- Messages
- 72
- Reaction score
- 109
- Points
- 33
அத்தியாயம் - 10
காதல் இரு மனங்களில் அன்பைத் துளிர்க்க செய்கிறது. அந்த அன்பு சாதியையும், மதத்தையும் ஏன் வயதையும் கூட பார்ப்பதில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் பெண்ணுடன் நின்று பேசுவதே தவறு. காதல் என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை வயசுகோளாறு ஒரு கால் கட்டை போட்டா சரியாகும் என்று சொல்லும் பாமரமக்கள். இன்றும் கூட அவர்களெல்லாம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.
இங்கு வேற்று மதத்தினரோடு காதல் என்றால் நீ என் மதமா என முதலில் சண்டையிடுவார்கள். ஒரே மதம் தான் வேறு என்ன பிரச்சினை என்றால் நீ என் சாதியா என்பார்கள்.
அதே காதல் அவர்களை எதிர்த்து திருமணத்தில் முடியுமேயானால் குடும்பத்தையே வேரறுக்க கூட அஞ்சுவதில்லை இவர்கள்.
ராதாவின் காதல் கொஞ்சம் தெரிந்திருந்தால் கூட இது சாத்தியமில்லாத ஒன்று என்று தடுத்திருப்பார்கள் அவளை பெற்றவர்கள். ஏன் துளசிக்கு தெரிந்திருந்தால் கூட நிச்சயம் தடுத்திருப்பாள்.
அப்படித்தான் எண்ணினாள் துளசி. ஒவ்வொரு முறையும் தன் சகோதரியிடம் அதையே கேட்பாள். அப்படி அவள் கேட்கும் பொழுதெல்லாம் மதுரன் அவள் மனதிற்குள் வந்து போவான்.
மதுரன் அவளை அடிக்கடி பார்ப்பதும், கிறங்குவதும் அவளுக்காக உருகுவதையும் அவள் அறியாமலா இருந்தாள். அந்த வயதிற்கே உரிய பட்டாம்பூச்சி அவள் உள்ளத்திலும் பறக்காமலில்லை... ஆனால் இதற்கெல்லாம் நீ தகுதியே இல்லை என்று ராசம்மாவின் செய்கை சொல்லாமல் சொல்லிவிட்டதே.
தன் கை பட்ட தண்ணீரைக் கூட குடிக்காதவரின் வீட்டில் எப்படி தான் வாழமுடியும் என்பதை அவள் அப்போதே உணர்ந்தாள். அவன் பார்த்த போதெல்லாம் சிறகடிக்கும் தன் மனதினை உள்ளுக்குள்ளேயே பூட்டிக்கொண்டேனே... இதோ இப்பொழுது கோயிலில் அவனை கண்டு எத்தனை ஆனந்தம் கொண்டேன். இத்தனை ஆண்டுகளாய் மனதினுள் பூட்டி வைத்து இனிமேல் அவனை காண வாய்ப்பே இல்லை என்றிருந்த நேரத்தில் அவனைக் கண்டு எத்தனை மகிழ்ந்தேன். ஆனால் அது எல்லாம் அவன் என்னை அடையாளம் காணும் நொடிவரை தானே... அவன் என்னை கண்டு கொண்டதுமே என் மனதை நத்தையாய் சுருட்டிக்கொண்டேனே... எப்பொழுதும் நடக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதைக் காட்டிலும் இப்பொழுது இருக்கும் வாழ்வை தக்கவைத்துக் கொள்வது அல்லவா எனக்கு சரியாகப் பட்டது.
இவனை பார்க்கும் பொழுதெல்லாம் யாரென்று தெரியாது என்று சொல்லிவிட்டு எப்படி துடித்துப் போனேன்.
எத்தனை ஆண்டுகால சிநேகிதி வெண்பா. இவள் தோழமை கிடைக்க நான் என்ன செய்தேன். அவளை கூட யாரென தெரியாதது என்றல்லவா கூறினேன்.
