Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன்! ராட்சஷனாக! - 2

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 20

இப்படி யட்சன் யவனாக மாற்றம் அடைந்த விதத்தை அந்த டைரியில் படித்த நிதா அடுத்த பக்கத்தை திருப்ப முயல வேகமாக அந்த டைரியை பறித்தான் யவன்.

"நிதா கேள்வியாக பார்க்க நீ படித்தது போதும்! எழுந்து போ"- யவன்.

"முடியாது! இன்னும் என் கேள்விக்கு விடை கிடைக்காம இங்கிருந்து போக மாட்டேன்" – நிதா.

"டைரியை கொடுக்க முடியாதுடி..போடி.." – யவன்.

"அப்ப நான் இங்கிருந்து போக மாட்டேன்" - நிதா.

நிதாவின் பிடிவாதம் அறிந்த யவன் வேறு வழியில்லாமல் "இன்னும் நீ என்ன தெரிஞ்சுக்கணும். கேள் நா சொல்றேன்" என்று யவன் சொல்ல யவனிடம் திரும்பினாள் நிதா.

"அப்ப மனிதர்களை வேட்டையாடியது எல்லாம் நீங்கள் இல்லையா?" – நிதா.

"நான் இல்லை" சுருக்கமாக பதில் சொன்னான் யவன்.

"உன் கேள்வி முடிஞ்சிருச்சா! கிளம்பு" – யவன்.

"இல்லை அப்ப அன்னைக்கு ஆபிசில் என் கையில் ரத்தம் வந்தது? நான் மயங்கி விழுந்தது? அப்ப ரத்தத்தை கண்டு நீங்க என் அருகில் வந்தது என் ரத்தத்தை குடித்தது" - நிதா.

அதற்கு பலமாக சிரித்தான் யவன்.

"எதுக்குடா சிரிக்கற" – நிதா.

"நீயெல்லாம் ரிப்போட்டர் ஆகப் போறேன்னு வெளியே சொல்லிக்காத" – யவன்.

"ஏன்டா அப்படிச் சொல்ற" - நிதா.

"பின்ன உன் முட்டாள் தனத்தை என்ன சொல்றது. அன்றைக்கு ஆபிசில் நீ மயங்கி விழும் போது உன் கை மேஜையில் பட்டு அடிபட்டு ரத்தம் வந்தது. அதற்கு மருந்திட்டு கட்டிவிட்டேன் அவ்ளோதான். நான் வேற எதுவும் செய்யல. நான் சும்மா விளையாட்டுக்கு ரத்தம் குடித்ததாக சொன்னேன்" – யவன்.

"ஓ! அப்ப நீ டெய்லி குடிக்குறது" - நிதா.

"அது ஆட்டு ரத்தம். மனித ரத்தம் கிடையாது. வெம்பையரில் மனித ரத்தம் குடிக்கிறவங்க. விலங்கு ரத்தம் குடிக்குறவங்கன்னு இரண்டு இனங்கள் இருக்கு. நான் விலங்கு ரத்தம் மட்டும் தான் குடிப்பேன். ஆனால் மனித ரத்தம் உடம்பில் எங்களுக்கு குடிக்க தூண்டினாலும் அதை நாங்க கட்டுப்படுத்திக்குவோம்" – யவன்.

"அப்ப நீங்களும் மனித ரத்தம் குடிக்கும் ராட்சஷனா மாற முடியுமா" – நிதா.

"முடியும்... ஆனா இப்ப வரை அப்படி செய்ய நான் என்னை விட்டதில்லை. இனி வரும் காலங்களில் அப்படி நடக்குமானு தெரியல" என்று யவன் பழிவெறியோடு கூற நிதா அவனது முகத்தை கண்டு திகைத்தாள்.

அவனை மாற்ற அடுத்த கேள்வியைக் கேட்டாள் நிதா .

"அப்ப அன்னைக்கு என்னை மேலிருந்து கீழே தள்ளிவிட்டதுக்கும் காரணம் இருக்கு அப்படிதான?" - நிதா.

"அது வினய் உன்னை கொல்ல ஆள் அனுப்பி இருந்தான். அவன்கிட்ட இருந்து உன்னை காப்பாற்ற அப்படி செய்தேன்" – யவன்.

"அப்ப ஊறுகாய் பாட்டினால் எனக்கு நடந்த அபிஷேகம்?" – நிதா.

"அது என் கிட்ட இருந்து உன்னை பாதுகாக்க... வெம்பையருக்கு பூண்டுனா அலர்ஜி அதான் அப்படி செஞ்சேன்" – யவன்.

"அப்ப அந்த ஊதா நிற பூ" - நிதா.

"அந்த பூ... அது வெம்பையருக்கு பிடிக்காது. வினய் உன் அருகில் வரவிடாமல் செய்ய அப்படி செஞ்சேன்" – யவன்.

"வினய் உன்னை நெருங்காம இருக்க நிறைய விசயங்கள் நான் செய்தேன். அவன் அருகில் உன்னை வராம தடுக்கறதுக்கு உன்னை என் கூடயே வச்சிருந்தேன்." - யவன்.

"அப்ப என்னை சங்கிலியால் கட்டினது? வேலை வாங்கியது?" – நிதா.

அதற்கு சற்று நேரம்அமைதியாக இருந்த யவன் அது ஒரு பழங்கணக்கு உனக்கு சொன்னா புரியாது

"ஓ! ஆனா நீ ஏன் தீடீர்னு காணாமப் போயிட்ட? உன்கூட தரங்கிணி சித்தி வந்ததா தாத்தா சொல்றார். நீ இல்லைனு சொல்ற. அப்படி நீ அவங்க கூட போகலைனா அவங்க எங்க போனாங்க?" – நிதா.

"அது காலம் வரும் போது எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்றேன்" – யவன்.

அதற்கு சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நிதா யவனிடம்

"நீ அன்னைக்கு வெளியே போகும் போது என்ன சொல்லிட்டு போனேன்னு ஞாபகம் இருக்கா டோலு"

"என்னை மறந்துடாத. எப்பவும் எனக்கு துணையா இருப்பேன்னு சொல்லிட்டு போன நானும் உன்னை நினைச்சிகிட்டே இருந்தேன் தெரியுமா. உன்னை ஆல்பத்தில் தினமும் பார்த்துட்டு இருப்பேன். நீ கொடுத்த டாலரில் தான் கண்விழிப்பேன். உன்னை எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா? ஆனால் நீ தான் என் டோலுன்னு தெரிஞ்சதும்... ம்ம்ம் அதுகடுத்து என்னவோ நடந்துருச்சு" என்று நிதா வருத்தத்தோடு சொல்லிவிட்டுச் செல்ல இங்கு யவன் நிதா விட்டுச் சென்ற பக்கத்தை பார்த்தான். அதில் தரங்கிணியைப் பற்றி எழுதி இருந்தான். அதை பார்த்த யவன் சீக்கிரம் உன் கேள்விக்கான விடை கிடைச்சிடும் நிதா என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான் யவன்.

*****

வைத்தி சோம்நாத்தின் முன்னால் கோபமாக நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த சோம்நாத் எழுந்து நிற்க அவன் அருகில் வந்த வைத்தி அவன் சட்டையை பிடித்துவிட்டார்.

"என்ன அண்ணா? என்னாச்சு? ஏன் என் மேல கோபமா இருக்கீங்க?" – சோம்நாத்.

"ஆமாம் கோபமா இருக்கேன். இல்லை.. இல்லை.. உன் மேல கொலை வெறில இருக்கேன்டா?" – வைத்தி.

"அப்ப நான் என்ன செஞ்சுட்டேன்? நீங்க கோபப்படுற அளவுக்கு?" – சோம்நாத்.

"ஏன்டா பவ்யாவை பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி எங்களை பிரிச்ச?" – வைத்தி.

அதை கேட்டு சோம்நாத் திடுக்கிட்டாலும் தன்னை மறைத்துக் கொண்டு பாவமாக நின்றான்.

"அய்யோ.. நான் எதுக்குனா.. பொய் சொல்லப் போறேன்.. எனக்கு வந்த செய்தியைச் சொன்னேன்" – சோம்நாத்

"வந்த செய்தியா? நீ பார்த்த மாதிரி தானடா அன்னைக்கு சொன்ன? நிமிசத்திற்கு ஒரு பேச்சு பேசுறவனடா என் தம்பி... சே! என்று அவனை விட்ட வைத்தி அவனை கடைசி முறையாக எச்சரிக்கை செய்தார்.

இனி தேவையில்லாம அவளை பத்தி எதாவது சொன்ன? அவ்ளோ தான்..." என்று அவனிடம் கத்திய வைத்தி சோம்நாத்திடம் சில காகிதங்களை நீட்டினார்.

"என்னடா இது.. பிசினஸ்... பிசினஸ் ன்னு சொல்லி இதைதான் கிழிச்சியா. எல்லா கம்பெனியும் நஷ்டத்தில் இருக்கு" – வைத்தி.

"அது வந்து அண்ணா..." - சோம்நாத்.

"எல்லாம் ஒரே ஊழலா இருக்கு. ஆனா இதில் எல்லாம் வைத்தின்னு என் பேர் தான் போட்டு இருக்கு. நீ பண்ணிய தப்புக்கெல்லாம் என்னை மாட்டிவிடுறீயா. பணம் சம்பாதிக்கணும் அந்த வீரபாண்டியனை விட அதிக அந்தஸ்து வரணும் ன்ற பேராசையில் நீ சொன்னதுக்கெல்லாம் நான் தலையாட்டினேன். பார் என்னை சொல்லணும் நீ பிஸ்னஸ் சொன்னதை நம்பி என் கையில் இருந்த காசை எல்லாம் போட்டேன்டா.கடைசியில் நீ இப்படி கடனாக்கவா காசு கொடுத்தேன். இனி அப்படி ஈசியா உனக்கு பணம் கொடுக்க மாட்டேன்.

உன்னை பற்றி இப்ப தான்டா நான் தெரிஞ்சுக்குறேன். அப்ப வீரபாண்டி சொன்னது அனைத்தும் நிஜம் .

இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங். ஒழுங்கா உன் தவறை திருத்திக்கோ. இல்லை போலீசில் நானே பிடிச்சு கொடுத்துடுவேன்" என்று சோம்நாத்தை மிரட்டிவிட்டு வைத்தி செல்ல சோம்நாத் அவரை கோபமாக பார்த்தான்.

"என்ன? எல்லாரும் ஒன்று கூடிட்டிங்களா! அது நான் இருக்கும் வரை நடக்காது" என்று கோபத்தோடு சொன்னான் சோம்நாத்.

லமியும், வெங்கியும் அன்று வைத்தி கூட வராமல் இருந்தது சோம்நாத்திற்கு வசதியாக போயிற்று . மேலும் வைத்தி தன்னைப் பற்றி தன் தாயிடம் சொல்ல மாட்டான் என்று கணித்த சோம்நாத் தன் ஆட்டத்தை திரும்ப தொடர நாள் பார்த்தார். அதன் பயனாக வீரபாண்டியின் வீட்டிற்குச் சென்றார்.

சோம்நாத்தை திட்டிவிட்டு வந்த வைத்தி அங்கு ஹாலில் அமர்ந்து இருந்த பவ்யாவைப் பார்த்து அவர் அருகில் சென்றார்

"என்னை மன்னிச்சிடு பவ்யா. என் தம்பியைப் பற்றி தெரிஞ்சுக்காம உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன். காசு சம்பாதிக்க ஆசைப்பட்ட நான் சுற்றி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்காம போயிட்டேன். உன்னைப் பத்தி சோம்நாத் அவ்வளவு சொல்லியும் நான் அதை நம்பல. ஆனா உன் மேல் அதீத அன்பு உன்னை மனோகரோடு பார்த்ததும் கோபமாக மாறிடுச்சு. அதான் என்னை அறியாம நடந்துக்கிட்டேன்" என்று வைத்தி பவ்யாவிடம் மன்னிப்பு வேண்ட பவ்யா அதை ஏற்க மறுத்தார்.

"உங்களால் மனோகர் அண்ணா எவ்வளவு அசிங்கப்பட்டார்ன்னு உங்களுக்குத் தெரியுமா! நிதாவிற்கு உடம்பு சரியில்லை னு சொன்னதும் உங்களுக்கு பலமுறை முயன்று அதன்பின் தான் அவருக்கு அழைத்தேன் என்று பவ்யா சொன்னதும் வைத்திக்கு தான் சோம்நாத்தின் பேச்சை கேட்டு நடந்து கொண்டது கண்களில் வலம் வந்தது.

மேலும் பவ்யா பேசினார். "நீங்கள் வரவில்லைன்னு சொல்லி வேற வழியில்லாம அவருக்கு அழைத்தேன். ஆனா மனோகர் அண்ணா வரவே, மாட்டேன்னு சொன்னார். நான் நிதாவின் நிலையை சொன்னதும் தான் வரவே சம்மதிச்சார். அவர் மட்டும் இல்லைனா நிதா இந்நேரம்" என்று சொல்லி அழுக அப்போது அங்கு மனோகர் வந்தார்.

"பழசை எல்லாம் இப்ப எதுக்கு பேசிட்டு இருக்கம்மா" – மனோகர்.

அவர் அப்படி சொன்னதும் அவரை நிமிர்ந்து பார்த்த பவ்யா.

"அண்ணா! அவர்க்கு அன்னைக்கு நடந்தது தெரியணும்னா. என்னால திரும்பவும் தீக்குளிக்க முடியாது ண்ணா" என்று பவ்யா சொல்ல வைத்திக்கு யாரோ தன்னை கண்ணத்தில் அறைந்தது போல் இருந்தது

சூழ்நிலை வேறு விதமாக மாற மனோகர் பேச்சை மாற்றினார்.

"அதான் அவர் இவ்வளவு தடவை மன்னிப்பு கேட்கிறார்ல ம்மா! அவரை மன்னிச்சிடு பவ்யா! பழசை பிடிச்சு தொங்காம விட்ட வாழ்க்கையை வாழ பழகிக்கோ பவ்யா" என்று மனோகர் கூற வைத்தி அவரிடம் வந்தார்.

"சாரி! மனோகர்! நான் உன்னை எதிரியா பார்த்தாலும் எனக்காக நீ நிறைய செஞ்சுட்ட! உனக்காக நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்" என்று வைத்தி சொல்லி அவரை கட்டிக் கொள்ள மனோகரும் அவரை மன்னித்தார்.

"விடுங்க பாஸ்... கிழக்கும் மேற்கும் ஒன்றாகி இருக்கோம். இனி அழ வேண்டாம். ஜாலியா இருப்போம். நமக்கு வந்த தடைகள், துன்பங்கள் எல்லாம் போச்சு! இனி சந்தோசம் மட்டும் தான் இருக்கணும். எல்லாரோரும் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு போகலாம்" என்று மனோகர் சொல்ல அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இங்கு வைத்தி பவ்யாவிடம் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த யவன் முகம் யோசனையானது. 'இன்னும் எத்தனை நாள் தான் உன் டிராமா பலிக்கும்னு நான் பார்க்குறேன் வைத்தி. உன்னை கொல்லாம விடப் போறதில்லை நான். எங்க அக்கா துடிச்சது போல நீயும் துடிச்சு சாகணும்' என்று யவன் வைத்தியை முடிக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.

வைத்தி மனம் மாறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கொண்டாடி மகிழ "அண்ணா! என்று குரல் கேட்டு அனைவரும் திரும்பினர் . அங்கு சோம்நாத் நின்று இருந்தார். சோம்நாத்தை பார்த்த யவனுக்கு தரங்கிணியை அவன் தனியாக சந்திச்சது நினைவில் ஆட அவன் முகம் கோபத்தை தத்தெடுத்தது.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 21

சோம்நாத்தை பார்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக உணர்ச்சியை வெளிப்படுத்தினர். நிதா சோம்நாத்தை புரியாமல் பார்த்தால் என்றால், வீரபாண்டி கோபத்தோடு அவனை பார்த்தார். யவன் அவரை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தான். சாம் மற்றும் சவிதாவோ

'யார்டா இது புது என்ட்ரி' என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியாக அங்கிருந்தவர்களில் லமியை தவிர மற்ற அனைவரும் எதிர்மறையான உணர்ச்சிகளோடு சோம்நாத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். சோம்நாத்தை பார்த்து கோபமான வீரபாண்டி உள்ளே சென்றுவிட்டார்.

வைத்தி சோம்நாத்தை கண்டும் காணாதது போல இருக்க லமி அவன் அருகில் சென்றார்.

"வாடா சோமு, என்ன விசயமா இங்க வந்திருக்க?" – லமி.

"அம்மா! அண்ணா என் மேல் கோபமாக இருக்கார். என்னை மன்னிக்க சொல்லி கேட்க வந்திருக்கேன்மா" - சோமு.

"நீ தப்பு பண்ணுயா? என்னடா சொல்ற?" – என்று கூறிய லமி வைத்தியிடம் திரும்பினார்.

"என்ன வைத்தி இதெல்லாம்?" – லமி.

"அதை அவன்கிட்டயே கேளுங்கம்மா" – வைத்தி.

"நான் எந்த தப்பும் செய்யலமா. கணக்கு வழக்குகளை சரியா பாக்காம நஷ்டம் ஏற்பட்டிருச்சு அதுக்கு என்னை திட்டுனார். அதை நான் ஏற்றுக்குறேன்மா.

ஆனா அதற்காக இப்படி என்னை மட்டும் தனியா விட்டுட்டு நீங்களா சேர்ந்து இங்கு மகிழ்ச்சியா இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்குமா. அதான் உங்க கூட சேர்ந்து இருக்க இங்க வந்தேன். அண்ணனை என்னை மன்னிக்கச் சொல்லுங்கம்மா" – சோம்நாத்.

"நீ தனியா இருக்கேன்னு சொல்லாதடா. நான் இருக்கிறேன் உனக்கு. நீ தைரியமா உள்ளே வா.. யார் உன்னை என்ன சொல்றாங்கனு நான் பார்க்குறேன் என்று லமி அங்கிருந்தவர்களை பார்த்தபடியே சொல்லிவிட்டு சோம்நாத்தை அழைத்து கொண்டு உள்ளே வர லமிக்காக சோம்நாத்தை உள்ளே அனுமதித்து அமைதியாக நின்று இருந்தனர் வைத்தி, வீரபாண்டி மற்றும் அனைவரும்.

லமி தன் ரூமின் எதிரில் உள்ள அறையில் சோம்நாத்திற்கும் இடம் தர சோம்நாத் லமியிடம் "நீங்க மட்டும் தான் என்னை புரிஞ்சு வச்சிருக்கீங்கம்மா. ஆனால் அண்ணாவும், அப்பாவும்" என்று சோம்நாத் இழுக்க லமி இடையில் பேசினார்.

"நீ கவலைபடாத சோமு. எல்லாரும் விரைவில் உன்னை புரிஞ்சிப்பாங்க" என்று கூறிவிட்டு லமி சென்றுவிட கதவை அடைத்த சோம்நாத்.

தன் ஜீப்பாவில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"ம்ம்ம் ஒரு வழியா வீட்டிற்குள் வந்தாச்சு. அண்ணாவை கரெக்ட் பண்ணாத்தான் பழைய மாதிரி காசு பார்க்க முடியும். அதற்காகவாவது நடிடா சோமு" என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டு போய் படுக்கச் சென்றான் சோம்நாத்.

சோம்நாத்திடம் பேசிவிட்டு வந்த லமி தன் அறையினில் நுழைந்து வெங்கியை திரும்பிப் பார்க்க அவர் ஏதோ யோசனையில் இருந்தார்.

அதைப் பார்த்த லமி அவரிடம் "என்ன யோசனைல இருக்கீங்க?"

"ஆஹான்.. அது ... வேற ஒன்றும் இல்லைமா நம்ம சோம்நாத்தை பத்தி தான் யோசிட்டு இருக்கேன்" – வெங்கி.

"ஏன் அவனுக்கு என்ன?" – லமி.

"அவனை பார்த்தா எனக்கு வர வர அவன் ஏதோ சரி இல்லைன்னு தோணுது?" – வெங்கி.

"என்ன சரியில்லையா?" – லமி.

"ஆமாமா. அவன் ஏதோ தப்பு பண்றான்னோன் தோணுது" - வெங்கி.

"அவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டதை நீங்க பார்த்தீங்க. ஏன் இப்படி எல்லாரும் அவனையே குறை சொல்றீங்க" – லமி.

"சோம்நாத் தான் பவ்யாவிற்கும் வைத்திக்கு இடையில் பிரச்சனை வர காரணமா இருந்திருக்கான். பவ்யாவை பற்றி நடக்காததை எல்லாம் வைத்திகிட்ட சொல்லி அவன் மனசை தேவையில்லாம கெடுத்திருக்கான்" – வெங்கி.

"ஓஹோ .. இப்படி எல்லாம் யார் உங்ககிட்ட சொன்னா? என்ன உங்க மருமகள் புலம்பினாளாக்கும்?" – லமி.

"ச்சூ இப்ப எதுக்கு நம்ம பேச்சுல அவளை இழுக்குற?" – வெங்கி.

"ம்ம்ம் ஏன் சொல்லமாட்டீங்க? அவளை பத்தி சொன்னா உங்களுக்கு பொத்துட்டு வந்துடுமே. சும்மா... தேவையில்லாம சோமுவையே குறை சொல்லாதீங்க .

வைத்தி ஒழுங்கானவனா இருந்து இருந்தா என்ன பண்ணிருக்கணும்? பவ்யாவை நேரடியா கூப்பிட்டு சோம்நாத் சொன்னதை பற்றி விசாரிச்சிருக்கணும் . அதைவிட்டுட்டு சோமு சொல் பேச்சு கேட்டு அவனா பவ்யாவை விலக்கி வச்சு அவன் வாழ்க்கையை கெடுத்துகிட்டான். அதுக்கு சோமு என்ன பண்ணுவான்" – லமி.

"அதில்லை லட்சுமி ..." – வெங்கி.

"பேசாம படுத்து தூங்குங்க . அவங்க அவங்க பிரச்சனையை அவங்கதான் தீர்த்துக்கணும். தேவையில்லாம அடுத்தவங்க வாழ்க்கையை சீர் செய்ய கிளம்பிடாதீங்க. அது பிரச்சனையை அதிக படுத்துமே தவிர குறைக்காது. அது பெத்த பிள்ளை வாழ்க்கையாக இருந்தாலும் சரி என்று லமி அவரை திட்டிவிட்டு படுத்துக் கொள்ள வெங்கிக்கும் லமி சொல்வது சரியாக பட பேசாமல் படுத்துக் கொண்டார். ஆனால் அப்போதைக்கு அவர் படுத்தாலும் அவருள் ஒரு நெருடல். காலையில் வீரபாண்டி சோம்நாத்தை பற்றி சொன்னதே நினைவில் ஆடியது.

*****

அன்று வீரபாண்டி தோட்டத்தில் தனியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவரிடம் பேச அவர் அருகில் சென்றார் வெங்கி. வெங்கியை பார்த்ததும் சிநேகமாக முறுவலித்தார் வீரபாண்டி. அவர் புன்னகையை பார்த்த வெங்கி பேச்சை தொடர்ந்தார்.

"என்ன வாக்கிங் போறீங்களா வீரபாண்டி?" – வெங்கி.

"ஆமா வெங்கடேசன் சும்மா உட்கார்ந்தா தரங்கிணி நினைப்பா வருது. அதனால் இப்படி நடந்தா கொஞ்சம் நல்லா இருக்குற மாதிரி இருக்கு. அதான் நடந்துகிட்டு இருக்கேன் வெங்கடேசன்" – வீரபாண்டி.

"ஓ! அப்படியா வீரபாண்டி. இன்னுமா தரங்கிணி பத்தி எதுவும் தகவல் தெரியல?" – வெங்கி.

வெங்கி அப்படி கேட்டதும் "இல்லை" என்று சோகமாக தலையசைத்தார் வீரபாண்டி.

அவரது சோகத்தை பார்த்த வெங்கி "கவலைப்படாதீங்க வீரபாண்டி. உங்க பொண்ணு சீக்கிரம் கிடைச்சிருவா" – வெங்கி.

அதற்கு வீரபாண்டியோ "இவ்வளவு நாள் வராதவ. இப்பவா வர போறா? எனக்கு அவ வருவான்ற நம்பிக்கை சுத்தமா போயிருச்சு வெங்கி" என்று சொல்லிவிட்டு வீரபாண்டி மெளனமாக நடக்க, அவரது மனநிலையை பார்த்த வெங்கி அவரை மாற்றும் பொருட்டு வீரபாண்டியின் தொழில்பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

வெங்கி தொழில் பற்றி கேட்டதும் வீரபாண்டி சற்று தெளிந்து பதில் சொல்ல ஆரம்பிக்க , வெங்கியோ தயங்கியபடியே அந்த விசயத்தை கேட்டார்.

"உங்க கிட்ட ஒன்று கேட்கலாமா வீரபாண்டி?" – வெங்கி.

"ம்ம்ம் கேளுங்க வெங்கடேசன்" – வீரபாண்டி.

"அது வந்து... வீரபாண்டி.. சோமு சம்பந்தப்பட்ட அந்த தீர்ப்பு..." என்று வெங்கி இழுக்க நடுவில் அவரை பேசவிடாமல் தடுத்தார் வீரபாண்டி.

"என்னை மன்னிச்சிடுங்க வெங்கடேசன். இதை சொல்றதுக்கு எனக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்.

உங்க மகன் சோம்நாத் ஒரு பசுதோல் போர்த்திய புலி வெங்கடேசன். அது எப்பனாலும் தன் உண்மை குணத்தை காட்டாம விடாது. கவனமா இருங்க" என்று கூறிவிட்டு வீரபாண்டி சென்றுவிட அதை கேட்ட வெங்கியோ திகைத்து நின்றார்.

இதை எல்லாம் யோசித்தபடியே படுத்துகிடந்த வெங்கி வைத்தியின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், பவ்யாவிற்கும் வைத்திக்கு இடையில் இருக்கும் பிரச்சனை , சோமுவின் தீர்ப்பு என்று பலவற்றையும் சிந்தித்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

"நீ ஏதோ தப்பு பண்ணி இருக்க சோமு. அது அனைத்தும் கூடிய சீக்கிரம் வெளியே தெரியும். உண்மை தெரியும் போதும் உன் நிலை என்னவாக இருக்கும்டா" என்று தனக்குள் கேட்டுக் கொண்ட வெங்கி அப்படியே தூங்கிப் போனார்.

*****

பிரசாத் போனில் பேசியதை தொடர்ந்து பெளர்ணமி மற்றும் அமாவாசை இரவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான் யவன்.

பெளர்ணமி இரவுகளில் அவனுள் மாற்றம் ஏற்பட, அதை தன் எதிரில் இருந்த கண்ணாடியில் கண்டவன் தன்னை கட்டுப்படுத்த முயல அது முடியாமல் போக தன் தோற்றத்தை பிரதிபலித்த கண்ணாடியை உடைத்தான் யவன் .

பிரசாத் கூறியது போல தான் மனிதனாக உருமாறினாலும் அந்த அமாவாசை, பெளர்ணமி இரவுகள் தன்னை ராட்சனாக மாற்றுவதை உணர்ந்து கொண்ட யவன் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்தான்.

இரவு அகல அகல சற்று நேரத்தில் அவனது தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி மனிதத் தோற்றத்திற்கு வந்தடைந்தான் யவன் .

இதன்மூலம் யவன் ஒன்றை புரிந்து கொண்டான். தன்னிடம் இருக்கும் இந்த ராட்சஷ உருவம் காலத்திற்கும் தன்னை விட்டு அகலாது என்று உணர்ந்து கொண்டான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 22

குளுமையான அந்த ஊட்டி குளிர்பிரதேசத்தில் சுட்டெரிக்கும் சூரியன் வெளியே வந்தாலும் பனி தன் போர்வையை விளக்காது குளிர் நிலையை தக்க வைத்து கொண்டிருக்க, அதை பார்த்த சூரியனும் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு தன் செங்கதிரை கோலோட்ச முயன்று கொண்டிருக்கும் அழகான காலை பொழுது.

காலை வேளையில் அந்த கிராமத்தில் தனியாக நின்றிருக்கும் பிரமாண்டமான அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்த அந்த டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட அமர்ந்து இருந்தனர்.

அனைவரும் அமர்ந்து இருக்க அங்கு வந்த யவனோ நிதாவை பார்த்ததும் தான் இரவு கோபப்பட்டது நினைவில் வர அவளை சமாதானப்படுத்து பொருட்டு நிதாவை ஒரு வித புன்சிரிப்போடு பார்த்து கொண்டே அவளை இடித்துக் கொண்டு அருகில் அமர்ந்தான்.

அவன் அப்படி அமர்ந்ததும் நிதா கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு தன் சேரை தள்ளிப் போட்டு அமர்ந்து கொள்ள, யவனும் அவளை விடுவதாக இல்லை. வேண்டுமென்றே தன் சேரை நகட்டி போட்டு மேலும் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

நிதா நகர முயற்சிக்க அவளது கைகளை பிடித்துக் கொண்டு அவளை மேலும் நகர விடாமல் அவன் செய்ய நிதா வேறு வழியின்றி சாப்பிட ஆரம்பித்தாள்.

இவர்களது அட்டகாசத்தை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாம் “ ம்ப்ச்! இதுக வேற நேரம் காலம் தெரியாம ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்குதுங்க. நான் இன்னும் சிங்கிளாக இருக்கேன்டா. நீங்க வேற வயிறெச்சலை கிளப்பிக் கிட்டு" என்று சாம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது அங்கு சவிதா வந்தாள்.

அவளை பார்த்த சாம் "ஐ நம்மாளு..." என்று நினைத்த சாம் அவளிடம் "சவிதா ராணி அவர்களே! வாங்க... வந்து உட்காருங்க. சாப்பிடலாம்" என்று ஆசையாக சாம் அவளை அழைக்க சவிதாவோ அவனை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள்.

சாமிற்கு சொத்தென்று ஆகிவிட்டது. "சாமு! நீ கடைசி வரை சிங்கிள் தான் போலடா..." என்று தன்னை தேற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

இங்கு நிதாவோ தீவிரமாக சாப்பிட்டு கொண்டிருக்க அதை பார்த்த யவன் வேகமாக தன் பேண்டில் மறைத்து வைத்திருந்த இறகை கொண்டு நிதாவின் மூக்கில் விட்டு குடைய, இதை சற்றும் எதிர்பாராத நிதா தும்ம ஆரம்பித்தாள்.

நிதா தும்முவதை பார்த்த லமி வேகமாக அவள் அருகில் வந்தார்.

"என்னாச்சு நிதா? ஏன் தும்முற?" – லமி.

"அது வந்து... லமி... இவர்.." என்று நிதா இழுக்க அதற்குள் தும்மல் வர நிதா தும்ம ஆரம்பித்தாள்.

நிதா தும்ம ஆரம்பித்ததும் யவன் வேகமாக "லமி பொய் சொல்றா இவ... நைட் புல்லா ஒரே தும்மல். அவளுக்கு ஜலதோசம் பிடிச்சிருக்கு"

"நோ லமி... அவர் பொய் சொல்றார். அவர் தான் மூக்கில் விட்டு.." என்று தும்மிக் கொண்டே நிதா சொல்ல

அதற்குள் வெங்கியோ லமியிடம் "லட்சுமி அது சாதாரண தும்மலா இருக்கும். அதுக்கு போய் ஏன்மா நீ டென்சன் ஆகுற. பார் தும்மல் நின்னுருச்சு"

வெங்கியிடம் லமி திரும்பிய கேப்பில் யவன் மறுபடியும் அவள் நாசியில் இறகை விட தும்மலை நிறுத்திய நிதா மேலும் தும்ம ஆரம்பித்தாள்.

