Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Messages
74
Reaction score
72
Points
18
Shradha enna pannuranu ennaku puriyala vc yayum love pannitu adhi koodavum pesitu iruka rendu perayum ava cheat pannitu iruka😠😠😠 yaaru antha secret room pathi sollirupa athu shradhava irukumo🤔🤔 pavam vc and family..ithukellam serthu vc present la pannurathu correct nu than ennaku thonuthu😒 interesting epi akka 😍😍😍
 
Messages
60
Reaction score
60
Points
18
பாவம் வீசி யார் அவன் பெயர் சொல்லி இருக்கிறார்கள் ஷ்ரத்தாக்கு ஆதியுடன திருமணம் நடக்கவில்லையா வீசியுடன் எப்படி திருமணம் நடந்தது ஷ்ரத்தா ஒரு மனதாக இருந்து இருக்கலாம் வீசி பாவம் என்ன கஷ்டபட்டானோ
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
Superb and interesting 👌👌👌innum sila suspense iruku. Vc ku epdi muthukula thalumpu vanthathu and shraddha voda ninaivukal marakka karanam. 🤔🤔ithu rendukum adutha epi la pathil irukum pola🤔🤔 👍👍
 
Vani raj

Member
Messages
49
Reaction score
42
Points
18

காதல் கணம் 27​

வீசி தன்னை அறைந்து அவமானப்படுத்திய அன்று அழுதுகொண்டே வீட்டிற்குக் கிளம்பிய ஷ்ரதா வழியில் வீரமாகாளி கோவிலைப் பார்த்ததும் உள்ளே செல்ல நினைத்தாள். ஆனால், வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டாள்.

தனதறைக்குச் சென்றதும் கைப்பையையும் துப்பட்டாவையும் மெத்தையில் வீசியவள், அசந்தர்ப்பமாக ஒலித்த செல்போனின் மெட்டிசைப்பில் அவன் தான் என்று ஆர்வமாக எடுத்துப்பார்த்தாள்.

அப்போது மட்டும் வீசி பண்ணியிருந்து, ஏதாவது சமாதானம் சொல்லியிருந்தால் ஷ்ரதா அதிகம் யோசித்திருக்க மாட்டாளோ என்னவோ! ஆனால், போன் பண்ணியிருந்தது ஆதீஸ்வரன்.

திரையைப் பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது. 'இவன் மட்டும் அந்த நேரத்தில் முத்தம் கொடுத்து என்னை கலவரப்படுத்தியிருக்கா விட்டால் நான் அவ்வாறு செய்திருக்கவே மாட்டேனே.. பாவி! இவனால் தான் எல்லாம்..' கோபத்தில் திட்டிவிட்டு வைக்கவேண்டும் என்று தான் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் ஷ்ரதா. அவனென்றால் எடுத்ததுமே நான்கு இடைவெளிவிட்ட 'ப்ச்' சத்தங்களுடன் "ஐ லவ் யூ பியூட்டி" என்றான்.

கோபத்தில் தக்காளியாக முகம் பழுத்துப்போன ஷ்ரதா, அவன் அடுத்து பேசப்பேச ஃபேன்காற்றில் வைத்த காபி போல் சூடாறிப்போனாள். "ப்ளீஸ்! ப்ளீஸ்! வச்சிடாத ஷ்ரதா.. டியூட்டில இல்லாத போது மட்டும் தான் உன்கிட்ட பேசமுடியும்.." என்று இரக்கத்தை சம்பாதித்தான். அவள் மௌனமாக இருந்தாள். அதையே நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து அக்கறையாக வினவினான் ஆதீஸ்வரன், "சாப்பிட்டுட்டியா பியூட்டி?"

அவளுக்கு நடந்தவைப் பற்றியே யோசித்து சித்தபிரம்மையில் ஆழ்ந்திருப்பதற்கு இப்படி யாருடனாவது பேசி மனதை திசைதிருப்புவது உசிதம் என்றுபட்டது. அனிச்சையாக "ம்ம்" என்றாள்.

"இன்னைக்கு காலேஜ்ல என்ன நடந்தது?" என்று உரையாடலை நீட்டித்துக்கொண்டேப்போனான் ஆதி.

ஷ்ரதா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மெதுவாக யோசித்து யோசித்து பதிலளித்தாள். இடையில் 'ஏன் நாம் இவனுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்?' என்ற கேள்வி எழத்தான் செய்தது. ஆனாலும் அனைத்திற்கும் விடையளித்தாள், நிதானமாக.

ஆதீஸ்வரன் சிலநேரம் ஜோக் சொல்லி அவளை சிரிக்க வைத்தான். சிலநேரம் வழிசலாக பேசி அவளை எரிச்சலூட்டினான். இன்னும் சில நேரம் வெட்கப்பட வைத்தான். அரைமணிநேரம் அவன் பேசிவிட்டு வைத்தபோது அவள் மனம் உப்பு சப்பின்றி பேசும் வீசியுடன் அவனை ஒப்பிட்டது. மனக்கிளையொன்று படக்கென்று முறிந்து விழ, அப்போது தான் வீசி தன்னை காதலிக்கவே இல்லை என்றே புரிந்து கொண்டாள் ஷ்ரதா.

ஒரு கட்டத்தில் உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிச்சி போலவே புலம்ப ஆரம்பித்துவிட்டாள். "இவ்வளவு நாள் கற்பனையிலேயே வாழ்ந்திருக்கிறேனா?. எதுக்கு என்னை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துனீங்க வருணத்தான்?.. என்கிட்ட இருக்க எது உங்களை ஏமாத்தச் சொல்லுச்சி?.. ஒரு பொண்ணே தேடிவந்து காதலை சொன்னா இப்படி தான் உதாசீனம் பண்ணுவீங்க இல்ல?.. நீங்க பண்ணினா மட்டும் தான் அது தெய்வீகக் காதல், மண்ணாங்கட்டி எல்லாம் இல்ல?.. அதுவே ஒரு பொண்ணு பண்ணினா அலைஞ்சான் கேஸு?.. இதையெல்லாம் நான் உங்க முகத்துக்கு நேரா கேட்கணும் வருணத்தான்.. ஆனா, என்னால முடியுமா?.. உங்களை நெருங்கினாலே என் சுயமரியாதையை நானே இழக்கிற மாதிரி இப்படி ஏதாவது பண்ணி என்னை சுருட்டிப்போட்டிடுறீங்களே..' என்று விடாமல் புலம்பிக்கொண்டிருந்தவளின் கண்ணீரும் ஒரு சமயத்தில் வற்றித்தான் போனது.

உள்ளெழும் நினைவு பிம்பங்களை எல்லாம் அவளால் அறுத்தெறிய முடியவில்லை. அவனாக நினைத்து அலுக்காமல் எத்தனைமுறை முத்தம் கொடுத்திருப்பாள் அந்தக் கரடிபொம்மைக்கும், கண்ணாடிக்கும்! 'சே! என் ஞாபகமே எனக்கு எதிரியா மாறுமா?!' முகம் கசங்கினாள்.

குயிலின் தந்திரத்தால் தன் முட்டை என்று நினைத்து குயில் முட்டையை அடைக்காத்து குஞ்சு பொரிக்கும் காக்கா, ஒருநாள் அது தன் குஞ்சல்ல, குயிலின் குஞ்சு என்றறியும் போது எப்படிக் கரையுமோ அப்படித்தான் தன் காதல்முட்டையும் உடைந்துபோன ஏமாற்றத்தில், கலக்கத்தின் பிடியில் கரைந்துக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

'என் அழுகை பிடிக்கலைன்னு சொல்ற உங்கக்கிட்ட ஏன் வருணத்தான் என்னை அழவைக்கிறதே நீங்கதான்னு என்னால சொல்ல முடியலை?.. உங்கப்பொய் எனக்குப் பிடிக்கலை வருணத்தான்.. என் மீதான உங்க அலட்சியம் எனக்கு சுத்தமாப் பிடிக்கலை.. ஆனா, எது என்னை உங்களைத்தேடி ஓடிவர வைக்குது?.. சுயமரியாதை இழந்து மண்டிப்போட்டு கெஞ்ச வைக்குது?.. ஆங்! அந்த கன்னக்குழி தானே.. உங்க அந்தக் கன்னக்குழி மேல இப்போ எனக்கு மயக்கம் இல்ல வருணத்தான்.. உங்களைத் திரும்ப பார்க்கும்போது நான் அதுல விழமாட்டேன்.. நிச்சயம் நான் அதுல விழக்கூடாது.. உங்க நினைவு வராதபடி இருக்க கண்டிப்பா நான் ஏதாவது செய்யணும்!' இப்படி வீம்பாக எண்ணிக்கொண்டவள் அடுத்து செய்ததெல்லாம் வயதுக்கோளாறே.

************************

ஷ்ரதா தற்போது வீசியின் எண்ணிற்குத்தான் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தாள். 'தப்புப் பண்ணிட்டேன் வருணத்தான்.. சாரி வருணத்தான்.. உங்களை மறக்கத்தான், இல்ல மறக்க முடியாமத்தான் இப்படியெல்லாம் பண்ணினேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?.. நிச்சயம் நீங்க இதை நம்பணும்.. ப்ளீஸ் ப்ளீஸ் பிக்கப் த கால்"

ஆனால், எவ்வளவு முயன்றும் அவள் முயற்சிக்குப் பலனாக எதிர்புறம் அவன் போனை எடுக்கவேயில்லை. தொடர்ந்து,
SORRY
SORRY
SORRY
SORRY
SORRY
என்றே ஐந்நூறு முறைக்கும் மேலாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

ஒவ்வொரு கீங்கீங்கிற்கும் வீசி போனை எடுத்துப்பார்த்தானே ஒழிய அவளிடம் பேச ஆர்வம் கொள்ளவில்லை.

ரிப்ளை எதுவும் வராததில் சோர்ந்துபோன ஷ்ரதா தீனமாக இறைவனை வேண்டத்துவங்கினாள், "முருகா! ப்ளீஸ் என் வருணத்தானை என்கிட்ட பேச வச்சிடு.."

பாவி! அவளின் முணுமுணுப்பு விடியும்வரை நிற்கவில்லை.

*******************

வீராப்பாக இவ்வளவு நாள் வீசியிடம் பேசாமல் இருந்த சிவனேஸ்வரனுக்கு, தன் அண்ணனுக்கும் ஷ்ரதாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருப்பதே இந்த வீசியால் தான் என்றறிந்தபோது கோபம் தாங்கவில்லை.

மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஷ்ரதாவின் அந்தக்காதலன் யாரென்று. அது அவனுக்குமா தெரியாது?

'எவ்வளவு தைரியமிருந்தால் ஷ்ரதாவை வெளியே அழைத்துச்செல்லுவான் இந்த ராஸ்கல்? அவள் காலில் போடும் நெயில்பாலீஷிற்காக தன் ஒரு மாத சம்பளத்தையே தியாகம் செய்யவேண்டும் இவன்.. அவனது வியர்வை நாற்றத்தை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது ஷ்ரதாவால்?..' ஷ்ரதாவை தன் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருப்பவனாக பொருமினான் சிவா.

மாபெரும் மலையை நகர்த்திவைப்பதுபோல இப்போது அவன் முன்னே இரு வேலைகள் நின்றன. ஒன்று, ஷ்ரதாவுக்கு வீசிமேல் உள்ள மயக்கத்தை தெளிய வைப்பது. இரண்டு, ஷ்ரதாவின் அவசரக் கல்யாணத்தை நிறுத்துவது. ஆனால், இரண்டையும் எவ்வாறு செய்து முடிப்பது?

குழம்பிக் கொண்டிருந்தவன் பிறகு ஒரு வழி கண்டவனாக தனது அண்ணன் ஆதீஸ்வரனுக்கு தான் ஷ்ரதாவை உயிருக்கு உயிராக விரும்புவதைப் பற்றி நீண்ட பத்தியொன்றை தயார் செய்து அனுப்பிவைத்தான். திரையில் எதிர்புறம் அவன் அதை வாசித்துவிட்டான் என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக்குகள் தோன்றியபோது பக்பக்கென்று அடித்துக்கொண்டது அவனது நெஞ்சு.

சிறிதுநேரத்திற்குப் பின், மேலே பெயர்பட்டையில் டைப்பிங் என்று வந்தபோது கிரிக்கெட் மேட்சில் வெற்றி தோல்வியை முடிவுசெய்யும் கடைசி ஓவரை சீட் நுனியில் உட்கார்ந்துப் பார்ப்பவன் போலவே மொத்த எதிர்பார்ப்பையும் கண்ணில் தேக்கி, இதயம் எகிறித்துடிக்கப் பார்த்திருந்தான்.

நீண்ட காத்திருப்பிற்குப்பின் இரண்டே வரியில் பதில் அனுப்பியிருந்தான் ஆதீஸ்வரன். "நீ ஏன் இதை முன்னாடியே என்கிட்ட சொல்லலை சிவா?.. மொதல்ல ஷ்ரதாவை நேர்ல பார்த்து உன் மனசுல இருக்கிறதை சொல்லு" என்று டைப்பியிருந்தான்.

பார்த்ததும் சிவாவிற்கு உச்சிக்குளிர்ந்துவிட்டது. ஆனால், 'நாம் சொல்லி புரிய வைப்பதைவிட சிறுவயதிலிருந்தே சிவாவுடன் நல்ல நட்பிலிருக்கும் ஷ்ரதா எடுத்துச்சொன்னால், தம்பி உடனே புரிந்துகொள்வான்' என்றே ஆதீஸ்வரன் இவ்வாறு சொன்னான் என்பது, பாபம் அவனுக்கு தெரியாமல் போய்விட்டது.

வாசித்ததுமே தலைகால் புரியாமல் கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான். இவ்வளவு நாள் 'ஆதியிடம் இதை எப்படி சொல்லப்போகிறேன்? இதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்?' என்றே மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தவனுக்கு தன்னைப்பிணைத்து வைத்திருந்த பெரிய விலங்கொன்று அறுபட்டதுபோல் இருந்தது.

'எனக்கிருந்த மிகப்பெரும் தோஷம் நீங்கிவிட்டது. இன்னும் இந்த வீசி தான். அவனுக்கும் இன்றே முடிவுகட்டுகிறேன்' என்று வீசியை சந்திக்க புத்தகக்கடையை நோக்கி விரைந்தான் சிவனேஸ்வரன்.

அது வீசி ஷ்ரதா அனுப்பிய, 'SORRY' மழையில் நனைந்துக் கொண்டிருந்த வேளை.

திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும், வீசி தன் போனை கல்லாவிற்குள் மறைத்து வைத்தான்.

சிவனேஸ்வரன் வீசியிடம் நலம் விசாரிக்கக்கூட செய்யவில்லை. எடுத்த எடுப்பிலேயே, "என்ன வீசி ஆளே மாறிப்போயிட்டாப் போல இருக்கு?" என்றான். வீசி அவனின் குத்தல் பேச்சில் அவனை அளப்பது போலப்பார்த்தான்.

சிவனேஸ்வரன் அங்கிருந்த நாற்காலியில் அவனுக்கு முன்பு சென்று உட்கார்ந்தபடியே வில்லங்கமாக பேசினான். "ம்ம் நானும் உன்னை என்னவோ நினைச்சேன் வீசி.. நீ உன் அக்காவுக்கும் மேல உள்ள கெட்டிக்காரன் தான்னு நிரூபிச்சிட்ட.. எப்படி, எங்க கை வைக்கணும்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு.. ஒருவேளை இந்த நரித்தந்திரம் எல்லாம் உங்க சக்கரவர்த்தி ப்ளட்டோடையே கலந்ததோ?.."

வீசியின் கலங்கிய கண்கள் இரண்டிலும் கோபம் கொப்பளித்தது. அவனது காது துடிப்பதைக் கண்ட சிவனேஸ்வரன், "கோபப்படுறியா வீசி?.. உண்மையை சொன்னதும் சுருக்குன்னு இருக்கா?.. உன்னைப்போய் யோக்கியன்னு நம்பி ஷ்ரதாவை இங்க அனுப்பிவச்சேனேடா!.. எனக்கு நல்லபாடம் கத்துக்குடுத்திட்ட.." என்றான்.

"சிவா நடந்தது தெரியாம பேசாத?.. ஷ்ரதா என்னை முன்னாடியிருந்தே விரும்பியிருக்கா?.." வீசி சத்தமாக சொல்லத்தான் முயன்றான். ஆனால், குரல் உள்ளேப்போய்விட்டது.

"துரோகி, பேசாதடா!.. அவ மனசைக் கெடுத்ததே நீதான்டா!.." பேய் பிடித்தவன் போலக்கத்தினான் சிவா.

"சிவா, அவ உன்னை லவ் பண்ணவே இல்ல.." என்று வீசி மறுத்து சொன்ன வேளை, கோபத்தில் என்ன செய்கிறோமென்றேத் தெரியாமல் மூர்க்கமாகத் தாக்கி வீசியின் சில்லுமூக்கை உடைத்தான் சிவனேஸ்வரன்.

மூக்கில் ரத்தம் சொட்ட நின்றிருந்த வீசி, மடக்கிய தனது கைவிரல்முஷ்டிகளை தளரவிட்டான். "ஏற்கனவே நான் நொந்துபோய் இருக்கேன்டா சிவா.. உன் வலி என்னன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது.." 'ஏன்னா இப்ப அதே வலியைத் தான் நானும் அனுபவிச்சிக்கிட்டிருக்கேன்' என்றவன் கடைசிவரியை மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

சிவனேஸ்வரன் அவன் பேச்சை சட்டைசெய்யவில்லை. "ஷ்ரதா என் பொண்டாட்டி.. இனி நீ அவளை பார்க்கவோ பேசவோக்கூடாது வீசி.. மீறிப் பார்த்தா விளைவு மோசமா இருக்கும்... என் மாமாவைப் பத்தி உனக்குத் தெரியாது வீசி.. ஜாக்கிரதை!" என்று உறுதியான குரலில் எச்சரித்துவிட்டுப் போனான்.

அவன் போகும்போது முன்னால் நடைபாதையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை எட்டி உதைத்துவிட்டுப்போக, வீசி தான் கல்லாவிற்குள் மறைத்துவைத்தப் போனை வெளியில் எடுத்துப் பார்த்தான். ஷ்ரதா "SORRY" அனுப்புதலை இன்னும் நிறுத்தியிருக்கவில்லை.

இவ்வளவு நேரமும் கோபம், வலி, பொறாமையென்றே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு, சிவாவின் மிரட்டல் தான், ஷ்ரதாவை தன்னால் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதென்கிற தெளிவைத் தந்தது. அவன் எந்தப் பதற்றமுமின்றி சொல்லிப்பார்த்தான், "ஐ லவ் யூ ஷ்ரதா" என்று.

***********************

உலகம் எனும் கோப்பையில் உயரத்தில் எவனோ ஊற்றிவைத்து அருந்தும் மது தான் இந்த இரவா?

போதையில் சுயம் மறந்து கிடந்தவர்கள் அனைவரும் காலையில் தான் எல்லாம் தெளிந்ததை போல நடந்துகொண்டிருந்தார்கள்.

சிவனேஸ்வரன் கல்லூரிக்குக் கிளம்பும்பொருட்டு தனது போன் சார்ஜரை பேகிற்குள் திணித்துக்கொண்டிருந்தான். அப்போது தான் கோகிலா ஓலமிட்டுக் கத்தும் சப்தம் கேட்டது.

அவசரஅவசரமாய் வெளியே ஹாலுக்கு ஓடிவந்துப் பார்த்தவனுக்கு பிரச்சினைக்கு காரணம் டீவியில் ஓடிய செய்திதான் என்றறிந்த போது, கண்கள் அங்கு நிலைகுத்திநின்றது.

டீவியில் விஜயாதித்தனின் புத்தகக்கடைக்குள் சோதனை நடந்து கொண்டிருப்பதும், கீழே முக்கியச்செய்தியாக 'இருபத்திரண்டு அஸ்திகளுக்கும் கிரானைட் குவாரி முதலாளிக்கும் என்ன சம்பந்தம்?' என்று ஓடுவதும் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர் தேவன், டிஐஜி எத்திராஜ், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் என்று மகாளிப்பட்டியே அமளிதுமளிபட்டது.

முக்கிய அதிகாரிகள் வந்துவிட்டதால் அனைத்து நியூஸ் சானல்களிலும் இதுதான் ஹெட்லைனே!

"அய்யோ! என் அண்ணனைப்பத்தி ஏதோ தப்பா சொல்றாங்க பாருங்க.. வாங்க, சீக்கிரம் அண்ணன் வீட்டுக்கு போவோம்.." என்று அவசரப்படுத்தினார் கோகிலா.

சிவனேஸ்வரன், காசிராஜன், கோகிலா என்று மூவரும் அங்கு சென்று சேர்வதற்குள், விஜயாதித்தனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

விபரம் கேட்ட ஊடகத்துறையினரிடம், டிஐஜி கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். "இந்தப் புக்ஸ்டால்ல இருக்கிற ரகசிய அறையைப் பத்தி நேத்து தான் கலெக்டர் சாருக்கு தகவல் வந்திருக்கு.. சார் உடனே களத்துல இறங்கி ஆக்சன் எடுத்திட்டாங்க.. தகவல் கொடுத்தவரோட பெயரை உங்களுக்கு இப்போ சொல்லமுடியாது.. உள்ள ரகசியஅறையில சுவரோட ஒட்டின அமைப்புல மின் தகன எந்திரம் ஒண்ணு இருக்கு.. சுத்தியிருந்த லாக்கர்ஸ்ல இருந்து இருபத்திரண்டு அஸ்தி பார்சல் கைப்பற்றியிருக்கோம்.. அப்புறம் இன்னும் சில ஆவணங்களும் சிக்கியிருக்கு.. புத்தகக்கடை உரிமையாளர் விஜயாதித்தனையும், கடையோட வொர்க்கர்ஸ் ரெண்டுபேரையும் விசாரணைக்காக கைது பண்ணியிருக்கோம்.. விசாரணையோட முடிவுல தான் எல்லாம் தெரிய வரும்.." என்றார்.

விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே கேஆர்பிக்கு இருப்பு கொள்ளவில்லை. டிஐஜிக்கு தொடர்ந்து போன் பண்ணிக்கொண்டே இருந்தார்.

கலெக்டர் பேட்டிக்கொடுக்க ஆரம்பிக்கவுமே அவரைவிட்டு சற்றுத்தள்ளி வந்த டிஐஜி, "அதான் எனக்கு தகவல் கிடைச்சதுமே உங்கக்கிட்ட சொல்லிட்டேனே சார்.. முன்னாடியே சொல்லனும்னா இன்னைக்கு காலையில தானே எனக்கேத் தெரியும்.. எவனோ டேரக்டா கலெக்டருக்கே போன் பண்ணி சொல்லியிருக்கான்.. இந்த ஆள் இளம் ரத்தம் பார்த்தீங்களா?.. அதான் நேர்மைன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நிற்கிறான்.. உங்கப் பேர் எதுவும் வெளிய வராதபடி பார்த்துக்க நம்ம ஆளுங்க நாலு பேரை ஏற்கனவே உள்ள ஏற்பாடு பண்ணி நிற்க வச்சிருக்கேன் சார்.. உள்ள ரெண்டு மூணு டாக்குமெண்ட்ஸ்ல உங்கப்பேர் இருந்ததா சொன்னாங்க.. அதுல ஒரு டாக்குமெண்ட்ல போனவருசம் தலையாரிலயிருந்து கலெக்டர் வரை நீங்க மாசாமாசம் விஜயாதித்தன் மூலமா யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா பண்ணியிருக்கீங்கன்னு விலாவாரியா போட்டிருக்குதாம்.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. நம்ம ஆளுங்கக்கிட்ட சொன்னா மாத்தி வச்சிடுவாங்க.. இப்போ லம்ப்பா சிக்கியிருக்கிறது விஜயாதித்தனும் அவரு பினாமி அந்த எம்எல்ஏ பரமசிவமும் தான்.. இனி விஜயாதித்தன் தப்பித்தவறி உங்கப்பெயரை உளறினா தான் உண்டு.. வக்கீல் ரெடி பண்ணிட்டீங்களா சார்? ம்ம் அப்போ சரி சார்.." என்று பேசிவிட்டு, இணைப்பு துண்டிக்கப்படவும் கலெக்டர் அருகில்வந்து நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டார்.

கேஆர்பி நடத்தி வந்தது ஒரு அரசு என்பதால் இரண்டு வாரத்திலேயே விஜயாதித்தனுக்கு பெயில் வாங்கிக்கொடுத்து, மூன்று மாதத்திலேயே கேஸை திசைதிருப்பி விட்டார். அதற்கு அவர் பலருக்கும் படியளக்க வேண்டி இருந்தது. ஆனால், அவர் அதற்கு சற்றும் சளைக்கவில்லை. ஏனெனில், அவர்தான் லஞ்சம் கொடுத்தே பழகியவராயிற்றே!

குவாரிகள் ஆக்கிரமிப்புக்கு ரூட்டுபோட்டுத்தந்த வருவாய்த்துறை, கால்வாய்கள், ஊருணிகளை விழுங்க உதவிய பொதுப்பணித்துறை, புறம்போக்கு நிலங்களை பதிவுசெய்து தருவதற்காக பத்திரப் பதிவுத்துறை, பள்ளி, சமுதாயக்கூடங்களை இடித்து குவாரியாக்க உதவிய ஊரக வளர்ச்சித்துறை, ஒரு நம்பர் பிளேட்டில் எட்டு கன்டெயினர் லாரிகள் வீதம் ஓட்டுவதற்கு உதவி புரிந்த வட்டாரப் போக்குவரத்துத் துறை, கணக்கில் வராமல் விற்பனை செய்வதற்குத் துணை புரிந்த வணிகவரித்துறை, கணக்கில் வராத கள்ள ஏற்றுமதிக்கு துணை நிற்கும் சுங்கத்துறை என அனைவருக்கும் எழும்புத்துண்டை கைநிறைய தூக்கி வீசிப்பழகியவருக்கு விஜயாதித்தனை வெளியே கொண்டு வருவது மட்டும் கடினமா என்ன!

சகலரும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப அன்பளிப்பை பெற்றுக்கொண்டு தங்கள் கடமையை செய்வது போல பாவ்லா காட்டினார்கள். நிச்சயம் கேஆர்பியை விசாரணைக்கு உட்படுத்தினால் கொள்ளைக்குள் கொலை, லஞ்சம், மோசடி, நம்பிக்கைத் துரோகம், தேசத்துரோகம், சூழல் நாசம், இயற்கைவளம், விவசாய அழிப்பு உள்ளிட்ட பல பாதகங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், நீதிதேவதை தான் கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறாளே.

மோகனையும் வீசியையும் விசாரித்த காவலதிகாரிகள் நான்கு மணிநேரத்திலேயே அவர்களுக்கும் இந்த இரகசிய அறைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்று உத்தேசித்து அவர்களை குடைவதை விட்டுவிட்டார்கள்.

விஜயாதித்தனுடனான விசாரணை தான் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருந்தது. கேஆர்பி அனுப்பிய வக்கீலும் அருண்மொழியும் வெளியே காத்திருந்தார்கள்.

மாலை ஆறுமணியளவில் விசாரணை முடிந்தபோது தன்னை சந்திக்க வந்த வக்கீலிடம் விஜயாதித்தன், "புக்ஸ்டால் பத்தி கலெக்டருக்கு போன்பண்ணினது யாரு?" என்று கடுத்தக்குரலில் கேட்டார். 'நிச்சயம் அந்தத் துரோகிக்குரிய தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்' என்று விசாரிக்கும் போதே அவருக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது.

வக்கீல், "கடையில வேலை பார்க்கிற பையன் தான் சொன்னதா சொல்றாங்க.." எனவும், உடன் நின்ற அருண்மொழியும், "ஆமாப்பா, ஜீவா சொன்னான், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவன் உள்ளேப்போய் பார்த்தது சிசிடிவில பதிவாகியிருக்கு" என்றான்.

"ஓஹோ" என்றவர், "இப்போ அவனை எதுவும் செய்ய வேணாம்.. நான் வெளிய வந்ததும் பார்த்துக்கலாம்.." என்றார். அந்தத்தொனி மகனாகிய அருண்மொழிக்கே கிலியூட்டியது. 'மதுவால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா? நிச்சயம் அவள் தம்பிக்கு இது தேவைதான்..' என்று நினைத்துக்கொண்டே, "சரிங்கப்பா" என்றான்.

விஜயாதித்தன் பார்வையில் வேட்கையோடு, "நான் வெளிய வர்ற வரைக்கும் என் இடத்துல நின்னு நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் அருண்மொழி" என்றபோது 'என்ன! உங்க இடத்துல நானா!" என்று அருண்மொழி புல்லரித்துப்போனவனாக, "சரிங்கப்பா" என்றான்.

விஜயாதித்தனை சீக்கிரம் பெயிலில் வெளியே எடுத்துவிடலாம் என்று வக்கீல் சொன்ன தைரியத்தில் வீட்டிற்கு வந்த அருண்மொழி, வீசியை முன்னிறுத்தி மதுபாலாவிடம் மல்லுக்கட்டினான். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய், "எங்கப்பா வெளிய வந்த பின்னாடி இருக்கு உன் தம்பிக்கு.. அவனை அஸ்தியாப் பார்க்க தயாராயிரு" என்று பயமுறுத்திவிட்டுப்போனான்.

மதுபாலாவுக்கு அது எதேர்ச்சையாக வந்த வார்த்தைகளென்று நம்பமுடியவில்லை. நிலைமையின் தீவிரம் புரிந்ததால் உடனே தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றாள்.

அவள் இரவு ஒன்பது மணிக்கு ஜெயவிலாஸில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த சமயம் தான், பிரகாஷ்சக்கரவர்த்தியும் தனக்குத் தெரிந்த கவுன்சிலர் மற்றும் ஏட்டு ஒருவரின் உதவியுடன் வீசியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

அவனைப்பார்த்ததுமே மதுபாலா பொங்கியெழுந்துவிட்டாள். "ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை? எவ்வளவு பெரிய சிக்கலை நீ இழுத்து வச்சிருக்கத் தெரியுமா? உன்னை அவங்க கொல்ல தீர்மானிச்சிட்டாங்கடா.." என்று ஹைடெசிபலில் கத்தினாள்.

அவள் கூறியதன் எதிரொலிப்பு ஒருசதவீதம் கூட அவன் முகத்தில் தெரியவில்லை. அபிராமி "வருண்" என்று அவனருகில் வந்து தோளைத்தொட்டபோது தான் கணீர் குரலில் சொன்னான். "நான் யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக்கலை.. நான்னு சொல்லி வேற யாரோ கலெக்டருக்கு தகவல் கொடுத்திருக்காங்க.. அப்புறம் ஒரு அப்புராணியை ஒண்ணும் போலீஸ் பிடிச்சிட்டு போகலைக்கா.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு சும்மாவா சொன்னாங்க.." என்றான்.

"என்னால தான்.. எல்லாம் என்னால தான்.. தெரிஞ்சே புதைகுழியில விழுந்தேன்.. இப்போ உங்களையும் சேர்த்து உள்ள இழுத்துக்கிட்டு இருக்கேன்.." என்று தன் தலையிலடித்துக்கொண்டு அழுத மதுபாலா, திடீரென பித்துப் பிடித்தவள் போல, "இல்ல.. இல்ல.. இனி நீ இங்க இருக்கக்கூடாது வருண்.. ம்மா, ப்பா இவனை எங்கேயாவது வெளியூருக்கு அனுப்பி வைங்க.. அவங்க மோசமானவங்க.. நீ எங்கேயாவது வெளியூருக்கு போயிடு வருண்" என்றாள்.

அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் மதுபாலா சொல்வதே சரி என்று அவனை வற்புறுத்தத் தொடங்கினார்கள். வீசி அவர்களிடம், எவ்வளவோ முரண்டு பண்ணிப் பார்த்தான். எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காததால், "சரி, காலைல போறேன்" என்ற சமாதானத்திற்கு வந்தான்.

அன்றிரவு முழுவதும் குழந்தைகளைத் தவிர்த்து அவர்கள் வீட்டில் ஒருவர் கண்ணிலும் ஒருபொட்டுத் தூக்கமில்லை.

தனது அழகிய சின்னஞ்சிறு கூட்டை தானே கலைத்துவிட்டது போல் குப்புறப்படுத்து தலையணையை நனைத்தாள் மதுபாலா.

9AazjJZONJ2444WNN2WZBq8BdvhoWdfKMo1aa2Qa8C5WK0QObbE7X_yXwA_5auryT22x5KMnoQK-itfX4yDct1xlLII5f409drtCHj_Q1f7OXnaHhjtdhJhKo5p_IovjcPGDYVlr

காதல் கணம் கூடும்...

அடுத்த அத்தியாயத்துடன் பிளாஷ்பேக் ஓவர் ப்ரெண்ட்ஸ்.

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க.

கருத்துத்திரி,
வாங்கப் பழகலாம்❣️

Going nice..
 
Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28

👌
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வீ.சி நினைவு வராம இருக்கணும்ன பண்ண எவ்ளோ விஷயங்கள் இருக்கே..ஆதிட தான் பேசணுமா ஷ்ரதா:(:(:(..இந்த சிவா தான புத்தகங்களை எட்டி உதைச்சான்..ஒருவேளை சிவா தான் பார்த்து போட்டுக் கொடுத்து இருப்பேனோ...மது பாவம் அவளால் தான் எல்லாமேனு பீல் பண்றா...ஒரு தப்பும் பண்ணாம நல்லவனா இருந்தா vc ஆ ஆன்ட்டி ஹீரோ பேட் பாய் லெவலுக்கு மாத்தி விட்டுடாங்க விஜயாதித்தன் அண்ட் கோ:mad::mad::mad::mad:..வீசியை கஷ்டப்படுத்தப் போறாங்களே அடுத்த எபில..பாவம் என் ஹீரோ:cautious::cautious::cautious:
 
Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Shradha nilamai ipo puriyudhu sissy.. Vc thagaval kudukkalanna vera yaru kuduthiruppa? Oru velai siva va irikkumo..
 
Top Bottom