Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 49

திறமையானவனை பெண்ணுக்கு பிடிக்கும். பாதுகாப்பானவன் அவள் மனதில் ஆழப்பதிவான். இவன் இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது என்கிற நம்பிக்கையை கொடுப்பவனிடம் அவள் சரணடைய தயங்குவதில்லை. சரணடைந்துவிட்டால் அவனை நம்பி எந்த எல்லைக்கும் செல்வாள். மிருதுளாவும் நம்பினாள்.

வெளிப்படையாக எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், அர்ஜுன் தன்னை தேடி வருவான் என்கிற எண்ணம் அவள் ஆழ்மனதில் இருந்தது. அவன் வந்து நின்றான். அவளுக்கு ஆதரவாக அதிகாரியிடம் நெஞ்சை நிமிர்த்தி முறைத்தான். அந்த ஒரு கணத்தில் எல்லாவற்றையும் மறந்து பூரித்தது அவள் மனம்.

அர்ஜுனை பார்க்கும் வரை மிருதுளாவிற்கு ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. குழப்பங்கள் இருந்தன. பயங்கள் இருந்தன. ஆனால் அவனை பார்த்த நொடியில் அனைத்தும் மறந்து போனது. அந்த அளவிற்கு அவள் மனதையும் அறிவையும் அவன் முழுமையாக ஆக்கிரமித்தான்.

இனி என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்கிற துணிவு பிறந்தது. விருட்டென்று எழுந்து அவனிடம் நெருங்கி அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

அவள் உடலில் மிச்சமிருந்த நடுக்கத்தை உணர்ந்த போது அவளை இங்கு வர விட்டிருக்கக் கூடாது என்று எண்ணினான் அர்ஜுன். தன் அலட்சியத்தை வெறுத்தான்.

“இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்” என்று அவர் சவால் விட்ட போது, “வெய்டிங்” என்று எள்ளலாக கூறிவிட்டு அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.

உடன் வந்த வழக்கறிஞருக்கு கண்ணசைவில் விடைகொடுத்துவிட்டு, மிருதுளாவோடு காரில் ஏறி கதவை அடைத்தவன், ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி அசைவற்று அமர்ந்திருந்தான்.

இந்த விசாரணையின் பின்னணி அவனுக்கு தெரியும். மிருதுளாவின் மீதான சந்தேகத்தினால் அவள் இங்கு அழைத்து வரப்படவில்லை. இது அவனை சிக்க வைக்கும் முயற்சி. நிச்சயம் அவனை பற்றிய கேள்விகள் எழுந்திருக்கும். மிருதுளா உண்மையை பேசியிருந்தால் அவன் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பான். அவள் தனக்கு எதிராக பேசவில்லை என்பதில் அவனுக்கு நெகிழ்ச்சிதான்.. ஆனால் அதுவே மனதை கனமாய் அழுத்தவும் செய்தது.

மிருதுளாவின் பார்வை அவனிடமே இருந்தது. பாறையில் செதுக்கிய சிற்பம் போலிருந்தது அவனுடைய பக்கவாட்டுத் தோற்றம். இறுகிய தாடையும், கழுத்தில் புடைத்திருந்த நரம்பும் அவனுடைய டென்ஷனை எடுத்துக் கூறியது. சில நிமிடங்கள் அப்படி இறுக்கமாக அமர்ந்திருந்தவன், பிறகு தானாகவே அவள் பக்கம் திரும்பினான்.

“ஆர் யு ஓகே?” - குரலிலும் முகத்திலும் எந்த உணர்வும் இல்லை. ஆனால் கண்களில் சின்ன கலக்கம் தெரிந்தது. அது தன் மீதான அக்கறை என்பதில் அவளுக்கு ஆனந்தமே. ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அவளால் அனுபவிக்க முடியவில்லை. உள்ளே ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்தாலும், அந்த கவலை மனதை புழுவாக அரித்துக் கொண்டிருந்தது.

“அர்ஜுன்..” - மேலே பேச தயங்கினாள். அவன் அவள் தொடர்வதற்காக காத்திருந்தான்.

“நீங்க.. ப்ரொஃபஸரை ஒன்னும் பண்ணிடலல்ல?” - குரலில் சின்ன நடுக்கம் தெரிந்தது.

அழுந்த மூடிய உதடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்தன அவன் உணர்வுகள். கண்களில் வெறுமையை தேக்கி ஓரிரு நிமிடங்கள் அவளை வெறித்து நோக்கியவன் பிறகு எதுவுமே சொல்லாமல் காரை கிளப்பினான்.

மிருதுளாவின் சஞ்சலப்பட்டிருந்த மனம் அன்று இரவு அவளை உறங்கவிடவில்லை. கேள்விகள் உள்ளத்தை வண்டாய் குடைந்தன. எழுந்து வெளியே வந்தாள். விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. முதல் நாளை போலவே அர்ஜுனின் படுக்கை காலியாக இருந்தது.

‘இன்றும் கராஜிற்கு சென்றுவிட்டானா!’ - ஒருவித திடுக்கிடலுடன் அவள் எண்ணிப்பார்க்கும் போதே, வாசலில் அவளுக்கு முதுகுகாட்டி, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி அவன் நின்றுக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

உடனே அவனிடம் சென்று, “இங்க என்ன செய்றீங்க?” என்றாள் மெல்ல.

அவள் வந்ததையே உணராதவன் போல் அசையாமல் நின்றவன் சில நொடிகளுக்கு பிறகு, “கனெக்டிங் டாட்ஸ்” என்றான் ஆழ்ந்த குரலில்.

நட்சத்திரங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி ஏதாவது ஒரு உருவத்தை கண்டுபிடிப்பது போல் ஏதேதோ சம்பவங்களை தொடர்புபடுத்தி எதற்கோ விடை தேடுகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவனோடு பழகிய சில மாதங்களில் அந்த அளவுக்கேனும் அவனை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்திருந்தது.

சற்று நேரம் அவனையுடைய சிந்தனையில் குறுக்கிடாமல் அமைதியாக நின்றவள், பிறகு “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே?” என்றாள்.

அவள் எதை பற்றி பேசுகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. தலையை திருப்பி எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், தன் கைகளை முகத்துக்கு நேராக உயர்த்திப் பார்த்து, “இந்த கைல அவரோட இரத்தம் இல்ல” என்றான் உள்ளடங்கிய குரலில்.

சட்டென்று பிறந்த விடுதலை உணர்வுடன் ஆசுவாசமாக மூச்சுக்காற்றை வெளியேற்றியவள், அவன் கைகளைப் பிடித்து அதில் முகம் புதைத்து, “எனக்கு தெரியும். நீங்க எதுவும் பண்ணியிருக்க மாட்டீங்க” என்றாள்.

கைகளில் ஈரத்தை உணர்ந்த அர்ஜுனின் உடல் விறைத்து நிமிர்ந்தது. மெல்ல கைகளை அவளிடமிருந்து உருவிக் கொண்டான். அவன் கைகளில் ப்ரொஃபஸரின் இரத்தம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த கைகள் இரத்தம் தோய்ந்த கைகள் தானே? - மனம் சஞ்சலப்பட்டது.

“போ.. போய் தூங்கு” - அவள் முகத்தை பார்க்காமல் கூறினான்.

உணர்ச்சிவசத்தில் இருந்த மிருதுளாவும் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணரவில்லை. “நீங்களும் வாங்க. ரொம்ப டைம் ஆச்சு” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி. அழுகையாலும் உறக்கமின்மையாலும் அவள் கண்கள் சிவந்துவிட்டது.

தனக்கு உறக்கம் வரவில்லை என்று கூறி அவளை உள்ளே அனுப்பிவிட்டு சூழ்ந்திருந்த இருளில் தனித்து நின்றான் அர்ஜுன்.

அவனுடைய கடந்தகாலமும் எதிர்காலமும் ஏற்றுக்கொள்ளாத நிகழ்காலம் அவள். இருள் சூழ்ந்த தனிமை காடாக இருந்த அவன் உலகத்தில் அழகிய மின்மினி பூவாய் ஒளிர்பவள். அவளை பிரியும் நிலை எண்ணிப் பார்க்கவே முடியாத சூனியம். ஆனால் அந்த சூனியம் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அர்ஜுன்.

கடந்த பத்து நாட்களாக வடநாட்டின் முக்கிய நகரங்களில் சில முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு காரணம்.. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. காவல்துறையும் அதைத்தான் பதிவு செய்தது. மக்களும் அதைத்தான் நம்பினார்கள். ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? - அர்ஜுனுக்கு சந்தேகம் வந்தது. உல்ஃப் நாட்டைவிட்டு செல்லவில்லை என்று நம்பினான். ப்ளூ ஸ்டாரை தொடர்பு கொண்டான். விபரம் கேட்டான். அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் எதிர்பாராமல் இன்னொரு செய்தி அவன் செவிக்கு வந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கோர்த்தாவின் ஆட்கள். இது பெரிய அதிர்ச்சி அவனுக்கு.

கோர்த்தாவின் அடுத்த தலைவன் அவன்தான் என்பது ராகேஷ் சுக்லாவின் வாய்மொழி. பெருந்தலைகள் அனைவருமே அதை ஆமோதித்தார்கள். ஆனால் கோர்த்தாவில் உள்ள முக்கிய நபர்களையே அவனுக்கு தெரிந்திருக்கவில்லையே! அப்படியென்றால் எத்தனை மேலோட்டமாக அங்கு இருக்கிறான்! அல்லது அப்படி இருக்க வைக்கப்பட்டிருக்கிறான்! உண்மை தகித்தது. கொதித்துப் போனான்.

ராகேஷ் சுக்லாவின் இன்னொரு கபட முகத்தை கண்டு கொண்டவன் அவரிடமே பாய்ந்தான்.

“கோர்த்தா கடல் மாதிரி ஆழமானது அர்ஜுன். இங்க எனக்கே தெரியாதவங்ககூட எனக்காக வேலை பார்க்கறாங்க. எல்லாரையும் உனக்கு தெரிஞ்சிருக்கனும்னு அவசியம் இல்ல. கொலை செய்யப்பட்டவர்கள் நம்ம ஆளுங்க. உல்ஃப் இங்கதான் இருக்கான். அவனை பிடிக்க என்ன செய்யணுமோ செய்” என்று கூறி பேச்சை கத்தரித்தார். அவனுக்கு அடுத்த அசைன்மென்ட் வந்து சேர்ந்தது.

உல்ஃப் தான் இந்த கொலைகளை செய்கிறான் என்றால் அவனுக்கும் கோர்த்தா பிளாக் குழுவிற்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களில் முக்கியமான ஆள் அவன் கண் எதிரிலேயே இருக்கிறான். நூலை கட்டி பறக்கவிடும் பட்டம் போல் அவரை விட்டு வைத்திருந்தான். இப்போது நேரம் வந்துவிட்டது. தூக்கிவிட்டான்.

முப்பத்தியாறு மணி நேரம் ப்ரொஃபஸரை மயக்கத்திலேயே தன் வீட்டு கராஜில் வைத்திருந்தவன் இப்போதுதான் இருளில் பதுங்கி வந்த ஒரு கருப்பு காரின் டிக்கியை நிரப்பி அனுப்பினான். இனி ப்ளூ ஸ்டார் பார்த்துக்கொள்வார். விஷயத்தை மட்டும் வாங்கி அவனுக்கு அனுப்புவார்.

இது ஒன்றும் பெரிய அசைன்மென்ட் அல்ல. நகத்தை கடித்து துப்புவது போல் அசால்ட்டாக செய்து முடிக்கக் கூடியது. ஆனால் இதில் மிருதுளா இடையிட்டுவிட்டாள். அவரை கடத்தும் நாள் அன்று அவர் மிருதுளாவிற்கு போன் செய்யவில்லை என்றால், அவள் அங்கு வந்திருக்கவில்லை என்றால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது. இப்போது காவல் விசாரணையை அவள் சந்திக்கும்படி ஆகிவிட்டது. அது அவனுக்கு பெரிய மன உளைச்சல். அதுமட்டும் அல்ல..

அவள் அவனை பாதுகாக்க முயன்றிருக்கிறாள்! அது சாதாரண செயல் அல்ல. உண்மையை பேசவைக்க எவ்வளவு அழுத்தம் கொடுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும். அதுவும் மிருதுளா போன்ற பெண்களை பார்வையாலேயே நிலைகுலைய செய்துவிடுவார்கள். அப்படி இருந்தும் அவள் அழுத்தமாக இருந்திருக்கிறாள் என்றால், அவளுடைய அன்பு ஆழமானது. அவனுக்காக எதையும் செய்ய கூடியது.

இதைத்தான் அவன் எதிர்பார்த்தான். திட்டமிட்டுத்தான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தான். ஆனால் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டாமோ என்று குழப்பமாக இருந்தது. இந்த உண்மையெல்லாம் ஒரு நாள் அவளுக்கு தெரியவரும். இதுமட்டும் அல்ல.. இன்னும் அவனுக்குள் மறைந்திருக்கும் அத்தனை உண்மைகளும் பெரும் சீற்றத்துடன் வெளிப்படும். அவற்றையெல்லாம் அவள் தாங்குவாளா? தாங்கி அவனோடு இணைந்திருப்பாளா? – எண்ணி பார்க்கவே அச்சமாக இருந்தது. சிந்தனையோடு வெகு நேரம் வெளியே நின்றுக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தான்.

கட்டிலில் கால்களை மடக்கி சுருண்டு படுத்திருந்தாள் மிருதுளா. அவளை பாக்கும் போதே அவன் மனம் கனிந்தது. கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டு அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்துவிட்டான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 50

அன்று காலை கண்விழித்ததுமே அவள் மனம் அவனை தேடியது. அவசரமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, படுக்கையறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். சமையலறையில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். பூனை போல் மெல்ல நடந்துச் சென்று, ஒரு பக்க தோளை தட்டிவிட்டு மறுபக்கம் அவன் முகத்தை பார்த்து பளீரென்று சிரித்தாள்.

“குட் மார்னிங்” - அவனும் மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்றான்.

“நைட் ரொம்ப நேரம் தூங்கலையே! எப்போ வந்து படுத்தீங்க?” - சமையல் மேடையில் தாவியேறி அமர்ந்தபடி கேட்டாள்.

அவள் கையில் காபி கப்பை கொடுத்தவன் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், “டிபன் என்ன பண்ணலாம்? பிரெட் ஆம்லெட் ஓகேவா?” என்றான்.

அவன் இரவெல்லாம் உறங்கவே இல்லை என்பது அவளுக்கு புரிந்தது. சட்டென்று முகம் வாடியது. அவளுடைய வருத்தம் அவன் மனதை இதமாய் வருடியது. மலர துடிக்கும் புன்னகையை உதட்டில் அடக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி ஒற்றினான். இமைகள் தானாய் மூடிக் கொள்ள நாசியில் அவளுடைய நறுமணத்தையும், மனதில் அக்கணத்தின் அற்புத உணர்வையும் ஏற்றிக் கொண்டு கண்விழித்து, “ஐம் ஆல்ரைட் ஸ்வீட்டி” என்றான் குழைவாக. அந்த கணத்தில் அவள் உலகம் வெகுவாய் சுருங்கிவிட்டதாய் தோன்றியது. அவனுக்கு மட்டுமே அவள் உலகத்தில் இடமிருந்தது.

இனிய உணர்வை மனதில் தாங்கியபடி இருவரும் இணைந்து காலை வேலைகளை முடித்தார்கள். மிருதுளா கல்லூரிக்கு தயாரானாள். வழக்கம் போல் அவனே அவளை அழைத்துச் சென்றான். கல்லூரி பார்க்கிங்கில் அவள் காரிலிருந்து இறங்கிய போது, “இங்கதான் இருப்பேன்..” என்றான் அர்ஜுன்.

முதல் நாள் அவன் அங்கே இல்லாததால் இன்று அவள் பயப்படுவாளோ என்கிற அக்கறையோடு அவன் கூறியது அவளுக்கு பிடித்திருந்தது.

“ஐ நோ” - அவன் கையை அழுத்திப் பிடித்து தன் நம்பிக்கையை அவனுக்கு உணர்த்திவிட்டு கீழே இறங்கி வகுப்பறையை நோக்கி நடந்தாள்.

சில மணி நேரங்கள் கூட கழிந்திருக்காது. மீண்டும் பரபரப்புடன் அர்ஜுனை தேடி ஓடிவந்தாள். தூரத்தில் அவளை பார்த்ததுமே விஷயம் ஏதோ முக்கியமானது என்பதை புரிந்துக்கொண்டவன் அடியை எட்டிப்போட்டு அவளை நோக்கி நடந்தான்.

“என்ன ஆச்சு?”

“ஐ காட் எ கால்”

“யார் கிட்டேருந்து”

“அம்மா”

“வாட்!”

“ப்ராமிஸ்.. எனக்கும் நம்ப முடியலதான்.. ஆனா உண்மை.. நானே பேசினேன்.”

“என்ன சொன்னங்க?”

“ரொம்ப அவசரமா பேசினாங்க. என்னை உடனே இந்த அட்ரஸுக்கு வர சொன்னாங்க” - ஒரு பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

“சரி வா போகலாம்” - பேப்பரை வாங்கிப் பார்த்தவன் உடனடியாக புறப்பட எத்தனித்தான்.

“அர்ஜுன்” - அவள் தயங்கினாள்.

“என்ன?” - புருவம் சுருக்கினான்.

“தனியா வர சொன்னாங்க”

“ஓ!” - அவன் முகம் மாறியது.

“ஏதோ பிரச்சனையில் இருக்காங்கன்னு நினைக்கிறேன்” - சமாதானம் செய்ய முயன்றாள்.

“நீ போய் காப்பாத்த போறியா?” - வெடுவெடுத்தான். மிருதுளா பேச்சிழந்தாள்.

“உனக்கே லைப் த்ரெட் இருக்கு. இது உனக்கு வெட்டின குழியா கூட இருக்கலாம். நீயா போய் விழறேன்னு சொல்றியா? உன்ன அனுப்பி வச்சுட்டு, நா கைய கட்டிக்கிட்டு நிக்கணுமா? வாட் யு திங் அபௌட் மீ.. ம்ம்ம்?” - பற்கள் நறநறக்க அடிக்குரலில் சீறினான்.

“அம்மாவே சொன்னாங்க அர்ஜுன்”

“யாராவது அவங்கள அப்படி பேச வச்சிருக்கலாம்”

“ஐயோ!”

“எஸ்.. அவங்க கடத்தப்பட்டிருக்கலாம். சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம். உன்ன கூப்பிட சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்.”

“அர்ஜுன்!” - பயந்துவிட்டாள் மிருதுளா.

“இதெல்லாம் என்னோட கெஸ்சிங் தான். ஆனா இதெல்லாம் நடந்திருந்தா ஐ ஒன்லி கேன் ஹெல்ப் யு.. அண்ட் யுவர் மாம்.. ஒரு வேளை அப்படி எதுவும் நடக்கலைன்னா, உன்ன உங்க அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டு நா கிளம்பிடறேன். என்ன பிரச்சனை இதுல?” - பிசிறுதட்டாமல் அறிவுறுத்தினான். அதுதான் சரியென்று அவளுக்கும் தோன்றியது.

“யு ஆர் ரைட் அர்ஜுன். உடனே கிளம்பலாம்” - பதட்டத்துடன் அவனை அவசரப்படுத்தினாள். இருவரும் ஏறிக்கொள்ள அதிகபட்ச வேகத்தில் பறந்தது அர்ஜுனின் கார்.

மிருதுளா குறிப்பிட்ட முகவரியில் இருந்த ஊர் அனந்த்பூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. முக்கால் மணிநேரத்தில் இலக்கை அடைந்துவிட்டார்கள். அது ஒரு சிறு நகரம்.. ஓரளவுக்கு மக்கள் புழக்கம் இருக்கும் பகுதியில்தான் அந்த முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக பெரிய மெக்கானிக் ஷெட்டிற்கு பின்னால் முளைத்திருந்த ஒரு புது குடியிருப்பில் ஆங்காங்கே சில வீடுகள் இருப்பதை கண்டுபிடித்து அந்த ஏரியாவிற்குள் நுழைந்து, வீட்டு எண்ணை கண்டுபிடித்து, வாசலில் நடுநாயமாக காரை கொண்டுச் சென்று நிறுத்தினார்கள்.

காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே ஜன்னல் திரைச்சீலையின் வழியே இரண்டு உருவங்கள் தெரிவதை கவனித்தாள் மிருதுளா. ஒரு பெண், ஒரு ஆண்.. அவள் கவனம் கூர்மையானது. உள்ளே பரபரப்பு தெரிந்தது. சிந்தனையுடன் கீழே இறங்க எத்தனித்தாள்.

“ஸ்டே..” - உத்தரவிட்டான் அர்ஜுன். அப்போதுதான் அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. கண்களில் வேட்டை மிருகத்தின் பளபளப்பும் முகமெல்லாம் தணலின் தகிப்புமாக மிரட்டினான்.

அவள் மேலே யோசிப்பதற்குள் “மிருதூ..” என்கிற அலறலுடன் வெளியே ஓடி வந்தாள் அவள் தாய்.

விருட்டென்று காரிலிருந்து இறங்கி குறுக்கே வந்து, கால்களை அகட்டி, இடுப்பில் கை வைத்து, மலை மனிதன் போல் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் அர்ஜுன்.

முதலில் திகைத்து பின்வாங்கிய அந்த பெண்மணி, பிறகு சுதாரித்துக் கொண்டு, “அர்ஜுன், என் பொண்ண விட்டுடு” என்றாள் பெண் புலியின் சீற்றத்துடன்.

கடகடவென்று சத்தமாக சிரித்தான் அவன். ஆக்ரோஷ சிரிப்பு.. அசுர சிரிப்பு..

மிருதுளா மிரட்சியுடன் காரிலிருந்து இறங்கினாள். தாய்க்கும் மகளுக்கும் குறுக்கே அகழியாய் விரிந்து நின்ற அந்த ஆணவக்காரன் உரத்தக் குரலில் பேசினான்.

“நீ வித்தைக்காரி ஷோபா.. ஆனா நா வித்தனுக்கும் வித்தன்.. விட்டுடுவேனா?”

‘ஷோபாவா! இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா!’ - மிருதுளா திகைத்து நின்றாள்.

மகளிடமிருந்த அதே திகைப்பும் மிரட்சியும் ஷோபாவிடமும் தெரிந்தது. ஏழு ஆண்டுகளாக எந்த எமனுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாளோ அந்த எமன் அவள் எதிரில். பாசக்கயிறை சுழற்றியபடி கர்ஜிக்கிறானே! மிரட்சியில்லாமல் போகுமா? அத்தனை மிரட்சியிலும் அவனுடைய பிரதான குறியாக தன் கணவனை கட்டாயப்படுத்தி பின்வாசல் வழியாக வெளியே தள்ளி கதவை அடைத்துவிட்டு அடிவயிறு தடதடக்க அவன் எதிரில் வந்து நின்றாள். அவள்தான் ஷோபா..

“மிருது.. வந்துடு.. என்கிட்ட வந்துடு..” – வறண்டு போன நாவை முயன்று பிரித்து மகளோடு பேசினாள்.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் மூளை மரத்துப்போய் நின்றுக் கொண்டிருந்த மிருதுளா, “அம்மா இது..” என்று ஏதோ விளக்கம் கூற முற்பட, அவளை இடைமறித்து அதட்டி, “வாடி இந்த பக்கம்” என்று கத்தினாள் தாய். அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது.

அப்போது கூட தாயின் பயம் தேவையற்றது என்றே எண்ணினாள் மிருதுளா. இருவரும் பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அதை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்பினாள்.

இருவரையும் சமாதானம் செய்ய அவளால் முடியாதா என்ன? எதிர்பாராமல் சந்தித்த அதிர்ச்சியில் இருவரும் கத்திக் கொள்கிறார்கள். இடையில் அவள் வந்தால் அனைத்தும் மாறிவிடப்போகிறது. - அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தாயை நோக்கி ஒரு அடியெடுத்து வைத்தாள் மிருதுளா.

“ஸ்டே.. ஸ்டில்.. ஹனி..” - இடையிட்ட அவன் குரலில் தேங்கினாள்.

“குட்” - பாராட்டினான் அர்ஜுன். அவன் குரலிலிருந்த குழைவிலும் அதற்கு மகள் கட்டுப்படும் விதத்திலும், வயிற்றுக்குள் ஐஸ் கட்டியை வைத்துக் கட்டியது போல் விதிர்விதிர்த்துப் போனாள் ஷோபா.

“அர்ஜுன்.. வேண்டாம்.. அவ சின்ன பொண்ணு. விட்டுடு” - எச்சரித்தாள்.

“சின்ன பொண்ணா!” - மிருதுளாவின் அருகே சென்று கீழிருந்து மேல் வரை மோப்பம் பிடித்தான்.

“அர்ஜுன்!” - கண்கள் சிவக்க கிறீச்சிட்டாள் அந்த தாய்.

“ரிலா..க்..ஸ் தோழி.. வி ஆர் ஃபிரண்ட்ஸ். நா என்ன பண்ணிடப் போறேன் உன் பொண்ண? வி லைக் ஈச் அதர்.. இல்ல ஹனி?” - மிருதுளாவை தோளோடு அணைத்து, அவள் முகத்திற்கு வெகு அருகே தன் முகத்தைக் கொண்டு சென்று புருவம் உயர்த்தினான்.

அவனுடைய செயலில் மிருதுளாவே சற்று முகம் சுளித்து பின்வாங்க முயன்றாள். அவன் பிடி இறுகியது.

“அர்ஜுன் ப்ளீஸ்” - மெல்லிய குரலில் அவனை கட்டுப்படுத்த முயன்றாள் மிருதுளா.

“ஹூ - ஆம் - ஐ - டு - யு?” - ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக உச்சரித்து, தீவிர பார்வையுடன் அவளை நோக்கினான்.

“யு நோ மீ வெரி வெல். காம் டௌன் ப்ளீஸ்..” - தாயின் காதில் விழாமல் முணுமுணுப்பாகக் கூறி அவனை சமாதானம் செய்துவிட முனைந்தாள்.

அவனிடம் மகள் காட்டும் நெருக்கத்தில் தவித்துப்போன தாய், “நோ.. மிருது.. வேண்டாம் டா.. வந்துடு அம்மாகிட்ட” என்று கெஞ்சினாள்.

“ஆன்சர் - மீ - டார்லிங்.. நான் யார் உனக்கு?” - அழுத்தம் திருத்தமாக பிடிவாதத்துடன் கேட்டான். அவள் மீது அவன் கொண்டிருந்த ஆளுமை தாயின் கெஞ்சலைக் கூட தள்ளி வைக்கும் அளவிற்கு தீவிரமாய் இருந்தது. அதன் பலன், அவள் பார்வை அர்ஜுனிடமே நிலைத்திருந்தது.

“ஹி இஸ் நாட் எ குட் மேன்..” - அலறினாள் ஷோபா. தாயின் பெருங்குரல் ஒரு பக்கம் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,

அவன் கேட்ட கேள்விக்கு, “மை லவ்” என்று நிதானமாக பதிலளித்தாள் மிருதுளா.

“அவன் பாவி.. நம்பாத..” - அழுதாள் தாய்.

“ஹாங்? காதுல விழா..” - வேண்டுமென்றே காதை குடைந்தான் அந்த கபடன்.

தாயின் அழுகை ஒரு பக்கம்.. அவனுடைய ருத்ராவதாரம் இன்னொரு பக்கம்.. மிருதுளா உடைந்தாள்.

“உன்ன கொன்னுடுவான்டி..” – “மை லவ்..” - தாயும் மகளும் ஒரே நேரத்தில் உறக்கக் கத்தினார்கள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அர்ஜுன் என்னும் மனிதனுக்குள் தாண்டவமாடிக் கொண்டிருந்த அசுரன் திருப்தியுடன் நிமிர்ந்தான்.

“ஐயோ கடவுளே!” - தலையில் அடித்துக் கொண்டாள் ஷோபா.

“கேட்டியா ஷோபா? ஐம் யுவர் டாட்டர்ஸ் லவ். ஷி லவ்ஸ் மீ..” - கொக்கரித்தான்.

“மிருது, அவனை நம்பாத. உன்ன ஏமாத்துறான். அவன் உன்ன கொன்னுடுவான். ப்ளீஸ் வந்துடுடா செல்லம்..” - கூக்குரலிட்டாள்.

“பகவான் எங்க ஷோபா?” - அர்ஜுன்.

அவனுக்கு பதில் சொல்வதை தவிர்த்து மகளிடம் பேசினால் ஷோபா.. “பெரிய கொலைகாரன் அவன்.. ஏழு வருஷமா என்னை துரத்திக்கிட்டு இருக்க எமன்..”

“அம்மா! நீங்க நினைக்கற மாதிரி இல்ல.. அர்ஜுன்.. அர்ஜுனும் என்னை லவ் பண்றார். நா கன்வின்ஸ் பண்றேன் ம்மா. ப்ளீஸ் ஸ்டே காம்” - தாயிடம் நெருங்க முயன்றாள் மகள். அர்ஜுன் ஹோத்ராவின் வலிய கரம் அவளை வன்மையாக பற்றி தடுத்தது.

கையே உடைந்துவிடும் போல் தோன்றியது. தன் வலியை காட்டிக் கொண்டால் தாயின் பதற்றம் மேலும் அதிகமாகும் என்று எண்ணிய மிருதுளா பல்லை கடித்து வலியை சகித்துக் கொண்டு, “ப்ளீஸ்” என்று அவனை கெஞ்சுதலாகப் பார்த்தாள். அவன் முகத்திலோ கோபம் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

“பகவான் எங்க?” - மீண்டும் கேட்டான்.

“ஐயோ! அவனை அவனை நம்பாதேயேன்” தவித்தாள் தாய்.

“நாங்க வரும் போது உள்ள இருந்த மாதிரிதானே இருந்தது.”

“அவர் இல்ல..” - அழுகையை நிறுத்திவிட்டு திடீரென்று சீறினாள்.

“இந்த தடவையும் உன்ன விட்டுட்டு ஓடிட்டானா? பின்பக்கமா எகிறி குதிச்சு ஓடுறது பழகிடிச்சு போலருக்கு?”

“அவர் யாருங்கறதை மறக்காத அர்ஜுன்” - எச்சரித்தாள்.

“நெவர்..”

“ம்மா ப்ளீஸ்..” - மிருதுளா தாயிடம் கெஞ்சினாள்.

“ஐயோ.. மிருது.. அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்? அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. சொன்னானா உன்கிட்ட?”

“வா..ட்..!” - அதிர்ச்சியில் அவள் இதயம் நின்றே போனது.

“ப..க..வான் எங்க ஷோ..பா..?” - பூமி அதிர உரக்கக் கத்தினான். கட்டுக்கடங்கா கோபத்தில் அவன் உடல் நடுங்கியது. மிருதுளாவை பிடித்திருந்த பிடியில் அவள் கை இற்றுப் போனது.

“நோ.. நாட் பாஸிபிள்..” - தலையை குறுக்காக அசைத்தாள் மிருதுளா. தாயை நம்ப மறுத்தாள். ‘இருக்காது.. இருக்க முடியாது.. இது எப்படி சாத்தியம்!’ - அலறியது அவள் உள்ளம்.

“குழந்தை கூட..” என்று ஷோபா ஆரம்பிக்கும் போதே மிருதுளாவின் தலை பயங்கர சத்தத்துடன் காரில் சென்று மோதியது.

அவள் முடியை கொத்தாகப் பிடித்தது இழுத்து மோதியிருந்தான் அர்ஜுன். கோரமான அலறலுடன் அவள் கண்கள் மேல்நோக்கி செருக அவள் நெற்றி பிளந்து இரத்தம் வழிந்தது.

“ஐயோ!” என்று அலறி துடித்த அவள் தாய் அருகில் வருவதற்குள் மிருதுளாவை காருக்குள் தள்ளி கதவை அடைத்துவிட்டு விஸ்வரூபமெடுத்து நிமிர்ந்து நின்றான் அந்த ராட்சசன்.

“விட்டுடு அர்ஜுன்.. நீ என்ன சொன்னாலும் செய்றேன். என் பொண்ண தயவு செஞ்சு விட்டுடு” - கையெடுத்து கும்பிட்டு கதறும் ஷோபாவை துச்சமாக பார்த்தான் அர்ஜுன்.

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொண்ட ஷோபா, “அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.. பார்சனலா உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. அதை ஒரு பிசினெஸா பார்க்காம ஏன் எங்களை இப்படி துரத்தர? நீ பண்ணாத எதை நாங்க பண்ணிட்டோம்.. ப்ளீஸ் விட்டுடு..” - பயனில்லை என்று தெரிந்தும் தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றாள்.

“எக்ஸ்சாக்ட்லி ஷோபா. இதுவும் அசைன்மென்ட் தான். எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். ஏழு வருஷமா முடிக்க முடியாம இழுத்துகிட்டே இருக்கே!” - தோளை குலுக்கினான்.

நிராசையுடன் தலையை குறுக்காக அசைத்தாள் ஷோபா.

“பகவானை வர சொல்லு. கூட நீயும் வா.. என் வீட்டுக் கதவு எப்பவும் உங்களுக்காக திறந்தே இருக்கும். எனக்கு தேவை நீங்க இரண்டு பேரும் மட்டும்தான்” - சிரித்தான். அந்த சிரிப்பில் தெரிந்த துஷ்ட்டன் ஷோபாவை உறைந்து போகச் செய்தான்.

“ஒரு வேளை நீங்க வராம.. வேற ஏதாவது பிளே பண்ண ட்ரை பண்ணினா.. பார்த்திருப்பியே.. உன் பொண்ண நா எவ்..வ..ளவு லவ் பண்றேன்னு.. டெய்லி இப்படி லவ் பண்ணிகிட்டே இருப்பேன். புரியுதில்ல.. புரியும்.. வி ஆர் ஃபிரண்ட்ஸ் ரைட். பகவானை கேட்டதா சொல்லு.. பார்க்கலாம்..” - அவன் பேச்சில் எத்தனை எள்ளல் இருந்ததோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாக கோபம் இருந்தது.

கார் ரிவர்ஸ் எடுத்து திரும்பும் போது இரத்தம் வழிந்த முகத்தோடு அரை மயக்க நிலையில் கார் சீட்டில் கிடந்த மிருதுளா முயன்று நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்தாள். பரிதவிப்புடன் ஒன்றோடொன்று இணைந்திருந்த இருவர் பார்வையையும் வலுக்கட்டாயமாக அறுத்துவிட்டது மகளின் அந்த பயணம்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 51

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாய்ந்த அவன் கார் மெக்கானிக் ஷெட்டை கடந்ததும் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டது. கல்லில் செய்த சிலை போல் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சாலையை வெறித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் வெளியேற்றிய மூச்சுக்காற்றின் வெப்பம் கார் ஏசியின் குளிர்நிலையோடு போர் புரிந்தது.

சில நொடிகள் அப்படி அசையாமல் அமர்ந்திருந்தவன் பிறகு மெல்ல அவள் பக்கம் திரும்பினான். கைக்குட்டையை சுருட்டி நெற்றியில் அழுத்தியபடி சீட்டில் கண்மூடி தளர்ந்துக் கிடந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின. எதுவும் பேசாமல் டேஷ்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்து, இயந்திர மனிதன் போல் எந்த உணர்வுகளும் அற்றவனாக அவள் கையை விலக்கி காயத்தை ஆராய்ந்து சுத்தம் செய்தான்.

வெட்டி வீசப்பட்ட கொடி போல் நினைவற்று கிடந்தவள் மெல்ல இமை பிரித்தாள். உயிரற்ற விழிகளால் அவனை ஏறிட்டாள். அவனுடைய பற்றற்ற தோற்றம் அவள் நெஞ்சை அறுத்தது. உடலில் பட்ட காயம் வலிக்கவில்லை. ஆனால் அவன் காட்டிய அந்நியத்தனம் அவளை கொன்றது. அவன் கையை விலக்கிவிட்டு நேராக எழுந்து அமர்ந்தாள்.

ஒரு நொடி அவளை வெறித்துப் பார்த்த அர்ஜுன் மீண்டும் தன் வேலையை தொடர முயன்றான். ஆனால் அவள் ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள். விட்டுவிடக் கூடியவனா அவன்? வலுக்கட்டாயமாக அவள் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பினான்.

“அசையாத” - அடிகுரலில் ஆணையிட்டான்.

அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. உடலில் எஞ்சியிருந்த மொத்த சக்தியையும் திரட்டி திமிறினாள். அவன் பிடியில் அழுத்தம் கூடியது. பற்கள் நறநறக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. அவன் முரட்டுத்தனத்தில் தாடையெலும்பு உடைந்துவிடும் போல் தோன்ற போராடும் திராணியற்று அடங்கிப்போனாள் அந்த பாவை. தோல்வியின் துயரம் கண்களில் கண்ணீராய் பெருகியது.

அவளுடைய காயமோ கண்ணீரோ அவனை எந்த விதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. கடிவாளம் கட்டிய குதிரை போல் கர்மமே கண்ணாக அவள் நெற்றிக்காயத்துக்கு கட்டுப் போட்டு முடித்துவிட்டு காரை கிளப்பினான். வீடு வந்து சேரும் வரை இருவருக்கும் இடையில் இரும்புத் திரையாக விரிந்திருந்தது மௌனம்.

அர்ஜுனின் கார் கராஜிற்குள் நுழையும் போது அங்கே இன்னொரு கார் நின்றுக் கொண்டிருந்தது. வந்திருப்பது யார் என்று அவனுக்குத் தெரியும். இன்ஜினை அணைத்துவிட்டு அசையாமல் அமர்ந்திருந்தான். அவனை பொருட்படுத்தாமல் தன் பக்க கதவை திறந்து கொண்டு கீழே அடியெடுத்து வைத்த மிருதுளாவின் கால்கள் வலுவிழந்து தடுமாறின. கார் கதவை பற்றாக பிடித்து தடுமாற்றத்தை சமாளித்தாள்.

அர்ஜுனின் கண்கள் நேர் நோக்கி இருந்தாலும் பார்வை வட்டம் விரிந்தே இருந்தது. அவளுடைய துன்பம் அவன் கவனத்தில் பதியாமல் இல்லை. ஆனாலும் தாங்கிப்பிடிக்க அவன் விழையவில்லை. அவளுக்கு வலித்தது. கூர்முனை கொண்ட ஏதோ ஒன்று உள்ளே பாய்வது போல் இருந்தது. விரிந்துக்கிடக்கும் பாலை மணல் போல் துக்கம் நெஞ்சம் முழுக்க பரவியிருந்தது. அவன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கப் பிடிக்காதவளாக, நிதானமாக அடியெடுத்துவைத்து உள்ளே சென்றாள்.

ஹாலில் அமர்ந்திருந்த டேவிட் அவள் வரவை உணர்ந்து மகிழ்ச்சியாக எழுந்தவன், அவளைப் பார்த்ததும் சட்டென்று நின்றான்.

அவளுடைய சோர்ந்த நடையும் நெற்றிக்கட்டை மீறி வெளியே கசிந்திருக்கும் ரத்தமும் அவனை பதட்டமடையச் செய்தது.

“மிருதூ! என்ன ஆச்சு? அர்ஜுன் எங்க?” - இரண்டே எட்டில் அவளை நெருங்கி தோளோடு அணைத்துப் பிடித்தான்.

வறண்ட பாலைவனத்தில் ஓர் ஈச்சமரத்தை கண்டது போல் அவன் நிழலில் சற்று ஆசுவாசமடைந்த மிருதுளா தன்னையறியாமல் அவன் தோளில் தலை சாய்த்து கண் மூடினாள்.

“முக்கியமான அசைன்மென்ட்டை கவனிக்கிறதுக்காக உன்ன வர சொன்னேன். நாட் ஃபார் திஸ் புல்ஷிட்” - கணீரென்று ஒலித்த பெருங்குரலில் உடல் தூக்கிப்போட மெல்ல விலகினாள் மிருதுளா. டேவிட்டிடம் கூட எதுவும் சொல்ல தோன்றாதவளாக படுக்கையறையை நோக்கி நடந்தவள், வாயிலில் நின்று திரும்பிப் பார்த்தாள்

“சாரி டேவிட், லாஸ்ட் டைம் உன்கிட்ட சொல்லாமலே கிளம்பற சூழ்நிலை. திரும்ப உன்ன பார்த்ததுல சந்தோஷம்” - முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

திகைப்புடன் அவளை பார்த்துக் கொண்டே நின்ற டேவிட், அவள் உள்ளே சென்று மறைந்ததும் அர்ஜுனிடம் திரும்பி, “வாட்ஸ் திஸ் மேன்?” என்றான் அதிருப்தியுடன்.

“அதை பற்றி விசாரிக்க நீ இங்க வரல. வந்த வேலையை மட்டும் பாரு” என்று வெடுவெடுத்துவிட்டு முகம் கொடுக்காமல் சமையலறை பக்கம் சென்று பாத்திரங்களை உருட்டினான்.

அவன் பின்னாலேயே சென்ற டேவிட், “ஐ நோ.. நீதான் என்னவோ பண்ணியிருக்க” என்றான் கோபத்துடன்.

கையிலிருந்த பாத்திரத்தை பொட்டென்று கீழே போட்டுவிட்டு, “அதுக்கு? என்ன பண்ண போற? வான ஃபைட்? கம்.. பார்த்துடலாம் வா” - கண்கள் சிவக்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் அர்ஜுன்.

நண்பனின் விளிம்புநிலை மனநிலையை புரிந்துக்கொண்ட டேவிட், “ரிலாக்ஸ் அர்ஜுன். நீதானே என்னை கூப்பிட்ட? என்ன ஆச்சு உனக்கு?” என்று தன்மையாக பேசினான்.

வேக மூச்சுகளை வெளியேற்றி கண்களை மூடி தளர்ந்து போய் டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தான் அர்ஜுன். அவனுக்குள் ஏதேதோ சிந்தனைகள்.. கோபம்... ஆத்திரம்.. வெறுப்பு.. என்று எல்லாம் சேர்ந்து அவனை மேலே மேலே அழுத்த, எண்ணம் குலைந்து போனவனாக திடீரென்று ஆவேசத்துடன் எழுந்து மேஜையிலிருந்த பொருட்களையெல்லாம் விசிறியடித்தான். ஆக்ரோஷம் அகோரமாய் ஆட்கொண்டிருந்தது அவனை.

இப்போது மட்டும் எதிரியென்று யாரேனும் அவன் கையில் சிக்கினால் வெற்று விரல்களாலேயே அவன் நெஞ்சை பிளந்துவிடுவான்.

டேவிட் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான். இந்த அளவுக்கு நிதானமிழந்த அர்ஜுனை அவன் பார்த்ததே இல்லை.

“அர்ஜுன்..” - தயக்கத்துடன் அழைத்தான்.

அவன் பதில் சொல்லவில்லை. “கம்.. லெட்ஸ் ஹேவ் எ ட்ரிங்” - நண்பனின் மனநிலையை மடைமாற்ற முயன்றான்.

“வாட்?” - புரியாதவன் போல் புருவம் சுருக்கினான் அர்ஜுன். அப்போதுதான் டேவிட்டின் மூளைக்கு உரைத்தது. அர்ஜுன் மது அருந்த மாட்டான்.

“ஓ சாரி.. ஓகே வா.. ஏதாவது விளையாடலாம். மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். கார்ட்ஸ் ஓகேவா?”

சில நொடிகள் மெளனமாக நின்ற அர்ஜுன், “இல்ல..” என்று தலையை குறுக்காக அசைத்துவிட்டு மீண்டும் சமையலறையில் பாத்திரங்களை உருட்ட துவங்கினான்.

“எனக்கு வேலை இருக்கு” - பிரிட்ஜை திறந்து காய்கறிகளை அள்ளிப்போட்டு கழுவி கரடுமுரடாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்தான்.

டேவிட் அவனை புதிராகப் பார்த்தான். அங்கு இன்னொருவன் நிற்கிறான் என்கிற நினைவே இல்லாதவன் போல் சூப்பை தயார் செய்து ரொட்டியை வாட்டி எடுத்து வெண்ணையை தடவி தட்டில் அடுக்கி எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். அவன் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.

******************

“மிருதுளா கெட் அப்” - உரத்த குரலில் அவள் உறக்கத்தை களைத்தான்.

மிருதுளா கண் விழித்தாள். ஆனால் தலை பாரம் நிமிர முடியவில்லை. மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். கையிலிருந்த ட்ரேயை டீப்பாயில் வைத்துவிட்டு அவளை தூக்கி அமர வைக்க முயன்றான் அர்ஜுன். அவன் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்றவளின் வாயிலிருந்து, “விடு..” என்கிற ஒற்றை வார்த்தை மட்டும் வெறுப்புடன் வெளிப்பட்டது.

முள் தைத்தது போல் ஒரு கணம் அவன் பிடி தளர்ந்தது. தளரமட்டும்தான் செய்தது. மொத்தமாக விட்டுவிடவில்லை. மறு கணமே சுதாரித்துக் கொண்டு பிடியில் அழுத்தத்தைக் கூட்டி அவளை பிடிவாதமாக தூக்கி நிமிர்த்தி அமரவைத்து அவள் கையில் சூப்பை திணித்தாள்.

உடனே ஆவேசத்துடன் அதை தூக்கியெறிந்தாள் மிருதுளா. அவன் முகம் கறுத்தது. தாடை இறுக அவளை வெறித்துப் பார்த்தபடி ஓரிரு நொடிகள் நின்றவன், “திஸ் இஸ் த லாஸ்ட் டைம். இன்னொரு தடவ இதை ரிப்பீட் பண்ணின..” என்று கர்ஜனையாய் துவங்கியவன் வாக்கியத்தை முடிக்காமல் மீண்டும் சமையலறைக்கு போய் இன்னொரு கப்பில் சூப்பை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

அவள் மறுக்கத்தான் செய்தாள். ஆனால் அவனுடைய முரட்டுப்பிடிவாதம் அவளை வலுவிழக்க செய்தது. உணவும் மருந்தும் எடுத்து கொண்ட பிறகு மிருதுளா உறங்கிவிட்டாள். மணிக்கணக்காக தனிமையில் மௌனமாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

அன்று இரவு அர்ஜுன் டேவிட்டோடு பேசினான். உல்ஃப் எங்கு இருக்கலாம்? அடுத்து யாரை குறி வைத்திருக்கலாம்? அதை தாங்கள் எப்படி முறியடிக்கலாம்? என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளையும், செய்திகளையும் தொகுத்து விவாதித்து ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து அடுத்த அசைன்மென்ட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள். நள்ளிரவு வரை நீடித்த அந்த மீட்டிங்கை முடித்துக் கொண்டு டேவிட்டை ஹாலில் படுக்க சொல்லிவிட்டு, படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டான் அர்ஜுன் ஹோத்ரா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 52

கதவை தாழிட்டு திரும்பிய அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை, அடிபட்ட மயில் போல் மெத்தையில் உணர்வற்று கிடந்தவள் மீது படிந்தது. கால்கள் வேரூன்றி போனவனாக ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு குளியலறைக்குள் சென்று இலகுவான இரவு உடையில் திரும்பினான். கட்டிலுக்கு அருகே சைட் டேபிளில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டு, மெத்தையில் அமர்ந்தான். போர்வையை அவள் மீது இழுத்து போர்த்திவிட்டு அதிலேயே தன்னையும் புதைத்துக் கொண்டு அவள் அருகில் நெருங்கிப் படுத்தான்.

திடுக்கிட்டு எழ முயன்றாள் மிருதுளா. பின்னாலிருந்து அவள் வயிற்றை வளைத்துப் பிடித்து அனாசயமாக அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன், “ஷ்ஷ்ஷ்.. காம் டௌன்..” என்றான் சன்னமான குரலில்.

“அர்ஜுன்!” - மிருதுளாவின் பதட்டம் நடுங்கும் அவள் குரலில் தெரிந்தது.

பகலெல்லாம் உறங்கிவிட்டதாலோ என்னவளோ உறக்கம் வராமல் விழித்துத்தான் கிடந்தாள் மிருதுளா. அர்ஜுன் உள்ளே வந்தது அவளுக்கு தெரியும். அவள் அறையில் இருக்கும் போது அவன் உள்ளே வருவதும் போவதும் சகஜம் தான் என்பதால் அவள் அதை பெரிதாக எண்ணவில்லை. உறங்குவது போல் கண்களை மட்டும் மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தாள். அவன் போர்வையை போர்த்திவிட்ட போது கூட அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. போர்த்திவிட்ட பிறகு வெளியே சென்றுவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் இது பெரிய அதிர்ச்சி. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி செய்வான்? - கொதித்துப் போனாள்.

அவனிடமிருந்து விடுபட திமிறியபடி, “ஐம் நாட் யுவர் டாய்.. விடுங்க என்னை” என்றாள் கோபத்துடன்.

வலிமையான அவன் கரங்களும் தூணை ஒத்த கால்களும் அவள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுலபமாக அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான். அவள் இதயம் வெடித்துவிடுவது போல் அடித்துக் கொண்டது. பீதியோ பயமோ அடிவயிற்றில் பந்தாய் சுருண்டது. நெஞ்சுக்குழிக்குள் சுரந்த ஒரு விசித்திர உணர்வு அவள் புலன்களை கட்டுப்படுத்த முயல அதிலிருந்து மீண்டு அவள் அவனை எதிர்க்க முயன்றாள்.

“யு ஆர் மேரீட் அர்ஜுன்” என்று அதீத பதற்றத்துடன் நிதர்சனத்தை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

அவனோ செவி புலனற்றவன் போல் முன்னேறி அவள் செவிமடலில் இதழ் பதித்தான்.

அவள் உடல் வெடவெடத்தது. அவமானம்.. தோல்வி.. ஏதேதோ எதிர்மறை உணர்வுகள் அலைபோல் மேலெழ, “ஐயோ அர்ஜுன்.. ஏன் இப்படி என் பார்வையில ரொம்ப தாழ்ந்து போறீங்க?” என்று வெடித்து பீறிட்ட குமுறலுடன் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

ஒரு கணம் அசைவற்று போனவன், உடனே சுதாரித்து, “பிகாஸ் தட்ஸ் ஹௌ ஐ ஆம்” என்றான். கதறியழுதாள் மிருதுளா. தான் அப்படித்தான் என்று எத்தனை சுலபமாக கூறிவிட்டான்!

“இல்ல அர்ஜுன்.. நா இன்னமும் உங்கள நம்பறேன். உங்ககிட்ட சரியான காரணம் இருக்கும். இந்த மாதிரி பண்ணாதீங்க. எனக்கு உங்கள நெகட்டிவா பார்க்க வேண்டாம்.. ப்ளீஸ்..” - அவள் உடல் குலுங்கியது.

சட்டென்று உறைந்து போனான் அர்ஜுன். மரக்கட்டை மனிதன் போல் அவளை இறுக்கிப் பிடித்திருந்த நிலையிலேயே அசைவற்றிருந்தான். தன் உணர்வில் ஆட்பட்டு உழன்றுக் கொண்டிருந்தவள் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து கொள்வதற்குள் அவன் மீண்டுவிட்டான்.

இறகு போல் எடையற்றிருந்தவளை லாவகமாக தன் பக்கம் திருப்பி விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து வீங்கி கண்ணிமைகள் தடித்து யாரோ போல் இருந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின.

ஒற்றை விரலால் மென்மையாக அவள் நெற்றி கட்டை வருடியபடி மெல்ல பேசினான்.

“என்னை நம்ப வேண்டிய நேரம் முடிஞ்சிடிச்சு ஹனி. இனி என்னோட கொடூரத்தை சந்திக்கிற மனநிலையை வளர்த்துக்க” - பிசிறற்ற குரலில் அவன் கூறிய விதம் அவளுக்குள் கூர் ஈட்டியாய் பாய்ந்தது.

சகித்துக் கொண்டு, “யு காண்ட் ஹர்ட் மீ” என்றாள்.

காயம்பட்ட அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இதை மறந்துட்டியா?” என்றான் இறங்கிய குரலில். எவ்வளவு முயன்றும் அந்த நேரத்தில் அவன் குரலில் வெளிப்பட்ட வலியை அவனால் தவிர்க்க முடியவில்லை.

மிருதுளாவின் கண்கள் கலங்கின. இதழ்கள் துடித்தன. அவ்வளவுதான்.. அவளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன். சற்று ஓய்ந்திருந்த அழுகை மீண்டும் பெருகியது. மார்பில் உணர்ந்த அவள் கண்ணீரின் ஈரம் அவன் இதயத்தை சுட்டது.கேசம் கோதி முதுகை வருடி அவளை மௌனமாய் ஆறுதல் படுத்தியவன், அவள் ஸ்பரிசத்தில் தானும் சற்று இறுக்கம் தளர்ந்தான். எவ்வளவு நேரம் கழிந்ததோ.. மிருதுளாவின் மெல்லிய குரல் மீண்டும் ஒலித்தது.

“நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா?” - ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டாள்.

அவன் மீது அவள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் முழுதாக மரித்துப் போகவில்லை என்பதற்கு சான்றானது அவள் கேட்ட கேள்வி.

“எதையும் யோசிக்காத. தூங்க ட்ரை பண்ணு.”

“முடியல அர்ஜுன்” - பரிதாபமாக கூறினாள்.

அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

“என்னை யூஸ் பண்ணிக்கிட்டிங்களா அர்ஜுன்? எல்லாமே நடிப்பா? எனக்கு அப்படி தோணலையே அர்ஜுன். இப்போ.. இது.. நம்மளோட இந்த டைம்.. இது எ..ப்..படி நடிப்பா இருக்க முடியும்? பாருங்க பாருங்க.. நா இதை சொல்லும் போது உங்ககிட்ட அதிர்வு தெரிஞ்சுதே.. நீங்க ஃபீல் பண்ணுனீங்களா? ட்ரு ஃபீல் அர்ஜுன். நமக்குள்ள டெவலப் ஆயிடிச்சு..” - பித்துப்பிடித்தவள் போல் புலம்பினாள்.

“ரிலாக்ஸ் பேபி.. நீ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு இல்ல.”

“ஐம் நாட்”

“ஷோபாவோட பொண்ணு வீக்கா இருக்க முடியாது” - அதை சொல்லும் போது அவன் குரலில் உணர்வுகள் அற்று போனது.

