Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

Status
Not open for further replies.

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 10

பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாக கூறபோகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து

“ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடம் இருந்து மறைக்க காரணம் நீ அதை தவறாக எடுத்து கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து

“நான் ஏன் தவறாக நினைக்க வேண்டும்? புரியவில்லையே!” என்றாள்.

“நான் சென்றதற்கு காரணம் உங்கள் திருமணம்” என்று கூறியவர் எதுவும் பேசாமல் அமைதியாக ஆதிரையை பார்த்தார்.

ஆதிரை “இந்த திருமணத்தில் உங்களுக்கு விருப்பமில்லையா? அல்லது என்னை திருமணம் செய்ததில் விருப்பமில்லையா?” என்றாள்.

“சரியாக தவறாக புரிந்து கொண்டுவிட்டாயே” என்று அவர் அவளை கிண்டல் செய்யவும் ஆதிரை அவரை புரியாமல் பார்த்தாள்.

ஆதிரையின் முகத்தில் இருந்த புரியாத பாவனையை பார்த்து மெல்லியதாக சிரித்தவர் அவரே தொடர்த்து பேச தொடங்கினார்.

“ஆதிரை. உங்கள் திருமணத்தையோ அல்லது உன்னையோ பிடிகாமல் இல்லை. மாறாக எனக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் அது நடந்த முறையில் தான் எனக்கு உடன்பாடு இல்லை. அது என் மகன் உனக்கு அளித்த அநீதி அல்லவா? எதனால் அல்லது எதை நினைத்து அன்று நீ அவனுடன் வாழ சம்மதம் கூறினாய் என்று எனக்கு தெரியாதுமா ஆனால் எப்படியோ நீ இந்த வீட்டில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.

“நான் வீட்டில் இருப்பது மகிழ்ச்சி என்றால் பின் வெளியில் தங்க காரணம் என்ன?” என்று ஆதிரை கேட்கவும்

“தேவா செய்தது மிக பெரிய தவறு. அதை ஒரு தந்தையாக கண்டிப்பது எனது கடமை தானே?” என்று அவர் வினவவும் ஆதிரை அதற்கு “ஆம்” என பதில் அளித்தாள். பிறகு அவரே தொடர்ந்து

“ஆனால் அவனை பற்றி முழுதாக தெரிந்த ஒரு மனிதனால் அதாவது என்னால் அவனை தண்டிக்க இயலவில்லை ஆதிரை. ஏனெனில் தேவா அத்தகைய தவறு செய்ய கூடியவன் இல்லை. நீ நினைக்கலாம் மகன் என்பதற்காக நான் அவனை உயர்வாக கூறுகிறேன் என்று. ஆனால் தேவாவை போல் மகன் பெற்றதர்க்கு நான் என்றுமே பெருமைதான் பட்டிருக்கிறேன் இந்த திருமணம் ஒன்றை தவிர. அதற்கும் அவனிடம் தகுந்த காரணம் இருக்கலாம். அதை அவன்தான் கூற வேண்டும். அப்படியும் உன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது என்னை பொருத்தவரை தவறு தான். அந்த அதிர்ச்சியில் இருந்தே என்னால் மீள முடியவில்லை அதற்குள் நீ அவனுக்கு அளித்த தண்டனை?” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போழுதே ஆதிரை

“நானா! நான் என்ன தண்டனை கொடுத்தேன்?” என்றாள்.

“அவனை வீட்டிற்கும் வெளியில் நிற்க்க வைத்தாயே.. மறந்து விட்டாயா?” என்றார்.

“அதுவா!” என்று அதிரை கேட்கவும் சதாசிவம்

“நான் உன்னை தவறாக கூறவில்லை ஆதிரை. உன் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால் என் நிலையில் இருந்து சிந்தித்து பார். ஒரு பக்கம் இதுவரை தவறே செய்யாத மகன் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு வந்து நிற்கிறான். மறுபக்கம் அவனால் பாதிக்க பட்ட பெண். அவளும் அவனுக்கான தன்டனையை கொடுக்குறாள். அதற்காக அவன் அனைத்தும் இருந்தும் எதுவும், யாரும் இல்லாதவனை போல நடுத் தெருவில் நிற்பதை பார்த்தும் ஒரு தந்தையாக என்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என என் மனம் வேதனை அடைந்தது. அதுதான் சில நாட்கள் வீட்டிற்கு வரவில்லை. ஒருவழியில் பார்த்தால் இதிலிருந்து தப்பிக்க முயன்றேன் என்று கூட சொல்லலாம்.” என்று முடித்தவரை பார்த்த ஆதிரைக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

அவரது பேச்சில் இருந்த வேதனையும் குற்றவுணர்ச்சியும் அவளை ஏனோ பாதித்தது. எனவே ஆதிரை

“இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை மாமா. எனது செயல் உங்களை இந்த அளவு பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியவளை இடைமறித்து

“உன் செயல் எந்த வகையிலும் என்னை பாதிக்கவில்லை ஆதிரை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் தான்மா” என்றார்.

இருவரும் பேசிக் கொண்டே உண்டு முடித்தனர். ஆதிரைக்கு சதாசிவமுடன் பேச பேச தன் தாயுடன் பேசுவதை போலவே இருந்தது. அவர் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை என்று ஆதிரைக்கு தோன்றியது. அது தேவா தன்னை திருமணம் செய்ததற்கு பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதே ஆகும்.

அதன் காரணமும் இங்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தன்னிடம் மறைக்கிறார்கள் என்றும் அவளுக்கு புரிந்தது. இதை பற்றி யாரிடம் கேட்பது என்று சிந்தித்து கொண்டே வீட்டின் வாசலில் சிறிது நடந்து கொண்டிருந்தவளிடம் தேவா வந்து நின்றான். நின்றவன்

“ஆதிரை. உன்னிடம் நான் சிறிது பேச வேண்டும்” என்றவுடன்.

ஆதிரை “ஏன் இன்னும் பொய்கள் ஏதாவது மிச்சம் இருக்கிறதா?” என்றாள்.

அதற்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தேவாவிற்கும் இதற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. ஏதாவது கூறினால் இவள் நம்புவாளா என்ற சந்தேகம் வேறு அவனுக்கு இருந்தது. அதற்கு ஏற்றவாறு அவளும் கேட்கவும் அவன் அப்படியே நின்றான். அவனை அங்கு பார்க்கவும் ஆதிரைக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

‘ஏன் இவனிடமே நேரடியாக கேட்க கூடாது’ என்று யோசித்தவளுக்கு இவன் உண்மையை கூறுவானா என்ற சந்தேகமும் வந்தது. அதனால் அவனிடம் நேரடியாக கேட்காமல்

“என்ன? உண்மையை கூறிவிட்டேனோ?” என்றாள்.

“உன்னிடம் பொய் கூற வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை ஆதிரை.” என்றவனிடம்

“பின்னே?” என்றாள்.

“அன்று நீ கேட்ட போது எனக்கு வேறு வழி தெரியவில்லை. உன்னை திருமணம் செய்ததற்காக சென்றார் என்றோ அல்லது நீ என்னை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதற்காக சென்றார் என்றோ என்னால் எப்படி கூற முடியும் அப்படியே கூறியிருந்தாளும் நிச்சயம் அதை நீ தவறாக தானே புரிந்திருப்பாய்?” என்றான்.

அவன் கூறுவது உண்மைதான் என்று ஆதிரையும் அறிந்ததால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

சில சமயங்களில் விதி என்பது அவர் அவர் வார்த்தைகள் தான் என்று கூறுவது உண்டு. அதை போல்தான் தேவாவின் விதி என்பது அவனது வார்த்தையில் இருந்தது போல. அவன் இன்று பேசும் வார்த்தைகள் பின்பு ஒரு காலத்தில் ஆதிரையை அவனிடம் இருந்து பிரிக்க போகிறது என்று அவன் அறியவில்லை.

“ஆதிரை எதையுமே உன்னிடமிருந்து மறைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நீ நம்பமாட்டாய் என்று எனக்கு தெரியும், இருந்தும் கூறுகிறேன். உன் மனதில் பல கேள்விகள் இருக்கலாம். அவை அனைத்துக்கும் என்னிடம் பதில் இருக்கிறது ஆனால் அதை இப்போது கூறும் நிலையில் நான் இல்லை ஆதிரை, அதுதான் உண்மை. வேண்டுமானால் உன்னை திருமணம் செய்தது என்னுடைய சுயநலம் என்று வைத்து கொள்ளேன். மற்றவைகளை நானே நேரம் வரும் போது கூறுகிறேன். தயவுசெய்து இப்போதே என்னிடம் எதுவும் கேட்காதே. உன்னிடம் உண்மையையும் கூறயியலாமல் பொய்யும் கூறயியலாமல் தவிக்கும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லைடா” என்றான்.

அவன் பேசி முடிக்கவும் ஆதிரை ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொண்டாள். திருமணத்திற்கு பின்பு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை தேவாதான் கூற வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இவன் தற்போது பேசுவதை பார்த்தால் இப்போதைக்கு இவன் கூறும் எண்ணத்தில் இல்லை என்று தோன்றியது.

“அடுத்து எந்த பூதம் வெளிவர காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் உண்மை என்றாக இருந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துதானே ஆக வேண்டும்?” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டிற்குள் சென்று விட்டாள்.

அவள் சென்றதையே பார்த்து கொண்டிருந்தவன் ஒரு சிறிய புன்னகையுடன் அவளை தொடர்ந்து வீட்டிற்குள் சென்றவனை வழி மறித்தது அவனது தமயன் ராம் தான்.

“என்னடா? அடி பலபலமாக விழும், நடக்க கூட முடியாமல் தவழுவாய் என்றல்லவா நினைத்தேன். நீ என்னடா என்றால் சிரித்து கொண்டே வருகிறாயே!” என்றான்.

ராம் வழி மறித்து கிண்டல் செய்யவும் தேவா அவனை பார்த்து முறைத்து விட்டு “என்ன கிண்டலா உனக்கு?” என்றான்.

ராமும் விடாமல் “கிண்டலா? நானே தம்பி ஆதிரையிடம் போகிறானே அடி விழுமே என்று பயந்து ஆம்புலன்ஸிற்கெல்லாம் சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்று அவன் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கூறவும் தேவா என்ன செய்வது என்று தெரியாமல் தன் கைகளால் தனது தலையிலேயே அடித்து கொண்டான். அப்போது என்று அங்கு வந்த கயல்

“என்ன தம்பி! என்ன ஆகிற்று என்று இப்படி தலையிலேயே அடித்து கொள்கிறிர்கள்?” என்றாள்.

“வாருங்கள் அண்ணி. உங்கள் கணவருக்கு ஏதோ ஒரு தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. நீணட நேரமாக பேசி கொண்டிருந்தார் கேட்டால் மழுப்புகிறார் என்னவென்று நீங்களே கேட்டு கொள்ளுங்கள்” என்று தேவா கூறவும் ராம் பதற்றமாக

“டேய்... நான் உனக்கு என்னடா பாவம் செய்தேன்? ஏன் என் வாழ்கையில் மண் அள்ளி போட பார்க்கிறாய்?” என்று அவன் கேட்கும் போதே கயல்

“யாரிடம் பேசினீர்கள் உண்மையை கூறுங்கள். இது எத்தனை நாட்களாக நடக்கிறது” என்று அவளது கண்களை பெரிதாக்கி கேட்கவும் ராம்

“அம்மா தாயே அவனை நான் கிண்டல் செய்ய போய் அவன் என்னை மாட்டி விடுகிறான்” என்று கூறவும் அங்கு நின்ற மூவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு கொண்டு வந்த சதாசிவமும் மீனாட்சியும் கூட இந்த கூட்டத்தில் ஐக்கியமாகி கொண்டனர்.

சிறிது நேரத்தில் வெளியில் அனைவரது பேச்சு குரலும் கேட்டு தன் அறையை விட்டு வெளியில் வந்த ஆதிரையின் கண்களில் இந்த காட்சிகள் தான் பட்டன.

