- Messages
- 79
- Reaction score
- 61
- Points
- 18
வியூகம் 10
தன் வீட்டு தோட்டத்தில் மரங்களுக்கு நடுவே அமரும் பொழுது எப்போதும் விஷ்ணுவின் மனம் சமனப்படும் ஆனால் இன்று அது நடக்கவில்லை.
அவனது கண்கள் ஓரிடத்தில் நிலைத்திருந்தது அங்கே ஒரு மாதத்திற்கு முன் அவன் புதைத்து வைத்த நாட்டு மாங்கொட்டை தன் பசுமையான சிறகுகளை விரித்து சின்னஞ்சிரியதாய் பூமித்தாயின் புதுக்குழந்தையாய் பார்ப்பதற்கே இனிமையாய், மென்மையாய். ஆனால் இதனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண்கள் ரத்தமென சிவந்திருந்தன. அந்த கண்களிலுள் அடங்கா ரௌத்திரம். அவனது காதினுள் சிங்க ஐயாவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பின் நேற்று இரவு தான் அவரது குரலை கேட்டான். "தீ......நிக்கவேயில்லை தம்பி"
“.........”
"நம்ம ஆள் மரியன் அங்க தான் இருக்கான் ஆனா...." அவரின் நடுக்கமான குரல் அவர் பேசும் நிலையில் இல்லை என்பதை சுட்டிக் காண்பித்தது. அதுவே அவரது மனநிலையை வெளிச்சம் போட்டு காண்பிக்க
"நான் இருக்கிறேன் ஐயா ஏதாவது செய்ய முயல்கிறேன். உங்கள் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்" தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் அவருக்கு நம்பிக்கை வார்த்தையளித்தான்.
தொலைபேசி கை மாறியது
"மரியன் என்ன சொன்னான்?" விஷ்ணுவின் குரலில் தீவிரமிருந்தது.
"எங்க போனாலும் முட்டு தாம்"
"இத சொல்ல அவனுக்கு வெட்கமாயில்ல?"
“.........”
“அறுபதாயிரத்தை தாண்டியாச்சு இந்த தீ விபத்து.அங்கிருக்கும் பழங்குடியை மீட்க போட்ட பிளான் என்ன ஆச்சு?"
"அவங்க நம்மளை நம்பலை ,யாரை பார்த்தாலும் கண்மூடித்தனமா தாக்கிறாங்களாம்"
"மரியனோட டீம் இரண்டு வருஷமா என்ன தான் செய்யிறாங்க, இப்படி நடக்கப் போகுதுன்னு பகிரங்கமா சொல்லிட்டு தானே செய்யிறாங்க"
"......"
"அப்போ......நம்ம தோத்துட்டோம், இரண்டு வருஷமா பிளான் போட்டுக் கூட எதுவும் செய்ய முடியல, அப்படித்தானே?" எதிர்முனையில் நிலவிய அமைதி அவனது கோபத்தில் நெய் ஊற்றியது. அவனது உடம்பில் ஓடும் ரத்தம் முழுமையும் சூடேறி கொதித்தது.தொலைபேசியை ஓங்கியடித்தான்.
அந்த கோபம் இப்போதும் தணியவில்லை. ஒரே ஒரு செடி, மரம், சிறு தோப்பு இதனை உருவாக்க மனிதன் படும்பாடு ஏராளம். ஆனால் பல்லாயிரக்கணக்கான வருடத்திற்கு முன்னால் நம் இயற்கையன்னை வைத்துக் கொள் என்று அள்ளிக் கொடுத்த வளங்களில் ஒன்று தான் காடுகள். இப்படிப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டால் நாம் சுவாசிக்க முடியாமல் சாவோம். இல்லையென்றால் ஆக்சிஜனை சிலிண்டரில் அடைத்து விற்கும் நிறுவணம் கொடிகட்டிப் பறக்கும்.
அதுவும் இப்போது எரிந்து கொண்டிருக்கும் காடு அடர்த்தியான காடு, உலகில் இருக்கும் ஐந்தில் ஒரு பங்கு ஆக்சிஜன் இங்கிருந்து தான் கிடைக்கிறது, அதற்குள் இருக்கும் விளங்குகள் , மரங்கள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றின் வகைகள் கூட நமக்கு தெரியாது. ஏன் அங்கிருக்கும் லட்சக்கணக்கான பழங்குடியினர்கள் பற்றியும் நமக்கு தெரியாது. அவர்கள் இந்த உலகுடன் அவர்களை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர்களை விட்டார்களா? இல்லையே.... .தீ.... .தீ.....எத்தனை பேர் தீயில் மடிந்தார்களோ? விளைவு? இன்னொரு இனம் அழிக்கப்படும். விஷ்ணுவின் கை முஷ்டி இறுகியது. கண்களிலிருக்கும் நரம்புகள் வெடித்து அதிலிருந்து ரத்தம் சிதறுமளவு அவனது கண்கள் குரோதத்துடனிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் செய்ய வேண்டும்..... நிச்சயம் செய்ய வேண்டும்... மூளை அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. எங்கோ ஏதோ பொறி தட்டியது போல் தன் பாக்கெட்டினுள் துழாவி செல்போனை எடுத்து சில நம்பர்களை டயல் செய்து காதுக்கு கொடுத்தான்.
***************************************
தியேட்டர் வளாகம்-
பொதுவாக ஐஷ்வர்யா திரையரங்கிற்குள் விற்கும் உணவுப்பொருட்களை வாங்குவதில்லை. பொரித்த சோளம் நூற்றி ஐம்பது ரூபாவா? அதுவே வெளியே முப்பது ரூபாய். மீதம் நூற்றி இருபது ரூபாய் யாருக்கு?எதற்கு? இந்த நியாயத்தை கேட்க ஆளில்லை , இதற்கு எதிர்மறையாக உள்ளே திரையில் அநியாயத்தை கண்டால் பொங்கும் ஹீரோக்களுக்கு நம்மூரில் பஞ்சமும் இல்லை. புற்றீசல்போல் எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியவில்லை.
அப்படி ஒரு புற்றீசலின் படத்திற்கு தான் இப்போது அவள் வந்திருக்கிறாள். படம் சுமாராகத்தான் இருக்கும் என்று டிரைலரை பார்த்ததுமே தெரிந்து விட்டது இருப்பினும் பார்த்து தான் ஆக வேண்டும். சேனலின் சப்ஸ்கிரைபர்ஸ் (பார்வையாளர்கள்) இவளது விமர்சனத்திற்காக காத்திருப்பார்களே. கடந்த சில நாட்களிலேயே அறநூருக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் வந்திருக்கிறார்கள். இன்னும் இருநூறு வந்தால் போதுமானது ஆயிரத்தை தாண்டிவிடும். தற்போதைய யூடியூபின் விதிப்படி ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் மற்றும் சில ஆயிரம் நிமிஷ பார்வை நேரம் இருந்து விட்டால் இவளது சேனல் மானிடைஸ் ஆகிவிடும்- அதாவது விளம்பரம் வர ஆரம்பமாகும் பிறகு அதன் மூலம் இவளது கணக்கில் பணம் சேரும். இப்படி பல கனவுகளுடன் கையிலிருந்த சமோசாவை சாப்பிட்டுக்கு கொண்டிருந்தவளை விஷ்ணுவின் "ஹலோ! வாட் எ சர்ப்ரைஸ் " உற்சாக குரல் நிகழ் உலகம் கொண்டு வந்தது.
சில நொடி விழித்தவள் தன் நினைவு அடுக்குகளை தூசு தட்டி விஷ்ணுவை நினைவில் கொணர்ந்தாள். "ஹா....ஹாய், "நட்பாய் புன்னகைத்தாள்.
“அன்னைக்கு நம்ம பார்த்த படத்துக்கு நீங்க கொடுத்த விமர்சனம் சூப்பர், என்னோட கான்டாக்ட்ல இருந்த எல்லாருக்கும் ஷேர் பண்ணேன். எல்லாரையும் சப்ஸ்கிரைப் பண்ண சொல்லிட்டேன்.”
“ ஓ...... தேங்க்யூ சோ மச் “ திடுமென பார்வையாளர்கள் எப்படி கூடினார்கள் என்று இப்போது புரிந்து விட்டது . எதிரிலிருப்பவன் மீது மரியாதை கூடியது.
“நான் நோட் செய்த எல்லா விஷயத்தையும் நீங்க சொல்லிட்டீங்க.... உங்க வீடியோஸ் பார்த்ததிலிருந்து எனக்கு சேனல் ஆரம்பிக்கும் எண்ணமே போயிடுச்சி. ரெண்டுபேரும் ஒரே பாயின்ட்ஸ் சொன்னா நல்லாயிருக்காதே." சிரிப்பினுடே அவன் கூறியதை ஓர் மென்சிரிப்புடன் தனக்கான பாராட்டாகவே எடுத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா.