Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவாய் நான் வருவேன் - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
10

அது எப்படி முடியும் ரோகினி நேத்ராவோட படிப்பு இந்த வருஷத்தோட முடியுது அவ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்னை எப்படி நான் இந்த வீட்ல வச்சிக்க முடியும்...

என் பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா...அம்மா செத்து ஒரு வருஷம் தான் ஆச்சி அதுக்குள்ள அப்பா வேற ஒரு பொண்ணோட தொடர்புல இருக்காரேனு கேவலமா நினைக்க மாட்டா...நீ ஆரம்பத்துல இது போலெல்லாம் கேக்கமாட்டேனு சொன்னதால தானே நான் உன்னோட உறவே வச்சுக்கிட்டேன் இப்போ மாத்தி பேசறியேனு
அவளுக்கு புத்தி சொல்லவும் அப்போதைக்கு சரி சரினு தலையை ஆட்டிக்கிட்டு கிளம்பிப் போயிட்டா...


ஆனால் நேத்ரா மறுபடியும் ரெண்டு வருஷம் மேல் படிப்பு படிக்கனும்னு அதே ஹாஸ்டலில் தங்கிட்டா

அதை ரோகினி அவளுக்கு சாதகமாக பயன்படுத்திகிட்டு அவ தம்பி தங்கைகளோட அடிக்கடி இங்கு வந்து போக ஆரம்பிச்சா…பணமும் கேட்டு மிரட்டுவா...நானும் பொண்ணுக்கு தெரியகூடாதுன்னு அவ பணம் கேட்கும் போதெல்லாம் அள்ளி அள்ளி கொடுக்க ஆரம்பிச்சேன். பணம் கொடுக்கலைன்னா நேரே வீட்ல வந்து உட்கார்ந்துபா... இல்லனா வீட்ல விலைமதிப்பு இல்லாம இருக்கிற ஏதாவது ஒரு பொருளை அவ தம்பி கேசவனை விட்டு தூக்கிட்டுப் போயிடுவா.


அந்த சமயத்துல தான் அபிமன்யூ எனக்கு பழக்கமானான்...அவனும் நானும் ஒரே ஊர்னதும் ஒரு விதமான பாசம்... அவனை பத்தி விசாரிக்க நிறையா ஆச்சர்யம் கலந்த பல விஷயங்கள் கிடைச்சது...


அப்புறமா என் வீட்டு பாதுகாப்பு பத்தி சொல்லி இங்க வேலைக்கு சேர கேட்டுகிட்டேன்…

அவனும் உடனே ஒத்துகிட்டான் அதுக்கு தனிப்பட்ட காரணங்கள் நிறையவே இருந்தாலும் அபிமன்யூ அதை என்கிட்ட காமிச்சிக்கல..


என் வேண்டுகோளை உடனே அபிமன்யூ ஏத்துகிட்டதால எனக்கு பெரிய நிம்மதி....

அபியும் பொறுப்பா இப்போ வரைக்கும் இந்த வீட்டை பாதுகாப்பாக பார்த்துட்டு இருக்கான். அவனோட பாதுகாப்புல எந்தவிதமான குறைபாடும் கிடையாது…

கடைசி பத்து நாள் குழப்பம் பாதுகாப்பு குறைபாடு நடந்தது எல்லாமே என்னால தான் அதையும் சொல்றேன் கேளுங்க என்று மேலும் அவரைப் பற்றிய உண்மைகளை பேசத் தொடங்கினார்.


நேத்ரா படிப்பு முடிச்சு இங்க வரவும் என்னோட நல்ல விதமா பழகுவானு நினைச்சு நிறையா கனவோட காத்திருந்தேன் ஆனா

இங்கே நேத்ரா ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்கறா... என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசாம இருக்கறா...யாரோடயும் ஒட்டல..இது எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை குடுத்தது….அந்த சமயத்துல ஆறுதலுக்காக மறுபடியும் என் மனசு ரோகினை தேடிச்சி…

அவளும் நான் தேடி போனா சண்டை போட மாட்டா...எனக்கு புடிச்ச மாதிரி நடந்துப்பா...அதனால அவ கேக்கற பணம் எனக்கு பெருசா தெரியல…

கடைசியா ரோகினி நான் சந்திச்சப்போ அவ வயித்தில இப்போ என்னோட கரு வளர்றதாகவும் அதை கலைக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னதாகவும் உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லி என்னை கட்டாயபடுத்தி ஆரம்பிச்சா.

நேத்ரா வீட்ல இருக்கும் பொழுது நான் எப்படி உன்னை கல்யாணம் பண்ண முடியும் ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆனா கூட உன்னை உரிமையா மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்தலாம் .

கல்யாண வயசுல பொண்ணை வெச்சிட்டு உன்னை எப்படி நான் வெளி உலகத்துக்கு காட்ட முடியும்னு அவ கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்….

அதுக்கப்புறம் அவளோட எந்த ஒரு டச்சிலேயும் இல்ல…ஆனா இன்னைக்கு கேசவன் தீடிர்னு என் ரூம்ல இருந்தான்...எப்படின்னு எனக்குத் தெரியாது…யாரும் பாக்கறதுக்குள்ள வெளிய அனுப்பலாம்னு காத்திருந்தேன் ஆனா கொஞ்ச நேரத்துல சக்ரவர்த்தி கேமரா பத்தி என்கிட்ட வந்து கேக்கவும் எனக்கு பயம் வந்துடிச்சி...கேசவனை வேற வெளிய அனுப்பனும்….அவனை யாராவது பாத்துட்டா என்னை பத்தின உண்மைகள் எல்லாருக்கும் தெரியுமேங்கற டென்ஷன்ல நான் சக்ரவர்த்தி கிட்ட கத்திட்டேன்.

ரூம்ல இருந்த கேசவன் எனக்கு ஹெல்ப் பண்ணறதா நினைச்சி எல்லாத்தையும் கெடுத்துட்டான்.
ஆனா அபி இப்போ எனக்கு சந்தேகம் வருது...இங்க நடந்த குழப்பத்துக்கும் கேசவனுக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு…


அந்த ரூம்ல அவனை அடைச்சி வச்சிருக்கேன் நீங்க போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி விசாரிச்சாலும் சரி...இல்ல நீங்களே விசாரிச்சாலும் சரி எனக்கு உண்மை தெரியனும்... நேத்ரா மேல ஏன் இப்படி ஒரு பலி வந்தது... இன்னைக்கு என் மகள் தற்கொலை முயற்சி செய்ற அளவுக்கு அவளை எது கொண்டு போய் விட்டதுன்னு தெரியனும்..
அதுக்காக எவ்ளோ செலவானாலும் சரி...நீ எனக்காக இதை செஞ்சி குடுக்கனும் என்று கூறினார்.

சரி என தலையசைத்தவன் சக்ரவர்த்தியை திரும்பிப் பார்க்க சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டபடி அறைக்குள் சென்றான் பின்னாலே அபிமன்யூ வரும் சென்றான்.

நேத்ரா விற்கு அவளின் அப்பா சொன்னவற்றை நம்பவே முடியவில்லை.

என்ன…? தனது தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது…


அவர்களின் சுயநலத்திற்காக எனக்கு எந்த மாதிரியான தொல்லைகள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள் நிஜமாகவே இப்பொழுதும் அவர்கள் தான் தொல்லை கொடுத்தார்களா?

இல்லை வேறு ஏதேனும் புதிய பூகம்பம் வரப்போகிறதா என்று பயந்தபடி வெளியே காத்திருக்க ஆரம்பித்தாள் .

ரோகித் ஷர்மாவிடம் வந்தவன் என்ன அங்கிள் உங்க பிரண்டு என்னவோ சொல்றாரு அபிமன்யூக்கு ஏற்கனவே மது ஆன்ட்டிக்கு தெரியுமா…?

அப்போ இங்க என்ன நடந்துட்டு இருக்கு நாம ஏதோ இவன் சாதாரண செக்யூரிட்டினு நினைச்சா இவன் நம்ம எல்லாத்துக்கும் மேலனு அங்கிள் அவனுக்கு இம்பார்டென்ட் தர்றாரு….

ரவி அங்கிளுக்கு அபிமன்யூ அவ்வளவு முக்கியமானவனா ... என்று கேட்டான்.

பதில் சொல்ல தெரியாத ஷர்மா எதுவும் பேசாதே மௌனமாக இரு என்பது போல் சைகை செய்ய அத்துடன் ரோகித் அடங்கிக் கொண்டான்.

ஆனாலும் அவனுக்கு மனதில் ரவிச்சந்திரன் மேல் சிறு கோபம் இருக்கதான் செய்தது.

அவரின் மாப்பிள்ளையாக தான் இருக்கும் பொழுது அபிமன்யூவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவரை பற்றிய அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.என்ன இருந்தாலும் அபி மாற்றான் தானே...இது அவர்களின் அந்தரங்க குடும்ப விஷயமாகவே எண்ணினான்.

இப்பொழுது கேசவனை விசாரிக்க அவனையும் ஷர்மாவையும் அல்லவா அனுப்பி இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் ரவியே கூட விசாரிக்கலாமே ஏன் அபியை அனுப்பி விட்டு வெளியே காத்திருக்கிறார்.

இவர்களுக்குள் அப்படி என்ன உறவு உள்ளது…


எது எப்படி இருந்தாலும் நேத்ராவை திருமணம் செய்து பிறகு இந்த அபிமன்யூவை கவனித்துக் கொள்ளலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

ஷர்மா முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் விசாரிக்க சென்றவர்கள் வெளியே வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார் இடையிடையே நேத்ராவுக்கு ஆறுதல் சொல்லவும் தவறவில்லை.

உள்ளே கேசவனை அபியும்,சக்ரவர்த்தியும் அடியில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தனர்.

சக்ரவர்த்தி அவனது டீரைனிங்கில் என்னவெல்லாம் கற்றானோ அத்தனை வித்தைகளையும் கேசவனிடம் காமிக்க வலி பொறுக்க முடியாமல் வாயை திறந்து பேச ஆரம்பித்தான்..

சொல்லுடா... செக்யூரிட்டி ப்ரேக் பண்ணி சிஸ்டம் ஹக் பண்ணி என்னடா பண்றதுக்காக ப்ளான் பண்ணுனிங்க….

சத்தியமா அதெல்லாம் எனக்கு தெரியாது சார்...ஒரு ப்ரைவேட் நம்பர்ல இருந்து மேசேஜ் வரும் உள்ள போனு...நான் உள்ள போகனும் அங்க நேத்ரா மயங்கி கிடப்பாங்க அவங்களை ஏதாவது ஒரு ரூம்ல தூக்கி போடனும் அப்புறமா மறுபடியும் மேசேஜ் வரும் போது நேத்ரா வை அவ ரூம்ல படுக்க வைக்கனும் இது மட்டும் தான் நான் செஞ்சது எனக்கு வேற எதுவுமே தெரியாது….என்று வலியில் துடித்தபடியே கூறினான்.


இதெல்லாம் யாரு செய்ய சொல்லறாங்க...எதுக்காக செஞ்ச…


யாரு செய்ய சொன்னாங்கனு எனக்கு தெரியாது….அக்காக்கு மட்டும் தான் தெரியும்... ஆனா இதெல்லாம் செஞ்சா சீக்கிரமா என்னோட அக்கா இந்த வீட்டுக்கு வந்துடலாம்னு மட்டும் தெரியும்...அக்கா இங்க வந்துட்டா என் லைஃப் செட்டில் ஆகும்ல அதனால நான் இதை செய்ய ஓத்துகிட்டேன்….


சரி இன்னைக்கி எதுக்காக இங்க வந்த….எப்படி வந்த அதைச் சொல்லு என்று கேசவனின் கால் மீது தனது பூட்ஸ் அணிந்த கால்களை வைத்து அழுத்தியபடி அபிமன்யூ கேட்டான்.


கொஞ்ச நாளாவே அக்காவை மாமா வந்து சந்திக்கிறது கிடையாது அக்காவை வேலைக்கும் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க...ஃபோன் பண்ணினாலும் மாமா எடுக்கறது இல்ல‌.. வீட்டு செலவுக்கு பணம் வேணும்னு அக்கா வாங்கிட்டு வர்றதுக்காக அனுப்பி வெச்சாங்க…

எப்பவுமே வீட்டு மூலைல இருக்கற மரத்து மேல ஏறி அப்படியே முதல்மாடியோட சன்செட்ல இறங்கி வந்தா கொஞ்ச தூரத்துல நேத்ராவோட பாத்ரூம் ஜன்னல் வரும் அதோட க்ளாஸை கழட்டி வச்சிட்டு அது வழியா வீட்டுக்குள்ள போயிடுவேன்…


நேத்ராவோட பர்சனல் ரூம், அப்புறம் பாத்ரூம் இருக்கறதால அங்க மட்டும் எந்த செக்யூரிட்டியும் போக மாட்டாங்க சிசிடிவி கேமராவும் அங்க கவர் ஆகாதுன்னு என்னோட அக்கா சொன்னா...அதனால எப்பவுமே அந்த வழியா வந்து வெளியே போயிடுவேன் என்று கூற
இருவருக்குமே ஒரே வினாடியில் புரிந்தது. மதுவின் ஆன்மா என்று கூறப்படுகின்ற அந்த நிழல் உருவம் ஏன் நேத்ராவின் அறையை நோக்கி வந்து மறைகிறது என்று .

தெளிவாக இவர்களுக்கு அந்த ஆன்மா அறிவுறுத்தி இருக்கிறது...அங்கேயும் சற்று கவனியுங்கள் என்று... இவர்கள்தான் அதை கவனிக்கவில்லை.

இந்த வீட்டை பத்தி உன் அக்காக்கு யாரு இவ்ளோ தெளிவா சொன்னது...என்று அபி கேட்டான்.

அது தெரியாது ஆனா வீட்டோட ப்ளூ பிரிண்ட் ஒன்னு அக்கா கிட்ட இருக்கு... நேத்ரா ரூம் சுத்தி மட்டும் கேமரா வைக்கலங்கற விஷயம் எப்படி தெரியும்னு தெரியாது...ஓரு வேளை மாமா சொல்லிருக்கலாம்...எதாவது ஒரு சமயத்துல...என்றான் கேசவன்.

அதை இருவருமே ஒத்துக்கொண்டனர்.சபலத்தின் உச்சத்தில் இருக்கும் ஆண்களிடம் திறமையான பெண்ணால் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும்...வீட்டின் பாதுகாப்பை பற்றியா அறிந்து கொள்ள முடியாது?.

அப்போ அன்னைக்கு ஒருநாள் நேத்ரா ட்ரஸ்ல இருந்த சேற்று கரை எப்படி வந்தது என்று அபிமன்யூ கேட்டான்.

ஷர்மா மறுநாள் நேத்ராவிடம் கேட்ட அதே கேள்விதான் ஆனால் அபிமன்யூ முதல் நாள் இரவே கவனித்துவிட்டான் அன்று மழையும் இருந்தது நேத்ராவின் ஆடையில் சேறும் ஒட்டி இருந்ததால் அவள் வெளியில் சென்று வந்திருப்பதாக உறுதியாகவே நம்பினான்.

அன்னிக்கு நல்ல மழை சார் நான் மரத்துல ஏறும்போது ஒருமுறை கீழ விழுந்துட்டேன் அப்போ என் உடம்பு முழுக்க சேறு... அதோடவே என்கிட்ட சொன்ன மாதிரி நேத்ராவை தூக்கிட்டு போயி அவளோட டிரஸ்ஸிங் ரூமில் படுக்க வச்சேன் மாமா வந்து பெட்ரூம்ல நேத்ரா இருக்கறாளானு பாத்துட்டு போனதும் நேத்ராவை பழைய படி அவ ரூம்ல படுக்க வச்சிட்டு கிளம்பிட்டேன்...அதனால என் மேல இருந்தது அவ மேல ஒட்டிருக்கும்...என்று கூறி முடித்தான்.


அபிமன்யூ குழப்பமாக சக்கரவர்த்தி பார்த்து இப்போ என்ன பண்றது இவன் சொல்றதை பார்த்தா ரோகினி விசாரிச்சா தான் உண்மை தெரியும் போல.

அவ ஒரு பொண்ணு அதுவும் இப்போ அவ மாசமா வேற இருக்குறா போல என்ன செய்றது சக்ரவர்த்தி…

இவனை போலீஸ் ஸ்டேஷன் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு ரோகினி மேல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணி விடுவோமா என்று கேட்டான்.

உடனே சக்கரவர்த்தி நானும் அதுதான் யோசிச்சேன் அபி.. ஆனால் இவன் சொல்ற மாதிரி அவ அக்கா மாசமா இருக்கிற மாதிரி தெரியல அது ரவி சாரை பயமுறுத்த கையில எடுத்த ஒரு ஆயுதம் மாதிரி தோணுது.
அதுவுமில்லாம ரவி சார் பலமுறை அவளோட தகாத உறவு வைச்சிருக்காரு...பணத்துக்காக அவர்கிட்ட ரோகினி பழகியிருந்தா கண்டிப்பா ஏதாவது அவங்க தனியா இருக்கறது போல
ஸ்னாப் ,இல்லனா வீடியோ எதாவது எடுத்து வச்சிருப்பா…


இப்போ அவ மேல கம்ப்ளைன்ட் பண்ணினா அதுவும் வெளிய வர வாய்ப்பு இருக்கு...ரவி சாரை ஒரு தடவை கேட்டுட்டு அவ மேல கம்ப்ளைன்ட் தரலாம்...
ஆனாலும் இனி ரோகினி வாயைத் திறந்தா மட்டும்தான் நமக்கு உண்மை தெரியும் ஆனா அதுக்கு முன்னாடி இந்த வீட்டுல இவனுக்கு ரெண்டு பேரு ஹெல்ப் பண்றாங்க

ஒன்னு நேத்ரா ஒரு ரூம்ல அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கிறவங்க இரண்டாவது இவன் உள்ள வந்து போகும் போது யாரோ ஒருத்தர் செக்யூரிட்டியை ப்ரேக் பண்றாங்க இந்த இரண்டும் யாருன்னு கண்டு பிடிக்கணும் …

ஒவ்வொறு முறையும் நேத்ராவுக்கு. குடுக்கப்பட்ட மயக்கமருந்தோட தாக்கம் அவளை பாதிக்காம இருக்கறதுக்காக நேத்ராவோட கனவுல அவ அம்மா வந்திருக்காங்க அபி….அம்மாக்கள் எப்பவுமே அம்மாவாதான் இருக்காங்க உயிரோட இருந்தாலும் சரி இறந்தாலும் சரி அவங்க பிள்ளைகளோட நலன் மட்டும் தான் அவங்களுக்கு முக்கியம்….என்ற சக்ரவர்த்தி மேலும் தொடர்ந்தான்.

முதல்ல நேத்ரா ரூம் குள்ள யாரெல்லாம் போறாங்க நம்ம செக் பண்ணனும் என்று கூறியவன்…
வெளியில் வந்து நடந்தவற்றை சுருக்கமாக கூற அங்கிருந்த நால்வருமே அதிர்ச்சியில் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டனர் .




கண்டிப்பாக ரோகினி மட்டும் இதை செய்ய முடியாது...வேறு யாரோ அவளுக்கு பின்புலமாக இருந்து செயல் படுகிறார்கள்...அது யார்... எதற்காக வெறும் பணத்திற்காக இது எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் கேசவன் காவல் துறையினரிடம் ஓப்படைக்கப்பட ரவியையும்,நேத்ராவையும் வைத்து முறையாக ரோகினியின் மீது காவல் துறையில் புகார் அளிக்க வைத்துவிட்டு
அபி,சக்ரவர்த்தி இருவரும் ரோகினியைத் தேடி சென்றனர்.



ரோஷித்தும்,ஷர்மாவும் நேத்ரா விற்கும் ஆறுதல் சொல்லி விட்டு ரவியை புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றனர்.

அவர்களை பொறுத்த மட்டில் ரவியின் சபலத்தால் பாதிக்கப்பட்டிருப்பது நேத்ரா வின் வாழ்க்கை அல்லவா...நேத்ராவிற்கு வேறு ஏதாவது ஆகியிருந்தால் ஷர்மாவால் நிச்சயம் தாங்கியிருக்க முடியாது.

ஷர்மாவால் ரவியின் மீது முழு கோபத்தையும் காட்ட முடியவில்லை... இதெல்லாம் ரோகினி ஏன் செய்தால் என்று அறிந்து கொள்ள அவருமே காத்திருக்கிறார்.


செல்லும் பொழுதே அபிமன்யூவை பார்த்த சக்ரவர்த்தி அந்த வீட்ல செக்யூரிட்டி லைன்ல புசுசா யாரையாவது வேலைக்கு சேத்தியா அபி என்று கேட்டான்…


ம்ம்..ஆமா ஒரு மாசம் முன்ன ஒல்லியா இருந்தானே அவன் தான்...
ஆனா அவன் அதிகமா படிக்கல சக்கரவர்த்தி அதுமில்லாம குடும்பம் ரொம்ப கஷ்டமான குடும்பம் அவனை சந்தேக படறியா….


ஏன் கூடாது அபி...ஆனா அவன் ரோகினியோட ஆளானு கண்டுபிடிக்கனும்...ஒருவேளை அவனா இருந்தா கூட நமக்கு நோ யூஸ்….


எப்படி கேசவனுக்கு ஒரே ஒரு வேலையை மட்டும் கொடுத்து அதை மட்டும் செய்ய வைச்சாங்களோ அதே மாதிரி தான் அவனையும் பர்டிகுலர்ஸ் டைம் கேமராவை இன்ஆக்டிவேட் பண்ண வச்சிட்டு ரீ ஆக்டிவேட் பண்ணுனு அனுப்பி வைச்சிருப்பாங்க…


அதுமட்டுமில்ல நைட் டைம்ல நேத்ராக்கு யார் மயக்கமருந்து கொடுத்தாங்களோ….அது மட்டும் தான் அவங்க வேலையா இருந்திருக்கும்…யார் செய்யறாங்க,ஏன் செய்யறாங்கனு அவங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.அதை அவங்க செய்ய மாட்டேன்னு மறுத்திருந்தா வேற ஒருத்தரை செய்ய வச்சிருப்பாங்க...

அவ குடிக்கிற தண்ணி, இல்லனா பால்...ஏன் ரூம் ஃப்ரெஷ்னர்ல கூட
கலந்திருக்கலாம் அது யாருன்னு கண்டு பிடிச்சாலும் நோ யூஸ் தான்


அதனால அந்த ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்கலாமே தவிர சரியான ஆளை கண்டுபிடிக்காத வரை நேத்ராக்கு ஆபத்துதான் என்று கூறி முடித்தான் சக்ரவர்த்தி. பிறகு உனக்கு வேற யார் மேலயாவது டவுட் இருக்கா அபி என்று கேட்டான்.


ம்ம்... எப்பவும் மிஸ்டர் ஷர்மா மேல ஒரு டவுட் இருந்துகிட்டே இருக்கு அது ஏன்னு எனக்கு தெரியல என்னோட யூகம் சரியா இருந்தா நாம ரோகிணியை பார்த்த அடுத்த நிமிஷம் நம்மளோட பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கலாம்னு நினைக்கிறேன் என்றான்.

ம்ம் எனக்கும் இருக்கு அபி...அவர் நேத்ரா மேல காட்டற ஓவர் அக்கறை எதுக்காகனு புரியல...நீ மதுவோட நல்ல க்ளோஸ் தானே ஏதாவது ஷர்மா பத்தி பேசிருக்காங்களா என்று கேட்டான்.


ம்ச்...யார பத்தியுமே பேசினதில்லை. நேத்ராவை பற்றி மட்டும் தான் பேசுவா எனக்கும் அவளுக்கும் நிறையா வயசு வித்தியாசம் இருந்தாலும் கூட எனக்கு அவ ஒரு நல்ல தோழி.


அவளுக்கு இவ்வளவு சீக்கிரமா மரணம் வந்திருக்க வேண்டாம் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அவ பலகீனமான பெண்ணோ கோழையோ கிடையாது .

அவளோட மரணத்திலேயே மிகப்பெரிய புதிர் இருக்கு உண்மையை சொல்லப்போனால் அதை தான் நான் முதல்ல கண்டுபிடிக்கணும்.

ஆனாலும் இறந்துபோன அவளை விடவும் உயிரோட இருக்கற நேத்ராவோட பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனக்கு…என்று சற்று நெகிழ்ந்தவன் ஓகே சக்கரவர்த்தி கேசவன் சொன்ன அட்ரஸ் இங்குதானே இருக்கு என்று கேட்டபடி அட்ரஸை சரி பார்த்தான்.


ம்ம்... என்று கூறிய கூறியவன் சரியாக கேசவன் சொன்ன அட்ரஸின் முன்பு சென்று வாகனத்தை நிறுத்தினான்.

உள்ளேயோ ரோகினி தனது தம்பி பணத்துடன் வருவான் என்று காத்திருக்க சென்றதோ அபியும் சக்கரவர்த்தியும் அவர்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பிறகு யார் நீங்கள் என்று திமிராக கேட்டாள்.

ரோகிணி வயது முப்பத்தி ஐந்து வயது தான் இருக்கும் ஆனால் பத்து வயதை குறைத்து காட்டும் படி தோற்றம்...
அவள் அணிந்திருந்த ஆடையா... இல்லையென்றால் முகத்திற்கு என்றே தனியாக செய்திருந்த ஒப்பனையா தெரியவில்லை... இருவருமே ரோகினியை கண்டதும் இந்தப் பெண்ணிடமா ரவிச்சந்திரன் விழுந்தார் அவரின் டேஸ்ட் ஏன் இவ்வளவு மட்டமாக இருக்கிறது என்றுதான் தோன்றியது அந்த அளவிற்கு ரோகிணி பக்கா லோக்கல் பெண்ணாகத் தெரிந்தாள்.

சிறிய அளவில் ஒரு கருப்பு நிற பாவாடையும் மேலே ஒரு வெள்ளை நிற டிசர்ட் மட்டுமே அணிந்திருந்தாள்.பொருத்தமே இல்லாதவாறு அடர் சிவப்பில் உதட்டு சாயம் வேறு...அவளின் தோற்றத்தை ஆராய்ந்த படி இரு ஆண்களும் நிற்க மீண்டும் ரோகினியின் குரல் மிரட்டும் தோணியில் வந்தது.

கேட்டுகிட்டே இருக்கறேன் யார் நீங்க என்று மிரட்டியபடி வாசல்வரை வந்தவளிடம் கேசவன் தான் எங்களை அனுப்பி வைத்தான் என்று சொல்லவும் அப்படியே வாய் மூடினாள்.

என்ன உளறல் இது...யார் கேசவன் என்று கேட்டாள் ‌.

சக்கரவர்த்தி சிரித்தபடியே இப்போ உன் மாமியார் வீட்ல இருந்து வந்து சொல்லுவாங்க அவங்ககிட்ட கேளு..யார் கேசவன்னு என்று கூறியபடி காவல் துறைக்கு அழைக்க


பயந்த ரோகினி இருவரையும் ஒருசேர வெளியே தள்ளிவிட்டபடி வீட்டினுள்ளே ஓடத் தொடங்கினாள்.

இரு ஆண்களுக்குமே ஒரு நிமிடம் சற்று பிரமித்தனர்.ரோகினி பார்க்க தான் ஒல்லியாக சிறிய தேகத்தைக் கொண்ட சிறு பெண் போல் இருந்தாள்.

ஆனால் இருவரையும் தள்ளி விடும் போதே தெரிந்தது அவளின் பலம்…அதுவும் கருவை தாங்கி இருக்கும் பெண்ணுக்கு இவ்வளவு வலு எங்கிருந்து வந்தது... அவளின் செயலே காட்டிக் கொடுத்தது அவள் தற்சமயம் வரை கர்ப்பம் இல்லையென்று...இப்பொழுது தப்பி செல்லும் அவளை என்ன செய்வது என்று இரு ஆண்களுமே ஒரு சில வினாடிகள் யோசித்தனர். தனியாக இருக்கும் ஒரு பெண்ணை எப்படி கையாள்வது.

அவளைப் போல் இவர்களால் அவளின் மீது பலத்தைக் காட்ட முடியாது காவல்துறையினர் வரும் வரை இவர்களால் வெளியேவும் இருக்க முடியாது அவள் தப்பித்துச் சென்று விட்டால் பிறகு நேத்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் ஒரு புதிராகவே நின்று போய்விடும் என்ன செய்வது என்று இருவரும் மாறி மாறி ஒருவரை பார்த்துக் கொண்டிருக்க


அபிமன்யூ தான் துணிந்து சக்கரவர்த்தி நீ வெளிய நின்னு போலீஸ் வந்தாங்கன்னா உள்ள கூட்டிட்டு வா நான் அதுக்குள்ள ரோகிணி தப்பிச்சு போகாத மாதிரி அவள புடிச்சு வைக்கிறேன் என்று கூறியபடி அவளின் பின்னே ஓடினான்.

அவள் இருந்தது ஓரளவிற்குப் பெரிய வீடு மற்றும் ஒரு வரிசையாக வீடுகள் இருக்கும் பகுதி... கையில் கிடைத்தவற்றை எல்லாம் தள்ளி விட்டபடி முன்னே ஓடிக் கொண்டிருந்த ரோகினியின் வேகம் அபிமன்யூவிற்கு பிரமிப்பை கொடுத்தது வில்லீலிருந்து செல்லும் அம்பைப் போல இருந்தது.
அவனின் வளர்ந்த கால்களால் கூட ரோகிணியை பிடிக்க முடியவில்லை. கடைசியாக யோசித்தவன் கையில் கிடைத்த ஒரு பொருளை தூக்கி அவள் மீது வீச சரியாக பின் மண்டையில் அடித்தது.

வலியில் ரோகிணியின் ஓட்டம் தடைப் பட பின் மண்டையை ஒரு கையால் அழுத்திப் பிடித்தபடி அபிமன்யூவை தான் பார்த்தாள் பிறகு யோசிக்காமல் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.

பின்னே சென்ற அபி அவளைத் தேட இப்பொழுது ரோகிணி அந்த வீட்டில் இருந்த சிறிய ரக கத்தியை கையில் எடுத்தபடி பக்கத்துல வந்தா குத்திடுவேன் என்று மிரட்டத் தொடங்கினாள்.

அபியோ பயமில்லாமல் முன்னேறிச் செல்ல எப்படியும் அவன் தன்னை மடக்கி விடுவான் என்று புரிந்து கொண்டவள் யோசிக்காமல் அவளின் கழுத்தை நோக்கி கத்தியை திருப்பினாள்.

அபி சுதாரித்து அவளை காப்பாற்றும் முன் கத்தி அவளின் இடது கழுத்தை பதம் பார்த்திருந்தது ரத்தம் பீச்சியடிக்க கத்தியை மேலும் கழுத்தில் அழுத்தியபடியே ரோகினி கீழே சாயவும் சக்கரவர்த்தி பெண் காவலர்களை அங்கே அழைத்து வரவும் சரியாக இருந்தது.


என்னாச்சி அபி என்று பதறியபடி சக்ரவர்த்தி ஓடி வர

டே திடீர்னு அவளுக்கு அவளே கத்தியை வச்சி குத்திகிட்டா என்று கூறியபடி ஒரு சைடாக ஏறியிருந்த கத்தியை பிடுங்கி வீசிய அபி அங்கிருந்த ஒரு துணியை எடுத்து கழுத்தோடு சேர்த்து அழுத்தி பிடித்தான். பிறகு ரோகிணியை அப்படியே இருகைகளிலும் குழந்தையை போல தூக்கினான் .

ஆனால் அப்பொழுதும் கூட ரோகினி முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். அவள் கழுத்தில் இருந்து வரும் ரத்தம் இந்த நேரத்தில் கூட அவளின் பிடிவாதம் இதையெல்லாம் கண்ட அபிக்கு கோபம் மட்டுமல்ல கண்களில் இருந்தும் ஏனோ காரணமே இல்லாமல் கண்ணீரும் சேர்ந்து வந்தது…

ஹேய்...ப்ளீஸ் முரண்டு பிடிக்காத உன்னை நாங்க எதுவுமே செய்யப்போறது இல்ல ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க தான் உன்கிட்ட வந்தோம் ஆனா நீ இப்படி பயந்து ஓடி உன்னை நீயே காயப்படுத்திப்பனு நிஜமா எதிர்பார்க்கல ப்ளீஸ் உன்னை மறுபடியும் கஷ்டப்படுத்திக்காத…

கேசவன் உன்னை தூக்கினா இப்படிதான் நீ பண்ணுவியா…என்று கேட்க ரோகினிக்கு என்ன புரிந்ததோ அப்படியே கை கால்களை அசைப்பதை நிறுத்திவிட்டு மௌனமாக கண்மூட ஆரம்பித்தாள் அளவுக்கதிகமான ரத்தப்போக்கும் பயத்தாலும் உடனடி மயக்கத்திற்கு சென்றாள்.


அபிமன்யூ கண்ணீருடனே சக்கரவர்த்தியை பார்த்து கத்தினான்.டேய் சீக்கிரம் போய் காரை ஸ்டார்ட் பண்ணு என்று கூறியபடியே ஓட வர அவனு க்கு முன்பாக சக்கரவர்த்தி வேகமாக சென்று காரை இயக்கினான்.


காவலர்களுக்கு என்ன ஏது என்று எதுவுமே புரியவில்லை ...ஆனாலும் வாகனம் ஒட்டி வரும் சக்ரவர்த்திக்கு வழியை ஏற்படுத்தி கொடுத்த படி மருத்துவமனை நோக்கி அவர்களின் வாகனத்தில் முன்னே செல்ல
தொடங்கினர்.


காரின் மற்றொருபுறத்தில் வேகமாக ரோகிணியுடன் ஏறி அமர்ந்த அபிமன்யூ.. ரோகினியின் கழுத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். ஏனோ ரோகினி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டது அவனுக்கு அந்த அளவு வலித்தது.

யாராக இருந்தால் என்ன உயிர் என்பது பொதுவானது தானே அதை காயப்படுத்த யாருக்குமே உரிமை இல்லையே என்று அவன் நினைத்திருந்தான் ஏதோ ரோகினிடம் வந்து நேத்ராவை பற்றி சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்று வந்தால் அவள் இப்படி ஒரு செயலை செய்வாள் என்று அவன் கனவா கண்டான்.

அந்த நேரத்திலும் கூட அபிமன்யுவின் மூளை நன்றாகவே வேலை செய்தது இவர்கள் இங்கே வருவார்கள் என்பதை யாரோ ரோகினிக்கு சொல்லி இருக்கிறார்கள் .


தம்பி வந்திருப்பான் என்று வந்தவள் இவர்களை பார்த்ததும் பயந்து ஓடி இருக்கிறாள் யார் சொல்லியிருப்பார்கள் .


கேசவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றதை ஏன் இவளிடம் மறைத்தார்கள். தாங்கள் வருவதைப் பற்றி ரோகிணியிடம் சொன்னவர்கள் ஏன் கேசவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதை கூறவில்லை கேசவன் மாட்டிக்கொண்ட விஷயத்தையும் கூறவில்லை அப்படி என்றால் நான் இவளை தேடி வருவேன் என்பதை ஏற்கனவே ரோகினி யூகித்து இருந்தாளா?

அவள் யூகித்து இருந்தால் என்றாள் ஏற்கனவே என்னை பற்றி அவளுக்கு தெரியுமா…


அந்த வீட்டில் ரவி ஷர்மா ரோகித் நேத்ரா இவர்களை தவிர வேறு யாருமே இல்லை…இதில் நேத்ரா அப்பாவி….ரோஷித்துக்கு ரோகிணியை தெரிய வாய்ப்பில்லை... ஷர்மா பெண்களின் வாசம் அறியாதவர்...கண்டிப்பாக ரோகிணி போன்ற பெண்கள் பக்கம் திரும்பவே மாட்டார்….

இவர்கள் என்ன பேசினார்கள் என்பது அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது .அப்படியென்றால் ரவி இரட்டை விளையாட்டு விளையாடுகிறாரா…?

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
11

பல்வேறு குழப்பங்களுக்கும் இடையில் ரோகிணியை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். முதலுதவியும் உடனடியாக கொடுக்கப்பட்டது பிறகு ரோகிணி நன்கு தெளிந்த பிறகு சில டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்

அதன்பிறகு சம்பிரதாயமாக அவள் மீது ஒரு புகாரையும் கொடுத்து அவளின் பாதுகாப்பிற்கு காவலரை நியமிக்கிமாறு பணிந்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் ரோகிணியின் காவலுக்காக ஒருவரை நியமித்தனர்.

மருத்துவர் ரோகிணியை நன்கு பரிசோதித்து விட்டு ரோகினியின் கழுத்தில் ஒரு பக்கமா மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதால் அவளின் உயிருக்கோ பேச்சுத் திறனுக்கோ எந்த குறைபாடும் கிடையாது இரண்டொரு நாளில் காயம் ஆறியபின் தாராளமாக உங்களின் விசாரணையை தொடங்கலாம் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

உடனே அபிமன்யூவும் சக்கரவர்த்தியும் அந்த இரண்டு நாட்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

இங்கு நேத்ரா தந்தையுடன் சுத்தமாகப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.

ஏனோ அவளுக்கு தனது தந்தை தாய்க்கு செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சிறுவயதிலிருந்தே நேத்ராவுக்கு அவளின் தாயை பிடிக்காது தான் அதற்காக தந்தை செய்ததை நியாயம் என்று அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தாயின் மீது மிகப்பெரிய கோபம் இருக்கிறது ஏன் அவர் தன்னை சிறுவயதிலேயே ஹாஸ்டலில் சேர்த்து கொடுமைப்படுத்தினார்.

ஏன் ஒருமுறை கூட தன்னை வந்து அவர் பார்க்கவில்லை அந்த அளவிற்கு கல்மனம் படைத்தவரா தனது தாய் என்றெல்லாம் கூட நினைத்து வெறுத்து இருக்கிறாள்.

ஆனால் தந்தை செய்த செயலை வைத்து பார்க்கும் பொழுது தாயை மணம் முடித்த பின்பு மதுவை அம்போவென விட்டிருப்பார்...அந்த கோபத்தை தான் தாய் தன் மீது திருப்பி இருக்கிறார் என்று தாயின் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்டவள் அவளின் அறையிலேயே அடைந்து கொள்ள ஆரம்பித்தாள்.

இதோ இந்த இரண்டு நாட்களாக அவளுக்கு எந்தவித கனவும் வரவில்லை நிம்மதியாக உறங்கி எழுகிறாள்.

தாயின் புகைப்படத்தை மீண்டும் சரிசெய்து அவளது அறையில் வந்து மாட்டிவிட்டாள். என்னதான் மதுமதி சிறுவயதில் நேத்ராவிற்கு கிடைக்கவேண்டிய பாசத்தை கொடுக்க மறுத்து இருந்தாலும் நேத்ராவிற்கு ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது கனவாக வந்து அவளை காத்தார் அல்லவா அதை நினைத்து மிகவுமே நெகிழ்ந்திருந்தாள் நேத்ரா.


முகத்தை கூட பார்க்க மறுக்கும் மகளைத் தேடி ரவி வந்தவர் ஏன் என்கிட்ட இப்படி பேசாம என்னை உயிரோட கொல்லற நேத்ரா என்று உரிமையாக அவளிடம் நியாயம் கேட்டார்.


என் அம்மாவுக்கு நீங்க ஒரு ஒரு நல்ல கணவராகவும் இல்லை….எனக்கு ஒரு நல்ல அப்பாவாவும் இல்லை...ஏன் நீங்க ஒரு நல்ல மனிதர் கூட இல்லை அப்படி இருக்கும்போது நான் ஏன் உங்க கிட்ட பேசணும்... கட்டின மனைவிக்கும் நீங்க உண்மையா இல்லை இடையில சேர்த்துகிட்ட பொண்ணுக்கும் நீங்க உண்மையா இல்லை என் பார்வையில் உங்களை நான் ஒரு ஆம்பளையா கூட மதிக்கல அப்பா…

நீங்க அம்மாவுக்கு பண்ணின கொடுமையோட பலன் என்ன தெரியுமா ?அவங்க உங்க மேல இருந்த கோபத்துல என்னை பழி வாங்கினாங்க…

நியாயமாய் எனக்கு கிடைக்கவேண்டிய பாசத்தை எனக்கு கொடுக்க மறுத்தாங்க எந்த வயசுல ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவோட அன்பு தேவைப்படுமோ அந்த வயசுல என்னை முழுசா அவங்ககிட்ட இருந்து விலக்கி வைச்சாங்க...

எத்தனை நாள் அம்மாவை தேடி இருக்கேன் தெரியுமா …?

எத்தனை நாள் அவங்க பாசத்துக்காக ஏங்கிருக்கேன் தெரியுமா…?

இது எல்லாமே நீங்க அம்மாக்கு செஞ்ச கொடுமையோட பலனாக என்கிட்ட இருந்து வலுக்கட்டாயமா பறிக்கப்பட்டது.


இனி நான் உங்ககிட்ட பேச போறது கிடையாது ஒரு வருஷம் கழிச்சு தானே நான் கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னேன்... வேணாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணி ஷர்மா அங்கிள் வீட்டுக்கு அனுப்பிடுங்க.

அதுக்கு அப்புறம் உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா கூட நான் வந்து உங்கள பாக்க மாட்டேன் நீங்களும் அதே போல தான்...இனிமே நீங்க எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சேர்த்துக்கோங்க...


உங்களை இனி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை ஆனா தயவு செஞ்சு என்னை மட்டும் தனியா விடுங்க இல்லனா இதுக்கு முன்னாடி நான் தற்கொலை முயற்சி பண்ணினதா தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்க இனி உண்மையிலேயே தற்கொலை முயற்சி பண்ணிடுவேன் என்று முகத்தில் அடித்த படி மிரட்டினாள்.

இங்க பாரு நேத்ரா உனக்கு நான் ஒரு நல்ல அப்பாவா இல்லைன்னு சொல்லு ஒத்துக்கிறேன் சபலத்தால வேறொரு பெண்ணோடு தொடர்பு வைச்சிகிட்ட பெண் பித்தன்னு கேவலமா சொல்லு அதையும் ஒத்துக்குறேன்…

ஆனால் மதுவுக்கு மட்டும் நல்ல கணவனாக இல்லேன்னு சொல்லாதே என்னால ஒத்துக்க முடியாது...நான் எந்த அளவுக்கு மதுவை காதலிச்சேனு அவளுக்கு தெரியும்... கல்யாணத்துக்கு அப்புறம் அவளை எந்த அளவுக்கு மதிச்சேன் என்கிற விஷயம் மதுவுக்கும் எனக்கு மட்டும்தான் தெரியும் தயவுசெஞ்சு எங்களோட காதலையோ திருமண வாழ்க்கையையோ கொச்சை படுத்தாத...அவளுக்கு நான் குடுத்த சுதந்திரத்தோட உச்சம் தான் அவ என் அனுமதியை கூட கேக்காம உன்ன கொண்டு போய் ஹாஸ்டல்ல சேத்தினது…
அப்போ கூட நீ எங்க படிக்கறங்கற விஷயத்தை கடைசி வரைக்கும் என்கிட்ட சொல்லல…

ஷர்மாதான் கண்டுபிடிச்சு என்னை உன் ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணுவான் அதை கூட நான் மதுகிட்ட சொல்லுவேன் ஆனா அவ ஸ்கூல்ல உன்னை பாக்க விடாத மாதிரி பண்ணிட்டு உடனே ஸ்கூல் மாத்திடுவா…


அப்போக்கூட ஏன் இப்படி எல்லாம் பண்றனு மதுகிட்ட நான் கடிஞ்சி ஒரு வார்த்தை கேட்டதில்லை அது தெரியுமா உனக்கு.

