Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நேரம் அதிகம் இல்லை - ராம் ஸ்ரீதர் சிறுகதை

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
தொலைபேசியில் அவசரச் செய்தி வந்தபோது, ஜோ என்ற ஜோதிர்மயி சதாசிவம் காலை உணவாக ரொட்டியுடன் பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டு, செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தாள்.

அவ்வளவு காலையிலேயே பெரியவர் கூப்பிடுவார் என ஜோதிர்மயி சதாசிவம் நிச்சயம் நினைக்கவில்லை.
சுஜாதா எழுதிய 'தேடாதே' கதையில் கதாநாயகன் பெயரை கணபதி சுப்ரமணியம் என்று சொல்லிவிட்டு, 'இவ்வளவு அவசர உலகில், இவ்வளவு நிறைய பெயரை வைத்துக்கொண்டு பிழைக்க முடியுமா? எனவே, சுருக்கமாக ஜீயெஸ்' என்று குறிப்பிடுவார்.

அதுபோலத்தான் ஜோதிர்மயி சதாசிவமும். அவள் பெயரை 'ஜோ' என்று சுருக்கிவிட்டாள்.
சதாசிவம் என்பது அவள் அப்பா. அ.ஆ சாந்தி அடையட்டும்.

ஜோ ஒரு - கூடைப்பந்து என்று தமிழில் அழைக்கப்படும் - பாஸ்கெட் பால் ட்ரெயினர். பெண்களிடையே அதிகமான உயரம், 6 அடி 2 அங். உயரத்துக்கேற்ற உடல்வாகு. அவள் 9 வயதிலிருந்து அக்கறையாக தினமும் விளையாடும் கூடைப்பந்தும் அவளை மெருகேற்றியிருந்தது.

ஒரு நாள் கூட 'ஸிக்' லீவ் எடுத்ததில்லை. பையன்களும் அவளிடம் தப்பித்தவறி வம்பு இழுத்ததில்லை. அவள் அசாத்திய உயரத்தைக் கிண்டல் செய்த ஒன்றிரெண்டு இளைஞர்களையும் எலும்பு முறிவு காரணமாக உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று.

"எஸ் ஸார்" என்றாள்.

பெரியவர் ஸ்டைல் அது. என்னவாக இருந்தாலும் அலுவலகம் இல்லாத நேரங்களில் தொலைபேசியில் மட்டுமே அழைப்பார். மற்ற நேரங்களில் இருக்கவே இருக்கிறது மொபைல்.

"ஜோ, நம்முடைய கஸ்டடியிலிருந்து நேற்று இரவு 'எஸ்' தப்பிவிட்டான். அவனிடம் இருக்கும் சில ஆயுதங்கள் மிக ஆபத்தானவை. இன்று இரவுக்குள் அவன் பிடிபட வேண்டும். இல்லையென்றால் கணக்கு முடிக்கப்பட வேண்டும்" தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

ஜோ சிரித்துக்கொண்டாள். நான்கு வருடமாகப் பெரியவர் கீழ் வேலைசெய்கிறாள். அவர் இப்படித்தான், எப்போதுமே ரத்தினச் சுருக்கம்.

அடுத்த 20 நிமிடங்களில் ஜோ அவளுடைய புல்லட்டைக் கிளம்பினாள். ஹெல்மெட்டுடன் ஆரோகணித்து வீட்டைவிட்டு வெளியேறும் போது மணி சரியாக எட்டு..

=================================

பெங்களூரு செல்லும் ஹைவேயில் அவள் புல்லட் சென்றபோது பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று ஜோவுக்கு உறைத்தது. அடுத்த 20 நிமிடங்களில் ஸ்ரீபெரும்புதூர் தாண்டி ஒரு ஓரத்தில், தனியாக, அடக்கமாக இருந்த பங்கில் நிறுத்தினாள். அருகில் வந்த இளைஞனிடம்,"டேங்க் ஃபில் பண்ணுப்பா."
பங்கில் இணைந்திருக்கும் கடையினுள் நுழைந்தாள்.

