Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலின் விதியம்மா

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 7

"என் கிட்ட நீ என்ன சொன்ன ஆனால் இப்ப என்ன நடந்து இருக்கு. அவனோட உயிரை எடுக்க சொன்னேன். நீ தானே என்னால தனியாவே செய்ய முடியும் எனக்கு யார் ஹெல்பும் வேண்டாம் இன்றைக்கு அவனோட சாவை பார்ப்ப, அப்படி இப்படி எல்லாம் சொன்ன ஆனா இப்ப என்ன நடந்துச்சு எல்லாமே வெறும் வாய் வார்த்தை தான் செயலில் ஒன்றுமே இல்ல இனி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் நானே பார்த்துகிறேன் நீ வேடிக்கை மட்டும் பாரு" என்று சண்டி தன் தம்பியிடம் கத்தி விட்டு கோபமாக தனது அறைக்கு சென்று,

"விட மாட்டேன் இம்முறையும் வெற்றி எமக்கே.... நீ உன் பலத்தை நெருக்கும் முன்பே உன் விதியை முடித்து காட்டுகிறேன். உன்னை நோக்கி வருகிறேன் எனக்காக காத்திரு" என்று தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டான்.

வர்மா ரெசிடன்சி, இரவின் இருளில் அந்த மாளிகையே வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருக்க, நாராயணனின் மனது மட்டும் வேதனையால் சூழ்ந்து இருந்தது.

'மகமாயி..... நான் என்ன பாவம் பண்ணேன் எதுக்கு என் மகனுக்கு மட்டும் இது மாதிரி எல்லாம் நடக்கணும். எனக்கு தொழிலில் கூட யாருமே எதிரிங்க கிடையாது இருந்தும் யாரு இவனை அழிக்க நினைப்பா.... இன்றைக்கு மட்டும் அந்த அஸ்வினி பொண்ணு வரலைனா இந்நேரத்திற்கு என் பையனை இப்ப அய்யோ நினைச்சு பார்க்க கூட முடியல' என்று முகத்தில் கலக்கத்துடன் நின்று கொண்டு இருக்க அவரை

பூமகள், "இங்க நின்னு என்ன பண்றீங்க உள்ள வாங்க எப்படி காற்று அடிக்குது உடம்புக்கு முடியாமல் போக போது" என்று பால்கனியில் நின்று கொண்டு இருந்த கணவனை உள்ளே அழைத்து வந்து "எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க. இனி நம்ப பையன் நம்ப கூடவே இருக்க போறான். நினைக்கும் போதே அப்படியே பறக்கிற மாதிரி இருக்கு. நாளைக்கு நம்ப ஜோசியரை போய் பார்த்துவிட்டு வந்துருவோம் வேலையோட வேலையா அவனோட கல்யாணதையும் முடிச்சிட்டா நம்ப கடமை முடிஞ்ச மாதிரி" என்ற மனையாளிடம் தன் மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்க,

பின் "இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்ப தான் அவன் கம்பெனி பொறுப்பை எடுத்து இருக்கான். அதுக்குள்ள கல்யாணம்னா அவன் சம்மதிக்க மாட்டான்" என்ற கணவரை தன்னால் முடிந்த அளவு முறைத்து கொண்டே,

"அவனே சம்மதிச்சாலும் நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்க போல. போங்க அவன் வயசு பசங்க எல்லாம் மனைவி புள்ள குட்டின்னு இருக்க என் பையன் மட்டும் தனியா இருக்கிறதா நாளைக்கு நான் கண்டிப்பா போறேன் நீங்க வரத்தும் வராததும் உங்க இஷ்டம்" தன் வாதம் முடிந்தது என்று படுத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் அவரும் கடவுளின் மேல் பாரத்தை போடு தூங்கி விட்டார்.


கௌசல்யா "இன்றைக்கு எப்படி போச்சுன்னு நானும் வந்ததில் இருந்து கேட்டுட்டே இருக்கேன் ஒரு பதிலும் சொல்லாமல் நீ பாட்டுக்கு அந்த லாப் டாப்பை டப்பு டப்பு னு தட்டிட்டு இருக்க எதுக்கு முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க சொன்னா தானே தெரியும்" என்று பல முறை கேட்ட பின், கடைசியாக தூங்கும் நேரம்

"இன்றைக்கு நடந்ததை சொன்ன நீ நம்பவே மாட்ட. இப்ப புதுசா வந்து இருக்காரே எம்.டி. சார் அவரை யாரோ கொல்ல பார்க்கிறாங்க. நான் கண்டிப்பா சொல்றேன் கொல்லனும் னு நினைக்கிறவன் அங்க தான் ஒர்க் பன்றான் இல்லனா இவ்வளவு பாதுகாப்பை தாண்டி உள்ள வந்து உள்ள இருக்கிற நிலைமையை யாருக்கோ சொல்ல முடியாதே. அதை தான் எப்படி கண்டு பிடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்ற தேஜஸ்வினியை வியப்பாக பார்த்தாள்.

"என்ன ஆச்சு அதுக்கு அப்படி பார்க்கிற" என்றதும் கௌசல்யா "நேற்று ஒருத்தர் கனவை பார்த்தே பயந்துட்டாங்க ஆனா இன்றைக்கு கொலைக்காரனை கண்டு பிடிக்க பிளானிங் பண்ணிட்டு இருக்காங்க" என்று சிரிக்க

"கௌசி... நான் சீரியஸ்சா பேசிட்டு இருக்கேன் நீ கொஞ்சம் சிரிக்கிறதை நிறுத்திட்டு எதாவது ஐடியா குடு" என

"ஏய் என்னடி எதோ புருஷனை காப்பாற்ற ஐடியா கேட்கிற மாதிரி கேக்குற. அவரை அவரே பார்த்துப்பார் உன்னோட அசட்டு தனமான தைரியத்தை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை மட்டும் பாரு" என்ற கௌசல்யா விடம் "யாரோ ஒருத்தர் உயிர் தானேனு என்னால நினைக்க முடியலை. அது முடியவும் முடியாது. எனக்கு அவங்க உயிரை காப்பாற்றணம்னு தோணுது டி. இவ்வளவு நேரத்தில் எனக்கு ஒரு ஐடியா கூட கிடைக்கல" என்று பாவமாக சொல்ல

"ஏதாவது கிடைக்கும் இப்ப வா தூங்கலாம் நேரம் ஆகுது" என்று இருவரும் தூங்க சென்றனர்.

"செதுக்கி வைற்ற சிலை போல் இருக்கும் பெண்ணே நீர் யார்" என்ற கேள்விற்கு "நான் அடக்க முடியாத சமுத்திரத்தை அடக்கி ஆளும் சமுத்திர ராஜாவின் ஒரே புத்திரி" சிரித்து கொண்டே சொல்ல

அதுவரை கவலையே இல்லாமல் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்த பைரவ் எழுந்து அமர்ந்தான்.

'என்ன இது எனக்கு எதுக்கு இது மாதிரி கனவு எல்லாம் வருது. ஆனா அந்த பொண்ணோட முகத்தை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை வந்த பார்த்துக்கலாம்" என்று விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

காலை, பூமகள் மற்றும் நாராயணன் இருவரும் காலை உணவு சாப்பிட தங்கள் மகன் பைரவ்விற்காக காத்திருக்க, அதே நேரம் மேல் இருந்து கீழே வந்தான் அவர்களின் தவ புதல்வன்.

"வாடா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் வா சாப்பிடலாம்" என்று நாராயணன் கூப்பிட "நான் வர நேரம் ஆச்சுன்னா சாப்பிட வேண்டியது தானே அப்பா எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க நேரத்துக்கு மாத்திரை சாப்பிட வேண்டாமா " என்று கடிந்து கொள்ள,

"இருக்கட்டும் டா உன் கூட சாப்பிடணும் போல இருந்தது அதான்" என்று மழுப்ப, "ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியது சரி வாங்க சாப்பிடலாம்" என்று சாப்பிட செல்ல,

பூமகள் "தம்பி நாங்க இரண்டு பெரும் ஜோசியரை பார்க்க போறோம் நீயும் வரியா" என "இல்ல அம்மா எனக்கு வேலை இருக்கு நீங்களே போயிட்டு வாங்க. உலகம் எவ்வளவு வேகமா போகுது இப்ப போய் யாரவது ஜாதகம் ஜோசியம் எல்லாம் நம்புவாங்களா" என்று பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தவன் "ஒகே நான் கிளம்புறேன்" என்று இருவரிடமும் விடை பெற்று சென்றான்.

வேகமாக கிளம்பி கொண்டு இருந்த தேஜுவை பார்த்து "என்ன அச்சுமா எதாவது ஐடியா கிடைச்சுதா" என

"அதை ஏன் கேக்கிற ஒன்றுமே தோன்ற மாட்டேன்து நான் அந்த கொலைக்காரனை கண்டு பிடிக்கிறதுக்கு பதிலா நான் பேசாமல் சார் கூடவே அவருக்கு ஷடோவா இருக்க போறேன்" என்று தீவிரமாக சொல்ல,

"சரி தான் போ... வீர மங்கையே எனக்கு நேரம் ஆகுது ஈவினிங் பார்க்கலாம்" என்று அவள் கிளம்பிய சில நிமிடங்களில் அவளும் கிளம்பி சென்றாள்.

நேரம் ஆகி விட்ட காரணத்தில் வேகா வேகமாக உள்ளே நுழைய அவளையே அனைவரும் விசித்திரமாக பார்க்க, தேஜு 'என்ன.... எதுக்கு எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க டிரஸ் எதாவது கிழிஞ்சி போச்சா இல்லையே நல்லாத்தானே இருக்கு வேற எதுக்கு என்னை இப்படி பார்க்கிறாங்க' என்று யோசித்து கொண்டே உள்ளே செல்ல அவள் டீம்மிடன் நேற்று அவள் முடித்த வேலையை கொடுக்க அவர்கள் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து நின்று விட்டாள்.



பூமகளும் நாராயணனும் இருவரும் புகழ் பெற்ற ஜோசியர் முன் அமர்ந்து கொண்டு தங்கள் முகத்தையே மாற்றி மாற்றி பார்த்து கொள்ள, அவர்களின் எதிரே அந்த ஜோசியர் ஜாதகத்தை பார்த்து கொண்டு இருந்தார்.

சில பல நிமிடங்கள் கழித்து ஜாதகத்தை கீழே வைத்து விட்டு "உங்க மகனுக்கு முப்பது முடிய இன்னும் எவ்வளவு நாள் இருக்கு" என்ற கேள்விக்கு "இன்னும் சரியாய் ஆறு மாசம் இருக்கு" என

ஜோசியர் "நல்லது மா கல்யாணத்தை பற்றி கேட்டா அது அந்த பரம்பொருளுக்கு தான் தெரியும். இப்ப வரை இந்த ஜாதக காரருக்கு கல்யாண யோகம் வரலை மா. அது தான் உண்மையும் கூட. இப்ப நீங்க கல்யாணம் பண்ணா கூட அது நடக்காது நடந்தாலும் அது நிலைக்காது. இன்னும் ஆறு மாதத்திற்கு அவருக்கு மரண கண்டம் இருக்கு எதையும் ஆறு மாதம் கழித்து பார்த்து கொள்ளுங்க மா" என

"என்ன சாமி இப்படி சொல்றிங்க. இதுக்கு எதாவது பரிகாரம் இருக்க இல்ல வேற எதாவது பண்ணனும் னா சொல்லுங்க பண்ணலாம் ஒத்த பிள்ளைங்க" என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே கேட்க,

"கவலை படாதீங்க மா நல்லதே நினைங்க நல்லதே நடக்கும். நீங்க உங்க முன்னோர்கள் பூஜையை ரொம்ப காலமா செய்யாமல் இருக்கீங்க அதை செய்தால் நல்லது நடக்கும்னு நம்புவோம். உங்க மகனோட ஜாதகம் ரொம்ப சிறப்பான ஜாதகம் யாராலும் வெல்ல முடியாத சிவனோட அம்சம். சரி பாதி இருந்தால் தான் சிவனும் முழுமை அடைவார்" என

"ஒன்றும் புரியல சாமி" என "நேரமும் காலமும் கூடி வந்தால் அனைத்தும் புரியும். ஒன்றில் மட்டும் கவனம் தேவை உன் மகனது உயிர் அந்திரத்தில் தொங்கி கொண்டு இருக்கு" என

இருவரும் வெளியே வர பூமகள் "என்னங்க இப்படி சொல்லிட்டாங்க" என

"அவன் உயிருக்கு ஆபத்து இருப்பது எனக்கு முன்னே தெரியும் மா அதான் அவனை கிளம்ப சொன்னேன் ஆனா விதி மா. விதி யாரை விட்டது" என்று நாராயணன் கவலையுடன் கூற அதை கேட்டு அவரும் கவலை கொண்டார்

விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல் அவளிடம்,

"பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் பெரிய இடத்தை பிடிச்சிட்டீங்க. இந்த இடத்துக்காக நாங்க பல வருஷமா காத்திருக்கோம் ஆனா நீங்க எல்லாம் வேற லெவல்" என்ற ப்ரியாவை புரியாமல் பார்க்க,

"நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்றுமே புரியலை" என்றவளிடம் சாய் "உன்னை பைரவ் சாரோட பி.ஏ. வா அப்பொய்ண்ட் பண்ணி இருக்காங்க" என

"எனது பி.ஏ.வா நானா" என்று பதற பிரியா "தெரியாத மாதிரி நடிக்காத. எவ்வளவு டேலேண்டான பழைய ஸ்டாப் எல்லாம் இருக்கும் போதும் மோகன் சார் பி.ஏ.க்கு இன்டெர்வியூ வைக்கலாம்னு கேட்டார் ஆனா அதுக்கு பைரவ் சார் வேண்டாம் னு சொல்லிட்டு உன்னை தான் அவர் பி.ஏ. வா போடாஇ சொல்லி இருக்கார். உனக்கு இது தெரியாதா" என

ஒரு பக்கம் சந்தோசத்தில் சிறக்கில்லாமல் வானத்தில் பறந்த மனதை அடக்கி "உண்மையாவே எனக்கு தெரியாது இப்ப நீங்க எல்லாம் சொல்லி தான் தெரியுது" என்றவளின் மனதில் 'நம்மளே சார் கூட எப்படி 24*7 இருக்கறதுனு யோசிச்சோம் அதுக்கு கடவுளே ஒரு வாய்ப்பு தந்து இருக்காரு ஆனா பைரவ் சாரை பார்த்தாலே பயம் தான் வருது பேச வரவே மாட்டேன்து என்ன செய்ய" என்று யோசிக்கும் போதே அங்கு வந்த ஜெயராஜ் பழைய பி.ஏ. "அஸ்வினி நான் உன் கூட இருந்து கொஞ்ச நாள் ஹெல்ப் பண்றதா பைரவ் தம்பி கிட்ட கேட்டேன். ஆனா அதுக்கு அவரே உனக்கு சொல்லி தருவதா சொல்லிட்டார்" என

'அய்யோ இது வேறயா' என்று நொந்து கொண்டே "இட்ஸ் ஒகே சார் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்" என்று நேராக பைரவ் அறைக்கு செல்ல

அங்கே " ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான் சென்ஸ். உங்க டீம்க்கு டெட் லைன் முடிஞ்சு போச்சுன்னு தெரியாத யாருமே வந்து ரிப்போர்ட் பண்ணல. நீங்க டீம் லீட் தானே உங்களுக்கும் பொறுப்பு இல்லை. இது தான் நான் வந்த முதல் நாள் அந்த காரணத்தால் மட்டும் தான் உங்களுக்கு எஸ்க்யூஸ் தரேன். டோன்ட் ரிபீட் இட் அகைன். நெஸ்ட் டைம் வார்ன் பண்ண மாட்டேன் டிஸ்மிஸ் தான்" என்று கோபத்தில் கத்தி கொண்டு இருக்க

'அச்சோ தப்பான டைமிங்ல வந்துட்டோம் போல இவர் சாதாரணமா பேசினாலே கோபத்தில் பேசற மாதிரி தான் இருக்கும் இப்ப மனுஷன் கோபத்தில் வேற இருக்கு நம்ப போன கண்டிப்பா கைம்மா தான் பேசாம போயிடுவோம்' என்று தனக்கு தானே பேசி ஒரு முடிவுக்கு வர,

அது வரை உள்ளே பாவமாக திட்டு வாங்கி கொண்டு இருந்த சீனு கதவை திறந்து கொண்டு வெளியேற, கடவு திறந்தலில் தேஜுவை பார்த்த பைரவ்,

"தேஜ் கம் இன்" என திரும்பி செல்ல நினைக்கும் போது கூப்பிட "அச்சோ பார்த்துட்டார் ஒண்ணுமே பண்ணாம திட்டு வாங்க போறோம்' என்று கதறும் மனதை கணக்கில் கொள்ளாமல் பைரவ் முன் நின்றாள்.


"ஆர்டர் வந்துச்சா இனிமே நீ தான் என்னோட பி.ஏ. காட் இட்" என்று கணீர் குரலில் சொல்ல,

"நான்..... எனக்கு மேனேஜ்மென்ட் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது நான் எப்படி.... என்ன செய்றது கூட தெரியாது நீங்க வேற யாரையாவது உங்க பி.ஏ.வா வெச்சுக்கோங்க" அவள் எடுத்த முடிவை பயத்தில் மறந்து உதடு நடுங்க சொன்னாள்.

அதுவரை இருந்த கோபம் மறைந்து சுவாரசியமாக அவளை பார்த்து கொண்டே "இங்க நீ பாஸ் இல்ல நான் தான் பாஸ் சோ நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும். ஐ நீட் யு டு பீ மைன் பார்எவர். பிறக்கும் போதே எல்லாரும் எல்லாத்தையும் கத்துகிறது இல்ல. பீ ரெடி போர் யுவர் நியூ ஒர்க்" என

'இந்த மனுஷன் என்ன ரகம்னே தெரியலை புரிஞ்சிக்க சுத்தமா முடியலை இப்ப தான் சீனுவை அப்படி திட்டனார் இப்ப என்னனா எனக்கு தெரியத்தை குடுத்து சொல்லி தரா மாதிரியே பேசறாரு விட்டா கூடவே வீட்டுக்கும் வந்திருனு சொல்லுவார் போல" என்று சிந்திக்க,

"வரியா" என்று அவனது குரல் மிக அருகில் கேட்க அதிர்ந்து திரும்பி பார்க்க, அவனோ எந்த கேப்பில் வந்தானோ அவளை நெருங்கி கேட்க,

அருகில் பார்த்த காரணத்தால் எச்சில் விழுங்கி கொண்டு "எங்க சார்" என அவனோ இன்னும் அவளை நெருங்கி அவன் இதழ் அவளின் கன்னத்தில் உரசி அவளின் காதை அடைந்து "டைரக்டர் மீட்டிங் இருக்கு அதுக்கு தான் கூப்பிட்டேன் வேற எதுவும் இல்ல" என்று மீண்டும் அவள் கன்னத்தை இதழால் உரசி கொண்டே நகர்ந்தான்.

அவனின் இதழ் கன்னத்தில் பட்டதும் மின்சாரம் பாயிந்தது போல உறைந்து நின்றவள் அப்படியே சிலை ஆகிவிட்டாள்.

பைரவ் "மேடம் மீட்டிங் க்கு லேட் ஆகுது கிளம்புவோமா" கதவின் அருகே நின்று கொண்டு அவளை கூப்பிட, என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டே செல்லும் அவன் பின்னே சென்றாள். முன்னே சென்ற அவனது அழுத்த இதழிலோ சிறு புன்னகை பூத்தது.

தஞ்சாவூர் தேஜஸ்வினி இல்லம்,

"அம்மா என் பிரெண்ட் ஆர்யாவை பற்றி தான் உனக்கே நல்ல தெரியுமே அவனை சின்ன வயசில் இருந்து பார்க்கிறேன் மா. நம்ப ஆச்சு வை கட்டி கொடுத்தா நல்ல பார்த்துப்பான் மா. அச்சுவும் நம்ப கண்ணு முன்னாடியே இருந்தா மாதிரியும் இருக்கும்" என்று தேவேஷ் அவனின் தாயிடமும் தந்தையிடமும் தன் நண்பனுக்காக பேச,

ஊர்வசி ஆர்யாவின் தாய் "எனக்கு பெண் பிள்ளை இல்லங்க உங்க மகளை கட்டி கொடுங்க மருமகளா இல்லங்க மகளா பார்த்துப்பேன். அதே மாதிரி என் மகனும் அவளை ராணி மாதிரி பார்த்துப்பான்" என்றார்.

ஊர்வசி சில காலங்கள் முன்பு தான் கணவனை இழந்தார். இரண்டு மகன். மூத்தவன் தான் ஆர்யா. பொறுப்பானவன் பல தொழில் அப்பா அவனுக்காக வைத்தாலும் நண்பனுக்காக அவன் தொழிலிலும் ஒரு பங்கு இவனுடையது. சிறியவன் சரண், சிறுவயதில் இருந்தே ஹாஸ்டலில் தான் படிக்கிறான். தற்பொழுது தன் திறமையை வளர்த்துக்குள்ள தனியாக வேலை பார்க்கிறான்.

ரகுபதி "நீங்களே எங்க வீடு தேடி வந்து பொண்ணு கேட்கறீங்க சந்தோஷமா இருக்கு மா எனக்கு சம்மதம் தான் ஆனா பாப்பா இப்ப தான் வேலைக்கு போற அதுக்குள்ள கல்யாணம்னா சம்மதிப்பாளான்னு தான் தெரியலை" என

தேவேஷ் "அப்பா என் தங்கச்சி என்னோட பேச்சையை கண்டிப்பா கேட்பாள். நீங்க அதை எல்லாம் நினைக்காமல் மேற்கொண்டு நடக்க வேண்டியதை பாருங்க" என

ஊர்வசி "அப்ப என்னங்க அஸ்வினி ஜாதகத்தை கொடுங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்து மேற்கொண்டு வேலையை பார்க்கலாம்" என

பொன்னி "தப்பா நினைக்காதீங்க நாங்க அஸ்ஹவினிக்கு ஜாதகம் எழுதல. இப்ப வரைக்கும் ஜாதகத்துக்கு அவசியம் வந்தது இல்லஅதான் ஜாதகமே எழுதல" என்று மெதுவாக சொல்ல,

"அட அதுக்கு என்னங்க. சிலர் அதை நம்புறாங்க சிலர் அதை நம்பறது இல்ல. ஆனா இரண்டு பேருமே நல்லா தானே இருக்காங்க நம்ப அவங்களுக்கு பெயர் பொருத்தம் பார்க்கலாம்" என

"நீங்க சொல்றதும் சரி தாங்க. பொருத்தம் பார்த்த பிறகு நான் இதை ஆச்சு கிட்ட சொல்லலாம். எப்ப பொருத்தம் பார்க்கலாம்" என

"நல்ல விசயத்தை எதுக்கு தள்ளி போட்டுக்கிட்டு இப்பவே பார்க்க போகலாம் நாங்க எப்பவும் பார்க்கிற சாஸ்த்திரி கிட்டவே போயிடலாம்" என்று விட்டு தேவேஷை பார்த்து,

"உன் நண்பனை இப்பவாச்சு வர சொல்லு டா எப்ப பார்த்தாலும் வேலை வேலைனு. அவன் கிட்ட எங்க நடந்ததை சொல்லு" என்று விட்டு மற்ற மூவரும் சாஸ்த்திரியை பார்க்க கிளம்பினார்கள்.

சில நேரங்கள் கழித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று அங்கு இருந்த அம்மனை வணங்கி விட்டு, பிரகாரத்தில் சுற்ற அங்கே இருந்த ஒரு சித்தர்,

"மனிதன் பல கணக்கு போடுவான் ஆனால் வெல்வது இறைவனின் கணக்கே. சிவனின் பிரசாதம் கிடைச்சிருக்கு உனக்கு. ஆனால் கிடைச்ச பொக்கிஷத்தை இழக்க போற. சொந்தம் கொண்டாட வராங்க. மாற்ற முடியாத விதியை மாற்ற, இழக்க போவது பல. மனசை கல்லாகிக்கோ" என்று பொன்னியை பார்த்து சொல்ல,

அவர் சொன்னது பாதி புரிந்தும் பாதிக்கு மேல் புரியாமலும் முழித்து பார்த்தனர்.


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 9

வர்மா ரெசிடென்சி,

பூமகள் "ஏங்க முன்னோர்கள் பூஜை பண்ணணும்ங்க நீங்க உங்க தங்கச்சி கிட்டவும் மச்சான் கிட்டவும் இதை பற்றி பேசுங்க" என

"கண்டிப்பா சொல்றேன் மா அப்படியே உன் மகனையும் கூப்பிட்டு போகணும். அவனுக்கு தான் பண்றது அவன் வந்தா இன்னும் நல்லா இருக்கும்" என்று நாராயணன் தன் மனதில் இருப்பதை சொல்ல,

"கண்டிப்பா வருவான் அங்கவே ஒரு வாரம் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்ங்க. அங்க போய் பல வருடம் ஆகுதுங்க. நம்ம பூர்விகத்தை மறந்து நாகரிகத்தை தேடி ரொம்ப தூரம் ஓடி வந்துட்டோம்" என்று கவலையோடு சொல்ல,

"எதுமே நம்ம கையில் இல்லமா விதி நம்மை அங்க இருக்க விடலை. பைரவ் எப்ப பிரீ ஆ இருப்பான் னு கேட்டு போயிட்டு வந்துடுவோம்" என்று அங்கு சென்றால் நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் சொல்ல அதே நேரம்,

"சார்..... சார் ப்ளீஸ் என்னை விட்ருங்க நான் ஆபீஸ் கே போயிடுறேன்...... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க" என்று தன்னால் முடிந்த அளவு கெஞ்சி கொண்டு இருந்தால் தேஜஸ்வினி.

"ஷுட் அப் உன்னை யாரும் கடத்திட்டு போகலை கத்தாமல் வா...... ஹோட்டல் ல சாப்பிட்டு உன்னை நேரா ஆபீஸ்ல விட்டுடுவேன் இப்படியே கத்திட்டு இருந்த நேரா உன்னை கடத்திட்டு காட்டு பக்கம் போயிடுவேன்" என்று காரை ஒரு கையில் ஓட்டி கொண்டு மறுகையில் அவளை எச்சரிக்க,

'கேட்கலாமா வேண்டாமா வேண்டாம் கோபமா இருக்காரு.... இல்ல இல்லா கேட்டா தான் எனக்கு ரிலீபா இருக்கும்' என்று சில நிமிட அமைதிக்கு பின் "சார் அங்க மீட்டிங் ஹால் ல ஒருத்தர் இருந்தாரே நெற்றி ல பட்டை போட்டு காமெடி ஆ ஆரஞ்சு கலர் ஷர்ட் போட்டு இருந்தாரே அவர் யாரு" என்று தன் சந்தேகத்தை கேட்க,

"உன்னை அமைதியா இருக்க சொன்னேன்" என்ற சிறிது வினாடியில் திரும்பி "இப்ப என்ன கேட்ட" என்றான் சந்தேக பார்வையுடன்.

அவளோ "அதான் சார் நம்ப மீட்டிங் ஹால் லை விட்டு வெளியே வரும் போது எதிரே ஒருத்தர் நம்பலை முறைச்சிட்டே இருந்தாரே அவரை தான்" என

"விளையாடாத தேஜ் நம்ம வரும் போதே யாருமே எதிரே இல்லை" என்னும் போதே ஹோட்டல் வந்து விட காரை பார்க் செய்து விட்டு கீழே இறங்கினான்.

'இல்லையே நான் பார்த்தேனே அப்ப நான் பார்த்தது யாரை' என்று குழம்பி கொண்டே இறங்கினாள். இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இந்த விவாதத்தில் தங்கள் பின்னால் வந்தவனை இருவரும் கவனிக்க தவறினர்.

இது வரை படத்தில் மட்டுமே பார்த்த பிரம்மாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் அரண்டு தன்னை அறியாமல் பைரவின் கையை பற்றி கொண்டாள்.

'இவ என்ன பண்ற' என்று அவளை பார்த்தவன் அவளின் பதற்றத்தை குறைக்க, அவளின் பற்றிய கையில் அழுத்தம் கொடுத்து "பீ ரிலாக்ஸ்" என்றான்.

"சார் நீங்க சொன்ன ஆளு இங்க தான் இருக்கான். அவனோட ஒரு பொண்ணு மட்டும் இருக்கா சார் மத்த படி வேற யாரும் இல்ல" என்று போனில் யாரிடமோ பேசினான் அவர்களை தொடர்ந்து வந்த மர்ம நபர்.

..................

"சரிங்க சார் முடிச்சிட்டு கால் பண்றேன்" என்று தான் கொண்டு வந்த கத்தியில் கொடிய விஷத்தை தடவினான்.

"என்ன சாப்பிடுறிங்க தேஜ்" என்று அவளிடம் கேட்க "சார் என்னை எல்லாரும் மாதிரி அஸ்வினினு கூப்பிடுங்க இல்ல தேஜு னு கூப்பிடுங்க அதை விட்டு புட்டு தேஜ் தேஜ் னு ஆம்பள பிள்ளையை கூப்பிடுறா மாதிரி இருக்கு" என்று தயங்கி கொண்டே கேட்க,

"ஹா ஹா ஹா" என்று சிரித்து கொண்டே "கொண்டே "ஐ லைக் யு தேஜ்" என "என்னது" என்று வாய் திறந்து அதிர்ச்சியாக கேட்க,

அவள் வாயை முடி விட்டு "ஐ லைக் யுவர் நேம் தேஜ்" என்றான். "ஓ....." என்று விட்டு "சார் நீங்களே ஆர்டர் பண்ணுங்க நான் வாஷ் ரூம் போயிடு வரேன்" என்று கிளம்ப அவள் செல்வத்தையும் பைரவ் தனியாக இருப்பதையும் பார்த்த அந்த மர்ம நபர் அவனை நோக்கி வந்தான் கையில் விஷம் தடவிய கத்தியுடன்.


தஞ்சாவூர்

மூவரும் தஞ்சாவூரின் புகழ் பெற்ற கோவிந்த சாஸ்த்திரி அவர்களை பார்க்க வர, அவர்களின் நேரமோ அல்லது விதியின் விளையாட்டோ அவர் இல்லாமல் அவரின் சீடர் இருக்க,

ஊர்வசி "சாஸ்த்திரி இல்லையா" என்றது "இல்லங்க மா அவங்க யாத்திரைக்காக காசி போய் இருக்காங்க வர ஒரு மாசம் ஆகும். நீங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க" என

"பசங்களுக்கு கல்யாணத்திற்கு பெயர் பொருத்தம் பார்த்து தேதி குறிக்கனும்" என்றதும் "ஜாதகம் இல்லையா மா" எண்றதுக்கு பொன்னி "இல்லங்க நாங்க அவளுக்கு ஜாதகம் எழுத்தவே இல்லை" என்று இழுக்க

"அதில் என்னமா இருக்கு பிறந்த நேரத்தை சொல்லுங்க பேஷா பொருத்தம் பார்க்கலாம்" என்று ஆர்யாவின் ஜாதகத்தை பார்த்து கொண்டே சொல்ல,

பொன்னியும் ரகுபதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின் "பெயர் தேஜஸ்வினி பிறந்த நேரம் காலை 5.59 பிறந்த கிழமை வெள்ளி" என்று மேலும் சில தகவல்களை சொல்லிய பின்,

ஜாதகத்தை ஆராய்ந்து பின் "நல்லது மா..... பையனோட ஜாதகம் அமோகமா இருக்கு தொட்டது எல்லாம் தங்கம் ஆகிற ராசி கல்யாண யோகம் வேற கூடி வந்து இருக்கு. பொண்ணு ஜாதகமும் ரொம்ப நல்ல இருக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் பொருந்தி இருக்கு. இவங்களுக்கு இந்த இந்த நாளில் கல்யாணம் பண்ணலாம்" என்று ஒரு மாத இடைவெளியில் இரண்டு நாட்கள் குறித்து கொடுக்க,

மூவரும் அதில் மனநிறைவுடன் செல்ல அவர்கள் சென்ற அந்த பின் அந்த சீடனோ போனில் "நீங்க சொன்ன மாதிரியே அவங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்குனும் கல்யாண தேதியும் குறிச்சி கொடுத்துட்டேன்" என

"சரி அதுக்கு பணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கையில் இருக்கும்" என்றதும் அந்த அழைப்பு துண்டிக்க பட்டது.

வெளியே வந்த மூவரில் பொன்னி "வந்தது தான் வந்துட்டோம் பக்கத்தில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு போயிடு கிளம்பலாம்" என்று மனதில் தோன்றியதை சொல்லி இருவரையும் பார்க்க,

ஊர்வசி "அதுக்கு என்னங்க போய்ட்டா போச்சு" என்றதும் மூவரும் கோவிலுக்கு சென்று தங்கள் பிள்ளைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிராகாரத்தை சுற்றி வர அங்கே இருந்த சித்தர் ஒருவர்,

"தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத வரம் கிடைத்தது உனக்கு. கொடுத்ததை நீ மறக்கலாம் ஆனால் கொடுத்தவன் மறப்பானா மனிதன் பல கணக்கு போடலாம் ஆனால் வெல்வது இறைவனின் கணக்கே. சிவனின் பிரசாதம் கிடைச்சிருக்கு உனக்கு. ஆனால் கிடைச்ச பொக்கிஷத்தை இழக்க போற. சொந்தம் கொண்டாட வர போறாங்க. மாற்ற முடியாத விதியை மாற்ற இழக்க போவது பல மனசை கல்லாக்கிகோ" என்று பொன்னியை பார்த்து சொல்ல,

அதை கேட்டு புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ரகுபதி "என்ன சாமி சொல்லுங்க" எண்றதுக்கு

"குலம் காத்து குவலயம் காத்த வேந்தனது மகவு மேதகத்தை காக்க தன்னவளை இழந்து புது உறவையும் இழந்தவனது விதி மாற போகிறது. தன்னவனுக்காக உயிரை இழப்பதே அவளது விதி" சொன்ன அடுத்த நிமிடம் தியானத்துக்கு சென்றார்.

பொன்னி "எங்க இவர் சொல்லறது எதுமே புரியலை ஆனா அவர் சொல்றதுக்கு நம்ம ஆச்சுக்கும் சம்மந்தம் இருக்குமோனு பயமா இருக்குங்க" என

ரகுபதி மனதும் அவர் சொன்னதை கேட்டு பதறினாலும், அதை சமாளித்து கொண்டு "அவங்க வேற எதோ சொல்லறாங்க மா நமக்கு இல்ல" என

ஊர்வசி "கோவிலுக்கு வந்து நல்லதை மட்டும் நினைங்க மதினி நல்லதே நடக்கும் அண்ணா நீங்களும் நல்லதே நினைங்க. நம்ம கிளம்பலாம். ஜோசியர் சொன்ன மாதிரியே இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வெச்சுக்கலாம்" என்றதும் அவர்களுக்கும் அது சரியாக பட சரி என்று கிளம்ப,

இவர்கள் பேசியதை கேட்ட சித்தர் தியானத்திலும் மெலிதாக சிரித்து வைத்தார்.

