Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"முருக கடவுளும் முரளியும்" - கனி

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முருக கடவுளும் முரளியும்



போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்தான் முரளி.அவன் தன் அறையில் இருக்கும் முருககடவுள் புகைப்படத்தை பார்த்து,ஏன்?...ஏன்?........



எனக்கு மட்டும் இப்படி நடக்குது, ஏன் எனக்கு இவ்வளவு பெரிய சோதனை.என் அண்ணன் எனக்கு உதவி செய்ய மாட்டுறான். நா பாவம் இல்லயா என்று புலம்பினான்.மேலும் நீயும் நானும் ஒன்னு தான் கடவுளே,, ஏன்னா உன் அண்ணன் விநாயகர் பெருமான் உனக்கு ஞானபழம் தரல என் அண்ணன் அவன் சொத்துல இத்துனுண்டு கூட தர மாட்டுறான்.நம்ம ரெண்டு பேரும் பாவம்ல என்றான் முரளி.



இதனை மேலோகத்தில் இருந்து விநாயக பெருமானும் முருககடவுளும் பார்த்து கொண்டு இருந்தனர். உடனே விநாயக பெருமான் பார்த்தாயா முருகா நம் இருவருக்கும் இடையில் கலகம் உண்டாக்க பார்க்கிறான் இந்த முரளி என்றார்.



முருக கடவுளும் ஆம் அண்ணா நா பூலோகம் சென்று அவனுக்கு சரியான புத்தி புகட்டி விட்டு வருகிறேன் என்று பூலோகம் வந்தார் முருகன். முரளி…. முரளி….. என்று குரல் கேட்க முரளியும் அது யார் என்று கண்ணை தேய்த்து கொண்டு பார்த்தான்.



அதிர்ந்துவிட்டான் முருக கடவுளே நீங்களா?என்றான்.



உடனே ஆம் பக்தா, நீ உன் கவலையை கூறி புலம்பியதன் காரணமாக அதை தீர்க்கவே யான் இங்கு வந்தேன் என்றார்.



முரளியோ இறைவா, நீங்களே கூறுங்கள் யார் பக்கம் நியாயம் என் அண்ணன் பக்கமா? இல்லை என் பக்கமா? என்றான் முரளி.



அதற்கு முருக கடவுளோ,பக்தா உன் தந்தை அவரிடம் இருந்த இரண்டு லச்சத்தை சரி பாதியாக பிரித்து கொடுத்தார். உன் அண்ணனோ அதை முதலீடாக வைச்சு 10 லச்சம் சம்பதித்தான். நீயோ, சூதாடி பணத்தை வீணடித்தாய், இப்போது உன் அண்ணனிடம் எனக்கு பணம் வேணும் உன் சொத்துல பாதி வேணும் என்று கேட்பதில் என்ன நியாயம். இது தவறு மகனே. நீ இவ்வாறு செய்தது மட்டும் அல்லாமல் என்னையும் என் அண்ணையும் பிரிக்க வேற பார்க்கிறாய்.



உண்மை தான் என் அண்ணன் ஞானபழத்தை பெற்றார். நா ஹார்ட் ஒர்க் பண்ணேன் என் அண்ணன் ஸ்மார்ட் ஒர்க் பண்ணாரு இதில் நீ கவனிக்க வேண்டியது நாங்க ரெண்டு பேரும் ஒர்க் பண்ணோம் உன்ன மாதிரி சோம்பேறியா திரியல.முரளியோ கடவுளே நா பண்ணது தவறு தான் இப்ப நான் திருந்திட்டேன். எனக்கு கொஞ்சம் பண உதவி இருந்தா போதும் நா என் வாழ்க்கையில் முன்னேறிடுவேன் என்றான்.



கடவுளோ,பக்தா நீ இப்ப பணமோ,சொத்தோ உன் அண்ணன்கிட்ட கேட்டா சொத்து கிடைக்காது முகத்தில் நாலு குத்து வேணா கிடைக்கும் என்றார். முரளியோ அப்ப நா என் வாழ்க்கையில் எப்படி முன்னேறுறது என் கையில் தான் ஒண்ணுமே இல்லையே என்றான்.



இறைவனோ,முயற்சி தான் உன் முதலீடு,மூளை தான் உன் மூலதனம்.உனக்காக ஒரு வேலையை தேடி அதில் உன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.



முரளியோ சரி கடவுளே, இனிமேல் நா உழைத்து தான் வாழ்வேன் என்றான்.



முருககடவுளோ, பக்தா உண்டு, உறங்கி, சோம்பேறியாய் இருப்பவர்களுக்கு நான் உதவுவதும் இல்லை, உண்ணாமல், உறங்காமல், கடினமாய் உழைப்பவர்களுக்கு நான் உதவாமல் இருந்ததும் இல்லை. சரி வேகமாக எந்திரி என்றார்.



உடனே முரளி இறைவா நான் எழுந்து உங்களுடன் உரையாடி கொண்டுதானே இருக்கிறேன் என்றான்.



கடவுளோ இல்லை பக்தா மணி 8 ஆகுது இன்னும் நீ உறங்கி கொண்டு தான் இருக்கிறாய்.உறக்கத்தில் கனவில் என்னுடன் பேசுகிறாய்.முதலில் அதிகாலையில் எழ பழகு. நேரத்தை கவனமாக செலவழி அதுவே நீ வாழ்வில் உருப்பட இருக்குற ஒரே வழி என்று கூறி மாயமாய் மறைந்தார்.



முரளியும் முருக பெருமானை தொழுதுவிட்டு வேலை தேடி சென்றான்...
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom