Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நானும் ஆன்டி ஹீரோ தான் - Tamil Novel

Status
Not open for further replies.

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
5.2

அனிக்காவை ஆண்ட்டி-ஹீரோ கதைக்கு நாயகியாக கொஞ்சமும் பொருத்திப்பார்க்க முடியவில்லை கமலியால்.

‘ச்ச. இவன் டேஸ்ட் எங்கயாவது ஆண்ட்டி-ஹீரோ மாதிரி இருக்கா’ என்று லெனினை உள்ளுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள்.

“இங்க என்ன பண்றீங்க?” என்று அனிக்கா முதல் முறைக் கேட்ட போது, அதற்குப் பதிலளிக்காமல், மூவரும் அவர்களுக்குள்ளேயே பேசியவாறு இருக்க, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள், இன்னும் கொஞ்சம் சத்தமாக.

“அது ஒன்னுமில்ல அனி. இவங்க எனக்குப் புது ஃப்ரெண்ட்ஸ். அதான் உன்ன இன்ட்ரோ குடுக்க வந்தேன்” என்றான் லெனி.

“ஓஹ்! ‘இவங்க இங்க வேலை செய்றாங்க’ன்னு இன்ட்ரோ குடுத்தியா?” என்று அனிக்கா கேட்க, “நோ. நான் தான் பொய் சொல்ல மாட்டேனே. ‘நான் இந்தப் பொண்ணை லவ் பண்றேன்’ன்னு இன்ட்ரோ குடுத்தேன்” என்றான் லெனின் நிரஞ்சன்.

“வாட்? லெனின். நான் தான் எனக்கு உன் மேல லவ் இல்லைன்னு சொன்னேனே” என்றாள் அனிக்கா.

“உனக்கு லவ் இல்ல. அதுக்காக நான் லவ் பண்றது இல்லைன்னு ஆகிடுமா!” என்று அனிக்காவைப் பார்த்துக் கண் சிமிட்டினான் லெனின்.

“அடேய். என்ன டா நடக்குது இங்க. நீ இப்படி சமரசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தா உன்ன ஆண்ட்டி-ஹீரோன்னு எவனாவது ஒத்துக்குவானா டா. அவ உன் மேல லவ் இல்லன்னு சொல்றா. அப்போவும் பேக்கு மாதிரி லவ் டயலாக் பேசிட்டு இருக்க. இந்நேரம் வில்லன் ரேஞ்சுக்கு ‘உன்னை எப்படி எனக்குச் சொந்தமானவளா ஆக்கிக்கணும்ன்னு எனக்குத் தெரியும்’ன்னு டயலாக் பேசியிருக்க வேணாமா!” என்று கிட்டத்தட்ட அழுகும் நிலைக்குச் சென்றுவிட்டாள் கமலி.

அப்பொழுதும் கூட பாவம் பார்க்காமல், அவளை வம்புக்கு இழுத்தார் பாட்டி. “லவ் பண்ற பொண்ணுக்குத் தாலி கட்டுனா அவ அவனோட சொந்தமா ஆவா. அது எப்டி சொந்தமானவளா ஆவா?” என்று பாட்டி கேட்க, “அது கல்யாணம் பண்ணா சொந்தம் ஆவா. கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கவேண்டியதை எல்லாம் முன்னாடியே பண்ணா சொந்தமானவளா ஆகிடுவா” என்று கமலி சொல்ல, “ச்சைக். என்ன கருமம் டி இது!” என்று முகம் சுழித்தார் பாட்டி.

“என்னது கருமமா?“ என்று கமலி கேட்க, “ஆமாம் பின்ன? பொண்ணுங்களை எப்போ பொருட்கள் லிஸ்ட்ல சேர்த்தீங்க? உங்க ஹீரோ அவளை அவனுக்கு சொந்தமானவளா ஆக்கிக்கறதுக்கு? அது மட்டும் இல்லாம, உன் கதைய படிக்க பசங்க அந்த சீன்ல இருந்து என்ன கத்துக்குவாங்க? ஒரு பொண்ணை தனக்கு சொந்தமானவளா ஆக்கிக்கணும்ன்னா அவ கூட செக்ஸ். சாரி. சாரி. அவளை ரேப் பண்ணா போதும்ன்னா?

சரி குடும்ப நாவல் அதிகம் படிக்கற பொண்ணுங்களுக்கு என்ன சொல்லி குடுக்கற? யாரும் உன்னை ரேப் பண்ணா நீ அவனுக்கு சொந்தமானவளா ஆகிடுவன்னா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் பாட்டி.

“எது? செக்ஸ். ரேப்பா? வாய்ல அடி. வாய்ல அடி. கூடல்ன்னு சொல்லு. இதெல்லாம் தான் பக்கா ஆன்டி ஹீரோ கன்டென்ட். இதுல எல்லாம் கேள்வி கேட்காத” என்று கமலி அந்த பேச்சை இத்துடன் முடிக்கப் பார்த்தாள். “எது? ரேப்ப ரோமன்டிசைஸ் பண்ணி எழுதுறது தான் ஆண்ட்டி-ஹீரோ கதையா? ஆனா. இப்போ உன் ஹீரோ ஊத்துற ஜொள்ளுல உன் ஆண்ட்டி-ஹீரோ கதைப் பக்கங்கள் எல்லாம் ஊறிப்போய் நாறிப்போகப் போகுது பாரு” என்றார் பாட்டி.

“ஆமாம். இவன் வேற கேரக்டருக்குச் சம்மந்தமே இல்லாம லவ் பண்ணிட்டு இருக்கான். விட்டா ரொமாண்டிக் ஹீரோ ஆகிடுவான் போல” என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு, “லெனி. நீ வா” என்று கமலி லெனினை இழுக்கவும், அனிக்கா தலையில் அடித்துக்கொண்டு உள்ளே செல்லவும், எங்கிருந்தோ ஓடிவந்த பணியாள் ஒருவர், “சார். யாரோ போலீஸ் ஆஃபிசர் உங்கள பார்க்க வந்திருக்காங்க. உங்க ரூம்ல உக்கார வச்சிருக்கேன்” என்று சொல்லவும் சரியாக இருந்தது.

“எது? போலீஸா?” என்று கமலி கேட்க, “யாரைக் கேட்டு அவரை என் ரூம்க்குள்ள விட்டீங்க?” என்று குரல் உயர்த்தினான் லெனின்.

அந்த ஊழியரோ, “சார். அவர் போலீஸ் அதான்” என்று தயங்க, “ஸோ வாட்? போலீஸ்ன்னா விட்டுடுவீங்களா? இது என் காலேஜ். இங்க நான் தான் தலை. என்னைக் கேட்காம எந்த வாலும் அசையக் கூடாது” என்றான் லெனின்.

“சார். நீங்க உங்க ஆஃபிஸ் ரூம்ல இல்ல. அதனால தான்...” என்று ஊழியர் இழுக்க, “நான் இல்லாத நேரம் யார் வந்தாலும் ரூம் உள்ள விட்டுடுவீங்களா? நோ. என்னால வந்து பார்க்க முடியாது. அந்தப் போலீஸ்காரருக்கு அவ்ளோ அவசரம்ன்னா கேண்டீனுக்கு வர சொல்லுங்க. அவர் என்னைத் தேடி வந்து பார்த்ததா தான் இருக்கணும். அவர் வந்ததும், நான் ஓடிவந்துட்டேன்னு நெனச்சிக்கக் கூடாது” என்றான் லெனின் நிரஞ்சன்.

“சரி சார். நான் சொல்றேன்” என்று அந்த ஊழியர் அங்கிருந்து நகர, “லெனி. அவர் போலீஸ்காரர் லெனி” என்றாள் கமலி.

“ஸோ வாட்? காக்கிச்சட்டைய கழட்டிட்டா, அவரும் சாதாரண மனுஷன் தான. வரட்டும்” என்று சொன்னவன், கேண்டீன் நோக்கி நடப்பதாய் தெரியவில்லை. நின்ற இடத்திலேயே நின்றுப் பேசிக்கொண்டிருந்தான்.

“சரி. அதை விடு. உனக்கு இந்த அனிக்காவ தான் பிடிச்சிருக்கா. இந்த அப்பாவிப் பொண்ணுங்க எல்லாம் வேணாமா?” என்று கமலி கேட்க, “ச்ச. எனக்கு இந்த அப்பாவிப் பொண்ணுங்களை எல்லாம் பார்த்தா பிடிக்கறதில்ல. வேற யாருக்காவது பிடிக்குமோ என்னமோ. ஆனா, எனக்கு அவங்க எல்லாம் கொஞ்சமும் செட் ஆக மாட்டாங்க” என்றான் லெனி.

“ஏன்? ஏன்? ஏன்?” என்று கமலி கேட்க, “நான் சிங்கம் டெடி” என்றான் லெனின்.

“அதுக்கு?” என்று கமலி விழிக்க, “நான் சிங்கம். என்னைச் சுத்தி இருக்கற எல்லாம் சிங்கமும், சிறுத்தையும், ஓநாயும். இதுல ஒரு மானையோ, முயலையோ இணையா வச்சிக்கிட்டு நான் என்ன செய்ய? முழு நேரமும் அந்த முயலைச் சிறுத்தைக்கிட்ட இருந்தும், ஓநாய்கிட்ட இருந்தும் பாதுகாக்குறதே வேலையா இருக்கவா?

தன்னைத் தானே பாதுகாத்துக்கற சிங்கம் தான் இணையா இருக்க முடியும்” என்றான் லெனின் நிரஞ்சன் உறுதியாக. முடிவாக.

“இதெல்லாம் ஒரு காரணமா லெனி. உன் அம்மா, தங்கை எல்லாம் பக்கா அமைதி டைப் தான. அவங்கள எல்லாம் உன்னைச் சுத்தியிருக்க சிறுத்தை ஓநாய் எல்லாம் ஏதாவது செஞ்சிதா?” – கமலி.

“இதுவரை இல்ல. இனிமே?” – லெனின்.

“இனிமே அவங்கக் கிட்ட யாராவது பிரச்சனைப் பண்ணா, நீ போய் காப்பாத்த மாட்டியா?” – கமலி.

“நோ” என்றான் லெனி.

“இரக்கமே இல்லையா?” என்று கமலி கேட்க, “நான் அப்படி இருக்கணும்ன்னு தான உனக்கு விருப்பம் டெடி” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “ஆண் சிங்கங்கள் சுயநலமானவை” என்றான்.

அவனையே கண்ணிமைக்காமல் கமலி பார்த்துக்கொண்டு நிற்க, “இந்நேரம் அந்தப் போலீஸ்காரர் கேண்டீனுக்கு வந்திருப்பார். வா போலாம். சிங்கமா சிறுத்தையான்னு பார்ப்போம்” என்றான் லெனின்.

“என்ன?” என்று கமலி புரியாமல் கேட்க, “வந்திருக்க போலீஸ் சிங்கம் சூர்யாவா, சிறுத்தை கார்த்தியா பார்ப்போம்ன்னு சொன்னேன். வா” என்று அழைத்துச் சென்றான் லெனின் நிரஞ்சன்.

அவள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான். ஆனால், தாயும் தங்கையும் பிரச்சனையில் மாட்டினாலும், ‘அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருப்பேன்' என்று சொல்லும் லெனினின் குணம் ஏனோ கொஞ்சமாக உறுத்தத்தொடங்கியது கமலிக்கு.

மந்திரித்து விட்டவள் போல் நின்றிருந்தவளைக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான் லெனின் நிரஞ்சன்.

இவர்கள் சிற்றுண்டியகத்துக்குப் பின் பக்கமாக நுழையும்போது தான், அந்தக் காவல்துறை அதிகாரி முன் பக்கமாக நுழைந்து ஒரு பழச்சாறினைச் சொல்லிவிட்டு ஒரு மேசையில் அமர்ந்தார்.

அவரைப் பார்த்ததும், லெனின் அவருக்கெதிரில் இருக்கும் இருக்கையில் அமர, அவனுக்கு இருபக்கமும் நின்றுக்கொண்டிருந்தனர் கமலியும் பாட்டியும்.

“லெனின் நிரஞ்சன்?” என்று அந்தக் காவல்துறை அதிகாரி கேட்க, “நோ!” என்றான் லெனின்.

அவர் கேள்வியாய் நோக்க, “லெனி. கால் மீ லெனி” என்றான் லெனின்.

“ஓகே லெனி. நான் நவீன். இந்த ஸிட்டில இருக்க ரவுடிஸத்தை ஒழிக்க என்னை ஸ்பெஷல் ஆஃபிஸரா அப்பாய்ண்ட் பண்ணியிருக்காங்க” என்று சொல்லி அவர் கரத்தை நட்பாக லெனினிடம் நீட்ட, லெனினோ, அதைக் கண்டுக்கொள்ளாதது போல் அமர்ந்திருந்தான்.

நீட்டிய கரத்தைப் பின்னே இழுத்துக்கொண்டவர், “என்னோட டார்கெட் லிஸ்ட்ல உன் அப்பா, உன் மச்சான்ஸ் எல்லாரும் இருக்காங்க” என்று அவர் சொல்ல, “மச்சானா?” என்று கமலி கேள்விக் கேட்க, “சார் லவ் பண்ற பொண்ணோட அண்ணனுங்க” என்றார் அவர்.

“என் லிஸ்ட்ல இருக்குறவங்க எல்லாருக்கும் ஒன்னு என்கவுண்டர் இல்ல ஆயுள் தண்டனை” என்று நவீன் சொல்லிவிட்டு, லெனினை ஆழப்பார்வைப் பார்க்க, “ஓகே. என்னைப் பார்க்க வந்த காரணம்?” என்று நேராக விடயத்துக்கு வந்தான் லெனின்.

“என் லிஸ்ட்ல உன்னையும் சேர்த்துக்கணுமா இல்லையான்னு ஒரு யோசனை. அதான் நேர்ல பார்த்து முடிவு செய்ய!” என்றார் நவீன்.

“ஏன் டௌட்?” என்று லெனின் கேட்க, “ஏன்னா! இப்போவரை லெனின் நிரஞ்சன் எந்தக் க்ரைமும் செய்யலையே. இப்போவரை இந்தக் காலேஜை மட்டும் தான பார்த்துட்டு இருக்கார்” என்றார் நவீன்.

“ஆனா, சீக்கிரம் செய்வானே. உங்க லிஸ்ட்ல இருக்குறவங்களை விட அதிகமா செய்வானே இந்த லெனி” என்று லெனின் சொல்ல, “அப்போ ஓகே” என்று மெலிதாய் சிரித்துக்கொண்டே அமைதியாய் எழுந்தான் நவீன்.

“வீட்ல இருக்குறவங்களைப் பத்திரமா இருக்கச் சொல்லுங்க. உங்கத் தங்கச்சி கூட இந்தக் காலேஜ்ல தான் படிக்கறான்னு சொன்னாங்க. ஸ்கூல் படிக்கற ஒரு தம்பி கூட இருக்கான்னு கேள்விப்பட்டேன்” என்று நவீன் சொல்ல, “ஹாஹா. ஆஃபிஸர். எலிக்குத் தேங்காய் துண்டு வச்சு பிடிக்கற மாதிரி, இந்த லெனியைப் பிடிக்க முடியாது. லெனியை வீழ்த்தனும்ன்னா நேரடியா மோதி தான் ஆகணும்” என்றான் லெனின்.

“கேள்விப்பட்டேன். லெனின் நிரஞ்சனுக்கு இந்தக் குடும்ப செண்டிமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. ஃப்ரெண்ட்ஸ்ன்னும் யாரையும் நெருக்கமா கூட வச்சிக்கறது இல்லைன்னு” என்று சொன்ன நவீனின் பார்வை கமலி மேல் விழுந்தது.

“ஆனா, இதோ இந்தப் பொண்ணும் பாட்டியும். கார் பார்க்கிங்ல இருந்து கேண்டீன் வரை உன்கூடவே வராங்க. அவ்ளோ நெருக்கமா?” என்று நவீன் கேட்க, “ஹாஹா. ஆமா. கொஞ்சம் நெருக்கம் தான்” என்றான் லெனின்.

“அப்போ. தேங்காய் துண்டா இவங்க இருந்தா?” என்று நவீன் கேட்க, “தேங்காய் பீஸ் யாரா இருந்தா என்ன? சிங்கம் எப்போவும் எலிப் பொறியில் மாட்டாது. தேங்காய் தான் எலிக்காகக் காத்திருந்து அழுகிப்போகும்” என்று லெனின் சொல்ல, தூக்கி வாரிப்போட்டது கமலிக்கு.

‘எனக்கு ஏதேனும் ஆனால் கூட காப்பாற்ற வர மாட்டானா! அத்தனைச் சுயநலமானவன், அத்தனைக் கொடூரனா என் கற்பனையில் உதித்தான்!’ என்றக் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சிந்தனையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அவள் முகத்திலிருந்த யோசனை ரேகைகளைப் பார்த்த பாட்டிக்கு அவள் எண்ணம் புரிய அமைதியாக இருந்தார். அவளின் குழப்பமான முகத்தை மனதில் பதியவைத்துக் கொண்டு வெளியேறினான் நவீன்.

“சிறுத்தை” என்று லெனின் சொல்ல, நிகழ்வுக்கு வந்தவள், “என்ன?” என்றாள்.

“அவன் சிறுத்தைன்னு சொன்னேன் டெடி” என்றான் லெனின் மீண்டும்.

“ஓஹ். ஏன் அப்டி சொல்ற?” என்று கமலி கேட்க, “அவனைப் பார்க்க உடல் வலிமைவாய்ந்தவனா தெரியல. அவன் ஒரு வார்த்தை கூட குரல் உயர்த்திப் பேசல” என்றான் லெனின்.

“அதற்கு என்ன?” என்று கமலி கேட்க, “சிறுத்தை சிங்கம் போல் கர்ஜிப்பதே இல்லை. சிங்கத்துக்கு இருக்கறது போல கம்பீரமான உடலமைப்பு கொண்டது இல்லை. இன்னும் சொல்லணும்ன்னா. சிறுத்தைகள் வலிமைக்குப் பேர் போனவை இல்ல. வேகத்துக்குப் பேர் போனவை” என்றான் லெனின்.

“அவன் உன் அளவுக்கு வலிமையானவன் இல்லைன்னு சொல்றியா லெனி? அப்போ அவனைப் பத்திக் கவலைப்பட வேணாமா?” என்று கமலி கேட்க, “வேகமானவன்னு சொன்னேனே! என்ன பண்றான்னு பார்ப்போம். எந்த மரத்துல ஏறி நின்னுட்டு நம்ப மேல பாயக் காத்திருக்கான்னு பார்ப்போம்” என்று ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டான் லெனின்.

“சரி வா. நம்ப வேலையைப் பாப்போம்” என்று லெனி சிற்றுண்டியகத்தை விட்டு வெளியேற அங்கிருந்து நகராமல் நின்றாள் கமலி.

‘எனக்கு ஆபத்துன்னா கூட இவன் வர மாட்டானா! என் கழுத்துக்கு வர கத்திக்குக் கூட இவனை இரக்கப்பட வைக்க வாய்ப்பில்லையா?’ என்றக் கேள்வியே அவள் மனம் முழுதும் இருந்தது.

:: :: :: :: :: :: :: ::
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் 6 :

லெனியின் கர்ஜனையைக் கேட்டு, குட்டிப் பெண்ணை நோக்கி முன்னேறுவதை நிறுத்தினான் நமிர்.

நமிர் லெனியின் மீது தன் பார்வையை நிலைக்க வைத்து, நின்ற இடத்திலேயே நிற்க, லெனியோ மயக்க நிலையில் இருந்தக் குழந்தையையும், நமிரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

நமிர் இன்னமும் அந்தச் சிறுமியைத் தாக்கத் தக்கச் சமயம் எதிர்பார்த்து இங்கேயே நிற்பது புரிந்தது லெனிக்கு. அப்படியே விட்டுச்செல்ல மனமில்லாமல், அந்தச் சிறுத்தையைத் துரத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தான் லெனி.

தன்னெதிரில் நிற்கும் நமிரை நோக்கி முன்னேறினான் லெனி. மூன்று வயதில் கொஞ்சமாக வளர்ந்த பிடரி முடி சிணுங்க, மெதுவாய் அதே நேரம் அழுத்தமாய் அடியெடுத்து தன்னை நோக்கி முன்னேறி வரும் சிங்கத்தை எதிர்த்து நிற்க முனையவில்லை நமிர்.

லெனி தன்னை நோக்கி நடக்கத் தொடங்கியதுமே நமிர் தன் அடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னெடுத்து வைக்கத் தொடங்கினான்.

அடுத்தச் சில நொடிகள் லெனி முன்னேறுவதும், நமிர் பின்னடைவதுமாய் இருக்க, இன்னும் சில நொடிகள் இப்படியே நீடித்தால், இருவரும் மண்ணில் உருண்டு புரண்டு சண்டையிட வேண்டும் என்ற நிலையில், அந்த இடம் விட்டு ஓடினான் நமிர்.

ஏனெனில் சவானா புல்வெளியில் வாழும் பூனைக் குடும்பத்துள், சிறுத்தைகள் மிகவும் பயந்தவை. அவையின் உயரமும், எடையும் சிங்கங்களையும், சிறுத்தைகளையும் விட மிகக் குறைவு என்பதால், அவை அவைகளோடு யுத்தம் புரிய முனைவதே இல்லை.

ஏன், முழுதும் வளர்ந்த மனிதர்களிடம் கூட சிறுத்தைகள் வம்புச் செய்யத்துணிவதில்லை. மனிதர்களின் உயரம் சிறுத்தைகளைக் கொஞ்சம் அச்சுறுத்துவது ஒரு காரணம் என்றாலும், மனிதர்களைக் கொல்வதில் சிறுத்தைகளுக்குப் பயனேதுமில்லை. ஏனெனில், மனிதர்களை அவை உணவாகப் பார்ப்பதில்லை.

தன் முன்னால் நிற்பது, ஏழு வயதே ஆன மனிதப் பெண் என்பதாலும், அவள் தன்னைப் பார்த்து வெகுவாகப் பயந்து நடுங்கியதாலும், அவளை மேலும் அச்சுறுத்திப் பார்க்க நினைத்த நமிர், அவளுக்குத் துணையாக ஒரு சிங்கம் வந்து நின்ற பிறகு, அந்த எண்ணத்தைக் கைவிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நமிர் நீண்ட தூரம் ஓடி, தன் பார்வையை விட்டு மறையும் வரை அதே இடத்தில் நின்று பார்த்திருந்த லெனி, அவன் திரும்ப வரப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவ்விடம் விட்டுச் செல்ல எத்தனித்தான்.

எங்குச் செல்ல? தன் இருப்பிடத்திற்கே திரும்ப முடிவு செய்தான். அவன் தன்னிடம் விட்டு வந்து வெகுநேரம் ஆகியிருந்தது. வெகுதூரம் கடந்திருந்தான். இந்தத் தூரத்தைத் தாண்டித் தன் தம்பி, தங்கைகள் எங்கும் போயிருக்க முடியாது என்று முடிவுச் செய்துத் திரும்ப முடிவெடுத்தான்.

நான்கு ஐந்து அடிகள் எடுத்து வைத்தவனை, தயங்கி நிற்கச்செய்தது, அந்தச் சிறுமியின் முனகல் குரல்.

அரை மயக்கத்தில் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், அவளருகில் சென்ற லெனி, அவளை உலுக்கினான்.

அவளை மயக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர வேறு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தாலும், அவனுக்கு அதற்கானப் பதில் தெரியவில்லை.

தரையில் விழுந்துக் கிடந்தவளை, தன் கால்களை வைத்துச் சீண்டுவதும், அவளைத் தரையில் உருட்டுவதுமாக இருந்தான். அதுவும் கொஞ்சம் பயன் தரத்தான் செய்தது. அந்தக் குட்டிப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக கண் திறக்க முயற்சித்தாள்.

மணி அப்போது மதியம் பன்னிரண்டு. சூரியன் உச்சிவானத்தில் இருந்ததால், கண்களைத் திறக்க முடியாத அளவிற்குக் கண் கூசியது. அதைப் புரிந்துக்கொண்ட லெனி, முன்னிரண்டு கால்களை அவள் உடலிற்கு அந்தப் பக்கமும், பின்னிரண்டு கால்களை இன்னொரு பக்கமும் வைத்து நின்றவன், அவள் கண் திறக்கும் போது, அவள் கண்ணில் சூரியவெளிச்சம் படாமல் இருக்கும் வகையில் நின்றுக் கொண்டான். கண் திருந்ததும், அவள் பார்ப்பது லெனியின் முகமாக இருக்கும் வகையில், அவள் முகம் நோக்கி குனிந்து நின்றான்.

மீண்டும் அவளைச் சீண்டியவன், அப்போதும் அவள் எழும்பாவிட்டால், தன் நாக்கால் அவளை நக்க நினைத்திருந்தான். நல்லவேளை அவன் அப்படிச் செய்துவிடும் முன் அவள் எழுந்துவிட்டாள்.

ஒருவேளை, அவள் எழுந்திராமல் இருந்திருந்தால், தான் நினைத்தது போல் லெனி அவள் முகத்தை நக்கியிருந்தால், அந்தக் குட்டிப் பெண்ணின் சதை இந்நேரம் தனியாக வந்திருக்கும்.

தான் உணவுக்காகக் கொல்லும் மிருகங்களின் தோளை, மாமிசத்தில் இருந்துப் பிரித்தெடுக்க ஏதுவாக கடவுள் வடிவமைத்த சிங்க நாக்கு தானே லெனிக்கு இருப்பது. மிருதுவாக இருக்கும் குழந்தையின் சருமத்தை அது வெகுவாகக் காயப்படுத்தியிருக்கும்.

அந்தக் குழந்தை எழுந்ததும், லெனியின் முகத்தைப் பார்த்ததும், “அந்தச் சிறுத்தை போய்டுச்சா?” என்று கேட்டவாறே உற்சாகமாக எழுந்து அமர்ந்தாள்.

லெனியிடமிருந்து மூச்சுக் காற்று மட்டும் வரவும், அவளே சுற்றிமுற்றிப் பார்த்து அந்தச் சிறுத்தை இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள்.

லெனியின் தலையைப் பிடித்துக்கொண்டவள், “நீ தான் அதைப் போக வச்சிட்டியா?” என்று அவள் கேட்க, அதற்கும் லெனி அவளை வெறித்தப் பார்வை மட்டுமே பார்த்திருந்தான்.

“நன்றி!” என்று அவள் சிரிக்க, அதோடு தன் வேலை முடிந்தது, என்று அங்கிருந்து நடக்கத் தொடங்கினான் லெனி.

அவன் செல்வதை அப்படியே பார்த்து நின்றவள், இனி தான் எந்த வழியில் செல்வது, என்ன செய்வது என்று தன் குட்டி மூளையை எத்தனையோ கசக்கி யோசித்தும் பதில் கிடைப்பது போல் இல்லாமல் இருக்க, லெனியின் பின்னாலேயே ஓடினாள்.

“லையன். நில்லு. நில்லு” என்று அவள் கத்திக் கொண்டே ஓடிவர அவள் குரல் கேட்டு அவளைப் பார்த்தவாறே திரும்பி நின்றான் லெனி.

அவன் நின்றதும், இன்னும் வேகமாக அவனை நோக்கி ஓடியவள் காலை, உயரமாய் வளர்ந்த புற்கள் தடுக்கி விட, கீழே விழுந்தாள்.

கீழே விழுந்தவள், கால் கைகளில் சிறு சிறு சீராய்ப்புகள். ஒருவழியாய் எழுந்து அமர்ந்தவள், கை கால்களில் ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் தட்டிவிட்டு எழுந்து நிற்க முடியாமல், கைகளை லெனியை நோக்கி நீட்டி, “ஹெல்ப். ஹெல்ப்” என்றாள்.

லெனிக்கு அவளுக்கு உதவ வேண்டும் என்று ஒரு பக்கம் எண்ணம் இருந்தாலும், முதன்முதலாக மனிதர்களைப் பார்ப்பவன் என்பதால், மனிதர்கள் ஆபத்தானவர்களோ? இவளால் தனக்கேதும் ஆபத்து வருமோ என்ற யோசனை இன்னொரு பக்கம் இருந்தது.

அதில் தயங்கினாலும், “எழுப்பிவிடு என்னை” என்று அவள் மீண்டும் குரல் கொடுத்ததும், அவளருகில் சென்றான் லெனி.

அடர் நீல நிறத்தில் பாவாடையும், வெளிர் நீல நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தவள் முதுகில், அழகான வெள்ளை நிறப் பை ஒன்றுமிருந்தது.

அந்தப் பையை வாயால் கவ்வி இழுத்து, அவள் எழுந்து நிற்க உதவினான் லெனி.

எழுந்ததும், “ஹப்பா!” என்றவள், லெனியின் முதுகை மென்மையாய் தடவிக்கொடுத்தாள் அவள்.

“மறுபடி தேங்க்ஸ். என் பேர் மைத்ரி. உனக்குப் பேர் என்ன?” என்று அவள் கேட்க, லெனி அமைதியாக இருக்க, “உனக்கு இன்னும் பேர் வைக்கலையா? சரி நான் அப்புறமா வைக்கறேன். இப்போ என்னை என் அப்பா கிட்டக் கூட்டிட்டுப் போறியா. நான் காணாம போயிட்டேன்” என்று சொல்ல, அது எதுவுமே புரியாத லெனி மீண்டும் நடக்கத் தொடங்க, மீண்டும் அவன் பின்னாலேயே ஓடினாள் மைத்ரி.

“நில்லு நில்லு” என்று அவள் கத்தக் கத்த, அதைக் கேட்காதவன் போல் நடந்தான் லெனி. ஆனால், வழக்கத்தை விட மெதுவாக, மைத்ரி அவனைப் பின்தொடர ஏதுவாக நடந்தான். அவள் தன்னைப் பின்தொடர்கிறாளா என்பதையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து நடந்தான்.

அவன் நடை நின்றது, வரும் வழியில், அவன் எமிலியாவைப் பார்த்த இடத்தில் தான்.

லெனி வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட எமிலியா, ‘மறுபடி இதே சிங்கமா?’ என்று பயந்து அவன் கண்ணில்படாதவாறு மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டாள்.

ஆனால், லெனி அங்கேயே நின்று, பார்வையைச் சுழலவிட்டுத் தேடவும், “ஐயோ. என்னைத் தான் தேடுது போல” என்று நடுங்கியவாறே நின்றிருந்தவள் கவனம் இப்போது, லெனிக்குப் பின்னால் ஓடி வந்த மைத்ரி மீது தாவியது.

லெனி நின்றிருந்ததைப் பார்த்த மைத்ரி, “ஹப்பாடா. லையன். இப்போவாச்சும் நின்னியே. எனக்கு நடந்து நடந்து கால் வலிக்குது” என்று முட்டிகளைப் பிடித்துக்கொண்டு லெனியின் அருகில் நின்றாள் மைத்ரி.

சிங்கத்துக்கு வெகு அருகில் நின்றிருக்கும் ஏழு வயது குழந்தையைத் தான் ஒளிந்திருந்த இடத்திலேயே இருந்துப் பார்த்த முப்பது வயது எமிலியாவிற்குப் பகீரென இருந்தது.

அதிலும், அந்தக் குழந்தைத் தமிழ் பேசுவதைக் கேட்டதுமே, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டும், தமிழ் மீதும், முன்பு ஒரு தமிழன் மீதும் காதல் கொண்டிருந்த எமிலியாவிற்குத் தானாக அந்தக் குழந்தையைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது.

மரத்தின் பின்னால் நின்றுக்கொண்டே, மைத்ரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எமிலியா “இஸ்க். இஸ்க்” என்று ஒலி எழுப்ப, அவள் நினைத்தது போலவே, மைத்ரி திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிப் பார்த்தவள், லெனியிடம், “லையன். அங்க யாரோ இருக்காங்க போல” என்று கைக்காட்ட, மைத்ரி கைநீட்டிய இடத்தில் நிற்கும் எமிலியாவைப் பார்த்தான் லெனி.

எமிலியாவிடம் நெருங்கியவன் தன்னுடனே வந்த மைதிரியை அவளருகே தள்ளிவிட்டு என்ன சொல்ல முயன்றானோ!

அவன் சொல்ல முயன்றது, சொல்லாமலே புரிந்தது எமிலியாவுக்கு.

எமிலியாவுக்கு மட்டுமா? மைத்ரிக்கும் புரிந்தது, லெனி தன்னை இந்தப் பெண்ணுடன் இருக்க சொல்கிறான் என்று.

அத்தனை மொழிகளும், ‘உங்களுக்கு நாங்கள் தேவையே இல்லையோ!’ என்றத் தாழ்வு மனப்பான்மை தாக்கியிருக்குமோ?

எமிலியா மைத்ரியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள், முதன்முறையாக.

முதன்முறையாகவா? ஆம். இதற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது போல் இருவருக்குமே நினைவில்லையே. ஆயினும் பல முறைப் பிடித்த உணர்வு.

நினைவுகள் பொய்யோ? அல்லது, உணர்வுகள் பொய்யோ?


** ** ** ** ** **
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
லெனின் நவீனைக் கல்லூரிச் சிற்றுண்டியகத்தில் சந்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது.

இந்த ஒரு வாரம், லெனினின் வாழ்வில் குறிப்பிடும்படியாக எதுவும் நிகழாமல் தான் கடந்தது.

லெனி, ‘அனிக்கா தான் வேண்டும்’ என்று சொல்வதும், கமலி, ‘அனிக்கா வேண்டவே வேண்டாம்’ என்று சொல்வதும், கமலி பேசுவதற்கெல்லாம், பாட்டி ஏதாவது கேள்விகள் கேட்டுத் துளைப்பதுமாகக் கடந்தது.

இந்த ஒரு வாரத்தில் அனிக்காவைப் பற்றிய பேச்சே அதிகமிருந்தது. அனிக்காவைப் பற்றியும், அனிக்காவின் குடும்பத்தைப் பற்றியும், அனிக்காவின் குடும்பத்திற்கும் லெனினின் குடும்பத்திற்கும் இருக்கும் தொடர்புகள் பற்றியும் பாட்டியும், கமலியும் லெனினிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டனர்.

சிங்கமுத்து தன்னுடைய இருபத்தி இரண்டாம் வயது வரை ஒரு தாதாவின் கீழ் பணிபுரிந்துக்கொண்டிருந்தார். அவருடைய இருபத்தி மூன்றாம் வயதில், அவர் யாரிடம் வேலைப்பார்த்துக்கொண்டிருந்தாரோ, அவர் திடீரென்று இறந்துவிட, தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து, அந்த ரௌடி கூட்டத்திற்குத் தலைவன் ஆனார். அவரும் அவர் நண்பரும் நகரத்தின் அடுத்த தாதாக்கள் ஆனார்கள். அந்த நண்பரின் மகளே அனிக்கா.

அதன் பின் செய்த அனைத்து பாவக்காரியங்களிலும் இருவருக்கும் சரிசமமாகப் பங்கு உண்டு.

அப்படித் தொழில் என்றப் பெயரில் அவர்கள் என்னென்ன பாவக்காரியங்கள் செய்து வந்தனர்? கொல்வது தான் அவர்களின் பிரதானத் தொழிலாக இருந்து வந்தது. காசைக் கையில் திணித்துவிட்டால் போதும், பணக்காரனோ, ஏழையோ, பெரிய பதவியில் இருப்பவனோ, அரசியல்வாதியோ, தொழிலதிபரோ யாராயினும் அவர்களுக்கு எமனாக மாறி அவர்கள் உயிரை உடலை விட்டு பிரிக்கத் தயங்கமாட்டார்கள்.

இதோடு சேர்த்து, கடத்தல், மிரட்டல், உருட்டல் போன்ற சில்லறை வேலைகளும் செய்துவந்தனர்.

சில வருடங்களுக்கு முன், ஒரு போலீஸ் தாக்குதலில் அவரின் நண்பர் இறந்துவிட, சிங்கமுத்து மட்டுமே, அந்த ரௌடி சாம்ராஜ்ஜியத்துக்கு ஒற்றைத் தலைவரானார்.

தந்தைக்குப் பின் தான் தான் தலை, என்று லெனின் நினைத்திருக்க, அனிக்காவின் அண்ணன்களோ, சிங்கமுத்துவுக்குப் பிறகு தாம் தான் தலைவனாக வேண்டும் என்று நினைத்திருந்தனர். சிங்கமுத்துவுடன் சேர்ந்து அவர்களின் தந்தையும் தானே இந்த சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தது. லெனிக்கு இருக்கும் உரிமைத் தங்களுக்கும் உள்ளது என்று எண்ணினர். சந்தோஷ் மிகச் சிறியவன் என்பதாலும் அவன் அம்மா பிள்ளை, இந்தத் தொழிலில் போட்டிக்கு வரமாட்டான் என்பதாலும், லெனின் மட்டுமே அவர்களின் தடை என்று எண்ணினர்.

ஏற்கனவே, சிங்கமுத்து கல்லூரி ஒன்றைத் திறந்து, அதன் தலைமைப் பொறுப்பை லெனினிடம் கொடுத்தது அவர்கள் கண்ணை உறுத்தியது. அதனாலேயே இந்த ரௌடி தொழில் தலைமை எல்லாம் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் அவர்களுக்கு.

லெனினின் வீட்டில் தளிர் சாந்தசொரூபினியாய், அமைதியாய் இந்த ரவுடித்தனத்தை எல்லாம் எதிர்ப்பவளாக இருப்பது போலவே, அவர்கள் இல்லத்தில் பத்திரகாளியாக அதையெல்லாம் எதிர்ப்பவள் அனிக்கா என்பதை லெனின் சொல்லித் தெரிந்துக்கொண்டனர் கமலியும் பாட்டியும்.

சமீபகாலமாக அனிக்காவுக்கும், அவளின் அண்ணன்களுக்கும் நடுவில் ஏகப்பட்ட பிரச்சனைகளும், வாக்குவாதங்களும். இந்த ரௌடித்தனம், தாதா வேலை எல்லாம் தந்தையோடு முடியட்டும் என்று அனிக்கா சத்தமிடவும், அதற்கெல்லாம் அவள் அண்ணன்கள் செவிசாய்க்காமல் இருக்கவும், அனிக்கா அவர்கள் முகத்திலேயே முழிக்கப்போவதில்லை என்று சொல்லி வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் சொன்னான் லெனின்.

வெளியேறிவள், லெனினின் கல்லூரியில் தணிக்கையாளராக வேலைக்குச் சேர்ந்தாள் என்றும் தெரிந்துக்கொண்ட கமலிக்கு, அந்த ‘சமீபகாலமாக’ என்பது மட்டும் கொஞ்சம் இடிப்பது போல் இருந்தது.

ஆயினும் அதைப்பற்றி லெனினிடம் கேட்காமல், “அவ தான் அவங்க அண்ணனுங்களையே ரௌடிசம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிச் சண்ட போட்டிருக்கா. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் கிட்டயும் அப்டி தான சொல்லுவா?” என்று கமலி கேட்க, “அவளுக்காக நான் மாறுவேன்னு சொல்லி ஏமாத்தி எல்லாம் கல்யாணம் செய்துக்க மாட்டேன். இப்போ நான் எப்படி இருக்கேனோ, இதே லெனியா அவளுக்கு என்னைப் பிடிச்சா தான் கல்யாணம்” என்று சொன்னவன் மனம் பல கோணங்களில் யோசித்தது. அவனுக்கு அனிக்காவைப் பிடித்திருக்கிறது என்பது ஒரு பக்கமிருக்க, அவளைக் கைப்பிடித்தால் என்னென்ன லாபம் என்பதையெல்லாம் வேறு கணக்கிட்டது.

அதனாலேயே, இந்த ஒரு வாரத்தில் கமலி டிசைன் டிசைனாக காரணம் சொல்லியும், அனிக்கா தான் நாயகி என்பதில் உறுதியாக இருந்தான் லெனி.

அத்தனைக் காரணங்கள் சொல்லி அவளை லெனியின் மனதிலிருந்து கலைக்கப் பாடுபட்ட கமலி, அந்த ‘சமீபகாலம்’ என்பதற்கு மட்டும் காரணம் கேட்டிருக்கலாம்.

அனிக்காவின் அழகும், அல்லது நம்பும்படியான தீர்க்கமானப் பேச்சும், குரலும், அல்லது அவளைத் திருமணம் செய்துக்கொள்வதால் கிடைக்கும் ஆதாயமும், லெனினை அவளைப் பற்றித் தவறாக எதையும் யோசிக்க முடியாமல் வைத்திருந்த நிலையில், கமலியேனும், ‘ஏன் சமீபகாலமாக மட்டும் அனிக்காவுக்கும் அவள் அண்ணன்களுக்கும் வாக்குவாதம்?’ என்றக் கேள்வியை அவனுள் விதைத்திருக்கலாம்.

இந்த ஒரு வாரம் இரவு தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் கமலியும், பாட்டியும் லெனினுடனே இருந்தனர்.

அவன் அன்றாட வாழ்வில் நடக்கும் யாவையும் கவனித்த வண்ணம் இருந்தனர். அவள் உருவாக்கிய கதாபாத்திரம் என்பதாலும், அவனோடு ஒரு வார காலம் இருந்ததாலும், கமலிக்கு லெனினைப் பற்றி ஓரளவு புரிந்தது.

ஆனால் இந்த அனிக்கா? அவளைப் பற்றி கமலிக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று சொன்னால் அது பொய்யல்ல.

அதனாலேயே இன்று லெனினுடன் கல்லூரிக்குச் செல்லும் போதே, ‘இன்று நான் அந்த அனிக்காவிடம் தனியாகப் பேசியே தீருவேன்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

“அவ கிட்ட ஏன் தனியாப் பேசப் போற டெடி?” என்று லெனின் கேட்க, “டேய். அவ என் ஹீரோயினுடா. நான் தெரிஞ்சிக்க வேணாமா?” என்று சீறினாள் கமலி.

“நீ உருவாக்குன ஹீரோயினு தான? உனக்குத் தெரியாதா?” என்று லெனின் கேட்க, “வந்தேன்னா அடிச்சு உன் மூஞ்சைக் குழப்பிடுவேன்” என்று எகிறினாள். கமலி.

அதைக்கேட்ட பாட்டி, ”ஒரு வாரம் இந்த ரௌடி பய கூட இருந்துட்டு, ‘நானும் ரௌடி தான்’னு சொல்ற மாதிரி பேசுது பாரேன். இவ அவன் மூஞ்சை அடிச்சிக் கொழப்புவாளாம்” என்று பாட்டி சொல்ல, “ஹாஹா. ஆமாம். பெரிய தாதா கணக்கா தான் பேசறா” என்று இந்த வாரம் முழுதும் செய்தது போலவே பாட்டி கமலியைக் கலாய்க்கும் போது மட்டும் அவருடன் இணைந்துக்கொண்டான் லெனின்.

“டாப்பிக்க மாத்தாதீங்க” என்று கமலி அவர்களை மீண்டும் பேச்சுக்குள் இழுத்து வர முயற்சிக்க, அவனும் அவள் இழுப்புக்கு வந்தான்.

“சரி. சொல்லு. நீ தான அவளையும் உருவாக்குன?” என்று லெனின் கேட்க, “ஆமாம். உருவாக்குனேன் தான். ஆனா, அவ ஹீரோயினா வருவான்னு நான் என்னத்த கண்டேன். உங்க வீட்ல ரெண்டு பையன் ஒரு பொண்ணு இருக்கீங்களே. அதே மாதிரி உன் எதிரி வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கட்டுமேன்னு ஒரு கணக்குக்கு அவளைச் சேர்த்து விட்டேன்” என்றாள் கமலி.

“நீ யோசிக்கும் போதே அனிக்காவோட அண்ணனுங்கள எனக்கு எதிரியா தான் யோசிச்சியா?” என்று லெனின் அவனுக்குத் தேவையானவற்றை அவளிடமிருந்து கறக்கப் பார்த்தான் லெனி.

“ம்ம். ஆமாம்” என்று கமலி சொல்லும் போதே கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“அப்போ அவங்க தான் இந்தக் கதையில வில்லன்களா?” என்று லெனின் கேட்க, ”இல்ல” என்று சொன்ன கமலிக்கு, ‘ஐயோ! ஏன்டா இவனிடம் சொன்னோம்?’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

அவன் அடுத்து என்ன கேட்பான் என்பதை அறிந்தவள் அந்தக் கேள்வியைக் கேட்க பெரிதும் பிரயத்தனப்பட்டாள்.

“அப்போ யார்....?” என்று வில்லனைப் பற்றிக் கேட்க வரும் லெனினை மிகப் பதட்டத்துடனே எதிர்கொண்டு, கேள்வியைத் தானே நாயகி பக்கம் திரும்பினாள் கமலி.

அவள் லெனினிடம் சமாளிக்கும் போதே, யார் வில்லனென கமலியிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் பாட்டி.

“நான் யாரை ஹீரோயினா முடிவு செய்திருந்தேன் தெரியுமா?” என்று கமலி கேட்க, தான் கேட்க வந்த கேள்வியை மறந்துதான் போனான் லெனின்.

“யாரு?” என்று அவன் கேட்க, “நம்ம அனிக்காவ முதல் முறைப் பார்க்கப் போனோமே. அப்போ ஒருத்தர் வந்தாருல்ல?” என்று அவனுக்கு அடையாளம் காட்ட முயன்றாள் கமலி.

“யாரு...?” லெனின் யாரென்று கண்டுக்கொண்டது போல் தெரியவில்லை.

“அதான்ப்பா! அன்னைக்கு, ‘சார் உங்கள பார்க்க ஒரு போலிஸ்கார் வந்திருக்கார்’ன்னு ஒருத்தர் வந்து சொன்னாரே. உன்னோட காலேஜ் வேலைகளை மட்டும் ஷெட்யூல் பண்றாரே ஒருத்தர். அவரைத் தான் சொல்றா” என்று சொல்லிவிட்டு, கமலியின் முகத்தில் ஏதும் மாறுதல் ஏற்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார் பாட்டி.

பாவம், தனியாகப் பேசும் சமயம் அமையும் வரைப் பொறுத்திட முடியவில்லை அவரால்.

‘தான் நினைக்கும் ஆள் தான் வில்லனோ?’ என்று கமலியின் முகமாறுதல்களை வைத்து உறுதிப்படுத்திக்கொள்ள அவளையே பார்த்திருந்தார். நேற்று இரவு நடந்த ரகசியச் சந்திப்பு ஒன்றின் பயனாக, ‘யார் வில்லன்?’ என்றக் கேள்விக்குப் பாட்டி சரியானப் பதிலாகக் கணித்திருந்தார். பாட்டிக்குக் கொஞ்சம் ஞானம் அதிகமல்லவா?

அவர் எதிர்பார்த்தவாறே, பாட்டி சொன்னதைக் கேட்டுப் படபடத்து, திரும்பி பாட்டியை முறைத்தாள். கூடுதல் படபடப்பு தொற்றிக்கொண்டவளாய் லெனினின் முகத்தை உற்று நோக்கினாள். லெனினின் கல்லூரி வேலைகளை அட்டவணையிடும் அந்த மனிதரை அடையாளம் காட்டுவதற்கு, தேவையில்லாத வசனம் ஒன்றை பாட்டி இடைசொறுகினாரே. அந்த வசனம் லெனினின் சிந்தையை எட்டியிருக்குமோ? ‘யார் வில்லன்?’ என்றச் சிந்தனையோடு அந்த வசனம் மோதி, யார் வில்லன் என்று தெளிவானப் பதில் கிடைத்துவிடுமோ என்று மிகுந்த பதட்டத்தில், அவன் முகரேகைகளைப் படிக்க முயன்றாள்.

ஆனால் அவள் பயந்தபடி எதுவும் நடந்துவிடவில்லை.

லெனினின் முகத்தில் எதுவும் மாறுதல்கள் ஏற்படவில்லை.

“ஓஹ் அவரா? அவருக்கு என்ன? அவரையா ஹீரோயினா பார்த்த. ச்சை” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டுச் சிரித்தான் லெனி.

அவன் கண்டுக்கொள்ளவில்லையா?

உண்மையாகவா?

அவனுக்கு பாட்டி அளவுக்கு ஞானம் இல்லையோ!

பாட்டி அளவுக்கு ஞானம் உள்ளவனா, என்றக் கேள்விக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்று பதில் சொல்லிவிட முடியாது தான். ஆனால், ஓரக்கண்ணால் கமலியின் முகமாறுதல்களைக் கண்கானித்தே வில்லன் யாரென்று கண்டுகொள்ளும் அளவிற்கு ஞானம் உடையவன்.

‘ச்ச. அவனா எனக்கு வில்லன்’ என்று மனதுக்குள் அந்த வில்லனைப் பற்றி ஏளனமாக நினைத்ததை முகத்தில் காட்டிக்கொள்ளாத அளவுக்கு அழுத்தமானவன்.

ஆனால், கமலியோ, அவன் யார் வில்லனெனக் கண்டுபிடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு ஹீரோயின் கதைக்கே தாவினாள்.

“ச்சே. அந்த ஆள் ஹீரோயின் இல்ல. நீ தான அவரை இன்டர்வியூ பண்ணி செலெக்ட் பண்ணிருப்பல்ல. அந்த இன்டர்வியூக்கு ஒரு அழகான பொண்ணு வந்திருப்பாளே!” என்று கமலி கேட்க யோசித்தவன், “ஆமாம்! அந்த இன்டர்வியூக்கு அதிகம் பேரைக் கூப்பிடல. கூப்பிட்டதே ஆறு ஏழு பேர் தான். அதுல ஒரே ஒரு பொண்ணு தான். அழகா தான் இருந்தா” என்றான் லெனின்.

“ஹான். என் கதைப்படி நீ அந்தப் பொண்ணைத் தான் அந்த வேலைக்கு செலெக்ட் பண்ணியிருக்கணும். அவ தான் ஹீரோயினா இருந்திருக்கணும்” என்று கமலி சொல்ல, “எது? அவளா? அவ பார்க்க தான் அழகா இருந்தா. மத்தப்படி இந்த வேலைக்கு அவ சரியே வர மாட்டா. நான் கேட்ட கேள்விக்கு, என் காதுக்குக் கேட்காத அளவுக்கு பாதி வார்த்தையை முழுங்கி பதில் சொல்றா. அதுல நான் டென்ஷன் ஆகி, ‘கெட் அவுட்’ன்னு கத்துனதுக்கு அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துடுச்சு அந்தப் பொண்ணு” என்று சொன்னவன் முகத்தில் எக்கச்சக்க எரிச்சல்.

“ப்பே. உனக்கு எப்டி ஒரு மென்மையானப் பொண்ணை ஹீரோயினா செட் பண்ணி விட பார்த்தேன். உனக்குக் குடுத்து வைக்கல” என்று விடாமல் பேசினாள் கமலியும்.

‘தான் பார்த்துவைத்த ஹீரோயின் தான் சிறந்தவள்’ என்று கமலியும், ‘அவளுக்கும் தனக்கும் செட்டே ஆகாது’ என்று லெனினும் வாதாடிக்கொண்டே மகிழுந்தை விட்டு கீழே இறங்க, அவர்களோடு கீழே இறங்கிய பாட்டியின் யோசனையில் ஹீரோயின் இல்லை. வில்லன். வில்லன் மட்டுமே.

‘அவனா வில்லன்?’ என்று ஒரு பக்கம் யோசனையாய் இருக்க, அவருடைய நினைவுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்ததில், ‘ஆம்! அவன் தானே வில்லனா இருக்க முடியும்’ என்று பதில் கிடைத்தது.

ஆனால், கமலியின் நடவடிக்கையிலிருந்து அவள் யாரை வில்லன் என்று கற்பனைச் செய்தாள் என்று புரிந்துக்கொண்டாளோ, அந்த நபருடன் தானே நேற்றிரவு ரகசியச் சந்திப்பு நடந்தது. லெனினுக்குத் தெரியாத ரகசியச் சந்திப்பு.

அந்தச் சந்திப்பில் அந்த நபர் நடந்துக்கொண்ட விதமும், அவர் பேசிய விடயங்களையும் வைத்து எடைபோடுகையில் அந்த நபர் கெட்டவராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தானே அவர் உள்ளுணர்வு உரைத்தது.

ஆனால், ஏதேனும் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும்.

ஒன்று தான் உண்மையெனில் எது பொய்?

நினைவுகள் பொய்யோ? அல்லது, உள்ளுணர்வுகள் பொய்யோ?
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் 7 :

எமிலியா மைத்ரியின் கையைப் பிடித்துக்கொண்டதும், அதோடு தன் வேலை முடிந்தது என்று லெனி அங்கிருந்து நகர்ந்தான். பொறுமையாகவே நகர்ந்தான்.

அவன் அங்கிருந்துக் கொஞ்சம் தள்ளிச் சென்றதும் தான் எமிலியாவுக்கு இதயத்துடிப்பின் அதீத வேகம் கொஞ்சம் குறைந்தது.

“லையன்....” என்று அழைத்துக்கொண்டு, லெனியின் பின்னாலேயே ஓட முயற்சித்த மைத்ரியின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

“வேர் ஆர் யூ கோயிங்?” என்று எமிலியா மைத்ரியைக் கேட்க, அவளை விநோதமாகப் பார்த்தாள் மைத்ரி. “நீங்க இங்க்லீஷ்காரியா?” என்று மைத்ரி கேட்க, “எஸ்” என்றாள் எமிலியா?

“அப்போ எப்படி நான் தமிழ்ல கேக்குற கேள்வி மட்டும் புரியுது?” என்று மைத்ரி தன் தாடையில் ஆட்காட்டி விரலைத் தட்டித் தட்டி யோசித்தாலும், அவள் பார்வையெல்லாம் அங்கிருந்துச் செல்லும் லெனியின் மீது தான் இருந்தது.

“எனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். பேசக் கொஞ்சம் மட்டும் தெரியும்” என்று தத்தித் தத்தித் தமிழ் பேசினார் எமிலியா.

“எப்படி? ஹவ்?” என்று முதலில் தமிழில் கேட்டுவிட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று தனக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தையையும் சேர்த்துக் கேட்டாள் மைத்ரி.

“என் அப்பா தமிழைக் காதலித்தார். அவரிடமிருந்துக் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் ஒரு தமிழரைக் காதலித்தேன். அவரிடமிருந்துக் கொஞ்சம் நிறையத் தமிழ் கற்றுக்கொண்டேன்” என்று சொன்ன எமிலியாவின் கண்கள் அவள் காதலித்த தமிழரைப் பற்றியச் சிந்தனையில் மினுமினுத்தது.

“அப்போ உங்க லவ்வர் தமிழா? ஓஹோ” என்று கேட்ட மைத்ரியிடம் ‘முன்னாள் காதலர் அல்லது முன்னாள் கணவர் என்று சொல்லியிருக்க வேண்டுமோ?’ என்று யோசித்து மௌனியாகவே இருந்தாள்.

“லையன் போகுது. அதைக் கூப்பிடுங்க” என்று சிணுங்கினாள் மைத்ரி. அவள் உயரத்திற்குக் குனிந்த எமிலியா, “லையன கூப்பிடனுமா? அது நம்பள கடிக்கும்” என்றாள்.

“இல்ல. கடிக்காது. அது கூடவே போகலாம் ப்ளீஸ்” என்றாள் மைத்ரி அழுதுக்கொண்டே “லையன் லையன்” என்று லெனி திரும்பிப் பார்ப்பானா என்று குரல் கொடுத்தாள்.

“அது கடிக்காது. உங்களுக்குத் தெரியுமா? அது தான் என்னைச் சிறுத்தை கிட்ட இருந்து காப்பாத்துச்சு. நான் கீழ விழுந்தப்போ கூட அது எழுந்திருக்க ஹெல்ப் பண்ணுச்சு” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே சொன்னாள் மைத்ரி.

“வாட்?” என்று எமிலியா கேட்க, “ஹி சேவ்ட் மீ ஃப்ரம் அ ச்சீட்டா!” என்று ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தாள் மைத்ரி. ‘வாட்?’ என்று எமிலியா ஆச்சரியத்தில் சொன்னதை, தான் சொன்னது விளங்காமல் தான் திரும்பவும் கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு.

என்ன தான் எமிலியா தனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும், அவளின் தோற்றம் மைத்ரியை அவ்வப்போது எமிலியாவுக்கு ஆங்கிலத்தில் பேசினால் தான் புரியுமென்று நினைக்கவைத்தது.

அவளின் மொழிப்பெயர்ப்புக்கு காரணம் புரிந்துக்கொண்ட எமிலியா அவளின் தலையைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தாள். அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாத மைத்ரி, “லையன்ன்ன்ன்ன்ன்!” என்று இன்னும் லெனியின் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் மைத்ரியின் கூவல்களைக் கண்டுக்கொள்ளாமல் இங்கிருந்துச் சென்றுவிட வேண்டும் என்று லெனி நினைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் அழைப்புகளை உதாசினப்படுத்த முடியவில்லை. மைத்ரியை லெனிக்குப் பிடித்திருந்தது. அவள் அவன் பின்னாலேயே சுற்றி வருவது அவனுக்குப் பிடித்திருந்தது. அவளின் மென்மையானக் கரங்களின் ஸ்பரிசம் பிடித்திருந்தது. மேலும், அவளின் குட்டி உருவம் அவன் தம்பி தங்கைகளை நினைவுப்படுத்துவதாக இருந்தது.

அதனாலேயே, அவன் திரும்பவும் மைத்ரியிடமே வந்து, அவன் முகவாயைக் கொண்டு அவள் கழுத்தில் கூசி விளையாடினான் லெனி. மைத்ரி அதில் சிணுங்கிச் சிரிக்க, லெனியின் நடவடிக்கைகளை ஆச்சரியமாகப் பார்த்தாள் எமிலியா.

‘இதென்ன சிங்கமா? பூனையா?’ என்று ஒரு முறை உற்றுப்பார்த்தாள்.

சிங்கத்தின் இயல்பு இதுவல்லவே.

மைத்ரி சிங்கம் தன்னையொரு சிறுத்தையிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்ததென்று சொன்னதையே எமிலியாவால் நம்ப முடியவில்லை.

ஒருவேளை சிறுத்தையிடமிருந்து தன் உணவைத் தட்டிப் பறிக்கயெண்ணி காப்பாற்றியதோ? அப்படி லெனி மைத்ரியை உணவாகப் பார்த்திருந்தால் இப்படி அவளுடன் விளையாடிக்கொண்டிருக்க மாட்டானே.

யோசித்து யோசித்து எமிலியா தான் சோர்ந்துப்போனாள். லெனியும், மைத்ரியும் அப்படியொருத்தி நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதையே மறந்து, அவர்களுக்கானத் தனிவுலகில் சஞ்சரித்திருந்தனர்.

‘மெய்யாகவே இந்தச் சிங்கம் கடிக்காதா?’ என்று பயந்து பயந்து லெனியை நெருங்கினாள் எமிலியா. அதே பயத்தோடும் நடுக்கத்தோடும், அவள் லெனியின் முதுகைத் தோட, லெனி அதைக் கண்டுகொள்ளாதது போலவே இருந்தான்.

இன்னும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எமிலியா லெனியின் முதுகை மென்மையாகத் தடவிக்கொடுக்க, எமிலியாவை நிமிர்ந்துப் பார்த்தான் லெனி.

அந்தப் பார்வையில், கொடூரம் இல்லை. சீறல் இல்லை. கடுமை இல்லை. மென்மையானப் பார்வை. கருணைக் கொஞ்சும் பார்வை. லெனி சிங்கம் தான். ஆயினும், அந்தப் பார்வை அவன் இவர்களுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்கப்போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது.

அந்தப் பார்வையைத் தனக்கு முன்னாலேயே மைத்ரி உணர்ந்துக்கொண்டாளோ என்று ஆச்சரியித்துப் போனாள் எமிலியா.

குழந்தை மனம். மிருகங்களை விட மனிதர்கள் உயர்ந்த உயிரினங்கள் என்று எண்ணாத வயது. மிருகங்களால் தங்களுக்கேதும் தீங்கு ஏற்படும்வரை, மிருகங்களையும் நண்பர்களாக அல்லவா பார்க்கும்.

எமிலியாவுக்கும், காரணமே இல்லாமல், இந்தச் சிங்கத்தால் எந்த ஆபத்துமில்லை என்றே தோன்றியது. அவள் உள்ளுணர்வை நம்பினாள் தான். ஆனால், மைத்ரி லெனியை நம்பும் அளவிற்கு இல்லை.

அந்த நம்பிக்கைக்குள் கொஞ்சமே கொஞ்சமாகச் சந்தேகம் ஒளிந்திருந்தது.

என்ன தான் லெனி ஆபத்தானவனாகத் தெரியவில்லை என்றாலும், அவன் சிங்கம் தானே. சிங்கத்துக்குப் பசி எடுத்தால் தானும் அதற்கு இரையாகத் தானே தெரிவோம் என்ற சந்தேகத்தோடு கொஞ்சம் பயமும் இருந்தது. ‘Hungry Dogs are Never Loyal’ என்று கேள்விப்பட்டிருக்கிறாளே. அப்படியிருக்கையில் சிங்கத்துக்குப் பசித்தால் பாவம் பார்க்குமா!

எமிலியா சிங்கத்தின் பசியைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்க, மைத்ரி தன்னுடைய பசியைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள்.

“பசிக்கிது” என்று வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னவள் முதலில் எமிலியாவைப் பார்த்துவிட்டு, பிறகு லெனியைப் பார்த்தாள்.

எமிலியாவிடம் ஏதேனும் உணவு இருக்குமென்றே நினைத்தாள் மைத்ரி. அவளிடம் எங்கே உணவிருக்கும். அவளே இந்தக் காட்டுக்குள் சிக்கி இரண்டு நாட்கள் பட்டினியாக அல்லவா இருக்கிறாள். எமிலியா ‘இல்லையே’ என்று சைகைக் காட்டவும் லெனியிடம் திரும்பினாள் மைத்ரி.

லெனி, மைத்ரி முதுகிலிருந்த பையைக் கவ்வி, அவளைத் தன்னோடு இழுத்துச் செல்லப் பார்த்தான். மைத்ரி அவன் முகத்துக்கு அருகில் சென்று, வெறும் கையை உண்பது போல் சைகைக் காட்டி, “பசிக்கிதுன்னு சொன்னேன்” என்றாள்.

அதைப் பார்த்தப் பிறகும், லெனி மைத்ரியை இழுத்துச் செல்ல, அவளும் மறுப்புத் தெரிவிக்காமல் அவனுடன் நடந்தாள்.

“எங்க போற?” என்று எமிலியா புரியாமல் கேட்க, “சாப்பாடு இருக்க இடத்துக்கு லையன் கூட்டிட்டுப் போகும்ன்னு நெனைக்கிறேன்” என்றாள் மைத்ரி.

“இட் இஸ் அ லையன். அது உன்னையே கூட அடிச்சி சாப்பிடும்” என்று அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தபடியே சொன்னாள் எமிலியா.

“அவன் மாட்டான்” என்றாள் மைத்ரி.

எமிலியாவுக்கு ‘அது’வாகத் தெரிந்த சிங்கம், மைத்ரிக்கு ‘அவன்’ஆகத் தெரிந்தான். அந்த ‘அது’ தான் எமிலியாவைப் பயப்பட வைத்ததோ? அந்த ‘அவன்’ தான் மைத்ரியைக் கவலையில்லாமல் அவனோடு செல்ல வைத்ததோ?

“நீ சிங்கம் கூட போனா இன்னும் காட்டுக்குள்ள தான் போகணும். நீயும் என்னை மாதிரி வழித்தவறித் தான் இங்க வந்து சிக்கியிருப்பன்னு நெனைக்கிறேன். ஊருக்குள்ள போக வேணாமா?” என்று எமிலியா பதட்டமாகக் கேட்க, பொறுமையாகப் பதில் கேள்விகள் கேட்டாள் மைத்ரி.

“உங்களுக்கு வெளிய போக வழித் தெரியுமா?” – மைத்ரி.

“தெரியாது. தேடனும்” – எமிலியா.

“தேட எவ்ளோ நேரமாகும்” – மைத்ரி.

“தெரியல” – எமிலியா.

“உங்களுக்குப் பசிக்குதா?” – மைத்ரி.

“ஆமாம்” – எமிலியா.

“இங்க உங்களுக்குச் சாப்பாடு இருக்கா?” - – மைத்ரி.

“இல்ல” – எமிலியா.

“அப்போ. நம்ப லையன் கூட போகலாம். அவனுக்கு எங்க சாப்பாடு இருக்குன்னு தெரியும். எப்படியும் என்னைத் தேடி என் அப்பா வருவாங்க. அவங்கக் கூட வெளிய போகலாம். ஆனா, அப்பா வர்ற வரை என் தொப்பை பசிக்கும்ல” என்றாள் மைத்ரி.

எமிலியாவுக்குச் சிங்கங்களைப் பற்றியும், புல்வெளிகளைப் பற்றியும் கொஞ்சம் தகவல்கள் தெரிந்து தான் இருந்தது.

இப்போது அவர்கள் இருக்குமிடத்தில் நீரோ, உணவோ அதிகமில்லை. விலங்குகள் கூட அவ்வப்போது தான் கண்ணில் பட்டன. ஆனால், நீரும், செடிகளும், தங்கள் உணவுக்கான விலங்குகளும் அதிகம் இருக்கும் இடங்கள் தான் சிங்கங்களின் ஆட்சிக்குக் கீழிருக்கும்.

லெனி நாடோடி சிங்கமாக இல்லாமல், சிங்கக்குடும்பங்களுடன் இணைந்து வாழும் சிங்கமாக இருந்தால், அவன் குடும்பத்தின் ஆட்சிக்குக் கீழிருக்கும் நிலத்துக்குச் சென்றால், அங்கு நிச்சயம் அவர்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும்.

ஆனால், ஒரு சிங்கத்துடன் செல்வதா? அதுவும் அதன் இருப்பிடத்திற்கேவா?

அதுவுமில்லாமல், லெனி நாடோடி சிங்கமா? அல்லது குடும்பத்தோடு இருக்கும் சிங்கமா என்பதைப் பற்றி வேறு எமிலியாவுக்குத் தெளிவு இல்லை.

ஆயினும். லெனி மற்றும் மைத்ரியோடு நடந்தாள். மைத்ரியின் வயிற்றை மட்டுமல்லாது, அவள் வயிற்றையும் இரண்டு நாட்களாகக் கிள்ளிக்கொண்டிருக்கும் பசி அவளை நடக்கவைத்தது.

** ** ** ** ** **
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
லெனினும், கமலியும் மகிழுந்தை விட்டு இறங்கியும், உள்ளேயே அமர்ந்திருந்த பாட்டியை வெளியே இழுத்தாள் கமலி.

யோசனையை எல்லாம் விட்டுவிட்டு, அவர்களோடு பாட்டியும் நடக்க, எப்போதும் போல் லெனியின் அலுவலக அறைக்குச் சென்றார்கள் மூவரும்.

அங்கு வந்ததுமே, கமலி தேர்வுச் செய்த நாயகிக்குப் பதில் நேர்காணலில் தேர்வான அந்த நபர் வந்து, லெனினுக்கு அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததுமே கமலிக்கு, ‘இவரையா ஹீரோயினா செலெக்ட் பண்ண!!!’ என்று லெனின் கேட்டது நினைவுக்கு வர, லெனினும் அவரும் சேர்ந்து டூயட் பாடுவது போல் கற்பனைச் செய்து கெக்கபெக்கவென சிரித்துக்கொண்டிருந்தாள்.

அவள் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த லெனினுக்கும் அவள் சிரிப்புக்கான காரணம் புரிந்துவிட, லேசான புன்னகை எட்டிப்பார்த்தது.

“டெடி. போதும் சிரிச்சது” என்று லெனின் சொல்லச் சொல்ல, இன்னும் அதிகம் சிரித்தவளை, அந்த ஊழியர், ‘பைத்தியமா இவ?’ என்ற யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் வந்த வேலையை முடித்துவிட்டு அவர் வெளியே செல்லவும், லெனினின் அலைபேசிக்கு ஏதோ அழைப்பு வந்தது. அலைபேசியின் திரையைப் பார்த்தவன், “முக்கியமான கால். பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் லெனின்.

பாட்டியும் கமலியும் மட்டும் தனித்து விடப்பட்டிருக்க, பாட்டி கமலியையே பார்த்துக்கொண்டிருந்தார். கமலியின் சிரிப்பு நின்று, “என்ன என்னையே பார்க்குற?” என்று புருவத்தைச் சுருக்கி வினவினாள்.

“இன்னைக்கு கார்ல வர்றப்போ செம திகில்லையே உக்கார்ந்திருந்த போல” என்று பாட்டி கேட்க, “வாயை மூடு. அவனே என் கிட்ட இருந்து யார் வில்லன்னு வாயைப் பிடுங்கப் பார்க்கறான். நான் எப்படியோ சமாளிச்சி வேற பக்கம் பேச்சைக் கொண்டு போனா, நீ வேற நடுல. ‘உன் காலேஜ் வொர்க் எல்லாம் ஷெட்யூள் பண்றவன்’னு சொன்னா பத்தாதா? ‘உங்கள பார்க்க போலீஸ் வந்திருக்கார்ன்னு’ சொன்னவன்னு சொல்லி, லெனினுக்கு வில்லனைப் பத்தி ஹின்ட் வேற குடுக்கணுமா?” என்று பொறிந்துத் தள்ளினாள்.

அடுத்த நிமிடமே, “நல்லவேளை. லெனி கண்டுபிடிக்கல” என்று பெருமூச்சு விட்டவளின் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது, “அவன் கண்டுபிடிச்சிருக்க மாட்டான்’ன்னா நெனைக்கற?” என்று பாட்டி கேட்டபோது.

“அப்போ கண்டுபிடிச்சிருப்பானா?” என்று கமலி கேட்க, “இருக்கலாம்” என்றார் பாட்டி.

“எப்படிச் சொல்ற?” என்று கமலி கேட்க, “நம்ப ஒரு வாரமா இவன் கூட தான இருக்கோம். இந்த ஒரு வாரத்துல ஒரு முறையாவது ஃபோன் வந்தப்போ தனியா போய் பேசியிருக்கானா? நம்ப முன்னாடியே தான பேசியிருக்கான்” என்று பாட்டி கேட்க, “ஆமாம்” என்றாள் கமலி.

“ஆனா. இப்போ...” என்று பாட்டி அவன் அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வெளியே போன வழியைக் காட்ட, அதிர்ந்தாள் கமலி.

“அப்போ. உண்மையாவே அவன் யாரு வில்லன்னு கண்டுபிடிச்சிருப்பானா?” என்று கமலி கேட்க, “வாய்ப்பிருக்கு” என்றார் பாட்டி.

“ஆனா. அவன் கண்டுபிடிச்சிட்ட மாதிரி காட்டிக்கவே இல்லையே” என்று கமலி கேட்க, “அவன் எல்லாத்தையும் முகத்துல காட்டிக்குற ஆளா?” என்று கமலியிடம் கேட்டார் பாட்டி.

“இல்ல” என்று கமலி யோசனையுடன் தலையசைக்க அமைதியாக இருந்தார் பாட்டி.

“ஆனா...பாட்டி. ஒருவேளை அவன் வில்லன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டான்னா, அவன் அந்த வில்லனுக்குத் தெரியாம தான் ஃபோன் பேசணும். நான் ஒன்னும் வில்லன் இல்லையே. எனக்குத் தெரியாம ஏன் ஃபோன் பேசணும்?” என்று கமலி கேட்க, “நீ வில்லன் இல்ல. ஆனா, யாரு வில்லன்னு நீ அவனுக்குத் தெரியக்கூடாதுன்னு நெனச்சியே. அதுவுமில்லாம வில்லன் எங்கயோ இருக்கான். நீ தான் பக்கத்துலயே இருக்க” என்றார் பாட்டி.

“நான் வில்லன் யாருன்னு தான் மறைச்சேன். அதுக்காக வில்லனுக்கு சப்போர்ட் செய்றவ இல்ல நான் ஒன்னும்” என்று கமலி முறைத்தாள்.

“ஆஹான்? அப்படியா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம். நான் என் ஹீரோ பக்கம் தான்” என்றாள் கமலி.

“சரி. அப்போ எல்லா ரைட்டரும் ஹீரோவைப் பத்தி வில்லனுக்குத் தெரியக்கூடாதுன்னு பதறுவாங்க. நீ என்னடான்னா, உன்னோட வில்லன் யாருன்னு ஹீரோவுக்குத் தெரியக்கூடாதுன்னு ஏன் பயப்படற?” என்று பாட்டி கேட்க, “அது... அது...” என்று பதில் சொல்ல முடியாமல் திணறினாள் கமலி.

“என்ன? காரணம் தெரியலையா? நான் சொல்லவா?” என்று பாட்டி கேட்க, அமைதியாக இருந்தாள் கமலி.

“ஏன்னா. உன் ஹீரோ கெட்டவன். நீ என்ன தான் அவன் என் ஹீரோன்னு தலைல தூக்கி வச்சி கொண்டாடினாலும், உன் உள்மனசுலையும் ஏதோ ஒரு உறுத்தல் இருக்கு அப்படித் தான?” என்று பாட்டி கேட்க, “இல்ல. அதெல்லாம் பாதி கதைல என் ஹீரோ நல்லவனா மாறிடுவான்” என்றாள் கமலி.

“ஓஹ்! மாறிடுவானா?” என்று பாட்டி ஏளனமாகக் கேட்க, “அதான ஆண்ட்டி-ஹீரோஸ் வழக்கம். முதல் பாதில கெட்டவனா இருக்கணும். இரண்டாவது பாதிலயோ, இல்ல க்ளைமேக்ஸ்லையோ நல்லவனா மாறிடனும்” என்றாள் கமலி.

“நம்பளால ஒருத்தரோட இயல்பான குணத்தை மாத்திட முடியவே முடியாது. ஆனா, ஒருத்தர் தன்னை எப்படி மத்தவங்க கிட்ட காட்டிக்குறாங்க என்பதை மட்டும் வேணும்னா மாத்த முடியும்” என்று பாட்டி சொல்ல, புரியாமல் விழித்தாள் கமலி.

“வீட்டுப் பூனைக்குப் புலி மாதிரி வர்ணம் தீட்டி, அதைப் புலிக்குட்டி மாதிரி காட்டத் தான் முடியும். ஆனா, அந்தப் பூனையைக் காட்டுக்கு நடுல வேட்டையாட வைக்க முடியாது.

நரிக்கு ஆடு மாதிரி வேஷம் போட்டு, ஆட்டு மந்தைக்கு நடுவுல மறைச்சு வச்சு, அது ஆடுன்னு சொல்லி நம்ம ஊரை வேணும்னா ஏமாத்தலாம். ஆனா, ஆடு வேஷத்துல இருக்க நரி அப்போவும் எந்த ஆடு தனக்கு இரையாகும்ன்னு யோசிச்சிட்டே தான் இருக்கும்” என்றார் பாட்டி.

“ப்ச்! என்ன தான் சொல்ல வர?” என்று கமலி கேட்க, “லெனின் தானே வந்து திருந்திட்டேன்னு சொன்னாலும் அதை நம்பாத” என்றார் பாட்டி.

“அது எப்டி நம்பாம இருக்க முடியும்? எப்போவும் ஆண்ட்டி-ஹீரோ எல்லாம் திருந்தி க்ளைமேக்ஸ்ல ஹீரோ ஆகிடுவாங்க தான. அப்டி தான் லெனியும்” என்று கமலி கேட்க, “ஆண்ட்டி-ஹீரோ எப்போவும் ஆண்ட்டி-ஹீரோ தான். அவன் ஹீரோ ஆக முடியாது” என்றார் பாட்டி.

அதற்குள் லெனி அலைபேசி உரையாடலை முடித்துவிட்டு அறைக்குள் வந்துவிட, கமலி மற்றும் பாட்டியின் பேச்சு நின்றுப்போனது.

சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, “யார் ஃபோன் பண்ணா லெனி?” என்று கேட்க, “உனக்குத் தேவையான கால் இல்ல” என்றான் லெனின்.

“லெனி நீ பொய் சொல்ல மாட்டன்னு சொன்னதா ஞாபகம்” என்று கமலி கேட்க, “நான் பொய் சொல்லலையே. ஆனா, உண்மைய மறைக்கறேன்” என்றான் லெனின்.

“அது தப்பில்லையா?” என்று கமலி கேட்க, “நன்மைப் பயக்குமெனில், தப்பில்ல” என்றான் லெனின். “யாருக்கு நன்மை?” என்று கமலி கேட்க தாமதிக்காமல் பதில் சொன்னான் லெனின், “எனக்கு நன்மை” என்று.

“அப்போ உனக்கு நன்மைப் பயக்கும்ன்னா. என்ன வேணும்னா செய்வியா?” என்று கமலி கேட்க, “ம்ம்ம். கொலைக் கூட” என்றான் லெனின்.

“அது தப்பில்லையா?” என்று கமலி கேட்க, “அது தப்பில்லைன்னு நெனைக்கற மாதிரி என்னோட குணத்தை வரையறுத்தது நீ தான?” என்று அவளையே கேட்டான் லெனின்.

அதற்குப் பதில் சொல்ல முடியாமல், அமைதியாக நின்றவளை அந்த அறையை விட்டு வெளியே இழுத்துச் சென்றான் லெனின்.

“இன்னைக்கு நம்ப காலேஜ்ல படிக்கற பசங்க, Staff எல்லாருக்கும் இலவசமா மெடிக்கல் செக்-அப் பண்றோம். வா. அதைத் தொடங்கி வைக்கப் போகணும்” என்று சொல்லிவிட்டு அவன் நடக்க, அவன் பின்னால் நடந்தனர் கமலியும், பாட்டியும்.

லெனின் சொன்னதைக் கேட்டு, யோசனையிலே சுழன்றுக்கொண்டிருந்த கமலியின் செவிகளில், “லெனினை நான் முதல் முறையா பார்த்து, சுயநலவாதின்னு சொன்னப்போ, சுயநலம் தப்பில்லைன்னு நீ அன்னைக்கு ரொம்ப தெளிவா சொன்னியே” என்று கிசுகிசுத்தார் பாட்டி.

“மனிதாபிமானத்தை மிஞ்சிய சுயநலம் தப்புன்னு சொல்லி நீ தான் குழப்பிவிட்டியே” என்றாள் கமலி.

“குழப்பம் தப்பில்ல. நல்லா குழம்பு. தெளிவு பொறுமையா கிடைக்கட்டும்” என்று பாட்டி சொல்ல, “ம்ம்ம்” என்றதோடு வேறு எதையும் பேசவில்லை கமலி.

அதன் பின் மூவரும் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம் நடக்கும் இடத்திற்குச் செல்ல, லெனின் அந்நிகழ்வைத் தொடங்கி வைத்தான்.

மருத்துவ முகாமில் முதலில் மாணவர்கள், பின்னர் ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

அந்நேரம் பரிசோதனைக்காக அங்கு அனிக்காவும் வந்து காத்திருக்க அவளைப் பார்த்தான் லெனின்.

அவளும் வெகுநேரமாக அவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவன் அவளைப் பார்த்து புன்னகைக்கவும், முகாமிற்குச் செல்லாமல், இவனை நோக்கி நடந்து வந்தாள்.

வந்தவள், லெனினிடம், “இன்னைக்குக் காலைல ஒரு அன்னோன் ஸோர்ஸ்ல இருந்து நம்ப காலேஜ் ட்ரஸ்ட்க்கு பணம் வந்திருக்கு” என்று அனிக்கா சொல்ல, புன்னகை மறையாமல் நின்றிருந்தான் லெனின்.

“அதுக்கு ஏன் என்னைக் கேட்குற? வழக்கம் போல எங்க அப்பா செய்ற எதுக்காவது வர்ற பணமா இருக்கும்ன்னு நினைக்கத் தோணலையா உனக்கு” என்றான் லெனின்.

“ம்ம்ம். உங்க அப்பா செய்ற கொலை, கொள்ளைக்கு எல்லாம் பணம் வரும் தான். ஆனா, அதெல்லாம் விட இந்த முறை வந்திருக்க பணம் அஞ்சு மடங்கு அதிகம். அதுவுமில்லாம ஃபாரின் அக்கவுன்ட்ல இருந்து.

உங்க அப்பாவுக்கு வெளிநாட்டு க்ளைண்ட்ஸ் இருக்காங்களா என்ன?” என்று அனிக்கா கேட்க, அதற்குப் பதில் சொல்லவில்லை லெனின்.

“இது உங்க அப்பா செய்ற வேலைக்கான பணமா இல்லாம, நீ செய்ற வேலைக்கான பணமா இருக்குமோன்னு சந்தேகம் இருந்துச்சு. இப்போ அந்தச் சந்தேகம் இன்னும் வலுக்குது?” என்று அனிக்கா சொல்ல, “ஏன் சந்தேகம் அதிகமாகுது?” என்றான் லெனின்.

“அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீ சொல்லவே இல்ல. அது மட்டுமில்ல. ‘என் அப்பா செய்ற கொலைக்கு வர்ற காசா இருக்கும்’ன்னு எனக்கு நெனைக்கத் தோணலையா’ன்னு கேட்டியே தவிர, ‘இது என் அப்பா செய்த கொலை எதுக்காவது வந்த காசா இருக்கும்’ன்னு நீ ஒரு அனுமானமா கூட சொல்லல” என்றாள் அனிக்கா.

“க்ரேட்” என்றான் லெனின் மெச்சுதலாய்.

அந்தப் பாராட்டை ஏற்கப்பிடிக்காதது போலிருந்தது அனிக்காவின் முகபாவனை.

“பேபி. சீக்கிரம் என்னைக் கல்யாணம் செய்துக்கோயேன். ‘நான் பிடிக்கலன்னு சொல்லியும் நீ ஏன் என்னையே சுத்திச் சுத்தி வர்ற’ன்னு கேட்பல. என் பக்கத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரேன். இவ்ளோ அழகான, அறிவான பொண்ணு. அதுவும், நான் எப்படிப் பேசுனா அதுக்கு என்ன அர்த்தம் இருக்கும்ன்னு நான் சொல்லாமலே புரியுற அளவுக்கு என்னைப் புரிஞ்சிக்கிட்ட பொண்ணு. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எனக்குத் தோணும் தானே” என்று சொல்லிக்கொண்டே, அவள் கையைப் பிடித்தான் லெனின்.

உடனடியாக அவள் கையை உருவிக்கொள்ள, புன்னகைத்தவன், “ஓகே ஓகே. முடிவு உன் கைல தான். யோசி. ஆனா ஒன்னு. லவ்ன்னா, காதலிக்கறது, ஒன்னா ஊர் சுத்துறது, அப்படியெல்லாம் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன் நான். நீ இன்னைக்கு ஓகே சொன்னா நாளைக்கு நமக்குக் கல்யாணம். என் அகராதில காதல்ன்னா அதுக்கு அர்த்தமே கல்யாணம் தான். உங்க வீட்ல ஒத்துக்கல, எங்க வீட்ல ஒத்துக்கல. காதல் தோல்வி. ப்ளா. ப்ளா... அதுக்கெல்லாம் இடமே கிடையாது” என்றான் லெனின்.

“ம்ம். உன் பக்கத்துல இருந்து யோசிச்சி பார்க்கச் சொன்னியே. நீ என் பக்கத்துல இருந்து யோசிச்சி பாரேன்.

நீ பார்க்க நல்லா இருக்க. நல்ல அறிவு. திறமை. ஆளுமை. எல்லாம் சரி. உனக்கு வலிமை இருந்தும், நீ இதுவரை என்னைக் கல்யாணம் பண்ணிக்க கட்டாயப் படுத்தல. அதெல்லாம் சரி.

ஆனா, கேரக்டர்? உனக்குப் போதுமான அளவுக்குச் சம்பாதிக்க இந்த காலேஜ் இருக்கு. இருந்தும், உங்க அப்பாவுக்கு அப்புறம் இந்த ரௌடிசம் எல்லாம் நான் தான் கைல எடுத்துப்பேன்னு இப்டி வெறிப் பிடிச்ச மாதிரி இருக்க.

உன்னை எப்டி எனக்குப் பிடிக்கும். இந்த ரௌடிசம் எதுவும் வேணாம்ன்னு தலை முழுகிட்டேன்னு சொல்லு. இப்போவே, இந்த நிமிஷமே ‘ஐ லவ் யு’ சொல்றேன்.

என் அகராதிலயும் காதலுக்கு அர்த்தம் கல்யாணம் தான்” என்றாள் அனிக்கா.

அவளிடம் கொஞ்சம் நெருங்கியவன், “பேபி. உன் பேர் அனிக்கா. அனிக்காவுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?” என்று அவன் கேட்க, “தேவி துர்கா” என்று சொல்லும் முன் அவனிடமிருந்து இரண்டடி பின்னால் தள்ளி நின்றிருந்தாள்.

“ம்ம்ம். தேவி துர்கா. துர்காவோட வாகனம் என்ன தெரியுமா? சிங்கம்” என்று லெனின் சொல்ல, “அதுக்கு?” என்று அவனை ஆழமாகப் பார்த்தாள் அனிக்கா.

“இந்த துர்கைக்கு முன்ன சிங்கம் வந்து நின்னா அதை ஏத்துக்காம, சிங்கம் பூனையா மாறிட்டு வரணும்ன்னு கண்டிஷன் போடறாங்களே. அதான் உனக்குத் தெரியாதோன்னு சொன்னேன்” என்றான் லெனின்.

ஏளனமாகச் சிரித்த அனிக்கா, “இந்த துர்கைக்கு சிங்கமா இருக்கத் தான் ஆசையா லெனின் நிரஞ்சன்? சிவமா இருக்க வேண்டாமா?” என்றாள்.

“சிவன் அழிக்கும் கடவுள் தான” என்று லெனின் புருவம் உயர்த்த, “கெட்டவர்களை அழிக்கும் கடவுள்” என்றாள் அனிக்கா.

“சிவன் தேவர்கள், அசுரர்கள்ன்னு பிரிச்சி பார்க்காதவர் அனிக்கா” என்று லெனின் சொல்ல, “பாகுபாடு பார்க்காம வரம் குடுப்பார் அவர். நீ, பாகுபாடு பார்க்காம யாரா இருந்தாலும் காசு குடுத்தா கொல்லுவேன்னு சொல்றவன். போதும் இந்தப் பேச்சு” என்று அங்கிருந்து நகர்ந்து, முகாம் நடக்கும் இடத்திற்குச் செல்ல முனைந்தவளைக் கைப்பிடித்து நிறுத்தியவன், “வேணாம். உன் கேபினுக்குப் போ. மெடிக்கல் செக்-அப் எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம்” என்று சொல்ல, அவன் கையை உதறிவிட்டு வெளியேறினாள் அனிக்கா.