சென்னை

அதிக ஆட்கள் இல்லாமல் கார்னெர் டேபிளில் இருந்தான் பைரவ். தனக்கும் தேஜுக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு போனில் முழுக,

அந்த மர்மநபர் பின் பக்கமாக கத்தியுடன் அவனை நெருங்க, அதை அறியாமல் வலைத்தளத்தில் உலக செய்தியை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.

அந்த நபர் அவனை குத்த கத்தியை ஓங்க, சரியாக அதே நேரத்தில் "பைரவ்" என்ற ஒருவரின் குரலில் பைரவ் நிமிர்ந்து பார்க்க, அவனை குத்த வந்தவனோ பக்கத்தில் இருந்த தடுப்பில் மறைந்து கொண்டு "ச்சை" என்றான்.

பைரவ் "ஹாய் நீங்க" என்று இழுக்க "யூ.எஸ்ல கிளொபல் இன்வெஸ்டர் மீட்டிங் ல மீட் பன்னோமே கேஷவ் குமார்" என்று தன்னை பற்றி சொல்ல

அவர் சொல்லவும் நியாபகம் வர "எஸ்..... மிஸ்டர். குமார் எப்படி இருக்கீங்க என்ன இந்த பக்கம்" என

"அதை நான் கேட்கணும் சார். இது என்னோட ஹோட்டல். நீங்க தான் ஸ்டேட்ஸ் ல இருந்து இங்க வந்திருக்கீங்க எனி வெகேஷன்" என

"இல்ல மிஸ்டர் குமார் நான் அங்க இருக்கிற பிசினஸ் ஆ பார்த்துக்க ஆள் போட்டு இப்ப இங்க தான் இருக்கேன் அப்படியே அப்பா பிசினஸை பார்த்துகிறேன்" என

"எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசு தான் இருக்கும் நீங்க மிஸ்டர் குமார் மிஸ்டர் குமார்னு கூப்பிட்டு வயசான பீலுக்கு கொண்டு போகாதீங்க கேஷவ்னே சொல்லுங்க. சடனா இந்தியா வர காரணம் என்ன" என்று கேட்கும் போதே அங்கு வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தால் தேஜஸ்வினி.

அவளை பார்த்ததும் "ஹே என்ன ஆச்சு டி எதுக்கு இவளோ வேகமா வர ஏதாச்சு பிரச்சனையா யாரவது எதாவது சொன்னார்களா" என்று அவனையும் அவளின் பதட்டத்தை கடன் வாங்கி கொண்டு கேட்க,

அவளுக்கோ பயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் தொண்டை அடைக்க அவனே "ஒகே ஓகே கூல் ஒன்றும் இல்ல நான் இங்க தான் இருக்கேன்" என்று அவளை உட்கார வைத்து குடிக்க தண்ணி குடுத்தான்.

கேஷவ் "என்ன ஆச்சு மேடம்" என பைரவ் தான் "நத்திங் சீரியஸ் அவ இப்படி தான் எதாவது பல்லி, இல்ல கரப்பான்பூச்சியை பார்த்து கூட பயந்து இருப்பா நான் மனோஜ் பண்ணிகிறேன்" என்றதும்

"ஓகே பைரவ் நான் கிளம்புறேன் இது என்னோட கார்டு எதாவது ஹெல்ப் வேண்டும்னா கூப்பிடுங்க" என்று அவன் கிளம்பியதும் "என்ன ஆச்சு தேஜ்" என்றவனை பார்த்து

"அங்க வாஷ் ரூம் ல நான்.... நான் மூஞ்ச கழுவிட்டு கண்ணாடியை பார்க்கும் போது அதில் நான் தெரியல" என்னும் போதே

"எதாவது பேய் பிசாசு இல்ல சம்திங் நியூ" என்று கிண்டல் செய்தவனை அதிசயமாக முறைத்து கொண்டே "இல்ல நான் ஒருத்தரை மீட்டிங் ஹால் கிட்ட பார்த்தேன்னு சொன்னேனே அவரை பார்த்தேன் ஆனா திரும்பி பார்த்தா அவர் இல்ல" என்று மேலே சொல்லும் முன்பே

ஆர்டர் செய்த உணவுகள் வர பைரவ் "அப்புறமா சொல்லு முதல சாப்பிடு" என்றான் அவளின் பசியை உணர்ந்து.

அவனை குத்த வந்தவனோ வேறு ஒரு பிளான் செய்து அதை செயல் படுத்த காத்திருந்தான்.

சாப்பிட்டதும் இருவரும் கார் பார்க்கிங்யை நோக்கி நடந்தனர். மதிய நேரம் என்பதால் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி இருந்தது. இன்னும் பதட்டத்தில் இருக்கும் தேஜுவை பார்த்து "தேஜ்" என அது வரை கனவில் இருந்தது போல விழித்து அவனை பேந்த பேந்த முழித்தாள்.

அவளின் பார்வையில் தன்னை தொலைத்தவன் அவளை நெருங்க, அதை எதுவும் கவனிக்காமல் பைரவ் பின்னே பார்த்து "அய்யோ சார்" என்று அவனை இழுக்க, அவனை இழுத்த வேகத்தில் மயங்கி சரிந்தாள்.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் பார்க்க அங்கோ அவனை கொலைவெறியோடு ஒருவன் கத்தியால் குத்த வருவதை பார்த்து,

"யாருடா நீ" என்று அவனை அடிக்க கையில் வைத்து இருந்த கத்தியோ பல கிலோமீட்டர் தூரம் சென்று விழுந்தது. அதில் கோபம் கொண்டே பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவனை அடிக்க வர, அவனோ அதை எளிதில் தடுத்து

"டேய் நான் சண்டை போடுற மூடில் இல்ல அங்க வேற அவ மயக்கத்தில் இருக்கா" என்று அவன் வைத்து இருந்த கம்பியை பிடிங்கி அவனை சரமாரியாக தாக்கினான்.

'தனியா வந்து தப்பு பண்ணிட்டோம்' என்று நினைத்து வேகமாக அவனை தள்ளி விட்டு அந்த இடைவேளையை பயன் படுத்தி வேகமாக ஓடி விட்டான். அவன் ஓடுவதை பார்த்து 'அப்புறமா உன்னை பார்த்துகிறேன்' என்று விட்டு மயங்கி கிடக்கும் தேஜு விடம் சென்றான். அவளோ பேச்சு மூச்சின்றி வாடிய கோடி போல் தரையில் கிடந்தாள்.

"ஹே தேஜ்" என்று அவளின் கன்னத்தை தட்ட ஒரு அசைவும் இல்லை. கையை மூக்கின் அடியில் வைத்து பார்க் மெலிதாக வந்தது அவளின் மூச்சு காற்று. ஏற்கனவே பயத்தில் பதட்டத்தில் இருந்தவள் இன்னும் பயந்ததால் அவளின் இதய துடிப்பு நின்று நின்று துடிப்பதை உணர்ந்த பைரவ்,

'தப்பு தான் உன்னை சேவ் பண்ண தான் இப்ப இதை பண்ண போறேன். ஐ அம் சாரி' என்று மனதிலே மயங்கி இருந்தவளிடன் பேசி விட்டு மென்மையாக அவளின் இதழை தன் இதழால் சிறை பிடித்தான்.

அவளை காப்பாற்ற வேண்டும், மூச்சு கொடு வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த இதழ் அணைப்போ அவளின் மென்மையில் கரைந்து முடிவில்லா தொடக்கமாக செல்ல,

அவனின் மூச்சு காற்று உள்ளே சென்ற சில நொடிகளிலே நினைவு வந்த தேஜு தான் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்தாள்.


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 10


அவளை காப்பாற்றவே தொடங்கிய இதழ் முத்தமோ முடிவே இல்லாமல் செல்ல, தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் அவளின் இதழை சுவைத்து கொண்டு இருந்தான் பைரவ்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த தேஜு அவள் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்து என்ன செய்வது என்றே தெரியாமல் அவனது முத்தத்தில் கிறங்கி கண்களை அழுத்த முடி கொண்டாள். மூச்சு விட சிரமப்பட்டாலும் இன்றே உலகம் அழிந்து விடுவது போல அவளுள் இன்னும் இன்னும் புதைந்து போனான்.

எதற்கு மேல் முடியாததால் தன் முழுபலம் கொண்டு அவனை தள்ள, அதன் பிறகே தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்றே தெரிந்து அதிர்ந்தான். தன்னையே திட்டி கொண்டு அவளை பார்க்க, அவளோ இப்பொழுது தான் முதல் முறை சுவாசிப்பது போல் மூச்சு விட்டு கொண்டு இருக்க சிவந்த இதழ்களோ இவனின் கைவண்ணத்தால் இன்னும் சிவந்து அவனை மேலும் சோதிக்க,

'என்ன காரியம் பண்ணிருக்க டா அவ கிட்ட என்ன சொல்லுவ' என்று யோசித்து கொண்டே "தேஜ்" என்று அழைக்க அவளோ ஓ என்று அழுக தொடங்கினாள்.



"ஒருவனுக்கும் பொறுப்பே இல்லை வாய் தான் சொல்கிறதே தவிர கையோ ஒன்றும் செய்வது இல்லை. அவனை கொல்ல இரு வாய்ப்பு வந்தும் நீங்கள் அதை தவற விட்டு விட்டீர். உங்களை நம்பி தானே இந்த வேலையை கொடுத்தேன். இனி நானே தான் இறங்க வேண்டும் யாரையும் நம்ப முடியவில்லை. அவனை காப்பாற்றிய பெண்ணை தான் முதலில் கொல்ல வேண்டும். அவள் எங்கே தங்கி உள்ளாள் என்றாவது விசாரித்து சொல்லுங்கள்" என்று கோபமாக கத்தி விட்டு வெளியே சென்றான் சண்டி.

"ஏன்டா அண்ணா திட்டுறா மாதிரியே பண்றீங்க உன்னோட முகத்தை அவன் பார்த்துட்டானா" என்று கேட்டான் சண்டியின் தம்பி.

"இல்ல தல பார்க்கல தான் நினைக்கிறேன்" என்னும் போதே,


காரில் "மதி லோக்கல் ரவுடி போட்டோ எல்லாம் எடுத்து ரெடி ஆ வை நான் வந்து பார்க்கிறேன்" என்று போனில் சொல்லி விட்டு பக்கத்தில் இன்னும் அதே பதட்டத்தில் கண்ணில் இருக்கும் கண்ணீர் எப்போ விழுவேன் என்று எதிர் பார்த்து இருக்கும் தேஜுவை கவலையுடன் பார்த்தான்.

பார்க்கிங் ஏரியாவில் அழுது கொண்டு இருந்தவளை மிரட்டி காரில் உட்கார வைக்க முடியாமல் திணறினான்.

"தேஜ் உன்னை காப்பாற்ற தான் அப்படி பண்ணேன் ஆனா என்னையும் மீறி" என்று மேலே சொல்ல முடியாமல் நிறுத்த

அவளோ கண்ணை துடைத்து கொண்டே "நீங்க வெளிநாட்டில் படிச்சிட்டு அங்கே இருந்திங்க உங்களுக்கு இது வேணா ரொம்ப சாதாரணமா இருக்கலாம் ஏன் நீங்க கூட அங்க இருந்ததுனால அங்க யாருக்காவது கிஸ் பண்ணி.... ப்ச்.....எனக்கு.... நான் இந்த ஊருலே பிறந்தவ இங்கவே தான் வளர்ந்தேன் என்னோட காதல் கூட என்னோட கணவனுக்கு தான்னு நான் இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணல இப்ப நீங்க" என்று மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்க

அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்களை பார்த்து கொண்டே "நீ சொல்றது எல்லாம் ஒகே தான். நான் அங்க தான் பத்து வருசமா இருக்கேன் அந்த நாட்டோட கலாச்சாரம் என்னோட எண்ணத்தில் இருக்குமே தவிர செயலில் எப்போதுமே இருக்காது. என்ன சொன்ன நான்.... யாரையாவது கிஸ்" என்று என்று கோபமாக கத்தி வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு,

அவளின் இதழை சுண்டி விட்டு "நான் கிஸ் பண்ணற முதல் பொண்ணு நீ தாண்டி இன்னும் ஏன் நான் இது மாதிரி கோபப்படாமல் பொறுமையா பேச நினைக்கிற பொண்ணு கூட நீ தான் இனிமே கிஸ் பண்ண தோணுச்சுனா கிஸ் பண்ற பொண்ணும் நீ தான்" என்று கத்தியவனை புரியாமல் பார்த்தால் தேஜு.

'அய்யோ கோபத்தில் கொஞ்சம் அதிகமாவே பேசிட்டோமே இவ முகத்தை பார்த்தாலே தெரியுது நான் பேசினது இன்னும் புரியல பைரவ் பேச்ச மாத்து பேச்ச மாத்து' என்று அவனுக்கே சொல்லி கொண்டு அவளிடம் "விடு கோபத்தில் கத்திட்டேன் ஆபீஸ் போறியா இல்ல வீட்டுக்கு போறியா" என

குழப்பமாக அவனை பார்த்து கொண்டே "நான் ஹாஸ்டல்ல இருக்கேன்" என்று மேலே பேசுவதற்குள் அவனின் பேசி அழைக்க,

தந்தையின் நம்பரை பார்த்து "சொல்லுங்க டேட்" என்றதும், 'அடடா என் மகன் பேச்சிலே தெரியுது அவன் நல்ல மூடில் இருக்கான் இப்பவே பேசி சம்மதம் வாங்கணும்' என்று எண்ணி விட்டு,

"தம்பி அம்மா ஊருக்கு போய் முன்னோர்கள் பூஜை பண்ணனும்னு நினைக்கிறாங்க நீ வந்தா நல்லா இருக்கும்" என்று இழுக்க,

"வரேன் டேட் எப்போன்னு மட்டும் சொல்லுங்க" என

"என்னடா அதிசயமா இவ்வளவு இனிமையா பேசுற" என்றுதும் "அதுவா டேட் இப்ப தான் ஒரு சூப்பரான ஸ்வீட் சாப்பிட்டேன் அதோட எபெக்ட்" என்று தேஜுவின் இதழை பார்த்து கொண்டே சொல்ல,

"எதோ ஒன்று எனக்கு நீ ஒகே சொன்னதே சந்தோசம். சீக்கிரமா வீட்டுக்கு வாடா" என்று அவர் போனை வைக்க,

தேஜு "என் கூட தானே இருந்திங்க எப்போ என்னை விட்டு ஸ்வீட் சாப்டிங்க" என்று பாவமாக கேட்க,

அவளின் கேள்வியில் சிரித்தவன் "ஏன் நீ கூட தான் சாப்பிட்ட நீ தான் பயத்தில் இருந்தியே சரியா கவனிச்சு இருக்க மாட்ட" என்றவனை புரியாமல் பார்த்து கொண்டே "ஓ... அப்படியா நெஸ்ட் டைம் சரியா கவனிக்கிறேன்" என்று ஸ்வீட் மேல் இருந்த ஆசையில் சொல்ல,

"அதுக்கு என்ன நெஸ்ட் டைம் கொடுக்கும் போது பீல் பண்ணிக்கோ" என்று உள் அர்த்தத்துடன் சொல்ல

அதை அறியாமல் சரி என்று தலையை ஆட்டி விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள். அவளை பார்த்து சிரித்து கொண்டே அவனும் வண்டியை ஓட்டினான்.

சிறிது நேரத்தில் தேஜுவின் போன் அலற 'இது என்ன புது நம்பரா இருக்கு' என்று எடுக்காமல் அதையே பார்க்க ஒரு முறை முழு ரிங் சென்று கட் ஆகி மறுபடியும் அலற, இதை பார்த்த பைரவ்

"போன் தானே பேசறதுக்கு என்ன" என்று கேள்வியாக கேட்க, "இல்ல எதோ புது நம்பர் அதான் யாருனு யோசிச்சிட்டு இருக்கேன்" என்று தன் படபடக்கும் மனதை மறைத்து கூற

அவளை பார்த்து மனதில் 'அட லூசே போன் பேச எல்லாம் பயப்பட வேண்டியது' என்று அவள் கையில் இருந்த போனை பறித்து "ஹலோ யார் இது" என்று அழுத்தமான குரலில் பைரவ் கேட்க,

"ஹலோ இது அஸ்வினி போன் தானே" என்று எதிர்முனையில் கேட்க "அட ஆமா நீங்க யாரு" என்றவனுக்கு "நான் ஆர்யா" என்றதை கேட்டு

"தேஜ் உனக்கு ஆர்யா னு யாரையாவது தெரியுமா" என்றதும் இல்லை என்று தலையை ஆட்ட,

"நீங்க வேற யாரோ நினைச்சு கால் பண்ணிட்டீங்க அவங்களுக்கு உங்களை தெரியாது" என்று எதிரே பேசும் முன்னே வைத்து விட்டான்.

"தேஜ் எனக்கு உங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லாரையும் பார்க்கணும்" என்று சம்மந்தமே இல்லாமல் சொல்ல "எதுக்கு" என்று கேட்டு விழித்தவளை பார்த்து சிரித்து கொண்டே "உன்னை மாதிரி ஒரு... பயந்தாங்கொலியை எப்படி சமாளிச்சாங்க அதை கேட்க தான்" என்றவனை முறைக்க முயன்றாள் ஆனால் முடியாமல் திரும்பி கொள்ள,

திரும்பவும் தேஜுவின் போன் அலற பைரவ் "இந்த முறை யாரு" எண்றதுக்கு புன்னகையுடன் "அண்ணா தான்" என்று காதில் வைத்து "அண்ணா எப்படி இருக்க இன்றைக்கு ஏன் காலையில் கால் பண்ணவே இல்ல. என்னை மறந்துட்டுல" என்று சினுங்கி கொண்டே கேட்க, பைரவின் பார்வை ரோட்டில் இருந்ததை விட இவள் மேல் தான் இருந்தது.