உள்ளே டிவியில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் அதன் வால்யூமைச் சற்றுக்குறைத்தான். சற்றுதான்.

ஜோ மெதுவாக கடையின் பின்புறத்தில் இருந்த பிஸ்கட் ஷெல்ஃபை நோக்கி நகர்ந்தாள். கீழ்தட்டிலிருந்த 'ட்ரூ' வா இல்லை 'ஜிம்ஜாமா' என்று தீர்மானிக்க முடியாமல் இரண்டையும் ஒவ்வொரு பாக்கட் எடுத்துக்கொண்டாள்.

"கையை மேலே தூக்கு" முரட்டுக்குரல். கேஷ் கௌண்டர் அருகே இருந்த இளைஞன் அருகில் உறுமியது.

"வெளியே ஒரு பைக் நிக்குதே, அது யாரோடது?" இரண்டாவது முரட்டுக்குரல். அப்போது கண்ணாடி வழியே வெளியே எட்டிப்பார்த்து, தன் பைக் அருகே கீழே கிடந்த அந்த இளைஞனைப் பார்த்தாள் ஜோ.

"அது என்னுடையது" பின்னால் பெண் குரல் கேட்டு, கையில் அரிவாள், கத்தியுடன் இருந்த இரு சோம்பேறிகளும் ஒரு சில வினாடிகள் துணுக்குற்று சுதாரித்துக்கொண்டனர்.

"அதன் சாவியைத் தூக்கிப்போடு" என்றான் இரண்டாவதாகப் பேசிய சோம்பேறி.

"பேங்க் லோனில் வாங்கியது. இன்னும் லோன் கட்டிமுடிக்கவில்லை" சாவியை அவன்பால் விட்டெறிந்தாள்.

கேஷ் கௌண்டர் மீது ஒரு பெரிய ஜோல்னாப்பையை எறிந்த இன்னொரு சோம்பேறி,"அதில் உன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் போடு. அத்தோடு ஒரு ஐந்தாறு வில்ஸ் சிகரெட் பாக்கெட்டையும் போடு" என்றான்.

கௌண்டரில் இருந்த இளைஞனுக்கு அதிர்ச்சியில் நடுங்கவே முடிந்தது.

"என்னிடம் இதுவும் இருக்கிறது" என்றாள் ஜோ, தன்னிடமிருந்த பிஸ்டலை இடது கையில் தளர்வாகப் பிடித்தபடி.

மறுபடியும் இரண்டு தடியன்களும் சரேலெனத் திரும்பினார்கள். ஜோவின் அசாத்திய உயரம் அவர்களை பயமுறுத்தினாலும், தங்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர்.
இரண்டாவது, பெண்தானே என்ற நிரந்தர அலட்சியம் வேறு.

"உன்னிடம் ஏது துப்பாக்கி? நீ என்ன போலீஸா??" என்றான் முதலாமவன். அப்போதுதான் வெளியே நிற்கும் புல்லட் பைக் அவன் மண்டையில் உறைத்திருக்க வேண்டும்.

இல்லை. உளவுத்துறை என்று சொன்னால் இந்த அரிவாள் படைத்த வெற்றுக் குண்டன்களுக்குப் புரியவா போகிறது என்று ஜோ தலையை இடம்வலமாக ஆட்டினாள்.

"இல்லை, இது என் பாதுகாப்புக்காக. லைஸன்ஸ் வைத்திருக்கிறேன்" என்று வாயில் வந்த பொய்யைச் சொன்னாள் ஜோ.

"அதையும் இந்தப் பக்கம் தூக்கிப் போடு" என்றான் இரண்டாமவன்.

"இல்லை, எங்கேயாவது கீழே விழும்போது ஏடாகூடமாக வெடித்துவிட்டால்?" என்ற ஜோ.....

"வேண்டுமானால் தரையில் தள்ளிவிடுகிறேன்" என்றாள் தொடர்ந்து.