ராம் தனது தம்பியின் தோளில் தன் கைகளை கோர்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான். கிட்டதட்ட தொங்கி கொண்டிருந்தான் என்று கூட கூறலாம். அவர்கள் இருவரையும் சுற்றி மற்ற மூவரும் நின்று சிரித்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தனர். மீனாச்சியை கூட ஆதிரை இந்த இரண்டு மாதங்களில் அப்படி சிரித்து பார்த்தது இல்லை. ஆனால் இன்று அவரும் அங்கு நின்று சிரித்து கொண்டிருந்தார். அவர்களின் பேச்சின் சத்தத்தை விடவும் அவர்களின் சிரிப்பின் சத்தமே அந்த வீடு முழுக்க நிறைந்திருந்தது.

முதல்முறையாக ஆதிரை அவர்களுடன் தன்னால் இந்த தருணத்தில் இணைய முடியவில்லையே என்று வருத்தபட்டாள். அந்த தருணத்தில் தன் கணவன் அருகில் நிற்பதற்காக ஏங்கினாள் என்றும் கூட கூறலாம். அந்த ஏக்கம் அவளை மிகவும் பாதித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தன் அறைகுள் சென்றவள் அவளது தொலைபேசியை எடுத்து விக்ரமிற்கு அழைக்க முயற்சித்தாள்.

ஆனால் அவளது திருமணத்திற்கு பிறகு ஆதிரை விக்ரமிற்கு எப்போது தொடர்ப்பு கொண்டாளும் ஒன்று எடுக்க மாட்டான் அல்லது எடுத்தாலும் ‘என்ன எப்போது நம் வீட்டிற்கு வருகிறாய்?’ என்றுதான் கேட்பான். அவனிடம் இருக்கும் மனநிலையில் பேசுவதும் கடினம் என்று நினைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது. யார் யாரோ வந்தும் சென்றும் கொண்டிருந்தனர். அப்படி வந்த ஒருவரிடம் வீட்டின் வாசலிலேயே சதாசிவம் நின்று பேசி கொண்டிருந்தார்.

முதல் நாள் ஆதிரையிடம் இனி வரும் நாட்களில் அவருடன் அமர்ந்து உணவு உண்ணுமாறு சதாசிவம் கேட்டு கொண்டிருந்தார். எனவே ஆதிரை தன் அறையிலிருந்து வெளி வந்தாள். தான் பேசி கொண்டிருந்த நபரை அனுப்பி விட்டு உள்ளே வந்தவர் ஆதிரை தன் அறையிலிருந்து வெளி வருவதை பார்க்கவும்

“வாமா.. காலை வணக்கம். காலை உணவு என்னுடன் தானே?” என்றார்.

ஆதிரை பதில் ஏதும் கூறாமல் புன்னகை செய்யவும் ஆதிரையின் பதிலை அவர் தெரிந்து கொண்டார். இருவரும் சென்று உணவு உண்ண அமரவும் ராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். இந்த இரண்டு மாதங்களில் ராமும் ஆதிரையும் பெரிதாக பேசியது கிடையாது. அதற்கான சந்தர்பங்களும் அமையவில்லை என்றும் கூறலாம். இன்றுதான் இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாம் வந்து அமர்ந்ததுமே ஆதிரையிடம்

“என்ன இன்று ஆதிரையின் தரிசனம் காலையிலேயே கிடைக்கின்றதே, அதிலும் உணவு அருந்தும் இடத்தில்!” என்றான்.

அதற்கு ஆதிரை பதில் கூறும் முன்பே சதாசிவம் “உன்னை கூட பல நாட்களில் சாப்பிடும் இடத்தில் தான் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே அங்கு வந்த தேவா

“பல நாட்களில் அண்ணி இருக்கும் இடத்தில் தான் பார்க்க முடியும் அப்பா” என்று கூறி கொண்டே வரவும் ஆதிரையும் சதாசிவமும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கி விட்டனர்.

ராம் “ நானாவது வீட்டிற்குள் மட்டும்தான்..” என்று கூறிவிட்டு சிரிக்க தொடங்கினான்.

ஆதிரை புரியாமல் தேவாவை பார்த்தால் அவனும் பதட்டத்டுடன் ஆதிரையை தான் பார்த்து கொண்டிருந்தான். ஆதிரை பார்க்கவும் மெல்லியதாக சிரித்து சமாளித்தான்.

‘கல்லை கூட முழுங்கி விட்டு அமைதியாக இருப்பவனையா பார்த்தோம்’ என்று எண்ணியவள் திரும்பி சதாசிவத்தை பார்த்தாள். அவரோ அங்கு எதுவுமே நடக்காததை போல அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தார்.

‘அவனாவது கல்லை தான் முழுங்குவான் போல ஆனால் இவரோ பாரையையே முழுங்கி விடுவார்’ என்று எண்ணியவள் ராமிடம்

“ஏன் உங்கள் தம்பி என்ன செய்தார்?” என்று கேட்டாள்.

ராமோ “என் தம்பியா? அவன் என்ன செய்தான்?” என்று கேட்டான்.

‘அட பாவிங்களா! குடும்பமே இப்படிதானா!’ என்று அவள் நினைக்கும் பொழுதே அங்கு வந்த மீனாட்சி அவசரமாக சதாசிவமிடம்

“தேனீர் போட்டு விட்டேன் யார் முதலில் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.​

தொடரும்...​
வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.

 
Last edited:

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 11
மீனாச்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போல பல கேள்விகளை சதாசிவமிடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமை பார்க்கவும் ராம்
“என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படி பார்கிறாயே?” என்று கேட்டான்.
“இல்லை. எங்கோ வெளியில் செல்கிறார்கள் போலவே! எங்கே என்று தெரியவில்லை அதுதான் பார்த்தேன்” என்றாள்.
“இன்று நம் வயலில் நாத்து நடுகிறார்கள். அதற்கான வேலைகளை பற்றி பேசிகிறார்கள் ஆதிரை” என்றான்.
ஆதிரை எதுவும் புரியாமல் முழித்துவிட்டு “அப்படியென்றால் என்ன?” என்று கேட்டாள்.
என்னதான் தாய் தந்தையுடன் பேசி கொண்டிருந்தாலும் ஆதிரை மீதும் தேவா தன் கவனத்தை வைத்திருந்தான். ராமும் ஆதிரையும் பேசுவதை கவனித்து வந்தவன் ஆதிரயின் கேள்விக்கு ராம் பதில் கூறும் முன்பே
“இந்த முறை நம் வயலில் நெல் பயிறிடுகிறோம் ஆதிரை. அதற்கான தொடக்கம்” என்றான்.
“ஓ” என்றாள்.
ராம் “கேள்வி எனக்கானது என்றல்லவா நினைத்தேன்!” என்று வேண்டும் என்றே தேவாவை கிண்டல் செய்தான்.
அதற்கு தேவா பதில் கூறுவதற்கு முன் சதாசிவம் ஆதிரையை பார்த்து “அம்மாடி, நீயும் வருகிறாயா? இங்கு வந்ததிலிருந்து எங்கும் வெளியிலும் செல்லவில்லை. நம் வயலிற்கும் வந்தது இல்லை அல்லவா?” என்றார்.
ஆதிரை மிகவும் தயக்கத்துடன் “நான் வருவது உங்களுக்கு தொந்தரவாக இருக்க போகிறது” என்று அவள் முடிக்கும் முன்பே தேவா
“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆதிரை. நீ தாரளமாக வரலாம்” என்றான்.
அவன் கூறிய வேகத்தில் ராம் கிண்டலாக சிரிக்க தொடங்கிவிட்டான். சதசிவமும் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தன் தொண்டையை செருமி கொண்டவர்
“சரி. அப்படியானால் நான் முதலில் செல்கிறேன். தேவா ஆதிரையை கூட்டி கொண்டு வரட்டும்.” என்றவர் சிறிது நேரத்தில் வயலிற்கும் சென்று விட்டார்.
முதல் நாள் நடந்த நிகழ்வுகளால் ஆதிரை அனைவரிடமும் பழையமாறி பேசவில்லை என்றாலும் யாரிடமும் பேசாமலும் இருக்கவில்லை. இப்போதைக்கு இதுவே பெரிது என அதை யாரும் கண்டும் காணாமல் விட்டனர்.
மதியம் உணவை முடித்து விட்டு தேவாவின் ஜீப்பில் வேலை செய்பவர்களுக்கும் மதிய உணவை எடுத்து கொண்டு இருவரும் கிளம்பினர்.
இந்த ஊருக்கும் வந்த புதிதில் ஆதிரை ஒரே ஒருமுறை தான் ஊரை சுற்றி பார்க்கிறேன் என்று சென்றாள். அன்றுதான் அவளது வாழ்க்கை தலைகீழாக மாறியதும். அதன்பிறகு அவள் தன் கணவன் வீட்டைவிட்டு எங்கும் சென்றதே இல்லை. இன்றுதான் முதல்முதலில் தேவாவுடன் வெளியில் வந்துள்ளாள்.
அந்த ஊரில் ஆதிரைக்கு மிகவும் பிடித்ததே எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை வண்ணமாக காட்சி அளித்தது தான். இன்றும் அந்த அழகை வழியெங்கும் பார்த்து ரசித்து கொண்டே வந்தவளிடம் தேவா
“அப்படி அந்த மரங்களில் என்ன தெரிகிறது உனக்கு?” என்று கேட்டான்.
இயற்கை அழகில் தன் மனதை தொலைத்திருந்தவள் தேவாவின் கேள்வியில் அதிலிருந்து கலைந்து அவன் புறம் திரும்பி
“என்ன?” என்று கேட்டாள்.
“எந்த உலகத்தில் இருக்கிறாய் ஆதிரை?” என்று மீண்டும் கேட்டவனிடம் ஆதிரை
“இந்த ஊர் மிகவும் அழகாக உள்ளது.” என்றாள்.
தேவா “சில நேரங்களில் உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆதிரை” என்றான்.
“அப்படியா? அப்படி பார்த்தால் என்னால் உங்களை இதுவரை புரிந்து கொள்ள முடிந்ததே இல்லையே! நான் என்ன செய்வதாம்?” என்றாள்.
“உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியவன் ஒரு சிறு புன்னகையுடன் ஜீப்பை செலுத்த தொடங்கினான்.
ஆதிரைக்குதான் அவன் கூறியதின் முழு அர்த்தம் புரியவில்லை.
‘உண்மையாக என்றால்? நாம் அப்படி நினைக்கவில்லை என்று கூறுகிறானா?’ என்று அவள் சிந்திக்கும் பொழுதே அந்த இடம் வந்தது.
அது அந்த ஊரின் ஆற்றங்கரை. முதன்முதலில் தன் தாயின் வீட்டிற்கு இரண்டு மாதங்கள் முன் வந்த போது அங்கிருந்தவர்களுடன் வந்த முதல் இடம். அதை தேவாவிடம் கூற ஆதிரை வாயெடுக்கும் போதே தேவா
“நீ இந்த ஊருக்கு வந்த பிறகு முதலில் சுற்றி பார்க்க வந்த இடமல்லவா இது?” என்றான்.
ஆதிரை தன் கண்களை பெரியதாக விரித்து தன் கணவனை பார்க்கவும் தேவாவிற்கு அவளை சீண்டி கோபம் படுத்த ஆசை வந்தது.
“உனக்கு ஆதிரை என பெயர் வைத்ததற்கு பதிலாக ஆந்தை என வைத்திற்க வேண்டும்” என அவன் கூறவும் ஆதிரை
“ஏன் ஏனாம்?” என்றாள் பயங்கர கோபத்துடன்.
“அதிகபடியான நேரங்களில் உன் கண்கள் விரிந்து விடுக்கின்றதே!” என்றான்.
ஆனால் ஆதிரைக்கோ இதை கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. அவள் விழுந்து விழுந்து சிரிக்கவும் தேவா தன்னையும் மீறி ஆதிரையிடம்
“நீ சிரிக்கும் போதெல்லாம் மிகவும் அழகாக இருக்கிறாய் ஆதிரை. ஆனால் இந்த இரண்டு மாதங்களில் நீ சிரித்தே நான் பார்க்கவில்லை.” என்றான்.
அவன் கூறி முடிக்கும் போதே தேவாவிற்கு அவன் செய்த தவறு புரிந்துவிட்டது. இப்போது இவள் அதை கேட்டாள் என்ன செய்வது என்று யோசித்தவன் ஆதிரையை யோசிக்கவிடாமல்
“ஆதிரை அன்று இந்த கரையை கடந்து சென்றீர்களா?” என்றான்.
“இல்லை இங்கு தான் இருந்தோம் பிறகு.... கோவில்” என அவள் இழுத்து கொண்டே தேவாவை பார்த்தாள்.
‘ஒரு பிரச்சனையில் இருந்து இவளை திசை திருப்ப முயன்றால் அதைவிட பெரிதாக ஒன்றை பிடிக்கிறாளே’ என்று நினைத்தவன் ஜீப்பை மறுகரைக்கு செல்லும் பாலத்தில் விடவும் ஆதிரையின் கவனம் பேசி கொண்டிருந்ததில் இருந்து அதில் சென்றது.
“நாம் இதை தாண்டி செல்கிறோமா?” என மிகவும் ஆர்வமாக கேட்டாள்.
“ஆம் ஆதிரை. வயலுக்கு என்று தானே கூட்டி வந்தேன்” என்றான்.
“ஆமாம். ஆனால் இங்கு என்று தெரியாது” என்றாள்.
“நம் ஊரில் உள்ள அனைவரது வயலும் இங்குதான் உள்ளது” என்றவன் தொடர்ந்து
“ஆனால் நாம் என்னதான் ஜீப்பில் வந்தாலும் அதை நம் வயல்வரை கொண்டு செல்ல இயலாது ஆதிரை. சில வயல்களை நடந்துதான் கடக்க வேண்டும்” என்றான்.
“வயல்களுக்கு நடுவில் நடந்து செல்ல வேண்டுமா? ஐஐஐ....” என்றவளை பார்த்து தேவாவிற்கு தன் தலையில் அடித்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.
அதற்குள் ஜீப்பை நிறுத்தும் இடம் வந்ததும் அங்கு ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் ஆதிரையிடம் “இந்த பக்கம்” என கூறி அவன் கைக் காட்டிய பக்கம் நடக்க தொடங்கவும் ஆதிரை
“சாப்பாட்டை மறந்து விட்டாயா? ஜீப்பிலையே வைத்து விட்டு செல்கிறாயே!” என்றாள்.
“அதை ஆட்கள் வந்து எடுத்து வருவார்கள் ஆதிரை. நீ வா” என்றவன் முன் நடந்து செல்ல ஆதிரை அவனை பின் தொடர்ந்தாள். திடீரென்று நின்று தன் கரத்தை ஆதிரையிடம் நீட்டி “என் கைகளை பிடித்து கொள் ஆதிரை” என்றான்.
“ஏன்” என அவனை பார்த்து முறைத்து கொண்டே கேட்டாள்.
“வயலின் வரப்புகளில் நடந்து பழக்கம் இருக்காதே உதவி செய்வோம் என்ற நல்ல எண்ணத்தில் தான் கொடுத்தேன்” என்றான்.
“எனக்கும் நடக்க தெரியும். உனக்கு தான் எல்லாம் தெரியும் என்பதை போல நடந்து கொள்ளாதே” என்றாள்.
“சரி உன் விருப்பம்” என்றவன் அதற்கு மேல் அவளிடம் கேட்காமல் அங்கிருந்த ஒரு சிறிய வரப்பில் ஏறி நடக்க தொடங்கினான். அவனை பின் தொடர முயன்ற ஆதிரையால் நான்கு அடிகளுக்கு மேல் நடக்க முடியவில்லை. அந்த வரப்பு மிகவும் சிறியதாக இருக்கவும் அவளது கால்கள் அதிகம் வரப்பில் வழுக்கி கொண்டே இருந்தது. சிறிது தூரம் சென்று திரும்பிய தேவாவிற்கு ஆதிரையின் நிலை சிரிப்பை கொடுத்தது. வந்த சிரிப்பை அடக்கி கொண்டு
“என்ன வராமல் அங்கேயே நின்று தவம் புரிகிறாயா?” என்றான்.
“ஆமாம் இங்கு நின்று தவம் புரிந்தால் நாம் கேட்க்கும் வரம் கிடைக்குமாம். அதுதான் உனக்கு கடவுள் வைக்க மறந்த மூளையை வரமாக குடுங்களேன் என்று தவம் புரிகிறேன்” என்றாள்.
‘அடிபாவீ... வாய் மட்டும் குறைகிறதா பாரேன்” என்று நினைத்தவன் “சரி. அப்படியென்றால் நீ உன் தவத்தை முடித்துவிட்டு பொறுமையாக வா. நான் முன் செல்கிறேன்” என அவன் சிரிக்காமல் சொல்லவும் ஆதிரைக்குதான் கோபம் வந்தது.
“என்ன கிண்டலா? அதுதான் நடக்க தெரியவில்லை என்று தெரிகிறது அல்லவா? பிறகு நீ பாட்டுக்கு போகிறாய்? உதவி செய்யவதற்கு என்னவாம்?” என்றாள்.
“யாரோ கைகள் வேண்டாம் எனக்கு நானே... என்னால் நடக்க தெரியும் என்று வீர வசனங்கள் பேசினார்கள். அவர்களை எங்காவது பார்த்தாயா ஆதிரை?” என்று அவன் நான்கு பக்கமும் தேடவும்
‘தேவைதான் ஆதிரை உனக்கு’ என ஆதிரை தன் மனதிற்குள் நினைதவள் எதுவும் கூறாமல் தன் கணவனை பார்த்து முறைத்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் அவள் அருகில் சென்று தன் கரத்தை நீட்டினான். வேறு வழியின்றி ஆதிரையும் தன் கரத்தை அவன் கரத்தில் வத்தாள்.
முதன்முதலில் இருவரும் சுயநினைவில் ஒருவரை ஒருவர் தீண்டிய அந்த நொடியை அங்கிருந்த மரங்களும் செடிகளும் கூட கொண்டாடின போல, அனைத்தும் தங்களை மெல்லியதாக அசைத்து அங்கு ஒரு தென்றலை பரவ செய்தன.
சூளலும் ஆதிரையின் முதல் தீண்டலும் தேவாவின் மனதிற்குள் இருந்த காதலை அவனது கண்களில் காட்டிட, அவனது கண்களில் இருந்த காதல் ஆதிரையின் மனதினில் ஏதோ ஒரு இனம் புரியா மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றம் ஆதிரையின் உள்ளே ஏதோ செய்ய அதிலிருந்து வெளிவர தேவாவின் கண்களில் இருந்து தன் கண்களை வேறுபுறம் திருப்பியவள்
“இப்போது தவம் இருப்பது உங்கள் முறையா?” என்றாள்.
அவளது குரலில் தனது நிலையை புரிந்து கொண்டவன் ஆதிரையின் பேச்சில் இருந்த மாற்றத்தையும் கவனிக்க தவறவில்லை.
“மற்றொரு கரத்தில் உனது காலணிகளை எடுத்து கொள் ஆதிரை” என்றான்.
“ ஏன்? நீ போட்டிருக்கிறாயே?” என்றாள்.
“நான் இங்கு நடந்து பழக்கம். உனக்கும் போக போக பழகிடும் ஆதிரை” என்று அவன் கூறவும் அவளும் மேலே பேசாமல் அவன் கூறியதை செய்தாள்.
ஆதிரையின் கரத்தை பிடித்து கொண்டு அவளை மிகவும் பத்திரமாக அழைத்து சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் இங்கு கால் வை இப்படி நட என கூறிக்கொண்டே அழைத்து சென்றான். பாதியில் எதிரில் வந்த ஒரு ஐம்பது வயதை ஒட்டிய பெண்மணி ஒருவர் தேவாவிடம்
“பார்த்து தம்பி. மனைவி எங்கும் கீழே விழுந்து விட மாட்டார்” என்று கிண்டல் செய்து சிரிக்கவும் தேவா
“ம்‌ம்‌ம்.. கீழே விழுந்தால் என் மனைவி அல்லவா அத்தை விழுவாள். நான் பிடித்து கொள்வேன்” என சிரித்து கொண்டே கூறியவன் ஆதிரையிடம்
“இதிலிருந்து நமது வயல் ஆரம்பம் ஆதிரை” என்றான்.
“ஓ” என்றாள்.
அவன் கூறிய இடத்தில் இருந்து ஒரு சிறிய தூரத்தில் ஒரு கட்டிடம் இருந்தது. அதை பார்க்க ஒரு சிறிய மாடி வீட்டை போல் இருந்தது. ஆதிரை அதை பார்ப்பதை பார்த்த தேவா
“அதுதான் நம் வயல் வீடு ஆதிரை” என்றான்.
“இதுவா? இதில்தான் மாமா “ என்று அவள் கூறும் போதே தேவா ஆம் என்றான்.
அவர்கள் நின்ற இடத்தில் இருந்து ஒரு ஒற்றையடி பாதை ஒன்று அந்த வீட்டிற்கு சென்றது. அதில் இறங்கி அந்த வீட்டை சென்று அடைந்தனர். ஆதிரைக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. வீட்டின் வாசலில் நின்று பார்த்தால் வீட்டை சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம்வரை வயல்வெளியாக காட்சியளித்தது. வீட்டை சுற்றி ஒருசில வாழைமரமும் தென்னை மரங்களும் இருந்தன. அங்கிருந்த ஒரு அமைதி ஆதிரையை மிகவும் கவர்ந்தது.
அந்த இயற்கை அழகில் மூழ்கியிருந்தவளின் காதருக்கே மிகவும் மெல்லிய குரலில் தேவா
“இங்கேயே தங்கி விடுவோமா?” என்று கேட்கவும் தான் கணவனுடன் அதிகபடியான நெருக்கத்தில் தான் நிற்பதும் தனது கை இன்னும் அவனது கைக்குள் இருப்பதும் அவளது கருத்தில் பட்டது.
தொடரும்...​
 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 12
தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில்
“என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான்.
“ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள்.
எப்படியும் விலகுவது என்பது முடியாது என்று தெரிந்து விட்டது. அப்படியே முயன்றாலும் அவனது பிடியின் இறுக்கம் தான் அதிகரித்து கொண்டிருந்தது. எனவே ஆதிரையும் தன்னை சுற்றி கவனம் செலுத்த தொடங்கினாள்.
வயல்களில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் மட்டும் வயல்களில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஆதிரை
“அவர்கள் கிளம்பி விட்டார்களா? வேலை முடிந்ததா?” என்றாள்.
“நமது நிலம் பத்து வேலிக்கும் மேல் இருக்கும் ஆதிரை. அதனால் இந்த வேலைகள் முடிய எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். அவர்கள் சாப்பிட போகிறார்கள்.” என்றான்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த சதாசிவம்
“சரிப்பா.. நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் நான் கிளம்புகிறேன்.” என்று தேவாவிடம் கூறியவர் ஆதிரையிடம்
“பத்திரமாக இரும்மா. நேரம் போகவில்லை என்றால் வயல் வீட்டின் உள்ளே தொலைகாட்சி இருக்கிறது அதை பார். அப்படியும் இங்கு பிடிக்கவில்லை என்றால் சொல் நான் அழைக்க ஆள் வர சொல்கிறேன். சரியா?” என அவளிடமும் பேசிவிட்டு சென்றார்.
சதாசிவத்தை பார்த்ததும் ஆதிரையை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு சிறிது தள்ளி நின்றவன் அவர் செல்லவும் ஆதிரையிடம்
“ஆதிரை. நீ வீட்டிற்குள் இரு. எனக்கு சில வேலைகள் இருக்கின்றன அதை எல்லாம் முடித்துவிட்டு வருகிறேன். அதன்பின் இங்கு சுற்றி காட்டுகிறேன். சரியா? அதுவரை தனியாக எங்கும் சென்று விட வேண்டாம்.” என்றான்.
ஆதிரை அதற்கு சரி என்று கூறவும் அவனும் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த சதாசிவத்துடன் சென்று இணைந்து கொண்டான். இருவரும் வரப்பில் சாதாரணமாக பேசிக்கொண்டு நடந்து செல்வதை பார்த்து கொண்டு நின்றவள் சில வினாடிகளில் வீட்டிற்குள் சென்றாள்.
அங்கு முத்தையாவை போலவே ஒரு வயதான முதியவர் ஒருவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஆதிரையை பார்த்ததும்
“வாருங்கள் பாப்பா. எப்படி இருக்கின்றீர்கள்? சிறு வயதில் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது?” என்றார்.
ஏற்கனவே தெரிந்ததை போல அவர் ஆதிரையிடம் பேசவும் அவள் குழம்பி போனாள். ‘இவர் தெரிந்ததை போல பேசிக்கிராரே!’ என்று எண்ணியவள் அவரிடமே கேட்டு விடலாம் என
“என்னை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.
அவரும் “என்ன பாப்பா இப்படி கேட்டுவிட்டாயே..” என்று அவர் கூறும் போதே அங்கு ஓடி வந்த மல்லி
“தாத்தா.... உங்களை ராணி அத்தை உடனே கூப்பிட்டார்கள்” என்று கூறினாள்.
“வருகிறேன் என்று சொல்லடி அம்பிகா” என்றவரை விடாமல்
“இல்லை.. இல்லை கையோடு கூட்டி வர சொன்னார்கள். அப்பறம் நான் மல்லிகா தாத்தா. அம்பிகா இல்லை. ஆளை மாற்றி கூறுவதே வேலையாக வைத்திருக்கிறீர்கள்” என்று கூறி கொண்டே அவரது கையை பிடித்து அழைத்து சென்றவள் ஆதிரையிடம்
“வரேன் அக்கா” என்று கூறிவிட்டு சென்றாள்.
மல்லியும் அந்த முதியவரும் பேசி கொண்டிருந்ததை கேட்ட ஆதிரை
‘வயதானதால் யாரையும் நினைவில் இல்லாமல் ஆள் மாற்றி கூறுகிறார் போல... ஆனால் நான் வருவதாக கூறினார்கள் என்று சொன்னாரே? ஒருவேளை கயல் அக்கா என்று நினைத்திருபாரோ? அதற்கும் வாய்பில்லையே.. கயல் அக்காவை எப்படி சிறு பிள்ளையாக பார்த்திருப்பார்’ என அவளுக்குள்ளையே விடையில்லா பல கேள்விகளை எழுப்பி கொண்டவள் கடைசியாக யாரையோ நினைத்துதான் கூறுகிறார் என அவளே முடிவுக்கு வந்துவிடாள்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த வீட்டை சுற்றி பார்க்க தொடங்கினாள். இரண்டு அறைகளும் சமையலுக்கு என ஒரு சிறிய அறையும் இருந்தது. அவள் சமையல் அறையை பார்த்து கொண்டிருக்கும் போதே தேவா அங்கு வந்து விட்டான். வந்தவன் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் ஆதிரையை சீண்டவில்லை என்றால் அது தேவா இல்லையே.
“என்ன ஆதிரை? உனக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத இடத்தில் நிற்கின்றாய்!” என்றான்.
வழக்கம் போல அவன் கூறியது முதலில் புரியவில்லை என்றாலும் ஓரிரு வினாடியில் புரிந்து கொண்டவள்
“என்ன கிண்டலா? நான் நன்றாக தான் சமைப்பேன். என் வீட்டில் கூட நான் சமைத்தது உண்டு” என்றாள்.
ஆனால் தேவா அவளை விடுவதாக இல்லை
“யாரிடம் பொய் கூறுகிறாய்? நான் உன்னை நம் வீட்டில் சமையல் அறையின் பக்கம் பார்த்ததே இல்லை. இப்போது இப்படி கூறுகிறாயே? எப்படியும் யாரும் சமைக்க கூற மாட்டார்கள் என்கின்ற தைரியம் தானே?” என்றான்.
“நான் எல்லாம் நன்றாகதான் சமைப்பேன். ஆனால் உனக்கு சமைத்து தர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றாள்.
இதற்கு மேல் அவளை சீண்டினால் அவள் எதில் போய் நிற்பாள் என்று தேவாவிற்கு தெரிந்ததால் அவளை சீண்டுவதை விடுத்து
“சரி சரி... நான் சும்மா விளையாடினேன்” என்றவன் அவளை அழைத்து சென்று அவர்களது வயல் எதிலிருந்து எதுவரை என்றெல்லாம் காட்டியவன் அங்கிருந்த ஒரு கோவிலிற்கு அழைத்து சென்றான்.
கண்கள் எட்டும் வரையிலும் நான்கு பக்கமும் வயல்கள் இருக்க நடுவில் அந்த கோவில் இருந்தது. கோவிலை ஒட்டிய ஒரு குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் ஆலமரம் ஒன்றும் இருந்தது. அதன் விழுதுகளை பிடித்து கொண்டு சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அந்த காட்சியே பார்ப்பதற்கு ஓவியங்களில் பார்ப்பதை போல் இருந்தது ஆதிரைக்கு.
கோவிலின் உள் சென்று சாமியை தரிசித்து விட்டு அங்கேயே அமர்ந்து இருவரும் அவர்களது சிறு வயது கதைகளை பரிமாறி கொண்டிருந்தனர். நேரம் செல்வதே தெரியாமல் ஒருவரின் பேச்சில் ஒருவர் மூழ்கியிருந்தனர். திடீரென ஆதிரைக்கு ஒரு சந்தேகம் உதிக்கவும்
“ஆமாம் நாம் இங்கு இருக்கின்றோமே! அங்கு வேலை?” என்றாள்.
“அதெல்லாம் ராமைய்யா பார்த்து கொள்வார் ஆதிரை.
“ஓ... சரி ராமைய்யா என்றாள் யார்?” என்றாள்.
“அதுசரி.. நீ பார்க்கவில்லையா? வயல் வீட்டிற்குள் தான் இருந்தார். அதனால் தானே உன்னை உள்ளே போக சொல்லிவிட்டு நான் சென்றேன்.” என்றான்.
“அவரா... நான் பார்த்தேன் ஆனால் யார் என்று தெரியவில்லை அதற்குள் மல்லி வந்து அவரை யாரோ கூப்பிடுவதாக அழைத்து சென்று விட்டாள். அதனால் பேசவில்லை” என்றாள்.
“ஓ. அவர் முத்தையாவின் அண்ணன் ஆதிரை. அவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவராம். சிறுவயதில் பஞ்சத்தின் காரணமாக வேலை தேடி ஊர் ஊராக சுற்றி திரிந்த போது நம் தாத்தா எங்கோ பார்த்து வேலை தருவதாக அழைத்து வந்தாராம். அதிலிருந்து இங்கேயே இருக்கிறார்.” என்றான்.
“அப்படியா? அப்போ அவருக்கு திருமணம் ஆகவில்லையா?” என்றாள்.
“இல்லை திருமணம் நடந்தது. நம் வீட்டிற்கு வந்த பிறகு அவருடைய அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் இருந்தே இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு காதலாம். அவர்களது காதல் கதை மிகவும் அழகாக இருக்கும்” என்றவன் தொடர்ந்து
“சரி ஆதிரை நாம் கிளம்புவோமா? மாலை ஆகிவிட்டது அப்பா இன்று இங்கு தங்குவதாக கூறினார்” என்று கூறிக்கொண்டே எழவும் அவனை பின்பற்றி எழுந்த ஆதிரையும்
“ஏன் இங்கு தங்குகிறாராம்? அதான் இங்கு ராமையா இருக்கின்றாரே?” என்றாள்.
“அவர் கணக்கு வரவு செலவு எல்லாம் இங்கிருந்து தான் பார்ப்பார் ஆதிரை. தற்போது ஏதோ பார்க்க வேண்டுமாம்” என்றவன் அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து வயல் வீட்டிற்கு சென்றான்.
இவர்கள் செல்லவும் சதாசிவம் அங்கு வரவும் சரியாக இருக்கவும் இருவரும் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். அடுத்த ஒரு வாரம் ஆதிரையின் வாழ்க்கையில் மிகவும் வேகமாக ஓடிவிட்டது. வீட்டில் அனைவருமே பரபரப்பாகவே இருந்தனர். வயலிலும் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று கொண்டிருந்ததால் யாருக்கும் ஓய்வு என்று இல்லாமல் இருந்தது. நடுவில் இரண்டு முறை ஆதிரையும் வயலிற்கு சென்று வந்தாள். அவளையும் அறியாமல் தேவாவின் நெருக்கத்தை அவள் இரசிக்க தொடங்கி இருந்தாள். அவனுடன் அதிகமான நேரம் சிலவிட ஏங்கி கொண்டிருந்தாள். ஆனால் பாவம் தேவாவிற்கு தான் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அனைத்து வேலைகளும் முடிந்து அன்று அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து காலை உணவு உண்டு கொண்டிருந்தனர்.
ஆதிரை மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அவள் மனம் முழுவதும் தன் கணவனுடன் செலவிட போகும் நேரத்தை நோக்கியே இருந்தது. அவனிடம் என்ன என்ன பேச வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தாள்.
மூத்த ஜோடியான சதாசிவமும் மீனாட்ச்சியும் எழுந்து சென்றுவிட மற்ற இரு ஜோடிகளும் பேசி கொண்டே உணவு உட்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த தலைப்பு அவர்களது பேச்சில் வந்தது.
தேவா ஆதிரையிடம் “உனக்கு ஒன்று தெரியுமா ஆதிரை? இவனுக்கு பெயர் ராம் என்று இருந்ததால் இவன் சிறுவயதில் இருந்தே இவனுக்கு வரும் பெண் சீதை என்னும் பெயரில் தான் வேண்டும் என்று கூறி கொண்டிருந்தான்.” என்றான்.
ஆதிரையும் “அப்படியா? பிறகு எப்படி அக்காவை?” என்று கேட்கவும் தேவா தொடர்ந்து
“அண்ணியை பார்க்கவே வர மாட்டேன் என்று விட்டான். பிறகு அம்மா தான் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். அங்கு வந்து அண்ணியை பார்த்ததும் அண்ணியை விட்டு வர மனம் இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த முகூர்த்ததிலேயே திருமணம் வைக்க சொல்லி ஒரே அடம்” என்றான்.
தேவா ராமை கிண்டல் செய்கின்றானா உண்மையை கூறுகிறானா என்று புரியாமல் ஆதிரை கயலை பார்க்க அவள் முகத்தில் இருந்த வெட்க்கம் அவன் கூறுவது அனைத்தும் உண்மையே என்று ஆதிரைக்கு புரிய வைத்தது. கூடவே ஒரு சந்தேகமும் தோன்ற
“ஏன் இராமாயணம் என்றால் அவ்வளவு பிரியமா?” என்றாள் ஆதிரை.
ஆதிரையின் இந்த கேள்விக்கு அனைவரையும் முந்தி கொண்டு ராம்
“என்ன இப்படி கேட்டுவிட்டாய் ஆதிரை. இராமாயணம் என்றால் எனக்கு உயிர். ராமைய்யா தாத்தா இருக்கின்றார் இல்லையா? அவரது மனைவிதான் எங்களை அமர வைத்து புராண கதைகள் எல்லாம் கூறுவார். அப்போதே ராமரை குறிப்பிடும் போது என் பெயர் தான் என்று கூறி கூறவும் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது. கதையை அவர் முடிக்கும் போது உனக்கான சீதை நிச்சயம் வருவாள் என்று கூறவும் அதே ஒரு ஆசையாக இருந்தது.” என்று அவன் கூறும் போதே கயல்
“என்ன? என்ன சொன்னீர்கள்” என்று கேட்கவும் ராம்
“அதுவெல்லாம் உன்னை பார்க்கும் முன் வரையில் தான்மா இப்போது இல்லையே.. யார் அந்த சீதை?” என்றான்.
அவன் காயலிடம் சரண் அடைவதை பார்த்து இளஞ்ஜொடியான தேவாவும் ஆதிரையும் சிரிக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் சிரிப்பதை பார்த்த ராம் தேவாவிடம்
“என்னை கூறுகிறாயே உனக்கும் இராமாயணம் பிடித்த கதை தானே?” என்று தம்பியை பார்த்து சிரித்து கொண்டே கேட்டான்.
ஆதிரை வேகமாக “அப்படியா?” என்றாள்.
ஆதிரைக்கும் சிறு வயதில் இருந்தே இராமாயணம் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு வரும் கணவன் ராமரை போல வேறு பெண்ணை நினைக்காதவனாக இருக்க வேண்டும் என்று தோழிகளிடம் கூறுவது அவளது வழக்கமே. இன்று தேவாவிற்கும் அந்த கதை பிடிக்கும் என்று கேட்டதும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தேவாவின் பதிலால் அந்த மகிழ்ச்சி அவளுடன் ஒரு நொடி கூட இருக்கவில்லை.
தொடரும்...​
 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 13
ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா
“நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான்.
ராமும் “அது சரிதான்” என்று கூறிவிட்டு சிரிக்க ஆதிரைக்கு தான் தன் தலையில் இடியை போட்டது போல் இருந்தது. எந்த பெண்ணிற்கு தான் தன் கணவன் நான் ஒன்றும் ராமன் இல்லை என்று கூறினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
திடீரென்று ஆதிரை எதையோ சிந்தித்து கொண்டிருக்கவும் கயல்
“என்ன ஆச்சு ஆதிரை? எதுவும் உடம்புக்கு பண்ணுகிறதா?” என்றாள்.
“ஒன்றுமில்லை அக்கா திடீரென தலையை வலிக்கின்றது” என்றாள்.
அதை கேட்ட தேவா “என்ன ஆதிரை ஏன் திடீரென தலை வலிக்கின்றது? மருத்துவரை பார்த்து வருவோமா?” என்றான்.
“இல்லை சிறிது நேரம் தூங்கினால் சரி ஆகிவிடும். அப்படி ஆகவில்லை என்றால் போகலாம்” என்றவள் தன் உணவை முடித்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
திடீரென அவளது செயலில் இருந்த மாற்றத்தை தேவாவும் கவனிக்க தவறவில்லை. ஆனால் அவனுக்கு என்ன யோசித்தும் அப்போது என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை. ஏதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என்று அப்போது அதை விட்டுவிட்டு வயல் வரை சென்று வந்தான்.
ஆதிரையிடம் நேரடியாகவே கேட்கலாம் அல்லது அவளை சீண்டியாவது உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று தான் தேவா நினைத்தான். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் ஆதிரை தனது அறைக்குள்ளேயே இருந்தாள். யார் சென்றாலும் கண்களை இறுக மூடிக்கொண்டு தூக்கம் வருகிறது தலை வலிக்கின்றது என்றுவிட்டாள். மதிய உணவும் வேண்டாம் என்று விட்டாள்.
“என்னமா மிகவும் முடியவில்லையா? மருத்துவரிடம் செல்வோமா” என்று கேட்ட மீனாட்சியிடமும்
“அதுவெல்லாம் வேண்டாம் அத்தை” என்றதோடு முடித்து கொண்டாள்.