ஆனால் இது எதுவும் தெரியாமல் நான் அவளை அதிகமாக கொடுமைப் படுத்தியதால தான் அந்த கோபத்தை உன்மேல காமிச்சதா அபாண்டமா பழி சுமத்தாத நேத்ரா எதையும் தெரிஞ்சுக்காம பேசாத என்று கண் கலங்க பேசியவர் உனக்கு என்னை பற்றியும் மதுவை பற்றியும் தெரியனும்னா எங்களோட கடந்த கால வாழ்க்கையை நீ தெரிஞ்சிருக்கணும் உனக்கு விருப்பம் இருந்தா கேளு நான் சொல்றேன் என்று அவரின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி கூறத் தொடங்கினார் சுவாரசியமே இல்லாமல் நேத்ரா அதை கேட்கத் தொடங்கினாள்.

ரவிச்சந்திரன் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஒரு கிராமத்தில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்.தந்தையுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் ,ஒரு தங்கை,தந்தை வழி பாட்டி,தாத்தா,இவரின் தாய் தந்தை கொண்ட குடும்பம் அது...
நன்கு வசதியான விவசாய குடும்பம் அதுமட்டுமின்றி பரம்பரை பரம்பரையாக நூற்பாலை வைத்து நடத்தும் குடும்பமும் கூட அவர்களது நூல் உற்பத்தி தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதுமே சென்று கொண்டிருந்தது.

அவரது பெரியப்பாவிற்கு மூன்று மகன்கள்...அத்தைக்கு இரண்டு மகள்கள்... ரவிச்சந்திரன் உடன் பிறந்தவர்களும் யாரும் கிடையாது இவர் மட்டுமே தாய்வழி சொத்து அதிகம் அதனால் எல்லாமே அவருக்கு சுலபமாக கிடைத்தது.

சிறுவயதிலேயே நல்ல கல்வி நல்ல கல்லூரி என ஓரளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துகொண்டிருந்தார் ரவிச்சந்திரன் அப்பொழுது கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து டெல்லி செல்ல நேர்ந்தது அங்குதான் ஒரு பொருட்காட்சியில் வைத்து ஷர்மாவை கண்டார் ஏனோ ஷர்மாவிற்கு ரவியை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

ரவிக்கும் அவ்வாறுதான் ஷர்மாவின் நிறம் அவரின் அந்த காந்த கண்கள் அவரின் கட்டு மஸ்தான உடம்பு என ஷர்மாவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டார் ரவிச்சந்திரன்‌.

இவர் டெல்லியில் தங்கியிருந்த பதினைந்து நாட்களிலும் ஷர்மாவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை .

ஷர்மாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக துணிகள் தயாரித்து அதை உலகமெங்கிலும் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரியதொரு பணக்காரகுடும்பம்.

இவரது குடும்ப தொழிலோ துணிகளுக்கு தேவைப்படும் நூல் பாலைகளை செய்து கொடுக்கும் வேலை.

இருவரின் குடும்ப தொழில்களும் ஓரளவு ஒத்துப் போக அவர்களின் நெருக்கம் மிகவும் அதிகம் ஆனது அப்பொழுதுதான் ஷர்மா தான் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிப்படிப்பு முடிந்ததும் மேல் படிப்பாக தங்களின் குடும்பத் தொழிலான துணிகளை பற்றிய படிப்பை படிக்கப் போவதாக ரவிச்சந்திரனுக்கு கூறி அவரையும் அதையே எடுத்துப் படிக்கும் படி அறிவூட்டினார்.

ஷர்மா அப்பொழுதெல்லாம் ரவிச்சந்திரனிடம் கூறுவது இந்தியாவின் மேற் பகுதியான காஷ்மீரீல் இருக்கும் மிகப்பெரிய ஆப்பிள் வியாபாரி உடுத்தும் ஆடை முதல் கடைக்கோடி கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு ஏழை விவசாயி அணியும் துணி வரை நாம் தான் முடிவு செய்யவேண்டும்.

அவர்கள் போடும் துணியின் தரம் நல்லதாக இருக்க வேண்டுமா இல்லை என்றால் மோசமாக இருக்க வேண்டுமாஎன ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நாம் தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுவார் அவரின் அந்தப் பேச்சு ரவிச்சந்திரனை மிகவும் ஈர்க்கும்.



நாள் போக்கில் ரவிச்சந்திரனுக்கும் அந்த படிப்பின் மீது ஆசை வந்தது அதற்காகவே பிரத்தியேகமாக இருந்த டெல்லியில் இருந்த கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட போவதாக ஷர்மா கூற அதை முழுமனதாக கேட்டுக்கொண்ட ரவிச்சந்திரன் இங்கு வந்தது தாய் தந்தையிடம் கூற அவர்களுக்கு பெரியதாக எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை .

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே மிகவும் எதிர்த்தனர் ரவியின் அத்தைக்கு பல நாளாகவே ஒரு எண்ணம்.

மூத்த மகளை பெரிய அண்ணனின் ஒரு மகனுக்கு ஏற்கனவே கட்டி கொடுத்துவிட்டார் இளைய மகளை எப்படியாவது ரவிச்சந்திரனுக்கு கட்டிக் கொடுத்து விட்டால் அவர்களது சொத்து முழுவதுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று...


அதனால் எங்கே மருமகன் வெளியூர் சென்று படித்தால் தனது மகளை விடுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வாரோ என்று பயந்தவர் இவன் டெல்லி செல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையுமே செய்து பார்த்தார்.


ஆனால் அவருக்கு பலன் பூஜ்ஜியமாக கிடைத்தது .


கடைசியாக அவர் மனதில் இருந்த ஐயத்தை ரவிச்சந்திரனிடம் கூற அவன் சிரித்தபடிமே உங்களது இளைய மகளின் மீது எனக்கு அதுபோல் எந்த விதமான எண்ணமும் வந்ததே கிடையாது.


அது மட்டுமல்ல கண்டிப்பாக நான் பிற மாநிலத்தை பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் நான் பிறந்து வளர்ந்த மண்ணில் இருக்கும் ஒரு தமிழ் பேசும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் அதுவும் உங்கள் அனைவரையும் சம்மதத்தோடு என்று கூறிவிட்டு டெல்லி சென்றுவிட்டார்.


ரவிச்சந்திரன் டெல்லியில் கல்லூரியில் மேல் படிப்பை முடித்தவர் அங்கேயே ஷர்மாவுடன் சில நாட்கள் தங்கி அவர்களின் தூணி உற்பத்தியை பற்றி கத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

இரண்டு ஆண்டுகளும் ஷர்மா உடனே தொழிலைக் கத்துக் கொண்ட ரவி ஷர்மாவுடன் சேர்ந்து அங்கேயே அவருக்கென புதியதொரு தொழிலையும் ஏற்படுத்திக் கொண்டார.

ஷர்மாவின் அளவுக்கு அதிகமான பணம் ரவியின் உழைப்பு இரண்டும் சேர அவர்களுக்கு ஓரளவு லாபமும் கொழிக்க தொடங்கியது.

ரவி அவ்வப்போது கோவை வந்து செல்வார் …. அவரின் குடும்பத் தொழில் மொத்தமும் அவர்களில் பெரியப்பாவின் வசம் சென்று விட்டது.

அது மட்டுமல்லாமல் அத்தையின் இளைய மகளையும் பெரியப்பாவின் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பச் சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரியப்பாவின் குடும்பத்துடனே சேர்ந்து விட்டது.


இவர்களுக்கு சேர வேண்டிய பங்காக சில நிலபுலங்களையும்...தங்குவதற்காக ஒரு வீட்டுடன் நன்கு லாபம் கொடுக்கும் ஒரே ஒரு காட்டன்மில்லை மட்டும் விட்டுக் கொடுத்தனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் ரவியின் பெற்றோர் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அவர்களுக்கு மகன் ஆரம்பித்த தொழிலிலேயே நல்ல வருமானமும் வர கோவையில் இருக்கும் சொத்துக்களை பெரியப்பா உடனே அவரது தந்தை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.


சொத்துக்களை மட்டும்தான் பிரித்தார்களே ஒழிய குடும்பத்தை பிரிக்கவில்லை ஒரே சமையல் தான் ஒரே வீடு தான் அனைவரும் வசிப்பது...

அனைவரது சொத்துக்களையும் நிர்வகிப்பது பெரியப்பாவும் அவர்களின் பிள்ளைகளும் தான் அத்தையும் மகள்கள் இருவரையுமே பெரியப்பாவின் வீட்டில் மருமகள் ஆகிவிட அத்தைக்கு பெரியதாக எந்த கவலையும் இருக்கவில்லை.
சொத்தைப் பற்றிய ஆசையும் இல்லை மகள்கள் நன்றாக இருந்தாலே போதும் என அந்த வீட்டிலேயே ஓரமாக ஒதுங்கி கொண்டார்.

ரவியின் தாய் தந்தைக்கும் அப்படித்தான் மகன் ஆரம்பித்த தொழிலிலேயே நன்கு வருமானம் வரும் படியால் குடும்ப சொத்துக்கள் பெயருக்கு இருந்தால் போதும் மற்றபடி அதில் வரும் லாபம் எல்லாம் தேவையில்லை மூன்று மகன்களை வைத்திருக்கும் தனது அண்ணனே பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து இருந்தனர்.
அதனால் அந்த குடும்பம் உடையாமல் நல்ல சந்தோஷத்துடன் இருந்தது.


ஆனாலும் அவரது பெரியப்பாவிற்கும்...அத்தைக்கும் எப்பொழுதுமே மனதில் ஒரு சிறு பயம் இருக்கத்தான் செய்தது. பெரியவர்களும் ரவிச்சந்திரனும் சொத்துக்கள் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் கூட

நாளை ரவிச்சந்திரனை திருமணம் செய்து வரும் பெண் இதையெல்லாம் கணக்கு போட்டு வாங்கிக் கொண்டால் என்ன செய்வது அதனால் மிகவும் அதிகம் படித்த தெளிவான பெண்ணை இந்த வீட்டிற்கும் மருமகளாக கொண்டு வரக்கூடாது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டனர்.

இப்படியாக ரவிக்கு இருபத்தி வயது முடியும் தருவாயில் அவனுக்கும் ஒரு திருமணத்தை செய்து வைத்துவிடலாம் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர முடிவு எடுத்தனர் ஒருபுறம் ரவிச்சந்திரனின் பெரியப்பாவும் அத்தையும் சேர்ந்து மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் அதிகம் படிக்காத பெண்ணை தேடத் தொடங்கியிருந்தனர். அப்பொழுதுதான் அந்தப் பெண் தங்களுக்கு கீழ் அடிபணிந்து இருப்பாள் என்று…


ரவிச்சந்திரனின் தாய் தந்தையோ அவனுக்கு நன்கு படித்த வசதியான வீட்டுப் பெண்ணை மருமகளாக கொண்டு வர வேண்டும் ...நாகரிகத்தின் உச்சத்தில் அந்த பெண் இருக்க வேண்டும்...அப்படி இருந்தால் தான் ரவி செய்யும் தொழிலுக்கும் அவன் வெளியே அப்பெண்ணை அழைத்து சென்று வரவும் அவள் பொருத்தமாக இருப்பாள் என்று அவர்கள் ஒருபுறம் மும்புரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஆனால் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பார்த்த எந்த பெண்ணையும் பார்க்காமலே
அவர்களது காட்டன் மில்லில் மேனேஜராக பணிபுரியும் நடேசனின் மகளான மதுமதியை கண்டவுடன் காதல் கொண்டான்.


ஷர்மாவையும் இந்த முறை அவன் கோவைக்கு அழைத்து வந்திருந்தான்...அவனுடன் கோவையை சுற்றி வந்தவன் கடைசியாக அவர்களது காட்டன் மில்லை சுற்றிப் பார்க்கவும் அழைத்து வந்திருந்தான்.


அவர்களின் காட்டன் மில்லை சுற்றிலும் அழகிய ஒரு மல்லிகை தோட்டம் இருக்கும் அதனின் முடிவில் ஒரு தோப்பு வீடும் இருக்கும் அதுவும் ஓரளவுக்குப் பெரிய வீடுதான் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் குடும்ப உறுப்பினர்கள் வந்து அதை கவனித்துக் கொள்வதற்காக அந்த வீட்டில் தங்குவது உண்டு.


அதே சமயம் மல்லிப்பூ பூத்து குலுங்கும் வேளையில் ஆட்கள் போட்டு அதை பறிப்பதற்கும் அதை மேற்பார்வை செய்வதற்கும் வீட்டில் பெண்கள் அவ்வப்போது வந்து அந்த வீட்டில் தங்குவது உண்டு.


இந்த முறை ஷர்மாவை அழைத்து வந்ததால் தங்கள் வீட்டில் தங்க வைப்பது சரிவராது என்று நினைத்த ரவிச்சந்திரன் ஷர்மாவுடன் அந்த தோப்பு வீட்டிலேயே தங்கிக் கொண்டான்


அப்பொழுதுதான் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு மதுமதி வந்தாள்.மல்லிப்பூ தோட்டத்தில் பூக்களுக்கு போட்டியாக நடந்து வந்த மதுமதியை அதிசயமாக பார்த்தார் ரவி. அழகிய இரு ஜடைகள் போட்டு தனித்தனியாக இரண்டு ஜடைகளுக்கும் பூவை தொங்கவிட்டபடி பாவாடை தாவணியில் வலம் வந்த மதுமதியை பார்த்து உடனே பிடித்து விட்டது...

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடப்பு ஆண்டில் தான் எழுதியிருந்தாள் அதில் அவள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மேல் படிப்பை பற்றி யோசிக்க வில்லை...தந்தை கூட கேட்டுவிட்டார் கல்லூரிக்கு செல் உனது மதிப்பெண் அந்த அளவிற்கு குறைவு இல்லை தாராளமாக நீ எதிர்பார்க்கும் படிப்பை படிக்க முடியும் என்று ஆனால் மதுமதியோ உறுதியாக மறுத்துவிட்டாள்.

தான் இனி மேற்படிப்பை படிக்கப் போவதில்லை உங்களுக்கு துணையாக வீட்டு வேலையில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றவள் தினமும் தந்தைக்கு அவள் கையாலேயே உணவு சமைத்து கொண்டு வருகிறாள்.

இப்பொழுது அவளுடன் படித்த பெண்கள் எல்லாம் இப்பொழுது முதலாமாண்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்...

அதனால் அவளை மேற்கொண்டு வற்புறுத்தாத அவளின் தந்தையோ தாயில்லாத மதுமதியை சீக்கிரம் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்க அதே வேளையில்
மதுமதியை பின்தொடர்ந்து சென்ற ரவி அவள் தங்கள் நூற்பாலையில் பணிபுரியும் நடேசனின் மகன் என்பதை அறிந்து கொண்டான்…

பிறகு அவனின் தாயிடம் சென்று மதுமதியை பற்றிக் கூற அவருக்கும் மதுமதியை ஏற்கனவே தெரியும் அவ்வப்போது இவர்கள் தோப்பு வீட்டிற்குச் செல்லும் பொழுது சிறு குழந்தையாய் தோட்டத்தில் விளையாடியபடி தந்தையைக் காண வருவாள் மது அப்பொழுது இவர்களை கண்டால் மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் அனைவரிடத்திலும் பழகுவாள்.


எதையுமே இனாமாக பெறவே மாட்டாள்... யாரையும் தலைநிமிர்ந்தும் பார்க்க மாட்டாள்...அதனாலே அவளை ரவியின் குடும்பத்தினருக்கு மிகவும் பிடிக்கும்.

தாயில்லா பிள்ளை என்ற கரிசனம் வேறு அவள் மீது இருந்தது அதனால் மகனுக்கு பிடித்த பிறகு அந்தஸ்து எங்கிருந்து வந்தது என்று நினைத்த பெற்றோர்கள் உடனடியாக ஒத்துக் கொண்டனர் .


அவனின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் சௌகரியமாக போய் விட்டது ஏனென்றால் மது மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவள் அதுமட்டுமின்றி அதிக படிப்பும் கிடையாது அரசு பள்ளியில்தான் படித்திருக்கிறாள் அதனால் சுலபமாக அவளை ஏமாற்றி சொத்துக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிய பெரியவர்கள் உடனே திருமணத்திற்கு சம்மதித்தனர்.


அதன்பிறகு ரவியின் குடும்பத்தினர் முறைப்படி நடேசனிடம் சென்று பெண் கேட்க அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் மகளின் சம்மதம் முக்கியம் ஆயிற்றே அதுவும் பதினெட்டு வயது நிரம்பாத ஒரு சிறுபெண் வேறு என்று பலவாறாக யோசித்தவர் அவர்களிடம் மகளிடம் அனுமதி கேட்பதற்க்காக சிறிது நாட்கள் அவகாசம் கேட்டார்...அவளுக்கு பதினெட்டு வயது முடிய சிலநாட்களே இருக்கிறது அது வரை சற்று பொறுமை காக்கவும் என மன்னிப்புடன் கேட்டுக்கொண்டார்.

இவர்களும் பெண்ணிற்கு பதினெட்டு வயது முடிந்ததும் அவளிடத்தில் கூறி அவள் சம்மதத்துடனே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்... என்றபடி வந்து விட்டனர் .


மதுவின் தந்தை சம்மதம் கூறும் வரை ரவிக்கு அங்கிருந்து டெல்லி கிளம்ப மனம் வரவில்லை அதனால் தோப்பு வீட்டிலேயே தங்கிக் கொண்டான் .


ஷர்மா ஒருபுறம் கிராமத்து அழகையெல்லாம் கண்டு வியந்த படி மல்லிகை பூக்களின் நடுவே சுற்றி வந்து கொண்டிருக்கிறான்.

ஷர்மாவிடம் ரவி நீ வேண்டுமானால் டெல்லிக்குச் செல்... நான் சிறிது நாட்கள் என் தாய் தந்தையுடன் தங்கி விட்டு பிறகு வருகிறேன் என்று கூற ஷர்மா முற்றிலும் மறுத்துவிட்டார் தனக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்திருப்பதாகவும் இங்கேதான் தனக்கு மன நிம்மதி கிடைக்கிறது நீ எத்தனை நாட்கள் கழித்து டெல்லி கிளம்புகிறாயோ அப்பொழுதே நானும் உன்னுடன் கிளம்புகிறேன்...ஏன் நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்று கேட்க அதன்பிறகு ரவி ஷர்மாவிடம் ஊருக்குத் செல்வதை பற்றி பேசவே இல்லை.


கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை மதுவின் தந்தையின் சம்மதத்துக்காக ரவி காத்திருந்தான்.மதுவிற்கு பதினெட்டு வயதும் நிரம்பியது.

நடேசன் மதுவிடம் நேரடியாக சொல்லிப்பார்த்தார்….தோப்பு வீட்டில் வசிக்கும் எஜமானரின் மகனுக்கு உன்னை பெண் கேட்டிருக்கிறார்கள் என்று…

கேட்ட மதுவிற்கு அவ்வளவு சந்தோஷம்…அவளும் ரவி வந்த நாள் முதலே அவனைப்பார்க்கிறாள் ஏதோ ஒன்று அவனை பார்த்ததும் பிடித்து விட்டது...ஆனால் பெரிய இடம் எதற்கு வம்பு என தனது ஆசையை தன்னோடே வைத்துக் கொண்டாள்.


இப்பொழுது தந்தை சொல்லவும் உடனே ஒத்துக்கொள்ள மனமின்றி
அப்பா இப்பவே ஏன் எனக்கு கல்யாணம் உங்களோட இருக்கனும்னு தான் நான் காலேஜே போகல ஆனா நீங்க அதை காரணம் காட்டி கல்யாணம் பண்ணி வைக்க பாக்கறீங்களே என்று மனதை மறைத்தபடி கேட்டாள்.

உடனே நடேசனும் மகளின் தலையை பாசமாக வருடியபடியே இந்த பாருமா தாயில்லாம உன்னை இது வரை வளர்த்துட்டேன்...இனி அப்பா உன்னை பாதுகாக்கனும்...உன்னை வீட்ல விட்டுட்டு அப்பாவால வேலையே செய்ய முடியல…

அப்பாவுக்கு வர வர ரொம்ப பயமா இருக்குதுமா உன்னை ஒருத்தர் கையில புடிச்சுக் கொடுத்துட்டா இந்த அப்பா நிம்மதியாக வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பேன் என்றார்.

மேலும் தந்தையை எதிர்த்துப் பேச மனம் இல்லாத மதுமதி தலை குனிந்தபடியே உங்க விருப்பம்ப்பா…

உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அவளின் மனமும் ரவியை தானே தேடுகிறது.ஆனால் தைரியமாக வெளியே சொல்ல முடியவில்லை இப்பொழுது தந்தையே வந்து கேட்கவும் உடனே சம்மதத்தை தெரிவிக்காமல் தந்தையை சற்று கலங்க வைத்து விட்டு ஒத்துக்கொண்டாள்.


ஆனால் நடேசனுக்கு மீண்டும் தங்கள் முதலாளியிடம் சென்று திருமணத்தைக் எப்பொழுது வைத்துக்கொள்ளலாம் என்று கேட்க ஒரு சங்கடம்.

மறுபடியும் அவர்களாகவே வந்து கேட்கும் பொழுது சம்மதத்தைக் சொல்லி திருமணத்திற்கான நாள் குறிக்கலாம் என்று அமைதி காத்தார்.

ரவியின் வீட்டிலும் இதையே தான் நினைத்துக் கொண்டிருந்தனர்.
நடேசன் இருந்து திருமணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கும் பொழுது மேற்கொண்டு பேசிக்கொள்ளலாம் ஏன் சும்மா சும்மா அவர்களிடம் சென்று பெண்ணை கட்டிக் கொடு என்று அவசரப் படுத்த வேண்டும் என்று அவர்களும் பொறுமை காத்தனர் இப்படி இருவர் வீட்டிலும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க
பொறுத்துப் பார்த்த ரவி நேரடியாக மதுவை சந்திக்க முடிவெடுத்தான்.


வழக்கம்போலவே மல்லிப்பூ தோட்டத்தில் தனது தந்தைக்கு எடுத்துவந்த உணவுக்கூடையை கையில் வைத்தபடி காக்கா சுற்றியபடி வந்து கொண்டிருக்க ரவியின் மீது மோதுவது போல் வந்தவள் பயத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.


அவளை தூக்கி விட்டவன் அவளின் கைகளை அவனது கைகளுக்குள் பொத்தி வைத்து கொண்டான்.

அவளுக்குள் ரசாயன மாற்றம் உருவாயிற்று... அவளுக்கு ஏற்கனவே தெரியும்...ரவி தன்னை காதலிக்கும் விஷயம் ‌.. இருந்தும் தெரியாதது போல் சுற்றி வந்தாள்.

இன்று அவனை நேருக்கு நேராக சந்திக்கவும் வெட்கம் வந்து ஆட்க்கொண்டது.

ரவி தயங்கியபடி அவளிடம் அவனது காதலை சொல்ல ஆரம்பிக்கவும்...அவனின் காதலை அவன் வாயாலே கேட்க போகும் சந்தோஷத்தோடு அவனையே மது பார்க்க
திடீரென அவளின் முகம் சற்று மாறுபட்டது.

என்ன என்று திரும்பிப் பார்க்க தூரத்தில் ஷர்மா வந்து கொண்டிருந்தார் உடனே அவன் இடத்திலிருந்து கைகளை உதறியபடி வேகமாக செல்ல ஆரம்பித்தாள்.

ரவியிடம் வந்த ஷர்மா என்ன பண்ணின உன்னை பாத்து அந்த பொண்ணு இப்படி பயந்து ஓடறா என்று கேட்டான்.

கொஞ்சம் திருத்திக்கோங்க ஷர்மா சார் அவங்க என்னை பாத்து பயந்து ஓடல... உன்ன பார்த்துதான் பயந்து ஒடறா... என்று கூற ஷர்மாவின் முகம் உடனே மாறியது நான் என்ன பண்ணினேன் அந்த பொண்ணு என்னைப் பார்த்து பயப்பட்டு ஓட என்று சற்று கோபமாக கேட்டார்.

டேய் உடனே கோபப்படாத இதுதான் எங்க ஊர் பொண்ணுங்களோட ஸ்டைல் அவங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சா கூட அடுத்தவங்களுக்கு தெரியாம ரசிக்கனும்னு பாப்பாங்க என்று கூறினார்.

உடனே நெற்றியை சுருக்கியபடி ஷர்மா ரவியிடம் அந்தப் பொண்ணுக்கு இப்போ என்ன புடிச்சது எதை தெரியாம ரசிக்கறா...என்று கேட்டார்.

சிரித்தபடியே ரவி அவ என்னை ரசிக்கறா அதும் உனக்கு தெரியாம என்ன ரசிக்கணும்னு நினைக்கறா…

உளறாத ரவி அந்த பொண்ணு பயந்து ஒடறா….ரசிக்கறாளாம் …என்று கூறினார் ஷர்மா...அவருக்கு இது வரையுமே மதுவை ரவிக்காக பெண் கேட்டதும் தெரியாது...ரவி மதுவை காதலிப்பதும் தெரியாது.மதுவும் ரவியை காதலிப்பதும் தெரியாது..


டேய் சப்பாத்தி நீயும் நானும் இந்த வீட்டுல இருக்குறது அவளுக்கு ரொம்ப நல்லா தெரியும் இருந்தாலும் நாம இருக்கற நேரமா பாத்து ஏன் இந்த வீட்டையே சுத்தி சுத்தி வர்றா சொல்லு...என்று கேட்டார்.

ஏன்….


ஏன்னா ஷீ இஸ் லவ் வித் மீ….என்று புன்னகை பூத்தார் ரவி...

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
12

இது என்ன புதுக்கதை அவ அப்பா இங்கு இருக்கிற மில்லுல தான் வேலை செய்யறாரு அப்பாவுக்கு சாப்பாடு கொண்டுவர இந்த வழியா தான் போவா இந்த வழியா தான் வரணும் நீயும் நானும் இல்லனா கூட அவ இப்படித்தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பா என்று ஷர்மா இறுக்கமாக முகத்தை வைத்தபடி கூறினார்.


ம்கூம் உனக்கு புரிய வைக்க முடியாது சப்பாத்தி மது என்னை காதலிக்கறா நானும் அவளை காதலிக்கிறேன் அது மட்டும் இல்ல எங்க ரெண்டு பேர் குடும்பமும் இந்த கல்யாணத்துக்கு பரிபூரண சம்மதம்...

மது மேஜர் ஆகனும்னு ரெண்டு குடும்பத்துலேயும் அமைதியா இருந்தாங்க…
இப்போ மது மேஜர்... எப்படியும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேரையும் புடிச்சி கட்டிவச்சிடுவாங்க...அதுவரை யாருக்கும் தெரியாம லவ் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கிறேன் என்றார்.

ஒஒஒ அவளும் உன்னை லவ் பண்ணறாளா….ஆல் த பெஸ்ட் டா என்று சந்தோஷமாக வாழ்த்தினார் ஷர்மா.பிறகு அப்படின்னா இனி உன் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் நீ டெல்லி வருவே இல்லையா என்று கேட்டார்.

அதற்கு ரவியும் ஆமா கல்யாணம் பண்ணி மதுவையும் என்னோட அழைச்சிட்டு தான் டெல்லி வருவேன் என்று கூறினார்.

அப்படின்னா நான் டெல்லி கிளம்பறேன் நீ அங்க வந்ததும் உன்னை வந்து சந்திக்கறேன்.

உதைவாங்க போற ஷர்மா... ஒழுங்கு மரியாதையா என் கல்யாணம் முடிஞ்சதும் நீ நான் மதுமதி மூன்று பேரும் சேர்ந்துதான் டெல்லி போறோம்.

இப்போ நீ என்ன பண்ற ஒரு நல்ல ஃப்ரண்டா நீயே போய் அப்பாகிட்ட என் கல்யாணத்தை பத்தி பேசற...அவர் மதுவோட அப்பாபேசனும்னு எதிர்பாக்கறாரு..மதுவோட அப்பா என் அப்பா போய் பேசனும்னு எதிர்பார்க்கறாரு…

இப்படியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசாம இருந்தாங்கன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது நானும் மதுவும் கண்ணிலேயே பார்த்து குடும்பம் நடத்த வேண்டியதுதான் அதனால நீ இப்போ போய் பேசற என்று ஷர்மாவை அனுப்பி வைத்தார்.

ஷர்மாவும் சிறந்த நண்பனாக ரவியின் தந்தையிடம் சென்று திருமணத்தைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் இன்னும் எத்தனை நாள் இதை இப்படியே போட்டு வைப்பீர்கள் என்று திருமணப் பேச்சை ஆரம்பிக்க அதன்பின் ரவிச்சந்திரனின் மொத்த குடும்பமும் அவர்களின் திருமணத்தை பற்றி யோசித்தது.


பிறகு நேரடியாக மதுவின் தந்தையிடம் சென்று பேசி அவர்களின் சம்மதத்தோடு இருவருக்கும் உடனடியாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது அடுத்து வந்த ஒரு வாரத்திலேயே திருமணத்திற்கான நாளையும் குறித்தனர்.

சரியாக ஒரு வாரத்திலேயே திருமணம் நடத்தி முடிக்க மது விற்கும் ரவிச்சந்திரனுக்கும் பொதுவாக ஒரு எண்ணம் இருந்தது எந்த தோப்பு வீட்டில் வைத்து இருவருமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களோ அந்த வீட்டில் வைத்தே அவர்களின் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என எண்ணினர்.
அதை தயங்கியபடி ரவிச்சந்திரன் அவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கூற வீட்டில் மொத்த உறுப்பினர்கள் மிகவும் சந்தோஷப் பட்டனர்.

ரவியின் பெரியப்பா சிரித்தபடியே வந்து ரவி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன்னோட கொள்ளு பாட்டி தாத்தால இருந்து தாத்தா,பாட்டி,நான் ஏன் உன் அம்மா அப்பா வரைக்கும் கல்யாணம் ஆன முதல் தொடக்கத்தை அந்த வீட்டில்தான் ஆரம்பிச்சாங்க

அந்த வீட்டுக்கு அப்படி ஒரு ராசி இருக்கு அதனால சந்தோஷமா நீயும் அந்த வீட்டில் வைத்து வாழ்க்கையைத் தொடங்கலாம் இதெல்லாம் நாங்களே உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சுட்டு இருந்தோம்.

ஆனா நீ டெல்லி எல்லாம் போய் படிச்சவன் இப்பவே நம்ம நாட்டோட தலைநகரில் சொந்தமா தொழில் நடத்திட்டு இருக்க உன் கிட்ட போய் எப்படி சொல்றதுன்னு தான் நாங்க தயங்கிட்டு இருந்தோம் ஆனால் நீயே இதைக் கேட்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா சந்தோஷமா போயிட்டு வா என்று அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தனர் .

அவர்களுடன் சென்ற ஷர்மாவை இந்தாப்பா வெள்ளக்கார தம்பி என்று பெரியப்பா அழைக்க ஷர்மா என்ன அங்கிள் என்று கேட்டான்.

இன்னைக்கு அவங்களுக்கு கல்யாண நாள்ப்பா சின்னஞ்சிறுசுக அங்கே தனியா உட்கார்ந்து ஏதாவது பேசுவாங்க

சின்ன பையன் நீ எதுக்கு அவங்க கூட போய்க்கிட்டு நீ எங்களோடு இரு என்று அவர்களுடன் தங்க வைத்துக் கொண்டார்கள்.

ஷர்மாவிற்கு ஏனோ அவரது உற்ற நண்பன் அவரை விட்டு பிரிந்து போவது போல ஒரு எண்ணம் தோன்றியது அன்றைய இரவு முழுவதும் உறங்காமல் ரவியை பற்றிய நினைவுகளுடன் விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு தம்பதியர் இருவரும் கோவையில் சில முக்கியமான இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தனர்.எல்லா இடத்துக்கு மே ஷர்மாவும் செல்வார்.பிறகு ஒரு வாரத்திலேயே மதுவை அழைத்துக்கொண்டு டெல்லி செல்ல ரவிச்சந்திரன் கிளம்பினார் .

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே சற்று வருத்தம்தான் இன்னும் சில நாள் இருவரும் இருக்கலாமே என்று ஆனால் ரவியின் தொழில் டெல்லியில் இருப்பதால் என்ன செய்வது என்று பிரிய மனமே இல்லாமல் அனுப்பிவைத்தனர்.

நடேசனுக்கு தனது ஒரே மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்த நிம்மதியுடன் அவர் கண்கலங்க வழியனுப்பி வைத்தார்.

பிறந்த ஊரைவிட்டு மதுவும் ரவிக்கும் கிளம்ப உடன் ஷர்மாவும் சேர்ந்து பயணித்தார் அதன்பிறகு ரவி மது இருவருமே டெல்லியில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு எல்லாம் சேர்ந்து சுத்தினர். அவ்வப்போது ஷர்மாவை அழைத்துக் கொள்வார்கள். ஷர்மாவுக்கு ஏனோ அவர்களுடன் செல்ல அவ்வளவு பிடித்தது.அவ்வப்போது மதுவிடம் பேசுவார்.. கேள்விகளுக்கு அவளும் பதில் கூறுவாள்.

இப்படியாக அவர்களின் காதல் வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது திருமணமான மூன்றாவது மாதமே மது கருத்தரிக்க அதன் காரணமாக அவளது உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டது .

சரியான முறையில் ஆகாரம் இல்லை... தமிழக உணவை சமைத்துக் கொடுக்க ஆட்கள் இல்லை...அவளால் சமைக்கவும் முடியவில்லை...புரியாத பாஷை...டெல்லி குளிர் அவளை வாட்டி எடுக்க சுத்தமாகவே அவளுக்கு டெல்லி பிடிக்கவில்லை. சீதோஷணம் ஒத்துக்கொள்ளவும் இல்லை.

இதனால் அவ்வப்போது ரவியை நச்சரிக்கத் தொடங்கினாள் தான் சொந்த ஊருக்கு சென்று வருகிறேன் நீங்கள் என்னை மாதம் ஒரு முறை இல்லையென்றால் வருடம் ஒரு முறை கூட வந்து பார்த்துக் கொள்ளுங்கள் ஆனால் என்னால் இந்த டெல்லியில் மட்டும் இருக்கவே முடியாது என்று பிடிவாதமாக சண்டையிட்டாள்.

ரவியும் எவ்வளவோ அவளுக்கு சொல்லிப் பார்த்தார் வெவ்வேறு இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று பார்த்தார் ஆனால் மது எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை .

ஒருவழியாக ஏழாம் மாதத்தில் அவளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் ஊருக்கு அழைத்து வா என்று வீட்டுப் பெரியவர்கள் கூற வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ரவி.


அங்கு அவர்கள் வீட்டில் வைத்து வளைகாப்பு செய்துவிட்டு நடேசன் வீட்டுக்கு அனுப்பி விட்டு பிறகு ஓரே நாளில் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு மதுவை அழைத்துக் கொள்வது என்ற திட்டம்.

திட்டமிட்டபடி மதுவிற்கு சிறந்த முறையில் வளைகாப்பு செய்து விட்டு அன்றைய ஒருநாள் மட்டும் சம்பிரதாயத்திற்காக நடேசனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அன்றைய இரவு ரவியின் அத்தையும் ரவியின் தாயாரும் மதுவுடன் நடேசன் வீட்டில் தங்கிக் கொண்டனர் .

மதுவின் வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால் இடையில் அவளுக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்று அவளின் நலம் கருதி வீட்டினர் செய்த ஏற்பாடு அது.

மறுநாள் அவளை அழைத்துக்கொண்டு ரவியின் வீட்டிற்கு வந்துவிட்டனர் ரவியும் ஒரு வாரம் வரை மதுவை கூட இருந்து கவனித்துக்கொண்டார்.

அதன் பிறகு குடும்பத்தினரிடம் அவளை ஒப்படைத்துவிட்டு டெல்லி சென்று விட்டார்.

மருத்துவர் குறித்துக் கொடுத்த நாளில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் மது குழந்தை பிறந்தது என்று தெரிந்ததுமே ஷர்மா தான் முதன்முதலாக வந்து பார்த்தார்.

அப்படியே அச்சு அசலாக மதுவை போலவே இருக்க அப்போதே மதுப்பொண்ணு என்று பெயரும் வைத்து விட்டார்.குடும்பத்தினர் நேத்ரா என பெயர் சூட்டினர்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ரவி வந்து மதுவை டெல்லி அழைக்க அங்கு செல்ல பிடிவாதமாக மது மறுத்துவிட்டாள்.

டெல்லி வரவே மாட்டேன் நீங்கள் வேண்டுமானால் மாதம் ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று அன்பு கட்டளை ஒன்றையும் போட்டாள்.

காதல் மனைவியின் கட்டளையை எப்படி மீற முடியும் அதனால் ரவியும் குடும்பத்தினருடன் அவளை விட்டுவிட்டு டெல்லி சென்று அவரின் தொழிலைக் கவனித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து மதுவை பார்த்துவிட்டுச் செல்வார் அவர் வரும்போதெல்லாம் சில அசௌகரியங்கள் அந்த வீட்டில் இருந்தது .

கூட்டுக் குடும்பம் என்பதால் இவர் கண்ட நேரத்தில் வந்து இறங்கும்போது வீட்டில் உள்ள அத்தனை பேரின் தூக்கம் கெட ஆரம்பித்தது.

இது சிலரை முகம் சுளிக்கவும் வைத்தது...நேர்முகமாகவே மதுவை உன்னுடனே அழைத்துச்செல் என்று கூற தொடங்கினர்.

இந்த சமயத்தில் ரவியின் தந்தையும் தாயும் ஒரு திருமணத்திற்கு சென்று வரும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்து இறந்துவிட இப்பொழுது ரவியின் வீடு மதுவிற்கு அன்னியமாக பட்டது.

அவர்களின் கடுஞ்சொல் சில நேரம் மதுவை காயப்படுத்தியது ஆறுதல் சொல்லி அழக்கூட கணவன் அருகில் இல்லை வெளி எங்குமே செல்ல முடியாத ஒரு நிலைமை ரவி வந்தால் மட்டும் அவன் முன்பு குடும்பத்தினர் சற்று மென்மையாக நடந்து கொள்கின்றனர் அவன் சென்ற பிறகு மதுவின் பாடு மிகவும் திண்டாட்டமாக மாறிவிட்டது.

அப்படி இருந்தும் கூட அவளுக்கு டெல்லி வாழ்க்கை பிடிக்கவில்லை பிடிவாதமாக தான் ரவியின் வீட்டில் தங்கியிருந்தாள் இப்படியாக நாட்கள் கடக்க முழுதாக நேத்ரா விற்கும் மூன்று வயது முடிந்து விட்டது..பள்ளியில் சேர்க்க வேண்டும் என அவள் பள்ளியைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் மதுவின் தந்தையான நடேசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது .

அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவும் யாரும் இல்லை இதைக் கேள்விப்பட்ட மது கணவரிடம் மெதுவாக கேட்டுப் பார்த்தாள்.

தனது தந்தையுடன் சென்று தங்கிக் கொள்ளவா நீங்கள் அங்கு வந்து செல்லுங்களேன் என்று கூறுனாள்.

அவனும் மறுபேச்சுப் பேசாமல் சரி ஆனால் நீ உனது தந்தையுடன் சென்று தங்க வேண்டாம் நமது தோப்பு வீட்டில் உனது தந்தையை அழைத்துக் கொண்டு துணைக்கு வைத்துக்கொள் .

அங்கே வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள்
உனக்கும் நம்ம வீட்டில் இருக்கும்பொழுது வித்தியாசம் தெரியாது ஊர்க்காரர்களும் வாய்க்கு வந்ததுபோல எல்லாம் பேச மாட்டார்கள் இல்லையென்றால் ரவியின் குடும்பத்தினர் அவன் மனைவியை துரத்தி விட்டனர் என்ற அவப்பெயர் உண்டாகும் என்று கூறினான்.

அவன் கூறுவதிலும் நியாயம் இருந்தபடியால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள் அதன் பிறகு தந்தையை தோப்பு வீட்டிற்கு அழைத்து வந்தவள் நேத்ராவை அருகில் இருந்த பள்ளியில் சேர்த்தாள். இடைப்பட்ட நேரத்தில் தந்தையுடன் சென்று காட்டன் மில்லை பார்த்துக்கொள்வாள் இல்லை என்றால் மல்லிகைப்பூ பூக்கும் சமயத்தில் அங்கு வேலை செய்யும் பெண்மணிகளுடன் சேர்ந்து பூக்களையும் பறித்துக் கொடுப்பாள் இப்படியாக அவளின் வாழ்க்கை நல்ல படியாக சென்றது.

ரவி சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வார்.நேத்ராவிற்கு ஆறு வயது இருக்கும்போது தான் முருகன் என்பவன் மதுவை தேடி வந்தான்.

மது படித்த பள்ளியில் அவளைவிட இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தவன். அவன் கல்லூரிக்கு சென்றது தெரியும்... அதன் பிறகு பல வருடங்களாக பார்க்கவே இல்லை அவனும் இவளிடம் தனிமையில் ஏதோ கூற மது முதல்முறையாக வெகுநேரம் கண் கலங்கி அழத் தொடங்கினாள்.

இதை அங்கு வேலை செய்த பெண்மணிகள் பார்த்து அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்கள் அதன் பிறகு முருகனுக்கு அங்கேயே ஒரு வேலைபோட்டுக் கொடுத்தாள்.

முருகன் அவ்வப்போது வேலை பற்றிய சந்தேகங்களை கேட்பதற்காக இவளிடம் வந்து பேச்சுக் கொடுத்தான் அதையெல்லாம் அங்கு வேலை செய்பவர்கள் கவனித்து மதுவுக்கும் முருகனுக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது என்று புறம் பேசத் தொடங்கினர்.

இது ரவியின் குடும்பத்தினருக்கும் அரசல் புரசலாக காதில் விழ மதுவை அவர்களது வீட்டுக்கே அழைத்தனர்.

ஆனால் மது எனக்கு இங்கேயே வசதியா இருக்கு அதனால நான் இங்கேயே இருக்கறேன்... அதான் துணைக்கு அப்பா இருக்காங்களே என்று மறுத்து விட அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

அதன்பிறகு எந்த ஒரு விஷயத்திலும் மதுவை அழைக்கவே இல்லை சொல்லி வைத்ததுபோல உறவினர்கள் அனைவருமே மதுவை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தனர்.

நடேசனுக்கு ஏற்கனவே முருகனைப் பற்றி தெரியும் அதனால் மதுவை அழைத்து அவனை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டாம் அவன் சரியான நபர் கிடையாது என்று கூறினார் .

உடனே மது அப்பா மிகவும் சரியான நபர்தான் நீங்க தான் அவரை தப்பா புரிஞ்சுகிட்டிங்க தயவு செய்து என் விஷயத்துல தலையிடாதீங்கனு நடேசனின் வாயை அடைத்து விட்டாள்.

இங்கு நேத்ரா நாளொரு வண்ணமும் பொழுதொரு மரமாய் வளர பத்து வயதிலேயே தனது தாயின் ஜெராக்ஸ் காப்பி போல இருந்தாள்.
தாயை விட்டுப் பிரிந்தது கிடையாது அவ்வப்போது ஷர்மா வர ஷர்மாவுடன் நன்றாகவே ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.இந்த சமயத்தில் நடேசன் வயதின் மூப்பு காரணமாக இயற்கை ஏய்தி விட மது மகளுடன் தனியே வசிக்க வேண்டியதாயிற்று.

நேத்ரா வளர வளர தந்தையையும் ஷர்மாவையும் மாறி மாறி தேடத் தொடங்கினாள் நேத்ரா ஒரு கட்டத்தில் தந்தையுடன் செல்லலாம் என்று தாயை நச்சரிக்க எரிச்சலடைந்த மது அவளை முதல் முதலாக கொடைக்கானலில் இருந்த ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்துவிட்டாள்.
பருவத் தேர்வின் விடுமுறை நாட்களைத் தவிர வேறு எந்த சமயத்திலும் பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் சந்திக்கவே முடியாது அந்த அளவிற்கு அது கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி அங்கே அவளை சேர்த்து விட முதல் முறையாக ரவி வந்து பயங்கரமாக சண்டையிட்டார்.


