Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL வான்சூழ் உலகு - Tamil Novel

Status
Not open for further replies.

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 30


சற்று நேரம் அழுது தேம்பி முடித்திருந்த ஸ்வேதா, வருணிடம் இருந்து விலகி "திடீர்னு கிடைச்ச ஆறுதல்ல ஏதேதோ பேசிட்டேன். தேவையில்லாம உங்களையும் நான் கன்ஃப்யூஸ் பண்ண விரும்பல" என்று சொல்ல


"நீ ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு. ஏன் ஒரு டிசிஷன் தப்புனு தெரிஞ்சு, அதையே செய்யணும்" என்று வருண் நிதானமாய் கேட்டான்


"ஐ நோ வாட் ஐ அம் டூயிங். இங்கருந்து கிளம்புங்க" என்ற ஸ்வேதா சுவற்றோடு ஒட்டி அமர்ந்து கொள்ள, குரு எழுந்து வெளியே வந்து விட்டான்


வெளிப்பக்கச் சுவற்றில் சாய்ந்தபடி சான்ட்ரா நின்றிருக்க, குரு எதையோ அவளிடம் விளக்க எத்தனித்தான். எதுவும் கூற வேண்டாம் என்றவாறு கையைக் காட்டி சான்ட்ரா தடுத்திட, வருண் படியில் ஏறிச் சென்று விட்டான்.


'உன்னைப் பத்தி நினைச்சாலே எனக்குள்ள என்னென்னமோ தோணுது. உன் வாழ்க்கையையும் சேத்துக் கெடுக்க எனக்கு விருப்பம் இல்ல. நீ சந்தோஷமா ரொம்ப நாள் வாழணும்' என்று ஸ்வேதா கண்களை மூடி வருணுக்காக வேண்டுதல் வைத்தாள்


சிறிது நேரம் கழித்து உள்நுழைந்த சான்ட்ரா "என்னாச்சுமா. நீரவ் உன்னை எதாவது கம்பல் பண்றாரா. என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம். ஃப்ராங்க்கா சொல்லு" என்று கேட்டிட, மறுப்பாய் தலையாட்டிய ஸ்வேதா அவளின் மடியில் சாய்ந்து கொண்டாள்


"நீ எடுக்குற சின்ன டிசிஷன் கூட, லைஃப டோட்டலா சேஞ்ச் பண்ணிடும் ஸ்வேதா. உன்னை ஹர்ட் பண்றவங்க... ரோஷினிய மட்டும் பத்திரமா பாத்துப்பாங்களா" என்று சான்ட்ரா அவளது தலையைத் தடவிக் கொடுத்தபடி சொன்னாள்


வீட்டினுள் சென்ற வருண், குரு அதித்தனைக் கண்டிட "என்னடா இது" என்றான் அவன் காதைச் சுட்டிக் காட்டி


"பாத்தா தெரியல. ஸ்டட்டு" என்றான் குரு வலியில் முகத்தைச் சுளித்தபடி


"வலிக்கும்னு தெரியும்ல. உன்னை யாரு போட்டுக்க சொன்னது" என்று வருண் கேட்டிட


"நான் எங்கடா போட்டேன். எல்லாம் உன்னால வந்தது... உன்னை யாருடா காதுலாம் குத்த சொன்னது. நீ ஸ்டட் போட்ருக்குறது மாஸா, கெத்தா இருக்காம். அதுக்காக என்னையும் கூட்டிட்டுப் போய் காது குத்தி விட்டுட்டாடா" என்றான் குரு முகத்தைச் சுருக்கி


"ஏன்டா, லவ்வருக்காக இதக் கூட பண்ண மாட்டியா" என்றான் வருண் பதிலுக்கு


"ஸ்வேதா என்ன சொன்னாங்க" என குரு கேட்டிட


"நான் அதைப் பத்தி எதுவும் பேச விரும்பல" என்ற வருண் அமைதியாகிப் போனான்


இந்துஜா வழக்கம் போல உள்ளே படுத்துக் கொள்ள, பானுமதியின் அருகில் பாயின் மீது படுத்திருந்த ஜீவா கைகளைத் தலைக்கடியில் வைத்து விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான்


"ஏங்க தூக்கம் வரலையா" என்று பானுமதி வினவ


"ஒரே குழப்பமா இருக்கு" என்றான் ஜீவானந்தம்


"என்னனு சொல்லுங்க" என்று பானுமதி கேட்க


"இன்னைக்குக் காலைல இந்து அவுட்டிங் கிளம்புனாளா... அதுக்கு அப்பறம் பில்டிங்கே காலி ஆன மாதிரி அமைதியா இருந்துச்சு. மறுபடியும் ஈவ்னிங் பானு வந்த பிறகு, கீழ் வீட்டுல தங்கி இருக்கறவங்க, மேல் வீட்டு குருனு வரிசையா வந்து சேந்தாங்க. அவங்க கூடலாம் இவளுக்குப் பழக்கம் இருக்கா என்ன" என்று கேள்வி தொடுத்தான் ஜீவா


"ஏங்க எதையும் எதையும் கனெக்ட் பண்ணுறீங்க. காலைல பக்கத்து வீட்டுப் பொண்ணும் அவங்க குழந்தையும் கூட தான் வெளிய போனாங்க. ஆனா மதியமே வந்துட்டாங்களே" என்று பானு கூற


"எனக்கு எதோ குழப்பமாவே இருக்கு" என்று ஜீவா மறுபடியும் சொன்னான்


"மார்னிங் கீழ் வீட்டுக்காரங்க, மேல் வீட்டு அண்ணாங்க, பக்கத்து வீட்டுக்காரங்கனு எல்லாரும் ஒன்னா தான் போனாங்க. அப்பறம் எப்படி ஆளுக்கொரு நேரத்துல ரிட்டர்ன் வந்தாங்க. எனக்கே இப்போ குழப்பமாய்டுச்சு" என்ற பானுமதி திரும்பி படுத்துக் கொள்ள, யோசித்து யோசித்து மண்டை காய்ந்த ஜீவாவும் தூங்க ஆரம்பித்தான்


அந்த இரவு நேரத்தில் அலைபேசி வைப்ரேட் ஆக, அதை எடுத்துப் பார்த்த அனு 'இந்நேரத்துல எதுக்குக் கூப்புட்றான்' என யோசித்தபடி அழைப்பை ஏற்றாள்


"ஹலோ..." என்று ப்ரவீன் கூறிட, அந்த குரலே ஒருவித பரவசத்தை அவளுக்கு ஏற்படுத்தியிருந்தது


"என்னடா சொல்லு" என்று அனு மெதுவாய் பேசிட


"ஏன் குசுகுசுனு பேசுற. யாராச்சும் கூட இருக்காங்களா" என்றான் ப்ரவீன் அவளுக்கு ஏற்ப கிசுகிசுப்பாய்


"யாராவது இருந்திருந்தா இந்நேரம் கட் பண்ணி விட்ருப்பேன். ரூம்ல தான் உக்காந்து படிச்சுட்டு இருக்கேன். அம்மா கேட்டுட்டாங்கனா பிரச்சனை ஆயிடும்ல. அதான்" என்று விளக்கமளித்தாள் அனு


"சரி வீடியோ கால் பண்ணு" என்று ப்ரவீன் கூறிட


"இந்நேரத்துக்கா... மர கழண்டுருச்சா உனக்கு. சான்ஸே இல்ல" என்றாள் அனு பதற்றத்துடன்


"அதெல்லாம் பேசலாம். ஹெட்ஃபோன் போட்டுட்டுப் பேசு" என்று ப்ரவீன் சாதாரணமாய் சொல்ல


"நானே மன்றாடி வாங்கி இருக்கேன். இந்த செல்ஃபோன ஆத்துல பிடுங்கி வச்சிண்டா, நோக்கு சந்தோஷமா இருக்குமா" என்று அனு கூற


"பயம் வந்தா மட்டும் லாங்குவேஜே மாறிடுமே. நீ எதுவும் பண்ண வேணாம். நானே அங்க வந்து உன் ரூம் எப்படி இருக்குனு பாத்துக்குறேன்" என்றான் ப்ரவீன்


"நோக்கு அவ்வளவு தைரியம் வந்துடுத்தா" என்று அனு கேட்க


"நேர்ல வரேன். அப்பவும் இதையே கேளு" என்றான் ப்ரவீன் பதிலுக்கு


"வேண்டாம் வேண்டா. இரு ஹெட்ஃபோனாச்சும் எடுத்துக்குறேன்" என்ற அனு அழைப்பைத் துண்டித்தாள்


சில விநாடிகளிலேயே ப்ரவீன் வாட்சாப்பில் அழைத்திட, ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட அனு அழைப்பை ஏற்றாள்


"இதான் என்னோட ரூம்" என்று ப்ரவீன் காட்டிட, அவசரமாக கேமராவை ஸ்விட்ச் செய்தவள் தனது அறையைச் சுற்றிக் காட்டினாள்


பின்னர் ப்ரவீன் தலைமுடியைக் கோதியபடி, தனது முகத்தை அவளுக்குக் காட்டி "ஷோ மீ யுவர் ஃபேஸ்" என்றான்


அனு தயங்கியபடி முகத்தைக் காட்ட "இந்த ரெட்டை ஜடைய கழட்டவே மாட்டியா. ஸ்கூல்ல இருக்குற மாதிரி அப்படியே தான் இருக்க" என்று ப்ரவீன் கிண்டல் செய்திட


"வேறென்ன பிகினிலயா இருப்பாங்க. ஐ அம் எ குட் கேர்ள் னா. அதனால இப்படி தான் இருக்க முடியும். உனக்கு வேணும்னா வேற யாருக்காச்சும் கால் பண்ணி பேசிக்கோ" என்றாள் அனு


"ஓ... ஹோ... குட் கேர்ள் அனுவா. அன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல ஒரு டவுட் கேட்டாங்களே... அந்த நல்ல பொண்ணா" என்றான் ப்ரவீன் சிரித்துக் கொண்டே


"இன்னும் அத நீ மறக்கலையா. அய்யோ..." என்று அனு முகத்தை மறைத்துக் கொண்டாள்


"எப்படி மறக்க சொல்லுற. காலம் பூரா சொல்லிக் காட்டுவேன்" என்றான் ப்ரவீன் பதிலுக்கு


"அதுக்கு லைஃப் லாங் நீ என் கூட இருந்தா தான" என்றாள் அனு


அந்நேரத்தில் பங்கஜம் "அனு அனு" என்று அழைத்தபடி கதவைத் தட்ட


அலைபேசியையும் ஹெட்செட்டையும் அவசரமாக மறைத்த அனு "இதோ வந்துட்டேன்" என்றபடி கதவைத் திறந்தாள்


"என்னடி பண்ணின்டுருக்க" என்று பங்கஜம் கேட்டிட


"படிச்சுன்டுருக்கேன்" என்றாள் அனு பயத்தை முழுதாய் விழுங்கி விட்டு


"தோப்பனார் சொல்றார். நீ ஆன்லைன்ல இருக்கறதா, அவரு ஃபோன்ல காட்டுறதாமே" என்று பங்கஜம் வினவ


"டேட்டா ஆன்லயே இருந்தா அப்படித்தான் காட்டும். ஃபோன எங்க வச்சேன்னே மறந்துடுத்து. நல்லவேளை எனக்கு நியாபகப்படுத்தின பாரு. நான் போய் மொபைல தேடுறேன்" என்று அனு சொல்ல


"ஒன்னும் வேண்டாம். ஒழுங்கா படிக்குற வேலைய பாரு" என்ற பங்கஜம் சென்று விட, அனு உடனே கதவைச் சாத்திக் கொண்டாள்


அனு மீண்டும் அலைபேசியை எடுத்த போது, கன்னத்தில் கைவைத்தபடி ப்ரவீன் அப்படியே அமர்ந்திருந்தான்


'என்னாச்சு' என அவன் சைகையில் கேட்க


"அம்மா... ஏன் இன்னும் ஆன்லைன்ல இருக்கன்னு கேட்டாங்க" என்று அனு மிக மெல்லமாய் கூறினாள்


"அது ஒரு சின்ன செட்டிங்ஸ் தான். ஈசியா மாத்திரலாம். ஆனா யாராச்சும் வீடியோ கால் பண்ணா தான் மாட்டிப்ப. ஆன் அனதர் கால்னு வரும்" என்று ப்ரவீன் கூற


"அச்சச்சோ... தென் பை" என அனு உடனே அவசரப்பட்டாள்


"வெயிட். குட் நைட் சொல்லிட்டுப் போ" என்று ப்ரவீன் கூறிட


"குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ். டேக் கேர். மிஸ் யூ. உம்மா" என்றவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்


'கடைசியா வைக்கும்போது அவ என்ன சொன்னா' என்று ப்ரவீன் யோசித்துக் கொண்டிருக்க


'இப்போ எதுக்கு ப்ரவீன் கிட்ட நாம உம்மானு சொன்னோம். அய்யோ கசின்ஸ்ட்ட பேசுற மாதிரியே பழக்க தோஷத்துல பேசி வச்சுட்டோமே. ஏற்கனவே அப்படி இப்படினா என்னனு கேட்டதுக்கே ஓட்டுறான். இதுல வாய வச்சுட்டு சும்மா இல்லாம...' என தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவள், அவனை நினைத்தபோது உதித்தப் புன்னகையுடனே உறங்க சென்றாள்


"மாறா... ஒரு சின்ன வேலை இருக்கு. அத நீ செஞ்சுடுவியா" என்று ராம்கி கேட்டிட


"என்ன வேலைங்க. எனக்குத் தெரிஞ்ச வேலையா இருந்தா செய்றேன்" என்று மாறன் பதிலளித்தான்


"உனக்குத் தெரிஞ்ச வேலைய தெரியாதவன் செஞ்சா எப்படி செய்யணுமோ, அப்படி செய்யணும்" என ராம்கி கூற


மூளையில் இனம் புரியாத எச்சரிக்கை மணியடிக்க "புரியலைங்க" என்றான் மாறன்


"ஒருத்தன் நான் பண்ணுற நல்லதெல்லாம் விட்டுட்டு, கெட்டத மட்டும் தேடித் தேடி விசாரிச்சுட்டு இருக்கான். சும்மா அவன மோதி விட்ரு. ஒரு பயம் உண்டாக்குனா போதும். அவ்ளோ தான்... உயிரலாம் எடுக்கத் தேவையில்ல" என்று ராம்கி வாழைப் பழத்தில் ஊசியேற்றுவது போல் பேசினார்


"யாராச்சும் முறைச்சுப் பாத்தாலே பயந்துடுவேன். நமக்கு அவ்வளவு தைரியம்லாம் இல்லைங்க அய்யா" என்று மாறன் பொய் கூற


ஏமாற்ற உணர்வுடன் "நாளைக்கு வா" என்று கூறி அவனை அனுப்பி வைத்தார் ராம்கி


மாறனுக்கு ஏனோ மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது. ராம்கி அரசியல் காரணங்களுக்காகத் தவறுகள் செய்வதுண்டு. இதுவே அவனது ஊராக இருந்தால், ஒரு வார்த்தை ஆவது எதிர்த்துப் பேசியிருப்பான். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து விட்ட பிறகு, இப்போது அவனுக்கும் ஃபஹிமாவுக்கும் சோறு போடுவது ராம்கி தரும் சம்பளம் தான். சற்று நேரம் முன்பு கூட, மாறனுக்கு சுள்ளென்ற கோபம் உள்ளிருந்து பொங்கி எழுந்தது. உண்மையை உண்மைக்கு எதிராகவே திருப்புவதா என மாறனின் மனம் வெகுண்டாலும், ராம்கியை எதிர்த்துக் கேட்க நா எழவில்லை. அவனுக்கு மூளையில் உதித்ததெல்லாம் மருத்துவமனை பரிசோதிப்புத் திரையில் தெரிந்த அச்சின்னஞ்சிறிய உருவமே. தான் வாழ உதவும் பணம், பிறரைச் சுரண்டியதன் சிறிய பங்கு என உணர்ந்தாலும் அதை மறந்து, மறுத்து மாறனால் வாழ முடியுமா?


பணம் மட்டுந்தான்
மதிப்புமிக்கக் காகிதமா
மனசாட்சியை எதிர்ப்பது
அவ்வளவு சுலபமா
படித்திட்டப் புத்தகங்கள்
கேடயமாய் அமையாதா
எழுதியக் கூர்முனைகள்
குத்திக் கிழித்திடாதா
சுயமரியாதைச் சிந்தனை
கழுத்தை இறுக்கிடாதா
சான்றோரும் ஆன்றோரும்
நிந்தனைச் செய்யாரோ
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 31


"சோ... ஸ்வேதா என்ன தான் முடிவு பண்ணிருக்கா" என்று அஷ்வின் கேட்டிட


"அவ நீரவ்வ மேரேஜ் பண்ணிக்கப் போறாளாம்" என்றாள் சான்ட்ரா வேண்டா வெறுப்பாய்


"பட் எதுக்காக... ஆர் தே இன் லவ் வித் ஈச் அதர்" என அஷ்வின் கேட்க


"என்ன சொல்றதுனே தெரியல. ஒருத்தர ஒருத்தர் பாக்கக் கூட விரும்புறதில்லை. அவங்களோட பிரிவு இனிமே சரி செய்யக் கூடியதும் இல்ல" என்றாள் சான்ட்ரா நடக்கப் போகும் திருமணத்தை ஜீரணிக்க முடியாமல்


"பின்ன எதுக்காக இந்த மேரேஜ் செட்டப்" என்று அஷ்வின் அவள் மீது சாய்ந்து கொண்டு கேட்டான்


"ரோஷினியோட ஃப்யூச்சர் நல்லபடியா அமையும்னு ஸ்வேதா நினைக்குறா. அது எப்படி பாசிபிள் ஆகும்னு எனக்குத் தெரியல" என்றாள் சான்ட்ரா


"சான்ட்ரா நாம ஒன்னு பண்ணலாம்" என்ற அஷ்வின் அவளிடம் தனக்குத் தோன்றியதைக் கூற


"எனக்கு எப்படி இத்தனை நாளா இது தோணாம போச்சு" என்றாள் சான்ட்ரா இன்ப அதிர்ச்சியோடு


பின்னர் ஸ்வேதா ரோஷினியை அழைத்துச் செல்வதற்காக வர, "பேக் டு நார்மல் ஆயாச்சா. இன்னைக்கு எதுவும் சமைக்க வேணாம். வா சேந்தே டின்னர் சாப்பிடலாம்" என்றாள் சான்ட்ரா


ஸ்வேதா மறுக்க முயல "ரெண்டு பேருக்கு மட்டும் சமைச்சு போர் அடிக்குதாம். சோ கைன்ட்லி கோஆப்பரேட்" என்றான் அஷ்வின் புன்னகைத்து


"அஷ்வின் சொல்லிட்டா அந்த வார்த்தைக்கு மறுவார்த்தையே இல்லை" என்ற ஸ்வேதா அவனருகில் அமர்ந்து கொண்டாள்


"ஹனி, எனி ஹெல்ப்" என்று அஷ்வின் கத்த


"நீ அமைதியா இருந்தாலே எனக்கு நிறைய ஹெல்ப் பண்ண மாதிரி தான்" என்றாள் சான்ட்ரா


"அஷ்வின பத்தி நீங்க இப்படி சொல்லலாமா. மனுஷன் தங்கம்னா தங்கம்" என்று ஸ்வேதா துணைக்கு வர


"அந்த தங்கமானவன் பண்ணுற சேட்டை எனக்கு மட்டும் தான் தெரியும். எனக்குனு சமைக்க ஒரு மெத்தேட் இருக்கும். ஆனா அதுப்படி சமைக்கவே விட்றதில்ல. ஹெல்ப் பண்றேன்னு வந்து நின்னுட்டு, அது இப்படி இல்ல; இது அப்படி இல்லைனு லெசன் எடுப்பான் பாரு. நொந்து போயிடும்" என்று சான்ட்ரா குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்


"நான் என்ன சொல்றேன்னா... ஒருவேளைக்கு சமைக்கறோம்னா கூட, அதுல என்னென்ன இருக்கணுமோ எல்லாத்தையும் போட்டு சமைச்சா தான் அந்த டேஸ்ட், ஃப்ளேவர், கலர்னு சேந்து நச்சுனு இருக்கும்" என்று அஷ்வின் ருசித்து ரசித்துக் கூற


"அதுக்காக ஒரு கொத்தமல்லி போடலைனா கூட, அதனால தான் டேஸ்ட்டே வரலனு புலம்ப ஆரம்பிச்சுட்றான். எல்லா நேரமும் அத்தனை இன்க்ரீடியன்ட்ஸையும் ஸ்டாக் வச்சிருக்க முடியுமா" என்றாள் சான்ட்ரா நியாயமாய்


