உயிரினை மனம் தேடுதே - இரண்டாவது அத்தியாயம்
உச்சி நேரத்தில் பகலவன் தாக்கம் கடுமையாக இருக்க , இங்கே நாயகியவளோ பரபரப்புடன் தயாராகி கொண்டிருந்தாள்.
"மஹி! கிளம்பிட்டியா? நேரமாச்சு புள்ள, கடைக்கு லோடு வந்துடும் , வா! வந்து சாப்பிடு… அம்மா! அம்மா! வாம்மா வந்து சாப்பாடு எடுத்து வை, நாங்க கிளம்பனும்ல…" என்று கூறிக் கொண்டே சாப்பிட அமர்ந்தான் முகிலினியன்.
"டேய்! நீயும் ஏன்டா வேலைக்கு போகனும்னு அடம் பிடிக்கிற, நான் தான் போறேன்ல! முன்னாடி விட இப்ப அதிக சம்பளம் இப்ப வேலைக்கு போற இடம் கூட பக்கம் தான் இன்னும் என்னடா பண்ணட்டும் நான், ஏன் இப்படி சொல்லற சொல்லு கேட்காம இருக்க…" என்று கோபமாக பேசிவிட்டு உணவை தவிர்த்து வெளியேற துளசி கைப்பிடித்து நிறுத்தினார்.
துளசி " அவன் உன் சுமை குறைக்கனும்னு நினைக்கிறான் நீ ஏன் பாப்பா திட்ற?" என்க, "அவன்தான் புரியாம படிக்கிற வயசுலயே வேலைக்கு போறேன்னு நிக்கிறான்னா நீயும் ஏம்மா, இந்த வருஷம் அவன் காலேஜ் இரண்டாவது வருஷம் அதாச்சும் நியாபகம் இருக்கா, உங்க இரண்டு பேருக்கும், எப்பவுமே என் பேச்சுக்கு மதிப்பு இருக்குறது இல்ல இந்த வீட்டுல அப்புறம் நான் ஏன் பேசனும்? " என்று படபடத்தாள் மஹி.
" அக்கா ஒன்னு புரிஞ்சுக்க, இப்ப என்ன அக்டோபர் மாசம் தானே! தீபாவளி வரைக்கும் தான் இங்கே வேலை பார்ப்பேன்க்கா, நான் சூப்பர் மார்க்கெட்டுக்கு தானே வேலைக்கு போறேன், ஐடி கம்பெனிக்கு இல்லையே, இங்கே அக்ரிமெண்ட் எதும் இல்லை , சோ நோ டென்ஷன் மை ஸ்வீட் சிஸ்டர் சிரி பார்ப்போம்" என தமக்கையை சமாதான படுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான் அந்த இல்லத்து சின்ன தலைவர்.
இருவரும் உணவு உண்டு முடித்து கிளம்பினர்… தன் வண்டியிலேயே அவனை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இறக்கி விட்டு தான் வேலை செய்யும் நிறுவனம் சென்றாள் மஹி.
ஓமேகா ஹெல்த்கேர் என்ற பெயர் பதாகையை பார்த்தவாறே, கட்டிடத்துக்குள் வாகனத்தை செலுத்தினாள்… தன் வண்டியை நிறுத்தி ஹெல்மெட்டை கலட்டி வைத்துவிட்டு திரும்ப, வந்து நின்றான் அவளோடு பணிபுரியும் கவின்ராஜ். கவின்ராஜ் பெயருக்கு ஏற்ற அழகும் கம்பீரமும் நிறைந்தவன்... ஆறு அடி மூன்று அங்குல உயரத்துடன், டக் இன் செய்த பார்மல் பேண்ட் சட்டையில் வந்து நின்றான் அவன்.
கவின் அறிமுகம் பார்த்துடுவோம்
இரு தங்கைகளின் தமையன், தாய், தந்தை என் சிறு கூடு தான் இவர்களின் வீடு.
