம் என்றவள் கண்களால் ஆர்யானை இன்னும் சற்று நெருக்கமாக வரக் கூறினாள்.

அவளை நெருங்கிய ஆர்யான் சிதாரா கூறுவதைக் கேட்க வேண்டி தன் காதை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல,

"ரொ... ரொம்...ப.. பயந்..துட்டி..யா.." எனப் புன்னகையுடன் கேட்டாள் சிதாரா.

சிதாரா அவ்வாறு கேட்டதும் மேலும் கண்ணீர் வடித்த ஆர்யான் பட்டென அவளை அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன்,

"ஐம் சாரி மினி... என்ன மன்னிச்சிரு... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு... நான் மட்டும் உன் மெசேஜ பார்த்து கரெக்ட் டைமுக்கு அங்கு வந்திருந்தேன்னா உனக்கு இப்படி ஆகி இருக்காதுல்ல... சாரிடி..." என்று அழுதான்.

சிதாரா கடினப்பட்டு கையை உயர்த்தி ஆர்யானின் தலையை வருடி விட்டாள்.

சிதாராவிடமிருந்து விலகிய ஆர்யான் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, "இரு மினி... நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன்.." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறிவன் சில நிமிடங்களில் டாக்டருடன் வந்தான்.

சிதாராவைப் பரிசோதித்த டாக்டர், "ஷீ இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் நவ்... உங்க அன்பும் நம்பிக்கையும் தான் அவங்கள கியுர் பண்ணி இருக்கு... எப்பவும் இப்படியே ஒத்துமையா இருங்க ரெண்டு பேரும்... ஃபிட்ஸ் வந்ததுனால இவங்க உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கும்... சோ டூ டேய்ஸ்க்கு இப்படி தான் இருப்பாங்க... பேச கூட கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... அதுக்கப்புறம் சரி ஆகிடும்... மத்தபஞி வேற எந்த பிரச்சினையும் இல்ல..." என்றவர் இன்னும் சில பல அறிவுரைகள் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் செல்லவும் ஆர்யான் சிதாராவைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட புன்னகைத்த சிதாரா எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.

"வைட் மினி... நான் ஹெல்ப் பண்றேன்..." என்றவன் சிதாராவை மெதுவாக எழுப்பி கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

ஆர்யானை தன்னருகில் அழைத்த சிதாரா, "பசிக்..கிது ஜிர்..ராஃபி..." என்றாள் உதட்டைப் பிதுக்கி.

"ச்சே.. நான் ஒரு லூசு... அதை மறந்துட்டேன் பாரு... இரு நான் கேன்டீன் போய் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன் மினி.." என்றவன் சிதாரா சரியென தலையசைக்கவும் அவசரமாக கேன்டீன் சென்றான்.

ஆர்யான் செல்லும் திசையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.

வரும் போது கையில் சிதாராவுக்கு பழங்கள் மற்றும் உணவுடன் வந்தவன் சிதாராவுக்கு அவனே ஊட்டி விட்டான்.

ஆர்யான் ஊட்டி விட சிதாரா அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்த ஆர்யான், "என்ன மினி.. அப்படி பாக்குற... என்னமோ இன்னைக்கு தான் முதல் தடவ பார்க்குறது போல..." என்க,

"இவ்வளவு வெளிப்படையா அவன சைட் அடிப்பியா சித்து..." என மனதில் தன்னையே திட்டிக் கொண்டவள் பதில் எதுவும் கூறாது ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

சிதாராவுக்கு முழுவதையும் ஆர்யான் ஊட்டி முடிக்கவும் தான் ஆர்யான் இன்னும் சாப்பிடாமல் இருப்பது சிதாராவுக்கு நினைவு வந்தது.

ஆர்யான் கையைக் கழுவி விட்டு வரவும் சிதாரா, "நீ சாப்...பிடலை..யா ஜிர்..ராஃபி..." எனக் கேட்ட,

வலிக்காமல் அவள் தலையில் குட்டு வைத்த ஆர்யான், "எனக்கு இப்ப பசிக்கல... நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்... நீ இப்போ தூங்கு... உனக்கு தான் உடம்புல இன்னும் தெம்பில்லல்ல.. அப்புறம் எதுக்கு பேசி ஸ்ட்ரைன் பண்ணிக்குற..." எனக் கடிந்து கொண்டான்.

அவனை முறைத்த சிதாரா, "நீ முதல்..ல ஏதாவது சாப்டு... அதான் இன்..னைக்கு ஃபுல்லா தூங்கி..னேனே.. நான் அப்..புறமா தூங்குறேன்..." என ஒவ்வொரு வார்த்தையாக கடினப்பட்டு பேச,

இதற்கு மேலும் தான் உண்ணாமல் இருந்தால் தன்னவள் கஷ்டப்படுவாள் என எண்ணிய ஆர்யான் சிதாராவுக்காக வேண்டி அங்கிருந்த பழங்களை எடுத்து உண்டான்.

பின் சிதாராவை படுக்க வைத்தவன் அவள் அருகில் கதிரையைப் போட்டு அமர சிதாரா ஏதோ கூறவும் கீழுதட்டைக் கடித்து கண்களாலே அவளை மிரட்டியவன் தூங்கு என கண்களை மூடி சைகை காட்டினான்.

ஆர்யானைப் பார்த்து உதட்டை வளைத்த சிதாரா கண்களை மூடிக் கொண்டாள்.

சிதாராவின் செய்கையில் புன்னகைத்த ஆர்யான் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு விட்டு சிதாராவின் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் அவளின் முகம் பார்த்தவாறு அமர்ந்த வண்ணமே கட்டிலில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

காலையிலிருந்தே இருந்த குழப்பத்திலும் சிதாராவைத் தேடித் திரிந்த அலைச்சலிலும் உடனே ஆர்யானை உறக்கம் தழுவிக் கொண்டது.

ஆர்யான் உறங்கி சிறிது நேரத்தில் அவ்வளவு நேரம் தூங்குவது போல் நடித்த சிதாரா மெதுவாக ஒற்றைக் கண் திறந்து ஆர்யானைப் பார்க்க,

அவன் தூங்கி விட்டதை உறுதி செய்தவள் ஆர்யானின் தூக்கம் களையாதவாறு எழுந்து அமர்ந்தாள்.

ஒரு கையை மடித்து அதில் தன் கன்னத்தைத் தாங்கிய சிதாரா நிர்மலமான முகத்துடன் குழந்தை போல் உறங்கும் தன்னவனை விழி எடுக்காமல் ரசித்தாள்.

சற்று நேரத்தில் ஆர்யானிடம் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.

அதன் சத்தத்தில் கண் விழித்த ஆர்யான் சிதாராவைப் பார்க்க அவள் தூங்குவது தெரிந்ததும் அவள் வயிற்றை சுற்றி கை போட்டு அணைத்தபடி மீண்டும் உறங்கினான்.

_______________________________________________

மறுநாள் கதிரவன் உதித்து சில மணி நேரத்தில் ஆர்யான் எழுந்து கொள்ள சிதாராவோ சோர்வில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சிதாரா எழும் முன் காலைக் கடன்களை முடித்து விட்டு வர நினைத்த ஆர்யான் அந்த அறையிலேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

நேற்றே ஆர்யான் தன் நண்பன் ஒருவனிடம் கூறி சிதாராவின் மருத்துவ அறிக்கைகளையும் இருவருக்கும் தேவையான பொருட்களையும் எடுத்து வர வைத்திருந்தான்.

எல்லாம் முடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வர ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.

அதன் சத்தத்தில் சிதாராவின் தூக்கம் களைய முன் அவசரமாக அழைப்பை ஏற்றான்.

ரவி தான் அழைத்திருந்தான்.

ரவி, "சாரிடா மார்னிங்கே கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றதுக்கு... தங்கச்சிக்கு இப்போ எப்படி இருக்கு... இன்னும் ரெகவர் ஆகலையா..." என்க,

ஆர்யான், "இல்லடா... நைட்டே மினி கண் முழிச்சிட்டா... டாக்டர் செக் பண்ணிட்டு எல்லாம் ஓக்கேன்னு சொன்னாங்க... இப்போ தூங்கிட்டு இருக்காள்... ஆமா நீ எதுக்குடா கால் பண்ணின... அதை இன்னும் சொல்லவே இல்ல..." என்றான்.

"ஆஹ்... நீ இப்போ ஃப்ரீயா மச்சான்... கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா..." என ரவி கேட்கவும்,

ஆர்யான், "ஃப்ரீ தான்டா... நானும் உன்ன சந்திக்க வரணும்னு தான் நெனச்சேன்... வைட் பண்ணு.. ஒரு ஃபிப்டீன் மினிட்ல வந்துட்றேன்.." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அங்கிருந்து நர்ஸிடம் தான் வரும் வரை சிதாராவைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிய ஆர்யான் ரவியை சந்திக்க கிளம்பினான்.

நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனை அடைந்த ஆர்யான் நேரே ரவி இருந்த அறைக்குச் சென்றான்.

ரவி, "வா ஆரு... உட்காரு..." என்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த ஆர்யான்,

"ஏதோ பேசணும்னு சொன்னியே ரவி... என்ன விஷயம்..." எனக் கேட்டான்.

ரவி, "இன்னைக்கு ஆதித்யாவ கோர்ட்ல ஆஜர் பண்றோம்டா... நம்ம கிட்ட இருக்குற எவிடன்ஸ கோர்ட்ல சப்மிட் பண்ணினா யூ.எஸ் ரூல்ஸ் படி கண்டிப்பா அவனுக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்..." என்றான்.

பதிலேதும் கூறாமல் அமைதி காத்த ஆர்யான் பின், "மினிய கடத்த ட்ரை பண்ணினதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ணு ரவி..." என்று கூறவும் அதிர்ந்தான் ரவி.

ரவி, "என்னடா சொல்ற... உனக்கென்ன பைத்தியமா... தங்கச்சிக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் அந்த ராஸ்கல்... நான் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க ட்ரை பண்ணா நீ கடத்த முயற்சி பண்ணதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ண சொல்ற... அப்படி மட்டும் பண்ணினா வெறும் மூணோ நாலோ வருஷம் ஜெயில்ல இருந்துட்டு ஈஸியா வெளிய வந்துடுவான்..." என்றான் கோவமாக.

ஆர்யான், "மினிய தயா அப்படி பண்ண நெனச்சதால உன்ன விட பல மடங்கு அவன் மேல கோவம் இருக்கு எனக்கு... அவன் அப்பா அவனுக்கு நல்லத சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தா அவன் இன்னைக்கு இந்த நிலமைல இருப்பானா... சின்ன வயசுல இருந்தே அவன விட முன்னுக்கு வரனும்.. அவன ஜெய்க்கனும்னு சொல்லி வளர்த்தா இவன் வேற என்ன பண்ணுவான்... எல்லாத்தையும் விட அவனுக்காக ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு... பொறந்ததுல இருந்தே அப்பா பாசத்த அனுபவிக்காத அந்த குழந்தை என்ன பாவம் பண்ணிடுச்சு... என் மினி கூட அதை விரும்பமாட்டா... சில வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்தா அவன் திருந்திடுவான்... இல்லன்னா திரும்ப எங்கள பழி வாங்க தான் முயற்சி பண்ணுவான்... என் மேல இருந்த பொறாமைல தான் அவன் அப்படி பண்ணான்... நான் அவனுக்காக இதை பண்ணல... அந்த குழந்தைக்காக பண்றேன்.." என்க, மனமேயின்றி சம்மதித்தான் ரவி.

