Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 59

‘பறந்த தோட்டாக்கள்.. உருண்ட தலைகள். அனந்தபூர் படுகொலையில் தொடரும் மர்மங்கள்’ - கையில் மைக்கோடு கேமிராவை பார்த்து படபடவென்று மூச்சுவிடாமல் பேசினாள் அந்த ரிப்போர்ட்டர்.

பின்னணியில், சம்பவம் நடந்த இடம் மஞ்சள் நிற நாடா கயிற்றால் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டிருந்தது. உள்ளே நிபுணர்கள் தடயங்களை சேகரித்துக் கொண்டும், கேமரா மேன் சுற்றி சுற்றி படம்பிடித்துக் கொண்டுமிருக்க, அவர்களுடைய வேலைக்கு எந்த இடையூறும் வராத வண்ணம் காக்கிச்சட்டைகள் அரணாக நின்றார்கள்.

“மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பொது இடத்தில் சரியாக நெற்றியை குறிபார்த்து சிந்தாமல் சிதறாமல் நான்கு பேரை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடித்திருக்கிறார்கள். மிக நேர்த்தியான சம்பவம்.. அரைகுறை தாதாக்களோ லோக்கல் ரௌடிகளோ செய்த வேலை அல்ல இது” - ரிப்போர்ட்டரின் அடுத்த கூற்றை கேட்டதும் திக்கென்றிருந்தது மிருதுளாவிற்கு.

கொல்லப்பட்டவர் அனைவரும் வெளிநாட்டவர் என்பதால் நியூஸ் சென்சேஷனலாகி ஊடகங்களில் அனல் பறந்தது. டீவியில் பார்த்துக் கொண்டிருக்கும் காக்கிச்சட்டை வீட்டுக்குள் எப்போது நுழையுமோ என்கிற பீதியில் கையிலிருந்த ரிமோட்டை அழுத்திப் பிடித்தவள், சமையலறை பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

நடந்த கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் காய்கறி வெட்டிக் கொண்டிருந்தான் டேவிட். வாயில் பக்கம் அரவரம் கேட்டது. திரும்பிப்பார்த்தாள். உள்ளே நுழைந்த அர்ஜுனின் உடல்மொழியில் வித்தியாசம் தெரிந்தது. கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் வியர்வை மினுமினுத்தது. அவள் பக்கம் திரும்பாமலே படுக்கையறையை நோக்கிச் சென்றான். மிருதுளாவின் பார்வை அவனையே தொடர்ந்தது. அதை உணர்ந்தானோ என்னவோ, படுக்கையறை வாயில் வரை சென்றவன் தேங்கி நின்றான். ஒரு கணம் தயங்கியது போல் இருந்தது. பிறகு அவள் பக்கம் திரும்பி, “ஆர் யூ ஓகே?” என்றான். உணர்வற்ற இயந்திரம் போல் தான் கேட்டான். ஆனாலும் அந்த கேள்வியை தவிர்க்க முடியாத உணர்வு அவன் கண்களில் தேங்கியிருந்தது.

அவள் பதில் சொல்லவில்லை. அவனை ஊன்றி பார்த்தாள். அந்த பார்வையால் ஆயிரம் கேள்விகளை வீசினாள். பதில் சொல்ல விருப்பம் இல்லையோ அல்லது முடியவில்லையோ.. அவன் தாடை இறுகியது. “டே-வி-ட்” என்று உரக்க குரல் கொடுத்துவிட்டு உள்பக்கம் திரும்பி நடந்தான்.

நண்பர்கள் இருவரும் வெகு நேரம் படுக்கையறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசினார்களோ.. அடுத்த கொலைக்கு திட்டமிடுவதாகவே அவளுக்கு தோன்றியது. அந்த திட்டம் தன்னுடைய பெற்றோருக்கானதாக இருந்துவிடக் கூடாதே என்கிற எண்ணம் அச்சுறுத்த பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்.

வெகு நேரம் கழித்து டேவிட் வெளியே வந்தான். அர்ஜுன் குளியலறைக்குள் நுழைவது தெரிந்தது. எழுந்து பூனை போல் டேவிட்டை பின்தொடர்ந்து சமையலறைக்கு வந்தாள் மிருதுளா.

“பசிக்குதா? ஏதாவது வேணுமா?” - அக்கறையோடு கேட்டான். குரலிலும் முகத்திலும் பழைய கனிவு மீண்டிருந்தது.

‘வேண்டாம்’ என்று கூறுவது போல் தலையை குறுக்காக அசைத்த மிருதுளாவின் முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

தன்னிடம் ஏதோ ஒரு சகாயத்தை நாடி அவள் வந்திருப்பதும், எதிர்பார்ப்பு நிறைந்த கண்களோடு தன்னை நோக்குவதும் அவனுக்கு எதையோ சாதித்துவிட்டது போல் ஆனந்தமாக இருந்தது. உதட்டில் மலர்ந்த புன்னகையுடன், “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

“யார் அவங்கலாம்?” - அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. பதில் சொல்வதை தவிர்த்து பிரிட்ஜை திறந்து எதையோ எடுப்பது போல் அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான். சில நிமிடங்களுக்கு முன் உணர்ந்த அந்த ஆனந்த உணர்வு அபத்தமாக தோன்றியது.

“என்னோட பேரண்ட்ஸுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இருக்கா?”

சமைத்த உணவை டைனிங் டேபிளில் கொண்டு வந்து அடுக்குவது போல் அவளிடமிருந்து விலகினான்.

“எனக்காகத்தான் வந்தார்களா?” – “கொண்டு போக வந்தார்களா?” – “இல்ல கொலை பண்ண வந்தார்களா?” – “என்னய்யா உன்னையா? யாரை அட்டாக் பண்ண வந்தாங்க?” – “பேசு டேவிட், ஏதாவது சொல்லு” - கட்டாயப்படுத்தினாள். அவனிடமிருந்து ஏதாவது விஷயத்தை வாங்கிவிடலாம் என்று வெகுவாய் முயன்றாள். அவளுக்கு தெரியவில்லை. அர்ஜுனை மீறி - தலைமையை மீறி அவன் மூச்சு கூட விடமாட்டான். இது ஒருவிதமான அடிமை மனநிலைதான். ஆனால் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டான். வாழைமரத்தில் கட்டிவைக்கப்பட்ட யானை போல் கட்டுப்பாட்டிற்கு பழகிவிட்டான்.

டைனிங் டேபிளில் பாத்திரங்களை அடுக்கிவிட்டு அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சமையலறைக்கு செல்ல எத்தனித்தவனை கையைப் பிடித்துத் தடுத்தாள்.

“உன்கிட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன்” - கெஞ்சினாள்.

தன் கையை பற்றியிருந்த அவள் கையை பார்த்தான் டேவிட். பிறகு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

“உனக்கு எந்த ஆபத்தும் வராது” - தீர்க்கமாக கூறினான்.

“என்னோட அப்பா அம்மாவுக்கு?” - அடுத்த கேள்வியை கேட்டாள்.

அவன் முகத்திலிருந்த மென்மையும் கனிவும் மறைந்தது. அவளுடைய அச்சம் மேலும் அதிகமானது.

“உள்ள என்ன பிளான் போட்டீங்க? அடுத்த ஆபரேஷன் தானே? டார்கெட் யாரு? என்னோட அப்பா அம்மாவா? சொல்லு.. அப்படித்தானே?” - அவள் முகமெல்லாம் மிரண்டு வெளிறிப்போனது. அவளுடைய பயம் எந்த அளவுக்கு தீவிரமானது என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. அவனுக்குள் பரிதாபம் எழுந்தது. அவள் கையை பற்றி அழுத்தி, “பயப்படாத” என்றான். அழுத்தமான காலடி ஓசை கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அர்ஜுன் ஹோத்ரா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 60
ஓநாய் மற்றும் அவருடைய கிடான்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருந்தது. இதுவரை அவர் யார் என்கிற விபரம் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்பட்டுவிட்டால் பல விஷயங்கள் பொதுமேடைகளில் விவாதத்திற்குள்ளாகும். கோர்த்தாவை உள்ளே கொண்டுவர முடியாது என்றாலும், டேவிட்டை தனி மனிதனாக காட்டி பலிகடாவாக்கும் அபாயம் ஏற்படலாம். அதற்கு முன் அவன் இந்த மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும். விசாரணையோ, கைதோ வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற சில நாட்கள் பிடிக்கும். அதற்குள் பிரச்சனையை மடைமாற்றிவிடலாம். இதைத்தான் மூடிய கதவுக்கு பின்னால் அர்ஜுனும் டேவிட்டும் விவாதித்து முடிவெடுத்தார்கள்.
விவாதம் அதோடு முடியவில்லை. டேவிட் மிருதுளாவைப் பற்றி பேச்செடுத்தான்.
“வாட் அபௌட் மிருதுளா?”
சட்டென்று அர்ஜுனின் முகம் மாறியது. ஏற்கனவே தன்னுடைய அனுமதி இல்லாமல் அவன் மிருதுளாவை வெளியே அழைத்துச் சென்ற கோபத்தில் இருந்தவன் சூழ்நிலை மோசமாக இருக்கும் ஒரே காரணத்தால், கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு காரியத்தில் கவனத்தை குவித்திருந்தான். ஆனால் இப்போது அவனுடைய பொறுமையின் எல்லையை டேவிட் உரசிப்பார்க்கவும், “நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்று வெடுவெடுத்தான்.
“அர்ஜுன்.. ஸ்பாட்ல நாங்க இரண்டு பேருமே இருந்தோம். எனக்கு இருக்க ரிஸ்க் மிருதுளாவுக்கும் இருக்கு.”
“ஓ ரியலி! அவளோட ரிஸ்க் பத்தி இப்பதான் தெரியுதா உனக்கு?”
“இல்ல.. நா எதிர்பார்க்கல” - சங்கடத்துடன் சமாளித்தான்.
“எக்ஸ்பெக்ட் தி வொர்ஸ்ட். கோர்த்தாவோட முதல் பாடம். மறந்துடுச்சு இல்ல?” - பற்களை நறநறத்தான். டேவிட்டின் முகம் கன்றிப்போனது.
“ஷி வாஸ் போர்ட்”
“சோ? நீ ஹீரோவா ஆயிட்ட? ஊர்சுத்த கூட்டிட்டு கிளம்பிட்ட?”
“காட்! ஐம் சா..ரி” - வெறுப்புடன் தலையை அழுந்தக் கோதினான் டேவிட்.
“டிராஷ் இட்” - அதைவிட அதிக வெறுப்போடு ‘குப்பையில போடு’ என்கிற வார்த்தைகளை உமிழ்ந்தான் அர்ஜுன்.
“மேன்! ஐ வாஸ் ஜஸ்ட் கன்ஸர்ண்ட். ஏன் இவ்வளவு கோவப்படற?”
‘கன்ஸர்ண்ட்’ என்கிற வார்த்தை அர்ஜுனை மிகவும் ஆத்திரப்படுத்தியது. கைமுஷ்டி இறுக விருட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தான்.
பற்கள் நறநறக்க வேகமூச்சை வெளியேற்றியபடி, “ஒன் மோர் வோர்ட்.. ஐ’ல் கட் யுவர் டங்” என்றான். சிவந்துவிட்ட கண்களில் தெரிந்தது அவன் கோபத்தின் அளவு.
டேவிட் நண்பனை இமைக்காமல் பார்த்தான். மிருதுளாவின் மீதான நம்முடைய அக்கறையை கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதை புரிந்துக்கொண்டான்.
ஒரு பக்கம் வலித்தது. இன்னொரு பக்கம் சற்று நிம்மதியாக இருந்தது. பாதுகாப்பான இடத்தில் அவள் இருக்கிறாள் என்பது போன்றதொரு நிம்மதி. மெல்லிய புன்னகையுடன் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் தசைகளில் இறுக்கம் தளரவில்லை. பயமும் கோபமும் கலந்த ஒரு கலவையான உணர்வு அவனை ஆக்கிரமித்திருந்தது. பொறாமை என்று அதற்கு பெயர்சூட்ட அவன் விரும்பவில்லை. ஆளுமையோ.. ஆதிக்கமோ.. ஏதோ ஒன்று. அவனை தாண்டி அவள் சென்றிருக்கக் கூடாது. அதுவும் டேவிட்டோடு சென்றிருக்கவே கூடாது. - உள்ளம் புழுங்கியது.
வெகுவாய் சிரமப்பட்டு அவன் உள்ளே ஒதுக்கி வைத்திருந்த அந்த எதிர்மறை உணர்வை சற்றும் யோசிக்காமல் குத்திக் கிளறிவிட்டு போய்விட்டான் டேவிட். குறையா கோபத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன். உச்சந்தலையில் கொட்டும் குளிர்ந்த நீர் தரையை தொடும் போது சூடாகியிருந்தது. அந்த அளவுக்கு கொதித்துப் போயிருந்தான்.
ஒரு பக்கம் ராகேஷ் சுக்லா கொடுக்கும் அழுத்தம்.. இன்னொரு பக்கம் ப்ளூ ஸ்டாரின் அறிவுறுத்தல்கள்.. இன்னொரு பக்கம் பகவான்.. இப்போது இந்த ஓநாயின் மரணம்.. நான்கு திசைகளிலும் நான்கு பிரச்சனைகள் அவனை இழுத்துக் கொண்டிருக்கிறது. நான்குமே மிருதுளாவை அவனிடமிருந்து பறிக்க பார்க்கிறது. இப்போது டேவிட்டும் அவர்களில் ஒருவனாக தோன்றினான். - சட்டென்று ஷவரை அணைத்துவிட்டு உடைமாட்டி கொண்டு வெளியே வந்தான். ஈரம் சொட்டும் தலையை துவட்டக் கூட தோன்றாமல் சமையலறை பக்கம் வந்தான்.
கையேடு கை கோர்த்து கண்ணோடு கண் கலந்து நெருக்கமாக நின்ற இருவரையும் கண்டான். தீப்பிடித்துக் கொண்டது போல் நெஞ்சுக்குள் திகுதிகுவென்று எரிந்தது. இணைந்திருக்கும் அவர்களுடைய கரங்களில் நிலைத்திருந்த அவன் பார்வை மெல்ல உயர்ந்து மிருதுளாவின் கண்களோடு மோதிவிட்டு சில நொடிகளுக்குப் பிறகு டேவிட்டின் பக்கம் திரும்பியது. அவன் நெஞ்சை பிளந்துவிடும் கொலைவெறி தெரிந்தது அந்த கண்களில்.
அவனுடைய அக்னி பார்வையில் இருவரும் விலகினார்கள். ஏதோ தவறு செய்துவிட்டது போல் சங்கடப்பட்டு அவன் பார்வையை தவிர்த்தார்கள்.
அழுத்தமான காலடிகளுடன் அவர்களை கடந்து உள்ளே சென்று பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரிதான் அர்ஜுன். மடமடவென்று அரை பாட்டில் காலி ஆனதே தவிர உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் தீ அடங்கவில்லை. பாட்டிலை மூடி பிரிட்ஜில் போட்டுவிட்டு டேவிட்டிடம் திரும்பினான்.
“கிளம்பு.. நாளைக்கே நீ மகல்பாட்னால இருக்கனும்” - மறுத்து பேச முடியாத குரல்.
தலையை ஆமோதிப்பாக அசைத்துவிட்டு உடனே கிளம்பினான் டேவிட்.
சமைத்து வைத்த உணவை சாப்பிடக் கூட விடாமல் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அவனை அனுப்பிவிட்டான் என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் மிருதுளாவிற்கு புரிந்தது.
“ஏன் இப்படி பண்றிங்க?” - ஆற்றாமையுடன் கேட்டாள். ஆவேசத்துடன் அவள் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 61

காட்டுத்தீயின் கோரம் தெரிந்தது அவன் முகத்தில். மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய மனநிலை விளிம்பிலிருப்பதை உணர்ந்துகொண்டாள். விலகி நில் என்று மனம் எச்சரித்தது. ஆனாலும் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள். பளபளக்கும் அவன் கண்களை படிக்க முயன்றாள். கோபத்தையும் வெறுப்பையும் தவிர வேறொன்றும் அங்கே தென்படவில்லை.

“எதுக்கு அர்ஜுன் இவ்வளவு கோபம்? ஃபிரண்ட்கிட்ட கூட ஏன் இவ்வளவு வெறுப்பு?” - கேட்டுவிட்டாள். கொதிக்க போகிறான் என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால் அவனுடைய பார்வை மாறியது. ஏளனப்பார்வை..

“ரொம்ப அக்கறையோ!” - கோணல் புன்னகையுடன் அவளை கூர்ந்து பார்த்தான். மிருதுளாவின் கண்கள் விரிந்தன. அவனுடைய மனவோட்டம் தெளிவாக புரிந்தது அவளுக்கு. “டேவிட் எனக்கு நல்ல ஃபிரண்ட்” என்றாள் விளக்கம் கொடுப்பது போல.

“ஃபிரண்டா! ஹா! இது நண்பர்களுக்கான இடம் இல்ல மிருதுளா. இங்க நட்புக்கும் துரோகத்திற்குமான இடைவெளி ரொம்ப கம்மி” என்றான் தீவிரமாக. குரலிலும் முகத்திலும் கோபம் மீண்டிருந்தது.

மிருதுளா அவனை விழியகற்றாமல் பார்த்தாள். “ஏன் இப்படி பேசுறீங்க?”

“உண்மையை பேசுறேன்”

அவள் மறுப்பாக தலையசைத்தாள். “இல்ல அர்ஜுன். இவ்வளவு நெகட்டிவிட்டி வேண்டாம். இது நம்மள அழிச்சிடும்” - பயத்துடன் கூறினாள். அப்படி கூறும் போது தன்னை அவனோடு இயல்பாக இணைத்துக் கொண்டாள். நீரில் விழுந்த உப்பு கல் போல் அவனுடைய கோபம் மெல்ல கரைய துவங்கியது. அதை காட்டிக்கொள்ள விரும்பாமல் அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனித்தான். அவன் கையைப் பிடித்துத் தடுத்து, “ஐ நீட் டு டாக்” என்றாள் மிருதுளா.

அவள் முகத்தை பார்த்தபடியே மெளனமாக நின்றான் அர்ஜுன். தான் பேசுவதற்காக காத்திருக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டவள், “இன்னைக்கு வந்தவங்க யாரு?” என்றாள். அர்ஜுன் கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான்.

அவன் பதில் சொல்ல மாட்டானோ என்று அஞ்சியவள், “கண்ண கட்டிவிட்ட மாதிரி இருக்கு அர்ஜுன். சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. இருட்டுல மாட்டிகிட்ட மாதிரி ஃபீல் பண்றேன். ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்” என்று வாய்விட்டுக் கெஞ்சினாள்.

ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன், “உன்னோட பேரன்ட்ஸ் ஹயர் பண்ணின ஹிட்மேன் அண்ட் ஹிஸ் கிடான்ஸ்” என்றான் நிதானமாக.

பகீரென்றது அவளுக்கு. முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் சொல்வதை நம்ப பிடிக்கவில்லை. ஆனால் மூடத்தனமாக கண்களை மூடிக்கொள்ளவும் விருப்பமில்லை. அவளுடைய பெற்றோருக்கு கோர்த்தாவுடன் ஏதோ பெரிய பிரச்சனை இருப்பது அவர்களுடைய நடவடிக்கைகளில் இருந்தே தெளிவாக தெரிகிறது. அதுமட்டும் அல்ல.. அவளுமே இப்போது அர்ஜுனின் பிடியில் இருக்கிறாள். மகளை காப்பாற்றுவதற்கு அவர்கள் ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம் தான். ஆனால் முடிவு? நான்கு உயிர்கள் பலியானதுதான் மிச்சம். யாரை குற்றம் சொல்வது? அவரவருக்கு அவரவர் நியாயம்.

“பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை பெருசாகிகிட்டே இருக்கு அர்ஜுன். தேவையில்லாம நாலு பேர் செத்துட்டாங்க” - மனம் வருந்தினாள்.

கண்கள் இடுங்க அவளை பார்த்தான் அர்ஜுன். “தேவையில்லாம செத்துட்டாங்களா! அவங்களோட டார்கெட், கோர்த்தா லீடர்ஸ். இன்க்ளூடிங் மீ அண்ட் டேவிட். அவங்க சாகலேன்னா நாங்க இரண்டு பேரும் இந்நேரம் மார்ச்சுவரில கிடந்திருப்போம்” - கடுகடுத்தான்.

‘இதென்ன கொடூரம்! அவளுடைய பெற்றோர் கொலை செய்ய ஆள் அனுப்பினார்களா! அதுவும் யாரை!’ - மிருதுளா மிரண்டு போனாள். உடல் நடுங்கியது. “இருக்காது அர்ஜுன்” - உதடு துடிக்க முணுமுணுத்தாள்.

அர்ஜுன் அவளை வெறித்துப் பார்த்தான். ஆர்த்தியின் கடைசி நேர நினைவுகள் நெஞ்சை ஆக்கிரமித்தன. ‘கர்ப்பிணி பெண்ணை விஷம் வைத்து கொன்றவர்கள் இதை செய்ய மாட்டார்களா?’ - அவன் இரத்தம் கொதித்தது. முகம் ரௌத்திரத்தில் சிவந்தது. தலையை குறுக்காக அசைத்தான்.

“தே காண்ட் எஸ்கேப்.. விடமாட்டேன்” - உள்ளடங்கிய குரலில் முணுமுணுத்தான். மிருதுளாவின் அடிவயிறு தடதடத்தது. அர்ஜுனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் கண் எதிரிலேயே எத்தனையோ சம்பவங்கள்! அவளுடைய பெற்றோருக்கும் அதே நிலை வர எவ்வளவு நேரம் ஆகும்! விதிர்விதிர்த்து போனாள். “அவசரப்படாதீங்க அர்ஜுன். ப்ளீஸ்.. எனக்காக.. நம்ம ரிலேஷன்ஷிப்காக..” - கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

“இந்த அழுகை, வார்த்தை ஜாலமெல்லாம் உண்மையாவே என்னை அஃபெக்ட் பண்ணும்னு நினைக்கிறியா?” - நிதானமாகக் கேட்டான். அவன் பார்வை அவளை தள்ளி நிறுத்தியது.

மிருதுளா திகைப்புடன் அவனை பார்த்தாள். அவள் மனம் தவித்தது. அவன் கண்களில் காதலை.. அன்பை.. சின்ன ஒட்டுதலையாவது கண்டுவிடலாம் என்று பரிதவித்தாள்.

பலனில்லை. உணர்வுகளற்று வறண்டு போன பார்வையுடன், “ஒரு விஷயத்தை எப்பவும் மைண்ட்ல வச்சுக்கோ மிருதுளா. நீ என்னோட வீக்கனஸ் இல்ல. என்கிட்ட உன்னால எதையும் சாதிக்க முடியாது” என்றான் தெளிவாக.

நொறுங்கி போனாள் மிருதுளா. “வாட் யு மீன்?” - வார்த்தையே வரவில்லை. தொண்டையை அடைத்தது.

“ஐ மீன் வாட் ஐ செட்” - அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

முகத்தில் கலவரம்.. கண்களில் வலி.. “யு லவ் மீ ரைட்?” - தவிப்புடன் கேட்டாள்.

“ஐ நெவர் செட்” - வெகு குரூரமான வார்த்தையை சற்றும் தயக்கமில்லாமல் அவள் மீது வீசினான்.

உயிர்மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறுப்பாக தலையசைத்தாள் மிருதுளா. அவன் பேச்சை நம்ப மறுத்தது மனம். பொய் என்று புறம் தள்ள துடித்தது. “நோ.. ப்ளீஸ் டோன்ட் சே தட்” - கண்ணீர் பெருகியது. குரலோடு சேர்ந்து உடலும் நடுங்கியது.

அவள் படும் துன்பத்தை விழியகற்றாமல் பார்த்துக்கொண்டு, பட்டமரம் போல் நின்றவனிடம் சிறிதும் இலக்கமில்லை. “திரும்பவும் சொல்றேன். நா உனக்கு கமிட்மெண்ட் கொடுக்கவே இல்ல. பொய்யில வாழறதுதான் உன் விருப்பம்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கேரி ஆன்” - அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சொன்னதை முழுமையாக உள்வாங்கி புரிந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு. எதிர்வினையாற்றும் திறன் கூட அற்றுப் போனவளாக சிலையாக சமைந்து நின்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகே தன்னிலைக்கு மீண்டாள். உடனே பதறி துடித்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்து ஓடினாள்.

“அப்புறம் எதுக்கு என்னை காப்பாத்துனீங்க? த்ரீ டைம்ஸ்.. உங்க உயிரை பணயம் வச்சு.. ஏன்? எதுக்கு கூடவே இருக்கனும்னு சொன்னீங்க?” - ஆத்திரத்துடன் குரலை உயர்த்தினாள்.

நின்று திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். கண்களில் கோபம் தெறித்தது, “துருப்புச் சீட்டு.. தூண்டில் புழு.. எப்படி வேணா வச்சுக்கோ. யு ஆர் ஜஸ்ட் மை வெப்பன். புரியுதா?” - பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை உதிர்த்தான்.

“அர்ஜுன் ப்ளீஸ்.. டோன்ட் டூ திஸ் டு மீ” - தவிப்பும் கண்ணீருமாக அவனிடம் மிருதுளா நெருங்க அடுத்த நொடி பயங்கர சத்தத்துடன் அருகிலிருந்த மேஜையிலிருந்து பொருட்களெல்லாம் தரையில் சிதற அவன் கைத்துப்பாக்கி அவள் நெற்றி பொட்டில் அழுந்த பதிந்திருந்தது.

“ஐ ஹேட் திஸ் டிராமா. ஸ்டாப் இரிடேடிங் மீ. சு..ம்..மா கண்ணுல தண்ணிய வச்சுக்கிட்டு புலம்பிகிட்டு இருந்த.. இறக்கிடுவேன்” - வேட்டை மிருகம் போல் சீறியவன், அவளை கீழே தள்ளாத குறையாக உதறிவிட்டு விலகிச் சென்றான்.

அவனுடைய மூர்க்கத்தனத்தில் உடைந்து போனாள் மிருதுளா. நெஞ்சுக்குழி கனத்துப்போனது. ஆத்திரம் தொண்டையை அடைத்தது. வெடித்து அழுதாள். கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள். உச்சத்திலிருந்த உணர்வுகள் மெல்ல மெல்ல மட்டுப்பட்டது. சிந்தனை மேலிட்டது.

அவளை காதலிக்கவில்லையாம்! துருப்புச் சீட்டாம்! தூண்டில் புழுவாம்! ஆனால் இது எதையுமே அவனால் சுலபமாக சொல்ல முடியவில்லையே! ஏன்? - அத்தனை துன்பத்தை அனுபவித்த பிறகும் கூட மனம் அவனுக்கு சாதகமாகவே சிந்திக்க முற்பட்டது.

அவளால் அவனை பாதிக்க முடியாதாம்! ஆனால் அவள் கண்ணீரை சகிக்க முடியவில்லை. எத்தனை கோபம்! எத்தனை ஆத்திரம்! ஏன் இந்த முரண்பாடு? - அவனுடைய கோபத்தில் காதலை தேடினாள்.

அவன் இல்லை என்று மறுக்கும் காதல்.. பார்வையில் கூட காட்ட மறுக்கும் நேசம்.. அவனுடைய கோபத்தில் வெளிப்பட்டதாக நம்பினாள். முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம், ஆனால் காதலும் முட்டாள் தனமும் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகள். ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கும். மிருதுளாவுக்கும் இருந்தது. அதனால்தான் கண்ணில் மாட்டிவிட்ட மஞ்சள் கண்ணாடி போல் அவனுடைய அனைத்து செயல்களிலும் காதலை தேடினாள். அவளுடைய தேடலை பூர்த்தி செய்வது போல்தான் அவனும் நடந்து கொண்டான்.

அவ்வளவு வெறுப்பாக அவளிடம் பேசிவிட்டு விலகிச் சென்றவன் நள்ளிரவை தாண்டி தானாக திரும்பி வந்து அவள் அருகில் படுத்தான். அவள் குளிர்ந்து போனாள். அவன் காதலிப்பது உண்மை. அவளை நேசிப்பது உண்மை. ஒப்புக்கொள்ளத்தான் மனமில்லை. தாமரை போல் மலர்ந்த அவள் மனம் சட்டென்று வாடியது. ‘பழிவுணர்ச்சி! அவள் பெற்றோரை அழிக்க வேண்டும் என்கிற வெறி!’ - காதலை கூட விட்டுக்கொடுக்க தூண்டும் இந்த எதிர்மறை உணர்வுகள் அவனை எங்கு கொண்டு நிறுத்தும்! - பயத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.

தோட்டாக்கள் இரண்டு இருமுனையிலிருந்து பாய்ந்து வருகிறது. ஒன்று அவள் பெற்றோரை நோக்கி. மற்றொன்று அர்ஜுனை நோக்கி. நடுவில் அவள். தோட்டா யார் மீது பாய்ந்தாலும் மண்ணில் விழப்போவது அவள் தான். இருவருக்குமே அது புரியவில்லை. புரிய வைக்காவிட்டால் விபரீதமாகிவிடும். மனம் அமைதியிழந்து சஞ்சலப்பட்டது.

இரத்தப்பாசம் பொல்லாதது. காதல் அதற்கு ஒரு படி மேல். இரண்டு உணர்வுகளுமே தீவிரமானது. ஒன்றுக்கொன்று சளைக்காதது. அவளால் எந்தப்பக்கம் செல்ல முடியும்? யாரை விட்டுக்கொடுக்க முடியும்? உறங்கவே முடியவில்லை. இரவெல்லாம் யோசித்தாள். தான் செய்ய நினைப்பது சரியா தவறா என்று மனதிற்குள்ளேயே வாதவிவாதம் செய்தாள். இந்த பிரச்னையை தீர்க்க அந்த ஒரு வழியை தவிர அவள் அறிவுக்கு வேறு மார்க்கமே புலப்படவில்லை. பெருமூச்சுடன் படுக்கையிலிருந்து எழ முயன்றாள்.

ஆலம்விழுது போல் அவள் மீது படர்ந்திருந்த அவன் கை அவள் முயற்சிக்கு எதிராய் செயல்பட, “டைம் ஆகல” என்று கனத்த குரலில் முணுமுணுத்தபடி முகத்தை அவள் கூந்தலுக்குள் புதைத்துக் கொண்டான்.

மிருதுளாவின் அசைவுகள் சட்டென்று தடைப்பட்டன. சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “நான் போகனும்” என்றாள் மெல்ல.

“முடியாது. தூங்கு” - அவன் மறுத்த விதம் அவளை காயப்படுத்தியது.

நொந்து போய், “ஐம் நாட் யுவர் டாய்” என்றாள்.

“ம்ம்ம்.. மைண்ட்ல வச்சுக்குறேன்” - மீண்டும் அலட்சிய தொனியிலேயே அவனிடமிருந்து பதில் வந்தது.

“லீவ் மீ அர்ஜுன். விடுங்க என்னை” கோபத்துடன் அவனிடமிருந்து விலக முற்பட்டு முரண்டு பிடித்தாள்.

“யு.. காண்ட் லீவ் மீ.. நா விட்டாலும் உன்னால என்னை விட்டு எங்கேயும் போக முடியாது” என்றவன், சட்டென்று அவளை தன் பக்கம் திருப்பினான். சிவந்த அவன் விழிகள் கலங்கிய அவள் விழிகளோடு கலந்தது.

“ப்ராமிஸ் பண்ணியிருக்க” - வஞ்சகமாய் அவளிடம் பெற்ற வாக்குறுதியை நினைவுறுத்தினான்.

“யு ஆர் சோ க்ரூயல்” - வலிமையற்ற குரலில் வார்த்தைகளை உதிர்த்தாள்.

ஓரிரு நொடிகள் மெளனமாக அவளை பார்த்தவன், கண்ணீரில் பளபளக்கும் அவள் கண்களில் இதழ் பதித்து, “எஸ்.. ஐ ஆம்” என்றான். மிருதுளா உடைந்து போனாள். அழுகையில் குலுங்கியது அவள் உடல். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

அவன் அணைப்பில் அடங்கியவள் சில நொடிகளில் தலையை உயர்த்தி மீண்டும் அவன் முகத்தை பார்த்தாள்.

“வாட்?” - மென்புன்னகையுடன் அவள் நெற்றியோடு நெற்றியை முட்டினான்.

“இதுக்கு பேர் காதல் இல்லைன்னா வேற என்ன அர்ஜுன்?” - ஏக்கத்துடன் கேட்டாள். அவ்வளவுதான்! சட்டென்று இரும்பு குண்டலம் போல் மாறியது அவன் முகம். நாசி விடைத்து தாடை இறுகியது.

“நேத்தே உன்கிட்ட சொன்னேன்.. எனக்கு இந்த டிராமா சுத்தமா பிடிக்காது. நிறுத்திக்கோ” - பற்களை நறநறத்தான்.

சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு, “சரி” என்று ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு மீண்டும் அவன் மார்பில் முகம் சாய்ந்துக் கொண்டாள். மெளனமாக அவள் வடித்த கண்ணீர் அவன் நெஞ்சை ஈரமாக்கியது.

இது அவன் எதிர்பார்க்காத எதிர்வினை.. அப்பாவி குழந்தையை அடித்துவிட்டது போல் உணர்ந்தான் அர்ஜுன். மனம் கனத்து போய்விட்டது. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு, “உன்ன ஹர்ட் பண்ணணுன்னு நினைக்கல” என்றான்.

தலையை மேலும் கீழும் அசைத்தபடி அவள் அவனோடு மேலும் ஒட்டிக்கொள்ள, பாலை நிலத்தில் பெய்த மழையின் குளிர்ச்சியை நெஞ்சுக்குள் உணர்ந்தான் அர்ஜுன்.

அன்று முழுவதும் மிருதுளா தன் பெற்றோரை பற்றி பேசவில்லை. எதிர்காலத்தை பற்றி கவலைப்படவில்லை. அர்ஜுனோடு வெகு இணக்கமாக நடந்து கொண்டாள். அவளிடமிருந்து விலக விரும்பாத அவன் மனமும் அவள் காட்டிய நெருக்கத்தில் நெகிழ்ந்து போனது. இணைந்து உடற்பயிற்சி செய்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு தண்டால் எடுத்தார்கள். சமையலறையை சேர்ந்து உருட்டினார்கள். பொதுவாக பேசினார்கள். பழையபடி சிரித்தார்கள்.

இவையெல்லாம் இயல்பாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மிருதுளாவின் திடீர் மாற்றம் அவனை உறுத்தத்தான் செய்தது. அவனுக்குள் இருக்கும் பயிற்சி பெற்ற மனிதன் எச்சரிக்கத்தான் செய்தான். ஆனால் நெகிழ்ந்திருந்த மனம் தன்னை போலவே அவளும் இந்த நெருக்கத்திற்காக ஏங்கியிருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டி உறுத்தலை உதறி தள்ளியது.

மதியத்திற்கு மேல் அவனுக்கு தோட்டத்தில் வேலை இருந்தது. கழித்துப்போட்ட மரக்கிளைகள் எல்லாம் முதல் நாள் முழுவதும் பெய்த மழையால் ஊறி கனத்துப்போயிருந்தன. அதை துண்டு போட்டு மதில் சுவர் ஓரமாக இழுத்துப் போட்டு கொண்டிருந்தான்.

புறவாசல் இல்லாத வீடு. வீட்டை சுற்றிக் கொண்டு பின்புற தோட்டத்திற்கு வந்தாள் மிருதுளா.

ஒரு சிவப்பு நிற கைக்குட்டையை மடித்து நெற்றியில் கட்டியிருந்தான். உடலை இறுக்கிப்பிடித்திருந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. அந்த முரட்டு மரத்தை ‘தம்’ பிடித்து இழுக்கும் போது தன்னியல்பாக அவனிடமிருந்து வெளியேறும் ஒலி தோட்டம் முழுக்க எதிரொலித்தது. போர்க்களத்தில் எதிரியை ஒழித்துக்கட்டும் வீரனின் வேகத்தோடு அவன் வேலை செய்து கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்து சற்று நேரம் அசையாமல் நின்றுவிட்டாள் மிருதுளா.

அவள் வந்திருப்பதை உணர்ந்து வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான். கையில் தண்ணீர் பாட்டிலும் கண்களில் ரசனையுமாக விழியாகற்றாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் மிருதுளா. சற்று நேரத்திலேயே அவள் தன்னை தேடி வந்துவிட்டதில் அவன் மனம் உவகை கொண்டது. தன்னை ரசிக்கும் அவள் பார்வையை ரகசியமாய் ரசித்தபடி மீசைக்குள் மறைத்து வைத்த புன்னகையுடன் அவளிடம் நெருங்கினான். நெற்றியில் கட்டியிருந்த கைக்குட்டையை கழட்டியவன், அவள் கையில் இருந்த பாட்டிலை வாங்கி நீர் அருந்திவிட்டு திமுதிமுவென்று முகத்தில் ஊற்றி முகம் அலம்பினான்.

“யாரையாவது வர சொல்லி இருக்கலாமே! ரொம்ப கஷ்டமான வேலை” - கவலைப்பட்டாள் மிருதுளா.

பாட்டிலை மூடி அவள் கையில் கொடுத்தபடி, “ஐ கேன் மேனேஜ்” என்றான்.

மிருதுளா அர்ஜுனை பார்த்தாள். ஒரு சின்ன தயக்கம் தோன்றியது. நொடிப் பொழுதில் அதை உள்ளேயே புதைத்து சமாதிகட்டிவிட்டு, “இன்னைக்கு நா டின்னர் ரெடி பண்ணவா?” என்றாள்.

அவனுக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. தனக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறாள் என்று தான் நினைத்தான். அவளுக்கும் நேரம் நல்லவிதமாக கழியும் என்று எண்ணி, “உன் விருப்பம்” என்றான்.

அர்ஜுன் வேலையை முடித்துவிட்டு குளித்து உடைமாற்றிக் கொண்டு உணவுக்கு கூடத்திற்கு வந்த போது ஒரு முழு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள் மிருதுளா. மேஜையில் பல பதார்த்தங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்கின் மந்தமான ஒளியோடு உணவு மேஜையின் நடுவில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி அடுக்கு அந்த அறையின் சூழ்நிலையை ரம்யமாக்கியது. அவளும் மிதமான ஒப்பனையில் அழகாய் இருந்தாள். தன் முகத்திலிருக்கும் பதட்டத்தை மறைக்கும் அவளுடைய முயற்சி கச்சிதமாய் நிறைவேறியது.

ஒரு சின்ன சந்தேகம் கூட எழாமல், “ஓ வாவ்! பர்ஃபெக்ட் டின்னர்” என்று மகிழ்ச்சியும் வியப்புமாக உள்ளே நுழைந்தான் அர்ஜுன். ஒரு நொடி.. ஒரே ஒரு நொடி இந்த விருந்தை அவள் தாய் கொடுத்த விருந்தோடு அவன் ஒப்பிட்டு பார்த்திருந்தால் கதை வேறு திசையில் பயணித்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. அவள் தாய் கொடுத்த விருந்தை எப்படி வஞ்சகமில்லாமல் சுவைத்தானோ அதே போல் இன்றும் அவள் பரிமாறிய அனைத்து உணவு வகைகளையும் தயங்காமல் சுவைத்தான்.

பாதி உணவிற்கு மேல் தான் ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தான். அப்போதும் அவள் மீது சந்தேகம் எழவில்லை. ஏதோ மெண்டல் ஸ்ட்ரெஸ் என்றே நினைத்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே பார்வை மங்க துவங்கியது. எதிரில் அமர்ந்திருந்த மிருதுளாவின் உருவம் இரண்டாய்.. நான்காய் பிரிந்து மெல்ல மெல்ல மறைந்து போக கண்கள் செருகியது. சுதாரித்து எழ முயன்று முடியாமல், ஆத்திரத்துடன் உணவு மேஜையிலிருந்த பொருட்களை உருட்டிவிட்டான். தலை பாரம் தாளாமல் கழுத்து நொடிக்க, உணவு மேஜையின் மீதே தலைகுப்புற கவிழ்ந்து, முழு இருளுக்குள் மூழ்கிப் போனான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 62

குற்ற உணர்வும் பதட்டமும் சரிவிகிதத்தில் மிருதுளாவை ஆக்கிரமித்திருந்தது. கனத்த மனதுடன் ஒரு கணம் தயங்கி நின்றவள், முடிவெடுத்த பின் பின்வாங்குவது மூடத்தனம் என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாள். அர்ஜுனின் சுயநினைவற்ற நிலை அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் அவளை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தது.

கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்கை பூட்டிவிட்டு ஒரு முறைக்கு இருமுறை கதவை நன்றாக தள்ளிப்பார்த்தாள். இனி வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியாது, அர்ஜுன் கண்விழித்து கதவை திறந்தால்தான் உண்டு என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகு ஓட்டம் பிடித்தாள். சூழ்ந்திருந்த இருள் அவளை அச்சுறுத்தவில்லை. அதைவிட அவள் செய்துவிட்டு வந்திருந்த காரியம் பெரிது. ஆனால் அதற்கு அவசியம் ஏற்பட்டுவிட்டதே! மனதின் உறுத்தலை புறந்தள்ள முயன்றபடி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். சற்று நேரத்திலேயே அவளுக்கு அருகில் ஒரு கார் வேகத்தை குறைந்து வந்து நின்றது.

“சீக்கிரம் ஏறு” - முன்பக்க கதவை திறந்துவிட்டபடி அவசர குரலில் ஆணையிட்டவர் பகவானேதான். தன்னையறியாமல் மிருதுளாவின் உடல் விறைத்தது. எத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்த மனிதரை பார்த்து! “ம்ம்ம், சீக்கிரம்” - திகைத்து நிற்கும் மகளை துரிதப்படுத்தினார். அவளும் சுதாரித்துக் கொண்டு பாய்ந்து உள்ளே ஏறினாள். கார் வேகமெடுத்து ஓடியது.

“போனோ.. இல்ல வேற ஏதாவது எலக்ட்ரானிக் ஐட்டமோ கைல இருக்கா?” - எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மகளை பார்க்கும் மனிதரிடமிருந்து வந்த முதல் கேள்வி. மிருதுளா அவரை வெறித்துப் பார்த்தாள். உணர்வுகளே இல்லாத அந்த மனிதர் வெகு அந்நியமாய் தோன்றினார்.

“என்ன அப்படி பார்க்கற? இருக்கா இல்லையா? அவன் நம்மள ஃபாலோ பண்ணி வந்துடக்கூடாது. பதில் சொல்லு” - பதட்டத்தை வெளிக்காட்ட விரும்பா அழுத்தத்துடன் மகளை எச்சரித்தார்.

அவளுடைய தலை குறுக்காக அசைந்தது. பார்வை தந்தையின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“இத்தனை வருஷமா எங்க போயிருந்தீங்க?” - மகளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ஓரிரு நிமிடங்கள் மெளனமாக காரை செலுத்தியவர் பிறகு, “இந்த கேள்விக்கு உன் அம்மாகிட்ட பதில் இருக்கு” என்றார்.

“நீங்க என் அப்பா. எனக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. எதுக்காக எங்களை விட்டுட்டு போனீங்க?”

சட்டென்று மகளை திரும்பிப் பார்த்தார் பகவான். அவள் முகத்தில் தெரிந்த பிடிவாதம் அவருடைய ரசனைக்கு உள்ளானது. கனிந்த குரலில், “நானா விரும்பி போகல. சூழ்நிலை.. குடும்பத்தை விட்டுட்டு ஓட வேண்டிய கட்டாயம்” என்றார்.

“எப்படி வந்தது அந்த சூழ்நிலை?”

அவர் பதில் சொல்ல முடியாமல் பெருமூச்சுவிட்டார்.

“எனக்கு தெரியும், உங்களுக்கு பயம். அர்ஜுன் மேல பயம்.”

சட்டென்று அவருடைய முகபாவம் மாறியது. கடுங்கோபத்துடன் “மிருதுளா” என்று அதட்டினார்.

அவள் ஒன்றும் பயந்துவிடவில்லை. “என்ன பிரச்சனை? எதுக்காக இந்த ஓட்டம்? எதுக்காக இந்த தலைமறைவு?” விடாமல் கேள்விகளை அடுக்கினாள். அவர் வாய் திறக்கவில்லை. சற்று நேரத்திலேயே கார் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்தது. மிருதுளா அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தாள். அவர்கள் அனந்த்பூரை விட்டு வெளியேறவில்லை. அப்படியென்றால் அவளுடைய பெற்றோர், அவளை சுற்றி, அவளுக்கு அருகில் தான் இருந்திருக்கிறார்களா!

இருவரும் காரிலிருந்து இறங்கி மின்தூக்கியில் நுழைந்து நான்காவது தளத்தில் வெளியேறினார்கள். தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு பகவான் அந்த அப்பார்ட்மென்டின் கதவை திறக்க இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

“யார் வீடு இது?” - மிருதுளா கேட்கவும், “மிருதூ” என்கிற கூவலுடன் ஷோபா அறையிலிருந்து பாய்ந்து வரவும் சரியாக இருந்தது. தாயும் மகளும் கட்டி கொண்டார்கள். மிருதுளா உடைந்து அழுதாள். பிரிவு துயரை கண்ணீரில் கரைத்தாள். ஷோபாவின் உடலும் நடுங்கியது. தாய் அல்லவா? பதட்டம் இருப்பது இயல்புதான். மகளை தழுவி முதுகை வருடி தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்த முயன்றாள். அவள் முகத்தில் விழுத்த முடியை காதோரம் ஒதுக்கி, கண்ணீரை துடைத்துவிட்டு நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

“உனக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு தெரியும். நீ என்கிட்ட வந்துடுவேன்னு எனக்கு தெரியும்” - மகிழ்ச்சி பொங்கியது தாயின் குரலில்.

“என்னம்மா நடக்குது?”

“உன்ன அவன்கிட்டயிருந்து தூக்க பல முறை ட்ரை பண்ணி தோத்துட்டோம். ஆனா நீ தப்பிச்சு வந்துட்ட. ஒரு பெரிய அரக்கனை ஏமாத்திட்டு வந்துட்ட” - பெருமையுடன் கூறினாள். அர்ஜுனை ஏமாற்றிவிட்ட நினைவில் மிருதுளாவின் முகம் சுண்டிப்போனது.

“ம்மா, ஐ நீட் டு டாக்”

“இப்பவே பேசனுமா? ரெஃப்ரெஷ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன். நள்ளிரவுக்கு மேல நாம இங்கிருந்து கிளம்பனும்.”

“கிளம்பனுமா! எங்க? ஏன்?”

“மிருது, இது அந்த அர்ஜுன் வசிக்கிற ஊர். எரிமலை அடிவாரத்துல குடியிருக்கறதும் இந்த ஊர்ல தாமதிக்கிறதும் ஒன்னு. நாம மூவ் பண்ணியே ஆகனும்.”

“இல்ல, அர்ஜுன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. உங்களுக்குள்ள ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்..”

“என்ன! என்ன பேசுற நீ?” - மகளை இடைவெட்டி அதட்டினார் தந்தை.

“ஹி இஸ் எ குட் மேன்” - அழுத்தமாகவே கூறினாள் மகள்.

“பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு? என்னையும் என் குடும்பத்தையும் கொல்ல வருஷக்கணக்கா துரத்திக்கிட்டு இருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்ற?” - ஆத்திரப்பட்டார்.

“ஆனா என்னை கொல்லல. உங்க பொண்ணுன்னு தெரிஞ்சும் கொல்லல. அதுக்கு என்ன அர்த்தம்?”

“உன்ன பிணையா பிடிச்சு வச்சிருந்தான்னு அர்த்தம். என்னைய பிடிக்க உன்ன தூண்டில் புழுவா பயன்படுத்தினான்னு அர்த்தம்” - மகளிடம் பாய்ந்த கணவனை, “நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நா பேசிக்கிறேன்” என்று தடுத்துவிட்டு மகளை தனியாக அழைத்துச் சென்றாள் ஷோபா.

“ஏன் இப்படியெல்லாம் பேசுற?”

“ஏன்னா நா அர்ஜுன் கூட மாசக்கணக்கா இருந்திருக்கேன். ஐ நோ ஹிம்.”

“அவன் உன்ன ட்ராப் பண்ணி வச்சிருந்தான் மிருது.”

“நானும் விரும்பித்தான் அங்க இருந்தேன்.”

“என்ன சொல்ற நீ!”

“ம்மா.. எங்களுக்குள்ள ஸம் எமோஷன்ஸ் டெவலப் ஆயிருக்கு.”

“என்ன! என்ன மாதிரி எமோஷன்?” - பதட்டத்துடன் கேட்டாள்.

“ரொம்ப ஸ்ட்ராங்கான எமோஷன்ஸ். ஒருத்தரவிட்டு ஒருத்தர் இருக்க முடியாதுங்கற அளவுக்கு.”

“நோ” - ஷோபாவின் கண்கள் விரிந்தன. முகம் இரத்தப்பசையற்று போய்விட்டது.

“ஐம் சாரிம்மா”

“மிருது! என்ன பேசுற நீ? எவ்வளவு பெரிய சிக்கலை இழுத்துக்கிட்டு வந்திருக்க! போச்சு.. சூழ்நிலை இன்னும் மோசம ஆக போகுது. ம்ஹும்.. விடமாட்டேன். இங்க பாரு, எல்லாத்தையும் மறந்துட்டு இப்போவே கிளப்பு. இங்கிருந்து போயிடலாம்” - படபடத்தாள்.

“ம்மா ப்ளீஸ்”

“அவன் உன்ன கொன்னுடுவான் மிருது”

“இல்ல, அர்ஜூனால என்னை கொல்ல முடியாது”

“கடவுளே, இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? மிருது, அவன் உன்னைவிட பத்து பன்னிரண்டு வயசு மூத்தவன். அவன்கிட்ட உனக்கு எப்படி..”

“தெரியாதும்மா.. ஆனா எனக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.”

“அவன் கல்யாணம் ஆனவன்”

“மனைவி இல்ல”

“அவ யாருன்னு தெரியுமா உனக்கு? அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா?”

“சொல்லுங்க. ஆர்த்திக்கு என்ன ஆச்சு?”

தலையை பிடித்துக் கொண்டாள் ஷோபா. மகளுடைய பிடிவாதம் அவளை அச்சுறுத்தியது. எதையும் உடைத்து பேச முடியாமல் தடுமாறினாள். பிறகு மெல்ல துவங்கினாள். “மிருது வி ஆர் கோர்த்தாஸ்” - மிருதுளாவின் உடல் சட்டென்று இறுகியது. தெரிந்த விஷயம்தான் என்றாலும் அதை தாயின் வாய்மொழி உறுதிப்படுத்திய போது மனம் கனப்பதை தவிர்க்க முடியவில்லை.

“அப்பா ஆர்மிதானே?” - வலுவற்ற குரலில் கேட்டாள்.

“கோர்த்தாஸ் இல்லாத இடமே இல்ல. அவர் ஆர்மிக்குள்ள இருந்த கோர்த்தா மேன். கோர்த்தாவோட ஸ்க்வார்ட்ஸ் எல்லாம் இவ்வளவு ப்ரொஃபஷனலா இருக்கறதுக்கு உங்க அப்பாவோட ஆர்மி ட்ரைனிங் ஒரு முக்கியமான காரணம். அன்னைக்கு மட்டும் இல்ல, இன்னைக்கும் நாங்க தலைமைக்கு ரொம்ப விசுவாசமான கோர்த்தாஸ். அர்ஜுன் எங்களோட ரிசோர்ஸ். உங்க அப்பாவோட சிஷ்யன். பத்து நாள்ல கத்துக்க வேண்டியதை ஒரே நாள்ல கத்துக்குவான். புத்திசாலி.. கொஞ்சம் சூது.. ரொம்ப கெட்டவன். ஆனா எங்களுக்கு ரொம்ப பிடிச்சவன். நாங்க நினைக்கிறதை செஞ்சு முடிக்கிறவன். வயசு வித்தியாசம் இல்லாம நட்பா பழகினோம். தலைமை உடைஞ்சது. நாங்க ஜெகன் நாயக் பக்கம் நின்னோம். அர்ஜுன் ராகேஷ் சுக்லா பக்கம் நின்னான். ஒருத்தர ஒருத்தர் தாக்க வேண்டிய கட்டாயம். நாங்க முந்திக்கிட்டோம். அர்ஜூனுக்குத்தான் குறி வச்சோம். ஆர்த்தி பலியாயிட்டா. இப்போ அவன் பழிவெறி பிடிச்சு அலையிறான்” - எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாக சொல்லி முடித்தாள்.

மிருதுளா தளர்ந்து போய் அமர்ந்தாள். தாய் சொன்னவற்றை கிரகிக்க முடியாமல் தத்தளித்து, “நீங்க.. நீங்களுமா? இதுல..” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

“நானும் கோர்த்தாவோட அங்கம் தான்” - தெளிவாக பதில் கொடுத்தாள் தாய். மிருதுளாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

“ஷி வாஸ் ப்ரெக்னென்ட்.. தெரியுமா?”

“எந்த வீக்னஸுக்கும் இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை அது.”

“கடவுளே!” - இதயம் வலித்தது. இந்த அளவுக்கு இரக்கமற்றவளா அவள் தாய்!

“இதுல அழறதுக்கு எதுவும் இல்ல மிருது. அன்னைக்கு நாங்க அலட்சியமா இருந்திருந்தாலோ, பலவீனத்துக்கு இடம் கொடுத்திருந்தாலோ இன்னிக்கு உயிரோட இருந்திருக்க முடியாது.”

“லீவ் மீ அலோன்”

“நிச்சயமா.. தனியா இருந்து யோசி. அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு யோசி. உனக்கு அர்ஜுன் மேல ஃபீலிங்ஸ் இருக்கு. அர்ஜூனுக்கும் உன் மேல இருக்கலாம். அதனால கூட அவன் உன்ன விட்டு வச்சிருக்கலாம். ஆனா ராகேஷ் விடமாட்டான். ஏன்னா ஆர்த்தி அவனோட ஒரே பொண்ணு. அர்ஜுன் உன்ன காப்பாத்த முயற்சி பண்ணறான்னு தெரிஞ்சா அவன் அர்ஜுனையும் விடமாட்டான். இனி யோசி.. அர்ஜுனை தேடி போகணுமா? இல்ல விலகி போகணுமான்னு நல்லா யோசி” - நங்கூரமிட்டது போல் சொல்ல வேண்டிய அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக கூறி, மகளை தனிமையில் விட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள் ஷோபா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 63

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், நடந்து முடிந்த சம்பவத்திற்கும் இரண்டு நியாயங்கள் இருக்கக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் நியாயத்தை அர்ஜுனிடம் எடுத்துரைத்து அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அனைத்தும் பாழாகிவிட்டது. கண்ணீர் வற்றி வறண்டு போன அவள் கண்கள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

ஒரு கர்பிணி பெண்ணை கொன்றுவிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் பேசியவள் அவளை பெற்றவளே தானா! கதவுக்கு கூடுதல் தாழ்ப்பாள் போட்டு பூட்டிக்கொள்ளும் பயந்த பெண் தானே அவள் அறிந்த தாய். இங்கு இருப்பவள் யார்? அவளுக்கு கொஞ்சமும் அறிமுகமற்ற இந்த பெண் யார்? - மிருதுளாவின் நெஞ்சு எரிந்தது. பெற்ற தாயை கூட அறிந்து கொள்ளாமல் போய்விட்ட முட்டாள்தனம் அவளை வேதனைப்படுத்தியது.