அதை பார்த்த லமி வேகமாக நிதாவின் பக்கம் திரும்பினார்.

"ஏங்க அங்க பாருங்க நிதாவிற்கு இன்னும் தும்மல் நிக்கல" என்று லமி சொல்ல வெங்கி அவரை தடுத்தார்.

"விடுமா! எல்லாம் சரியாகிடும்" என்று சொல்லிவிட்டு வெங்கி சாப்பிட ஆரம்பிக்க லமி அறை மனதாக சாப்பிட ஆரம்பித்தார்.

சவிதா எல்லாருக்கும் பரிமாறிக் கொண்டிருக்க, சாம் அவளை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

தும்மல் நின்றதும் யவனை முறைத்துவிட்டு நிதா சாப்பிட ஆரம்பிக்க, யவன் சிரித்துக் கொண்டே தன் கையில் இருந்த கிளிசரின் பாட்டிலை எடுத்து அதில் சிறிதளவை பஞ்சினில் நனைத்து யாருக்கும் தெரியாமல் நிதா குனிந்து சாப்பிடும் போது அவள் கண்களில் வைக்க நிதா கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

யவன் செய்யும் லீலைகளை கண்ட நிதா அவனை திட்ட ஆரம்பிப்பதற்குள் லமி நிதாவை பார்த்துவிட்டார்.

"என்ன நிதாமா? இப்படி கண் கலங்கி இருக்கு? என்னாச்சு உனக்கு?" – லமி.

"அது வந்து.. லமி இவர் தான்.." என்று நிதா இழுக்க யவன் முந்திக் கொண்டு பேசினான்.

"லமி நான் தான் சொன்னேன்ல அவளுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்கு உங்க வைத்தியம் தேவைப்படுது" – யவன்.

அவன் அப்படி கூறியதும் தான் நிதாவிற்கு அவனது செயல்களுக்கு காரணம் புரிந்தது. வேகமாக அவள் அவனை பற்றி சொல்ல வாயெடுக்க, யவன் லமியின் அருகில் இருந்த டம்ளரை தட்டிவிட அது கீழே விழுந்தது.

அதை எடுக்க லமி கீழே குனிய நிதாவின் வாயில் பெரிய கவளத்தில் இட்லியை திணித்தான் யவன். இட்லி தொண்டை அடைக்க நிதா இரும ஆரம்பித்தாள்.

இதை கண்ட அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க டம்ளரை எடுத்துக் கொண்டு மேலே எழுந்த லமி நிதா இருமுவதை பார்த்துவிட்டு ஒரு முடிவோடு பேசினார்.

"இனி என்னால் முடியாது! இதோ வரேன் நிதா" என்று கூறிவிட்டு சென்ற லமி மருந்து சகிதத்தோடு சற்று நேரத்தில் திரும்பினார். அதை பார்த்த நிதா அதிர்ச்சியடைந்தாள்.

மருந்து பாட்டில்களை பார்த்த நிதா யவனிடம் திரும்ப "இட்ஸ் மை டர்ன் பேபி! என்ஜாய்" என்று கூறிய யவன் "ம்ம்ம் உங்க டிரிட்மெண்டை ஆரம்பிங்க லமி" என்று சொல்ல லமி வேகமாக நிதா அருகில் வந்தார்.

"நோ லமி! எனக்கு ஒன்றுமில்லை. எல்லாம் இவர் பண்ற வேலை" – நிதா.

"நிதாமா தேவையில்லாம அவரை சொல்லாத. மொத ஜலதோசத்திற்கு மருந்து குடி" – லமி.

"லமி ப்ளீஸ் புரிஞ்சிக்கோ" என்று ஆரம்பித்த நிதா "தாத்தா! சொல்லுங்க" என்று வெங்கியை துணைக்கு அழைத்தாள்.

"லட்சுமி நிதாவுக்கு ஒன்றுமில்லைமா" என்று வெங்கி சொல்ல ஆரம்பிக்க "உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பேசாம இருங்க" என்று அவரை லமி அடக்க வேறு வழியில்லாமல் அங்கிருந்த அனைவரும் அங்கு நடப்பபவற்றை வேடிக்கை பார்த்தனர்.

தன் பேச்சு எடுபடாது என்று தெரிந்த நிதா ஓட ஆரம்பிக்க அவளை பிடித்தான் யவன் "எங்கடி ஓடுற! இன்னைக்கு உனக்கு இருக்குடி" என்று கூறி அவளை பிடித்துக் கொள்ள லமி அங்கிருந்த பாட்டில் ஒவ்வொன்றையும் எடுத்து நிதாவின் வாயில் ஊற்ற ஆரம்பிக்க நிதா திண்டாடிப் போனாள்.

இவர்கள் செய்வதை பார்த்த சாம் "இது கூட நல்லா இருக்கே. இதை நம்ம ஆளுகிட்ட செஞ்சா எப்படி இருக்கும்" என்று நினைத்து சவிதாவை திரும்பிப் பார்த்தான்.

சவிதா தன் அருகில் வந்து பரிமாறும் பொழுது யவன் கீழே போட்டிருந்த இறகை எடுத்து அவள் அறியா வண்ணம் அவள் மூக்கில் விட முயல, அவன் சைகையை கண்டு கொண்ட சவிதா அவன் கையை பிடித்து நிறுத்தினாள். அவன் கையை பிடித்த சவிதா அந்த இறகை அப்படியே திருப்பி அதை சாமின் மூக்கில் நுழைத்துவிட்டுச் ஒன்றும் தெரியாதது போல் சென்றுவிட, சாம் தும்ம ஆரம்பித்தான்.

சாம் தும்முவதை பார்த்த லமி "சாம் உனக்கும் ஜலதோசமா" என்று கேட்டபடி சாமை நோக்கி திரும்ப சாமோ அலறினான்.

"நோ! நோ! லமி! எனக்கு ஒன்றும் இல்லை! ஐ அம் ஆல்ரைட். சீ தும்மல் கூட நின்னு போச்சு" என்று சொல்லி லமியை சமாளிப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த பிளான் சொதப்பவும் சாம் அமைதியாக அமர்ந்து இருக்க யவன் அவன் கைகளில் கிளிச்சரின் பாட்டிலை திணித்தான்.

அதை பார்த்த சாம் "தேங்க் ஸ் படி" என்று சொல்ல

"என்ஜாய் மேன்" என்று சொல்லிய யவன் நிதா வாஷ்ரூம் போய்விட்டு தன் ரூமை நோக்கிச் செல்வதை பார்த்து வேகமாக அவள் பின் சென்றான்.

யவன் கொடுத்த பாட்டிலை எடுத்த சாம் சவிதாவின் கண்களில் அவள் அறியாமல் வைக்க முயல, வேகமாக சவிதா அவன் கைகளை பற்றி பின்பக்க திருப்பினாள். சாம் சவிதா அப்படி செய்வாள் என்று சற்றும் எதிர்ப்பாராமல் முன்னால் சாய்ந்தான்.

சாப்பாடு தட்டில் அவன் முகம் மோத முகம் முழுவதும் சட்னி பூசிக் கொண்டு அலங்கோலமாக இருந்தான்.

சாமின் தோற்றம் கண்டு வெங்கி, லமி மற்றும் அப்போது அங்கு வந்து கொண்டிருந்த வீரபாண்டி, பவ்யா, மற்றும் வைத்தி அனைவரும் சிரித்தனர்.

அப்போது அங்கு வந்த கண்ணப்பர் அனைவரின் சிரிப்பை பார்த்துவிட்டு "அய்யா! இப்படி சந்தோசமா நீங்க இருந்து எவ்வளவு நாளாச்சு" என்று அவரை பார்த்து சொல்ல வீரபாண்டி சிரிப்பை நிறுத்திவிட்டு அவரிடம் விரைந்தார்.

"ஆமாம் கண்ணப்பா. இப்ப தான் வீடு வீடா இருக்கு. தரங்கிணி மட்டும் இருந்தால் இன்னும்.." என்று அவர் ஆரம்பிக்க

"அய்யா! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க நம்ம குலதெயவ வழிபாடு இல்லாம இருக்கனால் இப்படி தரங்கிணி அம்மா பற்றி தெரியாம இருக்கோ என்னவோ? ஒரு தடவை நம்ம கோயில்லுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்" என்று அவர் சொல்ல வீரபாண்டி சற்று நேரம் யோசித்தார்.

பின்பு அவரிடம் "ஆமாம் கண்ணப்பா! நீ சொல்வதும் சரிதான். நாம கோவிலுக்கு போக ஏற்பாடு பண்ணு" என்று சொல்ல கண்ணப்பர் வேகமாக அதை செயலாற்றச் சென்றார்.

குல தெய்வ வழிபாடு தரங்கிணி பற்றிய உண்மையை வீரபாண்டிக்கு எடுத்துச் சொல்ல வழிவகை செய்யுமா? வைத்தியை பவ்யா மன்னிப்பாரா? சோம்நாத்தின் குள்ள நரித்தனம் தொடருமா?

விடை விரைவில்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 23

காலை நேரம் :

கிராமத்தில் நடுநாயகமாக இருந்த அந்த பெரிய வீட்டில் அந்த அதிகாலை நேரம் பரபரப்பாக காட்சியளித்தது. அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். கண்ணப்பரின் சொல்லுக்கிணங்க வீரபாண்டி அனைவரையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக சொல்ல அதை ஏற்று அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர் .

அன்று காலையில் குளித்துவிட்டு டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வந்த யவன் கண்ணாடியின் முன் நின்று தலையை சீவிக் கொண்டிருக்க , உள்ளே வந்தாள் நிதா.

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த யவன் அங்கு நிதாவைப் பார்த்ததும் "டோலுமா! சீக்கிரம் கிளம்பு! கோவிலுக்கு போகணும்"

அதற்கு பதிலாக எந்த சத்தம் வராததை தொடர்ந்து திரும்பிப் பார்த்த யவன் அங்கு நிதா கதவை சாற்றிவிட்டு அவனை பார்த்துக் கொண்டே அருகில் வருவதை பார்த்து எச்சில் விழுங்கினான். நிதாவின் பார்வை மாற்றத்தை பார்த்த யவன் மனதுக்குள் அலறினான்.

"ஆத்தாடி! என்ன இப்படி பார்த்துட்டு வரா? பீ ஸ்ராங் யவா... இவக்கிட்ட இன்னைக்கு சிக்கிடாத" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் கண்ணாடியை விட்டு வேகமாக நகர முற்பட அவனது கைகளை பிடித்து நிறுத்தினாள் நிதா.

அவள் தன்னை நிறுத்தியதும் யவன் "என்ன?" என்று பயத்துடன் கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் அவன் அருகில் வந்த நிதா அவன் மார்பில் சாய்ந்தபடியே "நீங்க? நேற்று லமிகிட்ட இப்படி மாட்டிவிட்டிருக்க கூடாது? யவன் அத்தான்" – நிதா.

"ம்ம்ம் அதை இப்படி சாய்ஞ்சிட்டு தான் கேட்பியாடி? தள்ளுடி.." என்று அவளை தள்ளிவிட்டு அவன் நகர முற்பட, மீண்டும் அவன் கைகளை பிடித்தாள் நிதா.

"இப்ப என்னடி?" – யவன்.

"நேற்று நீங்க செஞ்சதுக்கு நான் எதாவது செய்யணும்ல யவன் அத்தான்?" – நிதா.

"அதுக்கு! நீ என்ன செய்யப் போற?" – யவன்.

"ம்ம்ம் அதுக்கு ரிவஞ்ஜா..." என்று அவள் இழுக்க

"ம்ம்ம் சொல்லுடி ரிவஞ்ஜா?" – யவன்.

"உங்களை நான் இன்னைக்கு ..." – நிதா.

"ம்ம்ம் இன்னைக்கு?" – யவன்.

"ம்ம்ம் .. பொண்டாட்டியா மாறி உங்களை ஒரு வழி பண்ணிடலாம்னு இருக்கேன்" – நிதா.

"நீ என்ன லூசா ஆல்ரெடி நீ என் பொண்டாட்டியா தானடி இருக்க. அப்புறம் என்ன? ..." என்று இழுத்த யவன் பாதியில் நிறுத்திவிட்டு அவளை திகைப்பாக பார்த்தான்.

"டோலுமா? நீ .." - யவன்.

"ஆமா அத்தான் நீங்க தான் இப்ப நார்மல் ஆகிட்டீங்களை? அப்புறம் என்ன? அதுமில்லாம என் யவன் அத்தான் இதுவரை எந்த தப்பும் செய்யல. அப்படி செஞ்ச விசயங்கள் எல்லாம் என் நல்லதுக்குத்தான் தெரிஞ்சிடுச்சு. இனி என்னால உங்களை விட்டு பிரிந்திருக்க முடியாது அதனால இனி நான் உங்களை விடுறதா இல்லை" என்று கூறியபடியே நிதா அருகில் வர யவன் வேகமாக கட்டிலில் ஏறி நின்று கொண்டான்.

"இதோ பார்! இன்னும் சில வேலைகளை நான் முடிக்கணும். அதனால அது வரைக்கு என் பக்கத்தில் வராதடி . தள்ளிப் போ" – யவன்.

"நோ முடியாது! நான் இனி உங்களை விட மாட்டேன்" – நிதா.

"அய்யோ சொன்னா கேளுமா! பக்கத்தில் வராத. கலிகாலம் டா! நான் செய்ய வேண்டியதை எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க? நேற்று வரை நல்லாத்தான இருந்த இன்னைக்கு என்னாச்சு உனக்கு?" – யவன்.

"ம்ம்ம் உண்மை தெரிஞ்சிடுச்சு. அதனால் என் பயமும் போயிடுச்சு. இனி யவன் அத்தான் கூட வாழ்க்கையை வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்" – நிதா.

"அட போடி.. அங்குட்டு.. நீ என் கூட வாழ்ந்த வரைக்கும் போதும்.. நீ முதல வெளியே போ நான் கிளம்பணும்.. இல்லை அப்புறம் லமியை கூப்பிடுவேன்" – யவன்.

"வாழ்ந்த வரை போதுமா? நாம எங்க வாழ்ந்தோம். அதுவுமில்லாம யவனை எல்லாரும் ரொமான்டிக் பாய்யா பார்க்க ஆவலாக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதனால கோவாப்பரேட் பண்ணுங்க அத்தான்" – நிதா.

"முடியாது போடி" – யவன்.

"முடியாது... நீங்க இப்படி சொன்னா சரிப்பட்டு வர மாட்டீங்க. உங்களை..." என்று கூறிய நிதா அங்கு பெட்டில் அருகில் வைத்திருந்த வேட்டி, சட்டையை எடுத்தாள் .

அவள் வேட்டி , சட்டையை எடுப்பதை பார்த்த யவன் "ஏய்! ஏய்! இப்ப எதுக்கு அதை எடுக்குற நீ" கத்தினான்

"ம்ம்ம் கட்டிவிடத்தான்" – நிதா.

"வாட்?" – யவன்.

"ஆமா! இன்னைக்கு நான் தான் உங்களை கிளப்பிவிடப் போறேன்" – நிதா.

"என்ன? ஆர் யூ ஜோக்கிங்?" – யவன்.

"நோ அத்தான் ஐ அம் சீரியஸ்" என்று கூறிய நிதா யவனை பார்த்துக் கொண்டே தன் கைகளை நீட்ட யவன் புரியாமல் அவளைப் பார்த்தான.

"இப்ப எதுக்கு கை நீட்டுற நீ?" - யவன்.

"அதை இப்படி கொடுங்க?" என்று நிதா யவன் உடுத்தியிருந்த டவலைக் காட்ட "என்ன விளையாடுறீயா நீ? லமி அங்க கோவிலுக்கு லேட்டாச்சுனு எல்லாத்தையும் விரட்டிட்டு இருக்காங்க. நீ என்னடானா என்கூட விளையாடிட்டு இருக்க. உனக்கு விளையாட நேரம் காலம் இல்லை. போடி" என்று நிதாவை திட்டிவிட்டு தன் வேட்டி, சட்டையை நிதாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டு யவன் அருகில் இருந்த ரூமின் பக்கம் நகர முற்பட அவனை மேலே நகர விடாமல் தடுத்தாள் நிதா.

