பெண்ணே 11
இந்த சமூகத்தில் பெண்கள்
உடல்ரீதியாக மட்டுமா துன்பப்படுகிறார்கள் கண்டிப்பாக இல்லை மன ரீதியாகவும் அதிக கொடுமைகளுக்கு ஆட்படுகிறார்கள். மென்மையான பெண்மை என்று சொல்லியே அழகுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். தனிமையில் பெண்ணை கண்டால் படித்தவன்கூட மனித மிருகம் தான். உலகில் அதிகமாக வளர்ந்த நாடுகளில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மறுக்கப்படுகிறது அதில் மூன்றாம் இடத்தை பிடித்தது மிகசிறந்த தொழில்நுட்ப நாடான அமெரிக்கதான்.
இந்தியாவும் ஆயுதபடையில் இரண்டாம் இடத்தை பிடித்து மட்டுமில்லை பெண்கள் பாலியல் துஷ்பிரயோகமத்திலும் ஐந்தாம் இடத்தை பிடித்து தலை சிறந்த நாடாக வளர்ச்சியடையும் பட்டியலில் வெற்றி நடைபோடுகிறது. அதுவும் கணவன்மார்களால் நடைபெறும் கற்பழிப்பு வன்கொடுமைகளையும் கணக்கில் எடுத்தால் இந்தியாவிற்க்கு தான் முதலிடம். என்னதான் பெண்ணியம் வீறுக்கொண்டு பேசினாலும் பெண்களை இந்த சமூகம் போகப் பொருளாக தானே வர்ணிக்கிறது. அரைகுறை அடைகள் அணிந்து பெண்களை வளைந்து நெளிய வைத்துதான் விளம்பரங்களும் தன் பிராண்ட் பெயரை பதியவைக்க வேண்டுமா? நம் நாட்டில் மட்டுமே ஒரு நாளைக்கே நூறு கற்பழிப்பு சம்பவங்கள்… இதில் குழந்தைகளும் அடக்கம்.
குற்றவாளி என்று யாரை கைகாட்டுவது. பெண்ணாய் பிறந்தது தான் தவறோ? இல்லை அரக்கர்களை ஈன்றது தான் தவறோ? கதறுகிறது பெண்மை.
"டேய் விமல் சீக்கிரம் என்கூட வா" அதிரடியாக உள்ளே நுழைந்தான் புவி.
"என்ன சார் விசியம்?" சாவகாசமாக நிமிர்ந்தான் விமலன்.
"சொன்னாதான் வருவியா? முக்கியமான விசியம் வாடா இல்ல இருக்கிற டென்ஷன்ல குரல்வளையை கடிச்சிருவேன்" அருகில் வந்து அவனை பிடித்து இழுக்கவர சிரித்துக்கொண்டே சுழல் நாற்காலியை உந்தி நகர்த்திக்கொண்டு விலகினான் விமலன்.
"ஹாஹா... கண்டுபிடிச்சிட்டேன் புவி. ஏன்னா? பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட. இப்படிதான் மிருகமா மாறிடுவ"
"டேய் சாமி மொக்கை போடாம கிளம்புடா" அவனை இழுத்துக் கொண்டு சென்றான் புவி.
காலி பிளேட்டில் விழும் எழும்பு துண்டுகளை வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தான் விமலன். வாய்க்கும் கைக்கும் சண்டையல்லவா நடத்தி கொண்டு இருந்தான் புவி வேந்தன்.
"டேய் புவி இதுதான் நீ சொன்ன முக்கியமான விசியமா?"
"நமக்கு சோறுதான்டா முக்கியம். நீ என் வாய பாக்காம சாப்பிடு" என்றவன் இன்னொரு பிளேட்டை இழுத்து விளாச தொடங்கினான்.
"எங்கடா திங்கிறது? அதான் என் பிளேட்டையும் நீ தானே உள்ள தள்ளுர…"
"கண்ணு போடாதாடா பாடி சோடா"
"டேய் புவி தட்ட மட்டுமாச்சும் மிச்சம் வைடா வாசனையாவது பிடிச்சிக்கிறேன்" அதோ பாவம் பிரியாணி பிளேட்டும் கபளிகரமானதுதான் மிச்சம்.
"நல்லா இருடா நல்லா இரு… இந்தா இதையும் நீயே தின்னு" என்று எல்லாவற்றையும் அவன் பக்கம் நகர்த்த ஒற்றை கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு உன்னலானான்.
"மெதுவாடா பக்கத்தில எல்லாரும் நம்ம ஒருமாதிரி பாக்குறாங்க…"
"யாரு பக்கத்து டேபிள்ல இருக்க காலேஜ் பொண்ணுங்களா? மாமன சைட் அடிப்பாங்களா இருக்கும்டா விமல்"
"ம்ம் ஆசைதான். நான் சொன்னது இந்த பக்கம் இருக்க பாட்டிய"
"உனக்கு பொறாமைடா" என்றவன் கைகழுவ எழுந்து செல்ல விமலனும் அவனுடன் சென்றான்.