தேவேஷ் "கொஞ்சம் வேலை டா குட்டி சரி இதுக்கு முன்ன ஆர்யா கால் பண்ணும் போது யாருமா போன் எடுத்து பேசினது" என்றதும் அவளுக்கு திக் என்று இருந்தது.

'அய்யோ அவங்க அண்ணாக்கு தெரிஞ்சவங்க போல' என்று எச்சிலை விழுங்கி கொண்டு என்றும் இல்லாத பொய்யை முதல் முறையாக அவனிடம் "அண்ணா அந்த ஆர்யா உனக்கு தெரிஞ்சவங்களா நான் யாரோ புது நம்பர் னு பார்த்த்துட்டு இருந்தேன் ஆ எங்க ஆபீஸ் பியூன் அங்கிள் அதை பார்த்துட்டு எடுத்து பேசினாங்க" என்று கூற

அதை கேட்டு பைரவ் அவளை கடுமையாக முறைக்க அவளோ கண்ணிலே ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டு அவளை சமாளிச்சு தேவேஷிடன் பேச தொடங்கினாள்.

"சரி டா குட்டி அவன் என்னோட பார்ட்னர் தான் இப்ப சென்னைல இருக்கான் உன்னை பார்க்கணும்னு சொன்னான் பார்த்துக்கோ டா" என்று விட்டு சிறிது நேரம் விசாரிப்புக்கு பிறகு போனை வைக்க,

பைரவ் "நான் உனக்கு பியூனா" என "சாரி சார் வேற என்ன சொல்றது என்னோட எம்.டி லூசு தான் பேசுச்சுனுனா சொல்ல முடியும்" என்று ஒரு பிலோவில் சொல்லி விட்டு கீழ் உதட்டை கடித்து கொண்டே அவனை பார்க்க

"சாரி அது தெரியாம சொல்லிட்டேன்" என்றவளை பார்த்து முறைத்து வைத்தான். அதே நம்பரில் இருந்து கால் வர அவனோ திரும்பவும் பிடுங்கி போனை ஸ்பிக்கரில் போட்டு பேசு என்றான்.

அவனை மனதில் திட்டி கொண்டே "ஹலோ" என

"ஹாய் சுவீட்டி எப்படி இருக்க" என்றதும் பைரவ் அவளை முறைக்க அதில் பயந்து "யாரு நீங்க" என்றாள்.

"ஓ... நான் ஆர்யா உங்க அண்ணா வோட பிரென்ட். இன்றைக்கு சென்னை ல தான் இருக்கேன் அப்படியே உன்னை மீட் பண்ணலாம் தான் ஈவினிங் நீங்க பிரீயா" என அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்ட

பைரவ் போனை மறைத்து கொண்டு "லூசே போன்ல பேசுற அவனுக்கு நீ இங்க தலை ஆட்டினா எப்படி தெரியும் ஒழுங்கா உனக்கு வேலை இருக்குனு சொல்லு" என்றது

"சாரிங்க எனக்கு வேலை இருக்கு" என "அப்ப நைட் டின்னர் டேட் போகலாமா" என்றதும் பைரவ் பல்லை கடித்து கொண்டு "தேஜஸ்வினி" என

"எம்.டி கூப்பிடுறாங்க அப்புறம் பேசுறேன்" என்று வைத்ததும் "அப்புறமா பேசுவியா" என்று கடித்து துப்பும் ரீதியில் கேட்க,

"தெ...தெரியாமல் சொல்லிட்டேன்" என்று கூறும் நேரம் சரியாக ஆபீஸ் வர இறங்கி வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.

இரவு எட்டு மணி வர்மா ரெஸிடென்ஸ்,

மதி "எப்படி டா அவனை கண்டுபிடிக்கிறது" என "பிடிக்கலாம் டா சின்ன கிளு கண்டிப்பா அவனுக்கே தெரியாமல் விட்டு இருப்பான் அதை முதல கண்டு பிடிக்கணும்" எனும் போது வாட்ச்மன் "சார் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க" என்று ஒரு லெட்டரை கொடுக்க,

அதை படித்தவன் "ச்சை.... மதி சீக்கிரம் வாடா பெரியா ஆபத்து" என்று அவனை இழுத்தது சென்றான்.

விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 11


பனி பொழியும் இரவு சென்னையின் பிரபலமான ஹோட்டல், ரம்மியமான சூழல் மனதை பறிக்கும் இசை என அனைவரது மனதும் சாந்தமாக அந்த சூழலை ரசிக்க, இவளோ படபடக்கும் கண்களுடன் யார் என்றே தெரியாத நபருடன் அண்ணன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அமர்ந்து இருந்தாள்.

அவளின் அமைதியை பார்த்த ஆர்யா "அஷ்வினி நம்ம வந்து கால் மணி நேரம் ஆகுது இன்னுமே அதே பயத்துடன் இருக்கீங்க. எதாவது சாப்பிட ஆர்டர் பண்ணுங்க" என

அவளுக்கோ மதியம் பைரவிடம் இருந்த நேரம் தான் நினைவுக்கு வந்தது. அவனோ பேசி கொண்டே இருக்க அனைத்துக்கும் இவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

"ஓ..... மறந்துட்டேன் ஒரு கால் பேசிட்டு வரேன்" என்று அந்த இடத்தை விட்டு தள்ளி சென்று பேச போனை எடுத்தான் ஆர்யா.


வர்மா ரெசிடென்சி,

மதி "டேய் உன்னை என்ன பண்றது வந்த கொஞ்ச நாளில் எப்படி டா உன்னை கொல்ல ஆள் சம்மதித்து இருக்க. உன்னை என்ன பண்ணா தகும்" என்று கத்த,

"நான் ஒன்றுமே பண்ணல ஆனா நான் வந்ததில் இருந்து தப்பா தான் நடக்குது. உனக்கே தெரியும் நான் இங்க வந்தே பத்து வருஷம் ஆக போது. அப்படி இருக்க எனக்கு யாருடா இங்க எதிரி இருப்பாங்க. வந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை கொல்ல ட்ரை பண்ணிட்டாங்க" என

"என்ன இரண்டு முறையா....." என்றவனிடம், "ஆமா டா நான் ஆபீஸ் வந்த முதல் நாளே என்னை கொலை பண்ண பார்த்தாங்க ஆனா அவ வந்து காப்பாத்திட்டா" என்று அன்று நடந்ததை சொல்ல "உனக்கு எப்படி தெரியும்" என்றதும்

"அவ என் அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது கேட்டேன் டா. உனக்கு தெரியாது ல அவளை பற்றி உண்மையா சொல்லணும் னா அவ ரொம்ப பயந்த பொண்ணு டா ஆனா எனக்காக அவளோட உயிரையே துச்சமா நினைச்சு இருக்க" என

"சரி டா இப்ப எப்படி அவனை எப்படி கண்டு பிடிக்கலாம்" என்ற மதியை பார்த்து

"பிடிக்கலாம் டா சின்ன கிளு கண்டிப்பா அவனுக்கே தெரியாமல் விட்டு இருப்பான் அதை முதல கண்டு பிடிக்கணும்" எனும் போது வாட்ச்மன் "சார் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க" என்று ஒரு லெட்டரை கொடுக்க,

அதை படித்தவன் "ச்சை.... மதி சீக்கிரம் வாடா பெரிய ஆபத்து" என்று அவன் இழுத்து சென்றான்.

வேகமாக காற்றை கிழித்து கொண்டு காரை ஓட்டும் பைரவை பயத்துடன் "என்ன ஆச்சு எதுக்கு இப்படி வேகமா இந்த நேரத்தில் எங்க போற" என்றவனை பார்த்து,

தனக்கு வந்த லெட்டரை காட்ட அதில் "உன் உயிரை காத்த உயிரின் உயிரை எடுக்கும் நேரம் இது" என்று இருக்க

"என்னடா இது இப்ப யாருக்கும் ஆபத்து" என்று படபடப்பாக கேட்ட மதியிடம்,

"கண்டிப்பா தேஜ்க்கு தான் ஆபத்து. அவளுக்கு எதுமே ஆக கூடாது டா எது தான் அவ நம்பர் அவளுக்கு கால் பண்ணுடா இல்ல அவ லொகேஷனை கண்டுப்பிடி" என்று சாலையில் கவனத்தை வைக்க,

சிறிது நேரத்தில் "மச்சி அவ *** ஹோட்டல் ல இருக்க டா பக்கத்தில் தான் இருக்கு சீக்கிரம் போ" என்றதும் அங்கே இருவரும் செல்ல,


ஆர்யா "என்ன அஷ்வினி எவ்வளவு அமைதியா இருக்கீங்க எதாவது பேசுங்க" என்று சாப்பிட்டு கொண்டே எதிரே இருக்கும் தேஜுவிடம் கேட்க,

"என்ன பேசறது" என்று அவனையே கேள்வி கேட்க, "லவ் பற்றி உங்க கருத்தை சொல்லுங்க இல்ல உங்களோட ட்ரீம் பாய்... இது மாதிரி சொல்லுங்க" என்றதும் யோசித்து,

"நான் இது வரைக்கும் இதை பற்றி எல்லாம் யோசிச்சிதே இல்ல எனக்கு இப்ப தோன்றதை சொல்றேன். எனக்கு பெருசா ஆசை எல்லாம் இல்லங்க அதுனால ட்ரீம் பாய் இல்ல சோ லவ் பற்றி சொல்றேன்.