மிருதுளா மௌனமானாள். சில நொடிகள் தான்.. மீண்டும் அடுத்த கேள்வியை கேட்டாள். “அம்மாவ எப்படி தெரியும்? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”

சற்று இளகிய அர்ஜுனின் உடல் மீண்டும் விறைத்தது. இரும்பு மனிதன் போல் இளக்கமற்று மாறினான். அதை அவளும் உணர்ந்தாள்.

“பேசி தீர்த்துக்கலாம் அர்ஜுன். நா உங்க பக்கம் இருக்கேன். அவங்ககிட்ட பேசறேன். என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.. ப்ளீஸ்..” - அப்படி ஆரத்தழுவிய நிலையில் அவள் கேட்கும் போது சாதாரண மனிதனாக இருந்தால் அனைத்தையும் கொட்டித் தீர்த்திருப்பான். ஆனால் அவன் இரட்டை பயிற்சி பெற்ற போராளி. அவ்வளவு எளிதில் நிலையிழந்துவிடுவானா என்ன?

“எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. என் பக்கம் என்னோட வைஃப் நிப்பா. நீ பகவானோட பொண்ணு. எனக்காக சிரமப்பட வேண்டாம்” - ஓங்கி உச்சந்தலையில் அடித்து அவளை நிலையிழக்க வைத்தான்.

பிரமை பிடித்தவள் போல் சில நொடிகள் அசையாமல் இருந்தவள், திடீரென்று ஹிஸ்டீரியா நோயாளி போல் பயங்கர சத்தத்துடன் அவனிடமிருந்து விலகி ஓடிவிட துடித்தாள்.

அவன் விடவில்லை. அவள் அழுதாள்.. கத்தினாள்.. அடித்தாள்.. பற்களால் அவன் தோளை அழுந்த பற்றி கடித்தாள். அவன் அசையவில்லை.

தன் நீண்ட கைகளாலும் கால்களாலும் அவளை பின்னி தன்னோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டான். மலைபாம்பிடம் சிக்கிய இரை போல் துள்ளி துடித்து துவண்டு அவனுக்குள் அடங்கினாள் மிருதுளா. இதயம் மட்டும் வலிக்க வலிக்க துடித்தது. கண்ணீர் நிற்காமல் கசிந்தது. அவனுக்கு தேவை அவளை அணைத்துக்கொண்டு உறங்க வேண்டும். அவளுக்கோ அது சித்ரவதை. அந்த சித்திரவதையை அனுபவித்தபடியே அவள் கண்ணயர, அதன் பிறகும் கூட அவன் உறங்கவில்லை.. உறங்க முடியவில்லை.. அவள் கண்ணீரில் கரைந்து போய்விட்டது அவன் உறக்கம்.
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 53

முதல் நாள் நடந்ததெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது மிருதுளாவுக்கு. பாறையை வைத்து கட்டியது போல் கணக்கும் தலை மட்டும் சாட்சி கூறவில்லை என்றால் அனைத்தையும் கனவென்றே அவள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் அத்தனையும் உண்மை.. பொட்டில் அறைந்தது போல் கூறினானே! அவன் பக்கம் நிற்க அவனுடைய மனைவி இருக்கிறாளாம். ம-னை-வி! - அந்த நினைவே உயிர்வரை சென்று வலித்தது. அயர்வுடன் கண்களை மூடித் திறந்தாள். குளியலறை கதவு திறக்கும் ஓசையில் உடல் பதறியது. வெளியே ஓடிவிடலாமா! - அவள் முடிவெடுப்பதற்குள், ஈரத்தலையும் வெற்று மார்புமாக இடுப்பில் சுற்றிய தூவாலையோடு வெளியே வந்தான் அர்ஜுன்.

முதுகிலும் கழுத்துப்பகுதியிலும் நகக்கீறல்கள் இரத்தமாய் சிவந்திருந்தன. தோள்பட்டையில் பட்டிருந்த பல் தடம் கன்றி போயிருந்தது. மனம் உறுத்த உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை தாழ்த்தினாள் மிருதுளா.

இதற்கெல்லாம் அவள் வருந்தலாமா? இந்த காயம் அவளை பாதிக்கலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தவன்! அவனுக்காக ஏன் அவள் மனம் தவிக்கிறது? எதற்கு உதவும் இந்த பலவீனம்? – கழுவிரக்கமும், கோபமும் அவள் உள்ளத்தில் காற்றும் நெருப்புமாக ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய போராடிக் கொண்டிருந்தது.

“இதுதான் லாஸ்ட் டைம். இன்னொரு தரம் இப்படி பண்ணின..” - அவனுடைய கர்ஜனையில் பார்வையை உயர்த்தினாள் மிருதுளா. முகம் ஜிவுஜிவுக்க தோள்பட்டை காயத்தில் மருந்தை பூசியபடி கண்ணாடியில் அவளை பார்த்து பல்லை கடித்தான் அர்ஜுன்.

ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. “என் தலையில இருக்க காயத்தைவிட இது ஒன்னும் பெருசு இல்ல” - வெடுக்கென்று கூறிவிட்டு எழுந்து வெளிவராண்டாவிற்கு வந்தாள். அவள் முதுகை வெறித்து நோக்கினான் அர்ஜுன்.

கொஞ்சம் கூட குற்றவுணர்வில்லாமல் அவன் நடந்துகொள்ளும் விதத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உள்ளம் கொதித்தது. கோபத்தில் உடல் நடுங்கியது. மேல்மூச்சு வாங்க வேகமாக வெளியே வந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

வெளியே தண்டால் (புஷ் அப்ஸ்) எடுத்துக் கொண்டிருந்த டேவிட் மிருதுளாவை கண்டதும் எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் கவனம் அவன் பக்கம் பிறழவில்லை. கடுகடுத்த முகத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி நிலத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகே அமர்ந்தான் டேவிட்.

இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அவன் கண் எதிரிலேயே அர்ஜுன் மிருதுளாவின் அறைக்குள் உரிமையோடு நுழைந்த போது நெஞ்சுக்குள் ஆணி அறைந்தது போல் இருந்தது அவனுக்கு.

தெரிந்த விஷயம்தான்.. அவர்களுடைய பழக்கம் வலுப்பெற்றிருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்.. ஆனாலும் வலித்தது. வலியென்றால் சாதாரணமானதல்ல.. மோசமான வலி. தாங்க முடியாமல் எழுந்து வெளியே ஓடியவன் விடியற்காலையில்தான் வீடு திரும்பினான்.

மிருதுளாவின் அழுகையும் சத்தமும் ஓய்ந்துவிட்ட நேரம் அது. இரவு நடந்த எதை பற்றியும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவள் தலையில் இருந்த காயமும் முகவாட்டமும் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போதும் உறுத்திக் கொண்டிருக்கிறது.

“ஆர் யு ஓகே?” - தாழ்ந்த குரலில் அக்கறையோடு கேட்டான்.

அந்த கேள்வியும் அக்கறையும் அர்ஜுனின் அன்பை நினைவுறுத்தி அவள் வலியை இரட்டிப்பாக்கியது. ‘முன்பெல்லாம் அவனும் இப்படித்தானே அடிக்கடி கேட்பான்!’ - பதில் சொல்ல முடியாமல் உதடுகளை அழுந்த மூடிக் கொண்டாள்.

“என்ன பிரச்சனை மிருது? என்கிட்ட சொல்லக்கூடாதா?” - ஒரு நண்பனாக கூட அவள் இதயத்தில் தான் இல்லையோ என்கிற ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டான் டேவிட்.

மிருதுளாவின் பார்வை உயர்ந்தது. அவனுடைய கண்களில் தெரிந்த அன்பு அவளை அசைத்தது. ஜீவனற்ற புன்னகையை அவனுக்கு பதிலாகக் கொடுத்தாள்.

“அர்ஜுனா?” - அவள் நெற்றி காயத்தை நோக்கியபடி கேட்டான்.

பதில் சொல்லும் அவகாசத்தை அவளுக்கு கொடுக்காமல் அங்கே வந்து சேர்ந்த அர்ஜுன், காபி கப்பை அவள் எதிரில் வைத்துவிட்டு, டேவிட்டை பார்த்து, “என்ன காலையிலேயே விசாரணை?” என்றான் கண்டிக்கும் தொனியில்.

வாய் திறந்து எதுவும் சொல்லாமல் தோளை குலுக்கினான் டேவிட்.

“காபியை குடிச்சுட்டு உள்ள வா. காயத்துக்கு ட்ரெஸிங் மாத்தனும்” - தன்னிடம் தான் பேசுகிறான் என்று தெரிந்தும் மறுமொழி கூறாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

அர்ஜுனின் தாடை இறுகியது. உதாசீனத்தை அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அதிலும் இப்போது, டேவிடிற்கு எதிரில்.. - பல்லை கடித்தான்.

“உன்கிட்ட தான் பேசிக்கிட்டிருக்கேன் மிருதுளா” - குரலை உயர்த்தாமல் உறுமினான்.

அதற்கு மேல் அவனை அலட்சியப்படுத்தவும் முடியாமல் அடங்கிப் போகவும் முடியாமல், “என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் எரிச்சலுடன்.

“எழுந்து உள்ள வா. கட்டுப்பிரிச்சு மருந்து போடறேன்.”

“அதை உங்க மனைவிக்கு போய் பண்ணுங்க” - அவள் யோசிப்பதற்குள் வார்த்தைகள் சீற்றத்துடன் வெளியேறிவிட்டன.

டேவிட் அதிர்ச்சியோடு இருவரையும் மாறி மாறி பார்க்க அர்ஜுனின் முகத்திலோ ரௌத்திரம் தெறித்தது.

அழுத்தமான காலடிகளுடன் உள்ளே சென்றவன் சில நொடிகளிலேயே திரும்பி வந்தான். கையில் மெடிக்கல் கிட் இருந்தது.

இரக்கமற்ற அரக்கன் போல் அவளிடம் நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் தலைகட்டை முரட்டுத்தனமாக பிய்த்து எறிந்தான்.

“ஸ்ஸ்.. ஆ..” - வலியுடன் தடுமாறி எழுந்தவளை மீண்டும் சேரில் பிடித்து தள்ளினான்.

“அர்ஜுன் என்ன பண்ற நீ?” - பதற்றத்துடன் குறுக்கே பாய்ந்தான் டேவிட்.

அவன் டி-ஷர்ட்டை கொத்தாக பிடித்து அவனை இழுத்துச் சென்று சுவற்றோடு அழுத்தி, “எல்லை மீறாத” என்று எச்சரித்து உதறிவிட்டு மீண்டும் அவளிடம் வந்தான்.

மிருதுளா மிரட்சியுடன் எழுந்து விலகினாள். “டோன்ட் டச் மீ” - பதட்டத்தில் கத்தினாள். அது இன்னும் அவனை மூர்க்கனாக்கியது.

“யாருக்கு வேணும் உன்னோட ஒப்பீனியன்? நா என்ன வேணாலும் செய்வேன்” - ஆக்ரோஷத்துடன் சூளுரைத்தவன், பஞ்சை பிய்த்து ஆன்டிசெப்டிக் லோஷனில் தோய்த்து எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினான். பயந்து பின்வாங்கினாள் மிருதுளா.

இடையில் புகுந்து தடுக்க முயன்ற டேவிட்டை இழுத்து கீழே தள்ளிவிட்டு ஒரு கையால் மிருதுளாவின் முடியை கொத்தாக பற்றி அவளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவள் காயத்தை தேய்த்து சுத்தம் செய்தான். அவன் செயலில் இளக்கமில்லை.. மென்மையில்லை.. வெறுப்பும் கோபமும் மட்டுமே விரவியிருந்தது.

வலியில் துடித்து அலறினாள் மிருதுளா. “இப்படி என்னை சித்திரவதை படுத்தறதுக்கு ஒரேடியா கொன்னுடலாம்” என்று அழுதபடி அவன் கையை விளக்க முயன்றாள். கண்களில் கண்ணீர் பெருகியது.

“அஃப்கோர்ஸ் ஆப்டர் யுவர் பேரன்ட்ஸ் ஹனி..” (நிச்சயமாக, உன் பெற்றோருக்கு பிறகு அன்பே..) - நக்கலும் வெறுப்புமாக கூறினான்.

சுருக்கென்றது அவளுக்கு. அவளை கொல்வேன் என்று கூறியதற்காக அல்ல.. அவளுடைய பெற்றோருக்கு பிறகு என்கிறானே! அப்படியென்றால்? - முதுகுத்தண்டு சில்லிட்டு போவது என்பார்களே. அப்படித்தான் இருந்தது அவளுக்கு. அவனை பார்த்தபடியே உறைந்து போனாள். காயத்தின் வலி கூட அவள் புத்தியில் உரைக்கவில்லை. பெற்றோரின் பாதுகாப்பு பெரும் பயமாய் அவளை பீடித்துக் கொண்டது.

கீழே விழுந்த டேவிட் வேகமாக எழுந்து அவர்களிடம் நெருங்கினான். மிருதுளா வெறி பிடித்த அர்ஜுனின் பிடியில் நன்றாக சிக்கியிருந்தாள். அவளை விடுவிக்க முயன்று ஏதேனும் செய்தால் அது அவளுடைய வலியை இன்னும் தான் அதிகமாக்கும் என்பதை உணர்ந்து, “விட்டுடு அர்ஜுன்... பாவம்” என்று வாய்விட்டு கெஞ்சினான்.

“இவ என்னோட பணய கைதி. எப்போ விடனும் எப்போ பிடிக்கனும்னு எனக்கு தெரியும். யு பெட்டர் ஷட்அப்” - நண்பனிடம் சீறினான்.

“ஐ காண்ட் மேன். என்னால முடியாது. அவ எனக்கு பிடிச்ச பொண்ணு. நா எப்படி அமைதியா போக முடியும்?” - குரலை உயர்த்தினான் டேவிட்.

எதிர்பார்த்தபடியே அர்ஜுன் மிருதுளாவை விட்டுவிட்டு டேவிட்டிடம் பாய்ந்தான். அதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்து அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு, “ஓடிடு மிருதுளா.. ரூமுக்குள்ள ஓடி கதவை சாத்திக்க.. ஓடு..” என்று கத்தினான்.

அவள் நினைத்திருந்தால் அப்போது தப்பித்திருக்கலாம். வீட்டைவிட்டு ஓடியிருக்கலாம். அப்படி அவள் ஒட்டியிருந்தால் அர்ஜுன் அவளை தேடி போவான் என்பது வேறு கதை. ஆனால் மிருதுளாவிற்கு அந்த யோசனை எழவே இல்லை. அங்கிருந்த பதட்டமான சூழ்நிலை அவளை யோசிக்கவும் விடவில்லை. டேவிட் சொன்னபடியே அறைக்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அர்ஜுன் கட்டுப்பாடிழந்து முழு மிருகமாக மாறிவிட்டான். அந்த வீடு போர்க்களமாக மாறியது. யார் யார் மீதோ இருந்த கோபத்தையெல்லாம் டேவிட்டிடம் காட்டினான். டேவிட்டும் அவனை எதிர்க்கவில்லை. அவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே முயன்றான். தொழில் முறை ஃபைட்டர் என்பதால் அது அவனுக்கு சிரமமாகவும் இல்லை.

நடந்த யுத்தத்தில் டேவிட் சோர்வடையவும் அர்ஜுனின் கோபம் தணியவும் சரியாக இருந்தது. இருவருமே தளர்ந்து இரு பக்கம் தரையில் சாய்ந்து கிடந்தார்கள். எவ்வளவு நேரம் கழிந்ததோ.. டேவிட்தான் முதலில் எழுந்து அர்ஜுனிடம் வந்தான்.

“பெட்டர் நௌ?” என்று கை நீட்டினான்.

அவன் கையைப் பிடித்து எழுந்தபடி, “யு ஓகே?” என்றான் அர்ஜுன்.

அவ்வளவுதான்.. அதற்கு மேல் அவர்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை.. பகையும் இல்லை. இருவரும் இயல்பாக அவரவர் வேலையை பார்க்க துவங்கினார்கள். ஆனால் இருவர் மனதிலுமே மூடிய கதவிற்கு பின்னால் மிருதுளா என்ன செய்து கொண்டிருப்பாளோ என்கிற கவலை இருந்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 54

என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எண்ணங்கள் அவனைவிட்டு விலக மறுத்தன. எந்த வேலையில் ஈடுபட்டாலும் கவனம் சிதறியது. அவளுடைய அழுகையும் கூக்குரலும் காதுக்குள் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் பிசைவது போலிருந்தது. ஓரளவுக்கு மேல் அந்த கனத்த உணர்வை தாக்குப்பிடிக்க முடியாத அர்ஜுன், நேராக சென்று படுக்கையறை கதவை படபடவென்று தட்டினான்.

“மிருதுளா.. மிருதுளா.. கதவை திற.. மிரு..து..ளா..” - கத்தினான்.

டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து தன்னுடைய காயங்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்த டேவிட் அர்ஜுனின் சத்தம் கேட்டு, “ஐயோ கடவுளே!” என்று அரக்கப்பரக்க ஓடிவந்தான்.

“எ.. என்ன.. என்ன ஆச்சு?” - பதட்டத்துடன் கேட்டான்.

“எனக்கு உள்ள போகனும். டிரெஸ் சேன்ஜ் பண்ணனும். கதவை திறக்க சொல்லு” – எரிந்து விழுந்தான்.

“சரி சரி.. நீ உட்காரு.. நா பேசிக்கிறேன்” - மெல்ல கூறினான். இதையும் தவறாக புரிந்துக்கொண்டு சண்டையை வேறு பக்கம் திருப்பிவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் அவனுக்கு இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் அர்ஜுனும் அவனை முறைத்துத்தான் பார்த்தான்.

“அர்ஜுன்.. ஐம் யுவர் ஃபிரண்ட். ஆஃப்டர் ஆல்.. ப்ளீஸ்.. கொஞ்சம் எனக்கு ஆக்ஸஸ் கொடு. இதை சரி பண்ணிடலாம்” - அவனுடைய மனநிலையை நன்றாக புரிந்துக்கொண்டு நிதானத்துடன் அவனுக்கு எடுத்துக் கூறினான்.

கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தலையை குறுக்காக ஆட்டினான் அர்ஜுன்.

“இதை சரி பண்ண முடியாது டேவிட். யாராலயும் முடியாது. இது இப்படித்தான்..” - வேதனையுடன் கூறிவிட்டு சென்று சோபாவில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நண்பனை பின் தொடர்ந்து சென்று அருகில் அமர்ந்தான் டேவிட்.

“ஏன் இப்படி நம்பிக்கை இல்லாம இருக்க? வி கேன் டூ இட் மேன்.”

அர்ஜுன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. நிலத்தில் பார்வையை பதித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தவன் பிறகு நிமிர்ந்து நண்பனை பார்த்தான்.

“எனக்கு பயமா இருக்கு டேவிட். நானே.. இந்த கையாலேயே.. அவளை கொன்னுடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு” - அவன் கைகள் நடுங்கியது.

மிருதுளாவின் மீது அர்ஜுனுடைய உணர்வுகள் வெளிப்படுவதும் அதற்கு தானே துணை நிற்பதும் டேவிடின் மனதை வெகுவாய் காயப்படுத்தியது. ஆனாலும் அவன் நண்பனுக்காக நின்றான்.

நடுங்கும் அவன் கைகளை பற்றி அழுத்தினான்.

“நீ அப்படி செய்ய மாட்ட அர்ஜுன். உன்னால முடியாது” என்று அவனுக்கு தைரியம் கொடுத்தான்.

அர்ஜுன் உதட்டை கடித்து உணர்வுகளை விழுங்கிக்கொண்டு கரகரத்த குரலில் மேலும் பேசினான்.

“அவகிட்ட சொல்லு.. நா கோவமா இருக்கும் போது வாயை திறக்க வேண்டாம்னு சொல்லு. என்னை மிருகமாக்க வேண்டாம்னு சொல்லு..” என்று கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

நண்பனின் மனநிலை டேவிடிற்கு நன்றாக புரிந்தது. தவிர்க்க முடியாத தவிப்பையும் தடுமாற்றத்தையும் உணர முடிந்தது. தன்னுடைய சுய விருப்பங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே முடிவாக மனதில் ஏற்று கொண்டு மிருதுளாவை தேடி சென்றான்.

***********************

அர்ஜுனின் கார் ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டது. சில மணி நேரங்கள் பயணம் என்று கூட சொல்லலாம். சாலையோரம் ஒரு தொலைபேசி பூத் கண்ணில் பட்டது. காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று ஒரு நம்பரை டயல் செய்தான். அடுத்த முனையில் ப்ளூ ஸ்டார் எடுத்தார்.

“என்னால முடியல.. இந்த அஸைன்மென்டை சீக்கிரம் முடிக்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க. நா இதுலேருந்து வெளியே வரனும். ஐ காண்ட் டேக் திஸ் ஸ்ட்ரெஸ் எனிமோர்” - படபடத்தான்.

ஓர் அழுத்தமான மௌனத்துடன் அவன் சொன்னதை உள்வாங்கி கொண்டவர், “என்ன பிரச்சனை?” என்றார் மெதுவாக.

ஒரு நொடி அர்ஜுன் மௌனமானான். வார்த்தைகளை தேடி சின்ன தயக்கத்துடன் பதில் சொன்னான். “நா என்னோட கட்டுப்பாட்டை இழந்துக்கிட்டிருக்கேன். அது எனக்கு நல்லது இல்ல.”

“நல்ல விஷயம். உனக்கே உன்னோட பிரச்சனை புரியுது. அப்போ சால்வ் பண்றதும் ஈஸி தான் இல்லையா?”

“இல்ல.. கண்டிப்பா இது ஈஸி இல்ல. நா ரொம்ப டேஞ்சரஸ் ரூட்ல போயிட்டு இருக்கேன். என்னாலேயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப அக்ரஸிவா போயிட்டு இருக்கேன். ஜஸ்ட் டேக் மீ அவுட் ஃப்ரம் திஸ் ஹெல்.. ப்ளீஸ்..” - வெளிப்படையாகவே கெஞ்சினான்.

சற்று நேரம் ப்ளூ ஸ்டாரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உணர்வுகளின் பிடியில் ஆட்பட்டு தன்னிலையிழந்திருந்த அர்ஜுன் மெல்ல நிதானத்திற்கு வந்து, “ஏதாவது சொல்லுங்க” என்றான்.

“நீ நீயா இல்ல.. ஏன்?” - அழுத்தமாக கேட்டார்.

“ஏன்னா எனக்கும் பீலிங்ஸ் இருக்கு.. எமோஷன்ஸ் இருக்கு..”

“புல்ஷிட்.. நீ ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல. வெல் ட்ரைன்ட் ரிசோர்ஸ். உன்னோட பீலிங்க்ஸை உன்னால கட்டுப்படுத்த முடியாதா?” - இதையெல்லாம் என்னிடம் கொண்டுவர வேண்டுமா என்பது போல் கடுகடுத்தார்.

“அங்க உட்கார்ந்துகிட்டு சொல்றது ரொம்ப ஈஸி.. இங்க வந்து என்னோட இடத்துல நின்னு பாருங்க தெரியும்” - அவனும் கடுப்படித்தான்.

“உன்னோட இடத்துக்கு நீ மட்டும் தான் சரியான ஆள். அதனால தான் உன்ன அந்த வேலைக்கு அசைன் பண்ணியிருக்கோம். ஆபரேஷனை ஆபரேஷனா பாரு. டார்கெட்டை டார்கெட்டா பாரு. பீலிங்ஸ் அண்ட் எமோஷன்ஸுக்கு அங்க ஒரு வேலையும் இல்ல.”

“ஓ காட்! யு காண்ட் அண்டர்ஸ்டாண்ட் மீ.”

“எனக்கு ரொம்ப நல்லா புரியுது அர்ஜுன் ஹோத்ரா. நாம வாழற இந்த நிழல் உலகத்துல இரண்டே வர்க்கம்தான்.. ‘ப்ரே அண்ட் ப்ரிடேட்டர்..’ நீ இரையா இருக்க போறியா இல்ல வேட்டையாட போறியா? முடிவு பண்ணு.”

அவர் சுலமபாக கூறிவிட்டார். ஆனால் தன்னையே அந்த இரண்டாகவும் உணர்ந்த அர்ஜுன் அவருக்கு மறுமொழி கூற முடியாமல் தடுமாறினான்.

“ஏழு வருஷமா தோண்டிகிட்டு இருக்கற சுரங்கம் இது. தங்கம் கிடைக்கற நேரத்துல பூகம்பத்தை கிளப்பாத. மிருதுளாகிட்டேருந்து விலகு. டார்கெட்டை ஃபோக்கஸ் பண்ணு. உன்கிட்டேருந்து அதை மட்டும் தான் நா எதிர்பார்க்கறேன்” - அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

ஆத்திரத்துடன் ரிசீவரை தங்கியில் ஓங்கி அடித்துவிட்டு பூத்திலிருந்து வெளியேறினான் அர்ஜுன்.

*********************

புத்தி பேதலித்தவள் போல் சுவற்றில் தெரிந்த ஒற்றை புள்ளியை வெறித்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள் மிருதுளா. ஏமாற்றம் வலி பதட்டம் அழுகை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ‘ஏன்?’ என்கிற கேள்வி மட்டுமே அவளை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. எங்கோ யாரோ ‘மிருதுளா.. மிருதுளா..’ என்று அவள் பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். இல்லை.. கத்திக் கொண்டிருந்தார்கள். கூடவே தடதடக்கும் சத்தம் வேறு. என்னவென்று அவள் புத்திக்கு உரைக்கவே வெகு நேரம் பிடித்தது. செக்கு மாடு போல் அந்த ஒற்றை புள்ளியையே சுற்றிக் கொண்டிருந்த எண்ணங்கள் நிகழ்வுக்கு மீண்ட போது டேவிடின் குரலும் கதவு உடைபடும் சத்தமும் செவியை பிளக்க அவசரமாக எழுந்து ஓடி கதவைத் திறந்தாள்.

“என்ன பண்ணிட்டிருந்த இவ்வளவு நேரம்?” - அவன் முகத்தில் பதட்டமும் குரலில் உள்ளடக்கிய கோபமும் தெரிந்தது.

அதை பொருட்படுத்தி பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. “வேர் இஸ் ஹி?” - அவ்வளவு ரணகளத்திற்குப் பிறகும் அவளிடமிருடந்து எழுந்த முதல் கேள்வி அர்ஜுனை பற்றியதாகவே இருந்தது.

“வெளியே போயிருக்கான். நீ ஓகே தானே?”

“ம்ம்ம்..” - தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“என்ன நடக்குது டேவிட்? எனக்கு சொல்லு ப்ளீஸ்..” - அவளுடைய கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து அவள் காயத்திற்கு இதமாக மருந்து பூசி கட்டு போட்டபடி,

“ஆர்த்தியை எப்படி தெரியும் உனக்கு?” என்றான்.

மிருதுளாவின் முகம் இரத்தப்பசையற்று வெளிறியது. ‘அதுதான் அவள் பெயரா! உண்மையாகவே அவனுக்கொரு மனைவி இருக்கிறாளா!’ - நூல்நுனி அளவேயானாலும் அவன் மீதான நம்பிக்கை அவளுக்கு அற்றுப்போகவில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியாக அதிர்ந்தது அவள் மனம்.

அதிர்ந்த விழிகளோடு அவனை வெறித்து நோக்கினாள். “அர்.. அர்ஜுன்.. நிஜமாவே.. ம்..மேரீடா?” - உதடு துடிக்கக் கேட்டாள்.

“எஸ்.. ஆனா அது உனக்கு எப்படி தெரிஞ்சுது?” - வறண்ட குரலில் கேட்டபடி குளியலறைக்குள் சென்று கைகழுவி விட்டு திரும்பினான்.

“என்னோட அம்மாவை சந்திச்சோம்” - மெல்ல முணுமுணுத்தாள்.

“வாட்! ஷோபாவையா!”

சட்டென்று எழுந்தாள் மிருதுளா. “உனக்கும் தெரியுமா! எல்லாமே தெரியுமா! நீயுமா நடிச்ச?” - அவள் குரல் நடுங்கியது.

“நோ.. நா எப்பவும் நடிக்கல.. குறிப்பா உன்கிட்ட..” - உறுதியாக மறுத்தான் டேவிட்.

“பொய்..” - மறுப்பாக தலையசைத்தாள். “ஒரு நாள் கூட நீ உண்மையை சொல்லல.. அர்ஜுன் என்னை ஏமாத்தறது தெரிஞ்சும்.. நீ வாய் திறக்கல. ஓ காட்! இங்க எல்லாமே பொய்.. டிராமா.. எப்படி நம்பினேன்!” - அழுதாள்.

“மிருது ப்ளீஸ்” - அவளை சமாதானம் செய்ய முயன்று அவள் கையை பிடித்தான்.

“ப்ளீஸ் டோன்ட் டச்..” - வெடுக்கென்று கையை உருவிக் கொண்டு விலகினாள்.

“மிருது..”

“வேர் இஸ் ஷி நௌ?”

ஒரு நொடி மௌனமான டேவிட், “நோ மோர்..” என்றான் கனத்த குரலில்.

மிருதுளா திகைத்துப் போய் அசைவற்று நின்றுவிட்டாள்.

“என்ன! என்ன சொன்ன?” - சரியாகத்தான் கேட்டோமா.. அல்லது வேறு யாரையும் சொல்கிறானா! அதிர்ச்சியும் குழப்பமுமாக பார்த்தாள்.

“ஆர்த்தி இப்போ உயிரோட இல்ல” - தெளிவாகக் கூறினான் டேவிட்.

விடுதலை உணர்வு.. நிம்மதி.. முதல் நொடி அவள் உணர்ந்த உணர்வு இதுதான். மறுநொடியே அதிர்ந்தாள். அத்தனை பெரிய ராட்சசியா அவள்! ஒரு பெண்ணின் மரணத்தில் நிம்மதியை உணரும் ராட்சசி! - மனசாட்சி உலுக்க கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

‘ஓ - மை - காட்!’ - தளர்ந்து அமர்ந்தாள். சுயநல பிண்டமாக தன்னை உணர்ந்தாள்.

சற்று நேரம் தன்னைத்தானே சாடியபடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்தது. சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“என்னோட அப்பா.. அவர்.. அவருக்கு இதுல.. டேவிட்.. அப்படி ஒன்னும் இல்லைல?” - தடுமாறினாள்.

டேவிடின் முகம் கருங்கல் போல் இறுகியது.

“ப்ளீஸ் சொல்லு..”

“பகவான், ஷோபா இரண்டு பேருமே சேர்ந்து பண்ணின ஆபரேஷன். அர்ஜுனுக்கு வச்ச குறி.. ஆர்த்தியை முடிச்சிடிச்சு.”

பகீரென்றது அவளுக்கு. என்ன உளறுகிறான் இவன்!

“நோ.. இல்ல.. இல்ல டேவிட்.. நீ தப்பா சொல்ற. இதுல ஏதோ கன்பியூஷன் இருக்கு. அம்மா ரொம்ப பயந்தவங்க. இதெல்லாம்.. இதெல்லாம்.. நோ..” - கடுமையாக மறுத்தாள்.

டேவிட் அவளை வெறுமையாக பார்த்தான். இதற்கு முன் அவனிடம் அந்த பார்வையை அவள் சந்தித்ததே இல்லை.

“டேவிட்!”

“அர்ஜூன்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இரு மிருதுளா. அவன் காயம்பட்ட புலி. ஆர்த்தியை பற்றி பேசறதை தவிர்த்துடு. ஒரு ஃபிரண்டா என்னோட அட்வைஸ் இது” - சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அதை ஜீரணிக்க அவளுக்கு தனிமையையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் டேவிட்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 55

அர்ஜுன் வீடு திரும்பும் போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. உறக்கம் வராமல் வாசலில் நடைபழகிக் கொண்டிருந்த டேவிட், நண்பனை கண்டதும் நிம்மதியடைந்தான். அர்ஜுன் காரை கராஜில் விட்டுவிட்டு வெளியே வந்த போது, “காலையிலிருந்து எங்க போயிருந்த?” என்றபடி அருகில் நெருங்கியவன் புருவங்கள் முடிச்சிட குழப்பத்துடன் அவனை பார்த்தான்.

கண்கள் மிதந்தன.. முகம் ஜிவுஜிவுவென்று சிவந்திருந்தது. குடித்திருக்கிறானா! “அ..ர்..ஜு..ன்!” - நம்ப முடியாத வியப்புடன் அவனை ஏறிட்டான்.

“எங்க அவ?” - அவனுடைய முதல் கேள்வி மிருதுளாவை பற்றியதாகவே இருந்தது.

“ஸ்லீப்பிங்” - பதிலை பெற்றுக் கொண்டு அவளை தேடி வந்தான்.

அறையில் வெளிச்சம் மங்கியிருந்தது. கொடிபோல் கட்டிலில் கண்மூடிக் கிடந்தாள் மிருதுளா. சீரான மூச்சுக்காற்று அவள் ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள் என்றது. அருகில் சென்றான். அவள் கற்றை கேசம் சரிந்து முகத்தில் விழுந்திருந்தது. குனிந்து ஒற்றை விரலால் அதை ஒதுக்கிவிட்டான். நீர்நிலை கரையில் பூத்த குவளையை நிலவொளியில் காண்பது போலிருந்தது விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் மலர்முகம் - கபடமற்ற முகம். பெருமூச்சுவிட்டான்.

நெற்றிக்கட்டு புதிதாக மாற்றப்பட்டிருந்தது. மலரிதழை தொடுவது போல் அதை நுனிவிரலால் வருடினான். “ஏன் என்னை சந்திச்ச?” என்றபடி அவள் கையை எடுத்து இதழ் பதித்து கண்களுக்குள் பொத்திவைத்துக் கொண்டான்.

மிருதுளாவின் இமைகள் மெல்ல விரிந்தன. அவள் உறங்கவில்லை. மனதில் அத்தனை சஞ்சலமிருக்கும் போது உறக்கம் எப்படி வரும். அவன் வருவதை அறிந்து கண்களை மூடிக் கொண்டிருந்தாள். என்ன செய்கிறான் என்று பார்க்கும் ஆர்வமும் இருந்தது. அவள் எதை எதிர்பார்த்தாளோ மிகச்சரியாக அதையேதான் அவனும் செய்தான். அவள் உறங்குகிறாள் என்று எண்ணி மனதை திறந்தான். மிருதுளாவும் விழி திறந்தாள். கனிவுடன் அவனை நோக்கினாள்.

“யு லவ் மீ ரைட்?” - முணுமுணுத்த அவள் மெல்லிய குரலில் அர்ஜுன் நிமிர்ந்தான்.

மிதக்கும் அவன் விழிகள் கனிந்த அவள் கண்களோடு கலந்தன. “தூங்காம என்ன பண்ற?” - கடுமையை கொண்டு வர முயன்று தோற்று கரகரத்தது அவன் குரல்.

“யு ஃபீல் ஃபார் மீ..”

“நோ” - நெற்றியோடு நெற்றியை சேர்த்து முரணாய் மறுத்தான்.

முரண்பட்ட அவன் சொல்லையும் செயலையும் ரசித்தவள் மறுகணமே முகம் சுழித்தாள். காரணம் அந்த வாடை.. “ஆர் யு ட்ரங்க்?” - ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.

அர்ஜுன் உதடுகளை அழுந்த மூடினான். “ஏழு வருஷத்துக்கு பிறகு..” - ஆமோதிப்பாக தலையசைத்தான்.

ஏழு ஆண்டுகள் என்றதுமே அவள் மனம் ஆர்த்தியை உள்ளே கொண்டு வந்தது. கூடவே குழந்தையின் நினைவும் வந்தது.

“பையனா பொண்ணா? ஏழு வயசா? இல்ல இன்னும் அதிகமா?” - எழும்பாத குரலில் கேட்டாள்.

அர்ஜுன் அவளை ஊன்றி பார்த்தான். ‘ஏழு வயதா இல்லை அதிகமா?’ என்றால் அதைவிட சின்ன வயதாக இருக்க முடியாது என்பது தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் ஆர்த்தியையும் அவள் மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் கூட தெரிந்திருக்கிறது. டேவிட் பேசியிருக்கிறான் என்பதை ஊகிக்க நிமிடத்திற்கும் அதிக நேரம் தேவைப்படவில்லை அவனுக்கு.