இத்தனை நேரம் பாட்டியும், கமலியும் அவர்கள் பேச்சைக் கவனித்துக்கொண்டே இருந்தனர்.

அனிக்கா வெளியேறவும், அவள் பின்னாலேயே பாட்டி செல்ல, “எங்க போற?” என்று கேட்டுக்கொண்டே அவரோடு சென்றாள் கமலியும்.

“இந்த அனிக்காவைப் பத்தி ஒன்னுமே தெரியலன்னு சொன்ன தான. அவ கிட்ட தனியா பேசணும்ன்னு சொன்னியே. லெனின் இங்க வேலையா இருக்கான். அவ தனியா தான் வெளிய போறா. வா போவோம்” என்றார் பாட்டி.

“ஆனாலும், லெனின் கிட்ட சொல்லிட்டுப் போலாம்” என்று கமலி சொல்ல, “உனக்கு உன் ஹீரோயின் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னா வா. இல்லன்னா, தன்னோட ஹீரோயின் பத்திக் கூடத் தெரியாத ரைட்டர்ன்னு வரலாறு அசிங்கமா பேசும்” என்றார் பாட்டி.

லெனினிடம் சொல்லாமல் கொள்ளாமல் அனிக்காவைத் தனியே சென்று பார்ப்பதில் கமலிக்கு அத்தனை உடன்பாடு இல்லையெனினும் பாட்டியின் பின்னே நடந்தாள்.


தன் கதையின் நாயகியைப்பற்றித் தெரிந்துக்கொள்ள அவளுள்ளிருந்த ஆவல் அவளை நடக்க வைத்தது.
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் - 8 :

லெனியோடு எமிலியாவும், மைத்ரியும் லெனியின் குடும்பத்துக்குரிய இடத்துக்குள் நுழைந்தாயிற்று.

ஒரு சிங்கக்குடும்பத்திற்குரிய நிலப்பரப்பு அதன் வளம், மற்றும் உணவு இருப்பைப் பொருத்து, குறைந்தபட்சம் இருபது சதுர கிலோமீட்டர்களில் இருந்து அதிகபட்சம் நானூறு சதுர கிலோமீட்டர்கள் வரை இருக்கும்.

ஆஸ்கர் குடும்பத்து நிலப்பரப்பு சுமார் இருநூற்றி ஐம்பது சதுர கிலோமீட்டர்கள் அளவிலானது.

வேட்டைக்காக உணவுத் தேடி அலையும் நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில் ஆஸ்கர் குடும்பத்து சிங்கங்கள் அந்த நிலப்பரப்பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஓய்வெடுக்கும்.

சிங்கங்கள் வழக்கமாக ஓய்வெடுக்கும் இடத்தை விட்டு தூரமாகவே, மற்ற சிங்கங்கள் கண்ணில்படாதவாறே அவர்களைக் கூட்டிச் சென்றான் லெனி.

அந்தப் புல்வெளியின் சில பகுதிகளில் இயற்கையாகவே விளைந்த கோதுமைப் பயிர்களும், மக்காச்சோளங்களும் இருந்தன.

மாமிசம் உண்ணாத லெனி, அதிகம் விரும்பிச் சாப்பிடுவது இவை இரண்டையும் தான்.

இந்தப் புல்வெளியில் சில இடங்களில் மட்டுமே அவை விளைந்திருந்தாலும், அது எங்கேயென்று லெனிக்கு நன்றகவே தெரியும்.

மற்ற சிங்கங்களின் கண்ணில்படாதவாறு லெனி அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றாலும், இந்தத் தானியங்கள் இருக்குமிடம் கொஞ்சம் ஆபத்தானது தான்.

அந்த இடம் கொஞ்சம் பச்சையாய், செழிப்பாய் இருப்பதால், மான்கள் போன்ற தாவரவுண்ணிகள் இங்கு அதிகம் இருக்கும். அவைகளை வேட்டையாடவென சிங்கங்களோ, இல்லை மற்ற மாமிசவுண்ணிகளோ இங்கு வரலாம். அவர்கள் கண்ணில் எமிலியாவும் மைத்ரியும் படலாம்.

ஆனாலும், உணவு இருப்பது இங்கு தானே. அதனாலேயே இருவரையும் இவ்விடம் அழைத்து வந்தான் லெனி.

கோதுமையையும், சோளத்தையும் பச்சையாகச் சாப்பிட்டுப் பழக்கமில்லை என்றாலும், பசி எமிலியாவையும், மைத்ரியையும் சாப்பிட வைத்தது.

அவர்களோடு சேர்ந்து லெனியும் அந்தத் தானியங்களை உண்ண, தன் பசியை மறந்து, தன் கையிலிருக்கும் உணவை மறந்து, கண்மணிகள் விரிய லெனியைப் பார்த்தாள் மைத்ரி.

சுற்றி நடப்பதை உணராமல், உணவில் கவனமாக இருந்த எமிலியாவின் துணியைப் பிடித்து இழுத்து, அவள் கவனத்தை லெனியின் பக்கம் திருப்ப முயற்சித்தாள் மைத்ரி.

“இங்க பாருங்க. லையன் வெஜிடேரியன் சாப்பிடுது” என்று மைத்ரி எமிலியாவிடம் சொல்ல, “அது எப்டி லையன் வெஜிடேரியன் சாப்பிடும்” என்று அலட்சியமாகத் திரும்பிப் பார்த்த எமிலியா அதிர்ந்துப் போனாள்.

“எப்படி?” என்று மைத்ரி கேட்க, அதற்குப் பதிலில்லை எமிலியாவிடம்.

இருவரும் லெனியையே பார்த்துக்கொண்டிருக்க, லெனி இவர்கள் பார்வையைப் பொருட்படுத்தாமல் உண்டுக்கொண்டிருந்தான்.

அவன் அதற்குப் பழக்கப்பட்டிருந்தான். ஏனெனில், அவன் உண்பதை இப்படி ஆச்சரியித்து, அதிசயித்துப் பார்ப்பது இவர்கள் மட்டுமல்ல. ஏறத்தாழ அனைவரும் அவன் உண்ணும்போது இப்படித் தான் பார்ப்பதுண்டு. அவன் அதைக் கண்டுகொள்ளாமல், தன் பசி, தன் வயிறு, தன் உணவு என்றக் கொள்கையோடு அவர்கள் பார்வையை மதியாமல் இருப்பான்.

இன்றும் அதே கொள்கையைப் பின்பற்றிக்கொண்டிருந்தவன், திடீரென உண்பதை நிறுத்திவிட்டு, எங்கேயோ வெறித்த பார்வைப் பார்த்தான்.

பயந்த பார்வை என்று சொல்லிவிட முடியாதெனினும், பதறிய பார்வை என்று வகைப்படுத்திவிடக்கூடிய பார்வை அது.

லெனியைப் பற்றிய யோசனையில் இருந்த எமிலியாவைத் திசைத்திருப்பியது, எங்கோ நிலைக்கொண்ட லெனியின் பார்வை.

அவன் பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று எமிலியா பார்க்க, அங்கு முழுதாக வளர்ந்த ஒரு ஆண் சிங்கம் தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தது. பிடரி முடியின் அடர்ந்த நிறத்தை வைத்தும், அந்தச் சிங்கத்தின் உயரத்தை வைத்தும் அது வளர்ந்த ஆண் சிங்கம் என்று தெரிந்துக்கொண்ட எமிலியாவுக்குப் பயத்தில் உள்ளூர நடுங்கத் தொடங்கியது.

லெனி நடந்துக்கொண்ட முறையையும், அவன் உண்ணும் உணவைப் பார்த்தும் ‘அவன் ஏதோ வினோதப் பிறவி’ என்று முடிவு செய்துவிட முடியவில்லை என்றாலும், ‘அவன் வினோதப் பிறவியாக இருப்பானோ!’ என்று யோசிக்கும் அளவிற்குச் சந்தேகம் இருந்தது.

அவன் நடந்துக்கொள்வது போல் மற்ற சிங்கங்கள் நடந்துக்கொள்ளாது என்ற உண்மை நிலை அறிந்தவளாக பயம் கொள்ள, மைத்ரியோ சிறு பிள்ளையாக இருப்பதால், ‘அதுவும் லெனி போல் ஒரு சிங்கம் தானே’ என்று அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

லெனி தூரத்தில் வரும் தன் தந்தை அஸ்லானையும், எமிலியா, மைத்ரியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தனியாக வரும் ஆண் சிங்கம் வேட்டையாடப் போவதில்லை. தன் ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்திருக்கக் கூடும். தன் ராஜ்ஜியத்துக்குள் வேறு குடும்பத்து சிங்கங்கள் எதுவும் புகுந்துவிடவில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வந்திருக்கும். ஆனாலும், புதிதாக மனிதர்களைப் பார்க்கும் சிங்கங்கள் ‘அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும்’ என்ற எண்ணத்தோடு அவர்களைத் தாக்க முயற்சிக்கலாம். இதைப்பற்றி எல்லாம் எமிலியா யோசிக்கவில்லை என்றாலும், சிங்கத்தைப் பார்த்ததும் ஏற்படும் பயம் தானாகவே அவர்கள் தப்பிக்கும் வழியை யோசிக்க வைத்தது.

“அதுவும் இது மாதிரி ஒரு லையன் தான்” என்று அஸ்லானைப் பார்த்து கைகாட்டி, பயமே இல்லாமல் சொல்லிய மைத்ரியை இழுத்துக்கொண்டு வேறுதிசையில் ஓடத்தொடங்கினாள் எமிலியா.

“எதுக்கு ஓடுறோம்?” என்று கேட்கும் மைத்ரிக்குப் பதில் சொல்லாமல் அவளை இழுத்துச் சென்றாள்.

“லையன். நீயும் வா! வா!” என்று அவளை அழைத்துக் கூவிய மைத்ரியின் வாயைப் பொத்தினாள் எமிலியா. மைத்ரியின் கூவல் எங்கு அந்தப் புதிய சிங்கத்தின் கவனத்தை ஈர்த்து விடுமோ என்ற பயம் அவளுக்கு.

மைத்ரியின் குரல் அஸ்லானுக்குக் கேட்கவில்லை என்றாலும், லெனிக்குக் கேட்டதே.

அவர்கள் ஓடும் திசையையே பார்த்துக்கொண்டிருந்த லெனி, அவர்கள் பின்னால் போகவில்லை.

ஏனேனில், தானிருக்கும் திசையையும், தன் நடவடிக்கையையும் அஸ்லான் நிச்சயம் கவனிப்பார் என்றும். தான் அவர்களோடு சென்றால், தன்னைக் கண்காணிக்கும் அஸ்லானின் பார்வையில் அவர்களும் விழுவார்கள் என்பதை அறிவான் லெனி.

** ** ** ** ** **
லெனின் நிரஞ்சனிடம் பேசிவிட்டு, அனிக்கா வெளியேறி அவள் வேலைப் பார்க்கும் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.

வழக்கத்தை விட அவள் நடையின் வேகம் கொஞ்சம் கூடியிருந்தது.

அவள் நடையின் வேகத்தைக் கூட்டிய அந்த அந்நிய சக்தியின் பெயர் என்னவாக இருக்கும்?

ஆற்றாமை, இயலாமை, கோவம். இதில் ஏதோ ஒன்று வெகு பொருத்தமாக இருக்குமோ?

பொருந்தும் தான்.

அந்த மூன்றில் எது பொருந்தினாலும், அது உருவாகக் காரணம் அவள் மனதுக்குள்ளிருந்த சிறு துளி காதல்.

அவள் காதலிக்கிறாள் என்று சொல்வதை விட, அவன் காதலை ஏற்கத் துடிக்கிறாள் என்று சொல்வது பொருத்தம் என்றே நினைத்தாள் அவள்.

ஆம். அவளுக்கு அவனைக் காதலிக்கும் எண்ணமோ, அல்லது திருமணம் செய்துகொள்ளும் ஆசையோ முதலில் தோன்றிவிடவில்லை. ஆனால், லெனின் அவளிடம் வந்து அவன் காதலைத் தெரிவிக்கும்போது அவனை அவளுக்கும் பிடித்தது. அவனை நிராகரிப்பது அவளுக்கு எளிதாக இல்லை.

இத்தனைக்கும் அவன் ஒன்றும் அவளிடம் ரோஜா பூங்கொத்து நீட்டியோ, வைர மோதிரத்தை நீட்டியோ, அவள் முன் மண்டியிட்டோ, ‘நீ இல்லையெனில் எனக்கு வாழ்வே இல்லை’ என்று வசனங்கள் கூறியோ காதலைத் தெரிவிக்கவில்லை.

அவள் தன் வீட்டைவிட்டு வெளியேறி அவனின் கல்லூரியில் பணிக்குச் சேர்ந்து சில நாட்களிலேயே ‘உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று சொல்லி அழைத்துச் சென்றவன், நேராக ஒரு காஃபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்று, ஒரு எக்ஸ்ப்ரஸோ காஃபியை வாங்கி அவளிடம் நீட்டியிருந்தான்.

அவள் எதையும் கேட்கக் கூட நேரம் அளிக்காமல், “நீ உங்க வீட்டைவிட்டு வெளிய வந்து, இங்க வேலைக்குச் சேர்ந்து ஒரு பத்து நாள் இருக்கும்ல்ல!!!” என்று கேட்க, “ம்ம்ம். ஆமாம்” என்றிருந்தாள் அனிக்கா.

“இந்தப் பத்து நாள்ல என்னைக்காவது நான் உன்னைப் பார்த்துட்டு, உன்னைக் கவனிச்சிட்டு இருக்க மாதிரி உனக்குத் தோனியிருக்கா!!!” என்று லெனின் கேட்க, “இல்லையே” என்று சொல்லியிருந்தாள்.

“ஆனா, நான் உன்னைப் பார்த்துட்டு இருந்தேன் அனிக்கா. உன்னைக் கவனிச்சிட்டு இருந்தேன். எப்போவும் நான் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கும் லஞ்ச்சுக்கும் நடுவுல எதுவும் சாப்பிட்டது இல்லை. ஆனா, இப்போலாம் பதினோரு மணிக்குத் தவறாம கேண்டீனுக்கு வந்துடறேன். ஏன்னா. அந்தப் பதினோரு மணிக்குத் தான் நீ கேண்டீனுக்கு காஃபி குடிக்க வருவன்றதோட சேர்த்து, உனக்கு எக்ஸ்ப்ரஸோ தான் பிடிக்கும்ங்கற வரை கவனிச்சிருக்கேன்” என்று சொல்ல, எதுவும் பேசாமல் கவனித்துக்கொண்டிருந்தாள் அனிக்கா.

“அனிக்கா. இப்போ எனக்கு வயசு இருபத்தியாறு. ஆனா, உன்னைப் பார்க்கும்போது பத்து வயசு குறைஞ்சது மாதிரி. பதினாறு வயசுப் பையன் மாதிரி. மத்த வேலை எதுவுமே இல்லைன்னு நெனச்சிட்டு உன்னை ஒளிஞ்சு ஒளிஞ்சு ஸைட் அடிக்கணும்ன்னு தோணுது.

ஆமாம். இது உன் அழகைப் பார்த்து. உன் வெளித்தோற்றத்தைப் பார்த்து வந்த ஈர்ப்பா கூட இருக்கலாம்.

அந்த ஈர்ப்பு என்னை உன்கூட காதல் கல்யாணம்ன்னு யோசிக்க வைத்தது. பதினாறு வயசு பையன் மாதிரியே.

ஆனா, இப்போ நான் உனக்கு ப்ரோபோஸ் பண்ணப் போறேன். மேரேஜ் ப்ரோபோஸல். பதினாறு வயசுப் பையனா பண்ணல. இருபத்தியாறு வயசு ஆளா. உனக்கும் எனக்கும் ஒத்துப்போகுமான்னு யோசிச்சி தான் பண்றேன்.

நிச்சயம் ஒத்துப்போகும்.

அனிக்கா, என்னைக் கல்யாணம் செய்துக்கறியா?” என்று கேட்டிருந்தான் லெனின்.

“என்கிட்ட கேட்காம. நீயே கல்யாணம் வரை யோசிப்பியா. எனக்கு இஷ்டமில்ல” என்று அவசரமாகப் பதிலளித்திருந்தாள் அனிக்கா.

அதற்குக் கொஞ்சமும் கோபப்படாமல், “இஷ்டம் இல்லையா? நீ யோசிக்கலன்னு சொல்லு.

அனிக்கா. யோசி. உனக்கும் எனக்கும் நிச்சயம் ஒத்துப்போகும்” என்று லெனின் சொல்ல, “காதல் ஒன்னும் யோசிச்சு வர்றதில்ல” என்று கடுப்புடன் பதிலளித்திருந்தாள் அனிக்கா.

சிரித்த லெனின், “காதல் யோசிச்சு வராம? வேற எப்படி வரும்? பார்த்ததும் காதல் வந்துடுமா? உடம்பெல்லாம் பூப்பூக்குமா? பட்டாம்பூச்சி பறக்குமா?

அனிக்கா உனக்கு வயசு இருபத்தி நாலு. பதினாறு கிடையாது. தின்ங்க் லைக் அ வுமன். நாட் லைக் அ கேர்ள்.

காதல் யோசிச்சு தான் வரும். இவன் எனக்கு செட் ஆவானான்னு யோசிச்சு யோசிச்சு தான் வரும்” என்று பொறுமையாய் ஆனால் அழுத்தமாய் சொன்னான்.

அதன் பின் யோசிக்கத் தொடங்கியவளுக்கு, அவளுக்கு அவன் பொருத்தமென்றே தோன்றியது.

ஆனால், அந்தக் கொலைத் தொழில். அவள் தந்தைச் சாகக் காரணமாக இருந்தக் கொலைத் தொழில். அதை மட்டும் லெனினின் வாழ்விலிருந்து விலக்கி வைத்துப் பார்த்தால், அவன் அவளுக்குப் பொருந்துவது போல் தானிருந்தது.

ஆனால், அவள் விலக்கி வைக்க நினைத்ததை, தன்னுடன் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்க முயற்சி செய்துகொண்டிருந்தான் லெனின்.

அதை மட்டும் எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவள் செய்த முயற்சி, பேசிய வார்த்தைகள் அனைத்தும் வீணானதால் உண்டான ஆற்றாமையா?

அவன் பிடிவாதத்தின் முன் இவளின் பிடிவாதம் எடுபடாதக் கோபமா?

‘இவனை மாற்ற வழியே இல்லை’ என்று அவள் உள்மனம் எடுத்துரைப்பதால் உண்டான இயலாமையா?

இம்மூன்றில் ஏதோ ஒன்று தான் அவளை வேகமாக நடக்க வைத்தது.

அந்த நடை அவளை வெகுவிரைவாக அவள் வேலைச் செய்வதற்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குச் செல்ல வைத்து.

அவள் நடையின் வேகத்தை விட, அவள் சிந்தனைகளின் வேகம் அதிகமாக இருந்தது.

காலையிலேயே, லெனினின் வங்கிக் கணக்கிற்கு ஏதோ வெளிநாட்டுக் கணக்கிலிருந்து பணம் வந்தது தெரிந்ததுமே, அவள் அண்ணன்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள்.

இப்போது அவள் மூளை, அந்தப் பணத்தோடு, இன்று கல்லூரியில் நடந்துக்கொண்டிருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனையையும் கோர்த்துவிட்டு, இரண்டிற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ என்று யோசிக்கச் சொல்லியது.

ஏனெனில், தனக்கு ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டான் லெனின். அனிக்காவிடம் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறிய அடுத்த நாளே, அவளைத் திருமணம் செய்துகொள்வதால் அவனுக்கு என்னென்ன லாபம் என்றும், அவனைத் திருமணம் செய்துகொள்வதால் அவளுக்கு எந்தெந்த விதத்தில் நன்மை என்றும் பட்டியலிட்டுச் சொல்லியிருந்தானே அவன்.

காதலில் கூட ஆதாயம் பற்றி யோசிப்பவன், ஆதாயமே இல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்வானா என்ன? அதிலும் இதில் எந்தப் பெரிய பெருநிறுவன மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை, அப்படிப் பெரிய மருத்துவமனைகள் செய்தால் கூட, அது அவர்கள் மருத்துவமனையை விளம்பரப்படுத்துவதற்காக இலவசமாகச் செய்கிறான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு சிறிய சிகிச்சையகத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவர்களும், சில செவிலியர்களும் தான் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தக் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசோதனை செய்யப் போகிறார்கள் என்று கேள்வியுற்றாள்.

இது அனைத்தும் ஏற்கனவே அவளுக்குள் சந்தேகத்தை விதைத்திருக்க, லெனின் இவளிடம் ‘உனக்கு மருத்துவப் பரிசோதனை வேண்டாம். பிறகு செய்துகொள்ளலாம்’ என்று சொல்லி அனுப்பியது வேறு அந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

அந்தப் பணப்பரிவர்த்தனைப் பற்றியத் தகவல்களோடு சேர்த்து, இந்த மருத்துவப் பரிசோதனைப் பற்றியத் தகவல்களையும் தன் அண்ணன்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்து, அவர்களுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள்.

லெனின் மருத்துவப் பரிசோதனை நடக்குமிடத்தில் இருக்கிறான். மற்ற ஊழியர்களும் அங்கேயே தான் இருக்கின்றனர். இந்நேரத்தில் இங்கு யாரும் வரப்போவதில்லை என்று மனக்கணக்கிட்டு, அந்த அறையிலேயே அமர்ந்து அவள் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தாள்.

அனிக்காவின் அழைப்பை அவள் அண்ணன் ஏற்கவும், ‘லெனினிடம் சொல்லாமல் செல்ல வேண்டாம்’ என்று அடம்பிடித்த கமலியை மூளைச்சலவைச் செய்த பாட்டி, அனிக்காவின் அறைக்கருகில் இழுத்து வரவும் சரியாக இருந்தது.

அனிக்காவின் அறைக்கு அருகே வந்ததுமே, “ஹலோ அண்ணா. நான் அனிக்கா பேசறேன்” என்று அனிக்காவின் குரல் கேட்க, மேலும் சத்தம் போடாமல் நின்றிருந்த இடத்திலேயே நின்றுக்கொண்டு, அவள் மேலும் என்ன பேசுகிறாள் என்பதைக் கேட்க முனைந்தார் பாட்டி.

“இங்க எதுக்கு நிக்கறோம்???” என்று கேட்க வந்த கமலியின் வாயைப் பொத்தி, “அவ பேசுறதை அமைதியா கவனி” என்று சைகையில் கூறினார் பாட்டி.

“அண்ணா. இன்னைக்குக் காலைல காலேஜ் ட்ரஸ்ட் அக்கவுன்ட்க்கு ஏதோ ஃபாரின் அக்கவுன்ட்ல இருந்து கோடி கணக்குல பணம் வந்திருக்கு.

அதைப் பத்தி நான் லெனின் கிட்ட கேட்டப்போ. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு அவன் சொல்லவே இல்ல. அப்போ அவன் தான் ஏதோ செய்றான் அண்ணா. ஏதோ ப்ளான் வச்சிருக்கான்.

காலேஜ்ல வேற பசங்க, Staffs எல்லாருக்கும் இலவசமா மெடிக்கல் செக்-அப் வேற புதுசா செய்யறான்.

ஆனா, என்னை செக்-அப் செய்துக்க வேணாம்ன்னு சொல்லிட்டான். எனக்கு என்னமோ அந்தப் பணத்துக்கும் இந்த மெடிக்கல் செக்-அப்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்ன்னு தோணுது. ஒருவேள, நீங்க போன வாரம் வந்தப்போ ஒன்னு சொன்னீங்கல்ல. அதுவா இருக்குமோ?” என்று சொன்னதும் சில நொடிகள் அமைதி. எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டார் பாட்டி.

மீண்டும் அனிக்கா பேசத் தொடங்கினாள்.

“என்னமோ பண்ணுங்க. ஐ டோன்ட் கேர். ஆனா, லெனின் இப்போ என்ன செய்ய நெனைக்குறானோ, அதைச் செய்யக் கூடாது. செய்ய விட மாட்டேன்” என்று அவள் சொன்னதைக் கேட்டு, குழப்பமாய் பாட்டியைப் பார்த்தாள் கமலி.

ஆனால், பாட்டியோ இன்னமும் அமைதியாய் அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

“வாட்? அவளையா?” என்று அடுத்த நொடி அதிர்ச்சியை வெளிப்படுத்தியது அனிக்காவின் குரல்.

அதற்கு எதிர்முனையில் இருப்பவர்கள் ஏதோ நீண்ட விளக்கம் அளித்திருக்க வேண்டும். நீண்ட நேரம் அனிக்காவின் குரல் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, “சரி. ஆனா ஜாக்கிரதை. அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. ஷீ இஸ் இன்னஸன்ட். நான் அப்புறம் பேசறேன். ப்ளான் பண்ணிட்டு மெசேஜ் பண்ணுங்க” என்று அழைப்பைத் துண்டித்தாள் அனிக்கா.

‘அப்புறம் பேசறேன்’ என்று சொன்னதை வைத்து, அவள் அழைப்பைத் துண்டித்ததாகக் கணித்துக்கொண்ட பாட்டி, கமலியின் வாயைப் பொத்தியவாறே அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றார். கொஞ்ச தூரத்திலிருந்த மரத்திற்கு அடியிலிருந்த இருக்கையில் அமர்ந்ததும் தான் கமலியைப் பேசவே விட்டார் பாட்டி.

பாட்டி கையை எடுத்தது தான் தாமதம், பாட்டியிடம் கத்தத் தொடங்கினாள் கமலி.

“பாட்டி. அந்த அனிக்கா பேசுனதைக் கேட்டியா? அவ லெனிக்கு எதிரா ஏதோ செய்யப் பார்க்கறா. அது என்னன்னு தெளிவா தெரியல. அப்படியே உள்ள போய் அவ செவில்ல நாலு விட்டு கேட்டிருக்கலாம்ல்ல.

கேட்டுட்டுப் போய் லெனி கிட்ட சொல்லிருக்கலாம்ல்ல. ச்ச. நான் கூட அவ திமிரு புடிச்சவன்னு மட்டும் தான் நெனச்சேன். ஆனா, அவ கெட்டவளா இருக்கா” என்று கமலி சொல்ல, “கெட்டவளா?” என்று புருவத்தைச் சுருக்கினார் பாட்டி.

“ஆமா. லவ் பண்றவனுக்கு எதிரா அவ அண்ணனுங்க கிட்ட போட்டுக் குடுக்கறா? அது மட்டுமா? அவ லெனி கிட்ட என்ன சொல்லியிருக்கா? அவ அண்ணனுங்க ரௌடிசம் பண்றது பிடிக்கலன்னு அவங்கக் கிட்ட சண்டைப் போட்டுட்டு வந்துட்டதா தான சொல்லியிருக்கா. அப்டி தான் லெனி சொன்னான். ஆனா, இவ என்னடான்னா அவ அண்ணனுங்களுக்கு இங்க இருந்து தகவல் சொல்லுறா?

அப்போ இங்க இருந்து லெனியை வேவு பாக்குறதுக்காகத் தான் அவ வந்திருக்கா. இது தப்பு தான.

கெட்டவ தான?” என்று கமலி உணர்ச்சிவசப்பட்டுப் பேச, வார்த்தைகள் அதிவேகத்தில் அவள் வாயை விட்டு வெளியேறியது.

“லெனின் நல்லவனா?” என்று பாட்டி கேட்க, “அவன் நல்லவனோ, கெட்டவனோ. ஆனா, இவ காதலுக்கு உண்மையா தான இருக்கான். ஆனா, இவ. இவள காதலிக்கறவனுக்கே துரோகம் பண்ணப் பாக்கறா!” என்று ஆதங்கத்தில் கத்தினாள் கமலி.

“ஒருவேள. அவ இவனைக் காதலிக்கறதால கூட இப்படிச் செய்யலாம்ல்ல” என்று பாட்டி கேட்க, “எது? காதலிக்கறதால செய்யறாளா? காதலிக்கறதால இப்படி அவ அண்ணனுங்களுக்கு இங்க நடக்கறதை எல்லாம் சொல்றாளா?” என்று முறைத்தாள் கமலி.

“ஆமாம். நீ அவ லெனின் கூட பேசுனதைக் கேட்டல்ல. இந்தக் கொல்ற வேலையெல்லாம் விட்டுட்டா லவ் பண்றேன்னு சொன்னால்ல. அவளுக்கு லெனின் தப்பு பண்றது பிடிக்கல. அதனால கூட...” என்று பாட்டி பேச நிறுத்தினாள் கமலி.

“இல்ல பாட்டி. அவ இங்க வந்த காரணமே லெனினை வேவு பார்க்கறது தான். இல்லைன்னா, நல்லா பேசுற அண்ணனுங்க கூட சண்டைன்னு எதுக்கு லெனின் கிட்ட பொய் சொல்லணும்?


ஆனா, இங்க லெனின் பய லவ்வு கிவ்வுன்னு அவ பின்னாடி சுத்தவும், அவனுக்கு இவ மேல இருக்க லவ்வ யூஸ் பண்ணிக்கப் பாக்கறா. ஒருவேள, இவ பேச்சைக் கேட்டு லெனின் இதையெல்லாம் விட்டுட்டா ஆதாயம் யாருக்கு. அவ அண்ணனுங்களுக்குத் தான? இந்தத் தொழில் எல்லாம் மொத்தமா அவனுங்க கைக்குப் போய்டும். அதான் அவ ப்ளான்” என்று கமலி பேசுவதெல்லாம் நியாயம் தான் என்றாலும், அனிக்கா தவறு செய்கிறாள் என்பதைப் பாட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ தடுத்தது.
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
“பாட்டி. உனக்கு ஞாபகம் இருக்கா? லெனி சொன்னான்ல்ல. அவளுக்கும் அவ அண்ணனுங்களுக்கும் ‘சமீபகாலமா’ தான் பிரச்சனைன்னு. அவ அண்ணனுங்க அப்போல இருந்தே இப்படி ரௌடியா தான சுத்திட்டு இருக்கானுங்க. அப்போல்லாம் அவங்கக் கிட்ட சண்டைப் போடாதவ, இப்போ மட்டும் ஏன் போட்டுட்டு வெளிய வரணும்? எல்லாம் லெனியை ஏமாத்துறதுக்காக சும்மா அண்ணனுங்களும், தங்கச்சியும் சண்டைப் போட்டுக்கற மாதிரி நடிச்சி லெனியை ஏமாத்தியிருக்காங்க” என்று சொன்ன கமலி அதற்கானக் காரணத்தை லெனினிடமோ, அனிக்காவிடமோ கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கலாம்.

அனிக்காவிடம் கேட்டிருந்தால் காரணம் தெரிந்திருக்கும். லெனினிடம் கேட்டிருந்தால், அவனே அனிக்காவிடம் காரணம் கேட்டிருப்பான். அனிக்கா சொல்லும் காரணம் ஒருவேளை லெனியை, அனிக்கா அவனுக்கேற்றவள் அல்லவோ என்று யோசிக்க வைத்திருக்கும். கமலியின் ஆசைப்படி, ‘இவ எனக்கு செட் ஆக மாட்டா!’ என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

ஆனால், கமலி அதற்கானக் காரணத்தை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லையோ என்று நினைத்தாள். ஏனெனில், அவளே அவளுக்குக் கற்பித்துக்கொண்ட காரணம் தான் உண்மை என்று ஆழமாக நம்பினாள்.

ஆனால் பாட்டியோ, அந்த ‘சமீபகாலமாக’ என்ற வார்த்தைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்றும், அதை நேரம் அமையும்போது அனிக்காவிடம் கேட்டுவிட வேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டார்.

ஏனெனில், அனிக்காவைப் பற்றிய கமலியின் அனுமானங்களைப் பாட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன்? அனிக்கா லெனினுக்குத் துரோகம் செய்கிறாள் என்பதை நம்புவதிலிருந்து பாட்டியை எது தடுத்தது?

அனிக்காவின் விழியில் சுரந்த ஒரு துளி நீர் தடுத்தது. கமலியும், லெனினும் கவனிக்கத் தவறிய ஒரு துளி நீர்.

சில நிமிடங்களுக்கு முன்பு லெனினிடம், ‘நீ பாகுபாடு பார்க்காம யாரா இருந்தாலும் காசு குடுத்தா கொல்லுறவன்' என்று சொல்லிவிட்டு வெளியேறும்போது அவள் கண்களில் சுரந்தது அந்த ஒரு துளி நீர். அது கண்களைவிட்டு வெளியேறும் முன்பு, அவள் அந்த இடத்தைவிட்டு வெளியேறியிருந்தாள்.

அந்த ஒரு துளி நீருக்குக் காரணம், ‘அவளுக்கு லெனினைப் பிடித்து, அவனின் கொலைத் தொழில் பிடிக்காதது’ என்று அனுமானித்துக்கொண்ட பாட்டி, அந்த ஒரு துளி கண்ணீர் பெருவெள்ளமாகப் பெருகும். அந்த வெள்ளத்தில் ஒருவேளை அனிக்கா சிக்கித் தவித்தால், உதவிக்கரம் நீட்டுவது போல் அவள் மனதில் இருப்பதைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம் என்று தான் பாட்டி அவளைத் தொடர்ந்து வந்தது.

ஆனால், இயல்பாகவே அழுத்தமான குணமும், மனமும் கொண்ட அனிக்காவின் கண்களில் அந்த ஒரு துளி நீரே அதிஅபூர்வம் என்று அறியவில்லை பாட்டி.

அப்படி அவளைத் தொடர்ந்து வந்த இடத்தில், அவள் அவளின் அண்ணன்களிடம் பேசியதைக் கேட்டும் கூட, கமலி சொல்வதெல்லாம் சரியாகப் பட்டபோதும் கூட, அந்த ஒரு துளி நீர், ‘அனிக்கா லெனினுக்குத் துரோகம் செய்ய நினைக்கமாட்டாள்’ என்று யோசிக்க வைத்தது.

பாட்டியை யோசனையிலிருந்து வெளியே வர வைத்தது, “நான் இப்போவே லெனி கிட்ட போய் இவ உனக்குத் துரோகம் பண்றான்னு சொல்லப் போறேன்” என்று கிளம்பிய கமலியின் வேகம் தான்.

“நில்லு. நில்லு” என்று அவள் பின் ஓடி அவளை மறித்து நின்றார் பாட்டி.

“அவன் கிட்ட அனிக்காவ மாட்டிவிடப் போறியா?” என்று பாட்டி கேட்க, “ஆமாம் பின்ன. இவள லவ் பண்ணி என் ஹீரோ ஏமாந்து போகனுமா? அவனை இவக்கிட்ட இருந்து காப்பாத்தப் போறேன்” என்று கமலி லெனினை அனிக்காவிடம் இருந்து காப்பாற்ற நினைக்க, பாட்டியோ, அனிக்காவை லெனினிடமிருந்து காப்பாற்ற நினைத்தார்.

“இரு இரு கமலி. அவசரப்பட்டு அவன் கிட்ட சொல்லாத” என்று பாட்டி சொல்ல, “ஏன்?” என்று கேட்டாள் கமலி.

‘ஐயோ. இப்போ என்ன சொல்லி சமாளிப்பேன்’ என்று யோசித்த பாட்டிக்கு ஒரு வழிக் கிட்டியது.

“அந்த அனிக்கா ஃபோன்ல ஏதோ சொல்லிட்டு இருந்தாளே. நீயும் கவனிச்சல்ல. ஏதோ பணம், வெளிநாட்டு அக்கவுன்ட், ஃப்ரீ மெடிக்கல் செக்-அப் அது இதுன்னு. அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று பாட்டி கேட்க, “தெரியாது” என்று சைகை காட்டினாள் கமலி.

“ஹான். அதான் மேட்டர்” என்று பாட்டி சொல்ல, “என்ன?” என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“லெனின் கெட்டவன். அது உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனா, எந்த அளவுக்குக் கெட்டவன்னு நமக்குத் தெரியாது.

ஒருவேள அவன் ரொம்ப கெட்டவனா இருந்தா? அவன் செய்யப் போற தப்பையும், அவனையும் தடுக்க நமக்கு ஏதாவது வழி இருக்கணும்ல்ல.

இப்படிக் கதைல அவனுக்கு எதிரா இருக்கறவங்கள எல்லாம் நம்பலே காட்டிக் குடுத்துட்டா, நாளைக்கு அவனை நீ கட்டுப்படுத்த நெனச்சா கூடா அதுக்கு வழி இருக்காது கமலி. ஒன்னு புரிஞ்சிக்கோ. நீ தான் ரைட்டர். நீ வைக்கறது தான் சட்டமா இருக்கணும்.

நீ உருவாக்குன கேரக்டர் உன்னை ஓவர்டேக் பண்ணிப் போகலாமா? அப்படிப் போனா உனக்கு என்ன மரியாத?” என்று பாட்டி கேட்க, யோசித்தாள் கமலி.

காலையில் லெனின் வில்லன் யார் என்று கேட்கும்போது கமலி பதில் சொல்லாமல் மழுப்பியது இதே காரணத்திற்காகத் தான்.

ஆனால், கமலிக்கு அனிக்கா நாயகியாக இருப்பதிலிருந்த வெறுப்பு அவள் கண்ணை மறைத்து, இதை லெனினிடம் சொல்லி அவனுக்கு அவள் மேலிருந்த காதலைப் போக்க நினைத்தாள். ஆனால், பாட்டி சொன்னதைக் கேட்டதும், “அப்போ. நான் இதை லெனி கிட்ட சொல்ல வேணாமா!!!!” என்று யோசனையோடு கேட்டாள்.

“நோ. சொல்லாத. இப்படி யார் யார் அவனுக்கு எதிரா இருக்காங்கன்னு உன் கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கறது ஹீரோவுக்கு அழகா. அவன் இப்படி ஜெயிக்கறது எக்ஸாம்ல பிட் அடிச்சி பாஸ் பண்ற மாதிரி. பிட் அடிச்சி ஜெயிச்ச ஹீரோன்னு உன் ஹீரோவுக்கு அவப்பெயர் உண்டாக்கப் போறியா?” என்று பாட்டி கேட்க, “ஐயோ. இல்ல. இல்ல” என்றாள் கமலி.

“சரி. நான் சொல்லல” என்று பாட்டி வழிக்கு வந்த கமலி, லெனி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க, அவள் நடக்கும் வழியிலேயே நடந்தார் பாட்டி.

பாட்டியின் யோசனையெல்லாம் ‘அவளை’ சுற்றியே இருந்தது. அனிக்கா அவள் அண்ணன்களோடு பேசுகையில் இடையில், ‘அவள்...’ என்று யாரையோ குறிப்பிட்டாளே. அந்த ‘அவள்’ யாரென்று யோசித்துக் கொண்டிருந்தார் பாட்டி.

‘அவளுக்கு எதுவும் தெரியாது. ஷீ இஸ் இன்னஸன்ட்’ என்று அனிக்கா சொன்னதை மீண்டும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்த பாட்டிக்கு, “ஒருவேளை. அந்த ‘அவள்’ கமலியா இருப்பாளோ?” என்ற சந்தேகம் மேலோங்கியது.

“ஆனால்? கமலியை என்ன செய்யப் போகிறார்கள்? அப்படி கமலியை ஏதேனும் செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்? அனிக்காவுக்குத் தேவை லெனி இந்தக் கொலைத் தொழிலைக் கை கழுவுவது தானே. கமலியை ஏதோ செய்வது மூலம் அது நிறைவேறிவிடுமா என்ன?” என்று யோசித்த பாட்டிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

“ஒருவேளை. கமலி எந்நேரமும் லெனினுடனே இருப்பதால், ஒருவேளை அவளைக் கடத்தி வைத்து மிரட்டினால் லெனின் கேட்பான் என்று நினைக்கிறார்களோ?

ஆனால், லெனின் தான் அவளுக்கு ஏதேனும் ஆனால் கூட எனக்குக் கவலையில்லை என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் சொன்னானே. அப்படியிருக்கையில் இவர்கள் அவளைக் கடத்துவதில் என்ன லாபம் கிட்டும்?” என்று அவர் மூளைக் கேள்விக் கேட்டு, அதுவே ஒரு பதிலையும் சொன்னது.

“லெனின் அப்படிச் சொன்னது, கமலிக்கும், பாட்டிக்கும், அந்தக் காவல்துறை அதிகாரிக்கும் தானே தெரியும்.

அனிக்காவுக்கோ, அவள் அண்ணன்களுக்கோ தெரியாதே!” என்பது தான் அந்தப் பதில்.

“அந்த ‘அவளை’ பற்றி தான் இத்தனை யோசிக்க, இவள் எந்த யோசனையுமின்றி நடந்துச் செல்கிறாளே’ என்று கமலியை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்த பாட்டி யோசிக்காத விஷயம் ஒன்றுண்டு.

அது யாதெனில்...

இந்தக் கதையின் அடிப்படையே கமலியின் கற்பனை தான் என்பது. சில நிகழ்வுகள், கதையின் கதாபாத்திரங்கள் போக்கில் நடந்தாலும், பல நிகழ்வுகளும், கதாபாத்திரங்களும் அவள் கற்பனைபடியே.

அனிக்காவுக்கு லெனின் கொடுக்கும் முக்கியத்துவம் அவள் யோசிக்காதது என்றாலும், அனிக்காவின் அண்ணன்களை லெனினுக்கு எதிரானவர்களாகக் கற்பனைச் செய்தது அவள் தானே. லெனினுக்கு எதிரானவர்களாக அவர்களைக் கற்பனைச் செய்யும்போது, அவனுக்கு எதிராக அவர்கள் செய்யப்போகும் செயலையும் சேர்த்து அல்லவா கற்பனைச் செய்தாள்.

அப்படியெனில், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதோடு சேர்த்து, அந்த ‘அவள்’ யார் என்பதையும் அறிவாள் கமலி.

:: :: :: :: :: :: :: ::
 

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் - 9 :

லெனி, அஸ்லான் வரும் திசையில் அவரை நோக்கி நடக்க, அதற்கு எதிர்திசையில் எமிலியாவும், மைத்ரியும் வெகுதூரம் ஓடினர்.

அதற்கு மேல் ஓட இருவர் உடலிலும் தெம்பில்லாத காரணத்தினால் அங்கேயே ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அப்படியே படுத்தும் விட்டனர்.

அந்த இடத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கைகளில் தான் மரங்கள் இருந்தன. அதோடு, வேறு எந்த விலங்குகளும் கண்ணுக்கெட்டும் தூரம்வரைத் தென்படவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இருவரின் உடற்சோர்வும் தான் அவர்கள் இருவரும் இங்கேயே நின்றுவிட முக்கியக் காரணம்.

எமிலியா, மைத்ரி இருவருக்குமே அந்த வெயில் தாங்கவில்லை. அவர்கள் உடலிலிருக்கும் தெம்பை எல்லாம் சூரியன் உறிவது போல் உணர்ந்தனர் இருவருமே.
சில நிமிடங்கள் அசதியாய் மரத்தின் நிழலில் புட்தரையில் படுத்திருந்தவர்கள், அடுத்த சில நிமிடங்களில் ஒருவருக்கொருவர் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினர்.

தொடங்கியது மைத்ரி தான். அவள் மனம் தந்தையைத் தேடியது. தந்தையுடன் காட்டைச் சுற்றிப்பார்க்கவென வந்தவள், இப்படி இங்கே தொலைந்துவிடுவோம் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

‘அப்பா சொன்னது போல் அந்த ஜீப் உள்ளேயே அமர்ந்திருந்திருக்கலாம். அதை விட்டு வெளியே வந்து தந்தையைத் தேடியதால் தான் தொலைந்து விட்டோம்’ என்று உள்ளுக்குள் வருத்தம்.

‘ஆனால், நடுக்காட்டில் தன்னை ஜீப்பில் அமர வைத்துவிட்டு எதற்கு எங்கேயோ போக வேண்டும். அதுவுமில்லாமல், காட்டைச் சுற்றிப்பார்க்க எதற்கு அப்பா போலீஸ் அங்கிள்களுடன் வர வேண்டும்.

எப்போதும் தங்களுடன் ஊர் பயணம் வரும் தாய் ஏன் இந்த முறை வரவில்லை?’ என்று ஏதேதோ கேள்விகள் மைத்ரியின் குட்டி மூளையில். வீட்டிலிருந்து நீண்டதாய் ஒரு ஊர் பயணத்திற்கு, அதுவும் முதன் முறையாகச் சிக்குபுக்கு வண்டியில் பயணிக்கப்போகும் ஆர்வத்தில், பயணத்தின் தொடக்கத்தில் தோன்றாத கேள்விகள் எல்லாம் இப்போது தோன்றின.

காட்டைச் சுற்றிப்பார்க்கவென தந்தையுடன் மகிழுந்தில் ஏறிய போது தோன்றாத கேள்விகள் கூட இப்போது தோன்றின.

ஆனால், கேட்டுத் தெரிந்துக்கொள்ள அவள் தந்தை இல்லையே. முதல் வேலையாக அவள் அவளின் தந்தையிடம் போய் சேர வேண்டுமே. ஆனால், அதற்கான வழி தான் தெரியவில்லை.

இப்போது அவளோடு இருப்பது, அந்த ஆங்கிலப்பெண் மட்டும் தான். பார்க்க இருபதுகளின் மத்தியில் இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் முப்பதுகளில் இருக்கும் அந்தப் பெண்ணை எப்படி அழைப்பது என்பதே மைத்ரிக்கு ஒரு பெரிய குழப்பமாக இருந்தது.

அந்தக் குழப்பத்திற்கு அந்தப் பெண்ணிடமே பதில் கேட்க விழைந்தாள் மைத்ரி.

கண்ணை மூடிப் படுத்திருந்த எமிலியாவுக்கு அருகில் படுத்திருந்த மைத்ரி, எழுந்து அமர்ந்து, “ஹலோ” என்று அழைக்க ஒரு கண்ணை மூடி, ஒரு கண்ணைத் திறந்துப் பார்த்தாள் எமிலியா.
“வாட்?” என்று எமிலியா கேட்க, “நான் உங்கள எப்படிக் கூப்பிடட்டும்?” என்று மைத்ரி கேட்க, “ரோஸ்ன்னு என் பேர் சொல்லித் தான்” என்றாள் மைத்ரி.

“உங்க பேர் ரோஸ்-ஆஹ்?” என்று மைத்ரி கேட்க, “ஆமாம்” என்று சொன்ன எமிலியா ‘எமிலியா ரோஸ்” என்று தன்னுடைய முழு பெயரைச் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால், மைத்ரியும் கூட தன்னுடைய முழுப் பெயரைச் சொல்லியிருப்பாள்.

ஆனால், ‘ரோஸ்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட எமிலியாவிடம், “நான் மைத்ரி” என்று பாதிப் பெயரை மட்டுமே சொல்லிக் கை நீட்டினாள் மைத்ரி.
“நைஸ் டூ மீட் யூ மைத்ரி” என்று அவள் நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிய எமிலியா, மீண்டும் கண்ணை மூடி உறக்கத்தைத் தொடர, எமிலியாவை உலுக்கினாள் மைத்ரி.

“என்ன?” என்று எழுந்தமர்ந்த எமிலியாவிடம், “என் அப்பா கிட்ட எப்டி போகணும்ன்னு தெரியுமா?” என்று சோகமாகக் கேட்டாள் மைத்ரி.

மைத்ரி பயத்தில், தவிப்பில் கேட்பது எமிலியாவுக்குப் புரிந்தாலும், அவள் சின்னப் பிள்ளை என்று அவளுக்குத் தெரிந்தாலும் கூட, இந்தக் காட்டிற்கு வந்து இரண்டு நாட்களாக வராத உறக்கம் இப்போது, இப்போது மொத்தமாக அவளைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. அதை விரட்டப் பார்த்த மைத்ரியிடம் எமிலியாவை எரிந்து விழ வைத்தது.

“தெரியாது” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு எமிலியா மீண்டும் படுக்க, “சரி. நீங்க எப்டி இங்க வந்தீங்க?” என்று மைத்ரி கேட்க, “முதல்ல என்ன தூங்க விடு” என்று உரக்கக் கூறிய எமிலியா அடுத்த நிமிடமே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

மைத்ரிக்கு உறக்கம் வரவில்லை. எமிலியாவை மீண்டும் எழுப்ப முயன்று தோற்றுப் போனவள், “ஐயோ. இந்த ரோஸ்க்கு இங்க இருந்து தப்பிக்க ஆசையே இல்ல போல. தூங்குமூஞ்சி” என்று வசைப்பாடிக்கொண்டிருந்தாள்.

மைத்ரிக்குத் தெரிய வாய்ப்பில்லை, இப்போது அவள் உறங்குவது இரண்டு நாட்களாக உண்ணாமல் உறங்காமல் இந்தக் காட்டிலிருந்து வெளியேறும் வழி தேடியதால் உண்டானக் களைப்பில் என்று.

எமிலியாவைத் திட்டித் தீர்த்து, அதனால் சோர்ந்து, சில நிமிடங்களில் எமிலியாவின் மீதே படுத்து உறங்கிப்போனாள் மைத்ரி.

அங்கு லெனியோ, அஸ்லானைப் பார்த்தவுடன் அவருடன் இணைந்துக்கொண்டான். அவரோடே சிங்கங்களின் இருப்பிடத்திற்கும் சென்றுவிட்டான்.

லெனி அங்குச் சென்று சில நிமிடங்களில், அங்கு வந்தாள் அம்ரா.

லெனி ஒரு பக்கம் தம்பி தங்கைகளைத் தேடப் போக, இன்னொரு பக்கம் தன் பிள்ளைகளைத் தேடப் போன அம்ரா இப்போது தான் திரும்ப வந்தார்.
அம்ராவைப் பார்த்த லெனி அவரிடம் ஓடிச்சென்றான். அவரோடு தம்பியும், தங்கையும் வந்திருப்பார்கள் என்ற ஆர்வத்தில்.

குடும்பத்திலிருக்கும் மற்ற சிங்கங்கள் இதில் கூட ஆர்வம் காட்டாமல் தான் அமர்ந்திருந்தனர்.

லெனியின் ஆர்வம் வீணாகவில்லை. அம்ராவுக்குப் பின்னால், அவரைத் தொடர்ந்து ஓடி வந்த மைலோ, லெனியைப் பார்த்ததும் அவனிடம் ஓடி வந்துவிட்டான்.

சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க ஓடி, வழி மாறி எங்கேயோ சென்ற மைலோவை அம்ரா தேடிக் கண்டுபிடித்துவிட்டார். கூடவே அழைத்தும் வந்துவிட்டார்.

ஆனால், பாப்பி?

பாப்பி அம்ராவோடு வரவில்லை.

பாப்பியை அம்ராவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எங்கேயும் வழித் தவறிச் சென்றிருந்தால் கூட இந்நேரம் லெனி கண்ணிலோ, அம்ரா கண்ணிலோ பட்டிருக்க வேண்டுமே.

அப்படி அவர்களால் தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை எனில், பாப்பி இறந்திருக்க வேண்டும்.

நமிர் சிறுத்தையின் பற்களில் சிக்கி உயிர்த்துறந்திக்க வேண்டும்.

சிங்கங்களுடனான, அந்தச் சிறுத்தையின் போட்டியில், வீழ்ந்தது, பாப்பி.

** ** ** ** ** **

மருத்துவ முகாம் முடிந்த அன்று மாலை, லெனினின் வீட்டில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தனர் பாட்டியும் கமலியும்.

காலை முதல் மாலை வரை லெனினுடனே சுற்றி வந்த இவர்கள் இருவரையும் லெனின் தடுத்ததே இல்லை.

கல்லூரி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதும், உணவு வேளைகளிலும், அவன் தந்தையும் ‘எப்போ நீங்க இந்தத் தொழில் எல்லாம் என் கைல குடுப்பீங்க’ என்று வியாபாரம் பேசும் போதும், அனிக்காவைக் கண்ணிமைக்காமல் பார்க்கும்போதும் கூட அவன் இவர்களை அவனை விட்டு விலகி இருக்குமாறு, வெளியேறுமாறு சொன்னதே இல்லை.

ஆனால், இன்று சொல்லிவிட்டானே. மாலை வீட்டிற்கு வந்ததும், அவன் அறையில் அவனுடனேயே இருந்துவிட்டு, இரவு உறங்க மட்டும் தனியறைக்கு வருவது தான், அவர்கள் இங்கு இருக்கும் அந்த ஒரு வாரத்து வழக்கம்.

ஆனால், இன்று மாலையில் வழக்கம் போல் அவன் அறைக்குள் நுழைந்த கமலியையும், பாட்டியையும், “எனக்கு இரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க உங்க ரூமுக்குப் போங்க” என்று சொல்லியிருந்தான்.

அதுவும், “நீ வேலைப் பாரு லெனி. நாங்க இங்க ஒரு ஓரமா இருக்கோம். உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்” என்று கமலி சொல்லியும், “எனக்கு சில முக்கியமான காண்ஃபிடென்ஷியல் கால் பேச வேண்டியது இருக்கு டெடி” என்று சொல்லி இருவரையும் வெளியே அனுப்பியிருந்தான்.

இன்று காலை அலைபேசியைத் தூக்கிக்கொண்டு அலுவலக அறையை விட்டு வெளியே போய் தனியே பேசியதிலிருந்து கமலி அவனைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

கல்லூரியிலேயே மூன்று முறை இவளை விட்டு தூரம் சென்று அலைபேசியில் இவளுக்குக் கேட்காத வண்ணம் பேசியவன், இப்போது ‘காண்ஃபிடென்ஷியல் கால்' என்று வெளிப்படையாகவே சொன்னான்.

‘ஒருவேளை, இன்று காலை பாட்டி சொன்னது போல, நான் அவனிடம் ‘யார் வில்லன்’ என்று வெளிப்படையாகச் சொல்லாத காரணத்தால், நான் வில்லனுக்குத் துணைப் போவேன் என்று எண்ணி, அவனின் ரகசிய வேலைகள் எல்லாம் எனக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறானோ?’ என்று யோசித்தவாறே இவளும் பாட்டியுமாய் இருக்கும் அறையின் கட்டிலில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தாள்.

கமலி, அமைதியாய் இருந்தாலும், பாட்டி தான் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தார்.

“என்ன நீ சும்மா உக்கார்ந்துட்டு இருக்க? அவன் உன்ன எவ்ளோ இன்ஸல்ட் பண்ணிட்டான் பாத்தியா?” என்று பாட்டி லெனினின் மேல் கமலிக்குக் கோவம் வர வைக்க எண்ணி நாரதர் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.

“என்ன இன்ஸல்ட்?” என்று கமலி கேட்க, “நீ உருவாக்குன கேரக்டர் தான அவன்.

இப்படித் தனியா ஃபோன் பேசணும்ன்னு உன்னையே ரூமை விட்டு வெளிய தள்ளுறான். இது உனக்கு அசிங்கம் இல்லையா?” என்று பாட்டி கேட்க, “இல்லையே” என்பதோடு முடித்துக்கொண்டாள் கமலி. வரலாற்றில் முதன் முறையாக நாரதர் கலகம் எந்த எதிர்வினையும் அளிக்காமல் வீணானது.

அந்த ‘இல்லையே’ பாட்டிக்குச் சாதாரணமாக, விளையாட்டுத்தனமாகத் தெரிந்தாலும், உண்மையில் அந்த ‘இல்லையே’விற்குள் நிறைய ஏளனமும், கொஞ்சம் திமிரும் இருந்தது.

என்ன தான் லெனின் இவளிடம் மறைத்து மறைத்துச் செய்ய முயன்றாலும், அவன் செய்யப்போவது அவளுக்குத் தான் தெரியுமே. ‘என் கிட்டேயிருந்து மறைக்க வாய்ப்பில்ல ராசா... வாய்ப்பில்ல’ என்ற ஏளனமும், ‘உன்னை உருவாக்குனவளே நான் தான் டா’ என்ற திமிரும் இருந்தது.

அவளுக்குத் தெரியும். அவன் இந்நேரம் யாரிடம், எதைப் பற்றிப் பேசி, எதற்கான ஆயத்தங்களைச் செய்துக்கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு நன்குத் தெரியும்.

ஆனால், லெனின் நினைப்பது போல் அவள் அதையெல்லாம் இந்தக் கதையின் வில்லனிடம் தெரிவிக்கப்போவதில்லை.

அந்த விஷயத்தை வில்லனுக்குக் கொண்டு சேர்க்கத் தான் இவள் கற்பனையில் பிறந்த பாவை ஒருத்தி இருக்கிறாளே.
அவள் இருக்கையில், இவள் சொல்வாளேன்?

லெனின் இன்று செய்துக்கொண்டிருப்பது கமலி அறிந்தது தான் என்றாலும், அவளின் திமிரும், ஏளனமும் அடங்கிப்போகும்படி, நாளை அவள் அறியாத, யோசிக்காத, நினைத்தும் பார்க்காத ஒன்றைச் செய்யப் போகிறானே!

நாளைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவன் செய்யப்போகும் அந்தச் செயலை, பின்னாளில் நினைத்து ‘மிருகத்தனமான நாயகனை’ உருவாக்கியதற்காகத் தன்னைத் தானே நொந்துக்கொள்ளப் போகிறாளே கமலி.

ஆனால், அதையெல்லாம் அறியாது இரவு உணவுத் தயாரானது என்று பூங்கொடி அழைத்ததும், முதல் ஆளாகச் சென்று அமர்ந்திருந்தாள் கமலி.

சிங்கமுத்து இன்னும் இல்லத்திற்கு வராமல் இருக்க, கமலியைத் தொடர்ந்து, பாட்டி, லெனின், தளிர் ஆகிய மூவரும் வந்து உணவு மேசையில் அமர்ந்தனர்.

சந்தோஷ் வந்து எட்டிப் பார்த்துவிட்டு, “அம்மா சாப்பிடும் போது சாப்பிடுறேன்” என்று சொல்லி மீண்டும் தன்னுடைய அறைக்குள் புகுந்துவிட்டான்.

சாப்பிடும் நேரத்தில், கமலியும், பாட்டியும் சாப்பாட்டில் மட்டும் கவனமாயிருக்க, தளிரின் கவனமோ சாப்பாட்டில் துளியும் இல்லை.
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
உணவு மேசையில் லெனின் அமர்ந்திருக்க சில நிமிடங்களில் அவனிடம் பேச்சுக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே அவள் எண்ணத்தில் இருந்தது. வேறு நேரத்தில் அவனுடன் தனியாகப் பேசவெனச் சென்றால் அவன் அறைக்குள் கூட அனுமதிக்க மாட்டானே.

இப்போது எல்லோர் முன்னிலையிலும் பேசினாலும் கூட, தான் நேராகக் கேள்விக் கேட்டால் அதை மதியாமல் தான் உண்டு, தன் உணவு உண்டு என்றிருப்பான் என்றறிந்தவள், தான் கேட்க நினைப்பதை, தன் தாயின் மூலம் கேட்டு சாதிக்கத் திட்டமிட்டாள் தளிர்.

“அம்மா. அப்புறம்? உனக்கு அந்தப் பொண்ணு மருமகளா ஓகேவா?” என்று தளிர் பூங்கொடியிடம் கேட்க, “எந்தப் பொண்ணு? என்ன மருமக?” என்று விழித்தார் அவர்.

முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல், தட்டிலிருக்கும் சப்பாத்திகளின் மீது மட்டுமே கவனம் கொண்டவன் போல் அமர்ந்திருக்கும் லெனின் முகத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு, “என்ன மா? இப்படிக் கேட்கற? காலேஜ் கேம்பஸ் மொத்தமும் சொல்லுதே. உன் புள்ள இளிக்கறதையும். அந்தப் பொண்ணு முறைக்கறதையும். உனக்குத் தெரியாதா? உன் புள்ள சொல்லல?” என்று கேட்க லெனினைப் பார்த்தார் பூங்கொடி.

“என்னது? நிரஞ்சன் ஒரு பொண்ணைப் பார்த்து இளிக்கறானா?” என்று கேட்டவர், அதே அதிர்ச்சியினுடனே, “யாரு தளிர் அந்தப் பொண்ணு?” என்று கேட்டார்.

“யாரா? உன் புருஷன் செய்யுற உன்னதத் தொழில்ல ஒரு உயர்ந்த மனிதர் கூட்டாளியா இருந்து சில வருஷத்துக்கு முன்ன புனித மரணம் அடைந்தாரே ஒருத்தர். அவரோட பசங்கக் கூட எப்போ உன் புருஷரைப் போட்டுத் தள்ளிட்டு இந்த உன்னதத் தொழிலுக்கு அதிபதி ஆகலாம்ன்னு காத்துகிட்டு இருக்காங்கல்ல. அந்தக் குடும்பத்துல தப்பிப் பொறந்த பொண்ணு தான் அந்தப் பொண்ணு” என்று தளிர் கொடுத்த நீண்ட விளக்கத்தில் இருந்து அவள் ‘அனிக்கா’வைத் தான் சொல்கிறாள் என்று புரிந்துக்கொண்டார் பூங்கொடி.

“டேய் நிரஞ்சா. உண்மையா டா?” என்று பூங்கொடி கேட்க, “ஆமாம்” என்றான் லெனின்.

“வேணாம் டா. செட் ஆகாது” என்று பூங்கொடி சட்டெனச் சொல்ல, லெனின் கேள்வியாகப் பார்க்க, இத்தனை நேரம் உண்ணும் தட்டே உலகம் என்று இருந்த கமலி அந்த உலகத்தை விட்டு வெளியே வந்து, “சூப்பர் ஆண்ட்டி. அப்படிச் சொல்லுங்க” என்று குதூகலித்தாள்.

“ஏன் ம்மா?” என்று லெனின் கேட்க, கமலியோ, “சொல்லுங்க ஆண்ட்டி சொல்லுங்க. நல்லா இந்த லெனிக்கு உரைக்கற மாதிரி சொல்லுங்க. அந்தப் பொண்ணு எதிர்த்துப் பேசும். உனக்கு அடங்காது. பொண்ணுன்னா பூ மாதிரி மென்மையா, பூமித்தாய் மாதிரி பொறுமையா இருக்கனும். அது மட்டுமா? இடைத் தாண்டிய முடி இல்ல. லட்சணமா சேலைக் கட்டல. பூ வைக்கல. இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கே. இதான ஆண்ட்டி காரணம்?” என்று கமலி கேட்க, “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல” என்று படாரெனச் சொல்லி கமலியின் மனதைத் தடாலென உடைத்தார் பூங்கொடி.

“அப்போ வேற என்ன?” என்று கமலி கேட்க, “நான் ஒன்னும் அந்தப் பொண்ணு இந்தக் குடும்பத்துக்கோ இல்ல நிரஞ்சனுக்கோ செட் ஆக மாட்டா’ன்னு சொல்லல. நிரஞ்சன் அந்தப் பொண்ணுக்கு செட் ஆக மாட்டான்னு தான் சொல்றேன்” என்றார் பூங்கொடி.

அவரின் பதிலில் இப்போது அலறுவது லெனினின் முறையாயிற்று.

“ஏன்? நான் ஏன் செட் ஆக மாட்டேன்?” என்று லெனின் கேட்க, “அந்தப் பொண்ணுக்கு அடிதடி, அடாவடி எல்லாம் பிடிக்காதுன்னு கேள்விப்பட்டேன்” என்றார் பூங்கொடி.
“அதுக்கு என்னம்மா?” என்று லெனின் கேட்க, “உன் குணத்துக்கு அவ உன்னைக் கட்டிக்கிட்டா சந்தோஷமா இருக்க முடியாது” என்றார் அவர்.

“ஏன்? அப்பாவும் அடிதடி, கொலை கொள்ளைன்னு இருந்த ஆள் தான. நீ அவரோட இத்தனை வருஷம் குடும்பம் நடத்தல? அதெல்லாம் அவளுக்கும் பழகிடும் ம்மா. இப்போ அவ எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்கா. ஆனா, அவ மேல எனக்கு இருக்க காதலையும், என் மேல அவளுக்கு இருக்க காதலையும் உணர்ந்துட்டா இதெல்லாம் அவளுக்கு ஒரு விஷயமாவே தெரியாது ம்மா.

உதாரணமா, எனக்குப் பாயசம் பிடிக்கும்.
பாயசத்துல இருக்க முந்திரி பிடிக்கும். ஆனா, அதுல இருக்க ஏலக்காய் மட்டும் பிடிக்காது. அதுக்காக நான் எனக்கும் பாயசத்துக்கும் செட்டே ஆகாதுன்னு விட்டுட முடியுமா?
ஏலக்காய் சிக்கும் போது அதைக் கீழ துப்பிட்டு, எனக்குப் பிடிச்ச முந்திரியோட அந்தப் பாயசத்தை ருசிக்கத் தானே செய்றேன்.

அந்த மாதிரி தான். அவளுக்கு ‘லெனின் நிரஞ்சன்’ என்னும் பாயசம் பிடிக்கும்.

‘லெனின் நிரஞ்சனின் காதல்’ என்னும் முந்திரி பிடிக்கத் தொடங்கும் போது, இந்த அடிதடி கொலை எல்லாம் ஏலக்காய் மாதிரி கீழ துப்ப பழகிடுவா” என்று ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்தான் லெனின்.

“ஒருவேள. பாயசத்துல முந்திரியை விட, ஏலக்காய் அதிகமா இருந்தா?” என்று பூங்கொடி கேட்க, “அது எப்டி அதிகமா இருக்கும்? பாயசத்துல அளவுக்கு அதிகமா ஏலக்காய் போட்டா அதோட சுவையே மோசமாகிடும். ஆனா, முந்திரி எவ்ளோ வேணும்னாலும் போடலாம்” என்று சொல்லச் சிரித்தார் பூங்கொடி.

“அதே தான் டா. தப்புப் பண்ணாத மனுஷனே இருக்க மாட்டான். ஆனா, தப்பு பாயசத்துல இருக்க ஏலக்காய் அளவுக்குத் தான் இருக்கணும். நான் அளவில்லாமல் அதிகமா சேர்ப்பேன். அந்தப் பொண்ணு தான் துப்பிக்கணும்ன்னு சொல்றது எங்கயாவது நல்லா இருக்கா லெனின்” என்று கேட்டார் பூங்கொடி.

“அய்யோயோ. இந்தப் பாயசம் டயலாக் வச்சி இந்த ஆண்ட்டி இந்த லெனியைத் திருத்திடுவாங்களோ. ஐயோ. அப்புறம் நான் எப்டி ஆண்ட்டி-ஹீரோ எழுத. விட்றாத கமலி” என்று தனக்குள் பேசிக்கொண்டு, பூங்கொடியிடம் கேள்விக் கேட்கலானாள்.

“என்ன நீங்க? நீங்க லெனின் அப்பாவோட அடிதடி பிடிச்சி, அதனால லவ் பண்ணித் தான அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அப்படித் தான் நான் உங்க கேரக்டரை எழுதுனேன். அப்போ நீங்க, ‘உங்க அப்பாவும் இப்டி தான் கொலை எல்லாம் பண்ணிட்டு தான் இருந்தாரு.

அதையெல்லாம் பார்த்து, அவர் ஆண்மைல மயங்கி தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்படி உனக்கும் ஒருத்தி கிடைப்பா. இவ உனக்கு செட் ஆக மாட்டா’ன்னு தான டயலாக் பேசணும். நீங்க என்னடான்னா இவன் அவளுக்கு செட் ஆக மாட்டான்’ன்னு சொல்றீங்க?” என்று பொங்கினாள் கமலி.

“ஆமாம். நான் அந்த வயசுல, இப்படி அடிதடி பண்றது, கொலைப் பண்றது எல்லாம் ஆண்மைன்னு நெனச்சேன். உடல்ல பலமும், கொலை செய்ய துணிவும் இருக்கவங்க, நமக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் காப்பாத்திடுவாங்கன்னு நெனச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். காதலிக்கும் போது நான் என்ன நெனைச்சேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் எண்ணங்கள் எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா? ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறம்? மூணு பசங்க பிறந்ததுக்கு அப்புறம்? இல்ல, இதோ இப்போ, இந்த நிமிஷம் என்ன நெனைக்கறேன் தெரியுமா?????

அந்த வயசுல நான் நெனச்சது எல்லாம் தப்புன்னு நெனைக்கறேன். நான் எதை ஆண்மைன்னு நெனச்சேனோ, அது மிருகத்தனம்ன்னு நெனைக்கறேன். எப்படி இருக்கவங்க எந்தப் பிரச்சனை வந்தாலும் நம்மள காப்பாத்துவாங்கன்னு நெனச்சேனோ, அவங்க தான் பிரச்சனையேன்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்று கமலியிடம் சொன்னவர் லெனினிடம் திரும்பினார்.

“ஏலக்காய் பிடிச்ச எனக்கே, பாயசத்துல ஏலக்காயின் அளவு அதிகமாக அதிகமாக பாயசம் பிடிக்காம போய்டுச்சு நிரஞ்சா.
இதுல ஏலக்காயே பிடிக்காத பொண்ணை, முந்திரியைக் காட்டித் தற்காலிகமா மயக்க பார்க்காத. அவ அப்புறம் கஷ்டப்படுவா.

உங்க அப்பாவைக் கொல்ல யாராவது ஸ்கெட்ச் போட்டிருப்பாங்களோ, யாரையும் கொல்லப் போறப்போ அவருக்கு ஏதாவது ஆகிடுமோ, அவர் கூட இருக்க பகைல என் புள்ளைங்கள யாராவது ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்து வாழ்ந்துட்டு இருக்கேன்.

அந்த நிலை இன்னொரு பொண்ணுக்கு வேணாம். நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா கூட ஒரு பொண்ணா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று பூங்கொடி சொல்லிமுடிக்கவும் தான் பார்த்தார் வாசலில் நின்றிருந்த சிங்கமுத்துவை.

இந்த உரையாடல் தொடங்கி சில நிமிடங்களிலேயே அங்கு வந்துவிட்டவர், பூங்கொடி பேசுவதைக் கேட்கவென வாசலிலேயே நின்றிருந்தார். பூங்கொடி பேசியது அவரை வருத்தியது என்பது அவர் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது.

அவர் பூங்கொடியையே பார்த்து நிற்க, “பேசுனதை எல்லாம் கேட்டுட்டீங்களா? கஷ்டமா இருக்கா?” என்று கேட்க “ம்ம்ம்” என்றார் அவர்.

“இப்படிப் பேசுனதுக்கு சாரி கேட்பேன்’ன்னு நெனைக்காதீங்க. பல நாள் உள்ள வச்சிருந்ததை எல்லாம் இன்னைக்குக் கொட்டினதை நான் தப்புன்னு நெனைக்கல” என்று பூங்கொடி சொல்ல பதில் பேசாமல் அவர் அறைக்குச் சென்றார் சிங்கமுத்து.

தாயின் வார்த்தைகள் தளிரை வெகுவாகப் பாதித்தது. தாய் பேசியதைக் கேட்டுக் கலங்கிய கண்களிலிருந்து நீர் கீழே விழக்கூடாது என்று பிடிவாதத்தோடு லெனினைப் பார்த்தாள் தளிர். தன்னை இத்தனை பாதித்த வார்த்தைகளின் தாக்கம் அவனுள் கொஞ்சமேனும் இருக்குமென்று.

தளிரின் பார்வையையும், அப்பார்வையில் இருந்த எதிர்ப்பார்ப்பையும் உணர்ந்தவன், ‘அப்படி எதுவும் இல்லை’ என்று நிரூபிக்கும் பொருட்டு, “ஏதேதோ சொல்லி என் மனசைக் குழப்பப் பார்க்கறீங்க. நான் முடிவு பண்ணிட்டேன். அனிக்கா தான் என் மனைவி. அதுக்குக் குறுக்க நிக்காதீங்க ம்மா” என்று லெனின் சொல்ல, இம்முறை அவனிடம் நேராகவே பேசினாள் தளிர்.

“அம்மா என்ன குறுக்க நிக்கறது? அந்த அனிக்காவே தான் நீ காலேஜை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ன்னு சொல்லிருக்காங்களே. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா, அப்பாவுக்கு அப்புறம் ரவுடிகளுக்கு எல்லாம் தலைவன் ஆகணும்ன்ற ஆசைய விட்டுடு.

அப்போ அனிக்காவும் உன்ன கல்யாணம் செய்துக்க ஒத்துப்பாங்க. அம்மாவும் குறுக்க நிக்க மாட்டாங்க” என்று தளிர் சொல்ல, “அவ என்கிட்டே சொன்னது உனக்கெப்படி தெரியும்? இதையெல்லாம் காலேஜ் கேம்பஸ் முழுக்க பேசிக்க மாட்டாங்களே. அவங்களுக்குத் தெரியவும் தெரியாதே ” என்று கேட்டான் லெனின்.

“இன்னைக்கு ஈவ்னிங் அவங்களே என்னை காலேஜ்ல வந்து பார்த்துப் பேசுனாங்க.

அப்போ சொன்னாங்க. ரொம்ப நேரம் பேசுனோம். உன்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ப்ளீஸ். அவங்க மேல இருக்க ஆசைக்காகயாவது இந்த ரௌடி தொழில் எல்லாம் வேணாம்ன்னு முடிவு செய்யேன்” என்று தளிர் பேசி முடிக்கும்போது, தட்டோடு எழுந்துச் சென்று, கையையும் தட்டையும் கழுவிவிட்டு, மாடிப்படிகள் ஏறினான் லெனின்.

அப்படியே நின்றவன், “நான் என்ன செய்யணும்ன்னு நீ சொல்லாத. அதுவுமில்லாம, யாருக்காகவும் அதெல்லாம் என்னால விட்டுட முடியாது” என்று சொன்னவனை நோக்கி, “அதுக்கு எப்படி முடிவுக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லி எழுந்து அவள் அறைக்குச் சென்றாள் தளிர்.

:: :: :: :: :: :: :: ::
 
Last edited:

Kamali Ayappa

Member
Vannangal Writer
Messages
51
Reaction score
91
Points
18
அத்தியாயம் - 10 :



அம்ராவோடு பாப்பி வரவில்லை.

மைலோவைப் பார்த்ததும், குதூகலித்த லெனி, சில நிமிடங்களுக்குப் பின் தான் பாப்பி அங்கில்லை என்பதையே உணர்ந்தான்.

அம்ரா வந்த திசையில் சில தூரம் ஓடிச் சென்று பார்த்தான் லெனி. ஒருவேளை பாப்பி மெதுவாக நடந்து வரக்கூடும் என்று.

ஆனால், பயனில்லை. பாப்பி வரவில்லை என்பதை உணர்ந்தான் லெனி.

லெனி மட்டுமல்ல. மொத்தக் குடும்பமுமே அதை உணர்ந்துகொண்டது.

ஆனால், லெனியால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மொத்தக் குடும்பத்தில் அவனுடன் பிணக்கத்துடன் இருக்கும் ரெண்டு உயிர்களில் ஒன்று இனி இல்லை என்று நினைத்தும் பார்க்கமுடியவில்லை.

மைலோ, திரும்பவும் வீட்டுக்கு வந்த மகிழ்ச்சியில், குடும்பத்து உறுப்பினர்களோடு கொஞ்சிக் குலாவ முற்பட, லெனியைத் தவிர்த்து வேறு எந்த சிங்கங்களும் அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.

மற்ற சிங்கங்கள் அனைத்தும் அவனை ஒதுக்கத் தொடங்கியிருந்தன. அதற்கான காரணம் புரியாமல் மைலோ விழிக்க லெனியும் விழித்துக்கொண்டு தான் இருந்தான்.

மைலோ, ஒரு பெண் சிங்கத்தின் அருகே சென்று, அதன் மேல் ஏறப் பார்க்க, அந்த சிங்கமோ மைலோவைத் தட்டிவிட்டு தூர வீசியிருந்தது.

அதை அம்ராவிடம் சென்று முறையிட, அம்ரா அதை கண்டுகொள்ளவே இல்லை.

இத்தனை நாள் பாசமாக இருந்த குடும்பத்தினரின் திடீர் மாற்றத்தில் திணறிப் போனான் மைலோ.

அவன் வயதில் வேறு சிங்கங்கள் எதுவுமே இல்லாமல், தனித்து விடப்பட்டான். தனிமை அவனைத் திண்ணாமல் காப்பாற்றியது லெனி மட்டுமே.

தன்னை ஒதுக்கும் குடும்பத்தினரைக் கண்டு கொள்ளாமல், லெனியோடு விளையாடத் தொடங்கினான் மைலோ.

மைலோவோடு லெனி சில நிமிடங்கள் விளையாடிக்கொண்டிருக்க, ஒரு பெண் சிங்கம் அவர்களை நோக்கி வந்தது.

லெனியையும், மைலோவையும் மாற்றி மாற்றி எரிச்சலாகப் பார்த்த அந்தப் பெண் சிங்கம், மைலோவைக் காலால் எட்டி உதைத்தது. மைலோவைக் கவ்வி தூக்கி தூர வீசியது.

அதைப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்ட அஸ்லான் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார். அம்ராவோ அந்தக் காட்சி அவர் கண்ணிலேயே படவில்லை என்பது போல் அலட்சியமாக அமர்ந்திருந்தார். அம்ராவின் அலட்சியம் லெனிக்கு ஆச்சரியமாக இருந்ததென்றால், அஸ்லானின் அமைதி அதிசயமாக இருந்தது.

லெனி, அஸ்லானின் கண்ணில் படும்படி, அவர் முன் சென்று நிற்க, அவனின் இருப்பை உதாசினப்படுத்தி, வேறு இடத்திற்குச் சென்று அமர்ந்துக்கொண்டார் அஸ்லான்.

அஸ்லானின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்த அம்ராவுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. அஸ்லானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கணிக்க முடிந்தது அம்ராவால்.

அந்த முடிவு, தன்னையும் தன் குடும்பத்தில் இருக்கும் மற்றப் பெண் சிங்கங்களோடு சேர்த்து, தன் மகன்களையும் பெரும் ஆபத்தில் தள்ளப் போகிறது என்பதையும் உணர்ந்துக்கொண்ட அம்ராவுக்கு அதைத் தடுக்கத் தான் வழியே தெரியவில்லை.

மற்றவர்கள் அனைவரும் மைலோவை ஒதுக்கி வைப்பது தாய்ப்பாசத்தைப் பொங்கச்செய்தது என்றால், இன்னொரு பக்கம் அந்தத் தாய்ப்பாசத்தை வெளிக்காட்ட முடியாமல், மற்றவர்கள் அனைவரையும் போல் தானும் தன் மகனை ஒதுக்கித் தான் ஆக வேண்டும் என்ற நிதர்சனம் வலியைத் தந்தது.

இன்னொரு பக்கம், தன் இணையின் முடிவு, எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ள வைத்தது. சுற்று வட்டாரத்தில் மிக வலிமையான குடும்பம். ‘ஆஸ்கர்’ சிங்கக் குடும்பம் என்ற புகழுரைக்குரிய குடும்பத்திற்கா இந்நிலை என்று மனதுக்குள் வெதும்பினாள் அம்ரா.

மாற்றி மாற்றி தாக்கிய பெண் சிங்கங்களிடம் இருந்து, மைலோவைத் தூக்கிச் சென்று, சற்று தூரத்தில் அமர்ந்த லெனி, தாயையும், தந்தைகளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.

தந்தைகள் மூவரும் கூடிக்கூடி பேசுவதையும், தாயோடு சேர்ந்து மற்ற பெண் சிங்கங்களையும் துக்கம் சூழ்ந்து இருப்பதையும் உணர்ந்து, ஏதோ அசாதாரணச் சூழல் நிலவுவதைப் புரிந்துக்கொண்டு அமைதி காத்தான் லெனி.

நெடுநேரம் தங்களுக்குள் கலந்துரையாடிக்கொண்டிருந்த அஸ்லானும் அவருடைய தம்பிகளும் எழுந்து நடக்கத் தொடங்கினர். இந்த ஆஸ்கர் குடும்பத்துப் பெண் சிங்கங்களைத் தனியாக விட்டுவிட்டு, வேறு குடும்பத்தைத் தேடும் பயணத்தைத் தொடங்கினர்.

பாப்பியின் மரணம் மறைமுகமாக ஆஸ்கர் குடும்பத்தின் எதிர்காலத்தையே புரட்டிப்போட்டது.

ஒருவேளை, லெனி மற்ற சிங்கங்கள் போல் இருந்திருந்தால், இன்று ஆஸ்கர் குடும்பத்திற்கு இந்நிலை வந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ண எண்ண, மற்ற சிங்கங்களுக்கு லெனியின் மீது இருக்கும் வெறுப்பு அதிகமானது.

தம்மைத் தனியே விட்டுவிட்டு நடக்கும் அஸ்லான், ஒரு கடைசி முறையேனும் தன்னைத் திரும்பிப் பார்ப்பாரா என்று எதிர்ப்பார்ப்புடன் அவர்கள் செல்லும் திசையையே பார்த்திருந்த அம்ராவுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

‘ஆஸ்கர்’ குடும்பத்தின் பொற்காலத்தோடு, தங்களின் காதல் காலமும் முடிந்தது என்று உணர்ந்து கொண்டார் அம்ரா.

** ** ** ** ** **

அவன் அறைக்குள் சென்ற லெனினுக்கு ஒரு

அலைபேசி அழைப்பு வர, அதை ஏற்றவன், “ஹான். நம்ப காலேஜ் கேர்ல்ஸ் ஹாஸ்டல் தான். ரூம் நம்பர் 102. அந்தப் பொண்ணு ஃபோட்டோ பேர் எல்லாம் உனக்கு அனுப்பியிருக்கேன். பாரு. வேலைய முடிச்சிடு” என்று சொல்லி மெத்தையில் படுத்தவனுக்கு யோசனைகள் தரிக்கெட்டு ஓடியது. எல்லாம் அனிக்காவைச் சுற்றியே இருந்தது.

இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று ஏன் அனிக்கா திடீரென தளிரிடம் பேச வேண்டும் என்ற கேள்வியே தலையைக் குடைந்தது. இத்தனை நாள் ‘இதெல்லாம் நிறுத்திடேன்’ என்று கெஞ்சலாய் கொஞ்சலாய் கேட்டிருந்த தளிர், இன்று அவளிடம் பேசிய பிறகு, மிஞ்சலாய் ‘இதுக்கு எப்டி முடிவு கட்டுறதுன்னு எனக்குத் தெரியும்’ என்று வேறு சொல்லியிருக்கிறாளே. அவளும் அந்தத் தைரியமும் உறுதியும் யார் கொடுத்ததாக இருக்கும்? அவளிடம் பேசிய அனிக்காவா? அப்பொழுது அனிக்காவுக்கு ‘இதையெல்லாம் முடிவு கட்டிவிட முடியும் என்ற உறுதியை எது கொடுத்தது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்குத் திடுமென ஒரு யோசனை.

‘ஒருவேளை, இந்த மெடிக்கல் செக்-அப்பிற்கு பின் இருக்கும் தன் திட்டம் எல்லாம் அனிக்காவிற்குத் தெரிந்திருக்குமோ? அந்தத் திட்டத்தைத் தடுத்துத் தன்னைத் தோல்வியைக் கவ்வ வைக்க முயற்சி செய்கிறாளோ?’ என்று யோசித்தவன், சற்று முன் பேசியவர்களுக்கே மீண்டும் அழைப்பு விடுத்தான்.

“கேர்ல்ஸ் ஹாஸ்டல் போய்ட்டீங்களா?” என்று லெனின் கேட்க, “ஹாஸ்டல் வாசல்ல தான் அண்ணே இருக்கோம்” என்று எதிர்முனையில் இருந்து பதில் வந்தது. “உள்ள போகாதீங்க. நான் வரேன். நான் வந்ததுக்கு அப்புறம் செஞ்சிக்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் லெனின் நிரஞ்சன்.

லெனின் வீட்டில் அனிக்காவை லெனின் திருமணம் செய்துக்கொள்வதைப் பற்றி குடும்பத்தினர் அனைவரும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்க, கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த அனிக்கா பலத்த யோசனையில், ஒரு அலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தாள். மாணவிகள் விடுதியின் தரைத்தளம் கல்லூரியில் பணிபுரியும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது.

சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தவளின் பொறுமையை இன்னும் சோதிக்காமல் அவள் எதிர்பார்த்த அழைப்பும் வந்து சேர்ந்தது.

அவள் அண்ணன்களில் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, அதை உடனடியாக ஏற்றவள், “ஹெலோ அண்ணா!” என்று சொல்லி அவர் தான் பேசுகிறார் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, “அந்த மெடிக்கல்-செக் அப்புக்கு பின்னாடி என்ன தில்லு முள்ளு இருக்கு? எதுக்கு லெனின் திடீர்ன்னு இதெல்லாம் பண்றான்? என்ன ப்ளான்னு தெரிஞ்சுதா?” என்று கேட்க, அவள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை போலும். அவள் முகம் சுருங்கியது.

“என்னது? தெரியலையா? ஏதோ லெனின் அப்பாவோட அடியாளுங்கள்ல உங்களுக்கு ஒற்றர் வேலை செய்றவங்களும் இருக்காங்கன்னு சொன்னீங்க? அவங்கக் கிட்ட விசாரிச்சு கண்டுபிடிக்க முடியலையா?” என்று அவள் சீற, “அவன் இப்போ பண்றதைப் பத்தி அவன் அப்பாவுக்குக் கூடத் தெரியாது போல. இதுல அவன் அப்பாவோட அடியாளுங்களுக்கு எப்படித் தெரியும்” என்று பதில் வந்தது எதிர்முனையில்.

“வாட்? அவன் அப்பாவுக்கே தெரியாம பண்றானா? அப்போ அவன் அப்பாவையே ஓரம் கட்டிட்டு, அவன் தலை ஆகப் பாக்கறான். இதை அப்படியே விட்டுடக் கூடாது” என்றாள் அனிக்கா.

“சரி. இப்போ அடுத்து என்ன பண்றதா ஐடியா?” என்று அனிக்கா கேட்க, “நம்ப பழைய ப்ளான் தான்” என்று பதில் வந்தது.

“சரி. ஆனா, அந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று மீண்டும் ஒரு முறை அழுத்தம் கொடுத்தாள் அனிக்கா.

“அதெல்லாம் எதுவும் ஆகாது. நாளைக்குக் கடத்துறோம். எப்போ எங்கன்னு ப்ளான் பண்ணிட்டுச் சொல்லு” என்று எதிர்முனையில் பதில் வந்த நேரம், “ஃபோனை வையி. வையி” என்று பதறினாள் அனிக்கா.

ஏனெனில். அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரெனத் திரும்ப அவள் பின்னால் நின்றிருந்தான் லெனின்.
 
Status
Not open for further replies.
Top Bottom