- Messages
- 57
- Reaction score
- 45
- Points
- 18
யாழ் 18
"சோரமிழைத்திடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லையென்று சொல்லிவிடடீ!"
தனது அறையில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது இருந்த பேப்பரில் ஒரு பெண் உற்சாகமாக ஊஞ்சலாடும் ஓவியத்தை வரைந்துக் கொண்டு இருந்தாள் யாழினி.
வசீகரன்-யாழினி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. திருமணம் முடிந்து கோவில் வேண்டுதல்கள், உறவினர் விருந்துகள் எல்லாம் முடிவதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது. வந்தனாவின் வீட்டுக்கும் விருந்துக்கு சென்றனர். ஆனால் வந்தனா தனிகுடித்தனமாக இருந்ததால் அங்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. வந்தனாவின் மாமியார் ஒருமுறை கடமைக்கு வந்து இவர்களை பார்த்துவிட்டு போனார். ஆனால் அனாவசியமாக எதுவும் பேசவில்லை.
இந்த ஒரு மாதத்தில் யாழினி புகுந்த வீட்டில் நன்றாக பழகிவிட்டாள். பார்வதி பூரணி போல் கண்டிப்பாக இல்லாமல் செல்லம் கொஞ்சியதால் அவருடன் மிகவும் நெருங்கிவிட்டாள். வந்தனா அவளுக்கு எப்போதும் நெருங்கிய தோழி தான். தினமும் இரண்டு மணி நேரமாவது இருவரும் போனில் பேசி கொள்வார்கள். வசீகரன் கூட,"மாமியார், நாத்தனார் மேல் இருக்கும் அன்பில் கொஞ்சம் இவங்க கிடைக்க காரணமான உன் ஹஸ்பண்ட் என் மேலே காட்டக்கூடாதா? " என யாழினியிடம் கேட்டான்.
அவனுக்கு எதுவும் பதில் சொல்லாமல் வந்தனாவிற்கு போன் போட்டு, "அண்ணி , உங்க தம்பி உங்க கிட்ட நா பேச கூடாதுனு சண்டை போடுறாரு.என்னன்னு நீங்களே கேளுங்க" என போட்டு கொடுத்துவிட்டாள்.
வந்தனாவோ,"வீட்டு பெண்கள் ஒண்ணா இருக்க மாட்டாங்களானு எல்லா ஆண்களும் ஆசைப்படுவாங்க. நீ என்னடான்னா எங்களை பிரிக்க பாக்குரியா? எவ்ளோ பொறாமைடா உனக்கு? இனி நாங்க ரொம்ப நேரம் பேசுவோம். அதுவும் நைட்ல தான் பேசுவோம். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ" என்றுவிட்டாள்.
வசீகரன் அதிர்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான். அதிலிருந்து அதை பற்றி பேசவே இல்லை அவன். அதற்கு காரணம் பயமோ கோபமோ இல்லை. எந்த கணவனுக்கும் தன் மனைவி , தன் தாயிடமும் சகோதரியிடமும் அன்பு பாராட்டினால் மனைவியின் மீது அன்பும் பெருமிதமும் தான் வரும். வசீகரனும் அதே மனநிலையில் தான் இருந்தான்.
பூரணியிடம் கூட மாமியாரின் புகழை தான் பாடுவாள் யாழினி. பூரணிக்கு தன் மகளின் வாழ்வு நன்றாக அமைந்ததில் ஆனந்தம். மாதவனின் துறையில் அவனுக்கு இருக்கும் அறிவை அறிந்த வசீ, சொந்தமாக தொழில் தொடங்க அவனுக்கு ஊக்கம் தந்தான். ஆனால் மாதவன் தான் அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிறான். இருந்தும் வசீ சந்திக்கும் போதெல்லாம் மாதவனுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறான். வசீயின் இந்த குணம் யாழினிக்கு பிடித்து இருந்தது. தன் அண்ணன் மீது கணவன் காட்டும் அக்கறை அவளுக்கு இதமாக இருந்தது. இருப்பினும் அவன் ஏன் தன்னை திருமணம் செய்துக்கொண்டான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அதற்காகவே தினமும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து வசீகரனிடம் சண்டையிடுவாள். பதிலுக்கு வசீகரன் சண்டையிடாமல் கொஞ்சிவிட்டு போவான். யாழினி தான் குழம்பி போவாள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒருவழியாக தன் ஓவியத்தை முடித்தவள், அதை தான் செய்தித்தாள் கொண்டு செய்து வைத்திருந்த போட்டோ பிரேமுக்குள் நுழைத்தாள். பார்வதி மதியம் கொஞ்சம் நேரம் ஓய்வு எடுப்பார்,அப்போது யாழினி பொழுதுப்போக்காக கைவினை பொருட்கள், ஓவியம் ஆகியவற்றை செய்வாள். வசீகரனின் அறையை தனது அறையாக முழுமையாக மாற்றிக்கொண்டாள். வசீ இவளது செயல்களை ரசிப்பான்,பாராட்டுவான்.
இன்று பால்கனியில் வசீ வேலை செய்யும் சிறு மேஜை மீது அவளது ஓவியத்தை வைத்தாள். 'நிச்சயமா இதை பார்த்ததும் பாராட்டுவான்' என்று நினைத்துக்கொண்டாள். லேசாக புன்னகை வந்தது அவள் முகத்தில். அதே நேரம் அவளின் போன் ஒலித்தது. ' அண்ணியா தான் இருக்கும்' என எண்ணி உள்ளே போனாள். இரவில் பேசுவோம் என்று தம்பியை மிரட்டினாலும் ஒரு நாளும் இரவில் அழைக்கமாட்டாள். இது போல் பகல் பொழுதில் தான் பேசுவாள். சிரித்த முகத்தோடு போனை எடுத்தவளின் முகம் சுருங்கியது.ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வந்து இருந்தது.
அழைப்பை ஏற்று ,"ஹலோ" என்றாள். மறுபுறம் பதில் இல்லை. மீண்டும் "ஹலோ" என்றாள் எரிச்சலுடன்.
இப்போது மறுபுறம் "ஹலோ" என்றது ஒரு ஆண்குரல்.
"ஹலோ யார் பேசுறது?" என்றாள் யாழினி கடுப்பாக.
"நா ஆகாஷ் பேசுறேன் யாழினி"
யாழினி அதிர்வுடன்,"எந்த ஆகாஷ்?" என்றாள்.
"எங்கேஜ்மெண்ட் வரை வந்து உன்னை மிஸ் பண்ண ஏமாளி ஆகாஷ்" என்றான் அவன்.
யாழினி உறைந்து விட்டாள்.' இவனை எப்படி மறந்தோம்? என்ன தான் தற்பெருமை பேசுபவன் என்றாலும், அவனும் ஒரு மனிதன் தானே! எத்தனை கனவுகளோடு நிச்சயம் செய்ய வந்து இருப்பான்? ஒரே நிமிடத்தில் தனக்கு நிச்சயம் செய்ய இருந்த பெண் தன் நண்பனின் மனைவியாக மாறி இருந்தால் எவ்வளவு துயரமாக இருக்கும்? நம்மை பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தோமே! இவனை பற்றி சிந்திக்கவே இல்லையே! அவ்வளவு சுயநலமா எனக்கு?' என்று தனக்குள் போராடினாள் யாழினி.
அதற்குள் "ஹலோ யாழினி,லைன்ல இருக்கியா?" என்று கேட்டான் ஆகாஷ்.
"ஆங் இருக்கேன் ஆகாஷ். சொல்லுங்க"
"எப்படி இருக்க யாழினி? வாழ்க்கை எப்படி போகுது" நட்பாக விசாரித்தான்.
"நல்லா இருக்கேன் ஆகாஷ். நீங்க எப்படி இருக்கீங்க?"
"நல்லா இல்லை யாழினி. என் சந்தோஷமே போயிடுச்சு. பார்க்குரவன் எல்லாம் என்னடா உனக்கு பார்த்த பொண்ணு உன்னை வேணாம்னு சொல்லிட்டு உன் பிரெண்ட கல்யாணம் பண்ணிக்கிச்சாமே? னு நக்கலா கேக்குறானுங்க. சொந்தகாரங்க எல்லாம் கேவலமா பாக்குறாங்க. "
"உனக்கு தெரியுமா? எங்க உறவுமுறையில எனக்கு பொண்ணு குடுக்க போட்டி போட்டாங்க. உன்னை எனக்கு பிடிச்சதுனால தான் எங்க சொந்தகாரங்க எல்லாரையும் சமாளிச்சி நா உன்கூட கல்யாணம் முடிவு பண்ணேன். ஆனா இப்போ என் சொந்த காரங்க எல்லாம் என்னை கேவலமா பார்க்குறாங்க" என்றான் துக்கமாக.
