Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
நட்சத்திரமடி படிச்சுட்டு வேறு கதை தேடும் போது இந்த கதை கண்ணில் பட்டது.வாழ்த்துகள்.
 

Vaishu97

New member
Messages
5
Reaction score
2
Points
3
Spr epi akka ..... 🤩 :love:
Sena panna thirutuku vattium mothuluma nalla anubavakka pora .......🤩:love::ROFLMAO:
Spr akka All the best....... (y) :love:
 

ivalvaasagi

New member
Messages
3
Reaction score
3
Points
3
முன்னுரை

ஹீமாவாரி என்ற ஒர தங்க சிலையின் கதை இது.

அந்த சிலையை பல தலைமுறையாக பாதுகாத்து வைத்திருந்தது‌ ஒரு குடும்பம். அந்த சிலையால் மக்களுக்கு ஆபத்துக்கள் வந்து விடுமோ என்று பயந்திருந்தது அந்த குடும்பம்.

அந்த சிலையை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தது மற்றொரு கூட்டம்.

சிலையால் பணம் சம்பாதிக்க நினைத்தவர்கள் சேனாவிற்கு அந்த வேலையை சொல்லியிருக்க கூடாது.

இளம் வயது திருடன் சேனா தங்கசிலையை பார்த்ததும் அதை தானே விற்று காசாக்க நினைத்தான். ஆனால் அப்போது அவன் அறிந்திருப்பானா அந்த சிலை தன் தொடுதலில் மட்டும் உயிர் கொண்ட உடலாக மாறும் என்று.!? இல்லை அந்த உயிர் பெற்ற பெண்ணை தன் உயிராக விரும்புவோம் என்று அறிந்திருப்பானா.?

ஹீமாவாரியை சிலையாக மாற்றி வைத்த குடும்பம் ஒரு பக்கம் துரத்தியது. அந்த தங்க சிலையின் ரகசியம் அறியாத கடத்தல் கூட்டம் ஒரு பக்கம் துரத்தியது. ஹீமாவாரியின் கைப்பிடித்து ஓடிய சேனாவால் அவளின் கையை எங்கேயும் விடவே முடியாது. அவனின் தீண்டல் விலகினால் அவள் வெறும் ஒரு சிலை. என்ன நடக்கும் இந்த போராட்டத்தில்.?

பேன்டஸி கதையை ஒரு மசாலா டைப்ல எழுதலாம்னு இருக்கேன் நட்புக்களே.. எந்த தடங்கல்களும் வராமல் இருந்தால் கதை நாளையிலிருந்து தினசரி காலை ஏழு டூ எட்டுக்குள்ள (இந்திய நேரப்படி) அப்டேட் ஆகும் நட்புக்களே.

தொடரை பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் செக்சனில் பகிர்ந்துக் கொள்ளுங்கள். கதை பிடிச்சா மறக்காம லைக் பண்ணுங்க..
உங்க கதைகளை படிப்பதற்காகவே இந்த தளத்தில் முதன்முதலில் பதிவு செய்திருக்கிறேன் சகோ.. 😍 Wattpad-ல உங்க கதைகளின் அடிமை நான்.. காலை உதையமே எனக்கு உங்களின் கதை வாசித்த பிறகு தான்.. இப்போ சில நாட்களாக உங்களின் கதைகளை படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன் காரணம் புகுந்தவீட்டை கவனிக்கும் புது பொறுப்புகள் 😁😂 மின்னல் வேகத்தில் படித்து விட்டு ஓடுவதால் சின்ன சிக்கல்.. இனி நேரம் ஒதுக்கி என் வார்த்தைகளை அங்கேயும் இங்கேயும் அளிக்க முயல்கிறேன்.. உங்கள் கதைகள் உங்கள் பெயரையும் உங்களையும் மென்மேலும் உயர்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.. நான் கதைகளின் காதலி.. Ival_vasagi wattpad-il.. 😁😍😘💪🏻💜
 

ivalvaasagi

New member
Messages
3
Reaction score
3
Points
3
கார்கால களவு 1

அந்த நடுநிசி வேளையில் மழை அடர்த்தியாக பெய்துக் கொண்டிருந்தது. சேனாதிபதி தன் வாழ்நாளில் பார்த்திராத மழை அது. அது சரி. ஒரு திருடனான அவனுக்கு மழையை பற்றி என்ன அக்கறை.?