தந்தை - கதிரவன்
தாய் - அபிராமி
தங்கைகள்-- அனுசியா , சரண்யா
அவனை சட்டைச் செய்யாது நடக்க, பின்னாலே ஓடி வந்தான் கதாநாயகன்… "மஹி! மஹி! நில்லுங்க!!! ப்ளீஸ்…! என்னை பாருங்க… " என்றவாறே வழி மறிக்க, " சார்! ப்ளீஸ்! உங்க வயசுக்கு தகுந்த மாதிரி நடக்கலனா கூட பரவாயில்லை, இந்த ஆபிஸ்ல நீங்க வேலை பார்க்கிறீங்க! அந்த போஸ்டிங்க்காவது மரியாதை கொடுங்க சார்..! இப்படி என் பின்னாடியே வரீங்களே? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க???" என சொல்லி நடந்தாள்.
அவள் சென்ற பாதையையே பார்த்திருந்தவன் தோள் மீது ஒரு கரம் தீண்ட திரும்பினான், " டேய் அண்ணா அதான் அவங்க செட் ஆகலயே பின்ன ஏன் இப்படி தொந்தரவு பண்ற?" என்றான் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் அவனை விட ஆறு வயது இளையவனுமான மகாதேவன்.
" டேய் ! நீ வேற ஏன்டா, ஆமா என்னா சொன்ன டேய் அண்ணாவா நீ இருக்க சைஸுக்கும் உன்னோட வயசுக்கும் எனக்கு சமமா பண்றேன் பாத்தியா அதான் டா நீ பேசுவ, இது மட்டுமா? இன்னும் பேசுவ உன் அக்காவ சொல்லனும்.
"அண்ணா நீங்க தான் என் அக்காட்ட உதவி கேட்டுருக்கீங்க அவங்க இல்லை அது ஞாபகம் இருக்கட்டும்… சரி நாளைக்கு காலையில் ஐஞ்சு மணிக்கு ரெடியா இருங்க ஓகே வா?" என்று இவனையும் இழுத்துக்கொண்டு லிப்ட் நோக்கி நடந்தான் மகா என்ற மகாதேவன்.
லிப்ட்டில் ஏறி மூன்றாம் தளம் வந்து அவரவர் வேலையில் மூழ்க, இங்கே நம்ம தலைவர் மட்டும் மஹியை பார்த்துக்கொண்டு இருக்க, அங்கே வந்த மேனேஜர் "மிஸ்டர். கவின் , மிஸ்டர். கவின், என்ன பண்றீங்க? மீட்டிங் அரேஞ்ச் பண்ண சொன்னேன்ல பண்ணியாச்சா?" ,
" ஆச்சு பாஸ்! ஒரு டீம் லீடர் பொண்ணு கல்யாணம் ஆகி போச்சுல்ல, அதான் சத்யா பொண்ணு அவங்களுக்கு பதிலா இந்த புது ப்ராஜக்ட்ல அந்த டீம்க்கு வேற ஒரு லீடர் போடுறேன்னு சொன்னீங்க பாஸ், இன்னிக்கு ஞாபகப்படுத்த சொன்னீங்க அதான் சொன்னேன்" என்றவாறே தொடர்ந்தான், " சொன்னீங்கனா நான் பிரமோஷன் ஆர்டர் ரெடி பண்ண சொல்லிடுவேன் பாஸ்" என பேசி முடித்தான் கவின்.