அக்கா எத்தனை அழகாய் இருக்க வேண்டியவள், பெரிய அளவில் இல்லை என்றால் கூட இருக்கின்ற வசதிக்கு தக்க அவள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து குழந்தை குட்டியென இருந்திருப்பாளே... இன்று முகம், தோள் என உடல் முழுக்க வெட்டு காயங்களின் வடுக்கள் மட்டுமின்றி மனக்காயத்தின் வடுக்களோடு அல்லவா போராடிக் கொண்டிருக்கிறாள்.
ராதாவை பார்த்தவாறே இருந்தவள் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.
துளசியின் மீது தன் பார்வையை பதிந்திருந்த மதுரன் அவளின் முகமாறுதல்களையும்,கண்ணீரையும் கண்டு
'இப்போது எதைச் சொன்னாலும் துளசி ஏற்கப் போவதில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டான். அவள் நம்பிக்கைக்கு தான் பாத்திரமாகும் வரை தான் எதை செய்தாலும், எதை கூறினாலும் அவள் பயத்தோடும், சந்தேகத்தோடும் தான் பார்ப்பாள் என்பதை புரிந்து கொண்டான்.
ரகு துளசியின் தந்தையிடம் பேசியதை வைத்து அவர்கள் அருந்ததியின் கல்லூரி சேர்கைக்காக வந்திருப்பதை அறிந்து கொண்டான்.
அருந்ததி பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்கவே ஒரு பெரிய தனியார் கல்லூரியில் முழு கட்டணச் சலுகையோடு அவளுக்கு இடம் கிடைத்திருப்பதையும் அறிந்து கொண்டான்.
"வாழ்த்துக்கள் அருந்ததி என்ன மேஜர் எடுத்திருக்க.." என்று மதுரன் வினவ
"BE cyber security ." என்றாள் கண்கள் விரிய அருந்ததி.
அவளின் முக மலர்ச்சியிலேயே அவளுக்கு அந்த படிப்பின் மீதான ஆர்வத்தை அவனுக்கு உணர்த்தி விட
"குட்... நல்லபடியா படி ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான் பொறுப்பானவனாய்.
"காலேஜ் அட்மிஷன் முடிஞ்சதா.." என்று ரகு கேட்க
"அட்மிஷன் எல்லாம் பத்து நாள் முன்னாடியே முடிஞ்சது சார். நாளைல இருந்து காலேஜ் திறக்குறாங்க.. அதான் கொண்டு வந்து விடுவதற்கு அப்பா வந்தாரு.. அப்படியே ராதாக்காவையும் ஹாஸ்பிடல்ல காட்டிட்டு போலாம்னு கூப்பிட்டு வந்தாரு.." என்று கூற
"ராதாவுக்கு என்ன..." என ஒரு மருத்துவனாய் சின்னசாமியிடம் அக்கறையாய் வினவினான் மதுரன்.
"அவ உசிரோட எங்ககிட்ட வந்துதுலேர்ந்து அவ நல்லா பேசி நாங்க பாக்கல.. சரியா சாப்பிடறதும் இல்லை. தூங்குறதும் இல்லை. திடீர், திடீர்னு எந்திரிச்சு உட்கார்ந்து எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருக்கா.. யார் கூப்பிட்டாலும் திரும்பியும் பார்க்கறதில்ல. அப்புறம் அவளா தானா சரியாகி எப்போ எந்திருக்கிறாளோ அப்போதான். நாங்களும் அங்கங்க ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய் பார்த்தோம் ஒன்னும் சரியாகல. துளசி தான் சொல்லுச்சு நீங்க வர்றப்ப கூட்டிட்டு வாங்கப்பா இங்க ஆஸ்பத்திரில காட்டலாம்னு அதான் கூட்டியாந்தேன் என்றார் ஒரு பெருமூச்சோடு.