"பேசாம அஷ்வினையே சமைக்க விட்டுட வேண்டியது தான" என்று ஸ்வேதா வழி சொல்ல


"அது எனக்கு டபுள் வேலை. அவனுக்கு சமைக்கத் தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணித் தந்துட்டு, அவன் கேக்க கேக்க ஒவ்வொன்னா எடுத்து வேற தரணும். சூப்பரா தான் சமைப்பான்... ஆனா சமைச்சிட்டா, அன்னைக்கு டிஷ் வாஷ் கூட பண்ண மாட்டான். நான் தான் கிச்சன முழுசா க்ளீன் பண்ணணும்" என சான்ட்ரா பதிலளித்தாள்


"வீடுனா அழுக்குப் பட தான் செய்யும். வச்சது வச்ச இடத்துலே இருக்க இதென்ன லைப்ரரியா" என்று அஷ்வின் வாதத்தை ஆரம்பிக்க


"லைப்ரரில புக்க எடுத்துப் படிச்சுட்டு, எப்படி அதே இடத்துல திரும்பி வச்சுட்றாங்களோ... அப்படி வீட்டுலயும் ஒரு பொருள எடுத்து யூஸ் பண்ணிட்டு, அது இருந்த இடத்துலயே வச்சுட்டா நல்லதுனு தான் சொல்றேன்" என்றாள் சான்ட்ரா மறுவாதமாய்


"அய்யோ போதும். ரெண்டு பேரும் ஏன் இத்தனை அக்கப்போர் பண்ணுறீங்க. உங்களுக்குனு ஒரு குழந்தை பிறந்துட்டா, உங்க கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்ப சிரமமா போகும் போலவே" என்ற ஸ்வேதா சிரித்தாள்


"அதுக்குள்ள மெச்சூரிட்டிய வளத்துக்க வேண்டியது தான்" என்று அஷ்வின் கூற


"யாருக்கு" என்று முறைத்தபடி கேட்டாள் சான்ட்ரா


"எனக்கு தான். எனக்கு தான்" என்றான் அஷ்வின் அவசரமாக


"ஆமா உங்க வீட்டுல ஏன் பூஜை ரூம் காலியா இருக்கு" என ஸ்வேதா கேட்க


"அதான் கோவிலுக்குப் போறேனே. சான்ட்ராவும் சர்ச்சுக்குப் போவா. அவ நைட்டான ப்ரே பண்ணுற மாதிரி, நான் தோணும்போது மனசுக்குள்ளவே ப்ரே பண்ணிப்பேன்" என்றான் அஷ்வின்


"உங்க ரெண்டு பேரையும் பாத்தா சாமி கும்பிட்ற மாதிரியே தெரியல. அதான் என்னைப் போல கடவுள வெறுத்த கேங்கோனு கேட்டேன்..." என்று ஸ்வேதா கூறினாள்


"உருவ வழிபாடு தான் பண்ணணும்னு இல்லையே. தேவன் ஆவியாய் இருக்கிறார்" என்று அஷ்வின் பதிலுக்கு சொல்ல


"நீ ஹிந்து தான" என்றபடி ஸ்வேதா விழித்தாள்


"சரி கடவுள் தூணிலும் இருக்கார்; துரும்பிலும் இருக்கார். இப்படி சொன்னா தகுமா. வீட்டுல எந்த கடவுள வைக்குறதுனு ஒரே யோசனையா இருந்துச்சா... அதான் மனசே கடவுள்னு நினைச்சிட்டு அப்படியே விட்டாச்சு" என்று அஷ்வின் சொல்ல


"உன் கிட்ட இனி எந்த கேள்வியாச்சும் கேப்பேன்னு நினைக்குற. நோ நெவர்" என்ற ஸ்வேதா வாயை மூடிக் கொண்டாள்


வருணுக்கு நீரவ் அழைத்திருக்க "ஹலோ, வருண் ஸ்பீக்கிங்" என்றவாறு அழைப்பிற்கு பதிலளித்தான்


"ஐ அம் நீரவ். ஒரு கஸ்டடியல் கேஸ் பத்திப் பேசி, நிறைய கேஷ் கூட கொடுத்திருந்தேன்" என்று நீரவ் அழுத்திச் சொல்ல


"ஐ டூ ரெமம்பர். ப்ரோசஸ் போயிட்டு தான் இருக்கு. அதுக்காகக் கூடிய சீக்கிரம் சென்னைக்குக் கூடப் போகணும்" என்றான் வருண்


"ரொம்ப நல்லதா போச்சு. அப்படியே எங்க மேரேஜ்ஜுக்கும் சேத்து ஏற்பாடு பண்ணிருங்களேன்" என்று நீரவ் கூறிட


"யா யா ஷ்யூர். உங்களோட சில டீடெய்ல்ஸ் தேவைப்படுது. அனுப்புறீங்களா" என்று வருண் சாதாரணமாய் கேட்டான்


வருண் எந்தவித உணர்வும் காட்டாமல் இருக்க, இப்போது எரிச்சலடைந்த நீரவ் "ஐ வில் டாக் டு யூ லேட்டர்" என்று கூறி வைத்து விட்டான்


வருண் இவ்வளவு நேரம் ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருக்க, நீரவ்வின் உரையாடலைக் கேட்டிருந்த குரு "ஸ்வேதாவுக்கு மேரேஜா" என்றான் அதிர்ச்சியுடன்


"ஆமா. இத தானடா நான் ரொம்ப நாளாவே சொல்லிட்டு இருக்கேன்" என்று வருண் கூற


"அவ என்ன நினைச்சுட்டு இருக்கா. உன் கிட்ட சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டு, இப்போ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிப்பாளா... இரு நான் போய் என்னனு கேட்டுட்டு வரேன்" என்ற குரு கொதித்துப் போனான்


"பைத்தியமாடா நீ. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அவ எனக்கு எந்த ஹோப்பும் கொடுக்கல. நானும் அவள அப்ரோச் பண்ணல. எனக்கு லவ்லாம் செட் ஆகாது மச்சான். இருக்கவே இருக்காளுக நாலு மாமா பொண்ணுங்க. அவங்கள்ல யாரயாச்சும் கல்யாணம் பண்ணிக்குறது தான் சரிப்பட்டு வரும்" என்று வருண் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு சொல்ல


"உண்மையில உனக்கு ஸ்வேதா மேல எந்த விருப்பமும் இல்லைனா, விலகிடு மச்சான்... நீயே நேர்ல நின்னு இந்த கருமத்த நடத்தி வேற வைக்கணுமா. அவங்க வேற வக்கீல பாத்துக்கட்டும்" என்றான் குரு, வருணின் மனம் புண்படுவதை விரும்பாமல்


"என்னால அப்படி இருக்க முடியாது. கேஸ கைல எடுத்தாச்சு; அத முடிக்காம விட மாட்டேன்" என்றான் வருண் உறுதியாய்


"எதுனாச்சும் சொல்லிடப் போறேன் மச்சான். சேடிஸ்டாடா நீ. இனிம ஸ்வேதா கூடப் பேசுற வேலையே வச்சுக்காத. எதாச்சும் ஹெல்ப்னு கேட்டு வரட்டும்... அப்புறம் பேசிக்குறேன்" என்று குரு ஆத்திரத்தில் கூற


"அவ ஒன்னும் உன் கிட்ட ஹெல்ப் கேக்கல. என் கிட்ட தான கேக்குறா..." என்று வருண் பதிலுக்குச் சொன்னான்


"நீ பண்ணு. நான் சொல்ற எதையும் கேக்க மாட்ட. அவ்ளோ தான... உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போடு. நாள பின்ன குத்திக் குடையும். அப்போ உன் மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்குறனு நானும் பாக்குறேன்" என்று எரிச்சலடைந்த குரு அங்கிருந்து நகர்ந்தான்


"டேய் மச்சான். நில்லுடா" என்று அழைத்தபடி வருணும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல


அந்நேரத்தில் இந்துவின் எண்ணிலிருந்து அழைப்பு வர, "அப்பறம் பேசுறேன் வைடி" என்றான் குரு அதே எரிச்சலுடன்


"எதுக்குடா இப்போ டென்ஷனாகுற" என்று வருண் கேட்டிட


"நீ தான்டா டென்ஷன் ஆகணும். எதுவுமே நடக்காத மாதிரி, நீ ஜாலியா இருக்கல்ல... அதான் எனக்கு பிபி ஏறுது" என்றான் குரு அவசரமாக சிகரெட்டைப் பற்ற வைத்து


"எனக்கு ஸ்வேதாவ பிடிச்சுருக்கு. ஆனா அது மட்டுமே போதுமானதா இல்ல. அவள என்னோடவளாக்கி நான் என்ன நல்லது செய்ய போறேன். மே பி ஷி இஸ் ஸ்டில் இன் லவ் வித் நீரவ். தொலைஞ்சு போன காதல் கிடைக்குறதுலாம் வரம் இல்லையா. நான் ஏன் அதைக் கெடுக்கணும். என்னை விட நீரவ்வுக்கு ஸ்வேதாவ ரொம்ப நாளா தெரியும். வெல் செட்டில்டு பர்சனும் கூட" என்று வருண் சொல்ல


"போதும் நிறுத்துறியா. நீ ஸ்வேதாக்குக் கொடுக்குற சந்தோஷத்த, அந்த நீரவ்னால தர முடியுமா. உன்னால தான் மச்சான் அவ சிரிக்குறா. அது உன் கண்ணுக்குத் தெரியலையா" என்று குரு கேட்டிட, வருணிடம் எந்த பதிலும் இல்லை


அஷ்வினின் வீட்டில் அனைவரும் உண்ண அமர்ந்திருக்க, ஏற்கனவே உண்டு முடித்திருந்த ரோஷினி பூனைக்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்


"ஏன் அமைதியாய்டீங்க" என்று ஸ்வேதா கேட்க


"எங்களுக்கு திடீர்னு ஒன்னு தோணுச்சு. அதான் அதப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு..." என்றான் அஷ்வின் தயக்கமாய்


"அவ்ளோ சீரியஸானா விஷயமா" என்ற ஸ்வேதா உணவருந்துவதை நிறுத்த


"சும்மா தான். சாப்பிட்டு முடிச்சுட்டுக் கூடப் பேசலாம்" என்றாள் சான்ட்ரா சூழ்நிலையை எளிதாக்கும் எண்ணத்துடன்


சற்று நேரம் கழித்து "ரெண்டு பேரும் என்ன தான் சொல்லணும்னு நினைக்குறீங்க. சொல்லுங்க" என்றாள் ஸ்வேதா அவளாய் முன்வந்து


"உனக்கு ரோஷினிய பத்தின கவலை மட்டும் தான்னா... வி வில் டேக் கேர் ஆஃப் ஹியர். அவளுக்காக உன் லைஃப தொலைச்சிடாத. ஒரு குழந்தைய அடாப்ட் பண்ணுறத பத்தி, நாங்க ஏற்கனவே யோசிச்சுட்டு தான் இருந்தோம்" என்று அஷ்வின் கூற


"ஃப்யூச்சர்ல உங்களுக்குனு ஒரு பேபி வரும் அஷ்வின். ரோஷினி ரெண்டாம்பட்சமா இருக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை" என்று ஸ்வேதா நேரடியாகவே சொன்னாள்


இதற்கு பதிலளிக்க வேண்டிய சான்ட்ராவோ அமைதியாய் இருக்க, "நமக்கு ஃப்யூச்சர்ல வேறெந்த குழந்தையும் பிறக்க சான்ஸ் இல்லைனு சொல்லு..." என்று அஷ்வின் அவளிடம் முணுமுணுத்தான்


அவனிடம் அவசரத்தில் தான் கூறிய பொய்யினை மறுக்கவும் முடியாமல், உண்மையை சொல்லவும் இயலாமல் "உன் இடத்துல இருந்து, எங்களால ரோஷினிய நல்லபடியா வளக்க முடியும். நம்பு ஸ்வேதா" என்றாள் சான்ட்ரா அவளது கையைப் பற்றி


"அஃப்கோர்ஸ், உங்களால அவள ரொம்ப ஹேப்பியா வச்சுக்க முடியும். ஆனா இந்த தேவையில்லாத பாரத்த, என்னால உங்களுக்குக் கொடுக்க முடியாது" என்று ஸ்வேதா முடிவாய் சொன்னாள்


அவரவர் பாரத்தை
ஒருவர் மட்டுமே சுமக்கிறோமா ?
பாரதத்தின் தாய்
சுமக்கும் பாரம் அறிவீரோ !
தீதொன்று செய்தால்
தீயாய் வந்து சுடும்
நன்மையெனும் துளி
அரணாய் நின்று காக்கும்
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 32

ஓர் மாலை நேரத்தின் இயற்கைச் சூழலை ரசித்த வண்ணம் அஷ்வின் நின்றிருக்க, அப்போது தான் மாறன் அவ்வழியே கடந்தான்

"மாறன், எங்க இவ்ளோ அவசரமா போய்ட்டு இருக்கீங்க" என்று அஷ்வின் கேட்டிட

"வீட்டுக்கு தான் தோழர். வேற எங்க போறது" என்றான் மாறன்

"பெங்களூர்ல சுத்திப் பாக்க இடமா இல்ல. பேச்சுல இருக்குற சலிப்பு முகத்துல தெரியலையே" என்று அஷ்வின் புன்னகைத்தபடி கூறினான்

"இப்போ என்னை விட மாட்டீங்க, அப்படித்தான. சரக்கடிக்க கம்பெனி வேணுமா" என்றான் அருகில் வந்த மாறன்

"சரக்கா... வாய்ல அடிங்க. வாய்ல அடிங்க. அப்பறம் ஃபஹிமா வந்து எனக்கு அட்வைஸ் பண்ணுறதுக்கா. ஒரு தடவ அவமானப்பட்டதே போதும்" என்ற அஷ்வின் சிரிக்க

"என்ன சொல்ற அஷ்வின். எனக்கெதும் புரியல" என்றான் மாறன்

"உங்களுக்குத் தெரியாதா... கடைசியா ஒரு இனிய இரவுல, மாடில உக்காந்து ஃபன் பண்ணிட்டு இருந்தோமே... அடுத்த நாள் காலைல, இனிமே என் ஹஸ்ஸு கூட சரக்கடிச்சீங்க... சங்க கடிச்சுத் துப்பிருவேன்னு ஃபஹிமா வந்து மிரட்டிட்டுப் போனாங்க" என்று அஷ்வின் நடந்ததை விவரித்தான்

"நிஜமா இதெல்லாம் எனக்குத் தெரியாது. அவளால வாய வச்சுட்டு சும்மா இருக்க முடியாது. நீங்க எதுவும் நினைச்சுக்குடாதீங்க" என்று மாறன் வருந்தினான்

"நான் விளையாட்டா தான் சொன்னேன். சிஸ்டர் சொல்லுறதும் நம்ம நல்லதுக்கு தான. இனிமே குடிக்கவே கூடாது" என்று அஷ்வின் கூற

"பேச்சு மாற மாட்டீங்களே. வேற ஒரு சந்தோஷமான விஷயத்த கேள்விப்பட்டதும், ட்ரீட்லாம் கேக்க மாட்டீங்க தான" என்று மாறன் சொன்னான்

மாறனின் முகத்தை ஏறிட்ட அஷ்வின் "ஹௌடா. ஹௌடா... சக்கதாகிதே குரு..." என்று ஆரவாரம் செய்தான்

"ஏன்... இப்போ நான் என்னத்த சாதிச்சுட்டேன்" என்று மாறன் சாதாரணமாய் சொல்ல

"உங்களுக்கு எப்படியோ... நம்ம மூலமா ஒரு உயிர் உருவாகணும்னா, அது இந்த மொத்த யுனிவர்ஸோட பவர் தான. என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு சாதாரண விஷயம் இல்ல. ஐ அம் சோ ஹேப்பி. வாழ்த்துக்கள்" என்று அஷ்வின் குதூகலித்தான்

"எங்க வீட்டுல சொன்னா கூட, இவ்வளவு சந்தோஷப்படுவாங்களானு தெரியல" என்று மாறன் சொல்ல

"அவங்க கிட்ட மொதல்ல சொல்லுங்க மாறன். பேரன்ட்ஸ் சந்தோஷத்த வெளிய காட்டிக்கலைனாலும், அவங்க மனசுக்குள்ள நம்ம பத்தின எண்ணம் ஆயிரம் இருக்கும்" என்று சமாதானமாய் எடுத்துரைத்தான் அஷ்வின்

"அம்மாட்ட மட்டுமாவது சொல்ல முயற்சி பண்ணுறேன்" என்று மாறன் கூற

"ம்ம்ம் கண்டிப்பா. ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறவங்க கிட்டப் பேசுங்க. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். அப்பறம் முக்கியமா ஃபஹிமாவுக்கு நிறைய ஹெல்ப் பண்ணுங்க. சில பொண்ணுங்க அவங்களோட கஷ்டத்தக் கூட வாய திறந்து சொல்ல மாட்டாங்க" என்று அஷ்வின் யோசனைகளை அடுக்கினான்

"நீங்க நிறைய சொல்றீங்க... இதப் பத்தி நாம ஒரு நாள் உக்காந்து பேசலாம்" என்ற மாறன் அவனிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான்

வீட்டில் ஃபஹிமா சிரமப்பட்டு துணி துவைத்துக் கொண்டிருக்க, அஷ்வின் சொன்னதைப் பற்றி யோசித்த மாறன் "ஃபஹி நான் வேணா துவைக்கட்டா" என்றான்

"என்ன அதிசயம். உங்களுக்குத் துணி துவைக்கத் தெரியுமா" என்றாள் ஃபஹிமா ஆச்சர்யத்தோடு

"இது ஒரு விஷயமா. சோப் போட்டுக் கும்மி எடுத்தா அழுக்குப் போய்டும் தான" என்றான் மாறன்

"உங்க சட்டைக் காலர நல்லா தேய்க்கணும். பேண்ட்ட தூக்கி கதிரடிக்குற மாறி அடிக்கணும். எதுக்கு உங்களுக்குத் தேவையில்லாத சிரமம்" என்று ஃபஹிமா கூற

"நீ சொல்லிக் கொடு, நான் அதே மாதிரி செய்யுறேன்" என்று மாறன் அடம்பிடிக்க, ஃபஹிமா அங்கிருந்து நகர்ந்தாள்

மூச்சு வாங்கியபடி அமர்ந்தவள் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, 'இனிமேலாவது இவள ஒழுங்கா கவனிக்கணும்' என்று எண்ணிக் கொண்டான் மாறன்

இரவில் வருணும் ஸ்வேதாவும் சென்னைக்கு செல்லத் தயாராகினர்

"ரோஷினி என்ன பத்திக் கேட்டானா ஃபோன் பண்ணு" என்று ஸ்வேதா சொல்ல

"கவலைப்படாத. அவளே உனக்கு கால் பண்ணுவா" என்றாள் சான்ட்ரா சாந்தமாய்

"ச்ச்சோ. முக்கியமான ஒன்ன மறந்துட்டேன்" என்ற ஸ்வேதா படியேறிச் செல்ல, சான்ட்ரா வருணை முறைத்துக் கொண்டு நின்றாள்

"ஏன் அப்படி பாக்குற" என்று வருண் கேட்க

"ஆக்சுவலா, உன் மூஞ்சு முகரைய பேக்கணும் போல இருக்கு. இருந்தாலும் வேண்டாமேனு பாக்குறேன். உனக்கு ஃபீலிங்க்ஸே இல்லையாடா" என்றாள் சான்ட்ரா ஏகப்பட்ட எரிச்சலுடன்

"அந்த குருவும் இப்படியே பேசிப் பேசி என்னை சாகடிக்குறான். எல்லாரும் என்னையே தான் கேள்வி கேப்பீங்க. முடிவெடுத்தது அவ... கல்யாணம் ஆகப் போறதும் அவளுக்கு... இடையில நான் என்ன பண்ண" என்றான் வருண் பாவமாய்

"என்னை எதுவும் பேச வைக்காத" என்றாள் சான்ட்ரா கோபத்தை மட்டுப்படுத்தியவளாய்

அந்நேரம் கீழிறங்கிய ஸ்வேதா, "எதுக்காக மறுபடியும் ஆர்க்யூமென்ட் பண்ணிட்டு இருக்கீங்க" என்று கேட்க

"சும்மா போரடிச்சுதுனு பேசிட்டு இருந்தேன்" என சான்ட்ரா சமாளித்தாள்

"சரி, அப்போ நாங்க கிளம்புறோம்" என்று ஸ்வேதா சொல்ல

யோசனையில் ஆழ்ந்த சான்ட்ரா "ஒன் மினிட்" என்றபடி வீட்டினுள் சென்றாள்

தூங்கிக் கொண்டிருந்த அஷ்வினை இழுத்து வந்தவள் "இவனையும் கூடக் கூட்டிட்டுப் போங்க" என்றாள்