இரவுவரை பார்த்த தேவாவால் அதற்கு மேல் தன் பொறுமையை கட்டுபடுத்த முடியாமல் அவனே இரவு உணவை எடுத்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டான். வருவது தேவா என்று தெரிந்ததும் ஆதிரை தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“உண்மையான தலைவலியும் தூக்கமும் தான் சிறிது நேர ஓய்வில் சரி ஆகுமாம் ஆதிரை. இல்லையெனில் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி ஆக வாய்பில்லையாம்.. இந்த நோய்க்கு மருந்து கூட கண்டு பிடிக்கவில்லை என்கிறார்கள்” என்று தேவா கூறவும் வேகமாக எழுந்து அமர்ந்தவள் அவனை பார்த்து முறைக்க தொடங்கினாள். பின்பு தேவாவே தொடர்ந்து
“நான் என்ன யோசித்தாலும் காலையில் அப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் என்ன கோபமாக இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்ட மாட்டாய் என்று நம்பியிருந்தேன்” என்று கூறவும் ஆதிரையின் வழக்கம் போல அவள் அவளது மனதிற்குள்
‘ஆமாம் நம்பியிருந்தாராம் நம்பி... நானும்தான் இவனை நல்லவன் என்று நம்பி இருந்தேன்’ என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் தேவா
“இந்த உணவை இங்கு வைக்கின்றேன். மறக்காமல் சாப்பிட்டு விடு. அப்பறம் சொல்ல மறந்து விட்டேன். உன் தந்தை உன்னை தொலைபேசியில் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று எனக்கு அழைத்தார். உன் தோழி யாரோ ரம்யா என்று கூறையதாக நியாபகம்...” என்று அவன் கூறவும் ஆதிரை
“ரம்யா வா? அவளுக்கு என்ன?” என்று வேகமாக கேட்டாள்.
“அந்த பெண் உன்னை பார்க்க நம் ஊருக்கு வருகிறாளாம்” என்றான்.
“என்ன?! எப்போது வருகிறாளாம்?” என்று கேட்டு கொண்டே ஆதிரை தான் தொலைபேசியை தேடி எடுக்க தொடங்கவும் தேவா
“நாளை காலை வருவதாக கூறினார். அப்படி என்றால் இந்நேரம் அப்பெண் இரயில் எறியிருப்பாள் ஆதிரை” என்றவனிடம்
“இப்போதுதான் கூறுவாயா?” என்று கத்தினாள்.
“இப்போதுதான் உன் தந்தையே என்னிடம் கூறினார்” என்று அவன் கூறும் போதே தன் தொலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு தொடர்ப்பு கொண்டாள். அந்த பக்கம் அவர் அழைப்பை எடுக்கவும் தேவா அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆதிரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆதிரையும் ரம்யாவும் சிறு வயதில் இருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நட்பும் வளர்ந்து கொண்டே சென்றது. இருவருக்குள்ளும் ரகசியம் என இதுநாள் வரை இருந்ததே இல்லை. பள்ளி படிப்பை முடிந்ததும் ஆதிரை பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவும் ரம்யா தனக்கு பிடித்த சட்டப் படிப்பை எடுத்து படித்தாள். ஆனாலும் கூட அவர்கள் நட்பு என்றும் குறைந்ததே இல்லை.
ஆதிரை கடைசியாக தன் அம்மாவின் ஊரான இந்த கிராமத்திற்கு வரும் முன்னே ரம்யாவிடம் பேசியது. அதன் பிறகு ரம்யாவிற்கு முக்கிய வேலை இருந்ததாள் இருவரும் சரியாக பேசி கொள்ள முடியவில்லை. ஆதிரையின் திருமணத்திற்கு பிறகு ஆதிரை தன் பெற்றோரை தவிர யாரிடமும் பேசாததால் ரம்யாவிடம் பேசியே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது ஆதிரையை பார்க்க ரம்யா வருகிறாள் என்றதும் ஆதிரைக்கு மகிழ்ச்சி தாங்கவே இல்லை. காலை எப்போது வரும் என்று காத்திருந்தாள்.
மறுநாள் காலை ஆதிரை விடிந்தும் விடியாததுமாய் எழுந்து விட்டாள். எப்போது வருவாள் எப்படி வருவாள் என ஆதிரைக்கு பல கேள்விகள் மனதிற்குள் ஓடி கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது என்ன கேட்பது என்று தெரியாமல் வீட்டின் வாசலில் குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டிருந்தவளின் காதில் தேவாவின் குரல் விழுந்தது.
“என்ன இங்கு யாரோ தரையில் நடந்தே குழி தோண்டுகிறார்களாம்!” என்று சிரித்து கொண்டே வந்தான்.
அவன் குரல் கேட்கவும் முதல் நாள் அவன் கூறியதும் சேர்ந்து நினைவு வரவும் அவனை பார்த்து முறைத்து கொண்டு நின்றாள். அது தேவாவிற்கும் புரியவும்
“என்ன? என்னை முறைத்து கொண்டு இங்கையே நிற்க போகின்றாயா? இல்லை உன் தோழியை அழைக்க என்னுடன் வர போகின்றாயா?” என்றான்.
“என்ன மிரட்டுகிறாயா?” என்றாள்.
தேவாவும் விடாமல் “அப்படி தெரிகிறாதா? சரி அப்படியே வைத்து கொள்ளேன்” என்று கூறிவிட்டு சிரிக்கவும் வழக்கம் போல ஆதிரைக்கு தான் கோபம் வந்தது. ஆனால் தற்போது இவனிடம் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க அவள் விரும்பாததால்
“அவளை எங்கு சென்று அழைத்து வர வேண்டும்” என்றாள்.
“அனைத்து கேள்விகளையும் கேட்ட பின்புதான் கிளம்புவாய் என்றால் அங்கு உன் தோழி நமக்கு முன்பே வந்து நிற்க நேரிடும். அதில் உனக்கு விருப்பம் இல்லையெனில் கிளம்பி காரில் ஏறினால் போகும் வழியில் அனைத்து கேள்விக்கான பதிலும் கிடைக்கும்” என்றான்.
‘இவனிடம் இனி பேசுவதும் வீண் அதனுடன் இங்கு நேரம் ஆகி இவன் கூறுவதை போல அங்கு ரம்யா காத்திருந்தால் என்ன செய்வது?’ என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று வேகமாக ஒரு சுடிதாரை அணிந்து வந்தாள்.
காரில் ஏறவும் ஆதிரை தன் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.
“எங்கு சென்று அவளை அழைக்க வேண்டும்? எத்தனை மணிக்கு அவள் வருவாள்?” என்றாள்.
தேவா “இரயிலில் வருவதாக நேற்றே கூறியதாக எண்ணினைவில் இருக்கின்றது. அப்படியெனில் எனது அறிவுக்கு எட்டிய வரை தஞ்சாவூருக்கு தான் சென்று இரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வர வேண்டும். ஏனெனில் நாம் இருப்பது ஒரு கிராமம் அதில் எந்த இரயில் நிலையங்களும் எனக்கு தெரிந்து இல்லை” என்றான்.
தேவா வேண்டும் என்றே தன்னை சீண்டுகிறான் என்று ஆதிரைக்கு புரிந்தது. அவனுடன் வாழ்ந்த இத்தனை நாட்களில் இவளை சீண்டி அவன் இவளை தன்னிடம் பேச வைக்கிறான் என்ற உண்மையையும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். திருமணம் ஆன புதிதில் இருந்தே ஆதிரைக்கு தேவாவை தவறான குணத்தில் நினைத்து பார்க்க முடிந்தது இல்லை. ஆனால் தேவா வாயால் அவன் கூறியதை அவள் கேட்கவும் அதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை.
அப்படி அவன் கூறிய பின் அவனிடம் சாதாரணமாகவும் பேச இயலவில்லை. எனவே அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தை பார்த்த பின்பு தேவா மேலும் குழம்பி போனான். ஒருவழியாக இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆதிரையால் தன் ஆர்வத்தை அடக்கவே முடியவில்லை. எப்போது தன் தோழி வருவாள் என ஆர்வமாக காத்திருந்தாள். அவர்கள் அங்கு சென்று ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் எதிர் பார்த்து சென்றிருந்த இரயில் அதன் இலக்கை அடந்திருந்தது.
அதிலிருந்து இறங்கும் ஒவ்வொரு ஆளிடமும் தன் தோழியை ஆதிரை ஆவலாக தேடி கொண்டிருந்தாள். தூரமாக ஒரு கருநீல நிற சுடிதாரில் இறங்கி கொண்டிருந்தாள் ஆதிரையின் தோழி, ரம்யா. அவளை பார்த்ததும் எங்கு நிற்கின்றோம் என்றெல்லாம் யோசிக்காமல் அவளிடம் ஓடி சென்றாள் ஆதிரை. ரம்யாவும் தன்னை நோக்கி ஓடி வந்த தன் தோழியை பார்க்கவும் மின்னல் வேகத்தில் இருவரும் ஓடி சென்று ஆர தழுவி கொண்டனர்.
நீண்ட நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்ததால் அவர்களுக்கு சிறிது நேரம் கொடுத்து தேவா விலகி இருந்தான். இருவரும் ஒருவழியாக அவர்களது அன்பை பறிமாறி கொண்ட பிறகு ஆதிரை ரம்யாவை தேவாவிடம் அழைத்து வந்தாள்.
வரும் வழியிலேயே ரம்யா ஆதிரையிடம் “யாருடன் வந்தாய்” என்று கேட்டாள்.
அதற்கும் முதல் நாள் வரை ஆதிரையிடம் இதே கேள்வி கேட்டிருந்தால் அவள் என்ன பதில் கூறியிருப்பாளோ ஆனால் இப்போது அவள் இருக்கும் கோபத்தினால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால் ரம்யாவே தொடர்ந்து
“என்ன? உன் கணவனோடு வந்திருக்கின்றாயாயோ?” என்றாள்.
ஆதிரை அதற்கு ஆம் என்பது போல தலையை மட்டும் ஆட்டவும் ரம்யா தொடர்ந்து
“அந்த ஆளைதான் நானும் முதலில் பார்க்க வேண்டும் என்று வந்தேன்” என்றாள்.
தோழியின் குரலில் இருந்த கோபம் ஆதிரைக்கு தெரியவும் ஏன் இந்த கோபம் என்று மட்டும் புரியாமல் முழிக்க தொடங்கினாள். அவள் எதுவும் கூறாயாமல் திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல முழிக்கவும் ரம்யாவிற்கு கோபம் உச்சியை தொட்டது.
“இப்போது ஏன் முழித்து கொண்டு இங்கேயே நிற்கின்றாய்?” என தன் கோபத்தை கொஞ்சமும் மறைக்காமல் தன் குரலில் ரம்யா காட்டிட ஆதிரை வேறு வழியின்றி தன் தோழியிடமே அவளது கோபத்திற்கான காரணத்தை கேட்டாள்.
“ஏன் கோபமாக இருக்கின்றாய்?” என்றாள்.
“என்ன!! என்டி உனக்கு மூளை என்று ஏதாவது இருக்கின்றாதா இல்லையா? படித்தவள் தானே நீ?” என்றாள்.
“ஒன்று சொல்லிட்டு திட்டு இல்லையெனில் திட்டாதே.. உன்னை பார்க்க ஆசையாக வந்தால் இப்படி திட்டுகிறாயாயே?” என்றாள் ஆதிரை.
“என்னிடம் மட்டும் வாய் பேசிக்கிறாயே? எவனோ தாலி காட்டினான் என்று அவனுடன் வாழ்கிறேன் என்றாயாமே?” என்றாள்.
ரம்யா எப்படியும் இதை பற்றி கேட்பாள் என்று ஆதிரை எதிர் பார்த்தாள் தான். ஆனால் இப்படி இங்கேயே கேட்பாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவளிடமிருந்து அந்த கேள்வி வந்ததும் ஆதிரை வேகமாக தேவா இருந்த திசை பார்த்து திரும்பினாள். எங்கு அவன் காதில் விழுந்துவிடுமோ என்ற பயம் அவளுள் எழுந்தது. ஆனால் நல்ல வேலையாக அவன் அருகில் இருந்த கடைக்குள் சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பின்புதான் ஆதிரையால் சற்று நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அதற்குள் ரம்யா தன் பொறுமையை இழந்து
“நான் ஒருத்தி இங்கு கத்தி கொண்டிருக்கின்றேன் நீ அங்கு என்ன பார்த்து கொண்டிருக்கின்றாய்?” என்றாள்.
ஆதிரை “இப்போது ஏண்டி கத்துகின்றாய்? இப்படியே நாடு தெருவில் நின்று அனைத்தையும் கூற வேண்டுமா? வா நாம் வீட்டிற்கு சென்று பேசுவோம்” என்றாள்.
ரம்யாவும் பதிலுக்கு “நம் வீடா? அது சென்னையில் அல்லவா இருக்கின்றது” என்றாள்.
அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தவள்
“ரம்யா வீட்டிற்கு செல்லும் வரை தயவுசெய்து அமைதியாக வா. உனக்கு நடந்த அனைத்தையும் கூறுகிறேன்” என்றாள்.
தோழியை பல நாட்கள் கழித்து பார்த்தவுடன் சண்டையிட ரம்யாவிற்கும் விருப்பம் இல்லைதான். அதேபோல அவளுக்கு ஆதிரையிடம் கேட்க்க சில கேள்விகள் இருந்தன. அதை எல்லாம் ஆதிரை கூறுவதை போல இங்கேயே நின்று பேச முடியாது என்று தோன்றவும் ரம்யா ஆதிரையிடம்
“சரி. ஆனால் நான் உன்னை மட்டும் தான் பார்க்க வந்துள்ளேன். வேறு யாரையும் இல்லை. அதனால் அவர்களை அறிமுகம் செய்கிறேன் இவர்களை செய்கிறேன் என்று கூறாதே. அனைவரிடமும் என்னால் பொறுமையாக பேச இயலாது” என்றாள்.
ரம்யா கூறுவது தன் கணவனைதான் என்று ஆதிரைக்கும் புரிந்தது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்றுதான் அவளுக்கு புரியவில்லை. ஆதிரை யோசித்து கொண்டிருக்கும் போதே தேவா கடையினுள் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வெளியில் வந்தவன் இவர்களை நோக்கி நடந்து வந்தான்.
தொடரும்...​
 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 14
சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால் தான் சட்டப் படிப்பையே அவள் எடுத்ததும் கூட. இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான் என்றால் அதை அவள் சும்மா விட போவது இல்லை.
தோழியை நீண்ட நாட்கள் கழித்து பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆதிரை இதையெல்லாம் மறந்தாள். அதன் விளைவாக தற்போது என்ன செய்வது என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.
‘வீட்டிற்கு வரும்வரை அமைதியாக இருந்தால் கூட பேசி புரியவைக்கலாம் ஆனால் இப்போது?’ என்று அவள் யோசிக்கும் போதே அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்த தேவா ஆதிரைக்கு எந்தவித சிரமும் கொடுக்காமல் ஆதிரையிடம்
“நான் சென்று காரை எடுக்கிறேன் ஆதிரை. நீங்கள் வாருங்கள்” என்றவன் ரம்யாவிடம் ஒரு வரவேற்பு தலையசைப்புடன் சிறிய புன்னகையையும் சிந்திவிட்டு அவளது பதிலுக்காக கூட நிற்காமல் அங்கிருந்து சென்றான்.
அவனது செய்கை ரம்யாவை இன்னும் கோவபடுத்தியது.
“ஒரு மட்டு மரியாதை கூட இல்லாதவனாக இருக்கின்றான்! இவன் வீட்டிற்கா நான் வர வேண்டும்?” என்றாள்.
ஆதிரை ரம்யாவின் பேச்சு புரியாமல் “என்ன நடந்தது இப்போ?” என்றாள்.
“என்ன நடந்ததா? அவன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி தானே நான்? வந்தவளை வா என்று கூப்பிட்டால் துரை குறைந்து விடுவாராமா?” என்றாள்.
இவள் ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கின்றாள் என்று முதல் முறையாக தன் தோழியின் மீது ஆதிரைக்கு எரிச்சல் வந்தது. அதை மறைக்காமல் அப்படியே தன் தோழியிடம் காட்டி கேட்டாள்
"ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கின்றாய் ரம்யா. உனக்கு தான் யார் அறிமுகமும் வேண்டாம் என்றாய் அல்லவா.. பிறகு என்ன? அவனே பேசவில்லை என்று மகிழ்ச்சி அடைவதை விட்டுட்டு.." என்றாள்.

"ஆமாம் என்னிடம் மட்டும் கத்து." என்று கூறிய ரம்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இருவரும் அமைதியாக கார் இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு தேவா காரை தயார் நிலையில் வைத்திருக்கவும் இருவரும் பேசாமல் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.
தஞ்சாவூர் நகரத்தைத் தாண்டி அவர்கள் கிராமம் செல்லும் சாலையில் அவர்களது கார் நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

தேவா பொதுவாகவே யாரிடமும் சகஜமாக பேசும் குணம் உடையவன் ஆனால் ரம்யாவிடம் மட்டும் ஏன் பேசவில்லை என்றும் ஆதிரைக்கு குழப்பமாகவே இருந்தது.

'ஒருவேளை ரம்யா கூறியதை தேவா கேட்டு விட்டானோ' என்று ஆதிரை யோசித்தவள் தொடர்ந்து

'ரம்யா பேசிய உடனையே தேவாவை நாம் பார்த்தோமே அவன் கடைக்குள் தானே சென்று கொண்டிருந்தான்? அவ்வளவு தூரத்தில் ரம்யா பேசியதை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை அதே நேரத்தில் அவனும் ரம்யாவிடம் மற்றவர்களிடம் பேசுவதைப் போல் பேசவில்லையே!' என அவளது மனதுக்குள் இந்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.

காரை ஓட்டிக் கொண்டிருந்த தேவா கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருந்த ஆதிரையை பார்த்து விட்டு காரில் நிலவிய அமைதியை கலைத்து விட்டு

"என்ன ஆதிரை சிந்தனை பலமாக இருக்கின்றது?" என்றான்.

திடீரென்று அவன் அப்படி கேட்கவும் ஆதிரை என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அதற்கும் மேல் ரம்யா ஏதாவது கூறி விடுவாளோ என்றும் பயந்தாள்.

ஆனால் ரம்யா ஆதிரை இருவருமே பதில் கூறுவதற்கு முன்பாக தேவா ஒரு ஓரமாக காரை நிறுத்தினான்.
'இப்பொழுது ஏன் இவன் காரை நிறுத்துகிறான்' என்று ஆதரை சிந்திக்கும் பொதே காரில் இருந்து இறங்கிய தேவா அருகில் இருந்து ஒரு இளநீர் கடைக்கு சென்று 3 இளநீர் வாங்கி ஆதிரையை அழைத்து அவளுக்கும் அவளது தோழிக்கும் கொடுக்கச் சொல்லிவிட்டு அவன் கடையில் நின்று குடிக்க தொடங்கினான். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிய கார் அவர்களது வீட்டில் தான் அந்த நின்றது.

வீட்டிற்கு வந்த பிறகுதான் ஆதிரைக்கு மூச்சுவிட முடிந்தது. வழியில் எப்பொழுது ரம்யா என்ன கூறிவாளோ என்ற பயம் ஆதிரைக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் ரம்யாவிற்கு தன் அறையை காட்டி அதனுள் அனுப்பிவிட்டாள் ஆதிரை. அவளுக்கு அவளது தோழி யாரிடமாவது தவறாக பேசிவிடுவாளோ என்ற பயம். ஆதிரைக்கு இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. எப்படியும் இங்குள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளும் தன் அறைக்குள் சென்றாள்.
அங்கு அந்த தனிமைக்காக காத்திருந்த ரம்யா ஆதிரை உள்ளே வந்தவுடன் தன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள்.

"எதற்காக இங்கு இருக்கின்றாய் ஆதிரை? உனக்கு நடந்தது திருமணம் என்றும் அதற்காக தான் இங்கு இருக்கின்றேன் என்றும் தயவு செய்து என்னிடம் பொய் கூறாதே நடந்தது அனைத்தையும் விக்ரம் மூலம் நானும் அறிந்தேன்." என்றாள்.

அப்போதுதான் ஆதிரைக்கு முழு விவரமும் புரிந்தது. ஆடிக் கொண்டிருப்பது ரம்யா என்றாலும் அவளுக்கு சலங்கை கட்டி விட்டவன் விக்ரம் என்று. இப்படி தன்னை மாட்டி விட்ட தம்பியை மனதிற்குள் திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் ஆதிரை. அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் ரம்யாவே தொடர்ந்து

"உன்னிடம் தான் பேசி கொண்டிருக்கின்றேன் ஆதிரை" என்றாள்.