அவள் சொன்னது நியாயமாகவே தெரிந்தது அந்த இருவருக்கும். "சரி, சரி, தள்ளிவிடு"

ஜோ மெதுவாகக் குனிந்து "இதோ" என்று தன் கையிலிருந்த பிஸ்டலைத் தள்ளிவிட்டாள். அதன் கறுப்புப் பளபளப்பு தங்களை நோக்கி வருவதை ஒரு கணம்.....ஒரு கணம்தான்...... மெய்மறந்து பார்த்தனர் அவர்கள் இருவரும்.

அது போதுமானதாக இருந்தது ஜோவுக்கு.

சரேலென எம்பிக் குதித்து, அவளுடைய அசாத்திய உயரத்தின் உபயத்தால் வலதுகாலை ஒரு ஷெல்ஃபில் ஊன்றி இடது காலைத் தூக்கி முதலாமவன் கழுத்தில் உதைத்தாள். ஜூகுலர் நரம்பில் பட்ட அடியில் வெலவெலத்துப் போய் கீழே சரிந்தான் அவன்.

இரண்டாமவன் சுதாரிக்கும்முன், முதலாமவன் கீழே தவறவிட்டிருந்த அரிவாளைக் கவர்ந்து கொண்டு, அதன் கனமான அடிப்பாகத்தால் அவன் தலையில் அடிக்க, அவனும் அப்படியே கீழே விழுந்தான்.
இவை எல்லாமே 54 வினாடிகளுக்குள் முடிந்துவிட்டன. கீழே கிடந்த அவளுடைய பிஸ்டலையும் , புல்லட் சாவியையும் எடுத்துக்கொண்டாள்.

கேஷ் கௌண்டரிலிருந்த இளைஞன் திறந்தவாய் மூடவில்லை.

ஜோ கழுத்தில் குறுக்கே கிடந்த கறுப்புப் பையிலிருந்து அந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை அந்த இளைஞன் முன் வைத்தாள்.

ஒரு 100 ரூபாய்த் தாளை நீட்டினாள். "மீதி சில்லறை. அப்புறம் போலீஸுக்கு உடனே போன் பண்ணுங்க. இவங்க ரெண்டு பேரும் எழுந்திருக்க டைம் ஆகும்" என்றாள்.

அந்த இளைஞன் தடுமாறிய வண்ணம் ஜோவிடம் பாக்கியை நீட்டியபடி, "போலீஸ் கேட்டா என்ன சொல்றதுங்க?" என்றான்.

கௌண்டரில் மேலிருந்த சிறிய வெள்ளைத் தாளில் ஒரு தொலைபேசி எண்ணை எழுதி அவனிடம் நீட்டினாள், "போலீஸ் கிட்ட இந்த நம்பருக்கு போன் பண்ணைச் சொல்லுங்க."

வெளியே வந்து பார்த்தபோது, பெட்ரோல் ஊற்றிய இளைஞன் மெதுவாக எழுந்து நின்றிருந்தான். "மேடம், டேங்க் ஃபில் பண்ணிட்டேன். பண்ணிமுடிச்சு பெட்ரோலை நிறுத்திட்டு, உங்க புல்லட் டேங்கை மூடினேன். பின்னால இருந்து தலைல அடிச்சிட்டாங்க. மயங்கிட்டேன்" என்றான்.

"ஒண்ணும் ஆயிருக்காது. உள்ளே போய் சூடா ஒரு டீ சாப்பிடு" பணத்தைக் கொடுத்துவிட்டு பைக்கில் சென்ற ஜோவை இவன் இப்போது ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தான்......

=======================

பெங்களூரு அடையும்போது இருட்டிவிட்டது. நகரத்திற்குள் சென்று, ஃபிரேஸர் டௌன் ஏரியாவிலுள்ள அந்த கோடௌனை அடையும்போது, அவள் மொபைல் அழைத்து.

"ஜோ" என்றாள்.