"ஏன் தூங்கிட்டு இருக்கறவன டிஸ்டர்ப் பண்ற" என்று ஸ்வேதா பதற

"இட் இஸ் ஓகே. என் தங்கத்த பத்திரமா பாத்துக்கோங்க. பசியே தாங்க மாட்டான்" என்ற சான்ட்ரா அஷ்வினுடைய பேக்கை வருணின் கையில் திணித்தாள்

"நீயில்லாம நான் எப்படி தூங்குவேன்" என்று அஷ்வின் கண்களை மூடிக் கொண்டே கேட்க

"இத எல்லாம் கேட்கணும்னு நேரம்..." என்று சலித்துக் கொண்ட வருண் முன்னே நடந்தான்

ஸ்வேதாவும் நடக்க ஆரம்பிக்க, "அடிக்கடி ஃபோன் பண்ணு" என்று மெதுவாகக் கூறிய சான்ட்ரா அவன் இதழைத் தீண்டிக் கண்களைத் திறக்கச் செய்தாள்

"நீயும் வா" என்ற அஷ்வின் சான்ட்ராவின் கையைப் பற்றியிழுக்க

"அப்பறம் ரோஷினிய யாரு பாத்துக்குறது. ஒழுங்கா அவங்க கூடப் போ. அவங்கள பாத்தா எங்கேயோ கண் காணாத இடத்துக்குப் போகணும்னு நினைக்கறது போல தெரியுது" என்றாள் சான்ட்ரா பதிலுக்கு

"ரெண்டு பேரும் காணாம போய்ட்டாங்கனா என்ன பண்ணுறது" என்று அஷ்வின் விளையாட்டாய் கேட்டிட

"அப்படி நடக்க வாய்ப்பில்லை. இன்கேஸ் ஒருத்தர் மட்டும் தொலைஞ்சிட்டா, இன்னொருத்தரையும் அங்கேயே தொலைச்சிட்டு நீ சேஃபா வந்துரு" என்றாள் சான்ட்ரா தீவிரமாய்

அவளைப் பார்த்துப் புன்னகைத்த அஷ்வின், ஓடிச் சென்று நடந்து செல்பவர்களுடன் சேர்ந்து கொண்டான்

பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி நடந்த அஷ்வின் "நீரவ் எப்போ வராரு" என்று கேட்க

"நாளைக் கழிச்சு வந்துட்றேன்னு சொல்லிருக்காரு" என்று பதிலளித்தாள் ஸ்வேதா

ஒருவழியாக இரவு நேரத்தில் உலாவி, சென்னை செல்லும் பேருந்தில் மூவரும் ஏறி அமர்ந்தனர்

ஸ்வேதாவுக்கும் வருணுக்கும் இடையில் அமர்ந்திருந்த அஷ்வின்
"எங்க தங்க போறோம்" என்று கேட்க

"ஸ்வேதா ஃப்ரெண்டு வீட்டுல தங்கிப்பா. நாம சென்னைல இருக்குற ஒரு வக்கீல் ரூம்ல தங்க போறோம்" என்றான் வருண்

"சென்னைல ரோஷினி கேஸ ஹேண்டில் பண்ணுறதும் அவர் தான. அப்போ நாளைக்கு என்ன ப்ளான்" என்று அஷ்வின் கேட்டிட

"எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றான் வருண் பதிலுக்கு

"நாம வெளிய போலாம் அஷ்வின்" என்றாள் ஸ்வேதா புன்னகையுடன்

"ச்சோ ச்வீட். சரி நீங்க உக்காந்துருங்க. நான் பின்னாடி சீட்டுக்குப் போறேன். ஒருவேள கூட்டம் சேந்தா இங்க வரேன்" என்றான் எழுந்தபடி

"இங்கேயே உக்காரலாமே" என்று ஸ்வேதா அவசரமாய் சொல்ல

"நான் என் டார்லிங் கிட்டப் பேசப் போறேன். அத நீங்க கேட்டா நல்லாருக்காது. பை பை" என்ற அஷ்வின் பின் இருக்கைக்குத் தாவி சாவகாசமாக அமர்ந்து கொண்டான்

வருணுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையில் கனமான மௌனம் நிலவ, "நைட் ட்ராவல் பிடிக்குமா" என்று ஸ்வேதாவே பேச்சை ஆரம்பித்தாள்

"பிடிக்கும்" என்று வருண் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்

"உனக்கு எதாவது பிரச்சனையா" என்று ஸ்வேதா கேட்க

"நான் எப்போ அப்படி சொன்னேன்" என்றான் வருண் பதிலுக்கு

"அப்பறம் ஏன் முகத்த இப்படி வச்சிருக்க. எப்பவும் எதாவது பேசிட்டே இருப்ப..." என்றாள் ஸ்வேதா

"எனக்கு அப்செட்டா இருக்கு. வேற ஒரு டென்ஷன்" என்றான் வருண் அவள் முகத்தைப் பாராமல்

"வீட்டுல எதுவும் ப்ராப்ளமா. என்னனு சொல்லு" என்ற ஸ்வேதா அவன் மனதை அறிய முற்பட்டாள்
வருண் அமைதியாகவே இருக்க

"இப்படி ஒரு மைன்ட்செட்ல, நீ எனக்காக வர வேணாம். இறங்கி வீட்டுக்குப் போறதா இருந்தா போ" என்று ஸ்வேதா கூறிட

"உன்னை நான் எதாவது தொந்தரவு பண்ணனா. அமைதியா இரு" என்றான் வருண் முடிந்தளவு பொறுமையாய்

தான் அவனுக்குத் தொந்தரவாக இருக்கிறோமா என்றெண்ணி ஸ்வேதாவுக்கு மனம் வெதும்ப, கண்களின் ஓரம் நீர்த்துளி திரண்டு நின்றது. பாரமாக உணர்ந்த வருணோ கண்களை மூடி அப்படியே இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

பின்னிருக்கையில் இருந்து "ஹலோ" என்றபடி அஷ்வின் இருவரையும் தட்ட, ஸ்வேதா அவசரமாகக் கண்களைத் துடைத்தபடி திரும்பிப் பார்த்தாள்

"ஏன் ஸ்வேதா. நான் இங்க வந்து அஞ்சு நிமிஷம் கூட ஆகலையே. அதுக்குள்ள என்னாச்சு" என்று அஷ்வின் கேட்டிட

அவள் முகம் வாடியிருப்பதைக் கண்ட வருண் "நான் பேசிக்கிறேன். நீ போய் கடலைப் போடு" என்றான் அஷ்வினிடம்

"குடிக்கத் தண்ணி தாங்கடா" என்ற அஷ்வின் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டான்

"இப்போ எதுக்குச் சின்ன விஷயத்த பெருசுப்படுத்துற" என்று வருண் கேட்டிட

"எனக்கு ஏதோ கஷ்டம்; நான் அழுகுறேன். உனக்கென்ன..." என்றாள் ஸ்வேதா மூக்கு விடைக்க

"சரி சரி. நான் பேசணும் உன்கிட்ட, அவ்ளோ தான. பேசுறேன். போதுமா... இங்க பாரு" என்றவன் அவளிடம் ஒரு பெட்டகத்தை நீட்டினான்

"என்ன இது" என்று கேட்டபடி ஸ்வேதா அதை வாங்கிக் கொள்ள

"உனக்கு தான். மே பி இதைக் கழுத்துல போட்டாவாச்சும், கொஞ்சம் பாக்குற மாதிரி இருப்ப" என்று வருண் அவளைப் பேச்சுவாக்கில் சீண்டிப் பார்த்தான்

"பார்ரா... செயினா" என்றவள் உடனடியாய் அதை எடுத்து அணிந்து கொள்ள

"கவரிங் தான்... நீ பெருசா எதும் நினைச்சுக்காத. பிடிச்சுருக்கா" என்றான் வருண்

"பிடிக்கலை. சுத்தமா பிடிக்கலை" என்றாள் ஸ்வேதா முகஞ்சுளித்து

"அப்போ கழட்டிக் கொடுத்துரு. வேற யாராவது பொண்ணுக்குக் கொடுத்து கரெக்ட் பண்ணவாச்சும் யூஸ் ஆகும்" என்ற வருண் கையை நீட்ட

"இந்த செயினுக்காக ஒருத்தி உன்னை லவ் பண்ணுவாளா... நினைச்சிட்டே இரு" என்று கூறி அவன் உள்ளங்கையில் கிள்ளி வைத்தாள் ஸ்வேதா

"பொண்ணுங்கள மடக்குறதலாம் ஒரு விஷயமா. அய்யா கண்ணசைச்சாலே நூறு பொண்ணுங்க வருவாங்க" என்று வருண் தற்பெருமைப் பேசிக் கொண்டிருந்த நேரம், அங்கு ஒரு திருநங்கை வந்தார்

தனது கைப்பையில் இருந்த ஐந்து ரூபாயை ஸ்வேதா வருணிடம் நீட்ட, "பத்து ரூபாயா இல்லையா" என்று கேட்ட வருண் அந்த திருநங்கையிடம் நாணயத்தை வழங்கினான்

"என்ன சில்லறையா தர. நோட்டா இல்லையா" என்று அவர் கேட்க, வருண் விழித்தான்

"சேஞ்ச் இல்லக்கா" என்று ஸ்வேதா இடையில் சொல்ல

"முழிக்கறத பாரு" என்றவர் வருணின் தாடையைத் திருகிய பின், ஸ்வேதாவின் தலையில் கைவைத்து விட்டு நகர்ந்தார்

வருணின் முகத்தைப் பார்த்து சிரித்து வைத்த ஸ்வேதா "சொன்ன மாதிரியே, உங்க கண்ணசைவுக்கு வரிசைல வராங்க போல" என்று கூறிட

"சீக்கிரம் பஸ்ஸ எடுங்கயா. அடுத்து யாராவது வந்துடப் போறாங்க" என்று வருண் பரபரத்திட, ஸ்வேதா அவன் பேச்சில் கலகலத்தாள்

தூரத்தில் வைத்தே
அழகு பார்த்திடட்டுமா
விரும்பும் இதயம்
நெருங்கினால் ஏற்பாயா
செய்கைகள் இன்றி
நினைப்பது நடந்திடுமா
இத்தருணம் இப்படியே
நீடித்திடக் கூடியதா
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 33


மூவரும் சென்னைக்குச் சென்று சேர்ந்த போது, வெயில் தன் பிரகாசமான பற்களைக் காட்டிக் கொண்டிருந்தது


"மகா ஈ வெதரு..." என்று அஷ்வின் கண்களைச் சுருக்கிக் கொள்ள


"இங்க அப்படித்தான்டா வெயில் அடிக்கும்" என்ற வருண் அஷ்வினின் தோளின் மீது கைப்போட்டு அழைத்துச் சென்றான்


"ஸ்வே... எங்க" என்று அஷ்வின் கண்களால் தேட


"அவ அப்போவே குதிச்சு ஓடிட்டா. அவங்க ஊரு வந்துருச்சுனு ஒரே குஷி" என்ற வருண், தட்டுத்தடுமாறி வழி நெடுக விசாரித்துக் கொண்டே அந்த விடுதிக்குச் சென்று சேர்ந்தான்


வருண் குளித்து விட்டு மற்றொரு வக்கீலுடன் வெளியே சென்று விட, அஷ்வினும் குளித்து விட்டு அருகிலிருந்த கடையில் சென்று சாப்பிட்டு வந்தான். கண்கள் தூக்கத்தைத் தேட நித்திரையைத் தழுவியவனை எழுப்பி விட்டது ஒரு பெண்ணின் குரல்.


"தூங்கு மூஞ்சு அஷ்வின்" என்று ஸ்வேதா அவனது காதருகில் வந்து கத்த


"நீயெங்க இங்க" என்ற அஷ்வின் அவசரமாக அருகில் கிடந்த டீசர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்


"மணி என்ன தெரியுமா. சாயந்தரம் மூணு. எத்தனை தடவை கால் பண்றது. வா போலாம்" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள் ஸ்வேதா


"ஏ இரு இரு. ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துட்றேன்" என்ற அஷ்வின் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்க அது சூடாக இருந்தது


"இங்க எப்படி வந்த. நாங்களே வந்து சேர ரொம்ப நேரமாச்சு" என்று அஷ்வின் ஸ்வேதாவிடம் கேட்டிட


"பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கேன். இந்த வெதர், பீப்பிள், ஏரியா எல்லாம் பழக்கப்பட்டது தான். இட்'ஸ் சோ.... சிம்பிள்" என்றாள் ஸ்வேதா


இருவரும் தெருவில் இறங்கி நடக்க "ம்ம்ம்ம். எங்க போறோம்" என்று அஷ்வின் கேட்டிட


"தாலி வாங்க போறோம்" என்றாள் ஸ்வேதா சாதாரணமாய்


"அதுக்கு நான் தான் கிடைச்சனா... எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது" என்று அஷ்வின் சொல்ல


"உன்னை யாரு துணைக்குக் கூப்டது. சும்மா ரூம்லயே அடைஞ்சு கிடப்பியேனு தான் அழைச்சிட்டு வந்தேன். மதிய சாப்பாடு சாப்டுருக்க மாட்ட. வா சாப்டு போலாம்" என்று அழைத்துச் சென்றாள் ஸ்வேதா


"வருண் எங்க போனான். அவனையும் கூப்டு போலாமே" என்று அஷ்வின் கேட்க


"காலைல வருண் கூட தான் கோர்ட்டுக்குப் போயிருந்தேன். ரோஷினியோட கஸ்டடி கிடைச்சுருச்சு. வருண கடைக்குக் கூப்டதுக்கு வரலைனு சொல்லிட்டான்" என்றாள் ஸ்வேதா பதிலுக்கு


அடுத்த நாள் அதிகாலையில் மூவரும் கோவிலில் இருக்க, நேரத்திற்கு நீரவ் தான் வந்தபாடில்லை. ஸ்வேதா உள்ளே வருபவர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டாள்.


அலைபேசியை எடுத்து சான்ட்ராவுக்கு அழைத்து "அந்த ஆள காணும். நீ பேசாம நேர்ல போய், அவரோட வீட்டுல இருக்காரானு பாரு" என்றான் அஷ்வின்


"என்ன நினைச்சுட்டுருக்கான்னே தெரியல. மொபைல் வேற நாட் ரீச்சபிள்னு வருது" என்று வருண் ஒரு பக்கம் எரிச்சலில் உலாவிக் கொண்டிருந்தான்


"திஸ் கை இஸ் கெட்டிங் ஆன் மை நெர்வ்ஸ்" என்ற அஷ்வின் கோவில் சுவற்றில் சாய்ந்து கொண்டான்


பல ஜோடிகளுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்க, அஷ்வினுக்கு அழைத்த சான்ட்ரா "நீரவ் அவரோட அபார்ட்மென்ட்ல இல்ல. தெரிஞ்சவங்க கிட்டக் கேட்டதுக்கு நேத்திக்கே சென்னை கிளம்பிப் போய்ட்டதா சொல்றாங்க" என்றாள்


"இப்போ என்ன செய்யறது" என்று அஷ்வின் கேட்க


"ஒருவேள வர்றதுக்கு லேட்டா ஆயிருக்கலாம். சென்னை ட்ராஃபிக்ல மாட்டிருப்பாரோ" என்று சான்ட்ரா சொன்னாள்


"மூணு மணி நேரமா வெயிட் பண்றோம். சரி நான் ஸ்வே கிட்ட சொல்லிட்டு என்னனு பாக்குறேன்" என்ற அஷ்வின் அழைப்பைத் துண்டித்தான்


"ப்ரோ... நீரவ் இனிமேயும் வருவாருன்னு எனக்குத் தோணலை" என்று அஷ்வின் சொல்ல


"அடுத்து என்ன பண்ணுறது" என்றான் வருண் நெற்றியைத் தேய்த்தபடி


கோவிலின் உள்ளே வந்த ஸ்வேதா 'எனக்கு மட்டும் வாழ்க்கைல ஏன் இத்தனை தண்டனை தர. இன்னும் எத்தனைக் கொடுமைய தான் நான் அனுபவிக்கணும். ப்ளீஸ் ப்ளீஸ்... என் உயிர மொத்தமாவாச்சும் எடுத்துடேன் கடவுளே' என்று கண்களை மூடிப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்


மூடிய விழிகளின் வழியே கண்ணீர் கசிந்து கொண்டிருப்பதைக் கண்ட வருண் "ஆமா நீங்க நேத்து வாங்குன தாலி எங்க இருக்கு" என்று அஷ்வினிடம் கேட்டான்


"என் கிட்ட தான் இருக்கு" என்று அவன் சொல்ல


"நானே அவள கல்யாணம் பண்ணிரட்டா" என்றான் வருண் யோசனையுடன்


"ஆர் யூ கிட்டிங். லைக் வாட். லைக் ஹௌ" என்று அஷ்வின் திணறினான்


"நீ தாலிய குடேன்" என்று வருண் கேட்க


"யோவ்... என்ன விளையாட்றியா. உங்க வீட்டுல நாள பின்ன கேட்டா என்னையா பதில் சொல்லுவ. ஃபர்ஸ்ட்டு ஸ்வேதா இதுக்கு ஒத்துப்பாளா" என்று அஷ்வின் கேட்டான்


"இப்போ தரப் போறியா இல்லையா" என்று வருண் மறுபடியும் கேட்க


"இந்தா வச்சுக்கோ. செமத்தியா வாங்க போற. நீ கூப்பாடு போட்டாலும் உன்னைக் காப்பாத்த நான் வர மாட்டேன்" என்றான் அஷ்வின் சட்டைப் பையில் வைத்திருந்த தாலியை அவனிடம் நீட்டி


நீண்ட நேரமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஸ்வேதாவின் கழுத்துக்கு அருகில் வருண் தாலியைக் கொண்டு சென்றிருந்தான். ஏதோ ஒரு உணர்வில் கண் திறந்தவள் வருணை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் வருண் இரண்டாவது முடிச்சினைப் போட ஆரம்பித்து இருந்தான். அஷ்வினோ ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தபடி, ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தான்.


"வருண் என்ன பண்ணுற" என்று ஸ்வேதா அழுது சிவந்த கண்களுடன் கேட்க


"நீ இனிமே அழ வேணாம். நான் உன்னையும் ரோஷினியையும் பாத்துக்குறேன்" என்றான் வருண் முழுமனதுடன்


அவ்வளவு தான் வருணின் கன்னத்தில் பளாரென்று ஸ்வேதா விட்ட அறையில், சன்னிதானத்தில் இருந்த அனைவரும் அவர்களையே பார்த்திருந்தனர்


"எக்ஸ்பெக்டட் ஒன்" என்று நினைத்துக் கொண்ட அஷ்வின், அவர்களுக்கு இடையே வரவில்லை


ஸ்வேதா ஏகப்பட்ட எரிச்சலுடன் அங்கிருந்து வெளிய நடக்க, "ஸ்வே நில்லு" என்றபடி அவளைப் பின்பற்றி ஓடினான் அஷ்வின்


"நீயும் தான இதுக்கெல்லாம் கூட்டு" என்று ஸ்வேதா எரிந்து விழ


"சத்தியமா, நான் இந்த ஐடியாவ கொடுக்கல. இது சரிப்பட்டு வராதுனு அப்போவே வருண்ட்ட சொன்னேன். அவன் தான் கேக்கல ஸ்வே" என்று அஷ்வின் சமாதானப்படுத்த முயன்றான்


"அதனால, அவன் கைல தாலிய கொடுத்துட்டு நீ ஓரமா நின்னியா" என்று ஸ்வேதா கோபம் குறையாமல் கேட்க


"நீ அவ்ளோ சின்சியரா சாமி கும்பிடுவேன்னு எனக்கெப்படி தெரியும். இப்போ ஒன்னும் இல்ல. பிடிக்கலைனா கழட்டிக் கொடு. தங்கத்த மட்டும் வித்துக் காசு தேத்திட்டு ஊர் போய் சேரலாம்" என்றான் அஷ்வின் சாதாரணமாய்


அவன் முகத்தைப் பார்த்த ஸ்வேதா "அதுக்கு முன்ன ஒரு வேலை இருக்கு" என்றாள் தீவிரமாக


அடுத்ததாய் ஸ்வேதாவும் அஷ்வினும் இருந்தது சென்னையில் இருந்த நீரவ்வின் வீட்டில். ஸ்வேதாவின் எதிர்பார்ப்பின்படி, நீரவ் மது மற்றும் மாதுவுடன் இருந்தான்.


"இப்போ வேணாம். நாம இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று அஷ்வின் சொல்வதையும் காதில் வாங்காமல் ஸ்வேதா உள்ளே சென்றாள்


கையில் மதுக்குப்பியுடன் ஸ்வேதாவின் அருகில் வந்த நீரவ் "ஹலோ புதுப் பொண்ணு. மேரேஜ் முடிஞ்சதும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாகலையா. ஓ... அதுக்கு தான் இங்க வந்துருக்கியா" என்று கேட்க


"மைன்ட் யுவர் வார்ட்ஸ்" என்றான் அஷ்வின் அவனது சட்டையைக் கொத்தாகப் பற்றி


"அஷ்வின் இந்த பஸ்டர்ட் கிட்ட உனக்கென்ன பேச்சு" என்ற ஸ்வேதா அவனைத் தன் பக்கமாக இழுத்தாள்


"என்னை லவ் பண்ணிட்டு, வேற ஒருத்தனுக்குக் கழுத்த நீட்டிருக்கியே... உன்னை என்ன சொல்லித் திட்டலாம்" என்றான் நீரவ் தள்ளாடியபடி


"உனக்கு ஏன் இவ்ளோ ஈகோ. என்னைப் பழிவாங்கணும்னு நினைச்சியா. நீ ஏற்கனவே பண்ணதெல்லாம் பத்தாதா" என்று ஸ்வேதா ஆக்ரோஷமாகக் கத்தினாள்


"எனக்கு இன்னும் கோபம் தீரலடி. உனக்குத் தாலி கட்டுனவன் யாரு. அந்த லாயர் தான. அவன இப்போவே போட்டுத் தள்ளிக் காட்டவா" என்று நீரவ் சவால் விட்டான்


"நீ என்னை ரெண்டு தடவை ஏமாத்திட்ட. ஆனா எனக்கின்னும் உன் மேல லவ் இருக்கறதா நினைச்சிட்டு இருக்கியே, அங்க தான் நீ ஏமாந்துட்ட. நான் அப்போவே படிச்சுப் படிச்சு சொன்னேன். இதெல்லாம் ரோஷினிக்காக தான் பண்றேன்னு... நீ எதையும் காதுல வாங்கல. போட்டுத் தள்ளப் போறியா. பெரிய கேங்க்ஸ்டரா நீ. ஏன் வருண மட்டும் கொல்ற, என் மேல தான உனக்குக் கோபம்... என்னையும் கொன்னுடு. நீ மட்டும் தான் எனக்கு வாழ்க்கைத் தர முடியும்னு இல்ல. உன்னை விடக் கொம்பன் ஒருத்தன் இருக்கான். அவன் எங்களைப் பாத்துப்பான்னு சொல்லிட்டுப் போக தான் வந்தேன்" என்றாள் ஸ்வேதா கர்வத்துடன்


"கிழிப்பான். போடி போ. ஒரே ஒரு ஃபோன் கால், நம்ம அடிச்ச லூட்டியலாம் அந்த வருண் கிட்ட சொல்றேன். ஐ வில் மேக் ஹிம் நோ, யூ ஆர் எ பிட்ச்" என்று நீரவ் கொக்கரிக்க


"எனஃப் ஸ்வேதா. லெட்ஸ் கோ. இவன் ஒரு மனுஷனே இல்ல" என்று நடுவில் சொல்லிப் பார்த்தான் அஷ்வின்


"ஒன் செக் அஷ்வின். உன் கீழ்த்தரமான செயல சொன்னா பத்தாதே நீரவ். அல்ரெடி ஹி நோவ்ஸ் எவ்ரிதிங். வீடியோ எதாச்சும் எடுத்து வச்சிருந்தீனா போய் போட்டுக் காட்டு. அவன் என்னை உடம்புக்காகக் கல்யாணம் பண்ணான்னு நினைக்கிறியா. காஸ் யூ ஆர் எ க்ரூக்குடு ஷிட், யூ திங்க் வி ஷேர்டு எ பெட் அன்ட் மேரீட். அவனோட சுண்டு விரல் கூட இன்னும் என் மேல படல. ஸ்டில் ஹி லவ்ஸ் மீ அன்ட் ப்ரூவ்டு இட்" என்றாள் ஸ்வேதா தன் கழுத்தில் இருந்த தாலியைக் காட்டி


"ரியலி... ஐ வில் ஷோ யூ, வாட் ஷிட்டியர் பீப்பிள் கேன் டூ. உங்க யாரையும் நிம்மதியாவே விட மாட்டேன். இன்க்ளூடிங் யூ அஷ்வின்" என்று நீரவ் விரல் நீட்டிச் சொல்ல


"முடிஞ்சத செஞ்சுக்கோ. யூ இடியட்" என்ற அஷ்வின் ஸ்வேதாவை இழுத்துக் கொண்டு வெளியில் வந்திருந்தான்


"உன் கோபம் அடங்குச்சா... ஆர் யூ ஓகே" என்றான் அஷ்வின் அன்பாய்


"யா..." என்ற ஸ்வேதாவின் கண்களில் குளம் போல் நீர் திரண்டு நின்றது


"இட்'ஸ் அல்ரைட். எவ்ரிதிங் குட். சியர் அப் லேடி" என்ற அஷ்வின் அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுக்க


"ஆல் மெஸ்ஸுடு அப் அஷ்வின்" என்று ஸ்வேதா அழத் தொடங்க, வானிலிருந்து விழுந்த மழைத் துளிகள் அவளுடன் இணைந்து கொண்டன


கண்ணீரைக் கடலாய் மாற்றிடு
நீயே மரவோடமாய் மாறிடு
மனம்போன போக்கில் வாழு
வாழ்வது சிறிதே உணர்ந்திடு
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 34


"என்ன முடிவெடுத்துருக்க ஸ்வே. நீ எந்த டிசிஷன் எடுத்தாலும், நான் உன் கூட நிப்பேன்" என்று அஷ்வின் உறுதியாகச் சொல்ல


சற்றே நிதானம் அடைந்திருந்த ஸ்வேதா "நீங்க சொல்லுறத நான் முன்னமே கேட்ருக்கணும் அஷ்வின். நான் ஒன்னு நினைச்சா, அதுக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சு" என்றாள் வருத்தத்துடன்


"ஆக்சுவலி உன் ப்ராப்ளம் தான் என்ன. எதுக்காக மூடி மறைக்கப் பாக்குற. என்னை உன் பிரதரா நினைச்சு சொல்லு ஸ்வே" என்றான் அஷ்வின் அவள் முகம் பார்த்து


"எனக்கு ப்ரெஸ்ட் கேன்சர் இருக்கு அஷ்வின். பட் ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு தோணல. ஐ டோன்ட் வான்ட் திஸ் ஃபக்கிங் லைஃப்" என்று ஸ்வேதா சொல்ல, அஷ்வின் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான்


"ஐ ரியலி நீடட் சம் ஒன், ஹூ கேன் டேக் கேர் ஆஃப் ரோஷினி. அம்மா விட்டுட்டுப் போன ஒரு சின்ன ப்ராப்பர்டி, என் பேர்ல இங்க இருக்கு. அத நீரவ் பேர்ல மாத்திட்டு, அவன் கிட்ட ரோஷினிய ஒப்படைச்சுட்டு நிம்மதியா தற்கொலை பண்ணிக்கலாம்னு தான் பெங்களூர் வந்தேன். நீரவ் மனசு இவ்வளவு கல்லா இருக்கும்னு நான் நினைக்கல" என்றாள் ஸ்வேதா


"மே பி, நீ உண்மைய சொல்லிருந்தா ரோஷினிய அவன் ஏத்துட்டு இருந்துருக்கலாம்" என்று அஷ்வின் கூற


"இரக்கத்தால தான் ஒரு விஷயம் கிடைக்கணும்னா, அப்படி ஒன்னு எனக்கு வேணாம்னு நினைக்குறவ நானு. என்னைக்காச்சும் இந்த உலகத்த விட்டு நான் போயிட்டா, ரோஷினிய பாத்துப்பியா அஷ்வின்" என்று ஸ்வேதா கேட்டாள்


"எதுக்கு இவ்ளோ ஈசியா விட்டுத் தர. ஐ கேன் ஹெல்ப் யூ. சோசியல் மீடியால ஃபன்ட் ரெய்ஸ் பண்ணலாம். கமான் ஸ்வேதா. ரோஷினி வளர்றத நீ பாக்க வேண்டாமா" என்று அஷ்வின் கேட்டிட


"என்னை கன்ஃப்யூஸ் பண்ணாத. நான் எதுக்காக வாழணும்" என்றாள் ஸ்வேதா வெறுத்துப் போய்


"நானும் சான்ட்ராவும் இருக்கோம். ப்ளஸ் இப்போ உனக்கு ஒரு அன்பு காதலன் இருக்கான்" என்று அஷ்வின் புன்னகையுடன் சொல்ல


"அவன் சரியான ஸ்டுப்பிட். சாகப் போறவள கல்யாணம் பண்ணி, அவனுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப் போகுது" என்று கூறினாள் ஸ்வேதா


"வெல், லைஃப் ஹேஸ் அதர் ப்ளான்ஸ் ஃபார் யூ. பேசாம மேரேஜ ரெஜிஸ்டர் பண்ணிக்கோ" என்று அஷ்வின் கூறிட


"எல்லாம் தெரிஞ்சும் இப்படிப் பேசாத அஷ்வின். வருண் வாழ்க்கையையும் சேத்துக் கெடுக்க சொல்றியா" என்றாள் ஸ்வேதா


"நீரவ் கிட்ட வருண பத்தி அவ்வளவு பெருமையா பேசிட்டு வந்த. உனக்கும் அவனைப் பிடிச்சிருக்குல்ல. நடந்தது எதையாச்சும் உன்னால மாத்த முடியுமா, சொல்லு. எப்படியா இருந்தாலும் சாக தானப் போற. அட்லீஸ்ட் சாகும் போதாச்சும் கொஞ்சம் சந்தோஷமா இரேன். ஜஸ்ட் இமேஜின்... சுமங்கலியா போய் சேரலாம். உனக்கு சொர்க்கத்துல இடம் கிடைக்கும்" என்று அஷ்வின் சிலாகித்துக் கூற


பதிலுக்குப் புன்னகைத்த ஸ்வேதா "அன்ட் அஷ்வின், ப்ராமிஸ் பண்ணு. நீ யார் கிட்டயும் என் ஹெல்த் கன்டிஷன பத்தி சொல்லக் கூடாது. எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சினா, ரோஷினிய பத்ரமா பாத்துப்பேன்னு சத்தியம் பண்ணு" என்றாள் ஸ்வேதா


"அதுக்கு முன்னாடி, உனக்குக் கிடைச்ச லவ்வ ஏத்துக்கோ. அவன் தாலி கட்டிட்டாங்கறதுக்காக நான் இதைச் சொல்லல. எல்லா லவ்வுக்கும் ஒரு தொடக்கம் இருக்குற மாதிரி முடிவும் இருக்கு. வாழுற வரைக்கும் உனக்கு அவன் ஒரு துணையா இருந்துட்டுப் போறான். ரொம்ப யோசிக்காத... அவன் ஒன்னும் தியாகம்லாம் பண்ணல. உன் அன்பு கிடைக்க அவனும் கொடுத்து வச்சிருக்கணும்" என்று எடுத்துரைத்தான் அஷ்வின்


"நான் இதைப் பத்தி யோசிக்குறேன். பட் கண்டிப்பா ப்ராப்பர்ட்டிய உன் பேருல எழுதி வைப்பேன். நோ சொல்லாம வாங்கிக்கோ" என்று ஸ்வேதா கட்டாயப்படுத்திக் கூற


"ரோஷினிய பாத்துக்குறதுக்கு லஞ்சம் கொடுக்குறியா. ஏற்கனவே வேறெந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்ட. உன்னைக் காப்பாத்தாம விட்டுட்டா, அந்தவொரு குற்றவுணர்ச்சியே என் வாழ்க்கை முழுக்கப் போரும். ப்ராப்பர்ட்டி உன் பேருலயே இருக்கட்டும். மேற்கொண்டு ஃப்யூச்சர்ல, அதைப் பத்தி வருண் முடிவெடுத்துக்கட்டும்" என்றான் அஷ்வின் முடிவாய்


இருவரும் சேர்ந்து பேசித் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர, பின்னர் வருணைத் தேடிச் சென்றனர். அஷ்வினும் ஸ்வேதாவும் மறுபடியும் கோவிலுக்கு வந்து சேர்ந்தபோது, வருண் வாசலிலேயே மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தான்


"வருண், வா போலாம்" என்று அஷ்வின் அழைக்க


முகத்தை உர்ரென்று வைத்திருந்த வருண் "மழை நிக்கட்டும் போகலாம்" என்று பதிலளித்தான்


ஸ்வேதா எதுவும் சொல்லாமல் நிற்க, வருணின் அருகில் சென்ற அஷ்வின் "நீங்க தாலிக் கட்டுன பொண்ணு, அங்க முழுசா நனைஞ்சு நின்னுட்டு இருக்காங்க. கொஞ்சம் கருணை காட்டுங்க சார். பசிக்குது. இன்னும் கொஞ்சம் விட்டா நான் இங்கேயே மயங்கி விழுந்துடுவேன். அப்பறம் நீங்க தான் என்னைத் தூக்கிட்டுப் போகணும்" என்று பொறுமையாகக் கூறினான்


"இவ்ளோ மழையில எப்படி வரதாம்" என்று வருண் விதண்டாவாதம் செய்ய


"ஏங்க புதுமாப்பிள்ளை, ட்ரெஸ்ஸு நனைஞ்சுரும்னு வருத்துப்படுறீங்களா" என்றான் அஷ்வின் புன்னகையுடன்


"இல்ல ஹேர்ஸ்டைல்..." என்று வருண் சொல்ல


ஈரத்துடன் அவனைக் கட்டிப் பிடித்து, தலையைக் கலைத்து விட்ட அஷ்வின் "இப்போ போலாமா, மாப்பிள்ளை சார்..." என்று எள்ளலுடன் கேட்டான்


"அவளோட பங்கு முடிஞ்சுருச்சு. அடுத்து உன் பங்குக்கு நீ செய்யுறியா. நான் இப்போவே பஸ் ஏறி பெங்களூர் கிளம்புறேன். நீங்க எப்படியோ போங்க" என்று வருண் சொல்ல


"ஸ்வேதா, மாப்ள சொம்பு கொடுத்தா தான் சாப்பிட வருவாராம்" என்று அஷ்வின் கத்தி வைத்தான்


"டேய் டேய். ஏன்டா மானத்த வாங்குற. வந்து தொலைக்குறேன்" என்ற வருண் ஒரு வழியாக அவர்களுக்கு ஒத்துழைக்க, மூவருமாய் சேர்ந்து அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றனர்


ஸ்வேதா அஷ்வினை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொள்ள, வருண் அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தான்


"அண்ணா மூணு மீல்ஸ். அதுக்கு முன்னாடி ஒரு லட்டு வைங்கனா" என்று அஷ்வின் சொல்ல, அவர்கள் இலைக்கு லட்டும் வந்து சேர்ந்தது


பசி தன் வேலையைக் காட்ட, வருண் ஆவலுடன் லட்டை எடுத்து வாயினருகில் கொண்டு போன நேரம் "அறிவில்ல. ஒன்னும் தெரிய மாட்டேங்குது" என்ற அஷ்வின் அதை லாவகமாகக் கைப்பற்றினான்


"சாப்பிட தானடா கூப்பிட்டு வந்த" என்று வருண் பாவமாய் கேட்க


"ஸ்வே வாயத் திற" என்று அவளுக்குப் பாதியை ஊட்டி விட்டான் அஷ்வின்


மீதி பாதியை வருணிடம் நீட்ட "எனக்கு வேணாம்" என்று முரண்டு பிடித்தான் அவன்


"ஆ காட்டுங்க மாப்ள சார். இன்னொரு கன்னத்திலயும் அறை வாங்கணுமா" என்று அஷ்வின் சிரித்துக் கொண்டே கேட்க


"ம்ஹூம் ஒன்னே போதும்" என்றவாறு அறை விழுந்த கன்னத்தில் கையை வைத்துக் கொண்ட வருண் வாயைத் திறந்து லட்டை விழுங்க, ஸ்வேதா கடினப்பட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றாள்


அஷ்வினும் ஸ்வேதாவுடன் சேர்ந்து கேலியாக சிரிக்க "வேணாம் குமாரு. அப்புறம் சீனாயிடும்" என்றவன் டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து மடக்கென்று குடிக்க


"அச்சச்சோ அவசரப்பட்டுட்டியே வருணு" என்று அஷ்வின் உச்சுக் கொட்டினான்


தண்ணீரின் சுவை மோசமாக இருக்க, வருண் பாதி தண்ணீரைக் குடித்த வேகத்திலே துப்பி இருந்தான். அஷ்வின் தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்று விட வருணின் அருகில் அமர்ந்த ஸ்வேதா, தனது துப்பட்டாவால் அவனது வாயையும் சட்டையையும் அழுந்த துடைத்து விட்டாள்.


வருண் அவளது முகத்தைப் பார்த்து "டூ யு லவ் மீ" என்று கேட்டிட, அவளோ ஏதும் சொல்லாமல் அஷ்வின் வருவதற்குள் அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டாள்


உணவருந்திய பின் மூவரும் அருகில் இருந்த பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல, முன்னரே வருணுக்குத் தெரிந்த வழக்கறிஞரும் கூடுதலாக இன்னொருவரும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். வருண் கோவிலில் நின்றிருந்த போதே நடந்ததை எல்லாம் அலைபேசியில் இவர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தான். காகிதங்கள் தட்டச்சு செய்யப்பட்டுத் தயாராக, வருணும் ஸ்வேதாவும் பதிவாளரின் முன் சென்று நின்றனர்.


"நல்ல நேரத்துல கல்யாணம் பண்ணீங்க. அடைமழை வெளுத்து வாங்குது. எந்த கோவில்ல கல்யாணம் நடந்தது" என்று அலுவலர் கேட்க, வருண் பதிலளித்தான்


அடுத்ததாக "பொண்ணோட அப்பா, அம்மா வரலையா" என்று அலுவலர் கேட்டிட


"யாரும் உயிரோட இல்லை. என் தம்பி மட்டும் வந்திருக்கான்" என்று அந்த வக்கீல் சொல்லிக் கொடுத்ததைப் போலவே ஸ்வேதா சொன்னாள்


"நீ தான் பொண்ணோட தம்பியா" என்று அலுவலர் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க, அஷ்வின் தலையாட்டினான்


"ஆதார் கார்டு எங்க. அப்பா பேரென்ன" என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியை சரிசெய்தபடி அந்த அலுவலர் நோட்டமிட


"காத்தவராயன்" என்று பதிலளித்தாள் ஸ்வேதா


"என் அப்பா பேரு உனக்கெப்படி தெரியும்" என்று அஷ்வின் முணுமுணுக்க


"நான் சொன்னது என் அப்பாவோட பேர" என்றாள் ஸ்வேதா மெதுவாய்


"ஷ்ஷ்ஷ்ஷ்" என்ற வருண் அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய


அஷ்வின் மற்றும் ஸ்வேதா இருவரின் அடையாள அட்டைகளையும் பார்த்து விட்டு "என்ன ரெண்டு பேரோட அப்பா பேரும் ஒரே மாதிரி இருக்கு. ஆனா அட்ரெஸ் வேற வேறயா இருக்கு" என்றார் அந்த அலுவலர்


"பாத்துப் பண்ணி விடுங்க மேடம். ஏற்கனவே கவனிச்சாச்சு" என்று வருணின் வக்கீல் நண்பர் சூசகமாய் லஞ்சம் கொடுத்ததைப் பற்றிச் சொன்னார்


"எல்லாம் இருக்கட்டும். கல்யாணம் பண்ணிக் குங்குமம் கூட வைக்காம, சர்ட்டிஃபிகேட் வாங்க வந்துட்டீங்களா" என்று அந்த அலுவலர் உற்றுப் பார்த்துக் கேட்டிட


"மழைல நனைஞ்சதுல கரைஞ்சிருக்கும் மேடம்" என்ற அஷ்வின் தனது பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த கோவில் குங்குமத்தை எடுத்து வருணிடம் நீட்டினான்


எங்கே மற்றொரு முறை அடி வாங்க நேரிடுமோ என்ற பயத்திலேயே வருணின் விரல் நடுங்க ஆரம்பித்திருக்க "நிறுத்து. அந்த விரல் இல்லப்பா. மோதிர விரல்ல வையு" என்று அந்த அலுவலர் சொன்னதும், அவன் அவ்வாறே செய்ய பின்னர் எல்லாம் சுமூகமாக முடிந்தது


அடுத்த நாள் காலையில் முதல் வேலையாகத் திருமணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவர்கள், பின்னர் ஸ்வேதாவுக்கு சொந்தமான அதே ஏரியாவில் இருந்த பழைய வீட்டிற்கு சென்றனர்


"வீட்ட நல்லா பாத்துக்க வருணு. ஸ்வேதாவ கல்யாணம் பண்ணதும் லட்சாதிபதி ஆய்ட்ட" என்று அஷ்வின் சொல்ல


"ஏன்டா மனுஷன புண்படுத்திட்டே இருக்க. நானே நொந்து போயிருக்கேன்" என்று வருண் ஸ்வேதாவின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத வேதனையில் கூறினான்


"ஏன் ட்யூட். ஓ... ஃபர்ஸ்ட் நைட் நடக்கலையா. அந்த வருத்தமா... அச்சச்சோ... நான் வேணா போய் மல்லிப்பூ வாங்கிட்டு வரட்டா" என்று அஷ்வின் குசும்புடன் கேட்க, அடுத்த நொடியே வருண் அவனுடன் மல்லுக்கு நின்றிருந்தான்


இருவரும் கட்டிப் பிடித்து உருண்டு கொண்டிருக்க, "லூசுங்களா. என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்ற ஸ்வேதா அஷ்வினைக் காக்க விரைந்தாள்


"நானும் எவ்வளவு தான் பொறுத்துப் போறது. சின்ன பையனாச்சே பாவம்னு பாத்தா..." என்ற வருண் அஷ்வினின் கழுத்தில் கை வைத்து அழுத்திக் கொண்டிருக்க


"வருண்" என்று ஸ்வேதா கத்தவும் தான் அவனது பிடியைத் தளர்த்தினான்


"கொலைகாரா" என்ற அஷ்வின் பலமாக இரும ஆரம்பிக்க


"என்னாச்சு அஷ்வின். என்ன பண்ணுது. ஹாஸ்பிட்டல் போலாமா. பாத்துட்டே நிக்குறியே வருண். எதாவது பண்ணு" என்று பதறிப் போனாள் ஸ்வேதா


ஸ்வேதா திரும்பிய கண நேரத்தில் அஷ்வின் அவனைப் பார்த்துக் கண் சிமிட்ட 'அவன் தான் நடிக்கிறான்னா... இவ அதுக்கும் மேல' என நொந்து கொண்டான் வருண்


தினம் தினம்
ஆச்சர்யமும் அதிர்ச்சியும்
காத்திருக்கும் கண்ணே
நம்பிக்கையோடு அடுத்தடுத்த
வலுவான அடிகளை
எடுத்து முன்வைத்திடு
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 35

அஷ்வின், ஸ்வேதா மற்றும் வருண் மூவரும் பெங்களூர் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினர்

முதலில் வருண் சென்று சன்னலோரம் அமர்ந்து கொள்ள, "நீ போய் உக்காரு" என்றாள் ஸ்வேதா அஷ்வினிடம்

"ஓரத்துல எப்படி உக்காருவ. எல்லாரும் ஏறி இறங்கிட்டு இருப்பாங்க" என்று அஷ்வின் சொல்ல, ஸ்வேதா வருணைப் பார்த்தாள்

"ஜன்னல் ஓரம் வெயிலடிக்கும் தாயே. உன்னால இங்க உக்கார முடியாது" என்று வருண் சொல்ல, ஸ்வேதா வேறு வழியில்லாமல் அவனருகில் சென்று அமர்ந்தாள்

அருகில் ஒரு பாட்டி மல்லிகைப்பூ விற்பனை செய்து கொண்டிருக்க, "பூ வச்சுக்குறியா" என்றான் வருண் தயங்கியபடி

ஸ்வேதா அவனைத் தீயாய் முறைக்க "வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு. எதுக்கெடுத்தாலும் முறைச்சுக்கிட்டு" என்ற வருண் திரும்பிக் கொள்ள

"ட்ராவல்ல இருக்கும்போது எனக்குப் பூ வாசனை ஒத்துக்காது" என்று பதிலளித்தாள் ஸ்வேதா

பயணம் தொடங்க, சற்று நேரத்திலேயே ஸ்வேதா தூங்கிப் போயிருந்தாள்

'நைட்லாம் தூங்கிருக்க மாட்டா போல' என்று வருண் எண்ணிக் கொண்டிருக்க, ஸ்வேதா தூக்கத்தில் அவன் மீது சாய்வதும் அவ்வப்போது நகர்ந்து கொள்வதுமாய் இருந்தாள்

அஷ்வின் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் அலைபேசியில் தலையை விட்டுக் கொண்டிருக்க, "டேய் நல்லவனே. போதும். ஏன் அந்த ஸ்கீரன போட்டு இந்த தேய் தேய்க்குற" என்றான் வருண்

"நீயும் தூங்கலாமே ட்யூட். ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சிட்டு... ரொமான்டிக்கா" என்று அஷ்வின் கூற

"அந்த லெவலுக்குலாம் இன்னும் போகல. அடங்கு" என்றான் வருண்

"அப்படியே போய்ட்டாலும்..." என்று அஷ்வின் வழக்கமான நக்கல் பாவனையில் சொல்ல

"நாங்களும் ஒரு நாள்... சரி அத விடு. நேத்திக்கு ஸ்வேதா கோச்சிட்டுப் போனாளே. அப்பறம் எங்க தான் போனீங்க" என்று வருண் கேட்டான்

"அதுவா... நீரவ் வீட்டுக்கு" என்று அஷ்வின் கூறிட

"அவன் நேத்து சென்னைலயா இருந்தான்... ஆமா அங்க எதுக்குப் போனீங்க" என்றான் வருண்

"ம்ம்ம்ம் அவனைக் கொஞ்சிட்டு வரலாம்னு போனோம்" என்றான் அஷ்வின் அலுப்புடன்

"ஸ்வேதா என்னைப் பத்தி உன் கிட்ட எதாச்சும் சொன்னாளா" என்று வருண் ஆர்வத்துடன் கேட்க

"ஏதாச்சும்னா என்ன" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே திருப்பிக் கேட்டான் அஷ்வின்

"நல்ல விதமா... பாசிட்டிவா... சொல்லு. எதாச்சும் சொன்னாளா" என்று வருண் அவசரப்படுத்த

வருணுக்காக நடந்ததைச் சொல்லலாம் தான்; காதலை நாமாக சேர்க்கவோ பிரிக்கவோ முடியாதே என்றெண்ணிய அஷ்வின், அவர்களாய் சேர்ந்தால் தான் காலமெல்லாம் அவர்கள் உறவு நிலைக்கும் என்றெண்ணி "இல்லை ட்யூட்" என்றான் இரண்டே வார்த்தைகளில்

"இதுக்காடா இவ்ளோ நேரம் யோசிச்ச" என்று சலித்துக் கொண்ட வருண் சன்னல் வழியே பார்வையைத் திருப்பினான்

இரவு நேரத்தில் மூவரும் பெங்களூர் வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு செல்லும் போது வருண் ஸ்வேதாவின் கழுத்தினை உற்று நோக்கிட, அவன் கட்டியத் தாலியைக் காணவில்லை.

வருண் அதிர்வதை உணர்ந்த ஸ்வேதா "பயப்படாத. அப்படி ஒன்னும் தூக்கிலாம் போட்டுட மாட்டேன். உள்ள தான் இருக்கு. நான் ரோஷினி கிட்ட உன்னைப் பத்திப் பேசணும். அவளுக்கு எதையாவது சொல்லி, முதல்ல நம்ம ரிலேஷன்ஷிப்ப புரிய வைக்கணும்" என்று சொல்ல, அவன் சற்றே நிம்மதியடைந்து தலையை ஆட்டி வைத்தான்

"ரோஷினிக்கு நீரவ்வையும் அஷ்வினையும் நல்லா தெரியும். ஆனா உன் கூட, குரு கூடலாம் அவ்வளவா பழகுனது இல்லைல..." என்று ஸ்வேதா விளக்கம் தர முயல

"புரியுது. விடுங்க" என்றான் வருண் முகத்தைத் திருப்பிக் கொண்டு

"நான் அப்போவே சொன்னேன்ல ஸ்வே. இவன் சரிப்பட்டு வர மாட்டான். பேசாம டிவோர்ஸ் பண்ணிடு" என்று அஷ்வின் விளையாட்டாய் சொல்ல

"என்னைக் கோவப்படுத்திப் பாக்காதடா. குரவளையக் கடிச்சுத் துப்பிருவேன்" என்று உறுமினான் குரு

அவர்கள் வீட்டினைச் சென்றடைய, சான்ட்ரா வாசலிலேயே பரபரப்பாகக் காத்திருந்தாள்

"என்னாச்சுமா" என்று அஷ்வின் பதட்டத்தோடு கேட்க

"திடீர்னு ரோஷினிக்கு பாடி டெம்பரேச்சர் அதிகமாய்டுச்சு. அதான் உங்களுக்கு உடனே ஃபோன் பண்ணேன். நீங்களும் பெங்களூர் வந்துட்டேன்னு சொன்னதும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல" என்று நிலைமையை விளக்கினாள் சான்ட்ரா

"ஹாஸ்பிட்டல் போலாம் அஷ்வின். என்னனு பாத்துட்டு வந்துரலாம்" என்றாள் ஸ்வேதா தாமதிக்க விரும்பாமல்

"இதுக்கு மேல டாக்சி பிடிச்சுப் போனா, அவன் ஒன் அன்ட் ஹாஃப் மீட்டர்னு சொல்லிக் கழுத்தறுப்பான். குரு கிட்ட தான் பைக் இருக்கில்ல. வருணு..." என்று அஷ்வின் சொல்ல, வருண் மேலே சென்று விட்டு சாவியுடன் திரும்பினான்

யார் ஓட்டுவது என்று அஷ்வினும் வருணும் விழித்துக் கொண்டிருக்க, "கம் அஷ்வின்" என்று ஸ்வேதா கூறவும்

"எனக்கு பைக்கே ஓட்டத் தெரியாது ஸ்வே. என்னத்த நின்னு வேடிக்கைப் பாத்துட்டு இருக்க. சீரியஸ்னஸ் புரியாம நின்னுட்டு... வண்டிய எடு வருணு" என்று அவசரப்படுத்தினான் அஷ்வின்

ரோஷினியை மடியில் அமர்த்திக் கொண்ட ஸ்வேதா, பின்னால் ஏறி அமர வருண் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான்

"உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா. ரியலி..." என்று சான்ட்ரா கேட்க

அந்நேரம் கீழிறங்கி வந்த குரு "எங்க அவன். ஃபோன் பண்ணா எடுக்கறதும் இல்லை. நான் பாத்ரூம்ல முகங்கழுவிட்டு இருந்தபோது பைக் சாவி கேட்டான். திரும்பி வந்து பாக்குறதுக்குள்ள அவனையும் காணும்; பைக் சாவியையும் காணும்" என்று புலம்பினான்

"உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். வாங்க வாங்க" என்று வீட்டினுள் அழைத்துச் சென்ற அஷ்வின், அவர்களிடம் திருமணச் சான்றிதழை நீட்ட இருவருக்கும் மயக்கம் வராத குறை தான்

"வாட்... ஹௌ இஸ் இட் ஈவன் பாசிபிள். இத்தனை தடவ ஃபோன் பண்ணேனேடா... ஒரு வார்த்தைக் கூட சொல்லல" என்றாள் சான்ட்ரா அதிர்ச்சியுடன்

"அவனுக்கு இன்னைக்கு இருக்கு. ரூம்க்கு வரட்டும். இத முன்னவே சொல்லிருந்தா, நாமளே சிறப்பா பண்ணி இருக்கலாம். என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணான். அதுவும் யார் கிட்டயும் சொல்லாம..." என்று குரு ஒரு பக்கம் பொங்க

"சில் சில். எல்லாம் ஒரு அவசரத்துல நடந்து முடிஞ்சுருச்சு. இப்போதைக்கு நம்ம தவிர, வேற யாருக்கும் தெரிய வேணாம். ஸ்வேதா முதல்ல ரோஷினி குட்டிக்கிட்ட இதைச் சொல்லித் தெரியப் படுத்தட்டும். அப்பறம் மத்ததைப் பாத்துக்கலாம்" என்றான் அஷ்வின்

"என்ன சொல்ல வர. கல்யாணம் பண்ணிட்டு, தனித்தனியா இருக்கப் போறாங்களா. ரிடிக்குலஸ் ஐ சே" என்று குரு கூறிட

"அவங்களுக்குள்ள ஒரு அன்டர்ஸ்டான்டிங் வந்தப்பறம் என்னவோ பண்ணிக்கட்டும். அவங்க லைஃப நமக்காக ரஷ் பண்ண முடியாது" என்றான் அஷ்வின் நிதானமாக

வழியில் "அம்மா அம்மா" என்று ரோஷினி முணகியபடி செல்ல

"அம்மா வந்துட்டேன் செல்லம். என்னைத் தேடுனீங்களா. சான்ட்ரா எதாச்சும் திட்டுனாளா" என்று ஸ்வேதா கனிவாகக் கேட்டாள்

"என்னை ஏன் உன் கூடக் கூப்பிட்டுப் போகல" என்றாள் ரோஷினி

"நிறைய வேலை இருந்துச்சா. அதான் இங்கேயே ஐஸ்க்ரீம் சாப்பிட்டு இருப்பனு விட்டுட்டுப் போனேன்" என்று ஸ்வேதா சமாதானப்படுத்த முயல

"சான்ட்ரா எனக்கு ஐஸ்க்ரீமே வாங்கித் தரலையே" என்று கேட்டாள் ரோஷினி

"பாப்பாக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். பத்து போதுமா. இருபது வேணுமா" என்று ஸ்வேதா பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர, மருத்துவமனையும் வந்து சேர்ந்தது

மற்றப் பெண்களில் இருந்து ஸ்வேதாவை வேறுபடுத்துவதே இது தான். வருண் இப்படியோரு பெண்ணை வாழ்வில் சந்தித்ததில்லை. சகோதரியின் குழந்தைக்காக ஒரு பெண்ணின் மனது இந்தளவும் துடித்துப் போகுமா என்ற ஆச்சர்யமே அவள்பால் அவனை ஈர்த்தது. ஸ்வேதாவின் தாய்மையை உணர்ந்தவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்து போனது. அவளுக்காக எதையும் செய்யலாம் என்று தோன்றினாலும், அவளாய் மனம் திறந்திட மாட்டாளா என இந்த நொடி வரையும் காத்திருக்கிறான். அவளைத் தன்னுள் மானசீகமாக இணைத்துக் கொள்ள, அவளது அனுமதி வேண்டி நிற்கிறான். பாவையின் கண்ணீர் துடைத்திடும் கரங்களும், அவள் சாய்ந்து கொள்ளத் தோளும் இருக்கவே இருக்க, கண்ணியம் கருதி ஒதுங்கி நின்றான் வருண்.

வருணின் பார்வைத் தன்னையே மொய்ப்பதை உணர்ந்தும் ஸ்வேதா நேருக்கு நேர் பார்த்திட மருண்டாள். ஒரு ஆசைப் பார்வைக் கூட, இன்றே அவனிடம் எல்லாவற்றையும் இழக்கும் கதிக்குத் தன்னை இட்டுச் சென்றிடக் கூடும் என்று தன் மனதுக்குச் சங்கிலி இட்டிருந்தாள். அவன் காதல் மட்டும் போதும், அவனுடனான இந்த வாழ்வு தொடங்க வேண்டாமென்றே நினைத்தாள். அனுமதி இல்லாமல் தன்னைத் தீண்டக் கூட நினைத்திடாதவனுக்கு, எப்படி ஏற்கனவே தீண்டப்பட்ட உடலைத் தருவது நியாயமாகும் என்ற சிந்தை அவளைக் குத்திக் கொண்டே இருந்தது. வருணுக்கும் ஒரு அழகான குடும்பம் இருக்கமல்லவா! ஊர் கூடி குடும்பங்கள் புடைசூழத் திருமணம் செய்திருக்க வேண்டியவன் எதற்காக இந்த அனாதைக்கு வாழ்வு தந்தான் என்ற கேள்வியே, அவனின் அன்பின் ஆழத்தை அவளுக்கு உணர்த்தித் தனக்கானவை எண்ணி இறுமாப்புக் கொள்ளவும் செய்தது.

ரோஷினிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு திரும்புகையில் "நான் ஒன்னு சொன்னா, அதுக்கு அப்புறமும் நீ என்னை ஃப்ரெண்டாவே நினைப்பியா" என்று ஸ்வேதா கேட்க

"சொல்லு" என்றான் வருண் பைக் மிரரை சரிசெய்தபடி

"அன்னைக்குத் தியேட்டர்லயே சொன்னேன். ஆனா அது உனக்குப் புரிஞ்சுதானு தெரியல" என்று ஸ்வேதா சொல்ல வரும்போதே, அவளுக்குத் தொண்டைக்குழி அடைப்பது போல் இருந்தது

"ரோஷினிய வச்சிட்டு தான் இதெல்லாம் பேசணுமா" என்று வருண் கேட்க

"அவ தூங்கிட்டா. நீ முன்ன மாதிரியே இல்லை. ரொம்ப கோவப்படுற" என்று ஸ்வேதா வாட்டமாய் சொன்னாள்

"சாரி. அவத் தூங்கிட்டானு எனக்கு எப்படித் தெரியும். ஒரு விஷயம் முடிஞ்சுருச்சுனா, அதை அத்தோட விட்டுரணும். இப்போ என்ன, நீ விர்ஜின் இல்லையா" என்றான் வருண் படபடவென

"ம்ம்ம்ம்" என்று ஸ்வேதா குற்றவுணர்ச்சியோடு ஆமோதிக்க

வாகனத்தை ஓரமாக நிறுத்திய வருண், அவளைத் தன் முன் நிறுத்தி "அது எனக்கு அன்னைக்கே புரிஞ்சுச்சு. சோ வாட். இஸ் திஸ் ஈவன் எ ப்ராப்ளம்" என்று கேட்டான்

"தெரிஞ்சும் என்னை ஏன் கல்யாணம் பண்ண" என்றாள் ஸ்வேதா அழுது விடுபவள் போல

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீ கேட்டியே. நான் ஒரு விஷயம் சொன்னாலும் என்னைய ஃப்ரெண்டா நெனப்பியானு. உன்ன எப்படி ஃப்ரெண்டா நினைக்க முடியும். லூசே, நீ என் பொண்டாட்டிடி" என்று அழுத்தமாய் சொன்னான் வருண்

அவன் கண்களை சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், மறுகணமே தலையைத் தாழ்த்திக் கொண்டு "நான் உனக்கு ஏத்தவ இல்லை. யு டிசர்வ் பெட்டர்" என்று புலம்பித் தள்ள

அவள் கன்னத்தில் சப்பென்று அறைந்தவன், ரோஷினியைத் தோளில் சுமந்து கொண்டிருந்த ஸ்வேதாவை இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டான்

வார்த்தைகள் போதும்
வாழ்க்கையை வாழ்ந்திடு
மோதல்கள் போதும்
முத்தங்கள் பதித்திடு
மூடல்கள் போதும்
மோகத்திரை விலக்கிடு
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 36

வருண் மேலோட்டமாகவே அணைத்திருக்க, அவனிடமிருந்து எளிதாக விலகிக் கொண்டாள் ஸ்வேதா

"இன்னொரு டைம் ஸ்டுப்பிடா எதாச்சும் பேசிட்டு இருந்தீனா, இப்படி மெல்லமாலாம் தட்ட மாட்டேன்; வேகமா அறைஞ்சிருவேன்" என்று வருண் சொல்ல

"பொண்ணுங்கள அடிக்குறது தப்புனு உங்க சட்டம் சொல்லலையா" என்றாள் ஸ்வேதா முகத்தைச் சுருக்கி

"அறைஞ்சிட்ட பின்னாடி கட்டியும் பிடிப்பேன். இது என்னோட காதல் சட்டத் திருத்தம்" என்றான் வருண்

பைக்கில் மீண்டும் ஏறி அமர்ந்த ஸ்வேதா "இந்த வேலைலாம் வச்சுக்காதீங்க. என் கிட்ட இருந்து தள்ளியே இருங்க. என் பர்மிஷன் இல்லாம தொட்டீங்கனா, உங்களுக்கு எதிரா கேஸ் போடுவேன்" என்று சொன்னாள்

"இது மாதிரி சவால் விட்டீனா தான், எனக்கு என்னென்னமோ பண்ணணும் போல தோணும். நானா வந்து உன்ன உரசிட்டு உக்காந்துருக்கேனா. இல்லை உன் கூட ஒரே வீட்டுல தான் தங்குவேன்னு அடம்பிடிச்சேனா. நீ வேலைக்குப் போ; சம்பாதிச்சு வாழு. எப்போ உனக்கு என் கூட இருக்கணும்னு தோணுதோ சொல்லு. அதுவரை நோ டச்சிங் டச்சிங்" என்று வருண் சொல்லவும்

"ரொம்ப பெரிய மனசு தான் உங்களுக்கு. தேங்க் யூ சோ மச்" என்று ஸ்வேதா முறுக்கிக் கொண்டு சொன்னாள்

"இந்த ஓரக் கண்ணால பாக்குறது, மனுஷன உசுப்பேத்துறது, தேவையில்லாம ஆர்க்யூ பண்றதுனு பண்ணிட்டு இருந்தீனா, வேற ஒரு வருண பாக்க வேண்டி வரும். அவனுக்கு டீசன்சி, டிசிப்ளின்லாம் தெரியாது" என்றான் வருண் முடிவாய்

'போடா. போடா. ரொம்ப தான் சீன் போடுற. அப்படியே போட்டேன்னு வையேன். அய்யோ கண்ணாடி வழியா வேற பாக்குறானே' என்று மனதினில் நினைத்த ஸ்வேதா பம்மினாள்

"தம் அடிக்கறதா கேள்விப்பட்டேன்" என்று ஸ்வேதா தயங்கித் தயங்கிக் கேட்க

"சரக்கும் அடிப்பேன். அதுக்கென்ன" என்றான் வருண் சாதாரணமாய்

"எனக்கு தம்மு, சரக்கடிக்கிற பசங்கள பிடிக்காது" என்றாள் ஸ்வேதா அவனை முறைத்து

வருண் பதிலேதும் சொல்லாமல் இருக்க, ஸ்வேதாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. வண்டியில் இருந்து இறங்கிய இருவரும், நேருக்கு நேர் கூடப் பார்த்துக் கொள்ளாமல் ஆளுக்கொரு வீட்டிற்குள் சென்று விட்டனர்.

வீட்டினுள் நுழைந்த வருணிடம் "வாங்க. கல்யாணம்லாம் சிறப்பா முடிஞ்சுச்சா" என்று குரு கேட்டிட

'ஒருவேள தெரிஞ்சுருக்குமோ' என்று எண்ணிய வருண் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் யோசிக்கலானான்

"என்னடா இவ்ளோ யோசிச்சுட்டு இருக்க. ஸ்வேதாவோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுச்சானு தான கேக்குறேன்" என்று குரு மீண்டும் கேட்க

"ஆன்... முடிஞ்சுருச்சு" என்றான் வருண் அவன் முகத்தைப் பார்க்காமல்

"பைக்ல எங்கயோ அவசரமா போன மாதிரி இருக்கு" என்று குரு மேலும் தோண்ட

"ரோஷினிக்கு உடம்பு சரியில்லை. அதான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தேன்" என்றான் வருண் அவனை ஏறிட்டு

"ரோஷினி உன் கூடத் தனியா வந்தாளா. ஆமா ரோஷினி உன்னை என்னனு சொல்லிக் கூப்புட்றா. அங்கிள்னா, இல்லை... அப்பான்னா" என்று குரு கேட்டிட

"எல்லாம் தெரிஞ்சுருச்சுனா நேரடியாவே கேக்க வேண்டியது தான. எதுக்கு சுத்தி வளைச்சுக் கேக்குற" என்றான் வருண் மனதில் உறுத்தலுடன்

"நீ எல்லாத்தையும் சுத்தி வளைச்சு தான செய்யுற. உன்ன இப்படி தான் டீல் பண்ண முடியும்" என்று குரு அதித்தன் இறுக்கமாகச் சொல்ல

"சாரிடா. நான் எதுவும் ப்ளான் பண்ணிலாம் பண்ணல மச்சான்" என்று வருண் கூறினான்

"நான் இந்துவ லவ் பண்ண விஷயத்த சொல்லலைனு, உனக்கு அவ்ளோ கடுப்பானுச்சுல்ல. இப்போ நீ என்கிட்ட எதுவுமே சொல்லாம, மேரஜ்ஜ முடிச்சுட்டு வந்து நிக்குற. எனக்குக் கடுப்பாகுமா, ஆகாதா. நீயே சொல்லு" என்றான் குரு கூர்மையான பார்வையுடன்

"தப்பு தான். கடுப்பாகும் தான். இப்போ நான் என்ன பண்ணா உனக்கு நிம்மதியா இருக்கும்" என்று வருண் கேட்க

"போய்த் தொலை. உருப்படியா அவக் கூட வாழுற வழியைப் பாரு" என்றான் குரு அதித்தன் எரிச்சலுடன்

"ஈஈஈஈஈ. எவ்ளோ நல்ல மனசுடா உனக்கு" என்றவன் அவனைக் கட்டிப்பிடிக்க நெருங்க

"ச்சீ பே மூதேவி" என்ற குரு அதித்தன் புன்னகையுடன் நகர்ந்து கொண்டான்

அடுத்த நாள் மாலை ஸ்வேதா அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் நேரத்தில் அழைத்த வருண் "என்ன பண்ணிட்டு இருக்க" என்றான்

"இப்போ தான் வொர்க் முடிஞ்சுது. என்ன திடீர்னு கால் பண்ணிருக்கீங்க" என்று கேட்டாள் ஸ்வேதா

"இனிமே அடிக்கடி கால் வரும். நீ தான் பண்ணவே மாட்ற. அட்லீஸ்ட் நானாச்சும் பண்ணலாமா" என்றான் வருண் பதிலுக்கு

"இனிமே காலே பண்ணாதீங்கனு சொன்னா என் நம்பர டெலிட் பண்ணிடுவீங்களா" என்று ஸ்வேதா கேட்க

"ஓ... அப்படிலாம் வேற ரூல்ஸ் போடுவீங்களோ" என்றான் வருண் எகத்தாளமாக

"எதுக்கு... இப்போ நான் ரூல்ஸ்னு ஒன்ன சொல்லி, நீங்க ட்ரிக்கர் ஆகிட்டீங்கனா. உங்க கூடலாம் சண்டைப் போட எனக்குத் திராணி இல்லை. விட்ருங்க" என்ற ஸ்வேதா அலைபேசியில் பேசிக் கொண்டே நடக்க

"பூம்" என்று அவள் காதருகினில் கத்தி வைத்தான் வருண்

காதைப் பொத்திக் கொண்டே ஸ்வேதா திரும்பிப் பார்க்க, வருண் புதிதாக வாங்கியத் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான்

"இதுக்கு தான் இவ்வளவு சீனா. பைக் வாங்குனா, அப்படியே ஓட்டிட்டு எங்கயாச்சும் போக வேண்டியது தான. இங்க எதுக்கு வந்தீங்க. ஆமா... என் வொர்க் ப்ளேஸ் உங்களுக்கு எப்படித் தெரியும்" என்றாள் ஸ்வேதா விரலை உதட்டின் மேல் வைத்து யோசித்தபடி

"எல்லாம் ஒரு ஜெனரல் நாலேஜ் தான்" என்றான் வருண் சகஜமாக

"உன்னைப் பாத்தா ரொம்ப நாளா என்ன ஃபாலோ பண்ணிட்டு இருந்த மாதிரி தெரியுதே" என்று ஸ்வேதா சந்தேகத்துடன் கேட்க

"ச்ச்ச. ச்ச்ச. இவங்க பெரிய பேரழகி. ஃபாலோ பண்றாங்க" என்றான் வருண் உண்மையை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்

"நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ். இங்க இருந்து கிளம்புறீங்களா. ப்ளீஸ்..." என்று ஸ்வேதா கூறிக் கொண்டிருக்க

அங்கு வந்த ஸ்வேதாவின் அலுவலகத் தோழி "ஹே ஸ்வேதா. ஹூ இஸ் திஸ். பாய் ஃப்ரெண்டா" என்று புன்னகையுடன் கேட்டாள்

"நோ நோ நோ" என்று ஸ்வேதா அவசரமாக மறுத்திட

"ஆக்சுவலி ஐ அம் ஹெர்..." என்று வருண் ஏதோ கூற வந்தான்

"இப்போ எதாச்சும் அவக்கிட்ட சொன்னீனா, உன்னைக் கொன்னுருவேன்" என்று தமிழில் ஸ்வேதா மிரட்ட

"யு கேன் டெல் மி. யு ஆர் ஹெர் பாய் ஃப்ரெண்ட், ரைட். அவர் ஹோல் ஆஃபிஸ் இஸ் க்யூரியஸ் டு நோவ் அபௌட் திஸ்" என்று அப்பெண் மிகுந்த ஆர்வத்துடன் வருணிடம் கேட்டாள்

"சொல்லட்டா. காதலன் இல்லை, கணவன்னு" என்று வருண் குறும்புடன் கேட்க

"இப்போ உனக்கு என்ன வேணும்" என்று முணுமுணுத்தாள் ஸ்வேதா

"பைக்ல ஏறு, உடனே" என்று வருண் சொல்லவும்

அவன் பின்னால் ஏறிக் கொண்ட ஸ்வேதா "ஹி இஸ் லைக் மை ப்ரதர்" என்றாள் தன் அலுவலகத் தோழியிடம்

வண்டியை ஸ்டார்ட் செய்து முறுக்கிய வருண் "ஷி இஸ் லையிங்" என்று அப்பெண்ணிடம் கூறிவிட்டுப் பறந்தான்

"ஹும். ஏன் இப்போ அப்படி சொன்ன அந்த பொண்ணுக்கிட்ட. நாளைக்கு அவக் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்" என்று ஸ்வேதா பரிதவிப்புடன் கேட்க

"உண்மைய சொல்லு" என்றான் வருண் கண்சிமிட்டி

"இப்போ உன்னை யாராச்சும் கூப்பிட்டாங்களா. முதல்ல வண்டிய நிறுத்து" என்று ஸ்வேதா சொல்ல

"இல்லைனா என்ன பண்ணுவ... குதிச்சிருவியா" என வருண் விளையாட்டாய் கேட்டான்

சற்று நேரம் அமைதியாக இருந்த ஸ்வேதா "எனக்கு தான் கொஞ்சம் டைம் வேணும்னு சொல்றேன்ல. அதுக்குள்ள ஏன் அட்வான்டேஜ் எடுத்துக்கப் பாக்குற" என்றாள் பாவமாய் முகத்தை வைத்து

வாகனத்தை மேலும் வேகமாகச் செலுத்திய வருண், ஒரு உணவகத்தின் முன்பு வண்டியை நிறுத்த, அங்கு அஷ்வின், சான்ட்ரா, குரு, இந்துஜா மற்றும் ரோஷினி ஆகியோர் இவர்களுக்காகக் காத்திருந்தனர்

"குருவும் சான்ட்ராவும் ட்ரீட் கேட்டாங்க. அதான் கூப்பிட்டு வந்தேன்" என்று வருண் விளக்கம் தர

தன் தவறை உணர்ந்து "சாரி" என்று கண்களைச் சுருக்கிக் கேட்டாள் ஸ்வேதா

"ம்ம்ம். இப்போ கேளு சாரி பூரின்னு. உடனே அட்வான்டேஜ் எடுத்துக்குறேன். அது இதுன்ன வேண்டியது" என்று வருண் கூற

"சாரி சாரி. ப்ளீஸ் திட்டாத" என்றாள் ஸ்வேதா மென்னகையுடன்

"சாரி கேட்டா, எல்லாம் முடிஞ்சுடுமா. என்னைப் பத்தித் தப்புத் தப்பா நினைக்குறதுக்கு பனிஷ்மென்ட் இருக்கு. நீ சொன்ன மாதிரி அட்வான்டேஜ் எடுத்துக்கப் போறேன். இன்னைலருந்து..." என்ற வருண் பைக் சாவியை எடுத்துக் கொண்டு முன்னே நடக்க

"அப்படினா... புரியல. கொஞ்சம் விளங்குற மாதிரி சொல்றீங்களா" என்ற ஸ்வேதா அவன் பின்னால் வேகமாக ஓடினாள்

"இனிமே நீ ஆஃபிஸ் போறது வரதுலாம் என் கூட தான்" என்று வருண் சொல்ல

"ம்ம்ஹூம். முடியவே முடியாது" என்றாள் ஸ்வேதா அதிர்ச்சியுற்று

"இந்த டீல் ஓகே இல்லையா. டெய்லி நைட் நான் உன்னோட வீட்டுல வந்து தூங்குறதப் பத்தி என்ன நினைக்குற" என்றான் வருண் அவளை நிறுத்தி

"இது ரொம்ப மோசம். ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க" என்று ஸ்வேதா கேட்டிட

"ரெண்டு டீல்ல எதை நீ ஒத்துக்கப் போறனு கேக்க தான் வந்தேன். அதுக்குள்ள டார்ச்சர் பண்ணுறேன்னு வேற சொல்லிட்ட... உண்மையா டார்ச்சர் பண்ணா எப்படி இருக்கும்னு உனக்குக் காட்ட வேண்டாமா. சோ இன்னைலருந்து ரெண்டு விஷயத்தையும் நடத்திடலாம்னு இருக்கேன்" என்று வருண் அவளைக் கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறினான்

"யார் சொன்னா டார்ச்சர் அப்படி இப்படினு. உங்கள மாதிரி நல்லவர எங்கயாச்சும் பாக்க முடியுமா. எனக்கு முதல் டீலே ரொம்ப பிடிச்சுருந்தது. பிக்கப், டிராப் எல்லாத்தையும் நீங்களே பாத்துக்குறேன்னு சொல்றீங்க. தங்கமான மனசு உங்களுக்கு" என்று கூறிய ஸ்வேதா வலிய புன்னகைக்க

"குட் கேர்ள். இந்த தடவை நான் பெட்ரோல் போட்டுட்டேன். அடுத்த தடவை நீ தான் பெட்ரோல் போட பைசா தரணும். அப்பறம் இப்போ வைக்கப் போற ட்ரீட்டுக்கு ஷேர் பிஃப்டி பிஃப்டி" என்று வருண் சொன்னான்

"வாவ் க்ரேட். பைக்குக்கு இ. எம். ஐ. எப்படி கட்டப் போறீங்க. அதுலயும் எனக்கு ஷேர் இருக்கா" என்று ஸ்வேதா கேட்க

"இல்லை. அத நான் பாத்துக்குறேன்" என்றான் வருண்

'நல்ல வேளை தப்பிச்சோம்' என்று ஸ்வேதா உள்ளுக்குள் சந்தோஷப்பட

"ஒருவேளை இ. எம். ஐ. கட்ட முன்ன பின்ன குறைஞ்சுச்சுனா கேப்பேன்" என்று வருண் யோசித்துக் கூறினான்

'நல்லா வருவ' என்று மனதில் நொந்து கொண்ட ஸ்வேதா எரிச்சலுடன் முன்னே நடக்க, குறுஞ்சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான் வருண்

தொட்டால் சுருங்கிப் போவாய்
கிண்டலாவது செய்து கொள்ளட்டா
உன் முகம் சுருங்கும்போது
என் நெஞ்சும் சுணங்குகிறதடி
உனை எண்ணித் தவிக்கும்
இம்மனதைத் தொட்டுப் பாரடி
துடிக்கும் ஒவ்வொரு நொடியும்
உனக்காக வென்று புரியவில்லையா
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 37



ஒருநாள் ஃபஹிமா காற்று வாங்கியபடி புல்வெளியில் உலாவிக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் வாயிலின் உள்ளே நுழைந்த காரில் இருந்து சற்றே வயதான பெண்மணி ஒருவர் இறங்கினார்.



"யாரு வேணும். துர்காம்மா இந்நேரத்துக்குக் கம்பெனில இல்ல இருப்பாங்க" என்று ஃபஹிமா கூறிட



"பார்த்திபனைப் பாக்கணும்" என்று அவர் சொன்னார்



"அங்கிள் உள்ள தான் இருக்காரு. நான் வேணும்னா அவர் கிட்டப் போய் சொல்றேன். உங்க பேரென்ன" என்றாள் ஃபஹிமா



"அனிதானு சொன்னா தெரியும்" என்று அவர் கூறிட



'இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே' என்று ஃபஹிமா யோசித்தபடி நடந்தாள்



ஃபஹிமா காலிங் பெல்லை அழுத்திட, சிறிது நேரம் கழித்தே கதவைத் திறந்த பார்த்திபன் அவளை அமைதியாகப் பார்த்திருந்தார்



"உங்கள பாக்க அனிதானு ஒருத்தங்க வந்துருக்காங்க" என்று ஃபஹிமா கூற



அந்த பேரைக் கேட்டவுடன் ரத்தக் கொதிப்பு நிலையை அடைந்தவர் "நான் யாரையும் பாக்க விரும்பல" என்றார் உடனடியாய்



அவர் எப்போதும் போல் தான் எரிச்சல் அடைகிறார் என்றெண்ணிய ஃபஹிமா அந்த பெண்ணிடம் இவ்விஷயத்தைச் சொல்லலாம் என்று எண்ணித் திரும்ப, அதற்குள் அனிதா வீட்டின் உள்ளே நுழைந்திருந்தார்



"அங்கிள் உங்களைப் பாக்க ரெடியா இல்லை. நீங்க எதா இருந்தாலும் துர்காம்மாட்ட பேசிக்கோங்க" என்று ஃபஹிமா எடுத்துக் கூறிட



அதைக் காதில் வாங்காத அனிதா "ஹலோ பார்த்திபன். எப்படி இருக்கீங்க. என்னை விழுந்து விழுந்து லவ் பண்ணீங்க. இப்போ பாக்கக் கூடப் பிடிக்கலையா" என்று பார்த்திபனின் முன்னால் சென்று கேட்டார்



அனிதாவைப் பார்ப்பதை அறவே தவிர்த்த பார்த்திபன் "ஜஸ்ட் கெட் அவுட், ஐ சே" என்று எரிந்து விழுந்தார்



ஃபஹிமாவுக்கு ஓரளவுக்குப் புரிய வர, "மேடம் அவரு தான் உங்களைப் பாக்க விரும்பலைனு சொல்றாருல்ல. ஏன் இப்படி நடந்துக்குறீங்க" என்று கேட்டாள்



"கேன் யு ஷட் அப்" என்று ஃபஹிமாவிடம் திமிராகக் கூறிய அனிதா, "நான் ஏன் உங்களை விட்டுட்டுப் போனேன்னு உங்களுக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்" என்றார் பார்த்திபனை நோக்கி



பதிலுக்கு அவரோ "பிகாஸ் யு நெவர் லவ்டு மீ" என்றார் வெறுப்புடன்



"எனக்கு உங்களைப் பிடிச்சுருந்தது. ஆக்சிடென்ட் ஆகுற வரைக்கும்... அதுக்கு அப்பறம் லவ்வா லைஃபானு யோசிச்சுப் பாத்தேன். லைஃப் தான் முக்கியம்னு தோணுச்சு. ஆனா என் ஹஸ்பன்ட் என்னை ஒழுங்காவே பாத்துக்கல. வருஷங்கள் ஓட ஓட என்னோட தேவைகள அவனால பூர்த்தி செய்ய முடியல. இடியட். அவனை டிவோர்ஸ் பண்ணுற நிலைமைக்கு என்னைத் தள்ளிட்டான்" என்று அனிதா பேசிக் கொண்டே போக



அதைக் கேட்க கூட விரும்பாமல் "இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுற" என்றார் பார்த்திபன் அருவெறுப்புடன்



"இப்போ மிஸ்டர் விஸ்வநாதன மேரேஜ் பண்ணிக்கப் போறேன். நீயும் பெங்களூர்ல தான் இருக்கேன்னு கேள்விப்பட்டேன். அதான் இன்விடேஷன் வச்சுட்டுப் போலாம்னு வந்தேன்" என்ற அனிதா தனது விலையுயர்ந்த திருமணப் பத்திரிக்கையை கர்வத்துடன் நீட்டினார்



அதைக் கையில் வாங்கிய மறுநொடியே கிழித்துப் போட்ட பார்த்திபன் "நீ பண்ணப் போறது கல்யாணம் இல்லை. மார்க்கெட்டிங்... மேரேஜ் மார்க்கெட்டிங்" என்றார் ஆக்ரோஷமாக



"ஓ... கோவத்துல இருக்கீங்களா. உங்களைக் கல்யாணம் பண்ணதால அந்த துர்காக்கு இப்போ என்ன கிடைச்சுது. சொல்லுங்க பாப்போம். சோ பிட்டி" என்ற அனிதா விஷமப் புன்னகையை வீசினார்



இவ்வளவு நேரம் பொறுத்திருந்த ஃபஹிமா "அவங்க லைஃப பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ட்ரூ லவ் எதையுமே எதிர்பாக்காது... எதையுமே" என்றாள் அழுத்தமாய்



"ரியலி... திஸ் இஸ் சோ டிஸ்கஸ்டிங். நான் இப்போ கூட, உன்னை மாதிரி கால் வராதவன கல்யாணம் பண்ணலைனு நினைச்சு நிம்மதியா இருக்கேன் பார்த்திபன். எனிவே நீயும் துர்காவும் மறக்காம கல்யாணத்துக்கு வந்துடுங்க. மேரேஜ்னா எவ்வளவு க்ராண்டா நடக்கும்னு வந்து பாத்துத் தெரிஞ்சுக்கோங்க" என்றவள் மற்றொரு திருமணப் பத்திரிக்கையை மேசையின் மீது வைத்தாள்



"ஒரு நிமிஷம்... ஹௌ டேர் யூ, அனிதா. எப்படி இவ்ளோ கீழ்த்தரமா நடந்துக்குற. ச்சீ உன்னைப் போய் லவ் பண்ணேன் பாருன்னு தான் இப்போ கூட எனக்கு எரியுது. நான் உன்னையே நினைச்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா. உன்னைப் போல கேவலமான ஒருத்தி என் வாழ்க்கைல வரலைனு நான் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷப்படுறேன். சனியன், நீ விட்டுத் தொலைஞ்சதால தான் எனக்கு துர்கா கிடைச்சா. எனக்கு ஒருவேள ஆக்சிடென்ட் நடக்காம இருந்து, என்னை நீ மேரேஜ் பண்ணியிருந்தாலும்... என்ட்ட இருக்குற பணம் போதலைனு வேறொருத்தன் கூடப் போயிருப்ப" என்று பார்த்திபன் கூற



"மைன்ட் யுவர் வார்ட்ஸ்" என்று அனிதா வெகுண்டெழுந்து சொன்னார்



"நான் இத சொல்லணும்னு நினைக்கல. பட் நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதை எல்லாம் உன் வாயாலயே சொன்ன. யு ஆர் சிக். ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் திஸ் ஹௌஸ்" என்று பார்த்திபன் கத்த, அனிதா முகத்தில் கரி அள்ளிப் பூசியது போல அங்கிருந்து விடுவிடுவென்று சென்று விட்டார்



"மன்னிச்சுருங்க அங்கிள். அவங்கள நான் வீட்டுக்குள்ளவே விட்டுருக்கக் கூடாது. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சு இந்த நாள மறந்துடுங்க. நான் வரேன்" என்ற ஃபஹிமா அங்கிருந்து வெளியேறினாள்



விடுமுறை நாள் என்பதால் ப்ரவீன் மாறனுடன் வெளியே சென்று இருந்தான்



"உங்க வீட்டுல தான் இன்னொரு ட்ரைவர் இருக்கானே. அவனை அழைச்சிட்டுப் போகாம... என் கூட ஏன் வர. எதாச்சும் என்னை வச்சு ப்ளான் பண்ணுறியா" என்று மாறன் சந்தேகத்துடன் கேட்க



"உங்களுக்கு தான் அனுவ ஏற்கனவே தெரியுமே. அவளைப் பாக்க தான் போறேன். அதான் நீங்களா இருந்தா அப்பாட்ட சொல்ல மாட்டீங்கள்ல" என்றான் ப்ரவீன்



"சரியில்லையே. டெய்லியும் ஸ்கூல்ல பாக்கறது பத்தலையா கண்ணா" என்று மாறன் காரை ஓட்டியபடிக் கேட்டிட



"ஆனா ஸ்கூல்ல வச்சு ப்ரப்போஸ் பண்ண முடியாதே" என்று பதிலளித்தான் ப்ரவீன்



"என்னது... ப்ரப்போஸா" என்ற மாறன் வாகனத்தின் வேகத்தை முற்றிலுமாகக் குறைத்திட



"ஆமா... இன்னும் ஃப்யூ மன்த்ஸ்ல ஸ்கூல் முடிஞ்சுடும். அப்புறம் யாரு, எந்த காலேஜ் சேரப் போறோம்னே தெரியாது. அப்புறம் பாக்க முடியாம, பேச முடியாம போய்டுச்சுனா..." என்று ப்ரவீன் சொன்னான்



"அதுக்காக... டேய் தம்பி..." என்று மாறன் ஏதோ கூற வர



"நீ இன்னும் சின்ன பையன்டா. உனக்கு வாழ்க்கைனா என்னனே தெரியாது. அப்டினு எதாவது அட்வைஸ தூக்கிட்டு வந்துராதீங்க" என்றான் ப்ரவீன் முந்திக்கொண்டு



"சரி விடு. வயச பத்திப் பேசல. நீ பன்னென்டாவது படிக்குற... மீசை முளைச்சுருச்சு. ஆனா உன்னோட எண்ணமும் செயலும் இப்போ சிறு பிள்ளைத்தனமா இருக்கும். காலேஜ்லாம் போன பின்னாடி ஒரு மாதிரி இருக்கும். உங்களோட கருத்து ஒத்துப் போகுதானு பாக்கணும்னா, இன்னும் கொஞ்சம் வருஷம் போகணும்டா" என்று எடுத்துரைத்தான் மாறன்



"கருத்துனா... புரியல" என்று ப்ரவீன் கேட்டிட



"இப்போ உனக்கு அனு மாதிரி ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்கு. அவ இப்போ ஒரு டைப்ல இருக்கா. காலேஜ் போயிட்டு வெளி உலகம் தெரிஞ்ச பின்னாடி அவக்கிட்ட ஒரு மாற்றம் வரலாம். அந்த மாற்றம் உனக்குப் பிடிக்காம போகலாம். அவளோட பேச்சும் நடவடிக்கையும் உனக்கு வெறுப்பை உண்டாக்கலாம்னு சொல்ல வரேன்" என்று மாறன் கூறினான்



"சுத்தி வளைச்சு என்ன சொல்ல வரீங்க" என்று ப்ரவீன் மேலும் கேட்க



"உங்க அப்பா ஒத்துக்க மாட்டாருடா. அந்த பொண்ணு வீட்டுலயும் பிரச்சனைப் பண்ணுவாங்க. அந்த பிரச்சனையலாம் எப்படி தாக்குப் பிடிக்கப் போற. சொல்லு" என்று மாறன் கேட்டான்



"இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்ல" என்று ப்ரவீன் யோசித்தபடிக் கூற



"அதுக்கு தான் சொல்றேன். அவசரப்படாதனு..." என்று மாறன் சொல்லி முடித்தான்



அந்நேரம் அனு அவர்களது வண்டியை நெருங்கி வந்து "ஹாய்" என்றாள் குஷியாக



ப்ரவீன் அவளுக்குக் கதவைத் திறந்து விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டு "ஹாய்" என்றான் பதிலுக்கு



"என்ன திடீர்னு பாக்கணும் பேசணும்னு சொல்லிட்டு இருந்த. சொல்லு" என்று அனு புன்னகையுடன் கேட்க, ப்ரவீன் மாறனின் புறம் பார்வையைத் திருப்பினான்



மாறன் காரில் இருந்து இறங்கி வெளியே சென்று விட "சும்மா தான். உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு" என்றான் ப்ரவீன் அமைதியாக



"ஹே என்ன. ஏன் டல்லா இருக்க" என்று அனு கேட்டிட



"ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்" என்று கூறி ப்ரவீன் சமாளித்தான்



"யு நோ. நம்ம க்ளாஸ்ல ரெண்டு புது லவ்வர்ஸ் லவ் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. அவங்க பண்ற அட்டூழியம் இருக்கே. பீச்சுக்குப் போறதென்ன... தியேட்டர் போறதென்ன. அந்த ஃபோட்டோஸ இன்ஸ்டால போடுறதென்ன. எப்படி தான் இப்படி இருக்காங்களோ. அப்பப்பா" என்று அனு சலித்துக் கொள்ள



"ஏன் உனக்கு லவ் மேல இன்ட்ரஸ்ட் இல்லையா" என்றான் ப்ரவீன் முடிந்தவரை இயல்பாய்



"இந்த வயசுல போய் லவ் பண்ணலாமா. எல்லாரும் சும்மா ஆர்வக்கோளாறுல சுத்திட்டு இருக்காங்க. டென்த்ல ஒருத்தனை லவ் பண்ணுறாங்க. அப்டியே ட்வெல்த் போனா வெறொருத்தனை லவ் பண்ணுறாங்க. இது பேரு லவ்வே இல்ல" என்று அனு முகத்தைச் சுளித்துக் கொண்டு சொல்ல

"அப்போ எப்போ லவ் வரணும். கல்யாணம் பண்ணி முடிச்சதும் ஹஸ்பன்ட் இல்லைனா வொய்ஃப லவ் பண்ணறது தான் லவ்வுனு சொல்ல வரியா" என்றான் ப்ரவீன் அவளது பேச்சில் மூழ்கி

"அவ்ளோ லேட்டா இல்ல. பையன் நல்லா படிச்சுருக்கானா, டீசன்ட்டா பழகுறானானு தெரியணும்ல. எல்லா பசங்களும் காலேஜ் போனதும் கண்ட பழக்கத்துக்கும் அடிமை ஆய்டுறாங்க. அதனால நான் பொறுமையா பாத்து தான் செலக்ட் பண்ணுவேன். ஆமா... நீ யாரையாச்சும் லவ் பண்றியா" என்று அனு அவனை ஏறிட்டுக் கேட்டிட

"ச்ச்ச ச்ச்ச. எனக்கு லவ்வுங்குற வார்த்தையே பிடிக்காது" என்றான் ப்ரவீன் பொய்யாய்

"ஹே இங்க பாரேன். யாரோ ரெட் ரோஸ் வாங்கி வச்சிருக்காங்க" என்று அனு ஆச்சரியத்துடன் சொல்ல

"என் கார்ல எவன்டா ரெட் ரோஸ வச்சது" என்ற ப்ரவீன் தான் வாங்கிய மலரைத் தன் கையாலேயே தூக்கி வெளியில் வீசினான்

"ஏ லூசு. அது அழகா இருந்துச்சு. ஏன் இப்போ தூக்கிப் போட்ட. ஒரு ரசனையும் இல்ல" என்ற அனு அவனை முறைக்க

"அது ஒன்னும் பிரச்சனை இல்ல. நாம புதுசா கலர் கலரா ரோஸ் வாங்கிக்கலாம். வா" என்று அவளைக் காற்றோட்டமாக வெளியே அழைத்துச் சென்றான் ப்ரவீன்

காலங்கள் மாறலாம்
கருத்தும் மாறலாம்
பருவமும் மாறிடுமோ
பல்வினைகள் புரிந்திடுமோ
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 38



ஒரு விடுமுறை நாளின் காலை வேளையில் இந்துஜா, ஸ்வேதா மற்றும் ரோஷினி மூவரும் மாடியில் இருந்தனர். குரு வாசலில் நின்று இந்துஜாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் ஸ்வேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.



"நான் வேணா கிளம்பட்டா. எதோ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நின்னுட்டு இருக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கு" என்று ஸ்வேதா சொல்ல



"அப்படிலாம் நான் நினைப்பனா. அவங்க சும்மா நின்னுட்டு இருக்காங்க" என்று இந்துஜா கூறினாள்



"சும்மாவா... வச்ச கண்ணு வாங்காம பாக்குற மாதிரியில்ல இருக்கு" என்ற ஸ்வேதா சிரித்து வைத்தாள்



"நான் வேணா ச்சூ போனு துரத்திட்டு வரேன் இரு" என்று இந்துஜா சொல்ல



"வேணா வேணாம். நமக்கெதுக்கு வம்பு" என்றாள் ஸ்வேதா பதறிப் போய்



"அவங்களைப் பாத்துலாமா பயப்படுறீங்க. எல்லாம் சில்லரைப் பபபுள்ளைங்க" என்று இந்துஜா கூற



அந்நேரம் திடீரென அங்கு வந்த யுக்தாமுகி "ஹாய் குரு" என்றாள் வாசலில் நின்றிருந்தவனிடம்



"ஹே... வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்" என்று குரு அதித்தன் விழிகளை விரிக்க



"உன் ஆட்டைய கலைக்க யாரோ வந்துட்டாங்க" என்றாள் ஸ்வேதா புன்னகைத்து



"இவளா... இவ எப்படி இங்க வந்தா" என்ற இந்துஜா நின்று பார்த்துக் கொண்டிருக்க



"ஐ வான்னா ஹக் யூ சோ பேட்" என்றாள் யுக்தாமுகி கைகளை விரித்து



"வாட்... வெயிட்... வாட் ஹேப்பனட் டு யூ" என்றான் குரு அதிர்ந்து போய்



"லவ் ஃபெய்லியர்" என்று யுக்தாமுகி சோகத்துடன் சொல்ல



"அதுக்கு நான் என்ன பண்ணுறது" என்ற குரு அதித்தன் இந்துஜாவை எதிரிலே வைத்துக் கொண்டு திணறினான்



அவன் சொன்னதை ஓரளவு யூகித்த யுக்தா "ஐ டோன்ட் ஹேவ் எனி ஃப்ரெண்ட்ஸ். சோ கம் லெட்ஸ் கோ அவுட்சைட்" என்று அழைத்தாள்



"நோ நோ. ஐ அம் லிட்டில் பிசி டுடே. வொய் கேன்ட் யூ டேக் ஹிம் வித் யூ" என்ற குரு அங்கு வந்த வருணை யுக்தாவிடம் சிக்க விட்டான்



"நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்" என்று வருண் கேட்க



"நீ தானப்பா லாயரு. இந்த பொண்ணுக்கு எதோ பிரச்சனையாம் தீத்து வையு" என்றான் குரு அங்கிருந்து நழுவியபடி



"வொய் ஆர் யூ சோ அப்செட்" என்று வருண் யுக்தாமுகியிடம் கேட்டிட



"ஐ அம் சீட்டட்" என்று யுக்தாமுகி வருத்தத்துடன் சொல்ல



"ஓகே லெட்ஸ் ஃபைல் எ கம்ப்ளய்ண்ட்" என்றான் வருண்



"ரியலி... ஆர் யூ ஷ்யூர்" என்று யுக்தாமுகி கேட்டிட



"கம் டு மை ஆஃபிஸ். தேர் வி கேன் டிஸ்கஸ் அபௌட் இட் ஃபர்தர்" என்ற வருண் அவளிடம் விசிடிங் கார்டை நீட்டினான்



"தேங்க் யூ சோ மச். சீ யூ டுமாரோ" என்றவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சென்றாள்



வருண் பதிலுக்குப் புன்னகைத்தபடி திரும்பிப் பார்க்க, அப்போது தான் எதிரில் நின்று அவனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்வேதா அவன் கண்ணில் பட்டாள்



அவன் ஸ்வேதாவைக் கண்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அவனிடம் ஓடிவந்த ரோஷினி "வருண், என்ன தூக்கு" என்றாள்



வருணும் ரோஷினியைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட "எங்கயோ கருகுற வாடை அடிக்குது" என்றாள் இந்துஜா கமுக்கமாய் சிரித்துக் கொண்டே



சரியாகக் காதில் வாங்காத ஸ்வேதா "என்ன சொன்ன" என்று அவளிடம் கேட்டிட



"விளங்கும். ஏன் இப்படி அவங்களை முறைக்குற" என்று இந்துஜா நேரடியாகவே கேட்டாள்



"நான் ஏன் முறைக்கப் போறேன். சும்மா யார் அந்த பொண்ணுனு பாத்துட்டு இருந்தேன்" என்று சமாளித்தாள் ஸ்வேதா



"மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. கூடிய சீக்கிரம்..." என்று இந்துஜா எதோ கூற வர



"அப்படிலாம் இல்லை. போதும் போதும் நிறுத்திக்க" என்று அவள் வாயை அடைத்தாள் ஸ்வேதா



"சரி நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. போய்ட்டு வரேன்" என்ற இந்துஜா இறங்கிக் கீழே சென்று விட



அப்படியே நடந்த ஸ்வேதா "ரோஷினி... ரோஷினி" என்று வாசலில் நின்றே அழைத்துப் பார்த்தாள்



"நாம ஸ்வேதாவ பயமுறுத்திப் பாக்கலாம். சத்தம் போடாத" என்று வருண் சொல்ல, ரோஷினியும் வீட்டினுள் அமைதியாக இருந்தாள்



"வருண்" என்று ஸ்வேதா இப்போது அழைத்திட



சமையலறையில் நின்றிருந்த குரு "உன்னைத் தான்டா கூப்பிடுறாங்க" என்றான் வருணிடம்



"கேக்குது. உன் வேலையப் பாரு" என்று வருண் கூறிட



"இதுவும் ஒரு பொழப்பு" என்றான் குரு அதித்தன் சலிப்பாய்



"உனக்கென்னடா நானும் ரோஷினியும் சேந்து கண்ணாமூச்சி விளையாடுறோம். என்னம்மா" என்று வருண் கூற



"என் வாய வீணா கிளறாத. எதோ பண்ணித் தொலை" என்றான் குரு அதித்தன் சூடாய்



ரோஷினியைத் தேடிக் கொண்டு வீட்டினுள் சென்ற ஸ்வேதா "ரோஷினி" என்று மீண்டும் அழைத்திட



மறைவில் இருந்து வெளியே வந்த ரோஷினியும் வருணும் "ஆஆஆ" என்று கத்தி வைத்தனர்



ஸ்வேதாவோ துளியும் அசராமல் "அய்யோ ரொம்ப பயந்துட்டேன்" என்றாள் அவர்கள் முன் கையைக் கட்டிக் கொண்டு



"அம்மா பயப்படவே இல்ல. எல்லாம் வேஸ்ட்டா போச்சே. நான் அஷ்வின் வீட்டுக்குப் போறேன்" என்ற ரோஷினி வருணிடம் இருந்து இறங்கி ஓடினாள்



"ரோஷினி மெதுவா போ" என்று ஸ்வேதா அவளிடம் கத்தி சொல்லிவிட்டுத் திரும்பினாள்



"இது மாதிரி விளையாட்டுலாம் வச்சுக்காதீங்க. கூப்டது காதுல கேட்டுச்சா இல்லையா" என்று ஸ்வேதா வருணிடம் சண்டைக்கு நிற்க



"சும்மா விளையாட்டுக்கு" என்றான் வருண் பம்மி



"யார் அந்த பொண்ணு. தெரிஞ்சவங்களா" என்று ஸ்வேதா கேட்க



"ஏன் இவ்ளோ ஆர்வமா கேக்குற. இன்னைக்கு தான் நான் அவளை முதல் முறையாவே பாக்குறேன்" என்று வருண் சொன்னான்



"முதல் தடவைப் பேசும்போதே இப்படி தான் பேசுவீங்களோ" என்று ஸ்வேதா கேட்டிட



"என்ன பொசசிவ் ஆகுறியா செல்லம்" என்றான் வருண் சிரித்துக் கொண்டு



"அப்படிலாம் ஒன்னும் இல்லை" என்றவள் திடீரென தள்ளாட ஆரம்பித்தாள்



"ஹே என்ன பண்ணுது" என்று வருண் சுதாரித்துக் கொண்டு கேட்க



"வெயில்ல நின்னது ஒரு மாதிரியா இருக்குனு..." என்றாள் ஸ்வேதா கண்களைத் திறக்க முயன்று



"சரி மெதுவா அப்படியே உக்காரு. தண்ணி எடுத்துட்டு வரேன்" என்ற வருண் அவள் விழுந்து விடாமல் இருக்க அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள



"வருண்... ரோஷினி" என்று உலறியபடி ஸ்வேதா நிலைகொள்ளாமல் மயங்கி சரிந்தாள்



"குரு, இங்க வாடா சீக்கிரம்" என்று வருண் அழைக்க



அங்கு சென்று பார்த்துவிட்டு "மச்சான்... கங்க்ராட்ஸ்டா... அப்பாவாகப் போறியா. சொல்லவே இல்ல பாத்தியா. சைலன்ட்டா இருந்தே வேலையப் பாத்துட்ட" என்றான் குரு அதித்தன் மயக்கத்தில் இருந்த ஸ்வேதாவை கவனித்து



"டேய் கேனைப்பயலே. நானே அவளுக்கு என்னாச்சுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். போய் அஷ்வினையும் சான்ட்ராவையும் கூப்டு வாடா. போடா" என்று வருண் அவனை விரட்டினான்



"அப்போ குட் நியூஸ் இல்லையா" என்ற குரு இறங்கிக் கீழே ஓட



"ஸ்வேதா... ஸ்வேதா" என்று வருண் அவளது கன்னத்தைத் தட்டிப் பார்த்தும் அவள் கண்களைத் திறந்தபாடில்லை



சற்று நேரத்தில் அங்கு வந்த சான்ட்ரா "என்ன நடந்துச்சு வருண்" என்று பதற்றத்துடன் கேட்டாள்



"காலைல சாப்ட்டாளா இல்லையானு தெரியலை. பேசிட்டே இருந்தவ அப்டியே மயங்கி விழுந்துட்டா" என்றான் வருண்



"ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் பாத்துரலாம். கிளம்பு சீக்கிரம்" என்ற சான்ட்ரா ஸ்வேதாவை தன் தோளின் மீது சாய்த்துக் கொண்டாள்



அடுத்த இருபது நிமிடங்களில் அஷ்வின், சான்ட்ரா, வருண் மற்றும் ரோஷினி ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். தீவிர யோசனையில் இருந்த அஷ்வின், தனியாக மருத்துவரிடம் சென்று ஸ்வேதாவின் உடல் நிலையைப் பற்றிக் கூறிவிட்டான். ஸ்வேதாவிடமும் மற்றவர்களிடமும் அவராகவே பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்ததாக சொல்லிக் கொள்ளலாம் என்று அஷ்வின் எண்ணினான். மருத்துவரும் அஷ்வின் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு, அடுத்தடுத்த பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.



நீண்ட நேரமாகக் காத்திருந்த வருண் அஷ்வினிடம் "இவனுங்க இன்னும் என்ன பண்றானுங்க. ஒரு சாதாரண மயக்கத்துக்கா இவ்ளோ நேரம். இதுக்கு தான் ப்ரைவேட் ஹாஸ்பிட்டல் பக்கமே வரக் கூடாது" என்று புலம்பிக் கொண்டிருந்தான்



"இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டோம். பாப்போம்" என்றான் அஷ்வின் பொறுமையாக



"காலைல இருந்து வேற சாப்பிடல. நானும் ரோஷினியும் போய் பக்கத்துல எதாச்சும் சாப்பிட்டு வந்துட்றோம். அப்புறம் நீங்க போய் சாப்பிடலாம்" என்ற வருண் அங்கிருந்து நகர்ந்தான்



அவன் அங்கிருந்து சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் சான்ட்ராவையும் அஷ்வினையும் அழைத்துப் பேசியிருந்தார். மருத்துவர் அறையிலிருந்து வெளிவந்த சான்ட்ராவுக்கு எதையுமே நம்ப முடியவில்லை.



"அஷ்வின், என்ன சட்டனா இப்படி சொல்றாங்க" என்று சான்ட்ரா குழுப்பத்துடன் கேட்க



"நீயே காதால கேட்டல்ல. இவ்ளோ நாள் அவ ஹெல்த்த பத்திக் கண்டுக்காமலே இருந்துருப்பா" என்றான் அஷ்வின் அவளைத் தேற்றி



"கேன்சரா. அதுவும் இந்த வயசுல. இந்த மாதிரி புது லைஃப் கிடைக்குற நேரத்துல தான் இவளுக்கு இதெல்லாம் வரணுமா. வாழ்க்கை ஏன் இவ்ளோ மோசமா இருக்கு அஷ்வின்" என்று சான்ட்ரா வருந்த



"இப்போவாச்சும் தெரிய வந்துச்சுல்ல. இன்னும் எதுவும் முடிஞ்சு போகல" என்றான் அஷ்வின் ஆறுதலாய்



"என்னால இதை ஏத்துக்கவே முடியல. ஐ நீட் சம் ஃப்ரெஷ் ஏர்" என்ற சான்ட்ரா விறுவிறுவென்று நடந்து வெளியே சென்றாள்



ரோஷினியுடன் திரும்பி வந்த வருண் "எங்க போறா அவ தனியா" என்றான் சான்ட்ராவைப் பார்த்து விட்டு

"வருண்" என்ற அஷ்வின் அவன் கையில் பரிசோதனை முடிவுகளை நீட்டினான்



அதில் இருப்பது ஒன்றும் தெளிவாகப் புரியாமல் போக "என்ன சொன்னாங்க அஷ்வின்" என்றான் வருண் சாதாரணமாக



"ப்ரெஸ்ட் கேன்சர் இருக்குனு டயாக்னைஸ் பண்ணிருக்காங்க. அந்த ரூம்ல தான் இருக்கா. போய் பாரு" என்று அஷ்வின் பெருமூச்சுடன் கூறிவிட்டு ரோஷினியைத் தூக்கிக் கொண்டு வெளியில் நடந்தான்



வருணுக்கு சட்டென கைகள் நடுங்க ஆரம்பித்திருக்க, மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸ்வேதாவைப் பார்க்க அறைக்குள் நுழைந்தான்


விதி தான் இப்படி அவளது நோயைப் பற்றி வெட்ட வெளிச்சமாக்கி விட்டது என்றெண்ணி கண்களை மூடிப் படுத்திருந்தவளை "ஸ்வேதா" என்றழைத்தான் வருண்


அவன் எப்படி இதைத் தாங்கிக் கொள்ளப் போகிறான் என்று இவளும், இவள் எப்படி இவ்விஷயத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்று அவனும் மாறி மாறிக் கண்ணீர் சிந்த அந்த இடத்தில் வார்த்தைகளின்றி மௌனமே சூழ்ந்தது.

சோதனைகளைக் கடந்து
சாதனைப் படைத்திடு
வேதனைகளைத் துரத்தி
வாகைசூடி வாழ்ந்திடு
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 39


சான்ட்ரா இருப்புக் கொள்ளாமல் உடனடியாக நீரவ்வின் வீட்டிற்கே சென்றாள்

சான்ட்ராவை அங்கு எதிர்பார்த்திராத நீரவ் "வாட்'ஸ் அப். திடீர்னு வந்துருக்க" என்றான் புன்னகையுடன்

"வாழ்க்கைல எப்பவும் நிதானமா இருக்கணும். அப்படி இருந்தா தான் மனுஷன். அதை விட்டுட்டு நீங்களா ஒன்னு அஸ்யூம் பண்ணிட்டு, ரொம்ப ஜட்ஜ்மென்டலா வாழ்ந்துட்டு இருக்கீங்க. அது ரொம்ப தப்புனு சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்" என்று சான்ட்ரா பேச

"எதைப் பத்திப் பேசுற சான்ட்ரா. எனக்கு ஒன்னும் புரியல. முதல்ல வந்து உக்காரு. பொறுமையா பேசலாம்" என்றான் நீரவ் அவளை அமைதிப்படுத்த எண்ணி

"நோ நீரவ், நான் உக்காந்து பேசிட்டுப் போறதுக்காக வரல. உங்களை நம்பி ஒரு பொண்ணு வந்தான்னா... அவளை எவ்ளோ மோசமா ட்ரீட் பண்ண முடியுமோ, அப்படி கீழ்த்தரமா தான் நடத்துவீங்க இல்ல" என்றாள் சான்ட்ரா எரிச்சலுடன்

"கம் ஆன் சான்ட்ரா... இப்போ எதுக்கு தாம் தூம்னு குதிக்குற. நீ ஸ்வேதாவ பத்திப் பேசிட்டு இருக்கியா. அவளுக்குக் கல்யாணம் ஆன பிறகு நான் அவப் பக்கம் தலைவச்சுக் கூடப் படுக்குறது இல்ல" என்றான் நீரவ்

"ஐ தாட் யு ஆர் ரெஸ்பான்சிபிள் அன்ட் ஜென்யூன். ஆனா எதுவுமே இல்லனு எப்பவோ ப்ரூவ் பண்ணிட்டீங்க. எதுக்கு ஸ்வேதா இத்தனை இயர்ஸ் கழிச்சு உங்களைத் தேடி வந்தா, எதுக்காக ரோஷினிய உங்க கஸ்டடிக்குக் கொண்டு வரணும்னு நினைச்சானு நீங்க ஃபர்ஸ்ட்டே தெரிஞ்சுட்டு இருந்துருக்கணும்" என்றாள் சான்ட்ரா அவன் முன் கையை நீட்டி

"நானும் ட்ரை பண்ணேன். அவ சொல்லல. நான் என்ன பண்ணுறது" என்றான் நீரவ் தோளைக் குலுக்கி

"அவ ரொம்ப நாளா எதையோ மறைக்குறான்னு என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் நினைச்சது சரின்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிக்கிட்டேன். அவளுக்கு கேன்சர் இருக்காம் நீரவ்" என்றாள் சான்ட்ரா வேதனை தாளாமல்

"வாட்" என்று நீரவ் நெற்றியைச் சுருக்கிக் கேட்டிட

"இப்போ தான் உங்களுக்குத் தெரியுமா. இல்ல இதுவும் தெரிஞ்சு தான் அவள கஷ்டப்படுத்திப் பாத்தீங்களா" என்று கேட்டாள் சான்ட்ரா கொதிப்புடன்

"ரியலி ஐ டோன்ட் நோ எனிதிங் அபௌட் திஸ். அவ என்கிட்ட இதைப் பத்தி வாயக் கூடத் தொறக்கல" என்று நீரவ் சத்தியம் செய்தான்

"தெரிஞ்சுருந்தா மட்டும் என்ன பண்ணி இருந்துருப்பீங்க. ரோஷினிக்கு இத்தனை வருஷம் கழிச்சு உங்களை எப்படி அடையாளம் தெரியும்னு என்னைக்காச்சும் யோசிச்சுப் பாத்துருக்கீங்களா. ஸ்வேதாவோட அம்மாவும் தவறுனதுக்கு அப்றம் ரோஷினிய ஸ்வேதா தான் தனியா வளத்துருக்கா. அவளோட ஃபோன்ல இருந்த உங்களோட ஃபோட்டோஸ், வீடியோஸ் பாத்துப் பாத்து தான் ரோஷினி இன்னமும் உங்களைத் தெரிஞ்சு வச்சுருக்கா. ஸ்வேதா பிலீவ்டு இன் யூ லைக் எனிதிங். அவளோட உயிர் போய்ட்டா கூட, ரோஷினி உங்க கிட்ட சேஃபா இருப்பான்னு நினைச்சு தான் உங்களைத் தேடி வந்துருக்கா. பட் யூ நீரவ்... வாட் யூ டிட்" என்று சான்ட்ரா அவனைக் கேள்விகளால் துளைக்க

"ப்ளீஸ் சான்ட்ரா, இதுக்கு மேலயும் எதுவும் சொல்லாத. நான் கோவப்பட்டேன்; கண்மூடித் தனமா நடந்துக்கிட்டேன்; உண்மைதான். அவளைப் பத்தி நான் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணல தான். ஆனா அவளா என்ட்ட எதையும் சொல்லவும் நினைக்கல" என்று நீரவ் பதிலளித்தான்

"ஹௌ கேன் யு சே லைக் தட். உங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்க ஹெல்ப்னு கேட்டா, இப்படி தான் நடந்துப்பீங்களா. உங்க பேசிக் ஹ்யூமானிட்டி எங்க போச்சு" என்று சான்ட்ரா மேலும் கேட்டிட

"சீ சான்ட்ரா... ஐ அம் ரியலி வொர்ரீட் அபௌட் ஹெர். அவ எங்க இருக்கானு சொல்லு. நான் நேர்ல போய் பாக்கணும்" என்றான் நீரவ் தலையைக் கோதிக் கொண்டு

"எனஃப் இஸ் எனஃப் நீரவ். இனிமே நீங்க அவளைப் பாக்கவும் வேணாம்; உங்க உதவியும் வேணாம். குடிச்சுட்டு புத்திக் கெட்டுப் போய் எதாவது உபத்திரம் பண்ணாம இருங்க போதும். ஸ்வேதாவ பாத்துக்க எங்களுக்குத் தெரியும்" என்ற சான்ட்ரா விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேற

அவள் கையைப் பிடித்து நிறுத்திய நீரவ் "எனக்கு இதெல்லாம் கேட்டுத் தலையே வெடிச்சுரும் போல இருக்கு. என்னால இந்த பெய்ன தாங்கிக்க முடியாது சான்ட்ரா. நான் எனக்குத் தெரிஞ்சு எத்தனையோ தப்புப் பண்ணிருக்கேன். பட் என் கண்ணு முன்னாடியே ஒருத்தங்க சாகறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது. நான் என் அம்மாவ சின்ன வயசுலயே இழந்தேன். அது போல ரோஷினியும் அம்மா இல்லாம நிக்கக் கூடாது. எல்லா பிரச்சனையும் எனக்கும் ஸ்வேதாக்கும் இடையில தான். ரோஷினிக்காக நான் எதாவது பண்ணணும்னு நினைக்கிறேன். லெட் மி ஹெல்ப்" என்றான் உருக்கத்தோடு

அங்கு விஸ்வநாதனைத் தேடி வந்திருந்த அனிதா "வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்" என்றார் நீரவ்வையும் சான்ட்ராவையும் கண்டுவிட்டு

"நத்திங். குட் யு ப்ளீஸ் கிவ் அஸ் சம் ஸ்பேஸ்?" என்று நீரவ் அவசரமாகக் கேட்டிட

"ஐ கேன் ஹெல்ப் யு அஸ் எ மதர்" என்ற அனிதா மேலும் அவன் விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்பினார்

பதிலுக்கு "இட் இஸ் பெட்டர் டு மைன்ட் யுவர் ஓன் பிசினஸ்" என்றான் நீரவ் நேரடியாகவே

"ஐ திங்க் சம் இஸ்யூஸ் ஆர் கோயிங் பெட்வீன் லவ்வர்ஸ் ஹியர்" என்று அனிதா சிரித்துக் கொண்டே கூற

"ஷட் அப் யு பிட்ச்" என்று கோவமாக சொன்ன சான்ட்ரா அங்கிருந்து வெளியேறினாள்

நீரவ்விற்கு அனிதாவிடம் மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு பொறுமை இல்லாமல் சான்ட்ராவைப் பின் தொடர்ந்து கிளம்பி விட்டான்

அவளிடம் கெஞ்சிக் கூத்தாடித் தன்னுடன் காரில் அழைத்துச் சென்ற நீரவ் "நீ என்ன இருந்தாலும் அவங்களைத் திட்டிருக்கக் கூடாது" என்றான் சான்ட்ராவிடம் செல்லும் வழியில்

"உங்களைத் திட்ட முடியல. பாவம் அவங்களா வந்து வாய விட்டுட்டாங்க" என்றாள் சான்ட்ரா எங்கோ பார்த்தபடி

"அவங்க யார்னு கேக்கவே இல்ல. என் டேட் அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாரு" என்றான் நீரவ் அவனாகவே

"ஐ ஃபீல் சேட் ஃபார் யூ அன்ட் யுவர் ஃபேமிலி" என்றாள் சான்ட்ரா அனிதா நடந்து கொண்ட விதத்தை எண்ணி

அன்று இரவு சான்ட்ராவுக்கும் வருணுக்கும் இடையில் பெரிய வாக்குவாதமே வெடித்தது

"என்ன இருந்தாலும் நீ அந்த நீரவ்வ ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூட்டிட்டு வந்துருக்கக் கூடாது" என்று வருண் எரிச்சலுடன் கூற

"நான் ஒன்னு நினைச்சுப் போனேன். ஆனா அது ஒன்னு நடந்துருச்சு. அவரை வாங்கனு நான் இன்வைட்லாம் பண்ணல. முதல்ல அதைத் தெரிஞ்சுக்க" என்றாள் சான்ட்ரா

"எனி ஹௌ, அவனோட எந்த ஹெல்ப்பும் தேவையில்ல. நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்" என்று வருண் பிடிவாதமாய் கூற

"வாட் ஆர் யூ திங்கிங். இதென்ன ஃபீவரா... பாரசிட்டமல் வாங்கிப் போட்டா சரியா போயிடும்னு சொல்ல. நீயும் நானும் மாசம் முழுக்க சேந்து உழைச்சாலும் அவளோட ஒரு நாள் கீமோதெரபி செலவைப் பாக்க முடியுமா. அவளை நீ உயிரோட பாக்கணுமா வேணுமா" என்றாள் சான்ட்ரா ஆவேசத்துடன்

"இதுக்கு ஸ்வேதா கூட ஒத்துக்க மாட்ட. மானம் ரோஷம் இருக்குற யாரும் அவனைப் போல ஒருத்தன்ட்ட கையேந்தி நிக்க மாட்டாங்க" என்றான் வருண் பதிலுக்கு

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அஷ்வின் "நீ போய் ஸ்வேதாட்ட பர்மிஷன் கேட்டுட்டு இரு; அவளும் ஒத்துப்பா. யாருடா இவன்... அவ என்ன சொல்லுவானு நான் சொல்லட்டா... எனக்காக யாரும் செலவு செய்ய வேணாம்; எனக்கு வாழவே பிடிக்கல; நிம்மதியா சாகவாச்சும் விடுங்கனு டயலாக் பேசுவா. நாள் கணக்குல நீ என்ன சொன்னாலும் அவ மாற மாட்டா" என்றான்

"நீயும் இப்போ சான்ட்ரா பக்கம் போயிட்டியா அஷ்வின்" என்று வருண் கேட்க

"நாம எல்லாரும் ஒரே பக்கம் இப்போ இருக்கணும். எவ்ளோ சீக்கிரம் ட்ரீட்மென்ட்ட ஆரம்பிக்குறோமோ அவ்ளோ நல்லது. அதை முதல்ல புரிஞ்சுக்க வருணு" என்றான் அஷ்வின் நிதானமாக

"என்னால ஒரு முடிவு எடுக்க முடியல. தலை பாரமா இருக்கு" என்ற வருண் ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டான்

அவனிடம் சென்ற சான்ட்ரா "எமோஷனல் ஆகாத. நம்ம அல்டிமேட் கோல் என்ன? ஸ்வேதா நமக்கு உயிரோட வேணும்; அதான. திங்க் அபௌட் இட்" என்றாள்

"நீரவ்வ மட்டுமே நாம டிபென்ட் பண்ணி இருக்கப் போறதும் இல்ல. இதுக்குனு இருக்குற என்ஜிஓஸ் அன்ட் ஆர்கனிசேஷன்ஸ்லயும் நாம ஹெல்ப் கேக்கலாம். அதெல்லாம் கூட நாங்க பாத்துக்குறோம். ஆனா வருண், உன்னால மட்டும் தான் அவளை ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்க வைக்க முடியும்" என்று அஷ்வின் கூற, வருண் ஆமோதிக்கும் விதமாய் தலையாட்டினான்

அவ்விடத்திற்கு ஸ்வேதா வர, அஷ்வினும் சான்ட்ராவும் விலகிக் கொண்டனர்
வருணிடம் சென்ற ஸ்வேதா "என்ன யோசிச்சுட்டு இருக்க" என்றாள் மெதுவாக

"நம்மள பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்" என்றான் வருண் வலியை மறைத்துப் புன்னகையுடன்

"நானும் யோசிச்சுப் பாத்தேன். நாம ஏன் சேந்து வாழக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள்..." என்ற ஸ்வேதா அவனை சட்டென அணைத்துக் கொண்டாள்

அவளைத் தன்னிடமிருந்து பிரித்து "அதென்ன கொஞ்ச நாள்... நீ மட்டும் தனியா சொர்க்கத்துக்குப் போகலாம்னு பாக்குறியா. என் கூட நரகத்துக்கு யார் வரதாம்" என்றான் வருண் விளையாட்டாய்

"ஜோக் தான் எப்போவும். நீங்க உங்க லக்கேஜ்ஜ எடுத்துட்டுக் கீழ வீட்டுக்கு வந்துருங்க. நான் வேணும்னா ரோஷினிய அஷ்வின் வீட்டுல விட்டுட்டு வரவா" என்று ஸ்வேதா கேட்க

"என்ன அவசரம். நான் இதுலருந்து ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சது இல்ல. ரோஷினி முதல்ல என்னை அப்பாவா ஏத்துக்கணும். நாம ரெண்டு பேரும் அவளை ஒரு நல்ல ஸ்கூல்ல சேத்துப் படிக்க வைக்கணும். அப்புறம் ஒரு நாள் ரோஷினி நம்மக்கிட்ட வந்து கேப்பா, அப்பா எனக்கு ஏன் தம்பி பாப்பா இல்லைனு. அன்னைக்குப் பாத்துக்கலாம் இதெல்லாம்" என்றான் வருண் அவள் கண்களைப் பார்த்து

"ப்ளீஸ் வருண். என்னைத் தள்ளி வைக்காதீங்க. நான் இருக்குற வரைக்கும் இந்த ஒரு சந்தோஷத்தையாவது உங்களுக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். ப்ளீஸ்..." என்று ஸ்வேதா அழ ஆரம்பிக்க

"உன்னைப் பாத்துட்டு இருக்கறதும், உன்கிட்டப் பேசுறதும் கூட எனக்கு சந்தோஷம் தான். நீ என்னை அந்நியமா பாக்குறதால தான் உனக்கு இப்படிலாம் தோணுது. உன்னால எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. புரியுதா" என்றவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்

"நீங்க எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணீங்க" என்றாள் ஸ்வேதா இப்போது முறைப்போடு

"நீ சிரிச்சாலும் அழுதாலும் அதை ஷேர் பண்ணிக்க தான். என்னை தான் உனக்குப் பிடிக்கலைனு நினைக்குறேன். எப்போவும் நீ பிரிஞ்சு போறதைப் பத்தி தான் யோசிக்குற. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு ஸ்வேதா. நாம சேந்து வாழுவோம். சந்தோஷமா... நிம்மதியா... இப்போ போய் தூங்கு" என்றான் வருண் அன்பாய்

"ஐ லவ் யூ வருண்" என்ற ஸ்வேதா மன அமைதியுடன் அங்கிருந்து திரும்பிச் செல்ல

அவளை இழுத்து அணைக்கத் துடித்த இதயத்தை சிரமேற்கொண்டு அடக்கி நின்றிருந்தான் வருண்

சிறகொடிந்த பறவையாய்
இந்நிலை வேண்டாம்
தொட்டால் பொசுக்கிடும்
நெருப்பாய் எழுந்திடு
எனதிரும்பு இதயத்தை
உருக்கி உனதாக்கிடு
 
Status
Not open for further replies.
Top Bottom