ஆர்யான் ஆதித்யாவைப் பார்க்க அவனை அடைத்து இருந்த சிறைக்குச் செல்ல தரையில் முகத்தை ஒரு கையால் மூடியவாறு படுத்திருந்தான் ஆதித்யா.

ஆர்யானின் அரவம் கேட்டு எழுந்தமர்ந்த ஆதித்யா தரையில் பார்வையை செலுத்தி இருக்க அவனை நெருங்கிய ஆர்யான்,

"என் முகத்த பார்க்க கூட தயக்கமா இருக்கா..." என்றான்.

ஆதித்யா பதிலளிக்காமல் இருக்கவும், "எனக்கும் உன் கூட பேசவோ உன் முகத்த பார்க்கவோ விருப்பமில்ல... ஆனா நான் இன்னைக்கு பேசியே ஆகனும்... அதான் வந்தேன்... " என்று நிறுத்திய ஆர்யான்,

"எனக்கு நிறைய ஃப்ரென்ட்ஸ் இருக்காங்க... யாரு கூட வேணாலும் சீக்கிரமா ஃப்ரென்ட் ஆகிடுவேன் நான்... என் கேரெக்டர் அப்படி... பட் நீ கொஞ்சம் ஸ்பெஷல்... உன் ஃப்ரென்ட்ஷிப்ப நான் ரொம்ப மதிச்சேன் தயா... ஆனா அப்போ எனக்கு தெரியல நீ என்ன ஏமாத்த தான் இப்படி பண்றன்னு... என் கிட்ட நிறைய பேரு வந்து சொன்னாங்க நீ என் பேர யுனில டேமேஜ் பண்றன்னு.. பட் நான் எதையும் நம்பல... ஆனா அன்னிக்கு நீ உன் வாயாலயே எல்லாம் சொல்லி ஒத்துக்கொள்ளவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எல்லாரு முன்னாடியும் உன்ன அடிச்சது கூட நீ என்ன நம்ப வெச்சி ஏமாத்தினதுக்காக இல்ல... ஒரு பொண்ணோட லைஃப்ல நீ விளையாடி இருக்கன்னு தான்... எங்க அம்மா எனக்கு சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்கள எப்படி மதிக்கனும்னு கத்துத் தந்து இருக்காங்க... அதனால தான் அன்னைக்கு யாரோ ஒரு பொண்ணுக்கு நீ அதுவும் என் க்ளோஸ் ஃப்ரென்ட் அப்படி பண்ணவும் கோவத்துல உன்ன அடிச்சிட்டேன்... அதுக்கப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன் அதை நினைச்சி... என்ன இருந்தாலும் ஒரு பொறாமையில தான் நீ இதெல்லாம் பண்ணி இருக்கன்னு எனக்கு புரிஞ்சது... அதான் உன் கூட பேச ட்ரை பண்ணேன்... ஆனா முடியல... உன்னையும் யுனிய விட்டு தூக்கிட்டாங்க... ஆனா என்னைக்கு என் மினி மேல நீ கை வெச்சியோ அப்பவே உன்ன கொல்லனும்னு நெனச்சேன்... உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயம் இல்ல... ஆனா அதுக்கப்புறம் யாருக்காக நான் இதெல்லாம் பண்ணினேனோ அவள் கஷ்டப்படுவா... அதான் உனக்கு சட்டத்தால தண்டனை வாங்கி தரனும்னு நினைச்சேன்... நீ பண்ண வேலைக்கு உனக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்... ஆனா நான் தான் உன் குழந்தைக்காக அத தடுத்திருக்கேன்..." என்கவும் அவ்வளவு நேரம் ஆர்யான் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா ஆர்யானைப் புரியாமல் ஏறிட்டான்.

ஆர்யான், "என்ன பார்க்குற... நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சு கர்ப்பமாக்கிட்டு விட்டு போனேல்ல... ரேவதி... உன் காதல் எப்படியோ... ஆனா அவளோட காதல் உண்மைன்னு சொல்லி தன்னோட குடும்பத்தை எதிர்த்து குழந்தைய பெத்துக்கிட்டு சிங்கிள் மதரா அந்த குழந்தைய வளர்க்குறா... இன்னும் நீ திரும்பி வருவேன்னு நம்பிட்டு இருக்கா... அவ நம்பிக்கைய பொய்யாக்க எனக்கு மனசு வரல... அந்த பச்ச குழந்தைக்காக தான் நான் உன்ன மன்னிக்கிறேன்.... இனிமேலாவது திருந்துற வழிய பாரு... ஆனா திரும்ப பழி வாங்குறேன் அது இதுன்னு என் மினிய காயப்படுத்த நெனச்ச..." என விரல் நீட்டி எச்சரித்தவன்,

"அதுக்கப்புறம் பார்ப்ப இந்த ஆர்யான் யாருன்னு...." என்றவன் அங்கிருந்து சென்றான்.

ஆர்யான் சென்றதும் அவன் கூறிச் சென்றதை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டான் ஆதித்யா.

அவன் மனம், "ரேவா... என்ன மன்னிச்சிருடி..." என்று அழுதது.

ரவியிடம் சொல்லிக் கொண்டு இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினான் ஆர்யான்.

ஆர்யான் சிதாரா இருந்த அறைக்குள் நுழையும் போது சிதாரா கட்டிலில் இருக்கவில்லை.

அவள் எங்கே எனத் தேட குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் சிதாரா.

அவசரமாக அவளிடம் ஓடிய ஆர்யான், "என்ன பண்ற மினி.. தனியா போயிருக்க... உனக்கு துணையா நான் ஒரு நர்ஸ் வெச்சிட்டு தானே போனேன்... எங்க அவங்க.." என்க,

அவன் கை பிடித்து கட்டில் வரை வந்த சிதாரா, "நான் இப்போ நல்லா இருக்கேன் ஜிராஃபி... கொஞ்சம் டயர்டா இருக்கு.. அவ்வளவு தான்... அதான் அந்த நர்ஸ போக சொன்னேன்... அவங்க எனக்கு ப்ரேக்ஃபஸ்ட தந்துட்டு போய்ட்டாங்க... நீ டென்ஷன் ஆகாதே.. ஆமா நீ காலைலயே எங்க போன.. இப்போ தான் வர..." எனக் கேட்டாள்.

"உட்காரு சொல்றேன்.." என சிதாராவை கட்டிலில் அமர வைத்த ஆர்யான்,

"நான் உன் கிட்ட சொல்லாம ஒரு விஷயம் செஞ்சிட்டேன் மினி.." என்றான்.

சிதாரா அவனைக் கேள்வியாகப் பார்க்கவும் தனக்கும் ஆதித்யாவிற்கும் இடையிலான கடந்த காலத்திலிருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் கூறினான் ஆர்யான்.

ஆர்யான் கூறி முடித்த பின்னும் சிதாரா முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க,

ஆர்யான், "சாரி மினி... உனக்கு இதுல சம்மதமான்னு கூட நான் கேட்கல.. உறக்கு நிச்சயம் என் மேல கோவம் வரும்.." என்றான் கவலையாக.

அவனை முறைத்த சிதாரா, "ஆமா.. எனக்கு கோவம் தான்.." என்க ஆர்யானின் முகம் வாடியது.

பின் ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவன் கன்னத்தில் கை வைத்து, "எனக்கு உன் மேல கோவம் தான் ஜிராஃபி... பட் அது நீ பண்ண வேலைக்கு இல்ல... எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு யோசிக்கிறியே... அதுக்குத் தான்... என் லூசு புருஷன் எது பண்ணாலும் அது சரியாத் நான் இருக்கும்... தனக்கு கெட்டது பண்ணவங்களுக்கு கூட அவன் நல்லது தான் பண்ணுவான்..." என்றதும் இன்ப அதிர்ச்சி அடைந்தான் ஆர்யான்.

அதிர்ச்சி மாறாமலே, "நான் பொண்டாட்டின்னு விளையாட்டுக்கு சொன்னாக் கூட அவ்வளவு கோவப்படுவ... இன்னைக்கு நீயே என்னை பார்த்து புருஷன்னு சொல்ற..." என்றான் ஆர்யான்.

உடனே பொய்யாக முகத்தைத் தொங்கப் போட்ட சிதாரா, "ஏன் நான் அப்படி சொன்னது உனக்கு பிடிக்கலையா ஜிராஃபி.." என்றாள்.

சிதாராவின் முகம் வாடவும் ஆர்யான், "ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி... எனக்கு பிடிச்சிருக்கு... கேக்க நல்லா இருக்கு..." என்றான் புன்னகையுடன்.

பின் ஆர்யான் தான் வரும் போது கொண்டு வந்த உணவை சிதாராவுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.

ஆர்யான், "சரி மினி... டாக்டர் உன்ன இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க... நான் போய் பில் பே பண்ணிட்டு வரேன்.. நாம கிளம்பலாம்.." என்க சரி எனத் தலையசைத்தாள் சிதாரா.

பணம் கட்டி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் போது மாலையாகி இருந்தது.

காரில் செல்லும் போது வெளியே பார்த்த சிதாரா தம் வீட்டுக்குச் செல்லும் வழி இல்லாமல் வேறு வழியில் செல்வதைக் கண்டதும் ஆர்யானைப் பார்த்து, "நாம எங்க போறோம் ஜிராஃபி... இது நம்ம வீட்டுக்கு போற வழி இல்லையே..." என்றாள்.

ஆர்யான், "நம்ம வீட்டுக்கு தான் மினி.. வெய்ட் பண்ணு..." என்க சிதாராவுக்கு குழப்பமாக இருந்தது.

சில மணி நேரத்தில் அவர்களின் கார் ஒரு வீட்டின் முன் நின்றது.

ஆர்யான் முதலில் இறங்கி சிதாராவுக்கு இறங்க கதவைத் திறக்க, காரிலிருந்து இறங்கிய சிதாரா சுற்றியும் குழப்பமாக பார்த்தாள்.

சிதாராவை அழைத்துக் கொண்டு சென்று வீட்டின் கதவைத் திறந்தவன், "வெல்கம் டு அவர் நியு ஹோம் பொண்டாட்டி..." என்றான் ஆர்யான்.

அதிர்ந்த சிதாரா, "என்ன சொல்ற ஜிராஃபி... நம்ம வீடா... எப்ப வாங்கின... " என்றாள்.

ஆர்யான், "என் ஃப்ரென்ட் ஒருத்தனோட வீடு தான் மினி... அவன் வேற வீட்டுல இருக்கான் இப்போ... ஆல்ரெடி நம்ம திங்க்ஸ் எல்லாம் ஷிஃப்ட் பண்ணியாச்சு... அந்த வீடு அவ்வளவு சேஃப் இல்ல.. சுத்தி அவ்வளவா ஆட்கள் கூட இல்ல... நான் வர்க் போனா நீ மட்டும் தனியா இருப்ப... பட் இங்க எப்பவும் ஆட்கள் இருக்கும்... எந்த பிரச்சினையும் இல்ல... உன் ஸ்டடீஸ் முடிஞ்சு நாம ரிட்டன் இந்தியா கிளம்பும் வர இங்க தான் இருக்க போறோம்..." என்றான்.

இரண்டு அடுக்கு வீடு... கீழே ஹாலில் ஒரு கெஸ்ட் ரூமும் டைனிங் ஹாலும் கிச்சனும் இருந்தது.

மேல் மாடியில் பால்கனியுடன் கூடிய இரண்டு பெட்ரூம், ஒவ்வொரு பெட்ரூமிலும் அட்டேச் பாத்ரூம் என ஓரளவு பெரிய வீடாக இருந்தது.

ஆர்யான், "இப்போ சமைக்க டைம் இல்ல மினி.. சோ நான் நமக்கு டின்னர்க்கு ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு வரேன்... மாடில ஃபர்ஸ்ட் ரூம்ல நம்ம திங்ஸ் வெச்சிருக்கேன்... நீ போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ மினி..‌ " என்று மொபைலை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஆர்யான் சென்றதும் மேலே தங்கள் அறைக்குச் சென்றவள் அறையை சுற்றிப் பார்த்து விட்டு பால்கனிக்கு சென்றாள்.

அங்கிருந்து பார்க்கும் போது சுற்றுப்புறம் அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது.

இரவு நேரம் என்பதால் நியுயார்க் நகரத்தின் அழகு பல மடங்கு கூடியது போல் இருந்தது.

சற்று நேரத்தில் ஆர்யான் வர சிதாரா குளித்து விட்டு இரவுடைக்கு மாறி வந்திருந்தாள்.

ஆர்யானும் சென்று குளித்து உடை மாற்றி வர சிதாரா இருவருக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் சேர்ந்து உண்டு விட்டு ஆர்யான் சொல்ல சொல்லக் கேட்காமல் சிதாராவே அனைத்தையும் கழுவுகிறேன் என கிச்சனிற்கு சென்றாள்.

ஆர்யானுக்கு ஆஃபீஸிலிருந்து கால் வரவும் அவன் தங்கள் அறைக்குச் சென்றான்.

சிதாரா எல்லாம் முடித்து விட்டு வர ஆர்யான் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

சிதாரா சென்று கட்டிலில் ஆர்யானுக்கு அருகில் அமர அவனோ சிதாராவைக் கவனிக்காது லேப்டாப்பில் மூழ்கி இருக்க அவனைப் பார்த்து விஷமமாக புன்னகைத்த சிதாரா,

"என்ன புருஷா... நான் சுயநினைவு இல்லாம இருக்கும் போது மட்டும் தான் உன் காதல வெளிப்படுத்துவியா... நேர்ல எல்லாம் சொல்ல மாட்டியா... இரு உனக்கு இன்னெக்கி நல்ல வேலை பண்றேன்..." என மனதில் நினைத்தவள் லேப்டாப்பில் இருந்த ஆர்யானின் கரத்தின் இடையினால் தன் தலையை நுழைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சிதாராவின் திடீர் செயலில் ஆர்யான் கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

சிதாராவோ வேண்டுமென்றே இன்னும் நன்றாக அவன் மார்பில் சாய்ந்து, "என்ன பண்ணிட்டு இருக்க ஜிராஃபி..." என்றாள் அப்பாவியாக.

ஆர்யானோ சிதாராவிற்கு பதிலளிக்காது வேறு உலகில் இருந்தான்.

தன்னவளின் அருகாமை தந்த அவஸ்தையில் அவன் இதயம் வேகமாகத் துடிக்க எச்சில் விழுங்கிக் கொண்டவன்,

"ஏன் கடவுளே என்னை இப்படி சோதிக்குற... நானும் எவ்வளவு நாள் தான் என்னை அடக்கி வெச்சி அமைதியா இருப்பேன்... இவ என்ன கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்றா... ஐயோ ஆர்யான்... உனக்கு வந்த சோதனை... மினி இப்போ தான் பெரிய கண்டத்துல இருந்து தப்பி வந்திருக்கா.‌‌.. ஏதாவது ஏடாகூடமா நடக்க முன்னாடி அவள தள்ளி வை ஆரு..." எனத் தனக்கே சொல்லிக் கொண்ட ஆர்யான்,

"கொஞ்சம் பிஸியா இருக்கேன் மினி.. ஆஃபிஸ் வர்க்... நீ வேணா லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு... நான் ஹாலுக்கு போய் இந்த வேலைய பார்க்குறேன்.." என்றவன் சிதாராவை விலக்கி விட்டு அவசரமாக எழ முயன்றான்.

ஆர்யானின் நிலையைப் பார்த்து சிதாராவுக்கு சிரிப்பாக வந்தது.

ஆர்யான் காணாமல் அதை மறைத்தவள் அவனை எழ விடாது பிடித்துக் கொண்டு, "நீ இங்கயே இரு ஜிராஃபி... எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு.." என்றாள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.

ஆர்யான், "ஐயோ... எனக்கு உன் பக்கத்துல இருக்க பயமா இருக்குடி... நீ புதுசு புதுசா இப்படி எல்லாம் பண்ணும் போது எங்க என் கன்ட்ரோல் மிஸ் ஆகிடுமோன்னு பயமா இருக்குடி.." என மனதில் புலம்பியவன்,

"இப்போ நீ வெளிய போக ட்ரை பண்ணா நிச்சயம் இவ இப்படி ஏதாவது பண்ணி உன்ன தடுக்க பார்ப்பா... அது உனக்கு தான் பிரச்சினை ஆரு.. எப்படியாவது அவள தூங்க வெச்சிடு..." என நினைத்தான்.

ஆர்யான் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, "நான் எங்கயும் போகல மினி... நீ தூங்கு... நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..." என்றவன் சிதாராவை ஒரு பக்கம் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு தானும் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

ஆர்யான் படுத்ததும் கண்ணை மூடிக் கொள்ள வாயை மூடிச் சிரித்தாள் சிதாரா.

சிதாரா, "உன்ன அவ்வளவு சீக்கிரம் விடுவேனா ஜிராஃபி..." என நினைத்தவள் ஆர்யானை நெருங்கி அவன் மார்பில் தலை வைத்து ஆர்யானின் கையை எடுத்து தன்னை சுற்றிப் போட்டு அவனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

கண்களை மூடி உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் செயலில் வேகமாக கண்களைத் திறந்தான்.

அவன் முகத்துக்கு மிக நெருக்கமாக சிதாராவின் முகம் இருந்தது.

சிதாரா ஆர்யானைப் பார்த்து புன்னகைக்க ஆர்யான், "எ..என்..என்னப் பண்..ற மினி.." என திக்கித் திணறிக் கேட்டான்.

உதட்டைப் பிதுக்கிய சிதாரா, "ஹக்கி பிலோவ் இல்லாம தூங்க முடியல ஜிராஃபி... அதான்.." என்றாள் மனதில் சிரித்துக் கொண்டு.

"ஓஹ்.. சரி..." என்ற ஆர்யான் அவசரமாக கண்ணை மூடி உறங்கப் பார்த்தான்.

அவன் எங்கே நிம்மதியாக உறங்க... அவன் மனையாள் விட்டாள் தானே...

ஆர்யான், "படுத்துறாளே... கன்ட்ரோல் ஆரு... கன்ட்ரோல்..." என கண்ணை மூடி அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் சிதாரா அவன் மார்பிலும் முகத்திலும் தன் விரலால் கோலம் போட்டாள்.

பெருமூச்சு விட்ட ஆர்யான், "இதுக்கு மேல முடியாது..." என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.

ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, "என்ன பண்ற..." என்றான் அழுத்தமாக.

"அ... அது... ஜி... நான்... வந்து..." என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.

சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.

ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.

❤️❤️❤️❤️❤️

மக்களே... கதை முடிவ நெருங்கிடுச்சி... இன்னும் ஒன்று அல்லது இரண்டு யூடில கதை முடிஞ்சிடும்... இவ்வளவு நாள் உங்க ஆதரவ தந்தமைக்கு நன்றி... இனியும் உங்க ஆதரவ எதிர்ப்பார்க்கிறேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க ☺️

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - அத்தியாயம் 25
ஆர்யான் தன் காதலை சிதாராவிடம் இன்னும் நேரடியாக வெளிப்படுத்தாததால் அவள் வேண்டுமென்றே ஆர்யானை சீண்டிக் கொண்டிருந்தாள்.

சிதாராவின் நெருக்கம் ஆர்யானைப் பாடாய்ப்படுத்த அதைத் தெரிந்து கொண்டவள் இன்னும் அவனை சீண்ட எண்ணி அவனின் முகத்திலும் மார்பிலும் விரலால் கோலம் போடத் தொடங்கினாள்.

சிதாராவின் செய்கையில் பெருமூச்சு விட்ட ஆர்யான், "இதுக்கு மேல முடியாது..." என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.

ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, "என்ன பண்ற..." என்றான் அழுத்தமாக.

"அ... அது... ஜி... நான்... வந்து..." என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.

சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.

ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.

ஆர்யான் அவள் இதழ்களைக் கௌவவும் அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவு விரித்த சிதாரா சற்று நேரத்திலே அவன் முத்தத்தில் மூழ்கி கண்களை மூடிக் கொண்டாள்.

இருவருக்கும் முதல் முத்தம்.

பல நாள் தவம் இருந்து கிடைத்தது போல் ஆர்யான் சிதாராவின் இதழ்களை விட மனமின்றி இருக்க சிதாராவும் அதில் லயித்து இருந்தாள்.

அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல அப்போது தான் ஆர்யானுக்கு தான் செய்யும் காரியம் புரிந்து அவசரமாக சிதாராவை விட்டு விலகியவன், "ஐ... ஐம்.. ஐம் சாரி.." என்று விட்டு பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

உள்ளங்கையை மடித்து தன் நெற்றியில் அடித்துக் கொண்ட ஆர்யான், "ஷிட்... என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க ஆரு... மினி உன்ன பத்தி என்ன நினைப்பாள்... இவ்வளவு நாள் அமைதியா இருந்தது போல இருக்க வேண்டியது தானே... ஓஹ் காட்... அவள் இன்னும் உன்ன ஃப்ரென்டா நெனச்சிட்டு இருக்கா... இன்னெக்கி தான் ஏதோ மனசு வந்து அவ வாயாலே புருஷன்னு சொன்னாள்... அதையும் கெடுத்து விட்டுட்ட... ச்சே... இப்போ நீ எப்படி அவ மூஞ்சில முழிக்க போற..." எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.