எப்படி என்னைக் கேட்காமல் என் மகளை அனாதைபோல் ஹாஸ்டலில் சேர்ப்பாய் என்று ஆனால் மதுவோ உறுதியாக கூறிவிட்டாள் நேத்ராவின் நல்லதுக்காகத்தான் நான் இதை செய்தது நீங்கள் நேத்ரா விஷயத்தில் தலையிட வேண்டாம் அப்படி தலையிடும் பட்சத்தில் உங்கள் மகளை அழைத்துக்கொண்டு நீங்கள் டெல்லிக்கே சென்று விடுங்கள் அதன் பிறகு என்னை நீங்கள் வந்து சந்திக்கவே கூடாது என்று மிரட்ட மனைவியின் கோபத்திற்கு பயந்து அமைதியாகிவிட்டார்.

அதன்பிறகும் அவர் எப்போதும் போலவே மதுவை காண வந்து சென்று கொண்டிருந்தார். ஏன் தனியாக இங்கிருந்து கஷ்டப்படுகிறாய் என்னுடன் வந்துவிடு மது என்று ஒரு நாள் மிகவும் கெஞ்சினார்.



அந்த சமயத்தில் தான் மது அபிமன்யூவை சந்தித்ததை பற்றி கூறினாள். அபியின் மொத்த குடும்பமுமே தன்னை அவ்வப்போது வந்து சந்தித்து விட்டுச் செல்கிறது அதனால் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் உங்களுக்கு வேண்டாம் இங்கு எனக்கு அழகாக புதியதொரு உறவும் குடும்பமும் கிடைத்திருக்கிறது என்று அபியை பற்றி நிறையவே நல்ல விஷயங்களை கூறினாள்.

நேத்ரா கூறிய விஷயங்களை எல்லாம் கேட்கும்பொழுது ரவிக்கே அபிமன்யூவை சந்திக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

அதுமட்டுமின்றி அபிமன்யூவின் மீது சிறு பொறாமை கூட வந்தது சரி மனைவியை தனது ரத்த சொந்தங்கள் தான் கைவிட்டுவிட்டது புதியதாக ஒரு குடும்பமே பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் பொழுது தான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைத்து மதுவை டெல்லி கூப்பிடுவதை நிறுத்திக் கொண்டார்.ஆனால் அவ்வப்போது
நேத்ரா படிப்பது எந்த பள்ளி என்று கேட்பார் பதில் வராது.

ஒருமுறை ஷர்மா எப்படியோ கண்டுபிடித்து பள்ளியில் சென்று போராடி நேத்ராவை சந்தித்து விட்டார் அந்த சந்தோஷத்துடன் சென்று ரவியுடன் கூற ரவியோ உடனடியாக மதுவிற்கு போனில் அழைத்து கூறினார்.

எதிர்பாராத திருப்பமாக அந்த ஆண்டு தேர்வு முடியவும் நேத்ராவை வேறு ஒரு பள்ளிக்கு தெரிந்த ஒருவர் மூலமாக மாற்றினாள் மது.

அதிர்ச்சி அடைந்த ரவி அதன் பிறகு மனைவியிடம் எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை அந்தக் கோபத்தின் விளைவாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து சென்றவர் மாதம் இல்லை என்றால் இரண்டு மாதம் என்று கூட தாமதமாக மனைவியைக் காண வந்தார்.

ஒருமுறை அப்படி அவர் தாமதமாக வரும் பொழுது மது அழுதபடியே ரவியிடம் சண்டையிட ஆரம்பித்தாள் நீங்கள் இப்படி சந்திக்கவே வராமலிருந்தால் ஊரில் இருக்கும் மனிதர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றவள் அவளைப் பற்றி அரசல் புரசலாக பேசும் விஷயங்கள் அனைத்தையும் ரவியிடம் கூறி அழுதாள்.

ரவிக்கு அவளின் வலியும்,ஆதங்கமும் நன்றாகவே புரிந்தது...
மது நேத்ராவை ஹாஸ்டலில் சேர்த்த ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கிறது அதனால்தான் ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறாள் அது என்ன என்று நேத்ரா பள்ளிப் படிப்பு முடியும்போது கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவர் அதன்பிறகு மதுவிடம் மீண்டும் பழைய அன்புடன் அவ்வப்போது வந்து செல்ல ஆரம்பித்தார் இடையிடையே டெல்லிக்கு அழைக்கவும் செய்வார் ஆனால் மது டெல்லி மட்டும் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாள்.
ஏன் என்ற காரணம் இன்று வரை அவருக்கு தெரியவில்லை.

இப்படியாக நேத்ரா வின் பள்ளிப்படிப்பு முடியவும் ஷர்மா நேத்ராவை நேரில் சென்று சந்தித்து டெல்லியில் இருக்கும் கல்லூரியில் சீட் வாங்கி அவளை அங்கு சேர்த்து விட இங்கு மதுவிற்கு உடல்நலம் அவ்வப்போது சரியில்லாமல் போக ஆரம்பித்தது.


அவளைக் காண வந்த ரவி அவளின் உடல்நிலையைக் கண்டு கடிந்து கொண்டார்.

இங்க பாரு மது இவ்வளவு நாள் நீ சொல்லி நான் கேட்டது போதும் இந்த முறை நான் சொல்றேன் நீ கேளு ஒன்னு அடுத்த முறை நாம் வரும்போது நீ என்னோடு டெல்லி கிளம்பறன அப்படி இல்லன்னா நான் அங்க இருக்கிற அத்தனை பிஸினஸையும் மூட்டை கட்டி வைச்சிட்டு நான் இங்க வந்து தங்கிடுவேன்.

உன்னோட கணவன் ஆசையா ஆரம்பிச்ச தொழில் முக்கியமா இல்ல உன்னோட பிடிவாதம் முக்கியமானு நீயே முடிவு பண்ணிக்கோ என்று கூறிவிட்டு தான் டெல்லி சென்றார்.

ஆனால் மதுவிற்கு நேத்ரா டெல்லி சென்று ஒருவருடம் கடந்தும் கூட தன்னைப் பார்க்க வராமல் இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது... அதன் காரணமாகவே சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் படுத்த படுக்கையாகி விட்டதாக வேலை ஆட்களிடம் இருந்து ரவிக்கு ஃபோன் வர அடுத்த விமானத்திலேயே ஊர் சென்றார்.

ஆனால் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் பொழுதே பெரியப்பாவின் மூத்த பிள்ளை இவனை வரவேற்க காத்திருந்தார் என்ன ஏது என்று விசாரிக்காமல் காரில் ஏறி அமர காரோ பெரியப்பாவின் வீட்டை நோக்கிச் சென்றது என்ன என்று விசாரிக்கும் பொழுது தான் அவர்களுக்குள் மிகப் பெரிய சொத்து பிரச்சினை போய்க் கொண்டிருப்பதும் தெரிந்தது.

ரவி கண்டிப்பாக தலையிட்டே ஆக வேண்டிய கட்டாயமும் இருந்தது அங்கு சென்ற அவரால் உடனடியாக வந்து மதுவை காண முடியவில்லை... கடைசியாக மதுவின் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது… உடனே என்ன வந்து சந்திக்க முடியுமா ரொம்ப அவசரம் உங்கள பாக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது ஆயிடுமோனு எனக்கு பயமா இருக்கு.

உங்க கிட்ட நான் நிறைய விஷயங்கள் பேசினும் தயவு செஞ்சு சீக்கிரம் வாங்க என்று கூற அவரும் நான் டெல்லியிலே இல்ல மது இங்கே பெரியப்பா வீட்லதான் இருக்கேன் ஒரு சில விஷயத்துக்காக இங்கே வந்து இங்கேயே லாக் ஆயிட்டேன் இங்கிருந்து வெளியவே வர முடியாத அளவுக்கு பிரச்சனைகள் இருக்கு .

காலை வரை பொறுத்துக்கோ நான் வந்துடறேன் என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த மது என்ன இங்க வந்து ஒரு வாரம் ஆச்சா ஒரு வாரம் ஆகி கூடவா என்னை வந்து சந்திக்கணும் உங்களுக்கு தோணல என்று கூறியபடியே போனை வைத்தவள்.

முழுதாக பன்னிரெண்டு மணி நேரம் கூட ஆகி வில்லை மது தற்கொலை செய்து கொண்டதாக ரவிக்கு செய்தி வந்தது அதிர்ச்சி அடைந்தவர் அங்கே செல்லும்போது மதுவின் தோற்றமே மாறியிருந்தது உடல் முழுவதும் நிறம் மாறி மதுபோலவே இல்லை அந்த சடலம் உடல் இளைத்து முடியெல்லாம் கொட்டி பார்க்கவே முடியவில்லை…

கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு கூட மதுவை வந்து சந்தித்தார் அப்போது கூட அவள் மிகவும் நன்றாகத்தான் இருந்தாள் ஆனால் ஏதோ ஒன்றை தன்னிடம் கூற வேண்டும் என்று நச்சரித்தாள்.

இவர்தான் வேலை அதிகமாக இருக்கிறது என்று மதுவிடம் எதையுமே கேட்காமல் டெல்லி சென்று விட்டார்.

ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக மதுவைத் தன்னிடம் அழைத்து செல்ல வேண்டும் என்ற உறுதியை மட்டும் எடுத்திருந்தார்.

இந்த முறை அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அல்லவா வந்திருந்தார் இப்படி இவளை பறிகொடுக்க வா என்று மிகவும் வருந்தினார் முப்பத்தியெட்டு வயதே ஆன மதுவிற்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏன் வந்தது.


அவளை நம்பி வயது வந்த ஒரு பெண் பிள்ளை இருக்கிறாளே அவளை கூட கருத்தில் கொள்ளவில்லையே என்ற கோபம் கூட ரவிக்கு இருந்தது எதுவுமே பேசாமல் காவல் நிலையத்திற்கு அவளின் தற்கொலையைப் பற்றி கூறலாம் என்று கூறும்பொழுது ரவியின் குடும்ப உறுப்பினர்கள் தடுத்தார்கள் ஏற்கனவே மதுவைப் பற்றிய விஷயங்கள் நல்லதாக இல்லை காவல் நிலையம் சென்றால் தேவையில்லாமல் தங்களுடைய குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று கூற எதுவுமே பேசாமல் ஊர் மக்களுடன் சேர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மது இயற்கை மரணம் ஏய்ததாக அறிவித்துவிட்டு எரியூட்டும் மயானத்தில் அவளது சடலத்தை எரித்து முடித்தனர் அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய ரவி ரேணுகாவின் பிடியில் மாட்டிக்கொள்ள...அதன் பிறகு இங்கு நேத்ரா வந்தது நேத்ராவின் பாராமுகம் எல்லாவற்றையும் கூறியவர் இனியும் நீ இந்த அப்பாவை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பேனா அதுபோலவே பார்த்துக்கோ இனி என்னால உனக்கு புரியவைக்க முடியாது... நான் அறிந்து செய்த ஒரே ஒரு தவறு ரேணுகா கிட்ட தொடர்பு வச்சுகிட்டு மட்டும்தான் மத்தபடி ஒரு கணவனா நான் மதுவுக்கு எந்த ஒரு குறையும் வைக்கல ஒரு தகப்பனா வேணா உனக்கு நிறைய குறைகள் வைத்திருக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.


அவர் செல்லவுமே மதுவின் புகைப்படத்தை தான் நேத்ரா பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்னம்மா நீங்க ஒரு புதிராகவே வாழ்ந்து இருக்கீங்க ஏன்மா தற்கொலை செஞ்சுகிட்டிங்க... உங்க தற்கொலைக்கு நானும் ஒரு காரணமா...என்னை பாக்க முடியாத ஏக்கத்துல தான் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போச்சா... இந்த அளவிற்கு என் மேல பாசம் வைத்திருந்த நீங்க ஏன்மா என்னை அவ்ளோ சின்ன வயசுல ஹாஸ்டலில் சேர்த்துனீங்க...என்ன காரணம்...ஏதோ இருக்கு...அதை யாருக்குமே சொல்லாம போய்ட்டிங்க…


அப்பா சொன்னதை வைத்துப் பார்த்தா முதல் மாதம் அப்பா உங்களை வந்து சந்திக்கும் போது நீங்க ரொம்ப நல்ல ஆரோக்கியமா இருந்திருக்கீங்க ஆனா ஏதோ ஒரு விஷயத்தை அப்பா கிட்ட சொல்லனும்னு துடிச்சி இருக்கீங்க

ஆனா அடுத்த மாசமே எப்படி நீங்க அந்த அளவு உடம்பு இளைத்து முடியெல்லாம் கொட்டி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினீங்க ஒரு மாசத்துல இந்த அளவுக்கு ஒருத்தரோட உடல்நிலையில மாற்றம் வருமா என்ன…? என்று தாயின் புகைப்படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தால் நேத்ரா பிறகு ஆச்சர்யமாக

இந்த அபிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ...அவனை இங்க அனுப்பிவச்சதே நீங்கன்னா எனக்கு இதுபோல ஆபத்து வரும்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா...எப்படி தெரியும் உங்களுக்கு ‌..

இது எல்லாத்துக்கும் பதில் நீங்கதான் எனக்கு கொடுத்தாகணும் ஆனா நீங்க இப்போ தெய்வம் ஆயிட்டீங்க எப்படி நீங்க எனக்கு பதில் கொடுப்பீங்க

நீங்க சொன்ன மாதிரி நீங்க வாழ்ந்த இடத்துக்கு நான் உங்களை தேடிவர்றேன்... உங்களோட தற்கொலைக்கான காரணத்தை நான் கண்டுபிடிக்கறேன் அதுக்கப்புறமா உங்க ஆன்மாவுக்கு என் கையால திதி தர்றேன்..

ஆனா நீங்க இவ்வளவு சீக்கிரமா என்ன விட்டு போய் இருக்க வேண்டாம்மா... இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் எனக்கு உங்க மேல நிறைய கோபம் இருந்தது அதனால தான் உங்களை பாக்க வரல...நான் தவிச்ச மாதிரி நீங்களும் தவிக்கனும்னு நினைச்சேன்... ஆனால் நீங்க சாகணும்னு நினைக்கலமா...இப்போ கூட எனக்கு உங்க மடியில படுத்து தூங்கணும் போல ஆசையா இருக்கும்மா என்று புகைப்படத்தை பார்த்தபடியே கதறி அழ ஆரம்பித்தாள்.

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
13



இங்கு மருத்துவமனையில் ரோகினி நன்றாகவே எழுந்து அமர்ந்தாள் அவளால் சாதாரணமாகவே பேச முடிந்தது அவள் எழவும் சக்கரவர்த்தியும் அபியும் அவளின் அருகில் சென்றனர்.

அபி மிகவும் தன்மையாக இங்க பாரு ரோகினி உன்ன நாங்க எதுவுமே பண்ண போறது கிடையாது கண்டிப்பா போலீஸ்ல கூட உன்னை மாட்டி விடப் போறதில்லை
ஆனா நேத்ராவை ஏன் கார்னர் பண்ணின...ஏன் பண்ணின...எப்படி எங்க எல்லாரையுமே நம்பவச்ச…
யார் உனக்கு உதவினது...எப்படி வீட்டோட ப்ளூ ப்ரிண்ட் உன்கைக்கு கிடச்சது... இதுக்கு மட்டும் பதில் சொல்லு…


இப்போ உன் தம்பி போலீஸ் கஸ்டடியில இருக்கறான்.

நாங்க உன் தம்பியை கூட விட சொல்லிடறோம்...இல்லனா உன் தம்பி மட்டுமில்ல நீயும் வாழ்க்கை பூரா ஜெயில்ல தான் கழிக்கனும்...என்று கூறினான்.

ஆனால் ரோஷினியோ தம்பி போலீஸ் கஸ்டடியில் இருக்கிறான் என்று தெரிந்ததுமே பயத்தில் கண்களை விரித்தாள் ஆனால் அடுத்த வினாடியே கவலையில் முகம் சுருங்கியது து கண்களில் இருந்து தானாக கண்ணீர் வர ஆரம்பித்து.

என் தம்பி பாவம் அவனை எதும் பண்ணிடாதீங்க எல்லாத்துக்கும் என் பேராசை தான் காரணம் அதுக்கான தண்டனையையும் எனக்கே தாங்க அவனை தண்டிச்சிடாதீங்க என்ற ரோகினி..அவள் செய்தவற்றை கூற தொடங்கினாள்...

சக்ரவர்த்தி உடனே அவனது ஃமோபைல் போனில் ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான்.

என்னோட பூர்வீகம் மதுரை பக்கம் என்னோட பிறந்தது ஒரு தம்பி ஒருதங்கை முதல்முதலா எங்க குடும்பத்துல காலேஜ் போனது நான் தான்... அக்கவுண்ட்ஸ் ரொம்ப நல்லா போடுவேன்... வீட்டோட வரவு செலவை கூட நான்தான் பாத்துப்பேன்.. ரொம்ப அழகா டிரஸ் பண்ணறதா பிரெண்ட்ஸ் சொல்லுவாங்க ஹைட் கம்மியா இருந்தா கூட நீ ரொம்ப அழகா இருக்கேன்னு எல்லாருமே சொல்லுவாங்க அதனால எனக்கு ரொம்பவே கர்வம் இருக்கும்...

ஆனா அது எல்லாம எனக்கு கல்யாணம் ஆகி இந்த டெல்லி வந்ததுமே காணாம போயிடுச்சு

மாப்பிள்ளை டெல்லியில பெரிய வேலையில் இருக்கிறாருனு பெருமையா என்ன ஏதுன்னு விசாரிக்காம தாம் தூம்னு செலவுசெய்து கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சாங்க.


ஆனா என் கணவருக்கு நான் அழகாகவே தெரியல...நான் அவருக்காக பாத்து பாத்து அலங்காரம் பண்ணி காத்திருந்தா ச்சீ பட்டிக்காடு தள்ளிப்போம்பாரு…

எல்லாமே ஆங்கிலத்துல பேசனும்...தமிழ்ல பேசினா நீ எல்லாம் என்ன காலேஜ் போன...கொஞ்சம் கூட லாங்வேஜ் ஸ்கீல்ஸ்ஸே இல்லனு திட்டுவாரு….


நின்னா குத்தம் நடந்தா குத்தம்...ஒரு வருஷம் முடியறதுக்குள்ள போடி வெளியனு டிவோர்ஸ் குடுத்து அனுப்பிட்டாரு…என் கண்ணு முன்னாடியே இந்த ஊர் பொண்ணை கட்டிகிட்டாரு…



நான் எங்க போவேன்...எப்படி போவேன்...அம்மா அப்பா முஞ்சில எப்படி முழிப்பேன்...ஏதோ பக்கத்துல இருந்த குடும்பம் தங்கம்...அவர் வெளிய அனுப்பின உடனே ஒரு ஹாஸ்டல்ல தங்க வச்சி ஷர்மா சார் ஆஃபிஸ்ல வேலைக்கு சேத்து விட்டாங்க…
ஆனா அங்க என் படிப்புக்கு ஏத்த வேலையில்லாததால
ரவி சார் ஆஃபிஸ்ல சேத்து விட்டாரு…

அவருக்கு ஏதோ வகையில என்னை பிடிச்சது…நான் கஷ்டப்பட்டு இங்கிலீஷ்ல பேசினா அவர் சிரிச்சுகிட்டே உனக்கு தான் தமிழ் நல்லா தெரியுமே தமிழ்லயே பேசலாம்னு சொல்லுவாரு…

எதையெல்லாம் என்னோட கணவர் என்கிட்ட குறையா சொல்வாரோ அதை எல்லாம் ரவி சார் நிறைவா சொல்லுவாரு அதனால எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் என்கிட்ட ஒரு நல்ல நட்போட தான் பழகினாரு ஆனால் எனக்கு தான் அவர் மேல ஒரு வித ஈர்ப்பு வந்தது…

இந்த சமயத்தில்தான் வெளியூருக்கு கட்டிக்கொடுத்த பொண்ணு கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் இல்லையேனு என்னோட அம்மா அப்பா தம்பி தங்கை அத்தனைபேரும் டெல்லிக்கு என்னை தேடி வந்துட்டாங்க .

அவங்க கிட்ட எப்படி சொல்ல முடியும் உங்க மருமகன் என்னை ஒரு வருஷத்துக்குள்ளேயே துரத்திட்டாருன்னு... ஏததோ சொல்லி சமாளிச்சி அவங்களை ஊருக்கே திருப்பி அனுப்பி வைச்சேன்.

ஆனால் அவங்க கிளம்பும் போது உன் தம்பி படிப்பு முடிச்சி வேலையில்லாம சும்மா தான் ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான் நீ தான் இங்க நல்ல வசதியா இருக்கியே நீயும் வேலைக்கு போற மாப்பிள்ளையும் வேலைக்கு போறாங்க அதனால உங்களுக்கு தெரிஞ்சு ஏதாவது ஒரு இடத்தில இவனை வேலைக்கு சேர்த்து விடுன்னு தம்பியை என் பொறுப்பில் விட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்க.

என் தம்பி ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சுட்டான் அக்காவை அவளோட புருஷன் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான்... அக்கா இப்போ அவ வயிற்று பாட்டுக்காக வேலை செஞ்சு சாப்பிடறானு...

பொதுவாவே என் தம்பி கொஞ்சம் சோம்பேறி அவனுக்கு வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுல பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல.அதனால வெட்டியா டெல்லில சுத்திட்டு இருந்தான்

அந்த சமயத்துல ரவி சார் மீட்டிங் முடிஞ்சி வீட்ல கொண்டு வந்து என்னை விடுவாரு... யாருன்னு விசாரிச்சான்...பாஸ்னு சொல்லவும்
ஏன் இவரை செகன்ட் மேரேஜ் பண்ணிக்ககூடாது...நல்ல வசதி…நாம எல்லாருமே செட்டில் ஆயிடலாமே...அப்புறம் நீ வேலைக்கு போய் கஷ்டபட வேண்டாமேனு என் மனசுக்குள்ள முதமுதலா ஆசையை தூண்டி விட்டான்.

அதற்கு அப்புறமாதான் ரவி சார் மேல என்னோட பார்வை முழுசா திரும்பிச்சி…

அவரோட பலவீனங்களை ஆராய ஆரம்பிச்சேன் ஆனா அவருக்கு பெருசா எந்த பலகீனமும் இல்லை


உயிரா நேசிக்கிற மனைவி அழகா ஒரு பொண்ணு இருக்கிறது தெரிஞ்சது... இனி நாம முயற்சி செய்ய வேண்டாம்னு எப்பவும் போல அவர்கிட்ட இயல்பா பழகிட்டு இருந்தேன்…



சரியா பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போயிடுவாரு அதுக்கு ஒரு நாள் முன்னாடியே இங்கே ஷாப்பிங் ஆரம்பிச்சிடுவார் என்னை தான் துணைக்கு கூட்டிட்டு போவாரு அவர் மனைவிக்கு அவர் வாங்குற பொருட்கள் எல்லாம் பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு கணவர் இருந்தா இது மாதிரியெல்லாம் செய்வாங்கன்னு தானாகவே ஆசை பிறக்கும் அந்தளவுக்கு மனைவிக்கு வாங்குவார்…

என்னதான் அவர் மேல இருக்கிற ஆசைகளை எல்லாம் உள்ளுக்குள்ளேயே மறைச்சு வெச்சுக்கிட்டு அவர்கிட்ட இயல்பா பழக முயற்சி செஞ்சாலும் ஒவ்வொரு முறையும் அவரோட மனைவிக்கு அவர் வாங்கற பரிசுப் பொருட்களை எல்லாம் பார்க்கும்போது இவரைப்போலவே ஏன் நாம் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடனும்..

இவரே எனக்கு மாப்பிள்ளையா வரட்டுமேனு கடவுள் கிட்ட வேண்ட ஆரம்பிச்சேன் என்னோட வேண்டுதல் அந்த கடவுளுக்கு கேட்டுச்சு போல திடீர்னு ஒரு நாள் அவர் மனைவி இறந்ததா எங்க எல்லாருக்குமே செய்தி கிடைத்தது.

ஆபீசுக்கு மூணு நாள் ஆஃபிஸ்க்கு லீவு விட்டாங்க எல்லாரும் துக்கம் அனுசரிச்சாங்க நான் மட்டும் அதை சந்தோஷமாக கொண்டாடினேன்.

அதற்கப்புறம் அவர் அதிகமா குடிக்க ஆரம்பிச்சாரு... குடிக்க ஆரம்பிச்சாருனு சொல்றதை விட நான் அவரை அதிகமாக குடிக்க வைச்சேனு சொல்லலாம் ஒருநாள் மீட்டிங்ல சுயநினைவு இல்லாத அளவுக்கு அவருக்கு மது அருந்த வைச்சேன்...அவர் நினைவு இழந்து கீழே விழவும் உதவறது போல அன்னைக்கு ராத்திரியே நான் நினைத்ததை சாதிச்சிட்டேன்.


ஆனா அவர் மறுநாள்ல இருந்து குற்ற உணர்ச்சியோட என்னை தவிக்க ஆரம்பிச்சாரு... நான் அவரை பல வருஷமா காதலிக்கற விஷயத்தை சொல்லி அவரை அதுல இருந்து வெளிய கொண்டு வந்தேன்..

என்னைக்குமே இது பற்றி வெளியே சொல்ல மாட்டேன்... கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப் படுத்த மாட்டேன்...இது மாதிரியே ஒரு திரைமறைவு வாழ்க்கையை வாழலாம்னு அவருக்கு தைரியம் கொடுக்க அவர் தைரியமாக என்னை பார்க்க வர ஆரம்பிச்சாரு.

அப்படியே நாளாக நாளாக எனக்கு இந்த திரைமறைவு வாழ்க்கை வாழ பிடிக்கல என்னோட முன்னாள் கணவர் என் கண்ணு முன்னாடியே அந்த பொண்ணோட கெத்தா இதே ரோட்டுல போகும் போது என்னால் அப்படி உரிமையா ரவியோட கைய புடிச்சிட்டு போக முடியலையே என்கிற ஏக்கம் வர ஆரம்பிச்சது

அந்த சமயத்தில்தான் ஒருநாள் அவரோட வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போனாரு அவர் வீட்டு பார்த்ததும் நிஜமாவே நான் பிரமிச்சிட்டேன்

இந்த மாதிரி ஒரு வீட்ல ரவிக்கு மனைவியாக வாழ்ந்து அதை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தினா என் முன்னால் புருஷன் மட்டும் இல்ல என் அம்மா அப்பா மட்டுமில்ல என் குடும்பத்துல இருக்கற அத்தனை பேருமே என்னை ரொம்ப பெருமையா பாப்பாங்கன்னு நினைச்சு…

ரவி கிட்ட நான் உங்களோட இந்த வீட்லயே இருக்கட்டுமான்னு கேட்டேன்.

ஆனா அவரு முடியவே முடியாது... நேத்ரா படிப்பு முடிஞ்சு இங்க வரும்போது உன்னை எப்படி இந்த வீட்ல வச்சுக்க முடியும் என் பொண்ணு முன்னாடி என்னால தலை குனிய முடியாதுனு பிடிவாதமா மறுத்துட்டாரு... அந்த சமயத்தில் அவரை எதிர்த்துப் பேசி அவரோட கோபத்துக்கு ஆளாகிடக் கூடாதுன்னு சத்தமில்லாமல் வந்துட்டேன்.

ஆனா எதிர்பாத்த மாதிரி நேத்ரா அந்த வருஷம் அவரோட வீட்டுக்கு தங்க வரல லீவுக்காக ஒரு பத்து பதினஞ்சு நாள் மாதிரி தங்கிட்டு மறுபடியும் மேல்படிப்புக்காக ஹாஸ்டல் போய் சேர்ந்துட்டா…நேத்ரா அவரோட வீட்டுக்கு வந்ததுமே அந்த இடைப்பட்ட நாளில் ஒரு நாள் கூட ரவி என்னை வந்து சந்திக்கவே இல்லை அது மட்டும் கிடையாது எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணல எனக்கு இது மிகப்பெரிய கோபம் அப்படினா இத்தனை நாளும் என் கூட இருந்ததெல்லாம் பொய்யா... வெறும் சபலத்துக்காக தான் என்னை தேடினாரானு பயங்கர கோபம்…

நேத்ரா வந்துட்டு போனதும் என்னோட தம்பியை கூப்பிட்டு அவர் வீட்டுக்கு நியாயம் கேட்கப் போனேன் ஆனா அங்க போனதும் என் தம்பி என்னை எதுவுமே பேச விடாம வெளிய கூட்டிட்டு வந்துட்டான்.

அவன் தான் சொன்னான் அக்கா நீ இப்படி கத்தி கூச்சல் போட்டா முதலுக்கே மோசம் ஆயிடும் அதனால பொறுமையா காய் நகர்த்தலாம் சைலண்டா இருந்து காரியத்தை சாதிக்கலாம்…முதல்ல நமக்கு நிறையா பணம் வேணும் அதை அவர்கிட்ட இருந்து கறக்க பாக்கலாம்... அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசின்னு புத்தி சொன்னான்.


சரின்னு நானும் தம்பி சொன்னது போல நடக்க ஆரம்பிச்சேன்.

அப்பப்போ என் தம்பி தங்கச்சியை கூட்டிகிட்டு ரவி வீட்டுக்குப் போவேன் அவரும் பயந்துட்டு இனி வராதேனு சொல்வாரு…

வராம இருக்கணும்ன்னா எனக்கு பணம் கொடுங்கனு கேட்பேன் உடனே அவரும் கத்தை கத்தையா எடுத்துக் கொடுப்பாரு...

அதுக்கப்புறம் இதே போல அடிக்கடி செய்வேன் சில சமயத்துல என்னைக் கேட்காமலே என் தம்பி போய் அவர்கிட்ட பணம் கேட்பான் போல அவரு குடுக்க மறுத்தா அங்கிருக்கற பொருட்களை திருடியிருக்கான்…

இது எனக்கு தெரிஞ்சு நான் அவனை கண்டிக்கறதுக்கு முன்னாடியே ரவி உஷாராகி உங்களை செக்யூரிட்டியா அங்க வச்சுட்டாரு…

நேத்ரா படிப்பு முடிஞ்சு இங்க வரவும் மறுபடியும் அவருக்கு ஏதோ ஒரு டிப்ரஷன் மறுபடியும் அவர் என்னைத் தேடி வந்தாரு…


ஆனா இந்த முறை வெறும் சபலத்துக்காக அவரோட இருக்க எனக்கு பிடிக்கல முறையா தாலி கட்ட சொல்லி அவர் கிட்ட சண்டை போட்டேன்.

சும்மா சொன்னா அவர் கல்யாணம் பண்ண மாட்டாரு என் வயித்துல கரு வளர்வதா சொல்லி அவரை மிரட்டினேன்

ஆனா ரவி அப்போ தான் நேத்ரா என் வீட்ல இருக்கிற வரைக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது ஒருவேளை நேத்ரா திருமணமாகி வெளிய போனாலோ இல்லனா வேலை கிடைச்சு வெளிநாடு போனா கூட எனக்கு தனியா இருக்க முடியல அதனால உன்னை திருமணம் செஞ்சுகிட்டேனு வெளி உலகத்திற்கு தைரியமா உன்னை அறிமுகப்படுத்தலாம்னு சொல்லிட்டு முழுசா என்னை அவாய்ட் பண்ணிட்டாரு…

அதுக்கப்புறமா என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாரு...என பாக்கவும் வர்றதில்லை என் செலவுக்கு பணம் கொடுக்கறது இல்லை அப்புறம் தான் நானும் என் தம்பியும் ரவியை என் பக்கம் திருப்புவதற்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்.


என் தம்பி அவரோட நீ தனியா இருக்கிறது போல ஏதாவது போட்டோ வெச்சி இருக்கியா இல்ல ஏதாவது வீடியோ மாதிரி எடுத்து வைச்சிருக்கியானு கூட கேட்டான் என்று கூறும்பொழுது அதிர்ச்சியுடன் அபிமன்யூம் சக்கரவர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்

சக்கரவர்த்தி மனதிலும் அபியின் மனதிலும் ஒரே போலத் தோன்றிய எண்ணம் ...ச்சே இவனெல்லாம் ஒரு தம்பியா...இப்போ மட்டும் கைல கிடைச்சான் மிதிச்சே கொல்லனும் என்று எண்ணினர்.

அதுவரைக்கும் கேசவன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல் துறையினரிடம் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர் ரோகிணியின் இந்தப் பேச்சுக்குப் பிறகு உடனடியாக இருவருமே ஒரு சேர மனதை மாற்றிக் கொண்டனர்.
ரோகிணியைக் கூட மன்னித்து விட வேண்டும் தனது சகோதரியை பணத்திற்காக மற்றொருவருடன் பழக விட்ட கேசவனை மன்னிக்கவே கூடாது என்று நினைத்தனர்.

சற்று பயந்தபடியே சக்ரவர்த்தி ரோகிணியிடம் அதுபோல ஏதாவது உங்ககிட்ட இருக்கா என்ன..? என்று கேட்டான்.


இல்லங்க...என்னதான் நான் பணத்துக்காக ரவியோட பழகி இருந்தாலும் பணத்தையும் தாண்டி அவர் மேல எனக்கு ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் இருந்தது அதனால இதுவரைக்கும் நான் அவரோட ஒரு செல்பி கூட எடுத்தது கிடையாது... அப்படி இருக்கும் பொழுது எப்படி சார் வீடியோ எல்லாம் என்று கூறினாள்.

இரு ஆண்களுக்குமே சற்று நிம்மதி பிறந்தது.

ம்ம்... அப்புறம் என்று குரலில் சற்று கனிவுடன் மேற்கொண்டு பேச அவளை ஊக்கப்படுத்தினான் அபிமன்யூ…


ரவி என் பக்கம் மறுபடியும் திரும்பனும்...எந்த வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போக மாட்டேன் சொல்லிட்டு என்ன வெறுத்து ஒதுக்கினாரோ அந்த வீட்டுக்கு வானு என்னை அவரே வந்து கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சேன்

அப்புறம் தான் நேத்ராவை முதல்ல அந்த வீட்டை விட்டு வெளிய அனுப்புனா ரவி தானா என்னை தேடி வருவார்...அப்புறமா எங்க ப்ளான் ஈஸியா நடக்கும்னு திட்டம் போட்டோம் ‌…

ஒன்னு நேத்ராக்கு வேலை கிடைச்சி வெளியூரோ,இல்லனா வெளிநாடோ போகனும்...அதை எங்களால பண்ண முடியாது... இல்லனா அவ கல்யாணம் பண்ணி போகணும்
ஆனால் நேத்ராவுக்கு கல்யாணம்ங்கற ஒரு எண்ணமே கிடையாது அதனால இந்த ரெண்டும் எங்களால முடியாது...

மூனாவது ரவியே அவளை வெறுத்து அந்த வீட்டை விட்டு அனுப்பி வைக்கறது போல செஞ்சா என்னனு யோசிச்சோம்...அப்போ தான் அவளை கேரக்டர் லெஸ் பொண்ணு போல காமிச்சி அவர் மூலமாகவே அவளை அனுப்பறதுக்காக
நாங்க எல்லாரும் சேர்ந்து போட்ட ஒரு திட்டம் தான் இந்த சிசிடிவி இன் ஆக்டிவேட் பண்ணி அந்த சமயத்துல அவ வெளிய போறதுபோல ஒரு செட் அப் செய்யறது…


இரு ஆண்களுமே உற்று கவனிக்க ஆரம்பித்தனர்…

அதுக்கு முதல்ல வீட்டோட செக்யூரிட்டி சிஸ்டம் பத்தி எங்களுக்கு தெரியணும் அதுக்காக முதல்ல உங்க கிட்ட வேலைக்கு ஒருத்தரை அனுப்பி வெச்சோம் அவனும் உங்கள மாதிரியே ஒரு மிகப்பெரிய ஹேக்கர் அங்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே உங்களோட சிஸ்டமை அப்டேட் பண்ணி அங்கிருக்கிற கேமராவை எல்லாமே அவனோட ஃமொபைல் மூலமா ஆப்பரேட் செய்யறது மாதிரி செஞ்சுகிட்டான்.

பிறகு வீட்டோட ப்ளூ பிரிண்ட் வேணும்னு கேட்டதால ரவி இல்லாத சமயம் ஆஃபீஸ் வேலை செய்யறவர் மூலமா அதை திருடினோம்….என்ற ரோகிணியிடம்

வீட்டோட ப்ளூ பிரிண்ட் ஆபீஸ்ல தான் இருக்குனு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான் சக்கரவர்த்தி.

அதற்கு ரோகிணி வீட்டோடது மட்டும் கிடையாது அவருடைய எல்லா விதமான பிராபர்ட்டியோட பைல்ஸ் எல்லாமே அவர் ஆபீஸ்ல தான் வைப்பாரு அதுக்கு தனியா லாக்கர் இருக்கு பாஸ்வேர்டு போட்டு வச்சிருக்காரு.

சரி மேல சொல்லுங்க….


அதுக்கப்புறமா கேமரா எந்த பக்கமெல்லாம் வொர்க் பண்ணுதுனு பாத்தோம்...வீட்டுக்கு பின்னாடி இருந்த பெரிய மரம் எங்களுக்கு மிகப் பெரிய ப்ளஸ்…

அங்க வேலை செய்யற ஒரு பொண்ணை கைக்குள்ள போட்டோம்…

என் தங்கச்சிக்கு நேத்ரா போலவே ஹேர்கட், மேக்கப் நேத்ரா போடற மாதிரியே ஆடைகள்... நேத்ரா மாதிரி பாடி லாங்குவேஜ் எல்லாம் கொண்டு வந்தோம்…


முதல் திட்டம் வீட்டை சுற்றி இருக்கிற அத்தனை கேமராக்களும் பர்டிகுலர் டைம் இன் ஆக்டிவேட் ஆகணும் கொஞ்ச நேரத்திலேயே அது ஆக்டிவா மாறனும் அது மாதிரி நைட் பத்து மணிக்கு ஒரு தடவையும் இரவு நேரத்தில் இரண்டு மணி மாதிரியும் செய்ய வச்சோம்... சரியா ரெண்டாவது நாள் அபிமன்யு நீங்க அதை கண்டுபிடிச்சீங்க….


உடனே ரவி கிட்ட போய் இதை பத்தி சொல்லி போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ண சொல்லி அவர் கிட்டே கேட்கறீங்க அவர் என்ன ஏதுன்னு ஆராயாம உடனே போலீஸ் கம்ப்ளைன்ட் தரவேணாம்னு உங்க கிட்ட சொல்லி வைக்கிறாங்க அதுக்கப்புறமா வீட்டை சுத்தி நீங்கள் கண்காணிக்கறீங்க...

மூன்றாவது நாள்ல இருந்து தான் எங்க திட்டம் உயிர் பெறுது…தேத்ராவை கவனிச்சிக்கற பொண்ணை எங்க கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வந்தோம் அவ மூலமா நேத்ராவுக்கு நைட்ல பால் குடுக்கும் போது அதுல உடனே துக்கத்தை கொடுக்கற மாத்திரையை கலக்கறது...ஒரு வேளை அவ அதை குடிக்கலனா ரூம் ஃப்ரெஷ்னர்ல மயக்க மருந்தை கலந்து அறை முழுவதும் பரவ விடறதுனு செய்வோம்.

அப்புறமா என்னோட தம்பி வீட்டுக்குப் பின்பக்கம் போய் அந்த மரத்துல ஏறி அது வழியா சன் செட்ல குதிச்சி அப்படியே ஓரமா நடந்து போய் நேத்ரோவோட பாத்ரூமுக்குள்ள போறது…
இதுல பெரிய ப்ளஸ் நேத்ராவோட ரூம்ல இருக்கற பாத்ரூம்ல ரெண்டு வழி...ஒன்னு அவளோட பெட் ரூமுக்கு வரும் இன்னொன்னு சைடுல இருக்கிற அவளோட ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போகும்.

எப்பவுமே என் தம்பி டிரெஸ்ஸிங் ரூம் வாசல் வழியா தான் போறது ரூம்ல மயக்கமா இருக்குற நேத்ராவை தூக்கி டிரெஸ்ஸிங் ரூம்ல கிடத்திட்டு கீழ இருக்கிற செக்யூரிட்டி மெசேஜ் பண்ணவான்.அப்படியே தோதான இடமா பாத்து ஒளிஞ்சிப்பான்...பிறகு கொஞ்ச நேரம் கழிச்சி நேத்ராவை அவ ரூம்லயே போட்டுட்டு வெளிய வந்திடுவான்.

மேசேஜ் கிடைச்சதும் கீழே இருக்கிற செக்யூரிட்டி கேமராவை இன்ஆக்டிவேட் பண்ணுவான் நீங்க எல்லாமே உஷாராவீங்க...

அப்போ ஏற்கனவே தயாரா இருக்கிற என்னோட தங்கை உங்க வீட்டு கிட்ட இருந்து நடந்து போற மாதிரி போவா ரோட்ல இருக்கற நம்பர் போர்டு இல்லாத நாங்க ஏற்பாடு செய்து வைத்திருந்த ஸ்கார்ப்பியோ என் தங்கச்சியை பிக்கப் பண்ணிக்கும் …

சரியா மூன்றாவது நாள் நீங்க ரோட்டில் என் தங்கச்சியை ஸ்கார்பியோ பிக்கப் பண்றதை பாத்துட்டீங்க அது நேத்ராவோனு சந்தேகப்படறீங்க அதுக்கப்புறமா நேத்ராவை எல்லாருமே க்ளோசா வாட்ச் பண்றீங்க .

ராத்திரியில அவ எடுத்துக்கிற மயக்க மருந்தோட தாக்கம் காலையில் அவளுக்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க அவ போதை மருந்து அடிமையாகி இருப்பாளோனு சந்தேகப்பட்டு அவங்க அப்பா கிட்ட போய் இதை தெரியப்படுத்தறீங்க…

அதுக்கப்புறமா நேத்ரா மேல ரெண்டு கண்ணையும் வைத்துக்கொண்டு காத்திருக்கறீங்க…
மறுபடியும் அதே போல மறுபடியும் கேமரா இன் ஆக்டிவேட் ஆகுது அதே சமயத்துல வீட்ல பவர் கட் பண்ணறோம் நீங்க ஜெனரேட்டரை ஆன் செஞ்சிட்டு எல்லாருமே ரோட்டை பார்க்க நேத்ரா மாதிரி என் தங்கச்சி போறா.

உடனே மாடியில் போய் நேத்ராவை பாக்க அவ அந்த ரூம்ல கிடையாது
எல்லாருமே அவ வருவானு ரோட்டை பாக்க கார் வருது நேத்ரா மாதிரி இருக்கற என்னோட தங்கச்சி இறங்குகிறா... திடீர்னு கேமரா இன்ஆக்டிவேட் ஆகும் உடனே அந்த ஏரியாவும் பவர் கட்டாகும்... நீங்க பவர் லைனை சரி செஞ்சிட்டு பார்க்கும்போது ரோட்டுல யாருமே இருக்க மாட்டாங்க மேலே போவீங்க நேத்ரா வழக்கம்போல அவளோட பெட்ல படுத்து தூங்கிட்டு இருப்பா.

இதை தொடர்கதையா போக ரவியோட அப்பா உங்ககிட்ட ஃப்ரூப் கேட்பார் இல்லையா அதுக்காக சரியாக ஒரு வாரம் கழிச்சு
வீட்டோட ஒரு மூலையில் இருந்த கேமரா மட்டும் ஆன்ல இருக்குது அங்க நேத்ரா மாதிரியே ஆடை அணிந்த என்னோட தங்கை போறா நம்பர் போர்ட் இல்லாத கார்ல பிக்கப் பண்ணறான்…இது புட்டேஜா பதிவாகுது….

அன்னைக்கு நைட்டும் நேத்ரா வீட்டுக்குள்ள வரும்போது பார்க்க முடியல…

மறுநாள் ஒருவேளை கரண்ட் கட் ஆச்சுன்னா வெளிச்சத்துக்காக எமர்ஜென்சி லாம்ப் பிக்ஸ் பண்ணிட்டு எல்லாருமே காத்திருக்கீங்க…இந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சதால தங்கையை தம்பியோட நேத்ரா ரூம்க்கு அனுப்பி வச்சிட்டோம்.

வழக்கம் போல எங்க திட்டம் நடக்குது அதிக வெளிச்சம் இல்லாததால தங்கச்சி தைரியமா வெளிய போறா... தைரியமா உள்ள வர்றா சரியா அன்னைக்கு என் தங்கையை அரை இருட்டுல பாக்கற அபி அது நேத்ரானு முடிவு பண்ணறாங்க...உடனே அதை ரவிக்கு தெரியபடுத்த அவர் கோபமா வெளியே காத்திட்டு இருந்தாரு…ஆனா என் தங்கை நேத்ரா ரூமுக்கு போறதுக்கு முன்னாடியே நேத்ரா சீக்கிரமா முழிச்சு ஏதேச்சையா தண்ணி புடிக்க கீழ வர்றா…

தங்கச்சி யாருக்கும் தெரியாம படிக்கட்டுக்கு கீழே போய் ஒளிஞ்சிருக்க ரவி உள்ள வந்த என் தங்கையையும் தண்ணி பிடிக்க வந்த நேத்ராவையும் மாறி மாறி பார்த்து குழம்பிப்போய் நேத்ராவை அவர் திட்ட அவளும் சண்டை போட்டுட்டு இருந்த சமயத்துல என் தங்கை நைஸா மேல போய் என் தம்பியோட வெளியே வந்துட்டா.

மகள் எங்கே தவறான வழிக்கு போயிடுவாளோன்னு பயந்த ரவி எங்கள் திட்டப்படி உடனடியாக ஷர்மா சார் கிட்ட சொல்லி ரோகித்தை மாப்பிள்ளையா பார்க்கறாரு..
எங்க திட்டம் நிறைவேறியாச்சு…ஆனா கல்யாணம் ஒருவருடம் தள்ளி போனதால மறுபடியும் எங்களுக்கு ஒரு பயம்.

மறுநாளும் அதே மாதிரி என் தங்கையை வெச்சு பண்ணலாம்னு பார்க்கும்போது முதல் நாள் வீட்டுக்குள்ள போகும்போது நேத்ரா எதிர்ல வந்தது ரவி பார்த்தது இதுல எல்லாம் பயந்து போன என் தங்கை இந்தத் திட்டத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு அடுத்த பிளைட் பிடிச்சு ஊருக்கு கிளம்பி போய்ட்டா…


வேற வழி இல்லாம நாங்க வெறுமனே லைட் ஆஃப் பண்ணிடு ஸ்கார்பியோ வண்டியை மட்டும் ஒட விட்டோம்.

ஆனா அன்னைக்கு நைட் நேத்ரா சீக்கிரமாவே விழிச்சு கீழே ஓடி வந்து ப்ரூப் பாக்குறேன்னு உங்களோட சண்டை போட்டு அவ அப்பாவோட சண்டை போட்டு முழுசா நாங்கள் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே அவங்க அப்பாவோட வெறுப்பையும் சம்பாதிச்சிட்டா... அது மட்டும் இல்ல ரவியே இனி அந்த வீட்ல இருந்து நேத்ராவை அனுப்ப மாட்டேனு சொன்னால்கூட நேத்ரா இனிமே அந்த வீட்டிலேயே இருக்க மாட்டா அது மாதிரி நாங்க பண்ணிட்டோம் திருப்தி ஆயிடுச்சு .

ஆனா இதுல பாதிச்ச நேத்ரா தற்கொலை முயற்சி பண்ணுவானு நான் கனவுல கூட நினைக்கல அவர் தற்கொலை முயற்சி பண்ணினானு தெரிந்ததுமே எனக்கு ரொம்பவும் கஷ்டமா போயிடுச்சு என் தம்பி கிட்ட இதெல்லாம் இதோட முடிச்சுடுவோம் ரவி என்னை ஏத்துக்கலனாலும் பரவாயில்லைனு சொன்னேன் ஆனா அவன் காசுக்கு ஆசைப்பட்டு என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ரவிகிட்ட பணம் கேட்டு வந்திருக்கிறான் இப்போ மாட்டிகிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறான் போல..


இது தெரியாம நீங்க வந்ததுமே எல்லாத்தையும் கண்டுபுடிச்சி என்னை தேடி வந்துட்டீங்கனு நெனச்சிட்டேன்…
தயவு செஞ்சு என் தம்பியை விட்டுடுங்க அவனுக்கு நான் நல்ல புத்தி சொல்லி மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் அது மட்டும் இல்ல நானும் கூட ஊருக்கே கிளம்பி போயிடறேன் இனிமே ரவி நேத்ரா விஷயத்துல நாங்கள் தலையிடவே மாட்டோம் என்றாள்.


நீ நினைச்சது உண்மைதான் ரோகினி நாங்க எல்லா விஷயத்தையும் கண்டுபிடிச்சிட்டு தான் உன் கிட்ட வந்திருக்கோம் உன் தம்பியை எதும் பண்ணாம இருக்கணும்னா இன்னும் நீ முழுசா வாயை திறக்கணும்.

இவ்வளவு பெரிய விஷயத்தை நீ மட்டும் தனியா ஆளா பண்ணினேனு சொன்னா அதை நாங்க நம்பனும் இல்லையா…

என்னதான் ரவி உனக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருந்தாலும் ஒரு ஹேக்கரை உன்னால விலைக்கு வாங்கவே முடியாது.

ஒரு ப்ரொபஷனல் ஹேக்கர் இந்த மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் உன்கிட்ட வந்து வேலை செஞ்சு கொடுக்க மாட்டான் உண்மையை சொல்லு செக்யூரிட்டில ரெண்டு பேரை நீ விலைக்கு வாங்கி எங்களோட உலாவ விட்டு இருக்கலாம் ஆனா அவன் ஹேக்கர்னு சொல்ற பாரு அதை என்னால நம்ப முடியல…

நீ சொன்ன மாதிரி அவன் உண்மையான ப்ரொபஷனல் ஹேக்கரா இருந்திருந்தா இந்நேரம் ரவியோட பர்சனல் ஐடியை ஹேக் க் பண்ணி அவரோட பேங்க் பேலன்ஸ் மொத்தத்தையும் சுருக்கிட்டு கிளம்பி இருப்பான் இப்படி மாச கணக்குல நீ கொடுக்கிற அல்ப பணத்துக்கு வேலை செய்ய மாட்டான்.


இப்ப நீயா வாயை திறக்குறியா இல்ல தொறக்கற மாதிரி நாங்க பண்ணட்டுமா இவ்வளவு நேரம் பொண்ணுங்கற மரியாதையில உன்கிட்ட நாகரீகமா நடந்துகிட்டோம் இனிமேலும் அதை நீ எங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது என்று அபிமன்யூ ரோகிணியை மிரட்டத் தொடங்கினான்.

அவளும் பயந்தபடி இல்ல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க நான் சொன்னது எல்லாமே உண்மைதான் என்று கூறினாள்.

அதற்கு அபிமன்யூ ஆமா நீ சொன்னது எல்லாமே உண்மை தான் அதை ஒத்துக்குறேன் ஆனா உன்னை இதெல்லாம் செய்யத் தூண்ட விட்டது யார் உனக்கு இத்தனை விபரங்களையும் அள்ளிக் கொடுத்தது யார் ரவியோட முக்கியமான பைல்ஸ் எல்லாமே அவரோட ஆபிஸ் ரூம்ல இருக்கிற விஷயம் தானே உனக்கு தெரியும்
வீட்டு மேப்பை திருடி குடுத்தது யாரு...

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
14

உன் மனசுல என்ன பெரிய டான்னு நினைப்பா ரோகிணி


வீட்டு செலவுக்கு பணமில்லாம ரவியோட கையை எதிர்பார்க்கற உனக்கு இத்தனை ஆட்கள் வேலை செஞ்சு கொடுக்கிறாங்கனு நீ சொல்லற கதையை நாங்க நம்பனுமா... உன்கூட பிறந்ததற்காக உன் தம்பியும் தங்கச்சியும் வேணா உனக்காக ப்ரீயா வேலை செஞ்சு கொடுக்கலாம்.

ஆனா ரவி வீட்டு வாசல்ல இருக்குற செக்யூரிட்டில இருந்து வீட்டுக்குள்ள வேலை செய்ற வேலைக்காரி வரைக்கும் உனக்கு யாரும் சும்மா வேலை செஞ்சு கொடுக்க போறதில்லை.

இந்த டெல்லி மெயின் ரோட்டில நம்பர் ப்ளைட் இல்லாம ஒருத்தன் காரை ஓட்டுரான்னா அவன் எல்லாத்துக்கும் துணிச்சலான தான் இருப்பான் அந்த அளவுக்குத் துணிஞ்சவனை உன் கூட வைச்சிருக்கன்னா நீ சாதாரணமான பொண்ணு கிடையாது.

அப்படி இல்லனா யாரோ குடுக்கற கீ-க்கு நீ ஆடறனு அர்த்தம்

யாரு உனக்கு கீ கொடுக்கிறது அதை சொன்னா உன் தம்பிக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாம வெளியே வருவான்.

இல்லன்னா பயந்து ஊருக்கு ஓடி போனாளே உன் கடைக்குட்டி தங்கச்சி அவ வரைக்கும் திகார் ஜெயில் ஒக்காந்து கஞ்சி குடிக்க வேண்டியதுதான் முடிவு பண்ணி சொல்லு என்று கூறியவன்

ஹாஸ்பிடல்ல இருக்கறதால நீ தப்பிச்ச... ஆனா இந்த ஹாஸ்பிடல் உனக்கு நிரந்தரம் கிடையாது இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க…

அதுக்கப்புறம் டெல்லி போலீஸ் வந்து உனக்கு சீர் செஞ்சி ஸ்டேஷன் கூட்டிட்டு போவாங்க அங்க வந்து நாங்களும் உனக்கு முறை மாமன் சீர் செய்வோம் என்று கூறிவிட்டு மருத்துவர்களிடம் காவலர்களிடம் அவளை ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர்.


சக்ரவர்த்தி யோசனையாக யார் இவளுக்கு பின்னாடி இருப்பாங்கன்னு நினைக்கற அபி…

தெரியல...ஆனா ஷர்மா இருக்கலாமோனு டவுட் வருது….

எதை வச்சி சொல்லற…

இவ சொன்னதுபோல அங்க இருக்கற செக்யூரிட்டியை ப்ரேக் பண்ணறது அவ்ளோ சுலபம் கிடையாது...ஒருவேளை இவ சொன்னது உண்மைனா என்னைப் போலவே ஷர்மாவும் கண்டுபிடிச்சி இருப்பாரு...ஏன் அதை வெளிய காட்டிக்கல….ரவி வீட்டுக்கு கூப்பிடற வரை ஏன் வரல…
ஏற்கனவே மாப்பிள்ளை பையனை ரெடி பண்ணி வச்சது போல ஏன் ஒரே நாள்ல ரோஷித்தை மாப்பிள்ளையா இறக்கனும்….அப்போ ரவி கூப்பிடனும்னு எதிர் பார்த்து காத்திருந்திருக்கறாரு….ஆனா எதுக்காக….ஏன்... எப்படி கண்டுபிடிக்க…
ஒன்னுமே புரியலையே…என்று குழம்ப ஆரம்பித்தான்.


பிறகு டேய் சக்கரவர்த்தி
இந்த நிமிஷத்துல இருந்து உனக்கு ஒரு வேலை அது என்னனா ஷர்மாவை ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ற... அவர் யாரை சந்திக்கிறாரு... யாரெல்லாம் அவருக்கு போன் பண்றாங்க... இது மாதிரி எல்லாத்தையும் உன்னோட போலீஸ் டிபார்ட்மென்ட் நண்பர்கள் மூலமா நீ கண்டுபிடித்து எனக்கு சொல்லற…

நான் உறுதியா சொல்லுவேன் இங்க நடந்த எல்லா குழப்பத்திற்கும் ஷர்மாவுக்கும் மிகப்பெரிய பங்கு ஒன்னு இருக்கு.

அவ்வளவு ஏன் இன்னும் அலசி ஆராய்ந்தா மதுவோட தற்கொலைக்கு பின்னாடி ஷர்மா கூட ஒளிஞ்சிகிட்டு இருக்கலாம்.

நாம இதை இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும் இங்க இருக்கற குழப்பம் எல்லாம் தீர்ந்து போச்சுனா நேத்ரா அடுத்த கட்டமாக ரோகித்தோட கல்யாணத்துக்கு தயாராகிடுவா அவ கல்யாணம் பண்ணிகிட்டு ஷர்மா வீட்டுக்கு போய்ட்டா அதுக்கப்புறம் நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது என்று கூறினான்.


சரி என்று சம்மதித்த சக்கரவர்த்தி யோசனையாக நெற்றியை சுருக்கியபடி நீ மது மேல ரொம்ப பாசம் வெச்சிருக்க...நேத்ராமேலயும் ரொம்ப அக்கறை காட்டற...மது சொன்னதுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கற வேலையை கூட விட்டுட்டு செக்யூரிட்டி அளவுக்கு உன்னை கீழ இறக்கிருக்க... ரவி உன்ன முழுசா நம்புறாரு ...உன்னை அவர் மகளுக்கு கேக்கவும் செஞ்சாரு...நீ சரின்னு சொல்லியிருந்தா உனக்கே கல்யாணம் பண்ணி வைப்பாரு...அப்படி இருந்தும் கூட ஏன் நீ நேத்ராவை கல்யாணம் செய்ய முன் வரல...நீ நேத்ராவை காதலிக்கற தானே...அவளுக்காக தான் இந்தனை கஷ்டமும் படற...ஏன் வேணாம்னு சொன்ன…


உண்மைதான் நான் மது கூட பேசும் போதெல்லாம் நேத்ராவை பற்றி மட்டும்தான் வைத்துப் பேசுவா அவளை நல்லா பார்த்துக்க சொல்லுவா முடிஞ்சா
உன்னோடவே வச்சிக்கோனு கூட சொல்லுவா அதோட அர்த்தம் நேத்ராவை நீயே கல்யாணம் பண்ணிக்கோங்கறது தான் எனக்கும் புரியும்... ஆனா மது கிட்ட என்னைக்குமே வாய்திறந்து நான் அந்த நம்பிக்கையை கொடுக்கவே இல்லை

இங்க டெல்லி வந்து கொஞ்ச நாள் வேலை பாத்தேன். நேத்ரா படிப்பு முடிஞ்சு இங்க வருவானு தெரிஞ்ச உடனே என் வேலைய விட்டுட்டு ரவியோட வந்து சேர்ந்தேன்.ரவிக்கு ஏற்கனவே என்னை பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சி இருக்கு...மது என் புகைப்படம் வரை ரவிகிட்ட குடுத்திருக்கா...ரவிக்கு நான் அவரோட இருக்கவும் அவ்ளோ சந்தோஷம்...


ஆனால் நேத்ரா உடனே இங்க வரல... மேல்படிப்புக்காக ஹாஸ்டல்லேயே தங்கிட்டா...எனக்கு நேத்ரா தான் முக்கியம்... சும்மா ரவியோட சுத்த பிடிக்கல அதனால தனியா என் அண்ணன் மூலமா செக்யூரிட்டி சர்வீஸ் ஆரம்பிச்சேன்.

அதுக்கப்புறம் ஒரு வருடத்திலேயே ரவிக்கு உதவி தேவைனு என்னை கூப்பிட்ட உடனே நான் இங்க வந்துட்டேன் .

வந்ததுமே ரவி என்கிட்ட ஒருமுறை தனியா பேசினாரு...மது பலமுறை சொல்லியிருக்கறா அபி ... உன்னை மாதிரி ஒரு பையன் நேத்ராவுக்கு மாப்பிள்ளையா வந்தா நம்ம ரொம்ப ரொம்ப குடுத்து வச்சவனு...அதனால அவ படிப்பு முடிஞ்சு இங்க வந்ததும் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கறீயானு அப்போவே கேட்டுடாரு...

நானும் நேத்ரா மனசுல என்ன இருக்குன்னு தெரியாம ஒத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்…

இங்க நேத்ரா வரும்போது நான் ரொம்ப ஆர்வமாக சுவாரஸ்யமாகவும் அவளை பார்ப்பேன் அவளுக்கு என்னை சுத்தமா புடிக்கவே இல்லை.

சுத்தமா கண்டுக்காத பொண்ணா இருந்தா கூட கட்டாயமாக கல்யாணம் பண்ணிகிட்டு மனசை மாத்த நினைக்கலாம் ஆனால் நேத்ரா என்னை முழுசா வெறுத்தா…


நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் காரணம் நான்தான்னு நம்பினா...அவ முதல் எதிரியே நான்தான்னு சொல்லுவா….

அதான் இந்த பிரச்சனை சமயத்தில் நேத்ராவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மறுபடியும் ரவி கேட்டப்போ நான் மறுத்திட்டேன்.

ரவிக்கு என் மேல நிறைய கோபம் அவரோட பொண்ணு பாதை மாறிப் போனதால தான் நான் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலனு நினைச்சாரு…

இவ்வளவு நாள் என்னோடயும் என் மனைவியோடும் உயிருக்குயிரா பழகிட்டு என் பொண்ணுக்கு ஒரு கஷ்டம் வந்ததும் நீ கை விட்டுட்டியே அபி... அவ பாதை மாறிப் போன பெண்தான் ஆனா ஒழுக்கம் கெட்டுப் போன பெண் கிடையாது எல்லாம் தெரிஞ்ச நீயே அவளை வெறுத்து ஒதுக்கினா வேற யாரு என் மகளை கல்யாணம் பண்ணிக்குவாங்கனு என்கிட்ட ரொம்பவே குறைபட்டுக் கொண்டார்.

அந்த கோபத்தில்தான் ரோகித்தை மாப்பிள்ளையையா கேட்டு ஷர்மா வீட்டுக்கு போனார்... ஏற்கனவே நேத்ரா ஏதோ ஒரு டிப்ரஸ்ஷன்ல தான் தவறான பாதைக்கு போயிருந்ததா நான் நினைச்சிட்டு இருந்தேன் இந்த மாதிரி சமயத்துல ஏன் அவளை
கல்யாணம் பண்ணி கஷ்டபடுத்தனும்னு நினைச்சு வேணாம்னு சொல்லிட்டேன்.

இப்போ ரோகித் மாப்பிள்ளையா வரும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஆனா நேத்ராவுக்கு தான் ரோகித்தை ரொம்ப பிடிச்சிருக்குல்ல அப்புறம் என்ன…


நான் எதுக்காக இந்த வீட்டுக்கு வந்தேன் நேத்ராவோட பாதுகாப்புக்காக தான் இப்போ நேத்ரா ஓட பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்ததும் உண்மையிலேயே ரோகித் நல்லவனா இருந்தா அவ வாழ்க்கை செட்டில்…அவ சந்தோஷம் மட்டும் போதும்...

மதுவோடு ஆசையும் அதுதான் என்னோட ஆசையும் அதுதான் நாம காதலிச்ச பொண்ணு விருப்பமே இல்லாம நம்மளோட இருந்து கஷ்டபடறதுக்கு அவளுக்குப் பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே...

ஒருவேளை ஷர்மாவுக்கும் இங்க நடக்கிற பிரச்சினையும் எந்த தொடர்பும் இல்லனா வாழ்க்கை ரொம்ப நல்லாதான் இருக்கும்.

என்னை பொருத்தவரைக்கும் மதுமதி ஒரு தேவதை நேத்ரா தேவதைகளோட இளவரசி... மதுவோட வாழ்க்கையை தான் என்னால சரி படுத்த முடியல நேத்ரா வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் ஆனா அவளுக்கு எப்போ எந்த ரூபத்தில் பிரச்சினை வந்தாலும் என்னை தாண்டி தான் அவகிட்ட போகும் அது மட்டும் உறுதி என்று கூறினான்…

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சக்ரவர்த்தி உன்னோட காதல் ஒரு கானல் நீரா போகுதுனு நினைக்கும்போது வருத்தமா இருக்குடா நீ அவகிட்ட உன் காதலை மட்டுமாவது சொல்லியிருக்கலாம் அவளுக்காக தான் நீ இந்த வீட்டுக்கு வந்தங்கற விஷயத்தை மட்டுமாவது தெரியப் படுத்தி இருக்கலாம்... இப்போ ரவிகிட்டயும் நீ சுயநலவாதி மாதிரி கெட்ட பேர் வாங்கிகிட்டு நேத்ராகிட்டயும் உன் காதலை தெரியப்படுத்தாம அவங்க வாழ்க்கையிலிருந்து விலகிப் போறது மனசு கஷ்டமா இருக்குடா...எனிவே உன் நல்ல மனசுக்காகவாவது நேத்ரா கண்டிப்பா சந்தோஷமா இருப்பா... உனக்கு நேத்ராவை விட ஒரு அருமையான பெண் மனைவியாகக் கிடைப்பாள் நான் மனசார வாழ்த்தறேன் என்று கூறினான் சக்கரவர்த்தி.


சரிடா மச்சி ஷர்மா விஷயத்துல கோட்டை விட்டுடாத அப்படியே ரோகித் மேலயும் ஒரு கண் இருக்கட்டும்...என்றான் அபிமன்யூ.



இங்கு நேத்ரா நன்கு அழுத படியே உறங்கிவிட்டாள்.

தாய் மடியில் தலை வைத்து உறங்கியது போல அவ்ளோ சுகமான உறக்கம்…

சிறிது நேரம் கழித்து கண்விழித்தவள் தலையணையை எடுத்து விட்டு வெறும் பெட்டில் சற்று நேரம் கண் அயரலாம் என்று தலையில் இருந்த தலையணையை எடுக்க தலையின் கீழே காலியாக இருந்தது. நேத்ராவின் தலை அந்தரத்தில் இருந்தபடியே படுத்திருந்தாள்.

காற்றின் மீதா நான் தலைவைத்துள்ளேன் என்று அவள் யோசித்தபடி எழும் முன் அவளின் தலையை மென்மையாக யாரோ பெட்டில் வைத்தனர்.

தன்னை தவிர்த்து இங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் என்று உணர்ந்த நேத்ரா நன்றாகவே விழிகளைத் திறந்து அறை முழுவதும் உற்றுப் பார்த்தவளின் பார்வை காற்றில் மெதுவாக தாயின் புகைப்படம் ஆடுவதை கண்டதும் கண்கள் நிலைகுத்தி அங்கேயே நின்றது.

பெட்டை விட்டு இறங்கியவள் ஆடும் புகைப்படத்தை ஒரு கையால் பிடித்து நிறுத்தியபடி அம்மா நீ இங்கதான் இருக்கியா... இப்போ என் பக்கத்துல தான் இருக்கியா... என்று கேட்க அறையில் எந்தவித சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது.

சொல்லும்மா….நீ இங்க தான் இருக்கியா என்று கேட்டபடி புகைப்படத்தின் மீது இருந்த கையை எடுத்தாள்.

இப்பொழுது புகைப்படம் ஆம் என்பது போல் ஒரே ஒருமுறை மட்டும் சற்று அசைந்தபடி மறுபடியும் நேர்கோட்டில் நின்று கொண்டது அதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த நேத்ரா ஒர் அடி பின் சென்று அப்படியே பெட்டில் அமர்ந்தாள்.

பிறகு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சில வினாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தாயின் புகைப்படம் அருகே வந்தாள்.

வந்தவள் புகைப்படத்தின் மேலே மீண்டும் கைகளை வைத்தபடி இங்கதான் இருக்கிறன்னா என்ன அர்த்தம் நீ எனக்காக வந்து இருக்கியா இல்ல என்னை கூட்டிட்டு போக வந்திருக்கியா சொல்லுமா எதுவா இருந்தாலும் எனக்கு முழு சம்மதம்…

புகைப்படத்தில் இருந்து எந்த அசைவும் இல்லை…

அம்மா போய்ட்டிங்களா….பதில் சொல்லாமலே போய்டிங்க…
என்றவள் உடனே அபிமன்யூவிற்கு அழைத்தாள்.

அப்படி உன்னோட நான் சில முக்கியமான விஷயங்கள் பேசனும் உடனே கொஞ்சம் வீட்டுக்கு வரியா என்று கூப்பிட்டாள்.

அதற்கு அபி நானும் உன்கிட்ட சில விஷயங்களை சொல்லனும் நேத்ரா... என் ரூம்க்கு போய் ப்ரஷ் ஆயிட்டு அங்க வர்றேன் வெயிட் பண்ணு என்றபடி வைத்துவிட்டான்.


அபி ரோகினியைத்தேடி சென்றுருந்தான் அவள் கிடைத்திருப்பாளா,இல்லை தப்பியிருப்பாளா,ஃபோனிலேயே கேட்டிருக்கலாமோ என்று சில வினாடிகள் யோசித்துவிட்டு அடுத்ததாக ஷர்மாவிற்கு கால் செய்ய ஆரம்பித்தாள்.

இங்கு ஷர்மா வீட்டிலோ ரோகித்தும் ஷர்மாவும் எதிர் எதிரே அமர்ந்த படி உயர்ரக மதுவினை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடும் கோபத்தில் இருந்த ரோகித் என்ன அங்கிள் அந்த முட்டாள் பய ரவி எல்லாத்துக்கும் அபியையே தேடறான்.

அந்த ரோஷினியை பத்திகூட அவன் கிட்ட சொல்லறான் என்னைவிட அவன் எதுல உசத்தி என்று கேட்டான்.

அந்த அபி அவனோட ஊர்க்காரன் இரண்டாவது மதுவுக்கு ரொம்ப தெரிஞ்சவன் போல எப்படி பழக்கம்னு தான் எனக்கு தெரியல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மதுவுக்கு பெருசா யாரோடையும் தொடர்பு கிடையாது இந்த அபி எந்த கேப்ல அவளோட நட்பானான்னு எனக்கு புரியவே இல்லை….

ரவி என்னதான் என்னோட உயிர் நண்பனா இருந்தாலும் அவனோட ஊர் பாசமும் அந்த மொழிப் பற்றும் ரொம்பவே அதிகம்…



எங்கே பேபிமாவை அபிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவானோனு பயந்து நான் எத்தனை வேலை பாத்திருக்கேன்.


ஒவ்வொரு முறையும் மதுப்பெண்ணை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு போராடி அசிங்கமா தோத்துகிட்டு இருக்கறேன். இந்த முறை தோத்துடக் கூடாதுனு ரோகினியை பண மழையில நனைய வச்சி
ரவிக்கும் ரோகிணிக்கும் தொடர்பு ஏற்பட வச்சேன். பணத்துக்காக அவ குடும்பமே ரவிக்கு எதிரா வேலை பாத்தது.

ரொம்ப அழகா திட்டம் போட்டு ரவியை குழப்பி அவன் வாயாலேயே உன்னை மாப்பிள்ளையா கேக்க வச்சிருக்கேன்.

அந்த நேத்ராவை அரை பைத்தியமாக்கி அவளே என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க ….அதுக்காக நான் ரோகித்தை கட்டிக்கறேனு சொல்லவும் வச்சாச்சி...


மதுவோட பொண்ணு நம்ம வீட்டை தவிர வேறெங்கும் போயிடக்கூடாது அவ நம்ம வீட்டு சொத்து என்று பற்களைக் கடித்தபடி கூறினார்.

அங்கிள் ரோகினி இதுபோல நடந்ததுக்கு காரணம் எல்லாமே நீங்கதான்னா அபி ரோகிணியை தேடிப் போய் இருக்கிறான் அவ ஏதாவது அபி கிட்ட சொல்லிட்டா நாம மாட்டிக்க மாட்டோமா….?


கண்டிப்பா மாட்டிக்க மாட்டோம் ரோகிணியை என்ன பண்ணினாலும் வாய் திறக்கவே மாட்டா...ஏற்கனவே அவங்க வருவாங்க அவங்களை குழப்பி விட்டுட்டு அப்புறமா மாட்டிக்கோனு சொல்லிருக்கேன்….ஏதாவது தப்பு பண்ணினா அவளோட கடைக்குட்டி தங்கச்சி இப்போ நம்ம கஸ்டடியில் இருக்கா அவளை நாம ஏதாவது பண்ணுவோம்னு தெரியும்….


அவ தங்கச்சியை புடிச்சி வச்சிருக்கற விஷயத்தையும் சொல்லிட்டா என்ன செய்யறது அங்கிள்.


அவளுக்கு என்னை பத்தி ரொம்ப நல்லா தெரியும்... ரோகித்
ஆரம்பத்திலேயே அவ கிட்ட சொல்லி தான் ரவியோட ஆபீசுக்கு அனுப்பி வெச்சேன்…. தப்பு நடந்தா உன் குடும்பம் உனக்கு இருக்காதுன்னு... சரின்னு தான் தலையாட்டிட்டு போனா... ஆனா அவளோட வலைல ரவியை விழ வைக்க முழுசா எட்டு வருஷம் பண்ணிருக்கா…அதுக்கே அவளை ஒருவழி பண்ணிருக்கனும்...பாவம்னு விட்டுவச்சிருக்கேன்...இப்போ கூட அவ தம்பி ஜெயிலுக்கு போனதா நினைக்கறாங்க அவனும் நம்ம கஸ்டடியில தான் இருக்கான்... என்று கூறும் பொழுதே நேத்ராவிடம் இருந்து காலிங் வந்தது.

போனைக் கையில் எடுத்துப் பார்த்த ஷர்மா நேத்ராவின் பெயரை பார்த்ததும் ரோகித்தை பார்த்து உதட்டின் மீது கைவைத்து ஷ்ஷ்...நேத்ரா ...எதும் போசாதே என்பது போல் ஜாடை செய்தவர்


சொல்லு பேபிமா... திடீர்னு அங்கிளுக்கு கால் செஞ்சிருக்க ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டார்.


ம்ம்... அம்மாக்கு முக்கியமான விஷயம் தான்... எனக்கு நிச்சயத்திற்கு டேட் பிக்ஸ் பண்ணுனிங்கல்ல அங்கிள்….


ஆமா பேபிம்மா…

அதுல ஒரு சின்ன கரெக்ஷன் அங்கிள்…

எ..ன்...ன…பேபிமா குரலில் சற்று அதிர்ச்சி.

கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு வச்சுக்கலாம்னு சொன்னேன் இல்லையா ஆங்கிள்.
அவ்வளவு நாள் கல்யாணத்தை தள்ளி போட வேண்டாம் நிச்சயம் முடிஞ்சதுமே கல்யாணத்தையும் வெச்சுக்கோங்க என்று எதிர்முனையில் வெட்கப்பட்டுக்கொண்டே நேத்ரா கூறினாள்.

இங்கு ஷர்மாவுக்கும் சந்தோஷத்தில் வாவ் மதுப்பொண்ணு பேசறது நீயா...நம்பவே முடியல இரு இப்போவே அங்க வர்றேன் என்றவரிடம் நேத்ரா அங்கிள் அதுக்கப்புறம் உங்க கிட்ட சில முக்கியமான விஷயங்கள் பேசணும் அதனால உடனே கிளம்பி வர்ரீங்களா என்றாள்.

இதோ இப்போ கிளம்பிட்டேன் என்றவர் டேய் ரோகித் நீயும் கிளம்பு என்றவர் பிறகு ஒரு அவசரக் குளியல் ஒன்றைப் போட்டு விட்டு வாய் முழுவதும் மௌவ்த் ப்ரஷ்னரை அடித்தபடி நேத்ராவை காண சென்றார்.

நேத்ரா அபிக்காக காத்திருக்க அபியும் வேகமாக அவளைக் காண வந்தான்.

அவன் வரவுமே வேகமாக அவனிடம் சென்றவள் அபி என்னாச்சி அவங்கள பாத்தீங்களா...கேசவன் சொன்னது போல அவங்க தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமா என்று கேட்டாள்.

வெயிட்...நேத்ரா ஒவ்வொன்னா பொறுமையா கேளு பதில் சொல்லறேன் அதுக்கு முன்னாடி உன் அப்பாவும் வரட்டும் அவர்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.

அப்பா என்றதுமே சட்டென்று அவளின் முகம் மாறியது சரி நீ அப்பா கிட்ட பேசு அதுக்கு அப்புறமா நான் வரேன் என்றபடி அங்கிருந்து நகர போனவளை

நேத்ரா நில்லு என்றவன் அவள் அருகே வந்து என்னோட ஏதோ பேசனும் உடனே வான்ன... ரோகிணி பத்தி கேக்கத்தானா …

அதை போன்லேயே கேட்டிருக்கலாமே நானும் பதில் சொல்லி இருப்பேனே எதுக்காக வீட்டுக்கு வர சொன்ன என்று சற்று காட்டமாகவே கேட்டான் அவனுக்கு நேத்ரா அங்கிருந்து எழுந்து சென்றது சற்றென்று கோபத்தை ஏற்படுத்தியது.

இல்ல நான் அதுக்காக வர சொல்லல உன்கிட்ட வேற ஒரு விஷயத்தை பத்தி ஷேர் பண்ணிக்கலாம்னு தான் வர சொன்னேன்‌

ஆனா நீ போன காரியமும் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் இருந்தது அதான் வந்ததும் கேட்டேன்.

நீ அப்பா கிட்ட ஏதோ முக்கியமானது பேசுறேனு சொல்லும் போது என் விஷயத்தை எப்படி கேட்ப... அதனால அப்பா கிட்ட பேசி முடிச்சுட்டு வா அதுக்கப்புறம் நான் தெரிஞ்சிக்க வேண்டியதை கேட்கறேன்...சொல்ல வந்ததையும் சொல்லறேன் என்று இவளும் காட்டமாக பதில் கூறினாள்.

ம்ச்...நேத்ரா இட்ஸ் டூ பேட் பிகேவியர்...இப்படி வந்து முதல்ல உக்காரு என்றவன் ரவியை ஃமொபைல் போனில் அழைத்தான்.

அவரும் இவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் உடனடியாக வந்தார் அபியும் நேத்ராவும் அருகருகே அமர்ந்திருக்க அவரின் மனதில் தீடிரென எது இவர்கள் இருவரையும் சேரவிடாமல் தடுத்தது... .

அபி மட்டும் நான் கேட்கும் பொழுதே நேத்ராவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி இருந்தால் இந்நேரம் இருவரும் கணவன் மனைவியாக இதே போல் அருகருகே அமர்ந்து இருப்பார்கள் என்று தோன்ற வினாடி நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டார் .

என்ன இது தனக்கு இது போலெல்லாம் எண்ணம் வருகிறது தப்பாயிற்றே ஏற்கனவே ரோகித்தை நேத்ராவிற்க்காக பேசி முடிவாகி விட்டது.

நேத்ராவும் ரோஹித்தை திருமணம் செய்வதற்கு தயாராகிவிட்டாள் இந்த சமயத்தில் தனது மனதில் ஏன் தேவையில்லாமல் இதுபோல் எண்ணங்கள் எல்லாம் வருகிறது என்று அவருக்கு அவராகவே மனதுக்குள் கடிந்து கொண்டார்.

வாங்க அபி என்னாச்சு போன விஷயம் என்று கேட்டார்.

சார் இங்க நடந்த எல்லா பிரச்சினைக்கும் ரோகிணி தான் காரணம் என்று அவன் அவளை சந்திக்க சென்றது முதல் அவளிடம் பேசியது வரை ஒன்று விடாமல் கூறினான்.

உடனே ரவி மிகவும் கோபத்துடன் பணத்துக்காக என்னோட பழகின விஷயம் எனக்கே தெரியும் ஆனா என் மகளை பகடைக்காயாக பயன்படுத்தினதை ஏத்துக்கவே முடியல... என் மகளைப் பற்றி நானே தவறாக நினைக்கிற மாதிரி என்கிட்ட எவ்வளவு அழகா நடிச்சிருக்காங்க நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்…


அவங்க கொடுத்த மயக்க மருந்துல என் பெண்ணுக்கு ஏதாவது ஆகி இருந்தா கண்டிப்பா என்னையே என்னால மன்னிக்க முடியாமல் போயிருக்கும் ஏதோ ஒரு கவனக்குறைவால் மதுவை தான் நான் இழந்துட்டேன் நேத்ராவையும் என்கிட்ட இருந்து பிரிக்கப் பாத்துருக்காங்களே...என்றவர் சங்கடத்துடன் மேலும் தொடர்ந்தார்.

என் மகளுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவ மேல இருந்த சபலம் என் கண்ணை கட்டி இருக்கு நான் எல்லாம் என்ன மனுஷன் என்று மிகவும் வருத்தப்பட்டார்.

பிறகு எப்படி ரோகிணியால இப்படி யோசிக்க முடிந்தது என் மகள் வீட்டைவிட்டு வெளியே போயிட்டா அவளை நான் இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சுப்பேன்னு... ஏதோ பேச்சுவாக்கில சொன்னேன் அதை வச்சிட்டு எவ்ளோ அழகா ப்ளான் பண்ணிருக்கா...


அவளை யார் மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்றவர் அபியைப் பார்த்து நீ எனக்கு ரொம்பவுமே உதவி பண்ணிருக்க நீ பண்ணின உதவிக்கு எல்லாம் என்னால கணக்குப்போட்டு கைமாறு செய்யவே முடியாது.

அது மட்டுமில்ல ரோகினி தெரிஞ்சி பண்ணினாளோ தெரியாம பண்ணினாளோ தெரியல ஆனா என் மகளுக்கு ஏற்ற ஒரு வரனைத் என் கண்ணுல காட்டி இருக்கா.

ரோகினி மட்டும் இடையில புகுந்து கேம் பிளே பண்ணாம இருந்திருந்தா நேத்ரா அவளோட கல்யாணத்தை பத்தி என்னைக்குமே யோசிச்சு இருக்க மாட்டா.

நானும் நேத்ராவைப் பத்தி பெருசா கவலைப்பட்டுட்டு இருந்திருக்க மாட்டேன் .

இந்த பிரச்சினையால நேத்ராவுக்கு ரோகித் மாதிரி ஒரு நல்ல பையன் ஷர்மா மூலமா கிடைச்சிருச்சு



ஷர்மா இப்பதான் எனக்கு போன் பண்ணி சொன்னான் இன்னும் பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிக்கலாம்னு... ஜோசியரை தான் பார்க்க போய் இருக்கான்...நல்ல நாள் பார்த்து குறிச்சிட்டு இங்க வந்திட்டு இருக்கறதா நேத்ராகிட்ட சொல்ல சொன்னான்
என்று நேத்ராவைப் பார்த்தபடி கூறினார்

அவர் கூறிய விஷயத்தைக் கேட்டதும் நேத்ராவின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் நிறம் மாறியது இதை கவனித்த அபிக்கு மனதில் சிறு வலி ஒன்று தோன்றியது.

அதை மறைத்தபடி எதுக்காக இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் இன்னும் முழுசா விசாரணை முடியல மேலோட்டமா தான் நேத்ராவை எப்படியெல்லாம் மாட்ட வச்சாங்கனு கேட்டு தெரிஞ்சிருக்கோம்…

யாரோ ரோகிணியை தூண்டிவிட்டு இருக்காங்க...வீட்டோட ப்ளூ ப்ரிண்டை திருடி குடுத்திருக்காங்க...வீட்டுக்குள்ள ரெண்டு தப்பானவங்களை நம்மோளட உலாவ விட்டிருக்காங்க... அதெல்லாம் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா கல்யாண ஏற்பாடுகளை பண்ணலாமே என்றான்.

அதற்கு ரவி அபி விசாரணை ஒருபக்கம் போகட்டும் கல்யாண ஏற்பாடு ஒருபக்கம் போகட்டும்... கல்யாணத்துக்கு விசாரணைக்கும் என்ன சம்பந்தம் என்றவர்
கேசவன் சொன்னதுமே வீட்டோட ப்ளூ பிரிண்ட்டை யார் திருடி கொடுத்திருப்பாங்கனு கண்டுபிடிக்க சொல்லி போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்தாச்சு…அவங்க இப்போ ஆஃபீஸ்ல இருக்கற கேமரா புட்டேஜ் செக் பண்ணிட்டு இருக்காங்க….

இப்போவே இங்க வீட்டுக்குள்ள இருக்கற கருப்பு ஆடுகளை நீங்க கண்டுபிடிச்சி தொரத்திவிடுங்க...என்றார்.

ஒகே சார் யாருனு இப்பவே பாக்கறேன் என்றவன் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்த நேத்ராவைப் பார்த்து…
நீ ஏதோ சொல்லனும்னு சொன்னியே நேத்ரா...என்று கேட்டான்.

அவன் கேட்டதுமே ஆர்வமானவள் தந்தை இருப்பதையும் மறந்து அபி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த வீட்டில் என்ன நடந்தது தெரியுமா சொன்னா நீ நம்பவே மாட்ட ஆனா நான் நல்லாவே பீல் பண்ணினேன் இந்த வீட்டுக்குள்ள அம்மா இருக்காங்க‌…அந்த புட்டேஜ் உண்மைதான்...

இவ்ளோ நாள் என்னை பயமுறுத்தின அம்மா இன்னைக்கு என்கிட்டே எவ்ளோ சாஃப்ட்- டா நடந்துக்கங்க தெரியுமா என்றாள்

மதுவைப் பற்றி பேச ஆரம்பிக்கவும் துணுக்குற்ற ரவி அங்கேயே இருந்து கொண்டு என்ன மது இந்த வீட்ல இருக்காளா என்று கேட்க

பேச்சு முன்புறத்தில் நேத்ராவும் ஆமாம்பா அம்மா இந்த வீட்டில இருக்காங்க அம்மா எனக்கு துணையா இருக்காங்க.

ரோகிணி என்னை விட்டைவிட்டு தொரத்த ஒவ்வொரு முறையும் எனக்கு மயக்க மருந்து கொடுக்கும் போதெல்லாம் அது என் உடம்புல கலந்துடக்கூடாதுனு அம்மா எனக்கு கனவுல வந்து என்னை உறங்க விடாம தட்டி எழுப்பி இருக்காங்க.

ஆனா ஒவ்வொரு முறையும் அவங்க ஊருக்கு தான் என்னை கூப்பிடுவாங்க அதுதான் ஏன்னு தெரியல என்று கூறியவள் தந்தையிடம் தன்னையும் மறந்து பேசியதை நினைத்து சற்று சங்கடப் பட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

மகள் தன்னிடம் பேசிய சந்தோஷம் ஒருபுறம் மனைவி இந்த வீட்டில் ஆன்மாவாக உலா வந்து கொண்டிருக்கிறார் என்பது மற்றொரு சந்தோஷம்... ஆர்வமுடன் ரவி அபியிடம் சென்றவர்

என்னப்பா நேத்ரா என்னனமோ சொல்றா நீஜமாவே இந்த வீட்ல மதுவோட ஆன்மா இருக்கா...அது புட்டேஜ்ஜா பதிவாகி இருக்கா ‌..எங்கே எனக்கு காமியேன் என்று கண்கலங்கியபடி கேட்டார்.

ஆமா சார் நேத்ரா சொல்றது உண்மைதான் நேத்ரா வெளிய போறது போல கிடைச்ச புட்டேஜ் ஆராயும் போதுதான் ஒரு நிழல் உருவம் வர்றதை நாங்க கவனிச்சோம் அது உண்மையிலேயே ஆன்மாதானா இல்லன்னா ரோகினி கேங் செட்டப் செஞ்சு வச்ச ஏதாவது ட்ரீக்ஸ்ஸானு செக் பண்ணினோம்.

அந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்ல அது ஏதோ இயற்கையை மீறிய சக்திங்கற விஷயம் எங்களுக்கு கன்பார்ம் ஆயிடுச்சு...நீங்களும் பாருங்க... என்று அவனது மொபைல் போனில் இருந்த பூட்டேஜ்களை அவரிடம் காண்பித்தான்.

கண்களில் கண்ணீருடன் முழுவதுமாக பார்த்தவர் மது என்னை மன்னிச்சிடும்மா..

தொடரும்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
15

இந்த உலகத்தை விட்டு போன நீ கூட மகளுக்கு ஒரு ஆபத்துனு தெரிஞ்சதும் காப்பாத்த ஓடிவந்து இருக்க.


ஆனா கூட இருந்துகிட்டே கூட நம்ம பொண்ணை என்னால பாதுகாக்க முடியல... வெறும் சபலத்தால உனக்கு துரோகம் பண்ணிட்டேன் என் பெண்ணுக்கும் மிகப்பெரிய அநியாயத்தை பண்ணிட்டேன் என்று கூறினார்.

பிறகு அபி அப்புறம் மது நேத்ரா கனவுல வந்து என்னெல்லாம் சொன்னா கொஞ்சம் சொல்லேன் என்று ஆர்வமாக மனைவியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக ரவி அபிமன்யுவை நச்சரித்தார்.

அவனும் நேத்ராவிற்கு வந்த கனவைப்பற்றி அவனுக்கு தெரிந்ததை கூறினான்.பிறகு மருத்துவர் அவளுக்கு சொன்ன விளக்கத்தையும் கூறியவன் பிரச்சனைகள் சரி ஆனதும் நேத்ராவை மது வாழ்ந்த வீட்டிற்கு சென்று ஒரு நாள் தங்கி விட்டு மதுவிற்கு திதி கொடுத்து விட்டு வர சொன்னதையும் சொன்னவன் அதைப்பற்றி தான் இப்பொ நேத்ரா பேசிட்டு போறா என்றும் கூறினான்.

அப்படினா உடனே போக சொல்லு அபி துணைக்கு நீ போ... கல்யாணம் நேத்ரா வந்ததும் பண்ணிக்கலாம்...நான் மதுவோட ஆன்மா சாந்தியடைய என்ன செய்யறதுன்னு யாராவது நம்பூதிரிகள் இருந்தாங்கன்னா கேட்டுட்டு வரேன்... அப்படியே என் பெரியப்பா கிட்ட சொல்லி தோப்பு வீட்டையும் சுத்தப்படுத்தி வைக்க சொல்லறேன் என்று உடனடியாகவே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபி நம்பிக்கையான வேலையாள் ஒருவரை அழைத்து வீட்டில் நடந்த குழப்பத்திற்கு யாரெல்லாம் ரோகிணிக்கு உதவியிருப்பார்கள் என சத்தேகப்பட்டானோ அவர்களின் பெயர்களை சொல்லி கண்காணிக்குமாறு பணிந்தான் பிறகு மறுபடியும் நேத்ராவை அவளது அறைக்கு தேடிச் சென்றான். அவளோ பேசவே கூடாது என்று இருந்த தந்தையிடம் பேசி விட்டோமே என்ற சங்கோஜத்தில் கௌச்சின் மீது தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

என்னாச்சு நேத்ரா என் கிட்ட ஏதோ முக்கியமா பேசணும்னு என்னை அவசரமா வர சொல்லிட்டு நீ எதுவுமே பேசாம இங்க வந்து உக்காந்துட்டு இருக்க…என்றவன் அவளை விட்டு சற்று தள்ளி அதே கௌச்சில் அமர்ந்தான்.


இல்ல இனி அப்பாவோடவே பேச கூடாதுன்னு நினைச்சேன் ஆனா ஏதோ நியாபகத்துல பேசிட்டேன்... அதான் ஒருமாதிரியா இருக்கு…

இங்க பாரு நேத்ரா இன்னும் பத்து நாளைக்குள்ள நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போகப்போறே தாய் வீட்டு சீரா என்ன எடுத்துட்டு போகப் போற ...உன்னோட அப்பாவோட வேதனையையும் கண்ணீரையும் எடுத்துட்டு போகப் போறியா..

வேணாம் நேத்ரா...அவர் பண்ணினது மிகப்பெரிய துரோகம் தான் அநியாயம் தான் சபலத்தால் தப்பு பண்ணிட்டாரு அதுக்காக பிராயச்சித்தம் பண்ணனும்னு நினைக்கிறாரு... இந்த சமயத்துல நீ அவர் கிட்ட பேசாம அவரை தண்டிக்கிறது நியாயமே கிடையாது

அவரோட எல்லா செயல்களும் உன் மேல இருக்குற அக்கறையை காட்டுது. உண்மையை சொல்லப்போனால் அவர் ரோகினி மாதிரி பெண் கிட்ட மாட்டினது கூட உன்னால தான்னு நான் சொல்லுவேன் .

நீ மட்டும் உன் அப்பாகிட்ட இயல்பா சகஜமாய் இருந்திருந்தா அவர் அளவுக்கு அதிகமா மதுபோதைக்கு ஆளாகி இருக்க மாட்டாரு.

அவரோட பலகீனத்தை ரோகினி நல்லாவே பயன்படுத்திகிட்டா தப்பு உன் மேலயும் இருக்கு... அவர் தவறான பாதைக்கு போனதுக்கு ஆரம்ப புள்ளி நீதான் நேத்ரா.

அதனால உன் அப்பாவை மன்னிச்சிடு ஒரு வகையில ரோகினி கூட ரொம்ப நல்ல பொண்ணு தான் என்ன தான் பணத்துக்காக உன் அப்போவோட பழகி இருந்தா கூட அவருக்கு எதிரா எந்த ஒரு எவிடென்ஸ்ஸையும் எடுத்து வச்சிக்கல…


ஏதோ ஒரு கட்டாயத்துக்காகவும் யாரோ ஒருத்தரோட தூண்டுதல்காகவும் தான் உன் அப்பா கிட்ட நெருங்கிப் பழகியிருக்கறா

அது யாருன்னு கண்டு பிடிச்சிட்டா அவளை கூட மன்னிச்சிடலாம் இதுதான் என்னோட பாயிண்ட் என்ற அபியை பார்த்த நேத்ரா…

அப்போ ரோகிணியை வேற யாரோ தூண்டி விட்டாங்கனு சொல்றீங்களா அபி‌..


ஆமாம் நேத்ரா இந்த வீட்டில் நடந்த குழப்பத்திற்கு கண்டிப்பா அவ மட்டும் காரணம் இல்ல... வேற யாரோ…



ஒன்னு உன் அப்பா பேமிலி அதாவது அவரோட பெரியப்பா ஃபேமிலிக்குள்ள எப்பவுமே சொத்துக்காக அடிச்சிகிட்டிருக்காங்க அவங்க பண்ணிருக்கலாம்


அவங்க இல்லனா உன்னோட அப்பாவோட பிசினஸ் எதிரிகளா இருக்கலாம் இல்ல உன் அப்பாவ சுத்தி இருக்கிற நெருங்கின ஃப்ரெண்ட் யாராவதானு இனி தான் கண்டு பிடிக்கணும்.

இன்னும் ரோகினி முழுசா வாய் திறக்கல அவ மட்டும் வாய் திறந்துட்டா யார்னு ஈஸியா ஆளை புடிச்சிடலாம் நேத்ரா என்றான்.

அப்போ ரோகினி அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்ல வந்து இருக்கறதுக்காக மட்டும் இதெல்லாம் பண்ணலனு சொல்ல வரீங்களா அபி…என்று கேட்டாள்.


கண்டிப்பா நேத்ரா அவளுக்கு உன் அப்பாவை ரொம்ப பிடிக்கும் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாகவும், ஆடம்பரமாகவும் இந்த வீட்ல வந்து இருக்கணும். ஆனா இதையும் தாண்டி வேற ஒருத்தரோட தூண்டுதல் இருக்கு
யாரோ ஒருத்தருக்கும் மறைமுகமாக வேலைபாத்திருக்கா...அந்த யாருக்கோ உன் அப்பாவோட நிம்மதி தேவைபட்டிருக்கு...நீ இந்த வீட்டை விட்டு வெளிய போகனும்னு நினைக்கறாங்க…

யாரா இருக்கும் அபி...நான் வெளிய போறதால என்ன லாபம்…

ம்ச்... அதான் புரியல நேத்ரா
எப்படியும் நாளைக்கு ரோகிணியை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க அதுக்கப்புறமா போலீஸ் அவளை அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சா எல்லா உண்மையும் வந்துரும்... சக்கரவர்த்தி அதற்கான ஏற்பாட்டில் தான் இறங்கி இருக்கான்.

அதுக்கு முன்னாடி நான் இந்த வீட்டை சுத்தப்படுத்தனும் வீட்ல இருக்குற கருப்பு ஆடுகள் எல்லாத்தையும் துரத்தி விட்டுட்டா என்னோட வேலை முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்.

அப்புறமா உன் கல்யாணத்துக்கு வந்து நல்லா சாப்பிட்டுட்டு மொய் வச்சிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான் என்று சிரித்தபடி கூறினான்.

ம்ம்...என்ன அபி தீடிர்னு ஊருக்கு போறேன்ங்கற...இங்கேயே அப்பாவுக்கு துணையா இரேன்…

ம்ம்…. இருக்கலாம் ஆனா எனக்கும் கடமையிருக்கே நேத்ரா என் அம்மா அப்பாவையும் பாக்கனுமே மதுவுக்காக இங்க வந்தேன் உன் கல்யாணம் முடிஞ்சதுமே ரோகித் உன்னை பாத்துக்க போறாரு... நீயும் உன் கணவரும் சேர்த்து உன் அப்பாவை மட்டுமில்ல அவங்களோட பிசினஸ்ஸையும் சேர்த்து பாத்துக்கோங்க….


ம்ம்…. நீ சொல்றதும் சரிதான் உன்னோட அம்மா அப்பாவையும் பாக்கணும் இல்லையா... அப்புறம் அபி எனக்கு சில விஷயங்கள் உன்கிட்ட இருந்து தெரிஞ்சுக்கணும்னு ஆசை அதுக்காக தான் கூப்பிட்டேன்.

என் அம்மாவை கடைசியா ஹாஸ்டல் போறதுக்கு முன்னாடி பார்த்தது அதுக்கப்புறம் நான் அவங்கள பாக்கவே இல்ல இப்போ இருக்கிற போட்டோஸ் கூட பழைய போட்டோ தான் நீ தான் அம்மாவோட நெருங்கி பழகி இருக்கல்ல... அவங்க போட்டோஸ் இருந்தா காமியேன் அப்படியே உனக்கும் அவங்களுக்கும் எப்படிப் பழக்கும் என்ன சம்பந்தம் அதையும் சொல்லேன்….


இனி தெரிஞ்சு என்ன பண்ண போற நேத்ரா... அப்புறம் மதுவோட போட்டோ எதுவும் என்கிட்ட இல்ல...வேணா உன் அப்பாவை கேளு அவர்கிட்ட இருக்கும்... என்றான்.

பொய் சொல்லாத அபி கண்டிப்பா ஃபோட்டோஸ் வைச்சிருப்ப... சும்மா தெரிஞ்சு என்ன பண்ண போறன்னு எல்லாம் கேட்காத நான் ஊருக்கு போறேன்... என் அம்மா வாழ்ந்த வீட்ல ஒரு ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டு அதுக்கு அப்புறமா தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.

எதுக்காக நேத்ரா இப்போ தனியா போற... இன்னும் உன் அப்பாவோட ஃபேமிலி மேல டவுட் இருக்கு இந்த சமயத்துல அங்க வேணாம்…. கல்யாணம் முடிஞ்சதும் ரோகித்தோட போ…

நான் தனியா போறதா யார் சொன்னது...என் கூட நீயும் வர்ற... அதான் அப்பாவே உன்னை கூட வர சொன்னாங்களே...நான் கேட்டேன் அபி…

ஏன் நேத்ரா கல்யாணம் வரை இங்க கொஞ்சம் அடங்கி இரேன் என்னால
இன்னும் கேமரா பிரச்சனையையே தீர்க்க முடியல அதுக்குள்ள நீ புதுசா ஏதாவது பிரச்சனைல மாட்டிகிட்டா தாங்காதும்மா…

அப்படியா என்றவள் சட்டென எழுந்து அமர்ந்திருந்தவனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஃமொபைல் ஃபோனை பறித்தாள்.

ஹேய் குடு என்றவன் அவள் கையிலிருந்து வாங்க போக அவளின் தலைக்கு மீது கைகளை உயர்த்தியபடி கௌச்சின் மீது ஏறிக்கொண்டாள்.

குடு நேத்ரா என்ன விளையாட்டு... யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க என்றான்.

யார் பார்த்தாலும் பிரச்சினையில்ல என்ன நினைச்சிகிட்டாலும் கவலையில்ல நீ ஊருக்கு வரேன்னு சொல்லு அப்போ தான் ஃமொபைல் ஃபோனை தருவேன் என்ற படி அவனுக்கு கைக்கு கிடைக்காத வண்ணம் அங்கும் இங்கும் நகர்ந்து விளையாடியபடி பேசினாள்.

சற்று நேரம் அவளுடன் போராடியவன் பிறகு அவளின் விளையாட்டை தள்ளி நின்று ரசிக்க ஆரம்பித்தான்.

அவளிடம் இருந்து எந்த ஒரு எதிர்வினையும் வராததால் விளையாடுவதை நிறுத்திக்கொண்டவள் கௌச்சில் இருந்து கீழே இறங்கிய படி என்ன ஆச்சு அபி திடீர்னு சைலன்ட் ஆயிட்ட…


******


அவனிடமிருந்து பதில்வராததை கண்டு ஏமாற்றமடைந்தவள் சாரி இந்தா உன் ஃமொபைல் என்று சற்று வருத்தத்துடன் கையிலிருந்தத ஃபோனை அவனிடம் கொடுத்தாள்.

எதுவும் பேசாமல் மொபைல் போனை கையில்
வாங்கியவன் அதை ஆன் செய்து கேலரியின் பாஸ்வேர்டை போட்டு திறந்தவன் அவளிடத்தில் மீண்டும் கொடுத்தான்.

நெற்றியை சுருக்கியபடி வாங்கிப் பார்த்தவள் கண்கள் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் விரிய ஆரம்பித்தது... வாய்விட்டு ஹேஹ...என கத்தியவள் சந்தோஷத்தில் அபியை கட்டியணைக்க வர

பயந்து சில அடிகள் நகர்ந்து நின்றவன் எதா இருந்தாலும் வாய்ல பேசு பக்கத்துல வராத கீப் டிஸ்டன்ஸ் ஓகே என்றபடி இருவருக்கும் இருக்கும் இடைவெளியை ஆட்காட்டி விரலால் காட்டியபடி கூறினான்.

வேணாம்னா போ...என்றவள் கௌச்சில் அமர்ந்த படி அவன் ஓபன் செய்துகொடுத்த கேலரியில் இருந்த புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தாள்.

எல்லாமே மது அபியின் குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படங்கள் ... முதல் புகைப்படம் ஒரு திருமணத்தில் எடுத்தது மணமக்களுக்கு அருகில் கையில் ஒரு மூங்கில் கூடையுடன் நின்றபடி இருந்தாள்.

அம்மா பக்கத்துல இருக்கற இவங்கல்லாம் யாரு அபி…

ம்ம்...இதுல இருக்கறது எல்லாமே என் பேமிலி மெம்பர்ஸ் நேத்ரா... இது என் அண்ணாவோட கல்யாண போட்டோ அந்த சமயத்துல என்னோட அக்கா கன்சிவ்வா இருந்தா அதனால நாத்தனார் சீரை உன்னோட அம்மா மதுதான் பண்ணினா அந்த ஃபோட்டோ தான் இது...

ஓஓஓ அப்போ நீ என் ரீலேட்டிவா...எனக்கு மாமாவா நீ என்று கேலி பேசினாள்…

அதை ரசித்தவன் ம்ம்...அப்படியும் வச்சிக்கலாம்... என்னவோ தெரியல நேத்ரா இன்னைக்கு உன் பேச்சு சிரிப்பு..
விளையாட்டு எல்லாமே மது செய்றது போலவே இருக்கு மதுவை ரொம்பவே ஞாபகப் படுத்துற…

அப்போ உன் மது சொல்றேன் என்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று தோரணையாய் அமர்ந்தபடி சொன்னாள்.

ம்ம் பாக்கலாம்...என்று எதிர்புரமாக திரும்பியவன் சற்றென்று ஏதோ தோன்ற நேத்ராவைப் பார்த்து திரும்பினான்.
ஆம் அங்கு நேத்துராவின் உடலுக்கு மதுவின் ஆவிதான் அமர்ந்திருக்கிறது.

அந்த கண்களில் ஒரு பிரகாசம் அந்த இடத்திலேயே ஒரு தேஜஸ் தலையை நிமிர்த்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தோரணையே சொல்லாமல் சொல்லியது அது மதுமதி என்று.

அவளின் அருகில் வந்தவள் முகத்தையே கூர்ந்து கவனித்தபடி நேத்ராவின் தோள் மீது கை வைத்து நேத்ரா என்று தட்ட

சட்டென்று திடுக்கிட்ட நேத்ரா ஹான்... என்ன‌ அபி என்று கேட்டாள். உடனே நிமிர்ந்து நின்றவன் சுற்றிலும் அந்த அறையை நோட்டமிட மிக மெதுவாக மதுவின் புகைப்படம் அசைந்தது.

ஆச்சர்யத்தில் புகைப்படத்தின் அருகில் வந்தவன் திரும்பி நேத்ராவைப் பார்க்க அவள் ஃபோனில் இருந்த புகைபடங்களை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மது... என்று மிக மெதுவாக நேத்ராவுக்கு கேட்காதது போல் உதடுகளை மட்டும் அசைக்க இப்பொழுது புகைப்படம் சிறிதளவு அசைந்தது.

நீ இப்போ இங்க தான் இருக்கியா…

புகைபடம் மீண்டும் சிறிதளவு அசைய... ஆச்சரியத்துடன் பரபரப்பானவன்... சரி ஓகே நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் நீ ஆமானா போட்டோவை இதே மாதிரி அசையவிடு இல்லன்னா அசைய வேண்டாம் ஓகேவா என்று மீண்டும் உதடுகளை அசைத்தபடி அவன் பேச புகைப்படம் இப்பொழுது மீண்டும் அசைந்தது.

மது எதுக்காக நேத்ராவை ஊருக்கு வர சொல்லற நீ வாழ்ந்த வீட்டை அவ பாக்கணும் என்பதுக்காகவா…

ஆம் என்பதுபோல் அசைந்தது.

அந்த வீட்ல நேத்ராகாக நீ ஏதாவது வச்சிருக்கியா...அவ அதை பாக்கனுமா…

ஆம்…

ஒகே மது கண்டிப்பா அவ வருவா...நீ அவளுக்காக வச்சிருக்கறதை அவ பாப்பா போதுமா என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே


நேத்ரா அவனருகில் வந்து நின்றபடி ஹேய் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ என்ன அம்மா போட்டோவை பார்த்துகிட்டிருக்க வா இந்த போட்டோல இருக்குறது யாருன்னு எனக்கு சொல்லு என்று அவன் என் கைகளை பிடித்து இழுத்துச் சென்று அவளருகில் அமர வைத்துவிட்டு புகைப்படத்தை காண்பித்தாள்...எல்லாமே மதுவின் புகைப்படங்கள்
மல்லிப்பூ தோட்டத்தில் இருப்பது போல்...அவளது வீட்டில் எடுத்தது கோவிலில் எடுத்தது இப்படி ஏகப்பட்டது
ஆனால் நிறைய புகைப்படங்களில் சம்பந்தமே இல்லாத ஒரு நபர் இடையில் குறுக்கிட்டு இருந்தார்...

இதோ இவர் தான் அம்மாவுக்கு தெரியாம பின்னாடி வந்து நிற்கறது போல இருக்காங்க ஆனா இவர் பார்வை முழுசா அம்மா மேல தான் இருக்கு யார் இவர்... இவரும் எனக்கு சொந்தமா…ஆனா இவரை நான் பாத்திருக்கேன் என்று யோசித்தபடியே கேட்டாள்.

இவன் உன்னோட சொந்தக்காரன் கிடையாது... இவன் உங்க தோட்டம் மில் இதையெல்லாம் நிர்வகிச்சிகிட்டு இருந்த ஒரு வேலைக்காரன்…பாத்திருக்க வாய்ப்பிருக்கு….ஊர்காரன் தான் எங்காவது பாத்திருப்ப….

எங்க பாத்தேன் என்று மீண்டும் யோசித்தவள்….அபியை பார்த்து நிர்வகிச்சிகிட்டு இருந்துன்னா..இப்போ இல்லையா இவர்..

அய்யோ நேத்ரா நீ இவனை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமே இல்லை இவனெல்லாம் ஒரு சாதாரண வேலைக்காரன் ஏதோ தெரியாம ஒரு போட்டோல வந்துட்டான் அதுக்காக இவ்ளோ கேள்வி கேப்பியா…

என்ன ஒரு போட்டோல இருக்காரா கொஞ்சம் நல்லா பாரு எல்லாத்துலயும் இருக்காங்க அவ்வளவு ஏன் உங்க பேமிலி கல்யாண போட்டோல கூட கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு இருக்காங்க…

நேத்ரா இவன் ஒரு ப்ராடு உன் அம்மாவை ஏமாத்தி எப்படியோ வேலைக்கு சேர்ந்துட்டான் அப்புறம் தெரிஞ்சு உன் அம்மாவே அவனை தொரத்தி விட்டுட்டா…

ஆனா இவரை நான் நேர்ல பாத்திருக்கேன்…. நான் ஊர்ல இருக்கும் போதுதான அம்மா வேலைக்கு சேத்தாங்க...இவரை வேலைக்கு சேத்தும்போது தாத்தா கூட அம்மாகிட்ட சண்டை போட்டாங்க…ஆனா அம்மா பிடிவாதமா இவரை வீட்ல வச்சிகிட்டாங்க….

அதுமட்டுமில்ல இதுக்கு அப்புறமா தான் என்னோட அம்மா என்னை கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேத்தினாங்க என்று சோகமாக கூறியவள் பிறகு
ஆமா இவர் பேரு என்ன…?

ரொம்ப முக்கியம் இப்போ அவனோட பேரு….


ம்ச் சொல்லு அபி இல்லனா நான் அப்பாகிட்டயே கேட்டுக்கறேன்…


ராமா அப்படி எதும் கேட்டு வச்சிடாத அவன் பேரு முருகன் போதுமா …
அப்புறம் நேத்ரா எதுக்கும் உன் கற்பனையை கொஞ்சம் கம்மி பண்ணு இவன் அங்க வேலைக்கு சேரும் போது நீ குழந்தை எதுக்கும் எதுக்கும் முடிபோடற…. முதல்ல ஃபோனை குடு இன்னும் கொஞ்ச நேரம் உன்னோட இருந்தா என்னையும் உன்னை மாதிரியே யோசிக்க வச்சிடுவ...என்றபடி வெளியே சென்றான்.


ஊருக்கு போனதும் முத வேலையா முருகனை பத்தி தெரிஞ்சிக்கனும்... அப்போ தான் அம்மா ஏன் என்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டாங்க என்கிற விஷயமும் தெரியும் ஹாஸ்டல்ல சேர்வதற்கும் முருகனுக்கும் ஏதோ மிகப்பெரிய சம்பந்தம் இருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.

அபி வெளியே சென்ற சிறு நேரத்திலேயே ஷர்மாவும் ரோகித்தும் உள்ளே வந்தனர்.

முதலில் வந்தது ஷர்மா தான் அவரைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றவள்

பின்னால் வந்த ரோகித்தை பார்த்து சற்று வெட்கப்பட்ட படி வாங்க ரோகித் என்றாள்.

ரோகித் அவளைப் பார்த்து லூக்கிங் க்யூட் நேத்ரா...ரொம்ப நாள் கழிச்சி முகம் ரொம்ப தெளிவா இருக்கு…ஏதாவது ஸ்பெஷல் நீயுஸ்….என்று கேட்டான்.

அவனை பார்த்து மேலும் வெட்கம் கொண்டவள் நம்ம கல்யாணம் தான் ஸ்பெஷல் நீயுஸ்…என்றாள்.

அவளின் பதிலில் சந்தோஷமடைந்தவன் முகத்தை மிருதுவாக்கிக் கொண்டு
தேங்க்ஸ் நேத்ரா கல்யாணத்துக்கு உடனடியாக சம்மதிச்சதுக்கு என்றான்.

ம்ம்... இருக்கட்டும் என்று வெட்கப்பட்ட படியே கூறினாள்.

எதுக்காக பேபிமா எங்களை வர சொன்ன….

அது வந்து அங்கிள் கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஊருக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன் என்றாள்.

என்ன என்று அதிர்ச்சியாக ஷர்மா நேத்ராவை பார்த்து இப்போ எதுக்கு பேபிமா ஊருக்குப் போற கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு இப்போ ஊருக்கு போறேன்னா எப்படி…

இல்ல அங்கிள் அம்மா அடிக்கடி என் கனவில் வந்துகிட்டே இருக்காங்க...ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரசொல்லறாங்க...அது பத்தி டாக்டர் கிட்டேயும் கவுன்சிலிங் கேட்டேன் அவர் தான் ஒரு முறை ஊருக்கு போயிட்டு வானு சொன்னாரு.

என்ன பேபி மா படிச்ச பொண்ணுதானே நீ கனவுல வந்ததை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு ஊருக்கு போறேன்ங்கற
சின்ன வயசுல இருந்து அம்மா கூட இல்லாம ஹாஸ்டல் இருந்ததால உனக்கு அம்மா நியாபகம் வந்து இருக்கும் அதுக்காக அங்க போதெல்லாம் டூ மச்…

நோ அங்கிள் அம்மா என் கனவில் மட்டும் வந்திருந்தா நான் அதை கண்டிப்பா பெரிசா எடுத்துக்க மாட்டேன் .

ஆனா அம்மாவோட ஆன்மா இந்த வீட்டை சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கு ஒவ்வொருமுறையும் என்னை ஊருக்கு போக சொல்லுது

அன்னைக்கு என் கையில் காயம் ஆச்சு தெரியுமா அன்னைக்கு கூட அம்மாவோட ஆன்மாதான் எனக்கு அதை பண்ணிவிட்டது தெரியுமா…

என்ன உளறல் இது பேபிமா...


உளறல் இல்லை அங்கிள் உண்மை இதெல்லாம் சொன்னா யாரும் நம்ப மாட்டீங்கனு தான் நான் யார்கிட்டயும் சொல்றது இல்லை என்று பொய்க் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ரோகித் ஷர்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்ன உன் அம்மாவோட ஆன்மா இந்த வீட்டை சுத்தி வருதா...உனக்கெப்படி தெரியும்…ப்ரூஃப் இருக்கா...என்று ஷர்மா கேட்டார்.


ஒஒஒ இருக்கே என்றவள் பென்டிரைவ்வை எடுத்து கொடுத்தாள்…

யோசனையாக பென்டிரைவை வாங்கிக்கொண்டவர் இது எப்படி உனக்கு கிடைச்சது என்று கேட்டார் .

இது அபி தான் டாக்டர் கிட்ட வந்து காமிச்சாரு இதெல்லாம் பாத்துட்டு என்னோட கனவு காண அர்த்தத்தை சொல்லி முடிக்கும்போது அபிக்கு ஏதோ வேலைன்னு இதை வாங்காமலே கிளம்பி போயிட்டாரு ...டாக்டர் அவரோட லேப்டாப்ல ஃகாபி பண்ணிட்டு எனக்கே குடுத்துட்டாரு... நான் இதை வாங்கி பத்திரமா வைச்சிருக்கேன்.


வீட்டுக்குள்ள இது மாதிரி ஒரு விஷயம் இருக்கறது அபிக்கு தெரியுமா அதை ஏன் என்கிட்ட இதுவரை சொல்லல என்று நேத்ராவை பார்த்து கேட்டார்.


அபிக்கு இங்க நிறைய வேலை இருக்கு அங்கிள் இப்போ கூட பாருங்க ரோகிணியை விசாரிக்க தான் போய் இருப்பார்னு நினைக்கிறேன்..


இனி என்ன பேபிமா ரோகிணிகிட்ட விசாரிக்க இருக்குது அவளும் அவ தம்பியும் இந்த வீட்டுக்கு வரணும்ங்கறதுக்காக போட்ட பிளான் தானே அபாண்டமா உன் மேல் பழி போட்டது அதை தான் கண்டுபிடிச்சாச்சே இதுக்கு அப்புறம் எதுக்கு ரோகிணியை விசாரிக்கனுமாம்...

ஐயோ அங்கிள் இன்னும் சின்ன பிள்ளையாக இருக்கீங்களே அபி பாயிண்ட், பாயிண்டா என்கிட்ட சொன்னார்... ரோகினி மட்டும் இந்த விஷயத்தை தனியா ஆளா செய்யலையாம் வேற யாரோ ஒருத்தர் பின்னாடி இருந்த அவளை ஆப்ரேட் பண்ணியிருக்கறாங்க


கொஞ்சம் யோசிச்சு பாருங்க இவ்வளவு பெரிய வீட்டுக்குள்ள சுலபமா யாராவது உள்ள வந்துட்டு போக முடியுமா ஆனா இங்க வந்ததோடு மட்டுமல்லாமல் தினந்தினம் அழகா ஒரு டிராமா கிரியேட் பண்ணி இருக்கா


அபி சொன்னப்போ கூட நான் நம்பல ஆனா நல்லா யோசிச்சி பார்க்கும் போது கண்டிப்பா ரோகிணியால இதை தனியா செய்யவே முடியாது


அபி சொன்னது மாதிரி அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போயி விசாரிக்கணும் அப்போ தான் உண்மை தானா வெளியே வரும் என்று கூறிக்கொண்டே இருக்க ஷர்மாவிற்கு முகமெங்கும் வேர்த்துக் கொட்டத் தொடங்கியது.


சரி பேபி மா நீ டென்ஷனாகாத கல்யாண பொண்ணு ரிலாக்ஸா இரு
எனக்கும் ரோஹித்துக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்து ரவியை பார்க்கிறோம் என்றபடி வேகமாக வெளியே வந்தனர்.

காரில் ஏறவும் ரோகித் ஷர்மாவை பார்த்து அங்கிள் ரோகிணி வாயை திறந்துட்டா என்ன பண்றது கேசவன் தான் நம்மளோட கஸ்டடியில் இருக்கறான் ரோகினி இன்னும் அவங்க கஸ்டடியில தான் இருக்கறா நாம நல்லா மாட்டிக்க போறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல என்று கூற

கோபமாக ரோகித்தை முறைத்தவர் உன் அங்கிள் ஒன்னும் முட்டாள் கிடையாது ஈசியா மாட்டிக்க ஒரு விஷயம் செய்யறதுக்கு
முன்னாடி பலமுறை யோசித்து பொறுமையா தான் செய்வேன் ரோகினி அவங்க கையில் சிக்கும் போதே தெரியாதா…

எப்போ அபி இந்த விஷயத்துல டீப்பா இன்வெஸ்டிகேட் பண்ண இறங்கிட்டானோ அதுக்கப்புறம் ரோகிணியை விட்டு வைக்க நான் என்ன முட்டாளா என்று கூறியவர் யாருக்கோ அழைத்தவர் முடிச்சிடு என்று கூறியபடி போனை கீழே வைத்தார்.

அபி ரோகினிக்கு காண்பதற்காக சென்றுகொண்டிருக்க சக்கரவர்த்தியிடம் இருந்து அபிக்கு அழைப்பு வந்தது…

சொல்லு சக்கரவர்த்தி…


டேய் மச்சி இங்க கேசவனே போலீஸ்காரங்க என்கவுண்டர் பண்ணிட்டாங்களாம் என்று கூறினான்.

அதிர்ச்சி அடைந்த அபி என்ன சொல்ற சக்கரவர்த்தி என்கவுண்டர் பண்ணிட்டாங்களா...விசாரணையே ஆரம்பிக்கல அதுக்குள்ள எப்படி…அவனை என்கவுண்டர் பண்ண முடியும்... என்கவுண்டர் பண்ற அளவுக்கு கேசவன் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டான்... லோக்கல் போலீஸ்காரங்க கஸ்டடியில் தான வைச்சிருந்தாங்க அவங்களுக்கு யாரு என்கவுண்டர் பண்ணறதுக்கு ஆர்டர் தந்ததாம்…

அதெல்லாம் தெரியலடா பொதுவாக போலீஸ்காரர்களோட விஷயங்கள் அதிகமா வெளியே வராது... அவங்க சொல்ற விஷயம் என்னன்னா விசாரணைக்காக அவனை வெளியே அழைச்சிட்டு போகும் போது அவன் போலீஸ்காரங்ளை தாக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்ணினதா சொல்லறாங்க...

டியூட்டில இருந்தவங்களை காப்பாற்றுவதற்காக அவனை சுட்டதா ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க எனக்கு தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சுட்டேன் இதுக்கு அப்புறம் நாம போலீஸ்காரங்க கிட்ட வேற எதுவும் கேட்க முடியாது…

இட்ஸ் ஓகே சக்ரவர்த்தி...இனி கேசவனைப் விட்டுட்டு ரோகிணி கிட்ட போ…

நானும் அங்க தான் வந்துட்டு இருக்கேன் இப்போ நம்ம கையில இருக்குறத அவ மட்டும்தான் அவளையும் விட்டுட்டா அப்புறம் நேத்ரா பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்காமல் போய்விடும் என்று கூற


சரிடா நான் ரோகிணி கிட்ட போறேன் நீயும் சீக்கிரம் வந்து சேரு என்று கூறியபடி ஃமொபைல் ஃபோனை வைத்தான்.

இப்பொழுது ரோகிணியை காண்பதற்காக அபி மின்னல் வேகத்தில் காரை இயக்கினான்.

மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும்போதே சக்கரவர்த்தி எதிர்புறம் பதட்டமாக காணப்பட்டான்.

அதுமட்டுமின்றி உள்ளே சில போலீஸ் தலைகளும் காணப்பட்டது.

அபி வேகமாக இறங்கி மருத்துவமனைக்குள் செல்ல சக்கரவர்த்தி வேகமாக வந்து அவனை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

என்னாச்சி சக்ரவர்த்தி ஏன் இவ்வளோ போலீஸ்….


ரோகிணி சூசைட் பண்ணிக்கிட்டா அபி அதான் இவ்ளோ போலீஸ்... என்றான்.


என்ன…?என்று அதிர்ச்சி அடைந்த அபியை பார்த்த சக்கரவர்த்தி

ஆமாண்டா அவளை போலீஸ் அரெஸ்ட் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சு பயத்துல ஆஸ்பிடல் யூஸ்க்காக வைத்திருந்த நைஃப் எடுத்து அவ கையை கட் பண்ணிக்கிட்டாளாம்..

எப்போ நடந்தது சக்ரவர்த்தி…

இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டியூட்டி நர்ஸ் பார்த்திருக்காங்க உடனே போலீசுக்கு போன் பண்ணி சொன்னதால அவங்க வந்துட்டாங்க.

இந்த விஷயத்தில் இனி நீ தலையிடாதே நான் பாத்துக்குறேன் நான் ஆல்ரெடி போஸ்டிங்க்காக காத்து இருக்கறதால நான் இதுல இருக்கேன்னு தெரிஞ்சா கண்டுக்க மாட்டாங்க...நீ உள்ள வந்தா தேவையில்லாத பிரச்சினை வரும்…

ம்ச்... என்ன சக்கரவர்த்திக்கு இது கைல இருந்து ரெண்டு பேரையுமே முழுசா விட்டுட்டோமே ஒரே டைம்ல ரெண்டு பேரும் அடுத்தடுத்து நம்பறது போல செத்துருக்காங்க இது ஆக்சிடென்ட்டா இல்ல வேறு யாராவது இதை பண்றாங்களா


இப்போ எதையும் உறுதியாக சொல்ல
முடியாது அபி...ஒருவேளை இது ஆக்சிடெண்ட்டா கூட இருக்கலாம்... அப்படி இல்லன்னா யாருக்காக வேலை பாத்தாங்களோ அவங்களோட வேலையா கூட இருக்கலாம்.

பக்காவா ப்ளான் பண்ணி போலீஸ்ஸை கைக்குள்ள போட்டுக்கிட்டு இதை பண்ணியிருக்கலாம் எதுவா இருந்தாலும் போலீஸ் கிட்ட இருந்து நாம விஷயத்தை வாங்க முடியாது .

நாம இனி வேற வழியே தான் யோசிக்கணும்...

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
16

ஒருவேளை ரெண்டாவதா நாம யோசிக்கிறது போல இது திட்டமிட்ட கொலையா இருந்தா உண்மையிலேயே பயங்கர பிரச்சனைல நேத்ரா மாட்டியிக்கா அது மட்டும் உறுதி.


அப்புறம் அபி எனக்கு போஸ்டிங் ஆர்டர் வந்துருச்சு இதே டெல்லியில கமிஷனர் ஆபீஸ்ல போட்டு இருக்காங்க நான் நாளன்னைக்கு வேலைல ஜாயின் பண்றேன் இனிமே சட்டத்தோட உதவியோட சீக்கிரமா ஆள் யாருன்னு ஈஸியா கண்டுபுடிச்சிடலாம்..


நம்பிக்கையை விட்டுடாத ரோகிணியும் கேசவனும் மட்டும்தான் நம்ம கிட்ட இருந்து போயிருக்காங்க அந்த குற்றவாளி இன்னும் அப்படியே தான் சுத்திட்டு இருக்கான் ஈசியா பிடிச்சிடலாம் மனச தளர விடாதே என்று அபிக்கு ஆறுதல் படுத்தினான்.

ம்ம்...அந்த நம்பிகைல தான் இருக்கேன்...சரி நீ இதை பாத்துக்கோ நா வீட்டுக்கு போறேன் நேத்ரா தனியா இருப்பா...என்று அங்கிருந்து கிளம்பினான்.

ஷர்மாவும் ரோகித்தும் அவசரமாக வீட்டுக்குள் சென்று முன்னறையில் இருந்த ஸ்மார்ட் டிவியில் பென்டிரைவ்வை போட்டு பார்க்க ஷர்மாவும் கண்களுக்கு சரியாக தெரியவில்லை.

ரோகித்தை பார்த்து உனக்கு ஏதாவது தெரியுதா என்று கேட்டார்.

உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ரோகித்தின் கண்கள் திடீரென ஆச்சர்யத்தில் விரிந்தது...அங்கிள் நேத்ரா சொன்னது உண்மைதான் பாருங்க தெரியுது என்று அவனுக்குத் தெரிந்த இடங்களை எல்லாம் ஒரு பென் டார்ச் மூலம் சர்மாவிற்கு மார்க் செய்து காட்ட இப்பொழுது ஷர்மாவின் கண்களுக்கும் அந்த நிழல் உருவம் தெரிய தொடங்கியது.

இருவருமே அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீண்டும் தொலைக்காட்சியை பார்க்க இப்பொழுது தொலைக்காட்சியில் மதுவின் நிழலுருவம் மட்டுமே தெரிந்தது... தீடிரென்று கத்தியபடி தொலைக்காட்சியை விட்டு வெளியே குதித்த நிழலுருவம் இருவரின் முன்பும் வந்து நிற்க அலறியடித்தபடி இருவருமே பின்புறமாக சென்று விழுந்தனர்.

இவர்கள் கத்தியதை பார்த்து வீட்டில் பணி செய்யும் பணியாட்கள் எல்லோருமே ஓடிவர இப்பொழுது ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுத்தப்பட்டிருந்தது.

முன்னறை முழுவதுமே மயான அமைதி இருவருக்குமே உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது.

ரோகித் தான் முதலில் தெளிந்தான் அங்கிள் ஆர் யூ ஆல்ரைட் என்றபடி அவனும் எழுந்து ஷர்மாவையும் தூக்கிவிட்டான் .

எழுந்த ஷர்மா சுற்றி இருந்த வேலை ஆட்களை பார்த்து இங்கே என்ன வேடிக்கை என்று கத்த அனைவருமே கலைந்து சென்றனர்.

பிறகு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவர் ரோகித் எரியூட்டல்மயானத்துக்கு போய் அகோரி இருந்தா கையோட கூட்டிட்டு வா லேட் பண்ணாத...என்று கட்டளையிட ரோகித் கட்டுபட்டவன் போல ஓடினான்.

இங்கு ரவி தெரிந்தவர் மூலமாக நம்பூதிரியை சென்று சந்தித்தார்.

அவரிடம் இறந்த மனைவிக்கு திதி கொடுக்க வேண்டும் என்று தரலாம் என்று கேட்டார்.

அவரும் மனைவிக்கு இதுவரைக்கும் திதி கொடுக்கலையா...ஏன் கொடுக்கல...

அது வந்து..அய்யா என்று இழுத்தார்.

சரி அது உங்க விருப்பம்...சும்மா எல்லா நாளிலேயும் திதி குடுக்க முடியாது... மனைவி எந்த நாளில் எந்த வருடம் இருந்தாங்கன்னு சொல்லுங்க நான் உங்களுக்கு நாள் குறிச்சு கொடுக்கிறேன் என்று கூறினார்.

உடனே ரவிச்சந்திரனும் மது இறந்த நாளை அவரிடம் தெரியப்படுத்த…


ம்ம்... வர்ற அமாவாசை அன்னிக்கு பகல் பதினொன்னுக்கு மேல திதி கொடுத்துக்கோங்க என்று கூறினார்

ரொம்ப நன்றிங்கய்யா...என்று எழ போனவரை நம்பூதிரியின் குரல் தடுத்து நிறுத்தியது.


வீட்டில் எதுவும் நல்ல காரியம் வச்சிருக்கீங்களா….


ம்ம்...ஆமா அய்யா பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் இன்னும் பத்து நாள்ல ...


ம்ம்...அப்போ நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்து திதி குடுத்துட்டு அதுக்கப்புறமா மகளோட கல்யாணத்தை பண்ணுங்க அப்போ தான் தடங்கல் இல்லாம நடக்கும் என்றார்.


இங்கேயே திதி தரலாமா இல்லனா ஊர்ல போய் குடுக்கனுமா அய்யா…


ஊருக்குப் போகணும்கிற அவசியம் கிடையாது இங்கேயே நதிக்கரை ஓரமாக ஏதாவது ஒரு கோவிலில்ல திதி கொடுத்து பிண்டத்தை அந்த தண்ணியில கரைச்சிட்டு உங்க மனைவிய மனசுல நினைச்சு சாமி கும்பிட்டாலே போதும் அவங்க ஆன்மா சாந்தி அடைந்து விடும்...என்றார்.
விருப்பப்பட்டா காக்கைக்கு சாதம் வச்சதுக்கு அப்புறம் பத்து பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க போதும்.

அய்யா அப்புறமா ஒரு முக்கியமான விஷயம்... அது என்னன்னா இறந்து போன என்னோட மனைவி என் மகளோட கனவுல வர்றதா சொல்றா..என்ற ரவியிடம்

மக கனவுல வர்ற உங்க மனைவி என்ன சொல்லறாங்க...சும்மா வந்து போறாங்களா இல்லனா ஏதாவது சொல்லறாங்களா….என்று கேட்டார் நம்பூதிரி.


எப்போ கனவில் வந்தாலும் என் மகளை ஊருக்கு வர சொல்லறாளாம் அய்யா

ஒஒ ஊருக்கு வர சொல்லறாங்களா அப்படின்னா ஒன்னு பண்ணுங்க ரவி... நீங்களும் உங்க மகளும் ஊருக்குப் போய் உங்க வீட்டுல ஒரு நாள் தங்கி இருந்துட்டு அதுக்கப்புறமா அங்கே இருக்கிற பிரசித்தி பெற்ற கோவில்ல நிதி கொடுத்துட்டு மறுபடியும் உங்க வீட்டுக்கு வந்து ஒரு படையல் போட்டு சாமி கும்பிடுங்க.

உங்க மனைவியோட ஆன்மா கண்டிப்பா சாந்தியடையும்...வீடும் சுபிட்சம் ஆகும்... பொண்ணும் போற இடத்தில பெருவாழ்வு வாழ்வாங்கு.

நன்றி அய்யா அப்புறம் இனி ஒரு விஷயமும் இருக்கு அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல அதான் உங்ககிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கமா இருக்கு என்று தயங்கியபடி ரவி கூறினார்.

ஆச்சரியத்துடன் பார்த்த நம்பூதிரி என்னை நம்பி வந்து இருக்கீங்க எல்லாத்தையும் முதல்லேயே முழுசா சொல்ல வேண்டாமா என்று கடிந்து கொண்டார் பிறகு சரி என்ன விஷயம் சீக்கிரமா சொல்லுங்க என்றார்.


எங்க வீட்டை சுத்தி ஒரு நிழல் உருவம் மாதிரி ஒரு உருவம் வந்து போகுது அது எங்க வீட்டு கேமரால கூட பதிவாகி இருக்கு .அது என் மனைவியோட ஆன்மானு எடுத்துக்கலாமா...அப்படி வர வாய்ப்பு இருக்கா.. என்று கேட்டார்

ம்ம் உங்க மனைவியோடதா இருக்கலாம்... பொதுவா ஒரு ஆன்மா வீட்டை சுத்தி வருதுன்னா அதுக்கு ஏதோ நிறைவேறாத ஆசை இருக்குனு அர்த்தம்...அப்படி ஏதாவது மனைவிக்கு இருந்ததா….

அவளுக்கு பொதுவா எப்பவுமே என் பெண்ணை பற்றிய கவலை மட்டும் தான் நாங்க மூணு பேரும் சேர்ந்து ஒண்ணா இருக்கணும்னு ஆசை படுவா ஆனா என்னோட வேலை டெல்லியில் அமைஞ்சிட்டதால கடைசிவரை அது நடக்காம போயிடுச்சு அவளுக்கு ஏனோ டெல்லி பிடிக்கல ...என்னை ஊர்ல கிராமத்துல வந்து செட்டில் ஆக சொல்லுவா எனக்கு ஏனோ வேலை இல்லாம கிராமத்துல இருக்க பிடிக்கல…என்ற ரவியை யோசனையுடன் பார்த்த நம்பூதரி

அதான் இறந்ததும் இங்கே உங்களை தேடி வந்துட்டாங்க இதுவரை ஏதாவது தொந்தரவு பண்ணியிருக்காங்களா….என்று கேட்ட நம்பூதரியிடம் இல்லை என்பது போல் தலையசைத்த ரவி

இதுவரைக்கும் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் தொந்தரவும் இல்லை அதனால்தான் இது பத்தி உங்க கிட்ட சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சுகிட்டு இருந்தேன் ஆனால் என் மகளோட கனவுல வரும்போது மட்டும் ஊருக்கு வர சொல்றதா சொல்றாங்க என் மகளை மட்டும் கொஞ்சம் தொந்தரவு பண்றதா நினைக்கிறேன்


ஆன்மா இதுவரைக்கும் எந்த ஒரு தொந்தரவும் பண்ணலைனு சொல்லறீங்க ஆனா பொண்ணோட கனவுல மட்டும் வந்து ஊருக்கு வர சொல்லறதா சொல்றீங்க...

ஒருவேளை உங்க பெண்ணை ஊருக்கு வர வைப்பதற்காக கூட அந்த உருவம் உங்க வீட்டை சுற்றி சுற்றி வரலாம் அதனால் நாட்களை தள்ளிப்போடாதீங்க இப்பவே ஊருக்கு கிளம்பி போங்க…
மகள் கனவுல வந்து ஊருக்கு வர சொல்ற உங்க மனைவி கண்டிப்பா ஊருக்கு போனதும் எதற்காக வர சொல்றாங்க என்கிற விஷயத்தையும் கனவு மூலமாகவே வந்து உங்க மகளுக்குத் தெளிவு படுத்துவாங்க...

அது மட்டுமல்ல அவங்க ஆசைப்பட்டது மாதிரி நீங்களும் உங்க மகளும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்துட்டு அதுக்கு அப்புறமா திதி குடுங்க அவங்க ஆன்மா முழுமனசோட இங்கிருந்து கிளம்பும்…

அப்படியில்லாமல் உங்க மகள் திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்களும் மகளும் அங்க போய் தங்கினா கண்டிப்பா உங்க மனைவிக்கு திருப்தி இருக்காது.

காரணம் மகள் உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் நான் உங்களோட மகள் எப்போது திருமணம் ஆயிடுச்சா அப்போவே அவங்க இன்னொரு வீட்டுப் பொண்ணு அதனால அவங்க திருமணத்திற்கு முன்னாடியே உங்க மனைவி ஆசைப்பட்டது போல ஒரு பத்து நாளாவது நீங்களும் அவங்களும் சேர்ந்து இருங்க….கூடவே உங்க மனைவியோட ஆன்மாவும் உங்களோட தங்கி அவங்க ஆசையை தீத்துக்கும்….அதுக்கப்புறம் திதி கொடுத்துட்டு இங்க வந்து உங்க மகளோட திருமணத்தை முடிங்க...அதன் பிறகு மாப்பிள்ளையை அழைச்சிட்டு போய் ஒரு முறை திதி குடுங்க அதுக்கப்புறம் அவங்க ஆன்மா சாந்தியடைந்து உங்களையும் வாழ்த்திட்டு போயிடும் அப்புறம் எப்பவுமே திரும்பி வராது என்றார்.

ரொம்ப நன்றிங்க அய்யா நிறைய குழப்பத்தோடு இங்கு வந்தேன் எல்லாத்தையுமே மிக அழகா தெரிய வச்சிட்டீங்க என்னால உடனடியாக ஊருக்கு போக முடியலனா கூட என் மகளை முதலில் அனுப்பி வச்சிட்டு பின்னாடியே நான் போறேன் என்று கூறினார்.


நல்லது சிறப்பா எல்லாத்தையும் முடிச்சிட்டு அதுக்கு அப்புறமா வந்து என்கிட்ட சொல்லுங்க என்று கூறியவர் கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி வைத்தார்.

அப்பொழுதுதான் மருத்துவமனையிலிருந்து அபிமன்யு வீடு வந்து சேர்ந்தாள் அவன் உள்ளே வரவும்மே ரவி நேரடியாக அவனிடம் வந்தார்.


அபி நீ உடனே நேத்ராவை அழைச்சுக்கிட்டு கோயம்புத்தூர் போ அங்க தோப்பு வீட்டை ஏற்கனவே பெரியப்பா கிட்ட சொல்லி சரி பண்ணி வைக்க சொல்லி இருக்கேன்.

அவர் சரி பண்ணி வெச்சியிருப்பாரு தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை நேத்ராவுக்கு துணையாக இருக்க சொல்லு ஒரு ரெண்டே நாள்ல இங்கு இருக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டு நான் அடுத்த பிளைட்ல கிளம்பி வரேன் என்று கூறினார் .

அபி சற்று குழப்பத்துடன் என்ன சார் திடீர்னு ஊருக்கெல்லாம் என்று கேட்டான்.

அது ஒன்னும் இல்லை அபிமன்யூ இப்போதான் நம்பூதிரி கிட்ட போய் பேசினேன் அவர் என்ன சொல்றாருன்னா மதுவோட ஆசையை நிறைவேற்றி வெச்சிட்டு அதுக்கப்புறமா நேத்ராவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றாரு.

மதுவோட ஆசை எப்பவுமே நான் நேத்ரா மது மூன்று பேருமே அந்த தோப்பு வீட்டில் சந்தோசமா வாழனும்ங்கறது தான் ஆனா இப்போ மது எங்களோட இல்ல .

அதனால நானும் நேத்ராவும் சில நாள் அந்த வீட்டுல இருந்தா மதுவோட ஆன்மாவும் எங்களோட வந்து சேர்ந்து இருக்குமாம் அப்போ மது ஆசைப்பட்டது போல அந்த வீட்டில் நாங்க மூணு பேரும் சில நாள் வாழ முடியும்னு சொல்றாரு .
அப்புறமா மதுவுக்கு திதி கொடுத்தா அவ ஆன்மாவும் சாந்தியடையும்னு சொல்லறாரு நம்பூதிரி …

அவர் வயசுல ரொம்ப பெரியவர் அவருடைய பேச்சை தட்ட முடியாது இல்லையா இன்னும் கல்யாணத்துக்கு முழுசா பத்து நாள் தான் இருக்கு.

நாங்க கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் அங்கு தங்கியிருந்துட்டு கடைசி நாள் திதி கொடுத்துட்டு அப்படியே பிளைட் ஏறி இங்கே வரோம்
இங்கே ஷர்மா கிட்ட பேசி கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் தயாரா வைக்க சொல்லலாம்…குறித்த தேதில கல்யாணத்தை முடிக்கறோம்


இப்படி பண்ணும் போது திருமணம் தள்ளிப் போகாது மதுவோட ஆசையும் நிறைவேறும் நம்பூதிரி அய்யா சொன்ன மாதிரியும் நடக்கும் அதனால் தான் இப்போ உடனே உங்களை போக சொல்லறேன் என்று படபடவென பேசி முடித்தார்


பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அபிமன்யூ சார் உங்களுக்கு ஒரு நியூஸ் அது உங்களுக்கு குட் ஆர் பேட்-டானு தெரியல ரோகிணி பாஸ் அவே என்று கூற

ஒரு நிமிடம் மௌனமானார் எப்படி என்றார் உணர்ச்சியே இல்லாமல்

அவளுக்கு அவளே கையை கட் பண்ணிகிட்டு சூசைட் பண்ணிக்கிட்டா அனேகமா உங்ககிட்டயும் விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கு என்று கூறினான்.

உடனே அவர் பரவால்ல வரட்டும்... அவங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் நான் கொடுக்க தயாரா இருக்கேன் என்ன என் வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்கனும்னு நெனச்சேன் இப்படி உலகத்தைவிட்டு ஒரேடியா போவான்னு நான் எதிர்பார்க்கல...


கேசவனுக்கு இந்த விஷயம் தெரியுமா...அக்கா கையவே நம்மி வாழறவன் அவனுக்கு தான் பேரிழப்பு என்ற ரவியிடம் சற்று சிர்த்தபடியே அபிமன்யூ ... நியூஸ் பார்க்கவே இல்லையா சார் டெல்லியில் விசாரணைக் கைதி என்கவுண்டரில் மரணம்னு ஹெட்லைன்ஸ் போச்சே அது ரோகிணி தம்பி கேசவன் தான்.

போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயற்சி பண்ணினதா சொல்லி அவனை என்கவுண்டர் பண்ணினதா போலீஸ் தரப்பில் சொல்லறாங்க.

உண்மையை சொல்லப்போனா ரோகிணிக்கு முன்னாடியே அவன்தான் டிக்கெட் வாங்கிட்டு மேல போய்ட்டான்.

உங்களை சுற்றி கண்ணுக்கு தெரிஞ்ச பிரச்சினை ரெண்டுமே இப்போ உயிரோடு இல்லை.

ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரி இருக்காங்க அது யாருன்னு தெரியல .

எனக்கு ஊர்ல இருக்கிற உங்க பெரியப்பா குடும்பத்து மேல ஒரு சந்தேகம் இருக்கு .

பணத்துக்காக என்ன வேணாலும் செய்யத் துணிஞ்சவங்க சொத்துக்காக எப்பவுமே அவர்களுக்குள் ஒரு சண்டை இருந்துகிட்டே இருக்கும்.

இங்க நேத்ராவிற்கும் உங்களுக்கும் குழப்பத்தை உண்டு பண்ணி நேத்ராவை வெளிய அனுப்பினா அவளுக்கு சேர வேண்டிய சொத்துக்களும் உங்க பெரியப்பா பிள்ளைகளுக்கு போகும் இல்லையா அதுக்காக கூட ஏதாவது கேம் பிளே பண்றாங்களோனு தோணுது.

இந்த மாதிரி சமயத்துல ஊருக்கு போகணும்ங்கறது எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்று உண்மையை மறையாது அபி கூறினான்.

உடனே ரவி எனக்கு பயமே இல்லை அபி முன்னாடியாவது நீ மட்டும் தான் என் மகளுக்குப் பாதுகாப்பா இருந்த... ஆனா இப்போ என் மகளுக்கும் மதுவும் பாதுகாப்பா இருக்கறா அதனால தைரியமா நேத்ராவை ஊருக்கு அனுப்பலாம்.


ஒருவேளை ஊர்ல இருக்கிற என் பெரியப்பா குடும்பம் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம்னா எதிரியை அவனோட இடத்திலேயே போய் நாம சந்திக்கலாம் என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பிரச்சினையும் தீர்ந்து அவ நல்லபடியா புருஷன் வீட்ல போய் குடும்பம் நடத்தட்டும் என்று கூறினார்.

ம்ம்...ஓகே சார்...ஒருவேளை அவங்களா இருந்தா நேத்ராவுக்கு என்னோட பாதுகாப்பு தேவைபடாது என்றவனுக்கு
ஏனோ ஷர்மாவின் மேல் இருக்கும் சந்தேகத்தை ரவியிடம் கூற தோன்றவில்லை ஷர்மாவை பற்றி கூறினாலும் கூட ரவி முதலில் அதை நம்பமாட்டார்.
அவ்வளவு நம்பிக்கை ஷர்மாவின் மீது

ஷர்மாவிடம் நேரடியாக கேட்டாலும் கேட்டு விடுவார்...நீ தான் ரோகிணியை தூண்டிவிட்டு இதுபோல் வீட்டிற்க்குள் பிரச்சனையை ஏற்படுத்தினாயா என்று... அவர்களின் நட்பு அதுபோல்... அதன் பிறகு ஷர்மா ஊஷாராகி விடுவார் அது மேலும் சிரமத்தை கொடுக்கும்.

ஆதாரமில்லாமல் ஷர்மாவின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் எடுத்து வைக்க முடியாது அது நன்றாகவே தெரியும் அதனால் தான் பெரியப்பாவின் குடும்பத்தை மட்டும் கூறியவன் ஷர்மாவை பற்றி வாய்திறக்கவில்லை.

எது எப்படி இருந்தாலும் இன்னும் பத்து நாட்களுக்குள் தெரிந்து விடும் யார் அந்த எதிரி என்று... எப்படி என்பது தெரியவில்லை ஆனால் ஒரு மனம் சொல்கிறது எல்லா பிரச்சினைகளுக்கும் ஆயுட் காலம் வெறும் பத்து நாட்கள் மட்டுமே என்று.
பார்க்கலாம் பிரச்சினைக்குக் காரணம் பெரியப்பாவின் குடும்பமாக இருந்தால் அபி மீண்டும் டெல்லி வரத்தேவையில்லை கோவையிலேயே தங்கி விடுவான்...ஓருவேளை அவர்களை தவிர்த்து ஷர்மாவோ வேறு யாராவதாகவோ இருந்தால் மீண்டும் டெல்லி வரவேண்டும்.
பெரியப்பாவின் குடும்பமாகவே இருக்கட்டும் இறைவா என வேண்டிக் கொண்டான்.

ரவிக்கு ரோகிணியும் கேசவனும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி சற்று மன வருத்தத்தை கொடுத்தாலும் தனது மகளின் வாழ்க்கை மிகவும் முக்கியம் அவர்களின் மரணத்திற்காக வருந்திக் கொண்டு இருப்பதை விட தனது மகளின் எதிர்காலத்திற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு நேத்ராவை தேடி வந்தார்.

தந்தை தனது அறைக்குள் வந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் எழுந்து நின்ற நேத்ரா தலையைக் குனிந்தபடி நின்று கொண்டாள்.

ரவி நிமிட நேரம் மதுவின் புகைப்படத்தை பார்த்த பிறகு நேத்ராவைப் பார்த்து நீ இப்போ உடனே கிளம்பி கோயம்புத்தூர் போ...பிளைட் டிக்கெட் அபி கிட்ட இருக்கு .

நேரா உன்னோட பெரியப்பா வீட்டுக்கு போ அங்க இன்னைக்கு நைட் மட்டும் பாட்டி தாத்தாவோட இரு...அப்புறமா தோப்பு வீட்டுக்கு போகனும்னு சொல்லு உன்னை அவங்க கூட்டிட்டு போவாங்க..


தோப்பு வீட்டுக்கு காவலா எப்பவுமே ஒரு வயதான தம்பதிகள் இருக்காங்க அவங்க வீட்டை சுத்தம் பண்ணி வச்சிருக்காங்க உனக்கு துணைக்கு யாராவது வேணும்னா தோட்டத்தில் வேலை செய்றவங்களை வர சொன்னா உன்னோட வந்து தங்கிப்பாங்க.

உனக்கு என்ன வேணும்னாலும் அபியை கேளு ஏற்பாடு பண்ணுவான் இங்கு இருக்கிற சில வேலைகளை முடிச்சுட்டு நானும் உடனே கிளம்பி வரேன் உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட அம்மா ஆசைப்பட்டது போல அங்க தங்கியிரு...அப்புறமா நீ ஆசைப்பட்டது போல அம்மாவுக்கு திதி கொடுத்துட்டு இங்க வரலாம்...வந்ததும் உனக்கும் ரோகித்க்கும் கல்யாணம்.

அதுக்கு அப்புறமா நீ எப்பவும் ஆசைப்பட்டது போல காலம் முழுதும் ஷர்மா அங்கிள் வீட்டிலேயே இருக்கலாம்...என்றவரிடம்

நான் பெரியப்பா வீட்டுக்கு போனா அபி எங்க போவாரு…என்று சற்று கவலையுடன் கேட்டாள்.

அபி அவங்க வீட்டுக்கு போவான் மா…
உனக்கும் அவன் வீட்டுக்கு போகணும் போல இருந்தா அபி கிட்ட சொன்னா வந்து கூட்டிக்கிட்டு போவான்... அவங்க அம்மா அப்பா எல்லாருமே மது மேல ரொம்ப பாசமா இருந்தவங்க உன்னை பார்த்து ரொம்ப சந்தோஷ படுவாங்க அப்படியே கல்யாணத்துக்கு இன்வெய்ட் பண்ணிடு நானும் பத்திரிக்கை அடிச்சிட்டு வந்து முறைப்படி அழைக்கறேன்…

சரி ஒரு பத்து நாளைக்கு தேவைப்படுற துணி,பொருள் எல்லாத்தையும் பேக் பண்ணு...நானும் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையை ஆரம்பிக்கறேன் என்று சென்றார்.

நேத்ரா திரும்பி மதுவின் புகைப்படத்தை பார்த்தபடி எப்படியோ ஒரு வழியா உன்னை பாக்கறதுக்காக நான் வந்துகிட்டே இருக்கேன்மா.


எதுக்காக என்னை அங்க வர சொன்னேனு தெரியாது ஆனா நீ வாழ்ந்த அந்த வீட்ல நானும் கொஞ்ச நாள் வாழ போறன்.

அங்க வந்ததுக்கு அப்புறமாவது என் கனவுல வந்து சொல்லுமா எதுக்காக என்னை அந்த வயசுல கொண்டுபோய் கட்டாயமாக ஹாஸ்டல்ல சேர்த்தனு கிட்டத்தட்ட பத்து வருஷமா இந்த கேள்விக்கு பதில் தெரியாம நான் தவிச்சிகிட்டு இருக்கேன்.

இந்தப் பத்து வருஷ ஏக்கத்தை தாய்பாசத்தை வர்ற பத்து நாள்ல தீர்த்துக்கற மாதிரி நீ என்னோடவே வந்திருக்கனும்.

உனக்கு நான் திதி கொடுக்கும் போது நீயும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளனும் .

நானும் உன்னை சந்தோஷமா வழியனுப்ப வந்துகிட்டே இருக்கேன்.

எதையாவது எனக்காக காமிக்கனும்னு எடுத்து வச்சிருந்தா அதை எல்லாத்தையும் என் கண்ணுல படுற மாதிரி எடுத்து வை என்று கூறிய நேத்ரா பெட்டியை எடுத்து பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள் இப்பொழுது நேத்ரா அறியாத வண்ணம் புகைப்படம் மெதுவாக அசைந்தது.

அபி சக்ரவர்த்திக்கு அழைத்து ஊருக்கு செல்வதை கூறினான்.

சக்கரவர்த்தி சற்று அதிர்ச்சி அடைந்த படி காலையில் பார்க்கும் போது கூட இது பத்தி நீ என்கிட்ட சொல்லவில்லையே என்று கேட்டான்.

எது தான் நாம நினைக்கிற மாதிரி நடக்குது சக்கரவர்த்தி எல்லாமே திடீர் திடீர்னு தான் நடக்குது அப்படிதான் இதுவும் திடீர்னு ஒரு பிளான் என்று கூறினான்.

என்னடா என்னோட வேலை நியமனத்துக்கு நீ கூட இருப்ப எனக்கு வாழ்த்து சொல்லுவேன்னு எதிர்பார்த்தா இப்படி ஊருக்கு போறீயே என்று சங்கடப்பட்டான்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சக்கரவர்த்தி வேலையை ரொம்ப நல்லா செய் நீ ஆசைப்பட்டு எதிர்பார்த்த உன்னோட போலீஸ் வேலை இத்தனை நாளைக்கு அப்புறம் உனக்கு கிடைச்சிருக்கு. எப்பவுமே என்னோட பிளஸ்ஸிங் உன்னோடவே இருக்கும்.

அப்புறம் ஊருக்கு போனா அங்கேயே இருக்கற வாய்ப்பு அதிகம் எதுக்கும் நீ ஷர்மா மேல ஒரு கண்ணு வச்சுக்கோ முடிஞ்சா நம்ம செக்யூரிட்டி பசங்க யாரையாவது போட்டு அவரை க்ளோசா வாட்ச் பண்ண சொல்லு…

அது மட்டும் இல்ல நேத்ரா கல்யாணம் ஆகிப் போனா கூட அவளுக்கு இங்கே ஏதாவது ஒரு பிரச்சினைனா நீதான் பாத்துக்கனும் இப்போ டெல்லியில நீ தான் இருக்கற அதனால அவளையும் கொஞ்சம் பார்த்துக்கோ .

ஏன் அபி இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்க தீடிர்னு உன்னோட செக்யூரிட்டிய அந்த வீட்ல இருந்து தூக்கிட்டா ரவியோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா…

யோசிக்காமல் இருப்பேனா சக்கரவர்த்தி நான்தான் விலகி போறனே தவிர செக்யூரிட்டி அப்படியேதான் இருக்கும் என்ன விட திறமையான பசங்க நம்ம செக்யூரிட்டி சர்வீஸ்ல நிறைய பேர் இருக்காங்க அவங்க கிட்ட பொறுப்பை குடுத்துட்டேன்.

எத்தனை நாள்தான் நாமளே முதலாளியா இருக்கிறது அவங்க தொழிலாளியா இருக்கிறது அவங்களும் கொஞ்ச நாள் முதலாளி ஆகட்டுமே.

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ட்ரெயினிங் கொடுத்து வைத்திருக்கேன் இது போல தனித்தனியா பெரிய பெரிய இடங்களில் போயி நீங்களும் ஒரு செக்யூரிட்டி ஆரம்பிச்சி சமாளிக்கறது போல….

எல்லாம் சரி டா நேத்ரா கல்யாணத்துக்கு கூட வரமாட்டியா ஒரு வேளை ஷர்மாதான் அந்த எதிரினு தெரிஞ்சா என்ன பண்ணுற…

ஷர்மா தான குற்றவாளி ரோகித் குற்றவாளி இல்லையே அதனால நேத்ராக்கு எந்தப் பிரச்சினையும் வராதுனு நினைக்கிறேன்...

என்னதான் என் மனசை வெளிக்காட்டிகல நாளும்
மனசுல நினைச்சு ஆசைப்பட்ட பொண்ணோட கல்யாணத்தை நேர்ல பார்க்கிற அளவுக்கு கடவுளே எனக்கு பெரிய மனசை குடுக்கல சக்ரவர்த்தி


அப்புறம் நம்ம செக்யூரிட்டில இருந்த அந்த ரெண்டு பசங்கள வேலையை விட்டு நிறுத்திட்டேன்...வேலைகார பொண்ணையும் வார்ன் பண்ணி அனுப்பிட்டேன்... ரோகிணி சொன்னமாதிரி மூணு பேருமே அவளோட ஆளுக்கு தான்...


பசங்க ரெண்டு பேருமே நல்லா படிச்சு வெறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்காக ஒரு சாப்பாடு டெலிவரி பண்ற கம்பெனியில வேலைக்கு இருந்திருக்காங்க…

ரோகினி மாசம் இருபதாயிரம் ஆயிரம் சம்பளம்னு பேப்பர்ல ஆட் தந்ததை பாத்துட்டு இந்த வேலையில் இறங்கி இருக்காங்க... உங்களோட டேலன்டுக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவங்க இந்த மாதிரி தப்பான காரியம் எல்லாம் பண்ணாதீங்கன்னு வார்ன் பண்ணி அனுப்பிட்டேன் .


சரின்னு சொல்லிட்டு போயிருக்காங்க எதுக்கும் நீ சார்ஜ் எடுத்ததுக்கு அப்புறமா அந்த பசங்க மேல ஒரு கண்ணை வச்சுக்கோ.

அப்புறம் வேலைக்கார பொண்ணு பாவம் அவ குழந்தைக்கு எதோ முடியல போல பணம் தேவைபடற சமயத்தில அந்த பசங்க மூலமா ரோகிணியோட ஆஃபர் தெரிஞ்சிருக்கு என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே அந்த பொண்ணு அவங்க கொடுத்ததை நேத்ராவுக்கு பாலில் கலக்கி கொடுத்திருக்கிறா. ஒரே ஒருநாள் மட்டும் ஏதோ ஸ்ப்ரே அடிச்சிருக்கா... அதனால அந்த பொண்ணையும் மன்னிச்சி அனுப்பிட்டேன் .

ஒருவேளை அந்த பொண்ணு வேற ஏதாவது வேலைக்குப் போய் இதே மாதிரி மறுபடியும் பிரச்சினையில் இறங்கற மாதிரி இருந்தா அதை நீ பாத்துக்கோ என்று சக்கரவர்த்திக்கு அறிவுறுத்தினான்.

அதன்பிறகு சரிடா மாப்பிள்ளை நான் கூப்பிட்டதும் கோயம்புத்தூரில் இருந்து வந்து எனக்காக இவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்க ரொம்ப நன்றி என்றவன் நியாபகம் வந்தவனாக ஹான் மறந்துட்டேன் ரோகினி கேசவன் கேஸ் என்னாச்சு யாரும் விசாரணைக்கு இங்க வந்தது போல தெரியல என்று சந்தேகத்துடன் கேட்டான் அபி.

ரொம்ப சிம்பிள் அபி... கேசவன் ஒரு பெரிய வீட்டில திருடப் போய் மாட்டிகிட்டான் அவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போது போலீஸ்காரங்களை தாக்கிட்டு தப்பிச்சி போகும்போது போலீஸ்காரங்க தற்காப்புக்காக சுட்டதில் கேசவன் இறந்துட்டான்...

தம்பி திருடன்னு தெரிஞ்சதும் அவங்க அக்கா சூசைட் அட்டெர்ன் பண்ணினா அக்கம்பக்கத்தினர் காப்பாத்தி கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேத்தினாங்க...தம்பி சாகவும் மறுபடியும் போலீஸ்காரங்க விசாரணைக்கு வருவாங்களோனு பயந்து தற்கொலை பண்ணிக்கிட்டா அப்படின்னு சொல்லி கேஸை க்ளோஸ் பண்ணியாச்சு இனி எப்பவுமே ரோகிணி கேசவன் சாப்டர் வெளிய வராது….

என்ன சக்கரவர்த்தி இது அநியாயம் கேசவனும் ரோகிணியும் ஒரே சமயத்தில் தான செத்தாங்க சொல்லப்போனா கேசவன் செத்த விஷயம் கூட ரோகிணிக்கு தெரியாது தானே... நேத்ராவோட பிரச்சனை மாதிரியே ரோகினி கேசவன் சாவு ஒரு பெரிய மர்மம்...தோண்ட ஆரம்பிச்சா முடியாதுன்னு நினைக்கறேன்…

அதான் அபி எதுக்கு தேவையில்லாம தொண்டனும்னு கேஸை குழிதோண்டி முடிட்டாங்க இனி அதைப் பத்தின பேச்சு நமக்கு வேண்டாம் நீ நல்லபடியா கோயம்புத்தூர் போயிட்டு எனக்கு கால் பண்ண சொல்லு .

ஏதாவது ஒரு ஹெல்ப் தேவைபட்டா உடனே எனக்கு கூப்பிடு உன் பிரெண்ட் இப்போ சாதாரண சக்கரவர்த்தி இல்லை.

தொடரும்..
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
17

சக்கரவர்த்தி ஐபிஎஸ் அதோட கமிஷனர் ஆபீஸ்ல ஸ்பெஷல் க்வாட்ஸ்ல வேலை செய்ற ஐபிஎஸ் என்று கூறினான்

எதிர்முனையில் இருந்த அபியோ ஓகே ஆபீஸர் என்று பேசியபடியே நின்ற இடத்திலிருந்து ஒரு சல்யூட் வைத்தான் எதிர்முனையில் இருந்த சக்கரவர்த்தி கலகலவென சிரித்தான்.

சிறிது நேரத்தில் நேத்ரா அழகிய வெள்ளைநிற முழுப்பாவாடையும் சாம்பல் நிற குர்தாவும் அணிந்த படி கீழே வர இமைக்க மறந்த அபி சில வினாடிகள் அவனையும் மறந்து அவளை ரசித்தான்.

ஹேய் அபி என்னாச்சி அப்படியே ப்ரீஸ் ஆயிட்ட…

ஒன்னுமில்ல நேத்ரா ஜஸ்ட் ஏதோ யோசனை... அதான்..

இட்ஸ் ஓகே எத்தனை மணிக்கு ஃப்ளைட்…

இன்னும் ஓருமணி நேரத்துல...இப்போ போனா கரெக்டா இருக்கும்...வா போகலாம் என்றவன் கார் ஒட்டுனரை அழைத்தான்…

நீயே டிரைவ் பண்ணேன் அபி... எதுக்கு டிரைவர்…

இல்ல நேத்ரா அது ரிஸ்க் காரை பார்க்கிங் ல போட்டுட்டு உள்ள போகனும்னா லேட் ஆயிடும்...அப்புறமா ஃப்ளைட் மிஸ் பண்ணிடுவோம் இதே டிரைவர்னா நாம நேரே உள்ள போயிடலாம் ஏற்கனவே லேட் வா போற வழில பேசிக்கலாம் என்றவன் அவளது உடைமைகளையும் இவனது பேக்கையும் கார் டிக்கியில் திணித்தவன் ஒட்டுனரின் அருகில் அமர்ந்தான்.

பின் சீட்டில் ஏறி அமர்ந்த நேத்ரா காதினில் ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

வாகனம் சீரான வேகத்தில் விமானநிலையத்தை நோக்கி பயணித்தது.

ஷர்மா உக்காந்த இடத்திலே அமர்ந்திருக்க ரவியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

வேண்டா வெறுப்பாக அதை அட்டென்ட் செய்தவர் குரலில் ஸ்ருதியே இல்லாமல் ஹலோ என்றார்.


ஷர்மா நா ரவி பேசறேன்…

ம்ம்‌.. தெரியுது சொல்லு…

என்னாச்சு ஷர்மா உடம்பு ஏதும் சரியில்லையா என்ன..? வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன் லைட்டா தலை வலிக்கிற மாதிரி இருக்கு சரி என்ன விஷயம் எதுக்காக...கூப்பிட்ட…


வீட்டுக்கு வந்தியாமா வேலை செய்றவங்க சொன்னாங்க வந்துட்டு உடனே கிளம்பி போயிட்ட போல... வெயிட் பண்ணி இருக்கலாம்ல்ல நானும் வந்திருப்பேனே…

இல்ல அர்ஜென்ட் வொர்க் வந்தது அதான் உடனே கிளம்பிட்டேன் ஆமா நீ எங்க போயிருந்த காலையிலிருந்து ரொம்ப பிஸி போல…

பிஸி எல்லாம் இல்ல ஷர்மா எல்லாம் நேத்ரா விஷயமாகத்தான் அலையறேன் அவளுக்கு ஏதோ கனவு தொல்லைனு சொன்னா அதான் நம்பூதிரியை பாத்து பேசிட்டு வரேன்….

என்ன நம்பூதிரியை பார்க்க போனியா ஏன் என்கிட்ட சொல்லல…

நம்பூதிரியை தான பார்க்கப் போனேன் அதுவும் நேத்ராவோட கனவு பிரச்சினைக்காக இதை என்னனு சொல்ல…

சரி இப்போ எதுக்காக கூப்பிட்ட…

அது ஓன்னுமில்ல... நம்பூதிரியை பார்க்கப் போனேன் இல்லையா அவர் மதுவுக்கு முறைப்படி திதி கொடுத்து அதுக்கப்புறமா நேத்ராவோட கல்யாணத்தை வெச்சுக்க சொல்லிட்டாரு என்று கூற

இடைமறித்த ஷர்மா என்ன அப்போ கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்றியா என்று கோபப்பட்டார்.

ஐயோ இல்ல ஷர்மா கல்யாணத்தை தள்ளிவைக்க சொல்லல நீ பிக்ஸ் பண்ணின அதே நாள்ல தான் கல்யாணம் ...ஆனால் அதுக்குள்ள மதுவுக்கு திதி கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் அதனால நேத்ராவை ஊருக்கு அனுப்பி வச்சிருக்கேன்...

என்னது நேத்ராவை ஊருக்கு அனுப்பி வைச்சிட்டியா அதுவும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம அனுப்பி வெச்சிருக்க அதுவும் தனியா…

தனியா எல்லாம் அனுப்பி வைக்கல கூட அபிமன்யூ போயிருக்கிறான் …


என்ன ரவி முட்டாள்தனமான காரியம் பண்ணி வச்சிருக்க கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணை வேற ஒருத்தனோட அனுப்பி வைச்சிருக்க


நீ நேத்ராவை ஊருக்கு அனுப்பனும்னு முடிவு பண்ணி இருந்தா கூட ரோகித்தை அனுப்பி இருக்கலாமே….


இது அதைவிட மிகப் பெரிய தப்பு ஷர்மா அபிமன்யூ செக்யூரிட்டி அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அவன் இப்போ அவளோட பர்சனல் செக்யூரிட்டியா ஊருக்கு கூட்டிட்டு போறான் அவ்வளவுதான்

நேத்ராவை நேரா கூட்டிட்டு போய் என் பெரியப்பா வீட்டுல விட்டுட்டு அவன் பாட்டுக்கு அவன் வீட்டுக்கு போக போறான் .

நேத்ரா இன்னைக்கு நைட் அவளோட தாத்தாவீட்ல தங்கிட்டு நாளைக்கு
நம்மளோட தோப்பு வீட்டில் வேலைக்காரங்களோட தங்கி இருக்கப் போறா …

நீ சொல்லறது போல கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே நிச்சயம் பண்ணின பையனோட தங்க வைக்க முடியும் யோசிச்சுதான் பேசுறியா …

இதெல்லாம் டெல்லிக்கு கல்ச்சருக்கு சரியா வரும் எங்க தமிழ்நாட்டுக்கு இந்த கல்ச்சர் சுத்தமா சரியா வராது என்று கூறி முடித்தார் .

சரி எப்போ நேத்ரா திரும்பி வருவா..

கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி…
இன்னும் இரண்டு நாள்ல நானும் ஊருக்கு போறேன் நீ இங்க இருந்து கல்யாண வேலைகள் எல்லாத்தையும் பார்த்துக்கோ நாங்க சரியா கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி டெல்லி வந்திடறோம்…

சரி நீ போகும்போது சொல்லு உன்னோட ரோகித்தையும் அனுப்பி வைக்கிறேன்.

ஷர்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ இது மதுவுக்கு நாங்க குடுக்குற திதி இதுல எங்களுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்னு நினைக்கறோம் ரோகித் வந்தா எங்களுக்கு கொஞ்சம் அண்கம்பர்டபிளா இருக்கும் நானும் என் பொண்ணு கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும்னு ஆசைபடறோம்.


என்ன ரவி புதுசா உன் பொண்ணுனு பிரிச்சி பேசுறே நேத்ரா மதுப்பொண்ணு நல்லா ஞாபகம் வச்சுக்கோ உன்னை விட எனக்கு தான் அவ மேல உரிமை ஜாஸ்தி …


ஆமா ஒத்துக்கறேன் அவ மதுப்பொண்ணு தான்

என்னை விட உனக்கு தான் எப்பவுமே உரிமை அதிகம் போதுமா... இதையே இன்னும் எத்தனை வருஷம் சொல்லிக்கிட்டு இருப்ப...


உன் மதுப்பொண்ணை ஒரு பத்து நாள் மட்டும் நான் வச்சுக்கறேன் அதுக்கப்புறம் நிரந்தரமா நீயே வெச்சுக்கோ சரியா என்றவர் பிறகு

சரி இன்விடேஷன் டிசைன் அனுப்புறேன்னு சொன்னியே இதுவரைக்கும் அனுப்பவே இல்லையே நீ அனுப்பினா நான் நேத்ரா கிட்ட காமிக்க வசதியாக இருக்கும் என்று கூற

எதிர் இணைப்பிலிருந்த ஷர்மா நான் நேத்ராவுக்கே டைரக்டா அனுப்பிக்கறேன் என்றார்.


சரி உன் விருப்பம் என்ற ரவி நான் ஃபோனை வைக்கிறேன் ஷர்மா உன்னை நம்பி தான் கல்யாணவேலை எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கு போறேன் எதையும் சொதப்பிடாத ஷர்மா என்று கூறினார்.

எல்லாம் எனக்கு தெரியும் முதல்ல நீ ஃபோனை வை என்று எரிந்து விழுந்தார்.

தோள்களைக் குலுக்கியபடி ஃபோனை அனைத்த ரவி அப்பப்பா இந்த ஷர்மாவுக்கு நேத்ரா மேல தான் எவ்ளோ பாசம் பெற்ற தகப்பன் என்னை விட பல மடங்கு பாசம்...எப்படியோ இந்த வகையில் நேத்ரா ரொம்ப அதிர்ஷ்டக்காரி தான் இந்த வீட்டைவிட ஷர்மா வீட்டுக்கு போனா இன்னும் அமைதியான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும்...என்று மகளை நினைத்தார்.

போனை அனைத்த ஷர்மா கையில் இருந்த ஃபோனை தூக்கி சுவற்றில் அடித்தபடி முருகா என்று கத்தினார் அங்கு கட்டுமஸ்தான உடம்புடன் முருகன் என்பவன் ஓடிவந்தான்.

நேத்ரா அபியிடம் யார் இவன் என்று கேட்ட அதே முருகன்.

என்னாச்சு முதலாளி என்று கேட்டபடி ஷர்மாவின் முன் வந்து நின்றான்.

உடனே ஷர்மா கத்தியபடி அந்த நேத்ரா ஊருக்கு போயிருக்கா அதுவும் தோப்பு வீட்டுக்குப் போயிருக்கா... என்று கூற

அவ போனா போயிட்டு போறா அதுக்காக ஏன் முதலாளி நீங்க டென்ஷன் ஆகறீங்க…

பைத்தியமா முருகா நீ... மது சொன்னதை மறந்துட்டியா என்னைக்கு நேத்ரா அவ அம்மாவைத் தேடி அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாளோ அன்னைக்கு நம்மளோட சாவுக்கான மணியே அடிச்சாச்சுனு சொன்னாள்ல…

ஐயோ முதலாளி மது ஒரு பைத்தியம் சாகுற நேரத்தில் எதையாவது உளறி வைக்கனும்ங்கறதுக்காக வாய்க்கு வந்ததை உளறிட்டு செத்துப்போனா அதை இன்னுமா மறக்காம ஞாபகம் வச்சு இருக்கீங்க விட்டுத்தள்ளுங்க முதலாளி என்ற முருகனிடம்…


எதை மறக்க சொல்ற முருகா அவ செத்துப் போனதையா...இல்ல நாம அவளை சாகடிச்சதையா என்று அந்த காந்த கண்களில் ஒளி மின்ன முருகனை பார்த்து சர்மா கேட்க முருகன் பதில் சொல்லத் தெரியாமல் அது வந்து என்று இழுக்கும் அதே நேரம் வாசலில் ரோகித் வந்து இறங்கினான்.

ரோகித்தை கண்டதும் முருகனை தள்ளிவிட்டபடி ரோகித்திடம் வந்தவர் எங்கடா அகோரி என்று காருக்குள் தேடினார் .

அங்கிள் மயானத்தில் இருக்கிற அத்தனை அகோரிகளும் டெல்லியோட கிழக்கில நடக்கிற அம்மாவாசை பூஜைக்காக போய்ட்டாங்களாம் இப்ப இங்க யாருமே கிடையாது ஒரு வாரம் கழிச்சி தான் வருவாங்களாம் அவசரம்னா நம்மளை போய் பாத்துக்க சொன்னாங்க என்று கூறினான்.

ஷிட் என்று கால்களை தூக்கி தரையில் உதைத்தவர் சரி அட்ரஸ் வாங்கி இருக்கியா ...குடு உடனே நான் போய்ட்டு வரேன்...என்று அவனிடம் இருந்த அட்ரஸை வாங்கி தனது பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

முருகன் அங்கேயே நிற்க இன்னும் என்னடா என் மூஞ்ச பார்த்துட்டு நிக்கற என்று கடிந்து கொள்ள

ரோகிணியோட தங்கச்சியை நாம புடிச்சு வெச்சு ரெண்டு நாளாச்சு அவ எதுவும் சாப்பிட மாட்டேங்கறா அவளை என்ன செய்யறது…

ம்ம்...வச்சி பூஜை பண்ணு...என்றவர் பிறகு செவுள்ல ரெண்டு வச்சி சாப்ட வை... அவ நமக்குத் தேவை அவளோட உடல்வாகும் நேத்ராவோட உடல்வாகும் ஒரே மாதிரி இருக்கு அதை வச்சி நாம என்னனவோ பண்ணலாம் என்று கண்கள் மின்ன கூறியவர் …

ரோகித்தை பார்த்து நேத்ராவோட அடிக்கடி பேசு அவ எங்க போறா... என்ன பண்றாங்கறது அப்டேட்டா எனக்கு தெரியணும்…. அதனால அவளோட இருபத்தி நாலு மணி நேரமும் டச்சிலேயே இரு...முடிஞ்சா அவளே உன்னை ஊருக்கு கூப்பிடறது போல உருகு….

அப்புறமா ரவி இன்விடேஷன் கார்டு டிசைன் கேட்டான் அதனால ஏதாவது ஒரு டிசைனை நேத்ராவுக்கும்,ரவிக்கும் அனுப்பிவை ...என்னை கேட்டா பிஸினஸ் விஷயமா சூரத் போயிருக்கறதா சொல்லிடு என்றும் கூறினார்.

முருகனையும் ரோகித்தையும் ஒரு சேர பார்த்தவர்... நான் ஈஸ்ட் டெல்லி போயிட்டு வர்ற வரைக்கும் இங்க எல்லாம் சரியா இருக்கனும் ஏதாவது சொதப்பி வச்சிங்க என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிழக்கு டெல்லியை நோக்கி அவரின் சொகுசு காரில் பயணித்தார்.

இங்கே ரோகித் ஷர்மா என மாறிமாறி உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருக்க அவர்களை கண்காணித்து கொண்டிருந்தவர்கள் சக்ரவர்த்திக்கு உடனடியாக அதை கூறினார்கள்.

சக்கரவர்த்தி இம்முறை யாரையும் நம்பாமல் ஷர்மாவின் பின்னே அவனே சென்றான்...நாளை மறுநாள் அவன் டியூட்டியில் ஜாயின் செய்ய வேண்டும்... இன்று மிகப்பெரிய ரிஸ்க்கை எடுக்கிறான்.

ஒரே நாளில் திரும்பி வரக் கூடிய இடத்திற்கு ஷர்மா செல்கிறாரா என்று கூட தெரியாது ஏதோ ஒரு நம்பிக்கையில் அவரின் காரை பத்தடி இடைவேளி விட்டு ஒரு வாடகை காரில் இவனும் தொடர்ந்து செல்கிறான்.


அவனுடைய உள்ளுணர்வு சொல்கிறது ஷர்மாவிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது அவரை பின்தொடர்ந்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும் என்று அதனால் கடவுளின் மேல் பாரத்தை இறக்கி வைத்தவன் ஷர்மாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான்.