மழையில் நனைந்தபடியே அந்த பழங்காலத்து வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்தான்.

சேனா இருபத்தியொரு வயது இளைஞன். கல்லூரி சென்றுக் கொண்டிருந்தான். திருடுவது அவனது பொழுதுப் போக்கு. அந்த பொழுதுப் போக்கிலும் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் அவன். களவும் கற்று மற என்றார்கள். திறம்பட கற்றுக் கொண்டவனுக்கு மறக்க மனமில்லை.

இவனை கண்டதும் அந்த வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த நாய் குரைத்தது. ஆனால் மழை சத்தத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு நாய் குரைத்த சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த வீட்டிலும் ஆள் இல்லையென்றுதான் நம்பகமான செய்தி கிடைத்திருந்தது.

இருளையும் பகலாகவே நினைத்து வாழ்பவன் அவன். அதனாலேயே இருளிலும், அந்த அடை மழையிலும் கூட அவனுக்கு அனைத்தும் தெளிவாக தெரிந்தன. அதுவும் இல்லாமல் அந்த வீட்டை பகலில் நான்கைந்து முறை வந்து நோட்டம் விட்டுதான் சென்றிருந்தான். அதனால் இந்த இரவு ரோந்து அவனுக்கு சிரமம் கிடையாது.

வேப்ப மரத்தின் பெரிய தண்டின் மீது நடந்தவன் அந்த ஓட்டு வீட்டின் கூரையின் மீது கால் பதித்தான். கால்கள் இரண்டும் வழுக்கியது. ஒரு வார அடைமழை அது. சிரமப்பட்டு ஓடுகள் சிலவற்றை பிரித்தான். கயிறு ஒன்றை உத்திரத்தில் கட்டிவிட்டு வீட்டுக்குள் குதித்தான்.

அணிந்திருந்த ஜெர்கினால் தலையும் மேலுடலும் மட்டும் நனையவில்லை. ஆனாலும் இந்த மழையால் கால்சட்டை முழுதாக நனைந்திருந்தது. ஈரமாக இருந்த உடையிலிருந்து தண்ணீர் சொட்டி தரையை நனைத்தது. அவன் பிரித்து வைத்து விட்ட ஓடுகளின் இடைவெளியில் மழைநீர் சிந்தி மீண்டும் அவனையே நனைத்தது. இருளுக்கும் திருட்டுக்கும் பயம் கொள்ளாதவனா இந்த மழைக்கு பயப்பட போகிறான்.?

தள்ளி வந்து நின்றான். கால் சட்டையின் பாக்கெட்டில் இருந்த சிறு டார்ச்சை எடுத்து இயக்கினான். அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் முதுகில் மாட்டிக் கொண்டிருந்த பேக்கை எடுத்தான். அதுவும் அவனை போலவே ஈரமாகதான் இருந்து. ஜிப்பை கழட்டி அதிலிருந்த க்ளவுஸ்களை எடுத்து மாட்டிக் கொண்டான். கை ரேகைகளை விட்டுச் செல்ல மனமில்லை அவனுக்கு.

பலவித பொருட்கள் அந்த அறையில் குவிந்துக் கிடந்தது. அத்தனையையும் தள்ளி விட்டுவிட்டு தான் தேடி வந்ததை தேட ஆரம்பித்தான். அவன் தேடி வந்தது ஒரு சிலை. அது ஒரு தங்க சிலை. திருடி கொண்டு வர சொன்னவன் விளக்கமாக சொல்லி கடிதத்தை தந்திருக்கிறான். கடிதத்தோடு இணைக்கப்பட்ட புகைப்படத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்தான். பாதி நனைந்திருந்தது அந்த புகைப்படம். அந்த புகைப்படத்தில் இருந்த சிலை மின்னுவதை போலிருந்தது.

புகைப்படத்தை நான்காக மடக்கி பாக்கெட்டில் சொருகி கொண்டவன் டார்ச் ஒளியை அந்த அறையை சுற்றி அடித்தான். ஒரு இடத்தில் ஆளுயர பொருள் ஒன்று பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த உருவம் சிலைதான் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அடி மீது அடியெடுத்து வைத்து நடந்தவன் அருகே சென்றதும் அதன் மீதிருந்த துணியை உருவி கீழே எறிந்தான். அவன் கையிலிருந்த டார்ச்சின் அரை குறை ஒளியில் அந்த சிலை நெருப்பாக ஜொலித்தது‌.