ஆர்யான் திடீரென தன்னை விலக்கி விட்டு செல்லவும் சிதாராவுக்கு அவன் மனநிலை புரிந்தது.

தனக்காகத் தான் அவன் இவ்வளவு யோசிக்கிறான் எனப் புரிந்து கொண்ட சிதாரா எழுந்து ஆர்யானை நோக்கி சென்றாள்.

ஆர்யான் பால்கனியில் நின்று தனது செயலை நினைத்து வருந்தியவன் தலையைக் கைகளால் தாங்கியபடி இருக்க,

இரண்டு மென்கரங்கள் அவன் கரங்களிற்கு இடையில் நுழைந்து அவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டன.

ஆர்யான் அதிர்ச்சியில் இருக்கும் போதே அவனை பின்னாலிருந்து அணைத்திருந்த சிதாரா, "ஐ லவ் யூ ரயன்... லவ் யூ சோ மச்..." என்றாள்.

சிதாரா திடீரென அவ்வாறு கூறவும் அதிர்ச்சியில் உறைந்த ஆர்யான் வேகமாக அவள் பக்கம் திரும்பி அவள் தோள்களைப் பற்றியவன்,

"எ...என்ன சொன்ன மினி.. திரும்ப சொல்லு..." என அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.

சிதாரா ஆர்யானின் முகம் நோக்காது கீழே குனிந்தபடி, "ஆமா ரயன்... நான் உன்ன காதலிக்கிறேன்... ரொம்ப காதலிக்கிறேன்.. இதை சொல்லத் தான் அன்னைக்கு உன்ன ரூஃப் கார்டன் வர சொன்னேன்... அதுக்காக தான் நீ எனக்குன்னு வாங்கி தந்த சேரிய கட்டிக்கிட்டு உன்ன பார்க்க வந்தேன்... ஆனா... அதுக்குள்ள..." என நிறுத்தவும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஆர்யான்,

"நிஜமா தான் சொல்றியா மினி... உனக்கு என்ன பிடிச்சிருக்கா..." எனச் சிறு பிள்ளை போல் கேட்க ஆம் எனத் தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான் சந்தோஷத்தில் வானை நோக்கி, "தேங்க் யூ கடவுளே..... என் லவ் சக்ஸஸ் ஆகிடிச்சு......" எனக் கத்தவும் சிதாரா அவசரமாக தன் கரத்தால் அவன் வாயை மூடியவள்,

"என்ன பண்ற ஜிராஃபி... பைத்தியமா உனக்கு... எல்லாரும் தூங்குற நேரம் இது..." என அவனைக் கடிந்து கொண்டாள்.

தன் வாயை மூடியிருந்த சிதாராவின் கரத்தை விலக்கிய ஆர்யான் அவள் முகத்தைக் கையில் ஏந்தி புன்னகையுடன்,

"நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா மினி... இந்த உலகத்துல இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குறது நானா தான் இருப்பேன்... அதை வார்த்தையால சொல்ல முடியாது... என் லவ்வ நீ எக்சப்ட் பண்ணுவியா மாட்டியான்னு எவ்வளவு நாள் தூங்காம யோசிச்சிருப்பேன் தெரியுமா... உன் கூட கற்பனையிலேயே நான் வாழ்ந்துட்டு இருந்தேன் மினி.... ஒவ்வொரு செக்கனும் உன்ன பத்தி மட்டுமே நெனச்சிட்டு இருப்பேன்... நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்... என்னைக்கு உன்ன காதலிக்கிறேன்னு உணர்ந்தேனோ அப்போவே எங்க வீட்டுல கூட சொல்லிட்டேன் நீ தான் அவங்க மருமகள்னு... லவ் யூடி... லவ் யூ சோ மச் மை பேபி டால்..." என்றவன் சிதாராவின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

ஆர்யான் பேசப் பேச மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.

சிதாராவின் குரல் நடுங்க, "நான் நிறைய இழந்துட்டேன் ரயன்... என்னால நிச்சயம் உன்னையும் இழக்க முடியாது... தப்பானவன காதலிச்சி அவன் தான் எல்லாம்னு நெனச்சிட்டு இருக்கிறப்போ உன்ன உடம்புக்காக மட்டும் தான் காதலிக்கிறது போல நடிச்சேன்னு ஈஸியா தூக்கிப் போட்டுட்டு போனான்... ஆரம்பத்துலயே வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்க வேண்டிய வயசுல சந்தோஷம், நிம்மதின்னு எல்லாத்தையும் இழந்துட்டு நின்னேன்... அடுத்தவங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி... திரும்ப ஒருத்தர நம்பி காதலிக்கவே பயந்தேன் நான்... ஆனா நீ... நீ வித்தியாசமானவன்... சந்தோஷம்னா என்ன... காதல்னா என்னன்னு எனக்கு புரிய வெச்ச.. வெறும் வார்த்தையால சொல்லாம உன்னோட ஒவ்வொரு செயல்லையும் அதை நீ எனக்கு உணர்த்தின... இப்போ கூட ஒரு விஷயம் என் மனசுல உறுத்திக்கிட்டே தான் இருக்கு... எந்தப் பையனுக்கா இருந்தாலும் தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சி இருக்கனும்னு ஆசை இருக்கும்... உனக்கு கூட அப்படி இருக்கும் தானே... நான் இப்போ இந்த நிமிஷம் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் ரயன்... திரும்ப உன்னையும் என்னால இழக்க முடியாது... நீ இல்லாத லைஃப என்னால நெனச்சி கூட பார்க்க முடியாது ரயன்..." என்றாள் கண்ணீர் வடிய.

அவள் உதட்டில் விரல் வைத்த ஆர்யான், "ஷ்ஷ்ஷ்... இதுக்கு மேல எதுவும் பேசாதே மினி... நீ சொல்றது உண்மை தான்... பொதுவா பசங்களுக்கு தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சு இருக்கனும்னு ஆசை இருக்கும்... எனக்கும் இருக்கு..." என்று கூறவும் சிதாராவின் முகம் வாடியது.

சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "அதான் என் ஆசை நிறைவேறிடுச்சே... என் மினியும் என்னை மட்டும் தான் லவ் பண்ணினா.. பண்ணிட்டு இருக்கா..‌.‌இனியும் பண்ணப் போறா..." என்க குழப்பமாக அவன் முகம் நோக்கினாள் சிதாரா.

அவளின் இடையை வளைத்து தன்னுடன் நெருக்கமாக நிற்க வைத்தவன் சிதாராவின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு, "என்ன அப்படி பார்க்குற... அந்த வயசுல உனக்கு பிரணவ் மேல வந்தது காதலே கிடையாது மினி... இட்ஸ் ஜஸ்ட் அன் அஃபேக்ஷன்... அது கொஞ்சம் நாள்ள காணாம போயிடும்... அந்த வயசுல உனக்கு காதல்னா என்னன்னே சரியா தெரியாது மினி... அதான் நீ அதை காதல்னு நெனச்சிட்ட... நம்ம நெருக்கமா பழகின ஒருத்தர் நம்மள விட்டு போனா நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்... அதை நம்மளால தாங்கிக்கவே முடியாது... அது போல தான் பிரணவ் உன்ன விட்டு போனதும் உனக்கு வருத்தமா இருந்தது... மத்தபடி நீ ஒன்னும் அவன லவ் பண்ணல..." என்ற ஆர்யான் சிதாராவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டிக் கொண்டு,

"என் பேபி டால் என்னை மட்டும் தான் லவ் பண்றா... அவளை விட யாராலயும் என்னை இந்த அளவுக்கு லவ் பண்ண முடியாது... நானும் அவள தவிர யாரையும் இந்த அளவு லவ் பண்ணல... பண்ண போறதும் இல்ல... அது நம்ம குழந்தைங்களா இருந்தாலும் சரி..." என்க,

ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

பின் அவனை விட்டு விலகிய சிதாரா அவன் கண்களையே காதலுடன் நோக்க ஆர்யானும் அவளைக் காதலுடன் நோக்கினான்.

ஆர்யான் மெதுவாக சிதாராவின் முகம் நோக்கி குனிய அவனே எதிர்ப்பார்க்காத நேரம் அவன் இதழ்களை சிறை செய்தாள் சிதாரா.

முதல் தடவை போல் அல்லாது அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல,

இருவரும் ஒரு முத்தத்தின் மூலமே தம் காதலை தம் இணையானவர்களுக்கு கடத்த முயற்சி செய்தனர்.

அவ் இதழ் முத்தத்தை மென்மையாக ஆரம்பித்தது என்னவோ சிதாராவாக இருந்தாலும் அதனை வன்மையாக கொண்டு சென்றது ஆர்யான் தான்.

சற்று நேரத்தில் சிதாரா மூச்சு விட சிரமப்பட மனமேயின்றி அவள் இதழ்களை விடுவித்தான் ஆர்யான்.

சிதாராவுக்கு ஆர்யானின் கண்களைப் பார்க்கவே தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது.

ஒரு கையால் அவள் இடையை வளைத்து அணைத்தவன் மறு கையால் சிதாராவின் பின்னங்கழுத்தை மெதுவாக தடவி விட சிதாராவின் காது மடல் சிவந்தது.

தன் விரலால் சிதாராவின் தாடையை உயர்த்தி தன் முகம் நோக்க வைத்த ஆர்யான் அவள் கண்களை ஆழமாக நோக்கி, "யூ ஆர் தி பெஸ்ட் திங் தெட் எவர் ஹெப்பன்ட் டு மீ மினி..." என்றான்.

சிதாரா அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க ஆர்யானுக்கோ அவள் முன்பை விட பல மடங்கு அழகாக இருப்பது போல் தோன்றியது.

சிதாராவின் கண்களில் தனக்கான காதலைக் கண்டான் ஆர்யான்.

வார்த்தைகள் ஏதுமின்றி இருவரின் பார்வையுமே தம் உணர்வுகளை வெளிப்படுத்தின.

காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவு சிதாராவை தன்னுடன் இறுக்கி அணைத்த ஆர்யான், "கடவுள் எனக்குனு கொடுத்த வரம் நீ... உன் கூட வாழ என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன் நான்... ஐ லவ் யூ மினி..." என்றவன் சிதாராவைக் கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.

ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகவும் துணையாகவும் மாறி ஓருடல் ஓருயிராக மாறினர்.

அவ் இரவு ஆர்யான், சிதாரா இருவருக்கும் இல்லறம் நல்லறமாக இனிதே ஆரம்பமானது.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - Epilogue (1)
இரண்டு வருடங்களுக்குப் பின்

பூஞ்சோலைக் கிராமம் முழுவதுமே ஒரே கொண்டாட்டமயமாக இருந்தது.

அன்று தான் ஆதர்ஷ் - லாவண்யா, அபினவ் - அக்ஷரா ஜோடிகளுக்கு திருமணம்.

