Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றில் உன் வாசம்

Punitha Karthikeyan

Saha Writer
Team
Messages
12
Reaction score
0
Points
1
அத்தியாயம் -11

காற்றில் உன் வாசம்

S.M. Multispeciality Hospitals,

அந்த தனியார் மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ICU வார்டு இன்னும் பரபரப்பாக இருந்தது.

பின்னே இருக்காதா? அந்த மருத்துவமனை உரிமையாளரின் மகள் சாய்லஷ்மி அல்லவா ICU வில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்தை தாண்டியும் கண் விழிக்கவில்லையே.

முதல் நாள் மாலை 6 மணி போல் சேர்க்கப்பட்டால் சாய்லஷ்மி , முதலில் பரிசோதித்த மருத்துவர் , அவங்களுக்கு heavy blood லாஸ் ஆகியிருக்கு அவங்களுக்கு rare பிளட் குரூப் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தாள் கொஞ்சம் arrange பண்ணுங்க இங்க stock இல்லை என்றார் .

அப்போது கார்த்திக் , சார் எனக்கும் என்னோட மனைவிக்கும் அதே blood group தான் என்றான்.

மருத்துவர் , ஓ thank god என்றவர் செவிலியை கூப்பிட்டு கார்த்திக்கின் blood check செய்ய சொன்னவர் கார்த்திக்கின் மனைவியை அழைத்து வருமாறு கூறிவிட்டு மறுபடியும் ICU விற்குள் நுழைந்து கொண்டார்.

மித்ரன் புனிதாவிற்கு கால் செய்து மருத்துவமனைக்கு வரசொன்னான்.பின்னர் எல்லாருக்கும் கைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைவரிடமும் பிரியா என்றே கூறப்பட்டது. ஏன் இந்த ஆள்மாறாட்டம் என்று இவர்களுக்கே தெரியாத பொழுது மற்றவர்களையும் குழப்ப வேண்டாம் என்றும் சாய்லஷ்மி எழுந்தாள் மட்டுமே இந்த குழப்பத்திற்கான விடை கிடைக்கும் அதுவரைக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று மித்ரன் கூறிவிட கார்த்திக்கும் புனிதாவும் அமைதிகாத்தனர்.

அதன்பின் ஒவ்வொருவராக மருத்துமனைக்கு வந்தனர். முதலில் வந்தவர் சாய்ப்ரியாவின் தந்தை 'அருண்மொழி வர்மன், owner of S.M. Group of companies'வயது-55( இவரை பற்றி flashblack ல பார்க்கலாம்).

55 வயதுக்குரிய எந்த விதமான முதிர்வும் இல்லாமல் ஒரு கம்பிரத்துடனே வந்துகொண்டிருந்தார்.முகத்தில் மட்டும் சிறு கவலையும் , பதற்றமும் இருந்ததோ??நேராக மித்ரனிடம் வந்தவர் அவனை பார்த்து ,சாய்ம்மாக்கு என்ன ஆச்சு?? என்றார்.

மித்ரன் , மாமா யாரு என்னன்னு தெரியலை இப்படி பண்ணிட்டு போய்ட்டாங்க ... அவங்க இருக்குற இடத்தை trace பண்ண சொல்லிருக்க இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பாங்க அந்த கும்பல்ல ஒருத்தனும் உயிரோட இருக்கமாட்டாங்க என்றான் கோவமாக.

அருண் , சாய்ம்மா இப்போ எப்படி இருக்கா ?

மித்ரன் , operation நடந்திட்டு இருக்கு...அது முடிஞ்சதும்தான் சொல்லமுடியும்னு doctor சொல்லிட்டாரு என்றான் வருத்தமாக .

அவ்வளவுதான் பேச்சு முடிந்தது என்பதுபோல அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார். அவருக்கு ஆறுதலாக அவரின் கைகளை தட்டி கொடுத்து கொண்டிருந்தான் கார்த்திக் .

மித்ரன் தன் மனதில் , எவ்வளவு கம்பிரமான மனிதன் உறவு என்று வந்துவிட்டால் அனைத்தும் மறந்துவிடுகிறது. ஒரு பெண்ணுக்கே இப்படியென்றால் இன்னொரு பெண் எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை அதை பற்றி அறிந்தால் மனிதர் என்ன அவாரோ ?? என்று வருந்திக்கொண்டிருந்தான்.

மற்றவர்கள் ஒவ்வொருவராக வருவதை பார்த்து தன் சிந்தனைகளுக்கு gate போட்டுவிட்டு வந்தவர்களுக்கு தகுந்தாற்போல் பதில் கூற ஆயத்தமானான் .

அப்போது வெளியில் வந்த மருத்துவர் அனைவரையும் பொதுவாக பார்த்து , ம்ம் அவங்களோட மனசும் உடம்பும் எங்களோட treatment க்கு ஒத்துழைக்க மாட்டேங்குது.... அவங்களோட காயம் ரொம்ப ஆழமாயிருந்தது அதை எங்களால சரி பண்ண முடிஞ்சுது பட் அவங்க கண்விழித்து எழும்புறது எங்க கையில இல்லை..... ஏன் எங்களுக்கு cooperate பண்ணமாட்டேங்குறாங்கனு புரியலை....இப்படியே நிலைமை போனால் அவங்கள காப்பாற்றுவது ரொம்ப கஷ்டமா போய்டும்.....I think ரொம்ப நாளா ஏதோ ஒரு stress அவங்களுக்கு இருந்திருக்கணும் அதுல இருந்து அவங்க வெளில வரணும் mind சொல்றதை அவங்க உடம்பு கேட்க start பண்ணிட்டா எங்களோட treatment கு அவங்க cooperate பண்ண chance இருக்கு இல்லைன்னா god's grace பார்க்கலாம் என்றார்.

அனைவரின் முகமும் கலவரத்தை காட்ட அங்கிருந்த இரண்டு ஜோடி கண்கள் மட்டும் சந்தோஷத்தில் இருந்தது அதனை மித்ரனின் கண்கள் மறக்காமல் படம் பிடித்தது. பின்னர் மருத்துவரிடம்

மித்ரன் , சார் அதுக்கு எங்களால ஏதாவது பண்ணமுடியுமா??? என்றான் கலங்கிய கண்களுடன்.

மருத்துவர் , ம்ம் ... why not Mr. மித்ரன் அவங்களுக்கு நெருக்கமானவங்க யாராச்சும் அவங்ககிட்ட பேசுனா அவங்களோட mind வேலை செய்யலாம் but over stress பண்ணக்கூடாது என்றார் எச்சரிப்பது போல்.

மித்ரன் , அப்போ நான் பேசுறேன் சார் என்றான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

சிறிது யோஷித்த மருத்துவர் , ok you may carry on but சொன்னது நியாபகம் இருக்கட்டும் என்று எச்சரித்தே ICU விற்குள் அனுமதித்தார்.

உள்ளே சென்ற மித்ரன் அங்கு ஏதேதோ wire கள் மாட்டப்பட்டிருக்க , பக்கத்திலிருந்த monitor அவளின் நிலைமையை உணர்த்திக்கொண்டிருந்தது.tube வழியாக oxygen அவளுள் சென்று கொண்டிருந்தது. அவளை பார்த்தால் அசந்து தூங்கும் பதுமை போல் தான் இருந்தால் ஆனால்......மனம் லேசாக கலங்கியது மித்ரனுக்கு.
அவள் அருகில் சென்றவன் , லக்கி என்றழைத்தான்.

எந்த ஒரு அசைவும் இல்லை......

மித்ரன் , லக்கி எழுந்திரிம்மா எழுந்திரு

எந்த ஒரு அசைவும் இல்லை......

மித்ரன் ,ஹ்ம்ம்.....உங்களை தாய்க்கு தாயா தந்தைக்கு தந்தையா வளர்த்தாரே உங்க அப்பா அவருக்காகவாச்சும் எழுந்திரி லக்கி என்றான்.

எந்த ஒரு அசைவும் இல்லை..........

மித்ரன் , உன்னோட அக்கா எங்க இருக்கா எப்படி இருக்கானு எனக்கு தெரியாது....என்னோட சபி உன்னோட அக்கா சாய்பிரியா உயிரோட இருக்கானு சொல்லவாச்சும் எழுந்துவா....

இப்போவும் அசைவு இல்லை......

மித்ரன் , ம்ம்ம்......அப்போ நீ எழுந்து வரமாட்டியா??? நான் ஒரு பாவி லக்கி உன்னோட அக்காவை கல்யாணத்துக்கு முன்னாடி உயிருக்கு உயிரா காதலிச்சேன் ஆனால் கல்யாணத்துக்கு அப்பறம் காதலிக்கவே மறந்திட்ட.....எல்லாரையும் கண்மூடிதனமா நம்பின நான் உன்னோட அக்காவை கொஞ்சம் கூட நம்பலை....நம்பியிருந்தா இவ்ளோ பிரச்சனையும் வந்திருக்காது......அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் லக்கி அவளோட காலுல விழுந்து மன்னிப்பு கேக்கணும்...plz லக்கி எழுந்து வா..... சபி எங்க இருக்கானு சொல்லு please......என்றான் கலங்கிய விழியுடன்....

அப்போது monitor இல் ஏதோ மாற்றம் நடந்தது சாய்லட்சுமி கைகள் நடுங்கியது உடல் தூக்கி தூக்கி போட கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அதனை பார்த்து பதறிய மித்ரன் மருத்துவரை அழைத்து வந்தான். மித்ரனை வெளியில் நிற்கவைத்துவிட்டு உள்ளே சென்றார் மருத்துவர். அவர் வெளியில் வரும்வரை மித்ரனுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவர் மித்ரனை பார்த்து , ஹ்ம்ம் அவங்க சீக்கிரம் recover ஆகிடுவாங்க dnt worry ......நீங்க என்ன பேசுனீங்கன்னு தெரியல but இப்போ அவங்க எங்களுக்கு cooperate பன்றாங்க.... ஹ்ம்ம் இன்னும் 12 hours ல கண்ணு முழிச்சிருவாங்க என்றவர்.

அருண் , அது ஏன் டாக்டர் 12 hours ஆகும் ?? இப்போதான் சரி ஆகிடுவானு சொன்னீங்க ?? என்றார் கவலையுடன்.

மருத்துவர் , அவங்க இப்போவாரைக்கும் மயக்கத்திலே தான் இருந்தாங்க...இப்போதான் மயக்கத்தில் இருந்து வெளில வந்து அவங்க துக்கத்துக்கு போயிருக்காங்க...... heavy blood loss ஆனதால அவங்க நல்ல தூங்கணும் அதுக்கு மெடிசின் கொடுத்திருக்கோம் அதனால 12 hours ஆகும் dnt worry என்று அருணின் தோளில் தட்டிக்கொடுத்தவர் all is well man என்று கூறிவிட்டு சென்றார் அந்த மருத்துவமனையின் dean மற்றும் அருண்மொழி வர்மனின் உயிர் தோழனுமான Mr. தமிழ்வாணன்.....

அப்போது தான் அனைவரின் முகமும் தெளீவானது...ஆனால் அந்த இரு ஜோடி கண்களில் இப்போது குரோதம் நிறைந்திருந்தது. அதனை மித்ரனின் கண்கள் மட்டும் அல்ல அரவிந்தின் கண்களும் படம் பிடித்தது.

12 மணி நேரம் ஆகும் என்பதால் அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டான் மித்ரன். கார்த்திக் , புனிதா , அருண்மொழி வர்மன் , மித்ரன் மட்டுமே இருந்தனர்.

மித்ரன் அருண்மொழி வர்மனிடம் வீட்டுக்கு கிளம்புமாறு கூற அவரோ மறுத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். அவரை வற்புறுத்தவும் மனம் வரவில்லை.

பாரதிக்குட்டியும் நிஷாக்குட்டியும் புனிதாவின் தந்தை தான் பார்த்துக்கொள்ளுவதாக கூறி அழைத்து சென்றுவிட்டார் .

அனைவரும் சென்றபின் அரவிந்தை தனியாக அழைத்து ஏதோ கூறினான்.மித்ரன் சொன்னது புரிந்தது என்பதாக தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டான் அரவிந்த்.

அருண்மொழி வர்மனுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு தங்களுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருமாறு அருண்மொழி வர்மனையும் கார்த்திக்கையும் அனுப்பிவைத்தான் மித்ரன்.

அதன்பின் தான் சற்று ஆசுவாசமாக ஒரு நாற்காலியில் அமர்ந்தான் மித்ரன்.அப்போது அவன் கண்களில்பட்டது புனிதாவின் அருகில் இருந்த சாய்லட்சுமியின் கைப்பை.

புனிதாவின் அருகில் வந்தவன் , இது அவளோடதுதான??? என்றான் கேள்வியாக .

புனிதா , ஆமாண்ணா..... இது பிரியா இல்லை .... லக்கியோடது தான்.....இதை CEO ஆபீஸ்ல வச்சு கொடுத்தாள்.... திரும்ப வாங்க மறந்து கிளம்பிட்டாள்......அதை கொடுக்க வந்த இடத்திலே தான் இவ்வளவும் நடந்திருந்துச்சி என்றாள் அழுகையுடன்.

மித்ரனின் கண்களும் கலங்கியதோ!!???!!

தன் கண்ணீரை மறைத்தவன் கைப்பையை அவளிடம் இருந்து வாங்கினான்.

அதனை திறந்து பார்க்க உள்ளே அவளது கைபேசியில் ஏதோ அழைப்பு வந்த வெளிச்சம் மட்டும் தெரிந்தது சத்தம் கேட்கவில்லை. ( meeting அப்போ அந்த பொண்ணு அதாங்க லக்கி போனை silent ல போட்டிருச்சு...)

கைபேசியை எடுத்து பார்த்தான் கிட்டத்தட்ட 20 missed calls மேல் இருந்தது ..... யாராக இருக்கும் என்று அந்த எண்ணுக்கு அழைக்க போக அந்த எண்ணில் இருந்தே கால் வந்தது.....அதனை உடனே atten செய்து காதில் வைத்தான்.

எதிர்முனை , ஹலோ சகி ஹலோ எவ்ளோ நேரம் try பண்றது ஏன் கால் atten பண்ணலை?? என்ன ஆச்சு??? எனக்கு ஏதோ மனசே சரி இல்லை உனக்கு ஒன்னும் இல்லைல ??? ஹலோ ஹலோ சகி என்று எதிர்முனை படபடக்க பேசுவது யார் என்று அறிந்த

மித்ரன் , நான் மித்ரன் பேசுறேன் என்றான்.

எதிர்முனை , ................

மித்ரன் , நீ எங்க இருந்தாலும் சரி உடனே கிளம்பி திருநெல்வேலியில் இருக்குற S.M. Hospital கு வா என்றான் கட்டளை போல .....

எதிர்முனை , ஏ......ன் எது.......க்கு

மித்ரன் , எதுக்குன்னு காரணம் சொன்னால் தான் வருவீங்களோ??? என்றான் கோவமாக .

எதிர்முனை , இல்லை வரேன் என்றவன் அழைப்பை துண்டித்தான்.

சிறிது நேரம் கைபேசியை வெறித்துப்பார்த்த மித்ரன் கைப்பையை மட்டும் புனிதாவிடம் கொடுத்துவிட்டு கைபேசியுடன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கைபேசியை open செய்து பார்த்தான் அதன் diaplay ல் ஒரே உருவத்தை கொண்ட இருபெண்களின் புகைப்படம் சிரித்தது. பார்த்ததும் தெரிந்தது அவ்விருவரும் சாய்ப்ரியா மற்றும் சாய்லஷ்மி என்று.

அவர்களின் சிரிப்பை பார்த்த மித்ரனின் இதழும் சிரிப்பை உதிர்த்தது.கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தவனின் எண்ணம் முழுவதும் அவர்களின் முதல் சந்திப்பை நோக்கி பயணித்தது.

வாருங்கள் நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிப்போம் அடுத்த அத்தியாயத்திலிருந்து ........

தொடரும்...........​
 
Top Bottom