Dinesh Loganathan
New member
- Messages
- 1
- Reaction score
- 1
- Points
- 1
நான் பிழைப்பேனோ?
நிதானம் அலட்சியத்தை வெல்லும் என்ற நீதியின் மூலம் முயலாமையால் தோற்ற முயலின் கதையை நாம் எல்லோரும் படித்து இருப்போம், ஆனால், இங்கே முயலவே இயலாத முயலை பற்றி பயணம் செய்ய போகிறோம். வாருங்கள் கதையை நோக்கி பயணிப்போம்.
என் பெயர் தீபக். எல்லோரையும் போல எனக்கும் ஒரு ஆசை, கனவு, இலட்சியம் இருந்தது. என் அப்பா தியேட்டர் ஆப்ரேட்டராக இருந்தார். நான் தினமும் பள்ளி வகுப்பு முடிந்ததும் மாலை என் அப்பாவை பார்க்க தியேட்டருக்கு செல்வேன். அப்பொழுதெல்லாம் நான் திரைப்படம் பார்ப்பேன்.அதைப்பற்றி பேசியடியே நானும் எனது அப்பாவும் வீட்டிற்கு செல்வோம். அதன் விளைவாலோ என்னவோ எனக்கு சிறு வயதிலிருந்தே இயக்குநர் ஆகும் ஆசை என் மனதில் தோன்றியது. அப்பா தியேட்டர் ஆபரேட்டராக இருந்ததாலோ என்னவோ என்னை பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக்க ஆசைப்பட்டார்.அந்த ஆசையுடன் கூடிய வற்புறுத்தலால் மேல்நிலைப்பள்ளி படிப்பு முடித்ததும் பொறியாளர் என்னும் இரயிலில் நானும் ஒருவனாய் ஏறினேன்.
இரயில் வண்டியின் பயணத்தை போலவே என் கல்லூரி வாழ்க்கையும் தடக் தடக் என்று சுவாரசியம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது, அந்த இரயிலில் பயணிக்கவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டேன், ஆம் நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்வி படித்து கொண்டிருக்கிறேன்.
என்னுடன் படிக்கும் என் நண்பனான தினேஷ்-ம் நானும் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம் அவனுக்கு என் இரயில் பயணத்தை பற்றி தெரியும் இருப்பினும் ஒரு நாள் அவனது மற்றொரு நண்பனிடம் செல்போனில் எனது கனவைப் பற்றி ஏளனமாக பேசிக்கொண்டிருந்தான் என்னுடைய நிலை தெரிந்தும் என் நண்பனுக்கே என் கனவின் மதிப்பு தெரியவில்லை...
அந்த நிகழ்வு எனக்கு சோகம் அளித்தாலும் அதுவே என் முயற்சிக்கு தூண்டுகோலாய் இருந்தது. நான் பார்த்த படங்களின் மூலமாகவும் இன்டர்நெட் மூலமாகவும் லூசிட் ட்ரீமிங் என்னும் கனவு காணும் முறையை செய்து பார்க்கலாம் என்று சிந்தித்து கொண்டிருந்தேன். பிறகு அதை முயற்சித்து அதில் வெற்றியும் கண்டேன், அன்று முதல் நான் வாழ நினைத்த வாழ்க்கையை லூசிட் ட்ரீமிங் மூலமாக கனவில் வாழ்ந்து வந்தேன். லூசிட் ட்ரீமிங் என்றால் ஒருவர் கனவு காணும் போது தான் காண்பது கனவுதான் என்று உணர வைக்கும். அதன் மூலம் நமக்கு நிறைவேறாத ஆசைகளை கனவில் நிறைவேற்றி கொள்ளலாம். அப்படியே என் கனவு வாழ்க்கைக்கு அடிமை ஆனேன். அதுவரை கட்டுப்பாட்டுடன் இருந்த என் கனவு வாழ்க்கை கட்டுப்பாட்டை இழந்தது ஏனெனில், நான் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு கனவு காண ஆரம்பித்தேன். அதனால் எனது அப்பாவின் மருந்து பரிந்துரை சீட்டை பயன்படுத்தி எனது குடும்பத்திற்கு தெரிந்த மருந்தகத்தில் மாத்திரை வாங்கினேன். ஒருநாள் மாத்திரை வாங்கி கொண்டு வரும் வழியில் எனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போகவே அந்த இரவு நேரத்தில் எனது வாகனத்தின் பெட்ரோல் தாகத்தை தீர்க்க பெட்ரோல் பங்கை தேடி அலைந்தேன். அப்போது அந்த இருட்டிலும் சாலை ஓரத்தில் ஒரு பாட்டில் பிரகாசமாய் தெரிந்தது அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களை நோக்கி லிப்ட் கேட்க தொடங்கினேன். ஆனால், அந்த நேரம் இரவு நேரம் என்பதால் யாரும் லிப்ட் கொடுக்க முன்வரவில்லை. சரி பெட்ரோல் பங்கிற்கு நடந்தே செல்லலாம் என்று நினைத்தபோது, ஆபத்பாண்டவன் போல் ஒருவர் தனது காரில் எனக்கு லிப்ட் கொடுத்தார். அதற்குமேல் தீபக்கின் டைரியில் எழுதியிருந்த எதுவும் கோர்வையாக இல்லாததால் தீபக்கின் நண்பனான தினேஷிற்கு ஒன்றும் புரியவில்லை.
ஆம், இதுவரை சொன்னவை எல்லாம் தீபக்கிற்கு தெரியாமல் தீபக்கின் டைரியை அவனுடன் தங்கியிருந்த தினேஷ் படித்து தெரிந்து கொண்டதே. தினேஷ் டைரியை புரட்டி பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் கோபத்துடன் டைரியை தூக்கி எரிந்தான். அதற்குமேல் என்ன நடந்திருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் போது அறையில் இருந்த ஜன்னலிலிருந்து மெல்லிய காற்று வீசியது . அது தூக்கி வீசப்பட்ட டைரியின் மேல்பட்டது. டைரியின் கடைசி பக்கத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்ததை தினேஷ் பார்த்தான். அப்போது டைரியின் கடைசி பக்கத்தில் லூசிட் ட்ரீமிங் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டான்.
லூசிட் ட்ரீமிங் பற்றி தெரிந்துக் கொண்டதும் அவன் அருகில் படுத்திருந்த தீபக்கை பார்த்து 'அப்போ இவன் தூங்கவில்லை கனவில் தான் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டான் தினேஷ். தூக்க மாத்திரை கொண்டு படுத்திருந்ததால் நாம் எழுப்பும்போதுக் கூட அவன் எழுந்திருக்கவில்லை '. சரி நாமும் அவன் கனவுக்கு செல்வோம் என்று தினேஷிற்கு ஒரு யோசனை தோன்றியது.
அந்த அறையை சுற்றி சுற்றி ஏதாவது குறிப்பு கிடைக்குமா என்று தேடினான் தினேஷ். அப்போது கீழே கிடந்த ஒரு மாத்திரையை எடுத்தான்.அது தூக்க மாத்திரை என்று எண்ணி, தீபக் தூங்குவதற்கென்று எடுத்த வழிமுறையையே தினேஷ்-ம் பின்பற்றினான். டைரியில் உள்ள குறிப்புகளை பின்பற்றி தினேஷ்-ம் லூசிட் ட்ரீமிங் செய்ய ஆரம்பித்தான். தினேஷ் சாப்பிட்ட தூக்க மாத்திரை வேலை செய்ய ஆரம்பிக்கவே கண்கள் மெல்லமாய் மூட ஆரம்பித்தன. கண் விழித்து பார்த்த தினேஷ் அவன் தங்கி இருக்கும் அறையிலேயே இருப்பதை உணர்ந்தான். லூசிட் ட்ரீமிங் வேலைக்கு ஆகவில்லை என்று எண்ணியபோது தினேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த அதிர்ச்சி என்னவென்றால், பக்கத்தில் தன்னுடன் படுத்திருந்த தீபக்கை காணவில்லை. மேலும், அங்கு இருந்த கடிகாரம் தலைகீழாக சுற்றுவதை நோக்கினான். அப்போதுதான் தான் கனவில் உள்ளோம் என்பதை உணர்ந்தான் தினேஷ்.
தற்போது, தானும் தீபக்கும் ஒரே கனவில்தான் உள்ளோம் என்பதை உணர்ந்தான். இருவரும் கனவில்தான் உள்ளோம் என்பதை அறிந்த தினேஷ் தான் இருக்கும் அறையில் இருந்த ஒரு மேஜையில் ஏதாவது குறிப்பு கிடைக்குமா என்று தேடினான். அப்போது மேஜையில் இருந்த ஒரு அறையில் இரண்டு டைரிகள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு டைரியானது நிஜ உலகில் தினேஷ் படித்த தீபக்கின் டைரி என்றும், மற்றொரு டைரி தீபக் கனவு உலகத்தில் எழுதிய டைரி என்பதை புரிந்து கொண்டான் தினேஷ். நிஜ உலகில் உள்ள டைரியை போலவே கனவு உலகத்தில் எழுதியிருந்த டைரியிலும் எதுவும் கோர்வையாக இல்லாததால் தினேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அவன் குழப்பமடைந்தான். திடீரென்று தினேஷிற்கு ஒரு யோசனை தோன்றியது. இரண்டு டைரியையும் ஒன்றாக வைத்து படித்து பார்த்தால் ஏதேனும் புரியுமா என்று யோசனை தோன்றியதால் இரண்டு டைரியையும் அருகில் வைத்து ஒரே சமயத்தில் படிக்க தொடங்கினான். நிஜ உலகில் இருந்த டைரியின் ஒரு பக்கத்தின் முடிவு கனவு உலகத்தில் இருந்த டைரியின் ஒரு பக்கத்தில் தொடங்கியது. அதனால் இரு டைரியின் பக்கங்களை ஒன்றின்பின் ஒன்றாக படிக்க தொடங்கினான். தினேஷ் படிக்க படிக்கத்தான் தனது நண்பன் தீபக் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டான் தினேஷ்.
டைரியில்……
டைரியை படித்து கொண்டிருக்கும்போது தினேஷ் அதிர்ச்சி அடைந்தான். ஏனெனில், நிஜ உலகத்தில் பெட்ரோல் பங்கிற்கு செல்ல தனக்கு லிப்ட் கொடுத்தவரை பற்றி கனவு உலகத்தில் உள்ள டைரியில் எழுதி இருந்தான் தீபக். தினேஷ் தொடர்ந்து டைரியை படிக்க ஆரம்பித்தான். காரில் வந்தவர் லிப்ட் கொடுக்க முன்வந்ததும், தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்ல வேண்டும் என்று விவரத்தை கூறினான் தீபக். சரி ஏறி கொள்ளுமாறு அவரும் கூறினார். நானும் சிறிய பதற்றத்துடன் ஏறிக்கொண்டேன். காரில் ஏறி அமர்ந்தவுடன் சிறு வினாடிகள் கழித்து இந்த இரவு வேளையில் பைக்கில் லிப்ட் கொடுப்பதே பெரிய விஷயம் ஆனால் நீங்களோ எனக்கு காரில் லிப்ட் கொடுத்து உதவி இருக்கிங்க. ரொம்ப நன்றி சார் என்று தீபக் கூறினான். அதற்கு அவர் பரவாயில்லை என்று பதிலளித்தார். காரில் இருந்தவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். தனது பெயர் சூர்யா என்றும், தான் சொந்தமாக ஒரு கம்பெனி வைத்து தொழில் நடத்தி வருவதாகவும் கூறினார்.
அவரிடம், நானும் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு எனது அப்பாவின் விருப்பத்தின் பேரில் எனக்கு உடன்பாடில்லாமல் படித்து கொண்டிருக்கும் பெறியியல் படிப்பு பற்றியும், எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற எதிர்கால இலட்சியத்தையும் கூறி புலம்பினேன். அதற்கு சூர்யாவும் தனக்கும் தீபக்கை போலவே இலட்சியம் இருந்ததாகவும், ஆனால் அதற்கு அவர் பெற்றோர்கள் அனுமதிக்காததால், தானும் அவரது பெற்றோரின் ஆசையையும், வற்புறுத்தலையும் ஏற்று பொறியியல் துறைக்கு வந்தேன் என்று கூறினார். என்னை போலவே உங்களின் நிலைமையை பார்த்து உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.
ஒரு குறும்படத்திற்கான கதையை தயார் செய்யுங்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள். மேற்படி குறும்படத்திற்கு நான் தயாரிப்பாளராகவும், பண உதவியும் செய்கிறேன். அதை வைத்து உங்களின் கனவைப்பற்றி பெற்றோர்களிடம் உரையாடுங்கள். உங்கள் இலட்சியத்தை நிரூபியுங்கள் என்று கூறிவிட்டு தனது விசிட்டிங் கார்டை தீபக்கிடம் கொடுத்தார் சூர்யா. அதை வாங்கி முழுவதுமாய் படிக்கும் முன்பே பெட்ரோல் பங்க் வந்துவிட்டதால், தீபக் காரை ஓரமாக நிறுத்த சொல்லிவிட்டு, பெட்ரோல் பங்கிற்கு லிப்ட் கொடுக்க வந்தவரிடம், எல்லாவற்றிற்கும் நன்றி என்று வார்த்தைகளால் கூறாமல் கண்களாலேயே நன்றி தெரிவித்துவிட்டு காரை விட்டு இறங்கினான் தீபக்.
அன்றிலிருந்து தனது கனவிலேயே குறும்படத்திற்கு கதை எழுத தொடங்கினான் தீபக். முதன்முதலில் கதை எழுத தொடங்கும்பொழுது தீபக்கிற்கு எந்த ஒரு யோசனையும் வரவில்லை. சிறிய எரிச்சலுடன் எழுதி கொண்டிருந்த பேப்பரை கசக்கி கீழே போட்டுவிட்டு தலையில் கை வைத்து யோசித்தான் தீபக். அப்போது எதிரில் உள்ள சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த இயக்குநர் மணிரத்னத்தின் வரிகளை கவனித்தான்.
“படம் இயக்குவது ஒரு போர்க்களம். நீங்கள் நேரம் பணம் மற்றும் காலத்துடன் போராட வேண்டும்”
என்ற வரிகள் தீபக்கை தூண்டியது. திரும்பவும் கதை எழுத யோசித்தான். இவையெல்லாம் தான் தூக்க மாத்திரை போட்டு கொண்டு கனவில் எழுதுவதாக தீபக் குறிப்பிட்டு இடுந்தான். ஒரு வழியாக கனவிலேயே கதையை எழுதி முடித்தான் தீபக். முதற்படியாக, கேமராமேனை போன்மூலம் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு கதை உள்ளதாகவும் அதற்கு ஒளிப்பதிவு செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்பதை விசாரித்தான். அதை தொடர்ந்து இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோரை தொடர்பு கொண்டு விசாரித்தான். அனைவரும், குறும்படத்திற்கு செலவாகக்கூடிய தொகையை நிர்ணயித்து கூறினார்கள். அதன்பிறகு, தீபக் தான் இயக்கும் குறும்படத்திற்கு மொத்தமாக எவ்வளவு செலவாகும் என்று தோராயமாக கணக்கிட்டான். பின் தனக்கு உதவி செய்வதாக கூறிய தனக்கு காரில் லிப்ட் கொடுத்து உதவிய கார் நண்பரான சூர்யாவிற்கு போன் செய்தான். சூர்யா போன்காலை எடுத்ததும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, குறும்படம் எடுப்பதற்கு தான் யார் யாரை விசாரித்தேன் என்றும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்றும் சூர்யாவிடம் கூறினான் தீபக். அதற்கு சூரியா, தனது தொழில் வர்க்கத்தில் எதிர்பாராத இழப்பு ஏற்பட்டதால் இவ்வளவு பெரிய தொகையை தற்போது தன்னால் கொடுக்க இயலாது என்றும், வேண்டுமென்றால் நீங்கள் கூறிய தொகையில் 75% சதவிகிதத்தை நான் தருகிறேன் என்று கூறிவிட்டு தனக்கு அவசரமாக மீட்டிங் உள்ளதாக கூறி போன்காலை துண்டித்து விட்டார் சூர்யா.
என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை எனது பெற்றோர் எனக்கு கொடுக்கவில்லை, அதனால் அவர்கள் வற்புறுத்தலின் பேரில் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். தற்போது எனது கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் 25 சதவீத தொகை இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்வதற்காக சமரசமாக போக வேண்டியது உள்ளது என மனதில் வருந்திய படி தன் அறையினுள் நுழைந்தான். இரண்டு டைரியும் ஒப்பிட்டு பார்த்ததில் இவையெல்லாம் தீபக்கின் நிஜ வாழ்க்கையில் நடந்தது என புரிந்துகொண்டான் தினேஷ். குறும்படத்திற்கான வேலையை ஆரம்பித்து அதை செய்து கொண்டிருந்ததால் செமஸ்டர் தேர்வுகளை கோட்டை விட்டான் தீபக். தேர்வு முடிவுகள் வந்தது, தீபக் அனைத்து பேப்பரிலும் அரியர் வைத்திருப்பதை அறிந்தவுடன் தீபக்கின் பெற்றோர் சரமாரியாக நிஜ உலகில் தீபக்கை திட்டி தீர்த்தனர்.தீபக் தனக்கு உதவி செய்வதாக கூறிய சூர்யா பேசியது ஒருபக்கம் சோகமா இருக்க மறுபக்கம் தன் பெற்றோர் திட்டியது எரிச்சலாக இருந்தது அந்த சோகத்துடனும் எரிச்சலுடனும் தன் இலட்சிய குறும்படத்தை இயக்க முடியாது என்ற வருத்தத்துடனும் நிஜ உலகில் பயந்து பயந்து வாழ்வதைவிட கனவுலகில் நிம்மதியாக தனக்கு பிடித்த படி வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தான் வாங்கிவந்து வைத்திருந்த தூக்க மாத்திரையின் மீதமிருந்த நான்கு மாத்திரைகளையும் அவசரஅவசரமாக போட்டுவிட்டு கனவிற்கு சென்றான் தீபக். இதை படித்தவுடன் அதனால்தான் தான் எழுதிய போது தீபக் எழுந்திரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டான் தினேஷ். அவசர அவசரமாக மாத்திரை எடுத்ததில் கைதவறி ஒரு மாத்திரை மட்டும் கீழே விழுந்துவிட்டது. எனவே தீபக் நான்கு மாத்திரை போடாமல் மூன்று மாத்திரை மட்டுமே போட்டிருப்பான் என்று நினைத்து தினேஷ் மீண்டும் படிக்கத் தொடங்கினான்.
கனவிற்கு வந்தவுடன் தான் காண்பது கனவு தானா என்ற குழப்பம் தீபக்கிற்கு ஏற்பட்டது. ஏனெனில் கனவு உலகிற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வேக வேகமாக மாத்திரை போட்டதால் லூசிட் ட்ரீமிங் செய்வதற்கான முறையை சரியாக பின்பற்றவில்லை தீபக். அதனால்தான் தான் காண்பது கனவுதான் என்று தீபக்கிற்கு தெரியவில்லை. அந்த வித்யாசம் தெரியாததால் நிஜ உலகம் என்று கனவு உலகத்தில் தற்கொலை செய்து கொண்டான் தீபக். இத்துடன் இரண்டு டைரியிலும் பக்கங்கள் முடிந்தன. கனவில் இறந்தால், அந்த அதிர்ச்சியில் நிஜ உலகில் எழுந்து விட வேண்டும்.
அப்படி எழவில்லை எனில் நிஜ உலகில் கோமாவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தீபக் தன் டைரியில் லூசி ட்ரீமிங் குறிப்புகளில் எழுதி இருந்தது தினேஷ் நினைவிற்கு வந்தது. ஒருவேளை தீபக் கோமாவில் உள்ளானோ? அப்படி இருந்தால் அவனை எப்படி எழுப்புவது? என்று குழப்பம் அடைந்தான் தினேஷ். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தினேஷ் தன்னை மறந்து தீபக்கின் கனவில் அயர்ந்து தூங்கினான். அப்போது திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்கவே பயம் கலந்த பதற்றத்துடனும் குழப்பத்துடனும் கதவை திறந்தான் தினேஷ்.
கதவைத் திறந்தவுடன் தினேஷிற்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஏனெனில் தீபக் கத்தியுடன் நிற்பதைக் கண்டான் தினேஷ். அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தீபக் தினேஷை கத்தியால் குத்தினான். குழப்பத்தில் அயர்ந்து தூங்கிய தினேஷ் திடுக்கென்று தீபக்கின் கனவு உலகில் எழுந்தான். அப்போது தினேஷிற்கு தான் கண்டது ஒரு கனவுதான் என்று தோன்றியது. தான் தீபக்கின் கனவில் இருப்பதை தீபக் உணர தொடங்கி விட்டான் என்பதை தினேஷ் உணர்ந்தான். ஏனெனில் தன் கனவுலகில் யாரோ நுழைந்து விட்டார்கள் என்று தீபக்கின் உள் நினைவு தீபக்கை கத்தியால் தன்னை குத்த அனுப்பியுள்ளது என்று தினேஷ் அறிந்தான் எனவே தீபக்கை எழுப்ப இதுதான் சரியான தருணம், ஏனெனில் தீபக் மூன்று மாத்திரைகள் மட்டும் போட்டு இருப்பது தினேஷிற்கு நினைவு வந்தது. மூன்று மாத்திரைகளின் திறன் தற்போது குறைந்து இருக்கும் ஏதாவது அதிர்ச்சியான நிகழ்வு நடந்தால் தீபக் எழுந்து விடுவான் என்று தினேஷ் நினைத்தான்.
கனவில் தன் நண்பன் இறப்பதும் ஒரு அதிர்ச்சியான நிகழ்வுதான் என்று யோசித்தான் தினேஷ். எனவே தீபக்கின் கனவு உலகில் தினேஷ் தற்கொலை செய்து கொண்டால் அந்த அதிர்ச்சியில் தன் நண்பன் எழுந்து விடுவான் என்று தன் நண்பனுக்காக தீபக்கின் கனவு உலகில் தற்கொலை செய்து கொண்டான் தினேஷ். உடனே நிஜ வாழ்க்கையில் இருவரும் திடுக்கிட்டு விழித்து எழுந்தனர். எழுந்தவுடன் தினேஷ் தீபத்தை பளாரென்று ஒரு அறை அறைந்தான் அடைந்தவுடன்
"கனவு நினைவாக வேண்டும்
நினைவு நிஜமாக வேண்டும்
கனவால் வாடாதே நினைவால் மலராது
நிஜத்தை நோக்கி ஓடு
முயன்றால் நிஜமாக்கலாம்"
என்ற வரிகளோடு படத்தை முடிக்கிறோம் சார் என்று சூர்யாவிடம் கூறினான் தீபக். சூர்யாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சூர்யா அதை என்னவென்று கேட்டார். பிறகு தான் உடனே வருவதாக தொலைபேசியில் கூறிவிட்டு தீபக்கிடம் நாளை உங்களிடம் பேசுவதாக கூறி விட்டு உடனே அங்கிருந்து விடைபெற்றார் சூர்யா. நாளை என்ன சொல்வார் என்று ஒருவித குழப்பத்துடனும், ஒருவேளை ஒப்புக்கொண்டால் நாளை இந்த துறையில் "நான் பிழைப்பேனோ" என்று அங்கிருந்து புத்துணர்ச்சியுடன் நடை போட்டான் தீபக்.