சகோதரர்கள் இருவருக்கும் ஒரே மேடையிலே திருமணத்தை நடத்த வீட்டினர் முடிவு செய்திருந்தனர்.

பெண் வீட்டினருக்கும் அதில் சம்மதம் என்பதால் அவசர அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஊர்த் தலைவர் வீட்டுத் திருமணம் என்பதால் மொத்த ஊருமே ராஜேந்திரனின் வீட்டில் குழுமி இருந்தனர்.

தங்கள் வீட்டுத் திருமணம் போல மகிழ்ச்சியாக ஒவ்வொருவரும் மாறி மாறி வேலை செய்தனர்.

பூஞ்சோலைக் கிராமத்திலே திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்ததால் மணமகள்கள் ராஜேந்திரன் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களின் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இன்னொரு வீட்டில் மணமகன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு முந்தின மற்றைய சடங்குகளை செய்ய இலகுவாக இருக்கும் என்று தான் ராஜேந்திரன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

லாவண்யாவின் தாய் ஆண்டாளுக்கு உதவியாக அகிலா இருக்க வேஷ்டி சட்டை அணிந்து மிடுக்காக அங்கு வந்த ஆர்யான்,

"மினி எங்க மாம்... ஆதர்ஷ் வீட்டிலிருந்து வந்த நேரத்திலிருந்து நானும் தேடிட்டு இருக்கேன்... கண்ணுல கூட பட மாட்டேங்குறா..." என அகிலாவிடம் கேட்டான்.

அகிலா, "அதை ஏன்டா கேக்குற... ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்னு சொல்லி கல்யாண வேலை எல்லாம் ஓடி ஆடி செஞ்சிட்டு இருக்கா... காலையில இருந்தே சித்து ரொம்ப டல்லா இருக்கா... ரெஸ்ட் எடுக்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா... லாவண்யா ரூம்ல தான் இருக்கான்னு நெனக்கிறேன்.. அவங்கள தயார் பண்ணிட்டு வரேன்னு போனா... நீ போய் கொஞ்சம் பாரு..." என்க,

ஆர்யான், "சரி மாம்.. நான் போய் பார்க்குறேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க... சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணி வைங்க..." என்றவன் சிதாராவைத் தேடிச் சென்றான்.

லாவண்யா மற்றும் அக்ஷரா இருந்த அறைக்குச் சென்றவன் வெளியே நின்று கதவைத் தட்ட,

கதவைத் திறந்த அக்ஷரா ஆர்யானைக் கண்டு, "என்னண்ணா இங்க நிக்கிறீங்க... ஏதாவது வேணுமா..." என்க,

"ஆஹ்.. அது ஒன்னுமில்லம்மா... மினிய தேடித்தான் வந்தேன்... அவள் இருந்தா கொஞ்சம் கூப்பிட முடியுமா.." எனக் கேட்டான்.

அக்ஷரா, "எங்கள ரெடி பண்ண பார்லர்ல இருந்து ஆட்கள் வந்ததுமே சித்து வெளிய போய்ட்டான்னா... இங்க எங்கயாவது தான் இருப்பா.. நான் வேணா வரவா.." என்க,

"இல்லம்மா... நான் போய் பார்க்குறேன்... நீங்க ரெண்டு பேரும் ரெடியாகி இருங்க.." என்று விட்டு சென்றான்.

_______________________________________________

மணமகன் அறையில், "டேய் ஆது... இந்த வேஷ்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குதுடா... யாருடா இதெல்லாம் கண்டு பிடிச்சாங்க... பேசாம நான் ஜீன்ஸ் போட்டுக்கவா...." என அபினவ் வேஷ்டியை கையில் வைத்து திண்டாடிக் கொண்டிருக்க,

அவன் தலையில் தட்டிய ஆதர்ஷ், "குடு அதை இங்க... " என அபினவ்வுக்கு வேஷ்டியை கட்டி விட்டவன்,

"சிட்டி போய் படிச்சன்னு சொல்லி நம்ம பண்பாட மறந்துட கூடாதுடா... எங்க இருந்தாலும் அது படி நடக்கனும்.." என்க பூம் பூம் மாடு போல் தலையாட்டினான் அபினவ்.

அபினவ், "ஆர்யான் எங்கடா..." எனக் கேட்கவும்,

"எங்கள பின்னாடி வர சொல்லிட்டு காலைலயே கிளம்பிட்டான் அவன்..." எனப் பதிலளித்தான் ஆதர்ஷ்.

பின், "ஆமா.. பிரணவ் இன்னெக்கி வரேன்னு ஏதாவது உன் கிட்ட சொன்னானா.." என ஆதர்ஷ் கேட்கவும்,

"தெரியலடா... முடியாதுன்னு தான் சொல்லிட்டு இருந்தான்... நான் தான் கம்பிள் பண்ணி வர சொன்னேன்... பட் கேக்கவே இல்ல..‌ அப்புறம் ஆர்யான் பேசி வர சொன்னதும் பார்க்கலாம்னு சொன்னான்... எனக்கு என்னவோ அவன் வர மாட்டான்னு தான் தோணுது... நானும் அவன எதுவும் சொல்லல... இப்ப தான் அவன் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தி இருக்கான்... சித்துவ கண்டால் அவனுக்கும் குற்றவுணர்ச்சியா இருக்கும்... சித்துக்கும் வீணா மனசு கஷ்டமாகிடும்... அவன் வராம இருக்குறது தான்டா எல்லாருக்கும் நல்லது..." எனப் பதிலளித்தான் அபினவ்.

சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பி ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு தான் திருமணம் நடக்க இருந்தது.

செல்லும் வழியெல்லாம் இருவரும் தத்தம் துணைவியருடன் கழிக்கப் போகும் நாட்களை எண்ணி கனவில் மூழ்கினர்.

_______________________________________________

ஆர்யான் சிதாராவைத் தேடிச் செல்ல அதற்குள் சங்கர் அவனை அழைக்கவும் அவரிடம் சென்றார்.

இங்கு சிதாரா மாடியிலிருந்த அறையொன்றில் சோர்வாகப் படுத்திருந்தாள்.

காலையிலிருந்தே அவளுக்கு தலைசுற்றலும் வாந்தியுமாக இருக்க ஏதோ உண்ட உணவு தான் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தாள்.

வீட்டில் யாரிடமாவது கூறினால் அவர்களும் அவளை நினைத்து வீணாக கவலைப்படுவார்கள் என யாரிடமும் கூறவில்லை.

மூன்று நாட்களுக்கு முன் பூஞ்சோலைக் கிராமத்துக்கு வந்த நாளே சிதாராவுக்கு தோழிகளுடன் நேரம் செலவழிக்க கூறிவிட்டு ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் சென்று தங்கிக் கொண்டான் ஆர்யான்.

அன்று காலையிலிருந்தே தன்னவளின் நினைவு அதிகமாக வாட்ட ஆதர்ஷிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பி வந்திருந்தான் ஆர்யான்.

ஆனால் அவன் வந்தது சிதாராவுக்குத் தெரியாது.

லாவண்யாவையும் அக்ஷராவையும் தானே தயார் செய்வதாக அகிலாவிடம் கூறியவள் அவர்களின் அறைக்குச் செல்ல சற்று நேரத்தில் பார்லர் பெண்மணிகள் வரவும் அங்கிருந்து வெளியே வந்தாள்.

உடல் சோர்வாக இருக்கவும் சற்று தூங்கி எழும்ப நினைத்தவள் யாரும் தொந்தரவு பண்ணாமல் இருக்க மாடியிலிருந்த அறைக்குச் சென்றாள்.

படுத்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல் இருக்கவும் அவசரமாக குளியலறை நுழைந்தாள்.

குடலைப் பிரட்டிப் போடுவது போல் வாந்தி எடுத்தவள் சோர்வாக கட்டிலில் வந்தமர்ந்தாள்.

அப்போது தான் தனக்கு நாள் தள்ளிச் சென்றுள்ளது நினைவு வரவும் மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.

தன்னவனின் உயிர் தன் வயிற்றில் வளர்கிறது என நினைக்கவே சிதாராவுக்கு உடல் சிலிர்த்தது.

தங்கள் காதலுக்கு கிடைத்த பரிசு என மெதுவாக தன் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.

அவள் நினைவில் கடைசியாக ஆர்யானுடன் நியுயார்க்கில் கழித்த நேரங்கள் வந்து சென்றன.

_______________________________________________

சிதாரா தன் காதலை ஆர்யானிடம் வெளிப்படுத்திய பின் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கவில்லை.

ஒருவருக்கொருவர் காதலை அள்ளிக் கொடுத்தனர்.

சிதாராவின் படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம்‌ என்று ஆர்யான் முடிவு செய்ய அதை கடைபிடிக்கத்தான் அவன் அரும்பாடு பட்டான்.

சிதாரா வேண்டுமென்றே அடிக்கடி ஆர்யானை சீண்டிக் கொண்டிருக்க அதற்கு பதிலாக ஆர்யான் அவளின் இதழ்களுக்கு தண்டனை கொடுப்பான்.

நாட்கள் வேகமாக நகர சரியாக ஒன்றரை வருடத்தில் சிதாராவின் படிப்பு முடிந்து பட்டம் பெற்றாள்.

ஆர்யான் இந்தியாவில் சொந்தமாக கம்பனி ஆரம்பித்து நடத்த முடிவு செய்ய சிதாரா ரஞ்சித்திற்கு உதவியாக அவர் கம்பனியில் வேலை செய்ய விரும்பினாள்.

இதில் ரஞ்சித்திற்கு ஏக மகிழ்ச்சி.

தனக்குப் பின் ஆர்யானைக் கம்பனி பொறுப்பேற்க வைக்க அவர் நினைத்திருந்த போது தான் தனியாக தொழில் தொடங்குவதாக ஆர்யான் கூறினான்.

ஆர்யான் இல்லாவிடினும் தன் மருமகள் தனக்குப் பின் கம்பனியைப் பொறுப்பேற்று வழி நடத்துவாள் என அவருக்கு நம்பிக்கை பிறந்தது.

சிதாராவின் பட்டமளிப்பு விழா முடிந்து மறுநாளே இருவரும் இந்தியா செல்ல முடிவெடுத்தனர்.

விழா முடிந்து களைப்பாக சிதாரா வீட்டினுள் நுழைய அவள் பின்னே காரைப் பார்க் பண்ணி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

அதிர்ந்த சிதாரா, "டேய் ஜிராஃபி... என்னடா பண்ற... கீழ இறக்கி விடுடா... நீ எனக்கு இனிமே ட்ரடிஷனல் ட்ரஸ் போட சொன்னதும் கேட்டது தப்பா போச்சு... " என ஆர்யானின் தோள்களில் அடித்தாள்.

சிதாராவின் இதழைக் கொய்து அவள் பேச்சை நிறுத்தியவன் அறையினுள் நுழைந்த பின் தான் விடுவித்தான்.