தன் முன் நின்று கத்தி கொண்டிருந்த தோழியை பார்க்கவும் ஆதிரைக்கு பாவமாக இருந்தது. ஏனெனில் அவள் இவ்வளது தூரம் தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து இப்படி கத்தி கொண்டிருப்பது ஆதிரை மீதிருந்த அன்பினால் தானே. அதனால் தன் தோழிக்கு நிலமையை பேசி புரிய வைக்க முற்சித்தாள் ஆதிரை.

"ரம்யா நீ ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு விருப்பம் இல்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது. அது எப்படி நடந்தது என்று நிச்சயம் உன்னிடம் விக்ரம் கூறியிருப்பான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில் இது தான் என் குடும்பம் இது தான் என் வீடு என்று ஆகிவிட்டது. இதை நான் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் ஏற்றுக்கொள்ளவில்ல. எனக்கே விருப்பப்பட்டுதான்... ஏதோ ஒரு இடத்தில் எனக்கும் இந்த வாழ்க்கை பிடித்து தான் இருக்கின்றது. இந்த ஊர் இங்கிருக்கும் மக்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் என அனைவரையும் எனக்கு பிடித்து தான் இருக்கின்றது. ஆனால் அதற்காக இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டேனா என்று என்னிடம் கேட்காதே, இந்த நொடி வரை இந்த திருமணத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை தான். அதற்காக இங்கிருந்து வந்து விடு என்று கூறினாலும் என்னால் இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு வர முடியுமா என்றால் எனக்கும் அது சந்தேகம்தான். என்னை தயவு செய்து நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்" என்றாள்.

ரம்யா தன் தோழியை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே

"நீ கூறுவது உனக்காவது புரிகிறதா ஆதிரை" என்றாள்.

ஆதிரையிடம் இருந்து எந்தவித பதிலும் அதற்கு வராமல் போகும் ரம்யாவை தொடர்ந்து பேசினாள்
"நாம் ஒன்றும் அந்த காலத்தில் இல்லை ஆதிரை. உனக்கு யார் என்றே தெரியாத ஒருவன் உன் கழுத்தில் தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக அவனுடன் வாழ வேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை. இது முதலில் சட்டப்படியும் குற்றம் என்று உனக்கும் தெரியும். படித்திருக்கிறாய் தானே எதுவும் உலகம் தெரியாத பிள்ளை போல் நடந்து கொள்ளாதே ஆதிரை." என்று தன் தோழியை திட்டி தீர்த்தாள் ரம்யா.

"அதுவெல்லாம் எனக்கும் தெரியும் ரம்யா. நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் எனக்கு புரிகின்றது தான் ஆனால." என ஆதிரை கூறும் பொழுதே அவளது அறையை கதவை தட்டும் சத்தம் கேட்டது.

யார் என்று அறிய ஆதிரை சென்று பார்த்தாள் அங்கு கயல் கையில் பழச்சாறுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் "வாருங்கள் அக்கா" என்று உள்ளே அழைத்து வந்தாள் ஆதிரை. உள்ளே ரம்யா கோபத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தாள்.

இருவருக்கும் தான் கொண்டுவந்த பழச்சாறை கொடுத்துவிட்டு

"தோழிகள் இருவரும் சில மாதங்கள் கழித்து பார்க்கின்றீர்கள் நன்றாக பேசிக் கொண்டிருங்கள் நான் பிறகு வருகிறேன்" என்று கூறிவிட்டு கயல் அங்கிருந்து செல்லவும் ரம்யா "ஆமாம் இப்பொழுது இது ஒன்றுதான் குறைச்சல்" என்றாள்.

அதிரைக்கு தான் ரம்யா ஏன் தற்போது இங்கு வந்தாளோ என்று இருந்தது ஆனால் அவளால் எதையும் காட்டிக் கொள்ள முடியவில்லை இருவரும் தங்களது கோபத்தை காட்டும் விதமாக ஒருவரிடம் ஒருவர் பேசாமல் இரவு வரை அமைதியாக இருந்தனர்.

இரவு உணவுக்காக அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது ஆதிரை ரம்யாவையும் அழைத்து சென்றாள். அங்கும் ரம்யா யாரிடமும் பேசாமல் அமைதியாக உணவு உண்டு கொண்டிருந்தாள்.

மீனாட்சி ரம்யாவிடம் "என்னம்மா பயணம் எல்லாம் சவுகரியமாக இருந்ததா" என்றார்.

மீனாட்சி அம்மாளின் உபசரிப்பும் அவரது கனிவான பேச்சும் ரம்யாவை அவரிடமும் கோபப்பட தடுத்தது. எனவே அவர் கேட்ட கேள்விக்கு ஒரு சிறிய புன்சிரிப்புடன் "இருந்தது ஆண்டி" என்றாள். ரம்யா மீனாட்சியிடமும் கோபப்படாமல் அமைதியாக பேசியதே அதிரைக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு வழியாக அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

ரம்யா முன்பாகவே அறைக்குள் சென்று விட ஆதிரை சில நேரம் கழித்து உள்ளே சென்றாள். அவள் செல்லும்போது ரம்யா ஏதோ தீவிர யோசனையில் இருந்ததைப் போல் இருந்தது. அதை பார்த்த ஆதிரை

'இப்பொழுது எதை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லையே' என சிந்தித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவள் யோசித்ததை போலவே ரம்யா அதிரையை பார்த்ததும் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் ஆதிரை என்றாள். கூறு என்று ஆதிரை கூறவும் ரம்யா

"உண்மையாகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஆதிரை" என்றாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவள் என்ன கேட்கிறாள் என்று ஆதிரைக்கு புரியாமல் அவளிடமே
"புரியவில்லை ரம்யா எதைப் பற்றிக் கேட்கிறாய்" என்றாள்.

"நான் உன் தோழி தானே ஆதிரை என்னிடமாவது உன் மனதில் இருப்பதை கூறலாம் தானே? ஏன் இங்கு இருக்கின்றாய் என்று எனக்கு புரியவில்லை அவன் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்படி முன்பின் அறியாத ஒருவன் உன் கழுத்தில் தாலி கட்டினான் என்பதற்காக அவனுடன் வாழ்கிறேன் என்று கூறினாய்? அதுவும் அந்த நொடியே.. எனக்கு என்ன யோசித்தாலும் இதற்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை ஆதிரை. அதனால் தான் உன்னிடமே கேட்கிறேன். உனக்கு தெரியும் தானே என்ன நடந்தது என்ன நடக்கின்றது என்று" என்றாள்.

ஆதிரை சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு எதையோ யோசித்தவளாக பேசத் தொடங்கினாள்.

"ரம்யா சில விஷயங்களுக்கு என்னிடமும் பதில் இல்லை ஆனால் எனக்குள் சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கின்றன. எனக்கு இங்கே யாரிடம் கேட்பது அல்லது யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை" என்றாள்.

"சரியா ஆதிரை உன் மனதில் என்ன இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கூறு. நான் எதற்கும் உன்னிடம் சண்டை போடவில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தையும் வைத்து இல்லாமல் பகிர்ந்து கொள்" என்றாள்.

அதிரை சில நிமிடம் தரையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கினாள்
"ரம்யா இந்த ஊருக்கு வருவதற்கு முன்பு எனது அம்மாவிற்கு ஒரு ஓர் இருக்கின்றது என்றும் இத்தனை உறவினர்கள் இருக்கின்றார்கள் என்றும் நான் அறியவில்லை. திடீரென்று ஒருவர் வந்து இங்கு அழைத்து வந்து விட்டார். எனக்கு தாலி கட்டும் வரை தேவா என்று ஒருவன் இருப்பதும் எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு முன்பு என்ன நடந்தது என்றால்" என்றாள்.
தொடரும்...​
 

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
அத்தியாயம் 15
"அன்று இந்த ஊரை சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. அதனால் வீட்டில் எப்படியோ அனுமதி வாங்கி வீட்டில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வெளியில் சென்றோம். அப்படி சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது.. தேவாவை பற்றியும் இந்த குடும்பத்தை பற்றியும் பேச்சு வந்தது, இவர்கள் மிகவும் கெட்டவர்கள் என்றும் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும் கூறினார்கள்.

ஆனால் என் மாமா பெண் கவிதா மட்டும் இந்தப் பேச்சில் கலந்து கொள்ளவில்லை, அதை நான் அப்போது சரியாக கவனிக்கவில்லை. பிறகு கோயிலுக்கு சென்றுவிட்டு கோயிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அனைவரும் முன் சென்று கொண்டிருக்க, நானும் கவிதாவும் மட்டும் சிறிய இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது கவிதாவின் முகமே சரியில்லாதது போல் தோன்றவும் அவளிடம் என்னவென்று கேட்டேன்.

அவள் என்னிடம் இவ்வாறு மணி கூறுவது அனைத்தும் முற்றிலும் தவறு. இதை என்னால் வெளிப்படையாக கூற கூட முடியவில்லை அதுதான் எனது கோபம் என்றாள். எனக்கு புரியாமல் அவளிடம் ஏன் என்று கேட்டதற்கு

"தேவ் அண்ணா மிகவும் நல்லவர்" என்றாள். நான் புரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க அவள் தொடர்ந்து "தேவ் அண்ணா பணத்திற்காக எதையும் செய்வார் என்று மணி கூறியது முற்றிலும் தவறு. அவர் மிகவும் நல்லவர் என்னதான் நம் குடும்பம் அவர்களுடன் பேசவில்லை என்றாலும் கூட அவர்கள் நம் வீட்டின் மீது மிகவும் பாசமாக தான் இருப்பார்கள். ஒருமுறை கல்லூரியில் என்னை ஒருவன் மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். எனக்கு வீட்டில் சொல்லவும் மிகவும் பயமாக இருந்தது. அதை கூட தேவ் அண்ணாதான் சரி செய்தார். வீட்டில் கூற முடியாத எந்த பிரச்சினையையும் என் வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் தேவ் அண்ணா தான் சரி செய்வார் தெரியுமா? என்று கேட்டாள்." என்று கூறியவளை இடைமறித்த ரம்யா

"அதனால் உனக்கு தேவா மீது காதல் வந்து விட்டது என்று கூற போகிறாயா ஆதிரை?" என்றாள்.

ரம்யாவின் கேள்விக்கு கோபமாக ஆதிரை முறைக்கவும் ரம்யா தொடர்ந்து

"பிறகு என்னடி? நீ கூறுவது அப்படிதான் இருக்கின்றது" என்றாள் கடுப்புடன்.

"முதலில் நான் கூறுவதை முழுதாக கேள்" என்ற ஆதிரை தொடர்ந்து

"அப்போது எனக்கு முகமே தெரியாத தேவா மீது ஒரு சிறிய மதிப்பு வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதில் இருந்து சில நிமிடங்களில் அதே தேவா என் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற போகின்றான் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சில வினாடிகளிலேயே நாங்கள் கோயிலை விட்டு வெளியில் வந்ததும் அங்கு தான் முதன் முதலில. தேவாவை பார்த்தேன் ஆனால்.." என்று அவள் நிறுத்தவும் ரம்யா

"ஆனால் என்ன கவிதா கூறியதற்காக தேவா உன் கழுத்தில் கட்டிய தாலியை நீ மன்னித்து விட்டாய் அதானே" என்றாள். அதற்கு ஆதிரை

"நான் ஒன்றும் அப்படி கூறவில்லை ரம்யா. கவிதா கூறியபோது கூட நான் தேவாவை பார்த்தது இல்லை. ஆனால் எனக்கு தேவாவையும் இந்த வீட்டையும் பார்த்த பிறகு தோன்றியது என்னவென்றால் இந்த வீட்டையும் தேவாவையும் எனக்கு ஏற்கனவே பார்த்ததைப் போல் தோன்றுகின்றது. அது ஏன் என்று எனக்கு புரியவில்ல" என்றாள்.

ரம்யா "நீ கூறுவது எனக்கு புரியவில்லை ஆதிரை முதலில் நீ என்ன கூற வருகிறாய்?" என்றாள்.
ஆதிரை அதற்கு "இல்லை ரம்யா. இந்த வீட்டை முதல் முதலில் நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு இந்த வீட்டை தெரியும்” என்றாள்.

