Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
பரந்தாமன் எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகினான் தனது தம்பிகளின் மீது மிகுந்த அக்கறையோடு தம்பிகளுக்கு பணிவிடை செய்தான் நேரத்தோடு சாப்பிட வேண்டும் நேரத்தோடு தூங்க வேண்டும் போன்ற அன்பான கட்டளைகளை தம்பிகளுக்கு சொன்னான்.
மனைவி சாந்தியிடம் மற்றும் மகனிடம் இப்படி எல்லோரிடமும் அன்பாக இருந்தான் காரணம் அவன் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது அவன் என்ன படி விவசாயத்தில் வரும் லாபம் அவனே யாருக்கும் தெரியாமல் பம்புசெட்டில் சேர்த்து வைக்கிறான் சிறிது பணத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்துவிட்டு இதுதான் லாபம் என்று கணக்குக் காட்டுகிறான் அதனால் பரந்தாமனுக்கு பெரும் சந்தோஷமாக இருந்தான் .
சங்கரும் ரேகாவும். பண்ணையார் தோட்டத்தில் சந்தோசமாக வேலைபார்த்து வந்தார்கள் புதிதாக திருமண ஜோடிகள் என்பதால் நினைக்கும் போதெல்லாம் சங்கரும் ரேகாவும் முத்தங்களை பரிமாறிக் கொள்வார்கள் ஒரு சில நேரங்களில் இயற்கையோடு இயற்கையாக கலந்து தனது காம இச்சையை தீர்த்துக் கொள்வார்கள் இப்படி உல்லாசமாக பண்ணையார் தோட்டத்தில் காதல் ஜோடிகளாக வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்
ஒரு நாள் இரவு பம்புசெட்டில் ரேகா சங்கரின் மார்பின் மீது தலை வைத்து படுத்துக் கொண்டு. மாமா நான் ஒன்று சொன்னால் என் மேல கோச்சிக்க மாட்டீங்களே என்றாள் ரேகா.
என்னடி சொல்ற இதுவரைக்கும் உன் மேல நான் கோபப்பட்டது இல்ல இன்னைக்கு ஏன் இந்த வார்த்தையை சொல்ற எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் உன்மேல கோபப்பட மாட்டேன் என்றான் சங்கர்.
எனக்கு இங்கே இருக்கிறதுக்கு பயமா இருக்கு மாமா.
என்ன புள்ள சொல்ற அப்போ இத்தனை நாளா பயந்துகிட்டு தான் என் கூடயே இருந்தியா
ரொம்ப பயம் இல்ல லேசான பயத்தோடு தன் இருக்கேன்.
உனக்கு பயமா இருந்தா நாளைக்கு நீ ஊருக்குள்ள போயிட்டு தாத்தாவோட உங்க அம்மாவோட இருந்துக்க பகலில் இங்க வந்துடு என்றான் சங்கர்.
உன்னை விட்டுட்டா ஐயோ நான் போக மாட்டேன் எதுவாக இருந்தாலும் நான் உன்னோட தான் இருப்பேன் இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.
நீதானே பயமா இருக்குன்னு சொல்ற அதனாலதான் இரவிலே நம்ம வீட்டுக்கு போயிடு பகல்ல இங்க வந்துடு.
எனக்கு இங்க பயமா இருக்குதுன்னு தான் சொன்னேன் அதுக்காக உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது மாமா..
இங்கே உனக்கு என்னடி பயம் உன் பக்கத்திலேயே நான் இருக்கேன் பண்ணையார் பசங்களும் பாசமாக பழகுகிறார்கள் ஊர்ல நம்மள பத்தி பெருமையா பேசிக்கிறாங்க நம்மோடு தைரியத்தை பத்தி நீ என்னடான்னா பயமா இருக்குன்னு சொல்லுறீயே அப்படி என்ன பயம் சொல்லு என்றான் சங்கர்.
எனக்கு பண்ணையாரின் பெரிய மகன் பரந்தாமன் அவரை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு மாமா அவர்தான் ஏதோ ஒரு தவறு செய்யறாரு போல எனக்குத் தெரியுது மாமா இத நான் சொன்னா நீங்க எங்க கோச்சுக்க போறீங்க என்று பயந்துகிட்டு தான் நான் உங்க கிட்ட சொல்லல சொல்லாமலும் என்னால இருக்க முடியல அதனால தான் இன்னைக்கு உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன் என்றாள் ரேகா.
அவர் மேலேய..... என்ன சொல்ற புள்ள பண்ணையாருக்கு அடுத்தபடியா இந்த ஊரே அவரைத்தான் தெய்வமா பார்க்குது அவரு போய் தவறு செய்யறாருன்னு சொல்ற.
