- Messages
- 79
- Reaction score
- 61
- Points
- 18
11
எல்லாம் கடவுள் கணக்குப்படி செவ்வனே நடந்தேறி விட்டது. கனகமும் சதாசிவமும் ரொம்பவும் சந்தோஷமடைந்தனர். காரணம் அவர்களின் அன்பு நிறைந்த மனம்தான். தங்கள் முதலாளியை கவனிக்க யாரும் இல்லையே, அனாதை போல் தனியாக இங்கு வந்து ஓய்வெடுக்கும் அவரை பார்க்க இருவருக்கும், எத்தனை பணம் இருந்து என்ன? வீட்டில் விளக்கேற்ற பெண்ணில்லையே என்று பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இப்போது அவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. கனகம் பம்பரமாய் சுழன்று எல்லாம் செய்தாள். ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்று பால் பழம் கொடுத்து மதியம் வடை, பாயசத்துடன் விருந்து சமைத்து என்று சகலமும் செய்தார் எல்லாவற்றையும் இயந்திரமாய் செய்தாள் ரக்ஷிதா
அவளின் மனதில் இருந்ததெல்லாம் ஒன்றுதான் தூங்கிக்கொண்டிருக்கும் தன்வன்யா எழுந்து விட்டால் அவளுக்கு நடந்ததை எப்படி புரிய வைப்பது...அந்த பிஞ்சு மனம் இதை எப்படி ஏற்கும் ?
மாத்திரையின் வீரியத்தால் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள் தன்வன்யா
"தனுவை எழுப்பி சாதம் ஊட்டனும் மா----- காலையில் பால் குடிச்சதோட சரி...." என்ற கனகம் தனுவை எழுப்பியும் விட்டார்.
தூக்க கலகத்தில் விழித்த குழந்தை "அம்மா" என்று ரக்ஷிதாவின் மடியில் சாய்ந்தது.... கண்கள் தாமாக கலங்கியது ரக்ஷிதாவிற்கு
"அட நீ ஏன் கண்ணு அழுவுற எல்லாம் சரியாகிடும், தனும்மா......எழுந்திரி - சாப்பிடலாம். பாட்டி உனக்கு பாயசம் எல்லாம் செய்திருக்கேன்"
"ஐ....பாயசமா?"
"ம்......வா----வா..." தனுவை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டத்தொடங்கி விட்டார் கனகம்.
"கடவுளே! என் வாழ்வில் நானே நினைக்காத பலதும் நடக்கிறது. எல்லாவற்றிற்கும் நீ தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு வகையில் அந்த எம்.டி.போன்ற நரிகள் வாழும் இந்த உலகில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் நின்றால் அழிவது நிச்சயம் ஆனால் அதற்காக அந்த கிசுகிசுவை உண்மையாக்கியது எப்படி நியாயமாகும். ஏன் இதை பற்றி கிருஷ்ணகாந்த் யோசிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருக்கு பெண் கொடுக்க பல திரைபட பிரபலங்களும் பணக்காரர்களும் காத்திருக்க இவர் என் பெயர் கெட்டு விடக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ஏன் ஏற்றுகொள்ள வேண்டும்? இது தான் விதி என்பதா? என் துரதிர்ஷ்டம்....அது தான் அண்ணி அடிக்கடி கூறும் தரித்திரம். என்னிடம் சில முறை பேசியதற்கே கிருஷ்ணகாந்தையும் பிடித்து விட்டதா?" தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவளுக்கு.
அப்போது தனுவின் தளிர் கைகள் அவள் கழுத்தை சுற்றி வளைத்திருந்தது.
"அம்மா!!!" என்று முதுகில் சாய்ந்த குழந்தையை இழுத்து கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் ரக்ஷிதா.
,"அடடா...என்ன ரக்ஷிதா இது ..." என்ற கிருஷ்ணகாந்தின் குரல் அவள் அழுகையை நிறுத்தியது.
"தனு இங்க வா!" விரித்த அவனுடைய கைகளில் அடைக்கலமானாள் தன்வன்யா
"அம்மாவை ஏன்டா செல்லம் அழ வெச்ச!"
"நானா...இல்ல அங்கிள் அம்மா என்னை பார்த்ததுமே அழறாங்க"
"உனக்கு தான் தெரியுமே உன் அம்மா ஒரு அழுமூஞ்சி என்று" தனுவின் காதுகளில் ரகசியமாய் பேசினான்.
குழந்தை பளீர் என சிரித்தது.
"கரெக்ட் அங்கிள் ....." என்றவள் உடனே ரக்ஷிதாவிடம் விரைந்து
"மம்மி......இந்த புது செயின் எப்போ வாங்கினீங்க" திருமாங்கல்யத்தை எடுத்துக்காட்டிய தன்வன்யாவிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் மெளனித்தாள் ரக்ஷிதா
"சொல்லுங்க மம்மி......" ரக்ஷிதாவின் தோள் பற்றி குலுக்கியது குழந்தை
"நான் சொல்கிறேன் தனும்மா இங்க.....வா" கிருஷ்ணகாந்திடம் ஓடியது குழந்தை
"தனு குட்டி ரொம்ப புத்திசாலி பாப்பா தானே. அங்கிள் சொல்வதை நல்லா கேட்பியாம். அம்மாவுக்கு நான் தான் இந்த செயினை வாங்கிக் கொடுத்தேன்.நல்லாயிருக்கா?"
"சூப்பரா இருக்கு அங்கிள் "
"தட்ஸ் மை கேள்.ஓ.கே இப்போ நான் கேட்பதற்கு பதில் சொல், ஸ்கூல்ல உன்னுடைய ஃபிரெண்ட் ரம்யாவின் அப்பா என்ன செய்கிறார்?"
அவளோட அப்பா பிரொபசர் தெரியுமா, ரொம்ப பெரிய கிளாஸ் அக்கா அண்ணாக்கு பாடம் எடுப்பாராம்"
"குட் .....அப்புறம் உன் ஃபிரண்டு ராமுவுடைய அப்பா?
"அவர் எங்கள் ஸ்கூல்லயே கார்டனரா இருக்கார்".
அப்போ தனு பாப்பாவோட அப்பா?"
அவன் கேள்வியில் குழம்பியது குழந்தை, ரக்ஷிதாவும் தான்.
“அ... அப்பா ....போட்டோல .....தான் இருப்பாங்க"
"அது நேத்து வரைக்கும். பழைய அப்பா,இப்போ தனு குட்டி கூட விளையாட, ஸ்கூல் கூட்டி போக, நிறைய சாக்லேட் வாங்கித்தர ஒரு புது அப்பா வந்தாச்சு"
"ஐய் நெஜமாவா? புது அப்பாவா? அது யாரு? சீக்கிரம் சொல்லுங்க"
"அது...அது...சொல்லட்டுமா?" வேண்டுமென்றே இழுத்தான்.
"அய்யோ சீக்கிரம் சொல்லுங்க அங்கிள்"
"ஓ.கே....ஓகே... இந்த அழகான க்யூட் லிட்டில் ஏஞ்சல்லோட அப்பா இனிமேல் நான் தான்"
"எ....என்ன!!! நீங்களா?" விழிவிரித்து தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தியது குழந்தை.
"ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா?"
"இல்லை இல்லை ரொம்ப பிடிக்கும். ஜாலி எனக்கு. இனிமே யாரும், உனக்கு அப்பா இல்லைன்னு சொல்லமாட்டாங்க. அப்புறம் அந்த மைதிலி அத்தை, அப்பனை முழுங்குனவன்னு திட்டமாட்டாங்க, அப்படித்தானே அங்கிள்"
"ஆ.. --- ஆமாம் அப்படித்தான், ஆனால் நீ இன்னமும் அங்கிள்ன்னுதானே கூப்பிடற?"
"சாரி .....சாரி, அங்கிள் இல்லை, இப்போ தான் நீங்க அப்பா ஆகிட்டீங்களே, சரி அப்பா இனிமே நீங்க தினமும் ஸ்கூல்ல விடுவீங்களா? சண்டேல பார்க் கூட்டிட்டு போவீங்களா? கடைக்கு கூட்டிப் போய் நிறைய டாய்ஸ் வாங்கி தருவீங்களா?" பேசிக்கொண்டே இருந்த தன்வன்யாவை அதட்டினாள் ரக்ஷிதா.
"தனு...என்ன இது ---- போதும் இப்படி வா....!!"
