பரந்தாமன் நினைத்தபடி ஒரு மணி நேரத்தில் ஊர் மக்களுக்கு புதுத்துணி ஆர்டர் செய்துவிட்டு மது வாங்கிக்கொண்டு தனது இரண்டு தம்பிகளை யும் அழைத்துக் கொண்டு பம்பு செட்டுக்கு கிளம்பினான்.
மூவரும் வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு சென்றனர்.
சந்திரனுக்கு மனம் பட பட படவென அடித்துக் கொண்டே இருந்தது நாம் செய்யப்போகும் இந்த காரியம் இப்போ எதுக்கு தேவை தானா என்று
பரந்தாமனுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது இன்று நாம் செய்யப்போகும் காரியம் நமக்கு சாதகமாக அமையுமா இல்லை நமக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டது.
தீனாவுக்கு எந்த கவலையும் இல்லை சந்தோஷம் மட்டுமே இருந்தது ஏனென்றால் அவன் மனம் முழுக்க கனகா மட்டும் நிரம்பி இருந்தால் அவளை எப்படியோ இன்று அனுபவைக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டுமே அவனுக்கு இருந்தது.
பிறகு மூவரும் மது அருந்துவதற்கு தயாரானார்கள் பரந்தாமன் தம்பிகளுக்கு ஊற்றிக் கொடுத்தான் தம்பிகளும் வாங்கி மடக் மடக் மடக் என்று குடித்தார்கள் பரந்தாமன் வழக்கம்போல குடிப்பது போல் நடித்துக்கொண்டு மதுவை தம்பிகளுக்கு தெரியாமல் கீழே ஊற்றி விட்டான் அவன் பங்கை ஒருவழியாக மதுவை குடித்து முடித்துவிட்டார்கள் சந்திரனுக்கும் சீனாவுக்கும் போதை தலைக்கேற தொடங்கியது தன் சுய நினைவை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினார்கள்
நீங்கள் இருவரும் பொறுமையாக கனகாவிடம் பேசுங்கள் கண்டிப்பாக உங்கள் ஆசையை அவள் நிறைவேற்றி வைப்பாள் அப்படி ஏதாவது ஏடாகூடம் செய்தா நீங்கள் உங்கள் வேலையை காட்டுங்கள் அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் அவளை இன்று அனுபவித்து விடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பரந்தாமன் தம்பிகளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னான்.
பரந்தாமன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது . தீனா எழுந்து சற்று தள்ளாடியபடி பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றான் சந்திரனும் அவன் பின்னாலே நடந்து சென்றான் இவர்களின் ஆர்வத்தைப் பார்த்து பரந்தாமனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது இன்று நம் தம்பிகள் எப்படியோ தவறு செய்து விடுவார்கள் என்று.
பம்பு செட்டின் முன்னாள் கனகா பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள். பண்ணையார் மகன்கள் வருவதை பார்த்த கனகா சற்று உடைகளை சரிசெய்து கொண்டு மீண்டும் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.
போதை தலைக்கேறிய தீனாவும் சந்திரனும் வச்ச கண்ணு வாங்காம கனகாவை உற்றுப் பார்த்தார்கள்.
என்ன எண்ணிக்கு ஒரு மாதிரியா பாக்குறாங்க சரி நம்ம என்ன ஏதுன்னு கேட்கலாம் என்று கனகா நினைத்தாள்.
ஐயா ஏதாவது வேணுமா இங்கேயே நிக்கறீங்க என்று பணிவாக கேட்டாள் கனகா.
கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா தாகமா இருக்கு என்றான் தீனா
இதுக்குத்தான் இப்படி தயங்கிட்டு நின் நாங்களா நான் என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு கனகா தண்ணி கொண்டு வருவதற்கு பம்புசெட் உள்ளே நுழைந்தாள். புது டம்ளரில் தண்ணி எடுத்துகொண்டு திரும்பி பார்த்தாள் சந்திரனும் தீனாவும் பம்புசெட்டு உள்ளே நிற்கிறார்கள் .அவர்களை உள்ளே பார்த்த கனகா விற்கு மனம் படபடவென அடிக்க ஆரம்பித்தது என்ன சொல்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் தண்ணீரை சற்று நடுக்கத்துடன் நீட்டினாள்.
சந்திரன் கனகாவை உற்றுப் பார்த்தபடியே தண்ணீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தால் அப்போது தீனா கதவை மூடி தாப்பாள் போட்டான்.
ஐயா ஏன் கதவை சாத்தி ரிங்க எனக்கு பயமா இருக்கு கதவைத் திறங்க ஐயா என்று பயந்தபடி கனகா கேட்டாள்.
கொஞ்சம் கூட தயங்காமல் உடனே கனகாவின் காலில் விழுந்தான் சந்திரன் .என்னை மன்னிச்சுடு கனகா எனக்கு வேறு ஏதும் வழி தெரியவில்லை உன் மீது எனக்கு நீண்ட நாளா ஆசை அதனால் இன்று ஒரு நாள் மட்டும் .நான் உன்னோட ஒன்று சேர வேண்டும் கனகா நீ எந்த பிரச்சனையும் செய்யாமல் நான் சொல்வதை போல கேளு எனக்கு என் ஆசையை தீர்த்துக் கொள்ள வேற வழி தெரியல என்று கெஞ்சினான் சந்திரன்.
