- Messages
- 31
- Reaction score
- 0
- Points
- 6
யக்ஷன்
தனிமையில் ஒரு ராஜாங்கம்
குறிப்பு: இந்த கதையின் நாயகன் பெயர் திருநாவுக்கரசு. இந்த கதையை படிக்கும் பொழுது அவன் நிலையில் இருந்து உணர்ந்து படிக்கவும்.
எழும்பூர், கிரீன் வேஸ் ரோடு, தேதி ஆகஸ்டு, 20 2006, அன்று காலை 8.30 மணி வேளையில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
‘வங்கக்கடலில் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் தமிழக கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும், அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமை ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, செய்திகள் வாசிப்பது ஆல் இந்தியா ரேடியோ’ என்று ஒரு டீக்கடை ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்க, அந்த டீக்கடையின் எதிர்புறத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கும் போது
‘தம்பி கொஞ்சம் சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணுப்பா, எம்பொண்ணு பிரசவ வலியால ரொம்ப துடிக்க ஆரம்பிச்சுட்டா சீக்கிரமா அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி கூற,
‘நானும் ஸ்டார்ட் பண்ண டிரை பண்ணிட்டுதாமா இருக்கேன், மழை நல்லா பெய்யுது அதனாலதான் இன்ஜின் சூடேரமாட்டேங்குது, கொஞ்சம் பொறுத்துக்கோங்கம்மா உடனே கிளப்பிடறேன்’ என்றான் அந்த ஆட்டோ டிரைவர்.
ஒரு வழியாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.
‘அய்யோ அம்மா ரொம்ப வலிக்குதும்மா’ என்று பிரசவ வலியால் ஒரு பெண் ஆட்டோவினுள் துடித்துக் கொண்டிருக்க,
‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா ஆஸ்பத்திரி சீக்கிரமா வந்திடும்மா’ - அந்த நடுத்தர வயது பெண்மணி.
ஆட்டோ டிரைவர் வண்டியை ஜி.எச் (G.H) ஆஸ்பிட்டல் இருக்கும் ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது
‘அம்........ ..... அம்மா ஏற்கனவே ம்ம்.......................நமக்கு கஷ்டங்கள் அதிகம் அதோடு சேர்த்து இந்த குழந்தையும் நமக்கு தேவைதானா?’ என்று வலியும் வேதனையும் கலந்து அவள் அவளுடைய தாயிடம்(அந்த நடுத்தர வயது பெண்மணி) கூறினாள்.
இதை காதில் வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் அவள் பக்கம் திரும்பி ‘என்னம்மா இப்படி பொறக்கப் போற குழந்தையை போய் பாரம்னு சொல்றீங்க, இந்த குழந்தை பொறக்கப்போற நேரத்துல பாருங்க மழையே பெய்யாத நம்ம சென்னையில மழை பெய்யுது, இந்த குழந்தை பொறக்கும் போது ஊருக்கே நல்லது நடக்குது உங்க குடும்பத்துக்கு நடக்காதா?’ என்று அந்த பெண்ணை பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டே பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று அந்த பிரசவப் பெண்ணின் தாய் ‘அய்யோ யாரோ ஆட்டோக்கு முன்னாடி ரோட்டை கிராஸ் பண்ணறாங்க. பாத்து ஓட்டுங்க’ என்று அலறினாள். அவன் சட்டென்று திரும்பி ஆட்டோ பிரேக்கை அழுத்தினாலும், ஆட்டோ வந்த வேகத்தில் மழை பெய்த வழுவழுக்கும் தார் ரோட்டில் சறுக்கிக் கொண்டு அந்த நபர் மீது மோதியது. ஆட்டோவில் இடிப்பட்ட அந்த நபர் ரோட்டோரம் இருந்த விளக்கு கம்பத்தில் தலையை வேகமாக மோதி கீழே விழுந்தான். தலையிலிருந்து இரத்தம் வழிந்து ரோட்டோரம் தேங்கியிருந்த மழை நீரில் கலந்து கொண்டிருந்தது. உடனே அங்கே கூட்டம் கூடி அந்த ஆட்டோ டிரைவரை மக்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.
‘அய்யோ அவரை விட்டிருங்க எம்பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்’ என்று அந்த பிரசவ பெண்ணின் தாயார் கத்த, அந்த கற்பமுற்ற பெண்ணோ வலியால் துடிக்க. ‘டேய் அவனை விடுங்க அடிப்பட்ட ஆளை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுவோம்’ என்று அங்கு கூடியிருந்த மக்களில் ஒருவன் கூற அனைவரும் அடிபட்ட அந்த நபரை தூக்கிக் கொண்டு ஜி.எச் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஜி.எச் மருத்துவமனை, கருத்தரங்குகூடம்(Seminar Hall )
‘டியர் ஸ்டுடெண்ட்ஸ் நீங்க எம்.பி.பி.எஸ் பைனல் இயர் படிச்சிட்டு இருக்கீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வமா டாக்டர்ன்ற பட்டத்தை வாங்கப் போறீங்க, அதுக்கு முன்னாடி ஒரு ஆஸ்பிடலோட பங்ஷன்ஸ், திடீர்னு ஒரு ப்ராப்லம் வந்தா அதை எப்படி பேஸ் பண்றதுன்னு போன்ற விஷயங்களை தெரிஞ்சுக்கரதுக்காகதான் இந்த 15 டேஸ் ட்ரய்னிங் ப்ரோக்ராம். மொதல்ல நாம ஐ.சி.யு வார்டுக்கு போகலாம், அங்கே தான் நிறைய விஷயங்கள் கத்துக்க
வேண்டியிருக்கு, எந்த நிமிஷமும் உயிர் போற சூழ்நிலையிலதான் ஐ.சி.யு வார்டுக்கு நிறைய கேசஸ் வரும், அப்போ பதட்டபடாம அந்த நோயாளிக்கு தேவையான ட்ரீட்மென்டை கொடுக்கணும், ட்ரீட்மென்ட் கொடுக்கும்போது அவங்களுக்கு மனசுல தைரியம் வரமாதிரி, பேச்சு கொடுத்துக்கிட்டே இருக்கணும், இதுவே நோயாளியை பாதி குணமாக்கும், ஏன்னா நிறைய ஐ.சி.யு வார்டுக்கு வர கேசஸ் எல்லாம் பாதி மென்டல் ஸ்ட்ரெஸ்னால பிழைக்க மாட்டோம்னு நம்பிக்கை இழந்து செத்துறுவாங்க,..... சரிவாங்க எல்லாரும் போகலாம்’ என்று தன்னுடைய லெக்சரை அந்த கருத்தரங்குகூடத்தில் அமர்ந்திருக்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார் அந்த மருத்துவமனையின் டீன்(DEAN) ரங்கநாதன். அனைவரும் ஐ.சி.யுவிற்கு விரைந்தனர்.
ஐ.சி.யு வார்டிற்கு வெளியே
‘இந்த பகுதில அதிகமா கூட்டம் சேரக்கூடாது.....என்னோட இரண்டு, இரண்டு பேரா வந்து உள்ளே என்ன பண்றாங்கன்றதை பார்த்துட்டு போயிடுங்க’ -ரங்கநாதன்.
பிறகு அந்த மாணவர்களிலிருந்து இரண்டு பேரை மட்டும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.
அங்கு ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடனே ரங்கநாதன் குறுக்கிட்டு ‘என்னாச்சு?’ என்று அங்கு ஒரு டாக்டரைப் பார்த்து வினவினார்.
‘ஆக்ஸிடன்ட் கேஸ், ஆட்டோக்காரன் ஒருத்தன் மோதி தலையில பலமா அடிப்பட்டிருக்கு’ என்று டாக்டர் ஒருவர் பதிலளித்தார்.
‘எங்கே அடிபட்டிருக்கு?’- டீன் ரங்கநாதன்.
‘தலையில அடிப்பட்டதுனால பிரைன்ல(BRAIN) ட்ரான்ஸ்வர்ஸ் பிஷேர்ஸ் (TRANSVERSE FISSURES) பாதிக்கப்பட்டிருக்கு, அதுக்கப்புறமா ஹெவி ப்ளட் லாஸ் இன் ஹெட் (HEAVY BLOOD LOSS in Head)’ - டாக்டர்.
'ஸ்ஸ்..................ப்ச்.............., சரி நான் கொஞ்சம் பாக்கறேன்’ என்று ரங்கநாதன் அந்த நோயாளியின் பக்கம் சென்று இ.சி.ஜி மானிடரை பார்த்தார். பக்கத்தில் அந்த இரண்டு மாணவர்களும் இருந்தனர்.
‘பரவாயில்லை பி.க்யு.ஆர்.எஸ் வேவ் (PQRS wave) நார்மலா தான் இருக்கு’ என்று கூறிவிட்டு நோயாளியின் அருகில் சென்று சட்டென்று டாக்டரை பார்த்து ‘பேஷண்ட்க்கு நினைவு திரும்பிடுச்சா? - ரங்கநாதன்
‘திரும்பிடுச்சு’ - டாக்டர்.
பிறகு டாக்டர் ரங்கநாதன் அந்த நோயாளியை பார்த்து ‘தம்பி உனக்கு ஒன்னும் ஆகலை, நீ பேச ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும், உன் பேரு என்ன சொல்லுப்பா?’ என்று கேட்டார். ‘ம்,,ம்,,,,,,ஆஷ்....’ என்று மெதுவாக கண்களை திறந்தான் (நோயாளி).
‘சொல்லுப்பா உன் பேரு என்ன?’ - ரங்கநாதன்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் அந்த நோயாளியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
‘ஆஷ்...ம்,,ம்’ என்று எதையோ சொல்ல முற்பட்டான் அந்த நோயாளி.
‘ம்ம்.....சொல்லுப்பா, ரொம்ப ஈசியா மனச வெச்சுக்கோ, பேச ஆரம்பிச்சுட்டா எல்லாம் சரியாயிடும்.பேரு என்ன சொல்லு?’ - ரங்கநாதன் .
‘தி.....திருநா..........திருநாவுக்கரசு.....ம்’ - நோயாளி.
திடீரென்று திருநாவுக்கரசுக்கு மூச்சு அதிகமாக வாங்க ஆரம்பித்தது...
‘ஓ மை குட்நெஸ்’ என்று இ.சி.ஜி மானிடரை பார்த்தார் ரங்கநாதன்.
இ.சி.ஜி மானிடரில் பி.க்யு.ஆர்.எஸ் வேவ் நார்மலை விட அதிகமாக இருந்தது. திருநாவுக்கரசுக்கு இன்னும் அதிகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.
ரங்கநாதனுக்கும், டாக்டருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த இரண்டு மாணவர்களும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
சட்டென்று திருநாவுக்கரசுவுக்கு மூச்சு வாங்குவது கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொண்டு வந்தது. இ.சி.ஜி மானிடரில் பி.க்யு.ஆர்.எஸ் வேவ் நார்மலை விட குறைய ஆரம்பித்தது.
உடனே ‘ஓகே ஜஸ்ட் இண்ட்யூஸ் ஹிஸ் ரிதமிசிட்டி பை ஷாக் ட்ரீட்மென்ட் (OK Just induce his rhythmicity by Shock Treatment), பப்பரை (Buffer) எடுங்க’ என்று இரண்டு பப்பரை அவன் மார்பினில் அழுத்தி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தார் ரங்கநாதன். அவர் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும்பொழுது இ.சி.ஜி மானிடரில் நார்மலை தொட்டுவிட்டு கீழே இறங்கியது பி.க்யு.ஆர்.எஸ் வேவ். இப்படி அவர் செய்து கொண்டிருப்பதை அந்த இரண்டு மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று இ.சி.ஜி மானிடரில் ஒரு கோடு மட்டும் தெரிந்தது.
‘சார் இனி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து ப்ரோயோஜனம் இல்லை.
ஹி இஸ் டெட் (Dead)’ - டாக்டர்.
ஒரு வருடத்திற்கு பிறகு
செப்டம்பர் 7 2007, காலை 7.00 மணி, போலிஸ் ட்ரைனிங் கேம்பஸ், வண்ணாரபேட்டை
போலிஸ் கேம்பஸ் மைதனாத்தில் அனைத்து பயிற்சிகளையும் முடித்துவிட்டு எல்லா ட்ரைனீசும் ரெஸ்ட் ரூமிற்கு உடை மாற்றிக்கொள்ள சென்றனர். அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் குமாரும் அவருடைய அறைக்கு சென்றார். குமார் அவருடைய இருக்கையில் உட்காரும் பொழுது தொலைபேசியின் மணி ஒலித்தது. ரிசீவரை எடுத்துப் பேசத் தொடங்கினார்.
‘ஆமா நான் ட்ரெயினிங் ஆபிசர் குமார்தான் பேசறேன்’
..............................
‘ஓ அப்படியா, எந்த ஏரியா ?............
................................
‘சைதாபேட்டையா?’.....
..................
’ஆமாம். இன்னிக்குத்தான் எல்லாருக்கும் ட்ரெயினிங் முடியுது, நாளைக்கு தான் எல்லா ட்ரைனீசும் அவங்கஅவங்களுக்கு அலாட் பண்ண ஏரியாஸ்ல இன்ஸ்பெக்டரா சார்ஜ் எடுத்துக்கப் போறாங்க’
........................
‘சரி நான் யாருன்னு பாத்துட்டு இன்னிக்கே அனுப்பி வைக்கிறேன்’
........................
‘சரி’ என்று ரிசீவரை வைத்துவிட்டு மறுபடி நம்பரை டயல் செய்துவிட்டு ரிசீவரில்
‘ஹலோ, நான் குமார் பேசறேன்’
.......................
‘இராஜா, தமிழ் நாட்ல குறிப்பா சென்னைல எந்தெந்த ஏரியாவுக்கு யார்யாரை அலாட் பண்ணியிருக்காங்கன்ற லிஸ்ட் உங்ககிட்ட தானே இருக்கு’
.....................
அதுல சைதாப்பேட்டைக்கு யாரை அலாட் பண்ணியிருக்காங்க ?
....................
‘பேரு என்ன சொன்னீங்க...... அப்துல்ரஹீமா?’
‘சரி நான் பாத்துக்கறேன். தேங்க்ஸ்’.
ரிசீவரை வைத்துவிட்டு ட்ரைனீஸ் ஆஸ்டலை நோக்கிச் சென்றார்.
அங்கு ஒரு அறைக்குள் சென்று
‘அப்துல் ரஹீமின்றது யாரு?’ - குமார்
‘சார்’ என்று ஒரு இளைஞன் அவரை நோக்கி வந்தான். உன்னை சைதாப்பேட்டை ஏரியாவுக்கு அலாட் பண்ணியிருக்கோம், நீ இன்னைக்கே அந்த ஸ்டேஷனுக்கு போக வேண்டிய சூழ்நிலை’ - குமார்
‘ஓகே சார்’ - அப்துல்
‘நீ அங்கே போய் அந்த ஸ்டேஷனோட பழைய இன்ஸ்பெக்டர் முருகானந்தத்தை பாரு, மத்ததெல்லாம் அவரு பாத்துப்பாரு, நீ உடனே கிளம்பு’ - குமார்.
‘ஓகே சார்’ என்று அப்துல் ரஹீம் புறப்பட தயாரானான்.
கிளம்பும் பொழுது அனைவரிடமும் கூறிவிட்டு அவன் நண்பன் செல்வமிடம் சென்று ‘சரி நான் புறப்படறேன், நீ ஆந்திரா கேம்ப் தானே .... அப்புறமா உனக்கு எந்த ஏரியால அலாட் பண்ணியிருக்காங்கன்னு போன் பண்ணி சொல்லு’ என்று அவனிடம் கைகுலுக்கிவிட்டு கிளம்பினான்.
அவனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது ‘எல்லாரையும் பிரிஞ்சு வந்தாச்சு, இனிமேல் நமக்கு புது இடம், புதுமனிதர்கள், புது சூழ்நிலைன்னு எல்லாமே புதுசுதான், கொஞ்சம் பேஸ் (Face) பண்றதுக்கு பயமா இருந்தாலும், பேஸ் பண்ணியே ஆகணும்னு கட்டாயமான சூழ்நிலை, நான் இன்ஸ்பெக்டர்ன்ற ஒருபெரிய பதவில போறேன் எனக்கு கீழே நிறைய கான்ஸ்டபிள்ஸ் வேலை செய்வாங்க அவங்க எல்லாரும் ஒத்துழைப்பாங்களா இல்லை என்னை ஏமாத்த நினைப்பாங்களா நான் எப்படி அலேர்ட்டா இருக்கப் போறேன், இப்போ எதுக்காக என்னை மட்டும் உடனடியா ஜாயின் (Join) பண்ண சொன்னாங்க, அங்க என்ன நடக்கப் போவுது?’ என்று அப்துல் சில மணிநேரம் சிந்தனையில் மூழ்கி இருக்கும் பொழுது, சட்டென்று ஒரு பிரேக்குடன் ஜீப் நின்றது. ‘சார் சைதாப்பேட்டை ஸ்டேஷன் வந்தாச்சு’ என்று ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் கூற ‘ம்ம்........நான் நினைச்சுகிட்டு வந்ததுக்கெல்லாம் இன்னும் சில நிமிடங்கள்ள பதில் கிடைக்கப் போகுது’ என்று தனக்குள் பேசிக் கொண்டு டிரைவரை பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஸ்டேஷனை நோக்கிச் சென்றான். ஸ்டேஷனுக்கு வெளியே காவல் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள்ஸ் அப்துலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களைப் பார்த்துவிட்டு மனதை தைரியப்படுத்திக் கொண்டு ஸ்டேஷனுக்குள்ளே சென்றான். அங்கும் அனைவரது பார்வையும் அவன் மீது பதிந்திருந்தது.
ஒருவன் அப்துலையே விரைத்துப் பார்த்துக் கொண்டே அவன் முன் வந்து நின்று
‘நீங்க அப்துல் ரஹீமா?’
‘ஆமாம்’
‘நான் தான் முருகானந்தம்’
‘ஹலோ’ என்று இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
‘நான் இன்னைக்கே கன்னியாகுமாரிக்கு போறேன். என்னை அங்கேதான் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட எல்லா ரிகார்ட் டீடைல்ஸ், அப்புறமா எல்லாருக்கும் உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கறது போன்ற பார்மாலிடீஸ் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு வரசொன்னேன்’ - முருகானாந்தம்.
‘ஓ அப்படியா, சரி’ - அப்துல்
அனைத்து பார்மாலிடீசையும் முடித்துக் கொண்ட பிறகு முருகானந்தம் அப்துலிடம்
‘நான் உங்களை இதுக்காக மட்டும் வர சொல்லலை, வேற ஒரு விஷயத்துக்காகவும்தான், இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்’ என்று புதிராக கூறினான்.
அப்துல் அவனை கூர்மையாக கவனிக்கத் தொடங்கினான்.
‘அஞ்சு நாளைக்கு முன்னாடி நம்ம ஸ்டேஷன் எஸ்.ஐ இராவுத்தர் காணாமல் போயிட்டாரு, அதுக்கப்புறமா தாம்பரம் பய்பாஸ் ரோட்ல அவர் பிணம் கிடைச்சுது, அவர் இரவு நேரத்துல அந்த ரோட்ல இறந்ததுனால அவர் மேல அந்த பக்கம் வர லாரி பஸ் எல்லாம் ஏறி ஏறி அவர் உடம்பே அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி ரோடு மேல படிஞ்சிருந்தது, அப்புறமா போஸ்ட் மோர்டேம் (Post Mortem) செய்யருத்துக்காக அவர் உடம்பை எடுத்துட்டுப் போனாங்க. அவரு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டார்ன்னு ரிப்போர்ட் வந்தது, ஏன் அவரு தாம்பரம் பய்பாஸ் ரோட்டுக்கு போனாருன்னு ஒரு கேள்வி எழுந்துச்சு நான் அவர பத்தின ரிபோர்ட்ட ஆராய்ச்சி பண்ணி பாத்ததுல டிபார்ட்மெண்ட்ல அவருமேல நிறைய ப்ளாக் மார்க்ஸ் இருத்திருக்கு, அவர் இரவு நேரத்துல தாம்பரம் பய்பாஸ் ரோட்ல வர வண்டிய எல்லாம் வழிமறிச்சு மிரட்டி பணம் வாங்கி இருக்கார்னு அவர்மேல கம்ப்ளைன் இருந்ததுனால அதிகார துஷ்ப்ரயோகம்ற பேர்ல ஸஸ்பெண்டும் ஆயிருக்காரு, இந்த ரீசனுக்காக தான் அவர் அங்க போயிருக்கனும்னு முடிவு பண்ணி அந்த கேஸ ஆக்சிடெண்ட் னு பைல் பண்ணி க்லோஸ் பண்ணிட்டேன். ஆனா நேத்திக்கு மறுபடி ஒரு போஸ்ட் மோர்டேம் ரிப்போர்ட் வந்துச்சு, அதிலே முதல்ல கொடுத்த ரிப்போர்ட் தப்பு, அவர் ஆக்சிடெண்ட்ல சாகல அவர் இரத்தத்துல சைனைடுன்ற விஷம் கலக்கப் பட்டிருக்குன்னு இன்னோரு ரிப்போர்ட் வந்திருக்கு, நான் ட்ரான்ஸ்பர் ஆகர காரணத்துனால அந்த ரிபோர்ட்டுக்கு இன்னும் ஆக்ஷன் எடுக்கலை. ஆனா போஸ்ட் மோர்டேம் செஞ்ச ஹாஸ்பிடலேருந்து “ஏன் அனுப்பின ரிப்போர்ட்க்கு இன்னும் எந்த ரெஸ்பான்சும் வரலை”ன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்காங்க, நான் ட்ரான்ஸ்பர் ஆகப் போறதுனாலே இந்த கேஸ புது இன்ஸ்பெக்டர் பாத்துப்பாருன்னு சொல்லி சமாளிச்சுட்டேன். இனிமே உங்க கைல தான் இருக்கு’-முருகானந்தம்.