அவன் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன சொல்லி மன்னிப்பு கேட்பது? கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகிவிட்டது. இந்நேரம் மாத்திரையின் வீரியம் குறைந்திருக்கும். விழித்திருப்பான். என்ன யோசிப்பான்? எப்படி உணர்வான்? - நினைக்கும் பொழுதே நெஞ்சுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது. குற்றம் இழைத்தவளாய் தவித்தாள்.

‘நீ என்னைவிட்டு போகக் கூடாது. போக விடமாட்டேன்’ - அவனுடைய குரல் அவள் சிந்தையிலிருந்து நீங்க மறுத்தது. ‘இப்போது என்ன முடிவெடுப்பான்? எப்படி ரியாக்ட் செய்வான்?’ - இதயம் வலித்தது.

அனைத்தையும் உதறிவிட்டு அவனிடம் ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியாது. அவளுடைய நெருக்கம் அவனுக்கும் ஆபத்தை கொண்டு வந்து சேர்த்துவிடும். ராகேஷ் சுக்லா.. அந்த மீசைக்கார மனிதரின் கண்களில் தெரியும் வெறி மிருதுளாவின் முதுகுத்தண்டை சில்லிடச் செய்தது.

வலுவிழந்து ஒடுங்கி போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள். கண்களை மூட முடியவில்லை. அவன் நினைவு நெஞ்சை அழுத்தியது. சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தாள். அதிலிருந்து தப்பிக்க விரும்பி உறங்க முயன்றாள். உறங்கிவிட்டால் எல்லாம் மறந்துவிடுமே! தற்காலிகமான விடுதலைதான். ஆனால் அது அவளுக்கு அப்போது மிகவும் அவசியமானது. பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் அவள் சற்று நேரம் உறங்கியே ஆக வேண்டும். முயன்று இமைகளை இழுத்து மூடினாள். வெகு நேரம் பிடித்தாலும் அவளுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவே செய்தது. மிருதுளாவை உறக்கம் தழுவியது.

எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது. ஒரு மெல்லிய சத்தம்.. மூச்சுவிடுவது போன்றதொரு காற்று சத்தம்.. அவளுக்கு வெகு அருகில்.. காதோரம்.. திடுக்கிட்டு விழித்தாள். சட்டென்று ஒரு வலிய கரம் அவள் வாயை அழுந்த மூடியது. விழிகள் தெறிக்க உற்றுப் பார்த்தாள். அவன்! அர்ஜுன்! அவளுக்கு மிக அருகில், துப்பாக்கியை அவள் நெற்றி பொட்டுக்கு நேராக குறிபார்த்தபடி, கண்களில் கோப கனலுடன் குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. பிராணவாயு ஏறுக்கு மாறாக உள்ளே வெளியே ஓட்டம் பிடித்தது. ஏனென்றே புரியாமல் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. இமைகளை சிமிட்டி கண்ணீரை அடக்க முயன்றாள். நெஞ்சில் கைவைத்து அழுத்தி இதயத்தின் துடிப்பை கட்டுப்படுத்த முயன்றாள். எதுவும் முடியவில்லை.

கொடூர கொலைகாரனின் தீவிரத்துடன் அவளை துளைத்தது அவன் பார்வை. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பமும் அதிலிருந்த கோபத் தகிப்பும் அவள் முகத்தில் வந்து மோதியது. திகைப்புடன் அவனை பார்த்துக் கொண்டே இருந்தவள் அப்போதுதான் அதை கவனித்தாள். அவன் தாடையோராம் ஏதோ சின்ன சின்ன புள்ளிகளாக.. கழுத்துப்பகுதியில் கூட.. என்ன அது! - புரியாமல் பார்வையை மேலும் கூர்மையாக்கியவள் திடுக்கிட்டாள். ‘ஐயோ.. கடவுளே!’

இரத்தம்! முகம், கழுத்து, தாடை எங்கும் இரத்தப் புள்ளிகள்.. அடிவயிற்றிலிருந்து கிளம்பிய அவள் அலறல் அவன் கைகளுக்குள் சிக்கித் திணறியது. கத்த முடியாமல் திமிறினாள்.

“ஷ்ஷ்ஷ்.. சின்ன சத்தம் கூட வர கூடாது. காட் மீ?” - உணர்வுகளற்ற அந்த குரல் மிகவும் அபாயகரமானது. மிருதுளா தலையை மேலும் கீழும் அசைக்க முயன்றாள்.

“லுக் அட் திஸ். லோடட் கன். கீழ தூங்கற யார் முழிச்சாலும் மேல அனுப்பிடுவேன், ஐ மீன் இட்” - எச்சரித்தான். அவள் மூளை எங்கோ ஓடியது.

‘கீழ தூங்கற யார் முழிச்சாலும்! கீழ தூங்கற! யாரோ உயிரோட இருக்காங்க.. தூங்குறாங்க.. அம்மா.. அம்மா.. அப்பா.. ஐயோ! யாரு!’ - அவள் உயிர் துடித்தது. அடக்க முடியாத கண்ணீர் அருவி போல் கொட்டியது.

“கெட் அப்” - கையை விலக்கிவிட்டு ஆணையிட்டான். வலுவிழந்து தொய்ந்த உடலை தூக்கி நிறுத்த முடியாமல் துவண்டு கிடந்தாள் மிருதுளா.

“ஐ.. ரிப்பீட்.. கெட்.. அப்” - கண்களை உருட்டி அடிக் குரலில் உறுமினான். உடல் வெடவெடக்க எழுந்து நின்றாள் மிருதுளா.

“வாக்.. ம்ம்ம்..” - முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி அவளை முன்னோக்கி தள்ளினான்.

மூச்சுவிடக் கூட பயந்தவளாக மெல்ல அடியெடுத்து வைத்து வெளியே வந்தாள். ஹாலில் விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் பார்வை செலுத்தி பெற்றோரின் அறையை பார்த்தபடியே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நின்றாள். சோபாவில் ஒரு ஆண் தலை தொங்கிக் கொண்டிருந்தது.

“அப்பா..” - கதறியது அவள் உள்ளம். என்ன இருந்தாலும் பெற்றவராயிற்றே! இரத்தம் துடிக்காதா? அசைவற்று நின்றவளை துப்பாக்கி முனையால் முன்னோக்கி தள்ளினான்.

அவளால் முடியவில்லை. கால்கள் ஒத்துழைக்கவில்லை.. அந்த நேரம் உள்ளே ஒரு இருமல் சத்தம்.. தாயின் குரல்.. ஓவென்று உள்ளே உணர்வுகள் பொங்கின. அழுகை நெஞ்சை அடைத்தது. கைகளால் வாயை பொத்திக் கொண்டாள். மூச்சு காற்றுக்கு திணறியது நெஞ்சுக்கூடு.. மீண்டும் முதுகில் ஒரு அழுத்தல்.. முன்னோக்கி நடந்தாள். சோபா அருகில் வந்துவிட்டது.

பயம்.. பதட்டம்.. தவிப்பு.. அழுகை.. அனைத்தையும் மீறி தந்தையை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்கிற ஆசை.. மெல்ல திரும்பினாள். அவள் புருவம் சுருங்கியது. பார்வையை குவித்து மீண்டும் உற்று நோக்கினாள். அடுத்த நொடியே தரையில் சரிந்து சத்தமில்லாமல் குலுங்கினாள்.

இறந்துகிடக்கும் அந்த மனிதனை யார் என்று அவளுக்கு தெரியாது. அவன் எப்போது அந்த வீட்டுக்குள் வந்தான் என்றும் தெரியாது. ஆனால் அது அவள் தந்தை இல்லை.. அவர் சாகவில்லை. அர்ஜுன் அவரை கொல்லவில்லை.. ஒரு நொடி விடுதலையை உணர்ந்தவள் மறுநொடியே கூசிப் போனாள். இப்போது இங்கு செத்துக் கிடப்பவனும் ஒரு மனிதன் தானே? கொன்றுவிட்டானே! ஒரே நொடியில் அவனுடைய வாழ்க்கையை முடித்துவிட்டானே! இதை எப்படி சகிப்பது? இதை எப்படி ஏற்பது? - பொங்கிப் பெருகிய உணர்வுப் பேரலையில் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்க, விருட்டென்று எழுந்து வெளியே ஓடினாள்.

சூழ்ந்திருந்த கும் இருட்டில் மறைந்து நின்ற அந்த கருப்பு கார் அவள் பார்வைக்கு புலப்படவில்லை. ஓடி வந்த வேகத்தில் காரில் இடிபட்டு சுருண்டு கீழே விழுந்தாள். உடலில் அடி எங்கு பட்டதென்றே உணர முடியவில்லை. அந்த அளவுக்கு சிந்தனை புற விஷயத்திலிருந்து விலகி அவன் செயலில் சிக்குண்டிருந்தது. அவளை பின் தொடர்ந்து வந்த அர்ஜுன், கீழே கிடப்பவளை இழுத்து காருக்குள் தள்ளி கதவை மூடிவிட்டு ட்ரைவர் இருக்கையை ஆக்கிரமித்தான்.

கருப்பு கையுறைக்குள் மறைந்திருந்த அவன் கைகள் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தன. அவன் காதோரம் வடிந்த வியர்வை புடைத்திருந்த கழுத்து நரம்பில் இறங்கியது. இறுகிய தாடையும் விடைத்த நாசியும் ஏறி இறங்கும் வெப்ப மூச்சுக்காற்றும் எரிமலையை ஒத்திருந்தது. மிருதுளாவின் கண்ணீர் நிற்கவில்லை. அவளுடைய அழுகையும் செருமலும் அந்த பயணம் முழுவதும் தொடர்ந்தது. அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக காரை வெகுவாக விரைந்து செலுத்தியவன் வீடு வந்து சேர்ந்ததும் வேகத்தை குறைத்து கராஜிற்குள் நுழைந்து இன்ஜினை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பினான்.

கண்களில் வெறுப்பையும் குரலில் அந்நியத் தன்மையையும் கொண்டு, “உன்ன கொன்னுருக்கனும்.. உன் உடம்ப கிழிச்சு உள்ள இருக்க ஷோபாவோட இரத்தத்த மொத்தமா வெளியே எடுத்திருக்கனும்.. என்னையே ட்ரக் பண்ணியிருக்க! என் சாப்பாட்டுலேயே கை வச்சிருக்க! அப்படியே உன் அம்மா மாதிரி!” - அவன் பேச பேச குறைந்திருந்த அழுகை மீண்டும் பொங்க மிருதுளா தேம்பினாள்.

சட்டென்று ஆத்திரம் மேலிட அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். “நடிக்காத.. என்னை ஏமாத்தியிருக்க.. பொய் சொல்லியிருக்க.. உன் கழுத்தை திருகனும் போல இருக்கு. உன் மூச்சை நிறுத்தனும் போல இருக்கு” என்று பற்களை நறநறத்தபடி உறுமியவன் அவளை உதறி பின்னுக்குத் தள்ளினான்.

கன்றி சிவந்துவிட்ட கழுத்தை கைகளால் தாங்கிக்கொண்டு பரிதாபமாக அவனை ஏறிட்டாள். சந்தேகம் நிறைந்த முகம்.. நம்பகமில்லாத பார்வை.. அவள் மனம் வெகுவாய் புண்பட்டது. “அ..ர்..ஜுன்..” - உடைந்த குரலில் மெல்ல முணுமுணுத்தாள்.

“டோன்ட்.. டோன்ட் டேர் டு டேக் மை நேம் அகைன்” (இன்னொரு முறை என் பெயரை உச்சரிக்க துணியாதே) என்று எச்சரித்துவிட்டு வேகமாக காரிலிருந்து இறங்கியவன் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு வீட்டுக்குள் விரைந்தான்.

நொறுங்கிப் போனாள் மிருதுளா. முகத்தை கைகளில் புதைத்து தேம்பி அழுதாள். துக்கத்தோடு சேர்ந்து அவள் உயிரும் உணர்வும் கூட கண்ணீரில் கறைந்துவிட்டதோ என்னவோ! சக்தியெல்லாம் வற்றி போய், நெஞ்சு கூடு வறண்டுவிட்டது. உள்ளுக்குள் எதுவுமே இல்லாதது போல் காலியாக உணர்ந்தாள்.

வானில் தோன்றிய வெளிச்சக் கீற்று கராஜிற்குள்ளும் மெல்ல எட்டிப்பார்த்தது. இன்னும் சில நாழிகைகளில் பொழுது புலர்ந்துவிடும். ஆனால் அவளோ காரிருளுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் அலைமோதினாள். எந்தப் பக்கம் செல்வது? யாருக்காக நிற்பது? எது நியாயம்? யார் மீது தவறு? எதுவுமே அவளுக்கு புரியவில்லை.

மெல்ல காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தாள். உள்ளே வெளிச்சம் இல்லை. அவன் கண்ணில் படாமல் அப்படியே அறைக்குள் சென்று அடைந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியவில்லை. மனம் சோர்ந்திருந்தது. உடல் நலிந்திருந்தது. தெம்பில்லை. தைரியம் இல்லை. தக்கை போல்.. பெரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் துரும்பு போல் தன்னை உணர்ந்தாள். அவள் ஷோபாவின் ரத்தத்தில் உதித்தவளாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவள் அல்ல. பகவானின் மகளாக இருக்கலாம்.. ஆனால் அவள் வேறு. இழுத்துப் பிடித்த தைரியத்துடன் ஹாலில் பார்வையை செலுத்தினாள்.

டீப்பாயில் அவன் அணிந்திருந்த கையுறையும் அதன் மீது துப்பாக்கியும் இருந்தது. அருகில், சோபாவில் கைகளால் தலையை தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனிடம் ஒரு தளர்வு தெரிந்தது. சோர்வாக காணப்பட்டான். இதற்கு முன் அவனை இப்படி ஒரு நிலையில் அவள் பார்த்ததே இல்லை. உள்ளுக்குள் கூர்மையாய் ஏதோ பாய்வது போல் உணர்ந்தவள், கண்களை இறுக மூடிக் கொண்டு அப்படியே நிலைக்கதவில் சாய்ந்தாள். அந்த வலியை சகித்து மீள ஓரிரு நிமிடங்கள் பிடித்தது. அதன் பிறகு கண்களை திறந்தாள். அவன் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை அவன் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்க விழையவில்லை. உள்ளே வலித்தது..

“ஹூ இஸ் ஹி?” - நைந்த குரலில் கேட்டாள். அர்ஜுன் நிமிர்ந்து பார்த்தான்.

“அங்க.. அந்த ஆள்..” - தடுமாறினாள்.

“ஜெனார்த்.. ஜெனார்த் நாயக்..” - வறண்ட குரலில் கூறினான்.

“யார் அவர்?”

“உன் அப்பாவோட பாஸ். என் சாப்பாட்டுல உன்னோட அம்மா விஷம் கலந்தது இவனுக்காகத்தான்.”

“உங்க சாப்பாட்டுல விஷமா! என் அம்மாவா!”

“இதுல என்ன ஆச்சரியம்? ஏழு வருஷத்துக்கு முன்னாடி உன் அம்மா செஞ்சதைத்தான் நீ நேத்து செஞ்சுட்டு போன” என்றான் சாதாரணமாக. மிருதுளா திகைத்துப்போனாள். சாதாரணமாக செய்துவிட்ட குற்றம் இப்போது பெரும் பாவமாக தோன்றியது அவளுக்கு.

“நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத. என்கிட்ட விளையாடினா கண்டிப்பா பே-பேக் பணியாகனும். எங்க ஓடினாலும் விட மாட்டேன். உன்னையும் சேர்த்துதான்.”

மிருதுளா அவனை வெறித்துப் பார்த்தாள். “பழி வாங்கிட்டிங்க.. யு ஜஸ்ட் காட் யுவர் ரிவெஞ்..” - வறண்டு போயிருந்த கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.

“இல்ல.. இன்னும் முழுசா என் பழி தீரல” - கண்கள் பளபளக்க நிமிர்ந்து அமர்ந்தான். பகீரென்றது அவளுக்கு. அவளுடைய பெற்றோரை கொன்றால் தான் அவன் பழியுணர்வு தீருமா?

“அர்ஜுன்” - தவிப்புடன் இரண்டே எட்டில் அவனிடம் நெருங்கினாள். அவன் காலடியில் அமர்ந்து கைகளை பற்றிக் கொண்டாள். “போ..து..ம்.. போதும் அர்ஜுன்.. இதுக்கு மேல வேண்டாம்.. இந்த கை.. இந்த கைல இன்னொரு மனுஷனோட இரத்தம் வேண்டாம்.. ப்ளீஸ்..” - பற்றியிருந்த அவன் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறியழுதாள்.

வெடுக்கென்று அவள் பிடியிலிருந்து கையை உருவிக் கொண்டு எழுந்தவன், “குட் ட்ரை.. ஆனா இந்த நாடகம் என்கிட்ட செல்லாது” என்றான் கடுமையாக.

“இல்ல அர்ஜுன்.. நா நடிக்கல. என்னை பாருங்க. என் முகத்தை பாருங்க” - அவன் தாடையை பிடித்து தன் பக்கம் திருப்பி கண்ணோடு கண் கலந்து, “நமக்காக.. நம்ம எதிர்காலத்துக்காக.. ப்ளீஸ்.. அவங்க பண்ணினது தப்புதான். மன்னிக்க முடியாத தப்பு. அதுக்கு என்ன தண்டனை வேணுன்னாலும் கொடுங்க. போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுங்க. ஜெயிலுக்கு அனுப்புங்க. ஆனா உங்க கையால கொன்னுடாதீங்க அர்ஜுன். அந்த இரத்தம்.. அது என்னை பெற்றவங்க இரத்தம்.. வேண்டாமே அர்ஜுன்” - யாசித்தாள்.

அர்ஜுன் அவளை தீர்க்கமாக பார்த்தான். “நிச்சயமா முடிப்பேன். என் கையாலேயே அவங்க இரண்டு பேரையும் முடிப்பேன்” - சூளுரைப்பது போல் கூறினான்.

மிருதுளாவின் முகம் மாறியது. கோபம்.. ஆத்திரம்.. அவள் முகமெல்லாம் இரத்தமாக சிவந்துவிட்டது. ஆவேசமாக அவன் கைகளைப் பிடித்து தன் கழுத்தில் வைத்து தன்னைத்தானே நெரித்துக்கொள்ள முயன்றபடி, “கொன்னுடுங்க.. கொன்னுடுங்க.. என்னை முதல்ல கொன்னுடுங்க..” என்று வெறிபிடித்தவள் போல் கத்தினாள்.