"மார்ட்டின், மேடம். பெரியவர் உங்களை சர்ச் ஸ்ட்ரீட்டில் இருக்கிற ஹயக்ரீவா புக்ஸ் கடைக்குப் போகச் சொன்னார். அங்கே மரகதவல்லி என்ற அழகிய பெண்ணிடம் லீ சைல்ட் எழுதிய சென்டினல் என்ற ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

பணம் கொடுப்பதற்கு முன் '1000 நோட்டிற்கு சில்லறை இருக்குமா?' என்று கேட்டால், அந்தப் பெண் 'நரேந்திர மோடியைத் தான் கேட்க வேண்டும்' என்று சொல்வாள். அந்த சென்டினல் புத்தகத்தில் இருக்கிறது உங்கள் அடுத்தத் தகவல்" என்றான்.

ஜோ எதுவும் பேசாமல் தொடர்பைத் துண்டித்தாள்.

பெரியவருக்கு இந்த ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் மிகவும் பிடிக்கும். சங்கேத வார்த்தைகள், தொழில்முறையினரைத் தவிர்த்து மரகதவல்லி போன்ற சிவிலியன்களைப் பயன்படுத்துவது என்று வழக்கத்திற்கு மாறான செயல்கள் நிறையவே செய்வார்.

இதுவரை அவர் முறியடுத்துள்ள சதிகளை வைத்து அவருக்குப் பல உயரிய விருதுகள் கொடுக்கலாம். ஆனால், தானும், தன்னுடைய யூனிட்டைச் சேர்ந்த 40 ஆட்களும் பின்புலத்திலிருந்து வேலை செய்பவர்கள். அவர்கள் பணியிலிருக்கும்போது இறந்தால் கூட, அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளாது,

ஆங்கிலத்தில் ஸ்டெல்த் (Stealth) என்று ஒரு வார்த்தை உண்டு. யாரும் அறியாதவண்ணம், ஓசையில்லாத செயல்பாடு. அதுதான் அவர்கள் ஒரே நோக்கம். அவர்கள் பணியில் சாதிக்கும் சாதனைகள் வெளியில் வராது என்ற உண்மையை அவர் மட்டுமல்ல அவருடைய HH யூனிட் ஆட்களும் அறிவார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு பெரிய சாதனைக்குப் பின்னர், தில்லியில், மிக அதிசயமாக, பெரியவரையும், ஜோவையும் சந்திக்கப் பிரதமர் விரும்பினார் என்று அவர்கள் இருவரும் சென்றபோது, தன்னுடைய மிக உயர்வான பதவி என்பதையெல்லாம் மறந்து, கலகலப்பாகப் பேசினார் பிரதமர்.
உணவருந்தும்போது பல விஷயங்களைப் பேசிய பின்னர், "அது என்ன HH என்ற பெயர்? உங்கள் கமாண்டர் உங்களிடம் கேட்கச் சொல்கிறார். நீங்கள்தான் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்கிறார்," என்ற பிரதமரின் கேள்விக்குப் புன்னகைத்த பெரியவர், "ஹஷ் ஹஷ்" என்றவுடன், கண்ணில் நீர் வரச் சிரித்தார் பிரதமர்.

"பலே, நான் என்னன்னவோ கற்பனை செய்திருந்தேன்" என்றார்.

அப்பேற்பட்ட ஒரு எலைட் யூனிட். ஆனால், பெரியவரின் வெற்றியே, ஒவ்வொரு முக்கியமான துறையிலும் உயரிய பதவியிலிருக்கும் , குறைந்தபட்சம் ஒன்றிரண்டு ஆசாமிகள், அவர் கீழ் பணி புரிந்தவர்களாக அல்லது அவர் சொல்லுவதை சிரமேற்கொண்டு செய்பவர்களாக இருப்பார்கள்.

ஹயக்ரீவா புக்ஸ் கடையின் கதவைத் திறந்துகொண்டு நுழைகையில் கதவுக்குப் பின் இருந்த மணி சப்திக்க, கௌண்டரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அந்த அழகிய மரகதவல்லி, "எஸ், ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?" என்றாள்.

சங்கேத வார்த்தைப் பரிமாறலுக்குப் பின், புத்தகத்துடன் வெளிவந்து, அந்த லீ சைல்ட் புத்தகத்தில் செருகியிருந்த இருந்த ஒரு சிறிய வெள்ளைத்தாளில் இருந்த எண்ணுக்கு அருகிருந்த ஒரு எஸ்டீடி பூத்திலிருந்து தொலைபேசினாள்.

"ஜோ, நாம் தேடும் எஸ் விவேக் நகரில் இருக்கிறான். விலாசம் உன்னுடைய வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியுள்ளேன். டேக் கேர்" அவ்வளவுதான்.

சிறிது நேரத்தில் விவேக் நகரில் குறிப்பிட்ட விலாசத்திற்கு நான்கு வீடுகள் முன் புல்லட்டை நிறுத்தகையில் அவளுடைய மொபைல் அழைத்து.

"ஜோ" என்றாள்.

"மேடம், கேசவ் பேசறேன். நீங்கள் தேடி வந்த எஸ் இப்போதான் ஒரு ஆட்டோவில் கினோ தியேட்டர் என்று சொல்லி ஏறினான். கினோ பார்க்கிங் அருகே மகேஷை நிற்கச் சொல்லிவிட்டுத்தான் உங்களைக் கூப்பிட்டேன்" என்றான் அந்த முகமற்ற கேசவ்.

"தேங்க்ஸ். அது சுபேதார் சத்ரம் ரோடுதானே?" என்ற ஜோவிடம்

"எஸ் மேம், அதேதான்" என்றான்.

கினோ பார்க்கிங்கில் நிறுத்தாமல் எதிரே ஒரு ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டு, ஜோ நுழைந்தபோது, படம் ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு கன்னடப்படம். அதற்கே உரித்தான வாசனையுடன், முதல் காட்சியிலேயே ஒரு தாயார் கத்திகுத்துடன், மகனிடம் எதிரிகளை அழிக்கச் சொல்லி கன்னடத்தில் வீரமாகப் பேசிக்கொண்டிருக்க, சட்டென படம் நின்று ஒரு ஸ்லைட் எட்டிப்பார்க்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

"நண்பரே, எஸ், அருகிலிருக்கும் காவ்யா ரெஸ்டாரண்டுக்கு வரவும். அவசரம். எம்." இருட்டில் சுவரை ஒட்டி நின்றிந்த ஜோ, ஒருவன் எழுந்து வெளியே நடப்பதைப் பார்த்தாள். சத்தமே இல்லாமல் அவன் பின்னால் நழுவ, திரையில் கன்னட அம்மா தன வீர் உரையை மகனுக்குத் தொடர ஆரம்பித்தார்.
வெளியே வந்தவன் பச்சை நிற வெயில் கண்ணாடியுடன் ஜீன்ஸ் / கறுப்புச் டி ஷர்ட் அணிந்த வாட்டசாட்டன். ஜோ தன்னுடைய மொபைலை ஒத்தினாள்.

அவன் அருகே இருந்தவரிடம் காவ்யாவுக்கு வழி கேட்டு நடக்க ஆரம்பித்தான். அவனுடைய மொபைல் தொடர்ந்து டிராக்கிங்கில் இருந்ததையும், அவன் எம் என்பவனுடன் பேசியதையும் ஜோ அறிவாள். கினோ தியேட்டர் மட்டும்தான் யாரிடமும் அவன் பேசாத திருப்பம்.

காவ்யா ரெஸ்டாரண்டை அவன் அணுகியபோது, அவனுக்கு 30 அடி பின்னாலிருந்த ஜோ முதுகில் உலோகம் உறுத்தியது. அப்படியே நின்றாள். அவளுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த எஸ் திரும்பி அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைக்க, அவர்களருகே ஒரு கறுப்பு நிற இன்னோவா வந்து நின்று, அதன் கதவுகள் திறந்தன.

உலோக முனை அவள் முதுகில் உறுத்த, மெதுவாக உள்ளே ஏறினாள் ஜோ. மறுபக்கம் இருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஏறி அமர்ந்தான், எஸ். ஜோ தன் முதுகில் இருந்த உறுத்தல் விலகியதை அறிந்தாள்.

இன்னோவா நகர ஆரம்பிக்க, "மிஸ், எங்களுக்கும் கொஞ்சம் க்ரெடிட் கொடுங்கள். நீங்கள் பெங்களுர் வந்ததிலிருந்தே கண்காணிக்கப்படுகிறீர்கள். போலீஸை உள்ளே நுழைக்காமல், உளவுத்துறையே நேராக வந்ததில் மகிழ்ச்சி. ரா வரவில்லை ?" என்றான் அந்த எஸ்.

சிரித்த அந்த எஸ், "மேடம் ஜோ, நீங்கள் பெரிய தில்லாலங்கடி என்று எனக்குத் தெரியும். நாங்கள் மெடுஸா மாதிரி. ஒவ்வொரு தலையாக வெட்டவெட்டப் புதிதாகக் கிளம்பிக்கொண்டே இருப்போம். இந்தியா ஏழை நாடு. எனவே உங்கள் கூடப் பணிபுரியும் ஜெகதீஷை விலைக்கு வாங்கிவிட்டோம். 50 லட்சம் அவனுக்கு அதிகம்தான். இருந்தாலும், நிறைய பயனுள்ள தகவல்கள்......" மொபைல் அதிர்ந்தது.

"எடுத்துப் பேசுங்கள். ரா உங்களை அழைக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போதுதான் ஜெகதீஷைக் காலி செய்தோம். எங்களுக்கு அவன் உதவி தேவையில்லை" இன்னோவா உள்ளே ஒளிர்ந்த மொபைல் திரையில் ஜெகதீஷ் இறந்த செய்தி, பெரியவரிடமிருந்து.

எஸ் புன்னகைத்தான். "எங்கள் திட்டம் நிறைவேறும் சமயம் வந்துவிட்டது. உங்கள் ஜனாதிபதி இன்று மாலை வீர மரணமைடைவார். அவர் வண்டியில் C 4 வகை வெடி மருந்தை வைக்கச் சொல்லிவிட்டோம். நீங்கள் ஒரு திறமையான அதிகாரி என்பதால் இப்போது போகும் வழியிலேயே தீர்த்துவிடுவோம்" என்றான்.

ஜோ தன் இடப்பக்கம் இருந்தவனின் கையிலிருந்த துப்பாக்கியைச் சரேலெனப் பிடுங்கி, டிரைவரின் பின்னந்தலையில் சுட்டாள். அவனுக்கு நேர் பின்னால் இருந்த எஸ் முகத்தில் அந்த டிரைவரின் ரத்தமும், மூளையும் சிதற. வண்டி நிலைதடுமாறி, சாலை நடுவே இருந்த டிவைடர் மீது மோதி நின்றது. நின்ற வேகத்தில் ஜோ அருகே துப்பாக்கியை இழந்திருந்தவன் சுதாரிக்காததால் முன் சீட்டின் மேல் பலமாக மோதிக்கொள்ள, அந்த ஒரு வினாடியில், எஸ் நெற்றிப்பொட்டில் சுட்டாள் ஜோ.

அந்த இடத்திலேயே அவன் இறக்க, ஜோ கீழே இறங்க அவளுக்குப் பின் பைக்கில் வந்த மகேஷ் கதவைத் திறந்துவிட்டான். கினோ தியேட்டர் பார்க்கிலிருந்து அவள் பின்னால் வருகிறான். அந்தப் போக்குவரத்து நிறைந்த சாலையில் ஜோ வந்த இன்னோவா காரை மூன்று போலீஸ் வண்டிகள் சூழ்ந்தன.

கீழே இறங்கிய ஜோ கையை நீட்ட, பைக்கின் பெட்ரோல் டாங்க் மீதிருந்த கவரிலிருந்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவள் கையில் தண்ணீரை விட்டான் மகேஷ். ரத்தக் கறையைத் துடைத்துக்கொண்டவள், "தேங்க்ஸ்... யு மஸ்ட் பி மகேஷ்...." அவன் புன்னகைத்துத் தலையை ஆட்டவே,

"இதே சுபேதார் சத்ரம் ரோடில், ப்ரியதர்ஷினி ரெஸ்டாரண்ட் இருக்குமே ? இன்னும் இருக்கிறதா?" என்றாள்.
மகேஷ், "அதுதான் இந்த ஆனந்தராவ் சர்க்கிளிலேயே சிறந்த ரெஸ்டாரண்ட் மேம். போகலாம் வாருங்கள்" என்றான்.