ரகுவும், மதுரனும் ராதாவைப் பார்க்க அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தாள்.
சில நிமிடங்கள் யோசித்த மதுரன் "ரகு சீனியர் டாக்டர் பர்வீன் இப்போ அவைலபிலா இருக்காங்களா பாரு.." என்றான் பரபரப்பாக.
"எஸ் எஸ் யுவர் சாய்ஸ் இஸ் கரெக்ட்.." என்ற படியே தன் கைபேசியில் தேடி டாக்டர் ஃபர்வினை அழைத்தான். எதிர் முனையில் அவனது அழைப்பு எடுக்கப்படாமல் போகவே விபரங்களை குறுஞ்செய்தியாக அவருக்கு அனுப்பி விட்டு காத்திருந்தான் ரகு.
துளசிக்கு ஒன்றும் புரியவில்லை இவர்கள் யார் எதற்கு இதை அவர்கள் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது அவளது பார்வை. வெண்பா அதை சரியாக யூகித்தாள்.
"இங்க பாரு இன்னும் எதிரி மாதிரி பார்த்து சந்தேகப்பட்டுட்டு இருக்காதே.. உனக்கு எந்த அளவுக்கு ராதா மேல அக்கறை இருக்கோ.. அதே அளவுக்கு எங்களுக்கும் இருக்கு. தேவையில்லாம முறைச்சுட்டு இருக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத... இனி இதெல்லாம் அண்ணன் பார்த்துப்பான். என்னையும், அவனையும் யாருன்னு தெரியாதுன்னு சொல்லி நீ எடுத்தெருஞ்சு பேசுனதுக்கே உன் மூஞ்சி முகரை எல்லாம் பேத்து இருக்கணும் . போனா போகுது ஃப்ரண்டாச்சேன்னு விடறேன்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் வெண்பா.
"என்னத்துக்கு டி.." என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளியபடி கோபத்தோடு துளசி எழ
"வெண்பா பேசாம இரு..." என்று அவளை அடக்கினான் மதுரன்.
அதே நேரம் ரகுவின் கைபேசி மெதுவாய் இசைக்க "ப்ளீஸ்... ப்ளீஸ்.. ப்ளீஸ்..' கொஞ்சம் அமைதியா இருங்க டாக்டர் பர்வீன் கிட்ட இருந்து தான் கால்.." என்று சைகையால் அவர்களை அமைதிப்படுத்திபடியே கைபேசியில் ரகு
"ஹாய் டாக்டர் ஐ அம் டாக்டர் ரகுபதி.
..............
எஸ் எஸ் .. என்னோட பிரண்டுக்கு உங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் தேவை. எப்போ வரனும்னு சொன்னா அவங்களை வந்து பார்க்க சொல்வோம்.." என்று அவன் கூற எதிர் முனையில் என்ன பதில் வந்ததோ....
"ஓகே தேங்க்யூ தேங்க்யூ சோ மச்.." என்றபடி கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்தான்.
"டாக்டர் பர்வின் இன்னைக்கு இவ்னிங் 6 மணிக்கு அப்பாய்ன்ட்மெண்ட் குடுத்திருக்காங்க...." என்றான் பொதுவாய் எல்லோரிடமும்.