அவன் செய்த அத்தனை அராஜகத்திற்கு பிறகும் அவள் காட்டிய கனிவிற்கு காரணம் தெளிவாக புரிந்தது. மிருதுளா அவனுக்காக வருந்துகிறாள். அவனுக்காக உருகுகிறாள். அவன் பக்கம் நிற்கிறாள் - அதுதானே அவனுடைய தேவை.. நெகிழ்ச்சியாக உணர்ந்தான். மீண்டும் அவள் கையைப் பிடித்து அழுத்தமாக முத்தமிட்டான். அவளை விட்டுவிட விரும்பாதவன் போல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவின் மறு கை தளிர்விரல்கள் அவன் முன் நெற்றி முடியோடு உறவாடின. இதமாய் இருந்தது. கண்களை மூடி ரசித்தான்.

நெற்றியிலிருந்து கன்னத்திற்கு இறங்கி அவன் தாடியை வருடினாள். மன அழுத்தமெல்லாம் மாயமாய் மறைவது போல் உணர்ந்தான். மனம் லேசாகி பறப்பது போல் தோன்றியது. உருகி குழைந்து அவள் உள்ளங்கையை தோளோடு அணைத்து அதில் தன் கன்னத்தை பதித்துக் கொண்டான்.

கொலைகாரன் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. அப்படி ஒரு பச்சிளம் சிசு போல் அவள் கண்களுக்கு தோன்றினான்.

அவள் பார்வை அவன் மீதே உறைந்திருந்தது. அதை உணர்ந்துதானோ என்னவோ அவனும் கண்விழித்து அவளை பார்த்தான். நொடியில் முகம் வாடியது. நெற்றி கட்டை மெல்ல வருடி, “வலிக்குதா?” என்றான்.

அவன் கையை நெற்றியிலிருந்து எடுத்து நெஞ்சில் இதயத்திற்கு மேல் வைத்தது, தலையை மேலும் கீழுமாக அசைத்தாள். அவள் இதயத்தின் வலி அவன் கண்களில் தெரிந்தது. மிருதுளா உதட்டை கடித்துக் கொண்டாள்.

“இன்னொரு தரம் இப்படி நடக்கக் கூடாது. ஹெல்ப் மீ.. ப்ளீஸ்..” - இறைஞ்சினான்.

அவனுடைய உணர்வுகள் தன்னோடு பின்னியிருப்பதை தெளிவாக உணர்ந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து நேராது என்கிற நம்பிக்கை உதித்தது. மகிழ்ச்சியோடு மேலும் கீழும் தலையசைத்தாள்.

முதல் நாள் போலவே அவளை இறுக அணைத்துக் கொண்டு அருகே படுத்தான் அர்ஜுன். அவள் தடுக்கவில்லை. மாறாக அவனோடு அணைந்து கொண்டு, “அர்ஜுன்” என்று மெல்ல அழைத்தாள்.

அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, “ம்ம்ம்” என்றான் அர்ஜுன்.

“இந்த பகை.. கோபம்.. இதெல்லாம் வேண்டாமே அர்ஜுன். விட்டுட கூடாதா?” - சட்டென்று அவன் உடலில் ஒருவித இறுக்கம் வந்ததை அவள் உணர்ந்தாள்.

“எனக்காக.. ப்ளீஸ்..” - குரல் குழைந்தது.

சவுக்கடி போல் உள்ளே சுரீரென்றது. அவனுக்குள் அடங்கியிருந்த அசுரன் எழுந்து உறுமினான். அவளுடைய கனிவையும் குழைவையும் சந்தேகத்தோடு உற்று நோக்கினான். பெற்றோருக்காக நடிக்கிறாள் என்று எச்சரித்தான். விருட்டென்று அவளிடமிருந்து விலகி எழுந்தான் அர்ஜுன். மிருதுளா மிரண்டு விழித்தாள்.

“என்ன ஆச்சு அர்ஜுன்?” - மருண்ட அவள் விழிகளை கண்டதும் அவன் மனம் மாறியது.

“இல்ல.. ஒன்னும் இல்ல.. தண்ணி..”- தடுமாறினான். அவளை மீண்டும் ஒரு முறை காயப்படுத்திவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தான்.

“இதோ கொண்டு வரேன்” - எழுந்து குடுகுடுவென்று சமையலறைக்கு ஓடி தண்ணீர் பாட்டிலோடு வந்தாள். அவன் அதை வாங்கி மடமடவென்று பருகிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். சட்டையெல்லாம் நனைந்துவிட்டது. அவள் துடைத்துவிட்டாள். முடிச்சிட்டிருந்த புருவத்தை நீவிவிட்டாள்.

“ஒன்னும் இல்லைல?” - மீண்டும் கேட்டாள்.

அவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். ஆனால் அது பொய். அவன் மனம் கலங்கியிருந்தது. அந்த கலக்கத்துடனே கண்ணயர்ந்தான்.

கையில் மது கோப்பையை பிடித்தபடி கலகலவென்று சிரித்தார் பகவான். அவருக்கு விருப்பமான காமெடி நடிகர் ஒருவரின் நடிப்பை சிலாகித்து அவரைப் போலவே பேசிக் காட்டியபடி, டைனிங் டேபிள் நிறைய உணவு பதார்த்தங்களை கொண்டுவந்து நிரப்பிக் கொண்டிருந்தாள் ஷோபா.

வயது வித்தியாசம் பார்க்காமல் அவனோடு இறங்கி பழகும் அவர்கள் இருவரும் அர்ஜுன் ஹோத்ராவின் மனதுக்கு நெருக்கமானவர்கள். பகவானுக்கும் அவனுக்கும் பொதுவான விருப்பங்கள் நிறைய இருந்தன. கூடை பந்து விளையாட்டிற்கும் குத்துச் சண்டை பயிற்சிக்கும் மட்டும் அல்ல மது போதைக்கும் ஆண் உலக அந்தரங்க அளவளாவல்களுக்கும் கூட இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல கூட்டாளிகள்.

குறுகிய காலத்திற்குள் அவர்களுடைய நட்பு விருட்சமாய் வளர்ந்திருந்தது. பகவான் கோர்த்தாவின் நெளிவு சுளிவுகளை அவனுக்கு நுட்பமாகக் கற்று கொடுத்தார். இருவரும் இணைந்து செயல்பட்ட எந்த ஆபரேஷனும் தோல்வியடைந்ததில்லை. இப்போதும் அப்படி ஒரு ஆபரேஷனின் வெற்றியைத்தான் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஷோபா தன் கையாலேயே சமைத்து அவனுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தாள். ஏழு மாத கருவை வயிற்றில் சுமந்துக் கொண்டிருந்த மனைவியை வற்புறுத்தி நண்பனின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

பகவான் வெகு உற்சாகமாக இருந்தார். வருந்தி வருந்தி அவனை மது அருந்த வைத்தார். மனைவி உடன் வந்திருப்பதை கூட நினைவில் கொள்ளாமல் அவரோடு சேர்ந்து கொண்டாட்டமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

பேச்சும் சிரிப்பும் அமளிப்பட்டது. ஷோபா பரிமாற மற்ற மூவரும் உணவருந்த அமர்ந்தார்கள். ஆர்த்திக்கு கணவன் மீது கடலளவு காதல்.. நெஞ்சம் நிறைய ஆசை.. அதனால் தான் ஷோபா மற்றும் பகவானின் கண்ணை தட்டிவிட்டு கணவனின் தட்டை தன் பக்கம் இழுத்துக் கொண்டு தன் தட்டை அவனுக்கு தள்ளிவிட்டாள். அதில் ஒரு சந்தோஷம்.. வெட்கமும் காதலுமாக கணவனின் கண்களை பார்த்துக்கொண்டே அவனுடைய உணவை சுவைத்தாள்.

ஆமணக்கு விதையில் செய்த பிரத்யேக விஷம் அவன் உணவில் கலந்திருப்பதும், அதை தானும் உண்டு தன் குழந்தையையும் கொன்று கொண்டிருக்கிறோம் என்றும் அவளுக்குத் தெரியாது.

பாதி உணவிலேயே அவளிடம் மாற்றம் தெரிந்தது. பகவான் மிரண்டு போனார். மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளிறிய முகத்தோடு அவளும் ஆர்த்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இது எப்படி நடந்ததென்று அவர்களுக்கு புரியவே இல்லை. அவனுக்குத்தானே விஷம் கொடுத்தோம்.. அதுவும் மூன்று மணி நேரம் கழித்து மெல்ல மெல்ல கொல்லும் விஷம்.

இரவு நேரம் என்பதால் படுக்கையிலேயே உயிர் போய்விடும். அப்படியே யாருக்கும் தெரிந்தாலும் பிரச்சனை என்ன என்று கண்டு பிடிப்பதற்குள் உயிர் பிரிந்துவிடும் என்று பக்காவாக திட்டம் போட்டிருந்தார்கள்.

பார்த்து பார்த்து சமைத்தது போல் விஷத்தையும் ஷோபாவே தன் கையால் தயார் செய்திருந்தாள். ஆனால் இந்த குழப்பம் எப்படி நடந்தது! அவளுக்கு புரியவே இல்லை. - கணவனை பார்த்தாள்.

ஆர்த்தி கர்ப்பிணி.. அர்ஜுன் அளவுக்கு எதிர்ப்பு சக்தியில்லாதவள். அவனுக்கு கலந்த விஷம் இவள் உடம்பில் விரைவாக வேலை செய்துவிட்டது. - அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்வையாலேயே முடிவு செய்து கொண்டார்கள்.

விருந்தில் விஷம் கலந்திருப்பதை புரிந்துக்கொள்ள அர்ஜுன் ஹோத்ராவிற்கு நொடி கூட தேவைப்படவில்லை.

“ப-க-வா-ன்” என்று கர்ஜனையுடன் எழுந்தான்.

மறுநொடியே ஷோபாவின் கையில் முளைத்த கைத்துப்பாக்கி துப்பிய தோட்டா அர்ஜுன் ஹோத்ராவின் நெஞ்சை துளைத்தது. “ஆஆஆ..” - துள்ளி துடித்து தரையில் விழுந்தான். மீண்டும் இன்னொரு தோட்டா.. “ஆஆஆ..” - மீண்டும் துடித்து அந்த உடல்.

“அ..ர்..ஜு..ன்..! அ..ர்..ஜு..ன்..!” - உலுக்கி எழுப்பினாள் மிருதுளா.

விரண்டு எழுந்தான் அர்ஜுன். வியர்த்துக் கொட்டியது. உடல் வெடவெடவென்று நடுங்கியது. கண்கள் இலக்கில்லாமல் எங்கெங்கோ அலைந்தது.. எதையோ தேடியது..

“அர்ஜுன்.. ப்ளீஸ்.. வேக் அப்..” - பதற்றத்துடன் உலுக்கினாள் மிருதுளா.

“ஹாங்..” - சட்டென்று நிகழ்வுக்கு மீண்டு அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“என்ன ஆச்சு?”

“என்ன?”

“கத்துனீங்களே! உடம்பெல்லாம் தூக்கிப் போட்டுச்சு. ஏதாவது கனவா?” - அவன் தலை கோதினாள்.

அவள் கையை தட்டிவிட்டு, “தள்ளி போ” என்றான் கடுமையாக. மிருதுளா விழித்தாள்.

“அர்ஜுன்.. ஆர் யு ஓகே?” - பயத்துடன் கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை.

ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான். அன்றைய நினைவுகள் அலையலையாய் மேலெழுந்தன.

இருமுறை அவனை சுட்டு தள்ளிவிட்டு, ஒழிந்தான் என்று இருவரும் ஓடிவிட்டார்கள். இருந்த பதட்டத்தில், ஆர்த்தி உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கவனிக்க தவறிவிட்டார்கள். அதுதான் அவர்கள் செய்த பெரும் பிழை.

தட்டுத்தடுமாறி அலைபேசியை தேடியெடுத்து, நடந்த அசம்பாவிதத்தை ராகேஷ் சுக்லாவிற்கு தெரியப்படுத்திய ஆர்த்தி, ஆட்கள் வந்து பார்க்கும் போது கணவன் மார்பில், தோட்டா துளைத்த இடத்தில் துணியை வைத்து அழுத்தியபடி அவன் மீதே பிணமாய் கிடந்தாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 56

மிருதுளா கண் விழித்த போது அர்ஜுன் அறையில் இல்லை. ஒரு கனவு - அது எவ்வளவு பெரிய பயங்கரமான கனவாகவும் இருக்கட்டும். ஆனால் வெறும் கனவு அர்ஜுன் ஹோத்ரா எனும் ஆளுமையான மனிதனை இந்த அளவு பாதிக்கக் கூடுமா? நேற்று இரவு அவன் பதட்டப்பட்டதை அவள் பார்த்தாள். அவன் உடல் நடுங்கியதை உணர்ந்தாள். அவன் பயந்தான்.. அந்த பாதிப்பிலிருந்து மீள அவனுக்கு வெகு நேரம் பிடித்தது. அவளால் நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? - யோசிக்கும் போதுதான் அவளுக்கு அந்த விஷயம் பிடிபட்டது. அது வெறும் கனவாக மட்டும் இருக்க முடியாது.

சிந்தனையுடன் எழுந்து வெளியே வந்தாள். ஹாலில் எதிர்பட்டான் டேவிட். அவனை பார்த்ததும் தயங்கி நின்றாள்.

“என்ன மிருது?” - முகத்தை பார்த்தே அவள் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்று புரிந்துக்கொண்டான்.

ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து அர்ஜுன் அருகில் என்பதை உறுதி செய்துக் கொண்டு, “அர்ஜுன் மனைவிக்கு என்ன ஆச்சு?” என்றாள் மெல்லிய குரலில்.

சட்டென்று டேவிட்டின் முகத்திலிருந்த இலகுத்தன்மை மறைந்தது.

“இந்த விஷயத்தை பற்றி எந்த அளவுக்கு என்னால பேச முடியுமா அந்த அளவுக்கு நா பேசிட்டேன். இனி உனக்கு ஏதாவது தெரியனும்னா அர்ஜுன் மட்டும்தான் சொல்ல முடியும்” என்றான் அந்நிய குரலில்.

கோர்த்தாவின் விசுவாசிகள் அனைவரையும் வெகுவாய் பாதித்திருந்த ஆர்த்தியின் மரணம் டேவிடையும் பாதித்திருந்தது. அதனால்தான் தன்னையறியாமல் அவளிடம் முகத்தை காட்டிவிட்டான். ஆனால் சட்டென்று வாடிவிட்ட அவள் முகம் அவனை சங்கடப்படுத்திவிட்டது. உடனே தணிந்து, “அர்ஜுன் கண்டிப்பா உன்கிட்ட பேசுவான்” என்றான்.

கண்களை எட்டாத புன்னகையில் அவன் முயற்சியை அங்கீகரித்தவள், “இந்த பிரச்சனையை சரி பண்ண நினைக்கிறேன் டேவிட். ஹெல்ப் மீ” என்றாள்.

மறுப்பாக தலையசைத்து, “உன்னால முடியாது” என்றான் டேவிட்.

“ட்ரை பண்றேன்”

“வேண்டாம்..”

“ஏன்?”

“பிரச்சனை உன் பேரண்ட்ஸோட முடியட்டும். நீ உள்ள போய் மாட்டிக்காத. ஃபிரீயா விட்டுடு.”

“எப்படி டேவிட்? அர்ஜுன் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்க மாதிரி தெரியுது. பழிவாங்கறதுக்காக எந்த எல்லைக்கும் போவாரு போலருக்கே!” - பயம் தெரிந்தது அவள் பேச்சில்.

டேவிட் மௌனமானான்.

“என்ன?”

“அர்ஜுனை கேர் பண்றியா நீ?”

“ஏன் அப்படி கேட்கற டேவிட். கண்டிப்பா கேர் பண்ணறேன்.”

“அப்போ விட்டுடு. இந்த விஷயத்துல நீ தலையிடாத” - சுலபமாக சொல்லிவிட்டு போய்விட்டான். ஆனால் சம்மந்தப்பட்டிருப்பது அவளுடைய பெற்றோர். மனம் கேட்குமா?

விலகிச் செல்லும் அவன் முதுகையே சற்று நேரம் வெறித்துக் கொண்டிருந்தவள், “அர்ஜுன் எங்க?” என்றாள் சத்தமாக. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேலல்லவா?

“பின்பக்கம்..” - பதில் கொடுத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தான் டேவிட்.

‘பின்பக்கமா!’ - வியப்புடன் வெளியே வந்து, வீட்டை சுற்றி கொண்டு பின்பக்கம் சென்றாள்.

வெட்டப்பட்ட மரக்கிளைகள் பரவலாக கிடந்தன. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. மழை வரும் போல் வானம் கருத்திருந்தது. ‘எங்கே அவன்?’ - அவள் பார்வை பராமரிப்பற்று கிடந்த அந்த தோட்டத்தை வட்டமடித்து.

காட்டுத்தனமாக வளர்ந்து கட்டுக்கடங்காமல் கிளைவிட்டு வீட்டின் மேல் படர்ந்து கிடந்தது அந்த பெரிய மரம். கிளைகள் மோதி சுவர் சேதமடைய துவங்கியிருந்தது. வேர்கள் ஊடுருவி தரையில் விரிசல்கள் விழ துவங்கியிருந்தது. ஒற்றை மனிதனாய் அந்த மரத்தில் ஏறி கிளைகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

மிருதுளா அவனை தேடி மரத்தடிக்கு வந்தாள். அடர்ந்த கிளைகளுக்குள் மறைந்திருந்தவன் அவள் வருகையை உணர்ந்து இலைகளை விளக்கி அவளை பார்த்தான்.

வெட்டி வீழ்த்தப்பட்ட கிளைகளில் இடறி விழுந்துவிடாமல் கவனமாக அடியெடுத்து வைத்து நடந்தாள் மிருதுளா. அவள் பார்வை அங்கும் இங்கும் அலைந்தது. “அர்ஜுன்..” - குரல் கொடுத்தாள்.