சேனாவை அந்த சிலை மயக்கியது. அந்த பெண் சிலையின் அழகில் அவன் மயங்கவில்லை. மாறாக அதன் விலை என்னவாக இருக்குமோ என்றுதான் மயங்கி நின்றான். தன் மனதில் இருக்கும் பேராசை எனும் பேயிற்கு இந்த சிலையாவது தக்க பதிலடி தருமா என்று நினைத்தான்.

அந்த சிலையின் அருகே உள்ள கையை கொண்டு சென்றான். அவ்வளவு அழகாக இருந்தது அந்த டார்ச் வெளிச்சத்திலேயே. பகல் ஒளியில் எவ்வளவு அழகாக இருக்குமோ என்று பார்க்க ஆவலாக இருந்தது. அந்த சிலையை தொட நினைத்தவன் நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டு கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

இந்த சிலையை கொண்டுப் போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால் அவனுக்கு பல லட்சம் கிடைக்கும். ஆனால் ஆளுயர தங்க சிலையை கை மாற்ற மனம் வரவில்லை அவனுக்கு. அந்த சிலையை அபகரிக்க வேண்டும் என்று உடனே முடிவெடுத்து விட்டான்.

கிளவுஸ் மாட்டியிருந்த கைகளால் சிலையை தூக்கினான். அவன் சுலபமாக தூக்கும் அளவிற்குதான் இருந்தது எடை. சிலையை தூக்கி வந்து ஓடு பிரித்த கூரையின் கீழே நிறுத்தினான். மழை நீர் விழுந்ததில் இன்னும் அதிகமாக ஜொலித்தது அந்த சிலை.

பேக்கை எடுத்தவன் அதிலிருந்த பெல்டுகளை எடுத்து அந்த தங்க சிலையோடு இணைத்தான். பெல்டின் நுனியை தன் இடுப்பில் இணைத்துக் கொண்டான்.

மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை பற்றியவன் மேலே ஏறினான். பின்னர் சிலையையும் தூக்கினான்.

அந்த சிலையின் எடையையும் தன் எடையையும் வேப்ப மரம் தாங்குமா என பயந்தவன் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். பழங்கால மரம் பாரம் தாங்கியது. கொஞ்சம் சிரமமாக இருந்தது சேனாவிற்கு.

தட்டு தடுமாறி காம்பவுண்ட் சுவற்றின் மீது வந்து நின்றான். சிலையை பார்த்தான். மழையென்றும் பாராமல் அதை கட்டி தழுவ சொன்னது மனம். எவ்வளவு பெரிய பணக்காரன் நான் என்று கூப்பாடு போட்டது புத்தி.

நாயின் குரைப்பு சத்தம் வேறு மழை சத்தத்தையும் தாண்டி வந்து இம்சித்தது. சிலையோடு சுற்றி இருந்த பெல்டை கழட்டி தரையில் தள்ளினான். தங்க சிலை உடைந்திருக்காது என்று நம்பினான்.

தரையில் மழைத் தண்ணீர் அரையடிக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் தொப்பொன்று குதித்தான். ஆனால் கடைசி நொடியில் தடுமாறியதில் திட்டமிட்ட இடத்தில் விழாமல் சிலையின் மீது வந்து விழுந்தான்.

"செத்தான்டா சேனா.." என்று முனகியவன் குழப்பத்தோடு எழுந்து நின்று சிலையை பார்த்தான். "மேலே விழுந்தும் ஏன் அடிப்படல.? மழை தண்ணியாலயா.?" என குழம்பியவன் சிலையை தூக்கிக் கொண்டு சாலையின் மறுபக்கம் நிறுத்தியிருந்த காருக்கு சென்றான். சிலையை பின் சீட்டில் கோணலாக படுக்க வைத்தான். பின்னர் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை கிளப்பினான்.

"ச்சை.. காரும் ஈரம்.. காத்தும் ஈரம்.." என்று சலித்துக் கொண்டவனின் ஜெர்கின் அணிந்த தலையில் மோதியது சிலையின் கால்கள்.

"சிலை வேற உதைக்குது.. வெளியே மழை வேற வெளுக்குது.. கசகசன்னே இருக்கு.." என்று தனக்கு தானே பேசியவன் கிளவுஸையாவது கழட்டி இருக்கலாம் என்று நினைத்தான்.

அரை மணி நேரத்தில் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் சேனா. அது ஒரு ஐந்து மாடி கட்டிடம். பத்து வருடங்களுக்கு முன்பு குடியிருப்புக்காகதான் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டுக்கையில் அதிக உயிர் பலி நேர்ந்ததால் இடம் சரியில்லை என்று கட்டிடத்தை விட்டு சென்று விட்டார்கள் இதை கட்டியவர்கள்.

இரண்டு வருடங்களாக இந்த கட்டிடத்தில்தான் வசித்து வருகிறான் சேனா. பூசப்படாத அந்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடியில் உள்ளது அவன் தங்கும் இடம்.

யாரும் இல்லாத இடம் என்பதால் அவ்வப்போது சில குடிகாரர்கள் பாட்டிலோடும், சில காமுகர்கள் தாங்கள் கடத்திக் கொண்டு வந்த பெண்களோடும் இந்த கட்டிடத்திற்கு வருவார்கள். ஆனால் கட்டிடத்திற்குள் நான்கைந்து இடங்களில் ஸ்பீக்கர்கள் சிலவற்றை தானே தயாரித்து மறைத்து வைத்துள்ளான் சேனா. யாராவது முப்பதடி தொலைவில் வந்தாலே வித்தியாசமாக சத்தமிடும் அந்த ஸ்பீக்கர்கள். சத்தமிட்டது பேய்தான் என்று நம்பி ஓடிய அந்நியர்கள் மீண்டும் அந்த கட்டிடத்தின் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை.

சேனா பெருமூச்சி விட்டான்.

வெறுமனே தூக்குகையில் கனம் இல்லாத சிலை ஐந்து மாடிக்கு படிகளில் தூக்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

"இந்த இடத்துல லிப்ட் கட்டிய பிறகு விட்டுட்டு போயிருக்க கூடாதா.?" என்றான் எரிச்சலோடு.

தண்ணீர் வசதி மட்டும்தான் இருந்தது. அதுவும் தரை தளத்தில். ஆரம்பத்தில் தினமும் தரைதளம் சென்றுதான் குளித்து வந்தான். மின்சாரமும் ஐந்தாம் தளம் வரை இல்லை. ஆனால் இப்போது எல்லாமும் அவனின் வீட்டில் இருந்தது. தரையிலிருந்து பைப் லைன் தந்து தண்ணீரை மேலே கொண்டு வந்தான். அருகே இருந்த மின்கம்பம் ஒன்றில் திருட்டு இணைப்பு தந்து மின்சாரத்தையும் தன் வீட்டிற்கே கொண்டு வந்தான்.

தங்க சிலையோடு தன் வீட்டின் வாசலுக்கு வந்தான் சேனா. அவனது வீட்டை மட்டும் சீர் படுத்தி வைத்திருந்தான். இரும்பு கதவை திறந்தான். அதன் பின்னால் இருந்த மர கதவு பாஸ்வேர்ட் கேட்டது. நம்பர்களை அழுத்திவிட்டு உள்ளே சென்றான். வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது வீடு.‌ விளக்குகள் பளிச்சென்று எரிந்துக் கொண்டிருந்தது. ஐந்து நட்சத்திர ஓட்டலை போல அலங்கரித்து வைத்திருந்தான் தன் வீட்டை.

சிலையை ஹாலில் பொத்தென்று போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தான். அரை குறை ஈரம் சோபாவையும் நனைந்தது. அதை கவனிக்கவில்லை அவன். ஐந்து மாடிகள் சிலையை தூக்கி வந்தது கால்களுக்கு வலியை தந்து விட்டது. கால்கள் இரண்டையும் பிடித்து விட்டுக் கொண்டான். இடையில் தொல்லை செய்த கிளவுஸை கழட்டி வீசினான்.

அந்த வீட்டிற்குள் அவன் ராஜா. தாய் இல்லாததால் சமையல்காரனும் அவனே. வேலைக்காரனும் அவனே. தந்தை இல்லாததால் தன் வாழ்க்கைக்கு பாதுகாவலனும் அவனே.