"என்ன புவி? ஏதோ பெரிய விஷயம் போல" கையை டிசியுவில் துடைத்துக் கொண்டு கேட்க… அவனை பார்த்து கண்ணடித்து அவர்கள் டேபிளுக்கு எதிர் டேபிளை காட்டினான். அழுக்கு வேட்டி சட்டையில் உத்திராட்ச்சை மாலை அணிந்து மஞ்சள் பைகாரணும் அவன் எதிரில் ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தனர்.
விமலன் வரும்போதே கவனித்து இருந்தான் அந்த இளைஞன் மட்டும் தனியாக உண்பதை. மஞ்சள் பைகாரன் இடையில் தான் வந்திருக்கவேண்டும். புவியும் விமலனும் அவர்கள் மேல் ஒற்றை கண்ணை வைத்தவாறே பேசிக்கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் தனிதனி பில் வர இளைஞன் கை கழுவிட்டு வந்து பணத்தை வைக்க மற்றொருவன் பையை டேபிளில் வைத்துவிட்டு கைகழுவ சென்றான். அவன் சென்றதும் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு இளைஞன் வெளியேற அந்த அழுக்கு வேட்டி பணத்தை வைத்துவிட்டு ஏதுவும் நடக்காதது போல் வெளியே முன்னவன் சென்றதுக்கு எதிர் திசையில் நடந்தான்.
இருவரும் புல்லட்டில் ஏற அதை ஒரு ஆளில்லா சந்திற்க்குள் ஓட்டினான் புவி. சற்று நேரத்தில் அந்த இளைஞனை இருவர் பிடித்து வைத்திருக்க திமிறி கொண்டுஇருந்தவன் அருகில் வண்டியை நிறுத்தினான்.
"சார் இது வேற கேஸ் சார்" பக்தத்தில் இருந்த காவலர் மஞ்சள் பையை அவனிடம் பிரித்துக் காட்ட அதில் ஒரு கைதுப்பாக்கி இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். போணில் அழுக்கு சட்டையும் பிடித்துவிட்டதாக சொல்ல வண்டியை அவன் இருக்கும் இடத்திற்கு வர சொன்னவன். ஒரு காவலரை மட்டும் மீண்டும் உணவகத்திற்கு சென்று கண்காணிக்க பணித்தான்.
______________
"டைம் ஆச்சு மைலி எனக்கு பசிக்குது" கத்திக்கொண்டு இருந்தான் விஷ்ணு.
"இருங்க விஷ்ணு லொக் அவுட் பண்ணிட்டு வரேன்" அதற்குள் அவள் லண்ச் பாக்ஸை எடுத்து திறந்து பார்த்து வாசம் பிடித்துக்கொண்டு இருந்தான்.
"மைலி வா உனக்கு நான் ஒன்னு எடுத்துட்டு வந்துருக்கேன்" இருவரும் பேசிக்கொண்டே செல்ல எப்போதும் போல அதியனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.
அனைவரும் பேசிக்கொண்டும் பகிர்ந்துக்கொண்டும் உன்ன ஒரு ஹாட் பேக்கில் இருந்த சூப்பை திறந்து ஆராதனாவிடம் நீட்டினான் விஷ்ணு.
"வாவ் நீங்க செஞ்சதா விஷ்ணு?" அதில் இருந்த மட்டன் சூப்பை பார்த்து சப்புக்கொட்டினாள் அவள்.
அவளை பார்த்து சிரித்துக்கொண்டே காலரை தூக்கிவிட்டான் விஷ்ணு. அவள் ஆசையாக ஒரு குழி கரண்டியால் எடுத்து வாயருகே கொண்டு செல்லும் நேரம் அவள் பின்னால் இருந்து கேட்ட குரலில் அனைவரும் அவளை பார்க்க அவளும் திரும்பி பார்த்தாள் அதியன் தான் கையில் பாக்ஸோடு நின்றிருந்தான்.
"நானும் உங்ககூட ஜாயின் பண்ணலாமானு கேட்டேன் ஏன் எல்லாரும் ஷாக்கா பாக்குறிங்க?" அதியன் சிரிக்க எல்லோரும் எழுந்து சந்தோஷமாக "ப்லீஸ்" என்க ஆராதனாவின் அருகிலே அமர்ந்துக்கொண்டான்.
"எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்" என்றவன் விஷ்ணுவிடம் தன் பாக்ஸை கொடுத்ததும் எல்லோரும் அவனுடன் பகிர்ந்துக்கொண்டனர். எல்லோரும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்க யாரும் உணரா வன்னம் அவள் கையில் இருந்த சூப்பை பிடிங்கி கொண்டான். ஆனால் ஆராதனாவையே பார்த்துக்கொண்டு இருந்த விஷ்ணுவின் கண்களில் அது பட்டுவிட்டது அவன் அதியனை தடுக்கநினைக்க ஆராதனாவை குடிக்கவிடகூடாது என்பதற்காகவே மொத்ததையும் குடித்துவிட்டான்.