“இங்க?” - திடீரென்று ஒலித்த குரலில் திடுக்கிட்டு அண்ணார்ந்து பார்த்தாள். மேலே, மரக்கிளையில் விசை ரம்பத்துடன் அமர்ந்திருந்தான்.

“என்ன பண்றீங்க?”

“தெரியல?”

“தெரியுது. ஆனா நீங்க ஏன் இதை பண்ணிட்டிருக்கீங்க?”

“பிடிச்சிருக்கு.. செய்றேன்.. நீ உள்ள போ.”

மீண்டும் ரம்பத்தை இயக்கி மேல் கிளையில் அழுத்திப் பிடித்தவன், அவள் அசையாமல் நிற்பதை கண்டு ரம்பத்தின் விசையை கட்டுப்படுத்தினான்.

“உள்ள போன்னு சொன்னேன்ல?” - அதட்டினான்.

“மழை வர மாதிரி இருக்கே”

“கிளை பாதி கட் ஆயிருக்கு”

“காத்து பலமா அடிக்குது”

“நீ உள்ள போ”

“கீழ இறங்கி வாங்க”

“எனக்கு வேலை இருக்கு”

“இது ரொம்ப ரிஸ்க்”

“காதுல விழல? செவிடா நீ?”

“பிடிவாதம் பிடிக்கிறீங்க”

“நா என்ன செய்றேன்னு எனக்கு தெரியும்”

“நா உள்ள போகமாட்டேன்”

“அப்போ நில்லு.. மரம் மேல விழுந்து நசுங்கலாம்” - எரிச்சலுடன் கூறிவிட்டு மீண்டும் ரம்பத்தை இயக்கினான். ஆனால் கைகள் வலுவிழந்தன.. கவனம் சிதறியது.. அவனால் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை. இடையூறாக அவள் நின்றாள். அழுத்தமாக நின்றாள்.

‘அப்படி என்ன பிடிவாதம்? நீ சொன்னால் உடனே நான் மண்டியிட்டுவிட வேண்டுமா?’ - அவனுக்கு கோபம் வந்தது. விட்டு கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்து செய்தான்.

இருவரும் நீயா-நானா என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். மரம் அங்கு ஒரு காரணி மட்டும் தான். இவருடைய மனமும் வாதாடிக் கொண்டிருந்த உண்மையான பிரச்சனை வேறு.. அந்த நேரத்தில் அங்கே டேவிட் வந்தான்.

“காட் எ நியூஸ் அர்ஜுன்”

“என்ன?”

“சுக்லாஜி பேசணுமாம். கால் பண்ண சொன்னார். உடனே..” - அவசரப்படுத்தினான். அர்ஜுன் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

மிருதுளாவை பார்த்து முறைத்துக் கொண்டே கீழே இறங்கியவன், அவளிடம் நெருங்கி, “டோன்ட் சேலஞ் மீ” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு உள்ளே வந்தான்.

அவனை பின் தொடர்ந்து வந்தவள், வெளியே சென்றால்தான் பெற்றோரை தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி “இன்னிக்கு காலேஜ் போறேன்” என்றாள்.

சட்டென்று நின்று அவளை திரும்பிப் பார்த்த அர்ஜுன், “வேண்டாம்” என்றான். அவன் பார்வை அவள் தலையில் போடப்பட்டிருந்த கட்டில் பதிந்திருந்தது.

“ஐம் ஆல்ரைட்.. எனக்கு ஒன்னும் இல்ல” - சமாளிக்க முயன்றாள்.

ஒரு கபட சிரிப்புடன், “இனி நீ காலேஜ் போக வேண்டிய அவசியம் இல்ல” என்றான்.

“மீன்ஸ்?”

“நீ என்கிட்ட இருக்கேன்னு ஷோபாவுக்கு தெரியப்படுத்தியாச்சு. இனி நடக்க வேண்டியது தானா நடக்கும். நீ ரிலாக்ஸ்டா இரு” - ஏளனம் தெறித்தது அவன் பேச்சில்.

மிருதுளாவின் முகம் விழுந்துவிட்டது. அதை புறக்கணித்துவிட்டு அலைபேசியை எடுத்து சுக்லாவுக்கு தொடர்பு கொண்டான். ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார்.

போனை அணைத்துவிட்டு வெளியே வந்தான். அவனுடைய வீட்டை கடந்து சென்ற வெண்ணிற ஆக்டிவா சாலையில் கிடந்த கல்லில் ஏறி ஸ்கிட் ஆகி சரிந்தது. அதில் பயணம் செய்த பெண் அர்ஜுனை பார்த்தபடியே கீழே விழுந்து உருண்டாள்.

ஒரு நொடி நிதானித்து அந்த பெண்ணை பார்த்தவன் பிறகு உதவிக்கு ஓடினான். அவளை தூக்கிவிட்டு அடியேதும் பட்டிருக்கிறதா என்று விசாரித்தான். சின்ன சிராய்ப்புகளை தவிர பெரிய அடியேதும் படவில்லை என்று தெரிந்துக் கொண்டு வண்டியை நிமிர்த்திக் கொடுத்தான். அவள் நன்றி கூறிவிட்டு மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள். கை மாறிய பென் ட்ரைவோடு வீட்டை நோக்கி நடந்தான் அர்ஜுன்.

*******************

அது ஒரு ஸ்டார் ஹோட்டலின் பார். அர்ஜுன் உள்ளே நுழைந்த போது மது அருந்திக் கொண்டிருந்தார் ராகேஷ் சுக்லா. முகம் கருத்து கண்கள் சிவந்து கடுமையான முகபாவத்துடன் அமர்ந்திருந்தார். ஏதோ சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. மனதில் தோன்றிய எதையும் முகத்திலோ பாவனைகளிலோ காட்டிக்கொள்ளாமல் இயல்பாக சென்று அவருக்கு எதிரில் அமர்ந்தான்.

ஓரிரு நொடிகள் அவனை மெளனமாக பார்த்தவர், ஒரு கண்ணாடி கோப்பையில் மதுவை நிரப்பி அவன் பக்கம் தள்ளினார்.

அர்ஜுன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, “நா குடிக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்” என்றான்.

“பழக்கமெல்லாம் மாறிடிச்சுங்கறதும் எனக்கு தெரியும்” என்றான் அவர் அழுத்தமாக.

அர்ஜுன் அவரை வெறித்துப் பார்த்தான். “என்னை வேவு பார்க்கறீங்க..”

“நிச்சயமா.. எல்லாரையும் பார்க்கறேன்.. உன்னையும் பார்த்துக்கிட்டே தான் இருக்கறேன்.”

அர்ஜுன் சிரித்தான். ஒரு மெல்லிய சிரிப்பு.. அந்த சிரிப்பு அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது. இன்னொரு கோப்பை மதுவை மடமடவென்று உள்ளே இறக்கினார்.

“இது ஒரு ட்ராப் அப்படின்னு சொன்ன.. நம்பினேன். அவளை வச்சு அந்த பகவானை பிடிக்கப் போறேன்னு சொன்ன. சந்தோஷப்பட்டேன். என்ன நடந்துக்கிட்டிருக்கு?”

“எல்லாம் பிளான் படி கரெக்ட்டா போயிட்டு இருக்கு.”

சுக்லா மறுப்பாக தலையசைத்தார். :உனக்கு அவ மேல ஆசைன்னு எனக்கு தெரியும். ஆசை தீர்ற வரைக்கும் வச்சு என்ஜாய் பண்ணிட்டு முடிச்சிடுவேன்னு நெனச்சேன்” என்றார்.

அர்ஜுனின் முகம் கருத்தது. தாடை இறுகியது. சுக்லா அவனை வெறித்துப் பார்த்தார். “விழுந்துட்ட இல்ல? அவகிட்ட.. அந்த பகவானோட இரத்தத்துக்கிட்ட.. ஷோபாவோட பிரதிகிட்ட.. விழுந்துட்ட இல்ல?” - கொடூரமாக மாறியது அவர் முகம்.

“இல்ல.. அப்படி எதுவும் இல்ல” - சுதாரிக்க முயன்றான். அவர் காது கொடுக்கவில்லை.

“என் பொண்ணோட இடத்துக்கு - என் மகள் ஆர்த்தியோட இடத்துக்கு கொண்டு வர அந்த துரோகியோட மகள்தானா கிடைச்சா உனக்கு?” - வெறுப்புடன் கேட்டார். விக்கித்துப் போனான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 57

ராகேஷ் சுக்லாவின் வார்த்தை நெஞ்சுக்குள் ஈட்டி போல் பாய்ந்தது. குரல் வேண்டுமானால் அவருடையதாக இருக்கலாம். ஆனால் கேள்வி அவளுடையது - ஆர்த்தியுடையது.

‘என்னுடைய இடத்தில் என்னை கொன்றவர்களின் மகளா!’ - அவள் ஆன்மாவின் அழுகுரல் செவியில் ஒலித்தது. நாணறுந்த வில் போல் விறைத்து நிமிர்ந்தான் அர்ஜுன். முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்துவிட்டது. தீ பிடித்துக் கொண்டது போல் உள்ளம் எரிந்தது. இறுகிய முகத்துடன் மதுக்கோப்பையை கையில் எடுத்தான்.

“என் அன்பு மனைவிக்காக” என்றபடி கோப்பையை உயர்த்தினான். ஓரிரு நொடிகள் அவன் முகத்தை ஊன்றி பார்த்த ராகேஷ் சுக்லா, தன்னுடைய கோப்பையை எடுத்து, “நம்புறேன்” என்று சியர்ஸ் செய்தார்.

முழு கோப்பையையும் ஒரே மடக்கில் தொண்டையில் சரித்தான் அர்ஜுன். முகம் ஜிவுஜிவுவென்று சிவந்து போனது. கிளாஸை கணீரென்று டேபிளில் வைத்துவிட்டு, “ஆர்த்தி உங்க மக மட்டும் இல்ல” என்றான்.

அவர் பதில் சொல்லாமல் அவன் முகத்தை வெறித்துப் பார்த்தார். பிறகு ஆமோதிப்பாக தலையை மேலும் கீழும் அசைத்தார்.

“உன் மனைவியையும் குழந்தையையும் கொன்னு உன்ன தனிமரமா ஆக்கின மாதிரி, அவனோட மனைவியையும் மகளையும் கொன்னு அவனை தனிமரமா ஆக்கி.. அதுக்கப்பறம் அவனை கொல்லுவேன்னு சபதம் எடுத்திருக்க. மறந்துடலையே?” - புருவங்கள் நெரிய கனத்த குரலில் கேட்டார்.

அர்ஜுன் ஹோத்ராவின் முகம் இரும்பு குண்டலம் போல் இறுகியது.

“அவ என் மனைவி - வயித்துல என்னோட குழந்தையோட செத்துட்டா.. இங்க.. என் நெஞ்சுல..” - என்று தன் மார்பை தட்டிக்காட்டியவன், “இங்க எரியிற நெருப்பு இன்னும் அணையல.. அணையாது” என்றான்.

ராகேஷ் சுக்லாவின் கண்களில் ஈரம் தெரிந்தது. கோப்பையில் மதுவை நிரப்பி மடமடவென்று குடித்தார்.

“உன்ன நம்பனுன்னுதான் விரும்பறேன். ஆனா கண்ணுக்குள்ள விழுந்த துரும்பு மாதிரி ஒரு விஷயம் என்னை உருத்திக்கிட்டே இருக்கு. க்ளீயர் பண்ணு” - என்றார்.

“கேளுங்க. என்ன டவுட்?”

“அவளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குற? அவளை ஏன் பாதுகாக்கற? உயிரைக் கூட கொடுக்க துணியிற போலருக்கே!”

“புரியல” - தாடையை தடவினான்.

“பிதர்கானிகா - ஹோட்டல் - கன் ஷாட் - இப்போ புரியுதா?”

ஆர்த்தியின் நினைவில் நெகிழ்ந்திருந்த மனம் சட்டென்று எச்சரிக்கை உணர்விற்கு தாவியது. அவருக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்கிற சிந்தனையோடு தலையை மேலும் கீழும் அசைத்தான்.

“உன்னோட உயிரை கூட பொருட்படுத்தாம அவளை காப்பாத்தியிருக்க - என் பொண்ணு உன்ன காப்பாத்தின மாதிரி. இதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே இருக்க முடியும்?” - கோரப்பசியில் உறுமும் அகோரன் அட்சரசுத்தமாக அவரோடு பொருந்திப் போவான்.

அர்ஜுன் அலட்டி கொள்ளாமல் தலையை குறுக்காக அசைத்தான். அவர் புருவம் சுருங்கியது.

“அன்னைக்கு டார்கெட் மிருதுளா இல்ல. வந்தது பகவானோட ஆள்.”

“வாட்?”

“வர்ற இன்ஃபர்மேஷன் எல்லாத்தையும் நம்பாதீங்க. சில நேரங்கள்ல பொய்கள் ரொம்ப பக்கத்துல இருக்கும்.”

நெற்றி சிந்தனையில் சுருங்க மீசையை நீவினார் சுக்லா.

“வந்தவன் மிருதுளாவை எச்சரிக்கவோ இல்ல தூக்கவோ கூட முயற்சி செய்திருக்கலாம். நா இடையில புகுந்துட்டேன். ஃபயர் பண்ணிட்டான்” - அர்ஜுன் விளக்கம் கொடுத்தான்.

“இன்னொரு இழப்பு என் பக்கத்துலேருந்து இருக்கக் கூடாது. சீக்கிரம் முடி. முதல்ல அம்மாவையும் பொண்ணையும். அடுத்து பகவானை” - உறுதியாகக் கூறினார் சுக்லா. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ஆமோதிப்பாக தலையசைத்தான் அர்ஜுன்.

*************************

வெளியே நன்றாக மழை பெய்துக் கொண்டிருந்தது. வராண்டாவில் கிடந்த பிரம்பு நாற்காலியில் கன்னத்தில் கைவைத்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள் மிருதுளா. சூடான காபி கப்புடன் அங்கே வந்தான் டேவிட்.

“எந்த கோட்டையை பிடிக்கனும்?” - அவளுடைய மனநிலையை இயல்பாக்க முயன்றபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான்.

பெருமூச்சுடன் அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா.

“சொன்னா ஹெல்ப் பண்ண போறியா என்ன?” - கேலி போல் தன் நிராசையை வெளிப்படுத்தினாள்.

அவளிடம் காபி கப்பை நீட்டி, “இந்த காபி மேல சத்தியம் செய்யட்டுமா?” என்றான் டேவிட் மென்புன்னகையுடன். அவன் எதிர்பார்த்தபடியே மிருதுளாவின் முகத்திலும் புன்னகை மீண்டது. காபியை கையில் வாங்கிக் கொண்டு, “என்னவோ போல இருக்கு. எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?” என்றாள்.

“அவ்வளவுதானே கிளம்பு”

“மழையா இருக்கே! வேணுன்னா கொஞ்சம் லேட்டா கிளம்பலாம்”

“ப்ச் ப்ச்.. கிளம்பனும்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் மழையென்ன வெயிலென்ன. எல்லாமே அனுபவம்தான். கிளம்பு” - ஊக்கினான். மகிழ்ச்சியோடு புறப்பட்டாள் மிருதுளா.

மிருதுளாவின் அருகாமை இதயத்தை இதமாக்க, விசிலொலியில் பாடலை இசைத்தபடி மிதமான வேகத்தில் காரை செலுத்தி, இலக்கில்லாமல் சிட்டியை சுற்றி வந்தான் டேவிட். அவனிடம் பேச்சு கொடுத்து ஆர்த்தியை பற்றி அறிந்து கொள்ள முயன்றாள் மிருதுளா.

அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்த டேவிட், “பிரச்னையை மறந்து ரிலாக்ஸ் பண்ணத்தான் வெளியே வந்தோம். அதைப் பற்றி யோசிக்காத” என்று கூறி அவளுடைய முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

இப்பொது மட்டும் அல்ல, காலையிலிருந்தே பல முறை பல விதங்களில் கேட்டு பார்த்துவிட்டாள். கழுத்தை அறுத்தால் கூட அந்தப் பெண்ணை பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டான் என்று தோன்றியது.

ஆனால் மிருதுளா அந்தப் பெண்ணோடு பல விதங்களில் தொடர்பு கொண்டிருக்கிறாள். அவள் அர்ஜுனின் மனைவி. அவளுடைய மரணத்தில் மிருதுளாவின் பெற்றோர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறது. இதையெல்லாம் சுமூகமாக சரி செய்ய வேண்டும் என்றால் அவளுக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும். மனம் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது.

“டேவிட்”

“ம்ம்ம்”

“பக்கத்துலதான் நான் தங்கியிருந்த ரூம் இருக்கு. என்னோட ஃபிரண்டை பார்க்கனும். போகலாமா?” - மெல்ல கேட்டாள்.

டேவிட் சற்று யோசித்தான். “ப்ளீஸ்..” - மிருதுளா கெஞ்சினாள்.

“அர்ஜூன்கிட்ட சொல்லாம வந்திருக்கோம்” - தயங்கினான்.

அனிச்சமலர் போல் வாடிவிட்டது அவள் முகம். அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவள் கேட்டதை செய்யாமல் இருக்க மனம் வரவில்லை. அர்ஜுன் இதை விரும்ப மாட்டான் என்று தெரிந்தும் காரை அவள் சொன்ன திசையில் திருப்பினான்.

மிருதுளாவை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு வாயிலிலேயே காவலாக நின்றான் டேவிட்.

மிருதுளாவை பார்த்ததும் அந்த தோழிக்கு மிகுந்த ஆச்சரியம். சமீபகாலமாக அவளுடைய நடவடிக்கையில் பெரிய மாற்றம் இருப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள் அந்த பெண். அதுமட்டும் அல்ல.. மிருதுளா ஏதோ பெரிய காரியங்களிலெல்லாம் ஈடுபடுவதாகவும் கல்லூரியில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இப்போது அடித்து ஊற்றும் மழையில், தலையில் ஒரு பெரிய கட்டுடன், யாரோ ஒரு புது மனிதனுடன் அவள் திடிரென்று வந்து நின்றதும் அவளுக்கு சற்று பதட்டமாகிவிட்டது. என்ன ஏது என்று விசாரித்தாள்.