சிதாராவை மஞ்சத்தில் கிடத்தியவன் அவளை நெருங்க,

சிதாரா, "ஜி..ஜிரா.. ஜிராஃபி... என்ன.. பண்ற..." என்க,

அவள் வாயை தன் கையால் மூடி சிதாராவின் பேச்சை நிறுத்தியவன் அவள் கண்களைப் பார்த்து, "ப்ளீஸ் மினி..." என்றான்.

ஆர்யானின் கண்களில் காதலைத் தாண்டியும் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு கொண்ட சிதாரா ஆர்யானின் கரத்தை விலக்கி விட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

அதன் பின் அங்கு பேச்சுக்கு இடமிருக்கவில்லை.

ஆர்யான் சிதாராவின் மேனியில் தன் தேடலைத் தொடர சிதாராவும் தன்னவனுக்கு எல்லாவற்றிலும் இசைந்து போனாள்.

அதன் பின் இந்தியா வந்து ஒரு வாரத்திலே ரஞ்சித்தின் உதவியுடன் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் இணைந்து சொந்தமாக ட்ரிப்பிள் ஏ க்ரூப் ஆஃப் கம்பனீஸ் (AAA GROUPS OF COMPANIES) ஐ ஆரம்பித்தான் ஆர்யான்.

மூவரின் முயற்சியாலும் அவர்களின் கம்பனி வெகு விரைவில் வளர்ச்சி அடைந்தன.
_______________________________________________

அன்றைய நாளின் நினைவில் இருந்த சிதாராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

தன்னவனிடம் இதனைத் தெரிவிக்க வேகமாக எழுந்து கொண்டவள் இன்னும் இரண்டு நாட்களில் ஆர்யானின் பிறந்தநாள் வர இருப்பது நினைவு வந்ததும் அன்றே அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என முடிவு செய்தாள்.

பின் திருமணத்துக்காக தன்னை சற்று அலங்கரித்துக் கொண்டு கீழே சென்றாள் சிதாரா.

சிதாரா இறங்கி கீழே செல்லும் போதே அவள் முன் ஆர்யான் வந்து நின்றான்.

ஆர்யான், "எங்க போன மினி... உன்ன நான் எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா... காலைல இருந்தே உன் ஃபேஸ் டல்லா இருந்ததா மாம் சொன்னாங்க... என்னாச்சு... நீ நல்லா இருக்கேல்ல..." என்றான் பதட்டமாக.

சிதாரா, "அ.. அது ஒன்னுமில்ல ரயன்... நான் நல்லா தான் இருக்கேன்... நீ சும்மா டென்ஷன் ஆகாதே... வேலை செஞ்சது கொஞ்சம் டயர்டா இருந்தது... மத்தபடி எதுவுமில்ல... பாரு எப்படி வேர்த்து ஊத்தி இருக்குன்னு... சாரி..‌ரொம்ப பயந்துட்டியா..." என தன் சேலை முந்தானையால் ஆர்யானின் முகத்தைத் துடைத்தபடி கேட்டாள்.

ஆர்யான், "என் கிட்ட சொல்லாம எங்கயும் போகாதே மினி... ஐ டோன்ட் வான்ட் டு லொஸ் யூ.." என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் முதுகை ஆறுதலாக வருடி விட்டபடி சிதாரா, "ஐம் ஓக்கே கண்மணி..." என்றாள்.

ஆதித்யா சிதாராவைக் கடத்திய நிகழ்வின் பின் ஆர்யானின் காதலால் சிதாரா அதன் தாக்கத்திலிருந்து மொத்தமாக வெளி வந்திருந்தாள்.

அவளின் மனதிலிருந்த பாரங்கள் அனைத்தும் மறைந்து அங்கு ஆர்யானும் அவனின் காதலும் மட்டுமே நிறைந்து இருந்தது.

ஆர்யான் சிதாராவுக்கு ஆறுதலாக இருந்தாலும் இன்றளவிலும் அந் நிகழ்வு அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

எங்கே மீண்டும் சிதாராவை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் எப்போதும் சிதாராவைத் தன் பார்வைக்கு எட்டிய தூரத்திலே வைத்திருப்பான்.

சிதாரா கூட அதைக் கூறி ஆர்யானைக் கேலி செய்வாள்.

ஆர்யான் அவளின் பேச்சைப் புறக்கணித்து விட்டு, "உனக்கென்ன... நீ சொல்லுவ... உனக்கு தான் எதுவுமே தெரியாம தூங்கினியே... நான் தான் நீ கண் முழிக்கிற வரைக்கும் உசுர கைல பிடிச்சிக்கிட்டு இருந்தேன்..." என்பான்.

ஆர்யான் தன் மீது வைத்துள்ள காதலில் சிதாரா திக்குமுக்காடி விடுவாள்.

சிதாரா ஆர்யானின் அணைப்பில் இருக்க அவர்களுக்கு அருகில் திடீரென இருமல் சத்தமொன்று கேட்கவும் இருவரும் அவசரமாக விலகினர்.

ஆதர்ஷ் தான் அங்கு வந்திருந்தான்.

ஆதர்ஷ் இருவரையும் கேலியாகப் பார்த்தபடி, "இன்னைக்கு எனக்கும் அபினவ்வுக்கும் தான் கல்யாணம்... ரெண்டு பேருக்கும் அது ஞாபகத்துல இருக்கும்னு நெனக்கிறேன்..." என்றான்.

ஆர்யான் அவனைப் பார்த்து இளித்து வைக்க,

"நா.. நான் வனி ரூமுக்கு போறேன்.." என அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினாள் சிதாரா.

ஆதர்ஷுக்கு தன் செல்லத் தங்கையை இப்படி மகிழ்ச்சியாகக் காண மனநிறைவாக இருந்தது.

ஆர்யானின் தோளில் தட்டி சிரித்தபடி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஆதர்ஷ்.

சில மணிநேரத்தில் சுற்றார் முன்னிலையில் அவர்கள் ஆசிர்வாதத்துடன் ஆதர்ஷ் லாவண்யா கழுத்திலும் அபினவ் அக்ஷராவின் கழுத்திலும் ஒருவர் பின் ஒருவராக மாங்கல்யத்தை கட்டி அவர்களை தம்மில் சரிபாதி ஆக்கிக் கொண்டனர்.

சிதாரா தான் நாத்தனார் இடத்திலிருந்து தன் தோழிகள் இருவருக்கும் மூன்றாம் முடிச்சை இட்டாள்.

அனைவரும் அர்ச்சதை தூவி தம்பதியினரை ஆசிர்வதித்தனர்.

ஆர்யான் ஒரு கரத்தால் தன் மனையாளை பக்கவாட்டில் அணைத்துக் கொள்ள அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.

சற்று நேரத்தில் மணமக்களை வேந்தன்யபுறத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மற்ற சடங்குகளை அங்கே முடிக்க எப்போதும் தோழிகளுடனே இருந்த சிதாராவை ஒரு வழியாகத் தனியே பிடித்துக் கொண்ட ஆர்யான்,

"மினி... நாம வேணா சீக்கிரமா இங்கிருந்து போயிடலாமா.." என்க அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் சிதாரா.

சிதாரா, "என்னாச்சு ஜிராஃபி... ஏன் போலாம்னு சொல்ற..." எனக் கேட்க,

"நம்ம மேரேஜ் அவசர அவசரமா நடந்து போச்சி... இதெல்லாம் பார்க்க கிட்ட உனக்கும் இப்படியெல்லாம் கல்யாணம் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு கவலையா இருக்கும்ல.." என்றான் ஆர்யான்.

இடுப்பில் கையூன்றி ஆர்யானை முறைத்த சிதாரா எக்கி அவன் தலையில் குட்டி விட்டு, "நான் சொன்னேனா எனக்கு கவலையா இருக்குன்னு... லூசு... லூசு..." எனத் திட்ட,

அவளைப் பாவமாய் பார்த்த ஆர்யான், "என்னடி புருஷன்னு பார்க்காம தலைல குட்டிட்டு இப்போ லூசுன்னு வேற திட்ற... புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல..." என்றான்.

சிதாரா, "பின்ன.. நீ லூசு மாதிரி பேசினா உன்ன திட்டாம கொஞ்சுவாங்களா..." என்றவள் ஆர்யான் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளவும்,

"மேரேஜ் க்ரேன்டா நடந்ததா இல்லையான்னு எனக்கு பிரச்சினையே இல்ல ஜிராஃபி... அதான் நீ என் கூட இருக்கேல்ல... அது போதும் எனக்கு..." என்றாள் புன்னகையுடன்.

லாவண்யாவையும் அக்ஷராவையும் அவர்களது புகுந்த வீட்டில் விட்டு விட்டு அனைவரும் சென்றனர்.

ராஜேந்திரன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலை இருக்கிறது என ரஞ்சித், அகிலா, ஆர்யான், சிதாரா நால்வருமே இரவோடு இரவாக சென்னை கிளம்பினர்.

சங்கரும் தேவியும் ஒரு வாரத்துக்கு பூஞ்சோலைக் கிராமத்திலுள்ள தங்கள் சொந்த வீட்டில் தங்கி விட்டு வருவதாகக் கூறினர்.

சில மணி நேரத்திலே ஆர்யானின் வீட்டை அடைய அகிலாவும் ரஞ்சித்தும் களைப்பில் உடனே உறங்கி விட்டனர்.

ஆர்யான் கால் ஒன்று பேசி விட்டு வர சிதாரா அறையில் இருக்கவில்லை.

எங்கே என்று பார்க்க குளியலறையில் சிதாராவின் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்க்க சிதாரா வாஷ்பேசனில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆர்யான் சிதாராவின் தலையைப் பிடித்துக் கொண்டவன், "என்னாச்சு மினி... ஏன் வாமிட் பண்ற..." என்றான் கவலையாக.

சிதாரா முகத்தைக் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவள், "சாப்பாடு செட் ஆகல போல ஜிராஃபி... அதோட ட்ராவல் பண்ணது..‌ அதான்.." என சமாளிக்க,

"ஆர் யூ ஷூர்... வேற எதுவும் இல்லல்ல... வேணும்னா ஹாஸ்பிடல் போலாமா..." எனக் கேட்டான் ஆர்யான்.

அவனைப் பார்த்து சிரித்த சிதாரா, "என்ன ஜிராஃபி நீ... இதுக்கெல்லாம் யாராவது ஹாஸ்பிடல் போவாங்களா... எனக்கு எதுவும் இல்ல..." என்றாள்.

ஆனால் ஆர்யானின் மனம் சமாதானம் ஆகவில்லை.

சிதாராவின் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு சிதாராவை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கைதி - Epilogue (2)
மறுநாள் காலையிலேயே ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பிச் சென்று விட அகிலாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க பாதி நேரம் அறையிலேயே இருந்தாள் சிதாரா.

வேலை காரணமாக ஆர்யான் வீட்டிற்கு வரும் போது நன்றாகவே இரவாகி விட்டது.

வீட்டினுள் எந்த சத்தமும் கேட்காததால் நேராக தன் அறைக்குச் செல்ல அறை இருட்டாக இருந்தது.