கவின்ராஜ் MBA படித்து விட்டு இந்த அலுவலகத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜராக வேலை பார்ப்பவன், முதல் நேர்காணலிலேயே வெற்றி கண்டு நேரடியாக இந்த பதவிக்கு வந்தவன்,
மேனேஜர் " நீங்க ஆர்டர் ரெடி பண்ணுங்க கவின், நான் ஜி.எம் கிட்ட போன் பேசிட்டு வரேன் , நீங்க ஸ்டாப்ஸ் எல்லாரையும் கான்பிரன்ஸ் ரூம்க்கு வர சொல்லுங்க கவின். போங்க நான் வரேன்" என்று விட்டு நகர்ந்தார்…
இவன் மேனேஜர் P.A விடம் சென்றவன் பெயர் போடாம பிரமோஷன் ஆர்டர் ரெடி பண்ண சொல்லிவிட்டு அவன் கேபினுக்கு வந்தவருக்கு அலைபேசி ஒலிர அதை எடுத்து பார்த்தவனின் முகம் புன்னகையில் மிளிர்ந்தது..
போனை அட்டன் செய்து காதில் வைப்பதற்குக்குள் அதில் குரல் அலரியது!! " அண்ணா நீ எப்ப வர ? என்க, " ஹேய் பாப்பா வரேன் மா இப்ப தானே ஆபிஸ் வந்தேன் வந்து மூனு மணி நேரம் தான் ஆச்சு நைட் இரண்டு மணிக்கு தான் வேலை முடியும், நானும் மகாவும் வந்துடுறோம்" என்றான் கவின்.
" சரி அண்ணா நாளான்னைக்கு எனக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கு தானே அப்புறம் மூனு நாளைக்கு லீவு போட்டுட்ட தானே சொல்லு அண்ணா சொல்லு, அப்புறம் உன் ஆளு வேலைக்கு வந்தாச்சா இன்னிக்காவது எதாவது பேசுனாங்களா உன் ஆளு?" என கேட்டாள் அவள்.
"அம்மா ! தெய்வமே! லீவு போட்டாச்சு, நாளைக்கு காலையில் ஐஞ்சு மணிக்கு கிளம்பிடுவோம், என் ஆளு வேலைக்கு வந்தாச்சு, அப்புறம் எப்பவும் போல அதே வசனம், அதே மாடிலேஷன், எனக்கும் சேம் பிளட் போதுமா, அப்புறம் நான் மட்டும் தான் மகா கூட வரேன்… வீட்டுல யாரும் வரல ஓகே தானே, சரி இப்ப அண்ணனுக்கு மீட்டிங் அதனால அப்புறம் பேசுவோம், நீ அர்ஜீன் மாப்ளட்ட கடலை போடு, சாப்பிட்டு தூங்கு வைக்கவா?" என கேட்க " சரி !சரி ! வைங்க , போய் மீட்டிங்க பாருங்க, டாட்டா , பாய்" என்று அலைபேசியை அணைத்தாள் அவள்…
ஒரு மணிநேரம் கடக்க மீட்டிங் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, மேனேஜர் பேச தொடங்கினார்…
" போன வாரம் நம்ம ஆபிஸ்ல வேலை பார்த்த சத்யா பொண்ணுக்கு கல்யாணம் ஆகி போய்ட்டாங்க அவங்க வேலைக்கு வரலனு ரெசிகினேஷன் கொடுத்துட்டு போய்ட்டாங்க இப்ப அதே இடத்துக்கு இன்னொரு ஆள் போடனும் அடுத்த புது பிராஜெக்ட்ட மானிட்டர் பண்ணனும், சோ யாரை போடலாம்னு பண்ண டிஸ்கசன் முடிஞ்சது, ஜி.எம் சார் மிஸ்.மஹிமா வ போடலாம்னு சொல்லிருக்காங்க…
இதை கேட்டதும் சிலையாகி போனாள் மஹிமா...
"மஹி உன்னைத்தான் டி உனக்குத்தான் பிரமோஷன் கிடைச்சுருக்கு போ கூப்பிடுறாங்க" என்றாள் அவள் தோழி ப்ரியா.
அவள் வார்த்தை கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் மேனேஜர் அருகே சென்றாள்..
"வாங்க மிஸ்.மஹிமா காங்ராட்ஸ்" என கைக்குலுக்க கை நீட்டினான் கவின்… அவனுக்கு ஒரு முறைப்பை தந்து விட்டு மேனேஜரிடம் சென்றவள், " பாஸ் ! நான் இங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகுது, அதோட நான் சிங்கள் டிகிரி தான் படிச்சுருக்கேன் அதுவும் கரஸ்ல எனக்கு எப்படி பாஸ் பிரமோஷன் குடுப்பீங்க " என வினா எழுப்ப.
"மஹிமா நீங்க எவ்வளவு நாள் வேலை பாக்குறீங்கனு முக்கியம் இல்லை, எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை பார்க்கிறீங்கங்கிறது தான் முக்கியம் , சோ போங்க போய் அடுத்த பிராஜெக்ட் வேலையை ஆரம்பிங்க வாழ்த்துக்கள்!! என்றுரைத்துவிட்டு அவர் சென்றார்.
"மச்சி ட்ரீட்டு டா " என கவின் நண்பன் ஸ்ரீனி கேட்க, " ஏன் அதை உன் தங்கச்சிட்ட கேட்க வேண்டியது தானே."
" அதில்லைடா நீதானே இதுக்கு ரெக்கமண்ட் பண்ண அவள அதான் உன்கிட்ட கேட்டேன்" என்று இவனின் குட்டை உடைத்து சென்றான் அவன்.
"ஈஈஈ" என சிரித்தவாறே ஓடியே விட்டான்.
இரவு ஒன்பது மணி ஆக முகி வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்கு வந்தவன் முகம் கைக்கால் கழுவி சாப்பிட அமர்ந்தவன்" ம்மா! எங்கே அவரை காணோம் உன்ற பிருஷர்" எனக் கேட்க…
துளசி" பேசாம சாப்பிடு எப்ப பாரு அவரை திட்டுறதே உனக்கு வேலையா போச்சு அவரை குறை சொல்லலனா உனக்கு தூக்கம் வராதே" என கடிந்தார்…
சாப்பிட்டு விட்டு எழுந்தவன் " நான் படுக்குறேன், ஒரு வேளை ! அவர் குடிச்சுட்டு வந்தார்னா என்னை கூப்பிடும்மா நீ பாட்டுக்கு தனியா போராடாத சரியா" என்று சொல்லி விட்டு ஹாலில் பாய் விரித்து படுத்துக்கொண்டான்…
இரவு பதினொரு மணியாக தண்ணி குடிக்க எழுந்தவன் " ம்மா இன்னுமா அவர் வரல?" என வினவ,
" ஆமாடா இன்னும் வரல எப்பவுமே ஆறு மணிக்கே வந்துடுவாரு இன்னிக்கு பாரு இவ்வளவு நேரம் காணோம்" என்று பயத்தில் பேசினார் துளசி
"சரி இரும்மா நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று சட்டை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான், அவன் வாசலை கடக்க எதிரே சரவணன் வந்தார்.
" ஏங்க! எங்கே போனீங்க எவ்வளவு நேரம்? எப்பவும் ஆறு மணிக்கே வந்துடுவீங்களே இன்னிக்கு என்ன இவ்வளவு நேரம் ஆச்சு " என்று கண்களாளே கணவனை கவனித்தார் துளசி.
"எனக்கு ஒன்னும் இல்லை மா, ஆமா! நீங்க ஏன் இவ்வளவு நேரம் தூங்காம இருக்கீங்க, என்னாச்சு" என்று கேள்வி கேட்டார்.
" ம்மா என்னத்தான் நினைச்சுட்டு இருக்காரு இவரு, வந்ததும் லேட்டா வந்ததும் இல்லாம நம்மல குறை சொல்றாரு… ம்மா! அவருக்கு சாப்பாடு போடு நாளைக்கு காலேஜ் வேற போகனும்… நான் போய் தூங்குறேன்" என்றவாறே திரும்பியவனை அழைத்தார் சரவணன்.
" அய்யா ! முகிலா இங்கே பாரு !!! இந்தாய்யா" என தன் கையில் இருந்த இரண்டு ஐநூறு ரூபாய்
நோட்டுக்களை அவன் கையில் திணிக்க, அவனோ முழித்தான்.
" என்ன இது?" எனக் கேட்டவனின் முகத்தை நோக்கி, "அப்பனா என் கடமைய செய்ய போறேன்! இனிமேல் இது அதுக்கு முதல் படி." என்றவர் " துளசி மா நான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா? கேட்கவும்," ஙே" என விழித்தவர்… இவரின் கேள்வியில் உயிர் கொள்ள , "ஆங் ! சாப்பிடல மாமா நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தேன்" என்றார் துளசி.
"இனி நேரமாக்காம சீக்கிரத்தில் சாப்பிட்டுரு சரியா, இப்ப வா நான் ஊட்டி விடுறேன்" என மனைவியின் கரம் பற்றி இழுத்து சென்றவர் ஊட்டி விட்டு எழுந்தவர் கைக்கழுவி வர பாத்திரம் ஒதுக்கி கொண்டிருந்த மனைவியை அழைத்து அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டார்.
இதை அனைத்தும் பார்த்து கொண்டிருந்த முகிலனோ அதிர்ச்சியுடனும் , ஏதோ ஒரு திருப்தியுடனும் உறங்கி போனான்.
கணவனின் செயல் புரியாது
குழம்பி இருந்த துளசியும், மடியில் படுத்திருந்த தன்னவரின் கேசம் கோத,
"என் மேல எதுவும் கோபமா துளசி?" என வினாக்களை தொடுக்க ஆரம்பித்தார், "நான் நல்ல அப்பா இல்லையா, நம்ம பொண்ணு யாரையும் விரும்புதா" என கேள்வி கணைகளை தொடுத்து கொண்டே இருக்க.
கணவனின் கேள்வியின் வாயிலாக ஒன்றை புரிந்து கொண்டவர், "காலையில பேசிப்போம் இப்ப தூங்குங்க" என கூறி படுத்துக்கொண்டவர் அப்படியே உறங்கியும் போனார்…
விடியற் காலையில் தனது அலுவலகத்துக்கு வெளியே வந்தவள் பேருந்தை பிடிக்க நடந்தாள்… "முதல்ல இன்னொரு வண்டி வாங்கனும் சீக்கிரம், இல்லைனா இந்த பையன வேலைய விட்டு நிக்க சொல்லனும். இந்த மூனு வருட நம்ம குடும்ப வளர்ச்சில இந்த வண்டி ஒன்னுதான் உருப்படியானது, அதையும் வாங்கலனா இந்த வேலைக்கு வர, போக என்ன பண்ணிருப்பேன்."என புலம்பியவாறே உறையூர் பேருந்து நிற்குமிடம் நோக்கி நடந்தாள்.
பேருந்து நிலையத்திற்கு வந்தவள் பேருந்து பிடித்து ஊர் நிறுத்தத்தில் இறங்கி வேக நடையிட்டு வீடு விரைந்தாள்.
உள்ளே நுழைய அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றாள்…
அங்கே துளசி மடியில் சரவணன் படுத்திருக்க அவர் காலில் தலை வைத்து புகழ் படுத்திருந்தனர். முகிலை காணவில்லை என்று சுற்றி முற்றி தேட அவனோ குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.
முகி மஹியை கண்டதும் சிரிக்க, அவனிடம் கண்களால் வினவினாள்..
பின்பு ரகசிய குரலில்" என்னடா நடக்குது இங்கே? இது மாதிரி அரிய காட்சி நாம இதுவரை பார்த்தது இல்லையே, என்னாச்சு டா" என்க.
"இதோட இன்னொரு அதிசயம் என்னன்னா நேத்து அந்தாளு அதான் உங்கொப்பா குடிக்கவே இல்லை தெரியுமா நாலு நாளா குடிக்காம தான் வராறாம் அவரு, நேத்து நைட் அம்மா தான் சொல்லுச்சு" என்க.
இவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள், " ஏய்! என்னாப்பிள்ள போ போய் பிரஷ் ஆகு நான் டீ போடுறேன்" என கூறி விட்டு அடுகளை நோக்கி நடந்தான்.
குளியலறை சென்று திரும்பி வந்தவள், முகியுடன் காபி அருந்திக் கொண்டிருக்க துளசி துயில் களைந்து எழ மடியில் பாரம் இருப்பதை உணர்ந்து பார்க்க இரவின் நினைவு வர சுதாரித்து முகி உறங்கிய இடம் பார்க்க அது காலியாக இருந்தது.
" அய்யோ! மணி என்ன ஆச்சுனு தெரியல, இந்த மஹி வந்துட்டாளானு கூட தெரியல, வாசல் தெளிக்கனும், இவரை எப்படி எழுப்புறது ?? , என்னங்க ! என்னங்க! என சத்தம் வராமல் எழுப்பினார்.
அதில் எழுந்த சரவணன் என்ன என்று வினவ, "மஹி வந்துட்டா போல , எழுந்திரிங்க பிள்ளைங்க பார்த்தா என்ன நினைப்பாங்க " என்று எழுந்து கொண்டார்.
அதற்குள் மஹி குளித்து வந்தவள், சிவபுராணம் பாடி சாமி கும்பிட்டு விட்டு, மணி பார்க்க அது ஏழு என காட்டியது.
"ம்மா நாளைக்கு ருத்ரா கல்யாணம் நான் போய்ட்டு, நாளைக்கு சாயங்காலம் வந்துடுவேன், இங்கே எல்லாம் பார்த்துக்கோங்க… மூனு இரண்டு நாள் லீவு சொல்லியாச்சு ஆபிஸ்ல சரி நான் கிளம்புறேன், டேய்! முகி பாத்துக்க சரியா! வரேன் ம்மா ! போய்ட்டு வரேன்" என கிளம்பியவளை தடுத்து நிறுத்தினார் அவளின் தந்தை.
" அம்மாடி ! மஹி ஒரு நிமிஷம் நில்லுமா…" என உள்ளே சென்றவர் கையில் இரு ஐநூறு ரூபாயை எடுத்து வந்தவர் " என் மருமகளுக்கு இதுல பரிசு வாங்கி கொடு" என்று நீட்டினார்.
சற்றே திகைத்தவள்,"இது ஏது உங்களுக்கு இவ்வளவு காசு இருந்தும் நீங்க குடிக்காம வந்துருக்கீங்க என்னாச்சு உங்களுக்கு, அதோட ருத்துமா என் கிட்ட பரிசு எதிர் பார்க்க மாட்டா அதனால, இது எங்கே வாங்குனீங்களோ? அங்கேயே கொடுத்துடுங்க" என வாங்க மறுத்து நின்றாள்.
"இல்லமா இது என் உழைப்பு யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா" என கூற, "அந்த ஒரே காரணத்துக்காக தானே இன்னும் உங்களை திட்டாம, எங்களையும் பேச விடாம பாத்துக்குது இந்த புள்ள, ஆமா இதென்ன புதுசா?" என்று கேட்டுக்கொண்டே கூடத்திற்கு வந்தான் முகிலினியன்.
"இல்லைப்பா இனி நானும் காசை வீட்டுக்கு கொண்டு வந்து தரலாம்னு இருக்கேன் அதோட என் கடமையை இதுவரை தவறி இருக்கலாம், ஆனால் இனி அதை தவிர்க்கவோ தவறவோ மாட்டேன் பா முகிலா" என வாக்குறுதி அளிக்க ஒன்றும் புரியாமல் நின்றனர் குடும்பத்தினர் அனைவரும்.
காசை கையில் திணித்து விட்டு துண்டை தோளில் போட்டு வெளியே சென்று விட்டார் சரவணன்.
"மஹி! இரு நானே உன்னை சத்திரத்தில் பஸ் ஏத்தி விட்டுட்டு காலேஜ் போய்க்கிறேன்" என கிளம்பினான் முகில்.
" அம்மா நானும் கிளம்புறேன் , இந்த புள்ளய பஸ் ஏத்திட்டு நானும் காலேஜ் போய்டுவேன் கேண்டீன்ல சாப்பிட்டுகிறேன்" என்றான்.
துளசி வெளியே வந்தவர் " மஹி இந்த வளையலை நான் கொடுத்தேன்னு ருத்ராக்கு கொடுத்துடு, பார்த்து போய்ட்டு வா, ஜாக்கிரதை, போய்ட்டு போன் பண்ணு" என வழியனுப்பினார்.
இருவரும் சத்திரம் வர கரூர் செல்லும் தனியார் பேருந்து நிற்க அதில் ஏறி கொண்டவள், தண்ணீர் பாட்டில் வாங்கி தரும்படி வேண்ட , முகி வாங்கி வந்தவன். பல முறை எச்சரிக்கை செய்து விட்டே கிளம்பினான்.
பேருந்து நகர ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் பக்கம் முன் படிக்கட்டுக்கு முன்னால் இருக்கையில் இருந்தவர்கள், ஜன்னல் கண்ணாடியை ஏற்ற, ஒரு தாய் குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு, இன்னொரு பையனை கையில் இழுத்தவாறு ஓடி வர, இவள் ஓட்டுனர்கள் சொல்லி பேருந்தை நிறுத்த, அம்மூவரும் ஏறினர்.
ஏறிய அந்த பெண் " பார்த்தீபா இங்கே வாடா இடம் இருக்கு" என்று உடன் நடந்து வந்த சிறுவனின் கரம் பற்றி அமர வைத்தவள் மஹியை பார்த்து சிநேக முறையில் உதிர்த்தாள்.
பார்த்தீபன் என்ற பெயரை கேட்டதும் மூன்றரை வருடம் நடந்த அனைத்து காட்சிகளும் நிழற் படமாக சிந்தனையில் ஓட, இருக்கையின் பின் கண்மூடி தலை சாய்த்து அமர்ந்தாள்.
ருத்ராவின் ஊர் வர நடத்துனர் குரலில் விழித்தவள் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள்.
இறங்கியவள் ருத்ராவின் தம்பிக்கு அழைக்க அந்த பக்கம் அழைப்பை ஏற்றவன்… " அக்கா வந்துட்டிங்களா " , " வந்துட்டேன் பா பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிட்டேன் இப்ப எப்படி வரது?" என்று கேட்டவாறே சுற்றி முற்றும் பார்க்க.
"அக்கா நான் ஆள் அனுப்பிட்டேன் , கறுப்பு கலர் முக்கால் பேண்ட் ஸ்கை ப்ளு டிசர்ட் போட்டு என் அண்ணன் வந்துருக்காங்க பாருங்கக்கா உங்க போட்டோ காட்டிருக்கேன் , மீதி நேர்ல வாங்க பேசிப்போம்" எனக்கூறி அழைப்பை துண்டித்தான் அவன்.
இவள் போனை கைப்பையில் வைத்துவிட்டு திரும்ப ஒரு கரம் வந்து அவளின் துணிப்பையை தூக்கியது, அது யாரென பார்த்தவள் உறைந்து நின்றாள்…
பார்த்தீபன் யார்? வந்தது யாராக இருக்கும்? சரவணனின் மாற்றத்தின் காரணம் என்னவாக இருக்கும், இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
கருத்து திரி கீழே கொடுத்திருக்கிறேன் 👇👇👇👇
தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com