ஆமா மாமா நம்ம இங்கே வந்தோம்மே முதல் நாள் அன்னைக்கு பண்ணையார் மனைவி படத்தின் முன்னால் பரந்தாமன் ஐயா நமக்கு முன்னாடி சாமி கும்பிட்டு இருந்தாரு அவர் பின்னாடி நம்ம நின்று வேண்டிக்கிட்டு நின்றிருந்தோம் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா
ஆமாம் ஞாபகம் இருக்கு முன்னாடி அவர் நின்றிருந்தார் பின்னாடி நம்ம நின்னு சாமி கும்பிட்டோம் அதுக்கு என்ன இப்போ
நம்ம ரெண்டு பேரும் கண்ண மூடி வேண்டிக் கொண்டு இருந்தோம் அப்போ நான் சீக்கிரமாக வேண்டி முடித்துவிட்டேன் கண் திறந்து பார்த்தாள் அந்தப் பரந்தாமன் மெதுவாக ஏரி படத்தின் பின்பக்கமாக எட்டிப்பார்த்து சிறிது நேரம் எதையோ சரி பார்ப்பது போல பார்த்துவிட்டு கீழே இறங்கியவர் நம்ம இருவரையும் பார்த்து அவர் பயந்து போனார் . அவர் நம்மை பார்த்ததும் நான் உடனே லேசாக கண்களை மூடிக்கொண்டேன் அப்போது அவர் உடம்பே நடுங்கியது நான் கவனித்தேன் . அந்த இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது அதனால்தான் அவர் நம்மளைப் பார்த்து பயந்து விட்டார் ஆனால் நாம் இருவரும் கண்களை மூடி இருந்ததால் அவருக்கு சந்தேகம் வரவில்லை உடனே சிறிது நேரத்தில் அவர் இயல்பாக மாறிவிட்டார் . எனக்கு என்னமோ அந்த படத்தின் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது போல் தெரிகிறது மாமா அன்று மட்டுமல்ல அவர் வரும்போதெல்லாம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பின்னால் ஏறி ஏதோ செய்துவிட்டு வருவது போல் எனக்கு தெரிகிறது நான் இதை மூன்று முறை நான்கு முறை ஒளிந்திருந்து பார்த்தேன் அதனால்தான் சொல்றேன் எனக்கு இங்கே இருக்கிறதுக்கு பயமா இருக்குதுன்னு.
ரேகா சொன்னதை கேட்டதும் சங்கர் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான். இந்த விஷயத்தில் யாரையும் நம்ப கடாது என்று முடிவு செய்தான் சங்கர் தனது தந்தை சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் கவனமாக இருக்கவேண்டுமென்று முத்தையா சொன்னது சங்கர் நினைத்துப் பார்த்தான் உடனே ரேகாவிடம் சொன்னான்.
இப்போதே நான் பக்கத்து அறையில் சென்று அந்தப் படத்தின் பின்னால் என்னதன் இருக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றான் சங்கர்.
வேண்டாம் மாமா இந்த நேரத்தில் நீங்க அங்கு செல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கலம் இப்போது அமைதியாக இரு மாமா என்று சங்கரை தடவிக் கொடுத்துக் கொண்டே படுக்க வைத்தாள் ரேகா.
சங்கருக்கு ஒரே குழப்பம் அப்படி என்னதான் இருக்கும் படத்தின் பின்னால் காலையில் எழுந்தவுடன் முதல் வேலை படத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு உறங்க ஆரம்பித்தான் சங்கரும் ரேகாவும்.
பொழுது விடிந்தது..... இருவரும் எழுந்து வெளியே வந்து பக்கத்து அறைக்கு சென்றார்கள்.
நீ வெளியே நின்று பண்ணையார் மகன்கள் வருகிறார்களா என்று பார்த்துக்கொள் நான் படத்தின் பின்னால் என்ன தான் இருக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் பூஜை அறைக்குள் நுழைந்தான் பிறகு மெதுவாக ஏறி படத்தின் பின்னால் பார்த்தான். பெரிய அலமாரி போல தோற்றம் தெரிந்தது வெளியிலிருந்து பார்ப்பதற்கு மேடை போல காட்சியளித்தாலும் பின்பக்கமாக பார்த்தால் அது ஒரு பெரிய அலமாரி போல இருந்தது ஒரு பிரோவை படுக்க வைத்தாள் எப்படி இருக்குமோ அதேபோல பின் பக்கமாக இருந்தது இரண்டு பூட்டுகள் பூட்டியிருந்தது. உடனே சங்கர் நம் மனைவி சொன்னது உண்மைதான் பரந்தாமன் எதையோ இங்கு மறைத்து வைத்திருக்கிறார் இந்த விஷயம் பண்ணையாரிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கீழே இறங்கி விட்டான் சங்கர்.
பிறகு சங்கரம் ரேகாவும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் தோட்டத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே இது பெரிய இடத்து விவகாரம் நம்ம ஏதாச்சும் சொல்லி அது வேற மாதிரியா இருந்தா அதுக்கப்புறம் பண்ணையார் குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் விரிசல் ஏற்படும் அதனால நம்ம மனசோட இதை வச்சுக்கணும் என்று சங்கர் ரேகாவிடம் சொன்னான்.
ஆமா மாமா நம்ம இங்க எதையுமே தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது காணாமல் போன இரண்டு குடும்பத்துக்கும் இந்த மர்மத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குதுன்னு எனக்கு தோணுது மாமா.
அப்படியெல்லாம் உடனே முடிவு பண்ணக்கூடாது மா அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு தெரியாம நம்ம எதையும் முடிவு பண்ண கூடாது இருந்தாலும் இந்த விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று இருவரும் பேசிக்கொண்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் பைக்கில் வருவது சங்கர் ரேகாவும் பார்த்தார்கள்.
பைக்கை வழக்கம் போல களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் பம்புசெட்டை நோக்கி அப்பொழுது ரேகாவும் சங்கரும் பண்ணையார் மகன்களை நோக்கி வந்தார்கள்.
பம்புசெட்டின் சுற்றியிரக்கும் பலா மரத்தின் நிழலில் அனைவரும் நின்றார்கள் அப்போது.
நாங்கள் இருவரும் இன்று மதியம் அப்பாவைப் பார்ப்பதற்கு போயிட்டு வருகிறோம் ஐயா என்றான் சங்கர்.
தாராளமாக போயிடுவாங்க இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். உங்களுடைய விருப்பம் நீங்க எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள்ள போங்க எப்போது வேண்டும் என்றாலும் இங்கு தோட்டத்துக்கு வந்து வேலை செய்யுங்கள் உங்களுக்கு நான் எந்த கட்டுப்பாடும் விதிக்க மாட்டேன் உங்களுக்கு மட்டும் இல்ல ஏற்கனவே இருந்த அந்தப் பெரியவரின் மகனுக்கும் அதற்கு அடுத்தபடியாக இருந்த கனகா குடும்பத்திற்கும் நான் என்னைக்குமே கட்டுப்பாடுகள் விதித்து இல்லை அதனால நீங்க இந்த விஷயத்தை எல்லாம் என்னிடம் கேட்கணும் என்று அவசியமில்லை என்று சிரித்துக்கொண்டே பாசமாக சொன்னான் பரந்தாமன்.
பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கும் ரேகாவுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது இவரைப்பற்றி தேவையில்லாமல் நம் சந்தேகப்படுகிறோமோ என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
அண்ணன் சந்தோசமாக இருப்பதை பார்த்த சந்திரனும் தீனாவும் தலையை தடவியபடி நின்றார்கள்.
என்னப்பா ஏதோ கேட்கணும் போல நிக்கிறீங்க ரெண்டு பேரும் என்றான் பரந்தாமன்.
லேசாக சிரித்துக் கொண்டே .. ஒன்னும் இல்லன்னா எல்லாம் இப்போ நல்லபடியா நடந்துகிட்டு வருது அதேபோல நின்னு போன என்னோட கல்யாணமும் நடந்தா நல்லா இருக்கும் என்றான் சந்திரன் தயக்கத்தோடு.
ஆமாம் அண்ணே நீங்கதான் எப்படியாவது அப்பாகிட்ட பேசி அண்ணனோட கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அண்ணன் அண்ணியை நினைச்சுகிட்டே இருக்காரு தினமும் அவருக்கு அண்ணிய ரொம்ப புடிச்சு போச்சு அப்பா திருமணம் வேணாம்னு சொன்னாலும் அண்ணன் விடறமாதிரி இல்ல என்று தீனா தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
பரந்தாமனுக்கு லேசாக கோபம் ஏறியது ...இன்னும் நீங்க கல்யாண நினைப்பிலேயே தான் இருக்கீங்களா உங்கள வகையா வேற ஏதாச்சும் ஒரு சிக்கலில் மாட்டி விட்டால் தான் நீங்கள் அடங்கி இருப்பிங்க என்று மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு லேசாக சிரித்தபடி.
எனக்கு மட்டும் ஆசை இல்லையா உங்கள் திருமணத்தை பார்ப்பதற்கு என்ன செய்வது அப்பா ஒரே பிடிவாதமாக இருக்கிறார் காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடக்காது என்று ஒருவேளை காணாமல் போனவர்கள் கிடைத்தாலும் திருமணம் நடக்காது என்பது நம்ம மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும் இப்படி பல சிக்கல் இருக்கு தம்பி இதை பொறுமையாகத் தான் அப்பாவிடம் சொல்லி திருமணத்தை பற்றி பேச வேண்டும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு தம்பி என்றான் பரந்தாமன்.
எனக்கு அந்தப் பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு அந்த பொண்ணுக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு இப்படியே திருமணம் தள்ளிப் போனால் அந்த பொண்ணுக்கு வேற ஒரு இடத்தில மாப்பிள்ளை பார்க்க போறத சொல்றாங்க அதனாலதான் நீங்க அப்பா கிட்ட பேசுங்க அண்ணே என்று சந்திரன் சொன்னான்.
எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது இன்னைக்கே பேசுறேன் அப்பாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத தம்பி. உன் திருமணத்தை நல்லபடியா நடத்துவதற்கு இந்த அண்ணன் இருக்கான் உன் தம்பி தீனா இருக்கான் உனக்கு என்ன குறை நீ நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று பரந்தாமன் பாசமாக நடித்துக்கொண்டே சொன்னான்.
பிறகு மூவரும் வழக்கமாக ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க.
இரவு நேரம்.... பரந்தாமன் சந்திரனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை இருக்கும் அறைக்கு சென்றார்கள் பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்த பண்ணையார்
வாங்கப்பா விவசாயம் எல்லாம் நல்லபடியா போகுதா என்றார் பண்ணையார்.
விவசாயத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் தம்பிக்கு தான் வருத்தம் என்றான் பரந்தாமன்.
சந்திரனுக்கு மட்டும் வருத்தம் இல்லை இந்த குடும்பத்திற்கே வருத்தம் தான் அது என்ன வருத்தம் என்று எனக்கும் தெரியும் என்றார் பண்ணையார்.
இவனோட திருமணத்தை பத்தி நம்ம ஒரு நல்ல முடிவை எடுக்கலனா அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்துவிடுவார்கள் அதனால் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் அப்பா என்று பரந்தாமன் தம்பிக்காக பணிந்து கேட்பதுபோல் நடித்துக் கொண்டு கேட்டான் .
சந்திரன் திருமணத்தைப் பற்றி நான் தினமும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் அதற்கான நேரமும் இப்போது வந்து விட்டது நான் உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்களே வந்து விட்டீர்கள் சந்தோஷம் நாளைக்கே பெண்ணோட அப்பாவை வர சொல்லுங்கள் பேசலாம் என்றார் பண்ணையார்.
பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவன் அப்பாவின் பேச்சு என்ன இவர் காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் கிடையாது என்று சொல்லுவார் என்ற நம்பிக்கையில் தானே நாம் இங்கு வந்தோம் ஆனால் இவர் திருமணத்தை நடத்தலாம் என்று சொல்கிறாரே என்று குழப்பத்தோடு நின்றான் பரந்தாமன் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனான்.
பண்ணையார் மெதுவாக எழுந்து வந்து சந்திரனை பாசமாக கட்டியணைத்துக் கொண்டு உன் திருமணத்தை நான் எப்படியாவது நடத்த வேண்டும் என்றுதான் தினமும் யோசித்திருப்பேன் அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது
காணாமல் போனவர்கள் எப்போது கிடைக்கிறார்களோ அப்போது தான் திருமணம் என்று சொன்னாரே இப்போது திருமணம் செய்யலாம் என்று சொல்கிறாரே என்று தானே நினைக்கிறீர்கள் காணாமல் போனவர்களை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் நிச்சயமாக இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க கிடைச்சுடுவாங்க அதனாலதான் சொல்றேன் சந்திரன் திருமண வேலைகளை இப்போது ஆரம்பித்து விடலாம் என்று நினைக்கிறேன் என்றார் பண்ணையார்.
பரந்தாமன் சந்தோசப் படுவதா வேதனைப் படுவதா என்று தெரியாமல் முகத்தை மாற்றி மாற்றி சிரித்தபடி இப்போதுதான் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு அப்பா என்று சொல்லிக்கொண்டே சந்திரனை கட்டி அணைத்துக் கொண்டான்.
நாளை காலையில் பொண்ணோட அப்பாவை வரச்சொல் அதே நேரத்தில் என்னோட நண்பன் மகன் சங்கரும் அவனுடைய மனைவியும் இங்கே வரச்சொல் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்றார் பண்ணையார்.
பரந்தாமனுக்கு மேலும் குழப்பம் அதிகமானது சங்கரையும் ரேகாவையும் எதற்கு வர சொல்கிறார் அப்பா என்று தெரியாமல் முழித்தான் அதுவும் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறாரே இதில் நமக்கு ஏதாவது இந்த முடிவில் சிக்கல் ஏற்படுமா இன்று பரந்தாமனுக்கு மீண்டும் மன குழப்பம் ஏற்பட்டது.
பொழுது விடிந்ததும் பண்ணையார் எடுக்கப்போகும் முடிவு பரந்தாமனுக்கு ஒரு வலுவான முட்டுக்கட்டை போடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....
தொடரும்.......