Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மறையாதே என் கனவே

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-20

முருகானந்தம் குடும்பம் சென்ற பின்
சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள். உள்ளே நுழைந்தவுடன் "ஜீ நாளைக்கே
மருதமலைல கல்யாணம்" என்றான்.

"நாளைக்கே வா" - வாயைப் பிளந்தான்
ஜீவா. "நிறைய வேலை இருக்கே விக்கி"
என்றான் ஜீவா.

"எதுவும் இல்லை.. எனக்கு ஒரு வேஷ்டி
சட்டை.. கௌசிக்கு ஒரு புடவை.. உங்க
எல்லாருக்கும் ட்ரெஸ்.. அப்புறம் தாலி..
ஐயர் " என்றான் தெளிவாக.

"பணம் இருக்கா டா" - ஜீவா.

"அதெல்லாம் இருக்கு ஜீ.. தேவைக்கு
அதிகமாவே இருக்கு" - விக்னேஷ்.

"சரி இப்பவே கிளம்பலாம்" என்று ஜீவா சொல்ல "ஒரு நிமிஷம்" என்றாள்
கௌசிகா.

எல்லோரும் அவளைப் பார்க்க "அப்பா..."
என்று இழுத்தாள் கௌசிகா. அப்போது
தான் வரதராஜன் நியாபகமே வந்தது
அனைவருக்கும்.

மகாலிங்கம் அய்யா உள்ளே புகுந்தார்
"விக்கா.. நீ இதைப் பத்தி வரதராஜன்
கிட்ட பேசிவிடு.. ஹாஸ்பிடல்ல இருந்து
வந்தாலும் அவனால் கல்யாணத்திற்கு
வர முடியாதேப்பா.." என்று அவரும்
குழம்பி எல்லோரையும் குழப்பினார்.

போன் போட்டு சுமதியிடம் விஷயத்தைக்
கேட்டான் விக்னேஷ். "அம்மா..
கல்யாணத்தை எப்போ வைக்கலாம்"
என்று கேட்டான்.

"இப்போ என்னடா அவசரம்.. ஒரு மாசம்
போகட்டும்" என்று சுமதி சொல்ல
விக்னேஷ் பிடிவாதமாக நின்றான்.

"எதுக்கு உனக்கு அவசரம்?" - சுமதி.

முதலில் சொல்ல வேண்டாம் என்று
நினைத்தவன்.. சொல்ல வேண்டிய
கட்டாயத்தில் சொன்னான்.
பரமேஸ்வரியின் பேச்சையும் கூறினான். சுமதியிடம் இருந்து அந்த நிமிடம் போனை வாங்கிய வரதராஜன்
அனைத்தையும் கேட்டுவிட்டார். போனில்
எந்த பதிலும் இல்லாததை உணர்ந்ந
விக்னேஷ் "அம்மா... ஹலோ.. அம்மா
கேக்குதா" என்றான்.

"கேக்குது விக்னேஷ்.. நீங்க நாளைக்குக்
கல்யாணத்தை முடிச்சிட்டு என்ன வந்து
பாருங்க" என்று வைத்துவிட்டார்.

நடந்ததை விக்னேஷ் அனைவரிடமும்
சொல்ல எல்லோரும் அமோதித்தனர்.
முதலில் தயங்கிய கௌசியும் அந்தக்
கல்யாணத்தில் அப்பா இருந்து என்ன ஆனது.. எல்லாம் விதிப்படி தானே
நடந்தது.. என்று யோசித்து சமாதானம்
ஆனாள்.

பின் எல்லோரும் சென்று புடவை.. துணி
தாலி என அனைத்தும் எடுத்தனர்.
ஐயருக்கும் விக்னேஷே சொல்லிவிட்டான். பின் மதிக்குப் பல நாளாகத் தெரிந்த டைலரிடமே ஜாக்கெட்டைக் கொடுத்தனர். பின் அதையும் அங்கிருந்தே வாங்க "உனக்கு வேறு ஏதாவது வேணுமா?" என்று கேட்டான் விக்னேஷ் கௌசியிடம்.

"இல்லையே.. அதான் எல்லாம்
வாங்கியாச்சே" என்று சொல்ல மறுபடியும் "நல்லா நியாபகப்படுத்திப் பார்" என்றான் விக்னேஷ்.

"இல்ல..." என்றாள் கௌசி.

"சரி நீ என்கூட வா" என்று கௌசியின்
கையைப் பிடித்த விக்னேஷ் "ஜீவா.. நீங்க சாப்பிடப் போறன்னு சொன்னீங்கள.. நீங்க போய் சாப்பிட்டுட்டு இருங்க.. நாங்க
வந்திடறோம்" என்று சொல்ல அனைவரும் அவர்களை விட்டுவிட்டு
அகன்றனர்.

கௌசியை அவன் கூட்டிச் சென்ற இடம்
"லாக்மீ காஸ்மெட்டிக்ஸ்" (Lakme cosmetics).. அவனும் கம்பத்திலிருந்தே
கவனித்துக் கொண்டிருந்து தான்
இருக்கிறான்.. அத்தனை காஸ்மெட்டிக்ஸ் ஆசை ஆசையாக வாங்குபவள் இப்போது ஒன்றுமே இல்லாமல் இருப்பது அவனை உறுத்தியது.

"ஏன் இங்கே" என்று தாங்கியபடியே
கேட்டாள் கௌசி.

"இதெல்லாம் நீ யூஸ் பண்றது தானே.. வா வாங்கலாம்" என்று அவளை அழைக்க அவளோ நகராமல் நின்றான்.

"இல்லடா.. நான் இதெல்லாம் இப்போ
யூஸ் பண்றது இல்லை" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"ஏன்" எனக் கேட்டான் விகனேஷ்.

"...." - என்ன சொல்லுவது என்று
தெரியாமல் நின்றாள்.

"இதெல்லாம் நீ எவ்ளோ ஆசையா
வாங்குவனு எனக்குத் தெரியதா?"
சொல்லு ஏன் வேண்டாம்" என்று
வினவினான்.

"இல்லடா.. அந்த இன்சிடென்ட் அப்புறம்
எதுவும் இதப்பத்தி எல்லாம் தோணல
அதான்" என்றாள் கௌசி
சின்னக்குரலில்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் "இங்க
பாருடி.. நீ நாளைல இருந்து வெறும்
கௌசிகா இல்ல.. கௌசிகா
விக்னேஷ்வரன்.." என்று அழுத்தமாகக்
கூறியவன் "நீ நாளைல இருந்து பழைய
மாதிரி இரு" என்று உள்ளே அழைத்துச்
சென்றான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவள்
உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றையும்
வாங்கிக் குவித்தான் விக்னேஷ்.

பின் இருவரும் சாப்பிட வர எல்லோரும்
சாப்பிட்டு விட்டு அவரவர் வீடு திரும்பினர். மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு விக்னேஷும் கௌசியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"விக்னேஷ்.." என்று அழைத்தாள் கௌசி.

"என்ன" என்பது போலத் திரும்பிப்
பார்த்தான் விக்னேஷ்.

"எதுக்கு டா.. என்னை கல்யாணம் பண்ற.. திடீரென ஏன் இந்த முடிவு" என்று கேட்டாள் கௌசிகா. அந்தக் கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான் விக்னேஷ்.

என்ன என்று சொல்லுவான்? உனக்கு
அன்று கல்யாணம் ஆன அன்று உன்
மேல் காதல் வந்தது என்றா.. (அவனைப்
பொறுத்த வரை அவள் குருவை ஏற்று
வாழ்ந்தாள் தானே). இப்போது அதைச்
சொல்லி இவள் நம்மைத் தப்பாக
நினைத்து விட்டால்? என்று நினைத்தான். ஆனால் உண்மையை மறுக்கவும் அவன் விரும்பவில்லை.

"உன்னை எனக்குப் புடிச்சிருக்க கௌசி"
என்று மொட்டையாகச் சொல்லிவிட்டான்.

"உனக்கு என்னை எப்பவுமே புடிக்கும் டா.. அது தெரியும்.. நான் கல்யாணத்தைப் பத்திக் கேட்கிறேன்" என்று விடாமல் கேட்டாள்.

"ஏன் கௌசி.. அது போதாதா நான்
உன்னைக் கல்யாணம் பண்ண" என்று
கேட்டான்.

"நம்ம குடும்பத்துக்காகத் தானே என்னை நீ கல்யாணம் பண்ற?" என்று மனதில் நினைத்ததைத் கேட்டு விட்டாள்.

"இல்ல டி.. உனக்காக" - விக்னேஷ்.

"என்ன வாழ்க்கை குடுக்கிறியா?" -
கௌசிகா.

"இல்லவே இல்லை டி.. உன்கூட
இருக்கணும்ன்னு தோணுச்சு.. உன்ன
விட எனக்கு மனசு இல்ல" என்று
சொல்லாமல் தன் காதலை சொன்னான். ஆனால் கௌசிக்குத் தான் அது புரியவில்லை. (எப்படிப் புரியும்.. இந்த விக்னேஷ் வாயைத் திறந்து சொன்னால் தானே.. எஸ் ஜே சூரியா மாதிரி பேசிட்டு இருக்கான் மாங்கா).

கௌசி மறுபடியும் ஏதோ கேட்க வர
விக்னேஷிற்கு ஜீவா போன் செய்தான்.
போனை எடுத்துக் கொண்டு அவனிடம் பேசச் சென்று விட்டான் விக்னேஷ். பின்
அவன் திரும்பி உள்ளே வர கௌசி
ஹாலில் நேற்றுப் போலவே பெட்டை
எடுத்துப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

"கௌசி.. " - விக்னேஷ் அழைத்தான்.

"ம்ம்" - என்றாள் பெட்ஷீட்டை
விரித்தபடியே.

"நாளைக்கு காலைல 6.30 டூ 7.30
முகூர்த்தம்" என்று சொன்னான்.

"ம்ம் சரி..." என்றுவிட்டுப் படுத்தாள்.

ஒரு நிமிடம் அவளை முறைத்தவனுக்கு
சிரிப்பே வந்தது. 'டேய் விக்னேஷ்.. உன்ன மாதிரி பொண்ணு எவனுக்கும் கிடைக்க மாட்டான் டா.. நீ தான் வெக்கப்படணும் போல.. இவட்ட அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது" என்று தனக்குத்தானே நினைத்துச் சிரித்தான்.

அடுத்தநாள் காலை எழுந்த இருவரும்
பரபரப்பாக கிளம்பினர். மகாலிங்கம்
அய்யா வீட்டிற்கு வர விக்னெஷும் வர
இருவரும் பேசிக்கொண்டிருந்த போது கௌசியும் வெளியே வந்தாள். நேற்று
எடுத்த சிவப்பு பட்டுப் புடவை அவளைத்
தழுவி இருக்க கையில் வளையல்..
காதில் ஒரு சின்ன ஜிமிக்கி.. மற்றும்
கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின் என்
அணிந்திருந்தாள். அவன் வாங்கித் தந்த
காஸ்மெட்டிக்ஸையும் அவள் லைட்டாகப்
போட்டிருக்க அவள் தேவைதையாகத்
தெரிந்தாள்.

வாயைத் திறந்து பார்த்துக்
கொண்டிருந்தவனிடம் மகாலிங்கம்
அய்யா கிசுகிசத்தார். "போதும் விக்கா..
தண்ணி டேன்க்க க்ளோஸ் பண்ணு"
என்று சொல்ல சுயநினைவிற்குத்
திரும்பினான். நல்லவேளை சேலை
சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்
கொண்டிருந்த கௌசி இதை
கவனிக்கவில்லை.

மூவரும் மருதமலை செல்ல அங்கு ஜெயா, சதாசிவம், ஜீவா, முருகானந்தம், மதி, வியாஹா, சுமதி, சந்தியா அவளின்
கணவன் ரமேஷ் .. என அனைவரும்
நின்றிருந்தனர். விக்ரமும் (அதான்
போட்டோகிராஃபிஸ்ல இருக்கிறவன்).

கௌசி அக்னியை வெறித்தபடியே
உடகார்ந்திருந்தாள். முதலில் நடந்தது
எல்லாம் அவள் கண் முன் வந்து சென்றது. உதட்டின் மேலும் நெற்றியிலும் விடாமல் வியர்த்துக் கொட்டியது. அவளைப் பார்த்த மதி அவளின் அருகில் சென்று கர்ச்சிப்பால் நெற்றியிலும் உதட்டிலும் ஒற்றி எடுத்து கௌசியின் கையிலேயே கர்ச்சிப்பைக் கொடுத்தாள்.

பின் ஐயர் தாலியை எடுத்துத் தர தன்
மாமன் மகள் கௌசியின் கழுத்தில்
மங்கல நாண் பூட்டி விக்னேஷ்வரன்
அவளைத் தன் மனைவியாக்கிக்
கொண்டான். மூன்றரை வருடங்களுக்கு
பின் விக்னேஷின் மனதில் எழுந்த
நிம்மிதியையும் நிறைவையும் சொல்ல
அவனுக்கு வார்த்தைகள் கிடையாது.
சூழ இருந்த அனைவரின் முகத்திலும்
அதே நிறைவு தெரிந்தது.

பின் அனைவரும் கடவுளை தரிசித்து
விட்டு கீழே இறங்கி நேராக சென்ற இடம்
வரதராஜன் இருந்த ஹாஸ்பிடல்.
மகளையும் மருமகனையும்
மணக்கோலத்தில் பார்த்த
வரதராஜனிற்கு மனம் நிறைந்தது.
இருவரும் அவரது காலைத் தொட்டு
வணங்கிக் கொள்ள தனது
ஆசிர்வாதத்தைத் தந்தார்.

பின் ஜெயாவும் சுமதியும் ஏதோ
பேசிக்கொள்ள மதியும் அவர்களுடன்
சேர்ந்து கொண்டாள். "ரைட்ரா.. ப்ளான்
ஏதோ பண்றாங்க. நாம் இதுக்குள்ள
போகமா இருக்கிறது நல்லது" என்று
தனக்குள் பேசிக் கொண்டான் ஜீவா
அவர்களை கவனித்துவிட்டு.

"அண்ணா.. இன்னிக்கு நான் உங்க கூட
இருக்கேன்" என்றார் ஜெயா தாமாக.

"சரிம்மா.." என்றவர் அயர்வாக கண்களை மூடிக் கொண்டாள்.

எல்லோரும் சொல்லிவிட்டுக் கிளம்பி
கீழே வந்தனர். நேராக ஜீவா வீட்டிற்குப்
போகலாம் என்று சொல்ல "ஏன்" எனக்
கேட்டான் விக்னேஷ். எதையோ சொல்லி சமாளித்தார் சுமதி. பின் ஜீவாவின் வீட்டை அடைய சுமதி ஜீவாவைத் தனியாக அழைத்து.. ஜீவாவிடம் பணத்தைக் கொடுத்து "போ" என்றார்.

"சித்தி..." என்று ஜீவா இழுத்தான்.

"புரியுது ஜீவா.. ஆனா சம்பிரதாயங்களை செய்து தான் ஆக வேண்டும்.. விக்னேஷிடம் கேட்டால் வேண்டாம்ன்னு சொல்லுவான்.. நீ மதியையும் கூட்டிட்டுப் போய் நான் சொன்ன மாதிரி செய்" என்றார் சுமதி.

"சரி சித்தி" என்று அவன் கிளம்பிவிட்டான் மதியைக் கூட்டிக்கொண்டு.

சந்தியாவின் கணவரிடம் நன்கு பேசிய
கௌசி சந்தியாவிடம் திரும்பவில்லை.
கௌசிக்கு அந்த அளவு அன்று சந்நியா
பேசியதில் கோபமும் ஏமாற்றமும்
இருந்தது. "கௌசி.. சாரி கௌசி..
அன்னிக்கு நான் பண்ணியது தப்பு தான்.. அன்று பரமேஸ்வரி அத்தை என்னிடம் ஏற்றி விட்டது உன்னை அப்படி பேச வைத்துவிட்டது. இருந்தாலும் சுயபுத்தி இல்லாமல் நான் பேசியது தவறு தான் கௌசி. சாரி.. என்கிட்ட பேசு" என்று தப்பை உணர்ந்து நிறை மாத கர்ப்பிணியாக சந்தியா பேச கௌசிக்கு மனம் கரைந்தது.

"சரி விடு சந்தியா.. அதை எல்லாம்
மறந்திடு.." என்ற கௌசி கொஞ்சம்
இயல்பாகப் பேசினாள் சந்தியாவிடம்.

மூன்று மணி நேரம் கழித்து ஜீவாவும்
மதியும் வர விக்னேஷோ அலுப்பில்
ஷோபாவிலே படுத்துத் தூங்கிக்
கொண்டு இருந்தான். கௌசி சுமதி..
சதாசிவம்.. சந்தியா.. ரமேஷ்..
மகாலிங்கம் அய்யாவுடனும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

பிறகு விக்னேஷை சுமதி எழுப்ப
எழுந்தவன் தூக்கக் கலக்கத்திலே எழுந்து சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தான். பின் எல்லோரும் அமர சுமதியும் மதியும் பரிமாறினர். பின் அவர்கள் இருவரும் அமர சுமதிக்கும் மதிக்கும் கௌசியும் சந்தியாவும் பரிமாறினாள். வியாஹாவுடன் விக்னேஷ் விளையாட ஜீவா ஏதோ யோசனையிலேயே இருந்தான். "ஏன்டா.. என்ன யோசனை?" என்று விக்னேஷ் தோளில் அடித்து வினவ "இல்லடா.. ஆபிஸ் யோசனை" என்று சமாளித்தான் ஜீவா.

பின் வளைகாப்பு முடிந்து விட்டதால்
சந்தியா இங்கேயே தங்க.. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான் சந்தியாவின் கணவன் ரமேஷ். பின் மதி ஏதோ கண்களால் ஜாடை செய்ய சுமதி நான் பாத்துக்கறேன் என்பது போலக்
கண்களை மூடித் திறந்தார்.

"சரி கிளம்பலாம் டைம் ஆச்சு" என்று
விக்னேஷ் எழுந்தான்.

"இல்லை விக்னேஷ்.. நான் வரல..
சந்தியா வந்திருக்கால.. அவ என்னை
இருக்க சொன்னா" என்று சொல்ல "நான் எப்போ?" என்பதைப் போலப் பார்த்தாள் சந்தியா.

சந்தியா தனியா இருக்க வேண்டாம்
என்று எண்ணிய விக்னேஷும் "சரி நீங்க காலைல முடிஞ்சா வாங்க.. இல்லைனா இங்கியே தங்கிட்டு காலைல அப்படியே ஹாஸ்பிடல் போறேன்னாலும் போங்க.. உங்களுக்கு எது சவுகரியம்ன்னு பாத்துக்கங்க" என்று சொல்லிக் கொண்டு
கௌசியையும் மகாலிங்கம் அய்யாவையும் கூட்டிக் கொண்டுக்
கிளம்பினான்.

மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு
இருவரும் வீட்டை அடைந்தனர். ப்ரௌனி வந்து இருவரின் காலையும் சுற்ற கௌசி ப்ரௌனியைத் தூக்கிக் கொஞ்சினாள். "தங்கக்குட்டி" என்று ப்ரௌனியைக் கொஞ்சி முத்தமிட்டவள் கழுத்தை நீவி விட்டுச் செல்லம் கொஞ்சினாள்.

கௌசி நிமிர விக்னேஷ் அவளைத் தான் கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தான். "என்னடா.. உள்ள போகலையா" என்று கேட்டாள்.

"சாவி வாங்குனையா?" என்று கேட்டான்
குறுஞ்சிரிப்புடன்.

"அப்போ நீ வாங்கலையா?" என்று கேட்க
விக்னேஷ் தலையில் கை வைத்தபடி
நின்றான்.

தன் அன்னைக்குப் போன் போட்டவன்
"அம்மா.. சாவி உங்க கிட்டையா?" என்று
வினவினான்

"அட ஆமாம்.." என்றவர் "சரி விக்னேஷ்..
மணி எட்டாச்சு.. இனி நீ கிணத்துக்கடவுல இருந்து இங்க வர வேணாம்.. பேசாம நம்ம மாடி அறைக்கு போய் தங்கிக்கோங்க" என்று சுமதி சொல்ல விக்னேஷிற்கு ஏதோ இடிப்பது போல இருந்தது.

"சரிம்மா" என்றவன் போனை
அணைத்தான்.

"என்ன சொல்றாங்க" என வினவினாள்
கௌசி.

"சாவி இனி வந்து வாங்கிட்டு வர
வேண்டாம் ன்னு சொல்டாங்க டி.. மேல
இருக்க ரூம்க்கு போக சொல்டாங்க"
என்றான்.

"மேல ரூம் இருக்கா என்ன?" என்று
கேட்டாள் புருவமுடிச்சுடன்.

"ஆமா டி.. சின்ன ரூம் தான்.. வா"
என்று அழைக்க கௌசி அப்படியே
தயங்கி நிற்பதைக் கண்டான். அவள்
தயங்கி நிற்பதைக் கண்டவனுக்கு
முதலில் புரியவில்லை.. சில நொடிக்குப்
பிறகே புரிந்தது. அன்றைய இரவு
அவர்களுக்கு என்ன இரவு என்று.
இருவரும் அதைப் பத்தி அவ்வளவாக
எண்ணவில்லை. சில நொடிகள்
இருவருமே சங்கடமாக உணர "கௌசி
வா.. மேல இ.. இரு.. இருக்க கட்டில்
கொஞ்சம் பெருசு தான்" என்று சின்னக்
குரலில் அழைத்தான்.

"ம்ம்" என்று கௌசி சொல்ல.. இருவரும்
வீட்டிற்கு வெளியில் இருந்த படியிலேயே
ஏறி மாடிக்குச் சென்றனர். மேலே
இருவரும் வர விக்னேஷ் சென்று
கதவைத் திறந்தான். கௌசியும்
பின்னோடு வந்து நின்றாள். விக்னேஷ்
இருட்டில் தேடிச் சென்று லைட்டைப் போட..வந்த வெளிச்சத்தில் அறையைக் கண்ட இருவருமே அதிர்ந்தனர்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-21

அறையின் கோலத்தைக் கண்ட
இருவருமே உறைந்து நின்றனர்.
விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது.
அதற்கு யார் உதவி இருக்கிறார்கள்
என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் கடித்தவன் கௌசியின் நியாபகம் வந்தவனாக அவளிடம் திரும்பினான். அவள் நின்ற கோலத்தைக் கண்டு அவன் அதிர்ந்து விட்டான்.

அறையின் கோலத்தைக் கண்ட
கௌசிக்கு பழைய நியாபகம் எழுந்தது.
பழைய கோர நினைவுகள் எல்லாம்
போட்டி போட்டுக் கொண்டு கோரமாக எழ கௌசி நடுங்கி விட்டாள். ஏனோ அந்த அறை கண் முன் வந்து நின்று அவளை மூச்சடைக்க வைத்தது. அவளை ஏதோ மரண வாசலுக்கு அழைத்துப் போவதைப் போல உணர்ந்தாள். விக்னேஷின் உருவமும் அவளுக்கு குருவின் உருவம் போலத் தெரிய அவள் மூன்றரை வருடத்திற்குப் பின்னால் சென்றாள்.

அவளின் வியர்த்த முகத்தைப் பார்த்து
விக்னேஷ் அருகில் செல்ல "வேண்டாம்
குரு.. ப்ளீஸ் என்னை விட்டிடு..." என்று
பின்னால் நகர்ந்தவள் நிலவுப்படித்
தட்டிவிட்டு கீழே விழப் பார்த்தாள்.

"கௌசி" என்று ஓடி வந்தவன் அவளை
பிடிக்க.. கௌசி அலற... நைட் நேரம்
அவள் சத்தம் போட.. அவளை உள்ளே
இழுத்து கதவை அடைத்தான்.

கதவை அடைத்ததில் கௌசி இன்னும்
பயந்து "வேண்டாம் குரு.. என்னை
விட்டிடு.. நான் என் அப்பா.. என் விக்கா
கிட்டையே போறேன்" என்று கதறியவள்
விக்னேஷின் காலில் விழ விக்னேஷ்
பயந்துவிட்டான்.

அவளை எழுப்ப "ப்ளீஸ்.. என்னைத்
தொடாதே" என்று பின்னால் நகர்ந்தாள்
கௌசி. பின் அவளைத் தோளைப் பிடித்து உலுக்கிய விக்னேஷ் "கௌசி.. நான் குரு இல்லை.. விக்னேஷ்.. நல்லாப் பாரு.. நான் விக்னேஷ்" என்று கத்தி உலுக்க கௌசிகா நினைவிற்கு வந்தாள்.

சுயநினைவிற்கு வந்தவளால் எதையுமே
யூகிக்க முடியவில்லை. விக்னேஷ்
அருகில் இருப்பதை உணர்ந்தவள்
தன்னை அறியாமல் அவனைக் கட்டிப்
பிடித்து விட்டாள். "விக்கா.. விக்கா.."
என்றுத் திக்கித் திக்கி கௌசி அழ..
அவன் அவளைச் சமாதானம் செய்தான்.

"கௌசி அழாதே.. அழாதே.." என்று
சொன்னவன் அவளை இறுக
அணைத்தான். அவனது அணைப்பில்
கொஞ்சம் சமாதானம் ஆனவள் நிதானம் பெற்று அவனிடம் இருந்து விலகினாள்.

"சா... சாரி டா" என்றாள் தலைக் குனிந்து.

"அதெல்லாம் ஒன்னு இல்லை விடு..."
என்றவன் "சரி எந்திரி மேல உட்கார்"
என்று சொல்ல கௌசியும் மேலே ஏறி
உட்கார்ந்தாள்.

பின் அறை அலங்காரங்கள்
ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்தான்.
அதுவே கௌசி பயந்திற்கு காரணம்
என்று நினைத்தவன் முதலில் அதை
எடுக்க வேண்டும் என்று நினைத்து அதை எல்லாவற்றையும் நீக்கினான்.

பின் கௌசியின் அருகில் கொஞ்சம்
தள்ளி உட்கார்ந்தவன் "கௌசி.." என்று
அழைத்தான்.

"சொல்லுடா" - கௌசிகா.

"குரு கூட நீ.." என்று ஆரம்பித்தவன் "குரு
உன்ன சந்தோஷமா வச்சிருந்தானா
கௌசி" என்று நேரிடையாகக்
கேட்டுவிட்டான்.

கௌசியால் பதில் சொல்லவே
முடியவில்லை. என்ன என்று சொல்லுவது என்றுத் தெரியமால் உட்கார்ந்திருந்தாள்."சொல்லுடி.. குரு உன்ன சந்தோஷமா வச்சிருந்தானா?" என்றுக் கேட்டான்.

கௌசியின் தலை இல்லை என்பது
போல வலமும் இடமும் ஆடியது. பழைய
நினைவுகளில் கண்ணீர் கோர்த்தது.
"என்ன ஆச்சு டி.. புடிச்சு தானே
கல்யாணம் பண்ண.. அவன் கிட்ட
பேசிட்டு தானே இருந்த" என்றுக்
கேட்டான். (டேய் விக்னேஷ் முட்டாள்.. அவ உன்கிட்ட சொன்னாளா..).

அதற்கும் இல்லை என்பது போலத் தலை ஆட்ட அவளின் தாடையை கன்னத்தோடு புடித்தவன் "என்னதான் டி ஆச்சு.. சொல்லு" என்று கோபமாகக் கேட்டான். "நீ அழுததுலையே ஏதோ தப்பா எனக்கு புரியுது கௌசி.. என்னதான் ஆச்சு டி.. சொன்னாதானே தெரியும்" என்றுக் கேட்டான்.

அவன் கண்களில் தெரிந்த பாசத்தையும்
வேதனையையும் கண்டவள் அவன்
மார்பில் சாய்ந்து (அதாவது கணவனாக
நினைத்து இல்லை.. ஏனோ பழைய
விக்காவின் உரிமை அவளுக்கு வந்தது)
அழுக ஆரம்பித்தாள்.

அவளது தலையை விக்னேஷ் வருட
அவளது அழுகை அவனின் செயலில்
இன்னும் அதிகம் ஆகியது.. "விக்கா..
அவன் ஒன்னும் ஜீவா கல்யாணத்துல
பாத்துட்டு அப்பாகிட்ட பொண்ணு
கேக்கல.. அவன் என்னோட 22nd பர்த்டே
அன்னிக்கு வெளிய போனோம் நியாபகம் இருக்கா? அங்கேதான் என்னைப் பார்த்து இருக்கிறான்"

"அங்கேயா?" என்று சற்று அதிரிந்தான்
விக்னேஷ்.

"ஆமாடா.. அவனுக்கு ஸ்கூல்லயே
என்னத் தெரியுமாம்" என்றவள்
கௌசியின் பிகேவியர்ஸை அவன்
திமிராக எண்ணியது.. மேலும்
நான்சியிடம் பேசியதை கேட்டுக்
கொண்டு அவனாக ஒன்றை நினைத்தது என எல்லாவற்றையும் சொன்னாள்.

"இதுக்கும் உன்னைக் கல்யாணம்
செய்ததிற்கும் என்ன சம்மந்தம்" என்று
குழம்பினான்.

"என் திமிரை அடக்கவாம் டா" என்றவள்
அவனிடம் இருந்த விலகி "என்னைப்
பாத்தா அப்படித் தெரியுதா விக்கா" என்று 26 வயதுக் குழந்தையாய் அழுதாள்.

அவளை அணைத்தவன் "ஏய் அப்படி
எல்லாம் இல்லை .. அப்படியே
இருந்தாலும் என்னடி தப்பு.. திமிரா
இருக்கிறதெல்லாம் தப்பில்லை டி" என்று தட்டிக் கொடுத்து விலகினான்.

"இதுக்கா டி இப்படி அழறே" என்று
கேட்டான். இல்லை என்பது போலத் தலை ஆட்டியவள் "அவன் என்னை..." என்றவள் அப்படியே வாயை மூடினாள் சொல்ல முடியாமல்.

"சொல்லுடி... என்ன? என்று பதட்டமான
இதயத்தோடு கேட்டவனுக்கு அப்போது
தான் நியாபகம் வந்தது கௌசியை
கல்யாணத்திற்கு சம்மதிக்க அவளோடு
நடந்த பேச்சு வார்த்தையில் அவள்
விர்ஜிட்டி பத்திப் பேசியது. ஒரு நிமிடம்
உறைந்தவன் கௌசியைப் பார்க்க
அவளது உதடுகள் அழுகையில் துடித்துக் கொண்டு இருந்தது

"அவன்..." என்று ஆரம்பிக்க "வேண்டாம் டி. விடு" என்றான் வேதனைக் குரலில்.

"இல்லாடா... அவன் என்னை... ஹீ
ஃபோர்ஸ்ட் மீ டா.. என்ன இஷ்டம்
இல்லாமல் என்னை" என்று
ஆரம்பித்தவள் தாங்க முடியாமல்
விகானேஷின் மடியில் படித்து கதறினாள். "ஒரு பொண்ண எப்படி எல்லாம் கொடுமை படுத்தக் கூடாதோ
அதெல்லாம் பண்ணான் டா.. என்னால
அதை வெளில சொல்லக் கூட
முடியாதுடா.. என் உடம்புல இன்னும்
சிலதெல்லாம் தழும்பா இருக்குடா" என்று அவன் வயிற்றைக் கட்டிக் கொண்டு கதறி வாய்விட்டு அழுதவளைக் கண்டு விக்னேஷிற்கு மனம் வலித்தது.

ஏன்டா கேட்டோம் என்று இருந்தது
விக்னேஷிற்கு. அவள் சொல்லி
அழுவதை சகிக்கவும் முடியவில்லை. குரு அவளைப் பண்ணியக் கொடுமையை நினைத்தவனுக்கு தானும் இதில் தவறு செய்துவிட்டோம் என்று தோன்றி அவன் மனசாட்சி அவனைக் குத்தியது. அவன் யோசிக்குப் போதே கௌசி மேலே தொடர்ந்தாள்.

"எனக்கு அடுத்த நாள் தான் தெரிஞ்சது
அவன் சைக்கோ-ன்னு" என்று கௌசி
சொல்ல விக்னேஷிற்கு தலையே
சுற்றியது. ஏதோ சினிமா பார்ப்பது போல இருந்தது அவனிற்கு.

"ஏன்டி.. இவ்வளவு நடந்திருக்கு..
எங்ககிட்ட சொல்லிற்கலாம்ல.. நான்
எல்லாம் உன்ன வந்து கூட்டிட்டு
வந்திருப்போமேடி" என்றவனுக்கு
கண்களில் நீர் கோர்த்தது.

"இல்லடா.. அப்பாக்கு ஏற்கனவே சுகர்..
நீயும் கனடால இருந்து வந்திருவே..
அப்பறம் அத்தை மாமா அவ்வளவு
சந்தோஷமா என்னை அனுப்பி வச்சாங்க டா.. எல்லாதுலையும மண் அள்ளி போட நான் விரும்பலை. ஆனா அந்த நாலு நாள் எனக்கு நரகம் விக்கா.. கொஞ்ச நாள் இருந்திருந்தா நானே தானாக செத்துப் போயிருப்பேன் டா" என்று அவள் பேச அவளைத் தன் மடியில் இருந்து எழுப்பியவன் அவளை அணைத்தான்.

"ப்ளீஸ் கௌசி" என்று கெஞ்சியவன்
"இதுக்கு மேல எதுவும் சொல்லாதே டி.."
என்று அவளை மேலும் தன்னோடு
இறுக்கினான்.

"கௌசி... இதெல்லாம் தெரியாம உன்ன
அடிச்சிட்டே டி.. அப்புறம் நீ ஹர்ட் ஆகற
மாதிரியும் பேசிட்டேன்.. ரொம்ப சாரி டி..
அந்த குருவை மற.. அப்படி இப்படி ன்னு
லூசு மாதிரி பேசிட்டேன்.. தயவு செய்து
என்ன மன்னிச்சிரு டி.." என்று தன்
மன்னிப்பை அவளிடம் யாசித்தான்.

"என்னடி பதிலே பேச மாட்டிறே?" -
விக்னேஷ்.

வேற ஒரு பெண்ணாக இருந்திருந்தால்
அவன் கேட்ட மன்னிப்பிற்கு அவனை
மன்னித்திருப்பாள்.. ஆனால் இது
கௌசிகா அல்லவா.. விக்னேஷ்
அவளைப் பார்க்க இடது கன்னத்தில்
அறைந்தவள் "இது குருவை கல்யாணம்
பண்ண சொல்லி என்ன கேட்டியே
அதுக்கு" என்றாள்.

பின் வலது கன்னத்தில் அறைந்தவள்
"இது என்னை ஜீவா வீட்டில்
அறைந்ததிற்கு" என்றாள் சிறுபிள்ளை
போல முகத்தைக் கோபமாக வைத்துக்
கொண்டு.

"கௌசி.." என்றான் விக்னேஷ் அவளை
அணைத்தபடியே. ஏதோ அவள்
அறைந்தது கூட அவனுக்கு சுகமாக
இருந்தது.

"சொல்லு" - கௌசி.

"ஐ லவ் யூ டா கௌசிக்" - என்று அவளை
அணைத்து அவளின் கழுத்தில்
புதைந்தான். பல வருடங்களுக்குப் பிறகு
விக்னேஷிற்கு பழைய குறும்பு எட்டிப்
பார்த்தது. கௌசியுமே விக்கா என்று
ஆரம்பித்திருந்தாள்.

அவன் சொன்ன வார்த்தையில்
கௌசியின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்தது. அவனிடம் இருந்து விலக எண்ணி கௌசி விலகப் பார்க்க "ப்ளீஸ்.. டூ மினிட்ஸ்" என்றான்.

தானாக அவளை விக்னேஷ் விட
"எதுக்கு இப்போ இந்த ஐ லவ் யூ" என்று
கேட்டாள்.

"ஐ லவ் யூ எதுக்கு சொல்லுவாங்க..
எனக்கு உன்னப் புடிச்சிருக்கு" என்று
தோளைக் குலுக்கி பதிலளித்தான்.

"ப்ளீஸ் டா.. நீ ஒன்னு பாவப்பட்டு சொல்ல வேண்டாம்" என்று கூறினாள் கௌசிகா கூம்பிய முகத்துடன்.

"இல்லை டி.. சத்தியமா ஐ லவ் யூ"
என்றான் அவள் தலை மேல் தன்
கையை வைத்தபடி. கௌசி
குழப்பமாகவும் சந்தேகமாகவும்
அவனைப் பார்க்க அவளின் இரு
கன்னத்தைப் பிடித்துத் தாங்கியவன்
"சீரியஸ்லி டி.. ஐ லவ் யூ.." என்றவன்
அவளின் நெற்றியில் முத்தத்தைத்
தந்தான்.

பிறகு நகர்ந்து உட்கார்ந்தவன் "கௌசி..
இப்போதைக்கு உனக்கு இதுல எல்லாம்
விருப்பம் இல்லைன்னு தெரியும்.. நானும் உன்ன கம்பெல் பண்ணல.. காலம் தன்னால எல்லத்தையும் மாத்தும்-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்குடி.." என்றவன் "பழசு எல்லாத்தையும் மறந்திடு கௌசி..
எதையும் நினைக்காம படுத்துத் தூங்கு..
இனி எல்லாம் நன்மைக்கே" என்று
பேசியவன் பெட்டின் ஒரு பக்கம்
தலையணையைப் போட கௌசி
அப்படியே உட்கார்ந்து அவனைப்
பார்ப்பதைக் கண்டான்..

"ஏன்டி.. இப்படிப் பாக்கறே.." என்று
கௌசியிடம் கேட்டான்.

"இல்ல.. மூணு நாளைக்கு முன்னாடி
என்கிட்ட கம்பத்துல எப்படி பேசுனே..
இப்போ எப்படி பேசறே" என்று கௌசிக்க யோசித்தபடியே அவனிடம் கேட்க "எதையும் குழப்பிக்காம தூங்குடி.." என்று அவன் சொல்ல அவள் பெட்டின் ஒரு பக்கம் வந்து படுத்தாள். (அப்போதே
விக்னேஷ் பேசி இருக்கலாம் அவளைக்
காதலித்ததைப் பற்றி). பின் விக்னேஷும் லைட்டை அணைத்து விட்டு வந்து ஒரு பக்கம் படுக்க அன்றைய அலுப்பில் கௌசிக்கு சீக்கிரமே கண்களைக் கட்டியது. ஆனால் ஜீவாவின் வீட்டில்
தூங்கியதாளோ என்னவோ
விக்னேஷிற்குத் தூக்கம் வரவில்லை.

மனதில் கௌசி சொன்னதே அவன்
கண்ணில் வந்து வாட்டியது. அவளிடம்
அவன் காட்டாவிட்டாலும் மனதில்
சொல்ல முடியாத வேதனை எழுந்தது.
குருவின் வீட்டில் அவனால் அவள் பட்ட
நரக வேதனையை நினைக்கவே
இவனிற்கு நெஞ்சமெல்லாம் அதிர்வாக
இருந்தது. அதுவும் கௌசி "இன்னும்
சிலது என் உடம்பில் தழும்பாக இருக்கு"
என்று சொன்னது அவனை நடுங்கச்
செயத்து. தழும்பு விழும் அளவு என்றால்
எந்த அளவிற்கு இவளை அவன்
கஷ்டப்படுத்தி இருப்பான். செத்தவனை
மறுபடியும் தோண்டி எடுத்து கூறு போட
விக்னேஷின் மனம் கொதித்தது.
எவ்வளவு தைரியமாக இருப்பவளை
அவன் மணந்து ஆட்டி.. மிரட்டி தன்னுடன்
இருக்க வைத்திருக்கிறான் என்று
நினைத்தவனுக்குத் தன் தலை நரம்புகள் எல்லாம் கோபத்தில் புடைத்தது. காதில் கேட்கக் கூட முடியாத கெட்ட வார்த்தைகளால் குருவைத் திட்டிக் கொண்டு இருந்தான் விக்னேஷ். பின் அவனும் அன்றைய நாளை இன்னொரு முறை யோசித்துப் பார்த்தபடியே கண்களை மூடினான்.

அடுத்த நாள் காலை விக்னேஷ் எழ
கௌசி அருகில் இல்லை.. வெளியே
வந்தவனின் முகத்தில் வெயில்
நன்றாகவே அடித்தது. அவன் கீழே செல்ல குடும்பமே கூடி இருந்தது கௌசி உட்பட. (ஹாஸ்பிடலில் இருக்கும் ஜெயா
வரதராஜனைத் தவிர). தன்
அன்னையையும் ஜீவாவையும்
முறைத்தவன் "ஜீ ஒரு நிமிடம் உள்ள
வாயேன். ஒரு பேப்பர்ஸ் பாக்கணும்"
என்றுவிட்டு அவன் அறைக்குள் நுழைய
ஜீவா அவன் பின்னே சென்றான்.

ஜீவா வந்தவுடன் கதவை சாத்திய
விக்னேஷ் அவனின் மீது போர்வையை
போட்டு மூடி நேற்று அவன் செய்த அறை
அலங்காரத்திற்கு விக்னேஷ் பூஜை
நடத்தினான். "டேய் டேய் வலிக்குது டா
விக்கி" என்று கூற அவனை விட்டான்
விக்னேஷ்.

"நேத்து ஏன்டா அப்படி பண்ணே" -
விக்னேஷ்.

"டேய் எல்லாம் சித்தி தாண்டா.. நானாக
எதுவும பண்ணல புரிஞ்சுக்க.." - ஜீவா
என்றான் விகனேஷ் பதம் பார்த்த தன்
முதுகைத் தேய்த்த படி.

"என்கிட்ட முதலே சொல்லி இருக்கலாம்ல ஜீ" - விக்னேஷ் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி.

"இல்லடா.. சம்பிரதாயம் கரெக்டா
நடக்கணும்னு சொன்னாங்க சித்தி..
எனக்கு தெரியும்.. உனக்கு கௌசிக்கும்
தெரிஞ்சா இப்ப இருக்க சூழ்நிலைல
ஒத்துக்க மாட்டிங்கன்னு.. பட் என்னால
சித்திய சமாளிக்க முடியல டா.. சரி நீ
எப்படியும் சமாளிச்சுருவே ன்னு நினைச்சு தான் பண்ணேன்" என்றவன் "கௌசி எதுவும் உன்ன தப்பா நினைக்கல-ல" என்று வினவினான்.

"அதெல்லாம் இல்ல டா.. ஆனா கொஞ்சம் பயந்துட்டா.. அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு தூங்க வச்சேன்" என்றான் விக்னேஷ்

"எவ்வளவு வயசாச்சு.. ஆனா இன்னும்
நம்ம வியாஹா மாதிரி தான் டா
விக்கி அவ" - ஜீவா.

"ஆமா டா" - என்ற விக்னேஷின் உதட்டில்
நிறைந்த புன்னகையை ஜீவா கவனிக்கத் தவறவில்லை.

பின் விக்னேஷ் கிளம்பி வெளியே வர
அனைவரும் அமர்ந்து உண்டனர். "வரது
தாத்தா எப்போ வருவாங்க?" என்று
வியாஹா தன் அன்னை ஊட்டி விட்ட
பணியாரத்தை முழுங்கியபடியே கேட்டாள்.

"ஆமாம் விக்கி.. எப்போ டிஸ்சார்ஜ்?"
என்று ஜீவா.

"இன்னும் ஒரு ஆறு நாள் தான்.. அப்புறம்
வரது தாத்தா வந்திருவார்" என்று
வியாஹாவைப் பார்த்துச் சொன்ன
விக்னேஷ் ஜீவாவைப் பார்த்து சிரித்தான். "இவன் என்ன ஏதோ வித்தியாசமாத் திரியறான்" என்று ஜீவா யோசிக்க பின் பேச்சுக்கள் மாறி வேறு திசையில் சென்றது.

"கௌசி கிளம்பு" என்றான் விக்னேஷ்.

"எங்கே?" என்று சாப்பிட்டு முடித்து வந்த
கௌசி கையைத் துடைத்த படியே
கேட்டாள்.

"அதான்.. நம்ம ஸ்டியோக்கு.. நீதான
ஏதாச்சும் வேலைக்கு போகணும்ன்னு
சொன்ன.." என்றான்.

"ம்ம் சரி இரு.. ஒரு பத்து நிமிஷம்.. ரெடி
ஆகிட்டு வரேன்" என்ற கௌசி உள்ளே
சென்றுவிட்டாள். சுமதியோ மதியம்
ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போக
வேண்டிய சாப்பாட்டை செய்ய சமையல்
அறைக்குள் புகுந்தார்.

கௌசி அறைக்குள் நுழைந்த இரண்டு
நிமிடத்தில் விக்னேஷும் அறைக்குள்
நுழைந்தான். (அப்போதே
நுழைந்திருப்பான்.. ஆனால் ஜீவா.. மதி..
எதாவது நினைப்பார்கள் என்றுதான்
இரண்டு நிமிடம் கழித்து சென்றான்..
இப்போ மட்டும் நினைக்க மாட்டாங்களா
டா விக்கி... ). பின் ஜீவா விக்னேஷ்
சென்ற திசையைப் பார்த்து விட்டுச்
சிரிக்க மதியோ ஜீவாவின் காதைப்
பிடித்துத் திருகி "அங்க என்ன பார்வை..
எதோ நீங்க பண்ணாததை விக்னேஷ்
பண்ணப் போற மாதிரி.. அவங்களே
என்ன நிலைமைல இருக்காங்களோ"
என்று ஜீவாவின் மணையாள் காதைத்
திருக வியாஹாவும் சேர்ந்து கொண்டாள் அன்னையுடன் காதைத் திருக.

"அய்யோ.... மை டூ பாப்பூஸ்.. விடுங்க" என்று விலகியவன் மதியின் அருகில்
குனிந்து "நல்ல நிலைமை தான் மதி..
சர்வீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணனும்னு
நினைச்சேன்.. ஆனா தானா விக்னேஷ்
ஸ்டார்ட் பண்ணிருவான் பாரு" என்று
சொல்ல.. மகிழ்ச்சியில் அப்படியா ஒரு
கண்களை விரித்த மதியின் அழகில்
ஜீவாவின் மதி அவளை ரசித்தது.
கணவனின் பார்வையை உணர்ந்தவள்
கணவனின் தலையில் நறுக்கெனக்
கொட்டிவிட்டுப் போனாள்.

உள்ளே விக்னேஷோ கௌசியுடன்
வாதாடிக் கொண்டு இருந்தான். "நான்
கிளம்பிட்டேன்" என்று நின்றவளைப் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

"ஏய் என்னடி இது..?" - விக்னேஷ்
எரிச்சலாக.

"ஏன்டா.. இந்த சேரி நல்லா இல்லையா?"
என்று தன்னைத் தானே கண்ணாடியில்
பார்த்தபடிக் கேட்டாள்.

"அதில்லை.. என்ன முகத்துல எதுமே
இல்ல.. அந்த டின் டின்னா போடுவள அது எங்க?" என்று வினவினான்.

"அது..." என்று கௌசி இழுக்க "நீ உட்கார்" என்றவன்.. அனைத்தையும் எடுத்து வந்து அவள் முன் வைத்தான். முதலில் லிப்ஸ்டிக்-ஐ எடுத்தவன் அவள் இதழ் நோக்கிக் குனிந்து லிப்ஸ்டிக்-ஐ
பொறுமையாக அப்ளை செய்தான்.

கௌசி அவனையே கண்களைக்
கூர்மையாக்கிப் பார்க்க "ஏதோ
கேக்கனும்ன்னு தோணுதுல்ல.. கேளு"
என்றான் விக்னேஷ்.

"இல்ல.. இதெல்லாம் பண்ணி விடறையே.. என்ன புருசன் ஆகிட்டன்னு காட்றியா?" என்று கேட்டாள் உதடு வளைந்து நக்கலுடன்.

லிப்ஸ்டிக்-ஐ அவள் உதட்டில் இருந்து
எடுத்து அவளைப் பார்த்தவன் "ஆமா..
ஆனா இன்னொன்னு சேத்திக்கோ.. நான் உன்னோட பழைய விக்காவா.. நீ
என்னோட பழைய கௌசிக்-ஆ முழுதாக
மாறுவதற்கு தான் வெயிட் பண்ணிட்டு
இருக்கேன்" என்றான் பொறுமையாக
அவள் கண்களைப் பார்த்து.

அவனது பதிலில் உறைந்து அவனையே
சில நொடிகள் பார்த்தவள் "போதும்
போதும்.. நீ இவ்வளவு ஸ்பீடா லிப்ஸ்டிக்
போட்டு விட்டா.. நாளைக்கு தான் நம்ம
ஸ்டியோ போவோம்.. நான் எல்லாம்
பண்ணிக்கறேன்" என்றாள் கௌசி. பின்
அவன் ரூமின் ஓரத்தில் நின்று
கொண்டான்.

கௌசி ரெடி ஆகிக் "ஓகே வா" என்றுத்
திரும்பிக் கேட்க.. விக்னேஷ் முறைத்தான். "ஹம்ம்.. இன்னும் என்ன அதான் எல்லாம் போட்டாச்சே" என்று கௌசி சொல்ல விக்னேஷ் இடுங்கிய விழிகளுடன் கௌசியைப் பார்த்தான்.

திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தவள்
மறுபடியும் திரும்பி விக்னேஷைப்
பார்த்தாள். அவன் பார்வை பதிந்த
இடத்தை உணர்ந்தவள் அந்த ட்ரெஸிங்
டேபிள் முன்னாள் இருந்த குங்குமச்
சிமிலைத் திறந்து குங்குமத்தை எடுத்து
வகிடிட்டாள். ஏனோ கௌசிக்கு மனம்
லேசாய் இருப்பதைப் போல இருந்தது.
திரும்பி விக்னேஷைப் பார்க்க "போலாம்" என்று புன்னகை சிந்தியவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த கௌசியைப் பார்த்த
அனைவரும் தானாய் வாயைப்
பிளந்தனர். வியாஹாவோ சித்தியின்
அழகில் மயங்கி அவளிடம் ஓடினாள்.
"சித்தி.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
இன்னிக்கு" என்றவள் தூக்கு என்பது
போல கைகளைத் தூக்கிக் காட்ட கௌசி
வியா குட்டியைத் தூக்கினாள்.

"கண்டிப்பா தானா ஸ்டார்ட் ஆகிடும் ஜீவா" என்று மதி தன் கணவன் ஜீவாவின் காதில் கிசுகிசத்தாள். பின் அனைவரும் கிளம்ப அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-22

ஒரு வாரம் கடந்தது.. வரதராஜன்
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழு நேர ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். என்னதான் விக்னேஷுடன் ஸ்டியோ சென்று வந்தாலும் தந்தையை கவனித்துக்கொள்ளத் தவறவில்லை
கௌசிகா.. கடமையாக அல்லாமல்
அக்கறையாக அவரை விழுந்து விழுந்து
கவனித்தாள் கௌசி. சுமதியும் "ஏன்
கௌசி அங்க வேலை செஞ்சிட்டு
வந்துட்டு நீ இங்க செய்யணுமா.. டயர்டா
இருப்பல விடு.. நான் பாத்துக்கறேன்"
என்று சுமதி எவ்வளவு முறை சொல்லியும் அவள் கேட்கவில்லை.

கல்யாணம் ஆன அடுத்த தினத்தில்
இருந்து விக்னேஷ் அறையிலேயே
கௌசியும் தங்க ஆரம்பித்தாள்.
கல்யாணம் ஆன அடுத்த நாள்
அறைக்குள் நுழைந்த விக்னேஷ் கௌசி
அவனுக்கு முன் உறங்கிக்
கொண்டிருப்பதைப் பார்த்தான். கட்டிலின் மறு பக்கம் சென்று படுத்தவன் உறங்க ஆரம்பித்தான். நள்ளிரவில் தன் மீது ஏதோ இருப்பதை உணர்ந்தவன்
கண்களைத் திறக்க கௌசிதான் அவன்
அருகில் படுத்து அவனைக் கட்டி
இருந்தாள். கம்பத்தில் தனிக் கட்டிலில் படுப்பவள் எப்போதும் தலையணையைத் கட்டியபடியே தூங்கிய பழக்கம் தூக்கத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து விக்னேஷை தலையணையை என்று நினைத்து அணைக்க வைத்தது.

ஒரு நிமிடம் மூச்சடைத்தது விக்னேஷிற்கு. அவன் மட்டுமே உபயோகப்படுத்த வாங்கியக் கட்டில் என்பதால் கொஞ்சம் இடம் கம்மியாகத் தான் இருந்தது. அதனால் அவனால் தள்ளியும் படுக்க முடியவில்லை. இனித் தள்ளிப் படுத்தால் கீழே தான் விழ வேண்டும் அவன். அவனைக் கட்டி கழுத்தில் வளைவில் கௌசி முகம் புதைத்திருக்க அவளின் மூச்சுக்காற்று அவனின் கழுத்தில் பட்டு அவனை சித்தம் கலங்கச் செய்தது. கைகளை இறுக மூடியவன் தன் இளமை
உணர்வுகளுக்கு சங்கிலி போட்டுக்
கட்டினான். கௌசி முன்னால் பட்ட
கஷ்டம் கண் முன் வர அவன் உணர்வுகள் அடங்கியது உண்மை தான். அப்புறம் அவனுக்கு எங்கே தூக்கம் வரும்.. மூன்று மணி வரை முழித்தே கிடந்தான். மூன்று மணிக்குப் பிறகு கௌசி அவனை விட்டுத் தானாக விலக தூக்கம் அவன் கண்களைத் தழுவியது.

அடுத்த நாள் ஸ்டியோவில்
ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தான் விக்னேஷ் கௌசிக்கு.
கௌசியை மேற்பார்வை பார்க்க
வைத்தவன் சில அடிப்படையில்
விஷயங்களைக் கற்றுத் தந்தான்.
விக்ரமிடமும் சொல்லி வைத்திருந்தான்.
பிறகு ஆர்டர்ஸ் அன் ஆட்ஸ் வரும் போது
எப்படிப் பேசணும்.. எந்த மாதிரிப்
பேசினால் கஸ்டமர்ஸ்க்குப் பிடிக்கும்
என்று ஒன்றையும் மிச்சம் வைக்காமல்
சொல்லித் தந்தான். எல்லாவற்றையும்
கரெக்டாகக் கேட்டுத் தலை ஆட்டினாள்
கௌசி.

மேலும் ஸ்டியோவில் விக்ரமிடம் நல்ல நட்பு ஏற்பட்டது அவளுக்கு. விக்ரமிற்கும்
கௌசியைப் பற்றி அரைகுறையாகத்
தெரியும்.. அதுவும் மகாலிங்கம் அய்யா
எப்போதோ சொன்னதை வைத்து..
ஆனால் அவன் மேலே எதையும் கேட்டு
ஆராயவில்லை. (நாட்டுல விக்ரம் மாதிரி
பல பேர் இருந்துட்டா பிரச்சினையே
இல்லைதான்).

"கௌசி.. உள்ள போங்க" என்றான்
விக்ரம் திடீரென.

வேலையில் மூழ்கி இருந்தவள் இவனுக்கு என்ன ஆச்சு திடீரென என்று விக்ரமைப் பார்க்க அவனோ கௌசியை உள்ளே போ என்பதைப் போல சைகை செய்தான். சரி என்று ஆபிஸ் ரூம் உள்ளே சென்று உட்கார்ந்தவள் அங்கு இருந்த சில செய்தித்தாளை புரட்டினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத்
திரும்பியவள் விக்ரம் நிற்பதைக்
கண்டாள். "ஸாரி கௌசி.. இப்போ வந்த
அந்த நாய்(கஸ்டமர்) ஒரு மாதிரி.. அவன்
பார்வையே சரி இருக்காது.. அதான்"
என்றவன் "இப்போ வாங்க" என்று
அழைத்தான்.

"அவன் அப்படி என்று உனக்கு.." என்ற
கௌசி நிறுத்தி.. "நீ வா போ ன்னே பேசு விக்ரம்" என்றாள். அவனின்
பார்வையிலும் பேச்சிலும் இருந்த
கண்ணியத்திலேயே அவள் அப்படிச்
செய்தது.

"அவன் அப்படி என்று உனக்கு எப்படித்
தெரியும் விக்ரம்" என்று பாதியில் விட்டக்
கேள்வியைக் கேட்டாள்.

"அவன் என்னையவே ஒரு மாதிரி தான்
பாக்கிறான்" என்று வெளிப்படையாக
முணுமுணுக்க கௌசிக்கு சிரிப்பு வந்தது.

"என்ன உன்னையவா" என்று
குறுஞ்சிரிப்புடன் கேட்டாள் கௌசி.

"அதான் பாரேன்.. ஒரு பொண்ணு பாத்தா கூட நியாயம் இருக்கு" என்றான்
கம்யூட்டரில் வேலை செய்த படியே சிரிப்பு மாறாமல்.

"இல்ல கௌசி.. அவன் பார்வை
யாரையுமே சரியா பாக்காது.." என்றவன்
அங்கு கூட்டிப் பெருக்க வந்த ஆயாவிடம்
"ஆயா இங்க வாங்களேன்" என்று
அழைத்தான்.

"இப்போ ஒரு சொட்டையன் வந்துட்டுப்
போனான்ல... அவன் எப்படி" என்றுக்
கேட்டான்.

"அந்தக் கட்டைல போறவனா.. அவன்
தலைல இடி விழுந்தா கூட வழுக்கி கீழ
உழுந்துறும் தம்பி.. அந்தத் தலைய
வச்சிட்டு அவன் பாக்கற பார்வை
இருக்கே யப்பே..." என்றவர் "அவன்
கண்ணுல கொள்ளிய வைக்க" என்று
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு போனார்.

அந்த ஆயா நகர்ந்த பின் விக்ரமும்
கௌசியும் வயிற்றைப் பிடித்துக் வயிறு
வலிக்கக் கொண்டு சிரித்தனர்.
"பாத்தியா.. நம்ம ஆயாவைக் கூட விட
மாட்டிறான்" என்று சொல்ல இருவரும்
சிரித்த படியே வேலையைச் செய்து
முடித்தனர்.

பின் வெளி வேலையை முடித்துக்
கொண்டு விக்னேஷ் வர "வா..
சாப்பிடலாம்" என்று அழைத்தாள் கௌசி எதையோ தேடியபடி.

"இல்லடி.. வெளில இன்னொரு வேலை
இருக்கு" - விக்னேஷ் தனது ட்ராவில்

"பத்தே நிமிஷத்துல என்ன ஆயிர போது"
- கௌசிகா.

"அட நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்"
என்றான் விக்னேஷ்.

"மணி இப்பவே இரண்டரை டா" என்று
சொல்ல விக்னேஷிடம் பதில் இல்லை.
கௌசிக்குக் கோபம் வந்தது.

"இப்போ நீ வரப்போறியா இல்லையா?" -
என்று கௌசி குதிக்காதக் குறையாகக்
கேட்டாள்.

"அம்மா தாயே.. போய் எடுத்து வை டி..
வரேன்" என்றவன் கையைக் கழுவச்
சென்றான்.

பின் அவன் வர அவளுக்குப்
பரிமாறினாள். "நீ சாப்பிட்டையா?" என்று
விக்னேஷ் கேட்க.. "ம்ம்" என்பது போலத்
தலை ஆட்டினாள். அதற்குள் ஏதோ
ஃபைல் எடுக்க உள்ளே நுழைந்த விக்ரம்
விக்னேஷைக் கண்டு "என்னடா..
அதிசயமா இருக்கு.. சாப்பிடலாம்
செய்யறே" என்றான். கௌசிக்கு இந்த
விக்ரம் என்னக் கேனத்தனமா பேசறான்.
ஒரு மனுஷன் சாப்பிடத் தானே செய்வான் என்று நினைத்தாள்.

விக்னேஷிடம் கேள்வியை வீசிவிட்டு
கௌசியிடம் திரும்பிய விக்ரம் "இந்த
மாதிரி டெய்லியும் பண்ணு கௌசி..
மதியம் வேலை வேலை என்று சாப்பிடவே மாட்டான்.. இந்த மாதிரிப் பிடித்து வைத்துக் கொள் இவனை" என்று தன் பேச்சை முடித்தவன் ஃபைலை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.

அவன் போன பின் கௌசி பொறிந்து
தள்ளி விட்டாள் விக்னேஷை.. "உனக்கு
எங்கு இருந்து இத்தனை பழக்கம் வந்தது.சிகரெட் ஒரு நாளைக்கு பத்துக்கு மேல போகுதுன்னு பாத்தா.. மதியமும் சாப்பிடுவதில்லை போல.. அப்படி சாப்பிடாமல் சம்பாரித்து என்ன செய்யப் போறே நீ.. இனிமேல் இதை எல்லாம் விடற வழியைப் பார்" என்று திட்டிக் கொண்டே வேலைகளை விக்னேஷ் எதிரில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

தன் எதிரில் இருப்பவளையே பார்த்துக்
கொண்டு சாப்பிட்டு முடித்தவன்
எந்திரித்து கையைக் கழுவச் சென்றான்.
பின் வந்து தான் சாப்பிட்ட பாக்சை அவன் எடுக்க "நான் எடுத்து வச்சிடறேன்.. நீ போ" என்று கௌசி வர அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன் "நீ என் மனைவி தான் இல்லைன்னு சொல்லல.. ஆனா இந்த வேலை எல்லாம்.. அதாவது நான் சாப்பிட்ட பாக்சை நீ எடுக்கிறது எல்லாம்
வேண்டாம் டி.. நான் சாப்பிட்ட பாக்சை
நானே எடுப்பேன்" என்று சொல்லிவிட்டுப் போக கௌசிக்கு அவன் செயல் பெருமிதமாக இருந்தது.

காலம் மாறினாலும் நம் ஆண்கள்
அப்படியே நிற்பதை அவள் கண்டு
இருக்கிறாள். ஏன் அவள் பார்த்தவரை
சிலர் இந்த மாதிரி சொல்லி அவள்
பார்த்ததில்லையே.. இன்னும் தனக்கு
சமமாக வந்திடக் கூடாது என்று
நினைக்கும் முட்டாள்கள் இன்னும்
இருக்கத்தானே செய்கிறார்கள். அதில்
விக்னேஷ் தன்னை இங்கு கூட்டி வந்து
எல்லாம் கற்றுத் தருவது என எல்லாம்
அவளை பெருமை அடையச் செய்தது.
அன்று அவளின் மனதில் புதைந்திருந்த
காதல் எழத் துளிர் விட ஆரம்பித்தது.

அவள் சிந்தனையில் இருக்கும் போதே
உள்ளே வந்த விக்னேஷ் "கௌசி.. " என்று அழைத்தான்.

"சொல்லுடா.. " என்று திரும்பினாள்.

"அடுத்த வாரம் ஒரு எம்.எல்.ஏ வீட்டுக்
கல்யாணம் இருக்கு.. ஸோ நீ போய்
எல்லாம் கவனிச்சுக்க" என்றான் விக்னேஷ் சாதரணமாக.

"நானா... " என்றாள் விழியை விரித்து.

"ஆமா.. நீதான்" என்றான் தன் பைக்
சாவியை எடுத்த படி.

"எனக்கு எதுவுமே தெரியாது டா..
எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் வேற.. நான் வேற மேரேஜ்க்கு போயிக்கிறேனே" என்று கௌசி சொன்னாள்.

"நான் காலைல சொன்ன மாதிரி பண்ணு.. அதுவும் இல்லாமல் விக்ரம் உன்கூட வருவான்" என்றான் விக்னேஷ்.

"டேய்ய்... ஆனா" என்று கௌசி
ஆரம்பிக்க விக்னேஷ் உள்ளே புகுந்தான்.

"மிஸஸ். கௌசிகா.. நான் உங்க
முதலாளி.. நான் சொல்றத செய்றது
தான் உங்க வேலை" என்று விக்னேஷ்
முறுக்கிக் கொண்டு சொன்னான்.

விடுவாளா நம்ம புள்ள.. "சரிங்க முதலாளி ஸார்" என்றவள் அவனை மிஞ்சிய முறுக்கலோடு அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் தனக்குள்ளேயே விக்னேஷைத் திட்டினாள். வெளியே வந்த விக்னேஷ் "விக்ரம் நான் கிளம்பறேன் அந்த துணிக்கடை ஆட் விஷயமா" என்றவன்... கௌசியை ஓரக்கண்ணால் பார்த்து "விக்ரம் சிலரைத் திட்ட வேண்டாம் என்று சொல்லு.. பொறை ஏறுது எனக்கு" என்றுவிட்டுப் போய்விட்டான். ஆனால் விக்ரம் தான் இவன் என்ன சொல்றான் யாரைச் சொல்றான் என்று ஹேஹேஹே வென விழித்தான்.

அவன் போன திசையைப் பார்த்தவள்
"திமிரு புடிச்சது.." என்று மனதுக்குள்
முணுமுணுத்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய
இருவருக்கும் சுமதி டீயையும்
வாழைக்காய் பஜ்ஜியையும் தந்தார்
(ஆஹா.. கோயம்பத்தூர் மாலை.. அதுவும் கிணத்துக்கடவு.. டீ.. பஜ்ஜி.. சொர்க்கம் தான்). பின் கௌசி வரதராஜன் வர அவரிடமும் சேர்ந்து கொண்டு கலகலப்பாகச் சென்றது.

இரவு அறைக்குள் நுழைந்த விக்னேஷ்..
தலையணையை எடுத்துக் கீழே போட
கௌசி முறைத்தாள். "உனக்கு என்னடா
பிரச்சினை?" என்று சண்டைக்கு வந்தாள்.

"எனக்கா.. எனக்கு என்ன.. ஏன்டி
சண்டைக்கு இழுக்கற என்னை" -
விக்னேஷ்.

"நான் தான் அந்தக் கல்யாணத்திற்குப்
போறேன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம்
ஏன் தலையணையை எடுத்துக் கீழே
போடறே.. நேத்து மாதிரியே நீ இப்படி..
நான் இப்படி படுத்துக்கலாம் ல" என்றாள் கௌசி. நேற்று நடந்தது நியாபகம் இல்லை போல.

"ஆமா.. நீ போறேன்னு சொல்லிட்டே..
நான் எதுவும் சொல்லலியே டி உன்னை..
நான் கீழே படுக்கிறது வேற ரீசன்
இருக்கு" என்றான் முகத்தை திருப்பியபடி.

"அப்படி என்ன ரீசன்.. சொல்லு
கேப்போம்" என்று கௌசி இடுப்பில் கை
கொடுத்துக் கேட்க முதலில் தயங்கியவன் பின் அவளின் நக்கலைக் கண்டு.. உன்னை என்று பல்லைக் கடித்தவன் மேலே சொன்னான்.

"அதாவதுங்க மேடம்.. என் மாமன் மகள்
நைட் தூங்கும் போது மேல கை போட்டுக்
கட்டிப் புடிச்சிக்கறா.. என்னால தூங்கவே
முடியல அதான்" என்று விக்னேஷ்
சீரியஸ் ரியாக்ஷனில் சொல்ல கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது (வெட்கமா?? இல்ல அடச்சை இப்படி பண்டமே-னா?)"

ஒரு நிமிடம் தடுமாறியவள் "இல்... இல்ல.. நா.. நான்.. தலையணை என்று
நினைத்து.. இது.. கம்பத்தில் வந்த
பழக்கம்" என்று கௌசி பிச்சு பிச்சு
சொன்னாள்.

"ஹே. கூல் டி.." என்ற விக்னேஷ் "எனக்கு
டிஸ்டர்ப் எல்லாம் இல்ல.. நீ ஃப்ரீயா படு..
அதுக்குதான்" - என்றான் விக்னேஷ்.
(அஹாஹாஹான்.. நல்ல கதை விடுடா..
அதுக்கெல்லாம் இல்லை.. கௌசி
பக்கத்தில் இருந்தால் பையன் சித்தம்
கலங்குது அதான்).

"இல்லடா நான் வேணா கீழே
படுத்துக்கிறேன் நீ மேல படு" என்றாள்
கௌசி.

"உன்ன கீழே படுக்க வச்சிட்டு.. நான்
ஹாயாயா மேலேயா.. நோ டி" என்றான்
விக்னேஷ்.

"அப்போ நான் மட்டும் ஹாயாயா
தூங்கறதா?" என்று கௌசி கேட்க
"இப்போ என்ன தாண்டி பண்ணனும்
உனக்கு" என்றுக் கேட்டான்.

"பேசாம.. நடுவுல பிள்ளோவை
வச்சிடலாம்.. நான் புடிச்சாக் கூட அதைப்
புடிச்சுப்பேன்ல" என்று சொல்ல இருவரும் இரண்டு தலையணையை நடுவில் அடுக்கினர். (வாவ் வாட் எ அறிவாளி கப்பில்ஸ்). வெறும் தலையணை இருவருக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காதல் ஈர்ப்பபை நிறுத்திவிடுமா என்ன?

நாட்கள் செல்ல அந்த எம்.எல்.ஏ வீட்டுக்
கல்யாணமும் வந்தது. அன்று காலை
அதற்குக் கிளம்பிய கௌசி.. தலையை
சீவிக் கொண்டு இருந்தாள். நீழமான
அடர் நீல அனார்கலி அவளை ஜொலிக்க
வைத்தது. பின் தலையை சீவி முடித்து..
நெற்றிக்கு வகிடிட்டவள் திரும்ப
விக்னேஷ் பெட்டில் இருந்த படியே
கையை தலைக்கு ஊன்றி அவளைப்
பார்த்துக் கொண்டு இருந்தான்.இல்லை
இல்லை அவளை சைட் அடித்துக்
கொண்டு இருந்தான்.

"ஓகே வா டா" - என்று துப்பட்டாவை ஒரு
பக்கமாகப் போட்டு அட்ஜஸ்ட் செய்தபடிக்
கேட்டாள் கௌசிகா.

"ஏன்டி... சேரி கட்ட மாட்டியா அவ்வளவா?
இல்லை கட்டத் தெரியாதா?" என்று
கேட்டான். அவன் கேள்வியில்
நிமிர்ந்தவள் அவன் முகத்தில் இருந்த
நக்கலைக் கண்டு அவனுக்குப் பதில்
அளித்தாள்.

"அதெல்லாம் கட்ட முடியாது.. எனக்கு
இதான் புடிச்சிருக்கு" என்றவள் "நீ
சீக்கிரம் கிளம்பு டா.. அப்போ தான் அங்க
போக முடியும்... இப்போ காலையிலேயே
போனா தான் லோகேஷன் எல்லாம்
மண்டபத்துல பாத்துட்டு.. எல்லாம் செட்
பண்ண முடியும்ன்னு விக்ரம்
சொன்னான்" என்றவள் தனக்குத்
தேவையானதை எல்லாம் எடுத்து
வைத்தாள்.

"நான்லாம் அரைமணி நேரத்தில்
கிளம்பீருவேன்" என்று விக்னேஷ்
பெருமை அடிக்க "சரி சரி நல்ல தேச்சு
குளிச்சிட்டு வா. டைம் போதுன்னு
தண்ணி ஊத்திட்டு வந்திடாதே" என்று
கிண்டலடித்தவள் அவன் திரும்புவதற்குள் அறையை விட்டு வெளியேறி தப்பித்தாள்.

பின் விக்னேஷ் கிளம்பி வர இருவரும்
ஸ்டியோவிற்குக் கிளம்பினர். கௌசி
அடுத்த நாள் வரை உடுத்த வேண்டிய
உடமைகளோடு அனைத்தும்
எடுத்திருந்தாள். பின் அங்கிருந்து ஒரு
டீமே கிளம்ப கௌசியிடம் வந்த
விக்னேஷ் "நீ இன்னிக்கு தைரியமா
போடி.. விக்ரம்ட சொல்லியிருக்க.. அவன்
பாத்துப்பான்.. நீயும் எல்லாம் எப்படின்னு
பாத்துக்க.. இன்னிக்கு நைட் உனக்கு
அங்கையே தங்க ஏற்பாடு..
மண்டபத்துலையே தனி ரூம்
தந்திருவாங்க.. உனக்கு புடிக்கலைனா
சொல்லு நான் வரேன்.. பக்கத்துல ரூம்
ஏதாவது போட்டுக்கலாம்... எப்படியும்
நான் காலைல வரது தான்" என்று
நீளமாகப் பேசியவனை கண்
இமைக்காமல் பார்த்தாள் கௌசி.
அவளுக்குத் தெரியவில்லை அவள்
கொஞ்சம் கொஞ்சமாக விக்னேஷிடம்
தன் காதல் உயிர்ப்பித்துக்
கொண்டிருப்பதை.

"என்னடி.. ஏன் இப்படி நிக்கற" என்று
அவளின் பார்வையில் தோளைத் தட்டிக்
கேட்டான்.

"ஒன்னும் இல்லடா.." என்றவளிடம்
விக்னேஷ் தன் இதழால் அவள்
நெற்றியில் முத்திரையைப் பதித்து
"எல்லாம் போகப்போக சரி ஆயிரும்
கௌசி" என்றான் அவள் கையைத் தன்
கைகுள் வைத்து.

அதற்குள் அங்கு வந்த விக்ரம் "டேய் டேய்
இங்க 5கிலோ மீட்டர் பக்கத்துல இருக்க
மண்டபத்துக்கு விட்டா 5 மணி நேரம்
பேசுவே போல நீ" என்று கிண்டல்
செய்தான்.

"என் பொண்டாட்டி கிட்ட நான் பேசுவேன்.. உனக்கு என்ன டா?" என்று விக்னேஷ் விக்ரமின் பின் கழுத்தைப் பிடித்தான்.

"சரி.. என் கழுத்த விடு.. எங்காவது
ஒடஞ்சிருச்சுன்னா அப்புறம் வரப் போற
பொண்டாட்டி கிட்ட உன்ன மாதிரி
குனிஞ்சு நெத்தில முத்தம் குடுத்து
கொஞ்ச முடியாது" என்று சீரியஸான
முகத்துடன் பேச விக்னேஷிற்கு வெட்கம்
வந்து விக்ரமைக் கட்டிப் பிடித்தான்.
"என்னைய ஏண்டா கட்டி புடிக்கற.." என்று
தள்ளி விட்டவன் அந்த அறையை விட்டு
வெறியேறினான்.

பின் கல்யாண மண்டபத்திற்குச் சென்று
இறங்க எல்லோரும் தேவையான
எல்லாவற்றையும் கீழை இறக்கினர். பின் விக்ரமும் கௌசியும் சென்று
மண்டபத்தைச் சுற்றி எங்கெங்கே கேமரா வைக்க வேண்டும்.. எங்கெல்லாம் பெண் மாப்பிள்ளையை தனியாக போட்டோ எடுக்க வேண்டும்.. என எல்லாவற்றையும் முடிவு செய்தனர்.

ஈவ்னிங் ரிசப்ஷன் ஆரம்பிக்க
எல்லோரும் பரபரப்புடன் இயங்க
ஆரம்பித்தனர். எம்.எல்.ஏ வீட்டுக்
கல்யாணம் என்பதால் அதற்குத் தகுந்த
பிரம்மாண்டமும் பணக்காரத் தன்மையும் இருந்தது. கௌசியும் விக்ரமும் எல்லாவற்றையும் பார்வையிட்ட படியே வந்தனர்.. வரவேற்பில் இரண்டு கேமராஸ்.. வீடியோஸ்.. உள்ளே நான்கு பக்கங்களிலும் கேமராஸ் அன் வீடியோஸ் மேலும் இரண்டு ட்ரோன் கேமரா பறந்து கொண்டு இருத்தது. எல்லாம் நல்ல படியாகவே சென்றது.

மணி பதினொன்று ஆகியும் கூட்டம்
குறையவில்லை. தன் போனின் சத்தம்
கேட்டு எடுத்த கௌசி திரையில் விக்கா
என்ற பெயரைப் பார்த்து அட்டென்ட்
செய்து காதில் வைத்தபடியே வெளியே
வந்தாள். கூட்ட நெரிசலில் சிக்கி
எப்படியோ வெளியே வந்தவள்
"சொல்லுடா" என்றாள்.

"என்ன கௌசி.. எப்படிப் போது எல்லாம்"
என்று வினவினான் விக்னேஷ்.

"குட் டா.. சாப்பிட்டையா?" என்று கேட்டாள்.

"இல்லடி நீ..?" என்று அவன் வினவ "நீ ஏன் இன்னும் சாப்பிடல.." என்று கௌசி
அதட்டினாள்.

"எல்லாம் உன்கூட உட்கார்ந்து சேரந்து
சாப்பிடத்தான்" என்று காதின் அருகில்
கேட்ட விக்னேஷின் குரலில் கௌசி
அவசரமாகத் திரும்பினாள்.

திரும்பியவள் அவன் மேலே இடித்து நிற்க "நீ எங்கடா இங்கே?" என்று வினவினாள்.

"உன்ன தனியா விட முடியல டி.. அதான்"
என்றவன் கௌசியின் கைகளை
பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ரிசப்ஷன் முடிந்த பின் தான் விக்ரம்,
கௌசி, விக்னேஷ் மற்றும் உடன் வந்த
படை என அனைவரும் உட்கார்ந்து
சாப்பிட்டனர். கௌசிக்கு காலை வந்த
போதே எம்.எல்.ஏ வின் மச்சான் அவள்
தங்கும் அறையைக் காண்பித்திருந்தார்.
அனைவரும் கலைய விக்னேஷ் சென்று
தன் உடைகளை எடுத்து வந்தான்.
(காலையில் பிரம்மமுகூர்த்தத்தில்
முகூர்த்தம் என்பதாலே இரவு அங்கு தங்க ஏற்பாடு). பின் கௌசியும் விக்னேஷும் சென்று அந்த அறைக்குள் முடங்க இருவருமே அலுப்பில் சீக்கிரம்
உறக்கத்தைத் தழுவினர்.

அடுத்த நாள் நடக்கப்போவதை
அறியாமல் இருவருமே ஆழ்ந்த
உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-23

அடுத்த நாள் காலை கண் விழித்த
விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ
அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே
முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் கீழே சென்றிருப்பாள் என்பதை உணர்ந்த விக்னேஷ் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து ஒரு ரெட் சர்ட்டையும் டார்க் ப்ளூ லிவிஸ் ஜீன்ஸை அணிந்தவன் தலையை சும்மா
கோதிவிட்டுக் கீழே சென்றான்.

அங்கே சென்று கௌசியைத் தேடியவன்
கண்ணில் பட்டாள் கௌசி. அவளைக்
கண்டவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான்
போனான். கருப்பு நிற பட்டுப்புடவையில்
தங்கநிற வைத்திருந்த பார்டரிலும்.. சில அணிகலன்களும் சில ஒப்பனைகளிலும் மின்னியவளைக் கண்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அவளது நிறத்தை வேற அந்த கருப்பு நிறம் தூக்கிக் காட்டியது.
தன்னை மறந்து கௌசியை ரசித்துக்
கொண்டிருந்தவனை விக்ரமின் குரல்
கலைத்தது.

"அய்யோ.. ச்சி..." என்ற விக்ரமின் குரலில் திரும்பிய விக்னேஷ்.. விக்ரம் ஏதோ துடைப்பதைக் கண்டு "என்ன ஆச்சு விக்ரம்?" என்று வினவினான்.

"அது ஒன்றுமில்லை விக்னேஷ்.. இங்க
ஒருத்தன் சொந்தப் பொண்டாட்டியைப்
பார்த்தே வழிஞ்சிட்டு இருக்கான்.. அவன்
விட்ட ஜொள்ளில் என் பேண்ட் லாம்
நனஞ்சிருச்சு பாரு" என்று சொல்லி
நிமிர்ந்தவன் "எனக்கு வேலை இருக்கு..
நான் போறேன்" என்று போய்விட்டான்.
விக்ரமின் பேச்சில் ஆண்மகனான்
விக்னேஷிற்கு முகம் சிவந்தது.

அதற்குள் அவனைக் கண்டு விட்ட கௌசி அவன் அருகில் வந்தாள். அவன்
முகத்தைக் கவனித்தவள் "என்னடா..
முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து
இருக்கு.. ஃபீவரா?" என்று விசாரித்தவள்
கையை அவன் நெற்றியிலும் கழுத்திலும் வைத்துப் பார்த்தாள்.

கௌசியின் செயலில் ஒரு நிமிடம்
விதிர்விதிர்த்துப் போனவன் அவள்
கையைப் பிடித்துத் தடுத்தான். "கௌசி
இது... நேரத்துல எந்திருச்சதுனால இப்படி இருக்கு" என்றவன் "வேலை எல்லாம் சரியா போயிட்டு இருக்கா?" என்றுப் பேச்சை மாற்றி கௌசியை வேலையில் மூழ்கடித்தான். அதிகாலை நேரத்தில் மணப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏற எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

பின் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய போட்டோஸ் விடியோஸ் எல்லாம் அழகாக படம் பிடிக்கப் பட்டது. விக்னேஷ்
பொண்ணு மாப்பிள்ளை துணி மாற்றப்
போன கேப்பில் கேமிராவை வாங்கி
எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்தான். வெளியே ஏதோ
வீடியோ கேமிராவை சரி பார்த்துக்
கொண்டு வந்த கௌசி அப்போது தான்
விக்னேஷைக் கவனித்தாள். சிவப்பு
சட்டையை கை முட்டி வரை மடக்கி விட்டு.. அலை அலையானக கேசத்துடன்
நின்றிருந்தவனைப் பார்க்க அவளால்
அவன் மீது இருந்து கண்களை எடுக்க
முடியவில்லை. ஆறடி உயரத்தில் நல்ல
கம்பீரமாக நிற்பவனைக் கண்டவளுக்கு
ஏனோ தன்னை அறியாமல் கண்கள் அங்குல அங்குலமாக ரசித்தது.

அப்போது என்று பார்த்து கௌசியைக்
கவனித்த விக்ரம் "அட ஈஸ்வராரா... இதுக ரெண்டுக்கும் எப்போ பாரு இதே
வேலையா இருக்கு" என்று புகைந்தவன்
கௌசியின் அருகில் வந்து "ஹலோ..
மேடம் உன் புருஷனை ஸைட் அடிச்சது
போதும்.. என்ன மாதிரி சிங்கிள வயிறு
எரிய வைக்காதீங்க" என்று சொல்ல
கௌசி.. அச்சச்சொ இவன் பாத்துட்டானே என்று பதறி... ஏதோ சொல்லி சமாளித்தவள் அங்கிருந்து ஓடாத குறையாக ஓடினாள்.

பின் கல்யாணம் முடிந்து விருந்தும்
முடிந்து எல்லாம் கிளம்ப அங்கு வந்து
சேர்ந்தாள் அவள்.. சாட்சாத் நம்ம நான்சி
மேடம் தான். விக்ரமுடன் பேச்சில் இருந்த விக்னேஷும் கௌசியும் அவளை சுத்தமாகக் கவனிக்கவில்லை. ஆனால் உள்ளே வந்தவுடன் கௌசி நான்சியின் கண்ணில் பட.. கூடவே விக்னேஷும் கண்ணில் சிக்கினான்.

கௌசியின் தோற்றத்தைப்
பார்த்தவளுக்குப் புரிந்து விட்டது.
விக்னேஷும் கௌசியும் கல்யாணம்
செய்து கொண்டார்கள் என்று.
(அவளுக்கும் குரு இறந்த செய்தி
தெரியும்.. கௌசி வீட்டை விட்டுச்
சென்றதும் தெரியும். மதி அண்ணன்
சுதாகரன் மூலமாக.. அதாவது கௌசி
குருவின் திருமணத்தில் அவளிடம்
சுதாகரன் பேச்சுக் குடுத்த போது வந்த
பழக்கம். அதன் பிறகு அவள் நிம்மதியாக ஹைதராபாத் சென்றாள்).

மணப்பெண்ணின் அண்ணன் இவளுக்கு எப்படியோ ப்ரண்ட்.. அதாவது இவள் எப்படியாவது ப்ரண்டாகப் பிடித்திருப்பாள். ட்ராபிக் காரணமாக கல்யாணத்திற்கு லேட்டாகவே வந்தாள் நான்சி ஹைதராபாத்தில் இருந்து. அவளுக்கு கல்யாணமும் ஆகி இருந்தது.. ஆனால் ஏனோ கௌசியையும் விக்னேஷையும் பார்க்க அவளால் அவள் வயிற்றெரிச்சலைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

மணமக்களை சென்று பார்த்து கிப்டையும் கொடுத்தவள் மணமகளின்
அண்ணனிடமும் சொல்லிக் கொண்டு
திரும்பினாள். அதாவது அவளுக்கு
விக்னேஷ் கௌசிகாவுடன் சென்று பேச
ஆவல். அவர்கள் கிளம்ப பின்னாலேயே
சென்றாள். கார் பார்க்கிங் வர அவர்கள்
இருவருக்கும் முன் சென்று வழியை
மறைத்து நிற்க.. கௌசியும் விக்னேஷும் யார் என்பது போல அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே "ச்சி இவளா? என்று இருந்தது.

நான்சி இருவரும் அதிர்வார்கள் என்று
நினைத்திருக்க இருவரின் முகப்
பிரதிபலிப்பிள் அவளுக்கு முதல் அடி
விழுந்தது. பின் தான் நாவை விஷம்
ஆக்கிக் கொட்டினாள் நான்சி.

"புருஷன் போன சோகத்தை மறந்து..
இவன் கூட சுத்தறையா?" என்று
கௌசியிடம் கேட்டாள். விக்னேஷிற்கு சுர் என்று ஏறி ஏதோ சொல்ல வர கௌசி
அவன் கையைப் பிடித்து அடக்கினாள்.

"ஆமா என் புருஷன் கூடத் தான் சுத்திட்டு
இருக்கேன்.. இப்போ நான் கௌசிகா
விக்னேஷ்வரன்" என்று அழுத்தமாகச்
சொன்னாள் கௌசிகா. நான்சிக்கு
இரண்டாவது அடி.

விக்னேஷிடம் திரும்பியவள் "அப்போ
முன்னாடி இருந்தே இரண்டு பேரும்
லவ்வர்ஸ்-ஆ.. பட் வெளில காட்டிக்கல.
ஊர ஏமாத்திட்டு சுத்தி இருக்கீங்க.. நீ
என்னை ஏமாத்தி இருந்திருக்க டா" என்று குரலை உயர்த்த பளார் என்று இடியாய் இறங்கியது அறை.

அடித்தது நம்ம கௌசி தான்.. "யாரை
பார்த்து டா போட்டுப் பேசறே..
பிச்சிருவேன்.. ஏய் நீ என்னமோ காவியக்
காதல் பண்ண மாதிரி பேசறே.. நாங்க
ஊர் சுத்துனோமா.. அப்படியே
இருந்தாலும் நான் இவன் கூட இவன்
என்கூட தான் சுத்துனோம்.. உன்ன
மாதிரி இடத்துக்கு ஒருத்தரை மாத்தல"
என்ற கௌசி "மரியாதை முக்கியம்-ன்னா இனி எங்க வழியில வராதே" என்று எச்சரித்தவள் விக்னேஷின் கையைப் பிடித்துக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

பின் காரில் வந்து முன் சீட்டில்
அமர்ந்தவள் விகனேஷ் இன்னும்
வெளியே நின்று கௌசிக்கு முதுகைக்
காட்டி நான்சி இருந்த திசையைப்
பார்ப்பது தெரிந்தது. "ஏய்.. இப்போ நீ
வரியா.. இல்ல அவ கூட போறியா?"
என்று கௌசி எரிச்சலாக வினவ
விக்னேஷ் அமைதியாக உள்ளே ஏறி
அமர்ந்தான்.

செல்லும் வழியில் இருவரும் எதுவுமே
பேசவில்லை. கௌசி கடுகடுவெனவே
வந்தாள் என்றால் விக்னேஷோ எதுவுமே நடக்காதவன் போல அமைதியாக வந்தான். ஆபிஸ் வந்தவுடன் உள்ளே நுழைந்த இருவரும் ஆபிஸ் ரூம் உள்ளே செல்லும் வரை எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திய கௌசி "டேய் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே ?" என்று விக்னேஷிடம் பாய்ந்தாள்.

"நானா.. நான் என்ன நினைக்கறேன்..
நைட் உன் மாமியார் என்ன டின்னர்
செய்வாங்கன்னு" என்றான்
சாதாரணமாக.

"கிண்டலா.. கொன்னுருவேன் உன்ன"
என்று மிரட்டியவள் "அவளைப் பாத்துட்டு
நின்னுகிட்டு இருக்க.. அவ உன்ன டா
போட்டு பேசறா.. நீ பாட்டுக்கு வேற
எவனையோ திட்டற மாதிரி நிக்கற..
இல்ல தெரியாமதான் கேக்கறேன் அவ
மேல உனக்கு என்ன டா ஸ்கூல்ல இருந்து அவ்வளவு கரிசனம்.." என்று
முறைத்தபடிக் கேட்டாள்.

அவ்வளவு தான் வயிற்றைப் பிடித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்
விக்னேஷ். அவன் சிரிப்பதைப் பார்த்து
எரிச்சல் வந்தவள் கையில் கிடைத்த
பேனாவை அவன் மேல் எடுத்து வீச அதை லாவகமாக கேட்ச் பிடித்தான் விக்னேஷ்.

"ஏய்.. நான் ஏதோ அவள பாத்து மயங்கி
நின்ன மாதிரி பேசறே.. எனக்கு நீ அவள
அறஞ்சோன சிரிப்பு தான் டி வந்துச்சு"
என்றவன் "அப்புறம் கரிசனம் பத்தி
கேட்டீல.. அது வந்து.. ஹையோ எனக்கு
ஷை-ஆ இருக்கு எப்படி சொல்லுவேன்..
அவ நல்ல கும்தாதாதா வா இருப்பாடி
அதான் கொஞ்சம் சறுக்கீட்டேன்..
இல்லைனா நான் ரொம்ப ஸ்டாரங் டி "
என்றான் சிரிப்புடனே.

"ஆமா ஆமா ரொம்ப ஸ்டாரங் .. உன்ன
பத்தி தெரியாது பாரு.. சைசை" என்று
சொன்னவளை உற்று கவனித்தான்
விக்னேஷ்.

காலையில் இருந்த மேக்கப் கொஞ்சம்
கம்மி ஆகியிருந்தது. தலை கொஞ்சம்
கலைந்து அவள் காதின் அருகில் சிறிய
முடிகள் பறந்தது. கோபத்தில் உதட்டின்
மேல் வியர்த்திருக்க அதுவும் அவளை
அழகாகக் காட்டியது.

"இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க
கௌசி" என்றான் மாறிய குரலில்.

ஒரு நிமிடம் திகைத்தவள் பின் "நான்
என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன
பேசறே.. லூசு போடா.." என்று ஆபிஸ்
அறையில் இருந்து வெளியே வந்தாள்.
வந்து அமர விக்ரம் "ஹே.. நீ வீட்டுக்கு
போகலையா.. நான் கிளம்பிட்டன்னு
நினைச்சேன்" என்றான்.

"அவன் கூடையே போயிக்கறேன்"
என்றவள் சிறு சிறு வேலைகளை
செய்தாள். அவளுக்கும் வேலையிலும்
உறக்கம் சரியாக இல்லாத
காரணத்தினாலும் டயர்டாக இருந்தது.

பின் மாலை ஆனதும் இருவரும் புறப்பட
மதி கௌசிக்கு கால் செய்தாள்.
"ஹாலோ.." - கௌசி.

"கௌசி.. நீங்க கிளம்பியாச்சா?" - மதி.

"இல்ல மதி.. ஏன் என்ன ஆச்சு?" - கௌசி.

"பாப்பா.. உங்க இரண்டு பேரையும்
பாக்கணும்ன்னு ஒரே அழுகை கௌசி..
நீங்க வர முடியுமா?" என்று வினவினாள்
மதி.

"ஷ்யூர் வரோம் மதி" என்றவள்
விக்னேஷிடம் விஷயத்தைச் சொல்ல
அவன் காரை ஜீவா வீட்டை நோக்கி
இயக்கினான்.

உள்ளே இருவரும் நுழைய "சித்தாதா.."
என்று விக்னேஷின் காலை கட்டிக்
கொண்டாள்.

விக்னேஷ் வியாஹாவைத் தூக்கி "ஏன்
வியா குட்டி அழுது.. அழுகக் கூடாதுன்னு
சித்தா சொல்லி இருக்கேன்ல " என்று
சொல்ல வியாஹாவின் அழுகை நின்றது.

"சித்தா.. நீங்க ஏன் ஒன் வீக்கா என்ன
பாக்க வரவே இல்ல.. சித்தியும் வரவே
இல்ல.. உங்களுக்கு போன் பண்ணக்
கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க" -
என்று தேம்பியடியே கூற விக்னேஷும்
கௌசியும் ஒருசேர ஒரு மதியைப்
பார்த்தனர்.

மதி கௌசியிடம் "இல்ல நீங்க இரண்டு
பேரும் பிசியா இருப்பீங்கன்னு தான்.."
என்று இழுக்க "மதி... நீ ஜீ மாமா
அளவுக்கு பிசியா இருக்க முடியாது"
என்று மதி காதில் கௌசி கிசுகிசுக்க
மதி "போ கௌசி... அப்படி எல்லாம்
ஒன்னும் இல்லை" என்றாள்
வெட்கத்தோடு. அவர்கள் பேசப் பேச
விக்னேஷ் வியாஹாவைத் தூக்கிக்
கொண்டு வெளியே சென்றான்.

"அதே மாதிரி தான் இங்கேயும் மதி..
ஒன்னும் இல்லை" என்றாள் கௌசி.
மதிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை
ஆனால் இருவரையும் உள்ளே நுழையும்
போதே பார்த்தவளுக்கு மனம் நிறைந்து
இருந்தது.

பின் வியாஹாவிற்கு நிறைய
சாக்லெட்ஸ் வாங்கிக் கொண்டு
சித்தப்பாவும் மகளும் வர தூங்கிக்
கொண்டிருந்த சந்தியாவும் எழுந்து
வந்தாள். பின் சிறிது நேரம் பேசிவிட்டு
கிளம்ப "வியா குட்டி.. சித்தா சித்தி கூட
வறீங்களா?" என்று கேட்க குஷியான
வியா கௌசியிடம் வந்து தூக்கு என்பது
போலக் கையைத் தூக்கினாள்.

வியாஹாவைத் தூக்கியவள் "மதி வியா
ட்ரெஸ் மூனு செட் பாக் பண்ணிட்டு வா"
என்று கௌசி சொல்ல "சரிங்க மேடம்ஸ்"
என்று மதி செல்ல குஷியான வியா தன்
சித்தியின் கன்னத்தில் முத்தத்தைப்
பதித்து கடித்தும் வைத்தாள். விக்னேஷ்
கௌசியின் கன்னத்தையே பார்க்க
அவன் அருகில் வந்த சந்தியா "ம்ஹூம்"
என்று தொண்டையைச் செருமினாள்.

தங்கையின் குரலில் திடுக்கிட்டுத்
திரும்பியவன் "என்ன சந்தியா? என்ன
கேட்ட?" என்று விக்னேஷ் கேடாக "நான்
எதுமே இன்னும் கேக்கலையே?" என்று
நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

"சொந்தப் பொண்டாட்டியவே சைட்
அடிக்கறையே அண்ணா" என்று
சிரித்தாள். அவன் பதில் அளிப்பதற்குள்
மதி வியாஹாவின் மிக்கி மௌஸ்
பேக்கில் எல்லாம் எடுத்து வந்தாள்.

"அம்மு.. சித்தி சித்தா வ டிஸ்டர்ப்
பண்ணக் கூடாது" என்று வியா குட்டியிடம் பொறுமையாகச் சொல்ல "அட சாமி மதி.. என்ன விடலாம் ஒன்னும் குறும்பு இவ இல்லை.. நீ பேக்கைத் தா" என்ற கௌசி மதியிடம் இருந்து வியாஹாவின் பேக்கை வாங்கினாள்.

பின் வீட்டிற்குச் செல்ல வியாஹாவும்
கௌசியும் பேசிக் கொண்டே வந்தனர்.
இரண்டு பேரும் ஒன்றாக பேசுகிறேன்
என்று அனத்திக் கொண்டே வர
விக்னேஷிற்கு சிரிப்பு தான் வந்தது.
பின் வீடு வந்து சேர வியாஹா
அனைவரிடமும் சென்று வாய் அடித்துக்
கொண்டு இருந்தாள்.

"அட வாய் பேசாம சாப்பிடு கண்ணு"
என்று சுமதி.. கௌசி ஊட்டிவிட்ட படி
பேசிக் கொண்டே சாப்பிட்டுக்
கொண்டிருந்த வியாஹாவிடம்
சொன்னார்.

"இந்த சுமதி பாட்டி ஜெயா பாட்டி எப்ப
பார்த்தாலும் பேச வேண்டாம்-ன்னு
சொல்றாங்க..." என்று தலையை
சிலுப்பியவள் "எனக்கு பேசாமல்
இருந்தால் தூக்கமா வருது பாட்டி" என்று
வியாஹா சொல்ல அனைவரும்
சிரித்தனர்

பின் தங்கள் அறைக்கு வியாஹாவை
விக்னேஷ் தூக்க "ஏம்பாபா.. என் கூட
பாப்பா இருக்கட்டுமே" என்று சுமதி
சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தவன் "இல்லமா.. இரண்டு நாள் தானே.. எங்க கூடையே இருக்கட்டும்.." என்று வியாஹாவுடன் விளையாடிக் கொண்டே உள்ளே சென்றான்.

உள்ளே பெட்ஷீட்டை விரித்துக்
கொண்டிருந்த கௌசி வியாஹாவை
வாங்கி விளையாடிய படியே அவளுடன்
படுக்கையில் விழ விக்னேஷ் இன்னொரு பக்கம் படுத்தான். ஏனோ வியாஹாவை நடுவில் போட்டு படுத்த இருவரின் பார்வையும் காரணம் தெரியாமல் சந்தித்து மீண்டது.

"சித்தா.. கதை" என்றாள் வியாஹாவோ.

"என்னக் கதை வேணும் குட்டிக்கு" -
என்றான் ஒரு பக்கமாகத் திரும்பி
தலையை கைக்குக் குடுத்த படி.

"எனக்கு ஏஞ்சல் ஸ்டோரி வேணும் சித்தா" - என்றாள் குஷியாக வியாஹா.

ஏஞ்சல் வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் கௌசியைப் பார்த்த விக்னேஷ்
"என்னோட ஏஞ்சல் கதை சொல்லட்டா?"
என்று வியாஹாவிடம் கேட்டான்.

"சொல்லுங்க சொல்லுங்க" என்று கை
கால்களை உதைத்த படி வியாஹா
ஒன்றும் தெரியாமல் குஷியானாள்.

"என்னோட ஏஞ்சல் பேரு கௌசிக்.."
என்று சொல்ல வியாஹா திரும்பி
கௌசியைப் பார்த்தாள். கௌசியோ
வியாஹாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

விக்னேஷ் தொடர்ந்தான். "கௌசிக் வந்து ரொம்ப சுட்டிப் பொண்ணு.. நம்ம வியா குட்டி மாதிரி.. பெரிய கண்ணு.. குட்டி ரோஸ் மாதிரி வாய்.. துரு துருன்னு
எப்போ பாத்தாலும் எல்லோரையும்
சிரிக்க வச்சிட்டே இருப்பா.. புடிச்ச என்ன
வேண்டுமானாலும் பண்ணுவா.. அந்த
ஏஞ்சலோட ஹீரோக்கு ஏஞ்சல ரொம்ப
பிடிக்கும்.." என்று விக்னேஷ் சொல்லிக்
கொண்டே போக கௌசி மறுபக்கம்
திரும்பிப் படுத்தாள். கண்களில் கண்ணீர் சுரக்க விக்னேஷ் மேலே தொடர்ந்தான். "ஏஞ்சல்-க்கு ஹீரோ மேல
பொசஸிவ்நஸ்ஸும் அதிகம்.. ஆனால்
அவளை விட ஹீரோக்குப் பொசஸிவ்நஸ் அதிகம்" என்று சொல்ல சொல்ல கௌசிக்கு கண்ணீர் கண்களில் வழிந்தோடியது.

"சித்து பொசஸிவ்நஸ்-னா என்ன?" என்று அரைத் தூக்கத்திலேயேக் கேட்டாள் வியாஹா.

"அது..." என்று யோசித்தவன் "உனக்கு
சித்தா.. உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது
கொஞ்சுனா புடிக்குமா?" என்று கேட்க
விக்னேஷை அந்தத் தூக்கத்திலும்
அவசரமாகக் கட்டிப் பிடித்தவள் "நோ
சித்தா.. என்ன மட்டும் கொஞ்சுங்க" என்று விக்னேஷிடம் ஒன்ற "இதான் தங்கம் பொசஸிவ்நஸ்" என்று சொல்லித்
தலையை நீவ வியாஹா தூங்க ஆரம்பித்தாள்.

கண்ணீரை உதிர்த்தக் கௌசிக்கு அவன் காதல் புரிந்தது.. ஆனால் இந்தக் காதல் எப்படித் திடீரென வந்தது என்று
யோசித்தாள் கௌசி. அதுதான்
விக்னேஷிடம் இருந்து அவள் விலகி
நிற்க காரணமும் கூட.. யோசித்துத் தலை வலியை இழுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவள் கண்களை மூடினாள்.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கே
எழுந்த விக்னேஷ்.. கௌசியைத் தேடி
மாடிக்குப் போனான். மாடிக்குச்
சென்றவன் அப்படியே நின்றான். கௌசி தனது இடது கரத்தால் வளைந்து வலது காலைத் தொட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் இடுப்பின் வளைவைப் போலவே தலையை வலமாகச் சாய்த்தவன் ஏதோ பட்டிக் காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான். பின் சில நிமிடங்களில் நிமிர்ந்த கௌசி திரும்ப தலையைச் சாய்த்து நின்று
கொண்டிருந்த விக்னேஷைக் கண்டு
திடுக்கிட்டாள்.

டக்கென்று சுதாரித்தவன் "துண்டு எடுக்க வந்தேன்" என்று காயாத துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றான்.
(சமாளிக்கக் கூடத் தெரியல பாரு.. ஐயோ ஆண்டவா.. கீழ வீீீீீட்டுல பத்து துண்டு இருக்கும் போது மேல வருதாம்).
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-24

பின் கீழே கௌசி வர வியாஹாவும்
எழுந்து விக்னேஷின் மடியில்
உடகார்ந்தபடி எதையோ
பேசிக்கொண்டிருந்தாள். சுமதி
காஃபியைக் கொண்டு வர "கௌசி.. நீ
இன்று ஸ்டியோ வர வேண்டாம்.. வியா
கூட இரு" என்று சொல்ல தலையை
ஆட்டினாள் கௌசி.

நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது.
சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது.
போய் பார்க்கச் சென்ற போது விக்னேஷ்
குழந்தையை ஆசையாகப் பார்த்தது
கௌசி கவனித்தாள். ஏனோ குற்ற
உணர்வு வந்தது அவளுக்கு.

வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் "உனக்கு குழந்தைனா புடிக்குமா டா?" என்று கேட்டாள்

"யாருக்கு தாண்டி புடிக்காது.. எனக்கு
ரொம்ப பிடிக்கும்.. நம்ம வியா குட்டி
பிறந்தப்போ கூட ரொம்ப க்யூட்
தெரியுமா?" என்றவன் அப்போது தான்
இவள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று யோசித்து கௌசியிடம்
திரும்பினான்.

அவள் கண்களோ கலங்கி இருக்க
"சாரிடா" என்றாள் குற்ற உணர்வில்.

"ஏய் எதுக்கு டி அழறே.. எதுக்கு சாரி"
என்று வினவியவன் அவள் அருகில்
வந்தான்.

"வந்து.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு டா..
ஆனா என்னால ஏதோ முழு மனசா
இருக்க முடியல.. ஏதோ ஒண்ணுத்
தடுக்குது.." என்றவளை அணைத்தான்
விக்னேஷ்.

"லூசு.. இதுக்கு எதுக்குடி அழறே.. நமக்கு
என்ன அறுபது வயது ஆச்சா.. இன்னும்
வயது இருக்கு.. நான் வெயிட் பண்றேன்.. இல்லைனாலும் கடைசி வரை இப்படியே இருந்து விடலாம்" என்றவனின் சொற்கள் அவளை உருக்கியது.

அவளது குற்ற உணர்வுக்கு இன்னொரு
காரணமும் இருந்தது.. அது அன்று வியா
வந்த அன்று நடந்த ஒன்று.

வழக்கம் போல ஸ்டியோவில் இருந்து ஏழு மணிக்கு வரும் விக்னேஷ் அன்று
ஐந்திற்கே வந்தான். வியாஹா ஹாலில்
உட்கார்ந்து அவள் பாட்டுக்கு ஏதோ ஒரு
நோட்டில் வரைந்து கொண்டு இருந்தாள்.
விக்னேஷ் உள்ளே நுழைய "ஹாலிலேயே உட்காரு டா.. பெட்ரூம் போகாதே இப்போது தான் துடச்சு விட்டிருக்கேன்" என்றாள் கௌசி.

"ம்ம் சரி" என்றவன் மாலை மலரை
எடுத்தான். ஆனால் அவனை நல்ல
பிள்ளையாக இருக்க விடாமல்
கௌசியின் சேலை வேலையைக்
காட்டியது. சேலையை லேசாகத் தூக்கி
இடுப்பில் சொறுகியபடி கௌசி மாப்பில்
ஹாலைத் துடைக்க அவள் இடுப்பின்
பகுதி இடது பக்கம் முழுதும் அவனுக்குக்
காட்சி அளித்தது.

கண்களைத் திருப்ப முடியாமல் அவன்
பார்க்க வியா அருகில் இருப்பதை
உணர்ந்தவன் நியூஸ் பேப்பரை நன்றாக
விரித்து வைத்து அதில் மூழ்க
முயற்சித்தான். ஆனால் அவனால்
முடியவில்லை.

"ஐயோ குஷி பட விஜய் நிலைமை
இப்போ தான் புரியுது டா சாமி" என்று
கண்களை இறுக மூடினான்.

தன்னோடு வாதாடித் தோற்றவன் லேசாக நியூஸ் பேப்பரை இறக்கி கௌசியை.. இல்லை இல்லை அவள் இடுப்பைக் கவனித்தான். அவ்வப்போது
வியாவையும் பார்த்தான் வியா தன்னை
கவனிக்கிறாளா என்று. வியாவோ
கர்மமே கண்ணாக நோட்டில் ஒரு
சூரியனை வரைந்து கொண்டு இருந்தாள். பின் தைரியம் வந்தவனாக கண்களை தனக்கு இஷ்டமான இடத்திற்கு கொண்டு சென்றான்.

கௌசி ஹாலை துடைத்து முடித்துவிட்டு
சமையல் அறைக்குள் செல்ல.. தன்னை
மீறி எழுந்தவன் வியாஹாவைப்
பார்த்தான். அவள் சூரியனுக்குக் கீழே
வீடு வரைய ஆரம்பித்திருந்தாள். பின்
மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்தவன் கௌசியின் பின்
சென்றான். அவளோ எதையோ எடுத்து
கிட்சன் சின்க்கில் வைத்துக்
கொண்டிருந்தாள். விக்னேஷிற்கு
வேர்க்கத் துவங்கி நெற்றியில் இருந்து
வழிந்தது. மோகப் பிடியில் இருந்தவன்
கௌசியின் பின் சென்று அவளை பின்
இருந்து அணைத்து விட்டான்.

திடுக்திட்ட கௌசி திரும்ப ஒரு நிமிடம்
அவளிடம் இருந்து விலகிய விக்னேஷ்
மீண்டும் அவளை இறுக முன்னால்
இருந்து அணைத்தான். ஒரு காலத்தில்
இதை எல்லாம் நினைத்துக் கனவு
கண்டவள் தான் கௌசி. ஆனால் அவள்
மனதில் இருந்த கேள்வி அவளைத்
தடுத்தது. ஆமாம் விக்னேஷிற்கு
திடீரென எங்கிருந்து வந்தது இந்தக்
காதல் என்று. மேலும் அவள் உடல்
தன்னை அறியாமல் நடுங்கியது.
அவளை அணைத்திருந்த விக்னேஷின்
கரங்கள் அவள் இடைப் பகுதிக்குச்
செல்ல அவன் கையைப் பிடித்தவள்
"பயமா இருக்கு டா.. ப்ளீஸ்" என்றவள்
அவன் மார்பிலேயே புதைந்து அழ ஆரம்பித்தாள்.

கௌசியின் பேச்சையும் அழுகையையும்
உணர்ந்தவன் "ச்ச என்னப் பண்ணிட்டு
இருக்கேன்" என்று தன்னைத் தானே
கடிந்தவனுக்கு அவள் அழுகை வேறு
ஏதோ செய்தது.

"கௌசி.. சாரிடி.. ஏதோ தெரியாம.. ச்சு..
சாரி டி.. இனிமேல் இப்படி நடக்காது..
ப்ராமிஸ்" என்று கெஞ்சினான் அவள்
அழுகையை நிறுத்த.

"நான் இதுக்கு தான்டா.. சொன்னேன்
வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு.. இப்போ பாரு..
என்னால உனக்கும் தானே கஷ்டம்"
என்று கௌசி பேச விக்னேஷிற்கு
கோபம் வந்தது.

"ஏய் என்னை என்னன்னு நினைச்சுட்ட..
வெறும் உடம்புக்கு அலையுறவன்னா..
இங்க பாரு இப்போ நடந்தது என் தப்பு
தான்.. அதுக்குன்னு நீ வேண்டாம்ன்னு
சொன்ன அப்புறமும் உன்ன
கஷ்டப்படுத்த மாட்டேன்.. நானும்
மனுஷன் தான் டி.. இப்படி எல்லாம் நீ
பேசறது என்ன அசிங்கப் படுத்தற மாதிரி இருக்கு கௌசி" என்று அவளிடம்
ஆதங்கப்பட்டான். "அடுத்தவள கல்யாணம் பண்ண சொல்றவ
அன்னிக்கு ஏன்டி அந்த நான்சி கிட்ட கௌசிகா விக்னேஷ்வரன்னு அவ்ளோ கர்வமா சொன்னே.." என்று கேட்டவன் "காரணம் உனக்குள்ளும் இருக்கு ஆனா என்கிட்ட நெருங்க தானே தயக்கம்.. எல்லாம் சரி ஆகிவிடும்ன்னு நம்பிக்கை வை டி" என்று அவளை சமாதானம் செய்தான்.

"இனி நீயே என்கிட்ட வர வரைக்கும்
உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் டி"
என்று அவளுக்கு வாக்களித்தவன்
வெளியே வர சுமதி பக்கத்தில் இருந்த
கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார். தான் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு
அளிக்காமல் இருந்ததில் வருந்தினாள்
கௌசி

அந்தக் குற்ற உணர்வில் இருந்தவளுக்கு இப்போது சந்தியா
குழந்தையைப் பார்த்து வந்த அப்புறம்
அது தலை தூக்கியது. விக்னேஷிற்குமே
அது வருத்தமாக இருந்தாலும்
கௌசியின் முன் அவனுக்கு எதுவும்
பெரிதாகப் படவில்லை.

ஒருவழியாகக் கௌசியைச் சமாதானம்
செய்தவன் "கௌசி நான் இன்னிக்கு
நைட் லேட்டாகத் தான் வருவேன்"
என்றான் விக்னேஷ்.

"ஏதாவது வேலையா?" - கௌசி.

"இல்லை.. நம்ம மகாலிங்கம் தாத்தா
வீட்டிற்கு தான்.. ஒரு குட்டி பார்ட்டி.. நான்..
தாத்தா.. விக்ரம்.. ஜீவா" என்றான்
விக்னேஷ்.

கௌசியின் பார்வையை உணர்ந்த
விக்னேஷ் "நீ நினைக்கற மாதிரி
இல்லைடி. லைட்டா தான்" என்று சொல்ல கௌசி ஆரம்பித்தாள்.

"சரி ஆனால் ஜீவா ட்ரிங்க் பண்ணிட்டு
சிட்டிக்குள்ளே போக வேண்டாம்..
முடிச்சிட்டு அவன இங்கேயே கூட்டிட்டு
வந்திடு.. காலைல போகட்டும்" என்று
சொல்ல தலையை ஆட்டினான்.

அன்று இரவு பத்து மணிக்கு எல்லோரும்
மகாலிங்கம் அய்யா வீட்டில் கூத்தடிக்கத்
தயாராக இருந்தனர். மகாலிங்கம் அய்யா கூட டி சர்ட் முட்டி கால் வரை இருந்த நைட் பேண்ட் போட்டிருந்தார். மகாலிங்மும் விக்னேஷும் தயாராக இருக்க... விக்ரமும் ஜீவாவும் பாட்டில்களோடு வருகை தந்தனர். "என்னடா இவ்ளோ.. எவ்வளவு ஆச்சு" என்று வழக்கத்திற்கு மேல்
அதிகமாக இருந்த சரக்கை பார்த்த
விக்னேஷ் கேட்டான்.

"இன்னிக்கு ஷேர் இல்லடா.. என்னுடைய
ட்ரீட் தான்" என்று ஜீவா சொல்ல "என்ன
மாமா ஆனதுக்கா.." என்று மாடிப்படி
ஏறியபடியே விக்னேஷ் கேட்டான்.

"இல்லை" என்பதைப் போலத் தலை
நிமிர்ந்து அசைத்தான் ஜீவா
விக்னேஷின் பின்னோடு படி ஏறியபடி.

"அப்புறம்..." - விக்னேஷ்.

பின் நான்கு பேரும் ரவன்டாக உட்கார்ந்த பின்னார் ஜீவா மூவரையும் பார்த்து "வியாஹா குட்டிக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது" என்றான் ஜீவா
வெட்கத்தோடும் கம்பீரத்தோடும்.

எல்லோரும் வாழ்த்துகளைத் தெரிவிக்க
"இன்று எல்லாம் என் ட்ரீட் தான்.. ஸோ
நோ ஸேர்" என்று விஸ்கியை எடுத்து
எல்லோருக்கும் ஊற்றினான் ஜீவா.

வழக்கம் போல தனக்கு ஒரு கிளாஸை
ஊத்திக் கொண்டு உறிய ஆரம்பித்தார்
மகாலிங்கம். அவருக்கு அவ்வளவு தான்.. அதற்கு மேல் உள்ளே போகாது. விக்ரம் தான் சில சமயம் மொடாக் குடிகாரனாகக் குடித்துவிட்டு மகாலிங்கம் வீட்டிலேயே கிடப்பான். விக்னேஷும் ஜீவாவும் அளவு தான் எப்பவும்.

என்னதான் ஜீவாவிற்கு வாழ்த்து
தெரிவித்தாலும்.. விக்னேஷின் மனம்
முழுதும் கௌசியிடமே இருந்தது.
அவனுக்கும் குழந்தை ஆசை பிறந்தது.
அதற்கு என்று கௌசியை
கஷ்டப்படுத்தவும் மனம் வரவில்லை..
ஒருவித இயலாமையுடன் உட்கார்ந்து
மதுவை அருந்திக் கொண்டிருந்தவனிடம் விக்ரம் வாயை விட்டான். "நீ எப்போடா விக்னேஷ் குட் நியூஸ் சொல்லப்போறே" என்று விக்ரம் விக்னேஷிடம் கேட்டான்.

"இவன் இன்னும் இரண்டு மாசத்துல
சொல்லிடுவான்" என்று சிரிக்க ஜீவா
சிரிக்க "நீங்க வேற இன்னும் ஒரு மாசம்
போதும்.. இரண்டு பேரு என்னம்மா
பேசிக்கறாங்க... ஒருத்தர ஒருத்தர்
பாத்துக்காறாங்க" என்றான் விக்ரம்.
(அவங்க இரண்டு பேரும் பாத்துட்டு
மட்டும் தான் இருக்காங்க).

"டேய்... அப்படியா.. சொல்லவே இல்ல"
என்று ஜீவா கேட்க.... விஸ்கி பாட்டிலை
எடுத்தவன் பாதி பாட்டிலை முழுதாகக்
குடித்து உள்ளே இறக்கினான்.

"டேய் டேய்... என்னடா பண்ணற" என்று
ஜீவாவும் விக்ரமும் மாறி மாறி அவனிடம்
கத்தினர்.

பாதி பாட்டிலை குடித்து முடித்து கீழே
வைக்க அவனுக்கு மேல் இருந்து கீழ்
வரை போதை ஏறியது. கண்கள் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. அரை ட்ரௌசர் டி சர்ட் போட்டிருந்தவன் தள்ளாடியபடியே எழ "எங்கடா போற" என்று பிடிக்க வந்தான் ஜீவா.

"ஜீ... ஐ லவ் யூ டா" என்று போதையில்
பேசியவன் அவனது கன்னத்தில்
முத்தத்தைத் தர "டேய்.. என்னடா
பண்ணற" என்று ஜீவா தன் கன்னத்தைத் தடவி பார்த்தபடியே கேட்டான்.

"அப்போ என் மேல உனக்கு பாசம்
இல்லையா.. நான் உனக்கு முத்தம் தரக்
கூடாதா?" என்று போதையில்
தள்ளாடியவன் ஜீவாவையும் பிடித்து
தள்ளாட வைக்க அவனுடன் சேர்ந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.

விக்ரம் அருகில் வர "மச்சா.. உனக்கு ஐ
லவ் யூ" என்று இருவரையும் இரண்டு
கைகளால் இரு பக்கம் பிடித்தவன்
நன்றாகத் தள்ளாடினான். விக்ரமிற்கும்
ஜீவாவிற்கும் சிரிப்பு வர இருவரும் ஒரே
நேரத்தில் "லவ் யூ டா விக்னேஷ்" என்று
பிடித்து தங்களின் நட்பையும்
பாசத்தையும் அவனிடம் கொட்டினர்.

"தாத்தா" என்று மகாலிங்கம் அய்யா
அருகில் சென்றவன் அவரையும் விட்டு
வைக்காமல் ஒரு முத்தத்தைத் தந்து "ஐ
லவ் யூ தாத்தா" என்று ஒரு முத்தத்தைத்
தந்து அவரிடம் உட்கார "விக்ரம்.. இவன
நான் கூட்டிட்டு போறேன்" என்று ஜீவா
விக்னேஷை அழைத்துக் கொண்டு
சென்றான்.

வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடிக்க
அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த கௌசிகா.. வந்து கதவைத் திறந்தாள். விக்னேஷைப் பார்த்து அதிரிந்தவள் "கௌசி எப்போமே இப்படி ஆகாது.. இன்னிக்கு தான் இப்படி குடிச்சிட்டான்" என்று சொல்ல அவர்களுக்கு வழியை விட்டு நகர்ந்து நின்றாள் கௌசி.

உள்ளே நுழைந்த விக்னேஷ்
பொறுப்பான பிள்ளையாக "இருடா...
கதவைப் பூட்டணும்" என்று கௌசிக்கு
முன்னால் சென்று சோபாவின் பக்கத்தில் இருந்த சாவியை எடுத்தவன் கதவைப் பூட்ட வந்தான். ஆனால் கண்கள் வேறு மங்கலாகத் தெரிய அவனால் சாவி துவாரத்தில் சாவியை நுழைக்க முடியவில்லை. சாவி துவாரத்தில் வைக்க முடியாமல் அவன் கை அதை சுற்றியது.

சாவியை விக்னேஷிடம் இருந்து
பிடுங்கியவள் "நீ இதுக்கு ஆரத்தி
எடுத்தது போதும்.. போ போய்த் தூங்கு"
என்றாள் கௌசி கோபமாக.

பின் விக்னேஷ் உள்ளே சென்றுவிட
எதார்த்தமாக ஜீவா.. மகாலிங்கம் அய்யா
வீட்டில் நடந்ததைச் சொன்னான்.
கௌசிக்கு முதலில் வந்த சிரிப்பு
தன்னால் நின்றது. ஜீவாவிற்கு
வாழ்த்துகளைச் சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் ஏன் இப்படிக் குடித்தான் என்று தெரிந்து விட்டது. தண்ணியைக் குடித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக ஹாலிற்கு வர ஜீவா தான் மொட்டை மாடி அறைக்கு செல்வதாக கூறிச் சென்று விட்டான்.

கௌசி அறைக்குள் நுழைய விக்னேஷ்
எதையோ கப்போர்டில் தேடிக்
கொண்டிருந்தான். அவனைப் பிடித்து
கௌசி இழுக்க அவன் அவளின் திடீர்
செயலில் கௌசி மேல் விழ இருவரும்
பெட்டில் விழுந்தனர். கௌசி மேல்
விழுந்தவன் அவளின் கழுத்தில்
புதைந்தான். அவனுக்கு எல்லாம்
மங்கலாகத் தெரிந்தது. "நீ இப்படிலாம்
கஷ்டப்படாத டா.. ப்ளீஸ்.. எனக்கு இப்போ எந்த ப்ராப்ளமும் இல்லை.. எனக்கு ஓகே" என்று கௌசி சொல்ல விக்னேஷ் அவளிடம் இருந்து நகர்ந்து மறுபக்கம் படுத்தான்.

கௌசி அவனைப் பார்க்க "இப்படிலாம்
எனக்கு எதுவும் வேண்டாம் டி.. உன்னோட உடம்பு மட்டும் எனக்கு வேண்டாம்.. ஐ நீட் யூ வித் யுவர் லவ்..நான் வெயிட் பண்ணறேன்.." என்றவன் "ஐ லவ் யூ கௌசிக்" என்று மறக்காமல் அவளுக்கு கன்னம்.. நெற்றி என முத்தத்தைத் தந்து அவளை அணைத்தபடியே தூங்கி விட்டான். கௌசி அவனின் பேச்சில் அதாவது இந்த போதையிலும் அவன் பேசியது அவள் மேல் இருந்த காதலை பறைசாற்ற அவனை அணைத்த படியே
தூங்கிப் போனாள் கௌசி.

காலையில் கௌசிக்கு முன்னால் கண்
விழித்தவன் தன் மேல் சாய்ந்த படி
உறங்கிக் கொண்டிருந்த கௌசியைக்
காண்டான். அவள் தூக்கம் கலையாமல்
அவளை விட்டு விலகி எழுந்தவன்
அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு
முகத்தைக் கழுவினான். நேற்று அடித்த
சரக்கு இன்னும் இறங்காமலே தான்
இருந்தது அவனுக்கு.. எப்படியும் ஜாக்கிங் போக முடியாது என்று நினைத்தவன் பேசாமல் மாடிக்குப் போய் காலை நேரத் தென்றலை அனுபவிக்கலாம் என்று சென்றான். நேற்று நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது அவனுக்கு.. பாட்டிலை வாயில் கவுத்தது..வீட்டிற்கு வந்தது.. கௌசி ரூமில் பேசியது என அனைத்தும் கண் முன் வந்து நின்றது. அவளை எப்படி மாத்தலாம் என்று யோசித்தவனுக்கு விடை தெரியவில்லை.

மேல் அறையின் கதவு சத்தம் கேட்டு
விக்னேஷ் திரும்ப ஜீவா நின்றிருந்தான்.
"என்னடா.. ஜாக்கிங் போகலையா நீ"
என்று கொட்டாவியை வெளிவிட்டபடி ஜீவா வந்தான்.

"இல்லை டா.. நேத்து அடிச்சதே தெளியாத மாதிரி இருக்கு" என்றவனிடம்... "என்னடா விக்கி. என்ன காலங்காத்தால இவ்வளவு யோசனை?" என்று வினவினான்.

"ஒன்றுமில்லை டா... வேலை விஷயமாக
டா" - விக்னேஷ்.

"எதையும் யோசிக்காதே அதிகமா.. வீணா குழப்பம் தான் மிஞ்சும்.. அது போக்குல விட்ரு" என்று ஜீவா சொல்ல அது ஏதோ தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கே சொன்ன மாதிரி இருந்தது அவனுக்கு.

"ம்ம்" என்றவன் பேச்சை வேறு திசைக்கு
மாற்றினான்.

இருவரும் கீழே வர படி கைப்பிடியை
பிடித்த படி இருவரையும் முறைத்துத்
கொண்டு நின்றாள் கௌசிகா. இவளைப் பார்த்த இருவரும் தலையைக் குனிந்து கொண்டு கீழே வர... முதல் படிக்கு அருகில் நின்று அவர்களை மறைத்தவள் "ஏன்டா.. உங்க இரண்டு பேருக்கும் அறிவே இல்லையா?" என்று திட்டினாள்.

"இரண்டு பேரும் நைட் வந்தீங்க சரி..
வீட்டுக்கு என்னத்த எடுத்துட்டு
வந்திருக்கீங்க பாருங்க?" - என்று வீட்டின்
முன் கூட்டிச் சென்றவள். செருப்பு விடும்
இடத்தைக் காண்பித்தாள்.

நேற்று விக்னேஷ் வரும் போது காலி
பாட்டிலையும் கையில் எடுத்திருந்தான்.
அதை ஜீவாவும் கவனிக்கவில்லை. வந்து வெளியில் செருப்பை விடும் போதுபாட்டிலையும் அழகாக இரண்டு
செருப்பிற்கு நடுவில் வைத்துவிட்டான்
விக்னேஷ். "பாரு.. இவன் செருப்புக்கு
அவார்டு மாதிரி வச்சிருக்கான்" என்று
திட்டியவள் "இந்தக் கருமத்தை எடுத்து
வெளிய போடுங்க டா" என்று திட்டிவிட்டு
உள்ளே சென்று விட்டாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக்
கொள்ள விக்னேஷ் பாட்டிலை எடுத்து வெளியே வீசிவிட்டு வந்தான்.

அவன் காலத்தின் மீது நம்பிக்கை
வைக்கலாம் என்று முடிவு செய்ய விதியே அவர்களை சேர்க்க முன் வந்தது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-24

பின் கீழே கௌசி வர வியாஹாவும்
எழுந்து விக்னேஷின் மடியில்
உடகார்ந்தபடி எதையோ
பேசிக்கொண்டிருந்தாள். சுமதி
காஃபியைக் கொண்டு வர "கௌசி.. நீ
இன்று ஸ்டியோ வர வேண்டாம்.. வியா
கூட இரு" என்று சொல்ல தலையை
ஆட்டினாள் கௌசி.

நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது.
சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது.
போய் பார்க்கச் சென்ற போது விக்னேஷ்
குழந்தையை ஆசையாகப் பார்த்தது
கௌசி கவனித்தாள். ஏனோ குற்ற
உணர்வு வந்தது அவளுக்கு.

வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் "உனக்கு குழந்தைனா புடிக்குமா டா?" என்று கேட்டாள்

"யாருக்கு தாண்டி புடிக்காது.. எனக்கு
ரொம்ப பிடிக்கும்.. நம்ம வியா குட்டி
பிறந்தப்போ கூட ரொம்ப க்யூட்
தெரியுமா?" என்றவன் அப்போது தான்
இவள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று யோசித்து கௌசியிடம்
திரும்பினான்.

அவள் கண்களோ கலங்கி இருக்க
"சாரிடா" என்றாள் குற்ற உணர்வில்.

"ஏய் எதுக்கு டி அழறே.. எதுக்கு சாரி"
என்று வினவியவன் அவள் அருகில்
வந்தான்.

"வந்து.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு டா..
ஆனா என்னால ஏதோ முழு மனசா
இருக்க முடியல.. ஏதோ ஒண்ணுத்
தடுக்குது.." என்றவளை அணைத்தான்
விக்னேஷ்.

"லூசு.. இதுக்கு எதுக்குடி அழறே.. நமக்கு
என்ன அறுபது வயது ஆச்சா.. இன்னும்
வயது இருக்கு.. நான் வெயிட் பண்றேன்.. இல்லைனாலும் கடைசி வரை இப்படியே இருந்து விடலாம்" என்றவனின் சொற்கள் அவளை உருக்கியது.

அவளது குற்ற உணர்வுக்கு இன்னொரு
காரணமும் இருந்தது.. அது அன்று வியா
வந்த அன்று நடந்த ஒன்று.

வழக்கம் போல ஸ்டியோவில் இருந்து ஏழு மணிக்கு வரும் விக்னேஷ் அன்று
ஐந்திற்கே வந்தான். வியாஹா ஹாலில்
உட்கார்ந்து அவள் பாட்டுக்கு ஏதோ ஒரு
நோட்டில் வரைந்து கொண்டு இருந்தாள்.
விக்னேஷ் உள்ளே நுழைய "ஹாலிலேயே உட்காரு டா.. பெட்ரூம் போகாதே இப்போது தான் துடச்சு விட்டிருக்கேன்" என்றாள் கௌசி.

"ம்ம் சரி" என்றவன் மாலை மலரை
எடுத்தான். ஆனால் அவனை நல்ல
பிள்ளையாக இருக்க விடாமல்
கௌசியின் சேலை வேலையைக்
காட்டியது. சேலையை லேசாகத் தூக்கி
இடுப்பில் சொறுகியபடி கௌசி மாப்பில்
ஹாலைத் துடைக்க அவள் இடுப்பின்
பகுதி இடது பக்கம் முழுதும் அவனுக்குக்
காட்சி அளித்தது.

கண்களைத் திருப்ப முடியாமல் அவன்
பார்க்க வியா அருகில் இருப்பதை
உணர்ந்தவன் நியூஸ் பேப்பரை நன்றாக
விரித்து வைத்து அதில் மூழ்க
முயற்சித்தான். ஆனால் அவனால்
முடியவில்லை.

"ஐயோ குஷி பட விஜய் நிலைமை
இப்போ தான் புரியுது டா சாமி" என்று
கண்களை இறுக மூடினான்.

தன்னோடு வாதாடித் தோற்றவன் லேசாக நியூஸ் பேப்பரை இறக்கி கௌசியை.. இல்லை இல்லை அவள் இடுப்பைக் கவனித்தான். அவ்வப்போது
வியாவையும் பார்த்தான் வியா தன்னை
கவனிக்கிறாளா என்று. வியாவோ
கர்மமே கண்ணாக நோட்டில் ஒரு
சூரியனை வரைந்து கொண்டு இருந்தாள். பின் தைரியம் வந்தவனாக கண்களை தனக்கு இஷ்டமான இடத்திற்கு கொண்டு சென்றான்.

கௌசி ஹாலை துடைத்து முடித்துவிட்டு
சமையல் அறைக்குள் செல்ல.. தன்னை
மீறி எழுந்தவன் வியாஹாவைப்
பார்த்தான். அவள் சூரியனுக்குக் கீழே
வீடு வரைய ஆரம்பித்திருந்தாள். பின்
மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்தவன் கௌசியின் பின்
சென்றான். அவளோ எதையோ எடுத்து
கிட்சன் சின்க்கில் வைத்துக்
கொண்டிருந்தாள். விக்னேஷிற்கு
வேர்க்கத் துவங்கி நெற்றியில் இருந்து
வழிந்தது. மோகப் பிடியில் இருந்தவன்
கௌசியின் பின் சென்று அவளை பின்
இருந்து அணைத்து விட்டான்.

திடுக்திட்ட கௌசி திரும்ப ஒரு நிமிடம்
அவளிடம் இருந்து விலகிய விக்னேஷ்
மீண்டும் அவளை இறுக முன்னால்
இருந்து அணைத்தான். ஒரு காலத்தில்
இதை எல்லாம் நினைத்துக் கனவு
கண்டவள் தான் கௌசி. ஆனால் அவள்
மனதில் இருந்த கேள்வி அவளைத்
தடுத்தது. ஆமாம் விக்னேஷிற்கு
திடீரென எங்கிருந்து வந்தது இந்தக்
காதல் என்று. மேலும் அவள் உடல்
தன்னை அறியாமல் நடுங்கியது.
அவளை அணைத்திருந்த விக்னேஷின்
கரங்கள் அவள் இடைப் பகுதிக்குச்
செல்ல அவன் கையைப் பிடித்தவள்
"பயமா இருக்கு டா.. ப்ளீஸ்" என்றவள்
அவன் மார்பிலேயே புதைந்து அழ ஆரம்பித்தாள்.

கௌசியின் பேச்சையும் அழுகையையும்
உணர்ந்தவன் "ச்ச என்னப் பண்ணிட்டு
இருக்கேன்" என்று தன்னைத் தானே
கடிந்தவனுக்கு அவள் அழுகை வேறு
ஏதோ செய்தது.

"கௌசி.. சாரிடி.. ஏதோ தெரியாம.. ச்சு..
சாரி டி.. இனிமேல் இப்படி நடக்காது..
ப்ராமிஸ்" என்று கெஞ்சினான் அவள்
அழுகையை நிறுத்த.

"நான் இதுக்கு தான்டா.. சொன்னேன்
வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு.. இப்போ பாரு..
என்னால உனக்கும் தானே கஷ்டம்"
என்று கௌசி பேச விக்னேஷிற்கு
கோபம் வந்தது.

"ஏய் என்னை என்னன்னு நினைச்சுட்ட..
வெறும் உடம்புக்கு அலையுறவன்னா..
இங்க பாரு இப்போ நடந்தது என் தப்பு
தான்.. அதுக்குன்னு நீ வேண்டாம்ன்னு
சொன்ன அப்புறமும் உன்ன
கஷ்டப்படுத்த மாட்டேன்.. நானும்
மனுஷன் தான் டி.. இப்படி எல்லாம் நீ
பேசறது என்ன அசிங்கப் படுத்தற மாதிரி இருக்கு கௌசி" என்று அவளிடம்
ஆதங்கப்பட்டான். "அடுத்தவள கல்யாணம் பண்ண சொல்றவ
அன்னிக்கு ஏன்டி அந்த நான்சி கிட்ட கௌசிகா விக்னேஷ்வரன்னு அவ்ளோ கர்வமா சொன்னே.." என்று கேட்டவன் "காரணம் உனக்குள்ளும் இருக்கு ஆனா என்கிட்ட நெருங்க தானே தயக்கம்.. எல்லாம் சரி ஆகிவிடும்ன்னு நம்பிக்கை வை டி" என்று அவளை சமாதானம் செய்தான்.

"இனி நீயே என்கிட்ட வர வரைக்கும்
உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் டி"
என்று அவளுக்கு வாக்களித்தவன்
வெளியே வர சுமதி பக்கத்தில் இருந்த
கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார். தான் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு
அளிக்காமல் இருந்ததில் வருந்தினாள்
கௌசி

அந்தக் குற்ற உணர்வில் இருந்தவளுக்கு இப்போது சந்தியா
குழந்தையைப் பார்த்து வந்த அப்புறம்
அது தலை தூக்கியது. விக்னேஷிற்குமே
அது வருத்தமாக இருந்தாலும்
கௌசியின் முன் அவனுக்கு எதுவும்
பெரிதாகப் படவில்லை.

ஒருவழியாகக் கௌசியைச் சமாதானம்
செய்தவன் "கௌசி நான் இன்னிக்கு
நைட் லேட்டாகத் தான் வருவேன்"
என்றான் விக்னேஷ்.

"ஏதாவது வேலையா?" - கௌசி.

"இல்லை.. நம்ம மகாலிங்கம் தாத்தா
வீட்டிற்கு தான்.. ஒரு குட்டி பார்ட்டி.. நான்..
தாத்தா.. விக்ரம்.. ஜீவா" என்றான்
விக்னேஷ்.

கௌசியின் பார்வையை உணர்ந்த
விக்னேஷ் "நீ நினைக்கற மாதிரி
இல்லைடி. லைட்டா தான்" என்று சொல்ல கௌசி ஆரம்பித்தாள்.

"சரி ஆனால் ஜீவா ட்ரிங்க் பண்ணிட்டு
சிட்டிக்குள்ளே போக வேண்டாம்..
முடிச்சிட்டு அவன இங்கேயே கூட்டிட்டு
வந்திடு.. காலைல போகட்டும்" என்று
சொல்ல தலையை ஆட்டினான்.

அன்று இரவு பத்து மணிக்கு எல்லோரும்
மகாலிங்கம் அய்யா வீட்டில் கூத்தடிக்கத்
தயாராக இருந்தனர். மகாலிங்கம் அய்யா கூட டி சர்ட் முட்டி கால் வரை இருந்த நைட் பேண்ட் போட்டிருந்தார். மகாலிங்மும் விக்னேஷும் தயாராக இருக்க... விக்ரமும் ஜீவாவும் பாட்டில்களோடு வருகை தந்தனர். "என்னடா இவ்ளோ.. எவ்வளவு ஆச்சு" என்று வழக்கத்திற்கு மேல்
அதிகமாக இருந்த சரக்கை பார்த்த
விக்னேஷ் கேட்டான்.

"இன்னிக்கு ஷேர் இல்லடா.. என்னுடைய
ட்ரீட் தான்" என்று ஜீவா சொல்ல "என்ன
மாமா ஆனதுக்கா.." என்று மாடிப்படி
ஏறியபடியே விக்னேஷ் கேட்டான்.

"இல்லை" என்பதைப் போலத் தலை
நிமிர்ந்து அசைத்தான் ஜீவா
விக்னேஷின் பின்னோடு படி ஏறியபடி.

"அப்புறம்..." - விக்னேஷ்.

பின் நான்கு பேரும் ரவன்டாக உட்கார்ந்த பின்னார் ஜீவா மூவரையும் பார்த்து "வியாஹா குட்டிக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது" என்றான் ஜீவா
வெட்கத்தோடும் கம்பீரத்தோடும்.

எல்லோரும் வாழ்த்துகளைத் தெரிவிக்க
"இன்று எல்லாம் என் ட்ரீட் தான்.. ஸோ
நோ ஸேர்" என்று விஸ்கியை எடுத்து
எல்லோருக்கும் ஊற்றினான் ஜீவா.

வழக்கம் போல தனக்கு ஒரு கிளாஸை
ஊத்திக் கொண்டு உறிய ஆரம்பித்தார்
மகாலிங்கம். அவருக்கு அவ்வளவு தான்.. அதற்கு மேல் உள்ளே போகாது. விக்ரம் தான் சில சமயம் மொடாக் குடிகாரனாகக் குடித்துவிட்டு மகாலிங்கம் வீட்டிலேயே கிடப்பான். விக்னேஷும் ஜீவாவும் அளவு தான் எப்பவும்.

என்னதான் ஜீவாவிற்கு வாழ்த்து
தெரிவித்தாலும்.. விக்னேஷின் மனம்
முழுதும் கௌசியிடமே இருந்தது.
அவனுக்கும் குழந்தை ஆசை பிறந்தது.
அதற்கு என்று கௌசியை
கஷ்டப்படுத்தவும் மனம் வரவில்லை..
ஒருவித இயலாமையுடன் உட்கார்ந்து
மதுவை அருந்திக் கொண்டிருந்தவனிடம் விக்ரம் வாயை விட்டான். "நீ எப்போடா விக்னேஷ் குட் நியூஸ் சொல்லப்போறே" என்று விக்ரம் விக்னேஷிடம் கேட்டான்.

"இவன் இன்னும் இரண்டு மாசத்துல
சொல்லிடுவான்" என்று சிரிக்க ஜீவா
சிரிக்க "நீங்க வேற இன்னும் ஒரு மாசம்
போதும்.. இரண்டு பேரு என்னம்மா
பேசிக்கறாங்க... ஒருத்தர ஒருத்தர்
பாத்துக்காறாங்க" என்றான் விக்ரம்.
(அவங்க இரண்டு பேரும் பாத்துட்டு
மட்டும் தான் இருக்காங்க).

"டேய்... அப்படியா.. சொல்லவே இல்ல"
என்று ஜீவா கேட்க.... விஸ்கி பாட்டிலை
எடுத்தவன் பாதி பாட்டிலை முழுதாகக்
குடித்து உள்ளே இறக்கினான்.

"டேய் டேய்... என்னடா பண்ணற" என்று
ஜீவாவும் விக்ரமும் மாறி மாறி அவனிடம்
கத்தினர்.

பாதி பாட்டிலை குடித்து முடித்து கீழே
வைக்க அவனுக்கு மேல் இருந்து கீழ்
வரை போதை ஏறியது. கண்கள் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. அரை ட்ரௌசர் டி சர்ட் போட்டிருந்தவன் தள்ளாடியபடியே எழ "எங்கடா போற" என்று பிடிக்க வந்தான் ஜீவா.

"ஜீ... ஐ லவ் யூ டா" என்று போதையில்
பேசியவன் அவனது கன்னத்தில்
முத்தத்தைத் தர "டேய்.. என்னடா
பண்ணற" என்று ஜீவா தன் கன்னத்தைத் தடவி பார்த்தபடியே கேட்டான்.

"அப்போ என் மேல உனக்கு பாசம்
இல்லையா.. நான் உனக்கு முத்தம் தரக்
கூடாதா?" என்று போதையில்
தள்ளாடியவன் ஜீவாவையும் பிடித்து
தள்ளாட வைக்க அவனுடன் சேர்ந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.

விக்ரம் அருகில் வர "மச்சா.. உனக்கு ஐ
லவ் யூ" என்று இருவரையும் இரண்டு
கைகளால் இரு பக்கம் பிடித்தவன்
நன்றாகத் தள்ளாடினான். விக்ரமிற்கும்
ஜீவாவிற்கும் சிரிப்பு வர இருவரும் ஒரே
நேரத்தில் "லவ் யூ டா விக்னேஷ்" என்று
பிடித்து தங்களின் நட்பையும்
பாசத்தையும் அவனிடம் கொட்டினர்.

"தாத்தா" என்று மகாலிங்கம் அய்யா
அருகில் சென்றவன் அவரையும் விட்டு
வைக்காமல் ஒரு முத்தத்தைத் தந்து "ஐ
லவ் யூ தாத்தா" என்று ஒரு முத்தத்தைத்
தந்து அவரிடம் உட்கார "விக்ரம்.. இவன
நான் கூட்டிட்டு போறேன்" என்று ஜீவா
விக்னேஷை அழைத்துக் கொண்டு
சென்றான்.

வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடிக்க
அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த கௌசிகா.. வந்து கதவைத் திறந்தாள். விக்னேஷைப் பார்த்து அதிரிந்தவள் "கௌசி எப்போமே இப்படி ஆகாது.. இன்னிக்கு தான் இப்படி குடிச்சிட்டான்" என்று சொல்ல அவர்களுக்கு வழியை விட்டு நகர்ந்து நின்றாள் கௌசி.

உள்ளே நுழைந்த விக்னேஷ்
பொறுப்பான பிள்ளையாக "இருடா...
கதவைப் பூட்டணும்" என்று கௌசிக்கு
முன்னால் சென்று சோபாவின் பக்கத்தில் இருந்த சாவியை எடுத்தவன் கதவைப் பூட்ட வந்தான். ஆனால் கண்கள் வேறு மங்கலாகத் தெரிய அவனால் சாவி துவாரத்தில் சாவியை நுழைக்க முடியவில்லை. சாவி துவாரத்தில் வைக்க முடியாமல் அவன் கை அதை சுற்றியது.

சாவியை விக்னேஷிடம் இருந்து
பிடுங்கியவள் "நீ இதுக்கு ஆரத்தி
எடுத்தது போதும்.. போ போய்த் தூங்கு"
என்றாள் கௌசி கோபமாக.

பின் விக்னேஷ் உள்ளே சென்றுவிட
எதார்த்தமாக ஜீவா.. மகாலிங்கம் அய்யா
வீட்டில் நடந்ததைச் சொன்னான்.
கௌசிக்கு முதலில் வந்த சிரிப்பு
தன்னால் நின்றது. ஜீவாவிற்கு
வாழ்த்துகளைச் சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் ஏன் இப்படிக் குடித்தான் என்று தெரிந்து விட்டது. தண்ணியைக் குடித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக ஹாலிற்கு வர ஜீவா தான் மொட்டை மாடி அறைக்கு செல்வதாக கூறிச் சென்று விட்டான்.

கௌசி அறைக்குள் நுழைய விக்னேஷ்
எதையோ கப்போர்டில் தேடிக்
கொண்டிருந்தான். அவனைப் பிடித்து
கௌசி இழுக்க அவன் அவளின் திடீர்
செயலில் கௌசி மேல் விழ இருவரும்
பெட்டில் விழுந்தனர். கௌசி மேல்
விழுந்தவன் அவளின் கழுத்தில்
புதைந்தான். அவனுக்கு எல்லாம்
மங்கலாகத் தெரிந்தது. "நீ இப்படிலாம்
கஷ்டப்படாத டா.. ப்ளீஸ்.. எனக்கு இப்போ எந்த ப்ராப்ளமும் இல்லை.. எனக்கு ஓகே" என்று கௌசி சொல்ல விக்னேஷ் அவளிடம் இருந்து நகர்ந்து மறுபக்கம் படுத்தான்.

கௌசி அவனைப் பார்க்க "இப்படிலாம்
எனக்கு எதுவும் வேண்டாம் டி.. உன்னோட உடம்பு மட்டும் எனக்கு வேண்டாம்.. ஐ நீட் யூ வித் யுவர் லவ்..நான் வெயிட் பண்ணறேன்.." என்றவன் "ஐ லவ் யூ கௌசிக்" என்று மறக்காமல் அவளுக்கு கன்னம்.. நெற்றி என முத்தத்தைத் தந்து அவளை அணைத்தபடியே தூங்கி விட்டான். கௌசி அவனின் பேச்சில் அதாவது இந்த போதையிலும் அவன் பேசியது அவள் மேல் இருந்த காதலை பறைசாற்ற அவனை அணைத்த படியே
தூங்கிப் போனாள் கௌசி.

காலையில் கௌசிக்கு முன்னால் கண்
விழித்தவன் தன் மேல் சாய்ந்த படி
உறங்கிக் கொண்டிருந்த கௌசியைக்
காண்டான். அவள் தூக்கம் கலையாமல்
அவளை விட்டு விலகி எழுந்தவன்
அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு
முகத்தைக் கழுவினான். நேற்று அடித்த
சரக்கு இன்னும் இறங்காமலே தான்
இருந்தது அவனுக்கு.. எப்படியும் ஜாக்கிங் போக முடியாது என்று நினைத்தவன் பேசாமல் மாடிக்குப் போய் காலை நேரத் தென்றலை அனுபவிக்கலாம் என்று சென்றான். நேற்று நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது அவனுக்கு.. பாட்டிலை வாயில் கவுத்தது..வீட்டிற்கு வந்தது.. கௌசி ரூமில் பேசியது என அனைத்தும் கண் முன் வந்து நின்றது. அவளை எப்படி மாத்தலாம் என்று யோசித்தவனுக்கு விடை தெரியவில்லை.

மேல் அறையின் கதவு சத்தம் கேட்டு
விக்னேஷ் திரும்ப ஜீவா நின்றிருந்தான்.
"என்னடா.. ஜாக்கிங் போகலையா நீ"
என்று கொட்டாவியை வெளிவிட்டபடி ஜீவா வந்தான்.

"இல்லை டா.. நேத்து அடிச்சதே தெளியாத மாதிரி இருக்கு" என்றவனிடம்... "என்னடா விக்கி. என்ன காலங்காத்தால இவ்வளவு யோசனை?" என்று வினவினான்.

"ஒன்றுமில்லை டா... வேலை விஷயமாக
டா" - விக்னேஷ்.

"எதையும் யோசிக்காதே அதிகமா.. வீணா குழப்பம் தான் மிஞ்சும்.. அது போக்குல விட்ரு" என்று ஜீவா சொல்ல அது ஏதோ தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கே சொன்ன மாதிரி இருந்தது அவனுக்கு.

"ம்ம்" என்றவன் பேச்சை வேறு திசைக்கு
மாற்றினான்.

இருவரும் கீழே வர படி கைப்பிடியை
பிடித்த படி இருவரையும் முறைத்துத்
கொண்டு நின்றாள் கௌசிகா. இவளைப் பார்த்த இருவரும் தலையைக் குனிந்து கொண்டு கீழே வர... முதல் படிக்கு அருகில் நின்று அவர்களை மறைத்தவள் "ஏன்டா.. உங்க இரண்டு பேருக்கும் அறிவே இல்லையா?" என்று திட்டினாள்.

"இரண்டு பேரும் நைட் வந்தீங்க சரி..
வீட்டுக்கு என்னத்த எடுத்துட்டு
வந்திருக்கீங்க பாருங்க?" - என்று வீட்டின்
முன் கூட்டிச் சென்றவள். செருப்பு விடும்
இடத்தைக் காண்பித்தாள்.

நேற்று விக்னேஷ் வரும் போது காலி
பாட்டிலையும் கையில் எடுத்திருந்தான்.
அதை ஜீவாவும் கவனிக்கவில்லை. வந்து வெளியில் செருப்பை விடும் போதுபாட்டிலையும் அழகாக இரண்டு
செருப்பிற்கு நடுவில் வைத்துவிட்டான்
விக்னேஷ். "பாரு.. இவன் செருப்புக்கு
அவார்டு மாதிரி வச்சிருக்கான்" என்று
திட்டியவள் "இந்தக் கருமத்தை எடுத்து
வெளிய போடுங்க டா" என்று திட்டிவிட்டு
உள்ளே சென்று விட்டாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக்
கொள்ள விக்னேஷ் பாட்டிலை எடுத்து வெளியே வீசிவிட்டு வந்தான்.

அவன் காலத்தின் மீது நம்பிக்கை
வைக்கலாம் என்று முடிவு செய்ய விதியே அவர்களை சேர்க்க முன் வந்தது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-26

கௌசியின் இந்தக் கோபத்தை
விக்னேஷ் சத்தியமாக எதிர்
பார்க்கவில்லை. அவள் போன பின் கீழே
கிடந்ததை எல்லாம் பார்வையிட்ட
ஆரம்பித்தான் விக்னேஷ். எல்லாம் சார்ட்
பேப்பர்ஸ்.. அவனைத் தன் கையாலேயே
அவள் ஒவ்வொன்றாக நினைத்து
நினைத்து வரைந்தது. சிறு வயது முதல்
இருந்த அனைத்தையும் வரைந்திருந்தாள். ஒரு சுருண்டிருந்த சார்ட் பேப்பரை விரித்த விக்னேஷின் கண்கள் அகல விரிந்தன.. அதில் அவனும் கௌசியும் மணக்கோலத்தில் இருப்பது போல ஒரு படம் கௌசி வரைந்தது இருந்தது. அவனால் அதில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அந்த படத்தின் கீழே இருந்த கௌசியின் கையெழுத்தின்
கீழ் இருந்த தேதியைப் பார்த்தவனின்
கண்களுக்கு ஆச்சிரியம் தான்..
13.03.2013 என்று இருந்தது.. அவனுக்கு
22 இரண்டாவது பிறந்தநாள் அவளுடைய 18வது வயதில் வரைந்திருக்கறாள். அவனின் பிறந்தநாள் அன்று வரைந்திருந்தவள் அவனிடம் தரவில்லை. பின் இன்னொரு பேப்பரில் ஐ லவ் யூ விக்கா.. ஐ மிஸ் யூ விக்கா என்று ஸ்ரீ ராம ஜெயம் போல விக்கா விக்கா என்று இருந்தது கண்ணீர் கரைகளுடன். எல்லாவற்றையும் பார்த்து அவனுக்கு
எல்லையில்லா சந்தோஷம். பின்
டைரியில் ஒவ்வொரு கவிதையாய்
படிக்க ஆரம்பித்தான்.

படிக்க படிக்க அவன் நெஞ்சில் நிறைந்த
நிறைவை அவனுக்குச் சொல்ல
வார்த்தைகள் இல்லை. நான்சியை அவன் காதலிப்பதாகச் சொன்ன பிறகு அவள் எழுதியது அடுத்து குரு பண்ணிய
கொடுமையில் எழுதியது என எல்லாம்
அவனைக் கலங்கச் செய்தது. ஏனோ
தன்னையும் அறியாமல் அவன்
கண்களில் கண்ணீர் ரேகை வந்தது. தான் பேசத் தெரியாமல் தப்பாகப்
பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தவன்
எல்லாவற்றையும் வைத்து விட்டு
கௌசியைத் தேடி வெளியே வந்து..
அவள் சமையல் அறையில் இருப்பதை
உணர்ந்து அங்கு சென்றான்.

பாத்திரத்தை கழுவிக் கொண்டு
இருந்தாள் கௌசி.. விக்னேஷ் சென்று
அவள் தோளைத் தொடப் போக
"தொடாதே.. தொட்டீனா கைய
உடச்சிருவேன்" என்று கோபத்தில்
சொல்ல அவன் வந்த சிரிப்பை
அடக்கினான்.

"நான் உன்னை தொடக்கூடாதா டி.. பேபி
லவ்லாம் பண்ணியிருக்க என்னை..
ஆனா எனக்கு அந்த உரிமை இல்லையா" என்று கேட்டான்.

"இந்த டையலாக் எல்லாம் அடிச்ச இந்த
பாத்திரத்திலேயே அடிச்சிருவேன்" என்று கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை நீட்டி எச்சரித்தாள்.

"பாத்திரத்துல அடிக்க வேண்டாம் டி..
நேத்து அடிப்பன்னு சொல்லி அடிச்சீல
அதையே பண்ணு" என்றான் அவள் அருகில் குனிந்து.

கோபம் வந்தவள் கையில் இருந்த சோப்பு நுரையை முகத்தில் அப்பிவிட்டாள். ஆனால் அவனுக்கு கோபமே வந்தால்தானே. மாறாக சிரித்தவன் அவள் இடுப்பில் சொறுகி இருந்த முந்தானையை
வேண்டுமென்றே இடுப்பில் விரல்
பட்டவாறு எடுத்து முகத்தைத் துடைத்தான். அவன் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாலும் அவள் வெளியே காட்டவில்லை.

"ஸாரி டி" - விக்னேஷ். பதிலே இல்லை
கௌசியிடம். "ப்ளீஸ் டி" என்று அருகில்
வந்தவனைத் தள்ளி விட்டாள்.

அதற்குள் சுமதி வர அன்னையின்
முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் விக்னேஷ் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான். வந்தவன் பேசாமல் உட்கார சமையல் அறையில் இருந்து வெளிய வந்த கௌசி "தங்" என்று டீயை டேபிளில் வைத்து விட்டுப் போனாள்.

பின் மதிய சாப்பாட்டை முடித்துக்
கொண்டு இருவரும் ஸ்டியோவிற்குக்
கிளம்பினர். இருவரும் உள்ளே நுழையும்
போதே வெளியே வந்த விக்ரம் "ஆடி
அசஞ்சு வராங்க பாரு இரண்டும்.." என்று
நினைத்தவன் "வாங்க... எங்க
ஸ்டியோவிற்கு என்ன விஷயமா
வந்திருக்கீங்க" என்று நக்கலடிக்க
"தள்ளு" என்று கௌசி சொல்லிவிட்டு
உள்ளே போனாள்.

"என்னடா உன் பொண்டாட்டி.. அடுப்பில்
இருந்து இறக்கி வச்ச மாதிரி போறா.."
என்று வினவியவன் விக்னேஷின்
முகத்தில் பல்ப் எரிவதை கவனித்தான்.
"என்னடா ஒரே ஒளி வட்டமா இருக்கு"
என்று விக்ரம் சிரித்தபடியே வினவ
அவனைக் கட்டிப்பிடித்தான் விக்னேஷ்.

"டேய் டேய்.. என்னடா பண்ற.. ரோட்ல
போறவன் எல்லாம் பாக்கறான் பாரு" என்று அவனை விலக்கினான்.

"ஒரு மார்க்கமா தான் திரியற டா நீ..
உள்ள போ.. நான் வெளில போயிட்டு
வரேன்" என்று விக்ரம் கிளம்பி விட்டான்.
உள்ளே நுழைந்தவனை அங்கே வேலை
செய்யும் அனைவரும் வித்தியாசமாகப்
பார்த்தனர். தன் முதலாளியின் முகத்தில் உள்ள ஒளி வட்டத்தைப் பார்த்து.

தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவன்
அறையின் முன்னே இருந்த கேபினிள்
கௌசி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவன் அவள் முன் சென்று நின்றான். அவன் நின்றதை உணர்ந்தவள் நிமிற அவளைத் தான் குறுகுறுவெனப் பார்த்துக்
கொண்டிருந்தான். ஒரு சிலர் இவர்களை
கவனிக்க "எல்லோரும் பாக்கறாங்க"
என்றாள் பல்லைக் கடித்தபடி. விக்னேஷ்
திரும்ப அனைவரும் பயத்தில்
தலையைக் குனிந்து அவரவர்
வேலையைப் பார்க்க ஆரம்பித்து
விட்டனர்.

"மிஸஸ்.கௌசிகா கொஞ்சம் உள்ள வர
முடியுமா?" என்றான் விக்னேஷ்.

அவள் முறைக்க "வேலை விசயமாகத்
தான்" என்றான் வந்த சிரிப்பை அடக்கிக்
கொண்டு. அவன் முன் நடக்க பின்னே
சென்றவள் பேசாமல் சென்று அவனிற்கு எதிரில் அமர்ந்தாள்.

"நல்லா இந்த தொழிலைக் கத்துக்கங்க
கௌசிகா.. நான் இந்தத் தொழிலை
கொஞ்ச நாளில் என் மனைவியின்
கையில் ஒப்படைத்து விட்டு இயற்கை
விவசாயத்தில் முழுதாக இறங்கப்
போகிறேன்" என்றான். கௌசிக்கு அவன் சொன்னதில் திகைத்தாலும் வெளியே காட்டவில்லை.

ஏதோ கௌசி சொல்ல வர "இரு நான்
முடித்துவிடுகிறேன். என்ன கேட்க
வரப்போறேன்னு தெரியும்.. இது
இன்னிக்கு எடுத்த முடிவு இல்ல.. எப்பவோ எடுத்தது.. டைம் வரும்போது
சொல்லலாம்னு விட்டுட்டேன். பசிங்கற
கொடுமை இன்னும் நம்ம நாட்டுல
போகாம தான் இருக்கு.. என்னால நாடு
முழுவதும் தீர்க்க முடியலனாலும்.. நம்ம
ஊருக்குள்ள பண்ண முடியும். அதான்
இதைப் பண்ணப் போறேன்" என்றான்.

"என் கூட ஒரு தைரியமா.. ஒரு துணையா என் பொண்டாட்டி இருந்தா நான் இந்த ஸ்டியோவை அவள் கையில் விட்டுவிட்டு அதைப் பார்ப்பேன்" என்றான் விக்னேஷ்.

"ம்ம்" என்று மட்டுமே பதில் வந்தது
அவளிடம் இருந்து. வேறு ஏதாவது கௌசி பேசுவாள் என்று
நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல
எத்தனித்தவளின் கரத்தைப் பற்றியது
விக்னேஷின் கரங்கள். திரும்பி அவனை
முறைத்தவள் "கையை விடுடா" என்றாள். "ஸாரி டி" என்றவனை வெட்டும் பார்வை அவள் பார்க்க அவன் சலனமே
இல்லாமல் நின்றான்.

"நான் தான் ஏமாத்துனவ.. எல்லார்
கிட்டையும் மறச்சவ.. நீங்க ஏன் சார் சாரி
கேக்கறீங்க.. உங்க மேல எப்போதுமே
தப்பு இருந்தது இல்லையே.. அதனால் தானே கம்பத்திலும் என்ன திட்டுனீங்க..
அப்புறம் இன்று காலையிலும் அப்படிப்
பேசுனீங்க" என்று கேட்டவள் அவன்
கையை உதறிவிட்டு வெளியே
சென்றுவிட்டாள். விக்னேஷ் தான்
அப்படியே நின்று விட்டான். ஒவ்வொரு
முறையும் அவளின் நிலை அறியாமல்
தான் பேசிய பேச்சில் அவள் எவ்வளவு
காயப்பட்டிருப்பாள் என்று
உணர்ந்தவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.

மாலை வீடு வரும் வரையும் இருவரும்
பேசவில்லை. வந்து சேர்ந்தும்
பேசவில்லை. இரவு சாப்பிடும் போது ஏதோ போன் வர எழுந்து சென்று எடுத்தக் கௌசி பத்து நிமிடம் கழித்தே வந்தாள். வந்தவளிடம் "என்ன கௌசி.. யாரு?" என்று கேட்டார் சுமதி.

"கவிதா தான் அத்தை" என்றவள் "அடுத்த வாரம் அவள் கல்யாணமாம்.. அதற்குக் கூப்பிடத்தான்" என்றான் தோசையை பிய்த்து வாயில் போட்டபடியே.

"இன்னும் ஒரு மாசம் இருக்குன்னு
சொன்னீல?" - சுமதி.

"அது ஏதோ சுரேஷ் பாட்டிக்கு உடம்பு சரி
இல்லையாம்.. அதான் சீக்கிரமே பண்றாங்களாம் அத்தை" என்றவள்
"நாங்க அடுத்த வாரம் கம்பம் போயிட்டு
வந்திடறேன் அத்தை" என்றாள்
பொதுவாக அனைவருக்கும்.

"உன் அத்தையிடம் ஏன்மா சொல்ற..
விக்னேஷ் கிட்ட சொல்லு" என்று
வரதராஜன் சரியான நேரத்தில்
கௌசியின் காலை தெரியாமல்
வாரினார். கௌசி நாங்க என்று
சொன்னதை அவர் கவனிக்கவில்லை
போல.

"அவனும் தான் என் கூட வருவான்" என்று அவனைக் கேட்காமலே முடிவெடுத்துச் சொன்னவள் சாப்பிட்ட முடித்த தட்டோடு எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.

படுக்கை அறைக்குள் நுழைந்தவள்
விக்னேஷ் இல்லாததைக் கண்டு
தேடினாள். அதற்குள் அவன் பாத்ரூமில்
இருந்து வர "அதானே பார்த்தேன் நீ எங்க போகப் போற" என்று மனதில்
நினைத்தவள் அமைதியாகச் சென்று
படுத்தாள். அவள் அருகில் வந்து
இன்னொரு பக்கம் விக்னேஷ் படுக்க
இருவருக்குமே நேற்றைய இரவு
நியாபகம் வந்து இம்சித்தது. கௌசி
அதை எளிதில் கட்டி வைக்க விக்னேஷால் தான் முடியவில்லை.

லேசாக நகர்ந்த அவன் அருகில் வந்து திரும்பி முதுகைக் காட்டிப் படுத்திருந்த
கௌசி அருகில் படுத்தான். அவனின்
செயலில் கண்களை மூடிக்
கொண்டிருந்தவள் விழித்தாள். எழுந்து
அவனைப் பார்த்து உட்கார்ந்தவள் "தள்ளி படுடா" என்றாள். இல்லை கத்தினாள்.

"முடியாது போடி" என்றவன் கண்ணை
மூடிக் கொண்டான்.

அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம்
கௌசி அதைச் செய்தாள். ஒரு உதை
அவள் உதைக்க அவன் சுதாரிப்பதற்குள்
இரண்டாவது உதை உதைத்தாள். அவள்
உதைத்ததில் கீழே சென்று விழுந்தவன்
தன் இடுப்பைப் பிடுத்துக் கொண்டு
எழுந்தான். "ஏய் என்னடி.. உதைக்கற..
ஏதாவது படக் கூடாத எடத்துல பட்டா
என்ன ஆகறது" என்றான் இடுப்பைத்
தேய்த்தபடியே.

"இனி பக்கத்தில வந்த படாக் கூடாத
எடத்துல தான் கண்டிப்பா உதைப்பேன்"
என்று படுத்துவிட்டாள். "ராட்சசி" என்று
முணுமுணுத்தவன் பெட்டின் நுனியில்
படுத்துவிட்டான். அடுத்த வந்த ஏழு
நாட்களில் விக்னேஷின் லட்சம்
மன்னிப்பும் ஆயிரம் கெஞ்சல்களும்
கௌசியிடம் செல்லுபடி ஆகவில்லை.
அவள் காது கூடக் குடுக்கவில்லை அவன் வார்த்தைகளுக்கு.

கவிதா சுரேஷின் கல்யாண நாள்
நெருங்க இருவரும் கம்பம் கிளம்பினர்.
இந்த ஒரு வாரத்தில் விக்னேஷ்
சிகரெட்டை விட்டிருந்தான். கௌசியும்
கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
ஆனால் அவனிடம் வாய்விட்டுக்
கேட்கவில்லை. செல்லும் வழியில்
அவனைத் திரும்பி ஒரு நிமிடம்
பார்த்தவள் "ஏன்டா.. அப்படிப் பேசுனே?"
என்று மனதிற்குள் கேட்டாள்.

பின் கம்பம் வர நேராக சங்கரலிங்கம்
அய்யா வீட்டிற்குச் சென்றனர்.
இருவரையும் பார்த்து இருவருக்கும்
கல்யாணம் ஆன செய்தியை அறிந்தவர்
இருவரையும் ஆசிர்வதித்து தன்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அந்த
நேரம் பார்த்து அங்கு வந்த பிரபு தன்
தந்தை சொன்ன செய்தியைக் கேட்டு
இருவருக்கும் தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்தான். உண்மையாகவே
அவனுக்குப் பொறாமையோ அல்லது
வேதனையோ எதுவுமே இல்லை. மாறாக கௌசியின் வாழ்க்கை சீர் ஆனதை நினைத்து அவனுக்கு சந்தோஷமே.

"எங்க தங்கப் போறீங்க" - பிரபு
இருவரையும் பார்த்து.

இருவரும் யோசிக்க "பேசாமல் நீங்களும்
கவிதாவும் இருந்த வீட்டிலேயே
தங்கிக்கோங்க" என்ற பிரபு அவர்களிடம்
பதிலை எதிர்பாராது சென்று சாவியை
எடுத்து வந்து விக்னேஷிடம் தந்தான்.

சாவியை வாங்கிவிட்டு விக்னேஷ் செல்ல கௌசி பிரபுவிடம் திரும்பினாள்
"தேங்க்ஸ் பிரபு.. ஆனால் நீங்களும்
சீக்கிரம் உங்க கல்யாண செய்தியைச்
சொல்லுங்க" என்று சொல்ல பிரபு
"கண்டிப்பா சொல்றேன் கௌசி" என்று
இருவரையும் மனம் நோகாமல் அனுப்பி
வைத்தான் பிரபு.

வீட்டை அடைந்து கௌசி உள்ளே செல்ல
அவள் முதல் சென்ற இடம் வீட்டின் பின்
பக்கம் தான். அது அவளுக்குப் பிடித்த
இடம் கூட.

கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே வர
விக்னேஷ் படுக்கை அறையில்
கௌசியின் பெட்டில் தூங்கிக் கொண்டு
இருந்தான். காரை ஓட்டி வந்த அலுப்பு
என்று நினைத்தவள் அவனை எழுப்ப
மனமில்லாமல் அவளும் சிறிது நேரம்
தூங்கலாம் என்று நினைத்து அலாரம்
வைத்துவிட்டுக் கவிதா பெட்டில்
படுத்தாள். இருவருமே மாலை ஐந்து மணிக்கே எழுந்தனர். "தண்ணி காய
வைக்கிறேன்.. சுடு தண்ணீல குளி..
இல்லைனா சளி புடிச்சிக்கும்" என்றவள்
அவன் பதிலை எதிர்பார்க்காமல்
வெளியே சென்றாள் . கிட்டத்தட்ட ஒரு
வாரம் கழித்து அவள் பேசியது அவனிடம் இப்போது தான்.

இருவரும் கிளம்பி ரிசப்ஷனிற்குச் செல்ல அங்கே இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு மேலே சென்ற கௌசியும் விக்னேஷும்
வாழ்த்துக்களைத் தெரிவிக்க கவிதா
கௌசியின் மாற்றத்தையும் முகப்
பொலிவையும் கண்டு அவளைக் கட்டி
அணைத்தாள். "ரொம்ப சந்தோஷமா
இருக்கு கௌசி.." என்றவள் "நாளைக்கு
கல்யாணம் முடிஞ்சு கிளம்பீறாதே..
என்கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போ"
என்று சொன்னாள். பின் போட்டோவை
எடுத்துக் கொண்டு கீழே வர பழைய
ஸ்கூல் ஆசிரியர்கள் சிலர் வர கௌசி
அவர்களுடன் பேசிக் கொண்டு நின்றாள். பின் விக்னேஷையும் அறிமுகம் செய்து வைத்தாள். பதினைந்து நிமிடம் அவர்களுடன் பேசிவிட்டுத் திரும்ப விக்னேஷைக் காணாமல் தேடினாள் கௌசி. அவனும் பிரபுவும் பேசிக் கொண்டு நிற்க அவர்கள் அருகில் சென்றவள் "சொல்லிட்டு வந்திருக்கலாம்ல டா.. நான் உன்னைத் தேடிட்டு இருக்கேன்" என்று விக்னேஷிடம் கேட்க "இல்லை பாத்தோம்.. அப்படியே பேசிட்டு இருந்தோம்" என்றான் விக்னேஷ்.

பின் பிரபு.. விக்னேஷ்.. கௌசி மூவரும்
ஒன்றாகவே சாப்பிடச் சென்று சாப்பிட்டு
முடித்து அவரவர் வீட்டிற்குத் திரும்பினர்.
வந்த இருவருக்கும் தூக்கமே இல்லை
வீட்டில்.. பின் நேரம் தாழ்ந்தே கண்களை
அசந்தவர்கள் காலை நான்கு மணிக்கே
விழித்து விட்டனர். பின் ஐந்து மணிக்கு
கோயிலை அடைந்தவர்கள் சரியாக
முகூர்த்திற்கு முன் அங்கு இருந்தனர்.
அந்த அதிகாலை வேளையில் ஒரு சிலர் தூங்கி வழிய ஒரு சிலர் பரபரப்பாக
இருக்க சுரேஷ் கவிதா முகத்தில் மட்டும்
அப்படி ஒரு பெருமிதம்..
காதலித்தவர்களையே கை பிடிக்கப்
போவதில் அப்படி ஒரு பூரிப்பு. ஒரு
பெருமூச்சுடன் கௌசி திரும்ப
விக்னேஷின் பார்வை தன் மேல்
இருப்பதை கவனித்தாள் கௌசி. ஏனோ
அவன் கண்களைச் சந்திக்க முடியாமல்
திரும்பிக் கொண்டாள்.

பின் முகூர்த்தம் முடிய கௌசியைத்
தன்னுடனே வைத்துக் கொண்டாள்
கவிதா. விக்னேஷும் பிரபுவிடனும்
சுரேஷுடனும் இருந்தான். மதியம் கிளம்ப இருந்தவர்களை வற்புறுத்தி இரவு சாப்பாட்டை சாப்பிட வைத்தே அனுப்பினர் அனைவரும். "நாளை காலை கிளம்பலாம் கௌசி" என்று விக்னேஷ் சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி.

வீட்டிற்குள் நுழைய விக்னேஷ்
செல்போனை எடுத்துக் கொண்டு
விக்ரமிடம் பேசச் சென்று விட்டான்.
அன்று முழுவதும் இருவரின் பார்வையும் இருவரின் மேல் தான் இருந்தது. கௌசி விக்னேஷ் முதல் முறையாக மதி ஜீவா நிச்சயதார்த்தம் அடுத்து எடுத்துத் தந்த ஆரஞ்ச் மஞ்சள் நிற டிசைனர் சில்க் சேரியை கட்டி இருந்தாள். விக்னேஷும் அன்று பட்டு வேஷ்டியும் மஞ்சள் நிற சட்டையை அணிந்திருந்தான்.

அவன் விக்ரமிடம் பேசிவிட்டு வர கௌசி
வீட்டின் பின் இருந்த தண்ணீர்
தொட்டியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அங்கு சென்று அமர்ந்தான். கௌசியோ அவன் வந்தது உணர்ந்தும் திராட்சைத் தோட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள். அவனும் ஒன்றும் அதை பெரிதாக எடுத்தக் கொள்ளவில்லை.

"ஏன் விக்கா.. உனக்கு என்னோட லவ்
புரியவே இல்லையா?.. எப்படி டா நாம
ஈருடல் ஓருயிராக வாழந்த அப்புறம்
உன்னால் என்னைப் பார்த்து அப்படிக்
கேட்க முடிந்தது" என்று வந்த அழுகையை அடக்கியபடிக் கேட்டாள் கௌசி.

அவளின் திடீர் கேள்வியில்
தடுமாறியவன் பின் "நீ என்கிட்ட
சொல்லவே இல்லையே கௌசி என்ன
லவ் பண்றன்னு" என்றவன் அவளின்
அடுத்த கேள்விக்கு "ஸாரி" கேட்டான்.

"சொல்லவே இல்லைன்னு சொல்ற..
ஆனா அந்த குரு சொன்னான்.. உன்
மூஞ்சிய பாத்தே தெரிஞ்சது.. நீ உன்
அத்தை மகனை லவ் பண்றன்னு..
நான்சிக்கும் தெரியாதுனு
நினைக்கிறையா? ஆனா உன்னால
கண்டு பிடிக்க முடியலை ல" - கௌசிகா.

"நான் சொல்லவில்லை தான்.. ஆனால்
எனக்கு இருக்க மாதிரி தான் உனக்கு
இருக்கும்ன்னு நினைச்சேன் டா.. நீ நம்ம
கல்யாணத்தைப் பத்தி பேசணும்ன்னு
கூப்பிட்டேல.. அப்போ கூட நான் நீ
என்கிட்ட லவ்வ சொல்லக்
கூப்பிடறயோன்னு தான் நினைச்சேன்டா.. உனக்கு அப்படித் தோணவே இல்லேயா டா" என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

அதுவரை உள்ளே வைத்திருந்த
அனைத்தையும் கொட்டினான் விக்னேஷ். "நான் உன்ன எப்போ லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன் தெரியுமா கௌசி.. நான் கனடா ப்ளைட் ஏறும்போது".

"லவ் பண்ண ஆரம்பித்தேன்னு சொல்றத விட.. அப்போ தான்டி உணர்ந்தேன்.. அந்த நான்சியைத் திட்டிட்டு வந்தனே தவிர எனக்கு அதுல துளியும் வருத்தம் இல்லை.. மாறாக உன் நினைப்பு தான் டி.. ஒத்துக்கறேன் நான் அவள லவ் பண்ணேன்னு நினைச்சு அவ அழகுல மயங்கி இருந்தேன் தான். அதுவும் தப்புன்னு அந்த ஆண்டவன் புரிய வச்சான்" என்ற விக்னேஷ் தொட்டியில் இருந்து இறங்க கௌசியும் இறங்கினாள்.

"உன் கூடவே சின்ன வயசுல இருந்து
இருந்தாலோ என்னவோ எனக்குப்
புரியல டி. ஆனா உன்ன விட்டு வந்த
அப்புறம் தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது டி. அப்புறம் நீ கஷ்டத்துல இருந்தப்ப என்னால வர முடியல.. மாமா நீ எல்லோரும் வேண்டாம்ன்னு
சொல்லிட்டீங்க.. நான் உனக்கு போன்
மெசேஜ் பண்ணேன் நீ எதுக்கும் ஆன்சர்
பண்ணல.. நான் வந்து உன்னைக்
கல்யாணம் பண்ண இருந்தப்போ தான் நீயும் போயிட்ட.. அப்பாவும் போயிட்டாரு..
என்னால எதையும் தாங்கிக்கவே முடியல டி" என்றவனின் குரல் கரகரத்தது. கௌசிக்கு ரொம்ப நாளாகத் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.. அவனுக்கு எப்போதில் இருந்து காதல் என்று.

அவன் குரலில் இருந்த வேதனையைப்
புரிந்து கொண்ட கௌசி அவனின்
கையைப் பிடித்து அவன் தோளில்
சாய்ந்தாள் "ஸாரி டா.. ஸாரி.. நீ
நான்சியை லவ் பண்ணிட்டு இருப்பே..
அதனால எதுக்கு நடுவுல நான்
வரணும்ன்னு நினைச்சு தான்.. நான்
கிளம்பிட்டேன். ஆனா இங்க வந்தும்
என்னால உன்ன மறக்க முடியல டா"
என்றவளின் குரலும் கரகரத்தது.

"என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா
நீதான்டா விக்கா ஃபுல்லா இருக்கே..
நான் பொறந்து பர்ஸ்ட் பேர் சொன்னது
உன் பேர் நான். நான் பெரிய பொண்ணு
ஆகி பர்ஸ்ட் சொன்னதும் உன்கிட்ட தான்.. என் லவ்வ தவிர எல்லாம் உன்கிட்ட தான்டா சொன்னேன் டா" என்றாள் கௌசி ஒரு வித தவிப்புடன்.

"எனக்குப் புரியல டி.. நீ ஜீயைக் கூட ஜீ
மாமான்னு சொல்லுவ.. என்னை அப்படி
எல்லாம் சொன்னதே இல்ல.. கல்யாணம் ஆன அப்புறம் ஆவது சொல்லி இருக்கலாம்ல என்னை லவ் பண்ணத" என்றான் ஆதங்கமாக.

"எனக்கு சொல்லவே தோணலை டா.. நீ
என் கூடையே இருப்ப அப்படின்னு சின்ன வயசுல இருந்து சொல்லவே தோணலை" என்றாள் கௌசி. "நான் கம்பத்தில் இருந்தது உனக்கு எப்படித் தெரியும்" என்று துடித்த உதடுடன் கேட்டாள்.

"அப்பா கடைசியா ஐசியூ வில் இருந்து
என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா டி..'கௌசி கம்பத்தில் இருக்கிறாள்.. கௌசி பத்திரம் விக்னேஷ்' என்றுதான்
சொன்னார்.. அதுக்கு அப்புறம் விசாரித்து நீ பத்திரமாக இருக்கிறாய் என்று
தெரிந்து கொண்டேன். அவ்வப்போது
கண்காணித்து கொண்டு தான்
இருந்தேன். ஆனால் அவருக்கு எப்படித்
தெரியும்.. என்று எல்லாம் எனக்குத்
தெரியவில்லை" என்றவனின் கண்களில் தந்தை நினைவில் கண்ணீர் வர அவனை அணைத்துக் கொண்டாள் கௌசி.

"ப்ளீஸ் டா.. ஃபீல் பண்ணாதே... ப்ளீஸ்..
உனக்கு நான் இருக்கேன் விக்கா..
எப்போதுமே.. உன்கூடையே" என்றவள்
அவனின் கண்ணீர் பொருக்காமல் கதற
ஆரம்பிக்க... அவளின் அழுகையை
உணர்ந்தவன் அவளின் கன்னம் பற்றி
"அழாதே டி.. ஆனா ஒண்ணு மட்டும்
புரியது டி.. நான் உன்கூட நீ என்கூட
இருக்கிற வரைக்கும் நம்ம நம்மலாகத்
தான் இருப்போம்.. நடுவில நடந்த
எல்லாம் சூழ்நிலையால நடந்ததே தவிர
நாம அதுக்கு காரணம் இல்லை..
சூழ்நிலை நம்ம லவ்வ இன்னும் ஸ்டாரங்
ஆக்கிருச்சு டி.." என்றவன் அவளை
அணைத்து ஆறுதல் படுத்தினான். மனம் விட்டுப் பேசிய இருவருக்கும் மனம் லேசாகியது. மன பாரம்.. குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவடைந்தனர்.

அவனின் அணைப்பில் இருந்தவள் "ஐ
லவ் யூ டா விக்கா" என்றாள்.

"இன்னொரு தடவை" - விக்னேஷ்.

"ஐ லவ் யூ டா விக்கா" - கௌசி சிரித்த
படியே.

"இன்னும் ஒரு தடவை" - விக்னேஷ்
அவளை இறுக்கியபடி.

"ஐ லவ் யூ டா விக்கா மாமா" என்று
கௌசி அவனை தன்னுடன் இறுக்கி
காதலை சத்தமாகச் சொன்னாள். "நீ
ஏன்டா என்னை சின்ன வயசுல
தூக்கியதே இல்லை.. ஜீ தான்
தூக்குவானாம்.. உன்னைக் கேட்டா நீ
வேணாம்னு சொல்லிருவயாம்.. ஏன்?"
என்று கேட்டாள். "அது எங்காவது
உன்னை கீழே விட்டிடுவேன்னு பயம் டி..
ஆனா உன்ன பாத்துட்டே தான்
இருப்பேன்" என்றான் அவள்
உச்சந்தலையில் முத்தமிட்டபடி. ஏனோ
இந்தக் காமம் இல்லா அணைப்பு
இருவரையும் அப்படியே அணைப்பில்
இருக்க வைத்தது.

எல்லாம் கொஞ்ச நேரம் தான்..
கௌசியைக் கைகளில் ஏந்தியவன்
"சின்ன வயசுல தூக்காததுக்கு இப்போ
சேத்தி தூக்கறேன்" என்றவன் அவளை
உள்ளே கொண்டு சென்றான்.

அவளை படுக்கையில் கிடத்தியவன்
அவள் மேல் படர அன்றைய இரவில்
தீராத காதலையும் திகட்டாத
காமத்தையும் இருவரும் கற்று அறிந்தனர். அவனது ஒவ்வொரு செயலிலும் கௌசியின் ஊனும் உயிரும் உருகி.. அவளது காதலிலும் உணர்வுகளிலும் விக்னேஷின் ஊனும் உயிரும் பூரித்து அன்றைய இரவில் இருவரும் இருவரிடமும் சரணடைந்தனர். மனம் நிறைந்த இருவரும் விட்டத்தைப் பார்த்து
படுத்திருக்க திடீரென விக்னேஷின் உச்சி முடியைப் பிடித்தாள் கௌசி.

"இனிமேல் என்கிட்ட தேவையில்லாம
சண்டை போட்ட.. அவ்வளவு தான் நீ"
என்று உச்சியில் வைத்த கையை
எடுக்காமல் சுற்றினாள். "சரி டி.. சரி.. நீ
சொல்றதையே கேக்கறேன்" என்றவன்
அவள் இதழில் கவிதை பாட ஆரம்பித்து
அவளைத் தான் பேசிக் கொண்டிருந்ததை மறக்கடித்து அந்த இரவை விடியா இரவாக ஆக்கினான்.

இரண்டு மாதம் கடந்தது...

அன்று ஞாயிற்றுக்கிழமை.. மகாலிங்கம்
அய்யா வீட்டிற்கு சென்று வந்த விக்னேஷ் வீட்டில் சத்தமே இல்லாததை
உணர்ந்தான். தன் அன்னையும் மாமாவும் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் டி.வி யைப் போட்டு உட்கார்ந்தான்.

அப்போது தான் கௌசி.. தங்கள்
அறையில் இருந்து வெளியே வந்து
அமைதியாக உட்கார்ந்தாள். அவனிடம்
எதுவுமே பேசவில்லை. "என்ன இவ
சைலன்டா இருக்கா?" என்று
நினைத்தவன்.. "ஏய் என்ன ஆச்சு டி?"
என்று வினவினான். அப்போது தான்
அவனிற்கு அவள் வயதிற்கு வந்த தினம்
நியாபகம் வந்தது. இதே மாதிரி அவள்
வந்து உட்கார்ந்தது என எல்லாம்.

"கௌசி...." - என்று கூப்பிட்ட அவனின்
குரலில் அவ்வளவு சந்தோஷம்.. பெருமை.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "வீ ஆர்
பரக்னென்ட்ரா" என்று கௌசி பல்லைக்
காட்டி சொல்ல அவனால்
சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.
அவளைத் தூக்கிச் சற்றியவன் பின்
இறக்கிவிட்டு அவளின் நெற்றியில்
முத்தத்தைத் தர கௌசிக்கு டபுள்
மகிழ்ச்சி ஆகிவிட்டது.

பின் அனைவருக்கும் விஷயத்ததைத்
தெரிவிக்க அனைவருக்கும் இருவரின்
சந்தோஷமும் தொற்றிக் கொண்டது.
வீட்டிற்கு வந்த வியா குட்டியோ "அம்மா
கிட்ட இருந்து ஒரு பாப்பா.. சித்தி கிட்ட
இருந்து ஒரு பாப்பா" என்று துள்ள
அனைவருக்கும் மனம் மகிழ்ச்சியில்
மனம் நிறைந்தது.

அன்று இரவு தங்கள் அறையில் இருந்த
கௌசி விக்னேஷின் நெஞ்சில்
சாய்ந்தபடிக் கிடந்தாள். "விக்கா" என்ற
அழைப்பில் "சொல்லுடி" என்றான்
விக்னேஷ்.

"லவ் யூ டா" - என்றாள் கௌசிகா அவனை அணைத்தபடி.

"லவ் யூ டூ டி" - என்று தன்னை
அணைத்தவளை காதலோடும் தன்
மகவை சுமக்கும் அக்கறையோடும்
அணைத்தான் விக்னேஷ்வரன்.

இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சியே.

இவர்கள் காதல் கனவு என்றும்
மறையாது.

*முற்றும்*
 
Top Bottom