ஜோ, புன்னகைத்துவிட்டு, "என் புல்லட் கினோ எதிரே உள்ளது. அதை எடுத்துக்கொண்டு ஃபிரேஸர் டௌன் ஏரியாவிலுள்ள அந்த கோடௌனுக்கு வந்துவிடுங்கள். ரெஸ்டாரண்ட்டில் நான் சாப்பிட்டுக்கொள்கிறேன்" என்றாள்.

ரெஸ்டாரண்ட் உள்ளே அமர்ந்து, "ஒந்து ரவா மஸாலே தோஸா" என்றபோது, அவள் மொபைல் சிணுங்கியது.

"ஜோ" என்றாள்.

"நம் ஜனாதிபதி காரிலிருந்து C 4 ஐ எடுத்துவிட்டோம். அவர் ப்ரோக்ராமை இன்று கேன்ஸல் செய்துவிடச் சொல்லிவிட்டோம்," தொடர்பு அறுந்திருந்தது.

அடுத்ததாக மொபைலில் வந்த கேசவ், "மேம், எஸ் ஸி ரோடில் இருந்த இன்னோவா, உள்ளே இருந்த உடல்கள், அரை மயக்க நிலையில் இருந்த கையாள் எல்லோரையும் அப்புறப்படுத்திவிட்டோம். உங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு ஆள் ஃபிரேஸர் டௌன் ஏரியாவிலுள்ள கோடௌனுக்கு போய்க் கொண்டிருக்கிறான், " என்றான்.

மறுபடி மொபைலில் கால் வரவே, அந்த எண்ணைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, "எஸ் ஜெகதீஷ்" என்றாள் ஜோ.

"மேம், நன்றி. நீங்கள் சொன்னபடியே எஸ் கும்பலில் ஊடுருவி, எஸ் தப்பித்ததிலிருந்து நீங்கள் அவனைத் தொடருகிறீர்கள் என்ற விஷயத்தைச் சொல்லி, அவனை உங்களிடம் சிக்க வைத்துவிட்டேன். நான் இறக்கவில்லை என்பது உங்களுக்கும், பெரியவருக்கும் மட்டுமே தெரியும். நம் சம்பளத்தைக் கவனித்துக் கொள்ளும் எஸ் எஸ் ஸிடம் சொல்லி விடுங்கள். அப்புறம் எனக்குச் சம்பளம் வராது" என்றான் ஜெகதீஷ்.

ஜோ சிரித்தவாறே, "டன்' என்றாள்.

=======================================
 
Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
ஜோ கேரக்டர் கெத்து... சூப்பர்... (y)(y)(y)
 
Vaniprabakaran

New member
Messages
7
Reaction score
6
Points
3

Oru James Bond padam patha mathiri erunthathu👍👍
 
RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
🙏 🙏 தங்கள் கருத்துக்கு நன்றி. ஜோ சாதாரணப் பெண்தான். தைரியம் கொஞ்சம் அதிகம். மற்றபடி ஜேம்ஸ் பாண்ட் இல்லை.
 
Messages
30
Reaction score
9
Points
8
🙏 🙏 தங்கள் கருத்துக்கு நன்றி. ஜோ சாதாரணப் பெண்தான். தைரியம் கொஞ்சம் அதிகம். மற்றபடி ஜேம்ஸ் பாண்ட் இல்லை.
சாதாரண பெண் எல்லாம் போற போக்குல துப்பாக்கியை தூக்கி சுடுவாங்களா சார்! ஸ்பெசல் கேரக்டர் தான். அழுத்தமா அழகா சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது.
 
Top Bottom