ஓரிரு நிமிடங்கள் அவள் போக்கில் தன் கையை விட்டிருந்தவன் பிறகு தானாகவே பிடியில் அழுத்தத்தைக் கூட்டினான். மிருதுளா சட்டென்று நிதானத்திற்கு வந்தாள். மூச்சுக்குழல் மெல்ல மெல்ல இறுகுவதை உணர்ந்தாள். அவள் கண்கள் விரிந்தன. நெஞ்சு படபடத்தது. தன்னை மீறி அவன் கைகளை தன் கழுத்திலிருந்து அகற்ற முயன்றாள். ஆனால் அவன் பிடி இளகவில்லை.

“யு ஆர் ரைட்.. கொல்லனும்.. உன்னைத்தான் முதல்ல கொல்லனும். அதுதான் என்னோட விருப்பம். அதுதான் என்னோட அசைன்மென்ட். ஆனா முடியல.. உன்ன என்னால கொல்ல முடியல” - ஆத்திரத்துடன் அவளை கீழே தள்ளிவிட்டான்.

பெரும் கேவலும் இருமலுமாக சுவாசத்திற்கு போராடியபடி தரையில் சென்று மோதியவளின் முகமெல்லாம் இரத்தவோட்டம் தடைபட்டதில் கருத்துப்போயிருந்தது. கழுத்தை பிடித்துக் கொண்டு மேல்மூச்சு வாங்கியபடி எழ முயன்றவள் தோற்று மீண்டும் தரையில் விழுந்தாள்.

உடல் விறைக்க அவள் படும் துன்பத்தை ஓரிரு நொடிகள் சகித்தவன், சட்டென்று குனிந்து அவளை தாங்கிப் பிடித்து சோபாவில் அமர வைத்தான். அவன் உதடுகளில் அழுத்தம்.. கண்களில் வலி.. விரல்களில் நடுக்கம்.. மென்மையாய் அவள் கழுத்தை வருடிவிட்டான். “ஒன்னும் இல்ல.. யு ஆர் ஆல்ரைட்.. காம் டௌன்..” - முதுகை தடவிக்கொடுத்தான். அவள் சற்று நிதானப்பட்டதும் தண்ணீர் கொண்டு வந்து பருகச் செய்தான்.

அவள் கண்களில் வடிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்துவிட்டான். அந்த மென்மை மிருதுளாவின் மனதை மயிலிறகாக வருடியது. அந்த இணக்கமும் அன்பும்தான் அவளுடைய அடிப்படை தேவை என்பது போல் அப்படியே அவன் கையில் கன்னத்தை பதித்து கண்களை மூடிக் கொண்டாள். அதே கைதான் சற்று நேரத்திற்கு முன் ஒரு மனிதனை கொலை செய்தது என்பதை கூட அந்த நொடியில் மறந்துவிட்டாள்.

அர்ஜுன் அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை சந்தித்தான். “என்னால இந்த உலகத்துல யாரை வேணுன்னாலும் கொல்ல முடியும். ஆனா உன்ன..” - தலையை குறுக்காக அசைத்து, “முடியாது.. என்னால முடியாது” என்றான்.

“ஏன்?” - கலங்கிய கண்களுடன் குரல் கரகரக்க கேட்டாள்.

அவள் நெற்றியில் இதழ் பதித்து, “ஏன்னா, நீதான் என்னோட வீக்னஸ்” என்றவன், தொடர்ந்து கண்கள், கன்னங்கள், நாசி, தாடை என்று இடம்மாறி இடம் முத்தமிட்டுக் கொண்டே, “நீதான் என்னோட பவர், நீதான் என்னோட சந்தோஷம், நீதான் என்னோட கவலை, நீதான் என்னோட வாழ்க்கை, நீதான் என்னோட ஜீவன்” என்று கூறிக் கொண்டே வந்தான்.

அப்போதுதான் மிருதுளா அதை கவனித்தாள். அவன் கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது. அவள் நெகிழ்ந்து உருகிப் போனாள். இமைக்காமல் அவன் கண்களை பார்த்து, “ஐ நோ அர்ஜுன்.. ஐ நோ யுவர் ஹார்ட்” என்று கூறி நுனி காலில் எக்கி அவன் இதழோடு இதழ் பொருத்தினாள்.

கடுமையான முடிவுகளும், கசப்பான உண்மைகளும், தீராத வலிகளும், அறியப்படாத ரகசியங்களும் நிறைந்த கனமான அவன் மனதை ஒற்றை இதழொற்றலில் லேசாக்கிவிட்டாள் மிருதுளா.

ஆழிப்பேரலையில் அகப்பட்ட துரும்பாக அல்லாடிக் கொண்டிருந்தவனை அமைதியான மேக நதியில் மிதக்கச் செய்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம். திக்குத் தெரியாமல் காரிருளில் சுற்றிக் கொண்டிருந்தவனை நட்சத்திரக் காட்டில் தொலைந்து போகச் செய்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம். மலை மீதிருந்து உருளும் பாறை போல் கட்டுகளற்று ஓடிக் கொண்டிருந்தவனை மலர் பொதியில் புதைத்து வைத்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம்.

அவன் எடுத்துக் கொண்டான். அவள் அள்ளிக் கொடுத்த அளவில்லா அன்பை தடையில்லாமல் ஏற்று தனதாக்கிக் கொண்டவன், அவள் தடுமாறி திணறிய போது முத்தமிடும் முறையை தனதாக எடுத்துக் கொண்டான். மனமொத்து அவனோடு இசைந்தவள், ஏதோ இடையிட்ட சிதனையால் அவன் தயங்கி பின்வாங்க முயன்ற போது அவன் சட்டை காலரை கொத்தாக பற்றி முன்மொழிந்தாள். வழிமொழிய வேண்டியவனோ பஞ்சுக்காட்டில் பற்ற வைத்த தீ போல் அவளை மொத்தமாக ஆக்கிரமித்து பஸ்பமாக்கினான்.

அவர்களை சுற்றி பின்னப்பட்டிருந்த வலை மிகவும் வலுவானது. பிரச்சனைகள் தீவிரமானது.. சிக்கல்கள் தீர்க்க முடியாதது.. ஆனால் பாறையில் வேர்விட்ட செடி போல் அவர்களுக்குள் ஊடுருவியிருந்த காதல் அனைத்தையும் விட ஆழமானது.. தீர்க்கமானது.. தீராதது..
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 64

மலையை உடைத்து மனிதனாய் செதுக்கியது போன்ற மகா ஆஜானுபாகுவான தோற்றத்தில் மல்லார்ந்து படுத்திருந்தான் அர்ஜுன். அகண்டு திரண்ட அவன் புஜத்தில் தலை சாய்த்திருந்தாள் மிருதுளா. சீரான மூச்சுக் காற்றோடு மெல்லிய குறட்டை ஒலியும் அவனிடமிருந்து வெளியேறியது. இதற்கு முன் அவன் இத்தனை நிம்மதியாக உறங்கி அவள் பார்த்ததில்லை. கண்களில் கனிவோடு அவன் முகத்தை ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள், பிறகு தாடியை மெல்ல வருடியபடி அவன் வாழ்க்கையைப் பற்றி யோசித்தாள்.

‘ஓடிக் கொண்டே இருக்கிறான். அமைதியில்லாத ஓட்டம். ஆசுவாசம் இல்லாத ஓட்டம். எத்தனை நாள் இப்படி ஓட முடியும்?’ - அவள் மனதில் கனம் ஏறியது.

அர்ஜுன் உறக்கம் களைந்து அவள் பக்கம் திரும்பினான். குழப்பம் நிறைந்த அவள் முகத்தில் ஒற்றை விரலால் கோலம் வரைந்து, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தினான்.

“ம்ஹும்..” - குறுக்காக தலையசைத்தாள் மிருதுளா.

அவள் இடையை வளைத்து இறுக்கி அணைத்து, “தூங்கலையா?” என்றான் கொஞ்சலாக.

முகத்தில் சின்ன புன்னகையுடன் பார்வையை உயர்த்தி சுவர் கடிகாரத்தை நோக்கினாள். அவளை தொடர்ந்து அவன் பார்வையும் உயர்ந்தது. நேரம் முற்பகல் முடியும் தருவாய் என்றது கடிகாரம்.

“ஓ! ரொம்ப லேட் ஆச்சு. பசிக்குதா?” - சட்டென்று பரபரப்பானான். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் முகத்தில் சோர்வு தெரிந்தது. அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு போர்வையை விலக்கி எழுந்தான்.

மிருதுளா குளித்துவிட்டு வந்தபோது இருவருக்கும் இலகுவான காலை உணவு, மேஜையில் தயாராக இருந்தது.

“ஐ'ல் டேக் கேர்..” - அலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

‘டேக் கேர்’ என்று வேறு யாராவது சொன்னால் பத்திரமாக பார்த்துக் கொள்வதை பற்றி பேசுகிறார்கள் என்று தோன்றும். ஆனால் அந்த வார்த்தை இவன் வாயிலிருந்து வந்தால் மட்டும் யாரையோ ஒழித்துக்கட்ட போகிறான் என்று தான் எண்ண தோன்றும். இப்போது யாரை முடிக்கப் போகிறான்! அவளுடைய பெற்றோரையா! - குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்களே, அதுதான் இப்போதும் நடந்தது. அவன் என்ன செய்தாலும், பேசினாலும், தன் பெற்றோரை டார்கெட் செய்கிறானோ என்கிற சந்தேகம் தான் அவளை முதலில் தாக்கியது.

வெளிறிய முகத்துடன் அவள் திகைத்து நிற்பதைக் கண்டு, அலைபேசியை அணைத்துவிட்டு அவளிடம் நெருங்கினான் அர்ஜுன். “வாட்ஸ் அப்? யு ஓகே?” - அவள் கைகளை பிடித்துக்கொண்டு நெருக்கமாக கேட்டான்.

மிருதுளா புன்னகைக்க முயன்றாள். அவன் சமாதானம் ஆகவில்லை. அவளுக்குள் வருத்தம் இருப்பதை அவன் உணர்ந்தான். நேற்று அவ்வளவு பெரிய பிரச்னை நடந்து முடிந்த பிறகும் ஊடலில்லாமல் அவனோடு கூடிக் கலந்தவள் இன்று ஏன் வருந்துகிறாள்? காரணம் எதுவாக இருந்தாலும் அவள் முகம் வாடுவதை சகிக்க முடியவில்லை அவனுக்கு.

“டாக் டு மீ பேபி.. எது உன்ன இப்படி வருத்தப்படுத்துது?” - ஊக்கப்படுத்தினான்.

“ஐம் ஓகே.. ஜஸ்ட்.. பசி.. அவ்வளவுதான்” - சமாளித்தாள்.

“நிச்சயமா?”

“எஸ்”

“சரி வா. பிரட் டோஸ்ட் வித் சீஸ் ஆம்லெட், ஓகே தானே?” - டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்து அவள் அமர்வதற்கு வசதி செய்து கொடுத்தான்.

அவனுடைய ஒவ்வொரு செயலிலும் தெரிந்த கனிவும் காதலும் அவள் இதயத்தை தொட்டது. அமைதியாக உணவருந்தினாள். அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் பதில் அவளுடைய பெற்றோர் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தெரிந்ததால் அவனும் மௌனமாகவே உணவை முடித்தான். ஆனால் அவளுடைய வருத்தத்தை நீக்க முடியாத இயலாமை உள்ளே குத்திக் கொண்டே இருந்தது.

உணவிற்கு பிறகும் எதுவும் பேசாமல் வெளி வராண்டாவிற்கு தனிமையை நாடி வந்து அமர்ந்துவிட்டாள் மிருதுளா. அவளுடைய ஒதுக்கம் அவன் மனதை பிசைந்தது. உடனே பின்தொடர்ந்து வந்துவிட்டான்.

“ஒரு ட்ரைவ் போகலாமா?”

மிருதுளா அவனை நிமிர்ந்து பார்த்தாள். மனதில் எழுந்த கேள்வியை வாய்விட்டுக் கேட்டாள். “எப்படி கண்டுபிடிச்சீங்க?” - அவன் புருவம் சுருங்கியது.

“இல்ல.. நா எங்க இருக்கேன்னு எப்படி தெரிஞ்சுது?” - சின்ன தயக்கத்துடன் மீண்டும் விளக்கமாக கேட்டாள். அவன் முகம் சட்டென்று இறுகியது. மிருதுளா சங்கடத்துடன் உதட்டை கடித்தாள். அவனுடைய கோபம் அவள் குற்ற உணர்ச்சியை அதிகமாக்கியது. அவன் பார்வை அவள் கழுத்திற்குச் சென்றது.

‘இதுவா!’ - அவள் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தன. கை கழுத்தில் கிடந்த செயினை வருடியது.

“வாட் அபௌட் ட்ரைவ்” - அவன் அந்த பேச்சை முற்றிலுமாக தவிர்த்தான். முகம் கடுகடுவென்றிருந்தது.

“அர்ஜுன்” - தழுதழுத்தபடி எழுந்தாள் மிருதுளா.

“சொல்லு” - அவனுடைய கோபம் அவளை பேசவிடாமல் தடுக்க முயன்றது. ஆனாலும் அவள் பேசினாள்.

“ஐ வாண்ட் டு பீ வித் யு. ஐ காண்ட் லூஸ் யு. ப்ளீஸ் சேவ் அஸ். சேவ் அவர் ரிலேஷன்ஷிப்..” (எனக்கு உங்க கூடவே இருக்கனும். என்னால உங்கள இழக்க முடியாது. தயவு செஞ்சு நம்ம உறவை காப்பாத்துங்க..) - உடைந்து, கண்ணீர் வடிய கைகூப்பினாள்.

சட்டென்று இளகி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அர்ஜுன். சற்று நேரம் எதுவுமே பேச முடியவில்லை அவனுக்கு. தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு.

“ஆர் யூ மேட்? கூட தானே இருக்க? இப்போ.. இங்க.. ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற? எங்க போயிட போறேன் நான்? என்ன ஆயிடும் நம்ம உறவுக்கு?”

“பயமா இருக்கு”

“ஷ்ஷ்ஷ்.. எல்லாம் சரியாயிடும். வி ஆர் கோயிங் டு பி ஓகே” - அவளை அமைதிப்படுத்தினான். ஆனால் அவள் மனம் அமைதியடையவில்லை. “எப்படி? எப்படி எல்லாம் சரியாகும்?” - கேள்வி கேட்டாள்.

அதே கேள்விதான் அவனுக்குள்ளும் இருந்தது. ‘எப்படி சரியாகும்? சரியாக வேண்டும் என்றால் அவன் பகவானையும் ஷோபாவையும் மன்னிக்க வேண்டும். முடியுமா அவனால்?’ - ஆர்த்தியின் சிரித்த முகம் அவன் கண்ணெதிரில் தோன்றியது.

“டூ யூ நோ வாட் ஹாட்பண்ட் டு மை வைஃப்?” (என் மனைவிக்கு என்ன நடந்ததென்று உனக்கு தெரியுமா?) - இறுகிய குரலில் கேட்டான்.

மிருதுளாவின் உடல் விறைத்தது. அவள் இதயம் வேகமாக துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அவளை விளக்கி நிறுத்தினான். மிருதுளா அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

“ஐ லவ்ட் ஹர்..” - மூன்றே வார்த்தைதான். அவளை மொத்தமாக நொறுக்கிவிட்டது.

“வாட் அபௌட் மீ?” - கண்ணீருடன் கேட்டாள்.

“அது உனக்கே தெரியும்”

“கடவுளே!” - தலையை பிடித்துக் கொண்டு மீண்டும் சேரில் அமர்ந்தாள். கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது.

“மிருதுளா, யு ஹேவ் டு அக்ஸப்ட்.. உன்னோட பேரன்ட்ஸ் தண்டிக்கப்பட வேண்டியவங்க.”

“எனக்காக.. என்னோட நிம்மதிக்காக எதுவுமே செய்ய மாட்டீங்களா? நாட் ஈவன் ஆஃப்டர் லாஸ்ட் நைட்?” - தளர்வும் இயலாமையுமாக கேட்டாள். அவ்வளவுதான். அவன் முகம் படுபயங்கரமாக மாறியது.

“நேற்றைய இரவு உன்னோட இரண்டாவது திட்டமா இருக்காதுன்னு நம்பறேன். அப்படியே இருந்தாலும் என்கிட்ட எந்த பருப்பும் வேகாது. புரியுதா?” - வார்த்தைகளை விஷமாக கக்கிவிட்டு விருட்டென்று அவன் உள்ளே சென்றுவிட, அடிபட்ட சிறு பறவை போல் துடித்துப்போனாள் அவள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 65

அர்ஜுன், காலை உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பிரத்யேக அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சனி லால். அதோடு அன்று மாலை ஹோட்டல் புகாரியில் ராகேஷ் சுக்லா அவனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

அவரிடம், ‘ஐ’ல் டேக் கேர்’ என்று கூறிவிட்டு திரும்பிய போதுதான் வெளிறிய முகத்தோடு மிருதுளா அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்.

என்ன என்று கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சமாளித்தாள். அவள் மனதில் அவளுடைய பெற்றோரை பற்றிய சிந்தனை தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது அவனுக்கு அப்போதே புரிந்துவிட்டது. விலகியிருக்கத்தான் எண்ணினான். ஆனால் முடியவில்லை. வலிய சென்று பேசி வார்த்தையை வளர்த்து அவளையும் காயப்படுத்தி தன்னையும் காயப்படுத்திக் கொண்டு வந்துவிட்டான்.

இப்போது ஹோட்டல் புகாரிக்கு புறப்பட வேண்டும். அது அனந்த்பூரில் இல்லை. சில மணிநேர பயணத்திற்கு அப்பால் ஒரு முக்கிய நகரில் அமைந்திருக்கிறது. காரின் கண்டிஷன் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை பரிசோதிக்க கராஜிற்கு வந்தவனுக்கு வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. அவளுடைய அதிர்ந்த முகமும் கண்ணீர் வடிந்த கண்களும் அவன் நினைவிலிருந்து அகல மறுத்தன. பிடிவாதமாக மனதை நிலைப்படுத்தி வேலையில் கவனத்தை குவித்தான். இந்த உணர்வு போராட்டங்கள் அவன் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.

அர்ஜுன் கராஜிலிருந்து வந்த போது மிருதுளா அறையில் சுருண்டு படுத்திருந்தாள்.

“மிருதுளா, கெட் அப்.. வி ஆர் கோயிங் அவுட்” - அதட்டலாக அழைத்தான்.

எரிமலை போல் குமுறும் கோபத்தை உள்ளுக்குள் அடக்கியபடி, “எனக்கு ட்ரைவ் போற மூட் இல்ல. லீவ் மீ அலோன்” என்றாள் மிருதுளா.

“உன்ன ஊர் சுத்த கூப்பிடல. வேலை இருக்கு. ம்ம்ம்.. கெட் ரெடி. சீக்கிரம்” - அவசரப்படுத்தி அவளை புறப்பட வைத்தான். இருவரும் ஹோட்டல் புகாரிக்கு சென்று சேர்ந்தார்கள்.

அர்ஜுனுக்காக அங்கே ஒரு சூட் புக் செய்யப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும், ஜன்னல் ஓரமாக சென்று ஒரு சேரில் அமர்ந்துவிட்டாள் மிருதுளா. பயணம் முழுவதும் நீடித்த அவளுடைய மௌனம் இப்போதும் தொடர்ந்தது. அலுப்புடன் டிவியை உயிர்ப்பித்து ஏதோ பாடலை ஓடவிட்டான் அர்ஜுன். அவள் கவனம் பிறழவில்லை. பெருமூச்சுடன் அறைக்கதவை பூட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான். குளித்துவிட்டு வந்து ரூம் சர்வீஸை அழைத்து உணவை ஆர்டர் செய்தான்.

அவன் உடைமாற்றி மீட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. யார் என்று கேட்டுவிட்டு கதவை திறந்தான். ரூம் பாய் உணவு ட்ரேயோடு நின்றுக் கொண்டிருந்தான்.

“உள்ள கொண்டு வந்து வை.. அங்க” - மிருதுளாவின் பக்கம் கைகாட்டினான். அவள் அமர்ந்திருக்கும் சேருக்கு எதிரில் கிடந்த டீப்பாயில் ட்ரேயை வைத்துவிட்டு சென்றான் அவன். மிருதுளா அதை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அவளை ஓரக்கண்ணால் கவனித்தபடியே தயாராகிக் கொண்டிருந்த அர்ஜுன், அவள் அசைவதாக இல்லை என்பதை உணர்ந்து பற்களை நறநறத்தான். பிறகு தானே முன்வந்து தட்டில் உணவை பரிமாறி அவளிடம் நீட்டினான்.

அவனை நிமிர்ந்து பார்த்து “வாட்?” என்றாள் மிருதுளா.

“சாப்பிடு”

“எனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், தேவைப்பட்டாலும் தேவைப்படலைன்னாலும், நா இப்போ சாப்பிட்டாகனும் இல்ல? கொடுங்க.. சாப்பிடுறேன்” - மிளகு வெடிப்பது போல் படபடவென்று வெடித்துவிட்டு அவன் கையிலிருந்து தட்டை பிடுங்கி, உணவை அள்ளி விழி பிதுங்க வாயில் திணித்துக் கொண்டாள்.

“ஏய்! என்ன செய்ற?” - அவளிடமிருந்து தட்டை பிடுங்கி ஓரமாக வைத்தான்.

“நீங்க சொன்னதைத்தான் செய்றேன். அதை மட்டும் தானே நான் செய்யனும்?”

“ஏன் இப்படி பிஹேவ் பண்ற?”

“வேற எப்படி பிஹேவ் பண்ணனும்? ஓ! உங்களுக்கு நான் அமைதியா இருக்கனும்ல? ஓகே.. அப்படியே இருக்கேன்.”

“பைத்தியமாயிட்ட நீ”

“நோ.. நீங்க சொன்னதை செய்றேன். ஐம் எ மெஷின்” - உதடு துடிக்க ஆத்திரத்துடன் பேசினாள்.

“ஓ ரியலி! அப்போ ஒன்னு செய். நா திரும்பி வர்ற வரைக்கும் இங்கேயே, இப்படியே அசையாம உட்கார்ந்திரு” - எரிச்சலுடன் கூறிவிட்டு அவளை உள்ளே வைத்து அறைக்கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

**********

கோர்த்தாவின் வணிகப் பிரிவு தலைவர் மிகவும் திறமையானவர். வெட்டியெடுக்கும் கனிமங்களை காசாக்குவதில் கில்லாடி. பம்பரமாக சுழன்று பணத்தை குவித்துக் கொண்டிருந்தவரை, வயது ஓய்வெடுக்க வற்புறுத்தியது. எனவே சில மாதங்களுக்கு முன் புதிய தலைவர் ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாடிக்கையாளர்களிடம், அவருடைய அணுகுமுறையும் தொழில் சாமர்த்தியமும் தலைமைக்கு திருப்தியளித்ததால், அவருடைய பதவியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்பிற்கு கோர்த்தாவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அழைக்கப்பட்டார்கள். அர்ஜுனும் அழைக்கப்பட்டான்.

புதிய தலைவர் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் அர்ஜுனுக்கு தெரிந்தவர்தான். பழக்கமானவரும் கூட. ஆனால் அவர் வணிகப்பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று அவன் கூட எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியோடு அவருக்கு வாழ்த்து கூறினான். மற்றவர்களும் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்தார்கள். வாழ்த்துக்களும் உபச்சாரங்களும் ஓய்ந்த போது இன்னொரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்பினார் சுக்லா.

ஜெனார்த் நாயக்கின் மரண செய்தி காற்றைவிட வேகமாக கோர்த்தாவின் முக்கியப்புள்ளிகளை வந்தடைந்துவிட்டது. ஆனால் அவன் கதையை யார் முடிந்தது என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. அதை தான் இப்போது சுக்லா உறுதிப்படுத்தினார்.

“அர்ஜுன் ஹோத்ரா..” - கர்வமாக அவர் ஓங்கி உரைத்த போது கூடியிருந்தவர்கள் அனைவரும் அவனை பெருமையோடு நிமிர்ந்து பார்த்தார்கள். ஜெனார்தின் மரணத்தை கொண்டாடினார்கள். கொண்டாட்டம் முடிந்து அனைவரும் புறப்பட்ட பிறகு சுக்லா அர்ஜுனை தனியாக அழைத்துப் பேசினார்.

“நாயக்கை முடிச்ச உன்னால ஏன் பகவானை முடிக்க முடியல? ஏன் ஷோபா இன்னும் உயிரோட இருக்கா?” - குரலை உயர்த்தாமல் அழுத்தமாகக் கேட்டார். சட்டென்று அவன் உடல் இறுகியது. ஒரு கணம் பதில் சொல்ல தயங்கியவன் உடனே சுதாரித்துக் கொண்டு, “சந்தர்ப்பம் அமையல” என்றான்.

“அன்னைக்கு அந்த வீட்டுக்குள்ள பகவான் இருந்தான்னு எனக்கு தெரியும்” - ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து தன் கோபத்தை வெளிக்காட்டினார். அர்ஜுன் அவரை இமைக்காமல் பார்த்தான். அவர் தன்னை வெகு நெருக்கமாக கண்காணிக்கிறார் என்று எண்ணினான். உடனே அவன் முகம் கடுகடுவென்று மாறியது.

“இல்ல.. நான் உள்ள நுழையும் போது அங்க இருந்த ஒரே ஆண் ஜெனார்த் மட்டும்தான்.”

“எனக்கு இன்ஃபர்மேஷன் வந்தது”

“தப்பான இன்ஃபர்மேஷன். ஜெனார்த் உள்ள வந்ததும் பகவான் வெளியே போயிருக்கனும். வேற ஏதோ நடக்கப் போகுது.. பெருசா.. தே ஆர் ப்ளானிங் ஸம்திங். ஐம் ஸ்மெலிங் இட்” - சுக்லா வியப்புடன் அவனைப் பார்த்தார்.

அவன் சொல்வது உண்மை என்று தான் அவருக்கும் தோன்றியது. ஏனெனில் அந்த வீட்டிற்குள் பகவானும் ஷோபாவும் பதுங்கியிருப்பதாகத்தான் அவருக்கு செய்தி வந்தது. கூடவே ஒரு இளம் பெண்ணும். அந்த பெண் யார் என்ன என்று அவர் தெரிந்துக் கொண்டு ஆட்களை அனுப்புவதற்குள் அர்ஜுன் உள்ளே நுழைவதாக அடுத்த செய்தி வந்தது. அர்ஜுன் ஏதோ திட்டமிட்டு செய்துக் கொண்டிருக்கிறான். விடிந்ததும் நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த செய்தி வரவில்லை என்றாலும் வந்தது நல்ல செய்தி தான். ஆனால் ஒன்று மட்டும்தான் அவருக்கு குழப்பமாக இருந்தது.

‘ஜெனார்த் எப்போது அந்த வீட்டிற்குள் நுழைந்தான்!’ - இந்த கேள்வி அவர்களுக்குள் ஒரு விவாதமாகவே நடந்தது. பதில் ஊகங்கள் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டது. இப்போது அர்ஜுன் சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது அவருக்கு வந்த செய்தி முழுமையானது இல்லை என்பது புரிந்தது. அவன் சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். காரணத்தை கண்டுபிடித்து அதை எப்படி சரி செய்வது என்பது ஒரு பக்கம் இருக்க இன்னொரு விஷயமும் உதைத்தது. உள்ளுக்குள் தோன்றிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்தார்.

“ஷோபா உள்ளத்தானே இருந்தா? அப்புறம் ஏன் அவ இன்னும் உயிரோட இருக்கா?”

“ஷி இஸ் மை ட்ரம்ப் கார்ட்”

“அப்போ அந்த பொண்ணு? அவதான்.. பகவானோட மகள்?”

“மிருதுளா என்கிட்ட இருக்கா. பகவான் அவளை தேடி வர்ற வரைக்கும் வெயிட் பண்ண சொல்றிங்களா? ஷோபாவை டிராக் பண்ணி பகவானை பிடிக்கனும். ரொம்ப சீக்கிரம்” - தன் நிழலைக்கூட நம்பாதவர் அர்ஜுன் கூறியதை தொண்ணூறு விழுக்காடு நம்பினார். அவன் விரைவில் பகவான் குடும்பத்தை வேரோடு அழிப்பான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 66

“நாம லவ் பண்ணினது உண்மை. ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மை. ஆனா இனி என்கிட்ட எந்த எமோஷன்ஸுக்கும் இடம் இல்ல. கோர்த்தால என்னோட பொசிஷன் எனக்கு திரும்ப வேணும். நா இழந்த மரியாதையை திரும்ப சம்பாதிக்கனும். அதுக்கு எனக்கு சுதந்திரம் வேணும். போயிடு.. என்னை விட்டு விலகிப் போயிடு” - அணிந்திருந்த கை உறையை கழட்டியபடி நிர்தாட்சண்யமாக கூறினான் சுஜித்.

அவன் முகம் பாறை போல் இறுகி இருந்தது. வெகுநேர பயிற்சியின் பலனாக உடல் வியர்வையில் குளித்திருந்தது. இமைக்கக் கூட தோன்றாமல் அவனை வெறித்துப் பார்த்த சுமன், தன்னுடைய சமாதான முயற்சிகள் அனைத்தும் மொத்தமாக பொய்த்துப் போய்விட்டதை உணர்ந்தாள். இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது புரிந்தது. நெஞ்சம் மெல்ல மெல்ல மரத்துப் போக, முகத்தில் வறண்ட புன்னகையுடன் தன் அடிவயிற்றை மென்மையாக வருடினாள்.

அவனுக்குள் சுரீரென்று ஏதோ பாய்ந்தது. புருவங்கள் முடிச்சிட்டன. என்ன சொல்ல போகிறாள் என்கிற எதிர்பார்ப்போடு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் எதுவுமே சொல்லவில்லை. அனைத்தையும் இழந்துவிட்டவள் போல் தளர்வுடன் திரும்பி நடந்தாள்.

அள்ளித் தெளித்தது போல் அவன் முகமெங்கும் அதிர்ச்சியின் ரேகை. அவளுடைய மௌனத்தை அவனால் நம்ப முடியவில்லை. ‘ஏன் இப்படி எதுவுமே சொல்லாமல் போகிறாள்!’ - அவளை தடுத்து நிறுத்த மனம் உந்தியது. அவள் மௌனத்தை உடைத்து காரணத்தை அறிய உள்ளம் துடித்தது. ஆனாலும் அவன் சிலை போல் நின்றான். தன்னிடமிருந்து விலகிச் செல்லும் அவள் முதுகை வெறித்தபடி அசையாமல் நின்றான்.

அவள் போய்விட்டாள். ‘போ போ’ என்று விரட்டியவனோ பித்தன் போல் நின்ற இடத்திலேயே நின்றான். உள்ளே ‘ஓ’வென்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. அவள் விட்டுச் சென்ற அதிர்வலைகள் அவனை சுற்றி சுற்றி வந்தது. உள்ளுணர்வு சொல்லும் செய்தியை நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் திகைத்து நின்றான். நிமிடங்கள் நாழிகையாக மாறிய போது அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

***********

நெடுநேர நீண்ட சந்திப்பிற்கு பிறகு அர்ஜுன் ராகேஷ் சுக்லாவிடம் தனியாக பேசிவிட்டு விடைபெற்ற போது நேரம் முன்னிரவை தாண்டிவிட்டது. மிருதுளாவை தனியாக விட்டுச் சென்றிருப்பது உள்ளுக்குள் ஒரு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க, வேகமாக அறைக்கு திரும்பி வந்தான். அறைக்குள் நுழைந்ததுமே அவளை கண்டு விடும் நோக்கில் கண்கள் அங்கும் இங்கும் அலைய, கால்கள் அந்த பெரிய அறையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேகமாக சென்று திரும்பி இறுதியாக டெரஸை வந்தடைந்தன. அவள் அங்குதான் இருந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட வெண்புறா போல் அந்தக் கண்ணாடி அடைப்பிற்குள் தனித்து நின்றாள். வெளியே சூழ்ந்திருக்கும் இருளுக்குள் ஏதோ ஓர் புள்ளியில் நிலைத்திருந்தது அவள் பார்வை. மனதை அரித்துக் கொண்டிருக்கும் கவலையின் பிரதிபலிப்பு வாடியிருந்த அவள் முகத்தில் தெரிந்தது.

அர்ஜுன் அவளிடம் நெருங்கினான். பின்னாலிருந்து அவள் இடையை வளைத்தான். அவளுடைய மிருதுவான சருமமும், இனிமையான நறுமணமும் அவனை சூழ்ந்திருந்த நெருக்கடியை மறக்கடித்தது. ஆழ மூச்செடுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவனுக்குள் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது. சில மணி நேரங்களுக்கு முன் அந்த அறையிலிருந்து வெளியேறும் போது அவனிடம் இருந்த கோபம் இப்போது துளியும் இல்லை. அவளிடமும் இல்லை. சில மணி நேர விலகல் அவர்களுக்குள் அமைதியை மீட்டிருந்தது. அதுமட்டுமல்ல, இருவர் பக்கமும் இருக்கும் நியாயம் இருவருக்கும் புரிந்தே இருந்தது.

அவளுடைய எதிர்ப்பை எதிர்பார்த்த அர்ஜுனுக்கு ஆச்சரியம். அவள் இணக்கமாக அவனோடு இழைந்தாள். கையோடு கை கோர்த்தாள். அவன் கேசத்தில் கன்னம் புதைத்தாள். அவன் உள்ளம் துள்ளியது. மகிழ்ச்சி அருவியாய் பெருகியது. அவளுக்காக அவன் எவ்வளவு ஏங்கியிருக்கிறான் என்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பேராவலுடன் அவளை அள்ளிக் கொண்டு உள்ளே வந்து ஆரத்தழுவி ஆக்கிரமித்தான். ஊடலும் கூடலுமாக நாழிகைகள் நழுவிக் கொண்டிருந்த போது அவன் அலைபேசி அழைத்தது. விலக மனமில்லாமல் அவளை கையணைவில் வைத்தபடியே எடுத்து பேசினான். அந்தப் பக்கத்திலிருந்து குரல் கொடுத்தது சுஜித்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பனின் குரலை கேட்டதும் அர்ஜுன் வியப்புடன் அவளிடமிருந்து விலகினான். மிருதுளா சிணுங்கலுடன் அவனோடு மீண்டும் ஒட்டிக் கொண்டாள். கண்களில் குறும்பும் உதட்டோர புன்னகையுமாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, “டெல் மீ மேன். எனிதிங் சீரியஸ்?” என்றான்.

மிருதுளாவின் நெருக்கம் தந்த மகிழ்ச்சி மனமெல்லாம் வியாபித்திருந்தாலும், ஏதோ நெருக்கடியான சூழ்நிலையில் தான் சுஜித் தன்னை அழைக்கிறான் என்பதை சரியாக ஊகித்தது அர்ஜுனின் தொழில் திறமை.

சுஜித் ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பிறகு, “நா உன்ன பார்க்கனும்” என்றான். குரலில் மறைக்க முயன்ற பதட்டம் தெரிந்தது. அர்ஜுனின் மனநிலை மாறியது. கவனம் முற்றிலும் சுஜித்திடம் திரும்பிவிட, “என்ன விஷயம்?” என்றான் தீவிரமாக.

“பேசனும். போன்ல இல்ல.. நேர்ல. உடனே.”

அர்ஜுன் எழுந்து படுக்கையறையிலிருந்து அந்த சூட்டின் வரவேற்பு பகுதிக்கு வந்தான். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யோசித்தான். கோர்த்தா தலைவர்கள் இது போன்ற பொது இடங்களில் ஒன்றாக சந்திக்கும் போது, சந்திப்பு முடிந்ததும் எந்த நேரமாக இருந்தாலும் உடனே களைந்து சென்றுவிடுவார்கள். ஒரே இடத்தில் தங்கமாட்டார்கள். இன்றும் அதுதான் நடந்தது. சந்திப்பிற்கு பிறகு அனைவரும் புறப்பட்டு விட்டார்கள். அர்ஜுனும் இந்நேரம் பாதி வழி பயணத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் மிருதுளாவுடன் கழிந்த இனிமையான பொழுது அவனை தாமதப்படுத்திவிட்டது. இதற்கு மேலும் இங்கு தாமதிப்பது உசிதமா என்று யோசித்தான்.

“நா அனந்தபூர்க்கு தான் வந்துகிட்டு இருக்கேன், எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு. வீட்ல இருப்பியா? இல்ல வேற எங்கேயாவது வெளியே மீட் பண்ணலாமா? வெரி அர்ஜென்ட்.”

“நா அனந்தப்பூர்ல இல்ல. வெளியே இருக்கேன்” - தன்னுடைய இருப்பிடத்தை நண்பனுக்கு தெரியப்படுத்தி தன்னை எங்கு சந்திக்க வேண்டும் என்கிற விபரத்தையும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.

அழைப்பொலியுடன், “ரூம் சர்வீஸ்” என்கிற குரலும் சேர்ந்து ஒலிக்க, அர்ஜுன் எச்சரிக்கையுடன் கதவை திறந்தான்.

அவன் ஆர்டர் செய்யாத இரவு உணவோடு ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் அர்ஜுனின் கண்களோடு கலந்து, ஏதோ செய்தியை பரிமாறியது.

“உள்ள கொண்டு வந்து வை” என்று அவனுக்கு வழிவிட்டான்.

அவன் உள்ளே வந்து ட்ரேயை டேபிளில் வைப்பதற்குள், சிறு பேப்பரில் ஏதோ குறிப்பு எழுதிய அர்ஜுன் அதை டிப்ஸோடு சேர்த்தது அவனிடம் கொடுத்தான். அவனை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு சின்ன தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறினான் ரூம் சர்வீஸ் மேன்.

மீண்டும் படுக்கையறைக்குச் சென்ற அர்ஜுன் மிருதுளாவை உணவருந்த அழைத்தான். அவள் படுக்கையிலிருந்து எழ மனமில்லாமல் வேண்டாம் என்றாள். அவளை கட்டாயப்படுத்தி எழுப்பினான். அவள் முனகிக் கொண்டே எழுந்து குளியலறைக்குள் சென்று திரும்பினாள். அதுவரை அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலையை திருப்ப, மிகச் சரியாக அதே நொடி அந்த அறைக்குள் பாய்ந்தது ஒரு தோட்டா.

கணப்பொழுதில் அவன் தலை தப்பியது. தோட்டா எதிரில் இருந்த சுவற்றில் துளையிட்டு பதிந்தது.

“வாட் த ஹெல்” - சத்தமிட்டபடி அனிச்சையாக கீழே விழுந்தவன் அடுத்த நொடியே, “டௌன் ஆன் எர்த்” என்று மிருதுளாவிடம் கத்தினான்.

அவளுக்கு ‘என்ன ஏது’ என்று எதுவும் புரியவில்லை. யோசிக்கும் அவகாசமும் இல்லை. அதற்குள் படபடவென்று அடுத்தடுத்து தோட்டாக்கள் பாய்ந்து வர, “ஏ..ய்.. கீ..ழ.. படு..” என்று மீண்டும் கத்தினான் அர்ஜுன்.

“ஆ” என்று அலறியபடி காதை மூடிக் கொண்டு கீழே விழுந்தவளுக்கும் சூழ்நிலை புரிந்துவிட்டது.

“என்ன நடக்குது இங்க?” - கத்தினாள்.

“மிருதுளா, எழுந்திருக்காத” - அவளை அமைதிப்படுத்த முயன்றான் அர்ஜுன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு எந்த சத்தமும் இல்லை. தோட்டாக்களின் முழக்கம் அடங்கியிருந்தது.

“அ..ர்..ஜுன்..” - பயந்து போய் அழுதாள் மிருதுளா.

“ஹேய்.. யு ஓகே?” - பதட்டத்துடன் வினவியபடியே தரையில் தவழ்ந்து அவளிடம் சென்று, “ஒன்னும் இல்ல. பயப்படாத” என்று அவளை அரவணைத்து தைரியம் சொன்னான். கூடவே தோட்டாக்கள் பாய்ந்த திசையையும் கவனித்தான். டெரஸ் கண்ணாடியில் துளைகளும் விரிசல்களும் காணப்பட்டன. அந்த பக்கம் ஹோட்டல் நிர்வாகத்தின் இன்னொரு கட்டிடம் உள்ளது. அங்கிருந்துதான் தாக்குதல் நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டான்.

முதலில் அறையில் இருக்கும் நடமாட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்க முடியாமல் செய்ய வேண்டும். சுவற்றோடு சுவராக ஒட்டியபடி எழுந்து அறையின் மெயின் ஸ்விட்சை அணைத்தான். குபீரென்று எங்கும் இருள் சூழ்ந்தது. மெல்ல தவழ்ந்து படுக்கை அருகே சென்று சைட் டேபிள் டிராயரில் இருந்த தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்தான்.

அதே நேரம் பிரதான கதவு பக்கம் ஏதோ சத்தம். அறையின் கதவை பலவந்தமாக யாரோ திறக்க முயல்வது தெரிந்தது. மிருதுளா மிரண்டு போனாள். அவசரமாக அர்ஜுனிடம் பாய்ந்து வந்து அவனோடு ஒண்டிக் கொண்டாள். அவளை பத்திரமாக சோபா மறைவில் பதுக்கிவிட்டு தாக்குதலுக்கு தயாரானான் அர்ஜுன்.

அடுத்த சில நிமிடங்களில் உள்ளே காலடி சத்தம் கேட்டது. காலடி ஓசையை கணக்கிட்டு வந்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கையை கணித்தான் அர்ஜுன். கையிலிருக்கும் ஒற்றை கைத்துப்பாக்கி பெரிதும் உதவ வாய்ப்பில்லை என்பது புரிந்தது. என்ன செய்வது என்று அவன் யோசிப்பதற்குள் உள்ளே நுழைந்தவர்கள் திடீரென்று கண்டபடி அங்கும் இங்கும் சுட்டார்கள். டார்ச் வெளிச்சத்தில் அர்ஜுன் எங்கு பதுங்கியிருக்கிறான் என்பதை கண்டறிய முயன்றார்கள்.

மிருதுளா நிலைகுலைந்து போனாள். மரணம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. உடல் வெடவெடத்தது. அர்ஜுனிடம் நெருங்க முயன்றாள். பயம் அவள் முயற்சியை முறியடித்தது.

அப்போதுதான் அங்கு சூழ்நிலை மாறியது. திடீரென்று இன்னொரு குழு உள்ளே நுழைந்து முதலில் நுழைந்த குழுவோடு யுத்தம் செய்தது. தோட்டாக்கள் கண்டபடி பறந்தன. இரத்த வெள்ளமும் அலறல் ஒலியுமாக அந்த அறையே போர்க்களமாக மாறியது. அர்ஜுனின் பார்வை இருட்டிற்கு நன்றாக பழகிவிட்டது. மங்கலான வெளிச்சத்திலும் அவனால் ஆட்களை அடையாளம் காண முடிந்தது. மறைவிடத்திலிருந்து வெளியே வந்து சரியாக குறிபார்த்து சில ஆட்களை முடித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கற்பனைக்கும் எட்டாத கலவரம் நடந்து முடிந்து விட்டது. அப்போதுதான் அந்த குரல் தீனமாய் அவன் செவியை எட்டியது.

“அர்..ஜு..ன்..” - அவள் குரல்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 67

தெறித்து விழுந்த தோட்டாக்களும், அருவியாக பெருகிய குருதியும் அந்த அறையை போர்க்களமாக மாற்றியிருந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடி வீழ்த்திவிட்ட வெற்றி களிப்போடு இரண்டாம் அணி நெஞ்சை நிமிர்த்த, அர்ஜுனின் ஆராய்ச்சி பார்வையோ அவர்களை சல்லடையாக துளைத்தது. உடனே முன்னே வந்த அந்த குழுவின் தலைவன், மூன்றிலக்க எண் ஒன்றை கூறி தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினான். அர்ஜுனின் கண்கள் பெருமிதமும் ஆச்சரியமுமாக விரிந்த நேரத்தில்தான் அந்த தீனமான குரல் அவனை அழைத்தது.

“அ..ர்..ஜு..ன்”

அது அவள் குரல். மிருதுளாவின் குரல். என்னவாயிற்று! பெரும் பதட்டத்துடன் குரல் வந்த திசையில் திரும்பினான். தூரத்தில் சோபா மறைவில் அவள் கால்கள் மட்டும் தெரிந்தன. இனம்புரியாத பயம் அவனை பிடித்துக் கொண்டது. பின்னிய கால்களை முரட்டு பிடிவாதத்துடன் கட்டுப்படுத்தி அடியை எட்டிப்போட்டு அவளிடம் நெருங்கினான்.

கண்கள் சொருக சுயநினைவை இழந்துக் கொண்டிருந்தவளை சுற்றி குளம் கட்டியிருந்தது செங்குருதி. அவ்வளவுதான்.

ஆழ்துளைக்குள் அகப்பட்டு கொண்டவன் போல் திணறினான் அர்ஜுன். அவன் உலகம் வெகுவாய் சுருங்கிவிட்டது. காற்றும் வெளிச்சமும் இல்லாத அந்த மாய உலகத்தில் அவன் இதயம் துடிக்கும் ஓசை மட்டும் அகோரமாய் ஒலித்தது. அவன் கண்கள் அவள் மீதே நிலைகுத்தி இருந்தது.

‘மிருதுளா!’ - திகைப்பிலிருந்து மீள முடியாதவனாக தடுமாற்றத்துடன் அவளிடம் குனிந்தான்.

ஏந்தியிருந்த துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு முன்னே வந்த ஒருவன், மிருதுளாவை ஆராய்ந்து, “சேஃப் ஸ்பாட் பட் ஹெவி ப்ளாட் லாஸ்” என்றான்.

ஆபத்து இல்லாத இடத்தில்தான் தோட்டா துளைத்திருக்கிறது என்கிற வார்த்தை குறியீடு அர்ஜுன் தன்னை மீட்டுக்கொள்ள சற்று உதவியது. பற்களை கடித்து உணர்வுகளை விழுங்கிக் கொண்டு அவளுக்கான முதலுதவிக்கு ஏற்பாடு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையின் சைரன் சத்தம் ஹோட்டல் வாசலில் அலற, பின்வாசல் வழியாக அர்ஜுனின் கார் வெளியேறிக் கொண்டிருந்தது.

கோர்த்தாவிற்கு நெருக்கமான மருத்துவமனையில் அன்அஃபிஷியலாக அனுமதிக்கப்பட்டிருந்தாள் மிருதுளா. தோட்டா துளைத்த இடுப்புப் பகுதி ஆபத்தில்லாத இடம் என்றாலும், அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கின் காரணமாக சூழ்நிலை வெகு கிரிட்டிக்கலாகிவிட்டது. அவளை அவசரசிகிச்சை பிரிவுக்குள் அனுப்பிவிட்டு, உன்மத்தம் பிடித்தவன் போல் தலையை பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்தான் அர்ஜுன். எதிர்காலம் இருண்ட காடாக அவனை அச்சுறுத்தியது. அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. உடம்புக்குள் எதுவுமே இல்லாதது போல் வெறும் கூடாக, பலவீனமாக, கோழையாக தன்னை உணர்ந்தான். நிமிடங்கள் நாழிகைகளாக உருண்டுக் கொண்டிருந்தன. அவன் அசையவில்லை. அசைய முடியவில்லை. அதுவரை கடவுளை அவன் பெரிதாக நம்பியதில்லை. ஆனால் அப்போது அவன் மனம் அந்த பரம்பொருளை நாடியது.

“ப்ளீஸ் மிருது.. கம் பேக்” - பித்துப்பிடித்தவன் போல் புலம்பினான்.

விரல்களை கோர்த்து கோர்த்து பிரித்தபடி பதட்டத்துடன் அவன் அமர்ந்திருந்த போது, “ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நௌ” என்கிற மருத்துவரின் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பது போல் எங்கிருந்தோ ஒலித்தது. சட்டென்று நிமிர்ந்தான். அவர் அவனுக்கு பக்கத்தில்தான் நின்றுக் கொண்டிருந்தார். அவனிடம் தான் பேசிக் கொண்டிருந்தார்.

விருட்டென்று எழுந்து, “இஸ் ஷி.. இஸ் ஷி ஓகே?” தடுமாற்றத்துடன் கேட்டான். இரத்தம் போல் சிவந்திருந்த அவன் விழிகளில் பயமும் எதிர்பார்ப்பும் மண்டியிருந்தது.

அவன் தோளை தட்டிக் கொடுத்த மருத்துவர், “எஸ் ஷி இஸ் ஆல்ரைட்” என்று அவளுடைய நலனை மீண்டும் உறுதிப்படுத்தினார். சட்டென்று அவரை கட்டி கொண்டான் அர்ஜுன். அவன் உடல் நடுங்கியது. கோர்த்தாவில் இருப்பவனுக்கு இத்தனை தவிப்பா என்று வியப்பாக இருந்தது அவருக்கு. அதை தனக்குள்ளேயே மறைத்து, “ரிலாக்ஸ்” என்று அவனை அமைதிப்படுத்தியவர், “மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆகும் கண்விழிக்க. அதுவரைக்கும் ஆப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். அதுக்கு பிறகு ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணிடலாம்” என்றார்.

“உஃப்..” - நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான். அதுவறை மூச்சுவிடக் கூட முடியாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். செத்துப் பிழைத்தது போல் இருந்தது.

******************

கோர்த்துப் பிடித்த கையை விடாமல், இரத்தப்பசையற்று வெளுத்துப் போயிருந்த அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் நெஞ்சுக்குள் தீ பற்றிக் கொண்டது போல் எரிந்தது. அரை உயிராய் கிடக்கும் அவளை பார்க்க பார்க்க அவனுக்குள் பழி உணர்வெனும் பேய் தலைவிரித்து ஆடியது. மெல்ல எழுந்து வெளியே வந்தான். அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாரை அழைத்து, “தாக்க வந்தது யார்?” என்று விசாரித்தான்.

அவருக்கும் விபரம் தெரியவில்லை. மீட்டிங் முடிந்ததும் ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டியவன் கிளம்பாததால் சந்தேகப்பட்டு ஆட்களை அனுப்பியதாக கூறினார். அவருடைய சந்தேகம் தக்க சமயத்தில் அவன் உயிரை மட்டுமல்லாது மிருதுளாவின் உயிரையும் காத்துவிட்டது.

“தேங்க் யூ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் புருவம் சுருங்கியது.

‘மீட்டிங் முடிந்ததும் ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டியவன் கிளம்பவில்லை. ஹோட்டலில் அவனை சந்திக்க வருவதாக சொன்ன சுஜித் இன்னும் கூட வரவில்லை’ - பஸில் கச்சிதமாக பொருந்தியது. அர்ஜுன் உடனடியாக சுஜித்தின் இருப்பிடத்தை டிராக் செய்ய சொன்னான். சற்று நேரத்திலேயே அவனுடைய இருப்பிடம் மகல்பாட்னா என்கிற உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைக்க, அவன் முகம் கோரமாக மாறியது. அலைபேசியை எடுத்து அழைக்க வேண்டியவர்களுக்கு அழைத்தான். அடுத்த சில மணி நேரங்களில் சுஜித் சிறைபிடிக்கப்பட்டு அர்ஜுனின் மகல்பாட்னா இல்லத்தின் பேஸ்மெண்டில் அடைக்கப்பட்டான். அந்த நேரத்தில் அவனோடு காரில் இருந்த காரணத்தினால் சுமனும் இலவச இணைப்பாக பிடித்துச் செல்லப்பட்டாள்.

**************

மிருதுளாவுக்கு அடிபட்டு மூன்று நாட்கள் கடந்துவிட்டது. இன்னமும் அவள் ஓரளவுக்கு கூட குணமடையவில்லை. இடுப்பில் காயம் பட்டிருந்ததால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டாள். ஆனால் அவர்களால் ஒரே இடத்தில் தங்கியிருக்க முடியாது. ஏற்கனவே, அவன் தங்கியிருந்த அறையில் நடந்துமுடிந்திருந்த யுத்தத்தை போலீஸ் துளைக்க துவங்கிவிட்டது.

சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே அர்ஜுன் அந்த அறையை காலி செய்துவிட்டான் என்று சாட்சிகளை ஜோடனை செய்தும் விசாரணை குழுவின் கழுகு கண் அவனையே குறிவைத்துக் கொண்டிருந்தது. எனவே கோர்த்தாவின் சட்டக்குழு வெகு தீவிரமாக வேலையில் இறங்கியிருந்தது.

அவர்கள், அர்ஜுன் மிருதுளா இருவருமே காவல்துறையிடம் அகப்படக் கூடாது என்றும் உடனடியாக மகல்பாட்னா வர வேண்டும் என்றும் கூறினார்கள். அவனுக்கும் அதுவே சரியென்று பட்டதாலும், பேஸ்மெண்டில் அடைபட்டிருக்கும் சுஜித்தை நேரில் சென்று டீல் செய்ய வேண்டியிருந்ததாலும், மிருதுளாவை கிளப்பிக் கொண்டு மகல்பாட்னா விரைந்தான்.

மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அர்ஜுன். பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மிருதுளா சின்ன முனகலுடன் அசைந்தாள். அவன் கவனம் அவள் புறம் திரும்பியது.

வேகத்தை வெகுவாக குறைத்தபடி, “மிருது, யூ ஓகே? கஷ்டமா இருக்கா? ஓரமா நிறுத்தட்டுமா? சீட்டை நல்லா நீட்டிவிட்டு கொஞ்ச நேரம் படுக்கறியா?” என்றான் கனிந்த குரலில்.

“ம்ஹும்”

“என்ன பண்ணுது?”

“இன்னும் எவ்வளவு நேரம் போகனும் அர்ஜுன்?” - பாவமாக கேட்டாள். அவள் முகத்தில் வலியின் சாயல் நன்றாக தெரிந்தது. உதட்டை கடித்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம்தான்.. போயிடலாம்” என்று சொல்லி கொண்டே காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு, அவள் புறம் நன்றாக திரும்பி அவளுடைய சீட்டை இன்னும் சற்று பின்னுக்கு தள்ளி அவளை சற்று வசதியாக படுக்க வைக்க முயன்றான். மிருதுளா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

அவளை இமைக்காமல் பார்த்த அர்ஜுன் அவள் கைகளில் முத்தமிட்டான்.

“பயமா இருக்கு” - மிருதுளா முணுமுணுத்தாள்.

அவன் மீண்டும் முத்தமிட்டான். “நா இருக்கேன்ல” - அது வெறும் ஆறுதல் மட்டும் அல்ல. அவளுக்காக அவன் இருப்பான் என்கிற வாக்குறுதி.

மிருதுளாவின் கண்கள் கலங்கின. “எனக்கு ஏதாவது ஆயிருந்தா..” – குளம் கட்டியிருந்த கண்ணீர் கரை புரண்டது.

பகீரென்றது அவனுக்கு. முகமே மாறிவிட்டது. தாடை இறுக ஓரிரு நொடிகள் அவளை ஊன்றிப் பார்த்தவன், கண்களை மூடித்திறந்து கசந்த உணர்வுகளை விழுங்கிக் கொண்டு, “எதுவும் ஆகாது. ஆக விடமாட்டேன்” என்றான் பிடிவாதமான குரலில்.

மிருதுளா ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள். அவன் முகம் மேலும் இறுக்கத்தை பூசிக்கொண்டது. “என்னை நம்பலையா நீ?” - வறண்ட குரலில் கேட்டான்.

அழகையினூடே சின்ன சிரிப்பு மலர்ந்தது அவள் முகத்தில். தலையை அசைத்து அவனை அருகில் அழைத்தாள். அவளிடம் வெகு நெருக்கமாக சென்றவன், அவள் நெற்றியோடு நெற்றி வைத்து, “என்ன?” என்றான்.