வெளியே பெய்துக் கொண்டிருந்த மழையின் சத்தம் உள்ளே கேட்கவில்லை. அதுவே அவனுக்கு சிறு நிம்மதியை தந்தது.

ஒரு வாரமாக கல்லூரிக்கு விடுமுறை. எல்லாம் இந்த மழையால்தான். திருடவும் போக முடியவில்லை அவனால். மழையால் அனைவருமே வீட்டில் இருந்தார்கள்.

சேனா வெறுத்துப் போய் இருந்தபோதுதான் நேற்று முன்தினம் மாலையில் அருள் என்று ஒருவன் போன் செய்து இந்த தங்க சிலை பற்றி கூறினான். நேரில் சென்று அவனை பார்த்து சிலையின் விவரம் வாங்கி வந்தான் சேனா.

தொழிலில் நேர்மை என்பதால்தான் அருள் இவனை தேடி வந்தான்.

இரவு மணி பன்னிரெண்டுக்கு முன்பு வரை நியாயமான திருடன்தான் சேனா. யார் எதை கடத்தி வர சொன்னாலும் கடத்தி வந்து தந்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்வான்.

பித்தளையில் உள்ள சிலைகளும், கோவிலில் இருக்கும் ஐம்பொன் சிலைகளும் இவனுக்கு சாதாரணமானவை. அதை இவனால் இங்கே விற்கவும் முடியாது. ஆனால் இதுவோ தங்க சிலை. ரம்பம் வைத்து குட்டி குட்டியாக சிலையை அறுத்தாவது தங்கத்தை விற்று காசு சேர்த்தி விடுவான்.

சோபாவில் சாய்ந்து படுத்திருந்தவன் சிலையை வெறித்து பார்த்தான்.

"உன்னை உருக்கி வித்துட்டு இதே மாதிரி அஞ்சடுக்குல ஒரு வீடு கட்ட போறேன் நான்.." என்றான்.

சிலையின் முகத்தை பார்த்தான். பரிதாபமாக இருந்தது.

"ரொம்ப அழகு நீ.." என்றான். கணுக்கால் வரை உடை போல் செதுக்கப்பட்டு இருந்தது அந்த சிலைக்கு.

"சிலைக்கு எதுக்கு டிரெஸ் போட்டு விட்டிருக்காங்க.? லூசு பசங்க.." என்றவன் நடுங்கிய தன் கை விரல்களை பார்த்தான்.

"வீணா போன மழை.. அதுக்கு ஒரு ஓவர் சீன் குளிர் வேற.." தன் மேனியையே திட்டிக் கொண்டவன் குளிக்க கிளம்பினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
😂😂 Kadha epavum pola super sis.. waiting for sena touching touching that beauty silai and that beauty silai thiti g sena for kidnapped her 😁🤧😂
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Nice starting sis.. All the best..Sena thirudana irundhalum adhu la konjo nermai irundhuchu...indha silaiyai parthathum adhum pocha..waiting for next update
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
நட்சத்திரமடி படிச்சுட்டு வேறு கதை தேடும் போது இந்த கதை கண்ணில் பட்டது.வாழ்த்துகள்.
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
உங்க கதைகளை படிப்பதற்காகவே இந்த தளத்தில் முதன்முதலில் பதிவு செய்திருக்கிறேன் சகோ.. 😍 Wattpad-ல உங்க கதைகளின் அடிமை நான்.. காலை உதையமே எனக்கு உங்களின் கதை வாசித்த பிறகு தான்.. இப்போ சில நாட்களாக உங்களின் கதைகளை படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன் காரணம் புகுந்தவீட்டை கவனிக்கும் புது பொறுப்புகள் 😁😂 மின்னல் வேகத்தில் படித்து விட்டு ஓடுவதால் சின்ன சிக்கல்.. இனி நேரம் ஒதுக்கி என் வார்த்தைகளை அங்கேயும் இங்கேயும் அளிக்க முயல்கிறேன்.. உங்கள் கதைகள் உங்கள் பெயரையும் உங்களையும் மென்மேலும் உயர்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.. நான் கதைகளின் காதலி.. Ival_vasagi wattpad-il.. 😁😍😘💪🏻💜
நன்றிகள் சிஸ் ❤️😍🤗
 
Top Bottom