"மினி.." என அழைத்துக் கொண்டு அறை விளக்கை ஒளிர விட்டவன் சிதாரா அறையில் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினான்.

கட்டிலின் மீது ஏதோ கவர் இருக்கவும் எடுத்துப் பார்க்க அதில் ஆர்யானுக்கு ஒரு உடை இருந்தது.

அதன் மேலே நோட் ஒன்றில், "குளிச்சிட்டு இந்த ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு மாடிக்கு வா ஜிராஃபி.." என்றிருக்கவும் புன்னகைத்த ஆர்யான் குளித்து விட்டு சிதாரா வைத்திருந்த உடையைப் போட்டுக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

அவ்விடம் முழுவதும் பல வர்ண விளக்குகள் ஒளிர விட்டு பூக்களாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அதனை ரசித்து விட்டு கண்களால் சிதாராவைத் தேடிக் கொண்டு முன்னேறினான் ஆர்யான்.

நடுவில் சிறிய வட்ட மேசையொன்றிருக்க ஆர்யான் அதனை நோக்கி செல்லப் பார்க்க திடீரென, "ஸ்டாப் என்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்..." என எங்கிருந்தோ சிதாராவின் குரல் கேட்கவும் அங்கேயே நின்று கண்ணை மூடிக் கொண்டான்.

"நான் சொல்லும் வர கண்ண திறக்க கூடாது ஜிராஃபி..." என சிதாராவின் குரல் வரவும் சரி எனப் புன்னகைத்தான் ஆர்யான்.

சிதாரா, "அப்படியே கீழே குனிஞ்சு அந்த சின்ன பாக்ஸ எடு.." என்க அதன்படி செய்தான்.

"இப்போ மூணு ஸ்டெப் முன்னாடி போ..." என்கவும் கண்ணை மூடிக்கொண்டே மெதுவாக அடியெடுத்து வைத்தான்.

"கண்ண தெறக்காம கைல இருக்குற கிஃப்ட பிரி ஜிராஃபி.." என சிதாரா குரல் கொடுக்க அந்த சிறிய பரிசைப் பிரித்தான் ஆர்யான்.

"இப்போ கண்ண திற ஜிராஃபி..." என்கவும் கண்களைத் திறந்த ஆர்யான் தன் முன்னிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த கேக்கையும் தன் கையிலிருந்த பாக்ஸையுமே சில நொடிகள் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

ஆர்யானின் முன் வைக்கப்பட்டிருந்த கேக்கில், "Happy Birthday Appa.." என எழுதி இருந்தது.

அவன் கையில் இரண்டு சிவப்பு நிற கோட்டுடன் பிரெக்னன்சி கிட் இருந்தது.

கண்கள் கலங்க அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஆர்யானின் முன் வந்து நின்ற சிதாரா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு தன் சேலையை சற்று விலக்கி விட்டு ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.

சிதாரா ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைக்கவும் ஆர்யானின் கரம் நடுங்கியது.

"மி...மினி.... நான்.... அப்...அப்பா..." ஆர்யானுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

சிதாரா தன் வயிற்றின் மீதிருந்த ஆர்யானின் கரத்தை அழுத்தியவள் புன்னகையுடன் அவன் முகம் பார்த்து,

"ஆமா ரயன்... நீ அப்பா ஆக போற... இன்னும் பத்து மாசத்துல நமக்கு குட்டி பாப்பா வரப் போகுது..." என்க,

மகிழ்ச்சியில் கன்னத்தைத் தாண்டி கண்ணீர் வடிந்தோட சிதாராவின் முகத்தை ஏந்தி முத்த மழை பொழிந்தான்.

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், "நான்... நான் அப்பா ஆக போறேன் மினி... அப்பா... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா... என் பர்த்டேக்கு கிடைச்ச பெஸ்ட் கிஃப்ட் டி..." என்ற ஆர்யான் சந்தோஷத்தில் சிதாராவின் இடையைப் பிடித்து தூக்கி சுற்றினான்.

சிதாரா பயந்து, "ஏய்... விடு ரயன்... பயமா இருக்கு... தலை சுத்துது..." என்க அவளை இறக்கி விட்ட ஆர்யான் காற்று கூட புகா வண்ணம் அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவன் அணைப்பில் நின்ற சிதாரா ஆர்யானின் அணைப்பு மேலும் இறுகவும், "ரயன்... பாப்பா..." என்றாள் மெதுவாக.

"ஓஹ்.. ஆமால.. சாரி மினி..." என்ற ஆர்யான் சிதாராவின் அருகில் மண்டியிட்டான்.

அவள் வயிற்றுப் பகுதியில் இருந்த சேலையை விலக்கியவன் சிதாராவின் வயிற்றைத் தடவி தன் உயிரை உணர முயன்றான்.

ஆர்யானின் கண்கள் கலங்கி விட சிதாரா அவன் தலையை வருடினாள்.

பின் சிதாராவின் வயிற்றில் முகம் பதித்து அவளை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

சிதாராவின் உடல் சிலிர்த்தது.

சற்று நேரத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு எழுந்தான்.

சிதாரா, "ஓஹ்... உன் குழந்தைய மட்டும் தான் கிஸ் பண்ணுவியா..." என ஆர்யானை முறைத்தபடி கேட்டாள்.

"ஏன்டி... முதல்ல உன்ன தானே கிஸ் பண்ணேன்... குழந்தை உன் வயிற்றுல தானே வளருது... அப்போ கூட உன்ன தானே கிஸ் பண்ணி இருக்கேன்..." என்றான் அதிர்ச்சியாக.

"ஆமா ஆமா... இப்பவே இவ்வளவு அலுத்துக்குற... குழந்தை பிறந்திடுச்சின்னா என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்ட..." என்றாள் சிதாரா.

சிதாராவின் நெற்றியோடு நெற்றி முட்டிய ஆர்யான், "நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என்னோட முதல் குழந்தை... உன் இடத்த யாருக்குமே கொடுக்க மாட்டேன் நான்... அதே போல உன் மேல நான் வெச்சி இருக்குற அன்பும் ஒவ்வொரு நொடியும் அதிகரிச்சிட்டே போகுமே தவிர ஒரு நாளும் குறையாது..." என்றான் புன்னகையுடன்.

பின் இருவரும் சேர்ந்து கேக் வெட்டி ஆர்யானின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

மறுநாள் ஆர்யான் அனைவரிடமும் சிதாரா கர்ப்பமாக இருப்பதைச் சொல்லவும் அகிலாவும் ரஞ்சித்தும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.

ஒரு வாரம் தங்கி விட்டு வருவதாகக் கூறிய சங்கரும் தேவியும் உடனேயே கிளம்பி சிதாராவைக் காண வந்தனர்.

சிதாராவை அணைத்துக் கொண்ட சங்கர், "இப்ப தான் உன்ன முதல் தடவ என் கைல தூக்கினது போல இருக்கு சித்தும்மா... ஆனா இன்னைக்கு நீயே ஒரு குழந்தைக்கு தாயாக போற..." என்றார்.

தேவி, "எப்போவும் என் கிட்ட வம்பு வளர்த்துட்டே இருப்பேல்ல... என் பேரப்புள்ள பிறந்ததும் எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன வெச்சி செய்யும் பாரு சித்து..." என்க அனைவரும் சிரித்தனர்.

சிதாரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதன் பின் வந்த நாட்களில் அகிலாவும் ரஞ்சித்தும் சிதாராவை எந்தவொரு வேலையையும் செய்ய விடவில்லை.

ஆர்யான் ஒரு படி மேலேயே சென்று சிதாராவின் கால்கள் தரையில் படக் கூட அனுமதிக்கவில்லை.

சிதாரா ஏதாவது மறுத்துக் கூறினால் வேண்டுமென்றே, "நான் ஒன்னும் உனக்காக பண்ணல... என் குழந்தை கஷ்டப்படும்னு தான் பண்றேன்.." என சீண்டுவான் ஆர்யான்.

அதற்கு சிதாரா கோவித்துக் கொண்டு சென்றால் அவள் பின்னேயே சென்று கொஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்துவான்.

சிதாராவின் முகம் கொஞ்சம் சுருங்கினால் கூட ஆர்யானின் மனம் வலிக்கும்.

எல்லா விதத்திலும் சிதாராவை அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டான் ஆர்யான்.

நாட்கள் மாதங்களாக வேகமாகக் கடக்க ஏழாவது மாதத்தில் ஊரையே கூட்டி கோலாகலமாக வளைகாப்பை நடத்தினர்.

பின் சங்கரும் தேவியும் சிதாராவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பார்க்க ஆர்யானை விட்டு வர மறுத்தாள் சிதாரா.

வேறு வழியின்றி ஆர்யானும் சிதாராவுடன் அவர்களது வீட்டிற்கு சென்றான்.

அன்று இரவு சிதாரா தன் கையிலிருந்த வளையல்களை ரசித்தபடி இருக்க அவளுக்கு பால் கொண்டு வந்த ஆர்யான் அதை சிதாராவிடம் கொடுத்து விட்டு அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

பின் வீங்கியிருந்த அவள் கால்களை மெதுவாகப் பிடித்து விட,

சிதாரா, "என்ன பண்றடா.. இதுவும் உன் குழந்தைக்காக தானா..." எனப் புன்னகையுடன் கேட்டாள்.

சிதாராவின் காலில் முத்தமிட்ட ஆர்யான், "இல்ல... இது என் பேபி டாலுக்காக... என் குழந்தைய பெத்தெடுக்க தான் அவள் இவ்வளவு கஷ்டப்படுறாள்... " என்றான்.

ஆர்யானின் மடியிலிருந்து தன் காலை எடுத்த சிதாரா அவன் மடியில் அமர்ந்து ஆர்யானை அணைத்துக்கொண்டு, "லவ் யூ ரயன்... நீ என் லைஃப்ல கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனும்..." என்க,

"ம்ஹ்ம்... இப்படி ஒரு தேவதை கிடைக்க நான் தான் அதிஷ்டம் பண்ணி இருக்கனும்.." என்றான் ஆர்யான்.

சிதாராவின் பிரசவ நாள் நெருங்க நெருங்க ஆர்யானுக்கு பயமாக இருந்தது.

சிதாரா தான் அவனை சமாதானப்படுத்துவாள்.

அன்று ஆர்யான் லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்கவும் சிதாரா வர அதனை மூடி வைத்தவன் சிதாராவின் பக்கம் கரம் நீட்டி அழைத்தான்.

சிதாரா வந்து அவன் மடியில் அமரவும், "என்னாச்சு மினி... ஏன் டல்லா இருக்க... ஏதாவது வலி இருக்கா... ஹாஸ்பிடல் போலாமா..." எனப் பதட்டமாகக் கேட்க,

"இல்ல.. எனக்கு என் ஜிராஃபி கூட பேசணும் போல இருக்கு... இந்த ரயன் கூட இல்ல.." என்க,

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "சரி சொல்லு... உன் ஜிராஃபி கூட என்ன பேசணும்.." எனக் கேட்டான்.