மலர் மீது அமர்ந்து எழுந்த பட்டாம்பூச்சி போல் தன் பட்டு இதழ்களை அவன் முரட்டு உதட்டின் மீது மென்மையாக ஒற்றியெடுத்து, சின்ன குறுஞ்சிரிப்புடன் கேட்டாள், “கோவமா?”

சட்டென்று அவன் மனநிலை மாறியது. உதட்டோரம் ஒளித்து வைத்த புன்னகையுடன், “கோவமா? உங்கிட்டயா?” என்றான்.

“ஏன்? என்கிட்ட நீங்க கோவப்பட்டதே இல்லையா என்ன?”

“ஹும்ம், கோவப்பட்டிருக்கேன். ஆனா இப்போ முடியாது.”

“ஏன்?”

“தெரியாதா உனக்கு?”

“நீங்க சொல்லுங்க” - பிடிவாதத்துடன் கேட்டாள்.

ஓரிரு நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்த அர்ஜுன், “ஐ அல்மோஸ்ட் லாஸ்ட் யூ. ஃபைட் பண்ணி, கடவுள்கிட்டேருந்து உன்ன ஜெயிச்சிருக்கேன். ஐ வோன் மை லவ். ஐ வோன் மை லைஃப்” - மீண்டும் மெல்ல நெற்றியோடு நெற்றி முட்டினான். கண்கள் வைரம் போல் பளபளத்தன. அவன் மனம் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்தாள் மிருதுளா.

“அர்ஜுன்..” - அவன் முகத்தை கைகளால் வருடியபடி மெல்ல அழைத்தாள்.

“ம்ம்ம்” - கண்களை மூடி அவள் ஸ்பரிசத்தை உள்வாங்கியபடி முணுமுணுத்தான்.

“இப்படியே எங்கேயேவாது என்னை கூட்டிட்டு போயிடறீங்களா? இந்த பிரச்சனை, சண்டை, துப்பாக்கி எதுவுமே இல்லாத அமைதியான உலகத்துக்கு”

மூடியிருந்த விழிகளை மெல்ல பிரித்தான் அர்ஜுன். கோபப்படப் போகிறான். எதிர்மறையாக பேசப்போகிறான் என்று எதிர்பார்த்தாள் மிருதுளா. ஆனால் அவன் அப்படி எதையும் செய்யவில்லை. சற்று நேரம் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன் பிறகு அவள் நெற்றியில் இதழ் பதித்து, “சீக்கிரமே” என்றான்.

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. மகிழ்ச்சியில் அவள் முகம் மலர்ந்தது.

“நிஜமாவா? நிஜமாவா சொல்றிங்க?” என்றாள் ஆர்வத்துடன்.

கண்களை மூடித்திறந்து ஆமோதித்தவன், “இப்போ வலி பரவாயில்லையா? கிளம்புவோமா?” என்றான். முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அதற்கு மேல் அவன் பேசமாட்டான். அவள் பேசினாலும் பதில் வராது. பெருமூச்சுடன் தலையை அசைத்தாள் மிருதுளா. கார் மீண்டும் தன் ஓட்டத்தை துவங்கியது.

மிருதுளா ஓரக்கண்ணால் அர்ஜுனை பார்த்தாள். முடிச்சிட்ட புருவங்களுடன் சாலையில் பார்வையை பதித்திருந்தான்.

“என்ன யோசிக்கிறீங்க?” – பேச்சு கொடுத்தாள்.

“நத்திங்.. ஜஸ்ட் டிரைவிங். நீ தூங்கு. ஸ்ட்ரைன் பண்ணிக்காத. இன்னும் கொஞ்ச நேரத்துல மகல்பாட்னாவை ரீச் பண்ணிடலாம்” - தன்னுடைய சிந்தனையில் அவளை குறுக்கிடவிடாமல் தடுக்க முயன்றான். அதன் பலனாக அவள் ஒரு பத்து நிமிடம் அமைதியாக இருந்தாள். பிறகு மீண்டும் ஆரம்பித்தாள்.

“அர்ஜுன்”

“ம்ம்ம்”

“இஸ் தட் பாஸிபிள்?”

“எது?”

“அதான், நாம இதெல்லாம் விட்டுட்டு.. அமைதியா.. எங்கேயாவது போயிடறது..”

அவன் அவளை திரும்பிப் பார்த்தான் “கண்ண மூடி படு.”

“ப்ளீஸ்..”

“என்ன?”

“சொல்லுங்க”

“இம்பாஸிபிள்னு எதுவுமே இல்ல” - அவள் முகம் மலர்ந்தது.

“சோ, நாம் ஹேப்பியா இருக்கப் போறோம். அமைதியா. நிம்மதியா. அப்படித்தானே?” - ஏக்கமும் எதிர்பார்ப்புமாக அவள் கேட்ட விதத்தில், அவள் கேட்கும் நிம்மதியை எப்படியாவது அவளுக்கு கொடுத்துவிட வேண்டுமே என்கிற தவிப்பு நெஞ்சை அடைத்தது. சற்று நேரம் மெளனமாக காரை செலுத்தியவன், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்து “எஸ்” என்றான். மிருதுளா நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 68

அர்ஜுனின் கார் மகல்பாட்னா மளிகை வளாகத்திற்குள் நுழைந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. பாதுகாவலர்களை தவிர மற்றவர்களின் நடமாட்டம் வெகுவாக அடங்கியிருந்தது. வாயிலுக்கு வெகு அருகில் காரை நிறுத்திவிட்டு மிருதுளா கீழே இறங்க உதவி செய்தான் அர்ஜுன். அவள் மிகவும் சிரமப்பட்டாள். வலது கால் முழுவதும் மரத்துப்போனது போல், உணர்வே இல்லாமல் இருந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து போனாள்.

“ட்ரை பண்ணு மிருது. என்னை பிடிச்சுக்கிட்டு மூவ் பண்ணு” என்று ஊக்குவித்தான் அர்ஜுன்.

“முடியில அர்ஜுன். டேக் மை சேர்” என்று காரிலிருக்கும் வீல் சேரை எடுக்கும்படி அவள் கூறியபோது முடியாது என்று மறுத்துவிட்டு பிடிவாதமாக அவளை நடக்க வைத்தே உள்ளே அழைத்துச் சென்றான். மாடிப்படியை பார்த்ததும் மிருதுளா மலைத்தாள்.

“கீழேயே ஏதாவது ஒரு ரூம்ல தங்கிக்கிறேன் ப்ளீஸ்” - கெஞ்சினாள்.

அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தால் இளகிவிடுவோம் என்று தோன்ற, அவள் முகத்தை பார்க்காமலே, “உன்னோட ரூம் மேலதான் இருக்கு” என்றான்.

“கஷ்ட்டம் அர்ஜுன். என்னால முடியாது.”

“முடியாதுன்னு நெனச்சா முடியாதுதான். ம்ம்ம்.. ஏறு, நா இருக்கேன்ல” - அவன் மிருதுளாவை கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் போது பாதுகாவலன் ஒருவன் அருகே வந்து ஏதோ சொல்ல முற்பட்டான்.

கையை உயர்த்தி தடுத்து, “கூப்பிடுறேன்” என்றான். அவன் முகம் ஏதோ முக்கியமான செய்தியை கொண்டு வந்திருப்பதை உணர்த்தினாலும், அந்த நேரத்தில் அவனுக்கு வெகு முக்கியமானது மிருதுளாவை பலப்படுத்துவதும் அவளுடைய நம்பிக்கையை வலுவேற்றுவதும் தான்.

பாதுகாவலன் விலகிச் சென்றதும் பொறுமையாக மிருதுளாவை மாடிப்படியில் ஏற வைத்து தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.

“இங்கேயா? என்னோட ரூம்..” – “இனி இதுதான் உன்னோட ரூம்” - அவள் ஆரம்பிக்கும் பொழுதே இவன் முடித்துவைத்தான். அவள் எதுவும் பேசவில்லை.

அவளை குளியலறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டு விட்டு வாசலிலேயே காத்திருந்தான். அவள் ரெஃப்ரஷ் ஆனதும், உணவு கொண்டு வந்து கொடுத்து பசியாற செய்தான். பிறகு அவளை படுக்கையில் படுக்க வைத்து காயத்திற்கு மருந்து பூசினான். அவள் வலியில் பற்களை கடித்துக் கொண்டு முனகியபோது அவன் உயிர் உருகியது. மயிலிறகால் வருடுவது போல் மெல்ல பட்டும் படாமலும் களிம்பு பூசி கட்டு போட்டான். கால்களுக்கு மசாஜ் செய்துவிட்டான்.

மிருதுளாவுக்கு அழுகை வந்தது. மூன்று நாட்களாக அவள் மருத்துவமனையில் இருந்த போது இந்த வேலைகளையெல்லாம் அவன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இப்போதும் கூட அவசியம் இல்லைதான். மாளிகையிலேயே இருக்கும் மருத்துவ குழுவில் ஒருவரை அழைத்தால் போதும். ஆனால் அவன் அதை செய்யவில்லை. தானே அனைத்தையும் செய்தான். தாயின் இடத்தை இட்டு நிரப்பினான்.

முதல் நாள் அந்த வீட்டிற்குள் நுழைந்ததும், முதல் முறை அந்த அறையில் அவனை பார்த்ததும் அவளுக்கு நினைவு வந்தது. தன்னிடம் இத்தனை கனிவாக அவன் ஒருநாள் நடந்துகொள்வான் என்று அப்போது அவள் நினைத்துப் பார்த்திருப்பாளா! ஆச்சரியமாக இருந்தது. இதுமட்டுமா ஆச்சரியம்? அவள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஆச்சரியங்கள் தான். கனவிலும் கற்பனையிலும் மட்டுமே நடக்கக் கூடிய சம்பவங்களை அவள் தினம் தினம் நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறாளே! “ஹும்ம்ம்” - நீண்ட பெருமூச்சு அவன் கவனத்தை அவள் பக்கம் திருப்பியது.

உள்ளங்காலில் அழுத்தம் கொடுத்து பிடித்துவிட்டபடியே அவள் முகத்தை பார்த்தான். “என்ன?” - அவன் புருவங்கள் உயர்ந்தன.

அவள் இரண்டு கைகளையும் நீட்டி அவனை அருகே அழைத்தாள். அவன் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது. மகிழ்ச்சியும் பெருமையுமாக அவளை பார்த்தான். “வாங்க.. இங்க.. என் பக்கத்துல” - தன் அருகே படுக்கையை தட்டிக்காட்டினாள்.

அவள் சொன்னபடியே செய்தான் அர்ஜுன். அவனை தன் அருகே சாய்த்துக் கொண்டு அவன் மார்பை தலையணையாக்கினாள் மிருதுளா. அவள் கூந்தலை கோதியபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். நீண்ட மௌனம் அவர்களை ஆக்கிரமித்திருந்தது. அதை முதலில் உடைத்தது மிருதுளாதான்.

“நிறைய மாறிட்டிங்க”

“ம்ம்ம்”

“எப்படி?”

“தெரியல”

“யார் அவங்களாம்? எதுக்காக நம்மள அட்டாக் பண்ணினாங்க?”

“ஓல்ட் ஃபிரண்ட்ஸ். ஏதாவது பழைய கணக்கா இருக்கும். விசாரணை போயிட்டு இருக்கு தெரிஞ்சிடும்.”

“அர்ஜுன் நாம சந்தோஷமா இருக்க போறோம் தானே? அமைதியா.. நிம்மதியா..”

“நிச்சயமா?”

“எவ்வளவு நாள் ஆகும்? இதெல்லாம் விட்டு ஒழிச்சுட்டு போறதுக்கு?”

“தூங்கு”

“கார்ல தூங்கிகிட்டே தானே வந்தேன்.”

“மூணு மணி ஆயிடிச்சு. எனக்கு ரெஸ்ட் வேணாமா?”

“சாரி தூங்குங்க” - மெல்ல முணுமுணுத்துவிட்டு அமைதியாக படுத்திருந்தவள் சற்று நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். அதற்காகவே காத்திருந்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்தான் அர்ஜுன். அதுவரை மென்மையாக இருந்த அவன் முகம் அப்போது முற்றிலும் மாறியிருந்தது. மிருதுளாவின் மீது போர்வையை சரியாக இழுத்து போர்த்திவிட்டு சத்தமெழுப்பாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

மாடிப்படிக்கு அருகிலேயே அந்த பாதுகாவலன் நின்றுக் கொண்டிருந்தான். கூடவே மாலிக்கும் இருந்தான்.

“அர்ஜுன்” - நண்பனை பார்த்துவிட்டு முன்னோக்கி வந்த மாலிக்கிடம் தலையசைத்துவிட்டு பாதுகாவலனிடம் திரும்பியவன், “என்ன சொல்ல வந்த?” என்றான். அவன் பார்வை மாலிக்கிடம் சென்றது. இப்போது அர்ஜுனும் அவனை பார்த்தான்.

“சுமன் இன்னொசென்ட் அர்ஜுன். மூணு நாளா பேஸ்மெண்ட்ல இருக்கா” - வருத்தத்துடன் கூறினான்.

“அது சுஜித்துக்கும் தெரியும்ல? அப்புறம் ஏன் அவன் வாயை திறக்கல?” - அர்ஜுன் அதட்டினான். அவன் கண்களில் மனிதம் தொலைந்திருந்தது. மாலிக் பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தான். அதற்கு மேல் அர்ஜுன் அங்கு தாமதிக்கவில்லை. பேஸ்மெண்டை நோக்கி நடக்க துவங்கினான். மாலிக் அவனை பின் தொடர்ந்தான்.

*************

காற்றில் கலந்திருந்த அழுக்கு வாடையும், கனத்த இருளோடு போராடிக் கொண்டிருந்த ஒற்றை பல்பின் மங்கலான வெளிச்சமும் அந்த இடத்திற்கே உரிய பிரத்தியேக அடையாளம்.

சற்று நேரத்திற்கு முன் சேவகனாய் மாறி ஒரு பெண்ணுக்கு பணிவிடை செய்து, தன்னில் அவள் தாயை உணர வைத்த ஒரு மனிதனின் இன்னொரு முகம் எத்தனை கோரமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக அங்கே அமர்ந்திருந்தான் சுஜித். அவன் தலை தொங்கிக் கொண்டிருந்தது. முகம் சிதைந்திருந்தது. இரத்தம் சிதறியிருந்தது. நாற்காலியோடு அவனை சேர்த்துப் பிணைத்திருந்த வெள்ளை நிற கயிறு சிகப்பாக மாறியிருந்தது. அவனுக்கு எதிரில் எமனாக நின்றுக் கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“யார்?” - உள்ளடங்கிய அந்த குரல் சுஜித்தின் செவிகளுக்குள் ஊடுருவியது.

மெல்ல தலையை உயர்த்தி அர்ஜுனை பார்க்க முயன்றான் அவன். கிழிந்திருந்த ஒரு கண் இமைகள் ஒத்துழைக்க மறுக்க, மறு கண்ணின் அரை பார்வையில் மங்கலாக தெரிந்தது அவன் முகம். ஏமாற்றம், துக்கம், கோபம் எதுவும் இல்லாத உணர்வற்ற முகம்.. கல் முகம்.. சுஜித்தின் தலை மீண்டும் கவிழ்ந்தது.

அர்ஜுனின் பார்வை சுஜித்தை சுற்றி நின்றுக் கொண்டிருந்த மலை மனிதர்களில் ஒருவன் கண்களை சந்தித்தது. பசித்த விலங்கு போல் ஒரே நொடியில் அத்தனை பேரும் டார்கெட்டின் மீது பாய்ந்தார்கள். அறையெங்கும் அலறல் ஒலி எதிரொலித்தது. அதில் சுஜித்தின் குரலோடு ஒரு பெண் குரலும் கலந்திருந்தது. அது சுமனின் குரல். அதுவரை மெல்ல விசும்பியபடி சுவற்றோடு சுவராக ஒண்டி கொண்டு அமர்ந்திருந்தவள், சுஜித் மீண்டும் தாக்கப்பட்டதும் அலறி துடித்தாள். அர்ஜுனிடம் கெஞ்சினாள். அவன் செவியில் எதுவும் ஏறவில்லை.

சுஜித்தின் நினைவுகள் நழுவ துவங்கியது. அதை உணர்ந்தவனாக விரலை உயர்த்தி ஆட்களை விலகச் சொன்னான். சுமன் சுஜித்திடம் பாய்ந்து சென்றாள்.

“சொல்லிடு.. எதுவா இருந்தாலும் பேசிடு ப்ளீஸ்” என்றபடி அவன் முகத்தை கைகளில் ஏந்தியவள், “கடவுளே!” என்று கண்களை மூடிக் கொண்டு வெடித்து அழுதாள்.

அவளுடைய சுஜிதா அது! - அவளால் தாங்க முடியவில்லை.

“வுட் யு லைக் டு டாக்?” - கணீரென்று இடையிட்டது அர்ஜுனின் குரல்.

“ப்ளீஸ்.. ஹி’ல் டாக். அடிக்காதிங்க. ப்ளீஸ்” என்று கெஞ்சியவள் சுஜித்திடமும் மன்றாடினாள். அவனோ உயிர் போகும் நிலையில் கூட அத்தனை அழுத்தமாக அமர்ந்திருந்தான்.

“குட். நீ பேச மாட்ட. பேச வேண்டாம்” என்று அழுத்தமாக உரைத்தவன். “டேக் ஹர்” என்று சுமனின் பக்கம் கண் காட்டினான்.

“நோ.. டோன்ட் டேர் டு டச் ஹர்” என்று குழறலுடன் திமிரிக் கொண்டு எழ முயன்றான் சுஜித்.

“வலிக்குதா? எனக்கும் வலிக்குது” - சுஜித்திடம் வன்மத்தை உமிழ்ந்தவன், “ம்ம்ம்..” என்று சுமனை நோக்கி ஆட்களை ஏவினான். அவ்வளவுதான். சுஜித்திடம் மிஞ்சியிருந்த திடம் மொத்தமாக அடிபட்டுப்போனது.

“பக..வா..ன்.. தட்ஸ் பகவான்..” - அவசரமாக பேசினான். ‘சுமன்’ என்னும் பலவீனம் அவனை பேச வைத்தது.

“வாட்!” - அர்ஜுனின் புருவம் சுருங்கியது. மிருதுளா உடன் இருக்கும் போது பகவான் எப்படி அத்தனை பெரிய தாக்குதலை நடத்த துணிந்தான்! அர்ஜுன் குழம்பினான். அதே குழப்பத்துடன் தான் ஷோபாவும் பகவானிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தாள்.
 
Top Bottom