இங்கு நேத்ராவும் அபியும் கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கினர் முழுதாக மூன்று மணிநேரம் சொகுசான பயணம். நேத்ரா டெல்லியில் இருந்து எப்படி கிளம்பினாலோ அதேபோலவே கோவையிலும் பிரஷ்ஷாக வந்து இறங்கினாள்.

அபிக்கு தான் ஆச்சரியம் எப்படி ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல் அப்படியே இருக்கிறாள் என…

விமான நிலைய வாயிலில் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு இருவரும் அவர்களின் சொந்த ஊரான தொண்டாமுத்தூரை நோக்கிப் பயணித்தனர் நேத்ராவின்
அபியின் வீடு ஊரின் தொடக்கத்திலேயே இருக்கும் நடுவில் பெரியப்பாவின் வீடு கடைசியில் தோப்பு விடு..

கோவையின் குளுமை இருவரையுமே அழகாக வரவேற்றது மாலை தாண்டி இரவை நெருங்கிக் கொண்டிருப்பதால் அந்த மந்தகாச சூழ்நிலையை இருவருமே ஆழ அனுபவித்தனர்.

அபிக்கு அப்படி ஒரு ஆனந்தம் முழுதாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனது சொந்த ஊரில் கால் வைக்கிறான் நேத்ராவும் அப்படித்தான் தாயின் இறுதி சடங்கிற்காக வந்தவள் அதன்பிறகு இப்பொழுதுதான் வருகிறாள்.


கோவையைப் பற்றி அவளுக்குப் பெரிதாக எந்த நினைவுகளும் கிடையாது நன்கு விவரம் தெரியும் நேரத்தில் ஹாஸ்டலில் போட்டுவிட்டார்கள் அதன் பிறகு தாயின் இறுதிச் சடங்கிற்கு தான் வந்தார் அப்பொழுது விமான நிலையத்தை விட்டு இறங்கவும் தந்தையின் கார் வாயிலிலேயே காத்துக் கொண்டிருக்க நேரே இங்கு வந்து விட்டாள் எதையும் பார்க்கும் ஆர்வம் அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை அவளுக்கு.

விமான நிலையத்தில் இருந்து நேத்ராவின் பெரியப்பா வீட்டிற்கு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்…
அதுவரை எதாவது பேசலாமே என்று நினைத்த நேத்ரா அபியை பார்த்து
உன் வீடு எங்க இருக்கு என்று கேட்டாள்.

உன் வீட்டுக்கு போற வழியில தான் நேத்ரா முன்னாடியே இருக்கு அதை தாண்டி தான் நீ உன்னோட பெரியப்பா வீட்டுக்கு போகணும் உங்க தோப்பு வீட்டுக்கு போகணும் என்று கூறினான்.

நீ இங்க வரேன்னு சொல்லிட்டியா உங்க அம்மா அப்பா கிட்ட…

ம்ம்...சொல்லியிருக்கேன் அப்படியே மதுவோட பொண்ணும் வந்திருக்கறானு சொல்லி இருக்கேன் உனக்கு டைம் கிடைச்சா ஒரு நாள் என் அம்மா அப்பா வந்து பாரு அவங்களுக்கும் மதுன்னா அவ்ளோ இஷ்டம் நீ அங்க வந்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க அப்படி இல்லேன்னா சொல்லு நானே வேணாலும் அவங்கள உன் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்று கூறினான்.

உடனே வேகமாக மறுத்த நேத்ரா இல்லல்ல நான் அவங்கள வந்து பார்க்கறேன் வயசுல பெரியவங்க அவங்க என்னை தேடி வர்றது அவ்ளோ நல்லா இருக்காது என்றாள்.

பரவாயில்லையே நேத்ரா கல்யாண பேச்சி வந்ததும் உன்கிட்ட நிறைய மெச்சூரிட்டி வந்துருச்சு வாழ்த்துக்கள் என்று கேலி பேசினான்.

விளையாடாத அபி கல்யாணப் பேச்சு வந்ததால மட்டும் எனக்கு மெச்சூரிட்டி வரல எப்பவுமே நாம மெச்சூர்டான பொண்ணு தான் நீ தான் அதை கவனிக்காது இல்ல...எப்பவுமே என் மைனஸ் மட்டும் தான் பாக்குற என்னோட பிளஸ் எப்பவுமே உனக்கு தெரியல என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

போச்சு ஆரம்பிச்சிட்டியா...நான் இப்போ ஏதாவது உன்னை கேட்டேனா நேத்ரா நீயா ஆரம்பிப்ப...நீயா முடிச்சிப்ப...முடில உன்னோட போராட என்று சலித்துக் கொண்டான்.

அதன் பிறகு இருவருமே பேசிக்கொள்ளவில்லை அபயின் ஊரை தாண்டி செல்லும்பொழுது அனிச்சை செயலாக அவனின் தலை காரை விட்டு வெளியே எட்டிப்பார்த்தது இதை கவனித்த நேத்ரா இதுதான் உன் ஊரா என்று ஆர்வமாக கேட்டாள் ஆம் என்பது போல் அவன் தலையசைக்க உடனே டிரைவரிடம் சொல்லி வாகனத்தை நிறுத்தி அவளும் சில வினாடிகள் வேடிக்கை பார்த்தாள்.

உன்னோட ஊரும் கிராமமும் தானா என்று அவனின் முகத்தை பார்த்து கேட்டாள்.

ஆமா பரம்பரை பரம்பரையாவே விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம் எங்களோடது இதுவரைக்கும் இந்த மண்ணும் எங்களை கைவிட்டதில்லை மழையும் கைவிட்டதில்லை ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு.

எங்க குடும்பத்திலேயே அதிகம் படிச்சவன் நான்தான்... ஒரு நல்ல வேலையில சேர்ந்ததும் நான் தான் என்று சற்று கண்கள் கலங்கியபடி கூறினான்.

அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படி இருக்கும்போது ஏன் வேலையை விட்டுட்டு இந்த செக்யூரிட்டி வேலைக்கு வந்த... எங்க அம்மாக்காக வந்தனு தெரியும்...என்ன டவுட்னா என் அம்மாவை உனக்கு அவ்ளோ பிடிக்குமா என்ன…? அப்படி என்ன என் அம்மா உனக்கு ஸ்பெஷல் என்று கேட்டாள்.

கண்களை இறுக்க மூடி திறந்தவன்... அவ ஒரு தேவதை அவளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் அவளோட ஆசை எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கனும்ங்கறது...உனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை அமையனும்ங்கறது...இது ரெண்டையுமே அமையனுங்கறது என்னோட ஆசை என்றான்.

புருவத்தை தூக்கி தலையசைத்தவள் பின்னற போ அபி என்னாமா டயலாக் பேசற...அப்படி மெஸ்மரிஸ் ஆயிட்டேன் என்று சிரிக்க…

முகத்தை இறுக்கமாக்கிக்கொண்ட அபிமன்யூ டிரைவரைப் பார்த்து வண்டியை எடுங்க அண்ணா என்றான்


அபி கோபமாக இருக்கிறான் என்று புரிந்துகொண்ட நேத்ரா சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை பிறகு மெதுவாக சாரி சும்மா விளையாட்டாக பேசிட்டேன் அதுக்காக இப்படி எல்லாம் மூஞ்சை தூக்கி வச்சுக்காத இந்த ஊர்ல எனக்கு உன்னை தவிர வேற யாரையும் தெரியாது நீ பாட்டுக்கு இப்படி மூஞ்சிய தூக்கி வச்சு கிட்டா நான் எப்படி இந்த ஊரை சுத்தி பாக்கறது…

நீ சினிமா டயலாக் எல்லாம் பேசினியா அதனால நானும் அதே மாதிரி பேசிகிட்டேன் அது உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா மறுபடியும் சாரி என்று அவனிடம் கெஞ்சியபடி பேசினாள்.

அவளின் கெஞ்சலை உள்ளுக்குள் ரசித்தவன் வெளியில் காட்டாமல் சரி சரி விடு மன்னிச்சிட்டேன் என்று கூறினான்.

உடனே மது அப்போ கொஞ்சம் சிரி என்றாள்.

திருப்பி அவளைப் பார்த்து முறைத்து விட்டு திரும்ப சட்டென்று அவனது இடுப்பில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்ட உடல் கூச்சத்தில் நெளிந்தவன் சட்டென்று சிரிக்க இவளும் கூட சேர்ந்தே சிரித்தபடி மீண்டும் அவனது இடுப்பில் கை வைக்க செல்ல அபி அவளின் இரு கைகளையும் பிடித்தபடி நேத்ரா விளையாடாத ப்ளீஸ் என்று சிரித்தபடியே கூறினான்.

இவர்களின் விளையாட்டை ரசித்தபடியே வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்த ஓட்டுநர் நானும் இந்தக் கார்ல எத்தனையோ லவ்வர்ஸை கூட்டிட்டு போய் இருக்கேன் ஆனா உங்கள மாதிரி ஒரு லவ்வரை நான் பார்த்ததே இல்லை என்று கூற

நேத்ராவும் அபியும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…இருவருக்குமே மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது
நேத்ரா மெதுவாக அபியின் கையிலிருந்து தனது கைகளை உருவிக் கொள்ள…

அபி ரோட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்…

கார் பெரியப்பாவின் வீட்டு அருகில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது அபி தான் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் நேத்ரா உன்னோட பெரியப்பா வீடு வரப்போகுது நைட் தங்கிட்டு காலையில தோப்பு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என்னை கூப்பிடு நான் வந்து உன்னை கூட்டிட்டு போயி அங்க எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு அங்க விட்டுட்டு வரேன் பத்திரமா இருந்துக்கோ எப்போ எது வேணும்னாலும் உடனே எனக்கு போன் பண்ணு நான் உனக்காக வாங்கி கொடுக்கிறேன்.

உனக்கு இங்க இருக்கிற இடங்களெல்லாம் அதிகம் பழக்கம் இல்ல அதனால எங்கயும் தனியா போயிடாத... இங்க பாக்குற இடம் எல்லாம் ஒரே மாதிரி தெரியும் ..

தெரியாம எங்காவது போய் தொலைஞ்சி போயிடாத…
அப்புறம் இருட்டு நேரத்தில் எங்கேயும் வெளியே வராத இங்க பாம்பு விஷ பூச்சிகள் தொல்லை அதிகம் இருக்கும் அப்புறமா உன் பாதுகாப்பு விஷயத்தில் உன் பெரியப்பா குடும்பம் தான் முதல் லிஸ்ட்ல இருக்காங்க

அதனால ஒவ்வொருத்தர் கிட்ட பேசுறதுக்கு முன்னாடியும் கவனமா பேசு அவங்க மேல நாம சந்தேகப்படுற விஷயத்தை காமிச்சிக்காத... இங்கே உனக்கு ஏதாவது தப்பா தோனினா உடனே வீட்டை விட்டு வெளியே வந்துடு உன்னோட போன்ல லொகேஷன் ஜிபிஎஸ் ரெண்டையும் ஆன்ல வை...என்று கூறி முடித்தான்.

சரி அபி நீ இப்போ உள்ள வருவ தான…

வரனுமா நேத்ரா... ஏற்கனவே உன்னோட பெரியப்பாக்களுக்கும் எனக்கும் ஒத்து வராது... இப்போ உள்ள வந்தா சரியா இருக்காது நேத்ரா அதனால நீ போ என்றான்.

சரி என்று அவள் தலையை ஆட்டி முடிக்கும் பொழுது வீட்டின் வாசல் அருகே கார் நின்றது…

வீடு மிகப் பெரியதாக இருந்தது சிறுவயதில் நேத்ரா பார்த்ததை விட நான்கு மடங்காக எடுத்து கட்டியிருந்தார்கள் பார்த்ததும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை…

வாசலில் யாரும் வந்து வரவேற்பது போல் தெரியவில்லை அதனால் இப்பொழுது நேத்ராதான் நேராக வீட்டின் உள்ளே செல்ல வேண்டும் காரை விட்டு கீழே இறங்கியவள் சுற்றிலும் இருந்த இடங்களை வேடிக்கை பார்த்தாள்.

அபியோ காரில் இருந்த அவளுடைய பெட்டிகளை எல்லாம் வெளியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

நேத்ரா நீ உள்ள போ யாரும் வெளிய வந்து உன்னை கூப்பிடுவது போல தெரியல அதனால பெட்டிகளை மட்டும் தான் கொண்டு வந்து உள்ள வச்சிட்டு நான் அப்படியே திரும்பறேன் என்று கூற...

நேத்ராவுக்கு அதுவரை இருந்த சகஜ மனநிலை மாறியது சற்று தொண்டை கமற அபி நீயும் என்னோடு இங்கேயே தங்கிக்கோயேன் அவங்க எதும் பேசாத மாதிரி நான் பாத்துக்கறேன் ப்ளீஸ் என்னை தனியா இங்க விட்டுட்டு போயிடாத... இங்க இருக்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றாள்…

நேத்ரா நீ ஒன்னும் குழந்தை கிடையாது இந்த மாதிரி சூழ்நிலையை எல்லாம் நீ சமாளித்துதான் ஆகணும்... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னோட பாட்டி தாத்தா பெரியப்பா பெரியம்மா அண்ணன் தம்பிகளோட சந்தோஷமா ஜாலியா இரு நாளைக்கு காலையில எனக்கு கூப்பிடு உடனே ஓடி வரேன் போதுமா... நல்ல பொண்ணு இல்ல முகத்தை சந்தோஷமாக வச்சுக்கோ என்று முதல் முறையாக அவளது கன்னத்தை மிருதுவாக தட்டிக் கொடுத்தான்.

பிறகு கேட்டில்லிருந்த காலிங் பெல்லை அழுத்த உள்ளிருந்த இரு வேலையாட்கள் ஓடிவந்தார்கள்.

பின்னே குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே உள்ளேயிருந்து வெளியே வந்தனர்…

சிறியவர்கள் அனைவருமே சந்தோஷமாக நேத்ராவை வரவேற்க பெரியவர்களிடம் ஏதோ ஒரு ஒதுக்கம் காணப்பட்டது.

வேலையாட்கள் நேத்ராவின் உடமைகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல சம்பிரதாயத்துக்கு கூட அபியை யாருமே ஒன்றும் கேட்கவில்லை…

முதல் முறையாக அபிக்கு நேத்ராவை அங்கு விட்டுச் செல்ல மனமேயில்லை... சற்றுத் தயங்கிய படியே நேத்ராவை பார்த்து சென்று வருகிறேன் என்பது போல் தலையை அசைக்க


நேத்ராவும் மனமே இல்லாமல் அவளை அனுப்பி வைத்தாள் டெல்லியில் இருந்தவரை அவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள் ஏன் சற்று முன்பு கூட இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டும் விளையாடிக் கொண்டும் தான் வந்தார்கள் இப்பொழுது அவன் இங்கே விட்டுச் செல்வது ஏதோ நிரந்தரமாக அவளை விட்டுச் செல்வது போல் தோன்றியது.

சற்று முன் அவன் இவளின் கன்னம் தொட்டது நினைவு வர இவளும் அவளது கன்னத்தை தொட்டு பார்த்தாள்... இன்னும் அதில் அபியின் ஸ்பரிசம் மிச்சம் இருப்பது போல் தோன்ற மீண்டும் மீண்டும் கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தாள் உறவினர்களோ அவளை மேலும் வாசலில் காத்திருக்க வைக்காமல் உள்ளே அழைத்துச்சென்றனர்.

அவள் வீட்டின் உள்ளே செல்லும்வரை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யூ டிரைவரிடம் திரும்பி அண்ணா போகலாம் என்று கூறினான்.

சரி என்றவர் காரை இயக்க சக்கரவர்த்தியிடம் இருந்து ஃகால் வந்தது.


சொல்லு சக்ரவர்த்தி...அங்க ஏதாவது பிரச்சனையா…

ம்ம்...பெருசா எதுவும் இல்ல...ஆனா ஏதோ ஒரு சம்பவம் நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது…

என்ன சக்கரவர்த்தி குழப்பற தெளிவா சொல்லு…

தெளிவா சொல்லனும்னா மிஸ்டர் ஷர்மா வீட்ல விரும்பத்தகாத விஷயங்கள் நிறைய நடக்குது முதல்ல ரோகித் அவசர அவசரமா எரியூட்டல் மயானத்துக்கு போனான் அங்க அகோரிகளை பத்தி விசாரிச்சிட்டு திரும்பிட்டான்.

இப்போ ஷர்மா சம்மந்தமே இல்லாமே கிழக்கு டெல்லிக்கு போறாரு...அங்க அகோரிகளோட பூஜை ஒன்னு அடுத்த வாரம் நடக்குது... இப்போ இருந்தே நிறைய பேரு அந்த பூஜைல கலந்துக்க போய்ட்டுதான் இருக்காங்க…

இதுல என்ன ஆச்சரியமான விஷயம்னா ஷர்மாவும் ஏன் அங்க போறாரு-ங்கறதுதான்..
அகோரிகளை சந்திக்கப் போறாரா இல்ல அந்த பூஜையில் கலந்துக்கவானு தெரிஞ்சுக்க நானும் அவரை ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கேன்….


டேய் ஜாக்கிரதை தனியா போய் மாட்டிக்காத…

பயப்படாத அபி நான் ஆல்ரெடி போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி இருக்கேன் என்னோட வண்டியில ஜிபிஎஸ் டிராக் பொருத்தி இருக்கு நான் எங்க போறேங்கறதை நம்ம ஆளுக பாத்துட்டு தான் இருக்கறாங்க...நீ கவனம்…

இங்க ஷர்மா ஒரு புதிர்னா அங்க நேத்ரா வோட குடும்பம் புதிரோ புதிர் ஷர்மா ஒருத்தனை என்னால சமாளிக்க முடியும் .

நீ அங்கிருக்கிற கூட்டத்தை எல்லாம் சமாளிச்சு சேஃப்பா இரு...உன் பேமிலி மெம்பர்ஸ்ஸை கேட்டதா சொல்லு... இங்கே என்ன நடக்குதுங்கற விஷயத்தை நான் உனக்கு உடனே உடனே தெரியப்படுத்தறேன் என்று கூறியபடி மொபைல் போனை வைத்தான் சக்கரவர்த்தி.

அபியும் ஃபோனை அணைத்து பாக்கெட்டில் வைத்தான்.அவனின் நினைவெல்லாம் ஷர்மாவின் மீதுதான் இருந்தது .

இப்போ எதுக்காக அகோரிகள் நடத்துற பூஜைக்கு போறாரு...அகோரிகள்னா நரமாமிசம் சாப்பிட்டுட்டு மயானத்தில் வாழறங்க அவங்களுக்கும் ஷர்மாவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பித் தவித்தான்.

எதுவாக இருந்தாலும் இனி சக்கரவர்த்தியின் ஃகால் வரும் வரை எதுவுமே தெரியப்போவதில்லை என்று நினைத்தவன் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தான்...டிரைவர் காரை அபியின் வீட்டுவாசலில் இறக்கிவிட்ட பின் பயணத்திற்கான தொகையையும் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

வாசலிலேயே அபியின் மொத்த குடும்பமும் அவனை வரவேற்க காத்திருந்தது... அபியின் தாய் ரேவதி கண்கலங்க ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டு என்னடா டெல்லி போய் ஒட்டுமொத்தமா எங்க எல்லாரையும் மறந்துட்டியா என்று வாசலிலேயே வைத்து அழ ஆரம்பித்தார்.

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
18

அப்படிலாம் இல்லம்மா அழாதீங்க….
நா எங்க இருந்தாலும் என் மனசு பூரா இங்கதான்…என்று தாயை ஆறுதல் படுத்தினான்.

அபியின் தந்தைதான் ரேவதி புள்ளை இத்தனை நாள் கழிச்சு இப்போதான் வந்திருக்கான் வாசல்லயே நிற்க வைச்சி எல்லாத்தையும் பேசணுமா உள்ள கூட்டிட்டு வாம்மா என்று கூற


ஆமால...நான் ஒரு கிறுக்கி...உள்ள வாப்பா என்று வழிவிட்டார்.
அண்ணன் பிரபு இவனின் உடமைகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல...
அண்ணன் மகனை கையில் தூக்கி வைத்தபடி அபிமன்யூ உள்ளே சென்றான்.

தாய் அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இரவு உணவாக கொடுக்க அபிமன்யு அம்மா இவ்வளவு ராத்திரி சாப்பிட்டா நைட்டு தூக்கம் வராது என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்

பரவாயில்லை நாலு வருஷம் கழிச்சு என் கையால சாப்பிட போறே ஒரு நாள் தூக்கம் வரலனா ஒன்னும் ஆயிடாது அதனால ஒழுங்கா சாப்பிடு என்று அவனை அமர வைத்து சாப்பிட வைத்தார்.

சாப்பிட சாப்பிடவே நேத்ராவின் ஞாபகம் தான் வந்தது... பாவம் டெல்லியில் எல்லாம் அவள் இருக்கும் இடத்திற்கே வரும் இங்கே எப்படி என்று தெரியவில்லை அவளை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கவலை தானாகவே வந்தது.

அது ஒருபுறம் இருக்க தாய் தந்தை அண்ணன் அண்ணி அண்ணன் மகன்கள் என அனைவருமே அபியை விட்டு இம்மி அளவு கூட நகரவில்லை நான்கு வருட கதைகளை வாய் ஓயாமல் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தனர் யார் பேச்சையும் உதாசீனம் செய்யாமல் எல்லோருடைய பேச்சிகளையும் பொறுமையாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தான்.


இங்கே நேத்ராவின் பாடும் திண்டாட்டமாக தான் இருந்தது பெரியப்பாவின் குடும்பம் அவளை விழுந்து விழுந்து கவனித்தது தந்தையின் பெரியப்பா பெரியம்மா அத்தை மாமா நால்வருமே வயதானவர்களாக இருக்க அவர்களின் பிள்ளைகள் பேரன் பேத்திகள் அவர்களின் பிள்ளை என நான்கு தலைமுறைகள் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.


நேத்ராவிற்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது டெல்லியில் தந்தையும் நேத்ராவும் மட்டும்தான் இருந்தார்கள் ஆனால் அப்படி இருக்கும் பொழுது இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தது .

தந்தை சுலபமாக நேத்ராவின் மீது விழுந்த பலியை நம்பினார் ஆனால் இங்கு இத்தனை பேர் இருந்தும் கூட எப்படி ஒருவருக்கு ஒருவர் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்களே எப்படி என்று எண்ணத் தோன்றியது.

அவர்களின் அன்பும் பேச்சும் மிகவும் கவர்ந்தது ஒருவேளை தனது தாய் இவர்களுடன் இருந்திருந்தால் இந்நேரம் இவர்களுள் ஒருத்தி ஆகியிருப்பேன் அல்லவா என்று எண்ணத் தோன்றாமல் இல்லை.

ஏன் தனது தாய் அந்தத் தோப்பு வீட்டில் போய் தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டும் என்னை ஹாஸ்டலில் சேர்த்ததுக்கு பதிலாக பெரியப்பா வீட்டிலாவது விட்டு இருக்கலாமே என்றெல்லாம் பலவாறாக எண்ணங்கள் தோன்றியது.

இங்கு சர்மாவின் வீட்டில் ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்த ரோகிணியும் தங்கைக்கு கஸ்தூரிக்கு உணவை எடுத்து வந்த முருகன் கட்டிப்போட்டு இருந்தவளின் முன்பு உணவை வைத்துவிட்டு அவளின் வாய் கட்டையும் கை கட்டயும் பிரித்து விட்டான்.

ம்ம் சீக்கிரமா சாப்பிடு….என்று மிரட்டினான்.

அவனைக் கண்டு முறைத்த கஸ்தூரி உணவு இருந்த தட்டை தூக்கி சுவற்றை நோக்கி அடித்தாள்.

கணநேரத்தில் முருகனின் கை கஸ்தூரியின் கன்னத்தை பதம் பார்த்தது அவளின் பிடறி முடியை கொத்தாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்தவன் வலியில் துடிக்கும் அவளின் முகத்தின் அருகே முருகனின் முகத்தை கொண்டு வந்தவன்

ஒழுங்கா சாப்பிட்டுட்டு உயிர் வாழற வழியை பாரு இல்லன்னா அடி வாங்கியே செத்துருவ புரிஞ்சுதா என்று அவளை தள்ளி விட்டவன் மற்றொரு உணவுத் தட்டை எடுப்பதற்காக எழுந்தான்.


என்னை எதுக்காக இங்க அடைச்சு வெச்சு இருக்கீங்க நீங்க சொன்னது போல தானே எல்லாமே செஞ்சு கொடுத்தேன் ….அப்புறமா ஏன் என்னை ஊருக்கு போக விடாம இங்க தூக்கிட்டு வந்தீங்க…

எங்க என்னோட அக்காவும் அண்ணனும் ஏன் இன்னும் என்னை தேடி வரல என்று கத்தினாள்.

அதற்கு முருகன் அவளிடம் வந்து நக்கலாக இந்த உலகத்தில் அவங்க இருந்தா தான உன்னை தேடி வருவாங்க உன் அண்ணனையும் அக்காவையும் எங்க ஆளுகளை வைச்சி கச்சிதமா முடிச்சிட்டோம்... அழகா ஒரு கதை சொல்லி எல்லாரையும் நம்ப வெச்சு கேஸையே முடிச்சிட்டோம் இனிமே அவங்களே பொறந்து வந்து வெளியே சொன்னா கூட யாருமே நம்ப போறது இல்ல…

எதுக்காக இத எல்லாம் பண்றீங்க என்னையும் தயவு செஞ்சு கொன்னுடுங்க என்னால இப்படி இருட்டு அறையில அடுத்து என்ன நடக்கும் பயந்து பயந்து வாழ முடியல என்று கதறி அழுதாள்.

அவ்ளோ சீக்கிரம் எல்லாம் நீ ஆசைப்பட்டது போல உன்ன சாகடிக்க மாட்டோம் இன்னும் பத்து நாள் பொறுத்துக்கோ நேத்ரா இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நேத்ரா இந்த ரூம்க்கு வந்திடுவா நீ நேத்ரா வோட வாழ்க்கைக்குள்ள போயிடுவ…உன் அதிர்ஷ்டம் ரோகித்துக்கு மட்டும் உன்னை பிடிச்சுனா காலம் பூரா நீ இந்த வீட்டு மஹாராணியா வாழலாம்...அவ வந்ததும் அவ மட்டும் ரோகித் கூட ஹனிமூன் போக போறது இல்ல நீயும் கூட போகப்போற அவளைப் போலவே காஸ்மெட்டிக் சர்ஜரி மூலமா உன்னை மாத்தி இங்க கூட்டிட்டு வந்திடுவோம் அப்புறமா ஊர் உலகத்துக்கு முன்னாடி நீ தான் நேத்ரா…. நேத்ரா கூட கடைசி காலம் வரைக்கும் இந்த இருட்டு அறை தான் உலகம் என்று கொடூரமாக சிரித்தபடி கூறினான்.

பயந்த கஸ்தூரி அந்த நேத்ரா உங்கள அப்படி என்ன பண்ணிட்டா எதுக்காக அந்த பொண்ணுக்கு இவ்வளவு பெரிய தண்டனை என்று உதடுகள் துடிக்க கேட்டாள்…


ம்ம்...அவ அம்மாவை அப்படியே உரிச்சு பிறந்து இருக்கா அவ அம்மா மாதிரியே அழகா இருக்கா அதுதான் அவளுக்காக இந்த தண்டனை.



சரி அவ அவங்க அம்மா மாதிரி அழகா பொறந்துட்டா அதனால அவளுக்கு இந்த தண்டனையை கொடுக்குறீங்க நான் என்ன தப்பு பண்ணினேன் எனக்கு எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை…


ம்ம்... தெரிஞ்சோ தெரியாமலோ நேத்ராவோட உடல்வாகு உனக்கு வந்து இருக்கே அதுக்காகத்தான் உனக்கு இந்த தண்டனை
என்று கூறிவிட்டு வெளியேறினான்.


கடவுளே ஒருவரைப் போல் உருவ ஒற்றுமையுடன் இருப்பது அவ்வளவு பெரிய தவறா... கடவுளின் விளையாட்டிற்கு நான் எப்படி காரணமாக முடியும்…அதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா...

இங்கு நடக்கும் அநியாயங்களை எப்படி நேத்ராவிற்கு தெரியப்படுத்துவது …

நேத்ரா திருமணமாகி வந்த அடுத்த வினாடியே அவளை இந்த இருட்டு அறையில் வைத்து சித்திரவதை செய்யப் போகிறார்கள் எப்படி அவளை இவர்களிடத்தில் இருந்து காப்பாற்றுவது ஏதோ பணத்திற்காக ஆசைப்பட்டு அவர்கள் சொன்ன சிறு சிறு வேலைகளைச் செய்தோம்


அதற்குப் பின்னால் இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று தெரிந்திருந்தால் கஸ்தூரி கண்டிப்பாக செய்திருக்கமாட்டாள்.

இப்பொழுது அவளுடைய அக்காவும் அண்ணனும் இந்த உலகத்தில் இல்லை நான் மட்டும் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று நேத்ராவிடம் விஷயங்களைக் கூறி அவளை இவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.எப்படி தப்பிச் செல்வது...என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் முருகன் உணவைக் கொண்டு வர எதுவுமே பேசாமல் வாங்கி வேகமாக சாப்பிட தொடங்கினாள் .

அவளை ஆச்சர்யமாக பார்த்த முருகன் பரவால்லயே அடம்பிடிக்காமல் சாப்பிடற என்றான்.

சாப்பிட்டு கொண்டிருந்தவள் அவனை மேல் கண்களால் பார்த்த கஸ்தூரி உங்க பேர் என்ன என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

தெரிஞ்சு என்ன பண்ண போற...


பரவால்ல சொல்லுங்க…

முருகன் …


மிஸ்டர் முருகன் ஒருவேளை ரோகித்துக்கு என்ன புடிச்சு போச்சுனா நான் இந்த வீட்டோட மகாராணி அப்போ நீ என்னோட வேலைக்காரன் அதனால என்கிட்ட கொஞ்சம் கனிவாக நடந்துக்கோ என்று கூறியபடி சாப்பிட தொடங்கினாள் .

சற்றென்று அசடு வழிந்த முருகன் பரவாயில்லையே ரொம்ப சீக்கிரமா புரிஞ்சுக்கிட்ட புத்திசாலி தான் நீ பொழச்சிக்குவ என்று கூறியபடி வெளியே சென்றான்.

முருகன் வெளியே சென்றவுடன் சாப்பாட்டு தட்டை அப்படியே வைத்திருந்த கஸ்தூரியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும் உடல் பலம் வேண்டும் என்றால் நாம் ஒழுங்காக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று யோசித்தவள் மீதி இருந்த உணவை வேகமாக சாப்பிட தொடங்கினாள்.



இரவு மணி பதினொன்று நெருங்கவும் அபிக்கு நேத்ரா பற்றிய ஞாபகம் தான் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் புது இடம் வேறு நன்கு தூங்குவாளா...இல்லை விழித்திருப்பாளா என்று எண்ணியவன் ஒரு முறை ஃகால் செய்து பார்க்கலாம் என்று அழைத்தான்.

முதல் ரிங்கிலேயே எடுத்த நேத்ரா சொல்லு அபி என்று கேட்கும் பொழுதே குரலில் இருந்த உற்சாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது இடத்தோடு ஒன்று விட்டாள் பரவாயில்லை என்று நினைத்தவன் தூங்கலையா நேத்ரா என்று கேட்டான்.

சந்தோஷமாக சிரித்தபடியே எங்கே தூங்க விடுறாங்க அண்ணா பசங்க அவ்வளவு சேட்டை பண்றாங்க இவ்வளவு நேரம் அவங்களோட தான் விளையாடிட்டு இருக்கேன் எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா எனக்கு இவ்ளோ அழகான பேமிலி இங்க இருக்கறதே நான் வந்ததால தான் தெரிஞ்சது ... என் அம்மாவுக்கு தான் நன்றி சொல்லணும் அவங்க மட்டும் கனவில் வராமல் இருந்திருந்தா இங்கே நான் வந்திருக்கவே முடியாது...இன்னைக்கு இங்க தங்கி இருக்கவும் மாட்டேன் என்று கூறினாள்.

அப்போ நாளைக்கு வீட்டுக்கு போவியா இல்லையா ….

அய்யோ கண்டிப்பா தோப்பு வீட்டுக்கு போவேன் அது அம்மாவோட ஆசை இல்லையா…. பெரியப்பா வீடு... தோப்பு வீடுனு மாறி மாறி இருக்க போறேன்... குட்டீஸ் எல்லாருமே என்னோட வந்து தோப்பு வீட்ல தங்க போறதா சொல்லிட்டாங்க அது மட்டும் இல்ல அண்ணிகளும் அப்படிதான் சொல்லி இருக்காங்க.

மூன்று பெரியப்பாவுமே ஸ்வீட் தெரியுமா தெரியுமா அண்ணிகளும் அப்படித்தான் ஆனா அந்த சின்ன பாட்டி இருக்காங்களே அவங்க தான் என்ன பார்க்கிற பார்வையே பிடிக்கல மற்றபடி இங்கு எனக்கு ரொம்ப கம்பர்ட்டபிளா இருக்கு…. அப்புறம் நாளைக்கே உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு…
கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு அதிகமா வெளியே சுத்த கூடாதுன்னு தாத்தா சொன்னாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன் சரி அபி நான் வைக்கறேன் குட்டிஸ் விளையாட கூப்பிடறாங்க என்று அபிக்கு பேச வாய்ப்பளிக்காமல் மொபைல் ஃபோனை வைத்தாள்.

அபிமன்யூவுக்கு மிகவும் ஏமாற்றம் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் சாப்பிட்டிருப்பாளா இல்லையா தூங்கியிருப்பாளா இல்லையா என்று இவன் மட்டுமே அவளின் மீது கவலை கொண்டிருக்க அவளுக்கு அபியை பற்றி துளி ஞாபகம் கூட வரவே இல்லை எங்கு தவறவிட்டேன் எனது காதலை அவளிடத்தில் புரியவைக்க என்று யோசித்தான்.

இனி அவளுக்கு எனது காதல் புரிந்தாலும் உபயோகப்படாது அங்கு ஷர்மா மட்டும் ரோகித் இங்கு பெரியப்பாவின் ஒட்டுமொத்த குடும்பம் எல்லோரிடமும் மிக இயல்பாக ஒன்றி விட்டாள்.

இங்கு அன்னியமாக தனித்து நிற்பது நான் ஒருவன் மட்டுமே அதனால் ஊருக்குச் செல்லும் பொழுது எப்படியும் பெரியப்பாவின் குடும்பமும் திருமணத்திற்கு செல்லும் அவர்களுடன் ரவியையும் நேத்ராவையும் அனுப்பி விட வேண்டியது தான்.

அந்த சமயத்தில் தனது மனம் திருமணத்தில் கலந்து கொள்ள சம்மதித்தால் கலந்து கொள்ளலாம் இல்லை என்றால் இங்கு தாய் தந்தையுடன் சேர்ந்து தங்களின் நிலத்தில் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டு வரும் காலங்களில் இப்படியே இருந்து விடலாம் என்று நினைத்தவன் உறங்க முயற்ச்சித்தான்...தூங்கா இரவானது அவனுக்கு.

இங்கு ஷர்மா அகோரிகளை தேடிச் சென்ற இடத்தை அடைய நள்ளிரவை தொட்டிருந்தது.

சக்கரவர்த்தியின் உடல் ஓய்வுக்காக ஏங்கியது எப்போதடா பயணம் முடியும் என்று நினைக்கும் அளவிற்கு மிக நீண்ட பயணம் கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்க்கும் அதிகமாகவே வாகனத்தை எங்கேயும் நிற்காமல் ஷர்மா ஓட்டிருக்கிறார்.

இவனும் அவரைவிட்டு சற்றுத்தள்ளி பின்தொடர்ந்து இருக்கிறான் ஊருக்குள் செல்ல செல்ல நிறைய பேர் அந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக பல்வேறு வாகனங்களில் பயணிக்க அவர்களின் வாகனத்தோடு சக்கரவர்த்தியின் வாகனமும் கலந்ததால் சக்கரவர்த்தியை ஷர்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சக்ரவர்த்தியும் ஷர்மாவை கண்டு பிடிக்க முடியவில்லை..அவ்வளவு கூட்டம்...ஒரு கிலோ மீட்டர் முன்பே வாகனத்தை நிறுத்தியவன் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் மண் விழுந்தால் கீழே விழாதவாறு மனித தலைகள்...அந்த நள்ளிரவில் கூடியிருந்தனர்…வந்திருந்த ஒருவர் கூட அவர்களின் நலனுக்காக வரவில்லை எதை செய்தால் அடுத்தவர்கள் வீழ்வார்கள் என்று கேட்டு செல்ல மட்டுமே கூடுகின்றனர்…

கண்களில் படும் அகோரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கி கொடுத்து தங்களுக்கு வேண்டியதை கேட்டு செல்கிறார்கள்.

இடத்தைச் சுற்றிலும் அங்கங்கே தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தது அகோரிகள் அனைவருமே கருப்பு நிறத்தில் ஒருவித அங்கி போல அணிந்திருந்தனர்...கைகளில் நீளக் குச்சி ஒன்றை வைத்திருக்க அதன் முடிவில் இறந்த பச்சிளம் குழந்தையின் மண்டை ஓட்டினை ஒட்ட வைத்திருந்தனர் அங்கிருந்த முக்கால்வாசிப் பேரின் தலை முடிகள் ஜடை போடும் அளவிற்கு வளர்ந்திருந்தது….முகம் முழுவதுமே தாடியால் மூடி இருந்தது…கிட்டத்தட்ட எல்லா அகோரிகளுமே ஒரே ஜாடையில் இருப்பது போல் சக்கரவர்த்திக்கு தோன்றியது

மக்கள் சில அகோரிகளை அடையாளம் கண்டு அவர்களிடத்தில் பேசுவது சக்ரவர்த்திக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.


ஒருவழியாக பூஜை நடக்கும் இடத்தின் அருகே சக்ரவர்த்தி செல்லும் போது தூரத்தில் ஷர்மா தென்பட்டார் அவரின் கண்களில் படாதவாறு மறைந்த சக்ரவர்த்தி அதிக நேரம் இது போல் கண்ணாம்பூச்சியை ஆடமுடியாது ஷர்மாவை நெருங்கி செல்ல வேண்டும் அப்பொழுது தான் எதற்க்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என அறிய முடியும்...என்று யோசித்தவன் இருந்த கடையில் அகோரிகள் அணிந்திருக்கும் அங்கி ஒன்றை வாங்கி அணிந்தவன் அடையாளம் தெரியாதவாறு உடல் முழுவதுமே கருப்பு மையை எடுத்து பூசிக் கொண்டான்.பிறகு ஷர்மாவை நோக்கி சென்றான்.

ஷர்மா எதிர்ப்பட்ட ஒரு அகோரியிடம் ஏதோ விசாரித்தவர் பிறகு வேறொரு அகோரியிடம் சென்றார்... அவரிடம் ஏதோ பேச அவர் பொறுமையாக தலையை அசைத்துக்கொண்டு கேட்டவர் பிறகு எங்கோ அழைத்துக்கொண்டு சென்றார் .

யாருக்கும் தெரியாத வண்ணம் சக்கரவர்த்தியும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

இருட்டு சூழ்ந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற அகோரி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்த மற்றொரு அகோரியின் முன்பு நிறுத்தினார்.

அருகில் இருந்த மரத்திற்குப் பின் புறமாக நகர்ந்து வந்த சக்கரவர்த்தி யாருக்கும் தெரியாதவாறு மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டு ஷர்மாவும் அந்த அகோரியும் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க தொடங்கினான்.

அந்த இடத்தைச் சுற்றிலும் வெறும் இருட்டு மட்டுமே சூழ்ந்திருந்தது அமர்ந்திருந்த அகோரியின் தலைப்பக்கமாக
ஒரு பந்தம் மட்டுமே பற்றி எரிந்தது.

அழைத்து வந்த அகோரி தியானத்தில் இருந்த அகோரியின் தோளை மெதுவாக தட்டியபடி காதில் ஏதோ கூற கண் திறந்த அகோரி எதிரிலிருந்த ஷர்மாவை உட்கார் என்பதுபோல் ஜாடை செய்ய தரையில் கால்களை மடித்து கீழே அமர்ந்தார் ஷர்மா.


இப்பொழுது எதிரிலிருந்த அகோரி என்ன வேணும் உனக்கு…? எதுக்காக என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்க என்று கேட்டார்.

உடனே ஷர்மா ஒரு உதவி வேணும் அதுக்காகத்தான் இவ்ளோ தூரம் தேடி வந்திருக்கேன் என்றார்.

என்ன உதவி யாரை என்ன செய்யனும்...என்று நேராக விஷயத்திற்கு வந்தார்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோன ஒரு பொண்ணோட ஆன்மா இப்போ என்ன பழிவாங்குவதற்காக வந்திருக்கு அதிலிருந்து நான் தப்பிக்க என்ன செய்யணும்….

பழி வாங்குறதுக்கு வந்து இருக்குதுன்னா உன்னை என்ன செய்யுது... பயமுறுத்துதா…

இல்ல அய்யா…

கனவுல வந்து தொந்தரவு பண்ணுதா…

இல்லைங்க…

உன் வீட்டை சுத்தி ஆள் நடமாட்டம் தெரியுதா…

ம்ச்…

பின்ன எதை வச்சு உன்னைப் பழி வாங்குறதுக்கு ஆன்மா வந்திருக்குன்னு சொல்லற..

செத்துப்போனவளோட பொண்ணு கனவுல தினமும் வந்து அவ பிறந்த ஊருக்கு வர சொல்லறா…
செத்தவளோட பொண்ணு வாழற வீட்டை சுத்தி தினமும் நிழல் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு அந்த வீட்ல வைச்சிருக்கற கேமரால அந்த நிழல் பதிவாகி இருக்கு அதை என் கண்ணால நானே பார்த்தேன்.

பொண்ணு கனவுல வர்றதும் பொண்ணு வாழற வீட்டைச் சுத்தி வரதாலயும் உனக்கு என்ன பிரச்சனை. உனக்கும் செத்துப்போன பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்...அவ ஆன்மா வந்தா நீ ஏன் பயப்படற...அந்த பொண்ணை என்ன செஞ்சனு எனக்கு உண்மைய மறைக்காம சொன்னா .. கண்டிப்பா நான் உதவறேன்...


ஆனா ஒரு வார்த்தை கூட உன் வாயிலிருந்து பொய் வரக்கூடாது எல்லாமே உண்மையாதான் இருக்குனும் சொல்லு நீ என்ன பண்ணின என்று அந்த அகோரி கண்களை உருட்டியபடி ஷர்மாவைப் பார்த்து கேட்க ஷர்மா அவரின் கடந்த கால கதையை கூறத் தொடங்கினார்.

என்னோட முழு பேர் புனித் ஷர்மா ... புனித் என்னோட பேரு ஷர்மா என் குடும்ப பேரு…. வீட்டுக்கு ஒரே பையன்,செல்லப்பையன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இதே மத்திய டெல்லி தான்... வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல இருந்தே எங்களோடு பரம்மரை பணக்கார குடும்பம்... இங்கே தான் படிச்சேன் சரியா இருபத்திஐந்து வருஷத்துக்கு முன்னாடி என் காலேஜோட கடைசி வருட படிப்பை முடியும் போது கூட படிச்சவங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து டெல்லியை சுத்திப்பாக்க கிளம்பினோம்…. அப்போ தமிழ்நாட்டில் இருந்து காலேஜ் டூர்க்காக வந்த ஒரு பையன் என்னை ரொம்பவே ஈர்த்தான்.

அவன் தான் ரவிச்சந்திரன் ஏனோ எனக்கு அவன பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சு அவனுக்கு என்ன ரொம்ப பிடிச்சு போச்சு... இங்கிருந்த கொஞ்ச நாளிலேயே நான் அவனும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம்...


ரெண்டு பேரோட குடும்பத் தொழில் கூட ரொம்ப ஓத்துப்போச்சி... அவனது துணிகளுக்கு தேவைப்படுற நூல்களை தயாரிக்கிறது …

எங்களோடது அந்த நூல்களைக் கொண்டு துணி தயாரிக்கிறது இப்படி ரெண்டு பேரோட வாழ்க்கையுமே நூலும் துணியுமா ஆயிடுச்சு…

எப்படி நூல் இல்லாமல் ஒரு ஆடை நெய்ய முடியாதோ அது மாதிரி அவன் இல்லாம என் வாழ்க்கையில எதுவுமே இல்ல அப்படிங்கற அளவுக்கு அவன் மேல் எனக்கு ஒரு பற்று…

அதுக்கப்புறமா நான் துணிகளை பத்தி மேல்படிப்பு படிப்பதற்காக இருந்தேன் அவனை விட்டுட்டு தனியா படிக்க பிடிக்கல...

அவனுக்கு மேல படிக்கறதை பத்தி துளிகூட ஐடியா இல்லை நான்தான் அவனை கட்டாயப்படுத்தி டெல்லியில இருக்கிற காலேஜ்ஜில் சேர்த்து விட்டேன்.

அவன் குடும்பத்தில் எல்லாருமே கிராமவாசிக...விவசாய குடும்பம்…நூற்பாலை வேலையை ஒரு பகுதியா செய்யறவங்க...அதை விற்க கூட உள்ளூரை தாண்டி வெளியூர் கூட போனதில்லை….

ஆனா நான் இந்தியாவோட தலைநகருக்கே அவங்க புள்ளையை கூப்பிடவும் உடனே அவனை அனுப்பி வைச்சதோடு இல்லாமல் என் மேல மிகப்பெரிய மரியாதையும் வைச்சாங்க.

ரவி இங்க வந்து படித்து முடிக்கவும் நானும் அவனும் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கினோம் துணிகளை தயாரித்து ஏற்றுமதி பண்றதுதான் அவன் கடினமான உழைப்பாளி நான் பயங்கரமான பணக்கார ரெண்டு பேரும் கைது சேர்க்கும்போது லாபம் கொட்ட தொடங்குச்சு .

ரெண்டு வருஷத்திலேயே எதிர்பாராத அளவுக்கு வருமானம், தொழில் முன்னேற்றம் எல்லா வகையிலுமே ரவிச்சந்திரனும் நானும் தனியா ஜொலிக்க ஆரம்பிச்சோம்.

அப்போ தான் அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஊருக்கு கூப்பிட்டு இருந்தாங்க எனக்கும் நூற்பாலை வேலைகளை தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை .

அதனால அவனோட நானும் ஊருக்கு போனேன்….நூற்பாலை வேலைகளை கத்துகிட்டு இங்கே டெல்லியிலேயும் அதே போல கார்ட்டன் மில் , ஸ்பின்னிங் மில் ஆரம்பிக்கனும்னு ஆசை…

ஊரையும் சுத்தி பாத்துட்டு...அப்படியே வேலையும் கத்துக்கலாம்னு போனேன்.. ஆனா இங்க மாதிரி தமிழ்நாட்டு வீட்டுக்குள்ள அவ்வளவு சீக்கிரமா போக முடியாது என்கிற விஷயத்தை அங்க போய் தான் தெரிஞ்சுகிட்டேன்.

அவனோட வீடு ஒரு கூட்டுக்குடும்பம் பெரியப்பா அத்தை பாட்டி தாத்தானு நிறையப் பேர் இருந்தாங்க அவங்க அத்தைக்கு ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருக்கிறதால வெளியே இருந்து வர்ற ஒரு வயசு பையனை வீட்டில் தங்க வைக்க முடியாதுன்னு சொல்லி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு தோப்பு வீட்டில் தங்க வெச்சாங்க….


என்னை தனியா எப்படி தங்க வைக்கிறதுன்னு சங்கடப்பட்ட ரவி என் கூடவே வந்து தோப்பு வீட்ல தங்கிட்டான்…

அந்த வீட்டு பக்கத்துல ஒரு கார்ட்டன் மில், ஸ்பின்னிங் மில் ரெண்டுமே ஒரே இடத்துல இருந்தது...

சரி எப்படியும் வேலை கத்துக்க தானே போயிருக்கோம் காட்டன் மில் பக்கத்திலேயே வீடும் இருந்தா ரொம்ப சவுகரியமா இருக்கும்னு நானும் அதை விருப்பத்தோடு ஏத்துக்கிட்டு அங்கேயே தங்கியிருந்தேன்.

பக்கத்திலிருந்த ஸ்பின்னிங் மில்லில் வேலை எப்படி நடக்குதுன்னு பாத்து நானும் அந்த வேலைகளை ரொம்ப ஆர்வமா கத்துக்க ஆரம்பிச்சேன்

அங்க தான் முதன் முதல்ல மதுமதினு ஒரு பொண்ண பார்த்தேன் ரொம்ப வித்தியாசமா இருந்தா வித்தியாசமா டிரஸ் போட்டு இருந்தா வித்தியாசமா தலைபின்னல் போட்டிருந்தா ரொம்ப சுட்டித்தனம்...எப்பவுமே விளையாடிகிட்டே உள்ள வருவா… வித்தியாசமான கலர் டெல்லியில் இருக்குற பொண்ணுங்க மைதா மாவு மாதிரி கலர்ல இருந்தா அந்த பொண்ணு ஒரு மாதிரி சுட்ட ரொட்டி கலர்ல இருந்தா அதனாலோ என்னவோ எனக்கு அவளை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சுப் போச்சு.

யாருன்னு விசாரிக்கும் போதுதான் அங்க மேனேஜரா வேலை செய்ற நடேசனோட பொண்ணுனு தெரிஞ்சுகிட்டேன் அதுக்கப்புறம் நடேசன் மூலமா அவளைப் பற்றின தகவல்களை எல்லாம் பேச்சுவாக்கில் சேகரிக்க ஆரம்பிச்சேன்.ரொம்ப சின்ன பொண்ணு படிச்சிகிட்டு இருந்தா...எந்த முடிவையும் சுயமா எடுக்க தெரியாத குழந்தை அவ...

நான் டெல்லியில் இருந்து போனதால எனக்கு ஹிந்தியைத் தவிர வேறெந்த பாஷையும் தெரியாது ரவி கூட இருக்கிறதால கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வார்த்தை மட்டும் தெரியும் மதுமதிக்கு தமிழைத் தவிர வேறு எந்த ஒரு பாஷையும் தெரியாது அதனால ரொம்ப கஷ்டப்பட்டு நான் தமிழ் பாஷையை கத்துக்க முயற்சி பண்ணினேன் .

அவ கிட்ட ஒரு வார்த்தையாவது பேசனும் அவ என்னை ஒரு முறையாவது திரும்பி பார்க்கணும்னு ரொம்ப எதிர்பார்த்தேன் அவ எதார்த்தமா என்னை பாத்தா கூட எனக்கு எனக்கு அவ்வளவு பெரிய சந்தோஷம் கிடைக்கும் ஆனால் அவ அவ்வளவு சீக்கிரம் என்னை திரும்பி பார்க்கவே மாட்டா என்றவர் அந்த நாளுக்குள்ளே பயணிக்க ஆரம்பித்தார்.


மரத்தின் பின்னால் ஒளிந்து இருந்த சக்கரவர்த்தி அவர் கூறும் விஷயங்களை நன்கு கவனிக்கவேண்டும் இடையில் எந்த ஒரு தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தவன் முதல் வேலையாக தன்னுடைய பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தான்.

பிறகு மற்றொரு பாக்கெட்டில் இருந்த சிறு மைக் உடன் ஆன ரெக்கார்டரை ஆன் செய்து அவர் கூறப்போகும் விஷயங்களையும் பதிவு செய்வதற்கு தயாராக வைத்துவிட்டு அவனும் ஷர்மா சொல்ல போகும் கதையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்.

அதேநேரம் அபிக்கு இங்கே உறக்கம் வர மறுத்தது ஷர்மாவை தொடர்ந்து செல்கிறேன் என்று கூறிய சக்கரவர்த்தி ஏன் இதுவரை ஒரு மெசேஜோ ஃபோனோ பண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டவன் சக்கரவர்த்திக்கு ஃகால் செய்ய ஆரம்பித்தான்.

அழைத்த நபர் ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார் என்று ஹிந்தியில் கூற சலித்துக்கொண்டவன் ஃபோனின் அழைப்பை கட் செய்துவிட்டு வாட்ஸப்பில் ஹேய் வேர் ஆர் யூ என்று மட்டும் ஒரு மெசேஜ் தட்டி விட்டபடி மீண்டும் தூங்க முயற்சித்தான்.

இங்கு நேத்ராவுக்கு நள்ளிரவில் ரோகித் இன்விடேஷன் டிசைனை அனுப்பி வைத்துவிட்டு நன்றாக இருக்கிறதா என்று கேட்டான் அவளும் நன்றாக இருக்கிறது காலையில் பேசுகிறேன் என்று கூற விடாமல் அவளிடம் சாட் செய்தபடி இருந்தான்…

அவன் அனுப்பும் மெசேஜ் களுக்கெல்லாம் பதில் மெசேஜ் அனுப்பி விட்டபடி இருந்த நேத்ரா ஒரு கட்டத்திற்கு மேல் அது எரிச்சலை ஏற்படுத்த போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.

சற்று நேரத்திற்குப் பிறகு நேத்ராவிடமிருந்து எந்த பதிலும் வராததைக் கண்ட ரோகித் மனதிற்குள் கருவிக் கொண்டான்.

என்னோட மெசேஜ்-க்கா பதில் மெசேஜ் அனுப்பாம இருக்கிற நித்ரா இதுக்கெல்லாம் நீ சேர்த்து வெச்சு இங்க வந்ததும் அனுபவிப்ப என்று கூறியபடி அவனும் மொபைலிலை தூக்கி வீசிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.

இப்படி ஆளுக்கு ஒரு செயலாக செய்து கொண்டிருக்க ஷர்மா அகோரியிடம் கூறுவதை சக்ரவர்த்தி மட்டுமல்ல மதுவின் ஆன்மாவும் இயலாமையுடன் கேட்டுக்கொண்டிருந்தது.

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
19


மதுமதி... அப்பொழுதுதான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்தாள்.

அவர்கள் இருந்த இடத்தில் இருந்து கல்லூரி வெகு தொலைவில் இருந்ததால் தினமும் அவ்வளவு தூரம் பெண்ணை அனுப்ப வேண்டுமா என்ற சிறு கவலை நடேசனின் மனதில் இருந்தது.

அதே கவலை மதுவுக்கும் இருந்தது தான் படித்து முடித்து என்ன செய்யப்போகிறோம் யாராவது ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறோம் அதற்காக தந்தையை தினமும் பிரிந்து அவ்வளவு தூரம் சென்று படிக்கவேண்டுமா என்று நினைத்தவள்

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை அதனால் மேற்படிப்பு படிக்க வில்லை என்று பொய் கூறிவிட்டு
மேற்படிப்பை படிக்க மறுத்து விட்டாள்.

சிறுவயதிலேயே தாயை இழந்தவள்...தந்தை மட்டுமே அவளுக்காக மறுமணம் செய்து கொள்ளாதவர்..

தினமும் மதியம் சமைத்து தந்தைக்கு சூடாக உணவை. கொண்டு வருவாள்.

மதுமதி பள்ளி செல்லும் வரை அவளின் தந்தை தான் காலை மதியம் இரண்டு வேளையும் சமைத்து விட்டு வேலைக்கு வருவார் பிறகு இரவில் வந்து இலகுவான உணவை ஏதாவது சமைப்பார்.

மதுமதி பள்ளிப்படிப்பை முடித்ததும் சமையல் அறை வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.

இப்பொழுதுதான் சமையல் கற்றுக்கொள்கிறாள்.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாக சமைக்க எப்படியிருந்தாலும் குறை கூறாது நடேசன் அவளைப் பாராட்டிய படியே எப்படி சாப்பிடுவார்.

அதனாலோ என்னவோ தினமும் தந்தைக்கு மதிய வேளையில் சமைத்து எடுத்து வருவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அவள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தான் தந்தை வேலை செய்யும் மில் இருக்கிறது .

ரோட்டை சுற்றிவந்தால் தூரம் அதிகம் அதனால் ஒற்றையடிப்பாதை வழியாக வருபவள் மல்லிப்பூ தோட்டத்திற்குள் புகுந்து விடுவாள் அந்த தோட்டத்திற்குள் புகுந்தாலே மல்லிப்பூ வாசத்தில் அவள் தன்னையும் மறந்த படி தானாகவே விளையாடிக்கொண்டும் ஏதாவது ஒரு பாட்டை பாடிக்கொண்டும் தோப்பு வீட்டின் வழியாக மில்லை அடைவாள் .


அப்படித்தான் ஒருநாள் கையில் கூடையை வைத்தபடி தனக்குத்தானே ஏதோ ஒரு பாட்டை பாடிக் கொண்டு பாவாடை காற்றில் பறக்க காக்கா சுற்றியபடி வர எதிர்பாராதவிதமாக ஷர்மாவின் மீது மோதி நின்றாள்.


ஷர்மா தூரத்தில் மது விளையாடிக் கொண்டு வரும்பொழுதே பார்த்து விட்டார் பாவாடை தாவணியில் இரட்டை ஜடை போட்டு இரண்டு ஜடைகளிலும் தனித்தனியாக ஒருமுழ பூவை தொங்கவிட்டபடி காலில் ரப்பர் செருப்பு அணிந்தபடி ஒரு கையில் கூடையை வைத்துக்கொண்டு மறு கையால் ஒரு ஜடையை பிடித்து சுத்திக்கொண்டு வந்த மது ஷர்மாவின் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தாள் அதனால் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ரவிக்கு முன்பாகவே மதுவை பார்த்ததும் ஷர்மா தான் அவளின் மீது முதல் முதலில் காதல் வயப்பட்டதும் ஷர்மா தான்...அவள் வரும் பாதையை மறித்து நின்றிருக்க கவனிக்காத மது ஷர்மாவின் மோதிவிட்டாள். கீழே விழாத வாறு அவளை தோள்வளைவோடு சேர்த்து பிடித்தார்.

மதுவின் அழகு குழந்தைதனம் இதில் கவர்ந்த ஷர்மா அவளின் முகத்தருகே அவரது முகத்தை கொண்டு சென்றார் அவரின் நோக்கமறிந்து சுதாரித்த மது அவரை தனது பலத்தை கொண்டு தள்ளிவிட்டு படி ச்சீ...தள்ளிப்போ...என்றாள்.

சாரி பேபி...போகாத உன்னோட நான் பேசனும் என்று அவளின் முன்பு சென்று கைநீட்டி மறிக்க…

அவரின் கையை வேகமாக தட்டிவிட்டபடி அங்கிருந்து ஒடினாள்.

ஏனோ மதுவிற்க்கு ஷர்மாவை பார்த்ததும் பிடிக்கவில்லை...அவரின் கண்கள் இறைதேடும் கருநாகத்தின் கண்களை அவளுக்கு நியாபகப்படுத்தியது.

ஷர்மா மதுவை பார்த்ததுமே காதல் வயப்பட்டார் அவள் ஒரு அறியா குழந்தை அந்த குழந்தைக்கு ஏற்றவன் நான் மட்டுமே என்று மனதளவிலும் நம்பத் தொடங்கினார் அதன் விளைவாக அவளை சிறு குழந்தையென நடத்த ஆரம்பித்தார் அது மதுவிற்கு ஒவ்வொரு முறையும் எரிச்சலை ஏற்படுத்தியது அவள் உணவு எடுத்துச் செல்லும் வேளையில் தந்தையிடம் நின்றபடி பேசிக்கொண்டிருப்பான்...இவளை கண்டதும் ஏன் பேபிமாவை அழைய விடறீங்க நீங்க போய் சாப்பிட்டுட்டு வரலாம்ல... ஏன் பேபி இந்த வயசுலயே சமைக்கிற நீ அதெல்லாம் செய்யாதே என உரிமையாக சண்டையிடுவான்..
ஆரம்பித்து சர்மாவின் பேச்சு மதுவிற்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் நாள் போக்கில் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல ஏதாவது உளறுவான் என்று அவனிடம் ஒதுக்கப் காட்ட தொடங்கினாள்.

இந்த சமயத்தில்தான் ரவியுடனான அவளின் நெருக்கம் ஆரம்பித்தது தான் அவளை அணைத்து பிடிக்கச் சென்றால் தன்னை தள்ளி விட்டுச் செல்கிறாள் ஆனால் ரவியிடம் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டுவதில்லை...இதில் ஆத்திரமடைந்த ஷர்மா அவள் தனியாக சிக்கும் நாளுக்காக காத்திருந்தார்.


தந்தைக்கு உணவை எடுத்தபடி மது அவ்வழியாக வர எதிரில் வழிமறித்த படி நின்று கொண்டிருந்தார்.

அவரை பார்க்கும் வரை ஏதோ ஒருபாட்டை சிரித்தபடி முனுமுனுத்துக்கொண்டு வந்த மது ஷர்மாவைக் கண்டதும் முகத்தை இறுக்கமாக வைத்தபடி கடந்து சென்றாள்.

பேபிமா...நில்லு…

அவன் கவனிக்காதவாறு நடக்க…

பேபி சொல்லறேன்ல்ல நில்லு...என்றபடி அவளின் கை பிடித்து நிறுத்தினார்.

கையை பிடிந்திருந்த ஷர்மாவின் கைகளையும் ஷர்மாவையும் மாறிமாறி பார்த்த மது யோசிக்காமல் அவரின் கன்னத்தில் ஒங்கி ஒரு அறை விட்டவள் கையை உதறியடி அங்கிருந்து நகர்ந்தாள்.

அதிர்ச்சி அடைந்த ஷர்மா கன்னத்தை தடவியபடி இதுவரைக்கும் யாருமே என்னை அடிச்சது இல்லை தெரியுமா... என்றவர் மீண்டும் அவளின் வழியை மறித்தார்.

கோபமான மது உனக்கு இப்போ என்ன வேணும்...ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்யற...அதான் விலகி போறேன்ல விட வேண்டியதுதானே…

நீ அப்படி சொல்லக்கூடாது பேபிமா நீ குழந்தை...குழந்தைகளுக்கு சில நல்லது புரியாம அடம் பிடிக்கும்... பெரியவங்க அதுக்கு புத்திசொல்லி புரிய வைக்கனும்…

அய்யோ ராமா...முதல்ல பேபினு கூப்பிடறத நிறுத்து...பேர் சொல்லி கூப்பிடு…. புரியாம அடம்பிடிக்கல...எனக்கு உன்னை பாக்கவே பிடிக்கல இப்படி என்முன்னாடி வராத...என் கிட்ட பேசாத…

இல்ல நீ அப்படி சொல்ல கூடாது...எனக்கு உன்னை மட்டும்தான் பிடிச்சிருக்கு...உன் கிட்ட பேசிகிட்டே இருக்கனும் போல இருக்கு என்று அவளது முகத்தை தொடுவதற்க்காக கையை கொண்டு செல்ல…

இங்க பாரு இனியொரு முறை மேல கை வச்சா நான் பேச மாட்டேன் என் கைதான் பேசும் அதான் நீ தொடறது பிடிக்கலனு சொல்லறேன்ல…

அன்னைக்கு ரவி உன்னை தொட்டு தூக்கினப்போ மட்டும் எதும் சொல்லல ‌…

ஏன்னா ரவியை நான் லவ் பண்றேன் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அதனால அவரோட உன்னை கம்பெல் பண்ணாத…

நோ பேபி...ரவி உனக்கு ஏத்தவன் இல்ல...அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் லைஃப் வீணாபோயிடும்…

உளறாத தள்ளிப்போ….

பேபி... உண்மைதான் சொல்லறேன் நீ அவனை கல்யாணம் பண்ணிக்காத...உனக்கானவன் நான் தான்...தேவையில்லாம உன் வாழ்க்கையில ரிஸ்க் எடுக்காத…


இவன் பைத்தியகாரன் இவனோட சரிக்கு சரியாக வாதாட முடியாது இவனை சமாளித்து ஒதுங்கிதான் ஆகவேண்டும் என்று நினைத்த மது சரி...இப்போ எனக்கு வழிவிடு நா போகனும் அப்பா தேடுவாங்க...என்று இலகுவாக கூறினாள்.

நீ போ பேபி மா என்று வழிவிட்ட ஷர்மா ஐ லவ் யு பேபி மா சொன்னதும் உடனே புரிஞ்சுகிட்ட பாத்தியா அதான் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது என்று கூற திரும்பி சரி என்பது போல் தலையை ஆட்டிய மது வேகமாக தந்தையைக் காண சென்றாள்.



அந்த வாரத்திலேயே ரவி ஷர்மாவிடம் எங்களின் திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் ஒரு நல்ல நண்பனாக நீ போய் பேசு என்று அனுப்பி வைக்க வேறு வழியில்லாமல் அவர்களிடம் சென்று இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிய ஷர்மா கோபத்தோடு மறுநாள் மதுமதியை காண அவளது வீட்டிற்கு வந்தான்.

துணி துவைத்து காயப் போட்டுக் கொண்டிருந்தாள் மதுமதி ஷர்மாவை காணவும் தலைகுனிந்தபடி வீட்டுக்குச் செல்ல முயன்றவளின் கைகளை கெட்டியாக பிடித்தவன் கோபத்தோடு அன்னைக்கு என் கிட்ட ரவியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன ஆனா இப்போ அவன் உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேச என்னையே அனுப்பி வைக்கிறான் அப்படின்னா என்ன அர்த்தம் பேபி .

நீ அவன் கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்க அப்படிதான எதுக்காக என்கிட்ட பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு அவ கிட்ட போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன சொல்லு பேபி என்றான்.

கோபத்தோடு அவன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொள்ள போராடிய மதுமதி இங்க பாரு நான் உன்கிட்ட பலவிதமா சொல்லிப் பார்த்தாச்சு உனக்கு புரியவே மாட்டேங்குது உனக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரல நினைக்கிறேன் .

எனக்கு உன் மேல எந்த ஒரு அபிப்ராயம் வரல... நீ பேசும் போதெல்லாம் எனக்கு என்ன தோணுதுன்னா ஏதோ மனநிலை சரியில்லாதவன்கிட்ட பேசுறோம்னு நினைச்சிக்கறேன் அதனாலதான் பாவம் பார்த்து ஒதுங்கி போயிட்டு இருக்கேன் இல்லனா எப்போவோ உன்னை பத்தி என் அப்பா கிட்டேயும் ரவி கிட்டயும் சொல்லி உன்னை உன் ஊருக்கே தொரத்தியிருப்பேன்…

பேபி என்ன கோபப்படுத்தாதே நீ விளையாட்டா பேசற ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனசை காயப்படுத்திது என்னை மூளை வளர்ச்சியில்லாதவன் மனநலம் சரியில்லாதவன்னு சொல்லாத என்னை இதுபோல யாருமே பேசினது கிடையாது என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் ஷர்மா.

பின்ன என்னை எப்படித்தான் பேச சொல்லற எப்படி பேசினாலும் உனக்கு உரைக்கவே மாட்டேங்குது எனக்கு உன்ன பாக்கவே பிடிக்கல சும்மா சும்மா என் முன்னாடி வந்து நிக்கிறியே இதைவிட ஒட்டச்சி உன்கிட்ட எப்படி சொல்லணும்னு எதிர்பார்க்கற...

பேபி என்கிட்ட எது உனக்கு பிடிக்கல எது என்கிட்ட இருந்து உன்னை தள்ளி வைக்கிது ... நான் படிக்கலையா... அழகா இல்லையா ….பணம் இல்லையா... என்ன இல்ல என்கிட்ட சொல்லு பேபி நான் சரிபண்ணிக்கறேன்…

டெல்லியில் என் குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம் எப்படி இங்க நீங்க எல்லாம் ஒரே சமுகத்துக்குள்ள வாழறீங்களோ அதே மாதிரி எங்களுக்கும் இருக்கு...நீ டெல்லி சைடு ஷர்மா பேமிலி பத்தி கேளு எல்லாருமே ரிச்சா இருப்போம்...நீ குழந்தையில்லையா அதான் உனக்கு தெரியல... இந்தப் பூந்தோட்டத்தையும் அந்த மில்லையும் காமிச்சு உன்னை ஏமாத்திட்டாங்க….என்று கைகளை பிடித்து கெஞ்ச தொடங்கினார்.

ஐய்யோ...போதும் நிறுத்து...நீ நிஜமாவே பைத்தியம்தான் அதான் இத்தனை முறை சொல்லியும் மறுபடியும் என்கிட்ட கெஞ்சற…

உனக்குத் தெரியுமா இப்படி நீ கெஞ்சறதே எனக்கு பிடிக்கல எங்க ஊரு பசங்க எல்லாம் எப்படி இருப்பாங்க தெரியுமா ஒரு தடவை வேண்டாம்னு நாங்க சொல்லிட்டா ச்சீ போடினு திரும்பி பாக்காம போயிடுவாங்க..

அப்படி போனவர்களை கூட மறுபடியும் சமாதானப்படுத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுங்க எத்தனையோ பேர் .

ஏன்னா அந்தத் திமிர் எங்களுக்கு பிடிக்கும்…

உன்கிட்ட என்ன பிடிக்கலன்னு கேட்டியே சொல்றேன் கேட்டுக்கோ இப்படி நீ கெஞ்சுகிறது பிடிக்கல என்னை பேபி போட்டு பேசுற பாரு அது பிடிக்கல .

ஊற வைத்த மைதா மாவு மாதிரி உப்பி போய் வெள்ளை வெளேர்னு இருக்க பாரு அந்த கலர் பிடிக்கல

கருநாகத்திற்கு இருக்கறது போல இருக்கே இந்த கண்ணு அது சுத்தமா பிடிக்கல….போதுமா.

பேபி நான் வெயிட் லாஸ் பண்றேன் அப்புறமா இந்த ஸ்கின் டோன் கூட மாத்திக்கறேன் பேபி…

சரி இந்த கண்ணை என்ன பண்ணுவ புடுங்கி தூக்கி விசிடுவியா... உன்ன பார்த்தாலே இந்த கண்ணுதான் என் முன்னாடி வருது இதைப் பார்த்தாலே பயம் கலந்த அருவருப்பு வருது தள்ளிப்போ என்று கூறியபடி உள்ளே செல்ல

ஷர்மா தனது இரு கை கொண்டு முகத்தைக் கீரிக் கொண்டு அழ ஆரம்பித்தார்... அப்படி சொல்லாத பேபி நான் காலேஜ் படிக்கும் போது எல்லாரும் என்ன ஹாண்ட்சம் பாய்னு சொல்லுவாங்க ...இந்த கண்ணை அட்ராக்டிவ் ஐ-னு பாராட்டுவாங்க... ரவி கூட சொல்லுவான் காந்தக்கண் அழகானு... உன் டாடி கூட சொன்னாரு எந்த பொண்ணு இந்த கண்ணை பாத்தாலும் விழுந்திடுவானு ...எல்லாருக்கும் பிடித்த இந்த கண்ணு ஏன் பேபி உனக்கு மட்டும் பயத்தை கொடுக்குது.


இந்த ஸ்கின் டோன் எங்க ஊரோடது எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்க பேபி என்று அவர் கதறி அழ ஆரம்பித்தார் .

நேத்ரா ஒரு கட்டம் வரை பொறுத்து பார்த்தவள் பின்பக்க வழியாக ரவியை தேடிச் சென்றாள்.

ஷர்மா அவளை காதலிக்க சொல்லி தொல்லை செய்ததாகக் கூற ரவி முற்றிலும் மறுத்தார் ... எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம்தான் நண்பர்களை விட சொல்லுவாங்க நீ கல்யாணத்துக்கு முன்னாடியே விட சொல்றியே மது ...உன்கிட்ட இருந்து நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... என்று மதுவையே குற்றம்சாட்டினார் ரவி…

முகம் வாடிய வளை பார்க்க பாவமாக இருந்தது அவளை சமாதான படுத்தும் பொருட்டு
இங்கே பாரு மது அவன பத்தி உனக்கு தெரியல அவனுக்கு கம்யூனிகேஷன் பிராப்ளம் நிறைய இருக்கு இப்போ பிடிச்சிருக்குனு சொல்லனும்னா என்ன சொல்லுன்னு கேளு ஐ லவ் யூ சொல்லுவான்.

உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கானா…


ம்ம்...சொல்லிருக்காரு…



ம்ம்... அவ்ளோதான் விஷயம் அதையே உன்னை திருப்பி சொல்ல சொல்லி இருப்பான்.
நீ மறுத்திருப்ப...அதனால ஃபோர்ஸ் பண்ணிருப்பான்…அதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட

இல்ல..அது வந்து... என்றவளை இடைமறித்த ரவி
இங்க பாரு மது அவனைப் பொறுத்த வரைக்கும் பிடிச்சிருக்குன்னா ஐ லவ் யூ மட்டும்தான் அது இங்க என்ன மாதிரியான அர்த்தம்னு கூட தெரியாது நாம அந்த வார்த்தையை காதலன் காதலி கிட்ட மட்டும் தான் உபயோகிப்போம்...


ஆனா அவன் அப்படியல்ல எல்லார்கிட்டயும் சொல்லுவான் எல்லாரும் திருப்பி சொல்லனும்னு நினைப்பான் . போன வாரத்துல என் சின்ன அண்ணிகிட்ட இவன் ஐ லவ் யூ சொல்லி அவங்க திருப்பி சொல்லனும்னு ஒரே அடம் அவங்க கடைசிவரை சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க... என்கிட்ட ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கம்ப்ளைன்ட் அதே மாதிரியான கம்ப்ளைன்ட்டை தான் இப்போ நீயும் வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்க.

அவன் ஐ லவ் யூ சொன்னா திருப்பி நீயும் ஐ லவ் யூ சொல்லிடு தமிழ்நாட்டு கல்ச்சர் வேற அவனோட கல்ச்சர் வேற ரெண்டையும் போட்டு மிக்ஸ் பண்ணிக்காத ஒழுங்கா கல்யாணம் பொண்ணா கல்யாணத்துக்கு தயாராக இரு என்று இவளைதான் சமாதானப்படுத்தினார் ரவி…

அவருக்குத் தெரியவில்லை சின்ன அண்ணியிடம் கேட்டதற்கும் மதுவிடம் கேட்பதற்கும் வித்தியாசங்கள் நிறைய என்று…

மதுவிற்கு இவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை நண்பன் சரியில்லை என்று சொன்னால் திருமணத்துக்கு முன்பே எங்களை பிரிக்க பார்க்கிறாயா என்று மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார் எதிர்கால கணவர்…

அவரது நண்பனோ மனவளர்ச்சி குன்றியவனைப் போல சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறான்...எதிர்காலத்தில் எப்படி இருவரையும் சமாளிக்க போகிறோமோ என்ற புது பயம் மதுவிற்கு புதிதாக வந்தது.

ஒரு வழியாக இருவருக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் முடிந்து முதலிரவுக்காக தோப்பு வீட்டுக்கு அனுப்பி வைக்க அன்றுதான் ஷர்மாவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சைக்கோ வெளியே வந்தான்.

புதுமணத் தம்பதியர்களின் பின்சென்ற ஷர்மாவை பிடித்து ரவியின் பெரியப்பா வீட்டில் தங்கவைக்க அன்றைய இரவு உறவினர்களுடன் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க
இங்கே ஷர்மா அவனது அழகில் பைத்தியம் போல் அழுதபடி கத்திக் கொண்டிருந்தார்.

என் மதுவை எல்லாரும் திட்டம் போட்டு அந்த ரவிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க... இது என் ஊரு இல்லாததால என்னால எதுவும் பண்ண முடியல ...என் மதுவை அவன் என்னவோலாம் பண்ணபோறான்... எனக்கு சொந்தமான மதுவை அவன் கிஸ் பண்ணுவான் என்று தலையை கொண்டு சுவற்றில் மோதினார்.ஒருகட்டத்தில் வலி பொறுக்காமல் அப்படியே மயங்கி சரிந்தார் உதடுகள் மட்டும் மது மது என ஜெபம் போல உச்சரிக்கத் தொடங்கியது.

ஆனால் கீழே இருக்கும் யாருக்குமே ஷர்மாவின் நிலை தெரியவில்லை ஏதோ நண்பனை பிரிந்த சோகத்தில் தனியறையில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டனர்.

அதன்பிறகு புதுமணத்தம்பதிகள் கோவையில் இருக்கும் திருத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்ப கூடவே ஷர்மாவும் ஒட்டிக்கொண்டார்.ரவிக்கு தனது நண்பன் வெளியூரில் இருந்து தன்னை நம்பி மட்டுமே இங்கு வந்து இருக்கிறான் அவனை எக்காரணம் கொண்டும் தனியாக விடக் கூடாது என்ற எண்ணம்


ஷர்மாவிற்கு ரவியை பார்க்கும் போதெல்லாம் அந்த சைக்கோ வெளிவருவதில்லை அவன் தனது உற்ற நண்பன் ஏதோ ஒரு வகையில் தன்னை ஈர்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண்மகன் அவ்வளவுதான்.

ஆனால் மதுவை பார்த்தால் மட்டும்தான் ஹார்மோன்கள் மாற்றமாகி அவருக்குள் இருக்கும் சைக்கோ தனம் வெளிப்படும் அதே மதுவின் முன்பு ரவி வந்துவிட்டால் அந்த சைக்கோ அப்படியே அவரின் மனதுக்குள்ளே ஒளிந்து கொள்ளும்.

மதுவால் ஷர்மாவின் எண்ணங்களை நன்றாகவே உள்வாங்க முடிந்தது மைதாமாவை பிசைந்து வைத்தது போல் இருக்கும் அந்த முகத்தில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்தக் கண்கள் மிகவும் அவளை பயமுறுத்தியது...

ரஷ்யாவை விட்டு ஒதுங்கிச் செல்ல செல்ல ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி மதுவிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார் .

இப்பொழுது தம்பதியர்களுக்கு கோவையில் எல்லா விருந்துகளும் சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டது ரவியுடன் மதுவை டெல்லி அனுப்ப வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்க மதுவிற்கு மட்டும் பயத்தின் வேர் ஒன்று மனதில் ஊன்றிருந்தது.

தனது மனிதர்கள் தனது குடும்பம் இவர்களின் முன்பே ஷர்மாவை தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே பாஷை தெரியாத ஊரில் அவனுடைய இடத்திற்குச் சென்று எப்படி அவனை சமாளிக்கப் போகிறோம் .

கணவரிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவே மாட்டார் அவர்களின் நட்பு அப்படி என்ன செய்வது என்று குழம்பித் தவித்தாள்.

எப்படி இருந்தாலும் கணவனுடன் சென்று தானே ஆகவேண்டும் வாழ்க்கை போராட்டத்தோடு இந்த ஷர்மாவை சமாளிக்கும் வித்தையை கற்றுக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்தபடி கணவனுடன் டெல்லி பயணித்தாள்.

அங்கு சென்றதும் தான் அவளுக்கு நிஜமான ஷர்மாவின் முகம் தெரியத் தொடங்கி இருந்தது அவனுடைய ஊர் அவனுடைய இடம் அவனுடைய மொழி என்று எல்லாமும் அவனுடைய தாகியிருந்தது. டெல்லியில் எங்கு தம்பதியினர் சென்றாலும் அவனும் ஆஜராகி விடுவான்…

மது ரவியிடம் எதுக்காக எல்லா இடத்துக்கும் உங்க ஃப்ரண்ட் வர்றாரு அவரை கூட வேணாம்னு சொல்லுங்க என்று கூறும் பொழுது

ரவி மதுவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளின் கண்கள் பார்த்தபடி இங்கே பாரு மது இது தமிழ்நாடு இல்ல... டெல்லி இங்கே ஷர்மா மாதிரி ஒரு நண்பன் இல்லனா கண்டிப்பா என்னால வாழவே முடியாது.

நான் நம்ம ஊர்ல இருந்து இருந்தா இந்நேரம் எங்க குடும்ப பிரச்சினைல நான் காணாம போய் இருந்திருப்பேன் எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஷர்மா...அப்படி பட்ட நண்பனை எப்படி கூட வராதனு சொல்ல முடியும் சொல்லு...


இந்த டெல்லி அவளுக்கு ரொம்ப நல்லா தெரியும் அவன் நமக்கு உதவிதான் பண்ணறான் அதனால அவன் கூட வர்றதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதே…


அவன் சாதாரணமா பேசறதையெல்லாம் தப்பா எடுத்துக்கிட்டு அவனை காயப்படுத்தாத
உனக்கு அவனோட பேச பிடிக்கலைன்னா பேசாத...அதை விட்டுட்டு இப்படி அவனை பத்தி என்கிட்ட அடிக்கடி குறை கூறுவதை நிறுத்து…நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இனிமே அவளை வற வேண்டான்னு சொல்லிடறேன் நீயும் அதே போல எங்க ரெண்டு பேரோட நட்புக்குள்ளேயும் வராத என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

இதை ஷர்மாவிடம் ஜாடையாக ரவி கூற
ஷர்மாவிற்கு அவ்வளவு கோபம் மதுவின் மீது... தன்னை நண்பன் முன்பு மது தவறாக சித்தரிக்கப் பார்க்கிறாள் என்று...அதனால் வேண்டுமென்றே மதுவின் முன்பு ரவியிடம் அதிகப்படியாக உரிமை எடுத்தார் ஷர்மா.


அவர் எவ்வளவு வளைத்தாலும் ரவி அதற்கு ஏற்றார் போல வளைந்து கொடுக்க மது மட்டும் தனித்து நிற்க ஆரம்பித்தாள்.

வேண்டுமென்றே அதிகாலை வேளையில் ரவிவின் வீட்டிற்கு வருவது கையோடு இருந்து அவனை அழைத்துச் செல்வது இரவு வெகுநேரம் வரை தொழிலை காரணம் காட்டி அவருடனே வைத்துக்கொள்வது என பல விளையாட்டுக்களை மதுவின் வாழ்க்கையில் விளையாடினார் ஷர்மா…

வேண்டுமென்றே புதிதாக ஒரு தொழிலை தொடங்கி அதில் ரவியையும் இழுத்து விட்டிருந்தார் ஷர்மா .

இதை அறியாத ரவியும் ஷர்மா சொல்லும் வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தை கூட மிக அழகாக மதுவோடு செலவழித்தார் முடிந்த அளவு மதுவை சந்தோஷமாகவே வைத்துக் கொண்டார். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டெல்லியை சுற்றிக் காண்பித்தார் ஆனாலும் சில நேரங்களில் ஷர்மா எப்படியாவது இடையில் புகுந்து கொள்வார்.

ஷர்மாவின் குணம் அறியாத ரவி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் அவர் பார்க்கும் பார்வையின் அர்த்தம் மதுவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவ்வப்போது நன்றாகவே கொடுத்து விடுவாள்.

எவ்வளவு கொடுத்தாலும் ரோஷம் கெட்ட ஷர்மா மீண்டும் மீண்டும் மதுவிடம் வம்பு வளர்ப்பார்.

இப்படியாக நாட்கள் கழிய ஒருநாள் மது கருவுற்றிருப்பது தெரிந்ததும் ரவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை .

முதல் முதலில் அதை ஷர்மாவிடம் தான் தெரியப்படுத்தி சந்தோஷப்பட்டார்.

அவர் கூறி முடிக்கும் வரை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஷர்மாவின் கண்கள் நெருப்பாக தகிக்க ஆரம்பித்தது.

அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரின் பிரியத்திற்குரிய மதுவின் வயிற்றில் மற்றொருவரின் கரு வளர்வதா என்ன அநியாயம் என்று மனதிற்குள்ளேயே பொறுமிக் கொண்டிருந்தார் ஆனால் ரவியின் முன்பு அதை துளியும் காட்டிக் கொள்ளாதது அவரின் திறமை…
மனதில் இருந்த அழுக்கை மறைத்துக் கொண்ட ஷர்மா மதுவை இப்பொழுது காண வேண்டும் போல் இருக்கிறது வா சென்கறு பார்க்கலாம் என்று கூறினார்.


இப்ப நிறைய வேலை இருக்கு ஷர்மா உடனே போலாம்னா எப்படி முடியும் சொல்லு அதனால இனி ஒரு நாள் உன்னை நான் கூட்டிட்டு போறேன் மதுவுக்கும் கொஞ்சம் முடியல இப்போ போனாலும் டயர்ல அவளால் உன்னை கவனிக்க முடியாது என்றார்.

உடனே பதறிய ஷர்மா சரி நீ வரலனா போ நான் போய் மதுவை பார்த்துட்டு வரேன் என்று கிளம்பத் தயாரானார்.

ஐயோ ஷர்மா நீயும் போக வேண்டாம் மது ஏற்கனவே சொல்லி இருக்கா யாருமே வீட்டுக்கு கூட்டிட்டு வராதுன்னு இப்ப நீ போனா வேற வினையே வேணாம் ப்ளீஸ் என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ டா….என்றார்.

மது ரவியிடம் உறுதியாக கூறிவிட்டாள்.
எக்காரணம் கொண்டும் உங்கள் நண்பர்கள் யாரும் வீட்டிறிக்கு உங்களை தேடி வரக்கூடாது உங்களுடைய நட்பு வட்டத்தைப் வெளியிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று


அதை ஷர்மாவிடம் உரிமையாகவே ரவி கூறிவிட்டார் ஏனோ மதுவிற்கு இந்த ஊர் பழக்கவழக்கங்கள் எதுவுமே பிடிக்கவில்லை வெளியாட்கள் யாருமே வீட்டிற்கு வருவதை விரும்பவில்லை அதனால் நீ வருவதென்றால் நான் இருக்கும்போது மட்டும் வா அப்படி இல்லையென்றால் வர வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

ரவி என்ன கூறினாலும் ஷர்மா அதை தவறாக நினைக்க மாட்டார் என்று நம்பினார் உயிர் நண்பன் தன்னை புரிந்து கொள்வான் என்ற உரிமையில் அதை கூறியிருந்தார் அது ஷர்மாவின் மனதில் மேலும் வஞ்சத்தை விதைத்தது.
எவ்வளவு தைரியம் மது உனக்கு என்ன வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லி இருக்க நீயே எனக்கு சொந்தம் எனக்கு சொந்தமான பொருளை நான் பார்க்க வரக்கூடாதா...என்ன இது முட்டாள் தனம் மது இதை கேக்கறதுக்காகவாவது நான் உன்னை தேடி வீட்டுக்கு வருவேன் மது என்று மனதிற்க்குள் சூளுரைத்தார்.


மறுநாள் ரவியிடம் சொல்லாமலே மதுவைத் தேடி வந்தார்... முந்திய தெருவிலேயே அவரின் காரை நிறுத்தியவர் நடந்து வரும் பொழுதே வாசலில் ரவியின் கார் நிற்கிறதா என்று பார்த்தபடி வந்தார்.
ரவியின் கார் வீட்டு வாசலில் இல்லை…
எங்கே சென்றிருப்பான் ரவி கருவுற்ற எனது மதுவை விட்டுவிட்டு பொறுப்பில்லாமல் எங்கோ சென்று விட்டான் என்று ரவியின் மீது கோபமாக வந்தது...

ஒருவேளை ரவி தீடிரென வந்து விட்டால் என்ன செய்வது என்று ஷர்மா யோசித்தார்.

தனது கார் ரிப்பேராகி நிற்கிறது அதனால் உதவி கேட்பதற்காக வந்திருக்கிறேன் என்று தப்பித்துக் கொள்ளலாம் என்ற திட்டமொன்றை அவசரமாக போட்டார்.


பிறகு இயல்பாக ரவியின் வீட்டிற்கு வருவது போல் காட்டிக் கொண்டு வீட்டின் கேட்டை மெதுவாகத் திறந்து விட்டபடி உள்ளே வர வாயிற் கதவு திறந்தே இருந்தது சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நேராக மதுவின் அறைக்குள் செல்வதற்காக அடி எடுத்து வைக்க ரவியின் குரல் சத்தமாக கேட்டது .

தொடரும்..
 
Status
Not open for further replies.
Top Bottom