நம்ம எங்கவென எப்படிவென பிறக்கலாம். இன்னும் சொல்ல போன நம்ம பழக்க வழக்கம் கூட மாறி இருக்கலாம் ஆனா நமக்கானவிடம் இவ்வளவு முரண்கள் இருந்தாலும் அவங்களை தான் நம்ம மனசு தேடும். அவங்க கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் இல்ல அவங்களோட மைனஸ் அதை பார்த்தும் கூட நம்ம காதல் மாற கூடாது. நல்ல குணத்தை மட்டும் பார்த்து வர காதல் பாதிலே முடிய கூட வாய்ப்பு இருக்கு ஆனா அவங்களோட பிளஸ் மைனஸ் எல்லாத்தையும் பார்த்த அப்புறமா வர காதல் காலத்துக்கும் மாறாது" என்று எதையோ நினைத்து கூற,

அதை கேட்ட ஆர்யா "உங்க அண்ணா உங்களை உலகம் தெரியாத பாப்பா மாதிரி சொன்னாங்க ஆனா நீங்க விவரமா தான் இருக்கீங்க" என்று சிரிக்க, அவன் சொன்னதை கேட்டு அவளும் சிரிக்க,

அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் எரியும் கன்னத்தில் கையை வைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே கோபத்தின் உருவமாக பைரவ் நின்று கொண்டு இருக்க அவன் பக்கத்தில் 'என்னடா இப்படி பண்ணிட்டா' என்று தன் நண்பனை பார்த்து கொண்டு இருந்தான் மதி.

ஆர்யா "ஹலோ மிஸ்டர் யார் நீங்க நீங்களா வந்திங்க வந்ததும் இல்ல இவங்களை அடிச்சி இருக்கீங்க" என்று கோபத்தில் அவனின் ஷர்ட் காலரை பிடித்து கேட்க,

அதுவரை அதிர்ச்சியில் கன்னத்தில் கையை தாங்கி இருந்தவள், ஆர்யா பைரவின் காலரை பிடிப்பதை பார்த்து வேகமாக அவனிடம் சென்று "ஆர்யா விடுங்க... விடுங்கனு சொல்றேன்ல" என்று சற்று குரலை உயர்த்தி கூறிய பின் தான் அவன் ஆச்சிரியத்தில் தன் கையை எடுத்தான்.

ஆர்யா பேசும் முன் பைரவ் "மதியம் என்னடி சொன்னேன் இங்க வராதே தானே சொன்னேன் அப்ப சரினு தலையை தலையை ஆட்டி விட்டு இப்ப வந்து இருக்க என்ன நினைச்சு இருக்க உன் மனசுல" என்று பொரிய,

"நான் ஒன்னும் வேண்டுமே வரல அண்ணா தான் போக சொன்னாங்க நான் ஒன்றும் தனியா வரலை என்னோட ரூம்மேட் கௌசி கூட தான் வந்தேன் அவ தான் எதோ முக்கியமான வேலையா பக்கத்தில் எங்கயோ போய் இருக்கா அதுக்குள்ள என்ன அடிச்சிட்டீங்க" என்று வேகமாக முணுமுணுக்க

சிவந்த கன்னத்தை பார்த்ததும் தன்னையே நொந்து கொண்டு "சாரி" என்றான் மெதுவாக,

'சாரி சொன்ன அடிச்சது சரி ஆகிடுமா" என்று அதே முணுமுணுப்பில் கேட்க,

ஆர்யா "யாரு நீங்க எல்லாம்" என்று எரிச்சலாக கேட்க,

தேஜு "இவர் தான் என்னோட எம்.டி பைரவ் வர்மா" என்று அவனுக்கு அறிமுகப்படுத்த, "அதுக்கு நீ அவரோட ஸ்டாப் அவ்வளவு தான் என்னமோ நீ அவரோட அடிமை மாதிரி நடந்துகிறார்" என்று கோபத்தில் வார்த்தையை கடித்து துப்ப,

அதே நேரம் அங்கே வந்தால் கௌசல்யா அனைவரையும் பார்த்து கொண்டு "சாரி தேஜு வர கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு நீ ஒருத்தரை தான் பார்க்க போறான்னு சொன்ன இங்க பார்த்த மூன்று பேர் இருக்காங்க" என

எல்லாரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரத்தில் ஆர்யா "வாங்க அஷ்வினி நான் உங்களை ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன்" என

பைரவ் "நான் இவளை ட்ராப் பண்றேன் நீங்க கிளம்புங்க வேண்டும்னா இவங்களை கூப்பிட்டு போங்க" என்று கௌசல்யாவை காட்ட,



கௌசல்யா காரில் அமைதியாக இருக்கா, ஆர்யா கோபத்தில் வேகமாக காரை ஒட்டி கொண்டு அவளோட ஹாஸ்டலில் விட்டு விட்டு "அவங்க வந்ததும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க"

"உங்க நம்பர் தான் என் கிட்ட இல்லவே இல்லையே. அப்புறம் இப்படி சொல்றதாம்" என்றவளை கோபத்துடன் பார்த்து தன் நம்பரை கூறி விட்டு வேகமாக செல்லும் போதே யாருக்கோ கால் செய்தான்.

மதி "இப்ப தான் டா அவங்க சாப்டாங்க திரும்பவும் நீ சாப்பிட சொன்ன எப்படி தான் சாப்பிடுவாங்க" என்று சாப்பாட்டு முன் அமர்ந்து முழித்து கொண்டு இருக்கும் தேஜுவை பார்த்து சொல்ல,

"எனக்கு தெரியும் மூடிட்டு சாப்பிட்டு எதாவது கேப் பிடிச்சு கிளம்பிட்டே இரு இல்ல உன் உசுரு உனக்கு சொந்தம் இல்ல" என்று அவன் காதில் பைரவ் சொல்ல சொல்ல 'அடப்பாவி நல்லதுக்கே காலம் இல்ல' என்று அவன் நினைத்து நொந்து கொண்டான்.

பைரவிற்கு போன் வர "இரண்டு பெரும் சாப்பிடுங்க டேய் மதி நான் வர வரைக்கும் இங்கவே இரு" என்று போனை ஆன் செய்து காதில் வைக்க,

"என்ன ஆனது கோபமே வராத அநபாயனுக்கு தற்பொழுது கோபம் மட்டும் தான் வருகிறது போல். உன்னை பதற வைத்த சில நிமிடத்தை நேரில் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அவளின் உயிரை இவ்வளவு சீக்கிரத்தில் எடுப்பேனா போன முறை பொன்னையும் மண்ணையும் வென்ற என்னால் பெண்ணை வெல்ல முடியவில்லை. இம்முறை பெண்ணை மட்டும் அல்ல நீர் பாதுகாத்த மேதகத்தையும் சேர்த்து வெல்வேன்" என்று பேச

"யாருடா நீ ஒண்ணுமே புரியாத மாதிரி பேசற" எண்றதுக்கு "முதலில் உன்னை உணரு அநபாயா அதற்கு தான் நான் காத்திருக்கிறேன் உன்னை விழுத்த. முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஆரிய சந்திர கிரகணத்துக்குள் உன்னை உணர முயற்சி செய். உன் சுற்றத்தையும் உணர வை அதற்கு பின் தான் உன்னை அழிக்க வேண்டும் எவ்வளவு காலம் பொறுமையுடன் காத்து இருக்கும் என்னால் உன் அழிவை காண ஆவல் பெருக்குதே" என்று சத்தமிட்டு சிரிக்க

"யாருடா நீ தைரியம் இருந்தா உன்னோட பெயரை சொல்லு" என்றதும் "நான் ஆ நான் தான் உன் காலன் சண்டிலன்" என்று போனை வைக்க

'அடச்சை...... யாருடா நீங்கயெல்லாம்' என்று அவன் பேசியதை யோசித்து கொண்டே வர அவன் கண் முன்னே சில காட்சிகள் வந்து அவனை மேலும் குழப்பியது.

விதிகள் தொடரும்
நிலா
 
Top Bottom