நாங்க செய்யறது தப்புதான் .ஆனா உன்னை விடுவதற்கும் மனமில்லை கனகா .அதனாலதான் இன்னிக்கி ஒரு முடிவு பண்ணிட்டோம் உன்கூட ஒன்னு சேரனும் நீதான் எங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் கனகா என்று சொன்னான் தீனா.
தலையில் பெரிய இடி விழுந்தது போல பிரமித்துப் போனாள் கனகா ஐயய்யோ என்ன பண்ணையார் மகன்கள் இப்படிப்பட்டவர்கள இந்த ஊரே இந்த குடும்பத்தை தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு அழுதுக்கொண்டே ஐயா இப்படியெல்லாம் பேசாதிங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு தயவு செய்து கதவை திறந்து விடுங்கள் ஐயா என்று கெஞ்சினாள் கனகா
சட்டென்று கனகாவை உடும்புப் பிடி போல் கட்டி அணைத்துக்கொண்டான் தீனா. அவன் பிடியிலிருந்து விலக முடியவில்லை கனகாவால் அப்பொழுது கனகா மனம் விட்டு. .கத்தி அழுக தொடங்கினாள்.
தீனா கனகாவின் ஆடைகளை கலைததான் தனது நீண்ட நாள் காமப்பசியை தீர்த்துக்கொள்ள ஆயத்தமானன். வெறி பிடித்தவன் போல தீனாவும் சந்திரனும் கனகாவை கற்பழித்தனர். கனகா விற்கு மரண பயம் ஏற்பட்டது இப்படிப்பட்ட வஞ்சகர்கள் இடம் இவ்வளவு நாளாக வேலை செய்தோமே என்று நினைத்து அலறினாள் .கெஞ்சினாள்அவள் குரல் தினாவுக்கும் சந்திரனுக்கும் கேட்கவே இல்லை அவளின் அழகு மட்டும் தான் அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. நல்ல பசியில் இருந்த சிங்கத்துக்கு ஒரு மான் சிக்கிக் கொண்டதைப் போல சந்திரனிடம் தினாவிடமும் கனகா மாட்டிக்கொண்டாள்.
பரந்தாமன் மது அருந்தின இடத்திலேயே நின்றுகொண்டு பரபரப்பாய் பம்பு செட்டை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் என்ன நடந்ததோ என்று தெரியவில்லையே என்று படபடப்பாய் சற்று இங்குமங்குமாய் சுற்றினான்.
நேரம் கடந்தது சந்திரனின் காமப் பசி தீர்ந்தது தீனாவின் ஏக்கமும் குறைந்தது. இருவரும் உடைகளை சரி செய்து கொண்டு .கதவை திறந்தார்கள் அப்போது கனகாவை பார்த்து .எங்களை மன்னித்துவிடு கனகா என்றான் சந்திரன். பிறகு இருவரும் அங்கிருந்து மது அருந்திய இடத்திற்கு சென்றார்கள்.
பாவம் கனகா அந்த இடத்திலேயே படுத்துக்கண்டு கதறிக் கதறி அழுது கொண்டே இருந்தாள் நம் வாழ்க்கை இப்படி வீணாகிவிட்டது என்று .பிறகு தலைமுடியை சரி செய்து கொண்டு உடைகளை சரி செய்து கொண்டு எழுந்து வெளியே வந்தாள் .அங்கு நிற்பதற்கு கூட அவள் உடல் தீயாய் கொதித்தது. பசுமையாய் தெரிந்த பண்ணையார் தோட்டம் அவள் கண்களுக்கு காட்டுத்தீயாய் தெரிந்தது .என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை இனியும் பண்ணையாரின் மகன்கள் முகத்தில் முழுக்க கூடாது என்று நினைத்தாள்.
பண்ணையார் மகன்கள் இவ்வளவு மோச காரர்கள் என்று சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் .நம்மாலும் இவர்களை எதிர்த்து இந்த ஊரில் வாழ முடியாது. நம் கணவனும் ஒரு ஊமை பாவம் அவரால் இவர்களை எதிர்க்க முடியாது இந்த விஷயத்தை நம் கணவனிடம் சொன்னாள் கோபப்படுவார். பண்ணையார் மகன்களை ஏதாவது செய்ய துடிப்பார் ஆனால் கடைசியில் பண்ணையார் மகன்கள் தான் ஜெயிப்பார்கள் அதனால் நம் கணவனிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்ல வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாள் இருந்தாலும் நம் கற்பழிக்கப்பட்டாவள் எப்படி கணவன் முகத்தை பார்ப்பது என்ற சங்கடம் கனகாவுக்கு ஏற்பட்டது .என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அழுக தொடங்கினாள். அப்பொழுது கனகா என்ற குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தாள் .பரந்தாமன் நின்றிருந்தான்.
வாங்க உங்க ஆசை யும் தீர்த்துக் கொள்ளுங்க என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு அழுதால் கனகா.
எனக்கு ஒன்னும் உன் மேல ஆசை எல்லாம் இல்ல கனகா
அப்படின்னா நீ நல்லவனா
நான் நல்லவன்னு சொல்லல ஆனால் கெட்டவனா மாத்தாத கனகா
இப்போ எதுக்கு வந்த .உன் தம்பிங்க நல்லவன்னு சொல்ல வந்தியா.
நான் சொல்றதை பொறுமையா கேளு மா ஏதோ நடந்தது நடந்து போச்சு இத பெரிசா எடுத்துக்காதே எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்
நம்மகிட்ட கூலி வேலை செய்யற வ தானே .என்ன செஞ்சாலும் பொறுத்துக்கொண்டு இருப்பாள் என்று நினைச்சுதான் உன் தம்பிகளை என்னிடம் அனுப்பி வச்ச யா
நீ எப்படி வேணாலும் நினைச்சிக்க ஆனா இனிமே உனக்கு நல்ல காலம் அமைவது உன் கையில தான் இருக்குது கனகா
இந்த விஷயம் பண்ணையாருக்கு தெரிஞ்சா உங்க மூணு பேரையும் வெட்டிக் கொன்றுவிடுவர்தெரியுமா.
தெரியுமே .உன்ன பத்தி சொல்ற விதத்துல சொன்னா எங்க அப்பா கூட உன்ன சந்தேகக் கண்ணோடு தான் பாப்பாரு புரியுதா.
உண்மைய ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது .என்னோட பாவம் உங்களை சும்மா விடாது நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க மூணு பேருமே செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்க போறீங்க .கண்டிப்பா கடவுள் இருக்காரு.
ஹேய் என்று குரல் உசத்தி கத்தினான் பரந்தாமன்..... என்ன விட்டா பேசிக்கொண்டே போற இப்படித்தான் ஏற்கனவே இங்கு வேலை செய்த அந்தப் பெண்ணை என் தம்பிங்க தான் கேடுத்தாங்கதெரியுமா இப்படித்தான் அவளும் கதறி அழுத நான் அவளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன அட்ஜஸ்ட் பண்ணிக்க என்று ஆனா அவ கேக்கலை இப்ப ஊரைவிட்டு எங்கேயோ ஓடி போய் கஷ்டப்பட்டு இருக்கா இதெல்லாம் அவளுக்கு தேவையா .ஆனா எங்க அப்பா எங்களையே அவளை தேடுவதற்கு அனுப்புகிறார் நாங்களும் அவளை தேடுவது போல நடிச்சட்டு வரும் .அதே போல தான் நீயும் கஷ்டப்பட்ட போறியா நான் சொல்றத கேட்டேனா உனக்கு நல்ல காலம் .இல்லன்னா உன் எதிர்காலம் எப்படிப் போகுமோ எனக்கேத் தெரியாது.
என் வாழ்க்கையே நாசமா ஆகிட்டீங்க இனிமே என்ன எனக்கு எதிர்காலம் இருக்குது.
நான் சொல்வதை கவனமாக கேளு உன் மீது என் தம்பிகளுக்கு கொள்ள ஆசை .நீ என் தம்பிகளே அட்ஜஸ்ட் செய்து கொள் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் .அதுக்கு அப்புறம் என் பெரிய தம்பியை எப்படியாவது பேசி திருமணத்தை செய்து கொள்ளாதபடி தடுத்து நிறுத்து .அது போதும் எனக்கு இந்த காரியத்தை செய்தால் உனக்கு நான் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் கனகா இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செய் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் கனகா என்று சற்று தாழ்மையுடன் கேட்டான் பரந்தாமன்.
இப்பத்தான் நல்ல புரியுது .உன் தம்பி திருமணத்தை நிறுத்த தான் அவங்களை என்னிடம் அனுப்பினீர்களா .கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் தம்பிகளின் ஆசை தான் எனக்கு முக்கியம் என்று சொன்னாயே இப்போ ஏதோ ஒரு சதி திட்டம் போட்டுத்தான் உன் தம்பிகளே என்னிடம் அனுப்பி நீயா
ஆமாம் என் தம்பிகளுக்கு திருமணம் ஆனால் எல்லாம் சொத்தும் பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும். என் தம்பிகளுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் .எல்லாம் சொத்துக்களும் என் கைவசத்தில் இருக்கும் அதனால்தன் என் தம்பிகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்ற சதித்திட்டத்தை தீட்டி இருக்கிறேன் அந்த திட்டத்தில் நீயும் சேர்ந்து கொள் உனக்கு என்ன வேணுமோ கேளு நான் செய்கிறேன் நீ ஒன்றும் கவலைப்படா வேண்டாம் கனகா. நாளைக்கு வருகிறேன் நல்ல ஒரு முடிவு சொல் உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது .உன் மீது நம்பிக்கையோடு போறேன் நல்ல பதிலா நாளைக்கு சொல். என்று சொல்லிவிட்டு பரந்தாமன் அவன் தம்பிகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்..
தொடரும்...........