மிருதுளா விரிவாக எதையும் கூறாமல் பூசி மெழுகி சமாளித்துவிட்டு கல்லூரியைப் பற்றி விசாரித்தாள். தன்னை தேடி யாரேனும் வந்தார்களா என்று கேட்டாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த தோழியின் அலைபேசியிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவள் ஷோபா.

மிருதுளாவிற்கு ஒரே ஆச்சரியம். அலைபேசியை வாங்கி, “நா இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் முதல் கேள்வியாக.

“ஃபாலோ பண்ணிகிட்டேதான் இருக்கேன். உன்ன நெருங்க முடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன். அடிச்சானா உன்ன? ரொம்ப கஷ்டப்படுத்தினானா?” - வேதனையுடன் கேட்டாள்.

மிருதுளாவிற்கு தொண்டையை அடைத்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“என்னம்மா நடக்குது?” என்றாள் கலக்கத்துடன்.

“எல்லாத்தையும் சொல்றேன். ஒன்னுவிடாம சொல்றேன். ஆனா போன்ல இல்ல. நீ எப்படியாவது அவனுக்கு தெரியாம அந்த வீட்டைவிட்டு மட்டும் வெளியே வந்துடு. உன்ன என்கிட்ட கொண்டுவந்து சேர்க்க ஆளுங்க சுத்திக்கிட்டே இருக்காங்க.”

“ஆர்த்திக்கு என்ன ஆச்சு? உங்களுக்கும் கோர்த்தாவுக்கும் என்ன சம்மந்தம்? அர்ஜுன் எதுக்கு உங்கள துரத்தனும்?”

“ஒரு கேள்விக்கும் என்னால இப்போ பதில் சொல்ல முடியாது.”

“எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்”

“நீ ஷோபாவோட பொண்ணு. பகவானோட இரத்தம். உன்னால அங்கிருந்து எஸ்கேப் ஆக முடியும்.”

“எனக்கு அப்படி செய்ய விருப்பம் இல்ல”

“உன்ன கொன்னுடுவான்”

“ஐம் ஹிஸ் லவ்”

“மண்ணாங்கட்டி..” - கடுங்கோபத்துடன் வந்து விழுந்தது வார்த்தை. மிருதுளா சட்டென்று மௌனமானாள்.

“மிருது.. என்னால ரொம்ப நேரம் பேச முடியாது. சொல்றத நல்லா கேட்டுக்கோ. அவனை நம்பாத. என்னையும் உன்னோட அப்பாவையும் உயிரோட பார்க்கனும்னா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டைவிட்டு வெளியே வா” - அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

நடந்த எதையும் அறியாத டேவிட், எதார்த்தமாக உள்ளே வந்து “கிளம்பலாமா?” என்றான் மிருதுளாவிடம். அவள் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தில் அவன் புருவம் சுருங்கியது.

“என்ன ஆச்சு?” என்றான். ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் மிருதுளா தலையசைத்துவிட்டு தோழியிடம் விடைபெற்று புறப்பட்டாள்.

வெளியே மழை ஓய்ந்திருந்தது. மிருதுளாவின் மனம் கலங்கிப் போயிருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாக இரண்டு பக்கமும் போக முடியாமல் தவித்தாள்.

“என்ன ஆச்சு மிருது? ஆர் யு ஓகே?” - அவளுடைய முகவாட்டம் உறுத்த மீண்டும் கேட்டான்.

“மெடிக்கல் ஷாப்புக்கு போ டேவிட்”

“ஏன்? என்ன ஆச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா?” - காரை மெடிக்கல் ஷாப் எதிரில் நிறுத்தியபடி கேட்டான். அவள் மீதிருந்த அக்கறை அவனை வேறுவிதமாக சிந்திக்கவிடவில்லை. அதுவே அவளுக்கு வசதியாகிவிட்டது.

“ஆமாம்.. நீ இங்கேயே இரு. நா வாங்கிட்டு வந்துடறேன்.”

“இல்லல்ல.. நானும் வரேன்.”

“பர்சனல் டேவிட். புரிஞ்சுக்கோ.. கொஞ்சம் ஸ்பேஸ் கொடு” - முகத்தை சுழித்துக் கொண்டு பட்டென்று கூறிவிட்டாள். கன்னத்தில் அறை வாங்கியது போல் திகைத்து போய் அமர்ந்துவிட்டான் டேவிட்.

அர்ஜூனாக இருந்திருந்தால் இவ்வளவு சுலபமாக சமாளித்திருக்க முடியாது என்கிற எண்ணத்துடன் மருந்து கடைக்குள் நுழைந்து டேவிட்டின் கண்ணை தட்டுவதற்காக ஒரு பொருளையும், தான் உண்மையில் வாங்க நினைத்த இன்னொரு முக்கியமான பொருளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள் மிருதுளா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 58

மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம். நீண்டு அகண்ட அந்த பெரிய சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்திருந்த கடைகளில் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சாலையில் இறங்கி நடக்க துவங்கியிருந்தார்கள். மிருதுளா மெடிக்கல் ஷாப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். காரில் சாய்ந்து நின்றபடி சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான் டேவிட். சாலையோர கடையில் ஒரு தொப்பியை விலைபேசி வாங்கி தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்த வெள்ளை ஜிப்பா அணிந்த ஒரு முதியவர், சுருட்டை வாயில் வைத்துவிட்டு தீப்பெட்டியை தேடி பாக்கெட்டை மாறி மாறி துழாவினார். பிறகு நெருப்புக்காக டேவிட்டிடம் வந்தார். பார்வையாலேயே அவருடைய தேவையை புரிந்துக்கொண்ட டேவிட் லைட்டரை எடுத்து அவரிடம் நீட்டினான்.

அதே நேரம் - வெவ்வேறு கடைகளிலிருந்து மூன்று வெளிநாட்டுப் பெண்கள் சாலையில் இறங்கி மக்களோடு கலந்தார்கள். முன் ஒருவர் - பின் இருவர் என்று மானசீக முக்கோண வடிவில் வியூகம் அமைத்து அவர்களை நோக்கி மெல்ல முன்னேறி கொண்டிருந்தார்கள்.

டேவிட் கொடுத்த லைட்டரை வாங்கி சுருட்டை பற்ற வைத்துவிட்டு அவனிடம் திருப்பி கொடுத்த அந்த ஜிப்பா மனிதர், இயல்பாக தலையிலிருந்த தொப்பியை எடுத்து தன் வழுக்கை தலையை தடவிவிட்டு மீண்டும் தொப்பியை அணிந்துக் கொண்டார்.

அதுதான் சிக்னல்.. டார்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பெண்களின் கை கைப்பைக்குள் நுழைந்தது.

டேவிட்டிற்கு நன்றி கூறிவிட்டு முதியவர் அங்கிருந்து விலகினார். அடுத்த நொடி முக்கோண வியூகத்தில் முதலிலிருந்த பெண்ணின் கைத்துப்பாக்கி டேவிட்டை குறிபார்த்தது. பொட்டுவெடி போல் பட்டென்று ஒரு சத்தம்.. அவ்வளவுதான்..

குறி வைத்தவளின் நெற்றிப்பொட்டில் சின்னதாய் - ஆழமாய் ஒரு காயம். சத்தமில்லாமல் தரையில் சரிந்தாள்.

முக்கோணத்தின் பின் இரு புள்ளிகளாய் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்த மற்ற இரு பெண்களும் அதிர்ந்தார்கள். பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அந்த பதட்டமும் கையிலிருந்த துப்பாக்கியும் அவர்களையும் காட்டிக் கொடுத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று திசைகளிலிருந்து சீற்றத்துடன் பாய்ந்த தோட்டாக்கள் அந்த பெண்களோடு சேர்ந்து அந்த முதியவரையும் - அதாவது முதியவர் வேஷத்தில் இருந்த மனிதரையும் மண்ணில் சாய்த்தது.

வெட்டி சாய்த்த மரம் போல் திடீரென்று ஆங்காங்கே நான்கு பேர் தரையில் சாய்ந்ததும், சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். உதவி செய்வதற்காக அருகில் வந்தார்கள். குபுகுபுவென்று பெருகிய குருதியையும் அவர்கள் கையிலிருந்த துப்பாக்கியையும் கண்டு அஞ்சி பதற்றத்துடன் பின்வாங்கினார்கள். சூழ்நிலையின் பரபரப்பை பயன்படுத்தி கொலையாளிகள் மாயமாக மறைந்து போனார்கள்.

மிருதுளா திகைத்துப் போய் நின்றாள். டேவிட்டிடம் பேசிவிட்டு திரும்பிய மனிதர் திடீரென்று தரையில் சாய்ந்ததை கவனித்துவிட்டுத்தான் ஓடிவந்தாள். அவருக்கு என்னவாயிற்று என்று பார்ப்பதற்குள் ஒரே சலலசப்பு.. இரத்தம்! - துப்பாக்கி! - கொலை! - அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உடல் நடுங்கியது.

மிரண்டு போய் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி கதவை மூடிவிட்டு ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான் டேவிட். கீழே விழுந்தவர்களை சுற்றி தேனீ கூட்டம் போல் மக்கள் குழுமினார்கள். எந்த பதட்டமும் இல்லாமல் வெகு இயல்பாக இன்ஜினை ஸ்டார்ட் செய்தான்.

‘என்ன நடந்தது! - யார் யாரை சுட்டார்கள்? அல்லது தங்களை தாங்களே சுட்டுக் கொண்டார்களா? சத்தம் வரவில்லையே!’ - மூளைக்குள் பரபரக்கும் கேள்விகளை வாய்விட்டு கேட்க முடியவில்லை. மொழி மறந்து போனவளாக படபடக்கும் இதயத்தோடு பார்வையை ஜன்னல் வழியே வெளிப்புறம் வீசினாள் மிருதுளா.

கூட்டமும் பரபரப்பும் அவள் பார்வையிலிருந்து விலக துவங்கியது. கார் பிரதான சாலையில் இறங்கி ஓட துவங்கியது.

“கேம் ஓவர்” - டேவிட்டின் கனத்த குரலில் திடுக்கிட்டு அவன்புறம் திரும்பினாள். இயல்பற்ற தோற்றம்.. இறுகிய முகம்.. கண்களில் பளபளப்பு - பகீரென்றது அவளுக்கு.

யாருக்கோ தகவல் தெரிவித்துவிட்டு அலைபேசியை அணைத்துப் போட்டுவிட்டு ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தவனின் பார்வை சாலையிலிருந்து பிறழவில்லை.

“இட்ஸ் ஆன் அசாசினேஷன்.. படுகொலை!” - வெறும் திகைப்பென்று சொல்லிவிட முடியாது. அதற்கும் மேல்.. என்னவென்றே புரியாத - புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாள்.

டேவிட் மிருதுளாவை திரும்பிப் பார்த்தான். அழுத்தமான ஒரு பார்வை. பிறகு அலட்டிக்கொள்ளாமல் தோளை குலுக்கிவிட்டு மீண்டும் சாலையில் கவனமானான்.

“எப்படி? எப்படி இது?” - வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை. குரல் நடுங்கியது. சில்லிட்டுப்போன கைகளை ஒன்றோடொன்று கோர்த்து இறுக்கிக் கொண்டாள்.

“க்ளீயர் - மாஸ்டர் - பிளான்..” - திருத்தமாகக் கூறினான்.

மிருதுளாவின் முகம் வெளிறியது. கண்களில் கலவரம் கூடியது. அர்ஜுனின் இன்னொரு பிரதியாக தெரிந்தான் டேவிட்..

“பிளானா!” – உதடு துடிக்க முணுமுணுத்தாள். அவன் எதுவும் பேசவில்லை. அவள்புறம் திரும்பவும் இல்லை .

சற்று நேரம் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “நான்தானே வெளியே கூப்பிட்டேன். இன்னிக்கு - இப்போ - இங்க வரனும்ங்கறது என்னோட ஐடியாதானே! என்னோட ஐடியால நீ எப்படி பிளான் பண்ணுவ?” - புரியவே இல்லை அவளுக்கு. நம்பவும் முடியவில்லை.

“சில நேரங்கள்ல அது நடக்கும்” - சுருக்கமாக கூறினான்.

“நோ.. நீ குழப்புற.. அப்படியெல்லாம் நடக்கவே முடியாது” - தலையை குறுக்காக அசைத்தாள்.

“இதைவிட அதிகமா கூட நடக்கும்”

“புரியல”

“மைண்ட் கேம். நம்மளோட தேவைக்கு ஏத்த மாதிரி எதிர்ல இருக்கவங்கள திங்க் பண்ண வைக்கிறது. சிச்சுவேஷனை கிரியேட் பண்ணறது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.”

மிருதுளாவிற்கு திக்கென்றது. “என்னையும் அப்படித்தான் ட்ரிக் பண்ணுனியா?” - பீதியுடன் கேட்டபடி கையிலிருந்த தூக்க மாத்திரை கவரை இறுக்கிப் பிடித்தாள்.

அவன் பதில் சொல்லவில்லை. மாறாக சின்னதாய் ஒரு புன்னகை செய்தான்.

*****

மிருதுளா வெளியே செல்ல வேண்டும் என்று அழைத்த போது டேவிட் எதார்த்தமாகத்தான் கிளம்பினான். சற்று தூர பயணத்திலேயே தங்களை ஒரு வெண்ணிற அம்பாசிடர் கார் பின்தொடர்வது போல் உணர்ந்தான். சந்தேகம் வந்தது.. காரின் வேகத்தை குறைத்தான். அம்பாசிடரின் வேகம் குறையவில்லை. அது தன் போக்கில் அவர்களை கடந்து சென்றது.

தன் சந்தேகம் தவறானது என்று தோன்றியது. ஆனாலும் சின்ன உறுத்தல் இருந்தது. முன்னே சென்று கொண்டிருக்கும் காரின் பதிவு எண்ணை குறித்து, சம்மந்தப்பட்டவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விபரம் கேட்டான்.

அது ஒரு டிராவல்ஸின் கார். சுற்றுலா பயணி வாடகைக்கு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. நீண்ட மூச்சை வெளியேற்றி ஆசுவாசமடைந்தான். ஆனால் அந்த நிம்மதி சற்று நேரம் கூட நிலைக்கவில்லை.

இப்போது ஒரு ஊதா நிற வெளிநாட்டு கார் அவனை உறுத்தியது. ஏதோ சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த காரின் பதிவு எண்ணையும் சோதனை செய்தான்.

அதுவும் அதே டிராவல்ஸை சேர்ந்த கார். சுற்றுலா பயணிக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவன் விழித்துக் கொண்டான்.

இரண்டு கார்களையும் வாடகைக்கு எடுத்திருப்பது யார்? அவர்கள் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என்கிற விபரத்தை சேகரித்தான். பெயர் பரிச்சயமில்லாததாக இருந்தாலும் வெளிநாட்டு பயணிகள் - மூன்று பெண்கள் ஒரு ஆண் என்பது தெரியவந்தது.

டேவிட் சுதாரித்துவிட்டான். உல்ஃப் தன்னை வட்டமிட்டுவிட்டான் என்று புரிந்துக்கொண்டான்.

அவனை முடிக்க அர்ஜுனோடு சேர்ந்து இவன் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, அதை முந்திக்கொண்டு அவன் இப்போது இவனை வளைத்துவிட்டான். கூட மிருதுளா வேறு இருக்கிறாள். பதட்டமானான். உடனே அர்ஜுனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு எந்த இடத்திலும் நிற்காமல் சிட்டி முழுக்க வட்டமடித்தான்.

எவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் தன் சிந்தனையில் மூழ்கியிருந்த மிருதுளா தோழியை சந்திக்க வேண்டும் என்றாள்.

டேவிட் தயங்கினான். ஆனால் அவளுடைய வாடிய முகம் அவனை உந்தியது. ரிஸ்க் எடுத்தான். அவளை தோழியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மிருதுளாவை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு வாயிலில் நின்று சாலையை நோட்டமிட்டான்.

அர்ஜுன் தொடர்பில் வந்தான். ஓநாயின் திட்டத்திற்கு மேல் இன்னொரு புதிய திட்டம் சில நிமிடங்களிலேயே உருவாக்கப்பட்டது. ஸ்னைப்பர்ஸ் அனுப்பப்பட்டார்கள்.

சாலையில் அவர்களுடைய கார் சிக்னல் கொடுத்துவிட்டு கிராஸ் செய்ததும் வீட்டுக்குள் சென்று மிருதுளாவை அழைத்தான்.

அதுவரை அவள் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை பற்றி யோசிக்கக் கூட அவனுக்குத் தோன்றவில்லை. பரபரப்பான சூழ்நிலை ஒரு பக்கம் என்றாலும், அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் வேறுவிதமாக அவனை சிந்திக்க விடவில்லை என்பதும் உண்மை.

மீண்டும் அவர்களுடைய பயணம் துவங்கியது. மிருதுளா மெடிக்கல் ஷாப் போக வேண்டும் என்று கூறினாள். டேவிட்டின் காதில் பொருத்தப்பட்டிருந்த ப்ளூடூத் அர்ஜுனை அவனோடு இணைப்பில் வைத்திருந்தது. எந்த மெடிக்கல் ஷாப்பில் காரை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினான் அர்ஜுன். அப்படியே செய்தான் டேவிட்.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சுற்றத்தை கண்களால் ஸ்கேன் செய்தான். ஆங்காங்கே அவர்களுடைய ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் மிருதுளாவை தனியே அனுப்ப அஞ்சி உடன் செல்ல எத்தனித்தான். அவள் மறுத்தாள். ஆட்களும் வேண்டாம் என்று சிக்னல் கொடுத்தார்கள். அவன் தேங்கிவிட்டான்.

மிருதுளா இறங்கி கடைக்குள் சென்றாள். அர்ஜுனின் அறிவுறுத்தலுக்கிணங்கி, புகைபிடிப்பது போல் காரிலிருந்து இறங்கி வெளியே நின்றான் டேவிட். ரிஸ்க் தான்.. ஆனால் வேறு வழியில்லை. அவர்களுடைய டார்கெட்டை வெளியே கொண்டு வரவேண்டும் என்றால் அவன் முதலில் டார்கெட் புள்ளியில் வந்து நிற்க வேண்டும். நின்றான்.. அதன் பிறகு எல்லாம் சுபமாக முடிந்தது. உல்ஃபின் அத்தியாயம் அழிந்தது.
 
Top Bottom