எனக்கு விசில் சத்தம் பயம் நம்புங்க
அது ஒரு அழகிய காலை பொழுது, பரபரப்பாக,கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தேன், அப்போது அவனும் தயாராக இருந்தான்...
அன்று நான் கருப்பு மற்றும் நீல நிறத்தில் சல்வார் அணிந்து இருந்தேன் அது
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சல்வார்.......
என் பேக், எல்லாம் ரெடி நானும் ரெடி.......
தற்செயலாக அவனை பார்க்க நேர்ந்தது, அவனை பார்த்தவுடன் ,எனக்கு பயம் தொற்றிக் கொண்டது, அவனும் தயாராக இருந்தான், நானும் தெரியாமல் அவன் முன் நின்று விட்டேன்,
அடித்தான் பாருங்க ஒரு விசில்,
அவ்வளவு தான் குடிச்சுட்டு இருந்த தண்ணீர் செம்ப கீழே போட்டு விட்டு, சமையலறையில் இருந்து வெளியே ஓடி வந்துட்டேன்....
எங்க அம்மா என்னை....மாடு மாதிரி வளர்ந்துட்ட இன்னும் குக்கர் விசில்க்கு பயப்படுற ஆமாங்க எனக்கு குக்கர் விசில் னா கொஞ்சம் ஜர்க் ஆகுவேன்..
இப்போதும் அவன்ட்ட இருந்து 2 அடி தள்ளி யே நிற்பேன்,அதான் குக்கர் விசில் அடிக்கும் போது கிட்சன் வாசல்ல தான் நிற்பேன் .....
நம்புங்க எனக்கு விசில் சத்தம் பயம்
அனுபவ பகிர்வுடன்,
நாகா