"சார் அது மட்டன்" பதட்டமாக விஷ்ணு சொல்ல அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அதியன். ஆராதனா விஷ்ணுவை கேள்வியாக பார்க்க அவன் அதியனுக்கு தெரியாமல் கன்னத்தை சொறிந்து காட்ட அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளை முறைத்த அதியன்
"முன்னாடியே சொல்ல மாட்டியா?" யாருக்கும் கேட்காமல் அவளை திட்ட திரும்பி முறைத்தாள் அவள்.
வேகவேகமாக உண்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான் அவன். ஒருபக்கம் அவனை பார்க்க விஷ்ணுவிற்கு பாவமாக இருந்தாலும் அவன் ஆசையாக அவளுக்கு கொண்டுவந்ததை அதியன் பரித்து உண்டதை நினைத்து கோபம்தான் வந்தது. அவன் உள்மனமோ "நல்லா அனுப்பவிக்கட்டும்" என்று கருவியது.
____________________
"சரி அவர ஆஃபிஸ் ரூமில் வெயிட் பண்ண சொல்லு" தன் பி.ஏவிடம் சொல்லிவிட்டு ஆஃபிஸ் ரூம் நோக்கி சென்றார் தக்ஷினாவின் தந்தை முத்துவேல்.
"சார்" கதவை தட்டிவிட்டு பி.ஏவுடன் உள்ளே வந்தவரை ஆவலாய் பார்க்க தலையை குனிந்தவரை பார்த்ததும் சோர்வாக சாய்ந்துக்கொண்டார் முத்துவேல்.
"நீ வெளில வெயிட் பண்ணு" பி.ஏவை அனுப்பிய முத்துவேல் கேள்வியாக அவரை பார்த்தார்.
"சாரி சார் இந்த டைமூம் முடியல"
"முடியாதுனு சொல்லதான் உங்ககிட்ட இந்த வேலைய கொடுத்தனா?"
"இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க சார் நாங்க டிரை பண்றோம்"
"பத்து வருசமா இததான் சொல்லிட்டு இருக்கிங்க இப்பவும் ட்ரைதான் பண்ணுபோறிங்களா?. முடியாதுனா சொல்லிடுங்க" கோபமாக இறைந்தார் முத்துவேல்.
"முடியாதுனு இல்ல சார் பட் எவிடென்ஸ்லாம் நிறைய ப்ரேக் ஆயிட்டு… பெரிய டீம் அதுக்காகவே வொர்க் பண்றாங்க"
"என்ன பண்ணுவிங்கனு எனக்கு தெரியாது உங்க ஏஜென்சில இருக்க டலன்ட்டு டிடெக்டிவ் எல்லாரையும் இதுக்கு அசைன் பண்ணுங்க. எவ்வளவு செலவானாலும் பரவால" தலையை நீவிவிட்டுக் கொண்டார்.
"ஆல்ரெடி அவங்களதான் அசைன் பண்ணிருங்காங்க சார். எல்லாரும் பெஸ்ட் அண்ட் மோஸ்ட் எக்ஸ்பிரியன்ஸ்ட்"
"அப்படியும் இம்ப்ருமெண்டே இல்லையே. சரி வேற என்ன விசியமா இங்க வந்திங்க?"
"அது சார் எனக்கு தெரிஞ்ச ஒரு டிடக்டிவ் இருக்கான் பட்…" அவர் இழுத்து நிறுத்த
"யார் அது?"
"அவன் பேரு குணமுதிதன் மாறன் சார். இப்போ எங்க இருக்கானு தெரியல ஏதோ மன்னர்கள் வரலாறு தேடி பொய்ருக்கிறதா தகவல் வந்தது. இதுவரைக்கும் பல கேஸ் சால்வ் பண்ணிருக்கான். ஆனா அவன் யாருக்கும் வொர்க் பண்றதுல்ல அவனுக்கு தோன்னா மட்டும்தான் செய்வான்"
"இப்போ என்ன வேலை செஞ்சிட்டு இருக்கான்?"
"நம்ம நாட்டிலிருந்து திருடிட்டு போண பழமை வாய்ந்த சிலையொல்லாம் தேடி நம்ம நாட்டுக்கு மீட்டுட்டு வந்துருக்கான். இப்பவும் ஏதோ மன்னனோட புதையலை தேடிதான் போயிருக்கான். அவன் இருக்கிற இடத்த கண்டுபிடிக்க சொல்லிருக்கேன் எப்படியாச்சும் இந்த இன்வஸ்டிக்கேஷனை அவன எடுத்துக்க வச்சிருங்க… அவன இம்ப்ரஸ் பண்றமாதிரி இருந்தாதான் எடுத்துப்பான் சார். காசெல்லாம் அவனுக்கு விசியமே இல்லை"
"இவன மாதிரி வித்தியாசமான ஆட்களை நிறைய நான் பாத்திருக்கேன். நீங்க அவன மீட் பண்ண மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. எனக்கு இத கண்டுபிடிச்சே ஆகனும்"
"சரி சார் அப்போ நான் கிளபுறேன்" அவர் எழுத்துக்கொள்ள முத்துவேலும் எழுந்து கரம் குவித்தார்.
_____________________

Last edited: