#கனவுகைசேரும்நாள்வருமோ
ரொம்ப ரொம்ப அழகான கிராமத்து காதல் கலந்த குடும்ப கதை
பிறந்து ஒரு சில நிமிடங்களிலே சிறுவனான அவன் கையில் குழந்தையை கொடுத்து இவ தான்ட உன் பொண்டாட்டினு சொல்லி அவன் ஆசையாய் கொஞ்சிகொண்டு இருக்கும் போதே அக்குழந்தையை அவனிடம் இருந்து தடாலடியாக பிரித்து கொண்டு போறாங்க
( என்னட இவ யாரை பற்றி சொல்லுறானு யோசிக்கிறீங்களா
)
வேற யாருங்க எல்லாம் நம்ம மாறன் அம்மணி பற்றி தான்
பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருத்தியை இவ தான் உன் பொண்டாடினு அவன் மாமா அவன் கையில் கொடுக்க அவளுக்கு கனிஷ்கா னு பெயர் வைக்கிறதும் கனி ங்குற பெயர் தன்னுடைய அம்மணிக்கு மட்டுமே சொந்தம் என்று மற்றவளின் பெயரை கன்னிகா வில் இருந்து அவந்திகானு மாற்றும் அளவுக்கு அம்மணி மேல் உரிமை உணர்வு உள்ளவன் நம்ம மாறன்.
ஆனால் அவன் சந்தோஷமா இருப்பது பிடிக்காதது போல சில மணி நேரங்களிலே தனது உடன் பிறந்தவளுக்கு அம்மணியை தத்து கொடுக்கும் தங்கை, எவ்வளவு கெஞ்சியும் தத்துகொடுக்கும் முடிவை மாற்றிக்கொள்ளாத மனைவியுடன் பேசுவதையே நிறத்திவிடும் அவர் கணவன்.
பெறாவிட்டாலும் அவள் மேல் பாசத்தை அள்ளி வழங்கும் முருகேசன் வேதவள்ளி
. இப்படி சிறுவயதிலே மனதில் பதிந்த நேசம் வளர்ந்ததா சேர்ந்ததா சேர்ந்தால் எப்படி சேர்ந்தது என்பதே கதை❤
**************
மாறன் அவன் காதல் அழகு❤ அம்மணி அம்மணினு உருகுறதும் அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வதில் காதல் மன்னன்
விவசாயம் மீன்வளர்ப்பு மற்றும் அவனது தேர்தல் உக்தி என்பவற்றின் மூலம் கிராமத்தை முன்னேற்ற துடிக்கும் இளைஞன்
நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி
(Specially அந்த ராஜி character அய்யோ அம்மா சிரிச்சி முடில
)
****************
அம்மணி கனினு சொல்லுறத விட அம்மணி தான் பிடிச்சிருக்கு விவரமே தெரியா வயதில் பிரிந்தாலும் அவனை உயிராக நேசிப்பவள்....
அம்மாவின் பாசத்துக்கும் உயரில் கலந்த மாறனின் மேல் உள்ள காதலுக்கும் இடையில் தத்தளிப்பவள்....
பெண்களின் தற்கால ஆடை நாகரிகத்தால் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளும் தாய்மை அடைவதற்கான உணவு முறைகளும்னு நிறைய விடயங்களை அவள் மூலம் சொல்வது அழகு
****************
கன்னிகா sorry sorry அவந்திகா (ஏன்னா மாறனுக்கு கன்னிகானு சொன்னா பிடிக்காதே
) அப்பப்பா அப்படி ஒரு வாயாடி ஆனால் மாறனிடம் மட்டுமே அடங்கி இருப்பவள். உண்மை தெரியாமல் தன் மச்சானை கல்யாணம் செய்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க நினைப்பவள், அதே நேரம் உடன் பிறந்தவள் என்றும் பாராமல் அம்மணிய திட்டுறதும் வார்த்தை விடுறதிலும் அவசரகுடுக்கை. பார்த்தி அ வச்சி செய்றது
ஆனா பாவம் பார்த்தி
**************
பார்த்திபன் என்ட்ரி கொடுத்தது என்னமோ வில்லன் மாதிரி (அம்மணிக்கும் பார்த்திக்கும் வேதா கல்யாணம் பேசி அதுக்கு பார்த்தி சம்மதிச்சதால அவ வில்லன் தானே) ஆனால் மாறனின் காதல் தெரிந்த பின் விட்டுக் கொடுக்கிறானா அல்லது பிடிவாதம் பிடிக்கிறானா, பிரிந்த குடும்பத்தை எப்படி அவன் ஒன்று சேர்க்கிறான் என்பதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
(பார்த்தி அ பத்தி பேசுனாலே ஒருத்தவங்க mind ல வாராங்கப்பா
ஆனா அவங்களையும் கதைக்குள்ள கொண்டு வந்து அவள கட்டிகிறேன் உன்ன வச்சிக்கிறேனு சொல்லி கதற விட்டுட்டீங்களே writer ஜி
)
#மாறனின் காதல் என்ன நடந்தது
#பார்த்தியின் மனம் கவர்ந்தவள் யார்
யாரா கட்டிக்கிறேன் யாரா வச்சிக்கிறேனு சொல்லுறான்
#அம்மணி யாரா கட்டிக்கிட்டா
#அவந்திகா ஆசை என்ன ஆனது
#பொன்னம்மா அவ்வளவு பிடிவாதமா தத்துக்கொடுக்க காரணம் என்ன
#கடைசியில் flashback இல் ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க இடத்துல சரினு தோணவச்சிட்டீங்க.
(அது வரைக்கும் பொன்னம்மாவ பிடிக்கவே பிடிக்காது)
அப்படி என்ன flashback
இதுக்கெல்லாம் பதில் கதையில் இருக்கு கட்டாயம் படிச்சி தெரிந்துகொள்ளுங்கள்
அவ்வளவு சுவாரசியமான கதை காமெடி கலந்து விறுவிறுப்பாக ஆசிரியர் கதையை கொடுத்து இருக்காங்க❤❤❤
அருமையான கதை...
ஆசிரியருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்