“அப்படி என்றால்” என்று ரம்யா கேட்கவும்

“இந்த வீட்டில் இத்தனை அறைகள் தான் இருக்கின்றன, எங்கு சென்றாலும் எந்த அறை இருக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கின்றது. ஆனால் இந்த வீட்டிற்கு நான் வந்ததே இல்ல.. அது எப்படி சாத்தியம்.?" என்றாள்.
ரம்யா "அது எப்படி சாத்தியமாகும் அதிரை?" என்று கேட்கவும்

"எனக்கும் தெரியவில்லை ரம்யா. இதை பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. அதேபோல தேவாவும் எனக்கு ஏற்கனவே தெரிந்தவன் ஆகவே தோன்றுகின்றான் புதியவனாக தோன்றவே இல்லை. அது ஏன் நான் அவனை எங்கு பார்த்து இருக்கின்றேன் என்று எனக்கும் புரியவில்ல." என்றாள்.

ரம்யா "எதையாவது புரியும்படி கூறுகின்றாயா ஆதிரை? இங்கிருந்து இருந்து உனக்கு ஏதாவது ஆகி விட்டதா என்ன?" என்று கேட்ட ரம்யாவிடம்

"இல்லை ரம்யா நான் தேவாவை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கின்றேன், ஆனால் எங்கே என்றே தெரியவில்லை" என்று மீண்டும் அதையே கூறிவும் ரம்யா அவளிடம்
"சரி அதைத்தான் கூறிவிட்டாயே ஆதிரை. உனக்கு அப்படி தோன்றினால் நீயே அவனிடம் கேட்க வேண்டியது தானே? அதோடு இதற்காகவா அவனோடு வாழ்கிறேன் என்றாய்?" என்றாள் ரம்யா.

"அன்று என் கழுத்தில் தாலி கட்டியதும் எனக்கு முதலில் ஒன்றுமே தோன்றவில்லை. இவ்வளவு ஏன் அப்போது என் பெயரை அந்த நொடி கேட்டிருந்தால் கூட பதில் கூறியிருக்க மாட்டேன். அந்த நிலையில. தான் நின்று கொண்டிருந்தேன். அதன் பிறகு விக்ரமிற்கும் தேவாவிற்கும் சண்டை வரவும், என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வதாக விக்ரம் கூறினான். ஆனால் அதற்கு அதெல்லாம் முடியாது என்று தேவா நின்று கொண்டிருந்தான். அப்போது என் மனதில் தோன்றியது ஒரே விஷயம் தான்.

ஏன் என் கழுத்தில் தாலி கட்டினான், இந்த திருமணம் ஏன் நடந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தான் என்று மட்டும் புரிந்தது. அது என்னை இங்கிருந்து அவன் அனுப்புவதாக இல்லை என்பது. ஆனால் அதையெல்லாம் அந்தளவுக்கு ஆராய்ந்து அது ஏன் என்றெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அன்று நான் இல்லை. அதே நேரத்தில் ஏனோ என் மனதிற்குள் ஒன்று மட்டும் தோன்றியது.
ஒரு வேளை விக்ரமிற்கும் அவனுக்கும் சண்டை நடந்தால் என்ன ஆகும் என்று யோசித்தேன். என்னதான் மக்கள் அங்கிருந்தாலும் அதில் பாதி பேருக்கு மேல் தேவாவிற்கு ஆதரவாக தான் நின்றார்கள். அது எனக்குள் ஒரு பயத்தை உருவாக்கியது." என்றவளை ரம்யா

"என்ன பயம்?" என்றாள்

"சண்டை என்று வந்தால் விக்ரமிற்கு ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்தேன். அந்த நொடி எனக்கு அப்படிதான் யோசிக்க தோன்றியது. அதனால்தான் அன்று அவனுடன் வாழ சம்மதம் என்றேன். ஆனால் அதற்காக இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவும் நான் விரும்பவில்லை. நான் செய்வதில் அவனே என்னை வெறுத்து இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று நினைத்து தான் அவனை வெளியிலேயே தங்க சொன்னேன்.

அதன் பிறகு எப்படி இந்த இரண்டு மாதங்கள் ஓடின என்று இப்போது என்னிடம் கேட்டால் கூட எனக்கு தெரியவில்லைதான். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கின்றேன். எனக்கு எந்தவித தொந்தரவும் இல்லை அதே நேரத்தில் உனக்கு நான் தாலி கட்டி விட்டேன் நீ என் மனைவி நான் உன் கணவன் என்று எந்தவித உரிமையும் தேவை எடுத்துக் கொள்ள முயன்றதும் கூட இல்லை தான். அவன் ஏன் என்னை இப்படி திருமணம் செய்தான் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்ல. அதன் காரணத்தை கூட நான் ஒரு முறை கேட்ட போது அவன் அவனே நேரம் வரும் பொழுது கூறுகிறேன் என்று கூறி விட்டான்." என்றாள்.

இருவரும் பேசி கொண்டே இருந்ததில் இரவு வெகு நேரம் ஆனதை கவனிக்கவே இல்லை. யாரோ மெல்லியதாக கதவை தட்டும் ஓசை கேட்கவும்தான் இருவரும் மணியை கவணித்தார்கள். இரவு மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற சந்தேகத்தில் ஆதிரை கதவை திறந்து பார்த்தாள். அங்கு அவளது கணவன் தேவா தான்

"தூங்கவில்லையா?" என்றான்.

ஆதிரை எந்த பதிலும் கூறாமல் முழிக்கவும் அவனே தொடர்ந்து

"இல்லை வெளியில் சென்று விட்டு இப்போதுதான் வந்தேன். அறையில் வெளிச்சமாக இருந்தது. மணி ஆகிவிட்டதே அதான் கேட்டேன்" என்றான்.

"ஆமாம் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இதோ உறங்க செல்கிறோம்" என்றவள் அவன் சரியென கூறிவிட்டு மாடி படிகளில் ஏறி செல்லும் வரை பார்த்துவிட்டு அறையின் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தாள்.

உள்ளே வந்த தோழியை சிந்தனையுடன் பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து ஆதிரை

"போதும் உன் விசாரனைகள் ஏதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள். இப்போது எனக்கு தூக்கம் வருகிறது" என்றவள் ரம்யாவின் பதிலைகூட எதிர் பார்க்காமல் உறங்கி விட்டாள்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் தொலைத்தவள் ரம்யா தான். என்னதான் இருவரும் வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்திருந்தாளும் உடன் பிறந்த சகோதிரிகள் போலவே இருந்தார்கள். அப்படி இருக்கையில் ஆதிரையின் வாழ்க்கையை நினைக்க நினைக்க ரம்யாவிற்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆதிரை மிகவும் அழகான பெண்தான். பார்பவர்களை எளிதில் கவர்ந்து விடுபவளும்கூட. பள்ளி காலத்திலையே அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் இவள் பின் பைத்தியம் போல் சுற்றியதும் உண்டு. ஆனால் யாரையுமே திரும்பி பார்காதவள் ஆதிரை. அதில் எல்லாம் அதிகம் ஈடுபாடு இல்லாதவளாகவே
இருந்து வந்தாள்.
அவளது கவனம் எப்போதுமே படிப்பின் மீதும் தோழிகளின் மீதுமே இருந்தது. பொதுவாகவே அனைத்து விஷயத்தில் அவ்வளவு எளிதில் கோபம் படாதவள்தான். யாரையும் அதிர்ந்து கூட பேச மாட்டாள். அதே நேரம் அவளை மீறி கோபம் வந்தால் எதிரில் உள்ளவர்கள் நிச்சயம் அவளிடம் தொலைந்தார்கள். ஆனால் அப்படி பட்டவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றே ரம்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ரம்யா எதை எதையோ நினைத்து தன் தூக்கத்தை தொலைக்க கதிரவன் யாருக்காகவும் காத்திருக்காமல் தன் கரங்களை மெதுவாக நீட்டி தான் உதயமாக போவதை மக்களுக்கு காட்டி கொண்டிருந்தான்.
இரவு முழுவதுமாக தன் தூக்கத்தை தொலைத்து அப்போது தான் ரம்யா உறங்க தொடங்கினாள். அதனுள் அறைக்குள் யாரோ நடமாடுவதை போல தோன்றவும் மிகவும் சிரம பட்டு தன் இமைகளை திறந்து பார்த்தாள். அங்கு ஆதிரைதான் காலையிலேயே எழுந்து அறையினுள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
அவள் ஏன் இப்படி நடக்கிறாள் என்று சற்று உற்று கவனித்த ரம்யா அவள் அங்கு குளித்துவிட்டு தலை சீவி கொண்டிருப்பதைக் கவனித்தாள். அவ்வளவு நேரம் ஆகிவிட்டதா! என்று தன் அருகில் இருந்த தொலைபேசியை எடுத்து மணி பார்த்தாள் அது காலை ஆறு மணியை காட்டியது. இந்த அதிகாலை நேரத்தில் எல்லாம் எழுந்து என்ன செய்கின்றாள் என்று சிந்தித்து கொண்டே மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவள் எழுந்து அமர்ந்தவளை கவனித்த ஆதிரை
"என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாய்?" என்று வினவினாள்.
ரம்யாவும் அதற்கு "அதை நான் தான் கேட்க வேண்டும். இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்கிறாய் வெளியில் எங்காவது போகின்றோமா?" என்று கேட்டாள்.
"வெளியிலா?" என்று கேட்டு சிரித்தவள் "காலையில் சீக்கிரம் எழுந்து பழகிவிட்டது. அதனால் எழுந்து விட்டேன்" என்றாள்.
"ஆறு மணிக்கா? நீயா?" என்று ரம்யா கேட்கவும் ஆதிரை
"ஒரு வழக்கறிஞராக இருந்து கொண்டு ஆறு மணிக்கெல்லாம் எழுவதா என்று அழுகிறாயே? உன்னை என்ன செய்யலாம்?" என்று ஆதிரை தன் தோழியை கிண்டல் செய்யாவும் ரம்யாவும்
"அடியே வழக்கறிஞராக இருப்பதற்கும் ஆறு மணிக்கு எழுவதற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள்.
"இந்த காலையிலேயே எழுந்து வேலைக்கு எல்லாம் கிளம்பி செல்லும் பழக்கம் இல்லையா உனக்கு?" என்று ஆதிரை மீண்டும் சீண்டவும் ரம்யா
"என்னை வம்பிழுப்பது எல்லாம் இருக்கட்டும். நீ ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இப்போது எந்த வேலைக்கு செல்ல போகிறாய்?" என்றாள்.
"நான் எந்த வேலைக்கும் செல்லவில்லை இங்கு அனைவருமே காலையிலேயே எழுந்து விடுவார்காள். அதனால் நானும் எழுந்து இப்போது அதுவே பழக்கமாகி விட்டது." என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் ஆதிரை வேகமாக சென்று அந்த அறையின் கதவை திறந்தாள்.
அங்கு வேலை செய்யும் பெண்மணி கையில் தேனீருடன் வந்திருந்தாள். ஆதிரை ஒரு சிறிய புன்சிரிப்புடன் அவரிடமிருந்து இரண்டு தேநீரை எடுத்து கொள்ளவும் அவர் மீதி இருந்த தேனீர்களுடன் மாடிக்கு சென்றார். தேனீரை வாங்கி அங்கிருந்த மேஜை மீது வைத்தவள் ரம்யாவிடம்
"வேகமாக கிளம்பி வந்தால் தேநீர் அருந்திவிட்டு சிறிது நடந்து வரலாமா?" என்று ஆதிரை கேட்கவும் ரம்யாவும் சரி என்று எழுந்து சென்றாளும் அவளது மனம் முழுவதும் ஆதிரையிடம் இன்று எப்படியாவது பேசி சென்னை அழைத்து சென்று விட வேண்டும் என்ற முடிவே இருந்தது.
தொடரும்...​
 
Status
Not open for further replies.
Top Bottom