யவனை தடுத்த நிதா அவன் கையில் இருந்த வேஷ்டி, சட்டையை பிடுங்க யவன் திகைத்தான்.

"ஏய்! மனுமா ! விளையாடாதே! அய்யோ நெசமாத்தான் கட்டிவிட போறீயா? ஓ நோ! எல்லாம் தலைகீழா நடக்குதே என்னை காப்பாற்ற இங்க யாருமே இல்லையா? ப்ளீஸ் சேவ் மீ" – யவன்.

"ரொம்ப பண்ணாதடா?" – நிதா.

"என்னது டா வா? அய்யோ டெரர் ஹீரோவா, கெத்தா ரசிகர்கர்கள் முன்னாடி பார்ம் பண்ணி இருக்கேன் . இப்படி வேட்டி கட்டிவிட்டு என்னை கீழே இறக்காறாலே இவ" என்று சத்தமாக புலம்பினான்.

"ம்ம்ம் எல்லா கெத்து ஹீரோவும் ஹீரோயின்கிட்ட கிளைமாக்ஸ்ல சரண்டர் ஆகணும் அத்தான். இல்லை ரீடர்ஸ் ஒத்துக்க மாட்டாங்க! சோ எனக்கு ஒத்துழைங்க" – நிதா.

"ஏன்டி இப்படி பண்ற?" – யவன்.

"ம்ம்ம் நீங்க மட்டும் எனக்கு சேலை கட்டிவிடலாம் . நான் மட்டும் உங்களுக்கு வேட்டி கட்டிவிடக்கூடாதா? இது என்ன நியாயம்?" – நிதா.

"நோ பேபி! பக்கத்தில் வராத! என்ன பொண்ணுங்களா இப்படி இறங்கிட்டீங்க?" – யவன்.

"ஆமாம்! வேற என்ன பண்றது? நீங்களும் எத்தனை காலந்தான் எங்களுக்கே புடவை கட்டிவிடுவீங்க . நாங்களும் உங்களுக்கு எதாவது செய்யணும்ல" - நிதா.

"அடி போடி" என்று கூறிய யவன் அங்கும் இங்கும் ஓடி நிதாவிற்கு போக்கு காட்ட, ஒரு கட்டத்தில் நிதா அவனை பிடித்து நிறுத்தினாள்.

அவனை நிறுத்திய நிதா வேட்டியை அவனுக்கு அணிவிக்க முயல, யவன் கூச்சத்தில் நெளிந்தான்.

"அசையாதீங்க! அப்புறம் கை எசக்கு பிசக்கா எங்கையாவது பட்டுடப் போகுது" – நிதா.

அதை கேட்டு யவன் வாயை பிளக்க நிதா சிரித்துக் கொண்டே அவனுக்கு சட்டையை அணிவித்து பட்டன்களை போட்டுவிட்டாள்.

நிதா இங்கு செய்யும் ஒவ்வொரு செயலும் யவனை உணர்ச்சி பிழம்பாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் நிதாவோ எந்த உணர்ச்சியும் இன்றி அவனுக்கு உடையை அணிவித்துக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த யவன் அவளிடம், "ஏன்டீ இப்படி மரக்கட்டையா கட்டிவிட்ற. உனக்கு கொஞ்சமாவது பிலீங் இருக்கா?" என்றான்.

"ம்ம்ம் நீங்க மட்டும் என்னவாம் எனக்கு இப்படித்தான் சேலைகட்டி விட்டீங்க . அப்ப எனக்கும் இப்படிதான இருந்திருக்கும்." – நிதா.

"சேலை கட்டிவிட்டேனா? இந்த சம்பவம் எப்படி நடந்துச்சு?" – யவன்.

"ஞாபகம் இல்லையா. அப்ப இதை பாருங்க." என்று நிதா தன் கைகளை சுழற்ற அதை பார்த்த யவன் குழப்பத்துடன் "என்னடி கையை சுற்றி வட்டம் போடுற? என்ன பிளாஷ்பேக்கா?" என்றான்.

"இல்லை! பார்ட் 1 சீன் ரிபீட்" – நிதா.

"ஆத்தா! ஆளைவிடு" என்று யவன் சொல்லிவிட்டு பால்கனிக்கு செல்ல நிதா சிரித்துக் கொண்டே கோவிலுக்கு கிளம்பினாள் . கிளம்பி வெளியே வந்த நிதாவை பார்த்த யவன் மயங்கி போனான்.

அவள் அருகில் ஆசையோடு வந்தவன் "என்னடி சேலை எல்லாம் கட்டி ஆளை அசத்துற"

"ம்ம்ம் நல்லா இருக்கா! நானா கட்டுனேன்" – நிதா.

"ம்ம்ம் உனக்கு சேலை கட்டி ரொமான்ஸ் பண்ணலாம்னு நினைச்சேன். எனக்கு ரொமான்ச் பண்ண இருந்த ஒரு வழியும் போச்சா?" – யவன்.

"ஆமாம் போயே போச்சு" என்று அவனிடம் கையை விரித்து சொல்லிவிட்டு நிதா வெளியே செல்ல கதவை திறக்க முயல அவளை பின்னிருந்து தடுத்தான் யவன்.

"உணர்ச்சியை கிளம்பிவிட்டுட்டு எங்கடி போற? நான் உன்னை விட்ருவேனா என்ன? உன்னை .." என்று கூறிய யவன் அவளை நோக்கி குனிந்தான்.

இங்கு அனைவரும் சந்தோசமாக கிளம்பிக் கொண்டிருக்க சோம்நாத் லமியின் முன் சோகமே உருவாக நின்றிருந்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 24

லமியின் முன் சோம்நாத் நின்றிருக்க, லமி வேகமாக அவர் அருகில் வந்தார்.

"என்ன சோமு? என்னாச்சு?" – லமி.

"அம்மா! நீங்க கூட என்னை மன்னிக்கலயாமா?" – சோம்நாத்.

"ஏன்டா அப்படிச் சொல்ற? பெத்தவளுக்கு தன் பிள்ளை என்ன செஞ்சாலும் வெள்ளை கட்டி தான்டா" – லமி.

"அப்புறம் ஏன்மா? என்னை விட்டுட்டு நீங்க மட்டும் கோவிலுக்கு போறீங்க" – சோம்நாத்.

"அப்படிலாம் இல்லைடா! அம்மா உன்னை விட்டு போவேனா? நீ வா என்கூட" – லமி.

"வேண்டாம்மா! நான் வரது இங்க இருக்கும் யாருக்கும் பிடிக்கல? அப்புறம் நான் எதுக்கும்மா வந்துகிட்டு? நான் இங்கயே தனியா இருந்துக்குறேன்" – சோம்நாத்.

"நீ வா என்கூட உன்னை யார் வர வேண்டாம்னு சொல்றான்னு நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லிவிட்டு லமி சோம்நாத்தை கிளம்பச் சொல்ல, சோம்நாத் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

"என்ன? என்னைவிட்டுட்டு நீங்க எல்லாரும் சந்தோசமா இருப்பீங்க? அதை நான் பார்த்துட்டு சும்மா இருக்கணும்மா? முடியாது? உங்க எல்லாரையும் நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன்" என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான் சோம்நாத்.

இங்கு நிதாவை விட்டு விலகிய யவன் அவளை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கண்களை மெதுவாக திறந்த நிதா "ம்ம்ம் இப்ப மட்டும் உங்களுக்கு லேட் ஆகலையாக்கும்" என்று யவன் நெஞ்சில் குத்திவிட்டு கதவை திறக்க, யவன் அவளை அருகில் இருந்த சுவரில் சாய்த்தான்.

"மனுமா? நாம கோவிலுக்கு போகணுமா?" என்று அவளது கன்னங்களில் உரசியபடியே கேட்க

"ம்ம் ஆமா போகணும்" – நிதா.

"நாம போகாம இங்கேயே இருந்து..." என்று யவன் இழுக்க

"போகாம இங்கேயே இருந்து என்ன செய்யணும்னு சொல்றீங்க?" – நிதா.

"இதை செய்யணும்னு சொல்றேன் என்று கூறிய யவன் தன் சட்டையில் கழண்டிருந்த முதல் பட்டனை காட்டினான் .

அதை பார்த்தவள் "ச்சூ இதை போடச் சொல்லவா இவ்வளவு நேரம் போராடுனீங்க? நான் என்னவெல்லாமோ நினைச்சேன்" என்று கூறிய நிதா அந்த பட்டனை போட முயல வேகமாக அவளை தடுத்தான் யவன்.

யவன் தடுத்ததும் நிதா கேள்வியாக பார்க்க யவன் "அப்படி போடக்கூடாது! மனுமா" என்று குழைந்தபடியே சொன்னான்.

"அப்புறம் எப்படி போடணும் துரை அவர்களே" என்று நிதா கேட்க அவளது இதழை குறிப்பால் காட்டினான் யவன். யவனின் பார்வையை பார்த்த நிதா திடுக்கிட்டாள்.

"அது எப்படி போட முடியும். என்னால் முடியாது . நான் கிளம்புறேன்" என்று நிதா மறுத்துவிட்டு நகர முற்பட

"அப்ப நானும் இங்கிருந்து நகர மாட்டேன்" என்று அடம்பிடித்தான் யவன்.

"வராதீங்க அங்கேயே இருங்க" என்று சொல்லிவிட்டு நிதா வெளியே வர லமி அவளை எதிர்கொண்டார்.

"நிதாமா சீக்கிரம் கிளம்பு லேட்டாகுது பார். மாப்பிள்ளையையும் கூட்டிட்டு சீக்கிரம் வந்து சேர்" என்று கூறிவிட்டு லமி செல்ல நிதா. வேறு வழியில்லாமல் மீண்டும் உள்ளே வந்தாள்.

நிதா உள்ளே வந்ததும் அவளைப் பார்த்த யவன் "என்னம்மா? நான் சொன்னதை செய்றீயா? இல்லை லமிகிட்ட பஞ்சாயத்து வைக்க வா?" என்று யவன் கேட்க நிதா ஒரு முடிவோடு அவன் அருகில் சென்றாள்.

யவன் அருகில் சென்ற நிதா அவன் சட்டையை பற்ற, ஆசையாக அவளைப் பார்த்தான் யவன்.

அவனது பார்வையை பார்த்த நிதா வெட்கம் ஏற்பட வேகமாக அவனிடம் "கண்களை மூடிக் கோங்க! எனக்கு வெட்கமா இருக்கு என்று கூற , யவன் சிரித்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டான்.

அவன் அருகில் சென்றவள் அவன் பட்டனை வாயால் கவ்வியவள் அதை அவன் சட்டையில் இருந்து பிடுங்கினாள். நிதா அப்படி செய்ததும் வேகமாக கண்களை திறந்தான் யவன்.

"பட்டனை போடச் சொன்னா பட்டனையே பிச்சு எடுத்துடடி" என்று கூறிய பட்டன் அவள் உதடுகளில் இருந்த பட்டனை பார்த்துக் கொண்டே அருகில் இழுக்க , நிதா அவன் மேல் விழுந்தாள்.

"ம்ம்ம் பட்டன் சட்டையில் தான் இருக்கணுமா? உன் உதடுகளில் கூட இருக்கலாம்? ஆனா என்ன அது எனக்கு உரியது" என்று கூறிய யவன் அதை அவள் உதடுகளில் இருந்து எடுக்க அவளை நோக்கி குனிய , நிதா பட்டனை வாயில் வைத்தபடியே வெளியே ஓடினாள்.

அவள் வெளியே சென்றதும் யவன் சிரித்தபடியே தலையை வாரிக் கொண்டான்.

நிதா வாயில் பட்டனை வைத்து ஓடுவதை வாயில் கை வைத்து அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சவிதா .

அப்போது அவளுக்கு பின் வந்து கொண்டிருந்த சாம் நிதாவையும் சவிதாவையும் மாறி மாறி பார்த்தான். அங்கு நடந்ததை யுகித்துவிட்டு சவிதாவின் அருகில் வந்தான் சாம்.

"என்ன சவிதா வாயடைச்சு நிக்குற?" – சாம்.

"அது வந்துய்யா? எனக்கு?" – சவிதா.

"என்ன உனக்கும் பட்டன் வேணுமா? பார் மாமா சட்டையில் எத்தனை பட்டன் இருக்கு அது முழுசும் உனக்கு தான்டி செல்லம்" – சாம்.

சாம் அப்படி சொன்னதும் நிதா அவனை பார்த்து முறைத்தாள்

"அதில்லைய்யா?" – சவிதா.

"எப்படி பட்டன் நிதா வாய்க்குள் போச்சுனு உனக்கு தெரியணும்? அதான" – சாம்.

"ஆமாய்யா?" – நிதா.

"அது எப்படினா இங்க இருக்கா பட்டன்.அதை இப்படி நீ வாயால கவ்வி எடுப்பீயா நான் அதை அப்படியே பிடிச்சு திரும்பவும் உன்னை தைக்க சொல்லி போட்டுக்குவேனா? எப்படி என் ஐடியா?" – சாம்.

சாம் அப்படி சொன்னதும் அவனை மேலும் கீழுமாக சவிதா பார்க்க சாம் அவளிடம் "பட்டன் ரெடி! சாமும் ரெடி ஆரம்பிக்கலாமா ராணிமங்கம்மா" என்று சாம் கூற சவிதா அவனை முறைத்தபடியே

"ஓ பேஷா! ஆரம்பிக்கலாமே" என்று சவிதா சொன்னதும் சாம் அவளை சந்தேகமாக பார்த்தான்.

"என்ன இவ உடனே ஓகே சொல்றா? ஒரு வேளை இதுல எதாவது உள்குத்து இருக்குமோ?" என்று நினைத்த சாம் சந்தேகத்துடன் அவள் அருகில் வந்தான்.

சாம் அருகில் வர சவிதா வேகமாக "கண்ணை மூடுங்க! எனக்கு வெட்கமா இருக்கு" என்று சவிதா சொல்ல சாம் கண்களை மூடிக் கொண்டான்

கண்களை மூடிய சாம் நெடு நேரம் ஆகியும் சவிதாவிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராததை கண்டு கண்களை திறந்தான். கண்களை திறந்த பார்த்த சாம் அதிர்ந்தான்

அங்கு கைகளில் துடைப்பத்தோடு நின்று இருந்தாள் வேலைக்காரி, அவளை பார்த்த சாம் சுற்றி முற்றி பார்க்க "யோவ்! என்னய்யா தேடுற? நானும் வந்ததில் இருந்து பார்க்குறேன்! நீ ஒரு தினுசா திரியுற? கண்ணை மூடிக் கொண்டு கனவு காணாம போ அந்தப்பக்கம்" என்று வேலைக்காரி திட்ட, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான் சாம் .

வேலைகாரி சாமை திட்டுவதை பார்த்து சவிதா இங்கு சிரித்துக் கொண்டிருக்க, சாம் சவிதாவை திட்டியபடியே சவிதாவை தேடி வேகமாக வந்து கொண்டிருந்தான். சாமின் எதிரில் லமி வந்து கொண்டிருந்தார்.

சாமையும் லமியையும் மாறி மாறிப் பார்த்த சவிதா வேகமாக தன் கையில் இருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து கீழே கொட்டினாள்.

வேகமாக வந்து கொண்டிருந்த சாம் சவிதாவை பார்த்ததும் அவள் அருகில் வர, எண்ணெய்யில் கால் வைத்தான். அது வழுக்கி அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த லமியின் அருகில் சென்று விழுந்தான் சாம்.

லமி வேகமாக சாமை தூக்க முயல அப்போது சாமின் பட்டன் தெறித்து கீழே விழ, அதை எடுத்து கையில் வைத்து பார்த்தார் லமி.

லமியின் கைகளில் தன் பட்டனை பார்த்த சாம் விழித்தான். சாமின் முகத்தை பார்த்த சவிதா சிரித்தாள்.

வைத்தி பவ்யாவையே பார்த்து கொண்டிருந்தார்.

வீரபாண்டியின் சொல்லுக்கிணங்க பவ்யா வைத்தியுடன் ஒரே ரூமில் தங்கி இருக்கார். ஒரே ரூமில் தங்கி இருந்தாலும் பவ்யா அவரிடம் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார். வைத்தியும் பவ்யாவிடம் பல தடவை கெஞ்சிவிட்டார். ஆனால் பவ்யா இறங்குவதாக இல்லை. ஆகையால் வைத்தி அவரை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

பவ்யா வைத்தியின் பார்வையை உணர்ந்தாலும் திரும்புவதாக இல்லை. இப்படியாக அவர்கள் இங்கு இருக்க

தன் தாயை அழைக்க வந்த நிதாவின் கண்களில் இது விழுந்தது. அதை பார்த்த நிதா ஒரு முடிவோடு யவனிடம் பேசச் சென்றாள்.

யட்சகன் : 25

கோவிலுக்கு செல்ல ஒரு வழியாக அனைவரும் கிளம்பி வெளியே வர, அவர்கள் முன் இரண்டு கார்கள் வந்து நின்றது. வீரபாண்டி அனைவரையும் ஏறி அமரச் சொல்லிவிட்டு முதலில் நின்றிருந்த காரில் ஏறி அமர, சவிதா அவர் பின்னோடு ஏறச் சென்றாள். அப்போது அவளை தடுத்தான் சாம்.

"ஏய் நில்லு! லமி , வெங்கி , கிராண்ட்பா, சோமு சார்ல உட்காரணும் நீ எப்படி அதில் உட்கார முடியும் . பின்னாடி நிற்குற வண்டியில் 6, 7 பேர் உட்காரலாம். அதனால் நீ பின்னாடி போ" என்று சாம் சொல்ல சவிதாவும் பேசாமல் பின்னால் இருந்த வண்டிக்குச் சென்றாள்.

"இங்கு பெரியவர்கள் அனைவரும் ஒரு வண்டியிலும், சிறியவர்கள் அனைவரும் ஒரு வண்டியிலும்" என்று சாம் சொல்ல அதன்படி வைத்தி முன்னால் சென்று அமர முற்பட, பவ்யா அவரை கண்டு கொள்ளாமல் பின்னால் இருந்த வண்டியை நோக்கிச் சென்றார்.

பவ்யாவின் செயலை பார்த்த சாம் ஏதோ சொல்வதற்குள் நிதா பேசினாள்.

"அப்பா! நீங்களும் என்கூட வந்து உட்காருங்க" என்று சொல்ல வைத்தி அவள் இருந்த காரை நோக்கி வந்தார்.

வைத்தி காரை நோக்கி வந்ததும் பவ்யா எழுந்து கொள்ள முயல, நிதா யவனுக்கு கண்களை காட்டினாள்.

அதை கண்ட யவன் "அக்கா! நீங்க இங்க உட்காருங்க, மாமா உங்க பக்கத்தில், நிதாவும், நானும் உங்க பின் சீட்டில்" என்று யவன் சொல்ல

பவ்யோவோ "யவா.. நான் அப்பா கூட போய்க்கிறேன். அப்பாக்கு துணையா இருக்கும்"

"அம்மா! வெங்கி , லமி லா இருக்காங்கல வீருக்கு ஒன்றும் ஆகாது . யூ டோண்ட் வொரி" – நிதா.

"என்னது வீருவா? அடி கழுதை! தாத்தாவை பேர் சொல்லியா கூப்பிடுற உன்னை" – பவ்யா.

"அம்மா! இதில் என்ன இருக்கு? தாத்தாவே இதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாங்க! நீங்க ஓவரா ரியாக்ட் பண்றீங்க மம்மி" என்று பேசியபடியே நிதா வைத்தியை பவ்யா பக்கத்தில் அமர வைக்க, பவ்யா வேறு வழியின்றி அமர்ந்துவிட்டார்.

சாம் கார் ஓட்டும் இடத்தில் அமர்ந்துவிட்டு சவிதாவை பார்க்க, அவளோ அவனது பார்வையை கண்டு கொள்ளாமல் வைத்தியின் அருகில் அமர்ந்து விட்டாள். இதை பார்த்த சாமிற்கு சொத்தென்று ஆகிவிட்டது.

யவனும் நிதாவும் பின்பக்கம் அமர , "ம்ம்ம் நம்ம எப்பவும் சிங்கிள் தான் போல" என்று தனக்குள் சொல்லியபடி சாம் வண்டியை எடுத்தான்.

இங்கு பவ்யா முகத்தை திருப்பிக் கொள்ள வைத்தி பவ்யாவின் பக்கம் திரும்பினார். பவ்யா அவரை கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருக்க வைத்தி அவரது கைகளை பிடித்தார்.

வைத்தி கையை பிடித்ததும் பவ்யா நெளிய, இதை தன் கண்ணாடி மூலம் பார்த்த சாம் சவிதாவை பார்த்தான். இங்கு நடப்பதை எதையும் கண்டுகொள்ளாமல் சவிதா கையில் இருந்த முறுக்கை தின்று கொண்டிருந்தாள். அதை பார்த்த சாம் மேலும் கடுப்பானான். நிதாவின் அருகில் இருந்த யவன் அவளை தன் விரலால் சுரண்டினான்.

"என்ன பேபி! என் ஐடியா ஒர்க் அவுட் ஆகுது போல?" – யவன்.

"ஏன்? என்னாச்சு?" – நிதா.

"ம்ம்ம் அங்க பாரு! உன் அப்பா கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணாம கப்புனு கையை பிடிச்சிட்டார்" – யவன்.

யவன் அப்படி சொன்னதும் எட்டிப் பார்த்த நிதா மகிழ்ந்தாள். ஆனால் அவள் முகம் திரும்பவும் வாடிப் போனது.

"ஏன் அவங்க சேர்றது உனக்கு சந்தோசமில்லையா மனுமா?" – யவன்.

"அதில்லை டோலு! அம்மாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் அப்பா அவர் செய்கைக்கு விளக்கம் அளிக்காம அம்மா அவரை ஏத்துக்க மாட்டாங்க. அதான்..." என்று நிதா இழுக்க

"டோண்ட் வொரி டாலுமா? அவங்க தனியா பேச வாய்ப்பை ஏற்படுத்தி தந்தா போச்சு" என்று கூறிய யவன் அவளது விரல்களின் இடுக்கில் தன் விரல்களை கோர்த்து தன் வாயருகே கொண்டு சென்று முத்தம் வைக்க , நிதா அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

இதை எல்லாம் ரிவர் வியூ கண்ணாடியின் வழியாக பார்த்த சாம் "ம்ம்ம் எல்லாம் அதுக அதுக துணையோடு மிங்கிள் ஆகிருச்சுங்க. எனக்கு வாய்ச்சதோ திண்ணுட்டு இருக்கு. ம்ம்ம் நீ எப்ப ரொமான்ஸ் பண்ணி? கல்யாணம் பண்ணி" என்று தனக்குள் புலம்ப வைத்தி பவ்யாவின் கைகளைப் பற்றியதை பார்த்த சவிதா சாமிடம் திரும்பினாள்.

"சாம்! நான் முன்னாடி வரவா?" என்று சவிதா கேட்டது தான் தாமதம் சாம் வேகமாக வண்டியை நிறுத்தினான்.

சாம் வண்டியை நிறுத்தியதும் அனைவரும் அவனை கேள்வியாக பார்க்க, பவ்யா சாமிடம் "என்னடா? என்னாச்சு? ஏன் வண்டியை நிறுத்திட்ட?" என்றார்.

"ம்ம்.. அது வந்து அத்தை மாடு குறுக்க போச்சு! அதான்" என்று கூறிய சாம் "வா! சவிதா! இங்க வந்து உட்கார் என்று சாம் சொன்னதும் சவிதா வேகமாக முன் சீட்டில் சென்று அமர்ந்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் தனக்குள் சிரித்துக் கொண்டனர்.

இதை சாக்காக வைத்து பவ்யா தன் கைகளை வைத்தியிடம் இருந்து உருவிக் கொண்டார். வைத்தி ஏதோ பேச முயல பவ்யா வேகமாக "பேசாம உட்காரீங்களா! இல்லை! நான் அப்பாகூட போய் உட்காரவா?" என்று சொல்ல வைத்தி அதன் பின் பேசவே இல்லை.

இதை பார்த்த நிதா வருத்தப்பட யவன் கண்களால் அவளுக்கு ஆறுதல் சொன்னான். ஒரு மணி நேர பிரயாணத்திற்கு பின் வண்டி கோவிலில் நின்றது. அனைவரும் இறங்க வைத்தி, பவ்யா இருவரும் வேறு வேறு வழியில் இறங்கி பிரிந்து சென்றனர். அதை பார்த்த நிதா பவ்யாவின் பின்னால் சென்றாள்

யவன் இங்கு வீரபாண்டி அருகில் சென்று அவர்க்கு உதவ சென்றுவிட இங்கு சாம் மற்றும் சவிதா தனியாக நின்றனர். சவிதா எல்லா பொருட்களையும் காரில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்த சாம், அவள் கையில் இருந்த பொருளை பறித்து கீழே வைத்தான்.

சாம் அப்படி செய்ததும் கோபமாக அவனை சவிதா பார்க்க "சவிதா! உன்கிட்ட தனியா பேசணும்?" என்றான்.

"முடியாது! வேலை இருக்கு? அப்புறம் பேசலாம்" என்று கூறிய சவிதா தன் வேலையை தொடர முயல

அவளை கோபமாக பார்த்து கத்தினான் சாம் "எப்ப பாரு! வேலை! வேலை வேலைதானா? மனுசன் பீலிங்ஸை புரிஞ்சிக்கிறீயாடி?"

"என்னது டீயா? ஆமா நான் என்ன புரிஞ்சிக்கணும்? என்ன பிலீங்ஸ்" – சவிதா.

"ம்ம் என் லவ்வை புரிஞ்சிக்கணும்! அய்யோ இப்படி இருக்கீயேடி" என்று கூறிய சாம் தன் தலையின் பின்பக்கத்தை பிடித்து ஒரு சுற்று சுற்றிவிட்டு "என் கண்ணில் உன் மேல் நான் வச்சிருக்கும் லவ் தெரியலயாடி" என்றான் ஆதங்கத்துடன்.

"லவ்வா? அப்படினா?" – சவிதா.

"அய்யோ! நீ தெரிஞ்சிகிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீயா? இல்லை உனக்கு உண்மையிலேயே தெரியலயா?" – சாம்.

"என்ன நடிக்குறேன்? என்ன உண்மை?" – சவிதா.

"நீ சரிப்பட்டு வர மாட்ட? உனக்கு என் டீரிட்மெண்ட் தான் கரெக்ட்" என்று சொல்லிய சாம் சுற்றி முற்றி பார்க்க அங்கு யாரும் தென்படவில்லை. கோவிலின் வெளியே நின்றிருந்தனர் இருவரும்.

சாம் பார்ப்பதை பார்த்த சவிதா "யாரை தேடுறீங்க?" என்று அவள் கேட்க சாம் சற்றும் யோசிக்காமல் அவளை அருகில் இழுத்து அவளது இதழில் முத்தம் ஒன்றை வைத்தான். இதை சற்றும் எதிர்பாராத சவிதா திகைத்தாள்.

நிதா பவ்யாவை தனியாக அழைத்து சென்றாள். நிதா தன்னை தனியாக அழைத்து சென்றதும் பவ்யா அவளை புரியாமல் பார்த்தார்.

"என்னாச்சு டாலிமா! ஏன் தனியா கூட்டிட்டு வர? அங்க எல்லாரும் நமக்காக காத்துட்டு இருக்க போறாங்க வா போகலாம்" என்று பவ்யா சொல்ல நிதா அதை காதில் வாங்காமல் அவரை அழைத்து சென்று ஒரு இடத்தில் அவரை அமர வைத்து அவரது கைகளை பிடித்து கொண்டு தன் முகத்தில் வைத்து கொண்டு பேசினாள்.

"அம்மா! என்னை பார்த்தா பாவமா இல்லையா?" – நிதா.

"ஏன்மா இப்படி கேட்குற?" – பவ்யா.

"அம்மா! அப்பா அம்மாவோடு சேர்ந்து வளர முடியாத வலி எனக்குத்தான் தெரியும். அதை இவ்வளவு நாள் அனுபவிச்சுட்டேன். திரும்பவும் அந்த வலியை எனக்கு கொடுக்காதீங்கம்மா" என்று நிதா சொல்ல பவ்யா அமைதியாக இருந்தார்.

அதை சம்மதமாக ஏற்று மேலும் பேசினாள் நிதா. "அம்மா! அப்பாவை.." என்று அவள் இழுக்க

பவ்யா இடையில் பேசினார்.

"டாலிமா! அதுமட்டும் என்னால முடியாது. அவர் என்னை நம்பலை. என்னை புரிய வைக்க சந்தர்ப்பமும் கொடுக்கல. சோ என்னால முடியாது நிதாமா" – பவ்யா.

"அம்மா. அவர் உங்களுக்கு செஞ்ச அதே தப்பை நீங்களும் அவருக்கு செய்யாதீங்க. அவர்க்கு பேச சந்தர்ப்பம் கொடுத்து தான் பாருங்களேன். ஒரு வேளை அவர் நிலைமை உங்களுக்கு தெரிய வருமா. சூழ்நிலையால தான் சிலர் தப்பு பண்றாங்க. அதை நாம ஏன் மன்னிக்க கூடாது" என்று நிதா சொல்ல பவ்யா அதை கேட்டு மெளனமாக இருந்தார்.

அவர் மெளனத்தை பார்த்த நிதா விலகிச் செல்ல அவர் அருகில் வந்து அமர்ந்தார் வைத்தி. அவரைப் பார்த்ததும் பவ்யா எழுந்து கொள்ள முயல வைத்தி அவரை தடுத்தார்.

"பவ்யாம்மா! எனக்காக 5 நிமிடம் டைம் கொடு ப்ளீஸ். என் பக்கத்து நியாயத்தை சொல்ல" என்று வைத்தி சொல்ல பவ்யா பொங்கிவிட்டார்.

"நியாயமா? உங்க பக்கத்தில் நியாயம் இருக்கா என்ன? அநியாயமா என்னை குற்றம் சாட்டி என் பொண்ணு கூட இருந்த இனிமையான நாட்களை பறிச்சுட்டீங்களே" என்று சொல்லிவிட்டு பவ்யா அழுக வைத்திக்கு அவமானமாக இருந்தது.

"இப்ப நிதா என்கிட்ட வந்து அம்மா எனக்கு வலிக்குது சொல்லும் போது உங்க மேல தான் கோபம் திரும்புது . உங்க அவசர புத்தியால எனக்கும் நிதாவுக்கு எவ்வளவு வருத்தத்தை கொடுத்து இருக்கீங்க" என்று பவ்யா சொல்ல வைத்தி அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார்.

பவ்யா பல நாள் அடக்கி வைத்திருந்த கோபம், வெறுமை, ஆத்திரம் எல்லாத்தையும் அன்று வைத்தியிடம் கொட்டி கவிழ்த்தார். அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வைத்தி தன் பக்க நியாயத்தை சொல்ல முனைந்தார்.

சோம்நாத் தன்னிடம் பவ்யா பற்றி சொன்னது அதற்கு தான் பதில் அடி கொடுத்தது. இறுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால தான் சோம்நாத்தின் வலையில் சிக்கிக் கொண்டது என்று அனைத்தையும் அவர் சொல்ல பவ்யா அமைதியாக இருந்தார்.

வைத்தி அவரிடம் "நீ என்னை மன்னிக்க வேண்டாம் பவ்யா! காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் வல்லமை உடையது. ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். நிதாக்காக நாம இரண்டு பேரும் சேர்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். அவளுக்காக உன் கிட்ட நான் இதை யாசிக்குறேன்" என்று கூறிவிட்டு அவர் செல்ல பவ்யா சற்றும் நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

பின்பு வெளியில் வந்தவர் அங்கு அனைவரும் சாமி கும்பிடுவதை பார்த்துவிட்டு அங்கு தாமாக சென்று வைத்தியின் அருகில் சென்று நின்று கொண்டார்.

*****

இங்கு நிதா பவ்யாவை வைத்தியிடம் பேச தனியாக விட்டுவிட்டு குளத்தின் அருகில் வர அங்கு யவன் நின்று மீன்களுக்கு இரை போட்டுக் கொண்டு இருந்தான்.

அதை பார்த்த நிதா வேகமாக யவன் அருகில் வந்த நிதா யவனை பிடித்து குளத்திற்குள் தள்ளினாள் .

குளத்திற்குள் மூழ்கியவன் எழுந்து பார்க்க அங்கு நிதா சிரித்துக் கொண்டே "என்ன யவன் அத்தான்! பார்த்து வரதில்லையா! பாருங்க எப்படி சிலிப் ஆகிட்டீங்கன்னு" என்று சொல்லிச் சிரிக்க

அதை கேட்ட யவன் சிரித்துக் கொண்டே "என்ன டாலிமா! நான் செஞ்சதை எல்லாத்தையும் திருப்பி செஞ்சிடுவீயா" என்று கூறிய யவன் குளத்தின் மேல் நின்று இருந்த நிதாவை அவள் அறியாவண்ணம் பிடித்து குளத்துக்குள் இழுத்தான்.

நிதா மூச்சிக்கு திணறியடியே எழ அவளைப் பார்த்த யவன் சிரித்துக் கொண்டே "சாரி பேபி! ஜலக்கீரிடை தனியா செய்யக்கூடாது சாமி குத்தம் ஆகிடும்" என்று அவன் சொல்ல, நிதா அவனை அடித்தாள்.

இவர்களை பார்த்துக் கொண்டே அங்கே வந்த சாம் "இப்ப நம்ம ஆளுக்கு இதைப் பார்த்து சந்தேகம் வரணுமே" என்று சாம் சொல்லியபடியே திரும்பிப் பார்க்க அங்கு சவிதா அவர்களைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள்.

சவிதாவிற்கு தெரியாமல் அவளை பின்னாள் இருந்து சாம் குளத்தில் தள்ளிவிட முயல கடைசி நொடியில் சவிதா விலகவும் சாம் குளத்தில் குதித்தான். சாமைப் பார்த்த யவன் சிரித்தான்.

"என்ன சாம் நீயுமா" – யவன்.

"ஜலக்கீரிடை சேர்ந்து தான் பண்ணணும் பாஸ். அதான்" – சாம்.

"என்ன என் பிட்டை எனக்கே சொல்றீயா சாம்" – யவன்.

"வேற வழி பாஸ்! அப்படியாவது எதாவது என்ன நடக்கும்னு பார்க்குறேன் எங்க?" என்று சாம் சலித்துக் கொள்ள , சவிதா சாமை முறைத்தபடியே பேசினாள்.

"என்ன என்னை தள்ளிவிடப் பார்க்குறீயா? என்னை யாராலும் அசைச்சுக்க முடியாது" என்று கூறிய சவிதா அருகில் இருந்த பாசத்தில் கால் வைக்க அது வழுக்கி குளத்திற்குள் சாம் அருகில் விழுந்தாள். சவிதா அருகில் விழுந்ததும் அவளை இருக கட்டிக் கொண்டான் சாம்.

"ம்ம்ம் வந்து சேர்ந்துட்டியா! வா நம்ம ஜோதியில் ஐக்கியமாகிக்க" – சாம்.

அப்போது லமி அங்கு சென்று கொண்டிருக்க லமியை பார்த்த சாம் வேகமாக யோசித்தான். கிழவியை இன்னைக்கு ஒரு வழி பண்ணணுமே என்ற சாம் லமியிடம் "லமி டார்லிங் பிளிஸ் சேவ் மீ"

"ஓகே" என்ற லமி அருகில் வர சாம் அவன் கை நீட்டினான் வேகமாக லமி கையை மடக்கிக் கொள்ள சாம் மனதுக்குள் 'பாட்டி உசாராகிடுச்சு! ஜஸ்ட் மிஸ்' என்று சாம் சொல்லிக் கொண்டிருக்க லமி சாமிடம் கயிரை நீட்டினார். அதை பற்றிய சாம் அதை இழுக்க லமி தடுமாறாமல் நின்றார்.

அதை பார்த்த சாம் குழம்ப "என்ன வெங்கலச் சாமான்.. என்னை கவுக்க மாக்குறீயா. என்னை யாராலும் கவுக்க முடியாது" என்று சொல்லிய லமி நகர அந்த கயிறு ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது.

லமி வேகமாக திரும்ப சோப் வழுக்கி கீழே விழ அவரை தாங்கிப் பிடித்தார் வெங்கி. அதை பார்த்த அனைவரும் சிரிக்க சாம் உள்ளுக்குள் கருவினான்.

இப்படியாக குளத்தில் விளையாடிவிட்டு அனைவரும் கோவிலுக்கு வர அங்கு பவ்யா வைத்தியுடன் சேர்ந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அதை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத சோம்நாத்தின் மனம் குமைந்தது. மனம் தாளாமல் வெளியே வந்த சோம்நாத் அங்கு பல பெண்கள் அந்த கோவில் பிரகாரத்தை தூசி தட்டி கூட்டி கொண்டு இருக்க அந்த தூசு தாளாமல் சோம்நாத் தன் கர்சீப் கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டான்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க யவன் ப்ரசாத்திடம் இருந்து போன் கால் வரவும் தனியாக சென்றான்.

"சொல்லுங்கப்பா? என்ன கால் பண்ணி இருக்கீங்க?" – யவன்.

"யட்சா! இன்னைக்கு முழு பெளர்ணமி! தயவு செய்து வெளியே வந்தடாத. உன் கோபம் அதிகமாகி நீ ராட்சஸனா மாற சான்ஸ் இருக்கு" என்று சொல்ல "அட விடுங்க ப்பா! இதை எத்தனை தடவை சொல்வீங்க. எனக்கு ஒன்றும் ஆகாது" என்று அவரிடம் பேசியபடியே திரும்பிய யவன் சோம்நாத்தை பார்த்ததும் உணர்ச்சி பிழம்பானான்.

அவனது கண்கள் கோபத்தில் ஜொலித்தது. அவனது உடலில் ஏதோ மாற்றம் உள்ளுக்குள் நிகழ வேகமாக அருகில் இருந்த தன் காரை நோக்கிச் சென்றான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 26

காரை நோக்கி சென்ற யவன் கோபத்தின் உச்சத்தில் காரை வேகமாக செலுத்தினான். இலக்கற்று காரை ஓட்டியவன் ஆள் அரவமற்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

காரில் இருந்து இறங்கியவன் இலக்கற்று ஓடினான். அவன் தன்னை எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனது கோபம் குறையவில்லை. அவனது கோபத்திற்குக் காரணம் சோம்நாத்.

நடந்ததை சரியாக உணராமல் தான் எவ்வளவு பெரிய பிழை செய்ய இருந்தோம் என்று நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டான் யவன். ஆம், இவ்வளவு நாள் தரங்கிணி இறந்ததற்கு வைத்தியை காரண கர்த்தாவாக ஆக்கி அவர் மேல் வெறுப்பை ஏற்றி கொண்டிருந்த தன் நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான் யவன்.

அன்று தானும் தரங்கிணியும் முகமூடியை வைத்து வைத்தியை அடையாளம் கண்டதும் அதன் தொடர்ச்சியாக நிதாவை தான் படுத்தியதும் அலை அலையாக நினைவில் ஆடியது.

இன்று கோவிலில் சோம்நாத் முகத்தை மூடியிருப்பதைப் பார்த்து உண்மையை உணர்ந்து கொண்ட யவன். அன்று தரங்கிணியை பாடாய் படுத்தியது அவளை கொன்றது என்று அந்த உருவம் மனக்கண்ணில் வந்து சோம்நாத்தோடு ஒப்பிட்டு பார்த்தது. அதை தொடர்ந்து யவனுக்கு சோம்நாத்தின் உண்மை நிலை தெரிந்தது. தான் இன்னும் அங்கு நின்றிருந்தால் சோம்நாத்தை எதாவது செய்துவிடுவோம்? என்று அஞ்சி அங்கிருந்து வந்துவிட்டான்.

நீண்ட நேர யோசனைக்கு பின் யவன் ஒன்றை முடிவு செய்து கொண்டான்.

சோம்நாத்தின் மரணம் மிகக் கொடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் தன் தமக்கையின் மரணத்திற்கு தான் நியாயம் செய்ததாக அர்த்தம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அதற்கு முன் அவனது உண்மையான முகத்திரையை அனைவரின் முன் கிழிக்க வேண்டும். அவனை யாருமற்றவனாக ஆக்க வேண்டும் என்று மனதில் பல யோசனைகளை யோசித்த யவன் ஒரு முடிவோடு காரில் ஏறி அமர்ந்தான். காரில் ஏறி அமர்ந்தவன் சற்று தூரம் செல்ல எதிரில் அவன் கண்களில் பட்டது அந்த மருந்து கடை. அங்கு சென்றவன் சிலவற்றை வாங்கிக் கொண்டு காரில் ஏறி கோவிலுக்குச் சென்றான்.

அப்போது ப்ரசாத் அவனுக்கு கால் செய்ய அவர் எதற்காக கால் செய்கிறார் என்று அறிந்த யவன், இன்னைக்கு உங்க பேச்சை நான் கேட்கபதாக இல்லை ப்ரசாத் என்று போனை எடுக்காமல் வைத்துவிட்டான். நிதா யவனை காணாமல் அங்கும் இங்கும் தேடிக் கொண்டு இருந்தாள். சுமார் அரை மணி நேரம் தேடியும் அவன் கண்களில் படவில்லை.

'இங்க தான இருந்தார்? அதுக்குள்ள எங்க போயிட்டார்?' என்று நிதா தனக்குள் சொல்லியபடியே யவனை தேடிக் கொண்டிருக்க அப்போது அவளுக்கு போன் கால் வந்தது. 'யார் தன்னை அழைத்தது?' என்று எடுத்துப் பார்த்த நிதா யோசனையானாள். அவளுக்கு ப்ரசாத் அழைப்பு விடுத்திருந்தார் .

'இவர் எதற்கு எனக்கு கால் பண்ணி இருக்கார்?' என்று யோசனையோடு அழைப்பை ஏற்ற நிதாவிடம் பதட்டத்தோடு பேசினார் ப்ரசாத்

"நிதா! நிதா! யட்சன் அங்க இருக்கானா? போனை அவன்கிட்ட குடுமா? அவனுக்கு போன் பண்ணா எடுக்கவே மாட்றான்" என்று வேகமாக பேசினார் ப்ரசாத்.

ப்ரசாத்திடம் தான் வேலை செய்யும் போது ஒரிரு வார்த்தையே பேசியிருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் அவரிடம் அந்த வார்த்தை கூட பேசாத பட்சத்தில் ப்ரசாத்திடம் இருந்து போன் வரவும் நிதாவுக்கு அவரிடம் பேச தயக்கமாக இருந்தது. ஆயினும் அவர் விடாமல் தனக்கு போன் அடிக்க வேறு வழியின்றி போனை எடுத்த நிதா அவர் போனை எடுத்ததும் யவனை பற்றி பதட்டத்துடன் கேட்டதும் அவரது பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது

"என்னாச்சு சார்! ஏன் இவ்வளவு பதட்டம்? அவர் இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தார் ஆனா இப்ப கொஞ்ச நேரமா ஆளை காணோம்? நானும் அவரை தான் தேடிட்டு இருக்கேன்" என்று அவள் சொன்னது தான் தாமதம் ப்ரசாத் டென்சனாகிவிட்டார்

"என்னம்மா? சொல்ற? அவனை காணோமா? அவன் வெளியே இல்லையே? வீட்டில் தான இருக்கான்? அவன் நார்மலா தான இருக்கான்" என்று பல கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார் ப்ரசாத்.

அதை கேட்ட நிதா "இல்லை சார்! நாங்க இப்ப வெளியில் தான் இருக்கோம். கோவிலுக்கு வந்திருக்கோம் . ஆனால் வந்த இடத்தில் திடீரென்று அவரை காணோம்"

"என்ன வெளியே இருக்கீங்களா? ஷீட் . நீ வேகமாக அவனை கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போமா. அவன் இன்றைக்கு வெளியே இருக்கக் கூடாது. குறிப்பா அவன் கோபப் படக்கூடாது" என்று ப்ரசாத் சொல்ல நிதா பதட்டமானாள்.

"ஏன் அப்படி சொல்றீங்க அங்கிள்? அவர் அப்படி வெளியே இருந்தா என்ன ஆகிடப் போகுது? ஆமாம் இங்க என தான் நடக்குது எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளிஸ்" – நிதா.

"அது வந்துமா..." என்று ப்ரசாத் இழுக்க

"ப்ளிஸ் சார் அவரை பத்தி சொல்லுங்க. எனக்கு அவரை பத்தி தெரியலனா பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு" – நிதா.

அவள் அப்படி சொன்னதும் ப்ரசாத் வேறு வழியின்றி அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார்.

"அம்மா! நிதா! லண்டனில் நடந்த விசயங்கள் உனக்கே தெரியும். அன்று யட்சனுக்கு வினய்யும் நடந்த மோதலில் யவன் செத்துட்டான்னு நாம எல்லாம் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்று நடந்த ஏதோ ஒன்றில் யட்சனுக்குள்ளே மனித இயல்புகள் வெளிப்பட வர ஆரம்பிச்சது. அதை பார்த்து சந்தோசப்பட்ட நான் அவனை மனிதனாக மாற்ற முயற்சி செய்தேன். அதாவது அவனுக்குள் இருக்கும் ராட்சஷன் இயல்புகளை சாந்தப்படுத்தி மனித இயல்புகள் வெளியே வர அவனுக்கு மூன்று மாதங்கள் பல சிகிச்சை செய்தோம். அவனும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்.

என்னதான் நாங்க பல முயற்சி பண்ணி அவனிடம் உள்ள ராட்சஷ குணத்தை குறைக்க முயன்று மனித இயல்புகளை மேம்படுத்தினாலும் அவனை அறியாம அமாவாசை இரவுகளும், பெளர்ணமி இரவுகளும் அவனது ராட்சஷ குணத்தை வெளிபடுத்தும் இரவுகளா மாறிடுச்சு. ஆனால் அந்த பொழுதுகள் மட்டும் அவன் கண்டிப்பாக வீட்டுக்குள்ளே இருந்தாகணும். முக்கியமாக அவன் கோபப்படக்கூடாது. இதுல எதாவது ஒன்று செய்தாலும் அவனது ராட்சஷ குணங்கள் மேலெழும்பிடும்" என்று ப்ரசாத் சொல்லி முடிக்க நிதா அமைதி காத்தாள்.

அவளுக்கு ப்ரசாத் சொல்லியது தனது மனதில் உள்ள பல கேள்விகளுக்கு விடையாக இருந்தது. அவள் யோசனையோடு இருக்க ப்ரசாத் மேலே பேசினார்.

"இன்று அமாவாசை இரவு அவன் வீட்டுக்குள்ளே இருந்தாகணும். குறிப்பா அவன் கோபப்படக்கூடாது. நீ தான் பார்த்துக்கணும் நிதா. அவன் என் போனை எடுக்காமல் இருப்பது எனக்கு பயமா இருக்கு. தயவு செய்து அவன் சீக்கிரம் பாருமா" என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் ப்ரசாத்.

ப்ரசாத் போனை வைத்ததும் நிதாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. யவனை காணாமல் அவள் கோவில் முழுவதும் அலைய அவள் எதிரில் வந்து கொண்டிருந்தான் யவன்.

அவனை பார்த்ததும் வேகமாக ஓடி "கோவில் முழுவதும் தேடி அலைஞ்சேன் இவ்ளோ நேரம் நீங்க இல்லையே? எங்க போனீங்க?" என்று நிதா பதட்டத்தோடு கேட்க யவனோ சாதாரணமாக பதில் சொன்னான்.

"ஏன்? என்னாச்சு? டோலுமா? ஏன் இவ்வளவு பதட்டம்?" – நிதா.

"அது? ...அது வந்து ... போன் ..." என்று அவள் இழுக்க

"என்ன யார் கால் பண்ணாங்க? நீ ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற?" என்று சற்று நேரம் யோசித்த யவன் அவளை பார்த்துக் கொண்டே "ப்ரசாத் போன் பண்ணாரா?" என்று கேட்டான். அதற்கு நிதா 'ஆம்' என்று தலையசைத்தாள் .

"அவர் என்னவெல்லாமாவோ சொல்றார் அத்தான். அது எல்லாம் உண்மையா?" – நிதா.

"ஜஸ்ட் ரிலாக்ஸ் பேபி! யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீயா? இப்ப இருக்குறது உன் யவன் அத்தான் மட்டும் தான் வேற ஒன்றுமில்லை" என்று கூறிய யவன் அவளை சமாதானப்படுத்திவிட்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றான். அவள் சாந்தமாகி பவ்யாவிடம் சென்றதும் ப்ரசாத்திற்கு அழைத்தான் யவன்.

யவன் அழைத்ததும் போனை எடுத்த ப்ரசாத் "யட்சா? ஆர் யூ ஓகே..." என்று மேற்கொண்டு பேசுவதற்குள் யவன் முந்திக் கொண்டான்.

"ஓ! கமான் ப்ரசாத் சார்! ஐ அம் ஓகே" - யவன்.

"ஆனா நிதா நீ இங்க இல்லைன்னு ... சொன்னாலே" – ப்ரசாத்.

"நான் இங்க தான் இருந்தேன் ப்ரசாத். டோண்ட் வொரி. அண்ட் ஒன் மோர் திங் ப்ளீஸ் என்னை பற்றி இனி எதுவும் நிதாகிட்ட பேச வேண்டாம் அவ பயப்படுறா." என்று அவரிடம் பேசியவன் அவரை சமாதானப்படுத்திவிட்டு போனை வைத்தான். போனை வைத்தவன் விழிகள் மட்டும் வேட்டையாட துடித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அனைவரும் கோவிலில் இருந்து வீட்டிற்குச் சென்றனர்.

மாலை நேரம்

அனைவரும் களைப்பு மிகுதியில் தன் ரூமில் இருக்க சோம்நாத் வெளியே தனித்து தோட்டத்தில் அமர்ந்து இருந்தார் . அவர் தனித்து இருப்பதைப் பார்த்த யவன் அவர் அருகினில் சென்றான்

யவனை பார்த்த சோம்நாத் "வா! தம்பி! நீ தான நம்ம நிதாவை கட்டிக்கிட்ட மாப்பிள்ளை? இப்ப வாச்சு உனக்கு இந்த மாமனிடம் பேச நேரம் கிடைச்சுச்சே? நீயாவது என் கூட பேசு தம்பி . நான் ரொம்ப நல்லவன்" அதை கேட்ட யவன் அவரின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

"ஏன் மாமா? உங்களை எல்லாரும் ஒதுக்குறாங்க" – யவன்.

"ஒரு நாள் நாள் சரக்கடுச்சதை பார்த்துட்டு என் அண்ணன் வைத்தி கத்தினான் தம்பி. அதிலிருந்து யாரும் என்கூட பேசுறது இல்லை" – சோம்நாத் .

"ஓ.. சரக்கு அடிக்குறது அவ்ளோ பெரிய குத்தமா மாமா" – யவன்.

"அட! நீங்களும் நம்ம இனமா? சரக்கு அடிக்குறது தப்பில்லை தம்பி. நான் இங்க டெய்லி 2 பெக் அடிப்பேன் யாருக்கும் தெரியாமல்" – சோம்நாத்.

"அது எப்படி மாமா" – யவன்.

"அட வாங்க தம்பி உங்களுக்கு நான் கத்துக் குடுக்குறேன்" - சோம்நாத்.

"ஆனா மாமா! எப்படி யாருக்கும் தெரியாமல் குடுப்பீங்க?" – யவன்.

"அதான் பிரச்சனையா! அடவிடுங்க நான் எதுக்கு இருக்கேன் இந்தாங்க இதை பிடிங்க" என்று தன் ரூமிற்குள் சென்று வந்தவர் கைகளில் கூல் டிரீங்கை அடங்கிய பாட்டில் இருந்தது.

அதை பார்த்த யவன் "மாமா! கூல் டிரீங்கஸ்ல சரக்கா? பயங்கர கேடி தான் நீங்க?" என்று அவர் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

யவனும் சோம்நாத்தும் தோட்டத்தில் அமர்ந்து கூல் டிரீங்க்சில் சரக்கை அடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தனர்.

யவன் அவர் முன் குடிப்பது போல் நடித்தான். சோம்நாத் சற்று அயர்ந்ததும் யவன் அவர் குடிக்கும் ஒன்றில் மாத்திரையை போட்டான். மருந்து உள்ளே சென்றதும் சோம்நாத் போதை ஏறி அவர் அறியாமல் பேச ஆரம்பித்தார்.

அப்போது யவன் நிதாவிற்கு மெசேஜ் செய்தான். அதை பார்த்த நிதா யோசனையோடு அவன் சொன்னதை செய்யச் சென்றாள்.

சோம்நாத் கொஞ்சம் கொஞ்சமாக மோன நிலைக்குச் சென்றார்.

அவர்க்கு தான் என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்? என்ன சொல்கிறோம் என்று தெரியாத நிலையில் இருக்க யவன் மெதுவாக பேச ஆரம்பித்தான்

"சோம்நாத் உங்களுக்கு தரங்கிணியை தெரியுமா?" – யவன்.

தரங்கிணி என்ற பெயரை கேட்டதும் சோம்நாத் சிரித்தார்.

"அட என்னங்க தம்பி! அவளை பத்தி ஏன் கேட்குறீங்க? அவ ஒரு பைத்தியகாரி என்னை நம்பி வந்து ... கடைசியில் செத்தே போயிட்டா" – சோம்நாத்.

"என்ன அவங்க உயிரோட இல்லையா?" – யவன்.

"ஆமாம் தம்பி! அவன் அப்பன் பாட்டுக்க என்னை பத்தி விசயங்களை தெரிஞ்சுகிட்டு தண்டனை கொடுத்தான். அதுக்கு பழி தீர்க்க நாள் பார்த்துட்டு இருந்தேன் அந்த நேரம் பார்த்து அவளா வந்து என்கிட்ட சிக்கிட்டா. காதல்ன்ற பெயரில் அவளை ஏமாத்தி அவளை கூட்டிட்டு போய் அவளை நான் சித்ரவதை செய்து என் கையாலயே கொன்னேன். பாவம் அவள் அப்பன் அவ உயிரோட இருக்கான்னு நினைச்சிட்டு இருக்கார். ஆனா இந்த கையால தான் அவளை துடிக்க துடிக்க கொன்று அவளை எரிச்சு சாம்பலாக்கிட்டேன்னு அவருக்கு தெரிஞ்சா மனுசன் என்ன ஆவாரோ?" என்று சோம்நாத் சொல்லியபடியே திரும்ப யவன் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தான். கொஞ்சம் கொஞ்சமாக மருந்தின் வீரியம் குறைய கண்களை திறந்து பார்த்த யவனின் முன் மொத்த குடும்பமும் குழுமி இருந்தது.

போதை தெளிந்து எழுந்த சோம்நாத் அங்கு அனைவரையும் கண்டு திகைத்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 27

சோம்நாத் அருகில் திரும்பிப் பார்க்க அங்கு வீட்டில் இருந்த அனைவரும் அங்கு இருந்தனர். யவனின் ஏற்பாட்டின்படி நிதா அனைவரையும் அங்கு வரவழைத்திருந்தாள். சோம்நாத் சொல்லியதை கேட்டு அனைவரும் அவர் முன் கோபத்தோடு நின்று இருந்தனர். கோபத்தின் உச்சிக்குச் சென்ற லமி சோம்நாத்தின் அருகில் வந்து அவனை அறைந்தார்.

"அடப்பாவி! உன்னை போய் நல்லவனு நம்பி நான் இங்க தங்க வச்சேனே? ஆனா நீ?.. எவ்வளவு பெரிய வேலையெல்லாம் செஞ்சிருக்கடா? எப்படிடா நீ இப்படி மாறினா? நான் உன்னை இப்படி வளர்க்கலயேடா. என் புருஷன் சொன்ன போது கூட என் பிள்ளை அப்படி இல்லைனு நம்பினேனே? ஆனா இப்ப தான் புரியுது . நீ இவ்ளோ மோசமானவனாக இருந்து இருக்கேன்னு?" என்று லமி சொல்லி அழுக வெங்கி அவரை தேற்றினார்.

"அழாதமா இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே உன் பையனை பத்தி. நீயாக ஒரு நாள் அவனை பத்தி தெரிஞ்சுக்குவேன்னு நான் இவ்ளோ நாள் பேசாம இருந்தேன். ஆனா எனக்கே அவனை பத்தி இப்பதான் சில விசயங்கள் தெரியுது" – வெங்கி.

"ஏன்டா? ஏன்? என் பிள்ளைய இப்படி பண்ண? அவ உயிரோட இருக்கிறாளா? இல்லையா?ன்னு நான் எத்தனை நாள் தவிச்சிருப்பேன்?" என்று வீரபாண்டி அவனைப் பற்றி உழுக்கினார்.

"அய்யோ தரங்கிணி? நான் உன்னை கவனிக்காம போயிட்டேனே? ஒரு வேளை நான் உன்னை கவனிச்சிருந்தா நீ எங்க கூட இருந்திருப்பீயோ?" என்று சொல்லி பவ்யா அழுக நிதா அவரை தேற்றினாள்.

ஒவ்வோரு வரும் தரங்கிணியை பற்றி வருந்த வைத்தி வேகமாக சோம்நாத் அருகில் வந்தார்.

"சோமு! நீ உன் தப்புக்கு தண்டனை கண்டிப்பா அனுபவிக்கணும்டா . நீ தண்டனையை அனுபவிக்க விடாம நான் உன்னை விட மாட்டேன்டா" என்று கூறி வைத்தி சோம்நாத்தை பற்றி போலீஸில் கம்ளைன் செய்தார். அவர் கம்ளைன் செய்வதை பார்த்து பயந்த சோம்நாத் வேகமாக அங்கிருந்து ஓட முயன்றார்.

அப்போது சாம் அவரை பிடிக்க முயல யவன் சாம்மை தடுத்தான்.

"வேண்டாம்! விடுங்க! போலீஸ் அவரை பார்த்துக்கும் என்று சொல்லி சாமை தடுத்த யவன் அனைவரையும் சமாதானப்படுத்த தவறவில்லை.

இறுதியில் வைத்தியிடம் வந்த யவன் "என்னை மன்னிச்சிடுங்க மாமா" என்று சொல்ல வைத்தி அவனை புரியாமல் பார்த்தார்.

"நீங்க ஏன் தம்பி என்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். என் தம்பியை பத்தி எங்களுக்கு தெரிய உதவி இருக்கீங்க" - வைத்தி.

"அதில்லை மாமா. உங்களை இத்தனை நாள் நான் தப்பா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப தான் எனக்கும் சில உண்மைகள் தெரிஞ்சது" என்று சொல்லிய யவன் அன்று தரங்கிணிக்கு நடந்ததை பற்றி சொல்ல, அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது.

அப்போது வீரபாண்டி வாய் திறந்தார். "இனி பழசை பத்தி பேசி என்னாகப் போகுது? என் பொண்ணு என்ன திரும்ப கிடைச்சுடப் போறாளா? இனி மேலாவது நடக்கப் போறது எல்லாம் நல்லதா நடக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டிக்குறேன்" என்று சொல்ல அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அனைவரும் செல்ல நிதா யவன் அருகில் வந்தாள் "இத்தனை நாள் நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட விசயங்களுக்கு காரணம் தெரியாமா இருந்துச்சு. இப்ப தான் சில விசயங்கள் எனக்கு புரியுது." என்று நிதா சொல்ல யவன் அமைதியாக இருந்தான்.

பின்னர் நிதா அவன் அருகில் வந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டு "ஆனாலும் சோம்நாத்தை சும்மா விடக்கூடாது! அவர்க்கு தண்டனைகள் கிடைத்தே தீரணும்"

"கண்டிப்பா டாலிமா. அவருக்குரிய தண்டனை அவருக்கு கிடைத்தே தீரும்" என்று எதையோ நினைத்தபடியே கூறினான் யவன்.

உள்ளே சென்ற வீரபாண்டி தரங்கிணியின் படத்திற்கு மாலை அணிவித்து அழுது கரைந்தார். அதை பார்த்து கொண்டிருந்த யவன் தனக்குள் இறுகிக் கொண்டான்.

மாலையின் உள்ளே இருந்த தரங்கிணியுடன் அவன் மனதால் பேசிக் கொண்டானோ? சற்று நேரம் தரங்கிணியை பார்த்தவன் ஒரு முடிவோடு வெளியே சென்றான். நிதாவும் அவனை தடுக்கவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

*****

அமாவாசை இரவு.

இங்கு சோம்நாத் ஒரு மரத்தில் அடியில் அமர்ந்திருந்தார் தன் குட்டு வெளிப்பட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த சோம்நாத் வைத்தி போலீஸிற்கு போன் போட்டதும் வேகமாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.

அந்த இரவு நேரத்தில் எங்கு செல்வதென்று தெரியாமல் விழித்த சோம்நாத் ஒரு மரத்தின் அடியில் நின்று இளைப்பாற அப்போது அவர் எதிரில் வந்து நின்றான் யவன். யவனை அங்கு சற்றும் எதிர்பாராத சோம்நாத் முதலில் திகைத்தார். பின்பு அவர் முகம் கோபமாக மாறியது.

"டேய்! உனக்கு என்ன தைரியம் இருந்தா? என்னை எல்லார் முன்னாடியும் காட்டி கொடுத்துட்டு இப்ப நேரிலயும் வந்து நிப்ப? உன்னை?" என்று அவன் மேல் சோம்நாத் பாய அவரை தடுத்தான் யவன்.

சோம்நாத்தை அவன் இலகுவாக தடுத்து அவரை கீழே தள்ளிவிட கஷ்டப்பட்டு எழுந்தான் சோம்நாத். எழுந்த சோம்நாத்தின் கழுத்தை நெறித்த யவன் அவரை மீண்டும் கீழே தள்ளினான்.

"உன்னை அவ்வளவு சீக்கிரம் சாக விட மாட்டேன்டா? நீ எங்கக்கா மாதிரி துடிச்சு தான் சாகணும்" – யவன்.

"நீ என்ன சொல்ற? அப்ப நீ அந்த பையன்... என்று" – சோம்நாத் இழுக்க

"ஆமாண்டா நான் தான்டா அது? என் அக்கா சாவிற்கு உனக்கு பதில் சொல்ல வந்திருக்கேன்" என்று கூறிய யவனின் கண்கள் கோபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.

அங்கு இரவு வேறு கவியத் தொடங்கியது

அவனது கோபத்தின் அளவு கூட கூட அவன் உடம்பில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அவன் கண்கள் ஓவல் வடிவம் பெற்று இரத்த நிறமாக மாறத் தொடங்கியது.

பற்கள் நீண்டு வெளியே வர ராட்சஷனாக உருமாறி நின்றான் யவன். யவனின் அந்த தோற்றத்தை கண்டு சோம்நாத்திற்கு பயம் பிடித்துக் கொண்டது

"ஏய்! யார் நீ? நீ ஏன் இப்படி மாறி இருக்க" என்று பயத்தில் உளறிய சோம்நாத் ஓடத் தொடங்கினார்.

தன் மனத்திற்கினியவளுக்காக மனிதனாக மாறத் தொடங்கிய யவன் தன் அருமை தங்கையின் இறப்பிற்கு பழி தீர்த்திட ராட்சனாக மாறி நின்றான்.

