Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நானும் நீயும்

Sowby

New member
Messages
3
Reaction score
3
Points
1
நானும் நீயும்

நாயகன் : சுகர்தீப் படேல்
நாயகி : முக்தி

திருமணமாகி சில வருடங்களிலேயே சம்பாவின் கணவன் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிட,இரு பெண் குழந்தைகளுடன் புனேவில் தையல் தொழிலுடன் தன் வாழ்க்கையை துவங்கினாள். மகள்கள் இருவரையும் கடினப்பட்டு படிக்க வைத்தாள். தாயின் கஷ்டத்தை உணர்ந்த பிள்ளைகளும் தங்களுக்கு வந்த கல்வி உதவித்தொகையை வைத்து படிப்பை முடித்தனர். மூத்தவள் நாதிரா அவள் படித்த பள்ளியிலேயே ஆசிரியை பணி கிடைத்துவிட இளையவள் முக்தி படித்துக்கொண்டே பகுதிநேரமாக சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றினாள். நாதிராவிற்கும் பொறுப்பற்ற இக்காராமிற்கும் திருமணம் செய்துவைக்கிறாள் சம்பா.

நண்பர்களுடன் சுற்றுலா வந்த சுகர்தீப் படேலுக்கு வழிகாட்டியாக அறிமுகமாகிறாள் முக்தி. தாயில்லாது தந்தை மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வரும் பெரும் தொழிலதிபன் சுகர்தீப் படேல். அந்த பயணம் இருவருக்கும் எநதிர்மறையாக அமைகின்றது. அதன்பின்பு நாசிக்கில் நடந்த ஒரு கருத்தரங்கில் முக்தியின் திறமையினை அறிந்த சுகர்தீப் புனேவில் அவன் தொடங்கிய புதிய நிறுவனத்தில் அவளை பணியமர்த்துகிறான். முக்தியும் சுகர்தீப்பின் இரு பொறுப்பற்ற சகோதரர்களுடன் தன் வேலையைத் துவங்குகிறாள். இதற்க்கிடையில் நாதிராவிற்கு பெண் குழந்தை பிறந்தபின்பு பிரிகின்றான் அவள் கணவன். முக்திக்கு பபுள் என்ற மாப்பிள்ளையைத் தேர்வு செய்கிறார் சம்பா. திருமணத்தை வெறுக்கும் சுகர்தீப்பை முக்தி பாதிப்பதை உணர்கிறான்.

சுகர்தீப்பின் சகோதரர்களின் திறமையை வெளிக்கொணர முயல்கிறாள் முக்தி. அவளின் இம்முயற்சி வெற்றி பெறுமா?? சுகர்தீப் தன் மனதை வெளிப்படுத்தினானா??இக்காராம் திருந்தினானா?? சம்பாவின் எண்ணம் நிறைவேறியதா? விடையினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..
 
Top Bottom