- Messages
- 17
- Reaction score
- 1
- Points
- 1
மலர் 11:
"யாழினி ஏன் இப்படி பேசிட்டுப் போறானு காரணம் எனக்கு நிஜமா தெரியல கணேஷ்! என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்!" என்று தலைகுனிந்து கார்த்திகேயன் நிற்க,
"நோ! நோ! அப்படி எல்லாம் சொல்லாத கார்த்தி! நீ அவளோட பிரச்சினையைக் கேட்டு சமாதானம் பண்ணு. யாழினிக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும்!" என்று மனதை புண்படுத்தாமல் ஆறுதலாகக் கூறினார் கணேஷ்.
"என்ன அப்பா இதெல்லாம்? என் கிட்ட கூட சொல்லாம!" என்று கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு அர்ஜுன் கேட்க,
"முன்னாடியே பேசி முடிவு பண்ணது தானே அர்ஜுன்! அதான் சர்ப்ரைஸா பிளான் பண்ணினோம்!" என்று தன் மனதில் இருந்ததை கணேஷ் வெளிப்படுத்த,
"அதுக்கு அப்புறம் யாழினி வாழ்க்கையில் நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும் தானே! இந்த நிச்சயம் பண்ண முடிவு செய்றதுக்கு முன்னாடி இன்னொரு தடவை அவளோட சம்மதத்தைக் கேட்டுருக்கனும்" என்று கோபமாகப் பேசினான் அர்ஜுன்.
இதற்கிடையில் நண்பர்கள் கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தன.
"இப்ப மறுபடியும் யாழினி உடம்புக்கு ஏதும் ஆகிட்டா என்ன செய்ய?" என்று அர்ஜுன் கேட்க,
" யாழினிட்ட கேட்காம விட்டது தப்பு தான். பாவம் அவ மனசுல என்ன நினைக்குறானு தெரியல!" என்று மிகுந்த வருத்தத்துடன் லட்சுமி கூறியதைக் கேட்டு,
"தப்பு இல்ல மா ஆனா கொஞ்சம் யோசிச்சு பண்ணி இருக்கலாம்!" என்று குரலைத் தனித்துச் சொன்னான் அர்ஜுன்.
கோபத்துடன் சென்ற யாழினி வீட்டிற்குச் செல்வதற்காகக் காரைத் திறக்க, கார்த்திகேயன் ஓடி வந்து "நானே வண்டி எடுக்கிறேன் யாழினி! நீ பின்னாடி உட்காரு" என்று சொல்ல,
தேன்மொழியும் அவளை அழைத்து பின்னால் உட்கார வைத்தாள். காரில் எதுவும் பேசாமல் மௌனமாகவே யாழினி இருந்தாள்.
சிறகில்லா பட்டாம்பூச்சி பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிந்தாலும், சிறகில்லா வேதனை அதுக்கு தான் தெரியும் என்பது போல, இவளின் மன வலியை அறிய யாரும் இல்லாத வேதனையுடன் வீடு வந்து இறங்கிய யாழினி, தன் அறைக்குக் கூட செல்லாமல் தோட்டத்திற்குச் சென்று மரத்தடியில் அமர்ந்தாள்.
"நீ அவகிட்ட கல்யாணத்தை பத்திச் சொல்லி சம்மதம் வாங்கின தானே! அப்புறம் ஏன் இப்படி நடந்துகிட்டா?" என்று கார்த்திகேயன் தேன்மொழியிடம் வினவ,
"நான் யாழினிட்ட கல்யாணம் பற்றி எதுவுமே பேசல" என்று தேன்மொழி எரிச்சலாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான கார்த்திகேயன்,
"என்ன சொல்ற தேனு? பேசவே இல்லையா? அப்புறம் எதுக்காக இந்த நிச்சயதார்த்தத்துக்கு ஒத்துகிட்ட?" என்று குழப்பத்துடன் கார்த்திகேயன் கேட்க,
"அவளுக்குள்ளே இருக்க மர்மம் வெளி வரணும். அதான் அப்படி செஞ்சேன்" என்றாள் தேன்மொழி.
"நீ என்ன சொல்ற? அவளுக்குள்ளே என்ன மர்மம்?" என்று கார்த்திகேயன் கேட்கவும்,
"யாழினிட்ட மட்டும் இல்ல இந்த அமுதாகிட்டயும் தான்!
ஸ்கூல் போகாம ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தேன் அப்போ தான் இந்த வீட்டில் நடக்க விஷயம் எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சு. நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அன்னைக்கு அமுதா தலையிலே எப்படி அடிபட்டுச்சு? இன்னிக்கு யாழினி ஹாஸ்பிடல் போன விஷயத்துலயும் ஏதோ ரகசியம் இருக்கு. நம்ம கிட்ட சொல்லாமல் மறைக்கா. இப்படி நிறைய விஷயம் இருக்கு." என்று கோபத்தில் தேன்மொழி வார்த்தைகளை அள்ளிக் கொட்ட,
"தேங்காய் விழுந்து அமுதாக்கு அடிப்பட்டுச்சு! நான் ஏதோ கவனக்குறைவால பெயரைக் கவனிக்காம தப்பா சொல்லிட்டேன்! இதுக்கு போய் இவ்வளவு டென்ஷன் ஆகுற?"என்றார் கார்த்திகேயன்.
"தென்னை மரத்தில் தேங்காய் இருந்தா தானே தலையில விழ முடியும்?" என்று தேன்மொழி கேட்டபோது தான் மரத்தில் இருந்த தேங்காய் அனைத்தையுமே பறித்து விட்டதும் இப்ப எதுவுமே இல்லை என்பதையும் உணர்ந்தார் கார்த்திகேயன்.
"அமுதா! அமுதா!" என்று கார்த்திகேயன் அழைக்கவும்,
"சொல்லுங்க ஐயா!" என்று அமுதா வரவும்,
"தேனு கேட்கிறதுக்கு எல்லாம் உண்மையைச் சொல்லு அமுதா!" என்றார் கார்த்திகேயன்.
"யாழினி இப்படி நடந்துக்க உண்மையான காரணம்னு என்னவென்று எனக்கு இப்பவே தெரியனும்!" என்று கேட்டாள் தேன்மொழி.
"சொல்றேன் அம்மா! யாழினி பற்றிச் சொல்றேன்!" என்று அமுதா ஆரம்பித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல்க்குப் போயிடுவீங்க! எப்பவாது யாழினி மட்டும் வீட்டில் இருக்கும் போது, நான் யாழினி கூட தான் முழு நேரத்தையும் கழிப்பேன். நாங்க ரெண்டு பேரும் ஏதாவது பேசிட்டு இருக்கதும், டிவி பார்க்கதுமா நேரம் போகும். நான் என்னோட சின்ன வயசுல நடந்த விஷயம் எல்லாம் சொல்லுவேன், யாழினியும் அப்படித்தான். அவளுக்கு சின்ன வயசுல நடந்த விஷயம் ஞாபகம் இருக்கதெல்லாம் சொல்லுவா! ஸ்கூல்ல நடக்கிற விஷயத்தைக் கூட அப்போ என்கிட்ட சொல்லுவா! கொஞ்ச நாள் என்னோட நெருக்கமா இல்லாமல் விலகிப் போக ஆரம்பித்தாள். என் மேலே எதோ கோபம் போல நினைச்சு விட்டுட்டேன். நான் யாழினி அறைக்குச் சாப்பாடு கொண்டு போகும் போதெல்லாம் அவ யார் கிட்டயோ பேசிட்டு இருக்க மாதிரி இருக்கும். ஃபோன்ல பேசுறான்னு நினைச்சு விட்டுட்டேன். ஒருநாள் கீழே தபால் வாங்க வந்தவள், அதை சோஃபா வில் வைத்து பிரிச்சு படிச்சிட்டு, ஃபோனை மறந்து அங்கேயே விட்டுட்டு ரூம் க்கு போயிட்டா! கொஞ்ச நேரம் கழிச்சு நான் அந்த ஃபோன் எடுத்துட்டு ரூம் க்கு போகும் போதும் அதே மாதிரி பேச்சு சத்தம் கேட்டுச்சு. யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு? கேட்டதுக்கு ஃபோன்ல ஃப்ரண்ட் கிட்ட பேசுறதா யாழினி சொன்னதும் தான் எனக்கு அவ மேல சந்தேகம் வந்துச்சு. நான் சந்தேகப்பட்டது யாழினிக்கு தெரியக்கூடாதுன்னு, மொபைல அவளுக்கு தெரியாம மெத்தையில் வைச்சுட்டு சாப்பிட கூப்பிட வந்ததாக சொல்லி சமாளிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் யாழினியை நான் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிச்சுட்டேன்.
யாழினி ஏதோ ஒரு பெரிய விஷயத்துல மாட்டிட்டு கஷ்டப்படுறான்னு புரிஞ்சுக்கிட்டேன். நானே போயி விஷயத்தை நேரடியாக கேட்கலாம்னு யோசிச்சேன் ஆனா அவளப் பத்தி ஓரளவு விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டது போதாது முழு விஷயத்தையும் தெரிஞ்சுக்கனும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அப்போ தான் சில நாட்களுக்கு முன்,
"அமுதா! உங்கட்ட இருந்து எனக்கு ஒரு உதவி வேணும்! கண்டிப்பா செய்வேன்னு சத்தியம் செஞ்சு கொடுங்க!" என்று யாழினி கேட்க,
சிறிதும் யோசிக்காமல் யாழினிக்கு சத்தியம் செய்து கொடுத்து "நீ என்ன கேட்டாளும் நான் செய்கிறேன்!" என்று அமுதா வாக்களிக்க,
"என்னோட கடந்தகால வாழ்க்கைப் பற்றி இப்பவே தெரியனும்!" என்று யாழினி கேட்க,
இதைப் பற்றி கேட்பாள் என்று அமுதா கனவிலும் நினைக்கவில்லை.
"கடந்த காலமா? அப்படி என்ன இருக்கு?" என்று யோசித்தவாறு அமுதா சமாளிக்க நினைக்க,
யாழினியும் விடாப்பிடியாக சத்தியத்தை வைத்து அமுதாவை மடக்க, உண்மையை மறைக்க முடியாமல் அமுதா திணறிப்போக,
"உங்க பொண்ணு மாதிரி என்னை நீங்க நினைச்சது உண்மையா இருந்தா இப்பவே சொல்லுங்க அமுதா!" என்று பிடிவாதமாகக் கேட்க,
"இரண்டு வருஷத்திற்கு முன்பு......
மலரும்...