ஆர்யானின் கரங்களை எடுத்து தன்னை சுற்றி பிடித்துக் கொண்ட சிதாரா, "நான் என் ஜிராஃபிய ரொம்ப மிஸ் பண்றேன்... அவன் கூட வாயடிக்கிறது, சண்டை போடுறது எல்லாத்தையும் மிஸ் பண்றேன்... இந்த ரயன் ரொம்ப மோசம்... குழந்தை வரப் போறது தெரிஞ்சதுல இருந்து எப்பப் பாரு குழந்தைய பத்தியே பேசிட்டிருக்கான்... குழந்தைக்காக தான் எல்லாம் பண்றன்னு சொல்லி சொல்லி பண்றான்... எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு... ஆனா என் ஜிராஃபி அப்படி இல்ல... அவன் என்னை பத்தி மட்டும் தான் திங்க் பண்ணுவான்... எனக்கு அப்புறம் தான் அவனுக்கு மத்தவங்க... என் கூட சண்டை போடுவான்... ஆனா கேரும் பண்ணுவான்... எனக்கு அதான் பிடிச்சிருக்கு..." என்றாள்.

"ஓஹ்... ரொம்ப தப்பாச்சே மினி... ஆனா எனக்கு தெரிஞ்சி உன் ரயன் உனக்காக தானே எல்லாம் பண்றான்... சும்மா உன் கிட்ட விளையாட குழந்தைக்காக பண்ணுறன்னு சொல்றானா இருக்கும்.." என ஆர்யான் கூற,

"எனக்கு தெரியும் அது... ஆனா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு... நான் ரயன் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கேன்... குழந்தை கிட்ட கூட அவன விட்டு கொடுக்க விரும்பல.. பேச்சுக்கும் சரி..." என்றாள் சிதாரா.

ஆர்யான், "சரி.. இனிமே ரயன் அப்படி பண்ண மாட்டான்... உனக்கு அவன் மேல கோவம் இருந்தா என் கிட்ட அதான் உன் ஜிராஃபி கிட்ட சொல்லு... நான் அவன பனிஷ் பண்றேன்.. ரயனுக்கு அவனோட பேபி டால் தான் எல்லாமே..." என்கவும் புன்னகைத்தாள் சிதாரா.

பின், "ஆனா எனக்கொரு டவுட் மினி... ஜிராஃபி கூட நீ இப்படி மடில எல்லாம் உக்காந்து கட்டிப் பிடிச்சிக்கிட்டு பேசுவியா என்ன.." என நக்கலாக ஆர்யான் கேட்கவும்,

அவனை இன்னும் இறுக அணைத்த சிதாரா, "நான் என் ஜிராஃபி கூட எப்படி வேணாலும் இருப்பேன்... மடில உக்காருவேன்... கட்டிப் பிடிப்பேன்... முத்தம் கொடுப்பேன்... ஏன்னா அவன் என்னோட ஜிராஃபி... என்னோட ரயன்... எனக்கு மட்டும் தான் அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு..." என ஆர்யானை முத்தமிட்டபடி கூறினாள் சிதாரா.

சிதாராவைப் பார்த்து சிரித்த ஆர்யான், "அதுவும் சரி தான்... உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு... இந்த ஆர்யான் எப்பவோ மொத்தமா சிதாராவோட ப்ராப்பட்டி ஆகிட்டானே... அதனால நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ..." என்றான்.

இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருக்க திடீரென சிதாராவின் முகம் மாறியது.

பிரசவ வலி வந்து, "ரயன்....." எனக் கத்தினாள் சிதாரா.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் முகம் சுருங்கவும் பயந்தவன், "எ.. என்னாச்சு மினி..." என்க,

அடிவயிற்றைப் பிடித்துக் கொண்ட சிதாரா, "ஆஹ்..... முடியல ரயன்... வலிக்கிது.." என்றாள் அழுதபடி.

அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்ட ஆர்யான், "அழாதே மினி... சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம்..." என்றவன் சங்கரை எழுப்பி தகவல் கூறி தங்களைத் தொடரக் கூறி விட்டு யாருக்கும் காத்திருக்காமல் மருத்துவமனை கிளம்பினான்.

சிதாராவை உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க அவளோ ஆர்யானின் கையை விடவேயில்லை.

பின் ஆர்யானும் சிதாராவுடனே ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான்.

சங்கரும் தேவியும் மருத்துவமனைக்கு வந்து ஆர்யானின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களும் உடனே அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்பினர்.

நேரம் செல்ல செல்ல சிதாராவிற்கு வலி அதிகரிக்க ஆர்யானின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

சிதாராவின் பிடியில் ஆர்யானின் கை வலித்தாலும் தன்னவள் அதை விட அதிகமாக கஷ்டப்படுகிறாள் என சிதாராவுக்கு சமாதானம் கூறினான்.

சில மணி நேரத்திலே தன் தாயை அதிகம் துடிக்க வைக்காமல் ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்வப் புதல்வி பூமியில் ஜனித்தாள்.

குழந்தையைப் பிரசவித்ததுடன் சிதாரா மயங்கி விட குழந்தையைக் கூடப் பார்க்காமல் கண்ணீருடன் சிதாராவின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்.

நர்ஸ் குழந்தையை வெளியே நின்றிருந்த தேவியின் கையில் கொடுக்க அவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தன்னவள் கண் விழிக்கும் வரையுமே ஆர்யான் சிதாராவின் அருகிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டான்.

குழந்தையைக் கூட பார்க்க மறுத்து விட்டான்.

சற்று நேரத்திலேயே சிதாரா மெதுவாகக் கண் விழிக்க, "மினி... நீ நல்லா இருக்கேல்ல.." என்றான் ஆர்யான்.

உடல் சோர்வாக இருந்தாலும் அதையும் மீறி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா, "குழந்தை எங்க ரயன்..." எனக் கேட்டாள்.

தேவியும் சங்கரும் குழந்தையுடன் அறைக்குள் நுழைய ஆர்யான் கைகள் நடுங்க தன் மகளை கரத்தில் ஏந்தி முத்தமிட்டான்.

சிதாராவை கட்டிலில் சாய்த்து அமர வைத்தவன் குழந்தையை அவளின் முகத்தருகே கொண்டு செல்ல,

தாயானவள் தன்னவனின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.

ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தி மறு கரத்தால் சிதாராவை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

_______________________________________________

மூன்று வருடங்களுக்கு பின்

தன் விளையாட்டு சாமான்களை எல்லாம் கடை பரப்பி விளையாடிக் கொண்டிருந்த அந்த மூன்று வயது குழந்தையின் காதில் சிதாரா ஏதோ கூறவும் அதுவும் தலையாட்டி விட்டு ஆர்யானிடம் சென்றது.

ஆர்யான் லேப்டாப்பில் தன் ஆஃபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனிடம் சென்ற குழந்தை ஆர்யானின் சட்டையைப் பிடித்து இழுத்தது.

லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றியவன் கீழே பார்க்க,

ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்ல மகள் பிரக்யா நின்றிருந்தாள்.

அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்ட ஆர்யான், "என்னடா குட்டி... ஏதாவது வேணுமா.." என்றான்.

அவனிடம் ஆமென்று தலையசைத்த குழந்தை, "ப்பா... பெகிக்கு தம்மிப் பாப்பா மேணும்..." என மழலை மொழியில் கேட்டது.

அறைக்கு வெளியே மறைந்து நின்று தங்களை அவதானித்துக் கொண்டிருந்த மனையாளைக் கண்டு கொண்டவன் குழந்தையிடம், "உங்க அம்மா தான் பிரகி குட்டி கிட்ட இப்படி கேக்க சொல்லி அனுப்பினாளா..." என்க,

பிரக்யாவும் ஆம் எனத் தலையசைத்தாள்.

வெளியே நின்றிருந்த சிதாரா மகள் தன்னை மாட்டி விட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.

குழந்தையைக் கீழே இறக்கி விட்ட ஆர்யான், "அப்பாவுக்கு உன்ன விட பெரிய குழந்தை ஒன்ன கவனிக்க வேண்டி இருக்கு... நீ போய் விளையாடுடா... அந்தக் குழந்தைக்கு பனிஷ்மன்ட் கொடுத்துட்டு அப்பா பிரகி குட்டியோட விளையாட வரேன்.." என்றதும் குழந்தை சென்றது.

உதட்டை சுழித்தபடி கோவமாக அறைக்குள் நுழைந்த சிதாரா ஆர்யானிடம், "நீ ரொம்ப மோசம் ரயன்... உனக்கு மட்டும் பொண்ணு வேணும்... இதே நான் உன்ன போல பையன் கேட்டா முடியாதுன்னு சொல்ற... போ... நான் உன்னோட பேச மாட்டேன்... என் ஜிராஃபி கிட்டே கேட்டுக்குறேன்... அவன் எனக்காக என்ன வேணாலும் பண்ணுவான்..." என சினுங்கினாள்.

அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட ஆர்யான், "நீ இன்னைக்கு ஜிராஃபின்னு பேசி எவ்வளவு ஐஸ் வெச்சாலும் நீ சொல்றது நடக்காது... நமக்கு பிரக்யா மட்டும் போதும் மினி... அன்னைக்கு நீ வலில துடிக்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா... அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. நீயும் நம்ம பொண்ணும் மட்டும் எனக்கு போதும் மினி... திரும்ப நீ வலில துடிக்கிறத பார்க்குற தைரியம் எனக்கில்ல.." என்கவும்,

அவன் பக்கம் திரும்பிய சிதாரா ஆர்யானின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, "நீ நெனக்கிறது போல எதுவும் இல்ல ரயன்... தாய்மைன்னு சொல்றது வரம்... ஒரு பொண்ணுக்கு பிரசவம்கிறது மரணத்தை நெருங்கிட்டு வரது தான்... ஆனா அதையும் தாண்டி அந்தக் குழந்தையை பெத்து எடுக்க அவள் படுற கஷ்டம் அந்தப் பிஞ்சிக் குழந்தையோட முகத்த பார்த்ததும் எதுவும் இல்லாதது போல தோணும்... அந்தக் குழந்தையோட ஒற்றை சிரிப்புக்காகவே ஒரு தாயால எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக்க முடியும்... ப்ளீஸ் கண்மணி... எனக்கு குட்டி ரயன் வேணும்... ஓக்கே சொல்லு.. ப்ளீஸ்... ப்ளீஸ்..." எனக் கண்களை சுருக்கிக் கெஞ்ச ஆர்யானின் மனம் இளகியது.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து சம்மதமாக புன்னகைக்கவும் மகிழ்ந்த சிதாரா அவன் இதழை சிறை செய்தாள்.

அதன் பின் சிதாராவின் மீதான ஆட்சி ஆர்யானின் வசம் சென்றது.

❤️❤️❤️சுபம்❤️❤️❤️

- Nuha Maryam -
 
Top Bottom