சோம்நாத் ஓட அவரை துரத்திக் கொண்டு ஓடிய யவன் ஒரு கட்டத்தில் அவரை பிடித்து நிறுத்தினான்.

தன் கூர்மையான வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நகங்கள் கொண்டு சோம்நாத்தை தாக்கினான். முகங்கள் , கைகள். கால்கள் என்று எல்லா இடத்திலும் கீறலாக ரத்தம் வரத் தொடங்கியது சோம்நாத்திற்கு. ரத்தத்தின் வாடை அவனை ஏதோ செய்ய தன் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த யவன் சோம்நாத்தை நோக்கி குனிந்தான். தன் கோபம் தீரும் மட்டும் அவனது உடம்புகளை கீறினான். அவனது தோற்றம் நரசிம்ம அவதாரத்தை தோற்றுவிக்க தன் பழியை அவனை கிழித்து தீர்த்துக் கொண்டான் யவன்.

ஒரு கட்டத்தில் சோம்நாத் இறந்துவிட யவன் அவனை அருகில் இருக்கும் மணலில் தள்ளி தன் கை கொண்டு அவருக்கு சமாதி கட்டினான்.

எல்லாம் முடித்து யவன் திரும்ப அவன் முன் நின்றிருந்தாள் நிதா.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் – 28

சுமார் 6 மாத காலம் சென்றிருக்க, அந்த வீடு அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. வண்ண தோரணங்கள் கொண்டும், பூக்கள் கொண்டு அந்த வீடு எங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வீரபாண்டி அனைவரையும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"பவ்யாமா எல்லா ரெடியா? மாப்பிள்ளை வீட்டு சார்புல நம்ம தான் பர்ஸ்ட் போகணும்? உனக்கு அந்த நினைப்பு இருக்கா இல்லையா?" – வீரபாண்டி.

"அது என்ன மாப்பிள்ளை வீடு? நாங்க பொண்ணு வீடாக்கும்" என்று அவரிடம் பேசியபடியே அங்கு வந்தார் வைத்தியநாதன்.

"அட மாப்பிள்ளை! நீங்க பொண்ணு வீடு பவ்யா மாப்பிள்ளை வீடா? நீங்க சொல்றது சரியா?" – வீரபாண்டி.

"அவர் சொல்வது சரிதான் அய்யா . நாங்க பொண்ணு வீடாக்கும்" என்று சொல்லியபடியே அங்கு வந்தனர் மனோகர் மற்றும் கண்ணப்பர்.

"என்ன கண்ணப்பா? நீயும் அவங்க கூட சேர்ந்துட்ட? அப்ப நான் பவ்யா கூட சேர்ந்துக்குறேன்" என்று வீரபாண்டி சொல்ல

"அட உங்க சண்டையில் எனக்கு ஆப்பு வச்சிடாதீங்க! தெய்வங்களா? என் சண்டிராணி மனசு மாறிட போகுது. அதுக்குள்ள எனக்கு கல்யாணத்தை செஞ்சு வச்சுடுங்க தெய்வங்களா?" என்று சொல்லிக் கொண்டு அங்கு வந்தான் சாம். அவன் அருகில் சவிதா ராணி நின்றிருந்தாள்

ஆம் இன்று சாமிற்கு சவிதா ராணிக்கும் தான் திருமணம்.

ஒரு வழியா சாம் நம்ம சவிதா மனசை மாத்திட்டார் போல. ஆனா அவன் எப்படி மாத்தினான்னா? ...

"ஏய்! ரைட்டர் அம்மா! நீ இதுவரை என்னை டேமேஜ் பண்ண வரை போதும். போ இங்கிருந்து "

"அதில்லை மேன் நீ சவிதா ராணியை எப்படி கன்வின்ஸ் பண்ணனு அவங்களுக்கும் தெரியணும்ல

"வேண்டாம்! வேண்டாம் நீ முதல இந்த இடத்தை காலி பண்ணு"

"ம்ம்ம் இருடி உன்னை கடைசி வச்சிக்குறேன். நிதா கண்டிப்பா மறக்காம சாமோட லட்சணத்தை சொல்லிடு".

அப்போது அங்கு வந்த நிதா சத்தமாக சிரித்தாள்.

"ஆமாம்! நீ பெரிய வீர சாகசம் எல்லாம் செஞ்சுல கரெக்ட் பண்ணியிருக்க சவிதா" – நிதா.

"வீர சாகசமா?" – பவ்யா.

"ஆமாமா அய்யா சவிதா மசியலனு..." - நிதா.

"ஏய் நிதா! ஸ்டாப் பிட்" – சாம்.

"இல்லை சாம் இதை மட்டும் சொல்லிக்குறேன்" – நிதா.

"வேண்டாம் நான் அவ காலில் விழுந்து அவளை கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தேன்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தப்போறீயா" – சாம்.

"இனி சொல்ல எதுவும் இல்லைடா! நீயே சொல்லிட்ட" – நிதா.

"ரைட் விடு! என் பொண்டாட்டி கால தான விழுந்தேன். பொண்டாட்டி காலில் விழலாம் தப்பில்லை" என்று சாம் கூற நிதா வாயை பிளந்தாள்.

அப்போது அங்கு வந்த வெங்கி வேகமாக "என்ன மசமசனு நின்னுட்டு எல்லோரும் போய் ரெடியாகுங்க. கோவிலுக்கு போக வேண்டாம்" என்று அனைவரையும் மிரட்ட எல்லாரும் கோவிலுக்குச் சென்றனர்.

சாம் ஆசைப்படி இரு முறைகளிலும் திருமணம் நடந்தது.

சர்ச்சிலும் கோவிலும் திருமணம் நடந்தேற நிதா அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

சர்ச்சில் சடங்குகள் நடந்தேறும் மட்டும் அவளுக்கு கண்கள் கலங்கியது அவளுக்கு தானும் யவனும் லண்டனில் திருமணம் செய்து கொண்ட தருணங்கள் மனதில் தோன்றியது.

அவள் அதை நினைத்துக் கொண்டிருக்க அவளை உரசிக் கொண்டு யாரோ நிற்க திரும்பிப் பார்த்தாள் நிதா. அங்கு யவன் நின்றிருந்தான். யவனை அங்கு சற்றும் எதிர்பார்க்காத நிதா சந்தோசத்தில் மிதந்தாள். அவள் எதோ கேட்க வர யவன் அவளை தடுத்தான். அவன் குறிப்பறிந்து மெளனம் காத்தாள் நிதா.

அதன்பின் சாம்- சவிதா திருமண கோலாகலம் நடந்தேற யவனை பார்த்த அனைவரும் மேலும் சந்தோசமடைந்தனர்.

"என்ன தம்பி! வந்துட்டீங்களா? இனிமே இப்படி மாசக்கணக்கில் வேலைனு நிதாவை விட்டு போகாதீங்க" – லமி.

"நிதா நீங்க இல்லாம அவளா இல்லை? இனி அவளை விட்டு போகாத டோலு" – பவ்யா.

"மாப்பிள்ளை லண்டனுக்கு நிதாவை கூட்டிட்டு போங்க . நீங்க அங்க அவ இங்க நல்லா இல்லை மாப்பிள்ளை" – வைத்தி.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யவனை திட்ட அனைத்தையும் ஒரு புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டான் யவன்.

ஆனால் யவன் இந்த முறை லண்டன் சென்றதற்கான காரணம் நிதாவிற்கும் யவனிற்கு மட்டுமே அறியும் ஆம் அன்று சோம்நாத்தை கொலை செய்துவிட்டு திரும்பிய யவன் நிதாவை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. சோம்நாத்தை கொன்றும் அவன் கோபம் தணியவில்லை. ராட்சஷனாக அவன் அப்படியே அமர பயத்தை துறந்து அவன் அருகில் சென்றாள் நிதா.

"யவன் அத்தான்!" என்று நிதா அழைத்தது தான் தாமதம் யவன் கத்தினான்.

"போ! இங்க இருந்து! இனியும் எனக்கு நம்பிக்கை இல்லை நாம இரண்டு பேரும் நன்றாக வாழலாம் குறிப்பாக மனிதர்கள் மாறி சாதாரண வாழ்க்கை வாழலாம்னு நம்பிக்கை இல்லை" – யவன்.

"எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தான். எனக்காக மனிதனாக மாறின உங்களால் இப்பவும் எனக்காக மாறுவீங்கனு நம்பிக்கை இருக்கு" – நிதா.

அதற்கு அவன் அமைதியாக இருக்க நிதா மேலே தொடர்ந்தாள் "ஒரு அரக்கனை அழிக்க தான் நீங்க மாறி இருக்கீங்க. எனக்கு நீங்க இப்படி மாறி சித்தி இறந்ததற்கு நீங்க பழி தீர்த்துட்டீங்க"

"ஆனால் இவ்ளோ நாள் நான் கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகிடுச்சு நிதா! நான் அரக்கனை வெளியே கொண்டு வந்துட்டேன்"- யவன்.

"ஆனா திரும்பவும் நீங்க எனக்காக மாறிடுவீங்க அத்தான்." – நிதா.

இங்கு நிதா பேசிக் கொண்டிருக்க அப்போது ப்ரசாத் கால் செய்தார். நிதா யவனின் நிலையை எடுத்துச் சொல்ல சற்று நேரம் அமைதியாக இருந்த ப்ரசாத் . பின்பு நிதாவிடம் "அவனை லண்டன் அனுப்பி வைமா . நிறைய அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகள் வந்தாலும் இன்னும் ஏட்டில் சில சிகிச்சை முறைகள் பாதுகாக்கப்பட்டு தான் வருகிறது நிதா. அதில் எதாவது யவனை மாற்றும் குறிப்புகள் இருக்கானு பார்க்குறேன். ஆனா ஒன்று மட்டும் நீ நினைவில் வச்சிக்கணும் நிதா. அவன் எப்போதும் முழு மனிதனாக மாற முடியாது. அவனது சாத்தான் குணத்தை வேணா கட்டுப்படுத்தலாம். ஆனா குழந்தை இதை பற்றி எனக்கு சொல்லத் தெரியல. ஆனா உன் நம்பிக்கை அவனை நல்ல மனிதனாக உன்னுடன் வாழ வைக்கும்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் ப்ரசாத்.

ப்ரசாத் போனை வைத்ததும் யவனிடம் திரும்பினாள் நிதா. அவன் கோபம் தணிந்து மனிதனாக மாறிக் கொண்டு இருந்தான். அவனது மாற்றத்தை கண்டு அமைதியாக இருந்த நிதா ப்ரசாத் சொல்லியதை அவனிடம் சொல்ல யவன் மறுத்தான்.

"வேண்டாம் நிதா! நீ என்னை மறந்துவிட்டு வேறொரு வாழ்க்கை தேடிக்கோ!" – யவன்.

"இல்லை முடியாது" – நிதா.

"நான் கடைசி வரை ராட்சஷனாக தான் இருப்பேன் நிதா" – யவன்.

"இல்லை எனக்கு நம்பிக்கை இருக்கு . நீங்க மாறுவீங்க . நாம் இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம்" – நிதா.

"ஒரு வேலை நான் மாறலேனா" –யவன்.

"நம்ம இரண்டு பேரும் காதலிச்சுட்டு இப்படியே இருக்கலாம்" – யவன்.

இப்படியாக யவனை சமாதானப்படுத்தி லண்டனிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாள் நிதா. இங்கு அனைவரிடமும் அவன் வேலை விசயமாக செல்வதாக கூறி வைத்திருந்தாள் நிதா.

நடுவில் சோம்நாத்தின் உடல் போலீஸால் கைப்பற்றப்பட்டு அவர் மிருகத்தினால் அடிச்சு கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

லமி மகனுக்காக அழுது கரைந்தார்.

ஆயினும் நிதா யவனைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

*****

இதோ 6 மாத காலத்திற்கு பிறகு யவன் அவள் அருகில் . அவளுக்கு தன் சந்தோசத்தை சொல்ல அளவே இல்லாமல் போனது

அழகான இரவு நேரம்,

சாம் சவிதாவின் அருகில் வர சவிதா அவனை தள்ளிவிட்டு விலகினாள்.

அதை கண்ட சாமிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"என்னடி? தள்ளிப் போற" – சாம்.

"எனக்கு யார் தொட்டாலும் பிடிக்காது" – சவிதா.

"அதுக்கு? ஏன்டி உனக்கே இது ஓவரா தெரியல? அவ அவன் சின்ன வயசுலயே பொண்ணை உசார் பண்ணி எல்லா வேலையும் பண்றாங்க. நான் 90 கிட்ஸ் டி என்னை பார்த்தா பாவமா தெரியல" – சாம்.

"என்னது 90 ச் கிட்ஸ் ஆ அப்படினா?" – சவிதா.

"ம்ம்ம் விளக்கம் சொல்ல வேண்டிய நேரமாடி இது" – சாம்.

"ஆமாம் சொல்லுங்க" – சவிதா.

"இவள! நீ இதுக்குலா சரிப்பட மாட்ட! உனக்கு என் பாஷை தான் கரெக்ட் டி" என்று சொல்லிய சாம் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அவள் அருகில் வர சவிதா கொஞ்சம் கூட அசையவே இல்லை. அவர் அருகில் வந்த சாம் அவள் காலில் விழுந்தான். அவன் காலில் விழுந்ததும் திகைத்து ஓரடி பின் வாங்கினாள் சவிதா

"அடச்சீ! எழுந்திரு! எப்ப பாரு! காலில் விழுந்துகிட்டு.." என்று சவிதா சிரிக்க அதையே சாக்காக வைத்து கொண்டு வேகமாக எழுந்த சாம் அவள் சுதாரிப்பதற்குள் அவளது இதழில் கவி பாடினான். அவள் சற்று லயிக்க அதை பயன்படுத்தி அவனை தனக்குள் சுருட்டிக் கொண்டான் சாம்.

சாம் சவிதாவோடு வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்க இங்கு நிதா அருகில் வந்தான் யவன். அவன் அருகில் வந்ததும் நிதா கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் கண்களை மூடிக் கொண்டதும் யவன் சிரித்தபடியே அவள் காதினில்

"நிதாமா! உனக்கு பயமா இல்லையா?" – யவன்.

"இல்லை!" –நிதா.

"ஒரு வேல நம்ம குழந்தை.." என்று யவன் இழுக்க அவன் கண்ணோடு கண் கலந்து பேசினாள் நிதா.

"நம்ம குழந்தை கண்டிப்பா உங்களை மாதிரி இருக்காது யவன் அத்தான். எனக்கு நம்பிக்கை இருக்கு" – நிதா.

"இருந்தாலும் நிதாமா ...." என்று யவன் இழுக்க நிதா அவனை பேச விடாமல் தன் இதழ் கொண்டு அவன் இதழை அடைத்தாள். அதற்கு மேல் யவன் பேசவில்லை.

இங்கு யவன் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்க அந்த இருள் சூழ்ந்த அந்த இடத்தில் புதைக்கப்பட்ட கல்லரையில் இருந்து ஒரு கை ஆக்ரோசமாக எழுந்தது.

அந்த கல்லரையில் வினய் ப்ரசாத் என்று எழுதியிருந்தது. ம்ம்ம் தன் காதலிக்காக தன்னை மாற்றத் துணிந்த யவன். ஆயினும் அவனுள் இருக்கும் மிருகத்தன்மை. வெளிவராமல் இருக்குமோ . வெளிவராமல் இருக்கத்தான் முடியுமா? ஆயினும் அன்பு எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றது.

யவன் அனைத்தையும் கடந்து நன்றாக வாழ்வான் என்று நாம் நினைப்போமாக!

முற்றும்



என்னுடன் ஒரு வருட காலமாக பொறுமையாக என்னுடன் பயணித்தமைக்கு நன்றிகள் அன்பர்களே ! மீண்டும் அடுத்த கதைகளத்தோடு உங்களை சந்திக்க வருகிறேன்.

நன்றி

ஹனிகீதன்...

அடுத்த என் பிரவாகம் விரைவில்.....
 
Top Bottom