யாழினிக்கு வேதனையாக இருந்தது. ஒருவனின் சுயநலத்திற்காக இன்னொருவரின் வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டானே. வசீகரனின் மீது இப்போது வெறுப்பு வந்தது.
ஆகாஷின் மனநிலையை மாற்றுவதில் தனக்கு கடமை இருக்கிறது என எண்ணியவள்,"ஆகாஷ் நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க, நடந்தத இனிமே மாத்த முடியாது. அதனால உங்க மனசை கொஞ்சம் ப்ரீயா விடுங்க. பிடிச்ச விஷயத்துல உங்க நேரத்தை செலவு பண்ணுங்க.கொஞ்ச நாள்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை பார்த்து மேரேஜ் பண்ணிக்கோங்க" என்றாள்.
"நோஓஓஓ" தமிழ் பட கதாநாயகி போல் கத்தினான் ஆகாஷ். "என்னால உன்னை மாதிரி மனசை மாத்திக்க முடியாது. நீ அவனோட பணத்தை பார்த்து மயங்கி அவன் கூட வாழலாம். பட் என்னால உன்னை தவிர வேற ஒருத்தியை கனவுல கூட ஒய்ப்பா நினைக்க முடியாது" என்றான் கோபமாக.
யாழினிக்கு கோபமாக வந்தது. "இங்க பாருங்க ஆகாஷ். அளவா பேசுங்க. யாரைப்பார்த்து பணத்தை பார்த்து மயங்கினனு சொல்றீங்க? நா எப்பவுமே யார் மேலயும் ஆசைபட்டது இல்ல. என் மேரேஜ்கு அப்புறம் என் ஹஸ்பண்டை தான் லவ் பண்ணனும்னு இருந்தேன். அதனால தான் உங்ககிட்ட கூட நா போன்ல பேச முடியாதுனு சொன்னேன். இப்போ வசீகரன் தான் என் ஹஸ்பண்ட் அதனால அவரோட வாழுறேன். அதோட பணத்துக்காக தான் அவரோட ஒரு பொண்ணு வாழனும்னு இல்ல.
புரிஞ்சிக்கோங்க" என்றாள்.
கொஞ்ச நேரம் ஆகாஷ் எதுவும் பேசவில்லை. யாழினிக்கு பாவமாக இருந்தது. 'சே அவனே வருத்ததுல இருக்கான். நா இப்படி கோபப்படலாமா?' என எண்ணியவள், "ஆகாஷ் , நா சொல்றத புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. ஏதோ வசீ என்னை பிடிச்சதால தப்பு பண்ணிட்டாரு. உங்க மனசை மாத்திக்கிட்டு, வேற நல்ல பொண்ண பார்த்து மேரேஜ் பண்ணிக்கோங்க " என்றாள் இதமாக.
ஆகாஷ் இப்போது சிரித்தான். "என்ன சொன்ன யாழினி? வசீகரன் உன்னை பிடிச்சதால கல்யாணம் பண்ணிக்கிட்டானா? குட் ஜோக். என்னை பழிவாங்க உன்னை யூஸ் பண்ணிக்கிட்டான்" என்றான்.
யாழினி அதிர்ச்சியில் சிலையானாள்.
"என்ன சொல்றீங்க ஆகாஷ்? உங்களை பழிவாங்கவா?" அதே அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"ஆமா பழிவாங்க தான். அதுவும் காலேஜ்ல நடந்தத இத்தனை வருஷமா ஞாபகம் வச்சிக்கிட்டு பழிவாங்கிட்டான்" என்றான் வேதனையான குரலில்.
யாழினிக்கு மனது வலித்தது. அவன் ஏன் தன்னை திருமணம் செய்துக்கொண்டான் என்று தெரிந்துக்கொள்ள பல முறை முயற்ச்சித்தாள் தான். ஆனால் அது இப்படி பழிவாங்க செய்யப்பட்டது என கொஞ்சமும் யோசிக்கவில்லை. ஏனோ அவளே அறியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