"ஏன் மம்மி இன்னிக்கு தான் எனக்கு அப்பா கிடைச்சிருக்காங்க இனிமே நான் அப்பா செல்லம் தான்"
"போதும் நிறுத்து "அவளின் இயலாமையும் கோபமும் தனுவிடம் பாய்ந்தது. எங்கே அவள் தனுவை அடித்து விடுவாளோ என்று பயந்த கிருஷ்ணகாந்த்,
"சரி .....சரி.......நீ வெளியே கனகம் பாட்டியிடம் போ தனும்மா அப்பா இதோ வந்துடறேன்.
"ஓ.கே....அப்பா" அவன் கேட்காமலே அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடி மறைந்தாள் தன்வன்யா.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் அறை கதவை சாற்றிவிட்டு அவளருகில் வந்தமர்ந்தான்.
"உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் ரக்ஷிதா "
அவளின் மெளனத்தை சம்மதமாக ஏற்று தொடர்ந்தான்.
"நான் சொல்வதை நன்றாக கேள் ரக்ஷிதா தனு சின்ன குழந்தை நமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதனை குழந்தையிடம் காட்ட வேண்டாமே. நமக்குள் நடந்த இந்த திருமணம் திட்டமிட்டு நடந்ததல்ல. இதை ஒரு ஆக்சிடன்ட் என்று தான் சொல்ல வேண்டும். நான் உன் சம்மதம் கேட்காமல் செய்தது தவறுதான் ஆ.... ஆனால் அந்த சூழலில் எனக்கு வேறு வழியும் தெரியவில்லை" சிறு இடைவேளை விட்டு தொடர்ந்தான்."என்னுடைய இந்த முடிவிற்கு அது மட்டும் காரணமில்லை. முக்கியமான காரணம் தனுவுடைய எதிர்காலம். தெரிந்தோ தெரியாமலோ நம் இருவரின் பெயரும் இணைந்து பத்திரிக்கையில் வந்துவிட்டது. இதற்கு பிறகு தனுவின் எதிர்காலமும் அவளுடைய அடையாளமும் என்னவாக இருக்கும்? தவறான ஒரு அடையாளத்துடன் என் தனு வளர்வதை நான் விரும்பவில்லை. இந்த முடிவு முழுக்க முழுக்க தனுவிற்காக மட்டும்தான். ஏ..... ஏன்...தெரியுமா? இ... இந்த உலகிலேயே என்னிடம் தூய்மையான அன்பு வைத்த பிஞ்சு உள்ளம் அவளுடையது தான் "இப்படி பேசுகையில் அவன் கண்கள் லேசாக கலங்கியிருந்ததை ரக்ஷிதாவால் பார்க்க முடிந்தது. உடனே கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளுக்கிழுத்தவன் தொடர்ந்தான்.
"இங்கே பார் ரக்ஷிதா .... தனுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் இது நாள் வரை திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தது. ஆகவே உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் கனவுகள் உடைந்துவிட்டதாக நீ எண்ண வேண்டாம். நாம் இருவரும் தனுவுடைய எதிர்காலத்லைப் பற்றி யோசிப்போம். பாடுபடுவோம். இந்த திருமணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். வீண் மன சஞ்சலம் வேண்டாம் இந்த வீடு உன்னுடையது. இதில் எந்த வெட்கமோ ! ஒதுக்கமோ வேண்டாம். உனக்குப் பிடித்ததை நீ தாராளமாக செய்யலாம். நாம் தோழமையுடனும், சந்தோஷத்துடனும் தனுவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை காட்டுவோம்.ஏன் சொல்கிறேன் என்றால், ஆளுக்கொரு மூலையில் சுருண்டு கிடந்தால் அந்த பிஞ்சு மனம் பாதிக்கப்படும். அவளுக்கு ஒரு அழகான, ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம். இப்போது நான் பேசியவற்றை நன்றாக யோசித்துப் பார், முடிவு உன் கையில், நான் வருகிறேன்"
அவள் பதிலுக்கு காத்திராமல் கதவை திறந்தவன் அவள் புறம் திரும்பி "மறுபடி சொல்கிறேன். இது நம் தனுவிற்காக மட்டுமே "முடித்தவன் உடனே வெளியேறினான்
அன்புடன்
இந்திரா செல்வம்