துளசி அறிவாள் டாக்டர் பர்வின் பானு கோவையின் எத்தனை பெரிய பிரபல சைக்யாட்ரிஸ்ட் என்பதை. அவரை காண்பது என்பது அத்தனை எளிதல்ல என்பதையும் அறிவாள். தங்கள் மருத்துவமனை மருத்துவர்களிடமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மருத்துவரிடமோ தங்கள் சக்திக்கு ஏற்ப ராதாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்றே அவளை வரச் செய்ததது இவர்களானால் என்ன செய்கிறார்கள் என்று ரகுவை இடையிட்டாள்
"டாக்டர் அவங்க ரொம்ப பெரிய டாக்டர். அங்கே பார்க்கிற அளவுக்கு... "என்று தடுமாற
"டாக்டர் பர்வீன் எங்களுடைய சீனியர் தான் துளசி, சாரி ஏஞ்சலின். எங்களுக்கு ரொம்ப நல்ல பிரண்டும் கூட.. தெரியாத ஒரு டாக்டர்ட்ட பாக்குறது விட நமக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் கிட்ட பார்க்கும்போது ராதாவுக்கு என்ன அப்படிங்கறது நாம தெளிவா கேட்டு அதுபடி ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம். ரொம்ப எக்ஸ்பென்ஸ் எல்லாம் ஒன்னும் வராது பார்த்துக்கலாம்..." என்றான் மதுரன்.
வெறுப்பும், கோபமாய் அவனை ஏறிட்டாள் துளசி. "நீங்க என்ன பார்க்கிறது. இத்தனை நாள் நீங்களா பார்த்தீங்க.." என்று வார்த்தைகளை உமிழ..
ரகுபதி இடையிட்டான்
"இங்க பாருங்க ஏஞ்சலின் ,டாக்டர் பர்வீன் எங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களோட குழந்தைகளுக்கு நான் தான் பீடியாட்ரிசன். சோ பெருசா இதுல நாங்க உதவுவ எதுவும் இல்லை. மதுரன் சொன்ன மாதிரி தெரியாத ஒரு டாக்டர் கிட்ட போறத விட நமக்கு தெரிஞ்ச டாக்டர் னா அவங்களுக்கு வைத்தியம் பார்க்கிறது இன்னும் ஈசியா இருக்கும் புரிஞ்சுக்கோங்க.." என்றான்.
எதுவும் புரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தார் சின்னசாமி. அவருக்கு புரிய வைக்க முயன்றான் மதுரன். அவன் கூறுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டவர் "தம்பி சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு சாமி, அவங்க சொல்றபடி கேட்டு தான் பார்ப்போமே.." என்று அவர் துண்டை உதறி தோளில் போட்டபடி எழுந்தார் இனி பேச எதுவும் இல்லை எனும் தொணியில்.
"சரி சாமி அந்த டாக்டரு விலாசத்தை குடுங்க நான் இந்த புள்ளைங்கள கொண்டு போய் காட்டிட்டு அப்படியே துளசியோட வீட்டுல விட்டுட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்.." என்றார்
"ஏன் கிளம்புறீங்க ஒரு ரெண்டு மூணு நாலு இருந்து உங்க பொண்ணுக்கு என்ன ஏதுன்னு பார்த்துட்டு போலாமே.." என்றான் ரகு.
"போலாம் தா தம்பி. ஆனா துளசி இருக்கறது பொம்பள புள்ளைங்க தங்குற வூடு.. வூட்டுகரங்க ஆம்பளைங்க தங்கறது கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிருக்காங்கன்னு துளசி சொல்லிருக்கு... என்று அவர் விளக்க
"அதுக்கென்ன எங்க ரூம்க்கு வாங்க... நாங்க ரெண்டு பேர் தான் இருக்கோம். ரெண்டா நாள் தங்கி உங்க பொண்ணுக்கு என்னான்னு பார்த்துட்டு அப்புறமா ஊருக்கு போகலாம்.." என்றான் உரிமையாய் ரகு.
"உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்.." என்று அவர் தயங்க
"இதுல எங்களுக்கு என்ன சிரமம். அதெல்லாம் ஒன்னும் இல்ல.. வாங்க" என்றவாறே அவர்கள் கிளம்ப அங்கே இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள் துளசி.
இவர்களோடு தன் தந்தையை எப்படி தங்கவைப்பது என்பது ஒரு புறமும் ராதாவை எப்படி டாக்டர். பர்வீனிடம் கூட்டிச் செல்வது என்று மறுபுறமுமாய் தவித்தபடி தன் கைக்கடிகாரத்தை மீண்டும் அவள் பார்க்க..
அவள் தவிப்பை உணர்ந்த மதுரன் அதை குறிப்பாய் ரகுவுக்கு உணர்த்தினான்.
அதை உணர்ந்தவனாய் ரகுவும்
"என்னாச்சு என்று கேட்க
"டாக்டர் இன்னைக்கு ஆஃப் எடுக்கலாம்னு பார்த்தேன். ஆனா இன்னைக்கு ரெண்டு பேர் லீவ் ஸ்டாப் நர்ஸ் மூனு பேர்தான் வார்ட்ல இருக்கோம். சோ நான் நகர முடியாது. இப்போ ராதாவை எப்படி டாக்டர் ட்ட கூட்டிட்டு போறதுன்னு தான்... என முடிக்காமல் நிறுத்தியவள்
"அப்பாக்கும் இங்க அவ்ளோவா தெரியாது. அவரையும், இவங்களையும் தனியா அனுப்ப முடியாது என்று தன் நிலையை உணர்த்தினாள் துளசி.
"நான் கூட்டிட்டு போறேன் க்கா... அட்ரஸ் கண்டுபுடிச்சு போறது கஷ்டமா என்ன... நீ போய் டூட்டி பாருக்கா நான் கூட்டிட்டு போறேன். என்றாள் அருந்ததி.
"நோ.. நோ.... அது வேண்டாம் பழக்கமில்லாத ஏரியாவுல ரிஸ்க் வேணா..." என மதுரன் யோசிக்க
"நான் வேணா போறேனே.." என்றாள் வெண்பா.. ஆனால் அவளை இரவுக்குள் வீட்டிற்கு அனுப்பாவிட்டால் அது சிக்கலாகிவிடும் என்று மதுரன் அறிவான்.
"ரகு உனக்கு ஈவ்னிங் அப்பாய்ன்மெண்ட் இருக்கா.." என்றான்.
"இதுவரை இல்லை... என்றவன் ஓகே நான் கூட்டு போறேன். துளசி சாரி ஏஞ்சலின், யூ டோன்ட் வொர்ரி. ஐ வில் டேக் கேர்( நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்).."
என்றான்.
"ஏற்கனவே மணி நாலரை சோ நான் போய் சொல்லிட்டு கெளம்பி வர்றேன். நீங்க வெளியே வெய்ட் பண்ணுங்க.." என்றபடி "என்னடா ஓகே தானே போலாமா .. நாம வந்து ரொம்ப நேரமாச்சு.." என்றவாறே கிளம்பினான்.
அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அரை மனதோடு துளசி கிளம்ப அவளை அழைத்தான் மதுரன்
"துளசி... சாரி ஏஞ்சலின் ..."
வேண்டா வெறுப்பாய் அவனை என்ன என்பது போல ஏறிட்டாள் அவள்.
"அவங்க வந்து ரொம்ப நேரமாச்சு ஸ்டாப் டிரெஸ்ஸிங் ரூம் கூட்டிட்டு போய் அவங்களை ரெப்ரெஸ் ஆக வைச்சு அனுப்பு..." என்று கூற
'ச்சே இதை எப்படி மறந்தேன்...' என்று எண்ணியவள் அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். என்ன செய்வதென்று தெரியாமல் வெண்பா குழம்பி நிற்க..
"வா.." என அவளையும் கை பற்றி அழைத்துச் சென்றதை கண்ட மதுரன் உதடுகளில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது.
துளசியின் தந்தையிடம் பேசிக்கொண்டு மருத்துவமனை வாயில் வரை வந்தவன் "நீங்க இங்கயே உட்க்காருங்க ரகு வந்து உங்களை கூட்டிட்டு போவான்.." என்று விட்டு தன் பணியை தொடர சென்றான் மதுரன்.
அங்கு துளசியின் மனமோ நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது..
தொடர்வார்கள்...